Cosmology in Appar, Nammalvar, Puram Poems (Post No.15,196)

Written by London Swaminathan

Post No. 15,196

Date uploaded in London –  18 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

WHAT IS COSMOLOGY?

It is a branch of astronomy that deals with the structure and evolution of the universe as an ordered whole.

WHAT IS BIG BANG?

The hypothetical explosive event that marked the origin of the universe as we know it. It took place about 10-20 billion years ago. The big bang explosion threw the compact material outwards, producing the expanding universe. The cause of the big bang is unknown.

All of us know that it happened in the sky with a big noise. Then there was gusty wind and fire everywhere. Then came the water. From water, life evolved.

The above sequence is right if we take our earth as the model.

Since Hindus are the only people who consider TIME is cyclical not linear, our poets sing about Big Shrink as well.

Appar (600 CE) in a decad/Pathikam on Shiva at Pullirukku Velur, also known as Vaitheeswaran Koil near Mayuram says,

His form in fulgurant; He is ONE in the ether,

TWO fold in wind that blows a main , THREE fold

in the form of ruddy fire , FOUR fold in the water that flows

downward and FIVE fold in the expanse of earth;

he is of the eternal form……………………….

Hindus gave certain qualities or virtues to the

Panchabhtas /five elements.

They are called Tanmaatraas . the five tanmatras are sound, touch, form, taste and smell. In Sanskrit

Sabda- ether

Sparsa- air

Rupa- fire

Rasa – water

Gantham – earth.

1.Ether is pervaded by sound.

1,2.Air by sound and touch.

123.Fire by sound, touch and form.

1234.Water by sound, touch, form and taste.

12345.Earth by the above four and smell.

We see it in Dasavatara as theory of evolution: Fish, amphibians, land animals, half man and half animal, full man with a weapon, Exemplary man (Rama), man with tricks (Krishna).

Earth was Firey ball with gusty winds in the beginning and then rain and water came. When water receded, we saw earth and land animals evolved on it and at the peak of Land animals stood Man.

Purananuru verse 2 and 51 mentioned it. Puram poet Mudi Nagarayar praised the king with all the qualities of Five Elements.

Nammaalvaar also sang about this.

****

What is the science in it?

First there was a sky with sound;

Then came wind and fire;

That created rain and water;

From water came Life forms.

Hindus told it to the layman in a story format:

Lord Vishnu was lying in the vast water in half sleep/sleeping but conscious.

Then came Brahma/creator;

From him came all the living beings.

The water that Vishnu was lying is the Potential energy/Shiva

All the activities mentioned above was the Kinetic energy/Goddess Shakti.

Hindus beautifully named Goddess as Power, in Sanskrit ,Shakti, used in all the Indian languages.

***

Great Saivite poet and saint Manikkavasagar who lived before Appar said,

Tiruvasagam

பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி Earth with Five qualities

நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி Water with Four qualities

தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி Fire with Three qualities

வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி Air/Wind with Two qualities

வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி Space with one Quality

He used the Five Elements in the reverse order. Manikka vasagar used the same numbers to praise Lord Shiva

***

Appar (600 CE) Tevaram in Tamil:

Tevaram

மின்னுருவை விண்ணகத்தில் 1 ஒன்றாய் மிக்கு  

வீசுங்கால் தன்னகத்தில் 2 இரண்டாய்ச் செந்தீத் 

தன்னுருவின் 3 மூன்றாய்த்தாழ் புனலின் 4 நான்காய்த்  

தரணிதலத் 5 தஞ்சாகி யெஞ்சாத் தஞ்ச

 Numbers 1, 2, 3, 4, 5 above.

மன்னுருவை வான்பவளக் கொழுந்தை முத்தை

வளரொளியை வயிரத்தை மாசொன் றில்லாப்

Coral, Peral, Diamond, 24 carat Gold   (gems and gold)

பொன்னுருவைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்   

போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே

***.

 2000 year old Purananuru Poem

மண் திணிந்த Earth நிலனும்,

நிலம் ஏந்திய Sound /Sky விசும்பும்,

விசும்பு தைவரு Wind, வளியும்

வளித் தலைஇய Fire தீயும்,

தீ முரணிய நீரும், , Water, என்றாங்கு

ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்

Here the poet Muranjiyur Mudi Naagaraayar changed the order just to fit the verse in Anthaathi genre.

Anthaathi means last word of each line must be the first word of next line. The five qualities are attributed to the King, who Hindus worshipped or venerated as god.

***

Three Interpretations

Divya Prapandham

Nammaalvaar, a Vaishnavite saint, who lived later, used the five elements in the same order and attributed them to Lord Vishnu:

1 ஏக மூர்த்தி 2 இரு மூர்த்தி 3 மூன்று மூர்த்தி 4 பல மூர்த்தி-
ஆகி, 5 ஐந்து பூதம் ஆய் இரண்டு சுடர் ஆய் அருவு ஆகி,
நாகம் ஏறி நடுக் கடலுள் துயின்ற நாராயணனே உன்-
ஆகம் முற்றும் அகத்து அடக்கி ஆவி அல்லல் மாய்த்ததே.

English translation of verse 4.3.3:

You assumed a single form, then two, three and many,
The form you took of the senses five, the Sun and the Moon;
Formless, you did everywhere, as Internal Controller, pervade,
Repose you did, Oh, Nārāyaṇa, in mid-ocean on serpent-bed
And now your body and all it needs you have compressed
Right in my mind and thus feel fully relaxed.

Notes; Another interpretation:

(ii) Single Form: This refers to the state of affairs prior to creation, when the Lord alone subsisted, containing within Himself, in a subtle state, all sentient and non-sentient beings; there was no scope then for differentiation, by name and form.

(iii) Two forms: Keen on creating the Sportive Universe, the Lord assumes the twin forms of ‘Prakriti’ and ‘Mahān’

(iv) Three Forms: The triple ‘ahaṅkāras’ of Sattva, Rājas and Tāmas;

(v) Many Forms: The wonderful variety (i.e.) variegated forms of creation arising through inequalities among the three ‘Guṇas’, referred to in (4) above, the five sense-organs, the five elements etc.

***

Another interpretation

3147. O Narayaṇa!
1 You are the only god.
1,2 You are the two gods—the sun and the moon.
1,2,3You are the three gods—Shiva, Vishnu and Brahma
(all)and you are all the gods.

 5 You are the five elements—water, fire, wind, earth and sky.
You are formless.
You climbed on the heads of Kalingan and danced.
You sleep on the middle of the ocean.
I kept you in my heart and all my troubles went away.

My Comments

The above two re wrong interpretations because Appar and Manikkavasagar who lived before Nammalvar have given us the correct interpretation.

Moreover, we can clearly see the influence of Maanikka vaasagar in Nammaalvaar poems. He clearly used MAANIKKA and VAASAGA in innumerable stanzas.

–subham—

Tags- Big Bang, Five elements, Five qualities, Appar, Nammalvar, Manikkavasagar, Tevaram, Tiruvasagam, Divya Prapandham , Purananuru

திருப்புகழில் லலிதா சஹஸ்ரநாம தேவியர் பெயர்கள்! (Post.15,195)

Written by London Swaminathan

Post No. 15,195

Date uploaded in London –  18 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

அருணகிரி நாதர் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் நமக்கு 1300-க்கும் அதிகமான திருப்புகழ் பாடல்களை விட்டுச் சென்றார். அத்தனையும் சந்தக் கவிகள்! அவர் பாடியது முருகன் மேல் என்பதில் ஐயமில்ல; எந்தப்பாடலிலும் முருகனை விட்டுக் கொடுக்காவில்லை ஆயினும் இந்துக்கள் வணங்கும் அத்தனை தெய்வங்களையும் இடையிடையே போற்றித் துதிபாடியுள்ளார்.

அதில் சில பாடல்களில் முருகனை விட வேறு சில தெய்வங்கள் தூக்கலாகவே உள்ளன. குறிப்பாக அவர் தேவியர்களைப் புகழந்து பாடும்போது சிவ பெருமானின்  மனைவியான உமையை, பார்வதியைப் பல நாமமங்களால் வாழ்த்துகிறார்; ஒருவர் லலிதா சஹஸ்ரநாமத்தைப் படித்துவிட்டு அந்த தேவியர்கள் பெயர்களைப்  பார்த்தால் இவர் தினமும் லலிதா ஸஹஸ்ரநாம பாராயணம் செய்தாரோ என்று எண்ணத் தோன்றும் .

இதோ சில ஒப்பீடுகள்:

இதோ தேவியர் பெயர்களை எல்லாம் அடுக்கி ஒரு பாடல்:

https://www.kaumaram.com/ தமிழிலும் ஆங்கிலத்திலும்

    பொருள் எழுதியது    ஸ்ரீ கோபால சுந்தரம்

அமுத மூறுசொ லாகிய தோகையர்

     பொருளு ளாரையெ னாணையு னாணையெ

          னருகு வீடிது தானதில் வாருமெ …… னுரைகூறும்

அசடு மாதர்கு வாதுசொல் கேடிகள்

     தெருவின் மீதுகு லாவியு லாவிகள்

          அவர்கள் மாயைப டாமல்கெ டாமல்நி …… னருள்தாராய்

குமரி காளி வராகி மகேசுரி

கவுரி மோடி சுராரி நிராபரி

கொடிய சூலி சுடாரணி யாமளி  மகமாயி

குறளுரூப முராரி சகோதரி

உலகதாரி உதாரி பராபரி

குரு பராரி விகாரி நமோகரி  அபிராமி

சமர நீலி புராரி தனாயகி

மலை குமாரி கபாலின னாரணி

சலில மாரி  சிவாய மனோகரி    பரையோகி

சவுரி வீரி முநீர் விட போஜனி

திகிரி மேவுகை யாளி செயாளொரு

சகல வேதமுமாயினை தாய் உமை அருள் பாலா.

இந்தப்பாடலில் குறைந்தது 30  தேவியர் பெயர்கள் வந்துவிட்டன!

……… சொல் விளக்கம் ………

Annapoorani, Kasi

Kanthimathi

குமரி காளி வராகி மகேசுரி … 1குமரி, 2காளி, 3வராகி, 4மகேஸ்வரி,

கவுரி மோடி சுராரி நிராபரி … 5கெளரி, 6மோடி, முதலிய பெயர்களை

உடையவள், தேவர்களுக்குக் கண் போன்றவள், பொய்யிலி,

கொடிய 7சூலி 8சுடாரணி 9யாமளி 10மகமாயி … உக்ரமான சூலத்தை

ஏந்தியவள், ஒளி மயத்தவள், சியாமளப் பச்சை நிறம் உடையவள், மகமாயி,

குறளு ரூப முராரி சகோதரி … வாமன உருவம் கொண்ட

11திருமாலின் சகோதரி,

உலக தாரி 12உதாரி 13பராபரி … உலகத்தைத் தரித்துப் புரப்பவள்,

தயாள குணம் உடையவள், முதன்மை பூண்டவள்,

குருபராரி 14விகாரி 15நமோகரி 16அபிராமி … குருவாகிய சிவனுக்குக்

கண் போன்றவள், வேறுபாடுகளைப் பூண்டவள், வணங்கப்படுபவள், அழகுள்ளவள்,

சமர 17நீலி பு18ராரி தன் நாயகி … போர் வல்ல துர்க்கை, திரிபுரம்

எரித்த சிவபெருமானின் பத்தினி,

மலை 19குமாரி 20கபாலி நல் 21நாரணி … இமயவன் புதல்வி, கபாலம் ஏந்தியவள், நல்ல குணம் வாய்ந்த நாராயணி,

