நாகர்களின் பெயர்களைக் கண்டுபிடியுங்கள் (Post No.12,022)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,022

Date uploaded in London – –  20 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

நவ நாகங்கள் எனப்படும் 9 நாகர்களை ‘கலர்’ வழியாக நெளிந்து நெளிந்து தேடுங்கள்; அம்புக்குறி உள்ள இடத்தில் துவங்கி, அது காட்டும் திசையில் செல்லுங்கள்.

பாற்கடலைக்  கடைய உதவிய பாம்பு, விஷ்ணு படுத்திருக்கும் பாம்பு , நள னைக் கடித்த பாம்பு,, பரம பாத சோபான படத்திலுள்ள பாம்புகள் ஆகியவற்றை ஒவ்வொன்றாக நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

 ANSWER

Answers :வாசுகி, ஆதி சேஷன், கார்க்கோடகன்,அனந்தன்., குளிகன்,

தட்சகன், சங்க பாலன், பதுமன் , மகா பதுமன். (நவ நாகங்கள்)—- subham —–

tags- tamil crossword, nava nagam, வாசுகி, ஆதிசேஷன், கார்க்கோடகன்,

Lord Shiva’s 14 Famous Names from Sahasranamam (Post No.12,021)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,021

Date uploaded in London – –  20 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

I will give you one clue; all names begin with Capitals; so look for capitals. Names may be across or down.

Across

5.God on earth (in two rows); 9.Uma’s husband, 14.Siva’s angry /furious form; red in colour

Down

1.God of Kasi 2. Big Lord 3. Always Siva 4.Shiva’s heroic form ,7.One who destroyed three worlds; 6.One who dances for ever; 8.One who does good

10.Lord of living beings 11.Lord, Boss, 12. One who is ever existent (go upwards), 13.God with moon or God of moon

ANSWER


Answer

P r a b h u, B h a v a ,Vishwanath, Umapati,  V e e r a b h a d r a ,  TripurariRudraPashupati, Shankara, ,Nataraja,Maheshwara, Sadasiva, BhudevaSomeshwara

–subham–

Tags- Siva, Names, Crossword

ஷீரடியும் பஞ்சவடியும்; 108 மஹாராஷ்டிர புனித தலங்கள் -பகுதி 17 (Post No.12,020)



Panchavati, Sita Cave

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,020

Date uploaded in London – –  20 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

PART 17

71.ஷீரடி சாய் பாபா சமாதி

கடந்த 100 ஆண்டுகளுக்குள் உருவான புதிய தலம் ஷீரடி என்னும் கிராமம் ஆகும். இங்கு 60 ஆண்டுகள் வாழ்ந்த பின்னர் சாய் பாபா சமாதி ஆனார். இன்று ஆண்டுதோறும் லட்சக் கணக்கானோர்  சமாதியை தரிசிக்க வருகின்ரனர். விழா நாட்கள், விடுமுறை நாட்களில் மணிக்கணக்கில் கியூவில்  நின்றால்தான் தரிசனம்.

மஹாராஷ்டிரா மாநில அஹமதுநகர் மாவட்டத்தில் நாசிக் என்னும் நகரிலிருந்து 122 கிலோமீட்டர் தொலைவில் ஷீரடி இருக்கிறது . 1858-ம் ஆண்டில் இங்கு பாபா வந்தார். 1918ல் சமாதி ஆனார் . அவருடைய சமாதி மீந்து 36 ஆண்டுகளுக்கு வெறும் புகைப்படம் மட்டுமே இருந்தது. கோபால் ராவ் பூட்டி என்பவர் கனவில் பாபா வந்து சொன்னதால் அவரும் ஷாமா என்னும் நண்பரும் கட்டிடம் கட்டினார்கள் . வசிப்பதற்கான இடமும் கோவிலும் கட்டத் துவங்கி, பாபா இறந்ததால் பின்னர் சமாதி ஆனது . புதிய சமாதி 1954-ல் எழுந்தது. இப்போது தங்கத்தால் வார்க்கப்பட்டு ஜொலிக்கிறது. காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை, பல ஆ ரத்திகள் (தீபாராதனை) நடைபெறுகிறது . உலகிலேயே பெரிய ஸூரிய அடுப்பு மூலம் சமைத்த பிரசாதம் காலை 10 மணி முதல் விநியோகிக்க ப்படுகிறது.

பாபாவின் சமாதியுடன் சாவடி என்னும் பழைய கிராம அலுவலகம், பாபாவின் வெள்ளிப் பல்லக்கு , பாதுகைகள், சமையயல் பாத்திரங்கள், பழைய புகைப்படங்கள் அடங்கிய மியூசியமும் சமாதி வளாகத்தில் இருக்கின்றன. சாவடியில் பாபவின் நல்ல வரைபடம் இருக்கிறது .பாபாவின் அருமையான பளிங்குச் சிலை அமைந்ததும் ஒரு கனவின் மூலம்தான் நடந்தது . பம்பாய் துறைமுகத்தில் அருமையான இதாலி நாட்டு சலவைக்கற்கள் வந்து இறங்கின. யார் அனுப்பினார், யாருக்காக அனுப்பினார் என்னு தெரியாததால் துறைமுக அதிகாரிகள் அதை

ஏலம் .விட்டனர். அதை வாங்கிய பணக்கார கனவான், அவற்றை பாபா கோவிலுக்கு நன்கொடையாக கொடுத்தார் . பாபா சிலையை வடிக்கும் பணியை புகழ்பெற்ற மும்பை கலைஞர் பாலாஜி வசந்த தலீம் என்பவரிடம் ஒப்படைத்தனர் . அவர் பழையகால கருப்பு- வெள்ளை படம் ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு எப்படியடா சிலை செதுக்குவது என்று மலைத்து நின்றார். பாபாவே கனவில் வந்து பலவித கோணங்களில் நின்று போஸ் POSE  கொடுத்த பின்னர், பல்லோர் புகழும் சிலை உருவானது

நான் இறந்த பின்னரும் சமாதியிலிருந்து அருள் மழை பொழிவேன் என்று பாபா சொன்னதால் இன்றும் பக்தர் கூட்டம் பெருகி வருகிறது..

(இந்தக் கட்டுரை எழுதும் லண்டன் சுவாமிநாதன், ஷீரடி , த்ரயம்பகேஸ்வரம் , பஞ்சவடி, காலா ராம் கோவில், சீதா தீவி குகை, முக்திதாம் , கோதாவரி நதி தோற்றுவாய், நாசிக் நகர், சிங் சிங்னாபூர் சனைச்சரன் கோவில் ஆகிய அனைத்தையும் மும்பை நகர முக்கியக் கோவில்களையும் 2015ம் ஆண்டில் தரிசித்தார்).

ஷீரடி   முதலிய இடங்கள் பார்க்க வேண்டிய இடங்கள் .

XXX

72. பஞ்சவடி

நாசிக் நகரின் அருகில் கோதாவரி நதியின் இடது புறம் உள்ளது பஞ்சவடி. இதன் அர்த்தம் ஐந்து ஆல மரம். இப்போதும் அவைகளைக் காணலாம். நாசிக் என்றால் லெட்சுமணன் சூர்ப்பனகையின் நாசியை/ மூக்கை வெட்டிய இடம் என்று பொருள். தண்டகாரண்யம் என்னும் அடர்ந்த, கொடிய வனவிலங்கு நிறைந்த காடு இது. இப்போது சுற்றுலாப்பயணிகள் வருகையால் மாறி வருகிறது. ராம், லட்சுமண, சீதா தேவி மூவரும் 14 ஆண்டு வனவாச காலத்தில் பெரும்பகுதியை இங்குதான் கழித்தனர் . ராவணன் வந்து சீதையை தூக்கிக்கொண்டு போன இடமும் இதுதான். லெட்சுமணன் போட்ட லக்ஷ்மண் ரேகா ( எல்லைக் கோடும்) அருகில்தான் இருக்கிறது.

