வங்காளத்தில் பிறந்து டேராடூனில் சமாதி எய்திய மா ஆனந்த மயீ சொன்ன கதை :-
ஒரு பணக்கார வியாபாரி பிஸினஸ் Business (வியாபாரம்) தொடர்பாக ஒரு பயணத்தை மேற்கொண்டார். அவரிடமுள்ள பணத்தைப் பறிப்பதற்காக ஒரு திருடனும் பிஸினஸ் மேன் போல டிப் டாப்பாக உடை அணிந்து கொண்டு அவருடன் பயணம் செய்தான். அவர்கள் இருவரும் ஒரே அறையில் தங்கினார்கள் . பணக்கார வியாபாரி தினமும் தனக்கு வரும் பணத்தை, திருட்டு வியாபாரிக்குத் தெரியும்படி பகிரங்கமாக எண்ணி, பையில் போடுவார். திருட்டு வியாபாரிக்கு அந்த பணத்தை எப்படியாவது பறிக்க வேண்டும் என்று ஆசை எழுந்தது. உண்மை வியாபாரி நனறாக குறட்டை விட்டுத் தூங்கும் நேரத்தில், வியாபாரி போல வேடம் அணிந்து வந்த திருடன் எல்லா இடங்களையும் தேடிப்பார்ப்பான். அவனால் கண்டுபிடிக்க முடியவே இல்லை. இனி ஒளித்து வைக்க எந்த இடமும் இல்லை என்ற அளவுக்கு அவன் அத்தனை இடங்களையும் பார்த்துவிட்டான் . அவனுக்கு பணத்தை எப்படி மறைத்து வைப்பது என்பதையாவது இந்த உண்மை வியாபாரியிடம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற வேட்கை பிறந்தது . தன் ஆர்வத்தை அடக்க முடியாமல் மறுநாள் உண்மையைக் கக்கினான் .
அன்பரே, நான் பிசினஸ்மேன் அல்ல. உன் பணத்தை அபகரிக்க ஒரு பிசினஸ்மேன் போல வேஷம் போட்டு வந்தேன். உன்னிடம் ஒன்றையாவது கற்றுக்கொள்ள ஆசை. பகிரங்கமாக பணத்தை எண்ணி அதைப் பையில் போடுகிறீர்கள் . அந்தப் பையை நானும் ஒவ்வொரு நாளும் தேடிப் பார்த்தேன் ; கிடைக்கவில்லை. அதை எங்கே ஒளித்து வைக்கிறீர்கள்? பக்காத் திருடனான என்னால் கூட கண்டுபிடிக்க முடியவில்லையே – என்றான்.
உண்மை வியாபாரி சிரித்துக் கொண்டே சொன்னார்: உன் நடை உடை பாவனைகளைப் பார்த்தபோதே நீ திருடன் என்பது எனக்குத் தெரியும். அந்தப் பணப் பையை நீ எங்கெல்லாம் தேடுவாய் என்பதும் எனக்குத் தெரியும். ஒவ்வொரு நாள் இரவிலும் அதை உன்னுடைய தலையணைக்கு அடியில் வைத்துவிட்டு நான் நிம்மதியாகத் தூங்கினேன். நீ எல்லா இடங்களையும் சந்தேகப்படுவாய்.; ஆனால் உன் தலையணை பற்றி சந்தேகம் வராது ; அங்கே தேட மாட்டாய் என்பது எனக்குத் தெரியும் என்றான். திருடனுக்கு வெட்கமும் ஏமாற்றமும் ஏற்பட்டது
கடவுளும் இப்படித்தான். நமக்குளேயே ஒளிந்து கொண்டு அவரது லீலைகளால் நம்மை வெளியே தேட வைக்கிறார் .. உங்களுக்குளேயே ஒளிந்து கண்டிருக்கும் கடவுளை வெளியே தேட அவசியமில்லை !
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
மஹாத்மா காந்திஜியை சிலர் வெறுப்பது ஏன்?
ச.நாகராஜன்
மகாத்மா காந்திஜியை சிலர் வெறுப்பது ஏன்?
இந்தக் கேள்விக்கு விரிவான விடைகளைப் பலர் தந்து கொண்டே இருக்கின்றனர்.
அவர் முஸ்லீம்களிடம் காட்டிய பரிவும் அதில் ஹிந்துக்களின் நியாயமான உணர்வுகள் பலியானதும் ஒரு காரணம் என்பது ஒரு விடை.
இதை விளக்கும் முகமாக குருதத் என்பவர் விஸ்வாஸ்கட்டில் பதிவு செய்துள்ள ஒரு பதிவு இது. (Viswhwashghat by Guru Dutt)
ஆங்கிலத்தில் உள்ள கட்டுரையின் தமிழாக்கம் இது:
காந்திஜி ஒரு முறை டெல்லியில் வால்மீகி பாஸ்தி கோவிலில் (Valmiki Basti Temple) குர் ஆனை ஓதினார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு பெண் எழுந்திருந்து காந்திஜியிடம் அப்படிச் செய்ய வேண்டாம் என்று கூறினார்.
காந்திஜி ‘ஏன்’ என்று கேட்டார்.
உடனே அந்தப் பெண்மணி ‘அது நமது மதத்திற்கு எதிரானது’ என்று பதிலளித்தார்.
காந்திஜி, “அப்படி என்று நான் நம்பவில்லை” என்று கூறினார்.
உடனே அந்தப் பெண்மணி, “நாங்கள் உங்களை எங்கள் மதத்தில் கட்டளையிடத் தகுதி உடையவர் என்று எண்ணவில்லை” என்றார்.
காந்திஜி அங்கிருந்தவர்களிடம் இது பற்றி ஓட் எடுக்கச் சொன்னார்.
“மதமானது ஓட்டின் அடிப்படையில் முடிவு செய்யக்கூடிய விஷயமா?” என்று அந்தப் பெண்மணி கேட்டார்.
