திருப்புகழில் பத்திரிகை பெயர்கள்: தினமணி,தினகரன்,குமுதம், தந்தி,மலர்! (Post No.15,316)

Written by London Swaminathan

Post No. 15,316

Date uploaded in London –  28 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

நாம் தேவாரம், திருவாசகம், திவ்யப்பிரபந்தம் திருப்புகழ் முதலிய பக்திப் பாடல்களைப் படிக்கையில், பக்தியில் மூழ்கி விடுவதால் அவர்கள் சொல்லும் பல அதிசய விஷயங்களைத் தவற விட்டு விடுகிறோம்; முன்னர்  எழுதிய கட்டுரைகளில் விண்வெளிப் பயணம், மனு நீதி நூல் பற்றிய தகவல் , தேவியர்கள் பெயர்கள், நரகத்துக்குப் போகும் குண்டர்கள் பட்டியல், நாயாகப் பிறக்கும் துஷ்டர்கள் பெயர்கள் ஆகியவற்றை எழுதினேன்.

தமிழ்ப் பத்திரிக்கைகளின் பெயர்கள் எல்லாம் சம்ஸ்க்ருதத்தில் இருப்பதை நாம் அறிவோம் ;  குறிப்பாக தினம் என்ற சொல் நாளேடுகளில் உள்ளது.  இந்த நோக்கில் பாடல்களை பயில்கையில் நினைவு வைத்துக்கொள்வது எளிதாக இருக்கும். அருணகிரிநாதர் நமக்கு வழங்கிய சந்தம் மிகு திருப்புகழ் பாடல்களில் வரும் சில சுவையான செய்திகளைக் காண்போம்.

***

தினமணி = சூரியன்

தினகரன் = சூரியன்

தினமணி  சார்ங்க  பாணி  யெனமதிள்  நீண்டு  சால

தினகர  னேய்ந்த  மாளி  ……  கையிலாரஞ்

செழுமணி  சேர்ந்த  பீடி  கையிலிசை  வாய்ந்த  பாடல்

வயிரியர்  சேர்ந்து  பாட  ……  இருபாலும்

இனவளை  பூண்கை  யார்க  வரியிட  வேய்ந்து  மாலை

புழுககில்  சாந்து  பூசி  ……  யரசாகி

இனிதிறு  மாந்து  வாழு  மிருவினை  நீண்ட  காய

மொருபிடி  சாம்ப  லாகி  ……  விடலாமோ

வனசர  ரேங்க  வான  முகடுற  வோங்கி  ஆசை

மயிலொடு  பாங்கி  மார்க  ……  ளருகாக

மயிலொடு  மான்கள்  சூழ  வளவரி  வேங்கை  யாகி

மலைமிசை  தோன்று  மாய  ……  வடிவோனே

கனசமண்  மூங்கர்  கோடி  கழுமிசை  தூங்க  நீறு

கருணைகொள்  பாண்டி  நாடு  ……  பெறவேதக்

கவிதரு  காந்த  பால  கழுமல  பூந்த  ராய

கவுணியர்  வேந்த  தேவர்  ……  பெருமாளே.

****

பொருள்

தினமணி சார்ங்க பாணி யென

சூரியன், சாரங்கம் என்ற வில்லைக் கையில் ஏந்திய திருமால் என்று சொல்லும்படியான பெருமையுடன்,

மதிள் நீண்டு சால தினகரன் ஏய்ந்த மாளிகையில்

மதில் நீளமுடையதாக, மிகுந்த சூரிய ஒளியைப் பெற்றிருக்கும் மாளிகையில்…………………….

*****

குமுதம்-  அல்லி மலர்

அமுதினை மெத்தச் சொரிந்து மாவின

     தினியப ழத்தைப் பிழிந்து பானற

          வதனொடு தித்தித் தகண்ட ளாவிய …… விதழாராய்

அழகிய பொற்றட் டினொண்டு வேடையின்

     வருபசி யர்க்குற் றவன்பி னாலுண

          வருள்பவ ரொத்துத் தளர்ந்த காமுகர் …… மயல்தீரக்

குமுதம் விளர்க்கத் தடங்கு லாவிய

     நிலவெழு முத்தைப் புனைந்த பாரிய

          குலவிய சித்ரப் ப்ரசண்ட பூரண …… தனபாரக்

குவடிள கக்கட் டியுந்தி மேல்விழு

     மவர்மய லிற்புக் கழிந்த பாவியை

          குரைகழல் பற்றிப் புகழ்ந்து வாழ்வுற …… அருள்வாயே

பொருள்

குமுதம்- தமிழில் அல்லி மலர் – நிலவு உதித்தவுடன் குளத்தில் மலரும்

குமுதம் விளர்க்கத் தடம் குலாவிய நிலவு எழு முத்தைப்

புனைந்த பாரிய குலவிய சித்ரப் ப்ரசண்ட பூரண தன பாரக்

குவடு இளகக் கட்டி உந்தி மேல் விழும் … (அதரபானத்தால்) வாய் வெளுத்த வேசையர்களின், இடம் பரந்த நிலவொளி வீசும் முத்து மாலையை அணிந்த, பருத்து விளங்கும், அழகுடன் மிக்கெழுந்த, நிறைந்த பாரமான மார்பாம் மலை இளகும்படி அணைத்து, வயிற்றின் மேல் விழுகின்ற

அவர் மயலில் புக்கு அழிந்த பாவியை குரை கழல் பற்றிப்

புகழ்ந்து வாழ்வு உற அருள்வாயே … அந்த விலைமாதர்களின்

மோக வலையில் பட்டு அழிந்த பாவியாகிய என்னை, ஒலிக்கும் கழல் அணிந்த திருவடியைப் பற்றிப் புகழ்ந்து நல் வாழ்வை அடைய அருள் செய்வாயாக.

*****

தந்தி= தந்தம் உடையவன்  (கணபதி/ ஏகதந்தன்)

நாட்டந் தங்கிக் கொங்கைக் குவடிற் …… படியாதே

நாட்டுந் தொண்டர்க் கண்டக் கமலப் …… பதமீவாய்

வாட்டங் கண்டுற் றண்டத் தமரப் …… படைமீதே

மாற்றந் தந்துப் பந்திச் சமருக் …… கெதிரானோர்

கூட்டங் கந்திச் சிந்திச் சிதறப் …… பொருவோனே

கூற்றன் பந்திச் சிந்தைக் குணமொத் …… தொளிர்வேலா

வேட்டந் தொந்தித் தந்திப் பரனுக் …… கிளையோனே

வேப்பஞ் சந்திக் கந்தக் குமரப் …… பெருமாளே.

பொருள்

வேட்டம் தொந்தித் தந்திப் பரனுக்கு இளையோனே …

அடியார்களின் விருப்பத்தை (நிறைவேற்றும் பெருமானும்), தொப்பையை உடையவனும் (ஆகிய) யானைமுகப் பெருமானுக்குத் தம்பியே,

***

தினத் தந்தி என்பது லண்டனில் உள்ள டெய்லி டெலிக்ராப்  என்ற பத்திரிகையைப் பர்த்து துவங்கப்பட்ட பத்திரிகை அதன் பொருள்  தந்தி = டெலிகிராப் என்பதாகும் .

அருணகிரிநாதர் மேலும் பல பாடல்களில் தினமணி, தினகரன், தந்தி போன்ற சொற்களை பயன்படுத்தியுள்ளார்

***

மலர்= தாமரை

மலர் என்றால் தாமரை என்றும் பொதுவாகப் பூ என்றும் பொருள் ; தின என்ற சொல் இல்லாமல் பல இடங்களில் திருப்புகழில் மலர் வருகிறது.

முதல் பாடலிலேயே மலர் வந்து விடுகிறது !

கைத்தல  நிறைகனி  அப்பமொ  டவல்பொரி

கப்பிய  கரிமுகன்  –  அடிபேணிக்

கற்றிடும்  அடியவர்  புத்தியில்  உறைபவ!

கற்பகம்  எனவினை  –  கடிதேகும்

மத்தமும்  மதியமும்  வைத்திடும்  அரன்மகன்

மற்பொரு  திரள்புய  –  மதயானை

மத்தள  வயிறனை  உத்தமி  புதல்வனை

மட்டவிழ்  மலர்கொடு  –  பணிவேனே

முத்தமிழ்  அடைவினை  முற்படு  கிரிதனில்

முற்பட  எழுதிய  –  முதல்வோனே

முப்புரம்  எரிசெய்த  அச்சிவன்  உறைரதம்

அச்சது  பொடிசெய்த  –  அதிதீரா

அத்துய  ரதுகொடு  சுப்பிர  மணிபடும்

அப்புனம்  அதனிடை  –  இபமாகி

அக்குற  மகளுடன்  அச்சிறு  முருகனை

அக்கண  மணமருள்  –  பெருமாளே.

