Colours play a major role in the Kathakali dance. From the colours and facial make ups ,one can find out good and bad characters in the dance drama. There are five types of actors:
Pacha = green
Kathi = knife
Thadi = beard
Minikku = polished
Kari = black.
The costume and make up of Kathakali actors are impressive. Legend avers that the Raja Kottarkkara who first conceived the characters had a vision of SEA NYMPHS and MONSTERS from whom he copied the form. A Raja of Vettathunadu family made far reaching changes in the facial make up and head gears of characters. There are four different colourations of the face, each connoting a different mood.
Make up takes about three to four hours; an actor has to tie at least 80 knots in the process of dressing.
Xxx
Five distinct types
1.Pacha
Here the actors colour their faces deep green; the characters who impersonate gods and mythological heroes are called Pacha . they paint their lips dep red. The movements are dignified. They observe absolute silence.
2.Kathi
Kathi characters paint their faces red and green; they represent ferocious and evil beings such as Ravana , the demon king. A knife shaped reddish marking on either side of the nose extending to the cheeks distinguish the Kathi type of actors. They wear artificial teeth and claws.
3.Thadi
Actors who wear red, white and black beards are called Thadi. Bali, Sugriva and Kalakeya wear have red beards, while Kali, Kattalan/ hunter have black beards. Hanuman is depicted wearing white beard. All these characters roar loudly.
4.Minikku
Those who impersonate Narada , ambassadors, ladies etc. come under the group Minikku. They paint their faces in a mixture of yellow and light red and put white dots on their cheeks. They put on their fore-heads caste marks. They put black dye on eye brows. They redden their eyes.
5.Kari
Demons and evil characters symbolising savagery and primitiveness cone under the category of Kari.
Three to four years training is required for make up artistes.
Kathakali actors redden their eyes by applying the flower of Chunda (Solanum pubescence ).
xxx
Music
The musicians need at least five years training. They follow classical Ragamala. A standard Kathakali performance will take 8 to 10 hours. Nowadays they perform it within a few hours.
Dance
Kathakali actors are masters of both Lasya and Tandava styles. They change it in quick succession. There are three distinct varieties of Kathakali Dance.
1.Ilakiyattam
The mild and gentle type usually adopted while depicting love and such other sweet and subtle emotions.
2.Idamattu
The intermediate type which is half way between the too slow and too quick varieties.
3.Murukiyattam
The extremely vigorous variety used in duels and battle scenes.
Xxx
Mahakavi Vallathol
Kathakali has flourished long under royal patronage. Raja of Travancore supported various troupes.
Thanks to the great leadership of the foremost poet of Malabar, Mahakavi Vallathol , the kathakali which was until yesterday a dying art has been revived. Poet Vallathol and his troupe of fine Kathakali dancers succeeded in rendering the historic art more attractive and popular. Now over 100 plays are available in print. Kerala Kala Mandalam and the academies are spreading the art.
Source book – Kathakali by K B Padmanabhan Tampy, 1963
—subham—
Tags- Kathakali, Vallathol, Five types, Colours, Make ups
நகைச்சுவை ததும்பப்பேசி ஆன்மீக உண்மைகளை ஆழப்பதிக்கும் உபந்யாசகர் கலைமாமணி திருச்சி கல்யாணராமன் ; அவர் பட்டினத்தார் பற்றிய சொற்பொழிவின் இடையே சொன்ன விஷயம்
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார் – என்கிறார் வள்ளுவர்.
இன்பம்- துன்பம் நிறைந்தது சம்சார சாகரம். சம்சாரம் என்றால் மனைவி என்று சொல்லுகிறோம். சம்சாரம் என்றால் இல்லறம். அதை நீந்திக் கடக்கவேண்டும். நாம் உண்மையில் பிறந்தநாள் முதல் மூன்று கப்பலில் பயணம் செய்து அதைக் கடக்கவேண்டியிருக்கிறது. இறுதியில் அதைக் கடக்க உதவுவதும் ஒரு கப்பல்தான்.
ஆங்கிலத்தில் கப்பல் என்றால் SHIP ஷிப்.
முதலில் நமக்கு அறிமுகம் ஆவது தாய், தந்தை மற்றும் சித்தப்பா, அத்தை, மாமா , மாமி. அதாவது பிறந்தவுடனேயே ரிலேஷன்ஷிப் RELATIONSHIP என்னும் கப்பலில் குதிக்கிறோம். இவர்களில் யாரையாவது எனக்குப் பிடிக்கவில்லை என்று மாற்ற முடியுமா? மாமா, மாமா தான் ; அத்தை அத்தைதான். அந்த ரிலேஷன்ஷிப் என்ற சொந்த பந்தத்தை தமிழில் சொந்தக்காரர்கள்- உறவினர்கள் என்போம். இது முதல் SHIP கப்பல்=ஷிப்.
கொஞ்சம் வளர்ந்து பள்ளிக்கூடத்துக்குப் போனால் அங்கே நாம் மாட்டிக்கொள்வது FRIENDSHIP ப்ரண்ட்ஷிப்ப்பில். அது ஒரு கப்பல்= ஷிப். அதிலிருந்தும் மீள்வதில்லை ; அது அலுவலகம்வரை தொடர்கிறது.
பின்னர் இல்லறத்தில் நுழைகிறோம். . அங்கு நமக்குக் கிடைப்பதோ வாழ்க்கைத் துணை ; அதாவது PARTNERSHIP பார்ட்னர்ஷிப் ; மனைவி .
இவர்கள் யாரும் நாம் இறக்கும்போது கூட வரப்போவதில்லை. அதற்குப்பின் நமக்கு உதவ இறைவன் இருக்கிறான். அவனை அடையவும் ஒரு ஷிப் – கப்பல்தான் — உதவும். அதுதான் WORSHIP வொர்ஷிப் – இறை வழிபாடு.
பட்டினத்தார் போன்றோர் இப்போதே அவனை நினை என்கிறார்.
Xxxx
திருவெண்காடர்
பட்டினத்தாரின் பெயர் திருவெண்காடர் ; அவர் கோடீஸ்வரனாக இருந்த காலையில் , தன்னுடைய வெளிநாட்டு கப்பல் பிஸினஸ் (Maritime Trade) நிமித்தமாக அதிகாரிகளை சென்றுபார்த்தார். அந்த நாட்டு அரசனைச் சென்று பார்த்தார். அவர்கள் எல்லோரும் அதிகார தோரணையில் அமர்ந்து இருக்க, பட்டினத்தார் நின்ற நிலையில் தன் கோரிக்கைககளை முன்வைத்தார்.
பட்டினத்தார் முறும் துறந்த முனிவராகி, கோவணத்துடன் ஊருக்கு வெளியே அமர்ந்திருந்தகாலையில் , அதே அதிகாரிகள் வந்து ,
திருவெண்காடரே ; இப்படி பாதியில் பிசினஸ்ஸை விட்டுப் போகலாமா ? இதில் என்ன லாபம் என்றனர்.
நான் இதற்கு முன்னர் பிசினஸ்மேன் (Businessman) என்று வந்த போது நீங்கள் உட்கார்ந்து இருந்தீர்கள்; நான் கைகட்டி வாய்பொத்தி நின்றுகொண்டு பேசினேன். இன்று பாருங்கள்; நான் அமர்ந்து ஆனந்தமாக இருக்கிறேன். நீங்கள் அனைவரும் நின்றுகொண்டு இருக்கிறீர்கள் – என்றார்.
Xxxx
LOAN லோன் – கடன் — தொல்லையிலிருந்து வழிபட மந்திரம்
நம்மில் யாராவது கடன் இல்லாமல் இருக்கிறோமா?
வீட்டுக் கடன், போன் கடன், கார் கடன், ஸ்கூட்டர் கடன், எஜூகேஷனல் லோன் (கல்விக்கடன்), திருமணக் கடன் என்று இறுதிவரை லோன்- கடனில் சிக்கித் தவிக்கிறோம். ஆனால் வெளியே பேசும் போது என் வீடு, என் கார் என்கிறோம். போன் கட்டணம் செலுத்தாவிடில் அது கூடப்பேசாது.
வாழ்நாள் முழுதும் நமம்மைத் தொடர்ந்து வரும் கடனை LOAN ஒழிக்க இரண்டு லோன்கள் LOANS உள்ளன. அதை நாடுங்கள்; கடன் விடுபடும்
எல் ஐ சி என்ற அமைப்பு இருக்கிறது; யோகக்ஷேமம் வஹாம்யஹம் என்று பெரிதாக எழுதிப்போட்டு இருக்கிறார்கள்; எனக்கே புரியவில்லை. பணம் கட்டு; நீ போனால் …….. (செத்துப் போனால்) இவ்வளவு கிடைக்கும் என்று சொல்லுகிறார்கள்; இருக்கும்போது பயன்படுத்த பணம் இல்லாமல், (செத்துப்) போனால் கிடைக்கும் பணம் எதற்கு?