காந்திஜி, “நீங்கள் எனது மதத்திற்கு இடையூறு செய்கிறீர்கள்” என்றார்.
அந்தப் பெண்மணி அவர் கோடிக்கணக்கான ஹிந்துக்களின் மதத்தில் சட்ட விரோதமாகக் குறுக்கிடுகிறார்” என்றார்.
காந்திஜி, “நான் குர் ஆனைக் கேட்கிறேன்” என்றார்.
அந்தப் பெண்மணி தான் அதை எதிர்ப்பதாகக் கூறினார்.
வால்மீகி இளைஞர்கள் நூற்றுக் கணக்கானோர் அந்தப் பெண்மணிக்கு ஆதரவாக எழுந்தனர்.
அவர்கள் அனைவரும், “இந்த கோவிலில் குர் ஆனை ஓதுவதற்கு முன்பாக கீதை அல்லது இராமாயணத்தை மசூதியில் ஓதுங்கள்’ என்றனர்.
எதிர்ப்பு அதிகமாக வலுப்பதை உணர்ந்த காந்திஜி உடனே போலீஸை வரவழைத்தார். அவர்கள் உடனே எதிர்த்தவர்களைப் பிடித்தனர். 107 கேஸ்கள் அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டன.
போலீஸ் பாதுகாப்பில் அதே கோவிலில் காந்திஜி குர் ஆனை ஓதினார்.
இந்த இரட்டை வேடப் பித்தலாட்டத்தினால் தான் காந்திஜியை சிலர் விரும்பவில்லை.
நன்றி, ஆதாரம் : கல்கத்தாவிலிருந்து வெளி வரும் வார இதழ் ட்ரூத்
As usual thousands of people participated in the Annual Hare Krishna Rath Yatra in London on 29-7-2023.
Only one Ratham/ Chariot with Jagannatha, Balabhadra and Subadra was pulled by the devotees.
Scores of Devotees prostrated before the Ratha on roads.
Since it began at Hyde Park corner and finished at Trafalgar square, several thousands watched the procession with wonder. It is the tourist area in London.
At the Hinduja Foundation fed all the people with tasty vegetarian food.
The devotees, particularly women devotees, sang and danced all along the route.
Two youngsters in Radha Krishna disguise attracted the attention of everyone. (See the attached pictures)
I have been covering Ratha Yatra for over 30 years.
முப்பது அல்லது 33 ஆண்டுகளுக்கு முன்னர் லண்டனில் உள்ள மார்பிள் ஆர்ச்MARBLE ARCH பகுதிகளை போட்டோ எடுக்கப்போனபோது எனக்கு ஒரு சர் ப்ரைஸ் SURPRISE காத்திருந்தது . அங்கே இரண்டு அல்லது மூ ன்று தேர்கள் நின்று கொண்டிருந்தன. அதைச் சுற்றி குடுமி வைத்த வெள்ளைக்காரர்கள் நின்று கொண்டிருந்தனர். நான் கொண்டுபோன ‘டப்பா’ காமெரா மூலம் சில புகைப்படங்கள் எடுத்தேன் அவை என்னிடம் இன்றும் உள்ளன . அவர்கள் Battersea Park பாட்டர் ஸீ பார்க் வரை ஊர்வலமாகச் செல்வார்கள் என்று கேள்விப்பட்டேன் . எனக்கு அப்போது லண்டன் புதிது என்பதால், படம் மட்டும் எடுத்துவிட்டு, வீட்டுக்குப் புறப்பட்டேன். அதற்குப் பின்னர் ஆண்டுதோறும் ரத யாத்திரை அன்று போய்க்கொண்டிருக்கிறேன். கோவிட் காலத்தில் 2 ஆண்டுகள் நடக்கவில்லை.
இந்த ஆண்டு 30-7-2023 ஆண்டு ஹரே கிருஷ்ணா ரதம் லண்டனின் HYDEPARK CORNER ஹை ட் பார்க் கார்னரிலிருந்து புறப்பட்டு டிரபால்கர் ஸ்கொயர் TRAFALGAR SQUARE வரை வந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். வெள்ளைக்கார கிருஷ்ண பக்தைகள் தெருவில் நடன ம் ஆடி வந்தனர் . ராதா, கிருஷ்ண வேடம் தரித்த இரண்டு குழந்தைகளை எல்லோரும் புகைப்படம் எடுத்தனர்.
ஊர்வலம் செல்லும் வழி, TOURIST AREA டூரிஸ்டுகள் குவியும் இடம் என்பதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் ரதத்தைக் கண்டு வியந்தனர் இந்த ஆண்டு ஒரே ரதம் மட்டுமே ஜகந்நாதரையும் பலபத்ராவையும் சுபத்ராவையும் தாங்கி பவனி வந்தது .தெருவெல்லாம் பக்தர்கள் சாலையில் விழுந்து நமஸ்காரம் செய்தது எல்லோரையும் பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது. ; பல நாடுகளிலிருந்தும், பல ஊர்களிலிருந்தும் ஆண்டுக்கு ஒரு முறை சந்திக்கும் நிகழ்சசி ஆதலால் எல்லோரும் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி அன்பைப் பரிமாறிக்கொண்டனர். வழக்கம்போல பெண்கள் குழந்தைகள் சகிதம் , பிராம் PRAM சகிதம் வந்திருந்தனர். குழந்தைகள் விளையாடும் ஹரே கிருஷ்ணா பொம்மையைத் தலையில் வைத்துக்கொண்டு ஒருவர் பவனி வந்தார் . பல பஜனைக்குழுக்கள் தமுக்கு அடித்துக்கொண்டு ஆடியும் பாடியும் வந்தனர், தெருவெங்கும் ஹரே கிருஷ்ண கோஷம்தான் ;
இறுதியில் டிரபால்கர் ஸ்கொயரில் பல்லாயிரக் கணக்கானோருக்கு ஹிந்துஜா பவுண்டேஷன் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. பல கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. இத்துடன் உள்ள படங்களில் பக்தர்களின் உற்சாகத்தை காணலாம்.
