வடக்கே ஒரு சிதம்பரம்; 10 லட்சம் பக்தர் வரும் பண்டரீபுரம்; 108 மஹாராஷ்டிர- Part 16 ( 12,012)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,012

Date uploaded in London – –  18 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

மஹாராஷ்டிரத்தில் சாதாரா (सातारा Satara)  நகரில் சிதம்பரம் போலவே ஒரு நடராஜர் கோவிலை காஞ்சி மகா சுவாமிகள் (1894-1994) கட்டினார் . மகாராஷ்டிரத்தில் பக்தி வெள்ளம் கரைபுரண்டு ஓடும் பண்டரீபுரம் விட்டோபா கோவிலுக்கு பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் பத்து லட்சம் பக்தர்கள் வருவது ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இதோ விவரங்கள்:-

மாநில அளவில் தெருவெங்கும் நடைபெறும் கணேஷ் சதுர்த்தி  விழா, ஐந்து ஜோதிர்லிங்க சிவ பெருமான் தலங்கள் ஆகியவற்றுக்கு அடுத்த படியாக பேசப்படுவது பண்டரிபுரம் விட்டோபா கோவில் ஆகும் .

xxx

108 மஹாராஷ்டிர மாநில புனித தலங்கள் – Part 16

69. பண்டரிபுரம் விட்டோபா கோவில்

விட்டல் என்னும் விட்டோபாவும் (கிருஷ்ணன்) ருக்மிணியும் தரிசனம் தரும் விட்டோபா கோவில் இடம்பெற்ற பண்டரிபுரம் , சோலாப்பூரிலிருந்து 72 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது , பண்டரீபுரம் ரயில் நிலையத்தில் இறங்கியும் கோவிலுக்குப் போகலாம்.

1195-ம் ஆண்டுமுதல் வரலாற்றுக் குறிப்புகளில் இடம்பெறும் கோவில் இது.

இந்த ஊரில் மேலும் பல கோவில்களும் புனிதர்களின் மடங்களும் பக்தர்களைக் கவர்ந்து இழுக்கின்றன . பீமா என்னும் நதி இந்த ஊரின் நடுவே சந்திரபாகா என்ற பெயரில் பாய்கிறது . தமிழ் நாட்டில் தேவாரம், திவ்யபிரபந்தம் உள்ளது போலவே மஹாராஷ்டிரத்தில் மராத்தி மொழியில் அபங்கம் என்னும் பக்தி பாடல்கள் உள்ளன. அவற்றில் இந்த நதியின் பெயரும் இறைவனின் பெயரும் அடிக்கடி வரும்.

நாமதேவ் பயரி என்னும் இடத்தைத் தாண்டி பஸ்ச்சிம  வாயில் வழியாக நுழைந்தால் கீழ்கண்ட கடவுளரின் கோவில்களைக் காணலாம் : கணபதி, தத்தாத்ரேயர், கருடன், மாருதி என்னும் அனுமன், செளரங்கி தேவி , கருட கம்பம் , நரசிம்மர், ஏகமுக தத்தாத்ரேயர், ராமேஸ்வர லிங்கம், கால பைரவர், லெட்சுமி நாராயணன், காசி விஸ்வநாதர் , சத்ய பாமா, ராதிகா, சித்தி விநாயகர் , மஹா லெட்சுமி, வெங்கடேஸ்வர் , கண்டோபா , அமிதா பாய் , சனைச்சரன் , குப்த லிங்கம், கனோபத்ர சந்நிதிகள்.

Xxx

விட்டோபா சந்நிதி

இதுதான் பிரதான கோவில்; நகரின் நடுவில் அமைந்துள்ளது கோவிலுக்கு எட்டு வாசல்கள் இருக்கின்றன.கிழக்கு வாசலை நாமதேவர் என்ற மகானின் பெயரில் அழைக்கின்றனர். அவர் இறந்த பின்னர் அவருடைய வேண்டுகோளின்பேரில் அவருடைய உடற்பகுதிகள் புதைக்கப்பட்ட இடத்தின் மீது கட்டப்பட்ட படிகளை உடையது நாமதேவ் ப்யாரி .அதைத் தாண்டிச் சென்றால் வருவது முக்தி மண்டபம்.அங்கே மூன்று அறைகள் உண்டு. பின்னர் நாம் நுழைவது மரத் தூண்களைக் கொண்ட சபா மண்டபம்.; அடுத்தது 16 கம்பங்களை/ தூண்களை உடைய சோல் கம்ப ; அதில் ஒரு தூண் தங்கத் தகடால் மூடப்பட்டிருக்கும்

இது கருட கம்பம் எனப்படும் . அதனருகே உள்ள கற்பலகையில் பொது .ஆண்டு CE 1208 கல்வெட்டைக் காணலாம் . பின்னர் 4 தூண்களை உடைய சோகாம்ப் வரும்.

பின்னர் வெள்ளிக்கூரை வேய்ந்த மண்டபத்தில் ஸ்ரீ விட்டோபா நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருவார் அவரைக் கண்டு ஆசிபெற ஆண்டுதோறும் பத்து லட்சம் பக்தர்கள் வருகிறார்கள். விட்டல் , விட்டோபா, விட்டல் நாத் , பண்டரிநாதன் , பாண்டுரங்கன் என்ற பல பெயர்களில் அவரைப் போற்றியவாறு பக்தர்கள் பவனி வருவார்கள் . பின்னர் ருக்மிணி சந்நிதி வருகிறது. அவரையும் தரிசித்த பின்னர் வெளியே செல்லலாம்.

பாத ஸ்பர்ச தரிசனம் – காலைத் தொட்டு வணங்கலாம்

ஜாதி, குலம் , கோத்ரம் வேறு பாடின்றி அனைவரும் விட்டோபா சிலை அருகில் சென்று, தொட்டு வணங்கலாம். விடோபாவின் பாதங்களில் பக்தர்கள் தலையை வைத்து வழிபடுவது மரபு. இந்த சம்பிரதாயத்தை வேறு    எந்தக் கோவிலிலும் காணமுடியாது இதற்கான வரிசையில் நின்றால் 3 மணி நேரம் காத்திருக்க வேண்டும். விழாக் காலங்களில் 5 மணியும் ஏகாதசி மற்றும் யாத்திரை ஊர்வலம் வரும் நாட்களில் 36 மணி நேரமும் காத்திருக்க நேரிடலாம் ; இவரிடம் திருப்பதி பாலாஜியும் கூடத் தோற்றுவிடுவார்!!

முக தரிசனம்

கியூவரிசையில் நிற்க இயலாதோர், முக தரிசனம் செய்யலாம். இதை அரை மணி நேரத்தில் முடித்து விடலாம். ஆயினும் விட்டலையும் ருக்மிணியையும் 25 அல்லது 15 மீட்டர் தொலைவிலிருந்தே காண முடியும் . தமிழ் நாட்டுக் கோவில்களில் ஆறு கால பூஜை இருப்பது போல இங்கும் அதிகாலை முதல், பல ஆரத்திகள், தீவாராதனைகள் நடைபெறும்

நகரிலுள்ள ஏனைய கோவில்கள் : பத்மாவதி கோவில், லகுபாய் அம்பா பாய், கோபால்பூர், விஷ்ணு பாத, புண்டரீக , நாமதேவ், ஞான தேவ் , துகாராம் , கால மாருதி, தம்பத மாருதி, வியாச நாராயண, யாமை துர்கா , கஜான மஹராஜ்,ராம் பாக் , லக்ஷ்மண் பாக் கோவில்கள் .

Xxx

அருகிலுள்ள முக்கிய இடங்கள்

கைக்கடி மஹராஜ் மடம் , தனபுரி மஹராஜ் மடம், குஜராத்தி தேவஸ்தான,ம்.

Xxx

வாரி விழாவின்போது, பல சந்யாசிகள் பெயர்களில் பக்தர்கள் சுமந்துவரும் பல்லக்குகள், கோவிலுக்கு ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் வர்காரி என்னும் இடத்தில் நிறுத்தப்படும்  மஹான் ஞானேஸ்வர் பெயரில் ஆலந்தி நகரிலிருந்து 2 லட்சம் பக்தர்களுடனும் தேஹு என்னும் இடத்திலிருந்து மேலும் பல்லாயிரம் துகாராம் பக்தர்களும் ,வருவார்கள். பிற இடங்களில் மேலும் ட்டு லட்சம் பேர் சேருவர் . இது 800 ஆண்டுகளாக நடைபெறுகிறது ஆஷாட ஏகாதசி விழாதான் மிகப்பெரியது  சித்திரை, ஆடி, கார்த்திகை, மாசி ஆகிய நாலு மாதங்களில் இந்த பவனிகள் நடைபெறுகின்றன.

வாரி என்பது கால் நடையாக பவனி வருதல், வர்காரி என்பது அப்படி காலில் நடந்து வரும் பக்தர்கள் ஆவர்.. பக்தர்களின் பரவசம்மிகுந்த ஊர்வலங்கள், நம்மூர் காவடி ஊர்வலங்களை நினைவப்படுத்தும்.

Xxx

70. உத்தர சிதம்பர நடராஜர் கோவில்

காஞ்சி மஹா சுவாமிகள் (1894-1994), சாதாரா நகரில், 1980-ல் வியாச பூஜை காலத்தில்  சில மாதங்களுக்கு முகாமிட்டிருந்தார். அப்போது சிதம்பரம் மாதிரியில் வடக்கிலும் ஒரு கோவில் அமைக்க திட்டமிட்டார்.