கையெழுத்துப் போடப் போகும்போது உன் நாமினி NOMINEE யார் என்று கேட்கிறார்கள் ; கூடவே வந்த மாமி (நீ) இதோ நான்தான் நாமினி இருக்கிறேனே என்கிறாள்; கணவன் போனபின்னரும் நீண்ட நாள் வாழ்வோம் என்று நம்புகிறார்கள்!
( அவர் சொன்ன கருத்தை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்; சில சொற்கள் என்னுடையதாக இருக்கலாம்; ஒரிஜினல் உபன்யாசத்தை யூ டியூப் முதலிய சேனல்களில் காணவும்; இன்னும் சுவையாக இருக்கும்.)
நாச்சியார் கோவில்(திருநறையூர்) பெருமாள் கோவிலின் பெருமை கல் கருடனால் அதிகரித்துவிட்டது. மரத்தினால், சுதையினால், உலோகத்தினால் அல்லது இவைகளின் கூட்டினால் ஆன கருட வாகனங்களை அறிவோம். முழு கல்லினால் ஆன கருடனை சுமந்து கொண்டுபோவது அதிசயம்தானே . மேலும் இதன் எடை கோவிலின் வெளியே போவதற்குள் அதிகரிக்கிறது என்ற நம்பிக்கையால் மேலும் மேலும் தூக்கும் சிப்பந்திகள் அதிகரிப்பது இன்னொரு விசேஷம். இதே ஊரில் பாடல் பற்ற சிவன் கோவிலும் இருப்பது எல்லா இந்துக்களுக்கும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த பலனையும் கொடுக்கிறது.
முதலில் நான் பிப்ரவரி 2023-ல் எப்படிப் போனேன் என்று சொல்லி துவங்குகிறேன் . கும்பகோணத்திலிருந்து இந்த ஊர் சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. நாங்கள் காரில் சென்றோம். அருகிலேயே சிவன் கோவிலும் இருக்கிறது. கூட்டம் இல்லாத சிவன் கோவில்கள் என்ற தலைப்பில் எழுதிய மூன்று சிவன் கோவிலில் இந்த சிவன் கோவிலும் அடக்கம் .
இப்போது பெருமாளைத் தரிசிப்போம்.
மூலவர் பெயர் – ஸ்ரீநிவாசன் , திருநறையூர் நம்பி, வாசுதேவன் .
நின்ற திருக்கோலம் .
தாயார் வஞ்சுள வள்ளி ( நம்பிக்கை நாச்சியார்) , திருமால் பக்கத்தில் திருமண கோலத்தில் நிற்கிறார்.
ஐந்து தீர்ததங்கள் உள்ளன.
மேதாவி முனிவரின் வளர்ப்பு மகளான வஞ்சுள வல்லியை திருமால் ஐந்து உருவங்களில் மணந்து கொள்கிறார் என்பது நம்பிக்கை .
சிறிதும் பெரிதுமாக 16 கோபுரங்கள் காட்சி தருகின்றன.
பெருமாளுடைய கல் கருட வாகனம் பிரசித்தமானது. ஏழு வியாழக்கிழமைகளில் கருட பகவானை அர்ச்சித்தாலோ தரிசித்தாலோ நினைத்தது நிறைவேறும் என்பதால் நிறைய பக்தர்கள் வருகிறார்கள் .சந்நிதியில் 4 பேர் தூக்கும் கருட வாகனத்தை இறுதியில் 64 பேர் தூக்கிச் செல்லுவார்கள்; கல் கருடனுக்கு தனி சந்நிதி உள்ளது.
கருட சேவையின்போது, பெருமாள் கல் கருடன் வாகனத்திலும் தாயார் அன்ன னாவாகனத்த்திலும் பவனி வருவார்கள்.
திருமங்கை ஆவார் பாடிய திருத்தலம் . 108 திவ்ய தேசங்களில் ஒன்று
கருட பட்சிகள் மரணம்
திருக்கோயில் நந்தவனத்தில் நீண்டகாலமாய் வசித்து வந்த கருட பட்சிகள் 1999ம் ஆண்டில் முக்தி அடைய அங்கேயே அடக்கம் செய்யப்பட்டன.. இவை நமக்கு திருக்கழுகுக் குன்ற கழுகுகளை நினைவுபடுத்தும்
108 திவ்ய தேசங்களில் சேவை சாதிக்கும் எம்பெருமான்களின் விக்ரஹங்கள் எல்லாவற்றையும் இந்தக்கோவிலில் ஒரு சீராகக் காணலாம் என்று லிப்கோ பாதிப்பு கூறுகிறது.
அருகில் திரு நாகேஸ்வரம், அழகாபுத்தூர் கோவில்கள் உள்ளன. இதே ஊரில் பாடல் பெற்ற சிவன் கோவிலும் இருக்கிறது.
—subham—
Tags-நாச்சியார் கோவில், கல் கருடன், பெருமாள், கருட பட்சிகள் , மேதாவி முனிவர் , திவ்ய தேசம்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கடவுள்துகளைக்கண்டபாரதவிஞ்ஞானிஎடுத்த
ஆரத்தி! – 2
ச.நாகராஜன்
மேக்நாத் சாஹா ஜெர்மானிய மொழியைக் கற்றுத் தேர்ந்தார். ஜெர்மானிய மொழியில் இருந்த புத்தகங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். சத்யேந்திர நாத் பிரெஞ்சு மொழியைக் கற்றுத் தேர்ந்தார். அந்த மொழியில் இருந்த புத்தகங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.
1921இல் டாக்கா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. அதில் சத்யேந்திரநாத். இயற்பியல் பிரிவில் ரீடராகச் சேர்ந்தார். அங்கு அவர் ‘எலிமெண்டல் பிஸிக்ஸ் (Elemental Physics) மற்றும் எக்ஸ்ரே கிரிஸ்டலோகிராபியில் தனது ஆய்வைத் தொடங்க ஆரம்பித்தார்.
ஒரு நாள் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது போட்டோ எலக்ட்ரிக் எபக்ட் பற்றியும் அல்ட்ரா வயலட் காடராஸ்கோப் பற்றியும் சொல்லிக் கொண்டிருந்தார். இந்தக் கொள்கையில் இருந்த பலஹீனத்தைப் பற்றி (Weakness of the theory) அவர் சொல்லிக் கொண்டிருந்த போது, தன்னால் எடுக்கப்பட்ட குறிப்புகளில் உள்ள வித்தியாசத்தைப் பற்றி அவர் கூறினார்.
அதில் அவர் ஒரு தவறை கணக்குப் போடுவதில் செய்யவே கொள்கையும் சோதனை முடிவுகளும் ஒன்றாக அமைந்திருந்ததைக் கண்டு திகைத்தார். நன்கு சிந்தித்துப் பார்த்ததில் தான் கணிதத்தில் தவறு இழைக்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டார்.
அவரது ஆர்வம் மிகுந்தது. தீவிரமாக ஆராய ஆரம்பித்தார். முதலில் அவர் கொள்கை முடிவுகளை ஒருவர் கூட ஆதரிக்கவில்லை.
ஆனால் அவர் ‘”Plank’s Law and the Hypothesis of Light Quanta’ என்ற ஆய்வுப் பேப்பரை எழுதி வெளியிட்டார்.
பின்னர் தனது ஆய்வுப் பேப்பரை நேரடியாக ஐன்ஸ்டீனுக்கு அவர் அனுப்பி வைத்தார். ஐன்ஸ்டீன் அதைப் பார்த்தார். அதில் இருந்த உண்மையைக் கண்ட அவர் அதை ஜெர்மானிய மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.
எந்தக் கணிதம் தவறாகப் போடப்பட்டது என்று சத்யேந்திரநாத் நினைத்தாரோ அது இப்போது, ‘ஐன்ஸ்டீன் ஸ்டாடிஸ்டிக்ஸ்’ (Einstein’s Statistics) என்று அறியப்படுகிறது.
ஐன்ஸ்டீன் இந்தக் கொள்கை முடிவை அணுக்களின் மீது பிரயோகம் செய்து பார்த்தார். அது ஒரு புதிய ‘Condensate’ஐக் கண்டு பிடிக்க வழி வகுத்தது. இதுவே இப்போது போஸ் ஐன்ஸ்டீன் கண்டன்சேட்’ என்று அழைக்கப்படுகிறது.
கண்டன்சேட் என்பது உண்மையில் போஸ்டன் துகளின் செறிந்த நிலையாகும்.
1995ஆம் ஆண்டு அது இருப்பது நிரூபிக்கப்பட்டது.