–subham—
Tags–London, Rath Yatra , லண்டன், ஹரே கிருஷ்ண ரத யாத்ரா
ON SATURDAY 29 JULY 2023 , LONDON MURUGAN DEVOTEES HELD THEIR 11TH YEAR ANNUAL THIRUPPUGAZ VIZA (Festival) AT LONDON MURUGAN TEMPLE. MRS JAYANTHI SUNDAR LEAD THE GROUP WITH HER DISCIPLES, THE THREE-HOUR FUNCTION WAS ATTENDED BY 100 PEOPLE. MR SUNDAR AND MR.RAJA GOPALAN SPOKE. PRASAD/LUNCH WAS SERVED AT THE END. THIS IS THE 11TH YEAR OF THE FESTIVAL. MR AND MRS BALA OF ILFORD CORDINATED THE EVENT EFFICIENTLY . MR BALA DID THE DEEPARADHANA. SELECTED THIRUPPUGAZ SONGS OF ARUNAGIRINATHAR WERE RENDERED BEAUTIFULLY BY THE ARDENT DEVOTEES. PICTURES TAKEN BY LONDON SWAMINATHAN ARE ATTACHED
ஆண்டுதோறும் நடைபெறும் திருப்புகழ் விழா 10 ஆண்டுகளாக நடை பெற்று வருகிறது ; பதினொன்றாவது ஆண்டு திருப்புகழ் விழா ஜுலை 29-ஆம் தேதி (2023) லண்டன் முருகன் கோவிலில் நடைபெற்றது. சுமார் 100 பக்தர்கள், திருப்புகழ் மற்றும் கந்தர் அனுபூதி, வேல் விருத்தம், மயில் விருத்தப் பாடல்களை இனிய ராகங்களில் பாடினார்கள். சுமார் மூன்று மணிநேரத்துக்குப் பாடினார்கள் ; முருகன், வேல் படங்களுக்கு பூஜையும் செய்யப்பட்டது திருமதி ஜெயந்தி சுந்தர் இதை முன்னின்று நடத்தினார். அவரிடம் திருப்புகழை வாரம்தோறும் கற்கும் அன்பர்களுடன் பொது மக்களும் சேர்ந்து பாடினார்கள். நிகழ்ச்சியில், திரு சுந்தர், திரு ராஜகோபாலன் ஆகியோர் பேசினார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இல்போர்ட் ILFORD திரு பாலா, திருமதி பத்மா பாலா, ஆகியோர் செய்தனர் ; நிகழ்ச்சி முடிவில் பஞ்சாமிர்தம் உள்பட அறுசுவை உண்டி பரிமாறப்பட்டது.
இத்துடன் இணைத்துள்ள புகைப்படங்களில் பங்கேற்ற அன்பர்களைக் காணலாம். புகைப்படங்களை நான் எடுத்தேன் .
—subham—
Tags- லண்டன் திருப்புகழ் விழா , LONDON THIRUPPUGAZ FESTIVAL
1.Sanskrit word for reason, cause; even Tamils use this word with the same meaning
6. Sanskrit word for night; even Tamils use this word with the same meaning
8.Diamond in Sanskrit; Indra’ s weapon is as strong as this.
9.Hither and thither in Sanskrit
10. Sanskrit word for mountain; even Tamils use this word with the same meaning in many names of towns and hills
XXXXX
DOWN
1.Greatest of the Kalinga/ Orissa Kings; his Hathikumbha Cave inscriptions give us lot of information about Tamil Nadu etc
2.word for fleshless or kingless in Sanskrit .
3.No cruelty is one meaning; also name of a great Yadava. English word Cruel is derived from this root
4.auspicious word with letter A; many commentaries and books begi with thi word
5.Word for Cupid; love god and love in Sanskrit
7. Strength; courage; valour; brilliance; splendour. HAL named Indian fighter planes with this word. Brahmin boys pray for this in early morning Samithadhanam fire ritual.
கடையில் சுழுமுனைக் கபாலமுங் காட்டி- என்ற வரிகளில் இடைகலை, பிங்கலை, சுழுமுனை என்றால் என்ன அர்த்தம் ?
xxxxxx
7.நான்று எழுபாம்பின் நாவில் உணர்த்தி
குண்டலி அதனில் கூடிய அசபை
விண்டுஎழு மந்திரம் வெளிப்பட உரைத்து– என்ற வரிகளில் பாம்பு, அசபை என்றால் என்ன ?
xxxx
8.மூலா தாரத்தின் மூண்டுஎழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்து அறிவித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையுங் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டி
சண்முகத் தூலமும் சதுர்முக சூக்கமும்
எண்முக மாக இனிது எனக்கருளி
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்தி– என்பதன் சுருக்கமான பொருள் என்ன ?
xxxx
9.சத்தத்தி னுள்ளே சதாசிவம் காட்டி
சித்தத்தி னுள்ளே சிவலிங்கம் காட்டி—
இதில் சத்தம், சித்தம் என்பன என்ன ?
xxxxxx
10.ஒளவை எப்படி விநாயகர் அகவலை முடிக்கிறார் பொருள் என்ன ?
xxxxx
விடைகள்
1.ஆறு ஔவையார்களில் பிற்கால ஔவையார் வழங்கிய விநாயகர் அகவல் துதியில் 72 வரிகள் உள .
Xxxxxx
2.ஐந்து கைகள் மூன்று கண்கள் .
Xxxx
3.மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம்
Xxxx
4.மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி என்று சிவபுராண துதியில் மாணிக்கவாசகர் பாடுகிறார்.
xxxx
5.மூன்று மலங்கள் – ஆணவம், கன்மம், மாயை
நான்கு தலங்கள் — சரியை, கிரியை, யோகம் , ஞானம் ஆகிய நான்கால் அடையும் சாலோக, சாமீப, சாரூப , சாயுஜ்ய என்னும் நான்கு நிலைகள்
ஐந்து புலன்கள் – கண், காது, , மூக்கு, , வாய், மெய்/உடல்
ஒன்பது வாயில் — பகவான் கிருஷ்ணர் கீதையில் நவத் வாரபுரி என்று உடலை வருணிக்கிறார்; அவை இரு கண், இரு செவி, நாசியின் இரு துளை, வாய், எருவாய், (Anus) கருவாய் (Genital organ).