ஏழு குன்றுகள் சூழ்ந்ததால் இது சாதாரா என்று அழைக்கப்படுகிறது . சுவாமிகளின் திட்டத்தைக்  கேட்டவுடன் ஊர்ப் பிரமுகரும் காஞ்சி சங்காராச்சார்யார் ஸ்ரீ சந்திர சேகர சரஸ்வதியின் பக்தருமான சாமண்ணா , தனது நிலத்தைக் கோவில் கட்ட தானம் செய்தார். அப்போதைய கர்நாடக, தமிழ்நாடு, மஹாராஷ்டிர அரசுகள், அந்தக் கோவிலுக்கு நிதி உதவி செய்தன. கேரள மாநிலம், நல்ல ஜாதி மரங்களைக் கோவில் கட்ட கொடுத்து உதவியது. தர்ம சிந்தனையாளர்களும் பொருளுதவி செய்தனர் .

சிதம்பரம் போலவே எழுந்த இந்தக் கோவிலின் கும்பாபிஷேகம் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் 1984-ம் ஆண்டு நடத்தப்பட்டது கோவில் கட்டும் பணி 1981ல் துவங்கி மூன்றே ஆண்டுகளில் நிறைவு அடைந்தது. சிதம்பரத்திலிருந்து வரும் தீட்சிதர்களே உத்தர சிதம்பரம் நடராஜருக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்யவேண்டும் என்றும் சுவாமிகள் விரும்பினார். அதன்படி இப்போதும் ரொடேஷன் Rotation முறையில் சிதம்பரம் தீட்சிதர்களே இக்கவிலுக்கு வந்து பூஜை செய்கின்றனர்.

வடக்கிலும் ஒரு சிதம்பரம் இருப்பது நாட்டு ஒற்றுமைக்கு உதவுவதோடு, தென்னிந்திய மக்களுக்கு வரப்பிரசாதமாகவும் அமைந்துள்ளது .

Xxxx subham xxxxxx

Tags- வாரி வர்காரி, பண்டரிபுரம், சந்திரபாகா, பண்டரிபுரம், விட்டோபா, விட்டல் , உத்தர சிதம்பரம், நடராஜர் கோவில், சாதாரா

சிங்களரை எதிர்த்து ஓடவிட்ட கோப்பணனின் வீரம்! (Post No.12,011)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,011

Date uploaded in London –   18 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx 

கொங்குமண்டல சதகம் பாடல் 59

சிங்களரை எதிர்த்து ஓடவிட்ட கோப்பணனின் வீரம்! 

ச.நாகராஜன் 

ஒரு முறை பாண்டிய நாட்டை யார் ஆள்வது என்ற அரசுரிமை பற்றி பராக்கிரம பாண்டியனுக்கும் குலசேகர பாண்டியனுக்கும் சண்டை வந்தது.

குலசேகர பாண்டியன், பராக்கிரம பாண்டியனின் மனைவி மக்களைக் கொன்று அவனை நாசம் செய்து விட்டான்.

இதனைக் கேள்விப்பட்ட சிங்கள தேசத்து அரசனான பராக்கிரம பாகு என்பவன் தனது தண்டநாயகனான இலங்காபுரி என்பவனை அழைத்தான்.

அவனை ஒரு பெரும் படையுடன் அனுப்பினான். இலங்காபுரி இராமேஸ்வரத்தை முதலில் பிடித்தான்.  பின்னர் அங்குள்ள சில பாகங்களையும் அழித்தான்.

குந்துகாலம் என்னும் ஒரு இடத்தில் கோட்டை ஒன்றைக் கட்டி அதற்குப் பராக்கிரம புரம் என்ற பெயரை இட்டான்.

இவனை எதிர்த்த பாண்டியராஜன் மற்றும் சுந்தரபாண்டியன் என்ற இரு பாண்டியர்கள் இறந்தனர்.

அந்தச் சமயம் ராஜகேசரி இராஜாதி ராஜன் என்பவன் கொங்கு நாட்டை ஆண்டு கொண்டிருந்தான்.

அவன் குலசேகர பாண்டியனுக்கு மாமன் முறை ஆக வேண்டும்.

ஆகவே அவனிடம் குலசேகர பாண்டியன் உதவி கேட்க உடனே ராஜாதி ராஜன் ஒரு பெரும் படையை அனுப்பினான்.

அந்தப் படை திருக்கானப்பேர், தொண்டி, பாசி, பொன்னமராவதி, மணமேற்குடி, மஞ்சக்குடை ஆகிய இடங்களில் சிங்களைப் படையை எதிர்த்துப் போரிட்டு வென்று சிங்களைப் படையைப் பாண்டிய நாட்டை விட்டுத் துரத்தி அடித்தது.

இந்தக் கொங்குப் படைக்குச் சேனாதிபதியாக இருந்தவர்களுள் ஒருவன் கோப்பணன் என்பவன்.

அவனது வீரத்தைப் புகழ்ந்து கொங்குமண்டல சதகம் பாடல் 59இல் புகழ்ந்து கூறுகிறத்.

பாடல் இதோ:

தென்பாண்டி நாட்டினிற் சிங்களர் தீமை செயச்செழியன்

முன்போ யகற்ற வலியற்ற காலத்தில் மொய்ம்பொடவர்

பின்போடத் தானை கொடுமோட்டு வீரன் பெருங்களந்தை

மன்பூ வலனெனுங் கோப்பண னுங்கொங்கு மண்டலமே

பாடலின் பொருள் ;

தென் பாண்டிய மண்டலத்தில் சிங்களவர் புகுந்து தீமை செய்வதைத் தடுக்க பாண்டியனுக்கு முடியாத காலத்தில், பெரும் சேனையைத் திரட்டி அவர்களை திருப்பி ஓடச் செய்தவன் களந்தை என்னும் பதிக்குத் தலைவனும் ஆகிய பூவலன் என்னும் குடியில் பிறந்தவனுமாகிய கோப்பணன் என்பான். அவனும் கொங்குமண்டலத்தைச் சேர்ந்தவனே என்பதாம்.

இந்தச் சண்டை கி.பி. 1190இல் நடந்தது என சாசனத்தை ஆராய்ந்தவர்கள் கூறி நிர்ணயித்திருக்கிறார்கள்.

1898 சென்னை ஆர்க்கலாஜிகள் வருடாந்தர அறிக்கையில், காஞ்சிபுரத்திற்கு அடுத்த ஆரம்பாக்கத்தில் உள்ள கோவில் சாசனத்திலும் இந்தப் படை எடுப்பு குறிப்பிடப்பட்டிப்பதை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது

இவனது மரபினர் பேரூர் மற்றும் அவிநாசியில் திருப்பணி செய்திருக்கின்றனர்.

.

இந்த மரபினர் இன்றும் கோவை மாவட்டதில் புரவிபாளையம் (பாளையபட்டு) ஜமீன் பரம்பரையாக இருந்து வருகின்றனர். இவர்கள் பாண்டிய வம்சத்தார் என பல விசேஷ உரிமைகளைப் பெற்று வந்தனர்.

விஜய நகரம், மைசூர்,மதுரை நாயக்கர் சமஸ்தானம் மலையாள சமஸ்தானம் உள்ளிட்ட சமஸ்தானங்களில் இவர்கள் சிறப்பு கௌரவம் பெற்றிருந்தனர்.

கள்ளிக்கோட்டை அமீன் சாயபுக்கும் ஶ்ரீரங்கப்பட்டணம் நவாபுக்கும் வாளையாற்றில் நடந்த ஒரு சண்டையின் போது வழி ஒன்று  மறிக்கப்பட்டது. உடனேயே புதிய வழி ஒன்று உருவாக்கப்பட்டது.

இதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்த நவாபு சில உதவிகளை இவர்களுக்குச் செய்தான்.

இம்முடி மன்றாடி என்பன போன்ற பல பழைய காலப் பட்டங்களை இவர்கள் பெற்றிருந்தனர்.

‘இம்முடி’ ஜக மண்டலாதிபதி கோப்பண மன்றாடியார் என்பதை இந்த வமிச வழி வந்தவர்கள் சென்ற நூற்றாண்டில் கொண்டிருந்தனர்.

பாடலில் குறிப்பிடப்படும் களந்தை என்பது வாரக்க நாட்டில் உள்ள ஒரு ஊர்.

பூவலன் என்று பாடலில் குறிப்பிடப்பட்டிருப்பது பூவலியர் என்னும் ஒரு ஜாதியைக் குறிப்பிடுகிறது. இதை பூலுவர் என்றும் கூறுவர்.

பூவலியர், மாவலியர், காவலியர், வேட்டுவர், வேடர் என ஐந்து வகுப்பினரை பஞ்சவருண வாளரச வகுப்பினர் என்று கூறுவர்.

ஒரு கோவையில், நாணிக்கண் புதைத்தல் துறையில் வரும் பாடல் இது.

பம்பிடச் சிங்களர் தென்னர் களிக்கப் பணுங் களந்தைக்

கம்பக் கரிக்கோப் பணன் வரை யீர் வேள் கலாபத்திலே

செம்பொற் குடத்தைப் பவளத்தை முத்தைத் தெரியவிட்டு

அம்பைப் புதைந்த்து வைத் தீரிந்த வெண்ண மறிந்திலனே

பழம்பெரும் சரித்திரத்தைக் கொண்ட  கொங்கு மண்டல வீரர் பலர் இருந்தனர் என்பது கொங்குமண்டல சதகத்தால் நன்கு விளங்குகிறது.

***

Part 15 -Uttara Chidambaram and Pandharpur;108 Famous Hindu Shrines in Maharashtra (Post 12,010)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,010

Date uploaded in London – –  17 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Next to Ganesh Chaturthi Festival and Five Jyotirlinga Shiva Shrines, Maharshtra is famous for the Varkari procession with one million people towards Pandharpur Vitobha Temple. Even those who could not go there listen to Marathi Abhang songs every day. Abhanga (flawless, continuous) is a form of devotional poetry sung in praise of the Hindu god Vitthal, also known as Vithoba.

Part 15

69. Pandharpur Vitobha Temple

PANDHARPUR  is a holy place of god Vitthal and goddess Rukmini. It is also known as the Southern Kashi of India.  It is located at a distance of 72 kms by road. from Solapur District headquarters. The Pandharpur Railway Station falls on the Miraj-Kurduwadi-Latur railway line.

