கிறிஸ்தவ பாதிரியுடன் காந்திஜி வாக்குவாதம் (Post.11,963)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,963

Date uploaded in London – –  May 3 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

ஒரு கிறிஸ்தவ  பாதிரியார் காந்திஜியை மடக்கிவிடும் நோக்கத்தோடு இந்துமதத்தை எதிர்த்துப் பல கேள்விகளைக் கேட்டார். காந்திஜியோ அந்தப் பாதிரியிடம் பல கேள்விகளைக் கேட்டுக் கிடுக்கிப் பிடி போட்டார். பாதி+ரி கால் +ரி ஆ கப் போய்விட்டது !

இதோ கேள்வியும் பதிலும்

கிறிஸ்தவ பாதிரியார் :- இந்துக்கள் மட்டும் ஒரே கடவுளை ஒப்புக்கொண்டால், இந்துமதமும், கிறிஸ்தவ மதமும் இணைந்து இந்தியாவுக்கு சேவை செய்யலாமே !

காந்திஜி :- அப்படிப்பட்ட ஒன்று நிகழ எனக்கும் ஆசைதான். ஆனால் இந்து மதத்தை இழிவுபடுத்திப் பேசும் இன்றைய கிறிஸ்தவ மிஷனரிகள் உள்ளவரை அது நடவாது. நீங்கள் இந்துமதத்தை கை விட்டால்தான் பரலோக சாம்ராஜ்யம் கிடைக்கும் என்றல்லாவா சொல்லிக்கொண்டு திரிகிறீர்கள்;  கிறிஸ்தவர்கள் நல்ல வாழ்க்கை வாழ்ந்து அந்த இனிய மணத்தை இந்துக்களின் மீது பரப்புவதையே நான் விரும்புகிறேன். ஒரு ரோஜா மலர், தன் வாசனை பற்றிப் பிரசங்கம் செய்யவில்லையே. அது இருந்த இடத்திலிருந்து மவுனமாக அல்லவா மணத்தைப் பரப்புகிறது . அதுபோலத்தான் நமது வாழ்வும். அப்படி கிறிஸ்தவர்கள் வாழ்ந்தால்  இந்தப் பூமியில் அமைதியும் நல்லெண்ணமும் பரவும் . ஆனால் ராணுவம் போன்ற, தோள் வலிமை காட்டும் கிறிஸ்தவம் உள்ள வரை அது நடக்காது .பைபிளில் அது இல்லை. ஆனால் ஜெர்மனியிலும் பல மேலை நாடுகளிலும் அது உள்ளது..

பாதிரி : இந்துக்கள் விக்ரகங்களை  வழிபடும் வழக்கத்தைக் கைவிட்டு ஒரே கடவுளை வணங்கினால், தடைகள் எல்லாம் விலகிவிடும் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?

காந்திஜி :-  ஓஹோ, அத்தோடு கிறிஸ்தவர்கள் நிற்பார்களா? கிறிஸ்தவர்கள் எல்லோரும் ஒற்றுமையாக உள்ளார்களோ ?

கத்தோலிக்க பாதிரி : உண்மைதான்; கிறிஸ்தவர்களின் எல்லாப் பிரிவினரும் ஒற்றுமையாக இல்லைதான்..

காந்திஜி : அப்படியானால் நீங்கள் உதட்டளவு கொள்கை பற்றித்தான் பேசுகிறீர்கள் . ஒரே கடவுளை நம்புவதாகச் சொல்லும் கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் ஏன் இணையவில்லை என்று நான் உங்களைக் கேட்கிறேன்.  அப்படி அந்த இரண்டு மதங்களுமே இணைய முடியாதபோது இந்துக்களும் கிறிஸ்தவர்களும் ஒரே கடவுள் விஷயத்தில் இணைய முடியாதே. இதற்கெல்லாம் ஒரு தீர்வு என்னிடம் இருக்கிறது;  முதலில் நீங்கள் சொன்னீர்களே, இந்துக்கள் பல கடவுளர்களை நம்புகிறார்கள். விக்ரகங்களை வழிபடுகிறார்கள் என்று. அதுவே தவறு அவர்கள் பல கடவுள் பெயர்களைச் சொல்கிறார்கள். ஆனாலும் அவர்களுக்கு மேல் ஒரு கடவுள் – கடவுள்களுக்கு எல்லாம் கடவுள் ஒருவரே என்று முரசு கொட்டுகிறார்கள்.ஆகவே இந்துக்கள் எல்லோரும் பல கடவுளரை வழிபடுகிறார்கள் என்று சொல்லுவதே சரி இல்லை. அவர்கள் பல உலகங்களை நம்புவது உண்மையே .

மனிதர்களுக்கு என்று ஒரு உலகம் உள்ளது. அது போல மிருகங்களுக்கு என்று ஒரு உலகம் உள்ளது. அது போல உயர்ந்தோருக்கு ஒரு உலகம் உள்ளது. அதை நாம் பார்க்க முடியாவிட்டாலும் இருப்பது உண்மையே. எல்லாம் ஆங்கிலேயர் செய்த விஷமம். தேவர்களையும்  கடவுளரையும்  (தேவதேவதா ) GOD காட் என்று ஆங்கிலத்தில் மொழி பெ யர்த்தனர்.; கடவுளுக்கு சரியான சொல் ஆங்கிலத்தில் இல்லை . ஈஸ்வரன் என்பவன் தேவாதி தேவன்.

தெய்வீகத் தன்னமை உடைய (தேவர்) அ த் தனை பேரையும் GOD காட்  என்று மொழி பெயர்த்ததால் குழப்பம் நேரிட்டது . நான் என்னை நல்ல இந்து என்று கருதுகிறேன். நான் பல கடவுளரை ஒருபோதும் நம்பியதில்லை. சின்ன வயசில் கூட நான் அப்படி பல கடவுளரை நினைத்ததில்லை. அப்படிப் பல கடவுள் பற்றி எனக்கு யாரும் சொன்னதுமில்லை.

xxxx

விக்ரக ஆராதனை

விக்ரக ஆராதனை விஷயத்துக்கு வருகிறேன். ஏதோ ஒரு வடிவத்தில் எல்லோரும் இதைச் செய்துதான் ஆகவேண்டும். கடவுளின் இருப்பிடம் என்று கருதும் மசூதி என்னும் கட்டிடத்துக்காக ஒரு முஸ்லீம் ஏன் உயிரையே கொடுக்கிறான்?  பைபிள் என்னும் புஸ்தகத்தின் மீது சத்திய பிரமாணம் செய்யும் கிறிஸ்தவனுக்கு சர்ச் என்ற கட்டிடம் எதற்கு? இதை நான் எதிர்க்கவில்லை. மசூதி கட்டவும் கல்லறை கட்டவும் ஏராளமான பணத்தை வாரி இறைப்பது விக்ரக ஆராதனை போன்றது இல்லையா ? VIRGIN MARY வர்ஜின் மேரி (கன்னி மேரி) , புனிதர்கள் (செயிண்ட்ஸ்) முதலியோருக்கு முன்னர் ரோமன் கத்தோலிக்கர்கள் மண்டியிட்டு வணங்குவதை என்ன என்பீர்கள்? அவர்கள் கற்சிலைகளையும் துணி மீதோ கண்ணாடி மீதோ வரைந்த உருவங்களையும் வழிபடவில்லையா ?

கதோலிக்க பாதிரி இடைமறித்து : — நான் என் அம்மாவின் புகைப்படத்தை வைத்திருக்கிறேன்.அவளுக்கு மரியாதை தெரிவிக்கும் வகையில் அதற்கு முத்தம் தருகிறேன். அதை நான் வணங்கவில்லையே. அதுபோலத்தான் கிறிஸ்தவ செயிண்ட்ஸ் படங்களும் .

காந்திஜி :- அதே போலத்தான் இந்துக்களும். நாங்கள் கற்களை வணங்கவில்லை; கல்லிலோ, உலோகத்திலோ உள்ள குரூரமான உருவங்களை நாங்கள் வழிபடும்போது கடவுளைத்தான் நினைக்கிறோம்.

கதோலிக்க பாதிரி :- கிராமத்து மக்கள் கற்களை அல்லவா வழிபடுகிறார்கள் !

காந்திஜி : இல்லை; நான் சொல்லறேன் ; அவர்கள் கடவுளைத் தவிர எதையும் அங்கே காண்பதில்லை.. கன்னி மேரி சிலைக்கு முன்னர் மண்டியிட்டு நீங்கள் உங்களுக்கோ அல்லது மற்றவர்களுக்கவோ பிரார்த்தனை செய்கையில் என்ன செய்கிறீர்கள் ? அது போலவே ஒரு இந்துவும் கல்லின் மூலம் கடவுளுடன் தொடர்பு கொள்கிறான் . ஆனால் கன்னி மேரியிடம் நீங்கள் மண்டியிடுவது எனக்குப் புரிகிறது. ஒரு முஸ்லீம் மசூதிக்குள் நுழையும்போது பயமும் பக்தியும் அடைவது ஏன் ? உலகத்தையே அவன் ஏன் மசூதியாக (கடவுளின் இருப்பிடமாக) காணவில்லை ? நம் தலை மீது கவிழ்ந்து கிடக்கும் வானம் என்ன? மசூதியைவிட மதிப்பு குறைந்த இடமா? ஆயினும் முஸ்லீம்களின் செய்கை எனக்குப் புரிகிறது . அதை நான் போற்றுகிறேன். கடவுளை அடைய அவர்களுக்குத் தெரிந்த வழி அது. பரம பிதாவை அடைய இந்துக்களும்  ஒரு வழி வைத்திருக்கிறார்கள்  எங்களுடைய அணுகுமுறை வேறு; ஆனால் அவன் (கடவுள்) வேறு இல்லை .

