வெற்றி தரும் கொல்லூர் மூகாம்பிகை-2 (Post No.12,372)

Kollur Temple from Wikipedia 
 

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,372

Date uploaded in London –  5 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

ஆடி  மாத அம்மன் தலங்கள் வரிசையில் 2-8-2023 அன்று மாலைமலர் இதழில் பிரசுரமாகியுள்ள கட்டுரை. இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது.

வெற்றி தரும் கொல்லூர் மூகாம்பிகை

(இரண்டாம் பகுதி )

ச.நாகராஜன்

வாக்தேவதையை வழிபடும் தலமான இதில் அன்னையை வணங்கினால் நுண்ணறிவும் ஆன்மீக அறிவும் பெருகும் என்பது ஐதீகம்.  ஆகவே ஏராளமான குழந்தைகள் இங்கு வந்து வழிபட்டு சரஸ்வதியின் அருளைப் பெறுகின்றனர். சரஸ்வதி பூஜை இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கலைஞர்கள், எழுத்தாளர்கள், திரைப்படத் துறை சார்ந்தோர், ஓவியர்கள் உள்ளிட்டோர் தங்கள் படைப்புகளை இங்கு சமர்ப்பித்து அருள் பெறுகின்றனர்.

இங்குள்ள அம்மனின் சிலை பஞ்சலோகத்தினால் ஆனது. காலையில் சரஸ்வதியாகவும் பகலில் லக்ஷ்மியாகவும் மாலையில் பார்வதியாகவும் அம்பிகை வழிபடப்பட்டு போற்றப்படுகிறாள்.

விஜயநகர மன்னர்களால் பெரிதும் வழிபடப்பட்ட இந்த தெய்வத்திற்கு ஏராளமான அரிய நகைகளை அவர்கள் காணிக்கையாகச் செலுத்தியுள்ளனர்.

விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர் இங்கு பல திருப்பணிகளைச் செய்துள்ளார். மூகாம்பிகை அம்மனுக்கான முக கவசத்தையும் அவர் காணிக்கையாகச் செலுத்தியுள்ளார்.

சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் இன்றைய ஷிமோகா பிரதேசமான அன்றைய கேளடி பகுதியை ஆண்ட கேளடி நாயக்க மன்னர்கள் இந்தக் கோவிலை நல்ல முறையில் அமைத்தனர். இதே வமிசத்தைச் சேர்ந்த ராணி சென்னம்மாவும் இந்தக் கோவில் திருப்பணியில் ஈடுபட்டார்.

மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வழிபடும் இந்தத் திருத்தலத்திற்கு அரசியல் தலைவர்களும் பெருமளவில் வந்து வழிபடுவது வழக்கம். இந்திராகாந்தி, எம்.ஜி.ஆர் உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் இங்கு வந்து வழிபட்டுள்ளனர்.

இங்கு வந்து வழிபட்டவுடன் எந்தக் காரியத்திலும் பக்தர்கள் வெற்றியை அடைவது நிதர்சனமாக இன்று வரை காணப்படுகிறது.

பங்குனி மாதம் மூல நட்சத்திர தினத்தன்று தேவி அவதரித்த நாளை ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி கொண்டாடுகின்றனர்.

ஒவ்வொரு நாளும் சுமார் ஐயாயிரம் பேர் இங்கு வந்து வழிபடுகின்றனர். பக்தர்களுக்கு பிரசாதமாக இலவச உணவு வழங்கப்படுகிறது.

இங்கு தங்குவதற்கு வசதிகள் நல்ல முறையில் உள்ளன. 250 பணியாளர்களைக் கொண்டிருக்கிறது இந்த ஆலயம். இங்குள்ள விருந்தினர் விடுதியில் 350 அறைகள் உள்ளன. சுமார் 4000 பேர் தங்க இங்கு வசதி உள்ளது..

ரகசிய பொக்கிஷ அறை

இங்கு திருப்பதி, திருவனந்தபுரம் கோவில்களில் உள்ளது போலப் பெருமளவு தங்கம் மற்றும் வைர நகைகள் உள்ளதாக வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

இங்குள்ள ரகசிய அறை பற்றிக் காலம் காலமாகப் பேசப்பட்டு வருகிறது.

அம்மன் சந்நிதிக்கு நேர் பின்புறம் உள்ள சங்கரபீடத்தில் ஒரு நாகத்தின் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இதுவே ரகசியத்திற்கான அடையாளமாகக் கூறப்படுகிறது.

இந்தப் பீடத்தின் அடியில் பெரிய புதையல் இருப்பதாகவும், அதில் ஏராளமான வைரம், மரகதம் உள்ளிட்ட மணிகளோடு தங்கமும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

அம்மனுக்கு 90 கிலோ தங்கத்தினாலான தங்க ரதம் ஒன்றும் உள்ளது. இதன் மதிப்பு சுமார் 48 கோடி ஆகும். இது தவிர பல கோடி பெறுமான தங்க நகைகளும் சுமார் 50 கோடிக்கும் மேலான மதிப்புள்ள மாணிக்கம், வைரம் கொண்ட நகைகளும் அம்மனுக்கு உள்ளன.

கர்நாடகத்தின் செல்வச் செழிப்புள்ள ஆலயம் இது என்றால் அது மிகையல்ல.

இங்கு அம்மனுக்கு அலங்காரம் மற்றும் ஆராதனை மட்டுமே உண்டு; அபிஷேகம் கிடையாது. அபிஷேகம் லிங்கத்திற்கு மட்டும் நடைபெறும்.

ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தேவிக்கு அலங்காரம் செய்யப்படுகிறது. மூகாம்பிகையின் குங்குமத்தை இட்டுக் கொண்டால் கெட்ட தலையெழுத்து நீங்கும் என்பது ஐதீகம்.

லிங்கத்தின் நடுவே தங்க நிற ரேகை உள்ளது. அபிஷேக சமயத்தில் இதைக் காணலாம்.

எதிரிகளிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ள சண்டி ஹோமத்தை பக்தர்கள் இங்கு செய்கின்றனர்.

ஏவல், பில்லி, சூனியம் போன்றவற்றால் துன்பப்படுவோர் இங்கு வந்து பிரார்த்தனை செய்ய அவை அகலும்.

இங்கு ஒரு கோசாலையும் உண்டு.

பொதுவாகவே தேவியைக் கும்பிட்டால் அவள் தனம் தருவாள், கல்வி தருவாள், தளர்வறியா மனம் தருவாள். தெய்வ வடிவு தருவாள். நெஞ்சில் வஞ்சமில்லா  இனம் தருவாள் நல்லன எல்லாம் தருவாள் என்ற கூற்றை மெய்ப்பிக்கும் ஒரு தேவி மூகாம்பிகை. அவள் குடியுருக்கும் இடம் கொல்லூர்.

அம்மனை வணங்குவோம்; அருள் பெறுவோம்.

***

London Swaminathan July 2023 Articles Index (Post No.12,371)


30-7-2023 London Rath Yatra Picture; London swaminathan with Harekrishna Ratha.

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,371

Date uploaded in London – –  4 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxx

London Swaminathan Article Index for July 2023 (Index No.128)

Ati Rudra Yagam — Guide to Hindu Homas- 7  (Post No12,213) 1 July 2023

Purusha Sukta Homa, Sri Sukta Homa and Gayatri Homa (Post No.12,225) 4/7

Chandi Homam, Bhagavad Gita Homam, Pratyankara sulini homam (Post No.12,229)5/7

Vastu Homa : Guide to Hindu Havans ,Homas, Yagas and Yagnas- Part 8 (Post No.12,216)2/7