The ancient temple of Vitthal was renovated in 1195 A.D. There are many other temples of Indian Deities and Mathas (Dharmshalas) of many Saints. The Chandrabhaga (Bhima) river flows through the City.

The following are the temples inside the main temple as one enters from Namdev Payari and come out of Pachhim Dwar of the temple.

Namdev Payari – In memory of Shri.Sant Namdev, Ganesh Mandir, Datta Mandir,Garud Mandir,Maruti Mandir,Chowrangee Devi Mandir,Garud Khamb,

Narsimha Mandir,Ek-mukh Dattatraya Mandir,Rameshwar Lingam Mandir,

Kala Bahirav Mandir,Laxmi-Narayan Mandir,Kashi-Vishwanath Mandir,Satya-Bhama Mandir,Radhika Mandir,Siddhi-Vinayak Mandir,Mahalakshmi Mandir

Venkateshwar Mandir,Kanhopatra Mandir,Ambabai Mandir,Shani-Dev Mandir,

Nagnath Mandir,Guptaling Mandir,Khandoba Mandir.

xxxx

The main temple

Vithoba Temple which is the main temple is situated in the central part of the town. The temple has eight entries. The main entrance is the eastern one known as Mahadwar which is also called as Namdev Payari, because one of the steps known as Namdev Payari is built up over the places where the remains of the great saint Namdev are believed to have been burried at his desire.

After Namdev Payari there are three small rooms called Mukti Mandap. After crossing the Mukti Mandap there is a quadrangle of about 120’ x 60’ with wooden pillars, presently called as Vithal Sabha Mandap. After crossing this sabha mandap one enters a hall known as Solkhamb, by reason of the fact that its superstructure rests on 16 pillars. One of the pillar is plated with Gold at the base and silver above it and is known as Garood Khamb. Near solkhamb there is a large stone slab with inscription of 1208 A.D. Close to the Solkhamb mandap, towards the sanctum is a small hall called Chowkhambh as the superstructure rests on four pillars.

From the chowkhambhi hall one is let into the shrine or  Garbhagraha,, a small room about 6’ square consists of a platform of 3’ height with silver canopy above and on this platform stands the idol of Shri. Vithoba which attracts millions every year. The idol is called by different names Vithoba, Pandurang, Pandhari, Vithal, Vithalnath etc. Behind Vithoba temple in the north east corner of the temple, facing east is the temple of Rukmini, the consort of Vithoba. It has a  Garbhagraha,, entry / exit, outer hall and a sabha mandap.

Paadsparshdarshan

Every devotee not only entere the sanctum irrespective of the dress/caste/creed, but even places his or her head on the feet of the deity actually touching it. And this is a privilege prized and exercised by all devotees. This Padsparshadarshan is unique and not found in most of the Hindu temples elsewhere. For padsparsha Darshan it requires 2 to 3 hours on ordinary days, 4 to 5 hours on weekly holidays and Ekadashi day and upto 24 to 36 hours on Yatra days.

Mookh (mukha) Darshan

For the devotees who cannot spare long hours in queues for Padsparshadarshana one can have the Mookhdarshan. Bhakta or devotee can take darshan of Vitthal from the distance of about 25 metres and of Rukmini, from the distance of about 15 metres. It requires only 15 to 20 minutes for darshan.

The various daily rituals like Kakda Aarati, Mahapooja, Mahanaivedhya, Poshakh, Dhooparati, Padyapooja, Shejarti etc are performed in the main temple of Lord.Vitthal.

Xxxx

Other temples in the town

Padmavati Mandir, Railway Station Road

Lakhubai/Rukmini Mandir, Chinch Baag

Ambabai Mandir, Dagadi Bridge, Solapur Road

Gopalpur, 2 kms. from Pandharpur

Vishnupad , 2 kms. from Pandharpur

Pundalik Mandir, On Chandrabhaga River Bank

Namdev Mandir, Pradakshina Road

Dnyaneshwar Mandir, Naath Chowk

Tukaram Mandir, Pradakshina Road

Kala Maruti Mandir , Pradakshina Road

Tambada Maruti Mandir, Pradakshina Road

Vyas Narayan Mandir, Solapur Road

Yamai Tukai Mandir, Sangola Road

Gajana Maharaj Mandir, Shivaji Chowk

Takpeethya Vithoba, Near Mandi

Ram Baag, Solapur Road

Laxman Baag, Railway Station Road

xx

Places of Importance in Pandharpur

Sant Kaikadi Maharaj Math –

Sant Tanapure Maharaj Math

Gujarathi Devsthan – It is on the other side of the river Bhima. The pilgrims have to cross the river and visit the Shrinathji Temple.

The Palaquins (Palakhi) of various Saints originating from various locations gather at Wakhari, five kms. from Pandharpur for the Waari festival.

About 2 lakh Warkaris marching from pilgrim Alandi of Sant Dnyaneshwara and from Dehu of Sant Tukaram’s pilgrim centers and many other warakaris join this march on their way to this long route of Alandi-Dehu to Pandharpur. In all about 7 – 8 lakh devotees visit Pandharpur for Aashadi Ekadashi.

The procession is called the Wari and the devotees-the Warkaris ( literally ‘those who do the wari’). This 800-year-old tradition is a distinctive part of the Maharashtrian culture and is the ritualistic essence of the Wakari Panth (a sampradaya within the Bhakti tradition).

Four processions take place in the months of Chaitra (March-April), Ashadh (June-July), Kartik (October-November) and Magh (January-February). Of these, the Ashadhi Ekadashi Wari is the most popular.

Xxxx

70.Uttara Chidambaram Nataraja Temple

Kanchi Paramacharya (1894-1994) laid the foundation for a new Shiva temple in Maharashtra.

Uttara Chidambaram Nataraja (Lord Shiva) temple is in Satara (Saataaraa). Satara is a town located in the Satara District of Maharashtra. The town gets its name from the Seven (Sat) Hills(Taras) surrounding it.

Kanchi Shankaracharya (1894-1994)   performed Vyasa-puja at Satara on 27th of July, 1980. During His long camp at Satara,  His Holiness Sri Chandrasekarendra Saraswathi Mahaswami (1894-1994) desired that a temple for Sri Nataraja on the model of the ancient Nataraja temple at Chidambaram should be constructed at Satara. Samanna (late) an ardent devotee of the Acharya and a prominent citizen of Satara gifted away an adequate plot of land for building the temple.

The foundation for the temple was laid on an auspicious day in May 1981. Financial assistance of the then governments of the States of Maharashtra, Karnataka, Andhra Pradesh and Tamil Nadu, and the supply of the entire timber necessary for the construction by the government of Kerala  were received . A  number of philanthropists also helped. A majestic temple of Sri Nataraja with Tamil Nadu style gopurams (towers) over the four gateways, a replica of the original in Tamil Nadu rose up in Satara in the course of about three years.

 Kumbabhishekam (consecration) of the new Uttara (North) Chidambaram temple was performed in the immediate presence of His Holiness Sri Jayendra Saraswati Swami, in 1984.

Daily worship at the temple, which is being performed by Dikshitas of the Chidambaram temple, going over to Satara by rotation, according to the desire of the Acharya.

To be continued…………………………

Tags- Uttara Chidambaram, Pandharpur, Varkari, Abhang poetry, songs, Vittal, Vitobha, Nataraja temple

காந்திஜிக்கு பிடிக்காத கிருஷ்ண பரமாத்மா! (Post No.12,009)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,009

Date uploaded in London – –  17 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

வெளிநாட்டில் கல்வி கற்ற மஹாத்மா காந்திஜிக்கு இந்து மதம் பற்றியோ, இந்திய வரலாறு பற்றியோ ஆழமான அறிவு கிடையாது என்பதை கீழ்க்கண்ட அவரது எழுத்து காட்டும் .

மஹாத்மா காந்தி 1-10-1925ம் ஆண்டு யங் இந்தியா (Young India) பத்திரிகையில் எழுதுகிறார் :

” நான் இந்தியாவில் வாழ்ந்த ‘குரு’ – க்கள் உண்மையிலேயே வாழ்ந்தவர்கள் ; அவர்கள் வரலாற்று நாயகர்கள் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன என்று எழுதினேன். ஆனால் மஹாபாரதம் சொல்லும் கிருஷ்ணன் வாழ்ந்தானா என்பது பற்றி எனக்குத் தெரியாது. நான் வணங்கும் கிருஷ்ணன் வரலாற்றில் வாழ்ந்தவன் அல்ல. தன்னுடைய கெளரவம்  பாதிக்கப்பட்டதால் மற்றவர்களைக் கொல்லும் கிருஷ்ணனை நான் வணங்க மாட்டேன் .காமலீலைகளில் ஈடுபட்டதாக பிற மதத்தினர் குற்றம்சாட்டும் இளம் வயது .கிருஷ்ணனை நான் வணங்க மாட்டேன் .பரிபூரணம் வாய்ந்த அவதாரம், மாசுமருவற்ற ஒருவன், கீதையை போதித்தவன், பல லட்சம் மனிதர்களுக்கு ஊற்றுணர்ச்சி தரும் கிருஷ்ணனை நான்மனதில்  வைத்துள்ளேன். மஹாபாரதம் வரலாற்று குறிப்புதான் என்றோ, அதில் சொல்லப்பட்ட ஒவ்வொரு சொல்லும் உண்மைதான் என்றோ, அந்த மஹாபாரதத்தில் கிருஷ்ணன் செய்ததாக சொல்லப்படும் செயல்கள் அப்படித்தான் செய்தார் என்றோ,  எவராவது என்னிடம் நிரூபித்தால் அந்த கிருஷ்ணனை நான் அவதார புருஷனாக ஏற்கமாட்டேன். இதற்காக என்னை இந்துமதத்திலிருந்து வெளீயே ற்றினாலும் அந்தக் கிருஷ்ணனை ஒதுக்கித் தள்ளுவேன் .