பொருள்

மத்தள வயிறனை உத்தமி புதல்வனை மட்டவிழ் மலர்கொடு – பணிவேனே

மத்தளம் போன்ற பெரிய வயிற்றை உடையவனே! உத்தமியான பார்வதி தேவியின் புதல்வனே! தேன் சொட்டும் நறுமணம் மிக்க (தாமரை) மலர்களால் உன்னை நான் பணிந்து வணங்குவேன்.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி

—subham—

Tags – திருப்புகழ் , பத்திரிகை பெயர்கள், தினமணி , தினகரன்,  குமுதம், தந்தி, மலர்

இதய வியாதிகளைப் போக்கும் பாமுக்கலே வெந்நீர் ஊற்றுக்கள்! (Post.15,315)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,315

Date uploaded in London –   28 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

14-10-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை! 

இதய வியாதிகளைப் போக்கும் பாமுக்கலே வெந்நீர் ஊற்றுக்கள்!           (PAMUKKALE SPRINGS)

ச.நாகராஜன் 

இதய வியாதிகளைப் போக்கும் வெந்நீர் ஊற்றுக்களைக் கொண்ட ஒரு அதிசய இடம் இருக்கிறது தெரியுமா?

ஏராளமானோர் அங்கு சென்று பயனடைந்து வருகிறார்கள்! 

தென்மேற்கு துருக்கியில் உள்ள பாமுக்கலே வெண்மையான மலைச் சிகரங்களும் வெந்நீர் ஊற்றுக்களும்  அருகில் இருக்கும் டெனிஸ்லீ (DENIZLI)  நகரின் அழகிய காட்சிகளும் உலக மக்களை ஈர்க்கிறது.

பாமுக்கலே என்ற துருக்கி வார்த்தைக்கு “பஞ்சுக் கோட்டை” என்று பொருள்!

 300 அடி உயரம் உள்ள மலையிலிருந்து ஆவியுடன் கூடி வரும் நீர் 2000 வருடங்களாக ஒரு வெந்நீர் ஊற்றாகப் பயன்படுவதோடு உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களும் இதய வியாதி உள்ளவர்களுக்கும் ஒரு சிறந்த சிகிச்சை தலமாகவும் ஆகி விட்டது. 

இந்த சிகிச்சைக்காக ஏராளமானோர் வர ஆரம்பித்ததால் ஹைராபோலிஸ் (Hierapolis)  என்ற ஒரு பெரும் நகரமே உருவாகி விட்டது.

கி.மு. 190ம் ஆண்டு இரண்டாம் யூமெனஸ் என்ற மன்னனால் இந்த நகரம் நிர்மாணிக்கப்பட்டது. இதன் அபூர்வ சக்தியால் இது புனித நகரம் என்று அழைக்கப்படலாயிற்று. யூமெனஸ் கிரேக்க அரசை விரிவுபடுத்தி ஆசியாமைனர் முழுவதையும் ஆள ஆரம்பித்தான்.

 மூன்றாம் அட்டாலஸ் என்ற மன்னன் ஆளும் சமயத்தில் ரோமானியர்கள் இந்த பரந்த சாம்ராஜ்யத்தின் மீது பேராசையுடன் பார்வையைச் செலுத்தினர்.

பெரும் பேரழிவைத் தவிர்க்கவும் தனது சொந்த பொக்கிஷத்தைக் காக்கவும் அவன் விருப்பத்துடன் இந்த இடத்தை ரோமானியர்களுக்கு விட்டுக் கொடுத்தான். கி.மு 135ல் அவன் இறந்தான். 

ஆனால் துரதிர்ஷ்டவசமாம கி.பி. 17ம் ஆண்டில் ஏற்பட்ட ஒரு பெரும் பூகம்பத்தால் இந்த நகரம் முற்றிலுமாக அழிந்தது.

அடுத்த இருநூறு ஆண்டுகளில் ரோமானியர்கள் தங்கள் விருப்பப்படி இந்த இடத்தை புனர் நிர்மாணம் செய்ய ஆரம்பித்தனர்.

ஆங்காங்கே குளியலறைகள், அபல்லோவுக்கான ஒரு ஆலயம்,, தூண்களுடன் கூடிய ஒரு பெரிய சாலை உள்ளிட்டவற்றை அவர்கள் அமைத்தனர்.

அதுமட்டுமின்றி 15000 பேர் உட்கார்ந்து பார்க்கும் வண்ணம் வசதியாக உள்ள ஒரு அரங்கமும் கட்டப்பட்டது.

அழகிய தங்கு விடுதிகள் அனைவரையும் வா வா என்று அழைத்தன. மூன்று ரோமானிய மன்னர்கள் இங்கு வந்து தங்கினர்.

பாதாள லோகத்தின் ரோமானியக் கடவுளான ப்ளூடோவுக்கும் 10 அடி சதுரத்தில் ஒரு புனித இடம் அர்ப்பணிக்கப்பட்டது. 

அந்த பத்து அடி சதுரத்திற்குள் வெப்பமுடன் நீரூற்று பீச்சி அடித்து உள்ளே ஆவியுடன் வரும் போது துர்நாற்றம் ஏற்பட்டதால் இதை கெட்ட பிசாசுகளின் இடம் என்று அனைவரும் சொல்ல ஆரம்பித்தனர்.

ரோமின் வரலாற்றை எழுதிய வரலாற்று ஆசிரியர் ஸ்டீபோ (கி.மு 60 – கிபி..21) இங்கு வந்து ஆவி பறக்க வரும் துர்நாற்றம் அடிக்கும் நீரைப் பார்த்து அது விஷமுள்ளது என்று தீர்மானித்து சில சிட்டுக்குருவிப் பறவைகளை அங்கு தூக்கிப் போட்டார். அவை மறுகணமே இறந்தன.

ஆனால் இங்குள்ள குறி சொல்லும் குருமார்கள் மட்டும் இந்த விஷப்புகையால் பாதிக்கப்படவில்லை என்பது ஒரு அதிசயமாக இருந்தது.

பாமுக்கலே பஞ்சுக் கோட்டை அதன் பெயருக்குத் தக்கபடி பஞ்சினால் ஆக்கப்பட்ட பெரும் கோட்டையாகவே இன்றளவும் காட்சி அளிக்கிறது.

அடுத்து இங்கு உற்பத்தியாகும் பஞ்சாடைகளைச் சுத்தம் செய்ய இதன் நீர் பெரிதும் உதவுகிறது. பஞ்சு ஆடைகளில் பல வித வண்ணங்கள் பூசவும் இந்த நீர் பயன்படுகிறது.

பெயர் தெரியாத ஒரு கவிஞர் டைடான் என்னும் ராட்சஸ உருவம் உடையவர்கள் இங்கு பஞ்சுப் பொதிகளை போட்டு உலர்த்துவதாகக் கவிதை இயற்றியுள்ளார். 

இங்குள்ள நீரானது கால்சியம் கார்பனேட்., சல்பேட்,, சோடியம் குளோரைட், இரும்பு,, மக்னீஷியம் கார்பொனேட். மக்னீஷியா உள்ளிட்ட பல தாதுக்களால் வளம் பெறுகிறது என்பது நிபுணர்கள் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இங்கு வெந்நீர் ஊற்றில் குளித்த மறுகணமே தசைகள் ஓய்வாக தளர்ந்து இருப்பதை அனைவரும் உணர்கின்றனர்.

இந்த நீரை அருந்துவதால் குடல் சுத்தமாவதோடு, ஜீரண சக்தியும் அதிகமாகிறது.

காலம் காலமாக அனுபவ மொழிகளால் இதன் புகழ் பெருகப் பெருக

இங்கு வரும் பயணிகளின் கூட்டமும் அதிகரிக்கிறது. 

இயற்கை அளித்துள்ள வரபிரசாதம் வியாதிகளைப் போக்கும் பாமுக்கலே வெந்நீர் ஊற்றுக்கள்!!

** 

Purananuru Wonders 5- Ancient Tamil Encyclopaedia Part 45 (Post No.15,314)

Written by London Swaminathan

Post No. 15,314

Date uploaded in London –  27 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Item 288   War Mongers

Puranānūru 7, Poet Karunkulal Āthanār sang to Chozhan Karikāl Peruvalathān (Karikālan),( kari kaalan)

Karikal Choza was one of the greatest Cholza kings of Sangam Age. The worst thing about the Tamils is they fought among themselves continuously for over 1500 years in Tamil Nadu. Here the poet praised Karikal Choza for setting fire to his enemy towns without considering whether it is day or night. What we hear is the crying of the people. The king plundered the towns of the enemies. This is the message of the poem. Tamils were war mongers.