Guide to Hindu Havan, Homa, Puja: Things needed for Puja,

Havan, Homa and Yagna (Post No.12,220) 3/7

Sister Nivedita Statue in London (Post No.12,234)6/7

Sudarsana Homam : Hindu Guide to Havan ,Homas and Yagas (Post No.12,239) 7/7

Two Tree Wonders in Karnataka(Post No.12,249) 9/7

Ramayana, Telugus and Hindu Varman Kings of Burma-1 (Post No.12,338)28/7

Ramayana, Telugus and Hindu Varman Kings of Burma-2 (Post No.12,342)29/7

Sanskrit in Burma /Myanmar -Part 1 (Post No.12,289) 17/7

Sanskrit in Burma /Myanmar -Part 3 (Post No.12329) 26/7

Sanskrit in Thailand (Post No.12,265) 12/7

Sanskrit in Thailand –2 (Post No.12,270)13/7

Sanskrit in Thailand – Part 3 (Post No.12,281)16/7

Shiva and Ganesh in Burma (Post No.12,310)22/7

Tamil Chettiars in Burma (Post No.12,315) 23/7

Vishnu and Surya in Burma/Myanmar (Post No.12,319)24/7

AUGUST 2023 GOOD THOUGHTS CALENDAR (Post No.12,350)31/7

Brahma in Burma (Post No.12,306) 21/7

Great Demand for Astrologers in London(Post No.12,323) 25/7

Tamil or English Crossword Puzzles posted on all days

XXXXXXXXX

1-7-2023 Nivedita statue opened in Wimbledon in London

TAMIL ARTICLES

QUIZ  ரிஷிகள் பத்து QUIZ (Post No.12,304)21/7

QUIZ உபநிஷத் பத்து QUIZ (Post No.12,313)23/7

QUIZ ஒளவையார் பத்து QUIZ (Post No.12,331)26/7

QUIZ தொல்காப்பியப் பத்து QUIZ (Post No.12,212)1/7

QUIZ தேதிப் பத்து QUIZ (Post No.12,219) 3/7

QUIZ காஷ்மீர் அதிசயங்கள் பத்து QUIZ (Post No.12,223)4/7

QUIZ கண்ணப்பநாயனார் பத்து QUIZ  (Post No.12,278)15/7

QUIZ கல்கத்தா பத்து QUIZ (Post No.12,262) 12/7

QUIZ கவிதைப் பத்து QUIZ (Post No.12,215)2/7

QUIZ காஞ்சீபுரம் பத்து QUIZ (Post No.12,275) 14/7

QUIZ சித்தர் பத்து QUIZ (Post No.12,235)6/7

QUIZ சுந்தரர்  பத்து QUIZ (Post No.12,244) 8/7

QUIZ தஞ்சைப் பத்து QUIZ (Post No.12,267) 13/7

QUIZ தமிழ் ஓரெழுத்துகள் பத்து QUIZ (Post No.12,336)28/7

QUIZ திருச்சிப் பத்து QUIZ (Post No.12,312)23/7

QUIZ திருப்பதி பத்து QUIZ (Post No.12,291) 18/7

QUIZ  நவக்கிரக பத்து QUIZ (Post No.12,321) 25/7

QUIZ நவரத்தின பத்து QUIZ (Post No.12,327) 26/7

QUIZ பகவத் கீதை பத்து QUIZ (Post No.12,349)31/7

QUIZ ஸம்ஸ்க்ருதப் பத்து QUIZ (Post No.12,227)5/7

QUIZ அப்பர் பத்து QUIZ (Post No.12,238)7/7

QUIZ மணிமேகலை பத்து QUIZ  (Post No.12,258) 11/7

QUIZ மதுரை மீனாட்சி பத்து QUIZ (Post No.12,248)9/7

QUIZ மாணிக்கவாசகர் பத்து QUIZ (Post No.12,253) 10/7

QUIZ மும்பை பத்து QUIZ (Post No.12,301)  20/7

Quiz ராகப் பத்து Quiz (Post No.12,298) 19/7

QUIZ  ரிஷி முனிவர்கள் QUIZ (Post No12,348)31/7

QUIZ  பிள்ளையார் பத்து QUIZ (Post No.12,283) 16/7

QUIZ கும்பகோணம் பத்து QUIZ (Post No.12,286) 17/7

அதிகம் அடிபட்டவர் சிவபெருமான் ! (Post No.12,255) 10/7

அப்பர் பற்றிய அரிய தகவல்கள்– சொ. சொ. மீ. உரை (Post No.12,288)17/7

ஆகஸ்ட் 2023 நற்சிந்தனை காலண்டர்  (Post.12,351) 31/7

கர்நாடக மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் –Part 1 (Post No.12,232) 6/7

பகுதி 1- பகுதி  14 Part 1 to Part 14

கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 14 (Post No.12,344)30/7

காசியின் 5 சிறப்புகள் ; திருமீயச்சூர் அதிசயங்கள் (Post No.12,250) 9/7

சிவபெருமான் நேரில் வந்தபோது நடந்தது என்ன? (Post N.12,269) 13/7

ஞான சம்பந்தர் பற்றி அரிய தகவல்கள்: சொ சொ மீ. உரை (Post No.12,297)19/7

தமிழ் அதிசயம்! ஒரே எழுத்துக்கு  45 அர்த்தம் !! (Post No.12,340)29/7

திருவாசகம் பற்றி அரிய தகவல்கள் – பகுதி—2 (Post No.12,277) 19/7

திருவாசகம் பற்றிய அரிய தகவல்கள்-1 (Post No.12,274)14/7

தெரிந்த ஊர், தெரிந்த கதை: புதிய விளக்கங்கள்!! (Post No.12,260)11/7

நிவேதிதா வாழ்க்கையில் நடந்த அற்புதம்;  லண்டனில் சிலை திறப்பு (Post No.12,243)8/7

மேலை நாடுகளில் சோதிடம் வளர்கிறது (Post No.12,322) 25/7 25/7

Picture -London Swaminathan near Nivedita statue in Wimbledon 1-7-2023

—subham—-

 Tags: July 2023 Index, London Swaminathan

Tamil Crossword Puzzle 4 8 2023 (Post No.12,370)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,370

Date uploaded in London – –  4 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

குறுக்கே

1. இவர் மதுராந்தகன் என்று மற்றொரு பெயரிலும் அழைக்கப்பட்டார். இவரைத் தொடர்ந்தே  இராசராச சோழன் அரியணை ஏறினார்.

5. ஒருவகைக் கைவளை; முழு சூரிய கிரகணம் ஏற்படாதபோது அதை இந்த சொல்லாலும் குறிப்பர்

6. கடலின், ஆகாயத்தின் நிறம்

7. இந்த சமண மத பிரிவினருக்கு வானமே ஆடை

xxxxxx

கீழே

1. உலகநாதர் இயற்றிய நூலின் பெயர்

2. இந்தக் கடையில் எப்போதும் பெண்கள் கூட்டம்; அக்ஷய திருதியை வந்தால் இன்னும் கூட்டம்

3. இது இல்லாவிட்டால் சினிமா கொட்டகைகளில் Pop Corn பாப் கார்ன் கிடைக்காது

4. மதுரையில் இவர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழாவன்று லட்சம் பேர் பார்ப்பார்கள்

8. மகேந்திரன், நரசிம்மன் ஆகிய மன்னர்கள் இந்த வம்சம் ஆதலால் அவர்கள் பெயர்களில் இந்தச் சொல் இருக்கும். (go up)

xxxxx

1 2 3  
     4 
5      
6      
7     8  

விடைகள்

உ1த்த2சோ3ன்
 ங் அ4
க5ங்ம்
நீ6ம்  ல்
தி7ம்ர்ப8  

–subham–

Hinduism Crossword 4 8 2023 (Post No.12,369)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,369

Date uploaded in London – –  4 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Find eight words beginning with the letter Y.

1.Second Veda of the four; Deals with Yagas and Yajnas

2.Great river on the banks of which Krishna played,

3.Lucky woman who raised Lord Krishna,

4.Sanskrit word for Fire ceremony,

5. the ritual patron, on whose behalf a religious ritual or a yajna is performed by a Hindu priest. Now used for boss, proprietor in Indian languages.

6.The wooden post planted at the place of Vedic ceremonies, 7.word for Fame; many girls and boys have this name

8.the grain which gave name to Java in Indonesia

    1     
          
          
         2
8         
          
          
          
7   Y    3
          
          
          
6         
         4
          
    5     

ANSWERS

1.Yajur veda, 2.Yamuna, 3.Yasoda, 4.Yajnam, 5Yajamana, 6.Yupam, 7.Yasas, 8.Yavam

    A1     
    D     
    E     
    V    A2
M8   R   N 
 A  U  U  
  V J M   
   AAA    
S7ASAYASODA3
   UAA    
  P J J   
 A  A  N  
M6   M   A 
    A    M4
    N     
    A5     

—subham—-

QUIZ புராணப் பத்து QUIZ (Post No.12,368)

 

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,368

Date uploaded in London – –  4 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

QUIZ புராணப் பத்து QUIZ

1.புராணங்கள் 18 என்பர்உப புராணங்கள் மேலும் 18 என்பர். அவை யாவை?

Xxxx

2.புராணங்கள் பழையதாவேதங்கள் பழையதா?

Xxxx

3.புராணம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கு என்ன பொருள்?

Xxxx

4.புராணங்கள் எவ்வளவு பெரியவைபடிக்க முடியுமா?

Xxxx

5.புராணங்களில் பெரியது எது சிறியது எது பழையது எது?

xxxx

6.புராணத்துக்கு என்று ஒரு இலக்கணம் உண்டு என்று சொல்லுவார்கள். எல்லா புராணங்களும் சொல்லும் 5 விஷயங்கள் என்ன ?

xxxx

7.புராணங்கள் என்ற பெயரில் தமிழ் மொழியில் தோன்றிய புகழ்பெற்ற நூல்கள் எவை?

xxxx

8.புராணங்களில் இன்று அதிகம் பயிலப்படுவது எது ?

Xxxx

9.எந்த புராணத்தை இறந்தோர் வீட்டில் வாசிப்பதும் கேட்பதும் ஒரு சம்பிரதாயமாக பின்பற்றப்படுகிறது ?

xxxxx

10.அறப்பளிச்சுர சதகம்  என்னும் நூலில் 18 புராணங்களையும் ஒரே பாடலில் அம்பலவாண கவிராயர் சொல்கிறாராமே . அது என்ன பாடல்?

xxxx

விடைகள்

1.பதினெட்டு புராணங்கள்

வேத வியாசர் தொகுத்த புராணங்கள்:- அக்னி, பாகவத, பிரம்ம, பிரம்மாண்ட, பிரம்மவைவர்த்த, கருட, ஹரிவம்ச, கூர்ம, லிங்க, மார்க்கண்டேய, மத்ஸ்ய, நாரத, பத்ம, சிவ, ஸ்கந்த, வாமன, வராஹ, விஷ்ணு (வாயு=சிவ புராணம்) ஆகிய 18 புராணங்கள்.

உபபுராணங்கள் 18

சிறிய புராணங்களை 18 ஆகத் தொகுத்தனர்:-சநத்குமார, நரசிம்ம, பிருஹந்நாரதீய,சிவரஹஸ்ய, துர்வாச, கபில, வருண, காலிக, சம்பா, நந்தி, சௌர, பராசர, மஹேச்வர, பார்கவ, வசிட்ட, தேவிபாகவத, முத்கள, கணேச என்பன 18 உப புராணங்கள். சிலர் இதில் வேறு சில பெயர்களைச் சேர்த்து சிலவற்றை விடுப்பர்.

xxx

2.புராணங்களும் வேதங்களும் பழமையானவையே;

அதர்வண வேதத்தில் புராணங்கள் பற்றிப் பேசப்படுகிறது. வெளிநாட்டினரும் கூட கி.மு.850 என்று தேதி குறிக்கும் சதபத பிராமணத்தில் புராண இதிஹாசம் என்ற தொடர் வருகிறது. இதற்குப் பின்னர் ஏரளமான குறிப்புகள் உள. ஆயினும் அவைகளை எழுத்து வடிவில் கொண்டு வந்தது குப்தர்  காலத்தில்தான். அப்போதுள்ள விவரங்ககளையும் சேர்த்து அவர்கள் அவைகளை புதுக்க்கினர் ; அதாவது அப்டேட் செய்தனர். எல்லாவாற்றையும் எதிர்காலத்தில் நடப்பது போலச் சொல்லுவது பெளராணிகர்களின் ஸ்டைல்.இதே போல் பிற்கால வரலாற்றைச் சேர்த்ததனால் அவைகளை பிற்கால நூல்கள் என்று சொல்லிவிட்டனர் .Atharva Veda (25-6-4); (11-7-24), Satapata Brahmana (11-5-6-8)

முக்கிய உபநிஷதங்கள் அனைத்தும் புத்தர் காலத்துக்கு முந்தையவை; அவைகளில் புத்தமத வாடையே கிடையாது; அப்படிப்பட்ட சாந்தோக்ய உபநிஷதத்தில், நாரத முனிவர் தான் கற்ற விஷயங்களைப் பட்டியலிடுகையில் நான்கு வேதங்களுடன் புராணத்தையும் சொல்கிறார். ஆக நாரதருக்கும், உபநிஷதத்துக்கும் முந்தையவை புராணங்கள்.