என்னைப்  பொருத்த மட்டில் மஹாபாரதம் அடையாளபூர்வமாக கதை சொல்லும் (Allegorical) ஒரு சமய புஸ்தகம்தான்; அது வரலாற்றுக் குறிப்பு அல்ல .நம்முடைய மனதிற்குள் நடைபெறும் முடிவில்லாத மனப்போராட்டங்களை அடையாளபூர்வ கதைகள்  ரூபமாக சொல்கிறது. அதிலுள்ள சம்பவங்கள், நமக்குள் நடைபெறுவதை மனிதர்கள் மீது ஏற்றிச் சொல்கிறது இப்போதுள்ள மஹாபாரதத்தை, குற்றம் குறைகளற்ற  ஒரிஜினல் மஹாபாரதம் என்றும் நான் கருதவில்லை. அது பலவித திருத்தங்கள், மாற்றங்களுக்கு உள்ளாகியது என்றே கருதுகிறேன்

யங் இந்தியா, 1-10-1925

XXX

என் கருத்து

காந்திஜி வெளிநாட்டில் கல்வி கற்றவர்;  இந்துப் பாவிகளே! என்று கூச்சலிட கிறிஸ்தவ மத பிரசாரங்களை அதிகம் கேட்டவர். அதனால் மேற்கூறிய கட்டுரையில் சிசுபால வாதத்தையும், கோபிகள் சம்பவத்தையும் குறைகூறி அது உண்மையாக இருக்க முடியாது. அப்படி இருந்தால் அந்தக் கிருஷ்ணன் எனக்கு வேண்டாம் என்கிறார். அவர் சுவாமி விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும் பல சாது சந்யாசிகள் மஹான்கள் எழுதிய விஷயங்களைப் படிக்காதவர் என்பதும் இந்து மதம் பற்றி நுனிப்புல் மேய்ந்தவர் என்பதும் ஆனால் ராமபிரான் மீதும் பகவத் கீதை மீதும் அபாரமான , குருட்டுத்தனமான நம்பிக்கை உடையவர் என்பதும் அவரது பிற கட்டுரைகளில் தெளிவாகத் தெரிகிறது .

மஹா பாரதம் வரலாறு பூர்வமானது என்பதை நூற்றுக்கணக்கான பல்துறை வித்தகர்கள் நிரூபித்துள்ளனர். அதுமட்டுமல்ல துவாரகா (Marine Archaeologist Excavations) கடலடி ஆராய்ச்சிகள் அது மிகவும் பழைய இடம் என்பதை தொல்பொருட் துறை சான்றுகள், விஞ்ஞான சோதனைகள் மூலம் நிரூபித்து விட்டன.. இவை எல்லாம் காந்திஜி எழுத்துக்கு 75 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்தவை என்றாலும் நம்முடைய முன்னோர்கள் சொன்னது உண்மை என்பதைக் காட்டிவிட்டன .

முஸ்லீகள் மாட்டு மாமிசம் சாப்பிடுவதையும் அவர் ஆதரிக்கிறார் . அதை அடுத்த கட்டுரையில் காண்போம் .

–subham—

Tags – மஹா பாரதம், வரலாறு, தொல்பொருட் துறை, சான்று, காந்திஜி, பிடிக்காத, கிருஷ்ணன், பரமாத்மா

சந்த்யா காலத்தில் செய்யக் கூடாதவை ஐந்து! (Post No.12,008)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,008

Date uploaded in London –   17 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

சுபாஷித செல்வம்

சந்த்யா காலத்தில் செய்யக் கூடாதவை ஐந்து!

ச.நாகராஜன்

கிடைக்க அரிதான ஐந்து!

கீழ்க்கண்டவை கிடைக்க அரிதானவை.

1) வித்யா – கல்வி

2) துங்கா – உயர்ந்த மாளிகைகள்

3) குங்குமம் – குங்குமம்

4) சஹிமம் பய: – குளிர்ந்த நீர்

5) த்ராக்ஷை – திராக்ஷைப் பழம்

வித்யா வேஷ்மானி துங்கானி குங்குமம் சஹிமம் பய: |

த்ராக்ஷாதி யத்ர சாமான்யமஸ்தி த்ரிதிவதுர்லபம் ||

துன்பங்கள் ஐந்து

மனித வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் துன்பங்கள் ஐந்து.

அவையாவன

1) கர்பம் – கர்ப்பத்தில் ஏற்படும் துன்பம்

2) ஜனனம் – பிறவி என்னும் துன்பம்

3) ஜரா – மூப்பு – வயதானதால் ஏற்படும் துன்பம்

4) வ்யாதி – நோய் – நோய்களால் ஏற்படும் துன்பம்

5) மரணம் – மரணம் – மரணத்தினால் ஏற்படும் துன்பம்

பஞ்ச: – கர்பதுக்க – ஜன்மதுக்க – ஜரா துக்க – வ்யாதிதுக்க – மரணதுக்கானி !

      சங்கரரின் விளக்கவுரை – ஸ்வேதாஸ்வதரோபநிஷத்

பெண்ணுக்கு கௌரவம் தரும் ஐந்து காரங்கள்

‘ப’ எழுத்து வரிசையில் ஆரம்பிக்கும் ஐந்து விஷயங்கள் ஒரு பெண்ணுக்குக் கௌரவம் தருபவையாக அமைகின்றன.

அவை யாவை?

1) புத்ரஸு – நல்ல மகனுக்குத் தாயாக இருப்பது

2) பாககுஷாலா – சமைப்பதில் நிபுணியாக இருப்பது

3) பவித்ரா – தூய்மையாக இருப்பது

4) பதிவ்ரதா – கற்புடன் இருப்பது

5) பத்மாக்ஷி – தாமரை போன்ற கண்களுடன் இருப்பது

நாரி கௌரவம் இவையே.

புத்ரஸு: பாககுஷாலா பவித்ரா ச பதிவ்ரதா |

பத்மாக்ஷி பஞ்சபைர்நாரி ப்ருவி சம்யாதி கௌரவம் ||

                      சுபாஷித ரத்னாகர பாண்டாகாரம் 157 / 194

ஐந்து காரங்கள்!

ஐந்து  முக்கிய விஷயங்கள் ‘ம’ என்ற எழுத்து வரிசையில் வைத்து ஆரம்பிக்கின்றன.

1) மத்ய – சாராயம் (குடி)

2) மாம்ஸம் – மாமிசம்

3) மத்ஸ்யம் – மீன்

4) முத்ரா – சமிக்ஞை

5) மைதுனம் – பாலியல் உறவு

மத்யமாம்ஸமத்ஸ்யமுத்ராமைதுனரூபம் |

–    சப்தகல்பத்ருமம்

உலகம் முன்னேறத் தேவையான ஐந்து விஷயங்கள்!

உலகம் முன்னேறுவதற்காக ஐந்து விஷயங்கள் இன்றியமையாதவை.

அவையாவன:

1) ரக்ஷாதிகரணம் – நீதி காக்கப்பட வேண்டும்

2) யுத்தம் – போர் (தர்மம் காப்பதற்காக நடப்பது)

3) தர்மானுசாஸனம் – தர்மத்துடன் கூடிய அரசாட்சி

4) மந்த்ர சிந்தா – மந்திரிகளுடன் கலந்து ஆலோசனை செய்தல்

5) காலே சுகம் – தகுந்த காலத்தில் சுகத்தை அனுபவிப்பது

ரக்ஷாதிகரணம் யுத்தம் தர்மானுசாஸனம் |

மந்த்ர சிந்தா சுகம் காலே பஞ்சபிர்வர்ததே மஹி ||

       மஹா பாரதம் – சாந்தி பர்வம் 93-24

சந்த்யா காலத்தில் செய்யக்கூடாதவை ஐந்து!

சந்த்யா காலத்தில் ஐந்து விஷயங்களைச் செய்யக் கூடாது.

அவையாவன:

1) ஆஹாரம் – உணவு உண்பது

2) மைதுனம் – பாலியல் உறவு

3) நித்ரா – உறக்கம் – தூங்குவது

4) சம்பாதம் – சாஸ்திரங்களைப் படிப்பது

5) அத்வானி கதி – பயணப்படுதல்

ஆஹாரம் மைதுனம் நித்ராம் சம்பாடம் கதிமத்வநி |

ஏதானி பஞ்ச கர்மாணி சந்த்யாயாம் வர்ஜயேத புத: |

***

இந்திய நாகர்– தென் அமெரிக்க மாயா நாகரீக அற்புத ஒற்றுமைகள்

WRITTEN BY LONDON SWAMINATHAN

Date uploaded in London – –  16 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

MY TAMIL BOOK ON MAYAN CIVILIZATION MYSTERY

MY 99TH BOOK FROM PUSTAKA.CO.IN IS AVAILABLE NOW.

இந்திய நாகர்– தென் அமெரிக்க மாயா நாகரீக

அற்புத ஒற்றுமைகள் (book title)

CONTENTS

1.நாகர்- மாயா இன அற்புத ஒற்றுமைகள்- பகுதி 1

2.நாகர்- மாயா இன அற்புத ஒற்றுமைகள்- பகுதி 2

3.மாயா இன மக்கள், இந்திய நாகர்கள் !

4.இன்கா நாகரீக அதிசய மொழி: விஞ்ஞானிகள் வியப்பு

5.இன்கா நாகரீக அதிசய முடிச்சு மொழி – பகுதி 2

6.கங்கர், கொங்கர், கலிங்கர், குலிங்கர்: கம்பன் தரும் நாடுகளின் பட்டியல்

7.கடலில் மூழ்கிய டைடானிக் கப்பலில் உள்ளத்தை உருக்கும் ஒரு சம்பவம்!

8.காலம் பற்றிய ஐந்து அற்புதக் கதைகள்!-1

9.காலம் பற்றிய ஐந்து அற்புதக் கதைகள்!-2

10.கொங்கர் உள்ளி, ஹோலி, சுமேரிய புருள்ளி விழாக்கள் ஒன்றா?