***

289

Karikalan was riding an elephant unlike other kings who rode on a horse. He is called Black Legged or Mr Black Foot. There was a family fighting to get the throne and there was an arson attack against him where he got these black feet. We have a similar named king in Puranas- Kalmasha pada.

***

290

Vishnu is praised as having Lakshmi on his chest. Here Karikalan is considered a king where Goddess of wealth and Kingdom resides on his chest refusing to go anywhere else. This is an ancient Hindu belief. Even the kingdom is called Rajya Lakshmi. Prosperity, Wealth, Asset are called Lakshmi in Hindu literature.

***

291

Name of the poet

The same poet composed another poem about Karikalan. Commentators guess that his hair was so black even when he was old and so the poet was called Karun Kuzal + Aathan. We see more names in Tamil based on one’s body parts. More poets have Eye in their names such as Big Eye, Red Eye etc.

***

Important lines from Puram verse

Your chest is so broad, and Thirumakal (Lakshmi) forsakes others for it. 

………………..

You do not consider whether it is day or night to plunder enemy towns, blazing them as their citizens cry loudly.

In Tamil

புறநானூறு 7பாடியவர்: கருங்குழல் ஆதனார்பாடப்பட்டோன்:  சோழன் கரிகால் பெருவளத்தான் (கரிகாலன்), 

மா மறுத்த மலர் மார்பின் Lakshmi in Chest,  5
……………….

எல்லையும் இரவும் எண்ணாய், பகைவர்
ஊர் சுடு விளக்கத்து அழு விளிக் கம்பலைக்
கொள்ளை மேவலை Arson attack and plundering

*** 

292 

King is greater than Sun 

புறநானூறு 8பாடியவர்: கபிலர்பாடப்பட்டோன்: சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதன்

Puranānūru 8, Poet Kapilar sang for Cheraman Selva Kadunkō Vāzhiyāthan, 

Kapilar is the most famous poet of Sangam age. He had the highest praise from other poets for being a Brahmin of spotless character. Moreover, he was the one who has contributed highest number of poems in Sangam tamil Literature.

*** 

293

Here Kapilar praised Chera King by comparing him with the Sun. According to the poet Sun is defective in many ways. Sun hides behind the mountain (implying Chera King never hides). Sun shines only in the day time (Chera king is shining for ever)

*** 

294

My Comments

Commentators never mentioned Zodiac or Uttarayana (northward march of Sun) and Dakshinayana (southward march of sun). I think Kapilar meant only this when he said மாறி வருதி – you come from various directions. 

Another point that I would like to add is the Zodiac. Sun travels in circles mean he moves from one sign to another sign. He completes one circle every year by travelling through 12 zodiac signs.

***

295 Sanskrit Words 

Note the Sanskrit words Bogam and  Mandilam in the poem

 ***

Important  lines
He (Chera king)  is greatly generous. 

O sun which goes rapidly in circles!  How can you
compare yourself to Cheralathan with a murderous
army that fights battles?

 போகம் (Sanskrit word)  வேண்டி – desiring pleasure,

கடந்து அடு தானைச் சேரலாதனை யாங்கனம் ஒத்தியோ – how are you equal to Cheralathan with murderous armies that attack .

வீங்கு செலல் மண்டிலம் (Sanskrit Word) – O sun who goes fast in circles,  மலை மறைந்து ஒளித்தி – you hide behind mountains,

***

296

Puranānūru 9, Poet Nettimaiyār sang for Pandiyan Palyākasālai Muthukudumi Peruvazhuthi.

Go Brahmanebhya Subhamastu Nityam Loka Samstha Sukino Bhavantu

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம் – திருஞான சம்பந்தர்

புறநானூறு 9பாடியவர்: நெட்டிமையார்பாடப்பட்டோன்: பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி

This Pandya King was praised in Puram verse six as a great worshipper of Siva and Brahmins reciting Four Vedas. Here Nettimaiyar adds the ancient Hindu prayer that the whole world should live happily. They always mention From Brahmin to people of all castes, From cow to all living beings should live happily. All the Sanskrit dramas and all the Hindu rituals end with this prayer.

வாழ்க அந்தணர்வானவர்ஆன் இனம்!

வீழ்கதண்புனல்! வேந்தனும் ஓங்குக!

ஆழ்கதீயது எல்லாம்! அரன் நாமமே

சூழ்க! வையகமும் துயர் தீர்கவே!

***

புறநானூறு 9பாடியவர்: நெட்டிமையார்

 “ஆவும், ஆன் இயல் பார்ப்பன மாக்களும்,
பெண்டிரும், பிணியுடையீரும் பேணித்
தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன் போல் புதல்வர்ப் பெறாஅதீரும்,
எம் அம்பு கடி விடுதும், நும் அரண் சேர்மின்” என  5
அறத்து ஆறு நுவலும் பூட்கை மறத்தின்,
கொல்களிற்று மீமிசைக் கொடி விசும்பு நிழற்றும்
எங்கோ வாழிய, குடுமி, தங்கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த,
முந்நீர் விழவின் நெடியோன்  10
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே!

He announces in a righteous manner, “Cows,
Brahmins with the nature of cows, women, those
who are sick, and those living in the southern
land with no gold-like sons to perform precious
last rites, take refuge!   We are ready to shoot
volleys of arrows!”

***

297

Dharma Yuddha- Hindu Wars based on Rules

Kannaki also ordered the Fire God Agni not to burn the above category of people  in Silappadikaram.

In other verses of Purananuru ,we see those who have not got sons yet should not undertake any life threatening task or ritual. So, kings always announce before starting a war that all those vulnerable people should keep away from the war zone. We see this in Mahabharata as well. After sun set both the fighting parties even treated injured people.

***

298 Kumari Kanda

This poet lived in the age when ancient South Madurai existed. Later the sea devoured a big area in a Tsunami catastrophe including Then Madurai. Here we get important geographic details about Pahruli River that ran in ancient Kumari Region and the Nediyon Hills.

We also get some details about Indra Festival (Ocean Festival). Silappadikaram and Manimekalai, two Tamil epics, give us full details of Indra Festival.

***

our king Kudumi, live for long, more days
than the number of sands on the banks of Pakruli River with fine water,
where his ancestor Nediyōn celebrated ocean festivals,
and gave musicians fresh, reddish gold gifts!

***

299 Sand Simile

Hindu poets who composed poems in Tamil and Sanskrit wished long life to the kings. They always used infinity years by saying king should live more years than the sand particles on the banks or the number of stars in the sky.

Now we know that the universe has billion, billion stars. No one can even imagine the number of sand particles on any riverbank or sea shore. How clever our poets were!

***

300 முந்நீர் Three Waters= Sea

Tamils were great observers of nature. In Tamil only we have a strange name for sea or ocean Three Waters.

Two commentators give two different interpretations.

Sea is composed of River water, Rain water and Spring water and so it is Three Waters.

Another interpretation is that Sea does three tasks Creation, Protection and Destruction like Brahma, Vishnu and Siva.

Both are very scientific. We know how land came  from sea and how they would be destroyed in Tsunami at the end.

Spring water: Now only scientists have discovered deep sea hot springs. Probably our ancestors knew this as well.

Imporatnt Lines in Tamil

முந்நீர் – தமிழகம் கிழக்கு தெற்கு மேற்கு ஆகிய மூன்று திசையானும் நீர்வளைவுண்டது.  முந்நீர் என்னும் தமிழ்க்கிளவி இம்முப்புறக் கடலமைப்பைச் சுட்டுவது – வ. சுப. மாணிக்கனாரின் ‘தமிழ்க்காதல்’ நூல், ஆற்று நீரும், ஊற்று நீரும் மழை நீரும் உடைமையான் முந்நீர் – ஒளவை துரைசாமி புறநானூறு 9 உரை, நிலத்தைப் படைத்தலும் காத்தலும் அழித்தலுமாகிய நீர் – நச்சினார்க்கினியர் மதுரைக்காஞ்சி 75

Meanings:  ஆவும் – and cows, ஆன் இயல் பார்ப்பன மாக்களும் – and Brahmins who have the nature of cows, பெண்டிரும் – and women, பிணி உடையீரும் – and those of you with diseases, பேணி – protecting, தென்புல வாழ்நர்க்கு – to those who live in the south, அருங்கடன் இறுக்கும் –  performing final rites, பொன் போல் புதல்வர்ப் பெறாஅதீரும் – and those of you who have not given birth to gold-like sons (பெறாஅதீரும் – அளபெடை), எம் அம்பு கடி விடுதும் – we are going to shoot our arrows நெடியோன் – your ancestor Nediyōn, நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே – many more days than the number of sands on the banks of Pahruli river with good water (பலவே – ஏகாரம் அசைநிலை, an expletive)

To be continued…………….