உபநிஷத்துக்களில் பழையது பிருஹத் ஆரண்யக உபநிஷத். அதில் கூட இதிஹாச புராணக் குறிப்புகள் இருக்கிறது:

அஸ்ய மஹதோ பூதஸ்ய நிச்வசித்

மேதத் ருக்வேதோ யஜூர்வேதஸ்ஸாம

வேத சுதர்வாங்கிரச இதிஹாச

புராணம் வித்யா உபநிஷத் —என்று

பிருஹதாரண்யம் கூறுகிறது. இதை 2800 ஆண்டுகளுக்கு முந்தையது என்று எல்லோரும் ஒப்புக்கொள்கின்றனர்.

பொருள்: இருக்கு, யஜூர், சாமம், அதர்வணம், இதிஹாசம், புராணம், வித்தை, உபநிடதம் முதலியவை பரம்பொருளின் சுவாசம்.

XXXXX

3.‘புரா’ என்றால் ‘முன்பு’ ‘முன் காலம்’ Once upon a time, Long long ago என்று பொருள். வேத காலத்திலேயே நாம் முன்னொரு காலத்தில் என்று கதை சொல்லி இருப்போமானால், நாம் தான் உலகிலேயே பழமையான இனம் என்பதற்கு வேறு சான்றே தேவை இல்லை.

‘புரா அபி நவம்’ என்ற விளக்கமும் உண்டு. பழைய கதைதான்; ஆயினும் என்றும் புதுக்கருக்கு அழி யாத தங்கம் போல ஜ்வலிக்கிறது என்பதால் ‘புரா அபி நவம்’  — அதாவது முன்னைப் பழமைக்கும் பழமையாய், பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் இலங்குவது– என்று பொருள் சொல்லுவர். புரா – முந்திய /பழைய ; நவம் – புதுமையானது. ஆங்கிலச் சொல் நியூ NEW என்பது இந்த ஸம்ஸ்க்ருதச் சொல்லிலிருந்து பிறந்ததே.

XXXX 

4.முக்கிய புராணங்கள் 18 ; அவைகளில் உள்ள ஸ்லோகக்ங்கள் நாலு லட்சம்; அதாவது சம்ஸ்க்ருத மொழியில் எட்டு லட்சம் வரிகள் ! ஒரு வாழ்நாளில் பிடித்துவிடலாம்; ஆயினும் அவைகளின் பொருளை உணர்வது எளிதல்ல. குறைந்தது 40 லட்சம் சொற்கள் .

XXXX

5.மிகப் பெரிய புராணம் : கந்த புராணம்  Skanda Purana.

மிகச் சிறிய புராணம் : மார்க்கண்டேய புராணம் Makandya Purana.

மிகவும் பழைய புராணம் : விஷ்ணு புராணம்  Vishnu Purana ( இப்போது கிடைக்கும் வடிவத்தின் காலம் பொ .ஆ 300 CE ).

XXXX

6.புராணங்களில் ஐந்து பகுதிகள் இருக்கவேண்டும் என்பது மரபு:

1.சர்கம்: பிரபஞ்சத்தின் தோற்றம்;

2.பிரதி சர்கம்: மற்ற உயிர்களின் தோற்றமும் மறைவும்;

3.வம்சம்: ரிஷிகள், தேவர்களின் சரிதம்;

4.மன்வந்தரம்: 14 மனுக்களின் காலம்;

5.வம்சானுசரிதம்: சூரிய, சந்திர குல அரசர்களின் வரலாறு

XXXX

7.பெரிய புராணம், திருவிளையாடல் புராணம்; புலவர் புராணம் ; ஏனைய கந்த புராணம் போன்றவை சம்ஸ்க்ருத மொழியில் உள்ளவரின் மொழிபெயர்ப்பே.

XXXX

8.அவதாரங்கள் பற்றி, குறிப்பாக கிருஷ்ணரின் வாழக்கையைக் கூறும் பாகவத புராணம்தான் பெரிதும் பேசப்படுகிறது. இதை ஏழே நாட்களில் பாராயணம் செய்யும் — முற்றோதல்– மிகவும் புண்ணியமானது என்பதால் பல குடும்பங்களும் சங்கங்களும் இதை ஏற்பாடு செய்கின்றன . அதற்கு பாகவத சப்தாஹம் என்று பெயர்.சுகர் ஏழுநாட்களில் பரீக்ஷித்துக்கு இந்த ஸ்ரீமத் பாகவதத்தை எடுத்துரைத்தார். அதிலிருந்து இது ஒரு புண்ணிய செயலாகக் கருதப்பட்டது .இப்போதும் கார்த்திகை, மார்கழி  மாதங்களில் பாலக்காடு, குருவாயூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பல கோயில்களிலும் மண்டபங்களிலும் பாகவத சப்தாஹம் ஆண்டுதோறும் சிறப்பாக நடந்து வருகிறது .

Xxxxx

9.கருட புராணம் வாசிப்பது சம்பிரதாயம் ; கருடபுராணத்தை 13-ம் நாளில்  வாசிக்க வேண்டும் காரணம் என்னவென்றால் மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்க்கை, ஈமச்சடங்குகள் மற்றும் மறுபிறவி போன்றவைகளைப் பற்றி இதன் இரண்டாம் பகுதி விளக்குகிறது.

xxxxx

10.தலைமை சேர் பௌடிகம், இலிங்கம், மார்க்கண்டம், எழில்

          சாரும் வாமனம், மச்சமே,

     சைவம், பெருங் கூர்மம், வருவராகம், கந்த

          சரிதமே, பிரமாண்டமும்,

தலைமை சேர் இப்பத்தும் உயர் சிவபுராணம் ஆம்;

          நெடிய மால் கதை; வைணவம்

     நீதி சேர் காருடம், நாரதம், பாகவதம்,

          நீடிய புராணம் நான்காம்;

கலை வளர் சொல் பதுமமொடு, கிரம கைவர்த்தமே,

          கமலாலயன் காதை ஆம்;

     கதிரவன் காதையே சூரிய புராணமாம்;

          கனல் காதை ஆக்கினேயம்;

அலை கொண்ட நதியும் வெண் மதியும் அறுகும் புனையும்

          அத்தனே! அருமை மதவேள்

     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்

          அறப்பளீசுர தேவனே!

பொருள்:: முதலில் உள்ளது பௌடிகம் , லிங்கம், மார்க்கண்டேயம், வாமனம் ,

சைவம், மச்சம், கூர்மம், வராஹம், ஸ்கா ந்தம் ,பிரம்மாண்டம்  ஆகிய இவை பத்தும் சிவன் தொடர்புடைய புராணங்கள்;

வைணவம், கருடம், நாரதம் பாகவதம் ஆகிய நான்கு புராணங்கள்  திருமாலின் புகழ் பாடும் புராணங்களாம் .

பத்ம புராணமும், பிரம்ம கைவர்த்தமும் பிரம்மதேவன் தொடர்பான புராணங்கள். இவை தவிர சூரியன் புகழ் படும் சூரிய புராணமும் அக்கினியைப் போற்றும் அக்கினி புராணமும் ஆக மொத்தம் 18 புராணங்கள் .

18 புராணங்கள் எவை என்ற பட்டியலில் கருத்து வேறுபாடு உண்டு

XXXXX

Tags- பதினெட்டு புராணங்கள், பெயர், பாகவத சப்தாஹம், கருட புராணம் , உப புராணங்கள், அர்த்தம், என்ன

வெற்றி தரும் கொல்லூர் மூகாம்பிகை-1 (Post No.12,367)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,367

Date uploaded in London –  4 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

ஆடி  மாத அம்மன் தலங்கள் வரிசையில் 2-8-2023 அன்று மாலைமலர் இதழில் பிரசுரமாகியுள்ள கட்டுரை. இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது. 

வெற்றி தரும் கொல்லூர் மூகாம்பிகை

(முதல் பகுதி ) 

ச.நாகராஜன்

குடசாத்ரி மலைச்சிகரத்தில் கொல்லூர் 

கர்நாடக மாநிலத்தில் உடுப்பி மாவட்டத்தில் அமைந்துள்ள கொல்லூர் திருத்தலம் சக்தி வாய்ந்த அம்மனின் திருத்தலம் ஆகும். இங்கு மூகாம்பிகை தேவி குடியிருந்து லக்ஷக்கணக்கான பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறாள்.

இந்தத் திருத்தலம் உடுப்பியிலிருந்து 80 கிலோமீட்டர் தொலைவிலும் மங்களூரிலிருந்து சுமார் 135 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் குடசாத்ரி மலையில் ஒரு சிகரத்தில் இது உள்ளது.

 கொல்லூர் பெயர்க் காரணம்

மிகப் பண்டைய காலத்தில் த்வாபர யுகத்தில் கோலன் என்ற மஹரிஷி தவம் புரிந்த திருத்தலம் இது. கோல மஹரிஷி தவம் புரிந்த தலம் என்பதால் இது கொல்லூர் என்ற பெயரைப் பெற்றது.