பாதிரியார் : — ஆனால் கடவுள் , அவர்களுக்கு சத்தியமான பாதையைக் காட்டியதாக கத்தோலிக்கர்கள் நம்புகிறார்கள்

காந்திஜி : ஆஹா அப்படியா; கடவுள் பைபிள் மூலம் மட்டுமே பேச முடியும் என்று எண்ணி விட்டீர்களா? மற்ற புஸ்தகங்கள் மூலம் பேச முடியாதா ? கடவுளின் மகத்தான சக்தியை ஏன் இப்படிச் சுரு க்கிவிட்டீர்கள் ?

பாதிரியார் : ஆனால் எங்கள் ஏசுபிரான் கடவுளின் வார்த்தைகளை பெற்றதை அற்புதங்கள் மூலம் நிரூபித்து இருக்கிறாரே !

காந்திஜி — முகமதுவும்  அப்படித்தான் சொல்கிறார். நீங்கள் கிறிஸ்து சொல்லுவதை நம்பினால் முகமது சொல்வதையும் நம்பவேண்டும். இந்துக்கள் சொல்வதையும் நம்பவேண்டும்.

பாதிரியார் : ஆனால் தன்னால் அற்புதங்களை செய்ய இயலாது என்று முகமது சொல்லியிருக்கிறார் .

காந்திஜி : இல்லை. கடவுள் இருப்பதை அற்புதங்கள் மூலம் நிரூபிக்க அவர் விரும்பவில்லை. ஆனால் அவரும் கூட தனக்கான செய்தி இறை வனிடமிருந்து வந்ததாகவே சொல்கிறார்.

13-3-1937 ஹரிஜன் பத்திரிகை

Source book – Hindu Dharma, M K Gandhi, Navajivan Publishing House, Ahmedabad, 1950)

 –subham—

Tags -விக்கிரக ஆராதனை, கிறிஸ்தவ  பாதிரியார் ,காந்திஜி ,வாக்குவாதம், ஒரே கடவுள் , முகமது, முஸ்லீம் , மசூதி, சர்ச்

மாக்ஸிம் கார்க்கியை அயர வைத்த இந்திய யோகி! (Post No.11,962)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,962

Date uploaded in London –   May 3 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மாக்ஸிம் கார்க்கியை அயர வைத்த இந்திய யோகி!

                                                                                        ச.நாகராஜன்

மாக்ஸிம் கார்க்கியின் பெயரை கேள்விப்படாதவர் இலக்கிய உலகில் இருக்க முடியாது.

எழுத்துலகில் சோஷலிஸம், யதார்த்தம் இரண்டிற்கும் தந்தை கார்க்கி என புகழப் படுகிறார்.

ரஷியரான இவர் 28-3-1868இல் பிறந்தார். 18-6-1936இல் 68ஆம் வயதில் மறைந்தார்.

உலகின் பல நாடுகளுக்கும் சென்றவர்.

இவரது ‘தாய்’ என்ற புத்தகம் முதலில் அமெரிக்காவில் தான் பிரசுரமானது என்பது ஒரு சுவையான செய்தி.

பல தோல்விகளையும் துக்கங்களையும் தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலைக்கு முயன்றார். அது தோல்வியில் முடிந்தது. உடம்பில் குண்டு பாய்ந்த போதும் கூட பிழைத்துக் கொண்டார்.

இவரது வாழ்வில் நடந்த ஒரு சுவையான சம்பவம் இவர் இந்திய யோகி ஒருவரைச் சந்தித்தது தான்!

இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டு எழுதி இருப்பவர் புரபஸர் நிகோலஸ் ரோயரிச். (Prof. Nicholas Roerisch)

அவர் கூறும் சம்பவம் இது தான்:-

ஒரு நாள் நண்பர்கள் கூட்டத்தில் கார்க்கி தனது சுவையான குணாதிசயத்தின் ஒரு பகுதியை வெளியிட்டதை நான் இப்போது நினைவு கூர்கிறேன்.

 யோகிகளைப் பற்றியும் அதீத உளவியல் ஆற்றல்களைப் பற்றியும், அதன் தாயகமான இந்தியாவைப் பற்றியும் நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். எல்லோரும் மௌனமாக இதைக் கேட்டுக் கொண்டிருந்த கார்க்கியையே பார்த்தோம். ‘ஒன்றுமே அவர் சொல்லவில்லையே! கடுமையான விமரிசனம் அவரிடமிருந்து வரும்’ என்று எதிர்பார்த்தோம்.

ஆனால் அனைவரும் எதிர்பார்க்காதபடி தனது அனுபவம் ஒன்றை அவர் பகிர்ந்து  கொண்டார்.

 “ஹிந்துக்கள் அருமையான மேன் மக்கள். எனது நேரடி அனுபவம் ஒன்றை உங்களுக்குக் கூறுகிறேன். காகஸஸில் ஒரு சமயம் ஒரு ஹிந்துவைச் சந்தித்தேன். அவரைப் பற்றிய ஏராளமான கதைகள் உலவி வந்தன.  ஆனால் அந்தச் சமயத்தில் அதை நான் நம்பவில்லை.  கடைசி கடைசியாக ஒரு நாள் அவரை  நேரில் சந்தித்தேன். நான் இப்போது கூறப் போவது என் கண்ணால் நானே கண்டதாகும்.

ஒரு பெரிய நூலை எடுத்த அவர் வானில் அதை வீசினார். அது அப்படியே வானில் நின்றது. நான் ஆச்சரியப்பட்டுப் போனேன். பிறகு என்னைப் பார்த்த அவர், “உங்களுக்கு ஏதாவது போட்டோ ஆல்பம் பார்க்க வேண்டுமா? எந்தப் படங்கள் உங்களுக்குப் பிடிக்கும். அதைச் சொல்லுங்கள்” என்றார்.

 நான், “இந்திய நகரங்களைப் பார்க்க விரும்புகிறென்” என்று சொன்னேன்.

உடனே அவர் தனது ஆல்பத்தை என்னிடம் கொடுத்து, “இதோ பாருங்கள், இந்திய நகரங்கள்!” என்றார்.

அந்த ஆல்பம் தகதகவென பாலிஷ் செய்யப்பட்ட பித்தளைத் தகடுகளைக் கொண்டிருந்தது.  அதில் ஏராளமான இந்திய நகரங்கள், கோவில்கள் மற்றும் இதர காட்சிகள் இருந்தன. அந்த ஆல்பம் முழுவதையும் ஆர்வத்துடன் கவனமாகப் பார்த்தேன். பிறகு அதை மூடி அவரிடம் கொடுத்தேன். 

அவர் புன்னகையுடன் என்னப் பார்த்துக் கூறினார் :” நீங்கள் இந்தியாவின் காட்சிகளைப் பார்த்து விட்டீர்கள் இல்லையா?”

 பிறகு ஆல்பத்தை மேலே வீசினார். பிறகு அதை மீண்டும் என்னிடம் தந்தார். அந்த ஆல்பத்தைப் பிரித்துப் பார்த்தேன். என்ன ஆச்சரியம், அதில் படங்களே இல்லை. வெறும் பளபளவென்று மின்னும் பித்தளைத் தகடுகள் மட்டுமே இருந்தன! ஹிந்துக்கள் உண்மையிலே குறிப்பிடத்தக்க அளவு மேன்மையான மக்கள்!”

அனைவரும் இதைக் கேட்டு அயர்ந்து போனார்கள். 

இந்தியா பற்றிய கார்க்கியின் அபிப்ராயம் மிக உயர்ந்த ஒன்று! 

***

ஆதாரம் & நன்றி கொல்கத்தா வார இதழ் ட்ரூத்,

தொகுதி 4 இதழ் 25 தேதி : 2-10-1936

Gandhiji on Talking to Dead People through Mediums (Post No.11,961)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,961

Date uploaded in London – –  May 2 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx


In reply to a correspondent Gandhiji wrote

“ I never receive communications from the spirits of the dead. I have no evidence warranting a disbelief in the possibility of such communications. But I do strongly disapprove of such practice of holding or attempting to hold such communications. They are often deceptive and products of imagination. The practice is harmful both to the medium and the spirits, assuming the possibility of such communications. It attracts and ties to the earth the spirit so invoked, whereas its efforts should be to detach itself from the earth, and rise higher. A spirit is not necessarily purer because it is disembodied. It takes with it most of the frailties to which it was liable when on earth.  Information or advice, therefore, given by it need not be true or sound. That the spirits like communications with those on earth is no matter for pleasure.  On the contrary it should be weaned from such unlawful attachment. So much for the harm done to the spirits.