இந்தப் புனித பூமியில் ஏராளமான கோவில்கள் இருப்பதால் இதை மேற்கு இந்தியக் காசி நகரம் என்றும் அழைப்பர். கபாலீஸ்வர் , கங்கா- கோதாவரி , சுந்தர் நாராயண் , திலபந்தேஸ்வர் , தாகூஸ்டேவர் , நீல கண்டேஸ்வர, பாலாஜி, விட்டல் , பஞ்சமுகி ஹனுமான், பத்திரகாளி கோவில்கள் என்று நிறைய கோவில்கள் வந்துவிட்டன .

XXX

73.காலா ராம் கோவில்

கருப்பு ராமன் என்பதை காலா ராமன் என்பர். ராமபிரானே ஒரு கருப்பன் தான் . அவனுக்கும், அவன் தம்பி, லெட்சுமணனுக்கும் , சீதா தேவிக்கும் இரண்டு அடி உயரச் சிலைகள் நிற்கும் இடம் காலா ராமன் கோவில் 200 ஆண்டுகளுக்கு முன்னர் சர்தார் ரங்காராவ் என்பவர் 2000 ஆட்களைப் பணியில் அமர்த்தி, அரும்பாடு பட்டுக் கட்டிய கோவில் . 70 அடி கோபுரம் உடையது இது,  தற்காலக் கோவில்களில் முக்கியமானது.

XXX

74. சீதா குகை

சீதையை ராவணன் கடத்திய இடம். ராம, லட்சுமணர்கள் வெளியே சென்றால் , இங்குதான் சீதை பாதுகாப்பாக ஒளிந்து கொள்வாள். அப்படியும் ராவணன் சன்யாசி வேடத்தில் வந்து பிச்சை கேட்டபோது ஏமாந்து போனாள் ; குகைக்குள் நுழைய தலை குனிந்து பணிவாகச் செல்ல வேண்டும் . நாசிக் பஸ் நிலையத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் குகை இருக்கிறது. .பஞ்சவடி , காலாராம் கோவில் எல்லாம் அடுத்தடுத்து இருக்கும் இடங்கள்தான் . குகையின் முதல் அடுக்கில் ராமர் , லெட்சுமணர், சீதா தேவி சிலைகள் உள்ளன. அடுத்த அடுக்கினுள்ளே சிவலிங்கமும் இருக்கிறது. அன்றாடம் சிவனை வழிபட்ட பின்னரே ராம லெட்சுமணர், சீதா தேவி சாப்பிட்டனர் . குகைக்கு எதிரே ராமாயணக் காட்சிகளைக் காட்டும் ஓவியங்கள், சிற்பங்கள் இருக்கின்றன.

Ravana in Panchavati

XXX

75.கோதாவரி நதி உற்பத்தி

நான்கு ஆண்டுச் சுழர்ச்சியில் வெவ்வேறு இடங்களில் நடைபெறும் MINI மினி கும்ப மேளா கோதாவரி நதி தோன்றும் இடத்தில் நடைபெறும் . நாசிக் நகர பஸ் நிலையம், ரயில் நிலையத்திலிருந்து செல்லுவதற்கு வசதிகள் உண்டு

XXX

76. கண்டோபா கோவில்

தேவ லாலி கண்டோன்மென்ட் பகுதில் இந்தக் கோவில் அமைந்துள்ளது . சிவனின் மற்றோர் வடிவமாகக்  கருதப்படுபவர் கண்டோபா. இது இரண்டு .அரக்கர்களைக் கொல்ல சிவன் எடுத்த வடிவம். கோவில்  500 ஆண்டுப் பழமையானது.. அரக்கர்களை மாய்த்த பின்னர்  சிவன் ஓய்வெடுத்த இடம் என்பதால் இதை விஸ்ராம் காட் என்பர்.

XXXX

77.முக்திதாம் கோவில்

நாசிக் பஸ் நிலையத்திலுந்து 9 கிலோமீட்டர் தூரத்திலுள்ளது முக்திதாம் கோவில். இது 1971ம் ஆண்டில்தான் கட்டப்பட்டது . இங்கு 12 ஜோதிர் லிங்கத் தலங்களையும் சிற்ப வடிவில் தரிசிக்கலாம். உள்ளே கிருஷ்ணர் சந்நிதியும் இருக்கிறது. அங்கே கிருஷ்ண லீலைகள் வரையப்பட்டுள்ளன . பிரபல ஓவியர் ரகுவீரா மல்காவ்ங்கர் வரைந்த ஓவியங்கள் அவை.

பல இந்தக் கடவுளரின் சிலைகளும் நிறுவப்பட்டுள்ளன. 200 பேர் தாங்கக்கூடிய தர்ம சாலையும், உணவு விடுதியும் உளது.

XXXX

78.தபோவனக் காடுகள்

கோதாவரி நதி இறங்கும் இடத்தில், பஞ்சவடியிலிருந்து 1. 5 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.

இந்த தண்டகாரண்ய புண்ய பூமி ராமனின் காலடி ச் சுவடுகள் பட்ட இடம் ஆகும். ராம, லட்சுமணர்கள் அன்றாடம் பழங்களைப் பறிக்க வரும் இடம் இதுவே.. இங்கும் ராம லெட்சுமணருக்குக் கோவில் வைத்துள்ளார்கள் . ராம் பர்ண குடில் இருக்கும் இந்த இடத்தில்தான்  , மினி கும்ப மேளா காலத்தில், சாது சந்யாசிகள் முகாமிடுவர் .

இந்த வட்டாரத்தில் கபில தீர்த்தம், குஷாவர்த் தீர்த்தம், புத்தர் சிலைகள் உள்ள  பாண்டவர் குகைகள், சமண மத கோவில், மங்கி துங்கி கோவில் முதலி யனவும் அமைந்திருப்பதால் ஒன்றிரண்டு நாட்கள் தங்கி நாசிக் வட்டாரக் கோவில்களை முடிக்கலாம். ஏனெனில் அருகிலேயே த்ரயம்பகேஸ்வர சிவன் கோயிலும் இருக்கிறது. ஒரே நாளில் தரிசிக்கவும் முடியும்.

TO BE CONTINUED……………………………. tags- ஷீரடி ,சாய் பாபா, சமாதி, .காலா ராம், கோவில்,சீதா குகை, பஞ்சவடி, முக்திதாம் ,

கடவுளைக் காண வழி சொல் – ஒரு வாரத்திற்குள்! (Post No.12,019)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,019

Date uploaded in London –   20 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

கடவுளைக் காண வழி சொல் – ஒரு வாரத்திற்குள்! 

ச. நாகராஜன் 

முன்னொரு காலத்தில் தெய்வ பக்தியுள்ள ஒரு மன்னன் தனது நாட்டை ஆண்டு வந்தான். அவனுக்கு வாய்த்த மந்திரியோ மதியூகி. மன்னனைப் போலவே மிகவும் தெய்வ பக்தி கொண்டவன்.

எந்த வெற்றியை அடைந்தாலும் இந்த இருவருமே, ‘கடவுளின் அருளால்’ என்று ஆரம்பித்தே தங்கள் வெற்றிகளைச் சொல்லி மகிழ்வது வழக்கம்.

காலம் சென்றது. மன்னனுக்கு வயதாகிக் கொண்டே போனது. ஒரு நாள் அவன் இறைவனடி சேர்ந்தான்.

முறைப்படி ராஜகுமாரன் மன்னனாக முடி சூடப்பட்டு மன்னனாக ஆனான்.

ஆனால் அவனுக்கு தெய்வ நம்பிக்கை இல்லை.

மந்திரியிடம். ‘தந்தையிடம் கூறுவது போல, ‘கடவுளின் அருளால்’ என்று எதையும் ஆரம்பித்துச் சொல்லக் கூடாது’ என்று கண்டிப்பாகக் கூறி விட்டான்.

ஒரு நாள் பழக்க தோஷத்தின் காரணமாக மந்திரி, அவனிடம், ‘கடவுளின் அருளால்’ என்று முக்கிய வெற்றியைக் கூற ஆரம்பித்தார்.

உடனே மன்னனாக இப்போது இருக்கும் ராஜகுமாரனுக்கு மிகுந்த கோபம் வந்தது.