பிரபஞ்சத்தில் உள்ள இந்தத் துகள்கள் க்வாண்டம் நம்பருடன் முழுமை எண்(integer) கொண்ட மதிப்பாக பிரபல விஞ்ஞானி பால் டிராக்கினால் ‘போஸான் பார்டிகிள்’ என்று பெயரிடப்பட்டது. (Paul Dirac named it as Boson Particle)
1924ஆம் ஆண்டு சத்யேந்திரநாத் ஐரோப்பாவிற்குப் பயணமானார்.
ஜெர்மனியில் அவர் ஐன்ஸ்டீனைச் சந்தித்தார். அவருடன் பல பொருள் பற்றி விவாதித்தார்.
பிரான்ஸ் சென்று மேடம் கியூரியைச் சந்தித்தார். அவரது சோதனைக்கூடத்திலேயே சில காலம் சோதனைகளைச் செய்தார்.
1924 முதல் 1926 முடிய பிரபல விஞ்ஞானிகள் பலரையும் அவர் சந்தித்தார்.
1927இல் டாக்கா திரும்பிய அவர், இயற்பியலில் மூத்த பேராசிரியராக அமர்ந்தார்.
ரவீந்திரநாத் தாகூர் சத்யேந்திரநாத்தைப் பார்த்து மிகுந்த உத்வேகம் கொண்டார். 1937ஆம் ஆண்டு அவர் வங்க மொழியில் ஒரு அறிவியல் புத்தகத்தை எழுதி அதை சத்யேந்திரநாத்திற்கு சமர்ப்பணம் செய்தார்.
இதனால் மனம் மகிழ்ந்த சத்யேந்திரநாத் நோபல் பரிசு கிடைத்திருந்தால் கூட இவ்வளவு மகிழ்ச்சியைத் தான் பெற்றிருக்க மாட்டேன். அவ்வளவு பெரிய மதிப்பை ரவீந்திரநாத் தாகூர் கொடுத்து விட்டார் என்று கூறினார்.
வங்க மொழியிலேயே அறிவியல் கற்பிக்கப் பட வேண்டும் என்ற பேரார்வத்தை அவர் கொண்டிருந்தார். யாராவது அறிவியலை வங்க மொழியில் கற்பிக்க முடியாது என்று கூறினால் ஒன்று அவருக்கு வங்க மொழியைப் பற்றி ஒன்றுமே தெரியாது என்றோ அல்லது அறிவியலைப் பற்றி அவர் அறியவே இல்லை என்றோ கூறலாம் என்றார்.
வங்க மொழியில் அறிவியலைக் கற்பிக்க வேண்டும் என்பதற்காக ‘விக்ஞான் பரிசய’ என்ற ஒரு இதழையும் அவர் ஆரம்பித்தார்.
சத்யேந்திரநாத் ஒரு நல்ல இசைப் பேரறிஞர். பல நாட்கள் இரவில் தூங்காமல் நல்ல இசையைக் கேட்டுக் கொண்டே இருப்பார். எஸ்ராஜ் வாத்தியத்தை இசைப்பார். தோட்டக்கலையில் அவருக்கு ஈடுபாடு உண்டு.
I was reading an old book on the Kathakali dance form which is staged until this day in Kerala. It is a very short book but with full of facts. Here is a summary.
1. Kathakali is a dance drama form peculiar to Kerala. Katha+ kali means Story Play.
2. Kathakali is an improvement on Krishnattam, kind of dance drama based on Jayadeva’s Ashtapathi. It came into being around 1650 CE.
3. Raja Veera Kerala Varma of Kottarkkara requested the Zomorin of Calicut (Zamorin= Hindu king) to send the troupe of Krishnattam players for a Roal Wedding. But he refused to send a troupe saying that there were no scholrs in the south who are capable of appreciating such a scholarly artistic performance. Disappointed king, adopted simpler costumes and started Ramanattam based on Ramayana. it became Kathakali in course of time.
4. Ramanattm was first performed in front of the Ganapathi temple of Kottarakkara. This is followed by all kathakali artistes. Their irst performance is performed in front of the temple
5. This is the modern history. But there is information to show that this form of dance is at least 1000 year old. Ammu raja of Bali Islands (now Indonesia) took some people from Travancore and they taught the islanders a dance where gestures are predominant. Later it spread to Java island.
6. The Raja of the principality of Kottarkkara (1575- 1650) was the first composer and originator of Kathakali. He made 8 plays to show 8 important episodes of Ramayana. Raja of Kottayam (1665-1743) developed this dance based on Bharatham. He participated in one of the performances without anyone’s knowledge. When his troupe presented a show in front of Zamorin/Hindu King of Calicut, the king invited all actors and presented them gifts, he was surprised that 50 year old Kottayam Raja was one of the actors.
7. Hasta Mudras (hand poses) are very important in this type of dance. The system of Finger Poses is based on Bharata Natya Sastra. Hasta Lakshana Deepika and Abhinaya Darpana are two more important works on Mudras
8. Kathakali language is Manipravala- a mixture of Sanskrit and Malayalam. The dialogues are in Malayalam and intermediate verses in Sanskrit.
9. The verse or sloka introduce the actors on the stage. The verses , as a rule, close with the words, And so they spoke. The actors are behind the 5X4 feet long silk curtain. The curtain holders will raise or lower the curtain (Thirassila) according to the tempo of the dance.
10. Nowadays old plays are not used much. New plays are written. It is a difficult art. One has to undergo a rigorous training for 12 years to get a minor role on stage. They do it in old Guru kula way.
11. Ten to fifteen years of stage experience makes an actor competent to play major roles.
12. There are nine different movements or actions of the head, six movements each of the eye brows, nose, cheeks and lips , seven movements of the chin and nine movements of the neck, eleven glances of the eyes, each varying in meaning.
13. The actors are tabooed from speaking while on the stage. The strides, the hand poses, dances and facial gestures are the effective substitutes for vocal expression
14. The Kathakali dancers are masters in the movements of eyes. The eyes of the Kathakali dancers actually dance. There are nine different movements of eye balls, nine movements of eye lids, and seven movements of eye brows. The reddening of the eyes of the actors lends an ethereal charm and superhuman effect to the pantomime.
15. Rishi Bharatha, author of dance treatise, while describing Nritya , ordains that “the dancer with the throat should sing; with feet express the tala; with the eyes express the bhava and with the hands express meaning”. This terse definition does justice to Kathakali and demands a four fold talent of the dancer
In the next part let us look at the five distinct types of actors, three distinct varieties, 80 knots in dressing, 30 members in a typical troupe, 9 hour long performance etc.
திருச்சி கலைமாமணி கல்யாண ராமன் சொற்பொழிவுகள் மிகவும் சுவையானவை; அவர் நிறைய உண்மைகளை , பட்டவர்த்தனமாக அம்பலப்படுத்துவார். இதோ அவர் சொன்ன ஒரு குட்டிக்கதையும் , அவர் உதிர்த்த சில பொன்மொழிகளும் :
ஒரு மாமி, நம் உபன்யாசகரிடம் பெருமையாகச் சொன்னாளாம் :
என் மகன் லண்டனுக்குப் போயும் தினசரி விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லி வருகிறான் —என்று பெருமையுடன் சொன்னாளாம்.
உபந்யாசகர் சொன்னார்:
மாமி; அதைக் கொஞ்சம் மாற்றிச் சொல்லுங்கோ. என் மகன் தினசரி விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொன்னதால் அவனுக்கு லண்டன் செல்லும் வேலை கிடைத்தது என்று.
XXX
பிராமணர்களுக்கு ஜோதிடமே தேவை இல்லை!
என்னிடம் நிறைய பேர் ஜோதிடம் பார்க்க வருகிறார்கள்; உண்மையைச் சொல்லுகிறேன்; சந்தியா வந்தனம் செய்யும் பிராமணர்களுக்கு ஜோதிடமே தேவை இல்லை. அவர்கள் மூன்று வேலையும் நவக்கிரகங்களையும் வணங்குகிறார்கள். நவக் கிரகங்களின் பெயரைச் சொல்லி தர்ப்பணம் செய்கிறார்கள் (ஆதித்யம் தர்ப்பயாமி…….கேசவன் தர்ப்பயாமி………. மந்திரங்கள் )
மேலும் காயத்ரீயை உபாசனை செய்கிறார்கள்; அவர்களுக்கு நவக்கிரகங்கள் தீமை செய்யாது .
xxxx
(இதோ என் சரக்கு : அப்படியானால் சந்தியாவந்தனம் செய்யாத பிராமணர் அல்லாதோருக்கு ஏதேனும் மந்திரம் உண்டா ? இருக்கிறது; உண்டு .