11.சங்க இலக்கியத்தில் யவனர் மர்மம்!

12.யவனர்களைத் தமிழர்களும் சாணக்கியனும் தாக்கியது ஏன்?

13.மோசஸ், ஜீஸஸ், திரவுபதி, வசிஷ்டர்—தெய்வீக விருந்துகள்

14.ரோமானிய சக்ரவர்த்தியின் ‘வில்லன்’ சிரிப்பு!

15.யவன முண்டா ! பாணினி தகவல்

16.சுமேரியா, எகிப்துக்கு இந்தியாவின் நீலக்கல் ஏற்றுமதி!

17.சிந்து சமவெளியில் மக் டொனால்ட்!

18.மெகஸ்தனீஸ், அர்ரியன், ப்ளினி பொய் சொல்வார்களா?

19.அமரு சதகம் : சமஸ்கிருத காதல் கவிதைகள்

20.நிர்வாண முஸ்லீம் சாமியார்களுக்கு மரண தண்டனை

21.வீணான ஒரு ஆராய்ச்சி! வேனன் கதை!

22.மூவாயிரம்  ஆண்டுகளுக்கு முன்னர் அஸீரிய மன்னன்

அளித்த தடபுடல் விருந்து!

23.தமிழ் சிறைச்சாலையில் சமூக சேவை

24.அரசனின் குணநலன்கள்: கம்பனும் காளிதாசனும்

25.லண்டனில் திருவள்ளுவர் சிலை நிறுவிய வரலாறு

26.புற நானூற்றின் கடவுள் வாழ்த்தில் சுவையான விஷயங்கள்

27.தமிழனுக்கு வானவியல் தெரியுமா?

28.அரிய பஞ்சமுக வாத்யம்!

29.இந்து கலைக்களஞ்சியம்: பிருஹத் சம்ஹிதா!

30.ஜராதுஷ்ட்ரர் வாழ்வில் நடந்த அற்புதங்களும் கந்த சஷ்டிக் கவசமும்

31.இந்திய வரலாற்றில் அராஐகம் !

32.கடவுள் பெயர் என்ன? எல்/அல்- ஈலா- இடா – அல்லா!!!

33.இளவரசர் ஹாரிக்கு ‘பஞ்ச கன்யா’ பெண்கள் வரவேற்பு

****************************

முன்னுரை

வரலாறு என்பது வெறும் ‘ஆட்சி ஆண்டுகள்’ நிறைந்த புள்ளி விவரப் பட்டியல் இல்லை. உலக வரலாற்றில் ஏராளமான சுவையான நிகழ்ச்சிகள் இருக்கின்றன. அவைகளைப் படித்தால் நமக்கு வரலாற்றின் மேல் தனிப்பற்று ஏற்படும். மேலும் இந்தியாவின் செல்வாக்கு பல நாடுகளில் இருக்கும்போது, அதை நாம் ஆராய்ந்தால் மேலும் பல அற்புதமான ஒற்றுமைகள் வெளிப்படும். எங்கோ உள்ள மடகாஸ்கர் தீவில் ஊர்ப்பெயர்களில் பாதி சம்ஸ்க்கிருதப் பெயர்களாகவும், இந்தோனேஷியாவின் அடர்ந்த காட்டுக்குள் மூலவர்மனின் யாகத் தூண் (யூபம்) கல்வெட்டுகள் இருப்பதும், இந்தோனேஷியா முழுதும்  அகஸ்தியர் சிலைகள் கிடைப்பதும் நம்மை வியப்பில் ஆழ்த்தாமல் இராது.

துருக்கி- சிரியா  எல்லையில் 3400 ஆண்டுகளுக்கு முன்னர் கைச்சாத்திட்ட ஒப்பந்தத்த்தில் வேதகாலத் தெய்வங்களின் பெயர்கள் இருப்பதும். எகிப்தில் அமர்நா என்னும் இடத்தில் தசரதன் என்ற மன்னரின் (ராமாயண தசரதன் அல்ல)  கடிதங்கள் உள்ளதும் நம்மை மேலும் மேலும் ஆராய்ச்சி செய்யத் தூண்டும் . இந்தப் புஸ்தகத்தில் இந்தியாவுக்கும் தென் அமெரிக்க நாடுகளில்  உள்ள இன்கா, மாயன் நாகரீகங்களுக்கும் இடையேயான  ஒற்றுமைகள் விளக்கப்பட்டுள்ளன. அவர்கள் முகத்தைப் பார்த்தவுடனேயே அவர்களை இந்தியர்கள் என்றான் கொலம்பஸ். உண்மையில் தென் கிழக்கு ஆசியா முதல் தென் அமெரிக்கா  வரை இந்தியக் கட்டிடக் கலையும், இந்தியர் முகச் சாயலும் இருப்பது எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்க வல்லது. என்னுடைய பிளாக்குகளில் கடந்த பத்தாண்டுகளில் வெளியான மேலும் பல ஆராய்ச்சிக்  கட்டுரைகளும் நூலில்  இடம்பெற்றுள்ளன

இந்த நூலில் இந்திய- மாயா நாகரீக (Indo- Mayan Links)  தொடர்பு பற்றியும் இன்கா (Inca Civilization)  நாகரிக தொடர்பு பற்றியும் நிறைய விஷயங்கள் உள்ளன. இந்தத் தொடர்புகளை நீங்களும் மேலும் ஆராயலாம்.

அன்புள்ள

லண்டன் சுவாமிநாதன் 

லண்டன் , ஏப்ரல் 2023

அட்டைப்படம் – மாயா காலண்டர் ; கல்லால் ஆனது

Xxx

ABOUT THE BOOK AND THE AUTHOR

Title-  இந்திய நாகர்– தென் அமெரிக்க மாயா நாகரீக

அற்புத ஒற்றுமைகள் (book title)

Author – London Swaminathan (Santanam Swaminathan)

Language- Tamil

Published  – April   2023

Subject –History

xxx

AUTHOR’S PROFILE

Santanam swaminathan (London swaminathan)

Educational Qualifications: B.Sc, M A (History), MA (Lit)

Higher Diploma in French and Sanskrit

DOB  6-11-1948

Work Experience- Now retired

Worked for Dinamani, Madurai as Senior Sub Editor until 1986,

BBC Tamil Producer in London 1987-1991,

Manager of Tamil Malayalee Health Project and London Tamil Sangam,

Tamil Tutor at SOAS, University of London 1993 to 2014.

Living with his wife and two sons in London from 1987.

xxx

Blog Details

tamilandvedas.com

swamiindology.blogspot.com

xxx

Contact Details

swami_48@yahoo.com

swaminathan.santanam@gmail.com

Mobile Number in London

07951 370 697

Published Works

Over 7000 articles in English and Tamil and 99 Tamil and English Books

Visited Countries

India, Britain, USA, Australia, Spain, Portugal, Austria, Sweden, France, Switzerland, Hong Kong, Singapore, Italy, and Greece

Xxxx

HOW TO BUY THE BOOK

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் Ph.D. அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் : 9980387852  

***** 

Please Support all Authors

To get the books

GO to Pustaka.co.in; then go to authors and type London swaminathan in the space.

Or contact admin@pustaka.co.in

Dr Rajesh Devadas P.Hd. has introduced three levels

1.     You may just read it on line

2.     You may download the book and keep it with you

3.  You may order a printed copy

www.pustaka.co.in 

Telephone in India:   9980387852  

In case of difficulties, please contact me at

swami_48@yahoo.com

Or swaminathan.santanam@gmail.com

 — subham—

I don’t like Mahabharata Krishna : Mahatma Gandhi (Post No.12,007)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,007

Date uploaded in London – –  16 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Whilst I have dealt with the gurus as historical personages about whose existence we have trustworthy records, I have no knowledge that Krishna of Mahabharata ever lived. My Krishna has nothing to do with any historical person. I would refuse to bow my head to the Krishna who would kill because his pride is is hurt or the Krishna whom the non- Hindus portray as a dissolute youth. I believe in Krishna of my imagination as a perfect incarnation, spotless in every sense of the word, the inspirer of the Gita, and the inspirer of the lives of millions of human beings. But if it was proved to me that the Mahabharata is history in the same sense that modern historical books are, that every word of the Mahabharata is authentic and that the Krishna of the Mahabharata actually did some of the acts attributed to him, even at the risk of being banished from the Hindu fold, I should not hesitate to reject that Krishna as God incarnate. But to me the Mahabharata is a profoundly religious book, largely allegorical, in no way meant to be a historical record. It is the description of the eternal duel going on within ourselves, given so vividly as to make us think for the time being that the deeds described there in were actually done by the human beings. Nor I do regard the Mahabharata as we have it now as a faultless copy of the original. On the contrary, I consider that it has undergone many emendations .

Young India 1-10-1925

xxxx

My comments

This shows Gandhiji’s poor knowledge in History and religion. His wrong judge ment of Krishna and Mahabaharata shows he has never read Swami Vivekananda. I am pretty sure a lot of people would have objected or rebutted to his views in those days.–subham–

Tags- Krishna, in Mahabharata, Gandhi

மும்பை நகர கோவில்கள்- 108 மஹாராஷ்டிர புனித தலங்கள்-15 (Post No.12,006)

Mahalakshmi Temple in Mumbai 

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,006

Date uploaded in London – –  16 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

மஹாராஷ்டிர மாநில புனிதத் தலங்களைத் தொடர்ந்து காண்போம்.