As for the medium, it is a matter of positive knowledge with me and all those within my experience have been deranged or weak brained and disabled for practical work  whilst they were holding, or  thought they were holding, such communications.  I can recall no friend of mine who having held such communication   had benefitted in any way”.

Young India 12-9- 1929

Xxx

My Experience with Talking to Dead

This happened 60 years ago. When I was a school student in Madurai, we used to visit Madurai Adheenam Mutt and discuss various matters with the chief of the Mutt. Then Adheena karthar , Chief of Mutt, was a learned scholar and has written a book in Tamil about the State of the Spirits and Talking Procedures with the Spirits. We bought the Ouija board from the Mutt and started “playing”  with it. As soon as we (my brothers and friends) come back from Setupati High School that was our pastime every day for several months. We were all wonderstruck when our fingers were put on a coin in the middle of the board, moved very fast and answered our questions. We invited great poets like Bharati and also our dead forefathers. We asked various types of questions. Nothing concrete came from such answers. Some questions were never answered. And one day there was a big fight between my brother and my classmate who acted as Mediums. Then we stopped using Placnchette (Ouija) completely thinking that the spirits caused the fight or enmity. But Madurai Adheenam Chief had given lot of anecdotes in his book to prove that it is useful to communicate with the spirits of the dead..

Xxx

Psychologists try to explain this phenomenon. To my surprise, there was a programme in TV here (in London) about a group in East London conducting weekly sessions of Communicating with the Spirits.

Scientific investigation (from Wikipedia)

The ouija phenomenon is considered by the scientific community to be the result of the ideomotor response. Michael Faraday first described this effect in 1853, while investigating table-turning.

Various studies have been conducted, recreating the effects of the ouija board in the lab and showing that, under laboratory conditions, the subjects were moving the planchette involuntarily. A 2012 study found that when answering yes or no questions, ouija use was significantly more accurate than guesswork, suggesting that it might draw on the unconscious mind.

xxx

The planchette is guided by unconscious muscular exertions like those responsible for table movement. Nonetheless, in both cases, the illusion that the object (table or planchette) is moving under its own control is often extremely powerful and sufficient to convince many people that spirits are truly at work … The unconscious muscle movements responsible for the moving tables and Ouija board phenomena seen at seances are examples of a class of phenomena due to what psychologists call a dissociative state. A dissociative state is one in which consciousness is somehow divided or cut off from some aspects of the individual’s normal cognitive, motor, or sensory functions.

–Pseudoscience and the Paranormal (2003)Neurology Professor Terence Hines

–subham—

Tags- Gandhi, on Spirits of Dead, Talking to spirits, Ouija board, Mediums, My experience, Maduri Adheenam

ஆவிகளுடன் பேசுவது நல்லதா? காந்திஜி பதில்; லண்டன் சுவாமிநாதனின் சொந்த அனுபவம் (11,960)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,960

Date uploaded in London – –  May 2 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 இறந்து போன உறவினர் அல்லது நண்பர்களுடன் பேசுவது உண்மையா? அது நல்லதா? என்று கேள்வி கேட்ட ஒருவருக்கு காந்திஜி எழுதிய பதில் இதோ: (கீழே மதுரையில் எனக்கு ஏற்பட்ட சொந்த அநுபவத்தையும் எழுதியுள்ளேன் – லண்டன் சுவாமிநாதன்)

காந்திஜி எழுதிய பதில்:

 இறந்து போனவர்களின் ஆவிகளிடமிருந்து எனக்கு எப்போதும் செய்திகள் கிடைத்தது இல்லை. அப்படி இறந்து போனோருடன் தொடர்புகொள்ளும் சாத்தியம் இல்லவே இல்லை என்று சொல்லவும் என்னிடம் ஆதாரம் எதுவும் இல்லை.ஆனாலும் இறந்து போனவர்களுடன் தொடர்புகொள்ள முயற்சிப்பது அல்லது தொடர்புகொள்ளுவதை நான்  கடுமையாக எதிர்க்கிறேன்.பெரும்பாலும் அவைகள் ஏமாற்று வித்தைகள் அல்லது மனதின் கற்பனைகளே. ஒருவேளை அப்படித் தொடர்புகொள்வது சாத்தியம் என்று வைத்துக்கொண்டாலும், அது மீடியமாகச் செயல் படுவோருக்கும் ஆவிகளுக்கும் தீங்கு பயப்பதே. (இறந்து போன்றவர்களுடன் தொடர்புகொள்வோரை மீடியம் என்பார்கள்).எந்த ஆவியை நாம் அழைக்கிறோமோ அதை பூமியுடன் கட்டிப்போட முயற்சி செய்வதாகும்.உண்மையில் பூமியிலிருந்து விடுபட்டு அது உயர்  நிலையை அடைய முயற்சிக்க வேண்டும் . உடலிலிருந்து விடுபட்டவுடன் அவைகளை தூயவை  என்று நம்புவதற்கில்லை.பூமியில் வசித்தபோது இருந்த பலவீனங்களில் பெரும்பாலானவைகளுடன்தான் ஆவிகள் இருக்கும் . ஆகையால் அவை தரும் தகவலோ புத்திமதியோ உண்மையாகவோ, ஆதாரமானதாகவோ இராது . பூமியிலுள்ளோருடன் தொடர்பு கொள்ள , ஆவிகள் ஆசைப்படுகின்றன என்ற கருத்தும் இன்பம் தரக்கூடியதல்ல. அப்படி விரும்புவதும் தர்மவிரோதமானது அதை நாம் தவிர்க்க உதவ  வேண்டும் . அல்லது அவைகளுக்கு தீமை செய்தது போலாகும்.

மீடியம் ஆக செயல் படுவோர் பற்றி    நான் அறிவது என்னவென்றால் அவர்கள் புத்தி சுவாதீனம் இல்லாதவர்களாகவோ பலவீனமான புத்தி உடையவர்களாகவோ இருப்பதை அறிவேன். அவர்கள் அப்படி ஆவியுடன் பேசும் நம்பிக்கை இருந்தவரை உருப்படியான வேலைகளையும் செய்ய முடியவில்லை . அப்படிப்பட்ட ஆவி உலகத் தொடர்பினால் பலன் அடைந்த எந்த நண்பரையும்  நான் அறியேன் .

யங் இந்தியா பத்திரிகை Young India 12-9-1929

xxxx

லண்டன் சுவாமிநாதனின் சொந்த அனுபவம்

சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையில் நடந்ததை எழுதுகிறேன். நானும் என் சகோதர்களும் மதுரையில் சேதுபதி உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் படித்தபோது , தந்தையுடன் மதுரை ஆதீன கர்த்தரை சந்திக்கச் செல்லுவோம். அப்போது ஆதீனகர்த்தராக இருந்தவர் நிறைய கிறிஸ்தவர்களை மீண்டும் தாய்மதத்துக்குக் கொண்டு வந்தார். எனது தந்தை திரு . வெ சந்தானம், மதுரை தினமணி பொறுப்பு ஆசிரியராக இருந்ததால் அடிக்கடி தாய்மதம் திரும்பிய செய்திகளை வெளியிட்டு உதவுவார் .

நாங்கள் அவரைச் சந்திக்கும்போதெல்லாம் தமாஷாகச் சொல்லுவார் பாதிரி எல்லாம் என்னுடன் பேசிய பின்னர் ஜாஸ்திரி ஆகிவிடுவார்கள் (சிலேடையைக் கவனிக்கவும் ; கிறிஸ்த்தவ பாதி +ரி ; இந்துக்கள் ஜாஸ்தி/ சாஸ்தி+ரி.)

நாங்கள் எல்லோரும் சிரித்து மகிழ்வோம்.

தம்பி என்னிடம் பொருட் பிரசாதம் கிடையாது. அருட் பிரசாதம் மட்டுமே உண்டு என்று சொல்லி ஒரு சிட்டிகை விபூதி தருவார். அதன் வாசனை அந்த ஹால் முழுதும் பரவி நிற்கும். அவர் வசித்த திருஞான சம்பந்த மடமோ 1400 ஆண்டு பழமை வாய்ந்தது. கோவிலுக்கு அருகில் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் அங்கு சின்னப்பையனாக சம்பந்தர் தங்கி இருந்தபோது சமணர்கள் தீ வைத்து அவரை எரிக்கப் பார்த்த இடம் அது. அவரோ இந்தத் தீ பையவே சென்று பாண்டியர்க்கு ஆகுக என்று சொன்னவுடன் அது பாண்டிய மன்னர் வயிற்றில் ஏறி சூலை நோயாக மாறியது ..