“உங்களிடம் எத்தனை முறை கூறி இருக்கிறேன். கடவுள் என்று சொல்லாதீர்கள் என்று” என்று கோபத்துடன் மந்திரியைப் பார்த்துக் கூறிய அவன், “சரி, உங்களிடம் மூன்று கேள்விகளைக் கேட்கிறேன்.

முதலாவது, கடவுளை எப்படிப் பார்ப்பது, உங்களால் வழி சொல்ல முடியுமா? இரண்டாவது அவர் எந்தத் திசையைப் பார்த்து இருக்கிறார்? மூன்றாவது அவர் என்ன அற்புதத்தை நிகழ்த்துகிறார்? ஒரு வாரத்திற்குள் இதற்கான விடைகளைச் சொல்ல வேண்டும்.” என்றான்.

மந்திரி மிகவும் வருத்தப்பட்டார். ஒரு வாரத்திற்குள் எப்படி கடவுளைக் காணும் வழியைச் சொல்ல முடியும்? அவர் எந்த திசையை யாரைப் பார்க்கிறார் என்பதை எப்படிச் சொல்ல முடியும்? அவர் எப்படி மன்னனிடம் அற்புதத்தை நிகழ்த்துவார்?

தூக்கம் வராத மந்திரி மிகவும் சோகமாக இருந்தான்.

மூன்று தினங்கள் கழிந்தன.

மந்திரியின் வேலைக்காரன் அவரை மிகுந்த சோகத்துடன் சாப்பிடாமல் இருப்பதைப் பார்த்து, “ஐயா? என்ன விஷயம்?” என்று கேட்டான்.

மந்திரி, ‘போ, போ, உனக்கு ஒன்றும் புரியாது’ என்று சொல்லி அவனைத் துரத்தி விட்டார்.

ஆறாவது நாள் வந்தது.

வேலைக்காரன் விடாமல் அவரிடம் வந்து காரணத்தைக் கேட்ட வண்ணம் இருந்தான்.

மந்திரியும் அவன் தொந்தரவு பொறுக்க முடியாமல் மன்னனின் கேள்விகளைச் சொன்னார்.

இதைக் கேட்ட வேலைக்காரன் விழுந்து விழுந்து சிரித்தான்.

“இவை எல்லாம் கேள்விகளா என்ன? நாளை நான் இதற்கு பதில் கூறுகிறேன். நீங்கள் என் வேலைக்காரனே இந்தக் கேள்விகளுக்கு பதில் கூறுவான்” என்று சொல்லி விடுங்கள் என்றான்.

வேறு வழியில்லை மந்திரிக்கு.

அடுத்த நாள் அரசவை கூடிய போது மந்திரி மன்னனைப் பார்த்து, “இதற்கு என் வேலைக்காரனே பதில் சொல்வான்” என்று கூறினார்.

வியப்படைந்த மன்னன் வேலைக்காரனைப் பார்த்து, “நீயா கடவுளைக் காணும் வழியை எனக்குச் சொல்லப் போகிறாய்?” என்றான்.

“ஆம், மன்னவா! நானே தான்!” என்ற வேலைக்காரன், “இப்போது கேள்வி கேட்கும் சீடன் ஸ்தானத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். பதில் அளிக்கும் குரு ஸ்தானத்திற்கு நான் வந்து விட்டேன். ஆகவே குரு மேலான ஆசனத்திலும் குருவுக்கு கீழாக சீடன் இருப்பதும் தான் முறை. நீங்கள் மந்திரி அருகில் வந்து உட்காருங்கள். நான் உங்கள் ஆசனத்தில் அமர்ந்து விடை சொல்கிறேன்” என்றான் வேலைக்காரன்.

வேறு வழியில்லை மன்னனுக்கு. அவன் கூறியதில் இருந்த நியாயம் அவனுக்குப் புரிந்தது. கீழே வந்து அமர்ந்தான்.

வேலைக்காரன் சிம்மாசனம் ஏறி அமர்ந்தான்.

மன்னனைப் பார்த்து, “ஒரு பாத்திரத்தில் பாலைக் கொண்டு வாருங்கள்” என்று கட்டளை இட்டான்.

மன்னனும் உடனே அதற்கு ஏற்பாடு செய்தான்.

பால் வந்தது.

“ மன்னா! இதற்குள் வெண்ணெய் இருக்கிறதா?” என்று கேட்டான்.

மன்னன், “இருக்கிறது!” என்றான்.

“காணோமே” என்றான் வேலைக்காரன்.

“இது கூடவா புரியவில்லை. கடைய வேண்டும். கடைந்தால் தான் உள்ளே இருக்கும் வெண்ணெய் வரும்.  அதை நீ பார்க்க முடியும்” என்றான் மன்னன்.

“மன்னா! உங்களின் முதல் கேள்விக்கு விடையை நீங்களே கூறி விட்டீர்கள்!. எப்படி உள்ளே இருக்கும் வெண்ணையைக் கடைந்தால் மட்டுமே பார்க்க முடியுமோ அதைப் போல எங்கும் உள்ள கடவுள் உங்கள் உள்ளத்திலேயேயும் கூட இருக்கிறான். மனதைக் கடையுங்கள். அவன் வெளிப்படுவான்” என்றான் வேலைக்காரன்.

அடுத்து இரண்டாவது கேள்வியைப் பார்ப்போம் என்ற வேலைக்காரன்,

“ஒரு தீபத்தைக் கொண்டு வரச் சொல்லுங்கள்’ என்றான்.

சுடர் விட்டெறியும் தீபம் வந்தது.

“மன்னா! தீபத்தின் சுடர் எந்த திசையைப் பார்த்து, யாரைப் பார்த்து இருக்கிறது?” என்று கேட்டான்.

மன்னன், “அது எல்லா திசையையும் பார்த்துத் தானே இருக்கும். எல்லோரையும் அது பார்க்கிறது. வானையும் கூட அது பார்க்கிறது?” என்றான்.

“மன்னரே! உங்கள் இரண்டாவது கேள்விக்கும் விடையைக் கூறி விட்டீர்கள்! இந்த தீபச் சுடர் போல கடவுள் எல்லா திசையையும் பார்க்கிறான். எல்லோரையும் பார்த்துக் கொண்டே இருக்கிறான்!” என்றான் வேலைக்காரன்.

அடுத்து உங்கள் மூன்றாவது கேள்விக்கு வரலாம்.

“கடவுள் என்ன அற்புதத்தை நிகழ்த்துகிறான் என்பது உங்கள் கேள்வி.

மன்னா! அற்பனான நான் அந்தஸ்தோ, செல்வமோ, அதிகப் படிப்போ இல்லாதவன். ஆனால் பாருங்கள், மன்னனான உங்களைக் கீழே இறக்கி என்னை சிம்மாசனத்தில் அமரச் செய்திருக்கிறான். ஆனால் மன்னரான உங்களையோ கீழே அமர்த்தி இருக்கிறான்.

இது தான் இறைவனது திருவிளையாடல்! லீலை! கணம் தோறும் அவன் செய்யும் அற்புதம்” என்று கூறிய வேலைக்காரன் கீழே இறங்கினான்.

மன்னனிடம் வந்து தான் சிம்மாசனத்தில் சிறிது நேரம் அமர்ந்ததற்கு மன்னிப்பையும் வேண்டினான்.

மன்னன் முகம் மலர்ந்தான்.

‘எனக்கு எல்லாம் புரிகிறது ‘என்றான். மந்திரியும் மகிழ்ந்தான். கூடி இருந்த அரசவையினர் கை தட்டி அவனைப் பாராட்டினர்.

இறைவன் சிரித்தான்!

***

Hindu Mythology Crossword 1952023 (Post No.12,018)

Please go to swamiindology.blogspot.com if you want to see the cells in colour

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,018

Date uploaded in London – –  19 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 123 4  5  6
    7 
8   
        
   9 
  10I11
      12
         
 13    14
     15   
16   

Across

1.Atri Maharishi wife

7. The castor-oil plant or Without decoration or ornaments or refers to “plenteous (light) in Shakta worship

8.Rishi or Saints residence

9.Pandava’s wife (left to right)

10.Satyavan’s wife who fought with Yama

12.Name of Lotus in Sanskrit

13.Association in Indian languages

14. 1. A name of Saraswati; the goddess of speech. 2. The place where an elephant is tied or fastened. 3. A captive, a prisoner. 1. A water-pot, whether large or small, pitcher, a jar. 2. The rope that fastens an elephant. 3. A hole or trap for catching elephant. , 4.Water .