1962-ம் ஆண்டில் அஷ்ட கிரஹ சேர்க்கை ஏற்பட்டது; அப்போது உலகம் அழியுமா என்ற பெரும் பீதியைப் பத்திரிகைகள் தினமும் வெளியிட்டு வந்தன . காஞ்சி மஹா சுவாமிகள் (சங்கராச்சார்யார் 1894-1994) மக்களின் மனதை அமைதிப்படுத்தினார். திருஞான சம்பந்தர் அருளிய கோளறு திருப்பதிகத்தை எல்லோரும் சொல்லுங்கள் என்றார். பத்திரிக்கைகளும் அதை வெளியிட்டன. பல்லாயிரக்கணக்கில் அந்த தேவாரப் பாடல் இலவச விநியோகம் செய்யப்பட்டன . எட்டு கிரகங்களும் ஒரே ராசியில் கூடிய காலத்தில் பெரிய கேடு எதுவும் நிகழவில்லை . பிறகு வந்த சீனப் போரிலும் அமெரிக்க உதவியால் நாம் பிழைத்தோம் . வேயுறு தோளி பங்கன் என்று துவங்கும் கோளறு திருப்பதிகத்தில் நவக்கிரக தர்ப்பணம் வந்துவிடுகின்றது.
பாடல் 1
வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல ணிந்தென்
உளமேபு குந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி
சனிபாம்பி ரண்டு முடனே
ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியார வர்க்கு மிகவே.))
Xxxx
ஆண்டி மகனா? அரசன் மகனா? கதை
மீண்டும் திரு.கல்யாண ராமன் உரைக்குத் திரும்புவோம். மாயவரம் ராதா கல்யாண உற்சவத்தில் கர்ணனும் கண்ணனும் என்னும் தலைப்பில் ஒன்றரை மணி நேரம் சொற்பொழிவு நடத்தினார்; கடல்மடை திறந்தார் போல வில்லிப்புத்தூரார் இயற்றிய மஹாபாரத பாடல்களைபி பொழிந்தார்; நயம்பட பொருள் உரைத்தார் . கர்ணனுக்கு மிஞ்சிய கொடையாளி பூமியில் இல்லை என்றார். அப்போது கருணையும் கொடையும் பிறவிக்குணங்கள் என்பதற்கு எடுத்துக் காட்டாக ஒரு கதை சொன்னார் (என் சொற்களில் அதை வடிக்கிறேன்; பிழை இருப்பின் அது என் பிழையே)
xxxx
ஒரு நாட்டில் ஒரு ராஜா இருந்தார்; ஒரு நாள் கண்ணிரண்டும் தெரியாத ஒரு புலவர் அந்த அரசவைக்கு வந்தார். அவரை அரசனுக்கு மந்திரி அறிமுகம் செய்துவைத்தார்
ராஜனே இவருக்கு கண்பார்வை இல்லாவிடினும் எந்தப் பொருளைக் கொடுத்தாலும் அதைச் சரியாகக் கண்டுபிடித்துவிடுவார் என்கிறார் மந்திரி.
உடனே அரசனும் அவனது சோதனைகளைத் தொடங்கினான்.
ஒரு வைரக் கல்லையும் ஒரு கூழாங் கல்லையும் , கண் தெரியாத புலவர் கையில் கொடுத்து இவை என்ன? என்று சொல்லுங்கள் என்றான். புலவரும் அவற்றை சற்று நேரம் சூரிய ஒளியில் காட்டிவிட்டு சூடேறிய கல்லை சாதாரணக் கல் என்றும் மற்றதை வைரக் கல் என்றும் பகர்ந்தான் .சரியான பதில் சொன்னவுடன்,
“மந்திரி, நமது காளி கோவில் பிரசாதமான தயிர் சாதத்தை இவருக்குப் பரிசாக அளியுங்கள்” என்றான் .
அடுத்த சோதனையாக ஒரு குதிரையையும் கழுதையையும் அழைத்துவரச் செய்து உன் முன்னால் நிற்கும் மிருகங்கள் என்ன என்ன? என்று கேட்டான் மன்னன்.
புலவரும் அவற்றின் அருகே சென்று அவற்றைக் கிள்ளிவிட்டார்; குதிரை கனைத்தது ; கழுதையோ காள் காள் என்று கத்தியது. அதை வைத்து, புலவர் கழுதை, குதிரை என்று மொழிந்தார்.
இதற்கும் ஒரு விலை மதிப்பில்லாத பரிசினை கொடுக்க உத்தரவிட்டான்
அரசன் மேலும் சில சோதனைகளைச் செய்யவே 100 சதவிகிதம் சரியான பதில்கள் கிடைத்தன.
உடனே அரசன், அந்தப் புலவனை மரியாதையோடு தனது அந்தரங்க அறைக்கு அழைத்துச் சென்றான். புலவரே உண்மையினைச் சொல்லும் :
நான் அரசனுக்குப் பிறந்தவனா? , ஆண்டிக்குப் பிறந்தவனா ? என்று கேட்டான்.
இத்தகைய கேள்விகளுக்குப் பதில் சொல்ல சாமுத்ரிகா லட்சணம் என்னும் சாஸ்திரம்தான் உதவும். அதைப் பயன்படுத்த முழுக் கண்பா ர்வை இருக்கவேண்டும். அனால் புலவருக்கோ கண்கள் இல்லை. அப்படியிருந்தும் ஒரு நொடியில் பதிலிறுத்தார்.
மன்னர் மன்னா, ராஜாதி ராஜனே ! நீ ஆண்டிக்குப் பிறந்தவன் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
திடுக்கிட்ட அரசன் கேட்டான் . இந்த உண்மையை எப்படிக் கண்டுபிடித்தீர்கள் ? என்று வினவினான்.
மன்னா , முதல் பரீட்சையில் ஒரு கூழாங்கல்லையும் வைரக்கல்லையும் கொடுத்து என்னைச் சோதித்தாய் .நானும் சரியான பதிலைக் கொடுத்தேன். நீ மன்னவனுக்குப் பிறந்து இருந்தால் உடனே அந்த வைரக்கல்லை எனக்குப் பரிசளித்திருப்பாய். நீயோ கோவில் சாதத்தைக் கொடுக்கவைத்து உன் ஆண்டி புத்தியைக் காட்டிவிட்டாய் .
கருணையும்,கொடையும் பிறவிக்குணங்கள்
ஆகையால் சொல்லுகிறேன்- நீ ஆண்டிக்குப் பிறந்தவன் என்பதில் சந்தேகமில்லை.
அசரனும் வெட்கித்து தலை குனிந்தான் ..
Xxxx
நன்கொடை கேட்டால்
கல்யாணராமன் தொடர்ந்து சொன்னார்
யாராவது நல்ல காரியத்துக்கு நன்கொடை கேட்டால் , உடனே பையில் இருந்ததைக் கொடுத்துவிடுங்கள். மனித மனம் மாறிக்கொண்டே இருக்கும். நாளைக்கு வாருங்கள் என்று ஒருவர் சொன்னால் , அவன் கொடுக்கவே மாட்டான். அது இல்லை என்று சொல்லுவதற்குச் சமம். கர்ணனோ கடைசிவரை கொடுத்தான். இறக்கும் தருவாயிலும் அவனது புண்ணியத்தை தானம் கேட்டான் கண்ணன். அதையும் கர்ணன் கொடுத்தவுடன் கண்ணன் நெகிழ்ந்துபோய் தனது ஆனந்தக் கண்ணீராலும் , அழுத கண்ணீ ராலும் கர்ண மாமன்னனை அபிஷேகம் செய்தான் என்கிறார் வில்லிப்புத்தூரார். அப்போது கர்ணா! நீ என்ன வரம் வேண்டுமானாலும் கேள் என்றபோது, எத்தனை பிறவி எடுத்தாலும் இல்லை என்று சொல்லி வருவோருக்கு நான் இல்லை என்று சொல்லாமல் வாரி வழங்க வேண்டும். அந்த வரத்தை அருளுக என்று கர்ணன் கேட்டான் .
கருணையும் கொடையும் பிறவிக்குணங்கள் !
–சுபம்—
TAGS- அரசன் , ஆண்டி , கல்யாணராமன், திருச்சி, சொற்பொழிவு , ஜோதிடம், பிராமணன்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கடவுள் துகளைக் கண்ட பாரத விஞ்ஞானி எடுத்த
ஆரத்தி! – 1
ச.நாகராஜன்
பாரத விஞ்ஞானிகளுள் மிகவும் பெருமை வாய்ந்த விஞ்ஞானி சத்யேந்திர நாத் போஸ்.
1894ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியன்று பிறந்த சத்யேந்திரநாத்
1974ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி மறைந்தார்.
பெரும் கணித மேதையாகவும் இயற்பியலில் பெரும் விஞ்ஞானியாகவும் விளங்கிய அவருக்கு 1954ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருதை இந்திய அரசு அளித்து கௌரவித்தது.
வங்காளத்தில் காயஸ்த குடும்பத்தில் ஏழு பேர்களில் முதலாவது ஆண்மகனாகப் பிறந்தார் இவர். இவருக்கு அடுத்துப் பிறந்த ஆறு பேரும் பெண்கள்.