ஆதீன கர்த்தருடன் பேசிக்கொண்டு இருக்கையில் அவர் அடித்த துண்டுப் பிரசுரங்களைக் கொடுத்து படியுங்கள் என்பார்.அவர் எழுதிய புஸ்தகங்களையும் என் தந்தைக்கு கொடுப்பார் . அவர் எழுதிய விஷயங்கள் எல்லாம் ஆதார பூர்வமாக இருக்கும் . அவர் எழுதிய நூல்களில் ஒன்று

இறந்தவர் வாழும் நிலையும் பேசும் முறையும் 

அந்த நூலை நாங்கள் அண்ணன் தம்பி அத்தனை பேரும் படித்த பின்னர் அதில் ஆர்வம் ஏற்பட்டது. ஞான சம்பந்தர் மடத்தில் அவர் விற்ற பிளான்செட் Planchette/ the ouija board போர்டையும் விலைக்கு வாங்க்கினோம். அதில் நாற்புறமும் ஆங்கில மொழியின் 26 எழுத்துக்களும் இருக்கும். ஏதேனும்  ஒரு காசு அல்லது கேரம்போர்டின் COIN காயினை நடுவில் வைத்துக் கொண்டு , அதில் மீடியம் ஆகச் செயல்படும் இருவர் கைவிரல்களை வைத்துக்கொண்டு,  இறந்து போன ஒருவர் பெயரைச் சொல்லி அழைப்போம். உடனே அந்த COIN காயின் வேகமாக நகரத் தொடங்கும். உன் பெயர் என்ன? நீங்கள் யார்? நான் பரீட்சையில் பாஸ்  ஆவேனா ? என்று வாய்க்கு வந்த கேள்விகளை எல்லாம் நாங்கள் கேட்போம். நம் கை விரல் வைத்த COIN காயின், நம்மை அறியாமலே வெகு வேகமாக நகர்ந்து பதில் சொல்லும். அந்தக் காயின் தொடும் எழுத்துகைளை எல்லோரும் உன்னிப்பாகக் கவனித்து பதிலை எழுதிக்கொள்ளுவோம். ஆமாம் என்றால் ஒய், ஈஎஸ் Y E S என்ற எழுத்துகளைத் தொடும். இப்படி பாரதியார், தாத்தா, பாட்டி என்று ஒவ்வொருவரையாக அழைத்துப் பேசுவோம்..

மாலையில் பள்ளிக்கூடத்திலிருந்து வந்தவுடன் எல்லோருக்கும் இதுதான் பொழுதுபோக்கு. எனது அண்ணன் தம்பிகளில் சிலர் கை விரல் வைத்தால் மிக வேகமாக காயின் நகரும். சில நண்பர்கள் வைத்தாலும் வேகமாக நகரும். சில பெயர்களைச் சொல்லி அழைத்தால் ஒன்றுமே வரா து/ நிகழாது. . மொத்தத்தில் எங்களுக்குக்கிடைத்த பதிலில் உருப்படியாக எதுவுமே இல்லை. மீடியமாகச் செயல்பட்ட என் தம்பிக்கும் பள்ளிக்கூட நண்பருக்கும் இடையே ஒரு முறை சண்டை வெடித்தவுடன் இறந்தோர் தொடர்பை  அறவே விடுத்தோம். சண்டைக்குக் காரணம் ஆவிகள்தான் என்பது எங்கள் துணிபு.

ஆயினும் மதுரை ஆதீன கர்த்தர் எழுதிய நூலில் நிறைய  பாசிட்டிவ் விஷயங்களாக எழுதியுள்ளார். வீட்டில் நடக்கப்போகும் திருட்டைக்கூட இறந்த ஆவிகள் எச்சரிக்கவே, அ வர்கள் உஷாராக இருந்து திருடன் வந்தபோது அதை முறியடித்த கதை போல பல நிகழ்ச்சிகள் அந்தப் புஸ்தகத்தில்  உள்ளன..

லண்டனில் வசித்த போது  ஒருநாள் எத்தேச்சையாக டெலிவிஷனை Switch On ஆன் செய்தபோது இப்படி ஒரு குரூப், வாரம் தோறும் இறந்தோருடன் பேசும் Session செஷனை நடத்துவதையும் அங்கு பெரும் கூட்டம் கூடுவதையும் காட்டினார்கள் எனக்குப் பழைய ஞாபகம் அனைத்தும் திரும்பிவந்தன . இப்போது இந்து மதம் பற்றி காந்தி  என்ற ஆங்கிலப் புஸ்தகம் படித்தபோதும்  நினைவுகள் பளிச்சிட்டன

இறந்த ஆவிகள் இருப்பது உண்மைதான் என்பதை சுவாமி விவேகானந்தரும் உறுதிப்படுத்தி, அப்படிப்பட்ட ஆவிகள் தன்னைத் தொடர்ந்து வந்து விமோசனம் கேட்டபோது, ஒரு முறை இறைவனிடம் அழுத்தமாக வேண்டிக்கொண்ட பின்னர் அவைகள் தன்னைத் தொடரவில்லை என்றும் எழுதியுள்ளார்.

ஆனால் பெரும்பாலோருக்கு இவை மனப் பிரமைதான். பலவீனம்தான் உண்மை இல்லை.

இதுபற்றி விக்கிபீடியா முதலிய கலைக்களஞ்சியங்களில் உய்ஜா போர்டு என்ற தலைப்பில் நிறைய விஷயங்கள் உள்ளன. ஒரு காசு அல்லது காயின் மீது கை வைத்தவுடன் எப்படி அது வேகமாக போர்டில் நகர்ந்து நாம் கேட்ட கேள்விகளுக்கு எழுத்து மூலம் பதில் சொல்கிறது? எங்கிருந்து அந்த சக்தி நம் மீது பிரவேசிக்கிறது? என்பன பற்றி நிறைய ஆராய்ச்சிக் கட்டுரைகள் விஞ்ஞான சஞ்சிகைகளில் வெளிவந்திருக்கின்றன. அவை அனைத்தும் இறந்த ஆவியுடன் பேசுவது பொய் என்றும் உடலில் பாயும் சக்தி the ideomotor response ஐடியோமோட்டர் செயல்பபாடு என்றும் காட்டுகினறன இல்லை அல்லது ஆமாம் என்ற கேள்விகளின் பதில்கள் பெரும்பாலும் உண்மையா வருகின்றன. நம்முடைய உள்மனம்/ அடி மனது இதைச் செய்கிறது என்றும் உள்ளவியல் (Psychologists) அறிஞர்கள் செப்புவர்

Scientific investigation (from Wikipedia)

The ouija phenomenon is considered by the scientific community to be the result of the ideomotor response. Michael Faraday first described this effect in 1853, while investigating table-turning.

Various studies have been conducted, recreating the effects of the ouija board in the lab and showing that, under laboratory conditions, the subjects were moving the planchette involuntarily. A 2012 study found that when answering yes or no questions, ouija use was significantly more accurate than guesswork, suggesting that it might draw on the unconscious mind.

xxx

The planchette is guided by unconscious muscular exertions like those responsible for table movement. Nonetheless, in both cases, the illusion that the object (table or planchette) is moving under its own control is often extremely powerful and sufficient to convince many people that spirits are truly at work … The unconscious muscle movements responsible for the moving tables and Ouija board phenomena seen at seances are examples of a class of phenomena due to what psychologists call a dissociative state. A dissociative state is one in which consciousness is somehow divided or cut off from some aspects of the individual’s normal cognitive, motor, or sensory functions. Pseudoscience and the Paranormal (2003)Neurology Professor Terence Hines

(Go to Wikipedia for more information)

–subham—

Tags- மதுரை ஆதீன கர்த்தர், இறந்தவர் வாழும் நிலையும் பேசும் முறையும் , லண்டன் சுவாமிநாதன், சொந்த அனுபவம், ஆவிகளுடன் பேசுவது , காந்திஜி

Saptasrngivasini, Renuka Devi :108 Famous Hindu Shrines in Maharashtra -7 (Post No.11,959)

Renuka Devi Temple, Mahur

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,959

Date uploaded in London – –  May 2 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Of the six famous Sakti shrines of Maharashtra, we had the Darshan (View) of Kolhapur Mahalakshmi and Tuljapur Bhavani yesterday. Let us visit ‘Seven Hill’ Top Devi Temple- Saptasringinivasini Devi Shrine now.

Part 7

34.Saptasringi nivasini Devi

Shree Sapta shrungi Gad is situated at a distance of 60 km from Nashik in Kalwan Tahsil.

The temple is situated at 4659 feet above sea level, on a hill surrounded by seven peaks. It is considered Ardha Shaktipeeth out of Sadetin Shakti Peeths in Maharashtra.

What is Sade Tin?

Sade tin in Hindi means Three and a half. The story is,

Daksha, father of Shakti/Devi, started a Yajna (Fire ceremony). He invited all deities except Shakti’s husband Shiva.

However, Shakti took the decision to attend the Yagna. Sati was badly treated when she objected to the Yajna without her husband; and in anger, Sati killed herself by self immolation. When Shiva knew that, he took Vira bhadra’s avatar and destroyed Dakshha’s Yajna and cut off his head. Shiva then picked the remains of Satis’s Body and performed the Taandav, the celestial Dance of Destruction. Frightened by destruction other Gods requested Vishnu to intervene to stop this Tandav of Shiva. As a response, Vishnu used his Sudarshan Chakra on Satis’s Corpse, and Satis’s body parts fell at several places in the country. Each of the places is considered Sakti Peethas and were deemed places of great spiritual import. There is a total of 50+ such locations where body parts of Goddess fell.