Tags- Purananuru Wonders 5- Ancient Tamil Encyclopaedia Part 45 , Karikalan, Mudukudumi, Three Waters, war mongers, Arson attack, Kapilar

GNANAMAYAM 28 December 2025 BROADCAST PROGRAMME

Gnanamayam Broadcast comes to you EVERY SUNDAY via Zoom, Facebook and You Tube at the same time .

London Time 12 PM GMT

Indian Time 5-30 pm (evening)

Sydney, Australia time 11 pm (Night)

*****

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES via Zoom, Facebook and You Tube at the same time.

****

Prayer – Mrs Jayanthi Sundar Team-

***

NEWS BULLETIN

LATHA YOGESH from London presents World Hindu News in Tamil

****

Alayam Arivom presented by Mrs Chitra Nagarajan from Bangalore

Topic- Thiruneermalai Temple

***

Talk by S Nagarajan from Bangalore

Topic: Sri Paramahamsa Yogananda

****

SPECIAL EVENT-

RSS CENTENARY CELEBRATIONS

VIDEO PRESENTATION BY BANGALORE GANESH

 ******

ஞானமயம் ஒலி/ ஒளி பரப்பு நிகழ்ச்சி நிரல் ஞாயிற்றுக்கிழமை 28th December 2025

நேரில் காணலாம்; கேட்கலாம் via Zoom, Facebook and You Tube at the same time .

***

இறைவணக்கம் —  திருமதி ஜெயந்தி சுந்தர் குழுவினர்-

***

உலக இந்துமத செய்தி மடல்-

லண்டன் மாநகரிலிருந்து லதா யோகேஷ் வழங்கும் செய்தி செய்தி மடல்.

***

ஆலயம் அறிவோம் — சொற்பொழிவு—

திருமதி சித்ரா  நாகராஜன் – பெங்களுர்

தலைப்பு — திருநீர்மலை கோவில்

****

சொற்பொழிவு : திரு எஸ் நாகராஜன் , பெங்களூர்

தலைப்பு : பரமஹம்ச யோகானந்தா

***

இன்றைய சிறப்பு நிகழ்ச்சி:

நூற்றாண்டு விழாக்கண்ட ஆர். எஸ். எஸ்.

வீடியோ காட்சி தொகுத்து வழங்குபவர் – பெங்களூர் கணேஷ்

—subham—

Tags-Gnanamayam Broadcast, 28-12- 2025, programme

வள்ளுவரைத் தோற்கடித்தார் அருணகிரி!

தமிழிலேயே பெரிய எண் நூறு லக்ஷம்கோடி! (Post.15,313)

Written by London Swaminathan

Post No. 15,313

Date uploaded in London –  27 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

கோடி என்ற சம்ஸ்க்ருத எண்ணை திருவள்ளுவர் குறைந்தது ஆறு இடங்களில் எண்ணிக்கை என்ற பொருளில் பயன்படுத்துகிறார் . இவை தவிர வேறு பொருளிலும் இரண்டு இடங்களில் பயன்படுத்துகிறார் ஆங்கிலத்தில் கோடி என்பதை பத்து மில்லியன் என்பார்கள் வள்ளுவர் ஓரிடத்தில் எழுபது கோடி என்று பாடுகிறார் – குறள் 639. இதை ஆங்கிலத்தில் 700  மில்லியன் என்பார்கள் ; நான் பார்த்தவரை திருக்குறளில் இதுதான் பெரிய எண் ; இவரைத் தோற்கடிக்கும் ஒரு மிகப்பெரிய எண்ணிக்கையை அருணகிரிநாதர் திருப்புகழில் பாடுகிறார் . அதை நீங்கள் தாளில் / காகிதத்தில் எழுதமுடியாது . ஒரு கோடி என்பதை எழுதவே நமக்கு எட்டு இலக்கங்கள் தேவை? 10,000,000

ஆயிரம் கோடிக்கு 11 இலக்கங்கள் தேவை.

அருணகிரியோ நூறு லட்சம் கோடி என்கிறார் ;  எனக்குத் தலை சுற்றுகிறது; உங்களுக்கு தலை சக்கர் அடிக்காவிட்டால், முடிந்தால் எழுதிப்பாருங்கள். அதை உங்கள் காமெண்ட்டில் பதிவு செய்து வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .

***

இதோ அந்தப் பாடல்

Thanks to Sri Gopalasundaram and kaumaram.com

சீர்சிறக்கு மேனி பசேல் பசே லென

     நூபுரத்தி னோசை கலீர் கலீ ரென

          சேரவிட்ட தாள்கள் சிவேல் சிவே லென …… வருமானார்

சேகரத்தின் வாலை சிலோர் சிலோர் களு

     நூறுலக்ஷ கோடி மயால் மயால் கொடு

          தேடியொக்க வாடி யையோ வையோ வென …… மடமாதர்

மார்படைத்த கோடு பளீர் பளீ ரென

     ஏமலித்தெ னாவி பகீர் பகீ ரென

          மாமசக்கி லாசை யுளோ முளோ மென …… நினைவோடி

வாடைபற்று வேளை யடா வடா வென

     நீமயக்க மேது சொலாய் சொலா யென

          வாரம்வைத்த பாத மிதோ இதோ என …… அருள்வாயே

பாரதத்தை மேரு வெளீ வெளீ திகழ்

     கோடொடித்த நாளில் வரைஇ வரைஇ பவர்

          பானிறக்க ணேசர் குவா குவா கனர் …… இளையோனே

பாடல்முக்ய மாது தமீழ் தமீ ழிறை

     மாமுநிக்கு காதி லுணார் வுணார் விடு

          பாசமற்ற வேத குரூ குரூ பர …… குமரேசா

போர்மிகுத்த சூரன் விடோம் விடோ மென

     நேரெதிர்க்க வேலை படீர் படீ ரென

          போயறுத்த போது குபீர் குபீ ரென …… வெகுசோரி

பூமியுக்க வீசு குகா குகா திகழ்

     சோலைவெற்பின் மேவு தெய்வா தெய்வா னைதொள்

          பூணியிச்சை யாறு புயா புயா றுள …… பெருமாளே.

……… சொல் விளக்கம் ………

சீர் சிறக்கும் மேனி பசேல் பசேல் என … அழகு மிக்க உடல்

பசுமையான குளிர்ந்த நிறத்துடன் விளங்க,

நூபுரத்தின் ஓசை கலீர் கலீர் என … கால் சிலம்பின் ஓசை கலீர்

கலீர் என்று ஒலிக்க,

சேர விட்ட தாள்கள் சிவேல் சிவேல் என வரு மானார் …

இணைந்து செல்லும் பாதங்கள் செக்கச் செவேல் எனத் திகழ வருகின்ற விலைமாதர்கள் சிலரும்,

சேகரத்தின் வாலை சிலோர் சிலோர்களு(ம்) …

கூட்டங்களுக்குக் (கொடுப்பதற்காக) கட்டிளமைப் பருவத்து சில சில

பெண்களும்,

நூறு லக்ஷ கோடி மயால் மயால் கொடு … நூறு லக்ஷ கோடி

அளவில் மிகப் பலத்த மோகத்தோடு

தேடி ஒக்க வாடி ஐயோ ஐயோ என மடமாதர் … தேடி

வைத்துள்ள பொருள்கள் அவ்வளவையும் வாட்டமுற்று ஐயோ ஐயோ என்னும்படி (இழக்கச் செய்கின்ற) இளம் மாதர்களின்

மார்பு அடைத்த கோடு பளீர் பளீர் என … நெஞ்சம் எல்லாம்

பரந்துள்ள மலை போன்ற மார்பகம் பளீர் பளீர் என்று ஒளி வீச,

ஏமலித்து என் ஆவி பகீர் பகீர் என … அதைக் கண்டு மனக்

கலக்கம் உற்று என் உயிர் பகீர் பகீர் எனப் பதைக்க,

மா மசக்கில் ஆசை உளோம் உளோம் என நினைவு ஓடி …

அம்மாதர்களின் பெரிய மயக்கத்தில் ஆசை உண்டு, உண்டு என்று

நினைவானது ஓடி,

வாடை பற்று வேளை அடா அடா என … (அந்தக் காமப் பித்தக்)

காற்று என்னைப் பிடிக்கின்ற சமயத்தில் அடா அடா என்று என்னைக் கூவி அழைத்து,

நீ மயக்கம் ஏது சொலாய் சொலாய் என … உனக்கு என்ன

மயக்கம் இது சொல்லுக, சொல்லுக என வற்புறுத்தி,

வாரம் வைத்த பாதம் இதோ இதோ என அருள்வாயே …

நீ அன்பு வைத்த திருவடி இதோ, இதோ என்று கூறித் தந்து அருள்

புரிவாயாக.