இங்கு கொலுவீற்றிருக்கும் மூகாம்பிகை தேவிக்கு மூன்று கண்களும் நான்கு கரங்களும் உள்ளன. இரு கரங்களில் சக்கரமும் சங்கும் ஏந்தி இருக்கும் அன்னை, மற்ற இரு கரங்களில் ஒரு கை அபயகரமாகவும் இன்னொரு கை தன் பாதத்தைச் சுட்டிக்காட்டும்படியாகவும் பத்மாசனத்தில் அமர்ந்தபடி இருக்கிறாள்.

மூகாம்பிகையின் இந்த ஆலயம் தெள்ளிய நீர் ஓடும் சௌபர்ணிகா நதிதீரத்தில் அமைந்துள்ளது. குடசாத்ரி மலையிலிருந்து உருவாகி விழும் 64 நீர்வீழ்ச்சிகள் ஒன்று சேர்ந்து இந்த சௌபர்ணிகா நதியாக மாறிப் பாய்கிறது. இது 64 மூலிகைகளின் நீராக அமைகிறது. தீராத வியாதிகளைத் தீர்த்து வைக்கும் தீர்த்தம் இது.

ஸ்வயம்பு லிங்கத்தில் அருள் பாலிக்கும் தேவி, உத்பவ லிங்கமாக சக்தியும் சிவமும் இணைந்தவளாக இருக்கிறாள். கர்பக்ரஹ விமானம் தங்கத்தால் வேயப்பட்டுள்ளது.

கர்பக்ரஹத்தில் அம்பாளின் முன்னர் தரையோடு தரையாக சுயம்பு லிங்கம் உள்ளது. பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய முப்பெரும் தெய்வங்கள் வலது புறத்தில் இருக்க, ஒரு தங்கச் சங்கிலி இடது புறத்தைத் தனியே பிரிக்கும் காட்சி அரிய காட்சியாகும்.

கர்பக்ரஹத்தின் எதிரில் பணிவுடன் அமர்ந்த நிலையில் சிம்ம வாகனம் இருக்க, இரு புறமும் தியான மண்டபம் உள்ளன.

இந்த தேவியின் சிலையை பிரதிஷ்டை செய்தவர் ஆதி சங்கர் என்றும் ஶ்ரீ சக்ரத்தின் மீது இதை அவர் நிறுவியுள்ளார் என்றும் வரலாறு கூறுகிறது.

வெளி பிரகாரத்தில் சரஸ்வதி மண்டபம் உள்ளது. சௌந்தர்ய லஹரியை ஆதிசங்கரர் இயற்றிய இடம் இதுவே எனக் கூறப்படுகிறது.

ஆதி சங்கரர் அமைத்துள்ள வழிபாட்டு முறையின் படியே கோவில் பூஜைகள் நடைபெறுகின்றன. சங்கர பீடம் ஒன்றை கர்பக்ரஹத்தின் மேற்குப் புறத்தில் காணலாம்.

கர்பக்ரஹத்தின் முன்னே கொடிக் கம்பம் உள்ளது. அருகில் ஒரே கல்லினால் ஆன விளக்குத்தூணில் ஆயிரம் விளக்குகளை ஏற்றலாம்.

புராண வரலாறு

பழைய புராண வரலாற்றைக் கொண்ட அரிய தலம் இது. கம்ஹாசுரன் என்ற ஒரு அசுரனை தேவி வதைத்த தலம் இது. அரிய தவம் ஒன்றைச் செய்து பூமியை நடுங்கச் செய்ய உள்ளம் கொண்ட அந்த அசுரனை பார்வதி தேவி பூமியைப் பாதிக்கும்படியான வரத்தை அவன் கேட்பதைத் தடுத்து நிறுத்த அவனை ஊமையாக்கினாள். ஆகவே அவன் மூகாசுரன் என்ற பெயரைப் பெற்றான். மூகம் என்றால் ஊமை என்று பொருள்.

என்றாலும் கூட அசுரர்களின் குருவான சுக்ராசாரியரின் ஆசியினால் அவன் பேசும் சக்தியைப் பெற்று முனிவர்களைக் கொல்ல ஆரம்பித்தான். இந்தக் கொடுஞ்செயல் பொறுக்க முடியாதபடி எல்லை தாண்டிச் சென்ற போது பார்வதி தேவி  மூகாசுரனை வதம் செய்தாள். ஆகவே மூகாம்பிகை என்ற பெயரையும் பெற்றாள். ஆகவே இந்தத் தலம் கொல்லூர் மூகாம்பிகை தலம் ஆனது.

சங்கரர் பற்றிய வரலாறு

இன்னொரு சுவையான வரலாறும் இந்தத் திருக்கோவில் அமைந்த விதம் பற்றிக் கூறப்படுகிறது.

ஆதி சங்கரர் சரஸ்வதிக்கு ஒரு ஆலயத்தை கேரளத்தில் அமைக்க விரும்பினார். இதற்காகத் தவம் இயற்றிய போது சரஸ்வதி தோன்றி ஆதி சங்கரரின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக அருளினாள். ஆனால் ஒரு நிபந்தனையும் விதிக்கப்பட்டது. அவர் தன்னைக் கூட்டிச் செல்ல வேண்டும் என்றும் ஆனால் திரும்பிப் பார்க்கக் கூடாது என்பதுமே நிபந்தனையாக விதிக்கப்பட்டது. இதன்படி ஆதிசங்கரர் முன்னே நடக்க பின்னால் தேவி வந்து கொண்டிருந்தாள். தேவியின் நூபுர ஓசை ஆதிசங்கரர் காதில் விழ அவர் மகிழ்ச்சியுடன் முன்னேறினார். ஆனால் திடீரென்று அந்த ஓசை நின்று விட சங்கரர் திரும்பிப் பார்த்தார். அவர் இப்படி நிபந்தனையை மீறி விட்டதால் தேவி அந்த இடத்திலேயே இருந்து விட்டாள். அந்த இடம் தான் கொல்லூர். என்றாலும் தன்னை நோக்கிக் கடும் தவம் இயற்றிய காரணத்தால் தேவி கேரளத்தில் சோட்டாணிக்கரை அம்மன் கோவிலும் மூகாம்பிகை ஆலயத்திலும் இருந்து அருள் பாலிப்பதாக வாக்குத் தந்தாள். ஆகவே தான் இன்றளவும் சோட்டாணிக்கரை அம்மன் கோவில் மூகாம்பிகை கோவில் திறக்கப்பட்ட பின்னரேயே உடனே திறக்கப்படுவது வழக்கமாகியுள்ளது.

–    தொடரும்

பர்மாவில் தமிழ் இந்துக் கோவில்கள் (Post No.12,366)

Temple at Pilican in Burma/Myanmar

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,366

Date uploaded in London – –  3 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

பர்மாவில் தமிழ் இந்துக் கோவில்கள்

பர்மா கோவில்கள் பற்றி ஆங்கிலத்தில் கட்டுரை எழுதப் புகுந்தபோது தமிழிலும் சில சுவையான விஷ்யங்களைக் கண்டேன்; அவைகளைத் தொகுத்து சுருக்கமாக அளிக்கிறேன் ; இவை பல வெப்சைட்டுகளிலிருந்து திரட்டப்பட்ட தகவல்கள். ஆங்கிலத்தின் நீண்ட ஆலயப் பட்டியல் உள்ளது . அதையும் காண்க. தற்காலக் கோவில்கள் பட்டியல் மட்டுமே இங்குள்ளது. அதாவது 200 ஆண்டுகளுக்குள் தமிழ் குடியேற்றக்காரர்களால் கட்டப்பட்ட கோவில்கள்:-

காளி கோவில் பர்மா

ஸ்ரீ காளி கோயில் என்பது பர்மாவில் உள்ள யங்கோன் (Yangon) நகரில் லிட்டில் இந்தியா பகுதியில்  அமைந்துள்ள ஒரு இந்து கோவிலாகும். இது 1871 இல் தமிழ் குடியேற்றக்காரர்களால் கட்டப்பட்டது.. அக்காலகட்டத்தில் பர்மா மாகாணமானது பிரித்தானிய இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது. இந்த கோவில் அதன் வண்ணமயமான கட்டிடக்கலைக்கு குறிப்பிடத்தக்கது, குறிப்பாக அதன் கூரையில், பல இந்து கடவுளர்களின் கல் சிலைகளும் உள்ளன. இக்கோயில் உள்ளூர் இந்திய சமூகத்தால் பராமரிக்கப்படுகிறது.

Xxx

அங்காள பரமேஸ்வரி மூனீஸ்வரர் ஆலயம்

பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வாழும் மியான்மர் என்று அழைக்கப்படும் பர்மாவில் வீற்றிருக்கும் அங்காள பரமேஸ்வரி மூனீஸ்வரர் ஆலயம் இந்த நாட்டின் மிகப் பிரசித்தமான இந்து ஆலயங்களில் ஒன்று. இவ்வாலயம் 150 வருடங்களுக்கு முன்பு யங்கொன் நகருக்கு அருகாமையிலுள்ள பீலிக்கன் கிராமத்தில் அங்கு குடியேறிய தமிழகத் தமிழர்களால் அமைக்கப்பட்டது.

விசாலமான அரச மரத்தின் கீழ் திரிசூலத்தை நாட்டி அவர்கள் இந்தக் ஆலயத்தின் தோற்றத்திற்கு உதவினார்கள். பெருந்தொகையான தமிழர்கள் வாழ்ந்த பீலிக்கன் கிராமத்தில் இன்று இருபது தமிழ் குடும்பங்கள் மாத்திரம் வாழ்கின்றன. தமிழர்கள் மாத்திரமல்ல மியன்மாரின் பிற இனத்தவர்களும் இந்த கோவிலில் வழிபாடு செய்கின்றனர்.

மியான்மரின் அங்காள பரமேஸ்வரி முனீஸ்வரர் கோவிலுக்கு அய்யர் கோவில் என்ற அழைப்புப் பெயர் உண்டு. அய்யர் கோவில் என்ற பெயர் தான் மியன்மார் வாழ் தமிழர்களுக்கும் பிற இனத்தவர்களுக்கும் அதிகம் தெரிந்த பெயர்.