Sade tin in Hindi means Three and half.

Three and a half Shakti Peethas are in Maharashtra where body parts fell. They are

1.Mahalakshmi Temple,

2.Tulja Bhavani Temple

3. Renuka Temple at Mahur  and

Saptashrungi Temple of Vani in Nashik district. This is known as a half (sade) Shakti Peeth of Goddess Shakti because not a full, but half body part, landed.

The figure of the goddess is about eight feet high, carved in relief out of the natural rock. She has eighteen hands ,nine on each side, each hand grasping a different weapon. Saptashringa Gad is a place where Goddess Bhagawati dwells. Saptashringa signifies seven horned/mountain peaks. Nanduri village is situated at the foot of the Saptashringa Gad.

The Saptashringi hill has variety of flora having medicinal worth. There are various kunds/tanks like Kalikund, Suryakund and Dattatraya Kund. Opposite to the Saptashrind, to the east, divided by the deep ravine, is Markanedya hill. This is said to have been the abode of the sage Markendeya. During his lifetime, had written Durga Saptashati. Large fairs are held in Chaitra and Ashwina Navratri.

One has to climb 510 steps to reach the temple. There is also a circumlocutory path used by pilgrims to do parikrama around the temple. This path is a steep rocky route. The hills are covered with verdant forests.

Gondhal, an ancient folk dance-drama is presented before the deity by devotees belonging to Gondali, Bhutye, Aaradhi and Naik communities. The Gondhali performance, usually held at night, is accompanied by singing with accompaniment of musical instruments.  They sing and dance about the Leelas of Goddess (Divine Stories).

xxx

Saptashrungi Ropeway, Nashik Overview

Saptashrungi is situated on top of a hillock and a strenuous trek uphill is required to reach it. So the ropeway was installed here for the ease of the pilgrims The funicular trolley started operating in July 2018 and has a total of 6 compartments that can accommodate 10 people each.

Once you get down at the station, there are still around 20 steps that you will need to climb in order to reach the shrine. At present, the trolley carries around 5000 pilgrims on a daily basis.

xxxx

35.Vani

Near the foot of Saptasrngi Hill is Vani. The hill goddess condescends to be worshipped here by those who, from old age or other infirmity , are unable to climb the hill. The festival is held on Chaitra Krishna Ashtami.

Xxx

36.Mahur Renuka Devi Temple

Mahur or Mahurgad is in Nanded district of Maharashtra, it is the birthplace of Hindu God Dattatreya. Near Mahur, There is a confluence of River Penganga and River Pus at Hiwara Sangam village,

There are three mountains in Mahur. The first one is having Renuka Mahar devi mata Temple, who is mother of the god Parshuram. Other two are called Datta Shikhar and Atri Anasuya Shikar Temples. Datta Shikhar is highest of all.

Temple to Renuka Mata is considered one of the three and half Shakti Peethas (temples) in the state. The nine-day Navaratri festival at the temple is famous for its unique rituals. Thousands of people arrive to celebrate Navratri at the abode of Renuka Devi.

The “Matru Tirth” (means sacred place for Mother’s worship) Place on this Mountain is the one which is where today stands a lake, is “Antyeshti Sthan” (Means place where last rites were performed

There are many other temples in Mahur like Rishi Jamdagni Mahar Temple, Lord Parshuram Mahar Temple, Kalika Mata Temple, Devdevshwar Temple, and also the Caves called Pandav Leni. There is Fort in Mahur. This was built by Gond kingdom of Chandrapur. This fort is quite large.

Mahur finds mention in the ancient Devi Bhagawatam as “Matripura” or “Matapur“, where it is mention as one of the famous pilgrimages.

Renuka devi Temple is located on a hill -top with caves around it. Renuka devi is adorned with various gold ornaments such as the golden flower earrings, gold garlands, nose-ring etc.

An ascend of around 250 stone cut steps on the Sahyadri ranges, with the breath taking view of Mahur sprawling beneath, surrounded by caves is the temple of Renuka Devi. The temple is a Shaktipeeth and is considered the birthplace of Renuka, mother of the great Parashurama. It is believed that a Yadava King of Devagiri had constructed it about 800-900 years ago.

The  legend says that Renuka was decapitated by Parashurama on the orders of his father and the temple is where her head fell. She was later brought back to life by Sage Jamadagni as a boon to his son, Parashurama.

This temple is part of the famous Sade Theen Shakthipeet Darshan Yatra and Shaktipeethas.

To be continued………………………….

Xxxx subham xxxx 

 Tags- Renuka devi, temple, Mahur, Saptasringi, Vani, Sade tin, Sakti peetha

ஏழுமலை உச்சியில் ஒரு தேவி: 108 மஹாராஷ்டிர புனிதத் தலங்கள்-8 (Post.11,959)

Picture of Saptasrngi Temple

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,959

Date uploaded in London – –  May 2 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

மஹாரஷ்டிரத்தில் ஆறு பிரபல சக்திக்க கேந்திரங்கள் இருப்பதாக சொன்னேன். நேற்று கோலாப்பூர் மகா லட்சுமியையும் துல்ஜாபூர் சிவாஜி மஹராஜ் புகழ்- பவானி தேவியையும் தரிசித்தோம். இன்று முதலில் ஏழுமலை உச்சியில் காடுகளுக்கு இடையே வீற்றிருக்கும் சப்த ச்ருங்கி மாதாவை தரிசிப்போம். ஸப்த= ஏழு , ச்ருங்கி = மலை, சிகரம்

Part 8

34. சப்த ச்ருங்கி மாதா

வாணி என்று அழைக்கப்பட்டும் இந்த சக்தி கேந்திரம்/ ஸ்தலம் , நாசிக் நகரிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.

சப்த ச்ருங்கி வாஸினி என்று அழைக்கப்படும் இந்தக் கோவில் ஒரு காலத்தில் முதியோர்கள் செல்ல முடியாத கோவிலாக இருந்தது  .ஏனெனில் மலையில் 500 படிகளுக்கு மேல் எற வேண்டும். இப்பொழுது கம்பி ரயில் வந்து விட்டது .20 படிகள் ஏறினால் தேவி தரிசனம் கிடைத்துவிடும் .கடல் மட்டத்திலிருந்து 4659 அடி உயரத்தில் ஏழு மலைகளுக்கு இடையே, இயற்கை வனப்பு சூழ்ந்த கோவில் இது. ஆந்திரத்திலுள்ள ஏழு மலையான் – திருப்பதி பாலாஜி கோவிலை இதற்கு ஒப்பிடலாம் . இது சாடே தீன் – மூன்றரை தலங்களில் ஒன்று

அது என்ன மூன்று அரை கணக்கு ?

சக்தியின் தந்தை தக்ஷன்.

அவன் ஒரு யாகம் நடத்தினான்.

சக்தியின் கணவனான சிவபெருமானை மட்டும் அழைக்காமல் மற்ற எல்லா தெய்வங்களையும் அழைத்தான்.. கணவனை அவமதித்த ஒரு ஆளை சும்மாவா விடுவாள் பத்தினிப் பெண்?  நேரே சென்று தந்தையைக் கண்டித்தாள் அவன் ‘போடி , போ . நீயும் ஆச்சு; உன் தாடி வச்ச புருஷனும் ஆச்சு’ என்று பகடி செய்தான். தேவி, அவமானம் பொறுக்க மாட்டாமல், தீயில் விழுந்து  தன்னைத்தானே உயிர்த் தியாகம் செய்தாள் ; செய்தி சிவனின் காதுகளை எட்டியது.

சிவன் என்னும் சாந்த சொரூபம் மாறி , ருத்ரன் என்னும் கோர சொரூபம் எடுத்தார். அந்த மூர்த்தியின்  பெயர் வீரபத்ரன்;  அண்டம் குலுங்க நடனமாடி  தக்ஷனின் யாகத்தை உருக் குலைத்தார் ; கையில் எடுத்தார் கருகிய மனைவியின் சடலத்தை ; ஆட்டம் நிற்கவில்லை . எல்லோரும் விஷ்ணுவை வேண்ட, அவர் பூமராங் Boomerang போல செயல்படும் தசுதர்சன சக்கரத்தை ஏவி, தேவியின் உடலை துண்டு துண்டாக்கினார். அந்த உடற்பகுதிகள் பூமியில் விழுந்த இடம் எல்லாம், சக்தியின் அருள் பொங்கும் சக்தி பீடங்களாகின. பல லட்சம் மக்களை ஆகர்ஷிக்கும் அருள் கோவில்களாக மாறின. இப்படி மூன்று பகுதிகள் விழுந்த இடங்களான கோலாப்பூர் , துல்ஜாபூர், மாஹுர் பெரிய தலங்கள் ஆயின. உடலின் அரை பகுதி மட்டும் விழுந்த சப்த ஸ்ருங்கம் (ஏழு மலை ) அரை (சாடே) தலம் ஆகியது .