பாரதத்தை மேரு வெளீ வெளீ திகழ் … பாரதத்தை மேரு

மலையின் வெளிப் புறத்தில் நன்கு விளங்கும்படி

கோடு ஒடித்த நாளில் வரை (இ)வரை (இ)பவர் … தமது

தந்தத்தையே ஒடித்து அந்த நாளில் மலையில் எழுதிய யானை

முகத்தவரும்,

பா(னு) நிறக் கணேசர் கு ஆகு வாகனர் இளையோனே …

சூரியனைப் போன்ற நிறத்தை உடைய கணபதியும், சிறிய மூஞ்சூறு

வாகனத்தவரும் ஆகிய விநாயகருக்குத் தம்பியே,

பாடல் முக்ய மாது தமீழ் தமீழ் இறை … பாக்கள் சிறப்புடனும்

அழகுடனும் உள்ள தமிழை, தமிழ்க் கடவுளாய் நின்று,

மா முநிக்கு காதில் உணார் உணார் விடு … சிறந்த அகத்திய

முனிவருக்கு, செவியில் நன்கு ஆராய்ந்து உபதேசம் செய்த,

பாசம் அற்ற வேத குரூ குரூபர குமரேசா … இயல்பாகவே

பாசங்களினின்று நீங்கிய வேத குருபரனாகிய குமரேசனே,

போர் மிகுத்த சூரன் விடோம் விடோம் என … போரில்

மிக்கவனாகிய சூரன் விட மாட்டேன் விடமாட்டேன் என்று,

நேர் எதிர்க்க வேலை படீர் படீர் என போய் அறுத்த போது …

நேராக வந்து எதிர்த்தவுடன் வேலாயுதத்தை படீர் படீர் என்ற ஒலியுடன் (அந்த அசுரர்களைப்) போய் அறுத்த போது

குபீர் குபீர் என வெகு சோரி பூமி உக்க வீசு குகா குகா …

ரத்தம் குபீர் குபீர் என்று பூமியில் சிந்த ஆயுதத்தை வீசிய குகனே,

குகனே,

திகழ் சோலை வெற்பின் மேவு தெய்வா … விளங்கும் சோலை

மலையில் வீற்றீருக்கும் தெய்வமே,

தெய்வானை தோள் பூணி இச்சை ஆறு புயா புயா ஆறு உள

பெருமாளே. … தேவயானையின் தோளை அணைந்து அன்பு கொண்ட

(6+6=12) பன்னிரண்டு புயங்களைக் கொண்ட பெருமாளே.

***

பிள்ளையார் கதை

இந்தப்பாட்டில் எண் அழகு மட்டும் இல்லாமல், ஓசை அழகும் உளது! அத்தோடு கணபதியானவர் ஒரு தந்தத்தினை ஒடித்து மஹாபாரதம் எழுதிய கதையும் உளது

பாரதத்தை மேரு வெளீ வெளீ திகழ்

     கோடொடித்த நாளில் வரைஇ வரைஇ பவர்

          பானிறக்க ணேசர் குவா குவா கனர் …… இளையோனே

இந்த ஓசை நயத்தில் அவர் கணபதிக்குப்  போடும் குவா குவா – சொல்நயத்தை ரசிக்காதவர் உண்டோ!

இவ்வாறு வெவ்வேறு கோணங்களில் அணுகினால் பாடலை நினைவில் வைத்துக்கொள்ளுவது எளிது; அந்தக் கால கணித இயலையும் அறிகிறோம். தசம முறை என்ற டெசிமல் சிஸ்டத்தைக் கண்டுபிடித்து உலகிற்கு அளித்தது இந்துக்கள்தான் ரிக் வேதம் முழுதும் இதுபோன்ற எண்களைக் காணலாம்.

–subham—

Tags- வள்ளுவர்  தோற்கடித்தார், அருணகிரி, தமிழில்,  பெரிய எண், நூறு லக்ஷம்கோடி

விண்வெளி ஆதிக்கத்தில் சீனா முந்துகிறதா? (Post No.15,312)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,312

Date uploaded in London –   27 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

9-10-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!

விண்வெளி ஆதிக்கத்தில் சீனா முந்துகிறதா?

ச. நாகராஜன்

இன்றைய விண்வெளி ஆதிக்கப் போட்டியில் அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தைப் பிடித்திருக்கும் சீனா அமெரிக்காவை முந்தி முதலிடத்தைப் பிடிக்க விழைகிறது!

இரண்டு பிரம்மாண்டமான சாடலைட்டுகளின் தொகுதியை விண்ணிலே அமைத்து  வணிகத்தில் முன்னணியில் வந்து உலகத்தின் பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி முதல் சக்தியாக ஆக சீனா திட்டம் போடுகிறது!

இது மட்டுமல்ல, அமெரிக்க ராணுவத்திற்குப் போட்டியாக ராணுவத்திற்கான சாடலைட்டுகளையும் விண்ணில் ஏவி ராணுவத்திலும் முதலிடத்தை அடையப் பார்க்கிறது சீனா.

இப்போது சீன ஒரு புது விண்வெளிக் கொள்கையை வெளியிட்டிருக்கிறது. இதன்படி பூமியின் கீழ் சுற்றுப்பாதையில் பல வணிக மேம்பாட்டிற்கான விண்கலங்கள் செலுத்தப்படும்

2025 ஜனவரியில் டீப் சீக் (DEEP SEEk) என்ற செயற்கை நுண்ணறிவினால் உலகையே பிரமிக்க வைத்தது சீனா.

‘சீனா டெய்லி’ என்ற சீனப் பத்திரிகை மிகுந்த கர்வத்துடன் இந்த டீப் சீக்கினால் அமெரிக்க கர்வத்தை ஒரேயடியாக நொறுக்கி விட்டோம் என்று பெருமை பேசிக் கட்டுரைகளை வெளியிடுகிறது.

ஒரு பேரிடர் நிகழும் போது இப்போது முதலில் உதவிக்கு வருவது சாடலைட் தான்.

2025ல் ஜனவரி 7ம் தேதி திபெத்தில் ஒரு பெரிய பூகம்பம் ஏற்பட்டது. அதன் மாக்னிட்யூட் அளவு 7.1.

400 பேர்கள் இறந்தனர். பூகம்பம் நிகழ்ந்த சில நொடிகளிலேயே சீன அரசு உடனடியாக நிவாரண நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்தது. எட்டு சாடலைட்டுகள் பூகம்பம் நிகழ்ந்த இடத்தை ஆய்வு செய்தன. உலகின் இதர பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்ட கிராமங்களுக்கு உடனடியாக சாலைகள் போடப்பட்டு தகவல் தொடர்பும் போக்குவரத்தும் சீரமைக்கப்பட்டது.

1970ல் தனது முதல் சாடலைட்டை விண்ணில் ஏவியது சீனா. பிறகு 40 வருடங்களில் வருடத்திற்கு மூன்று என்ற எண்ணிக்கையில் 131 சாடலைட்டுகளை விண்ணில் ஏவியது. ஆனால் 2021ம் ஆண்டிலிருந்து வருடத்திற்கு சுமார் 100 சாடலைட்டுகளை அது விண்ணில் ஏவி சாதனை படைத்திருக்கிறது. ஆக ஆயிரத்திற்கும் மேற்பட்ட சீன சாடலைட்டுகள் இப்போது விண்ணில் சுற்றுகின்றன!

விண்வெளி வீரர்களை சந்திரனுக்கு அனுப்புவதில் தீவிரம் காட்டுகிறது சீனா. சந்திரனின் மறுபக்கத்திலிருந்து மாதிரிகளை பூமிக்குக் கொண்டு வந்த ஒரே நாடு சீனா தான். இப்போது சந்திரனைத் தவிர செவ்வாய் மீதும் தன் பார்வையைச் செலுத்தி இருக்கிறது சீனா.

ஏராளமான சீன கம்பெனிகள் சாடலைட்டுகளைத் தயார் செய்வதில் மும்முரம் காட்டுகின்றன.