22சலில மாரி சிவாய 23மனோகரி பரை 24யோகி … நீர் பொழியும்

மேகம் போன்றவள், சிவ சம்பந்தப்பட்டு விரும்பத்தக்கவள்,

பரா சக்தி, யோகி,

சவுரி 25வீரி முநீர் 26விட போஜனி … வலிமை உள்ளவள், வீரம்

உள்ளவள், பாற்கடலில் எழுந்த ஆலஹால விஷத்தை உண்டவள்,

27திகிரி மேவு கையாளி 28செயாள் … சக்கரம் ஏந்திய திருக்கரத்தை

உடையவள், இலக்குமி,

ஒரு சகல 29வேதமும் ஆயின தாய் 30உமை அருள் பாலா …

ஒப்பற்ற எல்லா வேதமுமாய் நிறைந்த தாய் உமா தேவி (ஆகிய பார்வதி) ஈன்றருளிய பாலனே,

……………………………………………

லலிதா சஹஸ்ரநாமத்தில்  வரும் நாமங்களுடன் ஒப்பிடுவோம்

நாமத்தின் எண்ணை அடைப்புக் குறிக்குள் கொடுத்துள்ளேன் 

உதார கீர்த்தி 848

உமா 633

ஓஜோவதீ /ஒளிமயமானவள் 767 

கெளரி 635

சிவப்ரியா 409 

திரிபுரா 626

நாராயணீ 298

பத்மநாப சகோதரி 280

பராபரா 790

பார்வதீ 246

போகினி 293

மனோன்மணி 207

மஹாமாயா 215

மஹாரதி/ அழகானவள் 218

மஹாலக்ஷ்மீ 210

யோகினி 653

வேத வேத்யா/ வேத மாதா 335

இன்னும் நிறைய இடங்களில் வர்ணங்களைக் குறிக்கும் யாமளா நீலி    ஆகியன வருகின்றன  . வாராஹி என்பவள் அம்பாளின் சக்தி பெற்ற BODYGUARD பாடிகார்ட் போன்றவள்

***

Durga, Kali, 

வேறு பல திருப்புகழ்களில் மேலும் அம்பாளின் பெயர்களைக் காணலாம் . இதோ சில எடுத்துக் காட்டுகள் :

அம்பை வாணி பஞ்ச பாணி தந்த முருகோனே … அம்பிகை,

கலைமகளை ஒரு கூறாகவும், ஐந்து மலர்ப் பாணங்களை

உடையவளுமான, பார்வதி தேவியும் தந்தளித்த பால முருகனே,

…………………………………………………

வீர மங்கை வாரி மங்கை பாரின் மங்கை மேவுகின்ற … வீர

லக்ஷ்மி, பாற்கடலில் தோன்றிய லக்ஷ்மி, பூமாதேவி இவர்கள் யாவரும்மங்களமாக வீற்றிருக்கிற

மேரு மங்கை யாள வந்த பெருமாளே. … உத்தர மேரூரில்*5

ஆட்சிபுரியும் பெருமாளே.

***

செனனி சங்கரி ஆரணி நாரணி … உலகங்களைப் பிறப்பித்தவள்,

சங்கரி, வேத முதல்வி, நாராயணி,

விமலி யெண்குண பூரணி காரணி … குற்றமற்றவள்,

எண்குணங்களும்*2 நிறைந்தவள், காரணமானவள்,

சிவைப ரம்பரை யாகிய பார்வதி அருள்பாலா … சிவை, பராபரை

ஆகிய பார்வதி அருளிய குழந்தாய்,

***

வேத வித்தகீ வீமா … வேத ஞானியே, பயங்கரியே,

விராகிணி … பற்று அற்றவளே,

வீறுமிக்க மா வீணா கரே … சிறப்புமிக்க அழகிய (விபஞ்சி என்ற)

வீணையை கையில் ஏந்தியவளே,

மகமேரு வுற்றுவாழ் சீரே … மகாமேரு மலையில் தங்கி வாழும்

சிறப்பை உடையவளே,

சிவாதரெ … சிவனுடைய உடலில் பங்கு கொண்டவளே,

அங்கராகீ … உடம்பெல்லாம் பரிமள கந்தங்களைப் பூசியவளே,

ஆதி சத்தி சாமாதேவி பார்வதி … ஆதிசக்தியே, சாமவேதம்

போற்றும் தேவியே, பார்வதியே,

நீலி … நீல நிறத்தவளே,

துத்தியார் நீள் நாக பூஷணி … புள்ளிகள் நிறைந்த நீண்ட

நாகங்களை ஆபரணமாக அணிந்தவளே,

ஆயி நித்தியே கோடீர மாதவி … அன்னையே, என்றும்

இருப்பவளே, சடையுள்ள துர்கா தேவி,

என்றுதாழும் … என்றெல்லாம் துதி செய்து வணங்குகின்ற

ஆர்யை பெற்ற சீராளா நமோநம … மஹாதேவி பெற்ற சீராளனே,

போற்றி, போற்றி

****

ஆதி அநாதி இரண்டு பூரணி காரணி விந்து வெளியான

நாத பராபரம் என்ற யோகி உ(ல்)லாசம் அறிந்து … முதலும்,

முதலற்றதுமாய் உள்ள இரண்டுமாய் நிற்கின்ற முழு முதல்வி,

சகலத்துக்கும் ஆதி காரணமாக இருப்பவளாகிய பரா சக்தியும், விந்து

வெளியான நாதம் (விந்து சம்பந்தமான நாத ஒலி கூடி முழங்கும்

இடத்தில்) பரம் பொருளாகக் காட்சி தர, யோகிகள் காணும் அந்த

பரமானந்த ஒளியை அறிந்து அனுபவித்து,

………………………………………………

மாது சர்வேஸ்வரி வஞ்சி காளி பிடாரி விபஞ்சி வாணி வராகி

மடந்தை அபிராமி … மாது, எல்லாவற்றுக்கும் ஈசுவரி, வஞ்சிக்

கொடி போன்றவள், காளி, பிடாரி, விபஞ்சி என்னும் வீணையை

ஏந்திய சரசுவதி, சக்தி, பேரழகியான மடந்தை, அபிராமி

வாழ் சிவகாம சவுந்தரி ஆலம் மெ(மே) லாம் முக பஞ்ச

வாலை புராரி இடந்தகு உமையாயி … வாழ்வு பொலியும் சிவகாம

செளந்தரி, பிரளய கால வெள்ளத்தின் மேலாகிய ஐந்து முகம் கொண்ட பாலாம்பிகை, திரிபுரத்தை எரித்த சிவனது இடது பாகத்துக்குத் தக்க பொருந்திய உமா தேவி ஆகிய எமது தாய்,

வேத புராணம் விளம்பி நீல முராரியர் தங்கை மேலொடு கீழ்

உலகங்கள் தரு(ம்) பேதை … வேதங்களையும், புராணங்களையும்

சொன்னவள், முரன் என்னும் அசுரனுக்குப் பகைவனாகிய (முராரி

என்னும்) நீலநிறத் திருமாலின் தங்கை, பதினான்கு உலகங்களையும்

ஈன்று அளித்த மாது,

வேடம் எ(ல்)லாம் உக சங்க பாடலொடு ஆடல் பயின்ற

வேணியர் நாயகி தந்த பெருமாளே. … (ஆடலுக்கு உரிய)

வேடங்களெல்லாம் நிலை கலங்க, (பொற்)சபையில் பாடல்களுடனும்

ஆடல்களும் பயின்ற சடையை உடைய சிவ பெருமானின் தேவி ஆகிய பார்வதி பெற்ற பெருமாளே.

இந்தப் பெயர்கள் எல்லாம் சஹஸ்ரநாமத்தில் உள்ளன.

லலிதா சஹஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்வோருக்கும் உரைகளைப்  படிப்போருக்கும் மேலும்  பல நாமங்கள் கிடைக்கும். அதே போல திருப்புகழில் மேலும் பல பாடல்களைப்  படிப்போருக்கும் மேலும் பல நாமங்கள் கிடைக்கும். 

—subham—-

Tags திருப்புகழ் லலிதா சஹஸ்ரநாமம், தேவியர் பெயர்கள்,

தெரிந்த சந்திரன்! அதிகம் தெரியாத விவரங்கள்!! (Post.15,194)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,194

Date uploaded in London –   18 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

3-9-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை! 

தெரிந்த சந்திரன்! அதிகம் தெரியாத விவரங்கள்!! 

ச. நாகராஜன் 

தினமும் பூமியிலிருந்து பார்த்து மகிழும் அற்புத கிரகம் சந்திரன். 

அம்புலிமாமா வா வா என்று குழந்தைகள் மகிழ்வது ஒரு புறம் இருக்க

வாராயோ வெண்ணிலாவே என்று காதலனும் காதலியும் பாடி மகிழும் ஆனந்தத் தேன் நிலவைத் தருவதும் கூட இந்த சந்திரன் தான்! 

பூமியிலிருந்து சராசரியாக 2,38,360 மைல்கள் (3,82,500 கிலோமீட்டர்) தூரத்தில் உள்ளது சந்திரன். இது ஏறத்தாழ 30 மடங்கு பூமியின் குறுக்களவிற்குச் சமமான தூரமாகும்.

 குறுக்களவை எடுத்துக் கொண்டோமானால் சந்திரன் பூமிக்கு நாலில் ஒரு பங்கு அளவு தான். சந்திரனின் மேல்பரப்பளவை பூமியுடன் ஒப்பிட்டுப் பார்த்தோமென்றால் அதில் பதினாறில் ஒரு பங்கு பரப்பளவைத் தான் கொண்டுள்ளது. பூமியின் பொருள்திணிவை எடுத்துக் கொண்டோமானால் அது 1.2% அளவு பூமியின் பொருள்திணிவைக் கொண்டிருக்கிறது. 

சந்திரனின் மிக பிரமாதமான அம்சம் அது பூமிக்கு எப்போதும் இருக்கும் சிறந்த தோழன் என்பது தான். பூமியிலிருந்து சுலபமாகப் பார்த்து ஆனந்திக்கக் கூடிய கிரகமும் அது தான். சந்திரனின் வளர்பிறையும் தேய்பிறையும் மனித குலத்திற்கு பல்லாயிரம் ஆண்டுகளாகப் பல்வேறு விதத்தில் வழிகாட்டி வந்திருக்கிறது. எடுத்துக்காட்டாகச் சொல்வதென்றால் நாம் கொண்டிருக்கும் காலண்டர் மாதம் சுமாராக சந்திரன் ஒரு பௌர்ணமியிலிருந்து அடுத்த பௌர்ணமிக்கு வரும் காலம் தான். 

ஆனால் அதன் தோற்றம் இருக்கிறதே, அது மர்மமானது. எப்போதுமே அது நமக்கு அதன் ஒரு முகத்தையே காண்பிக்கிறது. ஆனால் நிஜத்தில் அது மாறிக் கொண்டே தான் இருக்கிறது. அதன் உண்மையான அளவில் எவ்வளவை நாம் பார்க்கிறோம் என்பது அது சூரியனுக்கும் பூமிக்கும் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பதைப் பொறுத்துத் தான்!

 பூமிக்கு அருகில் ஒவ்வொரு மாதமும் சந்திரன் மிக அருகில் இருக்கும் தூரம்Perigee எனப்படுகிறது. அதே போல பூமிக்கு ஒவ்வொரு மாதமும் சந்திரன் மிகவும் தூரத்தில் உள்ள தூரம்Apogee எனப்படுகிறது. எடுத்துக் காட்டாகச் சொல்வதென்றால் 2025ல் ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி மிகவும் சமீபத்தில் இருந்த சந்திரன் செப்டம்பர் மாதம் 10ம் தேதிPerigee தூரத்தில் இருக்கும். இதே போல 2025 ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி பூமிக்கு வெகு தூரத்தில் இருந்த சந்திரன் செப்டம்பர் மாதம் 26ம் தேதிApogee தூரத்தில் இருக்கும்.