இங்குள்ள தேவியின் உருவம் எட்டு அடி உயரம் உடையது இயற் கையான மலைப் பாறையில் செதுக்கப்பட்டுள்ளது 9+9 என்று இரண்டு புயத்திலும் 18 கைகள். பல்வேறு ஆயுதங்களைத் தாங்கி நிற்கிறாள் தேவி.’பகவதி’ என்றும் பக்தர்கள் அழைப்பர். மலை அடிவாரத்தில் நந்தூரி என்ற கிராமம் இருக்கிறது.

இந்த மலையிலும் காடுகளிலும் மூலிகைகளும் பறவை, மிருக இனங்களும் அதிகம் இருப்பதால் இயற்கை ஆர்வலர்களும் இங்கே படை எடுக்கின்றனர். நிரைய ஏரி   குளங்களும் இருக்கின்றன. அவைகளுக்கு காளி குண்டம்தத்தாத்ரேய குண்டம், சூர்ய குண்டம் என்று பல பெயர்கள். ஒரு பள்ளத்தாக்கு பகுதியை அடுத்து நிற்பது மார்கண்டேய மலை. அங்குதான் மார்க்கண்டேய மகரிஷி, தேவி மீது துதி பாடி துர்கா சப்த சதியை இயற்றினார் என்றும் சொல்லுவார்கள் .

சித்திரை மாத, ஆஸ்வீன (தமிழ் பஞ்சாங்கப்படி புரட்டாசி)  மாத நவராத்திரிகளில் பெரிய திருவிழாக்கள் நடைபெறும்.

கோவிலுக்குச் செல்ல 510 படிகள் ஏறியாக வேண்டும். இது தவிர வலம் (பரிக்ரமம்) வரும் நீண்ட மலைப்பாதையும் உண்டு; கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்பவருக்கு ஏற்ற பாதை. அழகான காடுகளையும் காணலாம்.

2018 முதல் இயங்கி வரும் மலை ரயில் பாதை ஒவ்வொரு நாளும் 5000 பேரை கோவிலுக்கு அழைத்துச் செல்கிறது. படி ஏற முடியாதோர் இதை பயன்படுத்துவார்கள் .

Xxx

35. வாணி மலை அடிவாரக் கோவில்

வாணி என்னும் இடத்தில் மலை அடிவாரக் கோவிலும் அமைந்துள்ளது. முன்னர் மலை ரயில் பாதை இல்லாத காலத்தில், வயதானவர்கள் தரிசிப்பதற்காக இந்தக் கோவில் எழுப்பப்பட்டது ; சித்திரை மாத கிருஷ்ண பட்ச அஷ்டமியில் பெரிய விழா நடைபெறும்.

Xxxx

36. மாஹுர் ரேணுகா தேவி கோவில்

இந்தக் கோவில் நான்டெட் மாவட்டத்தில்  மாஹூர் என்னும் இடத்தில் உள்ளது  மாஹூர்,  நான்டெட் நகரிலிருந்து1 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்த ஊர்.. அருகிலேயே பென்கங்கா , புஸ் என்ற இரண்டு நதிகள் சங்கமம் ஆகும் இடம் இருக்கிறது. தத்தாத்ரேயரின் பிறந்த இடம் என்ற பெருமையும் உண்டு. மூன்று மலைகள் இருக்கும் இந்த ஊரில் ஒரு குன்றில் ரேணுகா தேவி கோவிலும் மற்ற இரண்டில் தத்த சிகர கோவிலும் அத்ரி-அனுசூயா சிகர கோவில்களும் இருக்கின்றன. இது சக்தி பீடங்களில் ஒன்று..

நவராத்திரியின் போது பெரிய விழா நடைபெறுகிறது.

ரேணுகா , பரசுராமரின் தாய். அவரது தந்தை ஜமதக்கினியின் உத்தரவின் பேரில் தாயின் தலையைத் துண்டித்துப் பின்னர் தவ வலிமையால் தாயை உயர்ப்பித்தார்.

தேவி பாகவதத்தில் இதை மாத்ரி புரம் மாதாபூர் என்று யாத்திரைத் தலப் பட்டியலில் குறிப்பிடுகின்றனர்.

கோவிலை அடைய 250 படிகள்  ஏற வேண்டும்.இந்த மலையில் பல

குகைகள் இருக்கின்றன சில குகைகளை பாண்டவர் குகைகள் என்பர். ஜமதக்னி பரசுராமர் கோவில்கள் காளிகா மாதா என்ற பெயர்களில் கோவில்கள்  இருக்கின்றன மேலே ஏறிப் பார்த்தால் சஹ்யாத்ரி என்று புராணங்கள் வருணிக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையின் முழு அழகையும் ரசிக்கலாம். பிரம்மிப்பூட்டும் காட்சியாக இருக்கும்..

 இந்தக் கோவிலிலும் கோந்தால வகுப்பினர் கோந்தாலா நடனம் ஆடுகின்றனர். தேவியின் லீலைகளைச் சொல்லும் கதைகளை அவர்கள் நடனம் ஆடிக்காட்டுவர் .

யாதவ அரசர்கள் நிர்மாணித்த இந்தக் கோவில் 800 அல்லது 900 ஆண்டுகளுக்கு முற்பட்டது.

To be continued……………………………..

Tags — கோந்தாலா நடனம் ,சக்தி பீடம், மாஹுர், ரேணுகா தேவி கோவில், சப்த ச்ருங்கி,மஹாராஷ்டிர, புனிதத் தலங்கள் 8, சாடே தீன் , மூன்றரை தலம்

    SNagarajan Article Index : APRIL 2023 (Post No.11,958)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,958

Date uploaded in London –   May 2 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

    SNR Article Index : APRIL 2023

APRIL 2023

1-4-23 11859   S Nagarajan’s February, March 2023 Articles Index                                                   2-4-23 11862   ஓட்டுப் போட டிப்ஸ் தரும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி!        3-4-23 11864   காலம் வருமுன்னே காலன் வரமாட்டான்! – 3                           4-4-23 11867   வால்மீகி ராமாயணத்தில் வாகனங்கள்! – ராமாயண   வழிகாட்டி.                                                                                                                             5-4-23 11870    உலகின் மாபெரும் இதிஹாஸம் மஹாபாரதம்! -கம்ப்யூட்டர் ஆய்வு (மஹாபாரத மர்மம்!)      ̀                          6-4-23 11874   ஸ்லோகமும் சோகமும்!                                                                           7-4-23 11877  வாரணவாகனனையும் வென்ற வாரணவாசி?!-   கொங்கு மண்டல சதகம் பாடல் எண் 83.                                                                                   8-4-23 11880  ஒரு பட்டுக் கைக்குட்டையின் கதை!                                                       9-4-23 11883  கலியுகத்தில் உங்கள் உயிர் யாரிடமெல்லாம் இருக்கிறது? (சம்ஸ்கிருதச் செல்வம்)                                                                                               10-4-23 11886  சீதையின் ப்ரதிக்ஞை! (ராமாயண வழிகாட்டி!)                11-4-23 11891  சீதையின் ப்ரதிக்ஞை! – 2 (ராமாயண வழிகாட்டி!)               12-4-23 11894  உணவு உங்கள் உடலுக்கு எப்படி சக்தி ஊட்டுகிறது – 5 ஹெல்த்கேர் ஏப்ரல் 23 இதழ் கட்டுரை!                               13-4-23 11897  சீதையைப் பற்றிய ஶ்ரீ ராமரின் ப்ரதிக்ஞை! (ராமாயண  வழிகாட்டி!).                                                                                                                                   14-4-23 11900  சீதையைப் பற்றிய வால்மீகி முனிவரின் ப்ரதிக்ஞை! (ராமாயண வழிகாட்டி!)                                                    15-4-23 11903  காலம் வருமுன்னே காலன் வரமாட்டான்! – 4                               16-4-23 11906   செகுலர் இந்தியர்களுக்கு சில நாடுகளின் அரசியல் சாஸன சட்டங்களைப் பற்றிய ஒரு பார்வை! – 1                                                   17-4-23 11909   செகுலர் இந்தியர்களுக்கு சில நாடுகளின் அரசியல் சாஸன சட்டங்களைப் பற்றிய ஒரு பார்வை! – 2                                                  18-4-23 11912    தங்கப் பல்லக்கில் ஏற மறுத்த ராஷ்டிரபதி!                        19-4-23 11915    வெள்ளிப் பல்லக்கில் ஏற இருந்த சிஷ்யரைத் தடுத்த மஹா சந்நிதானம்!                                                                                                                   20-4-23 11918 இரண்டாம் உலகப் போர் – ஆரம்பமும் முடிவும்! யுத்தத் துளிகள் – 1                                                                                                                              21-4-23 11921 இரண்டாம் உலகப் போர் – யுத்தத் துளிகள் – 2   கிண்டர் டிரான்ஸ்போர்ட்                                                 22-4-23 11924 இரண்டாம் உலகப் போர் – யுத்தத் துளிகள் – 3  நாஜிக்களின் சித்திரவதையால் பிறந்த புதிய மின்னல் வேகக் கணிதம்!