 மும்பை நகரத்தில் மட்டுமே இருபது புகழ்மிகு இந்துக் கோவில்கள் உள்ளன. இதோ அவற்றின் பெயர்கள் :-

1.சித்தி விநாயகர் கோவில்

2.மகாலெட்சுமி கோவில்

3.மும்பாதேவி கோவில்

4. குட்டி சபரிமலை கோவில்

5. ஹரே கிருஷ்ணா கோவில் கோவில்

6.வைஷ்ணவ தேவி கோவில்

7.பாபுல்நாத் சிவன் கோவில்

8.வாகேஸ்வரர் சிவன் கோவில்

9.ராதா கோபிநாத் கோவில்

10.பாலாஜி/ வெங்கடேஸ்வரா கோவில்

11.சுவாமிநாராயண் கோவில்

12.பிரபாதேவி கோவில்

13.கண்டேஸ்வரர் ஹனுமான் கோவில்

14.இச்சாபுரி கணேஷ் கோவில்

15.ஆர்ய சமாஜ் கோவில்

16.சிருங்கேரி மடம் கோவில்

17.சுவர்ணா கோவில்

 18.ஸஹர் ஐயப்ப சிவா பார்வதி கோவில்

19.BAPS சுவாமிநாராயண கோவில்

20.சமணர் கோவில் (Jain Temple)

மும்பை அருகிலுள்ள எலிபெண்டா தீவு குகைக் கோயில் மற்றும் மேலே குறிப்பிட்ட பாபுல்நாத், வாகேஸ்வரர் சிவன் கோவில்களை ஏற்கனவே தரிசித்தோம் (இதே தொடரில் முந்தைய பகுதிகளைக் காண்க)

இப்பொழுது முக்கிய கோவில்களை மட்டும் தரிசிப்போம்.

பகுதி 15

100 ஆண்டுகளுக்கு முந்தைய புஸ்தகங்களைப் பார்த்தால் இப்போதுள்ள புகழ்மிகு கோவில்களின் பெயர்களே இரா. அப்போது அவைகள் பிரசித்தமாகவில்லை அல்லது கட்டப்படவே இல்லை என்று பொருள்.

61..மும்பா தேவி கோவில்

மும்பை என்ற பெயருக்கே காரணமாக அமைந்த மிகப்பழைய கோவில் இது.  துர்கா தேவியின் வேறு பெயர் மும்பா தேவி. மதுரைக்கு மீனாட்சி, காஞ்சிக்குக் காமாட்சி, காசிக்கு விசாலாக்ஷி என்பது போல ஒவ்வொரு ஊருக்கும் உரித்தான கடவுள் உண்டு. அவ்வகையில் மும்பை நகரின் தெய்வம் மும்பா தேவி . விவசாயிகளும், மீனவர்களும், சந்திர வம்ச க்ஷத் ரியர்களும் காலா காலமாக வழிபடும் தெய்வம் அவள் . தற்போதைய கட்டிடங்கள் 1675-ம் ஆண்டு கட்டப்பட்டவை. ஒரு மேடை மீது காட்சி தரும் தேவிக்கு கிரீடம், நகைகள் ஆகியன அழகு சேர்க்கின்றன. கருங்கல்லிலான  தேவிக்கு முகத்தில் ஆரஞ்சு வர்ணம் பூசப்பட்டுள்ளது கோவிலுக்குள் பிற தெய்வச் சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. செவ்வாய் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை திறந்திருக்கும் இக்கோவிலுக்கு செவ்வாயன்று நிறைய பக்தர்கள் வருகின்றனர்.

Xxx

62.சித்தி விநாயகர் கோவில்

பிள்ளையார், எல்லா இந்துக்களுக்கும் முதற் கடவுள் என்ற போதிலும் மஹாராஷ்டிர மக்களுக்கு தேசீய கடவுளும் ஆகும். வங்காளத்தில் துர்கா பூஜை போல மஹாராஷ்டிரத்தில் கணேஷ் சதுர்த்தி ஒரு வாரத்துக்குக் கொண்டாடப்படும். மும்பை நகர சித்தி விநாயகருக்குக் கூடுதல் சிறப்பு என்னவென்றால் பாலிவுட் நடிகர் நடிகையரும் அரசியல்வாதிகளும் வருகை தந்து கோவிலின் பெருமையை உயர்த்திவிட்டனர் ; எல்லோருக்கும் வரம் தரும் சக்தி உடையவர் என்பது இதன் பொருள். 1801-ம் ஆண்டில் கட்டப்பட்டது.

இங்குள்ள பிள்ளையார் வலம் சுழி பிள்ளையார் இந்த மாநிலத்தின் பெரிய வரும்படி தரும் கோவில்களில் இதுவும் ஒன்று. அந்தக் காலத்திலேயே ஆண்டு வருமானம் 25 கோடிரூபாய் . கோவிலின் மரக்கதவுகளில் பல தெய்வ உருவங்களைக் காணலாம் . தங்கத் தகடுகளுக்கு இடையே கர்ப்பக்கிரகம் ஜொலிக்கும். அதிகமான பக்தர்கள் வரும் கோவில் இது.

Xxx

63.மகாலெட்சுமி கோவில்

மும்பை நகருக்குச் செல்லுவோர் சித்தி விநாயகர் கோவிலையும் மஹா லக்ஷ்மி கோவிலையும் தரிசிக்காமல் வர மாட்டார்கள். உலகின் செல்வச் செழிப்பு மிக்க நகர்களில் பம்பாயும் ஒன்று. இதற்குக் காரணம் மஹாலெட்சுமியும் மும்பா தேவியும் என்பது மக்களின் நம்பிக்கை இந்து சமய வணிகர் தாக்ஜி தாதாஜி  இந்தக் கோவிலை 1831ம் ஆண்டில் கட்டினார் இங்கு மூன்று தேவிகள் காட்சி தருகின்றனர். மகாலெட்சுமியானவள் கைகளில் தாமரை மலர்களை ஏந்தி நிற்கிறாள்; மஹா காளியும் மஹா ஸரஸ்வதியும் இருபுறங்களில் நிற்கிறார்கள் . மூவரும் தங்க வளையல்கள், மூக்குத்திகள், இரத்தின மாலைகளுடன் ஜொலிக்கின்றனர்  வசந்த காலத்தில் வரும் நவராத்திரியும் ஆஸ்வீன மாத பெரிய நவராத்ரியும் (தமிழக கணக்குப்படி புரட்டாசி நவராத்ரி) மிகப்பெரிய பண்டிகைகள் . கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகள் எல்லாம் மின்விளக்குக்களால் அலங்கரிக்கப்படுகிறது. 

இந்தக்கோவில் பற்றி செவி வழிக் கதைகளும் உலவுகின்றன. பிரிட்டிஷ் கவர்னர் ஹார்ன்பி என்பவர் வோர்லி, மலபார் என்னும் இரண்டு இடங்களை இணைக்க ஒரு கடற் பாலம் கட்டுவதற்குத் திட்டமிட்டு அந்தப் பணியை ராம்ஜி ஷிவ்ஜி பிரபு என்ற தலைமை என்ஜினீயரிடம் ஒப்படைத்தார். ஆனால் பாலம் கட்ட முடியாதபடி பல இடையூறுகள் தலையெடுத்த வண்ணமிருந்தன. ஒரு நாள் ராம்ஜியின் கனவில் மகாலெட்சுமி தோன்றி,  தான் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடப்பதைத் தெரிவித்தாள். முஸ்லீம் படை எடுப்பாளர்களால் கடலுக்குள் தூக்கி எறியப்பட்டிருந்த சிலைகளை ராம்ஜி மீட்டு, கோவில் கட்ட வழிவகை செய்தார் . பின்னர் பாலம் கட்டும் பணி  இனிதே நிறைவேறியது . ஒரு குன்றின் மீது அமைந்த இந்தக்கோவில்,  இன்று ஏராளமான பக்தர்களைக் கவர்ந்து இழுக்கிறது.

Xxx

64..ஹரே கிருஷ்ணா கோவில்

ஹரே கிருஷ்ணா ( ISKCON ) இயக்கத்தை துவக்கிய பக்தி வேதாந்த பிரபுபாதா இந்தக் கோவிலுக்கு அஸ்திவாரமிட்டார் கிருஷ்ண பரமாத்மா , ராதா தேவி உருவங்களுடன் கிருஷ்ண லீலைகளும் இங்கே இருக்கினறன. கோவிலின் சிறப்பு என்னவென்றால் மான், மயில்,,குரங்கு, பசுக்கள் ஆகியன அவற்றின் இயற்கைச் சூழ்நிலையில் இங்கே  திரிகின்றன . ஜன்மாஷ்டமி விழாக்காலத்தில் பெரிய  பக்தர் கூட்டம் காணப்படும் . கையினால் வரையப்பட்ட கிருஷ்ண லீலை ஓவியங்கள் , கண்களுக்கு விருந்தாக அமைகின்றன.

XXX

65.பாலாஜி – வெங்கடேச்வர சுவாமி கோவில்

பாலாஜி கோவில், தமிழ்நாட்டு கோபுரம் போல பெரிய உயரமான கோபுரத்துடன் திகழ்கிறது. ஏனைய மராட்டிய கோவில்களின் தோற்றத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது . Nerul நெருள் ரயில் நிலையத்துக்கு அருகில் குன்றின் மேல் அமைந்த இந்தக் கோவில், பக்தர்களுக்கு திருப்பதியை நினைவுபடுத்தும். தென்னிந்திய மக்களைக் கவர்ந்து இழுக்கும் கோவிலுக்குள் ராமானுஜர், ருக்மிணி , லட்சுமி, ராம , லட்சுமண, ஹனுமான் சந்நிதிகளும் இடம்பெற்றுள்ளன 60 அடி  உயர கோபுரமும், உள்ளே அமைந்த நந்தவனமும் (தோட்டமும்) கோவிலுக்கு ழகு சேர்க்கின்றன .

XXX

66. சுவாமி நாராயணர் கோவில்

சுவாமி நாராயண பக்தர்களில் இரண்டு பிரிவினர் இருக்கின்றனர். அவர்கள் தனித்தனியே கோவில்களைக் கட்டி வழிபடுகின்றனர். இந்த சுவாமி நாராயண கோவில் மிகவும் பழமையானது சுவாமி நாராயண சம்பிரதாயத்தினர்ன் நடத்ததும் இக்கோவில் 1903ம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டது சுவாமி நாராயணனுடன், கிருஷ்ணா, லட்சுமி நாராயணன், ராதா, கணஷ்யாம் சிலைகளும் அலங்கரிக்கின்றன ஜன்மாஷ்டமி , ராம நவமி பண்டிகை காலங்களில் பக்தர்கள் பெருமளவில் வருகை புரிகின்றனர்.