பூமி மீது சந்திரன் மோதும் வாய்ப்பு உண்டா?

இல்லை, இல்லவே இல்லை. ஏன்? வருடாவருடம் பூமியிலிருந்து சந்திரன் ஒன்றரை அங்குலம் தள்ளியே போகிறது.

ஆனால் இது பூமி மீது மோதினால் ஏற்படும் விளைவு அதி பயங்கரமாக இருக்கும். டைனோஸர் இனத்தையே மொத்தமாக அழித்த சிறுகோளின் குறுக்களவு 12 கிலோமீட்டர் தான். ஆனால் 3500 கிலோமீட்டர் குறுக்களவு கொண்ட சந்திரன், பூமி மீது மோதினால்……? நினைக்கவே பயங்கரமாக இருக்கிறது அல்லவா? 

சூரிய மண்டலத்தின் வயது 460 கோடி வருடங்களாகும்.  இது உருவான ஒன்பதரை கோடி ஆண்டுகளுக்குப் பின்னர் சந்திரன் உருவாகி இருக்கக் கூடும் என்று சமீபத்திய ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

சந்திரன் பற்றிய ஆய்வில் நாம் முன்னேறிக் கொண்டே தான் இருக்கிறோம்.

1959ம் ஆண்டு சோவியத் யூனியனின் முதல் விண்கலம் சந்திரனில் மோதி சந்திரனைப் போட்டோ எடுத்து அனுப்பியது.

1969ல் அபல்லோ 11 சந்திரனில் இறங்கி அமெரிக்காவிற்குப் பெரும் புகழைத் தந்தது. விண்வெளிவீரர்கள் சந்திரனில் இறங்கி பரபரப்பை ஏற்படுத்தினர். மனிதன் சென்ற முதல் கிரகம் சந்திரன் என்று ஆனது.

சந்திரனிலிருந்து இதுவரை 842 பவுண்ட் பாறை மற்றும் மணலை மனிதன் பூமிக்குக் கொண்டு வந்திருக்கிறான். இவற்றை ஆராய்ந்து பல புதிய உண்மைகள் தெரிய வந்துள்ளன.

இனி அடுத்து என்ன? அங்கே ஒரு காலனி அமைக்க வேண்டியது தான்/

எப்போது என்ற கேள்விக்குக் காலம் தான் பதில் சொல்லும்!

** 

AMERICAN MUSLIMS AND CHRISTIANS JOIN TO ATTACK HINDUISM.

As Hinduphobia peaks in the US, Christian and Islamist groups push new campaign against Hindus: How NY State Council of Churches and IAMC have joined forces to target Hindus

OPINDIA POST

A Christian nationalist church group and the Islamist outfit IAMC have teamed up to host anti-Hindu seminars in the US, accusing Hindus of “weaponizing” their faith even as attacks on the community rise. Hindu groups have slammed the events as an organised effort to vilify Hindu Americans and mainstream Hinduphobia. This collaboration comes amid IAMC’s long record of anti-Hindu propaganda in the US.

Amidst surging Hinduphobia in the United States, a Christian nationalist outfit and the Islamist group, the Indian American Muslim Council (IAMC), have joined forces to further vilify the Indian American Hindus and their faith. The New York State Council of Churches (NYCOC), through its Religious Nationalisms Project (TRNP), has announced a series of interfaith seminars from 20th to 23rd November, in North Carolina’s Bay Area.

The events titled “The Weaponization of Hinduism in Northern Carolina and India and the Relationships to Global Religious Nationalisms” are being co-organised by the Islamist group IAMC. The additional sponsorship for these anti-Hindu events comes from the White Christian Nationalisms Task Force of the California-Nevada Conference of the United Methodist Church.

As per the promotional material of the scheduled events, the seminars will be held at several locations, including the United Methodist churches in Roseville, Alameda, and Santa Rosa; First Church Berkeley (United Church of Christ). One of the seminars will also be held at a Sikh Gurudwara Sahib in San Jose.

This series of seminars will be on the theme of Religious Nationalisms, with “a special focus on Hindutva as a central case study.” The events will have three presenters: The Reverend Peter Cook, The Reverend Neal Christie, and The Right Reverend Joshua Lickter.

American Hindu rights groups call out Christian-Muslim collaboration to peddle Hinduphobia

The collaboration of a church-linked Christian outfit and a rabid anti-Hindu Islamist IAMC has sparked outrage among American Hindus.

The Hindu American Foundation (HAF) criticised the anti-Hindu tour and highlighted that it comes at a time when hatred against Hindus is increasing in the US. The HAF also questioned the city authorities why such an event is being allowed in California and why public funding is involved in such an anti-Hindu propaganda event.

“A New York based Christian church group joining the Indian American Muslim Council on a “tour” in spewing provocative lies against Hindus when anti-Hindu hate is at its zenith is absolutely unacceptable. Why does your office fund this @GovKathyHochul? Is this ok in California @CAgovernor?” the HAF wrote on X.

Suhag Shukla, the Executive Director of the HAF, said, “The New York State Council of Churches is joining a Muslim group to tour California—not to promote solidarity & peace—but to target peaceful Hindu Californians. This isn’t interfaith solidarity, this is an ambush. @GovKathyHochul, your NY Office of Faith-Based and Community Initiatives is funding NYCOC when anti-Hindu hate is peaking. How is this ok?”

IAMC and its anti-Hindu/anti-India activities and past Hinduphobic collaboration with the New York State Council of Churches

The Indian American Muslim Council (IAMC) is a Washington-based Islamist outfit which has been involved in anti-India activities and pushing an anti-Hindu agenda for many years. In 2021, IAMC, along with the Council on American-Islamic Relations (CAIR), campaigned to designate India as a “Country of Particular Concern”.

During the India-Pakistan conflict in May this year, when the Indian Armed Forces eliminated Islamic terrorists and their infrastructure deep inside Pakistan, the IAMC and CAIR condemned India’s Operation Sindoor.

The Indian American Muslim Council is reported to have links with the banned Islamic terror outfit, Students’ Islamic Movement of India (SIMI). Besides, the Indian American Muslim Council has ties with Lashkar-e-Taiba (LeT) and Jamaat-e-Islami (JeI) through its founder, Shaik Ubaid. The IAMC is a Jamat-e-Islami-backed lobbyist organisation claiming to be a rights advocacy group. The IAMC has also been involved in promoting antisemitism.

The IAMC has also formed the Hindus for Human Rights (HfHR) group, which is an open anti-Hindu and anti-India organisation based in the US.

Not to forget, in 2021, ‘Hindus for Human Rights’ also endorsed the anti-Hindu event ‘Dismantling Global Hindutva’ conference. It also came up with a “special toolkit” to propagate against Indian Prime Minister Narendra Modi during his State visit to the US in June 2023.

In June 2023, Congress scion Rahul Gandhi was seen sitting alongside Sunita Vishwanath during an event hosted by the Hudson Institute. In October 2023, the X account of HfHR was withheld in India in response to a legal demand.

In the past, the IAMC had reportedly collaborated with and even paid money to various groups in the USA to get India blacklisted by the USCIRF (United States Commission on International Religious Freedom). IAMC had been caught spreading fake news and misinformation to further the Islamist cause in India. It had also been slapped with the UAPA in 2021. The IAMC often publishes dubious reports and propaganda materials slandering American Hindus and Hindus in India, under the pretext of countering ‘Hindu nationalism’.

From seminars to surveys, reports to speeches, the IAMC has long been vilifying the American Hindus and their faith. In September 2024,  IAMC conducted a ‘survey’ [pdf] with the ulterior motive to brand the religious minority group as ‘racist’, ‘intolerant’ and ‘Islamophobic.’ OpIndia reported how the IAMC survey passed off vague and subjective opinions from its respondents as absolute truth.

Unsurprisingly, the upcoming ‘Weaponization of Hinduism’ seminars are not the first anti-Hindu collaboration of the NYCOC and the IAMC. In August 2024, the Federation of Indian Associations NY-NJ-CT-NE decided to include a Ram Janmabhoomi Temple float in the India Day Parade to mark the 78th Independence Day of India. This, however, did not go well with the IAMC and the New York State Council of Churches, who, along with other Islamists, pro-Khalistan and other anti-Hindu groups, wrote a letter to the New York Governor Kathy Hochul and then Mayor Eric Adams, peddling lies to oppose the inclusion of the Ram Mandir float in the parade.

These organisations have claimed that VHPA, an offshoot of Vishwa Hindu Parishad (VHP) “has been designated as a militant religious organisation by the Central Intelligence Agency’s World Factbook”. However, OpIndia reported back then that while it is true that VHP and Bajrang Dal were designated as “militant religious organisations” on 4th June 2018, the names were effectively removed from the list by 25th June 2018. It was a mistake to call these two organisations “militant”, and the CIA itself had rectified it in less than a month.

In June 2025, the NYSCOC and TRNP joined the IAMC in issuing a statement slandering an event hosting several Hindu activists in Dallas. These anti-Hindu groups linked Hindutva with violence and religious hatred. They also hurled sweeping allegations about religious freedom and tolerance in India, insinuating that somehow Christians and Muslims are under threat in the Hindu-majority country.

Amidst rising racism against Hindus and Indians in America, anti-Hindu elements attempting to ride the wave and further their nefarious designs

From the 1907 anti-Indian mob violence in Washington, the 1910 Detroit Times “Hindoos (Hindus) Continue to Flock to the US” article referring to Hindus as ‘Oriental scum’, the discriminatory Johnson-Reed Act of 1924, the Dot Busters group in 1980s which targeted Hindus Americans based on their religious and racial identity and assaulted them, to the individual cases of religiously-motivated hate crimes against Hindus post 2001, attempts at revisingCalifornia’s K-12 history-social science curriculum to include stereotypical representation of Hindus and Hinduism in textbooks, Hindus in the US, have faced hatred, discrimination and violence.

Earlier, these Hinduphobic attitudes found manifestation in anti-Asian racism and labelling of Hindus as ‘caste-ridden savages’ and ‘heathens’, and attacks. It manifests today in temple desecrations, school bullying, media propaganda and online hatred. A 2022 Network Contagion Research Institute report documented a 1,000% increase in anti-Hindu slurs online, blending white supremacist “replacement” fears with Islamist narratives accusing Hindus of “genocide” in India.

OP INDIA HAS MORE DETAILS.

–SUBHAM—

Tags- Hindu phobia, America

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL இந்துமத கலைச்சொல் அகராதி — Part 17 (Post No.15,193)

Written by London Swaminathan

Post No. 15,193

Date uploaded in London –  17 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

சங்கு சக்கரம்

விஷ்ணுவின் கைகளில் சங்கும் சக்கரமும் இருக்கும்.. சக்கரபாணி

சக்கரபாணி– கையில் சக்ரம் ஏந்தியவர்.

கிருஷ்ணன் கையில் உள்ள சக்ராயுதத்திற்கு சுதர்சன சக்கரம் என்றும் பெயர். ஆஸ்திரேலியாவிலுள்ள பழங்குடியினர் பயன்படுத்தும் பூமராங் ஆயுதம் போல  எதிரியை வீழ்த்திவிட்டு திரும்பி அவர் கைக்கே  வந்துவிடும்.