இந்த ஆலயத்திற்கு நீதி நிலையம் என்ற காரணப் பெயரும் இருக்கிறது. தமக்கிடையிலான பிணக்குகளை இந்த வட்டாரத்தில் வாழும் மக்கள் கோவில் மண்டபத்தில் பேசித் தீர்ப்பார்கள். ற்பூரம் ஏற்றிச்  சத்தியம் செய்யும் வழக்கமும் உண்டு.

மியான்மர் நாட்டின் பீலிக்கான் நகரில் உள்ள அருள்மிகு அன்னை ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி-அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர் தேவஸ்தானங்களின் ஜீரணோத்தார அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகப் பெருவிழா  10.-04.-2011, நடந்தது .அப்போது சுமார் 2 லட்சம் பக்தர்கள் கண்டு மகிழந்தனர்.

வயல் வெளிகள் சூழ்ந்த இக்கிராமத்தில் சுமார் 20 தமிழ்க் குடும்பங்கள் மட்டும் வாழ்கின்றனர் என்றாலும் 64 சுற்றுக் கிராமங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் குலதெய்வமாக விளங்குகிறது .

(ஒத்தக்கடை ராமன்)

XXXXX

தமிழ் கல்வெட்டு

பர்மாவின் பண்டைய தலைநகரான (Bagan) பாகனில் 12ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தமிழ் கல்வெட்டு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழமையான பாகன் நகரத்தில் உள்ள ஒரே ஒரு வைணவம் விஷ்ணு கோயிலுடன் ( Nat Hlaung Kyaung Temple) தொடர்புடையதாக இந்த கல் பொறிக்கப்பட்டுள்ளது .

கல்வெட்டு சம்ஸ்க்ருதத்தில் அமைந்த ஒரு செய்யுளையும், தமிழில் அமைந்த ஒரு உரைநடைப்பகுதியையும் கொண்டுள்ளது. சம்ஸ்க்ருதச் செய்யுள் கிரந்த எழுத்திலும், தமிழ்ப்பகுதி தமிழ் எழுத்திலும் பொறிக்கப்பட்டிருந்தன. தமிழ் எழுத்து, 12-ஆம் நூற்றாண்டு எழுத்தமைதியில் இருக்கிறது. சம்ஸ்க்ருதச் செய்யுள், வைணவ ஆழ்வாரான குலசேகராழ்வார் எழுதிய “முகுந்தமாலா”  என்னும் செய்யுள் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது (செய்யுள் எண்.5 .

மலைமண்டலத்தைச் ( Kerala) சேர்ந்த மகோதயர் பட்டணம் (மலபாரைச் சேர்ந்த கிராங்கனூர்-தற்போதைய கேரளா, கொடுங்கல்லூர்) என்னும் பட்டணத்திலிருக்கும் ஸ்ரீகுலசேகர நம்பி என்பவர் அளித்த நன்கொடைகள்  பற்றிக் கல்வெட்டின் தமிழ்ப்பகுதி கூறுகிறது. இவர் தம்மைக் குலசேகர ஆழ்வாரின் அடியான் எனக்குறிப்பிடுகிறார் என்பதை இப்பதிவில் காணப்படுகிறதுஇப்

மொத்தம் 9 வரிகள் உள்ளன. இக்கல்வெட்டில் இடம்பெற்றது பின்வருமாறு எழுதப்பட்டது.

####.?1.ஸவஸ்தி ஸ்ரீ நாஸ்தா² த⁴ர்மே ந வஸுனிசயே நைவ காமோப

2.போ⁴கே³யத்³யத்³ப⁴வ்யம் ப⁴வது ப⁴க³வன்பூர்வகர்மானுரூபம் |ஏத

3.த்ப்ரார்த்²யம் மம ப³ஹுமதம் ஜன்மஜன்மாந்தரே(அ)பித்வத்பாதா³ம்போ⁴ரு

4.ஹயுக³க³தா நிஶ்சலா ப⁴க்திரஸ்து || 5 || ?ஸ்ரீ ஸ்வஸ்திஸ்ரீ திருச்செலப்பெரு(க)

5.புக்கமான அரிவத்தனபுரத்து நானாதேசி விண்ணகராழ்வார் கோ

6 .யில் திருமண்டபமுஞ்செய்து திருக்கதவுமிட்டு இந்த மண்டப

7. த்துக்கு நின்றெரிகைக்கு நிலைவிளக்கொன்றுமிட்டேன் மலை

8.மண்டலத்து மகோதயர்பட்டணத்து இராயிரன் சிறியாநான (சீ )

9. குலசேகர(ந)ம்பியேன் இது ஸ்ரீஇதன்மம் மலைமண்டலத்தான். ####

. சம்ஸ்க்ருத. செய்யுள் விளக்கம். 

“மங்களம் உண்டாகுக. எனக்கு பெயர் புகழ் வாங்குவதில் நாட்டமில்லை. பொருள் சேர்ப்பதில் நாட்டம் இல்லை..உலக இன்பங்களை அனுபவிப்பதில் நாட்டம் இல்லை.. என்னுடைய விதிப்படி என்ன நடக்க வேண்டுமோ அது நடக்கட்டும்.. ஆனால் நான் ஒன்றை மட்டும் உன்னிடம் வேண்டிக்கொள்கிறேன். எத்தனை பிறப்பு எடுத்தாலும் உன்னுடைய திருவடித் தாமரைகள் மீது அசையாத பக்தி இருக்க வேண்டுமென்று..

?கல்வெட்டின் இரண்டாம் பகுதி தமிழில் 12  நூற்றாண்டு தமிழ் வரிவடிவத்தில் அமைந்துள்ளது..அதன் விளக்கம்.

“மங்களம் உண்டாகுக..செல்வம் பெருகட்டும்.. புக்கம் என்னும் அரிவதனாபுரத்தில் அமைந்த நானாதேசி விண்ணகர் ஆழ்வார் கோவில் என்று வைணவக் திருமால் விஷ்ணு  கோயிலுக்குப் மலை மண்டலத்தை (சேரநாடு இன்றைய கேரளம்) சேர்ந்த ஈராயிரம் சிறியன் என்றும் ஸ்ரீ குலசேகர நம்பி என்பான்  ஒரு அழகிய மண்டபத்தை கட்டி அதற்கு கதவுகளும் செய்துகொண்டு அந்த மண்டபத்தில் எப்போதும் நின்று எரியும் விளக்கு ( எரிந்து ஒளி வீச நிலை விளக்கு ஒன்றையும்) கொடுத்தான்..எந்த தர்மம் மலைமண்டலதான் பெயரில் அறியப்படும்..”

இக்கோயிலை இன்றைய பர்மா நாட்டில் (Nat Hlaung Kyaung @ နတ်​​​​လျောင်ကျောင်း) என்று அழைக்கிறார்கள்.  இந்த கோவில் பர்மாவில் கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையான  ஒரே ஒரு வைணவம் கோவிலாகும்.

தமிழில் நானாதேசி விண்ணகர் ஆழ்வார்  கோவில் என்று கூறப்பட்ட இக்கோவில் 10 ஆம் நூற்றாண்டில் அனவ்ரதா (அநிருத்தன்) மன்னர் காலத்தில்  கட்டப்பட்டது… 12ஆம் நூற்றாண்டின் இறுதியில் சேர நாட்டில் சேர்ந்த  குலசேகர நம்பி என்ற வணிகர் என்பவர் இங்கு வந்து ஒரு மண்டபத்தைச் சீர்செய்து கட்டியதாகத் தான் தமிழ்க் கல்வெட்டு கூறுகிறது.  (நானாதேசி என்பது பண்டைய தமிழகத்தை சார்ந்த ஒரு வணிகக் குழு.நான்கு திசைகளிலும் சென்று வணிகம் செய்பவர்கள் என்பதால் இந்தப் பெயர்; பிற்காலத்தில் மண்டபம் அமைத்துக்கொடுத்த ஈராயிரம் சிறியனான குலசேகரநம்பியும் இந்த வணிக கணத்தைச் சேர்ந்தவராகவே இருக்கக்கூடும்.

கோயிலில் விஷ்ணுவின் பத்து அவதாரங்களின் சிலைகள் இருந்தன;  இன்று சேதம் அடைந்த ஏழு சிலைகள் மட்டுமே  எஞ்சியுள்ளன.

இக்கோவிலில் பொறிக்கப்பட்ட தமிழ் கல்வெட்டில் இடம் பெற்ற முகுந்தமாலை பாடலை எழுதிய குலசேகர ஆழ்வார் தமிழர்களின் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர். இவரைக் குலசேகரப் பெருமாள் என்றும் அழைக்கின்றனர்..கி.பி. 8 ம் நூற்றாண்டு ( 750 – 780)

 XXXXXX

சைவ வைணவ திருக்கோவில்கள்

தேன்கருமாபிள்ளை அவர்களின் முயற்சியால் கட்டப்பெற்ற கமாயுட் ஸ்ரீ மாரியம்மன் தேவஸ்தானம் இராமநாதன் ரெட்டியாரால் கட்டப்பட்ட பெற்ற பெருமாள் கோவில், திருக்கம்பை முருகப் பெருமான் ஆலயம். காமாட்சியம்மன் கோவில்காளியம்மா (காளிபாடி) போன்ற கோவில்கள் எல்லாம் தமிழரின் கலைத் திறனையும் சமயவழி பண்பாட்டையும் பக்தி நெறியையும் பறைசாற்றி வருகின்றன. மேலும் பசுண்டான் நகரத்தெண்டாயுதபாணி தட்டோன் ஸ்ரீ தண்டாயுதபாணிமோல்மென் சிவஸ்தலம் தெண்டாயுதபாணி கோவில்களில் விழாக்கள் இன்றும் மிகவிமரிசையுடன் கொண்டாடப்பெற்று வருகின்றன.. பீலிக்கான் அங்காள ஈஸ்வரிமுனீஸ்வரர் கோவிலிலும் பக்தர்கள் அதிகம் கூடுகின்றனர்.