23-4-23 11927 இரண்டாம் உலகப் போர் – யுத்தத் துளிகள் – 4  நாஜிக்களின் சித்திரவதையால் பிறந்த புதிய மின்னல் வேகக் கணிதம்!                           24-4-23 11931 இரண்டாம் உலகப் போர் – யுத்தத் துளிகள் – 5  நாஜிக்களின் சித்திரவதையால் பிறந்த புதிய மின்னல் வேகக் கணிதம்! 

25-4-23 11935 இரண்டாம் உலகப் போர் – யுத்தத் துளிகள் – 6   சோஹம் ஸ்டேஷனில் நேர்ந்த சோக விபத்து!

26-4-23 11938 இரண்டாம் உலகப் போர் – யுத்தத் துளிகள் – 7  ஹிட்லருக்கு அழிவைத் தந்த தவறான ஸ்வஸ்திகா!

27-4-23 11941 இரண்டாம் உலகப் போர் – யுத்தத் துளிகள் – 8 ஜெர்மனியை விட்டு ஓடிய விஞ்ஞானிகள்!                                                                                  28-4-23 11944  இரண்டாம் உலகப் போர் – யுத்தத் துளிகள் –  9 நான் தான் கடவுள்! 

29-4-23 11949   அரசியல்வாதிகளுக்கு பீஷ்மரின் அட்வைஸ்! – மஹாபாரத   மர்மம்                                                                30-4-23 11951 ஃப்யூஸ் போன பல்புகள்!

*** subham ***

Tags- article index, SNR

காந்திஜி வாழ்க்கையில் ராமர் செய்த அற்புதம் ! (Post No.11,957)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,957

Date uploaded in London – –  May 1 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

விக்ரக ஆராதனையில் நம்பிக்கை இல்லாத ஒரு பள்ளிக்கூட ஆசிரியர் மூன்று கேள்விகளை காந்திஜிக்கு அனுப்பி இருந்தார். அவர் 3 கேள்விகளுக்கும் பதில் எழுதினார். மூன்றாவது கேள்விக்கான பதிலை மட்டும் முதலில் காண்போம்

கேள்வி :

இந்துக்கள் போற்றும் (கடவுள்) ஒருவர், அவரது வாழ்க்கையில் , ஏதேனும் தவறுகள் செய்திருக்கலாம் அந்தத் தவறுகளை, அவரைப் போற்றித் துதிபாடுபவரும் செய்தால் அவருக்கு தீங்கு நேரிடுமே. .அந்த உருவத்தை அவர் வழிபட்டால் அந்தத் தவறை அவர் செய்வது சாத்தியம் அல்லவா?

காந்திஜியின் பதில்:

கடிதம்  எழுதியவர் , இந்துக்களின் அவதார தத்துவத்தைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யவில்லை என்றே தோன்றுகிறது. நம்பிக்கையுள்ள ஒரு ஹிந்துவுக்கு அவதார புருஷர் மாசு மருவற்றவர். ஹிந்து பக்தருக்கு கிருஷ்ணன் , பரிபூரணத்துவம் வாய்ந்தவர். மற்றவர்களின் கடுமையான  விமர்சனம் பற்றி அவருக்கு கவலையே இல்லை.

கிருஷ்ணரையும் ராமரையும் வணங்கும் பல லட்சம் பேருக்கு அக் கடவுளரை அதே பெயரைச் சொல்லி வணங்கியதால் வாழ்க்கையே அடியோடு மாறியிருக்கிறது. . எப்படி  இது நடக்கிறது என்பது  எனக்குத் தெரியாது . இது ஒரு மர்மம்.. இதை நான் உள்ளத்தின் மூலமோ அறிவின் மூலமோ  அறிய முயற்சி செய்யவில்லை ஆனால் நீண்ட காலத்துக்கு முன்னரே கடவுள் என்பவரின் அடையாளம் /குணம்  சத்தியம் என்பதை உணர்ந்தேன்.அந்த சத்தியத்தை ராமர் என்ற நாமத்தின் மூலமே அறிந்தேன்.

எனக்கு சோதனை ஏற்பட்ட இருண்ட நேரத்தில் எல்லாம், அந்த ஒரு நாமம்தான் என்னனைக் காப்பாற்றியது .. இன்னும் காப்பாற்றிக்கொண்டு இருக்கிறது.சின்ன வயதிலிருந்தே எனக்கு ஏற்பட்ட பக்தியே காரணமாக இருக்கலாம். என் மீது துளசிதாஸ் ஏற்படுத்திய தாக்கமும் காரணமாக இருக்கலாம்.. இந்த வரிகளை

எழுதும்போது என் சின்ன வயசில் நடந்ததெல்லாம் நினைவுக்கு வருகிறது; அப்போது நான் தினமும் ராமர் கோவிலுக்குப் போவேன். என்னுடைய ராமன் அப்போது அங்கு வசித்தார்.  பாவங்களிலிருந்தும் பயத்திலிருந்தும் என்னைக் காப்பாற்றினார். இது என்னுடைய மூட நம்பிக்கை இல்லை . அந்த ராமர் விக்ரகத்தை வைத்திருந்தவர் கெட்டவராக இருந்திருக்கலாம். அவருக்கு எதிராக நான் எதையும் கேட்டதில்லை.அந்தக் கோவிலில் தில்லுமுல்லுகள் நடந்திருக்கலாம்.. அவை பற்றியும் எனக்குத் தெரியாது.ஆகையால் அவை என்னைப் பாதிக்காது. எனக்கு எது உண்மையாக இருந்ததோ, இன்னும் இருக்கிறதோ, அது பல லட்சம் மக்கள் விஷயத்திலும் உண்மையே . என்னுடைய ஹரிஜன சகோதரர் அவருடைய சக தர்மிகளுடன் , விரும்பினால், இந்தக் கோவில் வழிபாடு விஷயத்தைப் பகிர்ந்து கொள்ளட்டும். ஜாதி இந்துக்கள், , அவர்களுடைய ஹரிஜன சகோதர்களுக்கு ,கோவில்களைத் திறந்துவிடுவது அவர்களின் தலையாய கடமை ஆகும்.

மனித இனத்துக்குத் தேவையான ஆன்மீகத் தேவையை கோவில் வழிபாடு பூர்த்தி செய்கிறது சீர்திருத்தங்களை ஏற்கிறது மனித இனம் வாழும் வரை இதுவும் நீடித்து இருக்கும் ( ஹரிஜன் பத்திரிகை, 18-3-1933)

—எம்.கே .காந்தி

Tags- காந்திஜி வாழ்க்கை, ராமர் ,அற்புதம் , துளசிதாஸ்

Lord Rama Saved Me- Mahatma Gandhi (Post No.11,956)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,956

Date uploaded in London – –  May 1 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

An iconoclast school teacher asked Gandhiji three questions. Here is the third question and Gandhiji’s reply:-

3.The person, whose image a Hindu adores, might have committed some wrongs in his life time. Will not the adorer be harmed by copying those wrongs, which he is likely to copy if he worships his image?

Gandhiji replied,

The third question shows, perhaps, that the correspondent as not taken the trouble of understanding the Hindu theory of incarnations. For the faithful Hindu, his Incarnation is without blemish. Krishna of the Hindu devotee is a perfect being he is unconcerned with the harsh judgement of the critics. Millions of devotes of Krishna and Rama have had their lives transformed through their contemplation of God by these names. How this phenomenon happens I do not know. It is a mystery I have not attempted to prove it. Though my heart and reason long ago realized the highest attribute and name of God as Truth, I recognize truth by the name of Rama.

In the darkest hour of my trial, that one name has saved me and is still saving me. It may be the association of childhood; it may be the fascination that Tulsidas has wrought on me. But the potent fact is there and as I write these lines, my memory revives the scenes of my childhood when I used daily to visit the Ramji Mandir adjacent to my ancestral home. My Rama then resided there. He saved me from many fears and sins. It was no superstition to me. The custodian of the idol may have been a bad man. I know nothing against him. Misdeeds might have gone on in the temple. Again, I know nothing of them. Therefore, they would not affect me. What was and is true of me is true of millions of Hindus. I want my Harijan brother, if he wishes to share this temple worship with the millions of his co-religionists, the so called caste men . It is the latter’s duty to throw open their temples to their Harijan brethren.

Temple worship supplies the felt spiritual want of the human race.it admits of reform. But it will live as long as man lives . (Harijan, 18-3-1933)

— subham –

Tags – Idol worship, Temple worship, Rama, Tulsidas, Gandhi

துல்ஜாபூர், கோலாப்பூர் தேவி கோவில்கள்– 108 புனிதத் தலங்கள் -பகுதி 7 (Post No.11,955)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,955

Date uploaded in London – –  May 1 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

108 மஹாராஷ்டிர மாநில புனிதத் தலங்கள் – Part 7

மஹாராஷ்டிர மாநிலத்தில் ஆறு சக்தி கேந்திரங்கள் உள்ளன. இந்த ஆறும் புகழ்பெற்ற சக்தித் தலங்கள் ஆகும் .