ஆறு ஆதாரங்கள் – மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்கினேயம்
xxxxxx
6.இடைகலை – இடது துளை வழியாக மூச்சு விடுதல் /சந்திரன்
பிங் கலை வலது துளை வழியாக மூச்சு விடுதல் / சூரியன்
சுழுமுனை — இருதுளை வழியாகவும் மூச்சுக்காற்று சென்று வருதல் /அக்கினி
Xxxxx
7.பாம்பு- மூலாதாரத்தில் உறைந்து கிடக்கும் குண்டலினி என்னும் மகத்தான சக்தி
அசபை — அஜபா என்னும் ஸம்ஸ்க்ருதச் சொல்லின் தமிழ் வடிவம்; நாம் வாயால் சொல்லாமலேயே நம் மனது முனுமுனுக்கும் மந்திரம்; இதை ஹம்சம் என்றும் சொல்லுவார்கள்; அதை உணர்ந்தவர்களை பரம ஹம்சர் என்று அழைப்போம். வெளியேறும் மூச்சின் ஒலி – ஹம் ; உள்ளே இழுக்கும் மூச்சின் ஒலி- சம் .பிராணாயாமம் செய்வோர் இதை ஊமை எழுத்து என்றும் சிவோஹம் என்றும் சொல்லுவர்.
xxxxxx
8. யோகத்தின் மூலம் இறைவனை அடைய முயலுவோருக்கு ஏற்படும் அனுபவம் இது. குண்டலினி என்னும் மகத்தான சக்தியை எழுப்பி தலையில் உள்ள ஆறாவது சக்கரத்துக்கு கொண்டு சென்றால் அமுதம் சுரக்கும். அதை அனுபவிக்கும் நிலை எல்லையில்லாத ஆனந்தம் அளிக்கும். எட்டு என்பது- ஓசை, ஊறு , ஒளி, சுவை, நாற்றம் என்ற ஐந்து உணர்வுகளுடன் இறுப்பு , எழுச்சி, மனம் என்ற மூன்றும் சேர்த்து எட்டு.
xxxx
9.புற உலகில் சதாசிவனையும், மனம் ஆகிய அக உலகில் சிவலிங்கத்தையும் காட்டுவாயாக
xxxx
10.கரும்பு போல் இனிமையைச் சுரக்கும் வழியைக் காட்டி, அஞ்செழுத்தாகிய நமசிவாய என்பதன் பொருளும் காட்டி, என்னை ஆட்கொண்ட விநாயகனை சரண் அடைகிறேன் உன்னுடைய திருவடிகளே எனக்கு புகலிடம் ஆகிறது.
xxxxx
விநாயகர் அகவல் – ஔவையார்
சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலஇசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகி லாடையும்
வன்ன மருங்கில் வளர்ந்தழகு தெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (5
வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சில் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதங் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதன் ஈன்ற கற்பகக் களிறே
முப்பழம் நுகரும் மூஷிக வாகன (15
இப்பொழுது என்னை ஆட்கொள்ள வேண்டித்
தாயாய் எனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந்து எழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்துஎன் உளந்தனில் புகுந்து (20
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்து எனக்கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டிஎன் செவியில் (25
தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிது எனக்கருளிக்
கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து
இருவினை தன்னை அறுத்து இருள்கடிந்து (30
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி
ஆறா தாரத்து அங்கிசை நிலையும் (35
பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே
இடைபிங் கலையின் எழுத்து அறிவித்து
கடையில் சுழுமுனைக் கபாலமுங் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்று எழுபாம்பின் நாவில் உணர்த்தி (40
குண்டலி அதனில் கூடிய அசபை
விண்டுஎழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டுஎழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்து அறிவித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (45
குமுத சகாயன் குணத்தையுங் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டி
சண்முகத் தூலமும் சதுர்முக சூக்கமும்
எண்முக மாக இனிது எனக்கருளி (50
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்தி
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்திமுத்தி இனிது எனக்கு அருளி
என்னை அறிவித்து எனக்கருள் செய்து (55
முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே எந்தன் சிந்தை தெளிவித்து
இருள்வெளி இரண்டுக்கும் ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத் தழுத்திஎன் செவியில் (60
எல்லை யில்லா ஆனந்தம் அளித்து
அல்லல் களைந்தே அருள்வழி காட்டி
சத்தத்தி னுள்ளே சதாசிவம் காட்டி
சித்தத்தி னுள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற் கணுவாய் அப்பாலுக் கப்பாலாய் (65
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கரத்தின் நிலையறி வித்து
தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே. (72
—- SUBAM —–
TAGS- விநாயகர் அகவல், பொருள் என்ன, ஒளவையார், க்விஸ், கேள்வி-பதில்
1-7-23 12210 பழைய கேள்வி தான்; ஆனால் புதிய பதில்கள்!
2-7-23 12214 எப்போதும் நினைவில் இருத்த வேண்டியவர்கள்!
சுபாஷிதம்
3-7-23 12218 SNR Article Index : JUNE 2023.
4-7-23 12222 சுவாமி விவேகானந்தர் தன்னைப் பற்றிக் கூறியவை!