XXXXXX

 ரங்கூன் சென்ற ஒருவர் எழுதியது

எங்களது ஹோட்டலின் மிக அருகில் இஸ்லாமிய பள்ளிவாசல் அதற்கு எதிரே பகோடா இருந்தது. சிறிது தூரத்தில் கிருஸ்ணர் கோவிலும் மேலும் சற்றுத்தூரத்தில் முத்துமாரியம்மன் மற்றும் சுப்பிரமணியர் கோவில்கள் இருந்தன. இந்தியா இலங்கையில் தென்படும் சமூக சூழ்நிலையை காணமுடிந்தது. முக்கியமான பல கட்டிடங்கள் கடைகள் என அமைந்திருந்த இடத்தில் நாலு இந்துக்கோயில்களை காணமுடிந்தது. கே எவ் சி KFC உணவகம் முத்துமாரியம்மன் கோயிலுக்கு அடுத்த கட்டிடமாக இருந்தது. அக்காலத்தில் இந்தியர்கள் யங்கூனில் நிறைந்து இருந்ததை ஆதாரமாக காட்டியது.

Xxxxxxxx

முணியான்டி கோயில்

முணியான்டி கோயில் தமிழர்த்திரு ” பெ.ந. குப்புசாமி கடாரத் தலைவர் ” அவர்களால் 1861 ஆண்டில் கட்டப்பட்டது.அங்காளம்மன் கோயில் தமிழர்த்திரு ” விரையா மழவராயர் ” அவர்களால் கட்டப்பட்டது.

முணியாண் டி, அங்காளம்மன் என இரு கோயில்களும் அருகாமையிலே உள்ளது. ஆண்டுதோறும் ஒரே நாளில் இரு கோயிலுக்கும் திருவிழா நடக்கும் , 1000  திற்கும் மேற்பட்டோர் அம்மனுக்கு பூக்குழி இறங்குவார்கள். 

தமிழர்கள் மட்டுமின்றி பர்மா ,சீனர் போன்ற பிற இனத்தாரும் , பர்மா அரசு அமைச்சர்கள் வரை பெரிதும் நம்பிக்கையோடு வணஙங்குவார்கள், பூக் குழி இறங்குவார்கள் ,

திருவிழா 10 நாட்கள் நடைப்பெறும்,

வருசம் முழுவதும் 24×7 சாப்பாடு போடுற ஒரே கோயில் இது தான் .. நடுராத்திரி போனாலும் வந்துருக்கும் ஆள் எண்ணிக்கை மட்டும் சொல்லிட்டுங்க .. உடனே அடுப்புல அரசி பருப்பு வேகும் .. இதற்காகவே சமைக்க , பரிமார ஆட்களை ஊதியம் வழங்கி வச்சிருக்கு கோயில் நிர்வாகம்.

இங்கு கள்ளர்களின் கடாரம்கொண்டான் , கடாரத்தலைவர், சோழகர், சோழங்கதேவர், ஈழம்கொண்டான், கோபாலர், கண்டியர், மழவராயர், சேர்வை, வாண்டையார் மேலும் பல பட்டம் உடைய கள்ளர்கள் உள்ளனர்.

Sri Krishna Temple in Burma

XXXX

பர்மாவில் ராமாயணம்

மியன்மாரில்( பர்மா) இதுவரை 9 இராமாயணத் தழுவல்கள் பர்மிய மொழியில் இயற்றப்பட்டுள்ளன.
பகனில் உள்ள நாத் ஹ்லவுங் க்யவுங் என்ற ஒரு விஷ்ணு கோவிலில் இராமர் மற்றும் பரசுராமரின் சிலைகள் காணப்படுகின்றன. பர்மாவை ஆண்ட பகன் இராஜவம்ச மன்னன் ஒருவன் தான் பூர்வ ஜென்மத்தில் இராமரின் உறவினராக இருந்ததாக ஒரு கல்வெட்டில் கூறியுள்ளார்.
பர்மிய நாடகக் கலைகளில் இராமாயணம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. அரசர்களின் காலத்தில் பண்டிகைகளின் போது அரசு சார்பில் இராமாயணம் நாடகமாக நடிக்கப்பட்டதாம். மொத்தத்தில் இராமாயணம் பர்மிய கலாச்சாரத்தில் பெருமைமிகு இடத்தைக் கொண்டுள்ளது.

Xxxxx

Sri Varatharaja Perumal

பர்மாவில் நகரத்தார் ஆலயம் நிறுவிய ஊர்கள்

நகரத்தார்கள் பர்மாவில் கோயில் அமைந்த ஊர்கள் 59 . அவைகளின் பெயர்கள் கீழே பட்டியலிட்டுள்ளோம்.

1. இரங்கூன்
2. பசுபதாங்
3. லெகூ
4. மொபி
5. தக்கி
6. அவுக்கான்
7. தொவுஞ்கிங்
8. லேப்பட்டான்
9. மீன்லா
10. அவுப்போ
11. சூப்பிங்கான்
12. சீக்கோம்
13. நத்தலின்
14. பவுண்டை
15. தேக்கோம்
16. புரோம்
17. ஈனாஞ்சான்
18. தயட்சியோம்
19. ஈந்தட்டோ
20. நந்தஞ்சான்
21. பாசியன்
22. மைனாங்
23. உவாக்கமா
24. மியாங்கிமா
25. சுமங்கை
26. ஐமன்
27. உவாக்மா
28. பியாப்பம்
29. சைலா
30. தெரியா
31. தொந்தை
32. போக்கலை
33. மேல்மேன்சுன்
34. சைபின்
35. சோசான்
36. முப்பின்
37. எவுண்டன்
38. மவுஞ்சுண்டான்
39. தொங்குவா
40. கட்டபின்னா
41. கையான்
42. டாப்பின்
43. பக்கோ
44. தன்னபின்
45. சைட்டோ
46. சைச்சோ
47. தத்துவன்
48. சுவைச்சான்
49. மேல்மேன்
50. தையு
51. நவுலீபன்
52. பென்விகோம்
53. பியூ
54. டாங்கோ
55. பின்மேனா
56. மீன்ஜான்
57. மாந்தளை
58. மணியுவா
59. மீன்பு

—-SUBHAM—–

பர்மா, மியன்மார், கோவில்கள்,விழாக்கள் , இந்துமதம், ராமாயணம்,  நகரத்தார் , செட்டியார், பர்மா தமிழ் கல்வெட்டு

Tamil Hindu Temples in Burma/ Myanmar (Post No.12,365)

Shri Subrahmanya Swami Devasthanam

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,365

Date uploaded in London – –  3 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxx 

Tamil Hindu Temples in Burma/ Myanmar (Post No.12,365)

Apart from historic Vishnu temple at Nathlaung Kyaung Temple and Nanpaya, there are Hindu temples built in the last 200 years. They were built by the Tamil migrants in Burma. Since Burma was also under British rule like India, lakhs of Indians were taken to Burma by the British for manual labour.

Hindu Tamils were great devotees of Shiva and Vishnu and local Village Goddesses. They built a lot of temples in Rangoon (now Yangon) itself. The Nagarathar Chettiar websites says they built temples in 59 places.

xxxxx

The year 1984 Tourist Guide I am reading , says there are three temples and they are

(Following temples are in Yangon)

1.Sri Sri  Siva Krishna Temple

141 Pansodan Street, Yangon

xxx

2.Sri Sri Durga temple 307  b

Bo  Aung Gyaw Street Yangon

xxx

3.Hindu Temple, Anawrahta Road, near Thein Gyi Zei Market

Xxxx

From other websites I have collected the details:–

1.Sri Varatha Raja Perumal Hindu Temple, Yangon

4.5(118) · Hindu temple

117 Anawrahta Rd

Sree Varatharaja Perumal Temple

 137/139, 51st St., Upper Block, Pazundaung, Yangon , Myanmar

xxxxx 

Hanuman Temple சுயம்பு ஸ்ரீ ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயம்

(23) · Hindu temple

Q5VC+FFJ, Kan Yeik Tha Rd · +95 9 45000 6086

xxxxx

Chettiar Temple

(Lord Murugan Hindu Temple)

One of several Hindu temples around the city, the Sri Nagarthar  Sulamani temple is now partly hidden by overpass that leads to a bridge over the Pazundaung creek. Thankfully the road didn’t quite reach the level of the colourful gopurum tower, so at least the legion of commuters making their way in and out of the city have a little something to look forward to along the way.

Sula Mani Temple

57, Set Yon Rd.(Mill Rd.), Mingalar Taung Nyunt Ward, Mingalar Taung Nyunt, Yangon , Myanmar

xxxxx

Shri Kali Temple, Burma

Shri Kali Temple, Burma is located in

Completed   1871; 152 years ago

Shri Kali Temple is a Hindu temple located in the undefined Little India in downtown Yangon, Burma. It was built by Tamil migrants in 1871, whilst Burma Province was part of British India. The temple is noted for its colourful architecture, especially its roof, which contains images and stone carvings of many Hindu gods. The temple is maintained by the local Indian community.

Xxxx

Pilikan Angala Parameswari Muneeswarar Alayam

அங்காள பரமேஸ்வரி மூனீஸ்வரர் ஆலயம் இவ்வாலயம் 150 வருடங்களுக்கு முன்பு யங்கொன் நகருக்கு அருகாமையிலுள்ள பீலிக்கன் கிராமத்தில் அங்கு குடியேறிய தமிழகத் தமிழர்களால் அமைக்கப்பட்டது

Pilikan temple at Yangon, Myanmar (Burma) 🕉

Pelikan is a very interesting compact Hindu temple in the middle of paddy fields.