15.Indra’s wife (left to right)

16. Nala’s wife

Down

1.Gautama’s wife, molested by Indra

2.Serpent in Sanskrit

3.Siva’s Wife

4.Yama’s Sister

5.Harichandra’s wife

6.Ravana’s wife

9. Name of  the eighteenth of 60 years cycle or refers to  “raft” (e.g., for crossing the ocean of worldly existence), according to the Siva Purana or Aloe vera plant in Kannada

xxxx

Answer

A1NAS2U3Y 4A C 5 M 6
 H  A 7MANDHAA
8ASHRAM  A N
 L  P I  N D
 YIDAPUARD 9 O
T 10IS 11AVITRID
  A   K 12AMALA
  R      M R
S 13 ANGA  V 14ARI
NARDNI    15 T  
D 16 AMAYANTI  

 –subham–

tags- Hindu mythology, crossword1952023, 

Part 16 -Shirdi and Panchavati -108 Famous Hindu Shrines in Maharashtra (Post No.12,017)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,017

Date uploaded in London – –  19 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Part 16

71. Shirdi Sai baba Temple

Shirdi is located at a distance of 122 Km from Nasik in the Ahmednagar district of Maharashtra, Shirdi is the home of Sai Baba. It is believed that Sai Baba arrived at Shirdi in 1858 and spent 60 years of his life here until he attained salvation in 1918. His Samadhi attracts a huge crowd all through the year.

Apart from his shrine, there are many small temples in the complex, such as Chavadi, Samadhi Mandir, Dwarkamai.

The temple offers different darshans and aartis throughout the day. The temple opens at 4 AM and has darshans during the morning, noon, and evening slots. The last Arti is at 10 pm.

The world’s largest solar cooker is operated at the Shirdi Bhojanalaya. It prepares food for thousands of devotees every day. The timings of Bhojanalaya are 10 AM to 10 PM.

Baba has promised, “I shall be active and vigorous even from the tomb,”

At busy times, especially during festivals, the queue for darshan used to stretch for long distance and People may wait up to eight hours just for Darshan.

The shrine which houses Baba’s tomb was originally constructed as a wada (large private house) during Baba’s last years in his physical body. It is built on some land that Baba had tended as a garden.

The shrine was built by a wealthy devotee from Nagpur, Gopalrao Booty. The wada was originally intended as a rest house and mandir. The inspiration for the building came to Booty in a dream, when he was sleeping beside his friend and fellow devotee, Shama, Baba appeared and told him to build a house and temple. The work was begun around 1915. But Saibaba’s health rapidly deteriorated and on 15 October 1918, he attained Samadhi.

A photograph of Sai Baba was placed on a throne on the platform of the tomb. It remained there until the statue was installed in 1954. There is an interesting story about the marble statue we see today.

The statue, which has become such a famous and well-loved image of Baba, was not installed until 1954. Some white marble arrived from Italy at the Bombay docks, but nobody seemed to know anything about it who it was for, or why it had come. In the absence of a claimant, the dockyard auctioned it and the purchaser offered it to the Shirdi Sansthan (temple authorities). Impressed by the quality of the marble, they wanted to use it for an idol of Baba and gave the commission to a sculpture from Bombay, Balaji Vasant Talim. However, the latter had only one black and white photo of Baba as his model, and was struggling to get the likeness. One night Baba came to him in a dream, remarked on his difficulties and then showed him his face from various angles, encouraging Talim to study it thoroughly and remember it well. This gave Talim the fillip he needed .

xxxx

The Display of Baba’s Belongings in Museum

In the Museum some things associated with Baba are on display. These include three pairs of sandals (though Baba was almost always barefoot), his folded clothes in a glass fronted cupboard, cooking pots and a silver palanquin.

Many clay pipes and earthen vessels used by Baba are also seen here. The coins given by Baba to Mahalsapati, Khandoba’s temple priest, are seen. The idols of Muralidhar along with the idols of Rama, Sita and Lakshmana are seen here which were actually meant to be installed in Booty Mandir. But as per Baba’s wish this wada became baba’s Samadhi Mandir.

xxx

Chavadi

Chavadi means “village office”, and was the place where taxes were collected, village records kept and visiting officials put up. After Baba’s Maha samadhi the Sansthan acquired Chavadi, and until the late 1930s, used it for storing books and accommodating pilgrims. The village offices have long been relocated and Chavadi is kept as a shrine to Baba and is open to all.

Chavadi is also very significant to Sai devotees as it played a major role in the inception of formal worship of Baba. Once Baba started sleeping at Chavadi, the custom arose of offering regular arati to him on his arrival from the mosque. Inside Chavadi is a large portrait of Baba which was painted by Ambaram from Nausari in Gujarat after Baba had given him darshan in a dream in 1953. At the time, Ambaram was only eighteen years old.

xxx

72 Panchavati

Panchvati is situated on the left banks of sacred river Godavari in Nashik city.

Close to Kalaram temple there are some very old and lofty banyan trees which are believed to be sprung from five banyans which gave its name to Panchvati.The name ‘Panchvati’ is derived from the words Panch which means five and Vati which means banyan tree. This is the site where Sita Gumph or Sita’s Cave is situated . Kalaram temple , Kapaleshwar temple, Ganga Godavari temple, Sunder Narayan temple, Talkuteshwar temple,temple, NilkantheshwarGoraram mandir Murlidhar Mandir,Tilbhandeshwar mandir, Balaji temple, Sandvyachi devi temple, Vitthal temple, Pataleshwar temple,Naroshankar temple, Ramkund, Karthikswami temple,Dutondya maruti , Katya maruti temple, Panchmukhi Hanuman temple , Bhadrakali temple,Katpurthala monuments are located in and around Panchavati area. Nashik has earned name of the Banaras of western India due to large no of temples.

Panchavati is in the fiery forests of Dandakaranya along the flowing Godavari River.

Panchavati was the place where Rama, Lakshmana and Sita made their home while serving the exile. The trees could still be seen in the temple premises nearby Sita Gufaa.

xxxx

73.Kalaram (Black Rama) Temple

Kalaram Mandir is situated within the Panchvati area of Nashik City.

This temple is supposed to stand on the spot where Lord Ram lived during his exile. It was built in 1782 by Sardar Rangrao Odhekar on the site of an old wooden temple. The work is said to have lasted twelve years, 2000 persons being daily employed. It is one of the finest modern temples of Ramji in western India. The temple has standing images of Lord Rama, Sita, Laxmana are of black stone and around 2 feet height. The temple is 70 ft high with beautifully sculptured idols of Lord Rama and Lady Sita, along with Lakshman in black stone, giving the temple its name.

xxx

74.Sita Gufaa (Guha=Cave):Panchavati

Sita Gufaa: Panchavati, Maharashtra The cave where Sita was staying when demon Ravana came to kidnap her, is located on the western door of the Kalaram temple. ‘Lakshman Rekha’ drawn by Lakshman for protection of Sita is located some one kilometer from the caves.

Sita gupha is situated in Panchawati area about 3 km away from the Nashik Central bus stand.

The deities of Ram, Seeta and Laxman are placed inside the first main gummpha. In the second small gupha there is a Shivling . The main reason attributed for the Shivling is that Seeta used to worship God Shiva and she never took her meals before worshiping him.

A room opposite to Seetagmupha is decorated with the scenes from Ramayana like Marich Vadha (i.e. Ram Killing Marich, the demon.), Seetaharan (the kidnapping of Seeta by Ravan).

xxxx

75 Godavari River Sthala

River Banks of Godavari: The place is spot for the Kumbh Mela bathing and gets full of pilgrims from every corner of world during the occasion.

By Rail: After reaching Nashik Road Railway Station, passengers can take local transportation to North of Nashik, where now-heavily-populated Panchavati is located.

By Road: Nashik is connected to cities like Delhi, Bangalore, Nagpur, Mumbai, etc, thus easily reached by buses, cars and taxis.