XXX

67. குட்டி சபரிமலை

கனிஜூர்மங் என்னும் இடத்தில் மலை மீது அமைந்த குட்டி சபரிமலை கோவிலில் ஐயப்ப சுவாமி, சபரி மலை போலவே அமர்ந்துள்ளார். கேரளத்திலுள்ள ஐயப்பன் கோவிலை நினைவுபடுத்தினாலும், ஒரு பெரிய வித்தியாசம் இந்தக் கோவிலுக்கு எப்போதும் வரலாம்.செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் விசேஷ பூஜைகள் நடை பெறுகின்றன.. இப்போது கோவில் இருக்கும் இட்டத்திற்கு அருகில் பெரிய தேவி கோவில் இருந்தது. வெளிநாட்டு இந்து விரோதக் கும்பல்கள் அதை அழித்தன . இப்போதும் பாழடைந்த கோவில் பகுதிகளைக் காணலாம். அதன் அருகில் ஐயப்ப சுவாமி கோவில் தற்காலத்தில் கட்டப்பட்டது.

XX

68. மாதா வைஷ்ணவ தேவி கோவில்

ஜம்மு காஷ்மீரின் ஜம்மு பகுதியில் இருக்கும் வைஷ்ணோ தேவி கோவில் உலகப் பிரசித்தி பெற்ற பெரிய தலம் . அந்தக் கோவில் ஒரு குகைக்குள் இருப்பதால் ஊர்ந்து சென்றுதான் கோவிலுக்குள் நுழைய முடியும். அதே பாணியில் மும்பை நகர வைஷ்ணவ தேவி கோவில் அமைக்கப்பட்டுள்ளது . நகரின் நடுப்பகுதியில் இருக்கிறது. இந்தக் கோவில் மாறுபட்ட புதிய அனுபவத்தை நல்கும் இடமாகத் திகழ்கிறது

(ஏனைய மும்பை நகர கோவில்களின் விவரத்தை அறிய அந்தந்த இணை ய தளத்துக்குச் செல்லவும்)

 தொடரும்……………………………….

Tags- சித்தி விநாயகர் கோவில் ,மகாலெட்சுமி கோவில் ,மும்பாதேவி கோவில் , மும்பை நகர கோவில்கள்

இசைத் தமிழில் இராமாயணத்தை இயற்றிய எம்பெருமான்! (Post No.12,005)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,005

Date uploaded in London –   16 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கொங்குமண்டல சதகம் பாடல் எண் 64 

இசைத் தமிழில் இராமாயணத்தை இயற்றிய எம்பெருமான்! 

ச.நாகராஜன் 

ஆதி கவியாகிய வால்மீகி இயற்றிய இராமாயணத்தைப் பல்வேறு மொழிகளிலும் பல்வேறு கவிஞர்கள் யாத்துள்ளனர்.

இதைத் தமிழில் வெண்பாவாகவும், கீர்த்தனையாகவும், கும்மியாகவும் யாத்துப் பெருமை சேர்த்த கவிஞர்கள் பலர்.

இசைத் தமிழில் இராமாயணத்தை இயற்றியவர் எம்பெருமான் என்னும் கவிஞர் ஆவார்.

இவரை ஆதரித்து அதை இயற்றுவிக்க ஊக்குவித்தவன் நல்லதம்பிக் காங்கேயன் என்னும் கொங்குமண்டலத்தைச் சேர்ந்த கீழ்கரைப் பூந்துறை நாட்டு அதிபன் ஆவான்.

சங்ககிரி துர்க்கத்தில் இடையர் குலத்தில் எம்பெருமான் என்ற கவிராயர் ஒருவர் இருந்தார். அவர் இளமையில் மதுரை, திருநெல்வேலி முதலிய இடங்களில் தங்கி கல்வி பயின்றார். தமிழில் நன்கு தேறினார். தெய்வ பக்தியுள்ள பெரியோர்களது அன்பின் கனிவை அவர் வியந்து பாராட்டுவார்.

மதுரையில் கல்வி, கேள்வியில் சிறந்த பூங்கோதை என்னும் நற்குண மாதினை அவர் மணம் புரிந்தார். அக்காலத்தில் மதுரையை அரசாண்டவர்கள் பாண்டியர்கள்.

பின்பு பாண்டிய நாடு நாயக்கர் வசமாயிற்று. என்றாலும் கூட கிருஷ்ணப்ப நாயக்கர் அரசராக அரசாண்ட போது அவரால் எம்பெருமான் போற்றப்பட்டார்.  அவரிடம் விடை பெற்றுத் தன் சொந்த ஊருக்கு அவர் வந்தார்.

அவரது ஊர் கொங்கு மண்டல இருபத்து நான்கு நாட்டிற்கும் தலைமையாய் ஏழு சுற்றுக் கற்கோட்டை உடைய கடிஸ்தலமாய், அந்த மண்டலத்தில் அரசு இறை செலுத்தாத குற்றம் போன்றவற்றைச் செய்தவர்களைச் சிறை வைக்கும் அரணுள்ள இடமாகத் திகழ்ந்தது.

மற்றைய சிற்றரசர்கள், பாளையக்காரர்கள், பட்டக்காரர்கள் முதலானோர் நாயக்கரது சமஸ்தான பிரதிநிதி காவலரைக் காண அங்கு வருவர்.

அப்போது எம்பெருமான் அவர்களிடம் இராமாயணத்தில் பொதிந்துள்ள ரகசியங்களையும் உள்ளுறைப் பொருளையும் நன்கு விளக்குவார்.  அதைத் தேன் துளியைப் பருகுவோர் போல அனைவரும் கேட்டு ஆனந்திப்பர்.

அவர்கள் அனைவரும் இராமாயணத்தை சுருக்கமாகச் சொல்லி மகிழ்விக்க வேண்டும் என்று எம்பெருமானை வேண்டினர்.

கீழ்கரைப் பூந்துறை நாட்டு அதிபனாக அப்போது மோரூரில் நல்லதம்பிக் காங்கேயன் என்பவன் சிறப்புற ஆட்சி செய்து விளங்கினான். அவரிடம் எம்பெருமான் அன்பு பாராட்டினார். எம்பெருமானுக்கு அந்த சங்ககிரி மோரூரில் காணி பூமி இருந்தது.

அவரிடம் காங்கேயர், “இராமாயணம் பாடுக” என்று வேண்டினார்.

“இராமபிரான் அருள் இருப்பின் அது நிறைவேறும்” என்று மகிழ்ச்சியுடன் எம்பெருமான் விடை பகர்ந்தார்.

ஒரு நாள் அக்கோட்டையுள் விளங்கும் ஶ்ரீ வரதராஜப் பெருமாள் சந்நிதியை அடைந்து தனது இராமாயணம் இயற்றும் எண்ணத்தை விண்ணப்பித்தார்.

“உலகமாதா” என்ற சொல் தோன்ற அதை மங்கலச் சொல்லாகக் கொண்டு தக்கையிசையால் இராமாயணம் பாடத் தொடங்கினார்.

காண்டங்கள் மற்றும் சில படலங்கள் தலைப்பில் வெண்பாவாகவும்  மற்றையன தக்கை ஒற்றை இரட்டை என்னும் குடகம் முதலிய வரிப்பாட்டுகளும் ஆங்காங்கே அமைத்து ஆறு காண்டமாய் இராமாயணத்தை கம்பரின் கருத்தைத் தழுவிப் பாடினார்.

இதைக் கேள்வியுற்ற மதுரை சமஸ்தானாதிபதிகள் கவிராயர் மீதும் காங்கேயன் மீதும் மிக்க மதிப்பு கொண்டு அவர்களைப் போற்றினர்.

“பாடுக” என்று கேட்டுக் கொண்ட காங்கேயனை நன்றி மறவாமல் ஆங்காங்கே தனது இராமாயணத்தில் அவர் சிறப்பித்திருக்கிறார்.

மேற்கு ரங்கம் என்று புகழ்ந்து பேசப்படும்  சங்ககிரி ஶ்ரீ வரதராஜப் பெருமாள் சந்நிதியில் எம்பெருமானின் இராமாயணம் அரங்கேற்றப்பட்டது என்பர்.

மெத்த வேகண்ணன் வெண்ணெய்தனில் விருத்தச்சீரா ராமாயணத்தைச்

சுத்தநாக் கம்பநாடன் சொன்னான் சொன்ன பொருள் 

               தக்கையிசையாலே

பத்தர் பாடியெம் பெருமானாற் பகரும் படிசெய்தான் மோரூரான்

அர்த்த நாரிசொ னல்லதம்பி யமலனருள் பெற்று வாழ்வாரே

–    தக்கை ராமாயணம்

நல்லதம்பிக் காங்கேயன் பல பிரபந்தங்கள் கேட்டிருக்கிறான். திருச்செங்கோட்டிற் பல கற்பணிகளும் கட்டளைகளும் செய்திருக்கிறான். அவனுடைய சிலாசாசனம் ஒன்று இதோ:

இது செங்கோட்டு வேலர் கற்பக்கிரக வடசுவரில் உள்ளதாகும்.

ஸ்வஸ்தி ஶ்ரீ சகாப்தம் தருஎ உயக (1521) இதன் மேற் செல்லா நின்ற சார்வரி சித்திரை மாதம் கீழ்கரைப் பூந்துறை நாட்டில் மோரூரில் இருக்கும் வேளாளக் கண்ணர்களில் திருமலை அத்தப்ப நல்லதம்பிக் காங்கேயன் உபயம்.

இதனால் இவரது காலம் கி.பி. 1590-1600 என்று ஆகிறது.