அவையாவன:

1.கோலாப்பூர் அம்பாபாய்/ மகாலெட்சுமி கோவில்

2.துல்ஜாபூர் பவானி கோவில் (சத்ரபதி சிவாஜி புகழ்)

3.மஹாமாயா ரேணுகா கோவில் , மாஹுர்

4.சப்தச்ருங்கி ஜகதாம்பா கோவில் வாணி ஏழு மலை

5.அம்பே ஜோகை யோகேஸ்வரி , அம்பாஜோகை

6.ஒளந்த் யாமை தேவி கோவில்ஒளந்த்

ஆறு கோவில்களைத் தவிர வேறு பல தேவி கோவில்களும் ஊருக்கு ஊர் துல்ஜா பவானி கோவில்களும் உண்டு. அண்மைக் காலத்தில் புகழ்பெற்ற மும்பை மகாலெட்சுமி கோவில், இவைகளில் ஒன்று.

ஒவ்வொரு கோவிலாக தரிசிப்போம்

xxx

பகுதி 7

32.கோலாப்பூர் அம்பாப்பாய்/ மகாலெட்சுமி கோவில்

கோவிலின் சிறப்பு அம்சங்கள்

1. மூன்று அடி உயர மகாலெட்சுமி சிலை

2. பின்புஅர்ச் சுவரில் ஸ்ரீ சக்ர யந்திரம்

3. சிலையின் மேல் புறத்தில் ஐந்து தலை நாகம்

4. தேவியின் அருகில் சிம்ம வாஹனம்

5. இது 1400 ஆண்டுப் பழமையானது ; சாளுக்கியர் காலத்தில் கட்டப்பட்டது.

புனே நகரிலிருந்து பெங்களூரு செல்லும் தேசீய நெடுஞ்சாலையில் 240 கிலோமீட்டர் தொலைவில் கோலாப்பூர் இருக்கிறது பஞ்ச கங்கா நதிக்கரையில் அமைந்த இந்த ஊரில் நிறைய கோவில்கள் இருக்கின்றன.முக்க்கிய நுழைவாயிலின் இரு புறமும் தீப ஸ்தம்பங்கள் இருக்கின்றன.சதுர வடிவ தூண்களோடு கருட மண்டபமும்  உண்டு. கணேஷ் சந்நிதியும் கர்ப்பக்  கிரகத்தை நோக்கி இருக்கும்.

மூன்று மேற்கு நோக்கிய சந்நிதிகளில் நடுவில் அமைந்திருப்பது மஹா லெட்சுமி. இருபுறங்களிலும் இருப்பது மஹா காளி , மஹா சரஸ்வதி கோவில்கள்..

கர வீர என்று அழைக்கப்படும் இந்த க்ஷேத்திரத்தில் கோலாசுரன் என்ற அசுரனை தேவி அழித்ததாக வரலாறு. லெட்சுமிக்கு மேல் சிவலிங்கம்-நந்தி காணப்படும்.. நவக்கிரகங்கள் உள்பட  எல்லாக் கடவுளரும் இங்கே உளர்.

Xxx

சூரிய ஒளி விழும் அதிசயக் காட்சி

ஆண்டில் மக்கள் நடத்தும்  திருவிழா தவிர சூர்ய பகவான்  நடத்தும்  திருவிழாவும் உண்டு.

ஆண்டுக்கு மூன்று முறை சூரிய ஒளி மகாலெட்சுமி சந்நிதியில் நுழையும் பொறியியல் திறனுடன் கோவில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. சூரிய ஒளி மகாலெட்சமியின் கர்ப்பக் கிரகத்தில் அஸ்தமன நேரத்தில் புகும் நாட்களை கிரண உற்சவம்  என்பார்கள் (சூரிய + கிரணம்)

கிரணோற்சவ நாட்கள் :

நவம்பர் – 9, 10, 11 ஜனவரி – 31 பிப்ரவரி  1,2.

இமயம் முதல் குமரி வரை உள்ள கோவில்களில் குறிப்பிட்ட நாட்களில்வழிபடும் விக்கிரகத்தின் மீது  சூரிய ஒளி விழும்படி செய்த பொறியியல் அதிசயம் சுமார் 2000 ஆண்டுகளாக இருப்பது இந்தியாவில் மட்டுமே. இந்துக்கள்தான் வான சாத்திரத்தில் வல்லவர்கள் என்பதையும் பொறியியலில் மன்னர்கள் என்பதையும் இது காட்டுகிறது. ரிக் வேதத்திலும் சூரிய வழிபாடு இருக்கிறது. இன்றுவரை 12 மந்திரங்களை சொல்லிசூரியனுக்கு  நமஸ்காரம் செய்வதும் இந்துக்களிடம் மட்டுமே இருக்கிறது. காயத்ரி என்னும் சூரிய மந்திரத்தை நாள் தோறும் வணங்கும் வழக்கமும் இந்துக்களிடம் மட்டுமே இருக்கிறது. இன்றுள்ள கிழமை வரிசையை உண்டாக்கியவர்களும் இந்துக்களே. திருஞான சம்பந்தரின் கோளறு பதிகத்தில்தான் ஞாயிறு முதல் சனி வரை முதல் முதலில் காணக்கிடக்கிறது .உலகில் எகிப்திலோ பாபிலோனிலோரோமிலோ ஏதென்சிலோ இதே வரிசையில் கிரகங்களின் பெயர்கள் இல்லவே இல்லை . இன்றுள்ள ஆங்கிலக் கிழமைகளிலும் 4 நாட்களில் கிரகங்கள் பெயர்கள் இல்லை.

Xxx

33.துல்ஜாபூர் பவானி கோவில்

சத்ரபதி சிவாஜிக்கு வெற்றியும் வீரத்தையும் தந்தது துல்ஜாபூர் பவானி தேவிதான். அவளே வெற்றி தரும் வீர வாளை அவரிடம் தந்து, மொகலாயப்பேரரசை வீழ்த்தி, ஹிந்து சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்க, உதவியதாகவும் கதைகள் உண்டு .

51 சக்தி பீடங்களில் ஒன்றான துல்ஜாபூர் கோவில் சோலாப்பூர் என்னும் இடத்திலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. குறைந்தது 800 ஆண்டு வரலாறு உடைத்து.

முக்கிய நுழைவாயிலின் பெயர் சர்தார் நிம்பல்கர்; மற்ற இரண்டு வாயில்களுக்கு சிவாஜி மஹாராஜின் தந்தை தாயாரான ஷாஜிஜீஜாபாய் ஆகியோரின் பெயர்களை சூட்டியுள்ளனர்.. வலது புறம் மார்க்கண்டேய மகரிஷிக்கு கோவில் இருக்கிறது. படிக்கட்டில் இறங்கி வந்தால் துல்ஜா கோவிலைக் காணலாம்.இங்குள்ள மூர்த்தத்துக்கு துல்ஜா , துரஜா , த்வரிதா , அம்பா என்று பல பெயர்கள் நிலவுகின்றன. இந்த விக்ரகம் ஸ்வயம்பூ (தானாக உருவாக்கியது; சிற்பிகள் செதுக்கியதல்ல) கோவிலுக்கு முன்னால் யாக குண்டமும் இருக்கிறது விநாயகர், ஆதி சக்தி ஆதிமாதா மங்கள  தேவி , அன்ன  பூர்ணா சிலைகளும் கோவில் வளாகத்தில் இடம் பெற்றுள்ளன.

ஆதி மாயா ஆதி சக்தி கோவிலில் பூஜை முடிந்தவுடன் துல்ஜா கோவிலில் பூஜை துவங்கும்..

முக்கிய திருவிழா – வைசாக பெளர்ணமி

கோவிலில் ஒவ்வொரு நாளும் 4 கால பூஜை நடைபெறும். தமிழ்நாட்டுக்கு கோவில் போலவே அபிஷேகம், ஆராதனை, பள்ளியறை பூஜைகள் உண்டு அம்மனின் ஜெயந்தி திருக்கல்யாணம் முதலியவற்றின்போது வீதி உலா நடைபெறும்.. கோந்தால சமூகத்தினர் ஆடும் ஒருவகை நடனம் கோந்தாலா நடனம் என்று அழைக்கப்படும் . இதில் தேவியின் திருவிளையாடல்களைக் காட்டும் புராணக் கதைகளை நடித்துக் காண்பிக்கிறார்கள்.

துல்ஜாபூரின் மஹிமை காரணமாக ஊருக்கு ஊர் துல்ஜா பவானி கோவில்கள் தோன்றிவிட்டன ஜுன்னார் அருகிலும் சிவநேரி குகைத் தொடரில் ஒரு குகையில் பவானி இருக்கிறாள் . சிவாஜி மஹராஜ் பிறந்த இடம்  சிவநேரி என்பது குறிப்பிடத்தக்கது .

To be continued………………………………………….

Tags- துல்ஜாபூர், கோலாப்பூர், தேவி கோவில்கள், சூரிய ஒளி , அதிசயக் காட்சி