இளமையிலேயே அவரது கணித அறிவு அனைவரையும் திகைக்க வைத்தது.
நூற்றுக்கு நூற்றுப்பத்து வாங்க முடியுமா என்ன என்று அனைவரும் கேட்டுச் சிரிப்பார்கள். ஆனால் அவரது ஆசிரியர் உபேந்திர நாத் கணிதத்தில் அவரது விடைத்தாளைத் திருத்த ஆரம்பித்தவர் அவர் அனைத்து கேள்விகளுக்கும் சரியான விடையைத் தந்திருந்ததோடு ஜாமெட்ரி கணிதங்களை ஒன்றுக்கும் மேற்பட்ட விதத்தில் துல்லியமாக விளக்கி இருந்ததைக் கண்டு அசந்து போனார்.
ஆகவே நூற்றுக்கு நூற்றுப் பத்து என்று மதிப்பெண் கொடுத்தார்.
1913ஆம் ஆண்டு அவர் விஞ்ஞானத்தில் டிகிரியைப் பெற்றார். பின்னர் கணிதத்தில் 1915இல் மேற்படிப்பைப் படிக்க ஆரம்பித்தார். அதில் அவர் எடுத்த மதிப்பெண்ணே மிக அதிக மதிப்பெண்ணை ஒருவர் எடுத்த சாதனையாகக் குறிக்கப்பட்டது. இன்றும் அந்த சாதனையை யாரும் முறியடிக்கவில்லை.
ப்ரசாந்த சந்த்ர மஹாலநோபிஸ் ஒரு முறை இந்திய விஞ்ஞானிகளுள் அவரளவு மேதையைக் கொண்ட இன்னொருவர் இல்லை என்று கூறி வியந்தார்.
ப்ரசாந்த சந்த்ர மஹாலநோபிஸ் யார்? அவர் முதல் பிளானிங் கமிஷனின் மெம்பராக இருந்தவர். ஏராளமான பட்டங்களைத் தன் பெயருக்குப் பின்னால் கொண்டவர் – OBE, FA Sc, FRS என்றெல்லாம்.
1967ஆம் ஆண்டு, ஒரு நாள் சத்யேந்திர நாத் அவரைச் சந்திக்க கொல்கத்தாவில் பாராநகர் சென்றார். ப்ரசாந்தோ மிகுந்த ஜுரத்தினால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சத்யேந்திரநாத் தன்னைப் பார்க்க வந்திருக்கிறார் என்பதைக் கேள்விப்பட்ட அவர் மாடியிலிருந்து கீழிறங்கி வந்து அவரைச் சந்தித்து இய்றகை விஞ்ஞானி T.A.டேவிஸைப் பார்த்து போஸ்ட் கிராஜுவேட் ஆராய்ச்சியைச் செய்யுமாறு சொன்னார்.
மிக உயரிய விஞ்ஞானியான J.B.S. ஹால்டன் ( Halden) இந்தியாவைப் பெரிதும் நேசித்தவர். இந்தியாவிலேயே தனது வாழ்நாளை அவர் கழித்ததோடு ஹிந்துக்களைப் போலவே வேஷ்டியைக் கட்டிக் கொண்டு வாழ்ந்து வந்தார். ஹிந்து தத்துவங்களையும் ஹிந்து பாரம்பரிய பழக்க வழக்கங்களையும் அவர் பெரிதும் போற்றி வந்தார். சத்யேந்திர நாத் அவருடனும் பழகி வந்தார். மேற்படிப்புக்காக அவர் திருமதி ஹால்டனையும் சந்தித்தார்.
இன்னொரு விஞ்ஞானியான டாக்டர் ரூபெர்ட் ஷெல்ட்ரேக்குடனும் (Dr Rupert Sheldrake) அவர் பழகி வந்தார். ஹைதராபாத்தில் உள்ள ICRISATஇல் ரூபெர்ட் ஆலோசகராக இருந்து வந்தார். அதீத உளவியலில் நாய்கள், எலிகள் மீது அவர் ஆராய்ச்சிகள் நடத்தி வந்தார். மூளையில் நினைவாற்றல் பற்றிய அவரது ஆய்வுகள் புகழ் பெற்றவை. 90 ஆய்வுக்கட்டுரைகளையும் 9 நூல்களையும் அவர் படைத்தார். அவருடன் சத்யேந்திரநாத் நன்கு பழகியதால் தனது ஆய்வுகளில் அவர் பெரிதும் உத்வேகம் கொண்டார்.
ஒரு முறை கல்கத்தா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரான ஶ்ரீ ஆசுதோஷ் முகர்ஜி சத்யேந்திரநாத்திற்கு அழைப்பு விடுத்தார். சத்யேந்திரநாத், மேக்நாத் சாஹா, ஷலின் கோஷ் ஆகியோரைத் தனது அறைக்கு அழைத்து விவாதித்த ஆசுதோஷ், வளர்ந்து வரும் விஞ்ஞானத்தில் அண்மைக்காலக் கண்டுபிடிப்புகளை அனைவருக்கும் கற்பிக்க முடியுமா என்று கேட்டார். சத்யேந்திரர் உடனடியாக ஒப்புக் கொண்டு அதன் படியே அனைவருக்கும் நவீன அறிவியல் கொள்கைகளை போதிக்க ஆரம்பித்தார்.
மேக்நாத் சாஹா (Mehnad Saha) க்வாண்டம் தியரியில் கவனம் செலுத்த சத்யேந்திர நாத் ஐன்ஸ்டீனின் – தியரி ஆஃப் ரிலேடிவிடியில் – ஒப்புமைத் தத்துவத்தில் கவனம் செலுத்தலானார்.
இயல்பாகவே பல மொழிகளை அறிவதில் சத்யேந்திரருக்கு ஆவல் ஏற்பட்டது. பாலிக்ளாட் (Polyglot) எனப்படும் பல்மொழி வல்லுநராக அவர் ஆனார். வங்காளம், பிரெஞ்சு, ஜெர்மானிய மொழி, சம்ஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வல்லவராக அவர் திகழ்ந்தார்.
டெனிஸன், ரவீந்திரநாத் தாகூர், காளிதாஸ் ஆகியோரின் கவிதைகளில் அவருக்கு அதீத ஈடுபாடு இருந்தது. எஸ்ராஜ் எனப்படும் ஒரு விசேஷ வாத்தியத்தில் – வயலின் போன்ற வாத்தியம்- அவர் விற்பன்னராகத் திகழ்ந்தார்.
ஒரு நாள் ஷிப்பூர் எஞ்ஜினியரிங் கல்லூரியிலிருந்து (Shibpur Engineering College) சில புத்தகங்கள் சத்யேந்திரநாத்திற்குக் கிடைத்தது. கூடவே பேராசிரியர் ப்ரால் (Prof. Braul) வைத்திருந்த சொந்த நூலகத்திலிருந்து சில ஜெர்மானிய மொழியில் இருந்த புத்தகங்களும் சத்யேந்திரருக்குக் கிடைத்தது.
Na tadchabdaan prayuyugnjamaano vaiyaakaranakulam gathvaah
Kuru sabdaan prayohya iti
In the above interesting passage from Mahabhasya 1-1-1-1,
Patanjali has referred to a fundamental principle of Philology..
In short it implies that language is not a creation of grammarians
The function of grammarians is to regularise, and not to create language.
Sabdaanusaasan is the term for grammar and not Sabdasaasan
Applying the same principle to the grammar of Panini, we may say, without any fear of contradiction, that the language, which is treated in Panini s Ashtadhyayi , must have been once a current language and not the creation of Panini s imagination.
Panini is regarded as the foremost grammarian of classical Sanskrit.
His treatment of Vedic Sanskrit is cursory. Thisis obvious from the twelve times repetition of the long reaching all comprehensive sutra Bahulam Chandasi. Hence classical Sanskrit is the basis of Panini’s grammar.
In the Dhatupada of Paninian system, which is generally ascribed to Panini himself, there are about 2000 roots. The words formed from these roots should be found used in the current classical Sanskrit literature. But we come across the forms of only 850 roots in the extant literature.
Whitney says that “the roots which are authenticated by the literary monuments of the language, earlier and later, number between 800 and 900. About half of these belong fully to the language throughout its whole history; some about 150are limited to the earlier or pre classical period; some again, over 120, make their first appearance n the later language. In the same way, a good number of primary and secondary derivatives are not seen used in the extant literature.
But we are not justified in drawing a conclusion, from the non -appearance of such forms, that they were not current in the time of Panini also. Discussing this very problem of non-use of some verbal forms in the current language, Patanjali forbids us to draw the above conclusion. Thus it in clear that in the days of Katyayana and Patanjali, many forms arrived at in Panini’s grammar were non -current. Yet Patanjali simply confessed the incompleteness of the extant literature and was not inclined to doubt the very existence of such forms.