5-7-23 12226சுவாமி விவேகானந்தரைச் சந்தித்த நாத்திகவாதி, கோடீஸ்வரர், விஞ்ஞானி, பாடகி! – முதல் பகுதி – 2-7-23 மாலைமலர் இதழில் வெளி வந்தது. 6-7-23 12231 சுவாமி விவேகானந்தரைச் சந்தித்த நாத்திகவாதி, கோடீஸ்வரர், விஞ்ஞானி, பாடகி! – இரண்டாம் பகுதி – 2-7-23 மாலைமலர் இதழில் வெளி வந்தது. 7-7-23 12236 நக்ஷத்திர ரகசியம்! 8-7-23 12242 மாறி வரும் மும்பை!9-7-23 12247 காலன் வரும் முன்னே காலன் வரமாட்டான் – 6 10-7-23 12252 நடந்தவை தான் நம்புங்கள்! பாகம் 2 – அத்தியாயம் 5 11-7-23 12257 800 கோடி மக்களால் விழி பிதுங்கும் பூமித் தாய்! -(முதல் பகுதி). 12-7-23 12261 800 கோடி மக்களால் விழி பிதுங்கும் பூமித் தாய்! (இரண்டாம் பகுதி). 13-7-23 12266 காலம் வரும் முன்னே காலன் வர மாட்டான்! – 7 14-7-23 12271 பிசாசு ரௌடி கார்! 15-7-23 12276 எது கொடியது? எது இனியது? 16-7-23 12280 வெற்றி தரும் விஜய யோகம் – சுபாஷித செல்வம் 17-7-23 12285 சம்ஸ்கிருத இலக்கியக் கடல் – சில துளிகளின்
அறிமுகம்! – 1 18-7-23 12290 நடந்தவை தான் நம்புங்கள் பாகம் 2 அத்தியாயம் 6
19-7-23 12294 நள சம்பு சம்ஸ்கிருத இலக்கியக் கடல் – 2 20-7-23 12299 திருமண வரம் அருளும் குமரி பகவதி அம்மன்! (முதல்
பகுதி) – மாலைமலர் 18-7-23 கட்டுரை
21-7-23 12303 திருமண வரம் அருளும் குமரி பகவதி அம்மன்! (இரண்டாம் பகுதி) – மாலைமலர் 18-7-23 கட்டுரை 22-7-23 12307 நீதி த்விசஷ்டிகா – சம்ஸ்கிருத இலக்கியக் கடல் – சில துளிகளின் அறிமுகம்! – 3 23-7-23 12311 நிலவை வசப்படுத்த துடிக்கும் மனிதன்! (முதல் பகுதி) 20-7-23 அன்று மாலைமலர் வெளியிட்டுள்ள சிறப்புக் கட்டுரை24-7-23 12316 நிலவை வசப்படுத்த துடிக்கும் மனிதன்! (முதல் பகுதி) 20-7-23 அன்று மாலைமலர் வெளியிட்டுள்ள சிறப்புக் கட்டுரை25-7-23 12320வியாஸ சுபாஷித சங்க்ரஹா சம்ஸ்கிருத இலக்கியக் கடல் – சில துளிகளின் அறிமுகம்! – 4 26-7-23 12325 சரஸ்வதி கண்டாபரணம் – சம்ஸ்கிருத இலக்கியக் கடல் – சில துளிகளின் அறிமுகம்! – 5. 27-7-23 12330 திருக்கருகாவூர் கர்ப்பரக்ஷாம்பிகை – கர்ப்பரட்சாம்பிகையின் கருணை (பகுதி 1) மாலைமலர் 22-7-23 இதழில் பிரசுரமானது 28-7-23 12334 திருக்கருகாவூர் கர்ப்பரக்ஷாம்பிகை – கர்ப்பரட்சாம்பிகையின் கருணை (பகுதி 2) மாலைமலர் 22-7-23 இதழில் பிரசுரமானது 29-7-23 12339 கிராதார்ஜுனீயம் சம்ஸ்கிருத இலக்கியக் கடல் – சில துளிகளின் அறிமுகம்! – 6 30-7-23 12343 இல்லற பிரச்சினைகளைத் தீர்க்கும் மைசூர் சாமுண்டீஸ்வரி – முதல் பகுதி – மாலைமலர் 25-7-2023 இதழில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை 31-7-23 12347 இல்லற பிரச்சினைகளைத் தீர்க்கும் மைசூர் சாமுண்டீஸ்வரி – இரண்டாம் பகுதி – மாலைமலர் 25-7-2023 இதழில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை.
மூகாம்பிகை, சாரதாம்பிகை , முருதேஸ்வர் கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 15
உடுப்பியிலிருந்து முக்கியமான கோவில்கள் எவ்வளவு தூரத்தில் உள்ளன என்பதை (Distance From Udupi) முதலில் காண்போம். ஓரிரு நாட்களில் உடுப்பியில் ஹோட்டல் அறை எடுத்து தங்கினால் நால் திசைகளிலும் பயணம் செய்து பல முக்கிய இடங்களைக் காணலாம் (கிலோமீட்டரில்)
Sri Manjunatha Swamy Temple, Dharmasthala தர்மஸ்தலா மஞ்சுநாத சுவாமி கோவில் 110 kms.
Sri Subramanya Kshetra, Subramanya, Kukke ஸ்ரீ சுப்ராஹ்மண்ய கோவில் ,குக்கே 164 kms.
Sri Sahasralingeshwara Temple, Uppinangadi உப்பினகடி ஸஹஸ்ர லிங்கேஸ்வர கோவில்108 kms.
Sri Karinjeshwar Temple, Bantwal பந்த்வால் கரிஞ்சேஸ்வர் கோவில்100 kms.
Sri Durgaparameshwari Temple, Kateel கதீல் துர்கா பரமேஸ்வரி கோவில் 60 kms.
Sri Ananthapadmanabha Temple, Kudupu குதுப்பு அந்த பத்மநாப சுவாமிகோவில் 69 kms.
Sri Mangaladevi Temple, Mangalore மங்களூரு மங்களாதேவி கோவில்63 kms.
Sri Rajarajeshwari Temple, Polali போலாலி ராஜ ராஜேஸ்வரி கோவில் 84 kms.
Sri Kadri Manjunatha Temple, Mangalore கத்ரி மஞ்சு நாத கோவில் 63 kms.