( I visited Shirdi, Trayambakeshwar Temple, Panhavati, Kaalaa Raam temple, Muktidham temple, shin Shignapur Shiva and Sanaicharan (Saneesvar) temples in 2015- London swaminathan)

76.Khandoba Temple

This temple is situated on small hill in Deolali Cantonment area.

Shri Khandoba Maharaj is an incarnation of Lord Shiva and this temple dedicated to him is reportedly over 500 years (five hundred) old. Lord Shiva killed two demons Malla Daitya and Mani Daitya  and after killing them, Shiva relaxed on this hill and hence this temple is called ‘Vishramgadh’. The hill is popularly known as Khandobachi Tekadi.

Xxx

77.Muktidham Temple

Muktidham marble temple is located at a distance of 9 km from Nashik Central Bus Station. It is one of the popular tourist attractions in the city of Nashik.

Muktidham Temple complex was built by Late Sri Jayram Bhai Bytco in 1971. An abode of most of the gods and goddesses of the Hindu religion, this splendid shrine displays the replica of all the 12 Jyotirlingas of India.

It is a magnificent piece of architecture, made with white marble from Makran in Rajasthan. There is a temple dedicated to Lord Krishna .The walls of Krishna temple have paintings depicting scenes from life of Krishna and Mahabharata. These were painted by a noted painter Raghubir Mulgaonkar. Unique to this temple are eighteen chapters of Bhagavad-Gita written on the walls.

There are also idols of all major Hindu Gods and Goddesses like Vishnu, Goddess Lakshmi, Rama, Lakshman, Sita, Hanuman, Durga, Ganesh. Further, the complex also houses a dharamshala, which can accommodate at least 200 pilgrims.

78.Tapovan Forest

Tapovana or the Forest of Austerities is located hardly 1.5 km on the downstream of Panchwati on Godavari river.

Once a part of the holy Dandakaranya forest, Tapovan is a pictorial spot and has a close association with the epic Ramayana. Lord Ram who is believed to have lived on fruits collected by Lakshmana from this forest. At this place Lakshmana cut the nose of Shurpanakha, the sister of Ravana . Therefore the city gets its name Nashik. This sacred place has temples of Ram Parnakuti, Laxmana. At the time of Sinhastha Kumbhamela majority of Sadhus camp at Tapovan .

Kapila Tirtha, Kushavart Thirtha, Panadava Caves with Buddhist sculptures, Jain temple, Mangi Tungi temple are all located near Nashik. One can spend a few days visiting all these places or even cover them in just 24 hours.

To be continued………………..

Tags- Nashik, Muktidham, Sita Gufa, Caves, Panchavati, Kala ram, Temple, Godavari, Rama, Sita, Lakshmana, Five Banyan Trees, Shirdi, Sai baba, Samadhi

முஸ்லீம்கள் மாட்டு மாமிசம் சாப்பிடலாம்: காந்திஜி (Post.12,016)

MAHATAMA GANDHI AND NETAJI SUBHASH CHANDRA BOSE

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,016

Date uploaded in London – –  19 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

வாழ்க்கை முழுதும் முன்னுக்குப்பின் முரணான கொள்கையுடன் வாழ்ந்தவர் மஹாத்மா காந்தி; ஜனநாயக முறையில் காங்கிரஸ் கட்சி வோட்டெடுப்பில் வென்ற நேதாஜி சுபா ஷ சந்திர போஸை நாட்டிலிருந்து வெளியே ஓடச் செய்தார். பாகிஸ்தான் கொடுத்தால்  செத்துப்போவேன் என்று உண்ணாவிரதம் இருந்தவர் ,முஸ்லீம் கலகத்துக்குப் பின்னர், பாகிஸ்தான் கொடுக்காவிட்டால்   செத்துப்போவேன் என்று உண்ணாவிரதம் இருந்தார். தெரு நாய்களைக் கொல்லலாம், வயலுக்குள் புகும் குரங்குகளைக் கொல்லலாம், மனிதர்களைக் கொல்லும் துஷ்டர்களைக் கொல்லலாம், ஆஸ்ரமத்தில் நோய்வாய்ப்பட்ட கன்றுக்குட்டியைக் கொல்லலாம் என்று சொல்லி தினமும் நூற்றுக்கணக்கான எதிர்ப்புக்  கடிதங்களை பெற்றார் .

பல்லாயிரக்கணக்கான ஹிந்து சீக்கிய பெண்களை முஸ்லிம்கள் தூக்கிச் சென்றுவிட்டனர். அந்த அரக்கர்கள் கற்பழித்த கர்ப்பிணிப் பெண்களை இந்துக்கள் ஏற்க வேண்டும் என்று கட்டுரை எழுதினார். இதே போல பசு மாடு என் தாய்க்கும் மேலானவள்; நான் வணங்கும் தெய்வம்; ஆனால் முஸ்லீம்கள் பசு மாட்டை வெட்டிச் சாப்பிடுவதைத் தடுக்காதீர்கள்; அது சரி தான் என்று கட்டுரை எழுதினார். இவை எல்லாம் பிராணி நல ஆர்வலர்களையும் சனாதன இந்துக்களையும் கொதித்து எழச் செய்தன . காந்திஜியே தனக்கு வெள்ளம் போல எதிர்ப்புக் கடிதங்கள் வருகின்றன. அது பிரிட்டிஷ் தபால் இலாகாவின் வருமானத்தைப் பெருக்குகிறது என்று எழுதிவிட்டு  “டேய் கிழவா உன்னை விஷ ஊசி வைத்துக் கொல்லாமல் எப்படிடா டாக்டர்கள் வெளியே விட்டனர்?” என்பன போன்ற கடிதங்கள் குவிகின்றன என்றும் எழுதினார் ..

இதோ காந்திஜியின் மாட்டுக் கறி கட்டுரை

கேள்வி

காந்திஜி அவர்களே ! ஒரு முக்கியமான கேள்வி பற்றி நீங்கள் தெளிவாக்குவதை முஸ்லீம்கள் எதிர்பார்த்து நிற்கிறார்கள். இந்து மெஜாரிட்டி அரசாங்கத்தில், முஸ்லீம்களின் தேசீய உணவான மாட்டு மாமிசத்தை சாப்பிட அனுமதி தருவார்களா? இந்த விஷயத்தில் நீங்கள் முஸ்லீம்களுக்கு திருப்தி தரும் முடிவைச் சொன்னால், பல பிரச்சனைகள் தீர்ந்து போகும் . நீங்கள் நடத்தும் ஹரிஜன் பத்திரிகையில் ‘பொட்டில் அடித்தாற்போல’ இந்தக் கேள்விக்கு பதில்  தாருங்கள்

காந்திஜியின்  பதில்

இந்தக்கேள்வி ஏன் வந்தது என்பதே எனக்கு விளங்கவில்லை.  காங்கிரஸ் கட்சியினர் பதவி வகித்த இடங்களில் முஸ்லீம்கள் மாட்டுக்கறி தின்னும் விஷயத்தில் அவர்கள் தலையிட்டதே இல்லை. மேலும் உங்கள் கேள்வி கொஞ்சம் நெருடலாக உள்ளது . ஹிந்து மெஜாரிட்டி (பெரும்பான்மை) அரசு என்பதற்கே இடமில்லை.. இந்தியா சுதந்திரம் அடைந்து, அமைதியான முறையில் வாழ வேண்டுமானால் மத விஷயங்களின் அடிப்படையில் இல்லாமல் அரசியல் அடிப்படையில்தான்  அது வாழ  வேண்டும். இப்போதைய சூழ்நிலையில் மத வேற்றுமைகள் பூதாகரமாக உருவெடுத்தபோதிலும் பெரும்பாலான  அரசியல் கட்சிகளிலும் எல்லா மதத்தினரும் இருக்கிறார்கள் . மேலும் முஸ்லீம்களின் தேசீய உணவு மாட்டு மாமிசம் என்பதும் தவறு . முதலாவதாக, இந்திய முஸ்லீம்கள் இன்னும் தனி நாடு பெறவில்லை இரண்டாவததாக, மாட்டுக்கறி அவர் களின் சாதாரண உணவும் இல்லை.. பல லட்சம் மக்கள் சாப்பிடும் உணவைத்தான் அவர்களும் சாப்பிடுகின்றனர் .