2030ல் சீனா சந்திரனுக்கு விண்வெளி வீரரை அனுப்பும் என்று 2023ம் ஆண்டு சீன அரசு அறிவித்தது. சோதனை ஓட்டங்கள் 2027ல் நிகழும் என எதிர்பார்க்கபப்டுகிறது.

பூமியில் உள்ள எல்லா இடங்களிலும் என்ன நடக்கிறது என்று வேவு பார்ப்பதில் சீனா இப்போது அமெரிக்காவிற்கு இணையாக முன்னணி வகிக்கிறது. இதற்கான சீன சாடலைட்டுகள் ஏராளம் விண்ணில் செயல்படுகின்றன!

சாடலைட் தொழில்நுட்பம் மட்டுமல்ல, எலக்ட்ரிக் கார்களைத் தயார் செய்வதிலும் சீனா தீவிரம் காட்டுகிறது. பசுமைப் புரட்சி, செயற்கை நுண்ணறிவு சாதனங்கள் போன்றவற்றிலும் அது தன் தீவிரத்தைக் காட்டுவதால் அமெரிக்கா இப்போது கவலைப்பட ஆரம்பித்திருக்கிறது.

பிற நாடுகளுடன் நல்லிணக்கமாக இருந்து அவர்களின் நல்லெண்ணத்தைப் பெறுவதும் சீனாவின் புது உத்தியாகும்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அவ்வப்பொழுது வெளியிடும் அதிரடிக் கொள்கைகளினால் ரஷியா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் முன் எப்போதும் இல்லாத அளவில் இணக்கமாக இருப்பதும் குறிப்பிடத்தகுந்த விஷயமாகும்.

சீனாவின் நல்ல மாற்றமானது அது எதிர்பார்க்கும் வெற்றிகளைத் தருமா?

காலம் தான் பதில் சொல்லும்!

**

மந்திரத் தகடுகள் பற்றி அருணகிரி எச்சரிக்கை (Post No.15,311)

Written by London Swaminathan

Post No. 15,311

Date uploaded in London –  26 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

மந்திரத் தகடுகள் உண்மையான சக்தி படைத்தவைதான்; ஆனால் அதை வைத்து ஏமாற்றுவோர் எண்ணிக்கையே அதிகம். கோவில் கடைகளிலும் கோவிலுக்கு வெளியே தெருவோரக் கடைகளிலும், பல படங்களிலும் இவ்வாறு விற்கப்படும் மந்திர, யந்திரத் தகடுகளை வாங்கி யாரும் ஏமாறக்கூட்டாது என்பதே பாட்டின் கருத்து

இதோ அருணகிரிநாதரின் திருப்புகழ்:–

துயர மறுநின் வறுமை தொலையு

     மொழியு மமிர்த …… சுரபானம்

சுரபி குளிகை யெளிது பெறுக

     துவளு மெமது …… பசிதீரத்

தயிரு மமுது மமையு மிடுக

     சவடி கடக …… நெளிகாறை

தருக தகடொ டுருக எனுமி

     விரகு தவிர்வ …… தொருநாளே

உயரு நிகரில் சிகரி மிடறு

     முடலு மவுணர் …… நெடுமார்பும்

உருவ மகர முகர திமிர

     வுததி யுதர …… மதுபீற

அயரு மமரர் சரண நிகள

     முறிய எறியு …… மயில்வீரா

அறிவு முரமு மறமு நிறமு

     மழகு முடைய …… பெருமாளே.

……… சொல் விளக்கம் ………

துயரம் அறு(ம்) நின் வறுமை தொலையும் … துன்பமெல்லாம்

ஒழியும். உனது தரித்திரம் நீங்கும்.

மொழியும் அமிர்த சுர பானம் சுரபி குளிகை எளிது பெறுக …

பிரசித்தி பெற்ற அமுதமாகிய தேவர் பருகும் உணவும், காமதேனுவும்,

(உலோகங்களைப் பொன்னாக்க வல்ல மந்திர சக்தி உள்ள)

மாத்திரைகளையும், சுலபமாக நீ பெற முடியும்.

துவளும் எமது பசி தீரத் தயிரும் அமுதும் அமையும் இடுக …

வாடுகின்ற எம்முடைய பசி அடங்கும்படியாக தயிரும் சோறும் எமக்கு இட்டால் அதுவே போதுமானது. அதைத் தந்து உதவுக.

சவடி கடக நெளி காறை தருக தகடொடு உறுக … பொன் சரடு,

கங்கணம், மோதிரம், (பொன்னாலாகிய) கழுத்து அணி இவைகளைத் தர வல்ல தாயத்து மந்திரத் தகட்டை (நான் தருவேன், அதை நீ) பெற்றுக் கொள்க.

எனும் இவ்விரகு தவிர்வதும் ஒரு நாளே … என்று கூறும் (கபட

ரசவாதிகளின்) இந்த வகையான தந்திர மொழிகளிலிருந்து தப்பும் ஒரு நாள் எனக்குக் கிட்டுமோ?

உயரு(ம்) நிகர் இல் சிகரி மிடறும் உடலும் அவுணர் நெடு

மார்பும் உருவ … உயர்ந்துள்ளதும், தனக்கு ஒப்பில்லாததுமான

கிரெளஞ்ச மலையின் நெஞ்சும் உடலும், அசுரர்களுடைய பெரிய

மார்பும் ஊடுருவும் படியாக,

மகர முகர திமிர உததி உதரம் அது பீற … மகர மீன்கள்

உலாவுவதும், பேரொலி செய்வதும், இருண்டதுமான கடல் தனது

வயிற்றின் உட்பாகம் கிழிய,

அயரும் அமரர் சரண நிகள(ம்) முறிய எறியும் அயில் வீரா …

சோர்வடைந்த தேவர்களின் காலில் இருந்த விலங்குகள் உடைபடச்

செலுத்திய வேல் வீரனே.

அறிவும் உரமும் அறமு(ம்) நிறமும் அழகும் உடைய

பெருமாளே. … ஞானமும், வலிமையும், தரும நெறியும், ஒளியும்,

அழகும் உடைய பெருமாளே.

–SUBHAM—

TAGS- மந்திரத் தகடுகள், அருணகிரிநாதர்,  எச்சரிக்கை , திருப்புகழ், யந்திரங்கள்

January 2026 Calendar- Adi Shankara’s Q and A (Last Part ) – Post No.15,310

Written by London Swaminathan

Post No. 15,310

Date uploaded in London –  26 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

We have published Adi Shankara’s Prasnottara  malika in the past three month calendars. This book is in Q and A format. We will look at the concluding part of the book this month.

January 1- New Year Day; 3-Arudra Darshan; 7-Thyagabrahma Aradhana at Tiruvaiyaru in Tamil Nadu; 14- Bhogi; 15- Makara Sankranti/ Pongal; 16- Kanu Pongal; 18- Thai Amavasai; 25-Ratha Saptami; 26-Republic Day/ Bhishma Ashtami; 30-Mahatma Gandhi Death Anniversary.

****

January 1 Thursday

Q: Who is a dhanya ? (One who has attained the highest goal of life)?

A:  Sanyaasee (One who has broken the shackles which bind him to the   samsaara)

***

January 2 Friday

Q:  Who is a maanya?  (One who commands respect)?

A:   One who is learned and at the same time of a saintly character.

***

January 3 Saturday

Q:  Who is sevya (one who deserves to be served)?

A:  One who gives in charity

***

January 4 Sunday

Q:  Who is a dhatha (giver)  ?

A:   One who satisfies those who beg from him.

***

January 5 Mondy 

Q: What is blessing for one who has a body?

 A:  Health (absence of disease)

***

January 6 Tuesday

Q: Who enjoys the fruits?

 A:  One who tills the soil (puts in effort)

***

January 7 Wednesday

Q: Who has no sins?

A:  One who does japa

***

January 8 Thursday

Q: Who is whole (full)?

A:  One who has children

***

January 9 Friday

Q: What is difficult to do for humans?

A:  Keeping the mind under control always

***

January 10 Saturday

Q: Who is a brahmachaari?

A: One who has sublimated one’s sex energy

***

January 11 Sunday

Q: Who is paradevata ?

A:  The Divine mother, embodiment of pure consciousness

***

January 12 Mondy 

Q: Who supports these worlds?

A:  The Sun

***

January 13 Tuesday

Q: What is the source of living for all?

A:  clouds which give rain.

***

January 14 Wednesday

Q: Who is valiant?

A:  One who protects the frightened.

***

January 15 Thursday

Q: Who is the protector?