Sri Durgaparameshwari Temple, Bappanadu பப்பநாடு துர்கா பரமேஸ்வரி கோவில் 35 kms.
Sri Gokarnanatha Temple, Kudroli, Mangalore குத்ரோலி கோகர்ண நாத கோவில் 60 kms.
Sri Mookambika Devi Temple, Kollur ஸ்ரீ மூகாம்பிகை கோவில் 70 kms.
Sri Sharadamba Temple, Sringeri சிருங்கேரி சாரதாம்பா 90 kms.
Thousand Pillars Basadi, Moodabidri 55 kms.சமணர் கோவில்
Gomateshwara, Karkala 40 kms.சமணர் கோவில்
Chaturmukha Basadi, Karkala 40 kms.சமணர் கோவில்
The distance between Mangalore and Murudeshwar is 86 miles. The road distance is 97.5 miles.
மைல் கணக்கில் மங்களூரு- முருதேஷ்வர் கோவில் ரயில் நிலையம் 86 மைல் ; சாலை வழியாக 97.5 மைல்
Xxxxx
Sringeri Sharadamba Temple
நிலாவர்
சீதா நதியின் கரையில் அமைந்த இடம் ஒரு புனித ஸ்நான கட்டம் ஆகும் .விருச்சிக மாத பஞ்சமியன்று , பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த நதியில் புனித ஸ்நானம் செய்ய வருகின்றனர். உடுப்பியிலிருந்து 18 கி.மீ தொலைவில் இருக்கிறது இங்கு மஹிஷமர்தினி என்னும் துர்கா கோவில் இருக்கிறது
Xxxx
72.கொல்லூர் மூகாம்பிகை கோவில் Sri Mookambika Devi Temple, Kollur
இது முக்கியமான சக்தி/ தேவி வழிபாட்டுத் தலம் .
இக் கோயிலின் பிரதான தெய்வமாக சுயம்பு மூர்த்தமான ஜோதிர்லிங்கம் ஆகும். இதன் நடுவில் தங்கத்தினாலான வரிகளையுடய ஒரு பிளவு காணப்படுகிறது. லிங்கத்தின் இடப்புறம் முப்பெரும் தேவியர்களையும் வலப்புறம் மும்மூர்த்திகளையும் குறிக்கிறது. இதனுடன் நான்கு கைகளையுடய பஞ்சலோகத்தாலான மூகாம்பிகை திரு உருவம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இது உடுப்பியிலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவிலும் மங்களூரிலிருந்து சுமார் 135 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
இங்குள்ள மூகாம்பிகை தேவிக்கு மூன்று கண்களும் நான்கு கரங்களும் உள்ளன. இரு கரங்களில் சக்கரமும் சங்கும் ஏந்தி இருக்கும் அன்னை, மற்ற இரு கரங்களில் ஒரு கை அபயகரமாகவும் இன்னொரு கை தன் பாதத்தைச் சுட்டிக்காட்டும் படியாகவும் பத்மாசனத்தில் அமர்ந்தபடி இருக்கிறாள்.
கேரள பாணியில் ஆண்கள் சட்டை அணியாமல் மேல் துண்டுடன் தான் செல்ல வேண்டும்.
அன்னை மூகாம்பிகை தேவிக்கு MGR எம்.ஜி.ஆர். தங்க வாள் காணிக்கை செலுத்தினார். இதைத் தொடர்ந்து 2004ல் அங்கே சென்ற ஜெயலலிதா, அந்தக் கோவிலுக்கு 30,000 ரூபாயும் ஒரு டன் நெய்யும் காணிக்கையாகக் கொடுத்தார்.
ஆதிசங்கரர் நிறுவிய மந்திர தந்திர ஸ்ரீ சக்ரமே மூகாம்பிகை கோவிலின் புகழுக்கும் காரணம். ‘மூக’ என்றால் தமிழில் ஊமை என்று பொருள். மூகனாக இருந்த, ஒரு அசுரனை அன்னை பார்வதி அழித்ததால் இந்த தேவிக்கு மூகாம்பிகை என்று பெயர்; சிலையைப் பார்த்தால் கொள்ளை அழகு!
அனைவரும் உடனே தரிசிக்க வேண்டிய அன்னை மூகாம்பிகை.
நான் அங்கு வாங்கிய படத்தை தினசரி டைரியில் வைத்து அனுதினமும் வழிபடுகிறேன். பூஜை அறையில் தனி படம்.
xxxx
மனைவிக்கு போட்ட கட்டளையை நானே மீறிய இடம்.
எங்கே சாமி படத்தைப் பார்த்தாலும் வாங்குவது; அதை பூஜை அறைக்குள் வைத்து பூ வைப்பது என் மனைவியின் வாடிக்கை. இது எனக்கு எரிச்சலைத் தந்தது ஆகையால் இனி சாமி படமே வாங்ககூடாது . பழைய படங்களை, டிஸ்போஸ் பண்ண முடியாமல் தவிக்க நேரிடுகிறது. சுவாமிகள் சொல்லும்படி பழைய படங்ககளை நதிகளில் தூக்கி எறிந்தால் லண்டனில் தண்டனை அபராதம் வேறு என்று எச்சரித்து இருந்தேன் .
என் கட்டளை மீறப்பட்ட முதல் இடம் எங்கள் குல தெய்வம் குடிகொண்ட வைத்தீஸ்வரன் கோவில் . அங்கு நிறைய படங்கள் வாங்கி ஒன்று பூஜை அறையில் இருக்கிறது. ஆகையால் இந்த முறை எந்தப் படமும் வாங்கக்கூடாது என்று சொல்லியிருந்தேன். அர்ச்சனை எல்லாம் முடிந்தது கணவன் மனைவி குழந்தைகள் சகிதம் நமஸ்காரம் செய்தவுடன் ஆசீர்வாத மந்திரம் சொல்லித் பட்டர் ஒரு பூஜைத் தட்டைக் கொடுத்தார் . பின்னர் ஒரு விபூதி பாக்கெட்டுடன் படத்தையும் கொடுத்து இதை வேண்டாம் என்று சொல்லாமல் வாங்கிக்கொள்ள வேண்டும் என்றார் . இதைவிட வேறு அசரீரி வேறு தேவையா? பயபக்தியுடன் வாங்கி பூஜை அறையில் வைத்தோம் . நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினை க்கிறது .