Dr R G Bhandarkar, is therefore of opinion, that the baisi of Panini’s grammar is the language of Pre Mahabharat period and, to a great extent, the Brahmanas of the Vedic literature were written in that language. In such works as Aitareya and Satapata Brahmana, we find abundance of Paninian conjugational forms. If such conjugational forms had been used only in Vedic language, they must have been noted as such by Panini, eg. The form of Devaasah, in nominative plural from Deva, is accounted for in Vedic usage only; for the classical Sanskrit, only Devaah form is justified. In short, we can safely assume that in contemporary literature of Panini, which unfortunately is not completely available these days — these apparently rare forms were in use, and therefore, Panini made rules to account for them.
Panini does not use the word Samskrita, but the word Bhasaa is used , and it is distinguished from Chandasi or Mantra. In sutra 8-2-83, we see even Sudras spoke in Sanskrit and were answered in Sanskrit. All this should conclusively show that Sanskrit as handled by Panini, was then a spoken language. Consequently, it would be quite unreasonable to suppose that Panini wrote this grammar to account for the forms, which were imaginary and created by him.
Thus having accepted the view that Panini handled a spoken language, we are led to presume the existence of a vast classical Sanskrit literature, contemporaneous with Panini, but now non-existent. This presumption brings us face to face with the long drawn controversy about the date of Panini.
xxx
Date of Panini
Panini’s date according to
Max Muller and Bohtlingk – 350 BCE
Keith- 350 BCE
McDonell – 300 BCE, later change to 459 BCE
C V Vaidya – Earlier than 950 BCE
Dr R G Bhandarkar – Pre- Mahabharata period
In support of this view (950 BCE), we give below the obscure words in Ashtadhyayi. We can classify the words as Technical and Common words. We have not included the words in Ganapatha. The vocabulary of Ashtadhyayai, is very rich and vast. Almost all conceivable topics of the world are represented there.
Xxx
C V Vaidya’s History of Indian Literature gives a list of Geographical and historical importance and proper names from Panini. Those words are not included in the following list.
List of some obscure words in Ashtadhyayi
A thief – 5-10-113- ekaa gaarik
Ullaagha 8-2-55 – able, recently recovered from sickness.
Upasamvaada 3-4-8 to stake
Aasandii 8-2-12 seat
Indriya 5-2-93 pertaining to Indra
Upajnaa 2-4-81
Avara 5-4-57 not less than
Anaka 2-1-54 insignificant or small
Athisarga 3-3-163 to allow one to do what one likes
Athyaadhaana 3-3-80 a wooden support on which other wooden pieces are cut
Aagaveena 5-2-14 a labourer who works in return for a cow given temporarily
Adheeshta 3-1-166 to emply with honour
Aniravasitha 2-4-10 not an outcaste; a Sudra allowed to use utensils of higher castes
Antarvatrii 4-1-32 pregnant
Anvaajekarana 1-4-73 to strengthen
Apamithya 4-4-21 being in debt
Aparakara 6-1-149 part of a chariot
Upasamaadhaana 3-3-41 to collect
Abresha 3-3-3 non-deviation, propriety
Amatra 4-2-14 a vessel
Amnas 8-2-70 unawares
Ayaanaya 5-2-9 particular movement of pawns on a
Chess board
Arma 6-2-90 a ruined village
Asleeladrtaroopaa 6-2-42 ugly
Aagrapada 5-2-8 reaching upto foot
Udagha 3-3-86 praiseworthy
Upayamana 1-2-15 to marry
Udasrita 4-2-19 butter milk
Kulmaasha 5-2-83 eatables
Kuaththa 4-4-4
Jnethriya 5-2-92 incurable disease or adulterer
Udaya 8-4-67 following letter
Uyottama 6-1-176 last but one letter
Salaalu 4-4-54 a fragrant substance
Sthaalivilayi 5-1-70 rice fit for boiling
Pralambana 1-3-69 to make false statements
Kulija a 5-1-55 kind of measure
Maskara 6-1-150 a pipe
Pratyavasaana 1-4-52 to eat
Paatresamita 2-1-48 one who eats, but not work
Nishpravaanih 5-4-160 a blanket recently made
Potaa 2-1-65 with male and female signs
Samaamsameenaa 5-2-12 one having delivery every year
Kaamapravedana 3-3- 153 to express one’s desire
Adhyasviinaa 5-2-13 delivering today or tomorrow
Saami 5-4-5 half
Kanehatya 1-1-66 to the full satisfaction
Visishta 2-4-7 different
Vichaala 5-3-43 to unify or to divide one in many
Pratiyatna 1-3-32 to adopt quality of others
Bagaala 6-2-137 skull
Paruth 5-3-22 last year
Xxx
My comments
I don’t know why this writer completely ignored the great scholar Goldstucker who gave more valid points to show that Panini belonged to eighth or ninth century BCE. It may be due to author’s ignorance or arrogance.
xxx
Similar things are seen in Tamil’s oldest book Tolkappiam too. Nobody used such data to date him. Since he himself said ‘They say’, ‘Scholars say’, ‘It is sad that’ etc. many thought he compiled from many rules from old book/s what is relevant for his day. We may view Panini from that angle as well.
Many Tamil words used by Tolkappiar or many rules given in his book are ignored by classical Tamil poets. He might have compiled many old rules. He used Nimpiri for jealousy. That word or cognate word is not found in any language or anywhere in Tamil. We have similar English words such as Dog without any link to any language.
The barking of the dog is not similar in any European language!!
So we must be careful in using certain things to come to some conclusions.
At least Tamil and Sanskrit scholars can sit together and compare the changes in their languages.
In the above Panini word list, I see Saami/half is cognate to Semi in English. But one similarity won’t help us to arrive at any conclusion.
–subham—
Tags- Panini’s Age, Obscure words, lost words, Ashtadhyayi,
பிப்ரவரி 2023ம் ஆண்டு இந்திய பயணத்தில் பார்த்த முப்பதுக்கும் மேற்பட்ட புதிய தலங்களில் பட்டீஸ்வரம் துர்க்கையும் சிவனும் உள்ள கோவிலும் அடக்கம்.
குல தெய்வமான வைத்தீஸ்வரன் கோவிலையும் மதுரையில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலையும் தவிர வேறு கோவில்களை ஒரு முறை பார்த்தாலே போதும் என்பது என் கொள்கை . திருப்பதி பெருமாளும் எங்கள் இரண்டாவது குல தெய்வம். ஆயினும் அவர் எளிதில் தரிசனம் கொடுக்காமல் “அதிகம் கிராக்கி” செய்வதால் ஏதாவது ஒரு நரசிம்மர் கோவிலைத் தரிசித்து விடுவேன். அவ்வகையில் இந்த முறை பரிக்கல் நரசிம்மரைத் தரிசித்தேன் . அந்தக் கோவிலைப்பற்றி எழுதும் முன்பாக பட்டீஸ்வரம் துர்க்கையையும் சிவ பெருமானையும் தரிசிப்போம்.
பட்டீஸ்வரம் என்னும் ஊர், மாயவரம்- தஞ்சாவூர் ரயில் பாதையில் தாராசுரம் ரயில் நிலையத்திலிருந்து இரண்டு மைல் ; கும்பகோணத்திலிருந்து நான்கு மைல் தொலைவில் இருக்கிறது .
பெரிய கோபுரம் உடையது. கல் தூண்களில் சிற்பங்களும் இருக்கின்றன.
சுவாமி பெயர் – பட்டீஸ்வரர், தேனுபுரீஸ்வரர்
அம்மனின் பெயர்- பல் வளை நாயகி அம்மை , ஞானாம்பிகை
காமதேனுவின் புத்திரிகள் நால்வர். அவர்களில் ஒரு மகளான பட்டீ என்பவள் பூஜித்ததால்பட்டீச்சுரம் என்ற பெயர் வந்தது .
திருஞான சம்பந்தர் வாழ்வில் சிவ பெருமான் செய்த அற்புதங்கள் எண்ணற்றவை. இந்த ஊரில்தான் அவர் வெய்யிலில் வாடாமல் இருப்பதற்காக சிவ பெருமான், அவரது பூதத்தை அனுப்பி ஒரு முத்துப்பந்தலை அளித்தார்.
கோவிலுக்குள் ஞான தீர்த்தமும், தல விருட்சமான வன்னி மரமும் இருக்கின்றன .
xxx
ஸ்ரீ ராம பிரானுக்கு ‘சாயா’ ஹத்தி தோஷம் நீங்கிய தலமும் இதுவே. அந்த நிகழ்ச்சி ஆண்டுதோறும் மார்கழி மாதம் அமாவாசை தினத்தன்று நடக்கிறது.
XXXX
‘சாயா’ ஹத்தி தோஷம் என்றால் என்ன?