கஜேந்திர மோட்சம்  கதையில் முதலையைத் துண்டித்ததும்  , மகாபாரத ராஜசூய யாகத்தில் சிசுபாலனின் தலையைத் துண்டித்ததும் இந்த சக்கர ஆயுதம் தான் ; ஜெயத்ரதனை  வீழ்த்துவதற்காக இந்தச்  சக்கரத்தைப்  பயன்படுத்தி கிருஷ்ணர்,  மாலை நேரத்தை உண்டாக்கினார் ;.அப்போது போர் முடிந்ததாக எண்ணிக்கொண்டு வெளியே வந்த ஜெயத்ரதனை அர்ஜுனன் வீழ்த்தினான் . இது ஒரு சூரிய கிரகணம் ஆக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

CHAKRA OR CAKRA

KRISHNA holds chanka/ conch and chakra/ the wheel. Krishna’s chakra does its work as the boomerang of Australian aborigenes. It comes back to Him after hitting the target. Krishna’s chakra is called Sudarsana chakra. he used it to kill the crocodile in the elephant Gajendra Moksha anecdote, Sisupala in the Rajasuya Yajna of Yudhisthira and Jayadratha in the Mahabharata war. In the battle he hid the sun with his wheel and his opponent Jayadratha thought the sun has set and so the battle for the day is over. But when he reoved the wheel the sun shone and Arjuna killed Jayadratha. Some scholars think that it was a total eclipse and Krishna used it to his advantage.

In the Vaishnavite temples the wheel is installed in a separate shrine and worshipped particularly to ward off evil.

***

சகோரம்

சகோரம் என்னும் பறவை சந்திரனின் கிரணங்களை உண்டு வாழும் பறவை என்று இந்து மத நூல்கள் சித்தரிக்கின்றன. ஆண்டவன் பற்றிய துதிகளில் தமிழ் ஸம்ஸ்க்ருதப் புலவர்கள் இதை உவமைகளாகப் பயன்படுத்துகின்றனர் . இச்சந்திர ஒளிக்கு  ஏங்கும் சகோரப் ப ட்சிகள் போல பக்தனும் இறைவனின் அருள் ஒளிக்கு ஏங்குவதாக அடியார்கள் துதி பாடுகின்றனர் .

CHAKORA BIRD

A fabulous bird, supposed to live on the beams of moon. Tamil and Sanskrit poets used the bird as similes to illustrate the love between God nd the devotee or reals lovers.

***

சாமுண்டா

துர்க்கை அல்லது காளி க்கு சாமுண்டா என்று பெயர் ;  தேவி ஆனவள் தன்னுடைய  சடை முடியைத்  தூக்கி எரிந்ததாகவும் அதிலிருந்து சாமுண்டா உருவானதாகவும் மார்க்கண்டேய  புராணம் கூறுகிறது. இந்த சாமுண்டா, சண்டா முண்டா என்ற  இரண்டு அரக்கர்களைக் கொன்றார்கள் அவர்கள் மகிஷாசூரனின்  மந்திரிகள் ஆவார்கள்.

சண்டி

18 கரங்களுடன் உள்ள தேவியின் வடிவம் .

வங்காள மக்கள் துர்காதேவியை சண்டி என்ற வடிவத்தில் வழிபடுகின்றனர்.  சண்டிபாத  என்ற  சம்ஸ்கிருத நூலில்  700 சுலோகங்கள் இருக்கின்றன .துர்கா தேவி ,எப்படி  அசூரர்களை வென்றாள் என்பதை பற்றி   இந்த நூல் விரிவாக எடுத்துரைக்கிறது ; இதை தேவி மகாத்மியம் என்றும் சொல்லுவார்கள் ; பக்தர்கள் இந்த நூலில் உள்ள துதிகளை கோவில்களிலும் வீடுகளிலும் வாசித்து இன்றும் பயன் அடைகிறார்கள்.

CHAMUNDA

A manifestation of Goddess Durga sent forth from her matted hair to encounter the demons Chanda and Munda, according to Markandya Purana. The black goddess from her forehead killed the two demons and gave the heads to Ambikaa and told her that she should henceforth be known as Chaamundaa.

CHANDAA, CHANDII

Another name of Goddess Durga, who killed demon Mahisaasura, the buffalo headed demon. Bengalis worship goddess in this from during Navaratri festival.

CHANDIPAAT(HA)

A poem of 700 verses, forming an episode of Maarkandeya Puraana. It celebrtes Durg’s victories over demons/Asuras. It is read everyday by devotees in the Kali/Durga temples. It is also called Devi Mahaatmya and translated into English 100 years ago by Poley and Burnouf.

***

சித்திர கூடம்

இது வால்மீகி முனிவரின்  ஆசிரமம் ; ராமனும் சீதையும் வெவ்வேறு காலகட்டங்களில் , இந்த மகரிஷியின் சித்திரகூட  ஆசிரமத்தில் தஞ்சம் புகுந்தார்கள். இயற்கை எழில்மிக்க இந்த சித்திரகூடம், இப்பொழுது மத்தியப் பிரதேசம், உத்தர பிரதேசம் ஆகியவற்றின் எல்லையிலுள்ள பிரதேசமாக விளங்குகிறது அங்கு ஏராளமான கோவில்களும் , புனித இடங்களும் இருக்கின்றன. அங்குள்ள ஒவ்வொரு பாறையும்  குகையும் ,ஒரு கதை சொல்லும் ; அந்த அளவுக்கு ராமாயணத்துடன் இணைந்த  ஒரு பகுதி.

***

CHITRAKUTA

It was the seat of Valmiki’s hermitage, in which Rama and Sita both found refuge at different times. It is a very holy place and abounds with temples to which lakhs of people visit every year. Every rock and every cavern here has some legend connected to Rama.

Chitrakoot is in the Satna district in the state of Madhya Pradesh, India. it is a place of religious, cultural, historical and archaeological importance, situated in the Baghelkhand region. It borders the Chitrakoot district in Uttar Pradesh, whose headquarters Chitrakoot Dham is located nearby. The city lies in the historical Chitrakoot region, which is divided between the present-day Indian states of Uttar Pradesh and Madhya Pradesh.

***

சாணக்கியன்

உலகின் முதல் பொருளாதார நூலை எழுதியவன்.  பிராமணர்களுக்கு எதிராக செயல்பட்ட நந்த வம்சத்தை வேரோடு அழித்து , மயில்களை வளர்க்கும்  மௌரியர்களை அழைத்து ஒரு பெரிய சாம்ராஜ்ய த்தை  உருவாக்கினார். சந்திரகுப்தன் என்பவரை மன்னராக்கி மந்திரியாக செயல்பட்டான் .அவன் எழுதிய   நூல்  அர்த்தசாஸ்திரம் . அந்த நூலில் ராஜ தந்திரம், அரசு நிர்வாகம் ,வரி விதிப்பு ,எதிரிகளை சமாளிப்பது  முதலிய பல விஷயங்களோடு பொருளாதார தகவல்களையும்  காண முடிகிறது. சாணக்கியன் பேரில் பல நீதி நூல்களும் இருக்கின்றன அவற்றில் திருக்குறள்  போல அற்புதமான நீதி நெறிகள் போற்றப்படுகின்றன.

***

சந்திரகுப்தன்

சாணக்கியன் உருவாக்கிய மாபெரும் மன்னன் மௌரிய சந்திரகுப்தன் ஆவான் .மௌரிய வம்சத்தின் ஸ்தாபகர்.தென்னாட்டுக்கு  சந்திரகுப்தன் படை எடுத்தது  குறித்து சங்க இலக்கியங்களில் மாமூலர் என்ற புலவர் பாடி இருக்கிறார் .சந்திரகுப்தனின் மகத சாம்ராஜயத்தின் தலை நகரமான பாடலி  புத்திரம்  2300 ஆண்டுகளுக்கு முன்னர் உலகின் மிகப்பெரிய நகர்களில் ஓன்றாக விளங்கியது; இன்றைய பீகார் மாநிலத்தின் தலை நகரமான பாட்னா என்ற பெயரில் அந்த நகரம் இருக்கிறது   மௌரியர்களின் படைபலம், நிர்வாகம் முதலியன பற்றி மெகஸ்தனீஸ்  போன்ற கிரேக்க ஆசிரியர்கள் நிறைய எழுதிவைத்துள்ளனர்.  அலெக்சாண்டரூம் மகத சாம்ராஜயத்தின் ஃபடை  பலத்தைக்கண்டு பயந்து  இந்தியாவுக்குள் நுழையவில்லை என்ற வரலாற்றுச் செய்தியும் பலரால்  எழுதப்பட்டுள்ளது.

CHANAKYA

A celebrated Brahmin, who made a vow to destroy the Nada dynasty  and fulfilled his vow. He made Chandra Gupta king who was from an ordinary family who ran a peacock farm. Chaanakya was a great statesman and he wrote the first book on economics in the world. Under the name Kautilya , he wrote Arthashastra. It delas with economics, politics, government and administration. Chankaya Niti , contain moral aphorisms is also attributed to him.

CHANDRA GUPTA MAURYA

One of the greatest rulers of India. Chanakya was his minister. He was the emperor of Magada, modern Bihar and adjacent areas. Megsthenes and other Grek writers praised the Magda empire. Alexander hesitated to enter India after hearing about his huge army. His capital Pataliputra (Patna) was described by foreign authors as a well-built, well guarded vast city of ancient India. Tamil Sangam works refer to his southward march via Nilgris mountains.

****

சித்திரகுப்தன்    

சித்திரகுப்தன் எமனுடைய குமாஸ்தா, அதாவது எழுத்தர். ஒவ்வொருவர் செய்யும் நல்ல செயல்களையும் கெட்ட செயல்களையும் எழுதிவைத்து அந்த ரெகார்ட் புத்தகத்தை எமனிடம் அளிப்பான் ஒருவர்  இருக்கும் போது அதிலுள்ள ஃப் தகவல்களின் அடிப்படையில் ஒருவரைத்  தண்டித்து நரகத்துக்கு அனுப்புவதும் அல்லது  பாராட்டி சுவர்ககத்துக்கு அனுப்புவதும் நடைபெறுகிறது

எம லோகத்தில் வசிப்பதாகச் சொல்லப்படும் இந்த சித்திரகுப்தன் பின்னால் ஒரு விஞ்ஞான தகவலும் இருக்கிறது. அதாவது நாம் நினைக்கும் எண்ணங்களும் கூட நம்மைப் பாதிக்கும்; அவையெல்லாம் சித்திரங்களாக கடவுளின் கம்ப்யூட்டரில் பதிவாகி றது. கோடிக்கணக்கான அந்த எண்ணங்கள்  நம்முடைய உருவத்தை  நல்லதாகவோ  கெட்டதாகவோ  எமன் முன்னால்  காட்டுகிறது ஆகையால் எண்ணங்களில் கூட தூய்மை வேண்டும். இதனால்தான் இந்துக்களின் மனோ -வாக்- காயம், அதாவது திரிகரண சுத்தி வேண்டும் என்று சொன்னார்கள்.

CHITRA GUPTA

The recorder of Yama, God of Death.  As a scribe in the Yama Loka, he records the virtues and vices of men.. When a person dies, this record is used to punish and send a person to hell or praise a person and send him to heaven.

Literal meaning of the word is Hidden Picture. The science behind it is that even our thoughts make impressions, and they are calculated by the divine computer. It is we who make or mar our own future.

***

சித்திராங்கதா

அர்ஜூனன்  தென்னாட்டுக்கு  வந்தபோது,மணிபுரம் என்ற இடத்தில் , சித்ரவாகனன் என்ற மன்னனின் மகளான சித்ராங்கதாவை மணந்தான் ; அவர்கள் திருமணத்தின் மூலம் பிறந்தவன் பப்ரு  வாகனன்  இந்த பப்ரு  வாகனன் – சித்திரங்கதா  கதை  மகாபாரதத்தில் உள்ளது.

CHITRANGADA

Chitraangadaa is the daughter of King Chitra Vahana of Manipura. When Arjuna came to ancient Madurai, he married her. Babruvahana was their son. In Tamil folklore she is known as Alliraani.