A: Spiritual teacher

***

January 16 Friday

Q: Who is the teacher for the whole world?

A: Lord Shiva

***

January 17 Saturday

Q: From whom is true knowledge?

A: Only from Lord Shiva

***

January 18 Sunday

Q: From who one gets liberation?

A:  From Mukunda

***

January 19 Mondy         

Q: What is avidyaa?

 A: Forgetting one’s real Self

***

January 20 Tuesday

Q: Who is without sorrow?

A:  One who never gets angry

***

January 21 Wednesday

Q:  What is happiness?

A:   Contentment

***

January 22 Thursday

Q:  Who is king?

A:   One who keeps his subjects happy.

***

January 23 Friday

Q: Who is a dog?

A: One who serves a mean person.

***

January 24 Saturday

Q:  Who is the master of maayaa ?

A:   The Lord of all

***

January 25 Sunday

Q:  What is indrajaala (the great magic)?

A:  The whole of this universe

***

January 26 Mondy 

Q: What is dream-like?

A: Whatever is happening in the waking state.

***

January 27 Tuesday

Q: What is Truth?

A: Brahman

***

January 28 Wednesday

Q: What is mithyaa  (illusion, non-existent which appears as existent)?

A: That which disappears when true knowledge dawns.

***

 January 29 Thursday

Q:  What is indefinable?

 A:  Maayaa

***

January 30 Friday

Q: What is imagined?

 A: Duality

***

January 31 Saturday

Q: What is the highest goal?

A:  Adwaitam (non-duality)

***

BONUS QUOTES

Q: From whence ignorance?

A: Without beginning

Q: Who is the manifest devataa (God)?

A:  Mother

Q:  Who deserves worship and is also guru?

A:   Father

Q:  In whom is manifest all the gods?

A:   Brahmana  in whom there is true knowledge and who performs vedic karmas, without attachment, as an offering to God.

Q:  Whose words never fail to be true and effective?

 A:  One who is truthful, who keeps silence ( has control over his speech) 

      and whose mind is tranquil.

Q: What is the cause of birth?

A:  Attachment to sensual pleasures

Q: What cannot be avoided?

A:  Death.

Q: Where should one place one’s foot?

A:  Where one’s eyes tell that the place is clean.

Q: Who is the fit person to receive alms?

A:  One who is hungry.

Q: Who is to be worshipped?

A:  The incarnations of the Lord (God, Bhagavaan)

Q: Who is Bhagavaan?

A: The one Supreme Lord in whom Shankara and Naraayana are united.

Q: what is the fruit of devotion to God?

A: Attaining the abode of the Lord

Q: What is moksha (liberation)?

A:  Liberation from ignorance (the end of avidya)

Q: What is the source of all the Vedas

A:  The syllable ‘OM’

–Subham—

Tags- January 2026 Calendar Adi Shankara’s Q and A (Last Part), Sankara statues

ஜனவரி காலண்டர் 2026- ஆதி சங்கரரின் பொன்மொழிகள் (Post.15,309)

Written by London Swaminathan

Post No. 15,309

Date uploaded in London –  26 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

கடந்த மூன்று  மாத காலண்டர்களில் ஆதிசங்கரரின் பிரஸ்னோத்தர ரத்ன மாலிகாவில் உள்ள பொன்மொழிகளைக் கண்டோம்; அதன் தொடர்ச்சியை இந்த ஜனவரி  மாதக் காலண்டரில் காண்போம். இது அந்த நூலின் க்டைசி பகுதியாகும்

***

ஜனவரி 2026  பண்டிகைகள்

3-திருவாதிரை; 14-போகிப் பண்டிகை; 15-பொங்கல்/ மகர சங்கராந்தி; 16-கணுப்பொங்கல்/மாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் தினம்; 26-குடியரசு தினம்; 7-திருவையாறு தியாகராஜர் ஆராதனை;

25-ரதசப்தமி;  26- குடியரசு தினம் பீஷ்ம அஷ்டமி; 18- தை அமாவாசை;30- காந்திஜி  நினைவு தினம்.

ஏகாதசி உண்ணாவிரத நாட்கள்-14,29; அமாவாசை-18 பெளர்ணமி-3;

முகூர்த்த தினங்கள்- ஜனவரி 14;

***

ஜனவரி 1 வியாழக்கிழமை

வாழ்க்கையின் உயர்ந்த குறிக்கோளை அடைந்த தன்யன் யார் ?

சந்நியாசி /துறவி

***

ஜனவரி 2 வெள்ளிக்கிழமை

எல்லோருடைய மதிப்பையும் பெறும் மான்யன் யார்

கல்வி அறிவோடு துறவி போல் வாழ் பவன்  மான்யன் ஆவான்

***

ஜனவரி 3 சனிக்கிழமை

யாருக்கு சேவை செய்ய வேண்டும்?

தர்மம் செய்வோனுக்கு .

***

ஜனவரி 4 ஞாயிற்றுக்கிழமை

யாரை வாரிவழங்குவோன் என்று சொல்லலாம்?

யாசிப்பவரைத் திருப்தி செய்வோனை.

***

ஜனவரி 5 திங்கட் கிழமை

ஒருவனுக்கு கிடைக்கும் மிகப்பெரும் பாக்கியம் என்ன ?

ஒருவனின் உடல் ஆரோக்கியம்.

***

ஜனவரி 6 செவ்வாய்க்கிழமை

யார் பலன்களை அனுபவிப்பவன்?

உழுதுண்டு வாழ்வோன்.

***

ஜனவரி 7 புதன் கிழமை

பாவம் ஒட்டாதவன் யார் ?

ஜபம் செய்வோனை பாவங்கள் பீடிக்காது.

***

ஜனவரி 8 வியாழக்கிழமை

பூரணமானவன் யார் ?

குழந்தைகள் உடையவன் முழு  மனிதன்

***

ஜனவரி 9 வெள்ளிக்கிழமை

மனிதர்களுக்கு மிகவும் கடினமான காரியம் எது?

மனத்தைக் கட்டுப்படுத்துவதே.

***

ஜனவரி 10 சனிக்கிழமை

யார் பிரம்மச்சாரி ?

பெண்களை நினைக்காமல் /நாடாமல்/ தனது சக்தியை சேமித்துவைப்பவன் பிரம்மச்சாரி

***

ஜனவரி 11 ஞாயிற்று க்கிழமை

இந்த உலகத்துக்கு ஆதாரமாக இருப்பவன்  யார் ?

சூரியன்.

***

ஜனவரி 12 திங்கட் கிழமை

எல்லோருக்கும் வாழ்வினை அளிப்பது எது?

மழை.

***

ஜனவரி 13 செவ்வாய்க்கிழமை

வீரன் யார் ?

பயந்தவர்களைக் காப்பவன்

***

ஜனவரி 14  புதன் கிழமை

பாதுகாப்பு தருவோன் யார் ?

ஆன்மீக குரு

***

ஜனவரி 15 வியாழக்கிழமை

ஜகத் குரு யார் ?

சிவா பெருமான்

***

ஜனவரி 16 வெள்ளிக்கிழமை

அவித்யை என்பது என்ன ?

நான் யார் என்பதை மறந்து விடுவது (தன்னை அறியாமல் இருப்பது.)

***

ஜனவரி 17 சனிக்கிழமை

யாருக்குத் துன்பமே வராது?

கோபப்படாதவனுக்கு.

***

ஜனவரி 18 ஞாயிற்றுக்கிழமை

சந்தோசம் என்பது என்ன?

திருப்தியுடன் வாழ்வது (போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து)

***

ஜனவரி 19 திங்கட் கிழமை

அரசன் என்பவன் யார்?

தன குடிமக்களை மகிழ்ச்சியாக வாழவைப்பவன்.

***

ஜனவரி 20 செவ்வாய் க்கிழமை

நாய் என்று யாரைச் சொல்லலாம்?

கீழ்மக்களுக்கு தொண்டு செய்ப்பவனை.

***

ஜனவரி 21  புதன் கிழமை

இந்திர ஜாலம் என்று எதைச் சொல்லலாம் ?

இந்தப் பிரபஞ்சத்தை.

***

ஜனவரி 22 வியாழக்கிழமை

எது சத்தியம் ?

பிரம்மம்  (இறைவன்)

***

ஜனவரி 23 வெள்ளிக்கிழமை

உயர்ந்த லட்சியம் எது ?

அத்வைதம்

***

ஜனவரி 24 சனிக்கிழமை

இறைவனுக்கு சமமானவர் யார் ?