Pelikan is about 90 mins drive from Yangon

Xxxxx

Sai Subramania Swamy Devasthanam

41, Kanbei Butar Yon Rd., Ward (12), Yankin, Yangon , Myanmar

xxxx

Sari Naga Muthu Mariyamman Temple

Myoh Patt St., Ywar Ma (West) Ward, Insein, Yangon , Myanmar

Muthu Maraiyamman Temple

AddressW565+257, Khaymardhi Road, Yangon, Myanmar (Burma)

xxxxx

Sri Kaliyamman

17/19, Maha Bawga St., Myae Ni Gone (South) Ward, Sanchaung, Yangon , Myanmar

xxx

Shree Bhutnath Mahadev Temple

76/80, Banyar Dala Rd., Tha Pyay Gone Ward, Mingalar Taung Nyunt, Yangon , Myanmar

xxxxx

Shree Mahar Lakshmi

29/31, Bauk Htaw Butar Yon St., Bauk Htaw, Ward (16), Yankin, Yangon , Myanmar

xxxxx

Shri Kali Temple Trust

295, Kon Zay Dan St., Pabedan, Yangon , Myanmar

xxxxxx

Shri Swami Shiv Narayan Santh Samaj Hindu Temple

17/19, 94th St., Kan Daw Kalay (South) Ward, Mingalar Taung Nyunt, Yangon , Myanmar

xxxxx

Shri Ramakrishna Temple

230, Botahtaung Pagoda St., Upper Middle Block, Pazundaung, Yangon , Myanmar

xxxxx

Sree Kamatchi Amman Temple

369, Bogyoke Aung San Rd., Pabedan, Yangon , Myanmar

xxxxx

Sree Karumariyanmman Temple

Bo Min Khaung St., Corner of Upper Pansoedan Rd., Hpa-Sa-Pa-La Ward, Mingalar Taung Nyunt, Yangon , Myanmar

xxxxx

Sri Varatharaja Perumal Temple picture

Sree Mariamman Temple

49/A, Yangon-Insein Rd., Ward (9), Hlaing, Yangon , Myanmar

xxxxx

Sree Prasanna Venkatesa Perumal Temple

85, Mya Yar Gone St., Corner of 125th St., Tha Pyay Gone Ward, Mingalar Taung Nyunt, Yangon , Myanmar

xxxxxx

Sree Siddhi Vinayak Temple

149/150, 24th St., Upper Block, Latha, Yangon , Myanmar

xxxxx

Sree Sithi Vinyagar Temple

13/A, 10th St., Ward (3), Hlaing, Yangon , Myanmar

xxxx

Sree Sree Kali Temple

49, Shan Kone St., Myae Ni Gone (North) Ward, Sanchaung, Yangon , Myanmar

xxxxx

Sree Sree Sree Jagannath Temple

15, Padaethar St., Saw Yan Paing (South) Ward, Ahlone, Yangon , Myanmar

xxxxx

Sree Sundara Vinayagar Temple

115, Banyar Dala Rd., Tha Pyay Gone Ward, Mingalar Taung Nyunt, Yangon , Myanmar

xxxxx

Sri Kali Temple

318, Anawrahta Rd., Pabedan, Yangon , Myanmar

Sri Nataraja Peruman Temple

Hindu Temples

 52, 120th St., Yae Twin Gone Ward, Mingalar Taung Nyunt, Yangon , Myanmar

xxxxx

Sri Krishna Temple 

Sri Badra Kaliyamman Temple

74, Ywar Ma Kyaung St., Ward (1), Hlaing, Yangon , Myanmar

xxxxx

Sri Ram Temple

Hindu Temples

 392, Kyee Myin Daing Kannar Rd., Corner of Neikban St., Thayet Taw (South) Ward, Kyeemyindaing, Yangon , Myanmar

xxxxx

Sri Sivasubramaniyar Temple

Hindu Temples

 152/154, 48th St., Upper Block, Botahtaung, Yangon , Myanmar

xxxxx

Sri Suriya Kanthari Veillu Kanthamann Temple

6, 115th St., Mingalar Taung Nyunt Ward, Mingalar Taung Nyunt, Yangon , Myanmar

xxxxx

Sri-Murugapperuman Temple

Hindu Temples

 116, Shwe Bon Tha St., Lower Block, Pabedan, Yangon , Myanmar

xxxxx

Vivekananda Temple Trust

30/32, 137th St., Ma U Gone Ward, Tarmwe, Yangon , Myanmar

xxxxxx

Hindu temples at the following places are constructed by Nagaraththar /Chettiars who went from Tamilnadu.

            Rangon (Yangon)

            pasumanthan

            kimanthan

            leekoo

            mopi

            thakki

            avukkan

            thovunchai

            leeppattan

            minla

            avuppo

            suppingkan

            chikkon

            naththalin

            pavundai

            thekkon

            purome

            eenanchan

            thayatmiyo

            inthatta

            natthanchan

            pasiyan

            mynang

            uvakkama

            miyangmiya

            chumangai

            aymen

            pyappem

            saila

            deriya

            tondai

            pokkalai

            molmen sun

            saippi

            sosan

            muppin

            evundam

            mavunchavuttan

            thonguva

            kattappina

            kayyan

            dappin

            pakko

            tannappin

            saitto

            saiko

            tattuvam

            suvaichan

            molmeen

            dayyu

            navuliyappan

            penvikkon

            biyu

            dango

            pinmena

            meenchan

            manthalai

            maniyuva

            meenbu

Munuswami Temple

பர்மாவில் நகரத்தார் ஆலயம் நிறுவிய ஊர்கள்
நகரத்தார்கள் பர்மாவில் கோயில் அமைந்த ஊர்கள் 59 . அவைகளின் பெயர்கள் கீழே பட்டியலிட்டுள்ளோம்.

1. இரங்கூன்
2. பசுபதாங்
3. லெகூ
4. மொபி
5. தக்கி
6. அவுக்கான்
7. தொவுஞ்கிங்
8. லேப்பட்டான்
9. மீன்லா
10. அவுப்போ
11. சூப்பிங்கான்
12. சீக்கோம்
13. நத்தலின்
14. பவுண்டை
15. தேக்கோம்
16. புரோம்
17. ஈனாஞ்சான்
18. தயட்சியோம்
19. ஈந்தட்டோ
20. நந்தஞ்சான்
21. பாசியன்
22. மைனாங்
23. உவாக்கமா
24. மியாங்கிமா
25. சுமங்கை
26. ஐமன்
27. உவாக்மா
28. பியாப்பம்
29. சைலா
30. தெரியா
31. தொந்தை
32. போக்கலை
33. மேல்மேன்சுன்
34. சைபின்
35. சோசான்
36. முப்பின்
37. எவுண்டன்
38. மவுஞ்சுண்டான்
39. தொங்குவா
40. கட்டபின்னா
41. கையான்
42. டாப்பின்
43. பக்கோ
44. தன்னபின்
45. சைட்டோ
46. சைச்சோ
47. தத்துவன்
48. சுவைச்சான்
49. மேல்மேன்
50. தையு
51. நவுலீபன்
52. பென்விகோம்
53. பியூ
54. டாங்கோ
55. பின்மேனா
56. மீன்ஜான்
57. மாந்தளை
58. மணியுவா
59. மீன்பு

XXXX  subham xxxxxxxx

Tags- Burma, Myanmar, Yangon, Hindu Temples, Nagarathar, Chettiyar, Kali, Muthumariamman, Pilikan, Angala Parameswari, Muneeswar, Temples, Alayam

QUIZ வள்ளலார் பத்து QUIZ (Post No.12,364)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,364

Date uploaded in London – –  3 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

QUIZ SERIES No.58

1.ராமலிங்க சுவாமிகள் (1823-1874) என்றும் வள்ளலார் என்றும் போற்றப்படும் மகானுக்கு பிடித்த சொல் எது?

XXXXX

2.இவர் பிறந்ததோ மருதூரில் , பின்னர் ஏன் வடலூர் வள்ளலார் என்று இவரை அழைக்கின்றனர்?

XXXX

3.வள்ளலாரின் தாய் தந்தை , உடன்பிறந்தார் யாவர் ?

XXXXXX

4.வள்ளலார் பரப்பிய கொள்கை என்ன?

XXXXX

5.வள்ளலார் எழுதிய பாடல்களை எங்கே காணலாம் ?

XXXXXX

6. வள்ளலாருக்கும் யாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது?  ஏன்?

XXXX

7.வள்ளலார் மறைந்தது எப்படி ?

XXXX

8.வடலூரில் இன்றும் கண்ணுக்கு முன் காணப்படும் அதிசயம் என்ன ?

XXXX

9.எல்லோரும் மேற்கோள் காட்டும் , சுவாமிகளின் வரி என்ன ?

XXXX

10.ராமலிங்க சுவாமிகள் யார் மீது பாடினார்? சென்னையை தரும மிகு என்று போற்றிப் பாராட்ட காரணம் என்ன ?

XXXX

விடைகள்

1.அருட் பெரும் ஜோதி

XXXZ

2.சிதம்பரம் அருகே உள்ள வடலூரில் இவர் சத்திய ஞானசபையை அமைத்தார்.அதுதான் அவரது பணிகளின் தலைமையிடம். அங்குதான் அவர் அமைத்த கோவிலும் இருக்கிறது

XXXXX

3.இவர் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் புரட்டாசி 19 (5 அக்டோபர் 1823) இல் கருணீகர் குலத்தில் பிறந்தார் . தந்தை இராமையாபிள்ளை, தாய் சின்னம்மையார்.;  உடன்பிறந்தார் -சபாபதி, பரசுராமன், உண்ணாமுலை, சுந்தராம்பாள் ஆகிய நால்வரும் உடன்பிறந்தவர்கள்.

XXXX

4. “எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே” என்பதை குறிக்கும் வண்ணம், இவர் தோற்றுவித்த மார்க்கத்திற்கு “சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்கம்” என்று பெயரிட்டார்.

XXXX

5.இவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் திரட்டு, திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது. இது ஆறு திருமுறைகளாக பகுக்கப்பட்டு உள்ளது.