***

சந்திரகாந்தம் 

சந்திரகாந்தம் என்பது  ஒரு ரத்தினக்கல்; இது சந்திரனுடன் தொடர்புடையது . சந்திரன் போல குளுமையை உண்டாக்கும் என்பது நம்பிக்கை ; மேக தூதம் என்னும் நூலில் காளிதாசன் இதைப்பற்றிச்  சொல்கிறான்.

CHANDRAKAANTA

Chandra kanta is a gem, known as moon stone. It is upposed to exert a cooling influence.  Kalidasa, most famous Indian poet, says in his Meghaduta ,

The moon’s white rays the smiling night illume,

And on the moon-gem concentrated fall,

That hangs in over neta in every hall;

Whence cooling dews upon the fair descend,

And life renewed to languid nature lend.

***

சிந்தாமணி

சிந்தாமணி என்னும் ரத்தினக்கல் நினைத்ததையெல்லாம் கொடுக்கும் என்று நம்பிக்கை  உள்ளது.  இந்த ரத்தினக்கல் பிரம்மாவிடம் இருந்ததாகப் புராணங்கள் சொல்கின்றன; தமிழ்  மொழியில் சீவக சிந்தாமணி என்ற பெயரில்  ஒரு காப்பியம் இருக்கிறது.

CHINAMANI

It is called a wish fulfilling gem. A jewel supposed to have the power of granting all desires. It is said to have belonged to Brahma who is himself called by this name. it is like the Philosopher’s stone. In Tamil we have an epic named after it- Jeevaka Chintamani.

—subham—

Tags- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL இந்துமத கலைச்சொல் அகராதி — Part 17 , சிந்தாமணிசந்திரகாந்தம் , Chanakya, Chandra gupta, சித்திரகுப்தன்  

Gnanamayam Broadcast Programme for 16th November 2025

உமா பாலசுப்பிரமணியம் 

Prayer 

News aalayam arivom and Nagarajan

Talk

Gnanamayam Broadcast comes to you EVERY SUNDAY via Zoom, Facebook and You Tube at the same time .

London Time 12 PM GMT

Indian Time 5-30 pm (evening)

*****

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES via Zoom, Facebook and You Tube at the same time.

****

Prayer -Jayanthi Sundar Team from Britain.MRS. SRI VIDHYA SRIRAM AND MISS SNEHA, LANGLEY U.K.




***

NEWS BULLETIN

VAISHNAVI ANAND and LATHA YOGESH from London present World Hindu News in Tamil

****

Mrs Brhannayaki Sathyanarayanan speaks on Mayiladuthurai Temple .

***

Talk by S Nagarajan on Narayana Bhattathri, Author of Narayaneeyam

***

SPECIAL EVENT-

Talk on Tirumanthiram

By

Mrs Uma Bala Subrahmanyam,

Chennai

 ******

ஞானமயம் ஒலி/ ஒளி பரப்பு நிகழ்ச்சி நிரல் ஞாயிற்றுக்கிழமை 16th  November 2025

நேரில் காணலாம்; கேட்கலாம் via Zoom, Facebook and You Tube at the same time .

***

இறைவணக்கம் திருமதி ஜெயந்தி சுந்தர் குழுவினர்–MRS. SRI VIDHYA SRIRAM AND MISS SNEHA, LANGLEY U.K.

***

உலக இந்துமத செய்தி மடல்-

லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த்  வழங்கும் செய்தி செய்தி மடல்.

***

ஆலயம் அறிவோம் — திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன் சொற்பொழிவு– தலைப்பு    மயிலாடுதுறை

****

தமிழ்ச் சொற்பொழிவு

பேசுனர் – பெங்களூர் எஸ்.நாகராஜன்

தலைப்பு- நாராயண பட்டதிரி

***

இன்றைய சிறப்பு நிகழ்ச்சி:

சொற்பொழிவு–

பேசுனர் – திருமதி உமா பாலசுப்ரமணியம் ,

சென்னை 

தலைப்பு-    திருமந்திரம்

—subham—

Tags- Gnanamayam, Broadcast, 16-11-2025, Vaishnavi Anand,

ஞானமயம் வழங்கும் (16- 11 -2025)  உலக இந்து செய்திமடல் (Post No.15,192)

Written by London Swaminathan

Post No. 15,192

Date uploaded in London –  17 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஞானமயம் வழங்கும் (16- 11 -2025)  உலக இந்து செய்திமடல்

ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல்.

செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்துவைஷ்ணவி ஆனந்த்த்தும்  லதா  யோகேஷும்  வாசித்து வழங்கும் செய்தி மடல்.

அனைவருக்கும் வணக்கம். இன்று ஞாயிற்றுக்கிழமை நவம்பர் மாதம் 16- ம்  தேதி , 2025-ம் ஆண்டு.

****

திருப்பதி லட்டு தயாரிக்க கலப்பட நெய் தந்தவர் கைது! டில்லியில் இருந்து ரசாயனம் சப்ளை செய்தது அம்பலம்

திருமலை திருப்பதி கோவிலில் லட்டு தயாரிக்க, தேவஸ்தானத்துக்கு கலப்பட நெய் வினியோகம் செய்த விவகாரத்தில், ரசாயனங்கள் சப்ளை செய்த டில்லியைச் சேர்ந்த வர்த்தகர் அஜய் குமார் சுகந்தா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். வரும் 21ம் தேதி வரை, அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆந்திராவில் உள்ள திருமலை திருப்பதி வெங்கடாசலபதி  கோவில் லட்டு பிரசாதம் மிகவும் பிரசித்தம். லட்டு தயாரிப்புக்கான நெய் கொள்முதலுக்காக, திருமலை திருப்பதி தேவஸ்தானம் அவ்வப்போது டெண்டர் விடுவது வழக்கம்.அப்படி, கடந்த ஆண்டு மே மாதம் டெண்டர் விடப்பட்டதில், தமிழகத்தின் திண்டுக்கல்லில் இயங்கும் ஏ.ஆர்.பால் பண்ணை நிறுவனம், 10 லட்சம் கிலோ நெய் வினியோகத்துக்கு டெண்டர் எடுத்தது.

அதிகாரிகள் சந்தேகம் அந்த நிறுவனத்தின் பெயரில் அனுப்பப்பட்ட நெய்யில் கலப்படம் செய்யப்பட்டிருப்பதாக தேவஸ்தான அதிகாரிகள் சந்தேகம் எழுப்பினர்.

இதையடுத்து, புனிதமான லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலந்த நெய்யை வினியோகிக்க, ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான முந்தைய அரசு அனுமதி அளித்ததாக முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டினார்.

இதனால், இந்த விவகாரம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.

நீதிமன்ற காவல் இக்குழு நடத்திய விசாரணையில், கொழுப்பை அதிகரிக்கும் வகையில், ‘மோனோகிளைசிரைட்ஸ், அசிட்டிக் அமிலம்’ போன்ற ரசாயனங்களை பாமாயில் எண்ணெயில் கலந்து, அதை நெய் போன்று மணம் வீச செய்து, திரிதிரியாக உருவாக்கியது தெரியவந்தது.

இந்த ரசாயனங்களை, உத்தரகண்டில் இயங்கி வரும், ‘போலேபாபா’ பால் பண்ணைக்கு, டில்லியை சேர்ந்த வர்த்தகர் அஜய் குமார் சுகந்தா கடந்த ஏழு ஆண்டுகளாக வினியோகித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த கலப்பட நெய் தான், வைஷ்ணவி மற்றும் ஏ.ஆர்.பால் பண்ணை போன்ற பிராண்டு பெயர்களில் திருப்பதி லட்டு பிரசாத தயாரிப்புக்கு வழங்கப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, வர்த்தகர் அஜய்குமார் சுகந்தாவை டில்லியில் கைது செய்து திருப்பதிக்கு அழைத்து வந்த அதிகாரிகள், நெல்லுார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை, வரும் 21ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதே நேரத்தில்

அந்த கால கட்​டத்​தில் நிர்​வாக அதி​காரி​யாக கோலோச்​சிய தர்​மாரெட்​டியை நேற்று சிறப்பு ஆய்வு குழு திருப்​ப​தி​யில் உள்ள அலு​வல​கத்​தில் வைத்து விசா​ரணை நடத்​தி​யது.

***

கிறிஸ்துவர்கள் அதிகமாக இருப்பதால் உன் ஒருத்தனுக்காக பஸ் ஊருக்குள் போகாது: பூஜாரியை அவதுாறாக பேசிய அரசு பஸ் கண்டக்டர் சஸ்பெண்ட்

திருநெல்வேலி: திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் சென்ற அரசு பஸ் கண்டக்டர், பயணியிடம் அவதுாறாகவும், மத ரீதியாகவும் பேசியதை கண்டித்து வள்ளியூரில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதையடுத்து, அரசு பஸ் கண்டக்டர் சஸ்பெண்ட் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

பூஜாரி மேல் சட்டை அணியவில்லை. ருத்ராட்ச மாலை அணிந்திருந்தார். ‘பஸ் வள்ளியூருக்குள் செல்லாது; பைபாஸில் மட்டுமே நிற்கும்’ என, கண்டக்டர் அந்தோணி அடிமை தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சுப்பிரமணியன், ‘இந்த பஸ் வழக்கமாக வள்ளியூருக்குள் செல்லும். ஏன் இன்று பைபாசில் இறங்க சொல்கிறீர்கள்?’ என, கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த கண்டக்டர், ‘பஸ்சில் நாலுமாவடி கிறிஸ்துவர்கள் தான் பெரும்பான்மையாக உள்ளனர். உன் ஒருத்தனுக்காக மட்டும் வள்ளியூருக்குள் வர முடியாது’ என, அவதுாறாக பேசினார்.

அந்த பஸ்சில் வள்ளியூரை சேர்ந்த கோவில் பூஜாரி சுப்பிரமணியன், தன் மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் பயணித்தார்.

சுப்பிரமணியன் இறங்க மறுத்ததால், பஸ் வள்ளியூருக்குள் சென்றது. அங்கு அவர் குடும்பத்தினர் பஸ் முன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து, வள்ளியூர் பொதுமக்களும் பஸ் முன் கூடி போராட்டத்தில் இணைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார், சுப்பிரமணியனிடம் பேச்சு நடத்தினர். ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின், பஸ் நாகர்கோவில் புறப்பட்டு சென்றது.

மத ரீதியாகவும், அவதுாறாகவும் நடந்து கொண்ட கண்டக்டர் அந்தோணி அடிமைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வள்ளியூர் பொதுமக்கள் வலியுறுத்தினர்

பயணியிடம் அவதூறாக பேசிய நாகர்கோவில் அரசு பஸ் கண்டக்டர் அந்தோணி அடிமையை சஸ்பெண்ட் செய்து, போக்குவரத்து பொது மேலாளர் பாலசுப்ரமணியன் உத்தரவிட்டார்.

****

மீனாட்சி கோவில் நிலத்தில் கிறிஸ்துவ கட்டுமானம்: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்க தாக்கலான வழக்கில், அங்கு மறைமாவட்ட பிஷப் நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்படும் கட்டுமானத்தை பொறுத்தவரை, தற்போதைய நிலை தொடர இடைக்கால உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரை கிளை. மதுரை வழக்கறிஞர் மகாராஜன் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை, வண்டியூர் பகுதியில் குறிப்பிட்ட சர்வே எண் நிலம் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமானது. இதை ஒரு வழக்கில் 1966ல் உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. ஆனால், இன்னும் ரோமன் கத்தோலிக்க மிஷனின், தற்போது மதுரை ஆர்ப்பிஷப்பகம் – மதுரை மறைமாவட்ட பிஷப் இல்லம் வசமே உள்ளது.