. முஸ்லீம்களில் மரக்கறி உணவு மட்டும் சாப்பிடுவோர் மிகக் குறைவு என்பது உண்மையே.. ஆகையால் கிடைக்கும் இடங்களில் அவர்கள் மற்ற மாமிச உணவுடன் மாட்டுக்கறியையும் சாப்பிடுவார்கள்; ஆயினும் வறுமை காரணமாக ஆண்டின் பெரும்பகுதியில் அவர்கள் மாமிசமே சாப்பிடாமலும் இருக்கிறார்கள்.. இவைதான் சரியான தகவல்கள் .

நீங்கள் கேட்ட கொள்கை ரீதியிலான கேள்விக்கு பதில் சொல்லுவது அவசியம்.. நான் ஹிந்து; மரக்கறி உணவு மட்டுமே சாப்பிடுபவன்; என் தாயைப் போல (அடக்கடவுளே;  இன்று அவள் என்னுடன் இல்லையே) பசுவையும் வணங்குபவன்  முஸ்லீம்கள் விரும்பினால் அவர்கள் பசுக்களை வெட்டிச் சாப்பிட பரிபூரண சுதந்திரம் இருக்க வேண்டும் என்பதே என் நிலை. சுகாதார முறையில், அருகில் வசிக்கும் இந்து மக்களுக்கு கஷ்டம் ஏற்படாமல் அவர்கள் இதைச் செய்யலாம்.வகுப்பு நல்லிணக்கம் நிலவுவதற்காக முஸ்லீம்களுக்கு பசுக்களை வெட்டிக் கொன்று சாப்பிடும் பரிபூரண சுதந்திரம் இன்றியமையாதது ; இது பசுக்களை பாதுக்காக்க உதவும் 1921ம் ஆண்டில் முஸ்லிம்களே முன்வந்து ஆயிரக் கணக்கான பசுக்களைக் காத்தார்கள்

இப்போது இருண்ட மேகங்கள் தலைக்கு மேலே காணப்படுகின்றன அவை விலகி நாம் இந்த துரதிருஷ்டமான பூமியில் வகுப்பு நல்லிணக்கத்துடன் வாழ முடியும் என்ற நமிப்பிக்கையைக் கைவிட நான் தயாராக இல்லை. என்னுடைய நம்பிக்கைக்கு (Hope) ஆதாரம் என்ன? என்று கேட்டால் , அது எனது சமய நம்பிக்கையின் (Faith) அடிப்படையில் வந்தது. சமய நம்பிக்கைக்கு ஆதாரம் தேவை இல்லை..”

ஹரிஜன் 27-4-1940

xxxx

எனது கருத்து

காந்திஜி அரசியலுக்குத் தகுதியற்றவர். ஒரு சந்நியாசி போல மடம் கட்டி வாழ்ந்திருக்க வேண்டியவர். கடைசி சில வரிகளில் அவர் குறிப்பிடும் இருண்ட  மேகம் பாகிஸ்தான் தனி நாடு கோரிக்கை  ஆகும் . மயிலே மயிலே இறகு போடு என்னும் பாலிஸியைப் பின்பற்றி, முஸ்லீம்கள் மாட்டுக்கறி தின்ன உதவினால், பாகிஸ்தான் வராது என்ற அவரது நம்பிக்கை பொய்யாய் பழங்கதையாய் போனதை நம் அறிவோம். மாட்டுக்கறி கேள்வியை ஒரு சங்கராசார்யார்  அல்லது நல்ல இந்துவின் முன் வைத்திருந்தால், இந்த நாட்டில் முஸ்லீம்கள் அதைச் செய்யக்கூடாது. எப்படி பன்றிக்கறியை முசுலீம் நாடுகள் விரும்பவில்லையா அப்படி நாங்கள் மாட்டுக்கறியை அனுமதிக்க மாட்டோம் என்று சொல்லி இருப்பார்கள். வேறு ஒரு கட்டுரையில் தாயைவிட மேலானவள் கோ மாதா என்று ஆறு காரணங்களை வேறு முன் வைத்துள்ளார்; ஆனால் அதே தாயை   மற்றவர்கள் வெட்டினால் எனக்கு ஒன்றுமில்லை என்று எழுதுகிறார் . இப்படி அவர் எழுதியதும், எல்லா அறிவுரைகளையும் இந்துக்களுக்கு மட்டுமே சொல்லிவிட்டு முஸ்லீம்களைக் கண்டிக்காமல் இருந்ததும் இந்துக்களை ஆத்திரம் அடையச் செய்தன. .

மாட்டு மாமிசம் பற்றி காந்திஜி எழுதிய கட்டுரைகளுக்கு அக்காலத்தில் கடுமையான எதிர்ப்புக் கடிதங்கள் வந்திருக்கும்.அது 1940ம் ஆண்டுப் பத்திரிக்கைகளைப் பார்த்தால் தெரியும் .

–subham—

Tags- மாட்டுக்கறி , பசு மாமிசம், முஸ்லீகள், காந்திஜி, கோ மாதா , என் கருத்து, மரக்கறி உணவு

ராமாயணத்தில் நக்ஷத்திரங்கள்! (Post No.12,015)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,015

Date uploaded in London –   19 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx  

ராமாயணத்தில் நக்ஷத்திரங்கள்! 

ச.நாகராஜன்

வால்மீகி ராமாயணத்தில் ஏராளமான ஜோதிடக் குறிப்புகள் தெளிவாகத் தரப்பட்டுள்ளன.

சிலவற்றை இங்கே காணலாம்.

ஶ்ரீ ராமரின் ஜென்ம நக்ஷத்திரம் – புனர்பூசம் (27 நக்ஷத்திரங்களில் ஏழாவது நக்ஷத்திரம்)

பால காண்டம் 18ஆம் ஸர்க்கம் 9, 10,11 ஸ்லோகங்கள் தரும் விவரங்கள் இவை.

“அப்போது பன்னிரண்டாவது மாதத்தில் சித்திரை மாதத்து சுக்கில பக்ஷ நவமி திதியிலும் புனர்வஸு நக்ஷத்திரத்தில் ஐந்து கிரகங்கள் உச்சமாய் நிற்க கர்க்கடக லக்கினத்தில் குரு சந்திரனோடு உதயமாகும் போது ஜகன்னாதரான ஸர்வலோக நமஸ்கிருதரும், திவ்ய லக்ஷணங்கள் பொருந்திய விஷ்ணு பகவானுடைய பாதி அம்சமான மஹாபாக்கியசாலியான இக்ஷ்வாகு வம்சத்தை மகிழ்வூட்டுகின்ற ராமராகிய குழந்தையை கௌஸல்யை பெற்றெடுத்தாள்

பரதனின் நக்ஷத்திரம் – புஷ்யம்லக்ஷ்மணன் மற்றும் சத்ருக்னனின் நக்ஷத்திரம் ஆயில்யம்!

பால காண்டம் 18ஆம் ஸர்க்கம் 15வது ஸ்லோகம் தரும் விவரம் :-

களங்கமற்ற புத்தி உடைய பரதரோ எனில் புஷ்ய நக்ஷத்திரத்தில் மீன லக்னத்தில் பிறந்தார். (பூச நக்ஷத்திரம் 27 நக்ஷத்திரங்களில் எட்டாவது நக்ஷத்திரம்) சுமித்திரையின் இரண்டு புதல்வர்களும் – லக்ஷ்மணன் மற்றும் சத்ருக்னன் ஆகிய இருவரும் – ஆயில்ய நக்ஷத்திரத்தில் சூரியன் உச்சமாய் இருக்க கர்க்கடக லக்னத்தில் பிறந்தனர். (ஆயில்ய நக்ஷத்திரம் 27 நக்ஷத்திரங்களில் ஒன்பதாவது நக்ஷத்திரம்)

ரோஹிணிக்கும் சந்திரனுக்கும் உள்ள நெருக்கம்!