XXXX

6.வள்ளலார் – இலங்கையிலுள்ள ஆறுமுக நாவலர் ஆகிய இருவரிடையே மோதல் ஏற்பட்டது திரு அருட்பா என்ற பெயரில் நூலை வெளியிட்டதும்  அதிலுள்ள பாடல்களை திருமுறைகள் என்று பெயரிட்டதையும் , வள்ளலாரின் சீடர்கள் அதை தேவார , திருவாசகத்துக்கு சமமாக வைத்ததையும் சைவர்கள் விரும்பவில்லை . இதனால் நாவலர், வள்ளலார் இருவரின் ஆதரவாளர்கள் இடையே ஏச்சுப்பேச்ச்சுகள் எழுந்து கோர்ட் வரை சென்றனர் ; வழக்கு ஒருவிதமாக முடிந்தது.

XXXXX

7.இதை ஸ்பான்டேனியஸ் கம்பஷன் SPONTANEOUS COMBUSTION என்று சொல்லுவார்கள். இந்து மதத்தில் இப்படி சோதியில் கலந்தோர் பலர். வள்ளலாரும் ஒரு அறைக்குள் சென்று கதவைத் தாளிடச் சொல்லிவிட்டு ஜோதி வடிவில் மறைந்தார் . இது 1874 தைப்பூசத்தன்று (ஜனவரி 30) நடந்தது.

XXXXXX

8.சுமார் 150 ஆண்டுகளாக இங்கு அணையா அடுப்பு உளது; அதாவது எல்லோருக்கும் எப்போதும் உணவு படைக்கப்படும். இதை ராமலிங்க சுவாமிகளே 23-5-1857ல் ஏற்றி வைத்தார். இன்றுவரை அடுப்பில் சமையல் நடந்து கொண்டிருக்கிறது .

XXXXX

9.வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்

XXXXXXX

10.சிவன், முருகன், கணபதி ஆகிய மூவர் மீது பாடினார்

அவரது தெய்வமணி மாலையில் 31 பாடல்கள் உள்ளன. அவர் சென்னையில் வசித்த காலத்தில் கந்த கோட்டத்துக்குச் செல்லுவது வழக்கம் ;அங்குள்ள சுப்ரமண்ய சாமி மீது பாடிய பாடல்கள் மிகவும் பிரசித்தமானவை. அப்போது கந்த கோட்டம் காரணமாக தருமமிகு சென்னை என்று பாடினார்.

XXXX

—-SUBHAM—

TAGS- வடலூர் , வள்ளலார், ராமலிங்க சுவாமிகள், திரு அருட்பா, சன்மார்க்கம், சத்திய ஞான சபை, அருட்பெரும் சோதி, தைப்பூசம் , அணையா அடுப்பு

டீ,காப்பி பிரசாதம்: கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற …..– Part 16(Post No.12,363)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,363

Date uploaded in London – –  3 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 16 

75. க்ரோத க்ஷேத்ரா சங்கர நாராயணர் கோவில் Krodha Kshetra Shankara Narayana Temple

குந்தாப்பூரிலிருந்து 3 கி.மீ தூரத்தில் , இயற்கை வனப்புமிக்க மேற்குத் தொடர்ச்சி மலைக்கிடையே அமைந்தது க்ரோத க்ஷேத்ரா  என்று அழைக்கப்படும் சங்கர நாராயணர் கோவில் ஆகும் .

கரா சுரன், ரக்தாசுரன் என்ற இருவர் அட்டூழியம் செய்தபோது க்ரோத மஹரிஷி , சங்கரனையும் நாராயணனையும் வழிபட்டு இரு அரக்கர்களையும் அழித்தார் என்பது புராண செய்தி. அருகிலுள்ள மலைக்கு க்ரோத கிரி என்று பெயர். அதன் உச்சியில் சங்கர நாராயணர், கெளரி, லட்சுமி ஆகியோருள்ள கோவில் இருக்கிறது .முக்கிய கருவறையில்  வலது புறத்தில் சங்கரலிங்கமும் இடது புறத்தில் நாராயண லிங்கமும் காணப்படுகின்றன நாராயண லிங்கத்தின் மீது காமதேனுவின் காலடிச் சுவடுகளைக் காணலாம் . கோவிலுக்கு எதிரே அழகான கோடி தீர்த்தம் உளது.. லிங்கங்களைச் சுற்றி எப்போதும் நீர் இருக்கும்.

கோவிலில் அழகான ஹரிஹரர் விக்கிரகமும் உண்டு பரிக்ரமத்தில் வெள்ளி சங்கரநாராயண விக்கிரகத்தைத் தரிசிக்கலாம். போர்ச்சுகீசிசிய மணியும் அங்கே தொங்குகிறது . பல கல்வெட்டுகளும் உள . ஒரு கல்வெட்டு 1563 ஆம் ஆண் டு கல்வெட்டு என்பதால் குறைந்தது 500  ஆண்டுப் பழமையான கோவில்.

Xxxx

குந்தாப்பூரிலிருந்து 39 கிலோமீட்டர் தொலைவில் பைந்தூர் என்னும் இடத்தில் ஒரு சனீச்வர கோவில் இருக்கிறது

76.ஹொரநாடு அன்னபூர்ணேஸ்வரி கோவில் The Annapoorneshwari Temple , Horanadu

சிக்மகளூரிலிருந்து 100 கி.மீ  தொலைவில் காடுகளுக்கு இடையே அன்ன பூர்ணேஸ்வரி கோவில் அமைந்துள்ளது அகஸ்தியர் ஸ்தாபித்த விக்ரகம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. குறைந்தது 400 ஆண்டு வரலாறு உடைய கோவில். பத்ரா நதிக்கரையில் கோவில் இருக்கிறது .அக்ஷ்ய திருதியை முக்கிய விழாவாகக் கொண்டாடப்படுகிறது .அன்னபூர்ணேச்வரி சங்க சக்ரத்தை ஏந்தி நிற்கிறாள்.வேறு இரு கைகள்  அபய முத்திரை வரத முத்திரை காட்டும் வகையில்  உள்ளது.. அவற்றில் ஸ்ரீ சக்ரம், காயத்ரீ வரையப்பட்டுள்ளது . தங்க நகைகளால் அலங்கரிக்கப்பட்ட அன்ன பூரணியைத் தரிசி ப்போருக்கு  உணவுப் பஞ்சமே இராது என்பது பக்தர்களின் நம்பிக்கை .

கோவிலின் சிறப்பு என்னவென்றால் கூரையில் செதுக்கப்பட்ட கூர்ம, ஆதி சேஷ சிற்பங்கள் ஆகும் இங்கு பிராசதாமாக மூன்று வேளைகளிலும்  உணவுகாப்பிதே நீர் வழங்கப்படுகிறது . இந்த ஊரை ஸ்ரீக்ஷேத்ர ஹொரநாடு என்று சொல்லுவார்கள்.

Xxxxx

77.அம்ருதபுர அம்ருதேஸ்வரர் கோவில் The Amruteshvara temple

சிக்மகளூ ரிலிருந்து 67 கி.மீ.; ஷிமோகாவிலிருந்து 50 கி.மீ.அம்ருதபுரம் இருக்கிறது

இது தாரிகரே அருகில் இருக்கிறது. ஸ்படிக லிங்கத்தினால் ஆன சிவலிங்கம் இருக்கிறது

இங்குள்ள அம்ருதேஸ்வரர் கோவில்1196 C.E யில் கட்டப்பட்டுள்ளதால் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையுடையது . ஹொய்சாள மன்னன் வல்லாளனின் படைத்தளபதி கட்டியது

இதன் சிறப்பு ஆளுயர சரஸ்வதி சிலை, அமர்ந்த நிலையில் இருந்து  அருள் சுரப்பதாகும். இதனால் கல்வியில் குறையுள்ளவர்கள் முறையிட இவளிடம் வருகின்றனர் .

எல்லா ஹொய்சாள கோவில்களிலும் உள்ளது போல புராணக் காட்சிகள் கற்களில் செதுக்கப்பட்டுள்ளன. ஆனால் 70 ராமாயணக் காட்சிகள் தென்புறச் சுவரில் யுத்த காண்டத்திலிருந்து பால காண்டம் செல்லுவது போல தலை கீழ் வரிசையில் செதுக்கப்பட்டுள்ளன  வட புறச்ச சுவரில் கிருஷ்ணர் பற்றிய 25 காட்சிகளையும்   மஹாபாரதப் போர் பற்றிய 45 காட்சிகளையும் காணலாம் .கல்வெட்டுகள் நிறைந்த கோவில்.மத்திய கால கன்னடக் கவிஞ்சரான கவிச்சக்கரவர்த்தி ஜன்னாவின் கவிதைகள் அடங்கிய க ல் வெட்டு சிறப்புடையது

XXXXX

78.இந்து முஸ்லீம் வழிபடும் பாபா- புதன் தத்த கிரி Baba Budangiri / Chandradrona Hill ( Dargah and Dattapeeta)

பாபா புதன் கிரி, தத்தாத்ரேயரை வழிபடும் ஒரு தத்த பீடமாகக் கருதப்படுகிறது. முஸ்லீம்கள் இதை சூபி பிரிவு மகானின் நினைவிடமாக வழிபடுகின்றனர். பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாபா புதன் முதல் முதலில் காப்பி பயிரை வெளிநாட்டிலிருந்து கொண்டுவந்தார் என்று சொல்லப்படுகிறது . இது 1895 மீட்டர் உயர பாபா புதன் கிரி சிகரம், 1926 மீட்டர் உயர பாபா முல்லைன கிரி சிகரம்,உடைய பிறைச்சந்திர வடிவ குன்றுத்தொடர். இதனால் சந்திர த்ரோண பர்வதம் என்றும் அழைக்கப்படுகிறது. அருகிலேயே இதிஹாஸக் கதைகளுடன் இணைத்துப் பேசப்படும் 3 நீர்வீழ்ச்சிகளும் இருக்கின்றன. ஆகையால் இந்துக்களும் முஸ்லிம்களும் அதிகம் வரும் இடம் இது.. தத்தாத்ரேயர் என்பவர் பிரம்மா, விஷ்ணு, சிவனின் ஒன்றிணைந்த  அவதாரமாகக் கருதப்படுகிறது

—to be continued…………………………..

Tags- கர்நாடகம், முக்கிய 108 கோவில்,அன்னபூரணி