இவரது மூதாதையர் திருமலை காங்கேயனுடைய சாசனம் ஒன்றும் சித்தளந்தூரில் உள்ளது. அது வருமாறு:

ஸ்வஸ்திஶ்ரீ வியாதிஹ்ருதய சாலிவாஹன…. தசருரு…..- ந் மேல் செல்லா நின்ற சுபானு வருஷம் கார்த்திகை மாசம் உஙஉ பௌர்ணமையும்  ஞாயிற்றுக்கிழமையும் பெற்ற புண்ணிய காலத்தில் ஶ்ரீமன் ராசாதிராசன் ராசபரமேசுரன் ராசமார்த்தாண்டன் பூவக்ஷண ……. எம் மண்டலமும் கொண்டருளிய ஶ்ரீ வீரபிரதாபர் கிருஷ்ணராயர் மஹாராயர் பிதுருவிராச்சியம் பண்ணி யருளா நின்ற காலத்து முளவாய் சாந்த எயிநூர்ச்சாவடி செங்கோல் செலுத்தும் திரியம்பக உடையார் காரியத்துக்கு கடவரான சாம நயனார்க்கு நடக்கிற காலத்தில் எழுகரைப் பூந்துறை நாட்டு மோரூரில் திருமலை காங்கைய சீமையான சிற்றளுந்தூரில் என் காணி சொத்தில் ….

(No 138-1915)

இப்படிப்பட்ட அருமையான சம்பவத்தை கொங்குமண்டல சதகம் தனது 64ஆம் பாடலில் போற்றிப் புகழ்கிறது.

பாடல் வருமாறு:

அம்புவி மெச்சுகுன் றத்தூரி லாயரி லாய்கலைதேர்

எம்பெரு மானைக் கொடுதக்கை யென்னு மிசைத்தமிழால்

நம்பு மிராம கதையையன் பாக நவிலவிசை

வம்பவிர் தார்ப்புய னல்லய னுங்கொங்கு மண்டலமே

பாடலின் பொருள் :

குன்றத்தூரான சங்ககிரி துர்க்கத்தில் இடையர் குலத்தில் உதித்துச் செந்தமிழ்ப் புலமை வாய்ந்த எம்பெருமான் என்னும் கவிராயனைக் கொண்டு இசைத் தமிழில் இராமாயண கதையை இயற்றுவித்த நல்லதம்பிக் காங்கேயனும் கொங்குமண்டலத்தைச் சேர்ந்தவனே என்பதாம்.

***

Part 14- Important Temples in Mumbai; 108 Famous Shrines in Maharashtra (Post No.12,004)

Siddhi Vinayak Temple, Mumbai

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,004

Date uploaded in London – –  15 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 There are at least 20 temples in Mumbai . One of them is a Jain temple. Following are the twenty temples:

1. The Siddhivinayak Temple

2. The ISCKON Temple

3. The Vaishnodevi Temple

4. The Babulnath Temple

5. Sri Sri Radha Gopinath Temple

6. Shree Venkateshwara Swami Temple

7. Mini Sabarimala Ayyappa Temple

8. Swaminarayan Temple

9. Shree Mahalakshmi Temple

10. Walkeshwar Temple

11. Shree Mumbadevi Temple

12. Prabhadevi Mandir

13. Shree Ghanteshwar Hanuman Temple

14. Icchapurti Ganesh Temple

15. Arya Samaj Mandir

16. Sri Sringeri Shankara Math

17. Suvarna Temple

18. Sahar Ayyappa Shiva Parvati Temple

19. BAPS Shri Swaminarayan Mandir

20. Babu Amichand Panalal Adishwarji Jain Mandir

I have already covered The Babulnath Temple and Walkeshwar Temple in the previous parts posted here.

If you look at 100 year old books many of them temples would not even figure there. Some are built recently or some have become more famous recently. Let us look at some popular temples.

xxxx

Part 14

61. Mumbadevi Temple

The city of Mumbai derives its very name from one of its oldest temples, the Mumbadevi Temple. This temple is considered to be one of the greatest holy places to visit dedicated to the worship of Goddess Mumba, an incarnation of Goddess Durga. Mumba Devi is the patron goddess of the native communities of Mumbai like the agricultural and fishermen (Koli) community and the Somvanshi Kshatriya community. The temple was constructed in 1675. The goddesses’ idol is decked up with traditional jewellery and crown, placed atop a beautiful altar. The idol of Mumba Devi is made from black stone while her face is painted orange. Inside the temple complex, other deities are also placed. Lot of devotees visit the temple on Tuesdays, which is considered to be auspicious.

The temple is open from Tuesday to Sunday .

Xxx

62.Siddhivinayak Temple

One of the most popular temples is the Siddhivinayak Temple located in the Prabha Devi area of Mumbai. It is dedicated to the worship of Lord Ganesha . It was constructed in the year 1801. Lord  Ganesha, is with his consorts named Siddi and Riddhi housed in a small mandap. The key highlight of the temple is the unique trunk of the Ganesha idol, which is on the right side, instead of the usual left side. Siddhivinayak Temple is considered to be the richest temple in India receiving an annual donation of over Rs 25 crores. The temple also has a unique architecture with images of deities carved intricately on the wooden doors, while the roof of the sanctum is constructed of gold plates. The temple remains open on all days. Visits by Bollywood actors and politicians made it more popular.

xxx

63.Mahalakshmi Temple

Mahalaxmi Temple is one of the most famous temples of Mumbai situated on Bhulabhai Desai Road in Mahalaxmi area. It is dedicated to Mahalakshmi . The temple was built in 1831 by Dhakji Dadaji, a Hindu merchant. The temple contains images of the Tridevi goddesses Mahakali, Mahalakshmi, and Mahasaraswati. All three images are adorned with nose rings, gold bangles and pearl necklaces. The image of Mahalakshmi is in the center shown holding lotus flowers.

The festival of Mahalaxmi is wonderful in Navaratri

The iconic structure, built nearly three centuries ago, witnesses at least 50,000 visitors in its lean season and over 5 lakh during the festive season of Navratri

Navratri: Navratri is celebrated two times at the Mahalakshmi temple of Mumbai. Chaitra Navratri is celebrated during the Hindu month of Chaitra, the months of March and April. Ashwin Navratri is celebrated during the Hindu month of Ashwin, the months of September and October. The temple is beautifully decorated with colourful lights, bright flowers, fresh garlands, from the Gabhara to the main gateway.

Constructed in 1771 AD, this shrine has several folklores surrounding it. It is believed that the three deities of Goddesses Mahalakshmi were immersed into the Arabian Sea, near Worli to prevent the destruction of the idols by the Muslim invaders.

Later, during the British rule, Lord Horneby planned to join the two hill creeks of Worli and Malabar and Shri Ramji Shivji Prabhu was appointed as the chief engineer for the task. Shri Ramji along with his colleagues tried several times but failed to connect the creeks due to the waves. One night Goddess Mahalakshmi appeared in his dreams and instructed him to bring out the immersed idols from the creeks of Worli and place them on the top of a hillock. Shri Ramji did the same and after that, he was able to construct the bridge. Later he built the temple on the hillock where the deities are still worshipped with great pomp.

Xxxx

64. ISKCON Temple

The ISKCON Temple was constructed by Acharya Bhaktivedanta Swami Prabhupada, the founder of the Hare Krishna Movement. The temple was built in the year 1978 and is one of the most beautiful places to seek solace and spirituality in the city. One of its main highlights is that it is home to several animals and birds like peacocks, monkeys, and cows providing them with a safe haven to thrive. The temple is carved from beautiful white marble while the interior of the temple is beautified with hand-drawn paintings depicting the Legends of Krishna and especially the divine love of Krishna and Radha.

Janmashtami is a day of huge celebrations in the temple.

xxx

65. Balaji Temple

(Shree Venkateshwara Swami Temple)

The Balaji Temple is situated at Nerul on a hilltop, very close to the railway station, and bears great resemblance to the Balaji Temple at Tirupati. This temple is highly revered by the South Indian community of the region.

Inside the complex are many other temples dedicated to different deities like Ramanuja, Rukmini, Lakshmi, Rama, Lakshman, and Hanuman.  Balaji Temple was inaugurated in 1990 by the Director of Nehru Planetarium S. Venkata Varadan. The temple also houses gardens and a 60-feet high gopuram, a vast and ornate entrance tower.

66. Swaminarayan Temple

Among the oldest and most religious sites in Mumbai is the Swaminarayan Temple. It is more than 100 years old dedicated to the worship of Lord Krishna. It is owned and managed by the Swaminarayan Sampradaya. The temple was initially built in the year 1863, but it underwent renovation in 1903. The temple houses beautiful idols of other deities such as Krishna, Ghanshyam, Radha, and Laxminarayan. The festival of Janmashtami and Ram Navami attracts a large number of devotees.

67. Mini Sabarimala

The Mini Sabarimala Temple is one of the most sacred places to visit in Mumbai. It is dedicated to Lord Ayyappa and is nestled on the top of a hill rock in Kanjurmang. This temple bears great resemblance to the Sabarimala Temple in Kerala.

However, unlike the temple in Kerala, the mini Sabarimala Temple of Mumbai can be visited at all times of the year. The temple hosts special poojas on Tuesdays and Fridays adding to the charm of the place. It is believed that there was a small temple and an idol of the Devi long before the construction of this temple, which was plundered and destroyed by the foreign invaders and the ruins of them can be still seen near the temple.

68. Mata Vaishnodevi Temple

Mata Vaishnodevi Temple of Mumbai is almost a perfect replica of the famous Vaishnodevi Temple in Jammu. Located in the middle of the city, making a visit to this temple ensures a unique experience. The original temple requires devotees to hike through a cave and cross streams of water to reach the inner sanctum. In this temple too, you will need to crawl through the caves to witness the idol of the Devi, which is also very similar to the one in Jammu.

( for other temples of Mumbai, please go to their websites)

To be continued………………………

 Tags- Mumbai Temples, Mahalakshmi, Siddhi Vinayak, Mumbadevi