ரோஹிணி நக்ஷத்திரத்திற்கும் சந்திரனுக்கும் உள்ள நெருக்கம் அனைவரும் அறிந்த ஒன்றே.

சுந்தர காண்டம் இருபத்திநான்காவது ஸர்க்கத்தில் ரோஹிணிக்கும் சந்திரனுக்கும் உள்ள நெருக்கம் பலருடன் ஒப்பிடப்பட்டு அப்படிப்பட்ட நெருக்கத்தை சீதையும் ராமரும் கொண்டிருப்பதாக சீதையே கூறுவதை 10,11, 12 ஆகிய ஸ்லோகங்களில் பார்க்கலாம்.

“மஹா பாக்கியவதியான சசிதேவி எப்படி இந்திரனை இணை பிரியாமல் இருக்கிறாளோ,  அருந்ததி வசிஷ்டரையும், ரோஹிணி சந்திரனையும் எப்படியோ, லோபாமுத்திரை அகஸ்த்யரை எப்படியோ, சுகன்யை ச்யவனரை எப்படியோ, ஸாவித்ரீ ஸத்யவானை எப்படியோ, ஶ்ரீமதி தேவி கபிலரை எப்படியோ, மதயந்தி ஸௌதாஸரை எப்படியோ, கேசினீ தேவி ஸகரரை எப்படியோ, கணவனாகப் பின்பற்றிய பீமராஜன் குமாரத்தியான தமயந்தி நள மஹாராஜனை எப்படியோ, அப்படியே நான் இக்ஷ்வாகு குலக் கொழுந்தான ஶ்ரீ ராமரை மணாளனாக விடாது தொடர்பவள்” என்று இப்படி சீதா தேவியார் ராவணனால் நியமிக்கப்பட்ட ராக்ஷஸிகளிடம் கூறுகிறாள்.

இங்கு வசிஷ்ட நக்ஷத்திரம், அருந்ததி நக்ஷத்திரம், அகஸ்த்ய நக்ஷத்திரம் ஆகிய நக்ஷத்திரங்கள் குறிப்பிடப்படுவதையும் பார்க்க முடிகிறது.

உத்தர பல்குனி நக்ஷத்திரத்தில் ஶ்ரீ ராமர் கல்யாணம்

27 நக்ஷத்திரங்களில் 12வது நக்ஷத்திரமாக அமைவது உத்தர பல்குனி. இது மிகவும் சிறப்பு வாய்ந்த நக்ஷத்திரமாகவும் மிகவும் புனிதமான ஒன்றாகவும் கருதப்படுகிறது.

இந்த நக்ஷத்திரத்தில் தான் ஶ்ரீ ராமர் சீதையை மணந்தார். பரதன், லக்ஷ்மணன், சத்ருக்னன் ஆகியோருக்கும் இதே நாளில் இதே நக்ஷத்திரத்தில் தான் திருமணம் நடைபெற்றது.

பால காண்டத்தில் 71வது ஸர்க்கத்தில் வஸிஷ்டரிடம் ஜனகர் தனது வம்சம் பற்றி விவரித்துக் கூறுகிறார். அதில் 24வது ஸ்லோகத்தில் வருவது இது.

ஜனகர் கூறுகிறார்: “மஹாபாகுவே! இன்று மக நக்ஷத்திரம் அல்லவா! பிரபுவே! மூன்றாவது தினத்தில் பல்குனி என்கிற அந்த உத்தர நக்ஷத்திரத்தில் கல்யாணத்தைச் செய்யும். அரசே! இராமர் லக்ஷ்மணர் இவர்களின் விஷயத்தில் மேன்மேலும் நலங்களைக் கொடுக்கின்ற தானமானது செய்யத் தக்கது.

இதில் மக நக்ஷத்திரம் மற்றும் உத்தரபல்குனி நக்ஷத்திரங்கள் குறிப்பிடப்படுகின்றன.

ஹஸ்த நக்ஷத்திரம் – ஶ்ரீ ராமருக்கு ஆகாத நக்ஷத்திரம்!

ஶ்ரீ ராமரின் நக்ஷத்திரம் புனர்வஸு. அதற்கு ஏழாவது நக்ஷத்திரமாக அமையும் ஹஸ்த நக்ஷத்திரம் வதத்தாரை ஆகும். ஆகவே அது அவருக்கு ஆகாத நக்ஷத்திரம். உத்திர நக்ஷத்திரம் ஆறாவது நக்ஷத்திரம். ஆகவே அது ஸாதகத்தாரை.

யுத்த காண்டத்தில் நான்காவது ஸர்க்கத்தில் ஆறாவது ஸ்லோகத்தில் வருவது இது:

சுக்ரீவனிடம் பயணப்பட ஆயத்தமாகு என்று ஶ்ரீ ராமர் சொல்லும் போது இதைச் சொல்கிறார்.

“இன்றோ உத்தர நக்ஷத்திரம். நாளையோவெனில் ஹஸ்த நக்ஷத்திரம் வரப்போகிறது.

சுக்ரீவனே! எல்லா சைன்யங்கள் சூழ நாம் பிரயானமாகலாம்.”

விசாக நக்ஷத்திரம்

யுத்த காண்டம் நான்காவது ஸர்க்கத்தில் 42வது ஸ்லோகம் விசாகத்தைக் குறிப்பிடுகிறது.

27 நக்ஷத்திரங்களில் விசாகம் 16வது நக்ஷத்திரம்.

லக்ஷ்மணர் திரண்ட படை செல்லும் போது நல்ல சகுனங்களைக் காண்கிறார். அதனால் மகிழ்ச்சியுற்று ஶ்ரீ ராமரிடம் அவற்றைச் சொல்கிறார்.

அதில் ஒரு முக்கிய விஷயம் விசாக நக்ஷத்திரம் பற்றியதாகும்.

“இரட்டையான விசாக நக்ஷத்திரங்கள் குரூர கிரக சம்பந்தம் இல்லாதவையாக, தெளிவாகப் பிரகாசிக்கின்றன. மகாத்மாக்களாகிய இக்ஷ்வாகுகளுக்கும், நமக்கும் மேன்மை பெற்று விளங்கும் நக்ஷத்திரம் இது.”

இப்படி விசாக நக்ஷத்திரம் தங்களுக்கு “ஆகி வரும்” நக்ஷத்திரம் என்று கூறுகிறார்.

மூல நக்ஷத்திரம்

 அதே ஸர்க்கத்தில் அடுத்த 43 மற்றும் 44வது ஸ்லோகத்தில் மூல நக்ஷத்திரத்தை லக்ஷ்மணர் குறிப்பிடுகிறார் இப்படி:

“நிருதியை தேவதையாகக் கொண்டதும், அரக்கர்களுக்கு உரியதுமான மூல நக்ஷத்திரமானது பாபக் கிரகங்களால் பீடிக்கப்பட்டிருக்கிறது.

மூல நக்ஷத்திரம் பக்கத்தில் இருக்கும் தூம கேதுவால் தீண்டப்பட்டதாய எரிக்கப்படுகின்றது.”

“யமனுக்கு ஆட்பட்டுவிட்ட அரக்கர்களின் அழிவின் பொருட்டு அந்திக் காலத்தில் இந்த நக்ஷத்திரம் முழுவதும் க்ரகத்தால் பீடிக்கப்பட்டதாகவும் ஏற்பட்டிருக்கிறது.

பிராஜாபத்ய நக்ஷத்திரம்ரோஹிணி நக்ஷத்திரம், விசாகா நக்ஷத்திரம்!

போர்! போர்! உக்கிரமான போர்! ராமருக்கும் ராவணனுக்கும் போர்!

யுத்தகாண்டம் 103வது ஸர்க்கம் இந்தக் கடும் போரை அற்புதமாக வர்ணிக்கிறது.

30,31, 32வது ஸ்லோகங்களில் பிராஜாபத்ய நக்ஷத்திரம், ரோஹிணி நக்ஷத்திரம், விசாக நக்ஷத்திரம் ஆகியவை குறிப்பிடப்படுகின்றன.