‘மதுரை புரோக்ரேட்டர் சொசைட்டி ஆப் செயின்ட் மேரீஸ்’ என்ற பெயரில் பட்டா பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலத்தை மீட்டு மீண்டும் மீனாட்சி அம்மன் கோவில் பெயரில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு பிறப்பித்த உத்தரவு:

நிலத்தில் கட்டுமானத்தை பொறுத்தவரை தற்போதைய நிலை தொடர வேண்டும். நில நிர்வாக கமிஷனர், அறநிலையத்துறை கமிஷனர், மண்டல இணை கமிஷனர், கலெக்டர், கோவில் செயல் அலுவலர், மறைமாவட்ட பிஷப்பிற்கு நோட்டீஸ் அனுப்பி நவ., 25க்கு வழக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.

****

பஜனைப் பாடகி மைதிலி தாகூர் மாபெரும் வெற்றி

பஜனைப் பாடல்களைப் பாடி பக்கதர்களின் பேராதரவினைப் பெற்ற 25  வயது பாடகி மைதிலி தாகூர் பீஹார் சட்டசபைத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்றது இந்துக்களுக்கு பெரிய மகிழ்சசியை அளித்துள்ளது 

பீஹார் சட்டசபையின் இளம் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் மைதிலி தாகூர். இவரின் வயது 25. நாட்டுப்புற பாடகியான மைதிலி தாகூர், பாரதீய ஜனதா கட்சியில்  இணைந்த அதே நாளில் எம்எல்ஏ வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

சமூக வலைதளத்தில் பிரபலமானவர். இப்போது அலி நகர் தொகுதியில் வென்று எம்எல்ஏவாகி உள்ளார். . இவரை எதிர்த்துப் போட்டி யிட்ட ஆர்.ஜே.டி. வேட்பாளர் வினோத் மிஸ்ராவை 11,730 வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார்.

ஹிந்தி போஜ்புரி மைதிலி அவதி மொழிகளில் உள்ள கிராமப் புற பாரம்பரியப் பாடல்கள் பாடி பெரும் புகழ் பெற்றவர்.

இதன் மூலம் பீஹார் அரசியலில் மிக இளம் வயது எம்எல்ஏ என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இத்தனைக்கும் இவர் ராஷ்டிரிய ஜனதா தள வேட்பாளரும், மூத்த அரசியல்வாதியுமான வினோத் மிஸ்ராவை எதிர்த்து களம் கண்டார்.

அலிநகர் தொகுதி ஆர்ஜேடியின் கோட்டை என்று வர்ணிக்கப்பட்ட தொகுதியாகும்.

பீஹாரின் மதுபானி மாவட்டம், பெனிபட்டி என்ற ஊரில் 2000ம் ஆண்டு பிறந்தவர் மைதிலி தாகூர். இசைத்துறையில் தமக்கு என தனியிடம் பிடித்தவர்.

டில்லி பல்கலைக் கழகத்தில்  2022ம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்தவர்

100க்கும் மேற்பட்ட வீடியோக்களை பதிவேற்றி, அதன் மூலம் குறிப்பிடத்தக்க ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கிக் கொண்டவர். 2021ம் ஆண்டு சங்கீத நாடக அகாடமியின் உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ புரஸ்கார் விருதை வென்றவர்.

****

திருப்பதி கோயிலுக்கு அமைச்சர் நேரு ரூ.44 லட்சம் நன்கொடை!

அமைச்சர் கே.என்.நேரு திருப்பதி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க 44 லட்சம் ரூபாய் வழங்கியதாகப் புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும், திமுகவின் முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு தனது பிறந்தநாளை கொண்டாடினார். திருமலையில் வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பலகையில் கே.என்.நேருவின் பெயர் மற்றும் அவர் வழங்கிய நன்கொடை குறித்த விவரங்கள் ஒளிபரப்பப்பட்டது.

****

லண்டனில் வரும் வெள்ளிக்கிழமை முதல் மூன்று நாட்களுக்கு டாக்டர் உடையாளுர் கல்யாணராமன் தலைமையில் ராதா கல்யாண மகோத்சவம் நடைபெறவுள்ளது. லண்டனில் வெம்பிளி பார்க் ஸ்டேஷனிலிருந்து நடக்கும் தூரத்தில் உள்ள Sattavis Patidar (திதார்) ஹாலில் இந்த வைபவம் மூன்று நாட்களுக்கு காலை முதல் மாலை வரை நடைபெறுகிறது. அனுமதி  இலவசம் என்றபோதிலும் முன்னதாகப் பதிவு செய்வது அவசியம் .Sri Radha Madhav Kalyanam UK

என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் நன் கொடைகள்  வரவேற்கப்படுகின்றன 

****

 கிறிஸ்துவ – முஸ்லிம் கவுன்சில்கள் கருத்தரங்கம்: அமெரிக்க ஹிந்து அமைப்புகள் கடும் கண்டனம்


கலிபோர்னியாவில், கிறிஸ்துவ மற்றும் முஸ்லிம் கவுன்சில்கள் இணைந்து நடத்திய கருத்தரங்கில், ‘ஹிந்து மதத்தை ஆயுதமாக்குதல்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நடத்தியதற்கு அமெரிக்க ஹிந்து அமைப்புகள் கண்டனங்களை தெரிவித்துள்ளன.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், நியூயார்க் மாகாண சர்ச் கவுன்சிலின், ‘மத தேசியவாத திட்டம்’ அமைப்பினரும், இந்திய – அமெரிக்க முஸ்லிம் கவுன்சிலான, ஐ.ஏ.எம்.சி.,யும் இணைந்து கருத்தரங்கம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தன.


இக்கருத்தரங்கில், மதங்களுக்கு இடையேயான உரையாடல்கள் என்ற பெயரில், அமெரிக்க வாழ் ஹிந்துக்களை குறி வைத்து நியாயமற்ற முறையில் வெறுப்புணர்வுகளை முன்வைத்ததற்காக, அமெரிக்க ஹிந்து அமைப்புகள் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


‘வடக்கு கலிபோர்னியா மற்றும் இந்தியாவில்ஹிந்து மதத்தை ஆயுதமாக்குதல் மற்றும் உலகளாவிய மத தேசியவாதங்கள் உடனான உறவுகள்’ என்ற தலைப்பில் கருத்தரங்கில் விவாதங்கள் நடத்தப்பட்டன. இதில், உலகெங்கிலும் அதிகரித்து வரும் மதத்தை அடிப்படையாக கொண்ட தேசியவாத அரசியல் இயக்கங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


குறிப்பாக, ஹிந்து தேசியவாதத்தின் தீவிர வடிவம் என்று கருதப்படும் ஹிந்துத்துவம், விரிவான ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது..


சிறுபான்மை மதத்தினரை குறிவைத்து தாக்குவதாக கூறப்படும் கொள்கைகள் மற்றும் சித்தாந்தத்தால் சமூகத்தில் எவ்வாறு பிளவு ஏற்படுகிறது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.


மேலும், அமெரிக்காவில் உள்ள கிறிஸ்துவ தேசியவாதம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இவைதவிர, ஹிந்துத்துவ கொள்கைகள் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு எவ்வாறு ஏற்றுமதி செய்யப்பட்டு, கலிபோர்னியாவில் உள்ள ஹிந்து சமூகத்தினரிடையே அவற்றின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.


விவாத பொருள் ஹிந்துத்துவம் என்றாலும், விவாதத்துக்கான கருப்பொருளாக ஹிந்து மதத்தை ஆயுதமாக்குதல் என தலைப்பிடப்பட்டது ஹிந்து அமைப்புகளின் எதிர்ப்புக்கு முக்கிய காரணமாக இருந்தது.


மேலும், கருத்தரங்கின் விவாத தலைப்பு ஹிந்து மதம் என்ற ஒரு மதத்தையே தவறாக சித்தரித்து, அதை ஒரு வன்முறை சித்தாந்தமாக பார்க்க துாண்டுகிறது என்றும், இது ஹிந்துக்களுக்கு எதிரான வெறுப்புணர்வை துாண்டுகிறது என்றும் ஹிந்து அமைப்புகள் குற்றஞ்சாட்டியதுடன், தங்களின் கடும் கண்டனங்களை தெரிவித்தன.

****

இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.

உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்தும் லதா  யோகேஷும் வாசித்த செய்தி மடல் இது.

அடுத்த ஒளிபரப்பு நவம்பர் மாதம் 23–ம்  தேதி ஞாயிற்றுக்கிழமை லண்டன் நேரம் பகல் 12 மணிக்கும்,

இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும் .

வணக்கம்.

—SUBHAM—-

Tags – World Hindu News, 16-1I-2025, ஞானமயம் ஒளிபரப்பு, வைஷ்ணவி,

ஆலயம் அறிவோம்!  மயிலாடுதுறை திருத்தலம்!! (Post No.15,191)

WRITTEN BY Brhannayaki Sathyanarayanan

Post No. 15,191

Date uploaded in London – 17 November 2025 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

16-11-25 அன்று லண்டனிலிருந்து ஒளிபரப்பான ஞானமயம் நிகழ்ச்சியில் திருமதி ப்ரஹன்நாயகி சத்யநாராயணன்

ஆற்றிய உரை. 

ஆலயம் அறிவோம்

வழங்குவது ப்ரஹன்நாயகி சத்யநாராயணன்

ஞானமயம் நேயர்கள் அனைவருக்கும் நமஸ்காரம். வணக்கம்.

நிலைமை சொல்லு நெஞ்சே! தவம் என் செய்தாய்?

கலைகள் ஆய வல்லான், கயிலாய நல்

மலையன், மா மயிலாடுதுறையன், நம்

தலையின் மேலும், மனத்துளும் தங்கவே

                                                                                      – திருநாவுக்கரசர் திருவடி போற்றி

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்

பெறுவது தேவாரப் பாடல் பெற்ற திருத்தலமான மாயூரம் என்று அறியப்படும் மயிலாடுதுறை திருத்தலமாகும். தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில் இது அமைந்துள்ளது,

இறைவன் : மயூர நாதர்

இறைவி : அபயாம்பிகை

தல விருட்சம் : மாமரம், வன்னி மரம்

தீர்த்தம்: பிரம, ரிஷப தீர்த்தங்கள், காவிரி ஆறு

இத்தலத்திற்கு சூதவனம், சிகண்டிபுரம், பிரமபுரம், தென் கயிலை ஆகிய பெயர்களும் உண்டு.

இத்தலத்தைப் பற்றிய புராண வரலாறுகள் பல உண்டு.

பார்வதி தேவியின் தந்தையான தட்சன் தான் செய்த யாகத்திற்கு சிவனையும் பார்வதியையும் அழைக்காமல் விட்டு விட்டான். இதனால் பார்வதி தேவியிடம் சிவபிரான் அந்த யாகத்திற்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.

ஆனால் தந்தை நடத்தும் யாகமாதலால் பாரவதி அங்கே சென்றார். அங்கு தட்சன் பார்வதியை மதிக்கவில்லை. இதனால் கோபமடைந்த சிவபிரான் பார்வதி தேவியை மயில் வடிவில் பிறக்குமாறு சாபமிட்டார்.

சிவனிடம் தேவி மன்னிப்பு கோர, மனமிரங்கிய சிவபிரான் சாபத்தின் காலத்தைச் சுருக்கினார். மயில் வடிவம் கொண்ட தேவி சிவனை லிங்க வடிவில் பல தலங்களில் வழிபட்டார். அவற்றுள் மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலும் மயிலாடுதுறையில் உள்ள  மயூரநாத ஸ்வாமி திருக்கோவிலும் குறிப்பிடத்தக்கவையாகும்.

இங்கு தான் பார்வதி தேவி தன் சாபவிலக்கைப் பெற்றார். தன் இயல்பான வடிவமான அபயாம்பிகையாக சிவபிரானுடன் தேவி இணைந்தது இங்கு தான். இதனால் இங்கு சிவபிரான் மயூரநாதர் என்ற பெயரைப் பெற்றார்.