தாய் – அன்னை

***

ஜனவரி 25 ஞாயிற்றுக்கிழமை

வணங்கத்தக்கவரும்  குரு போன்றவரும் யார்?

தந்தை.

***

ஜனவரி 26 திங்கட் கிழமை

யாருடைய வார்த்தை எப்போதும் பொய்க்காது?

எவர் ஒருவர் உண்மை பேசுபவராகவும் மவுனம்/நாவடக்கம்  கடைப்பிடிப்பபவராகவும் இருக்கிறாரோ அவர் வார்த்தை பொய்க்காது.

***

ஜனவரி 27 செவ்வாய்க்கிழமை

நாம் மீண்டும் மீண்டும் பிறப்பது ஏன் ?

புலன்களுக்கு கட்டுப்பட்டு வாழ்வதால்

***

ஜனவரி 28  புதன் கிழமை

யாருக்கு அன்னம் இட வேண்டும் ?

எவன் ஒருவன் பசியுடன் உள்ளானோ அவனுக்கு.

***

ஜனவரி 29 வியாழக்கிழமை

பகவான் யார் ?

ஹரியும் சிவனும் இணைந்த கடவுள்; சங்கர நாராயணன்.

***

ஜனவரி 30 வெள்ளிக்கிழமை

வேதங்களுக்கு எல்லாம் மூலம் எது?

ஓம்காரம்

***

ஜனவரி 31 சனிக்கிழமை

முக்தி என்பது என்ன ?

அறியாமை / அவித்யையிலிருந்து விடுபடுவதே முக்தி/ மோட்சம்

–subham—

Tags- ஜனவரி காலண்டர், ஆதிசங்கரர், பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா, கடைசி பகுதி 

தமிழர் நிச்சயம் படிக்க வேண்டிய நூல் – தமிழ் விடு தூது! (Post.15,308)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,308

Date uploaded in London –   26 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

31-10-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!

தமிழர் நிச்சயம் படிக்க வேண்டிய நூல் – தமிழ் விடு தூது!

ச.நாகராஜன்

தமிழின் பெருமையை முழுவதுமாக யாராலும் சொல்ல முடியாது.

ஆனால் அதன் பெருமையைச் சொல்ல முயன்ற நூல்கள் பல;தம்மால் முடிந்த வரையில் தமிழின் பெருமையைக் கூற விழைந்த புலவர்கள் ஏராளம்.

இப்படிப்பட்ட நூல்களில் அரிய ஒரு நூலாகத் திகழ்வது தமிழ் விடு தூது என்னும் தூது நூல்.

இதை இயற்றியவர் யார் என்று தெரியவில்லை.

தமிழில் அரிய நூல்களின் சுவடிகளைத் தேடிக் கண்டுபிடித்து பல அரிய நூல்களை வெளியிட்ட மகாமகோத்பாயாய ஶ்ரீ உ. வே. சுவாமிநாத ஐயர் அவர்கள் இந்த நூலை 1930ம் ஆண்டு வெளியிட்டார்.

96 வகை பிரபந்தங்களில் தூது என்பதும் ஒரு வகை பிரபந்த நூல்.

268 கண்ணிகளைக் கொண்டது இந்த நூல். ஒரு கண்ணியில் இரண்டு அடிகள் இருக்கும்.

இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்

விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் (கண்ணி எண் 151)

என்ற வரிகள் எண்ணி எண்ணி மகிழ்வதற்குரிய வரிகளாகும்,

இந்த நூல் மதுரை சோமசுந்தரக் கடவுளின் மீது காதல் கொண்ட ஒரு தலைவி விரகத்தால் துன்புற்று தமிழை அவர் பால் தூது விடுத்ததாக இயற்றப் பெற்றது.

சிவபிரான் திருக்கோவையார் எழுதி அருளினார்.

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் தமிழின் மந்திர மகிமையை உணர்த்தும் வண்ணம் ஏராளமான திருவிளையாடல்களை நிகழ்த்தினர்.

தமிழை நோக்கி அவர் கூறுவது இது:

“கபிலர், பரணர், நக்கீரர் உள்ளிட்ட சங்கத்து மேலோரும், ஐயடிகள் காடவர் கோன். கழற்றறிவார் , திருமூலர், தெய்வத் திருவள்ளுவர் உள்ளிட்ட மேலோர் உன் புகழைப் பெருக்கினர்.

இயற்சொல்,திரிசொல், திசைச் சொல், வடசொல் ஆகிய நான்கு சொற்களையும் அகத்திணை ஏழையும் புறத்திணை ஏழையும் நீ கொண்டிருக்கிறாய். எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை, பா, பாவினம் ஆகிய எட்டையும் முப்பத்தைந்து அலங்காரங்களையும் கொண்டு நீ திகழ்கிறாய்.

பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெட்டு கீழ்க்கணக்கு உள்ளிட்ட நூல்களைக் கொண்டு இலங்குகிறாய்.

கம்பர், ஒட்டக்கூத்தர், வில்லிப்புத்தூரார் போன்ற மகாகவிகள் உன்னை அலங்கரித்துள்ளனர்.

உனது நூல்கள் மனத்து இருளை மாற்றும் திறன் வாய்ந்தவை.

அகத்தியருக்கு முருகன் அன்றோ தமிழை உணர்த்தி அருளினான்.

சோமசுந்தரக் கடவுளுக்கு நீ பொருளாக வந்தாய். (இறையனார் அகப்பொருள் நூலாக வந்தாய்)

திருவள்ளுவரின் ஈரடிக்குள்ளே உலகமெல்லாம் அடங்கும் அன்றோ!

 சுந்தரமூர்த்தி நாயனாருக்காக பரவை நாச்சியாரிடம் தூது சென்றாய்.

ஞானசம்பந்தருக்காக ஆண் பனையைப் பெண் பனை ஆக்கினையன்றோ!

திலகவதியாருடன் திருநாவுக்கரசரைப் பிறப்பித்தாய்.”

இப்படி வரிசையாக பல தமிழ் பெரியார்களின் அரும்செயல்களை நூல் குறிப்பிடுகிறது.

காவிரிப்பூம்பட்டினம், திருவாரூர், திருவையாறு, மதுரை உள்ளிட்ட பதினைந்து பெருநகரங்களை நூல் குறிப்பிடுகிறது.

ஊமை தமிழை அறிவித்தது, இரசவாதம் செய்தது உள்ளிட்ட முப்பதுக்கு மேற்பட்ட திருவிளையாடல்களை நூல் விளக்குகிறது.

சுமார் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட நாயன்மார்கள், பெரியார்களின் வரலாற்றை நூல் சுட்டிக் காட்டுகிறது.

தமிழின் அருமையை சுவைபட நூல் சொல்லும் போது வியந்து பிரமிக்கிறோம்.

தமிழின் அருமை பெருமைகளை புலவர் இப்படிக் கூறுகிறார்”

“தேவர்களுக்கு உரிய குணங்கள் சத்துவம், இராசதம், தாமதம் ஆகிய மூன்று குணங்கள் மட்டுமே தான் உள்ளன. உனக்கோ அறிவு, தெளிவு, சமநிலை, இன்பம், ஒழுகிசை, உதாரம், உய்த்தலில் பொருண்மை, காந்தம்,வலி, சமாதி என்னும் பத்துக் குணவணிகள் அன்றோ உள்ளன!

ஆக, தேவர்களை விட நீ உயர்ந்தல்லவா இருக்கிறாய்!

வெண்மை, செம்மை, கருமை, பொன் நிறம். பசுமை என்று வண்ணங்கள் மொத்தம் ஐந்து தான். உனக்கோ வண்ணங்கள் நூறு உள்ளன.

கசப்பு, புளிப்பு, துவர்ப்பு உள்ளிட்ட சுவைகள் உணவிற்கு ஆறே தான் உள்ளன.

உனக்கோ ஒன்பது சுவைகள் உள்ளன.

உனக்கு அழகு எட்டு அழகுகள் உள்ளன. அம்மை, அழகு. தொன்மை. தோல், விருந்து, இயைபு, புலன், இழை ஆகிய எட்டு வனப்பு உனக்கு உண்டு அல்லவா?”

இப்படி தமிழின் அழகை நூல் வர்ணித்து நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது.

தமிழ் ஆர்வலர்களும், தமிழர்களும், தமிழை கற்க ஆசையுடன் வரும் அயல் மொழி வல்லுநர்களும் தவறாது படித்து மகிழ வேண்டிய நூல்களுள்  முதல் இடத்தைப் பிடிக்கிறது தமிழ் விடு தூது.

படிப்போம்; தமிழின் பெருமையை உலகெங்கும் பரப்புவோம்!

**