மனைவிக்கு போட்ட கட்டளையை நானே மீறிய இடம் மூகாம்பிகை கோவில்.
தரிசனத்தை முடித்துக் கொண்டு அரை மணி நேரத்துக்குள் வெளியே வந்து விட்டோம். பக்கத்திலேயே சாலையில் கடை வைத்து ஒருவர் பல சைஸ்களில் மூகாம்பிகை படங்களை விற்றுக் கொண்டிருந்தார். என்னை அறியாமலேயே ஒரு படத்தை விலைக்கு வாங்கினேன் . காரணம் அவ்வளவு அழகு; அவ்வளவு லட்சணம் ; அருள் பொங்கும் முகம்!!! சாமி படமே வாங்கக்கூடாது என்ற கட்டளையை மட்டும் மீறுபவன் அல்ல. புஸ்தகமே வாங்கக்கூடாது என்ற கட்டளையையும் அடிக்கடி மீறுகிறேன் !!!
Xxx
73.சிருங்கேரி சாரதாம்பாள் கோவில்
ஆதிசங்கரர் நிறுவிய மடமும் ஸ்ரீ சாரதாம்பாள் ஆலயமும் அமைந்துள்ளது. இந்த இடத்தில் ஒரு தவளை நாகத்திற்கு கடும் வெயிலில் குடை பிடிப்பதைக் கண்டு வியந்து , ஆதி சங்கரர் இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்துள்ளார். இயற்கையின் விதிகளை மீறி பகைமை உணர்வை மிருகங்களே கைவிட்ட இடமாதலால் அன்பின், அமைதியின் இருப்பிடம் அது .
ஸ்ரீ சாரதாம்பா கோவில் கல்வி மற்றும் ஞானக் கடவுளான தேவி சாரதைக்காகக் கட்டபட்டுள்ளது. இந்த கோவில் ஆதி சங்கரர் காலத்தைச் சேர்ந்தது. 14ம் நூற்றாண்டில், வித்யாரண்யர், சந்தன விக்ரகத்தை கல் மற்றும் தங்கத்தாலான விக்ரகமாக மாற்றினார் . கேரள பாணியில் மரத்தால் அமைந்த இக்கோயிலில் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பின்னர் கல் கட்டிடம் எழுந்தது . தூங்க பத்திரா ஆற்றைக் கடந்தால் அடுத்த கரையில் சிருங்கேரி சங்கராச்சார்யரையும், மடத்தையும் தரிசிக்கலாம்.
Xxxxxx
74. முருதேஸ்வர் கோவில்
“ஸ்ரீ முருதேஸ்வரர்” சிவன் கோவில் 500 ஆண்டுகளுக்கு மேல் வரலாறு உடைய கோவில்
அரபிக் கடல் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள இக்கோவிலுக்கு 20 நிலைகள் கொண்ட அழகிய , மிக உயரமான ராஜகோபுரம் இருக்கிறது. இக்கோவிலுக்கு பின்பகுதியில் உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய சிவன் சிலை இருக்கிறது. இதர தெய்வங்களுக்கும் சந்நிதிகள் இருக்கின்றன. சனிபகவானுக்கு தனி சந்நிதி இருக்கிறது.. கந்துக குன்றின் மீது அமைந்த கோவில் இது.
சிவ பிரான் சிலையின் உயரம் 123 அடி ;
கோபுரத்தின் உயரம் 237 அடி..
இந்தியாவில் உள்ள கோபுரங்களில் மிக உயரமான கோபுரங்களில் இதுவும் ஒன்று
கோபுரத்தின் உச்சி வரை லிப்ட் LIFT அமைத்திருப்பது மற்றொரு சிறப்பு.
அங்கிருந்து அரபிக் கடலையும் சிவன் சிலையையும் கண்குளிர தரிசிக்கலாம்
சிலைகள் பூங்காவில் இராவணன் , கிருஷ்ணார்ஜுனா , கணேசர், சூர்ய நாராயணர் சிலைகளையும் பெரிய அளவில் சமைத்திருக்கிறார்கள்
சிவ பிரான் சிலைக்கு அடியிலுள்ள குகை மியூசியத்தில் ராவணனின் லீலைகளையும் காணலாம் .
சிவனிடம் ஆத்ம லிங்கத்தை ராவணன் தவம் செய்து வாங்கினார் . அந்த லிங்கத்தை கணபதி தந்திரமாக இங்கே இறக்கிப் பிரதிஷ்டை செய்துவிட்டார்.
முருதேஸ்வரிலிருந்து 158 கிலோமீட்டர் தொலைவில் மங்களூர் நகரம் இருக்கிறது. மைல் கணக்கில் மங்களூரு- முருதேஷ்வர் கோவில் ரயில் நிலையம் 86 மைல் ; சாலை வழியாக 97.5 மைல்.
1.மூன்று தமிழ் சங்கங்களும் எவ்வளவு காலம் இருந்தன ?
XXXX
2.மதுரையில் நாலாவது தமிழ் சங்கத்தைத் துவக்கியது யார்?
XXXX
3.இரண்டாம் தமிழ் சங்கத்தின் நூல்கள் யாவை ?
XXXX
4.முதல் தமிழ் சங்க மன்னரின் ஸம்ஸ்க்ருதப் பெயர் என்ன?
XXXXX
5.இரண்டாம் தமிழ் சங்க மன்னரின் தலை நகரின் ஸம்ஸ்க்ருதப் பெயர் என்ன?