ராவணன் பிராமணன்; ஆனால் அசுரர் குணங்களோடு வாழ்ந்தான் அவனைக் கொன்றதால் ராவணனுக்கு பிரம்மஹத்தி (பிராமணக் கொலை ) தோஷம் பிடித்தது. அதைத்தீர்க்க ராமேஸ்வரத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். வாலி போன்ற வீரர்களைக் கொன்ற தோஷம் போவதற்காக வேதாரண்யத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். ராவணன் பெரிய சிவபக்தன். அப்பேற்பட்ட பக்தனைக் கொன்ற பாவம் தீருவதற்காக பட்டீஸ்வரத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.
இது பற்றி காஞ்சி மஹா சுவாமிகள் (சங்கராச்சாரியார் 1894-1994) சொன்னதைக் காண்போம்
ராமசந்திர மூர்த்தி ராவணனைக் கொன்றதால் அவருக்கு வீரஹத்தி மட்டுமில்லாமல் ப்ரம்மஹத்தி, சாயாஹத்தி என்று மொத்தம் மூன்று தோஷங்கள் ஸம்பவித்தன. ராவணன் ப்ராம்மணன், விச்ரவஸ் என்ற ரிஷியின் பிள்ளை அவன். நன்றாக வேத அத்யயனம் பண்ணியிருந்த அவன், கைலாஸத்துக்கு அடியில் மாட்டிக் கொண்டபோது ஸாம கானத்தோடு வீணா கானம் செய்தே ஈச்வர்னை ப்ரீதி பண்ணி மீண்டு வந்தான். அதனால் அவனைக் கொன்றதில் ராமருக்கு ப்ரம்மஹத்தியும் ஏற்பட்டது.
‘சாயா’ என்றால் பிரகாசம், ஒளி என்று அர்த்தம்; figurative ஆக (உருவகமாக) ‘சாயா’ என்பது கீர்த்திக்குரிய எந்தக் குணத்தையும் குறிக்கும். இங்கிலீஷில் கூட lustre-illustrious, glow-glory என்கிற போது பிரகாசம் என்பதே கீர்த்திக்குரிய தன்மைகளையும் குறிக்கிறதைப் பார்க்கிறோம். ராவணனுக்கு ரூப காம்பீர்யம், வேத சாஸ்திரப் படிப்பு, ஸங்கீத ஞானம், சிவ பக்தி என்றிப்படி அநேக ‘சாயா’க்களிருந்ததால் அவனை வதைத்ததில் ராமருக்கு சாயா ஹத்தி தோஷம் உண்டாயிற்று. இந்த மூன்றில் ப்ரம்மஹத்தி போக அவர் ராமேச்வரத்திலும், வீரஹத்தியிலிருந்து விமோசனம் பெற வேதாரண்யத்திலும், சாயாஹத்தி விலகுவதற்காகக் கும்பகோணத்துக்குப் பக்கத்திலுள்ள பட்டீச்வரத்திலும் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்தார். ராமேச்வர விஷயம் மட்டும் இப்போது எல்லோருக்கும் தெரிகிறது. ஆனால் இதே மாதிரி மற்ற இரண்டு ஊர் கோவில்களிலும் கூட ‘ராமலிங்கம்’ என்றே இப்போதும் இருக்கிறது.
XXXXX
பல கோவில்களில் நந்தி சிவலிங்கத்துக்கு நேராக இல்லாமல் சற்று விலகி இருக்கும். சம்பந்தப் பெருமான் வழிபடுவதற்கு வசதியாக இப்படி நந்தி விலகியதாகப் பெரியோர் புகல்வர் .
முதலில் இருக்கும் நந்தி பெரியது வேலைப்பாடு மிக்கது
பட்டீசுவரத்துக்குத் தெற்கே ஒரு பர்லாங்கு தூரத்தில் திருமலைராயன் ஆறு ஓடுகிறது. இத்தலத்துக்கு வடக்கில் வேறு ஒரு வீதியில் திரு சத்தி முற்றம் என்ற பாடல்பெற்ற தலமும் இருக்கிறது.
xxxx
பட்டீச்சுரம் துர்க்கை கோவில்
வெளிப் பிராகாரத்தில் வடக்குக் கோபுர வாயிலில் துர்க்கையம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.
பட்டீஸ்வரம் கோவில் வடக்கு வாசலில் உள்ள துர்க்கை மிகவும் சக்தி வாய்ந்தவள். சோழ அரசர்கள் காலத்தில் பழையாறையில் அரச மகளிர் வசிப்பதற்கான மாளிகை இருந்தது. அந்த மாளிகைக் கோட்டையின் வடக்கு வாசலில் குடி கொண்டிருந்தவள் இந்த துர்க்கை.
சோழர்கள் காலத்திற்குப் பிறகு இந்த துர்க்கையை அங்கிருந்து கொண்டுவந்து பட்டீஸ்வரம் கோவிலில் பிரதிஷ்டை செய்தார்கள். பட்டீஸ்வரம் துர்க்கையை பக்தர்கள் ராகுகால நேரங்களிலும், செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளிலும், அமாவாசை, பௌர்ணமி நாட்களிலும், அஷ்டமி, நவமி திதிகளிலும் வழிபடுதலைச் சிறப்பாக கருதுகின்றனர்.
துர்க்கை இங்கு சாந்த சொரூபியாக, கருணை வடிவமாக எட்டு திருக்கரங்கள் கொண்டு அருள் பாலிக்கிறாள். இவ்வன்னை மகிஷன் தலைமீது நின்ற கோலத்துடன் சிம்ம வாகனத்துடன் திரிபங்க ரூபமாய், எட்டுத் திருக்கரங்களுடனும், முக்கண்களுடன், காதுகளில் குண்டலங்களோடு காட்சி தருகிறாள். காளி மற்றும் துர்க்கைக்கு இயல்பாக சிம்மவாகனம் வலப்புறம் நோக்கியதாக காணப்படும்.ஆனால் சாந்த சொரூபிணியான இந்த துர்க்கைக்கு சிம்மவாகனம் இடப்புறம் நோக்கி அமைந்துள்ளது.அபயகரத்துடன் சங்கு சக்கரம், வில், அம்பு, கத்தி, கேடயம், கிளி ஆகியவற்றை தாங்கி அருள் பாலிக்கிறாள்.
xxxxx
Patteeswaram Sivan and Durga Temple
இங்குள்ள பைரவர் சந்நிதியும் மிகவும் பிரசித்தமானது
கோவிலில் மராட்டியர் கால ஓவியங்களையும் நாயக்கர் கால சிற்ப வேலைப்பாடுகளையும் கண்டு களிக்கலாம்.
பராசக்தி தவம் செய்வதற்கு இத்தலத்தை தேர்ந்தெடுத்து இறைவனை பூஜித்து வர இறைவன் தமது சடைமுடியுடன் காட்சி கொடுத்த சிறப்புடையது இத்தலம்.
.மாளவ தேசத்து தர்மசர்மா என்ற அந்தணனுக்கு மேதாவி முனிவரின் சாபத்தால் ஏற்பட்ட நாய் வடிவம் இத்தலத்திலுள்ள ஞானவாவி தீர்த்தத்தின் ஒரு துளி நீர் பட்டதால் சாபம் நீங்கப் பெற்றான்.
இத்தலத்தில் ஐந்து நந்திகள் உள்ளன. அனைத்தும் சந்நிதியிலிருந்து விலகியேயுள்ளன.
xxxxx
பட்டீச்சுரம் தேவாரம்
3. 073 திருப்பட்டீச்சரம் சம்பந்தர் பாடியது பண் – சாதாரி
பாடல் எண் : 1
பாடன்மறை, சூடல்மதி, பல்வளையொர்
பாகம், மதில் மூன்றுஓர்கணையால்,
கூடஎரி ஊட்டி,எழில் காட்டி,நிழல்
கூட்டுபொழில் சூழ்பழைசையுள்
மாடமழ பாடிஉறை பட்டிசர
மேயகடி கட்டுஅரவினார்,
வேடநிலை கொண்டவரை வீடுநெறி
காட்டிவினை வீடும்அவரே.
பொழிப்புரை : சிவபெருமான் வேதங்களை அருளிச்செய்து வேதப் பொருளாயும் விளங்குபவர் . பிறைச்சந்திரனைச் சூடியவர் . பல வளையல்களையணிந்த உமாதேவியைத் தம் திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டவர் . மதில்கள் மூன்றினையும் ஒரு கணையால் எரித்த வீர அழகைக் காட்டியவர் . நிழல்தரும் சோலைகள் சூழ்ந்த திருப்பழையாறையில் , மாடங்களையுடைய திருமழபாடி என்னும் நகரில் , திருப்பட்டீச்சரம் என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றார் . பாம்பைக் கச்சாகக் கட்டியவர் . வேடநிலைக்கேற்ப நல்லொழுக்கத்தில் நிற்கும் அடியவர்களின் வினைகளைப் போக்கி முத்திநெறி அருளவல்லவர் .