ஒன்பது நிலையுள்ள ராஜகோபுரத்தை இங்குள்ள கோவில் கொண்டுள்ளது. கோவிலின் உள்ளே செல்லும் போது குளம் இடது புறத்தில் அமைந்துள்ளது.  அடுத்துள்ள கோபுரம் மூன்று நிலைகளைக் கொண்டுள்ளது. அடுத்துள்ள மண்டபத்தில் கணபதி சந்நிதி உள்ளது. சந்நிதிக்கு முன் பலிபீடமும் மூஞ்சூறும் உள்ளன.  இடது புறம் சுப்பிரமணியர் சந்நிதி உள்ளது. இங்கு பலிபீடம், நந்தி, இரு கொடி மரங்கள் உள்ளன.

அடுத்து நுழைவாயில் உள்ளது. அதைக் கடந்து சென்றால் வலப்புறம் அதிகார நந்தி உள்ளது.

பிரகாரத்தில் பதஞ்சலி, வியாக்ரபாதர், ஞானசம்பந்தர், நாவுக்கரசர், 63 நாயன்மார்கள் ஆகியோருடன் பல லிங்கங்கள் காட்சி தருகின்றன.

கர்பக்ருஹத்தில் மயூரநாதர் காட்சி தருகிறார். தொடர்ந்து நடராஜர், விநாயகர், தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பல தெய்வங்களும் காட்சி தருகின்றனர். அடுத்து அபயாம்பிகை சந்நிதி அமைந்துள்ளது. இங்கு பிரகாரத்தில் லிங்கோத்பவர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், விநாயகர் ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன.

இங்கு காவிரி ஆறு குறுகிய அளவில் ஓடுகிறது.

காவிரியைப் பற்றிய வரலாறு ஒன்று உண்டு. ஒரு அசுரன் காவிரி ஜலத்தைக் குடிக்க ஆரம்பித்தான். பரமசிவன் அவனை வதம் செய்து அந்த தீர்த்தத்திலேயே வசித்தார். இந்த இடம் தான் மயூரம். இங்கு ஸ்நானம் செய்து மயூரநாதனை வழிபட்டால் சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.

தேவி மயில் ரூபமெடுத்து சிவபிரானை பூஜித்த தலம் இது.

இங்குள்ள முக்குறுணிப் பிள்ளையார் பிரபலமானவர்.  கோவிலின் வட கோடியில் ஆதி மயூரநாதர் என்னும் சந்நிதி உள்ளது. இங்கு தான் துலா ஸ்நானம் பூர்த்தி ஆகிறது என்பது ஐதீகம்.

தேவலோக ரம்பை, காவிரியில் ஸ்நானம் செய்து, தனது கல் உருவம் நீங்கப் பெற்ற தலம் இது.

காவேரியின் துலா ஸ்நான கட்டத்திற்கு ரிஷப கட்ட தீர்த்தம் என்று பெயர். இங்கு மயிலம்மை சந்நிதியையும் சட்டநாதரையும் கடைமுகத்தன்று அல்லது அதற்கு மறுநாள் நிச்சயம் தரிசனம் செய்ய வேண்டும்; அப்படிச் செய்யாவிட்டால் துலா ஸ்நான பலன் கிடைக்காது என்று சொல்லப்படுகிறது.

விசாலாக்ஷி சமேத விஸ்வநாதர் கோவில் ரிஷப தீர்த்தக் கரையில் உள்ளது.

சூரியன், சந்திரன், நவகிரகங்கள், புலஸ்தியர், வியாஸர், சூதர், சௌனகர் உள்ளிட்டோர் காவிரியில் ஸ்நானம் செய்து  மயூரநாதரை தரிசித்து தங்கள் இஷ்டபலனை அடைந்தனர்.

மாயூரம் காசிக்கு சமமான ஸ்வேதாரண்யம், பஞ்சநதம், கௌரிமாயூரம் அர்ஜுனம், சாயாவனம், ஶ்ரீ வாஞ்சியம் ஆகிய ஆறு தலங்களுள் ஒன்றாக அமைகிறது.

பிராஹ்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி, சாமுண்டி ஆகிய சப்த மாதர்கள் மாயவரம் மற்றும் அருகில் உள்ள கோவில்களில் வழிபட்டுள்ளனர். இதில் சாமுண்டி மாயவரம் கோவிலில் வழிபட்டுள்ளார்.

இத்தலத்தில் திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் பதிகம் பாடி அருளியுள்ளனர்.

ஆயிரம் ஆனாலும் மாயவரம் ஆகாது என்ற வழக்கு மொழி ஒன்றே மாயவரத் தலம் பற்றிய சிறப்பை நன்கு விளக்கும்.

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் மயூரநாதரும் அபயாம்பிகை அம்மையும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். 

நன்றி! வணக்கம்!!

நாரயணீயம் நூலை உலகிற்குத் தந்த நாராயண பட்டத்ரி (Post No.15,190)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,190

Date uploaded in London –   17 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

16-11-25 அன்று லண்டனிலிருந்து ஒளிபரப்பான ஞானமயம் நிகழ்ச்சியில் ச. நாகராஜன் ஆற்றிய உரை.

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, திரு கல்யாண்ஜி அவர்களே, திரு லண்டன் சுவாமிநாதன் அவர்களே

நாகராஜன் வணக்கம், நமஸ்காரம்.

இன்று நாம் நாரயணீயம் என்ற அற்புதமான நூலை உலகிற்குத் தந்து அருளிய நாராயண பட்டத்ரியின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றிச் சிந்த்திக்க இருக்கிறோம்.

நாராயண பட்டத்ரி கி.பி. 1560ம் ஆண்டு கேரளாவில் உள்ள மேல்பத்தூர் என்ற ஊரில் ஒரு பிராமண  குடும்பத்தில் அவதரித்தார்.

இவரது தந்தையார் மாத்ருதத்தர் மிகச் சிறந்த பண்டிதர். நாராயணர் அவரிடமே கல்வி பயின்றார். ரிக் வேதத்தை மாதவாசாரியார் என்பவரிடம் முறையாகப் பயின்றார். தர்க்க சாஸ்திரத்தை தாமோதராசாரியார் என்பவரிடம் கற்றார். வியாகரணத்தை அச்யுத பிஷாரடி என்பவரிடம் கற்றார். இப்படி அனைத்து சாஸ்திரங்களையும் இதிஹாஸ புராணங்களையும் தனது பதினாறு வயதிற்குள்ளாகவே கற்று மிகப் பெரும் பண்டிதராக அவர் திகழ்ந்தார்.

நாராயணரின் குருவான அச்யுதர் வாத நோயால் பீடிக்கப்பட்டு மிகவும் வருந்தினார். இதைக் கண்ட அவர் தன் யோக பலத்தால் அந்த வியாதியை தானே வாங்கிக் கொண்டார். அவரது அங்கங்கள் முடங்கின. குருவாயூரில் சென்று தவம் புரியத் தீர்மானித்த நாராயணர் தன்னை அங்கே கொண்டு போகச் சொன்னார்.

குருவாயூரப்பன் சந்நிதியில் ஒரு நூலை இயற்றி சமர்ப்பிக்க அவர் எண்ணம் கொண்டார்.

ஆனால் நூலை எப்படித் துவங்கி எழுதுவது என்று அவருக்கு தயக்கமாக இருந்தது. பிரபல கவிஞரான எழுத்தச்சனை அவர் நாட, அவர், “மீனைத் தொட்டு உண்” என்றார்.

இதன் உண்மையான அர்த்தத்தை உடனே உணர்ந்து கொண்ட நாராயணர் விஷ்ணுவின் மச்சாவதாரத்தை முதலாகக் கொண்டு நாராயணீயத்தைப் படைக்கலானார்.

குருவாயூரப்பனை வழிபட்டவாறே ஒரு நாளைக்கு பத்து ஸ்லோகங்கள் வீதம் நாராயணீயத்தைப் பாட ஆரம்பித்தார். நூறு நாட்களில் நூலைப் பாடி முடித்தார். 1587ம் ஆண்டு நூல் முற்றுப் பெற்றது.  அப்போது அவருக்கு வயது 27.

ஒவ்வொரு ஸ்லோகம் எழுதி முடித்த பின், “ஹே, குருவாயூரப்பா, இது உண்மையா என்று அவர் கேட்பார். ஆம் என்று குருவாயூரப்பன் தன் தலையை அசைத்து ஆமோதித்தவுடன அடுத்த ஸ்லோகத்தை இயற்ற ஆரம்பிப்பார். ஆகவே இது தெய்வீக அங்கீகாரம் பெற்ற அரும் நூலாகத் திகழ்கிறது.

நூலில் மொத்தம் 1038 ஸ்லோகங்கள் உள்ளன.

நாராயணீயத்தில் கூறப்பட்டிருக்கும் அனைத்து வரலாறுகளும் வேத வியாஸர் இயற்றி அவரது மகன் சுகருக்கு உபதேசித்த ஶ்ரீமத் பாகவதத்தில் கூறப்பட்டிருக்கும் சரித்திரங்களே ஆகும்.

நரசிம்மாவதாரம் பற்றி அவர் பாடத் தொடங்கிய போது அவரால் அதை சரியாக விவரிக்க முடியவில்லை. அதனால் அவர் திகைத்தார். அப்போது நரசிங்கம் தோன்றி அங்குமிங்கும் நடமாட ஆரம்பிக்கவே, அதைக் கண்டு அதை அப்படியே அவர் பாடினார்.

நூலை முடித்தவுடன் அவருடைய வாத நோய் முற்றிலுமாக நீங்கி விட்டது.

நாராயணீயத்தை பாராயணம் செய்தாலும், அதைப் படிக்கக் கேட்டாலும் ஐஸ்வர்யம் பெருகும். கொடிய வியாதிகள் நீங்கும்.கிரக பீடைகள் நீங்கும். உத்யோக உயர்வு கிடைக்கும்.  ஆண்- பெண் இருபாலாருக்கும் தக்க முறையில் விவாகம் நடக்கும், புத்திர சந்தானம் உண்டாகும், நீண்ட ஆயுள், ஆரோக்கியம் கிடைக்கும் என்று இப்படி பலவாறாக பலன்களை பல ஸ்ருதி கூறுகிறது.

எட்டாம் சதகத்தில் உள்ள 13வது ஸ்லோகம் மந்திர சக்தி வாய்ந்தது என்று காஞ்சி மஹாபெரியவாள் கூறி இருக்கிறார்.

இதை பக்தியுடன் சொல்பவர்களுக்கு வியாதிகள் உடனே குணமாகும் என்பது அவரது அருளுரை.

அஸ்மிந் பராத்மந் நநு பாத்மகல்பே

த்வமித்த முத்தாபித பத்மயோநி: 

அனந்தபூமா மம ரோகராஸிம்

நிருந்தி வாதாலயவாஸ விஷ்ணோ!

“பரமாத்மாவாக எங்கும் வியாபித்திருக்கும் விஷ்ணுவே!! இந்த பாத்ம கல்பத்தில் பிரம்ம தேவனை இங்ஙனம்
தோற்றுவித்தவரும் அளவற்ற மகிமையுடையவருமான நீர் என்னுடைய வியாதிக் கூட்டத்தை அடக்கியருள வேண்டும்”

என்பது இதன் பொருள்.

48 நாட்கள் தொடர்ந்து இதைக் கூறி கடுமையான வியாதிகளிலிருந்து ஏராளமானோர் குணமடைந்துள்ளனர்

நாராயண பட்டத்ரி நாற்பதுக்கும் மேற்பட்ட பல நூல்களை இயற்றியுள்ளார்.

பிரக்ரிய ஸர்வஸ்வம் என்ற நூல் பாணினியின் சித்தாந்த கௌமுதியைப் போன்று அமைந்துள்ள ஒரு இலக்கண நூல் ஆகும்.