XXXXX
6.மூன்று தமிழ் சங்கங்கள் கால புலவர்கள் எண்ணிக்கை என்ன ?
XXXX
7.முதல் இரண்டு தமிழ் சங்க நகர்களுக்கு என்ன நேர்ந்தது ?
XXXX
8.கடைச் சங்கம் என்னும் மூன்றாம் தமிழ்ச் சங்கம் இருந்தது உண்மைதான் என்பதைக் காட்டும் நூல்கள் எவை ?
XXX
9.தமிழ் சங்க ஆண்டுகள் பொய் என்று சொல்லுவோர் என்ன காரணங்களைக் காட்டுகின்றனர் ?
XXXX
10.மொழியியல், மானுடவியல், அறிவியல், புவியியல் ஆகிய விஞ்ஞான அடிப்படையில் சங்கதாதை அணுகுவோர் CONCLUSION முடிபு என்ன?
XXXX
ANSWERS
1.தலை, இடை, கடை என்று மூன்று தமிழ் சங்கங்கள் இருந்த ஆண்டுகள் 4440+3700+1850 = 10,020 ஆண்டுகள்
XXXXX
2.மதுரைத் தமிழ்ச் சங்கம் 1901-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. 1902 முதல் ‘செந்தமிழ்’ என்னும் மாத இதழை வெளியிட்டுவருகிறது. பாண்டித்துரைத் தேவர் இதனைத் தோற்றுவித்தார். இது நான்காம் தமிழ்ச்சங்கம் எனப் போற்றப்படுகிறது.
XXXXX
3.இரண்டாம் தமிழ் சங்கத்தின் நூல்கள்கலி, குருகு, வெண்டாளி, வியாழமாலை அகவல் இத்தொடக்கத்தன; அவர்கள் கால இலக்கணம் :அகத்தியம், தொல்காப்பியம், மாபுராணம், இசைநுணுக்கம், பூதபுராணம்
XXXX
4.ஜெயமா கீர்த்தி ; ஜெயா மஹா கீர்த்தி; அவருடன் தமிழ் வளர்த்த அகஸ்தியரின் பெயரும் தமிழ் அல்ல. ரிக்வேதத்தில் உள்ள பெயர்
XXXX
5.கபாடபுரம்
XXXXX
6.மூன்று தமிழ் சங்கங்கள் கால புலவர்கள் எண்ணிக்கை4449 +3700+ 4449 புலவர்கள். உலகில் எந்த நாட்டு வரலாற்றிலும் இப்படிப் புலவர்கள் இருந் தாக வரலாறே இல்லை .
XXXXX
7.அவை சுனாமி பேரலைகள் தோன்றியபோது கடலில் மூழ்கின
XXXXX
8.சங்க கால நூல்கள், பிற்கால உரையாசிரியர்கள் , திருப்பாவை, அப்பர் தேவாரம், வால்மீகி ராமாயணம் அர்த்த சாஸ்திரம்
XXXXX
9.சங்கம் என்ற சொல்லே தமிழ் அல்ல ; தொல்காப்பிய இலக்கணப்படி தமிழ் மொழியில் ச என்னும் சொல்லே இருக்கக்கூடாது. நம்மிடமுள்ள சங்க கால நூல்களிலும் சங்கம் என்ற ஸம்ஸ்க்ருத்ச் சொல் இல்லை.
மேலும் இங்கே கூறிய 4440+3700+1850 என்பன எல்லாம் 37 என்னும் எண்ணால் வகுப்படக்கூடியது என்று பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை காட்டியுள்ளார் ; ஆகையால் இவை இயங்கிய காலம் 120+100+50 ஆண்டுகள் தான் .
மொழியியல் அறிஞர்கள் உலகில் எந்த மொழியும் மாறாமல் இருந்தது இல்லை என்று காட்டியுள்ளனர். நாம் தலைச் சங்க புலவர், இடைச் சங்க புலவர் என்று காட்டிய பாடல்கள் நாம் அறிந்த தமிழில் இருப்பதால் இவை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியிருக்க வாய்ப்பே இல்லை .
நமக்குத் தெரிந்த எந்த மொழிக்கும் 10,000 ஆண்டு வரலாறு இல்லை
இவை எல்லாம் பிற்கால ஆசிரியர்கள் எழுதிய குறிப்புகள்
மூன்று தமிழ் சங்கங்களிலும் நிறைய ஸம்ஸ்க்ருதச் சொற்கள் காட்டப்பட்டுள்ளன
அரசர்கள் புலவர்கள் எண்ணிக்கையும் மிகைப்படுத்தப்பட்டுள்ளன. 10,000 +ஆண்டுகளில் 197 மன்னர்கள் மட்டுமே ஆண்டனர் என்பது உலகில் எந்த நாட்டு வரலாற்றிலும் இல்லை. ஒரு மன்னருக்கு 20 அல்லது 25 ஆண்டு என்பதே உலகில் காணப்படும் AVERAGEஆவரேஜ்/ சராசரி. தமிழர்கள் ஒரு மன்னருக்கு 50 ஆண்டுகள் கொடுப்பது வியப்புக்குரிய கற்பனை!
XXXX
10.தலை, இடை, கடை என்று மூன்று தமிழ் சங்கங்கள் இருந்தது உண்மையே ; பொய் இல்லை.
தென் மதுரையும், கபாடபுரமும் கடலில் மூழ்கியது உண்மையே; நமக்கு குஜராத்தில் துவாரகா, தமிழ் நாட்டில் புகார் ஆகியன கடலில் மூழ்கியமைக்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன . புலவர்கள் எண்ணிக்கையும் அரசர்கள் எண்ணிக்கையும் , சங்கங்கள் இருந்த கால எண்ணிக்கையும் மிகைப்படுத்தப்பட்ட கூற்றுகள்.
–SUBHAM—
TAGS- QUIZ , தமிழ் சங்கம் பத்து, தலை, இடை, கடை ,மூன்று தமிழ் சங்கங்கள்