 ராவணனாகிய ராகுவால் ஶ்ரீ ராமராகிய சந்திரனை பீடிக்கப்பட்டதாய்க் கண்டு, புதன் பிராஜாபத்ய நக்ஷத்திரத்தையும், சந்திரனுக்கு பிரியையான ரோஹிணி நக்ஷத்திரத்தையும் தீண்டி பிரஜைகளுக்குத் தீமை விளைவிப்பவனாக இருந்தான்.

 அப்போது கடல் புகையுடன் எழும் அலை கொண்டதாக முற்றும் கொதிப்பதாக கொந்தளித்து சூரியனைத் தொடுவது போல உயரக் கிளம்பியது.

சூரியன் தூமகேதுவால் பீடிக்கப்பட்டவனாய் ஆயுதம் கொண்டவனாகவும், பயங்கரனாகவும், ஒளி மங்கியவானகவும், முண்டத்தைக் களங்கமாகக் கொண்டவனாகவும் காணப்பட்டான்.

 செவ்வாயும் இந்திரனையும் அக்னியையும் தேவதையாகக் கொண்டதும், தெளிவானதும், கோஸலா தேசத்து (இக்ஷ்வாகு) மன்னர்களுக்கு  குல நக்ஷத்திரமானதுமாகிய விசாகா நக்ஷத்திரத்தையும் ஆகாயத்தில் தீண்டி நின்றான்.

 இக்ஷ்வாகு மன்னர்களில் குல நக்ஷத்திரம் விசாகம் என்பது இங்கு கூறப்படுகிறது.

 போரின் கடுமையை நக்ஷத்திர நகர்வுகளினால் வால்மீகி விளக்குவது அவரது ஜோதிட அறிவையும் வானியல் நிகழ்வுகளை அவர் உன்னிப்பாகக் கவனிப்பதையும் காட்டுகிறது.

இப்படி ராமாயணத்தில் ஏராளமான நக்ஷத்திர ரகசியங்கள் அடங்கி உள்ளன!

 ***

பஞ்ச கன்யா, சப்தபுரி குறுக்கெழுத்துப் போட்டி (Post No.12,014)

( for colour squares, please go to swamiindolgy.blogspot.com)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,014

Date uploaded in London – –  18 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Pancha Kanyas and Saptapuris Tamil Crossword 18-5-2023

இந்து மதத்தில் ஐந்து புகழ்பெற்ற பெண்களை பஞ்ச கன்யாஹா என்று தினமும் மனத்தில்  ஸ்மரிப்பர் (நினைப்பார்கள்) அதே போல மோட்சம் நல்கும் 7 நகரங்களையும் சொல்லுவார்கள். இந்தக் கட்டத்தில் அவை உள்ளன. கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்  .

கீழேயுள்ள விடையைப் பார்க்காமல் சொல்லுங்கள்

 2       3
            
        4   
 5          6
     7      
     8   9 10, 11  
        12    
     13       
            
 14           
         15   

குறுக்கே (இடம் வலமாக அல்லது வலம் இடமாகச் செல்லவும்)

2. ராவணன் மனைவி; பத்தினி

3.ஏழு நகரம் என்பதன் ஸம்ஸ்க்ருதச் சொல்

4 பல்லவர் தலைநகர்

4 விஸ்வநாதர் கோவில்

5 கோசல நாட்டின் தலை நகர்

8 மஹா காலம் என்னும் சிவன் உறை தலம்

9 வாலியின் மனைவி

13 உஜ்ஜையினியின் மறு  பெயர்

14 கங்கை நதி சமவெளியில் இறங்கும் ஊரின் மறு பெயர்

15 ஐந்து பெண்கள்

xxxx

கீழே (மேல் கீழாக அல்லது கீழ் மேலாகச் செல்லவும்)

1.கெளதமரின் மனைவி ; ராமரின் கால் பட்டதால் விமோசனம்.

6 கங்கை நதி மீது பாலம்; அது சமவெளியில் இறங்கும் ஊர்

7. ராமருடன் கானகம் சென்ற பெண்

10 கிருஷ்ணர்  ஆண்ட துறைமுக ஊர்

12 பாண்டவர் மனைவி

Xxxx

Answer

1அ 2 மண்டோரிபுப்ச3
           
   ல்   சிகா4ஞ்சி 
அ 5 யோத்யா     ஹ6
     சீ7  வா  ரி
னி ஜைஜ்உ 8 தா  9ராது10, ம  11 த்
       தி 12   வா
காதிந்அ 13     ர்
         வு  
மா 14 யா        
   யான் சஞ்ப 15  தி

12.பஞ்சகன்யா 3.சப்தபுரி

1.அஹல்யா , 6.சீதா , மண்டோதரி, 7.தாரா, 9.திரவுபதி

5.அயோத்யா, 8.மதுரா, 11.மாயா, 4.காசி, 4.காஞ்சி , 10.அவந்திகா,10.துவாரகா,

6.ஹரித்வார், 8.உஜ்ஜைனி

–subham- 

tags :- பஞ்ச கன்யா, சப்தபுரி ,குறுக்கெழுத்துப் போட்டி,

Gandhiji on Eating Beef (Post No.12,013)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,013

Date uploaded in London – –  18 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Question

The Muslim public need to be satisfied on a very important question. Will the Muslims be allowed to eat their national food—beef—under a Hindu majority government? If you can satisfy the Muslims on this all important question, a great deal of knots will be solved. You should give a straight answer to this question in your paper Harijan.

Answer (by Gandhiji)

I do not know how the question arises. For whilst congressmen were in office, they are not known to have interfered with the practice of beef eating by Muslims. The question is also badly conceived. There is no such thing as a Hindu majority government. If a free India is to live at peace with herself, religious divisions must entirely give place to  political divisions placed on considerations other than religious. Even as it is, though unfortunately religious differences loom large, most parties contain members drawn from all sects. It is more over not true to say that beef is the national food of the Muslims. In the first place, the Muslims in India are not as yet a separate nation. In the second beef is not their ordinary food. Their ordinary food is the same as that of the millions. What is true is that there are very few Muslims who are vegetarians from a religious motive. Therefore, they will take meat, including beef, when they can get it. But during the greater part of the year, millions of Muslims, owing to poverty, go without meat of any kind. These are facts.

But the theoretical question demands a clear answer. As a Hindu, a confirmed vegetarian, and a worshipper of the cow, whom I regard with the same veneration as I regard my mother  ( alas no more on this earth) , I maintain that the Muslims should have full freedom to slaughter  cows, if they wish, subject of course to hygienic restrictions, and in a manner not to wound the susceptibilities of their Hindu neighbours. Fullest recognition of freedom to the Muslims to slaughter cows is indispensable for communal harmony, and is the only way of saving the cow. In 1921, thousands of cows were saved by the sole and willing effort of the Muslims themselves. In spite of the black clouds hanging over our heads, I refuse to give up the hope that they will disperse and that we shall have peace in this unhappy land. If I am asked for proof, I must answer that my hope is based on faith and faith demands no proof.

Harijan, 27-4-1940

Xxx

My comments

If the same question is put to any Hindu saint, he would have said, No, you should not kill cows. Like your religion forbids pork, my religion bans beef eating. In the articles on cow protection, he says cow is better than our own mother in many ways. So, he contradicts himself when he said that beef eating is okay. The last few sentences is about a separate country for Muslims. There also Gandhiji’s hope failed. He tried to act like a saint in a wrong place, that is politics, at the wrong time. He was not bold enough to tell the Muslims not to kill the cows. His writing like this, only advising Hindus, enraged the Hindus. He himself admitted that he was inundated with letters every day criticising him and the letters increased the income British postal service to a large extent. And yet he could not feel the pulse of the people.

He wrote that several thousands of Hindu women were kidnapped and raped and made pregnant by monsters and those Hindu pregnant women should be accepted by the Hindus.

See my old article,

What Gandhiji wrote Before Godse’s Shooting (Post No. …

tamilandvedas.com

https://tamilandvedas.com › 2023/05/04 › what-gandh…

4         May 2023 — Gandhiji was shot dead by Nathuram Godse n 30th January 1948. Millions of Hindus in Punjab and Bengal were suffering because of partition.

5          

–Subham —

Tags- Gandhi, Muslims, Beef eating