பாடல் எண் : 2
நீரின்மலி புன்சடையர், நீள்அரவு
கச்சைஅது, நச்சுஇலையதுஓர்
கூரின்மலி சூலம்அது ஏந்தி, உடை
கோவணமும் மானின்உரிதோல்,
காரின்மலி கொன்றைவிரி தார்கடவுள்
காதல்செய்து மேயநகர்தான்,
பாரின்மலி சீர்பழைசை பட்டிசரம்
ஏத்தவினை பற்றுஅழியுமே.
பொழிப்புரை : சிவபெருமான் கங்கையைச் சடையில் தாங்கியவர் . நீண்ட பாம்பைக் கச்சாகக் கட்டியவர் . கூர்மையான இலைபோன்ற வடிவுடைய கொடிய சூலப்படையை ஏந்தியவர் . கோவண ஆடை அணிந்தவர் . மான் தோலையும் அணிந்தவர் . கார்காலத்தில் மலரும் கொன்றையை மாலையாக அணிந்தவர் . அத்தகைய கடவுள் விரும்பி வீற்றிருந்தருளும் தலமாவது பூமியில் மிக்க புகழையுடைய திருப்பழையாறை ஆகும் . அங்குள்ள திருப்பட்டீச்சரம் என்னும் கோயிலிலுள்ள இறைவனைப் போற்றி வணங்க நம் வினைகள் யாவும் அடியோடு அழியும் .
பாடல் எண் : 3
காலைமட வார்கள்புனல் ஆடுவது,
கௌவைகடி யார்மறுகுஎலாம்,
மாலைமண நாறுபழை யாறைமழ
பாடிஅழ காயமலிசீர்,
பாலைஅன நீறுபுனை மார்பன்,உறை
பட்டிசர மேபரவுவார்,
மேலைஒரு மால்கடல்கள் போல்பெருகி,
விண்உலகம் ஆளும்அவரே.
பொழிப்புரை : பெண்கள் காலையில் நீர்நிலைகளில் நீராடுவதால் உண்டாகும் ஓசையை உடையதாய் , மாலையில் பூசை செய்வதால் வீதிகளிலெல்லாம் நறுமணம் கமழ்வதாய் உள்ள திருப்பழையாறை என்னும் தலத்தில் மழபாடி என்னும் பகுதியில் , தன் திருமேனி முழுவதும் மிக்க சிறப்புடைய பால்போன்ற திருவெண்ணீற்றைப் பூசிய மார்புடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருப்பட்டீச்சரம் என்னும் திருக்கோயிலை வணங்குவார் இம்மையில் கடல்போல் செல்வம் பெருக , மறுமையில் விண்ணுலகை ஆள்வர்.
.பாடல் எண் : 11
மந்தம்மலி சோலைமழ பாடிநகர்
நீடுபழை யாறை அதனுள்,
பந்தம் உயர் வீடுநல பட்டிசர
மேயபடர் புன்சடையனை,
அந்தண்மறை யோர்இனிது வாழ்புகலி
ஞானசம் பந்தன்,அணிஆர்
செந்தமிழ்கள் கொண்டுஇனிது செப்பவல
தொண்டர்வினை நிற்பதுஇலவே.
பொழிப்புரை : தென்றல் உலாவும் சோலைகளையுடைய திருமழபாடி என்னும் நகர்ப் பகுதியைத் தன்னுள் கொண்ட நெடிய பழையாறை என்னும் திருத்தலத்தில் , தன்னையடைந்தவர்கட்குப் பந்தமும் , வீடும் அருளவல்ல நல்ல திருப்பட்டீச்சரம் என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான் படர்ந்த சிறுசடைகளை உடைய சிவபெருமான். அப்பெருமானைப் போற்றி எவ்வுயிர்களிடத்தும் இரக்கமுள்ள மறையோர்கள் இனிது வாழ்கின்ற திருப்புகலியில் அவதரித்த ஞானசம்பந்தன் அழகிய செந்தமிழில் அருளிய இப்பதிகத்தைக் கேட்டற்கும் , உணர்தற்கும் இனிதாகச் சொல்லவல்ல தொண்டர்களின் வினைகள் நீங்கும் .
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
காலம் வருமுன்னே காலன் வரமாட்டான்! – 2
ச.நாகராஜன்
இதே தலைப்பில் 23-6-2018 அன்று 5139 என்ற எண் கொண்ட எனது கட்டுரையைப் படித்தவர்களுக்கு இன்னும் சில செய்திகள்.
இவையும் உண்மையில் நடந்தவையே!
16-7-2012 The Telegraph இல் வந்த செய்தியை Leo Lewis லண்டன் The Timesஇல் செய்தியாகத் தந்துள்ளார்.
தெற்கு பிலிப்பைனிஸில் நடந்த சம்பவம் இது. மூன்று வயதே ஆன பெண் குழந்தை ஒன்று பல நாட்கள் ஜுரத்தால் அவஸ்தைப்பட்டு வந்தது.
ஒரு சனிக்கிழமை அன்று குழந்தையை அரோரா (Aurora) என்ற நகரில் உள்ள ஒரு மருத்துவமனைக்குப் பெற்றோர்கள் எடுத்துச் சென்றனர்.
டாக்டர் ஒருவர் குழந்தையைப் பரிசோதித்தார். பின்னர் அவர் குழந்தைக்கு நாடித்துடிப்பே இல்லை என்றும் குழந்தை இறந்து விட்டது என்றும் கூறினார்.
குழந்தையின் உடலை வீட்டுக்கு எடுத்துச் சென்ற பெற்றோர் இறுதிச் சடங்கு செய்ய ஆயத்தமாயினர்.
மறுநாள் குழந்தையின் உடல் அருகிலிருந்த சர்ச்சுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஒரு சிறிய மரத்தினால் ஆன சவப்பெட்டியில் குழந்தை வைக்கப்பட்டு அந்தப் பெட்டியை நான்கு நாற்காலிகள் மேல் சீராக வைத்தனர்.
இறுதிச் சடங்கு ஆரம்பமாக இருந்தது.
சில விநாடிகள் முன்பாக குடும்ப உறுப்பினர் சவப்பெட்டியின் மூடியைத் திறந்து கடைசி நிமிடமாக எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்தார்.
அப்போது அருகிலிருந்த நகர போலீஸ் இன்ஸ்பெக்டரான ஹெய்டில் டீலான் (Inspector Heidil Teelan) குழந்தையின் தலை அசைவது போல இருக்கிறதே என்று நினைத்தார்.
உடனே குழந்தை வெளியே எடுக்கப்பட்டது.
குழந்தையின் நாடித்துடிப்பு சரிபார்க்கப்பட்ட போது அது உயிருடன் இருப்பது தெரிய வந்தது.
அவ்வளவு தான், உடனே குழந்தைக்கு சிறிது தண்ணீர் அளிக்கப்பட்டது, நேராக மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. குழந்தை நலமாக இருப்பதாக மருத்துவ மனையில் டாக்டர்கள் தெரிவித்தனர்.
பின்னர் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்ட குழந்தை உயிருடன் இருந்தது, நன்கு கவனித்துக் கொள்ளப்பட்டது.
பிலிப்பைன்ஸ் மீடியாவில் பேட்டி அளித்த டீலான், “குழந்தை நலமாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.
இதைப் படிக்கும் போது பராகுவேயில் நடந்த இன்னொரு சம்பவமும் நினைவுக்கு வருகிறது.
இது 10-9-2009 தேதியிட்ட The Sunday Telegraph பத்திரிகையில் வந்த செய்தியாகும்.
ஜோஸ் அல்வரேங்கா (Jose Alvarenga) என்பவர் ஆசங்ஷன் (Asunction) என்ற பராகுவே (Paraguay) தலை நகரில் தனது மனைவியை பிரசவத்திற்காக அட்மிட் செய்திருந்தார். பிரசவத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை பிறந்தவுடன் இறந்ததாகக் கூறிய மருத்துவ மனை அதிகாரிகள் அவரிடம் குழந்தையைத் தந்தனர்.
அது ஒரு தற்காலிகமான சவப்பெட்டியில் வைக்கப்பட்டு வீட்டுக்கு நான்கு மணி நேரம் கழித்து எடுத்துச் செல்லப்பட்டது.
சிறிது நேரம் கழித்து சவப்பெட்டியைத் திறந்து பார்த்த குழந்தையின் தந்தை அது மூச்சு விடுவதைப் பார்த்தார்.
உடனே அவர் ஆஸ்பத்திரிக்கு குழந்தையைக் கையில் தூக்கிக் கொண்டு ஓடினார்.
குழந்தையை சோதித்த டாக்டர்கள் குழந்தை உயிருடன் இருப்பதாகத் தெரிவித்தனர்.
இது போன்ற அதிகாரபூர்வமாக பத்திரிகையில் வெளியிடப்பட்ட சம்பவங்கள் உள்ளன.