அபனீயப் ப்ரமாணம் என்பது பல சம்ஸ்கிருதச் சொற்களை அறிய உதவும் ஒரு நூல்.

தாது காவியம் என்பது கண்ணபிரானின் வாழ்க்கைச் சரிதத்தை அடிப்படையாகக் கொண்ட நூலாகும்.

மான மேயோதயம் என்பது ஒரு தத்துவ நூல்.

ஶ்ரீ பாத ஸப்ததி என்பது தேவியின் புகழைப் பாடும் ஒரு துதி நூலாகும்.

கண்ணனைப் பற்றிக் கூறும் ஸ்தோத்திரம் குருவாயூர்புர ஸ்தோத்திரம் என்ற நூலாகும்.

தனது நூல்களில் இவர் அத்வைத கருத்தையும் த்வைத கருத்தையும் விளக்கி இருப்பதால் இன்றளவும் இவரை த்வைதி என்றும் அத்வைதி என்றும் விளக்கும் விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன.

நாராயண பட்டத்ரி 106 ஆண்டுகள் உயிர் வாழ்ந்து 1666ம் ஆண்டில் குருவாயூரப்பனுடன் ஒன்று கலந்ததாக வரலாறு கூறுகிறது.

நாராயணீயத்தை அன்றாடம் பாராயணம் செய்து வரும் பல்லாயிரம் குடும்பங்கள் அடைந்து வரும் நற்பலன்களை அந்தக் குடும்ப உறுப்பினர்களே அனுபவ வாயிலாக இன்றும் கூறி வருவது குறிப்பிடத்தகுந்த ஒன்று.

நாராயணீயதை உலகிற்கு அளித்த நாராயண பட்டத்ரியைப் போற்றி அவர் அருளிய நாராயணீயத்தைக் கற்போம்; பாராயணம் செய்வோம். பயன் பெறுவோமாக!

நன்றி வணக்கம்!

**

 **************************

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL இந்துமத கலைச்சொல் அகராதி — Part 16 (Post No.15,189)

Written by London Swaminathan

Post No. 15,189

Date uploaded in London –  16 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

சைத்தன்ய மகாபிரபு

500 ஆண்டுகளுக்கு முன்னர் வங்காளத்தில் பிறந்தார் .கிருஷ்ண பக்தி இயக்கத்தை வங்காளத்திலும் அசாமிலும் பரப்பினார்.  ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும்  சென்று கிருஷ்ணரின் லீலைகள்ப் புகழ்ந்துரைத்தார்  கிருஷ்ணர் பிறந்த பூமியான பிருந்தாவனத்துக்குச் சென்றார் .பக்தி  இயக்கத்தில் நாயகி நாயக பாவத்தைப்  பின்பற்றினார்.   தற்போதைய ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர் இவரை முன்மாதிரியாகக்  கொண்டார்கள் அவரைப்போலவே ஆடிப் பாடி இசை மூலம் ஆண்டவனை அடைய முயல்கின்றனர் . இவர் கடைசி காலத்தை  ஒரிசாவிலுள்ள புரி  நகரத்தில் கழித்தார். சுமார் 30 ஆண்டுகளுக்கு அங்குள்ள ஜெகந்நாதரைத் துதித்து இறைவனடி சேர்ந்தார்.

C for Chaitanya

Chaitanya Mahaprabhu was born in Bengal about 500 years ago. He was a Vaishnavite reformer, an incarnation of Krishna according to his followers. He spread the Bhati movement in northeast India including Assam and Tripura.

He spent his last 30 years in Puri worshipping Lord Jagannath. He advised people to sing and dance  and that is the easy way to reach God. He did that throughout his life. Modern ISKCON devotees follow Sri Chaitanya Mahaprabhu. Sri Bhakti Vedanta Parabhupada, founder of Kare Krishna movement was inspired by Sri Chaitanya.

****

சதுர்த்தி

நாலாவது திதி அதாவது பௌர்ணமி அல்லது அமாவாசைக்கு அடுத்த நாலாவது நாள்

சதுர்தசி

14-வது நான் நாள் அதாவது அமாவாசை அல்லது பௌர்ணமி முதல் நாள்

இந்துக்கள் ஒரு மாதத்தை இரன்டு பாதிகளாகப் பிரித்துள்ளதால் மாதம் தோறும் 2 சதுர்த்திகளும் ,  ௨ சதுர்தசி களும் வரும்.

Chaturthi and Chaturdasi

Chaturthi is the fourth day after new moon /Amavasyai or full moon/Purnima. Hindus have divided the moth into two fortnights

Chaturdasi is the fourteenth day after full moon day or new moon day

So two Chaturthis and two Chaturdasis occur every month.

****

செளளம் அல்லது சூடாகர்மம்

முதல் முதலில் குழந்தையின் தலை முடியை வெட்டுவதற்கான சடங்கு. அப்போது ஒரு சூடாவை அதாவது குடுமி யை மட்டும் விட்டு வைப்பார்கள் இது 40 சம்ஸ்காரங்களில் ஒன்று.

Calam or Cuudaakarmam

The first cutting the hair on the head of a child, leaving a Cuudaa or lock of hair (sikhaa), the remaining part being shaved. Hindus have to follow 40 different rituals rom birth to death. This is one of them.

***

சங்கு ,சங்காபிஷேகம்

விஷ்ணுவின் கைகளில் சங்கும் சக்கரமும் இருக்கும் ; கிருஷ்ணனின் சங்கிற்குப் பாஞ்சஜன்யம் என்று பெயர்.

கார்த்திகை மாதத்தின் சோம வாரத்தில், அதாவது திங்கட்கிழமைகளில், சிவபெருமானுக்கு சங்காபிஷேகம் நடைபெறும்; சங்குகளில் தண்ணீர் நிரப்பி பூஜை செய்து மந்திரங்களை ஓதி இந்த அபிஷேகத்தைச்  செய்வார்கள். கடலில் கிடைக்கும்  சங்குகளில்  அரிதாகக்  கிடைக்கும் வலம்புரிச்  சங்குகளைக் கொண்டு  இந்த அபிஷேகத்தைச்  செய்வார்கள். குழந்தைகள் பிறந்தவுடன் சங்குகள் மூலம் பால் கொடுப்பது முன்கால வழக்கம் .கோவில்களிலும் திரும்ணங்களிலும் சங்கு ஓதுவதும் வழக்கம். இப்போதும் வங்காளத்தில் சங்கு ஊதித்தான் திருமணம் செய்கிறார்கள். 

Conch/ Shanka

Hindus use Conches it in FIVE occasions:

1.To start a war (as we see in the Bhagavad Gita; all commanders blew the conches at the start of the great Mahabharata war. It is in Tamil literature as well)

2.Temple functions. Even today the blowing of Shanka and Ringing of bells take place during the Arti Time.

3.During Hindu Weddings. Andal’s Tamil poems confirm it. But today only Bengali Hindus follow this custom.

4.Funeral Ceremonies: When the dead boy is taken to crematorium blowing of the conch takes place.

5.Protest Meetings: To protest any particular action they blow conches to attract attention.

In the olden days they used to feed the babies with conches.

Krishna is holding Conch and wheel (Sankha Chakra). His conch is called Paanchajanya.

In Shiva temples, Sankaabishekam is done to LordShiva on Mondays in the month of Kartika. They use 1008 rare Valampuri Conches. One in a million has the whorl in the opposite direction.

*** 

சதுர்தச வித்யா

இதன் பொருள் 14 கலைகள்; வேதங்கள் நான்கு அதன் அங்கங்கள் ஆறு மற்றும் நியாயம் மீமாம்ஸம், புராணம் தர்ம சாஸ்திரம் இவை 14 பாடங்கள் ஆகும்.

ஆறு அங்கங்கள் சிக்ஷா, வியாகரணம், சந்தஸ் ,நிருக்தம் கல்பம் ஜோதிஷம் ஆகியன.

Chaturdasa Vidhyaa

Chaturdasa means 14. Learning 14 subjects was a must in the ancient Vedic schools. The fourteen subjects are Six ngas, Four Vedas, Meemamsa, Purana, Dharma Saastra and Nyaaya.

The Six Angas include Vyaakarana, Chandas, Kalpa, Jyotisha, Nirukta and Sikshaa.

***

சாதுர் மாஸ்யம்

நான்கு மாதங்கள் என்பது இதன் பொருள். மழைக்காலத்தில் வரும் நான்கு மாதங்களுக்கு சந்யாசிகள் ஒரே இடத்தில் தங்கி விரதத்தை அனுஷ்டிப்பார்கள்; இப்போதும் சங்கராசார்ய மடங்கள் இந்த விரதத்தைப் பின்பற்றுகின்றன . முன்காலத்தில் சந்யாசிகள் ஒரே இடத்தில் இருக்கக்கூடாது என்ற விதி இருந்ததால் அவர்கள் ஊர் ஊராகச் சென்றார்கள்; மழைக்காலத்தில் பூச்சி பொட்டுகளை மிதித்து விடக்கூடாது என்பதற்காக ஜூலை மாதம் வரும் வியாச பெளர்ணமியிலிருந்து நான்கு மாதங்களுக்கு ஒரே இடத்தில் தங்கி பூஜைகளைச்  செய்கிறார்கள். 

Chaaturmaasya Vrata

Hindu ascetics should not stay in one place for long. They are supposed to move from one town to another town to spread the religion. But they are exempted from such a wandering for months in the rainy season.  Even now Shankaracharya Mutts follow this vow. They str the Four Month Vow from the Full Moon Day in July called Vyaasa Purnimaa. They do the Pujas staying in one town.

***

சதுர்தச ரத்தினங்கள் என்பது கடல் கடைந்த போது வெளியே வந்த 14 பொருள்கள் அவை பின்வரு மாறு:-

14 ரத்தினங்கள்:
சந்திரன் (சோம, நிலவு)
வாருணி ( கள், சுரா பானத்தின் அதிபதி)
உச்சைஸ்ரவஸ் என்னும் குதிரை
ஐராவதம் என்னும் யானை
காம தேனு என்னும் பசு/சுரபி
பாரிஜாதம் – மரம்
கற்பக விருக்ஷம் – மரம்
கௌஸ்துப மணி
குடை
காதுகளுக்கான தோடு
அப்சரஸ் – தேவலோக அழகிகள்
சங்கு
லெட்சுமி – செல்வத்தின் அதி தேவதை
ஜ்யேஷ்டா- மூதேவி; நித்திரை, சோம்பேறித்தனம் ஆகியவற்றின் கடவுள்
தன்வந்திரி – டாக்டர்
காலகூட விஷம்
அமிர்தம்

Chaturdasa Rtna/ Fourteen Gems

Fourteen “gems” came out of the sea when Devas (angels) and Asuras (demons) churned the Milky Ocean. This is the most popular and prominent story in the Hindu Mythology. The list of 14 gems differs from book to book. But among the common gems, moon known as Soma is one. It is true to say that moon came out of the ocean.

The objects or people are

Varuni = Sura, Soma = Moon, Lakshmi = Goddess of Wealth, Horse =Uchchaisravas , Kaustuba gem, Parijata tree, Poison = Halahala

Doctor Dhanvantri, Amrita = ambrosia, Divine Cow = Surabhi

Elephant Airavata, Apsaras = Damsels from Heaven, Shanka = Conch

Jyeshta = Goddess of Misfortune, Umbrella, Powerful bow,

Earrings, Wish fulfilling Tree Kalapakavriksha

To be continued

Tags-HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL இந்துமத கலைச்சொல் அகராதி– Part 16, Chaitanya, 14 gems from sea, Churning the ocean, சதுர்தச வித்யா, சைத்தன்ய மகாபிரபு, வலம்புரிச் சங்கு