Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Part 30; Item 180 (Egyptian ‘Ba’ in Akananuru)
180
Akananuru verse113 composed by Kalladanar (kallaadanaar) gives us an interesting simile which is found in Valluvar’s Kural 338 and Egyptian Book of the Dead
Ancient Egyptians called a bird with human head BA. It is the symbol of soul. Valluvar and Kalladanar also compared the soul or life breadth to a bird. When a man dies it flies away from the cage, that is human body.
அறுதுறை அயிர் மணற் படுகரைப் போகி,
சேயர்’ என்றலின், சிறுமை உற்ற என்
கையறு நெஞ்சத்து எவ்வம் நீங்க,
அழாஅம் உறைதலும் உரியம்-பராரை
அலங்கல் அம் சினைக் குடம்பை புல்லெனப்
புலம் பெயர் மருங்கில் புள் எழுந்தாங்கு,
மெய் இவண் ஒழியப் போகி, அவர்
செய்வினை மருங்கில் செலீஇயர், என் உயிரே— அகநானூறு 113
The disembodied human soul is depicted as a bird with a human head. It was other way round in pre- historic drawings. The soul flew away with a bird head and human body.
***
Tiru Valluvar in Kural 338 says,
குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு— குறள் 338
The nexus between the soul and the body is as between the fledgling bird
And its erstwhile nest, from which it flies away -338
Earth is a temporary abode for the soul in its passage through eternity.
Dr.S M Diaz ( D I G of Police) in his excellent book on Tirukkural compared it with Longfellow’s poem Slave’s Dream:
For death had illumined the land of sleep
And his lifeless body lay
A worn out fetter, that the soul
Had broken and thrown away.
And in Bhagawad Gita, Lord Krishna gave us another comparison,
वासांसि जीर्णानि यथा विहाय
नवानि गृह्णाति नरोऽपराणि |
तथा शरीराणि विहाय जीर्णा
न्यन्यानि संयाति नवानि देही || B G 22||
vāsānsi jīrṇāni yathā vihāya
navāni gṛihṇāti naro ’parāṇi
tathā śharīrāṇi vihāya jīrṇānya
nyāni sanyāti navāni dehī (BG.2-22)
Translation
Bhagavad Gita 2.22: As a person sheds worn-out garments and wears new ones, likewise, at the time of death, the soul casts off its worn-out body and enters a new one.
****
181
In Akam verse 83, Kalladanar described the forest in the Venkatam Hills controlled by chieftain Pulli. The hunters living there captured an elephant calf and tied it in front of the toddy shop in the village. When this male calf grows as an adult they get good money through its tusks.
***
182
In Akam verse 199, we get some important historical details. Poet reports two scenes from the forest. In the gusty winds, the white flowers from the white Kadampa trees fall on the ground and the thirsty elephants run for them mistaking them for rain drops or hail storm.
Another picture drawn by the poet is wild dogs attacking the herds of deer. After that, the male deer calling their dear ones who ran away fearing the attack. This is the voice the hunters use to catch the deer. It is described by Adi Shankara and others.
Vaakai Paranthalaai Battle
The historical account is about a Chera King called Kalankai Naarmudich Cheral . he defeated Nannan, a chieftain, and recovered the lost land. Chera king’s forefathers had lost them to Nannan
Here we get some interesting details. The place where the battle took place is known as Perunthurai and Vaakaip Paranthali. Since Nannan hd Vaakai Tree as his symbol that was destroyed by the Chera King That Vaakai tree was covered with God!
We are told by another Sangam book Pathirup Paththu that the Chera king was called KalamkaaiNaarmudich cheral because at the tie of coronathion he did not have his propwer crown. So he was crowned with a fibre crown and with agarland of Kalam Kai
In Akam verse 171, we see bears climbing the Iruppai trees and consumed its flowers because the hunters chased them away.
***
184
Lizard Omens, Predictions
Tamils believe in Lizard Astrology . They listen to the clicks of house lizards and find out whether it is good or bad. It is based on the direction of the lizard voice, tee number of clicks etc. Even today Tamil almanacs have this lizard omens. In another verse we even read that a boar went back into its cave because it heard negative signs. In Akam verse, the woman in the house listens to the lizard clicks and feels hay. She hopes that her lover would return soon from his foreign trip.
In describing some natural sceneries in the forests, the poets indicate hidden meanings. For instance, if a male and female animal enjoy life in the forest, it reminds the traveller about his wife or lady love in the house.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
20-8-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!
உலகின் அதிசய இடங்கள்!
அதிசயமான நினைவுச்சின்னப் பள்ளத்தாக்கு!
(MONUMENT VALLEY)
ச. நாகராஜன்
உலகின் மிக அதிசயமான நினைவுச்சின்னப் பள்ளத்தாக்கு இருக்கும் இடம் எது தெரியுமா?
உடா-அரிஜோனா எல்லையில் அமைந்திருக்கும் நினைவுச்சின்னப் பள்ளத்தாக்கு (MONUMENT VALLEY) தான் அது!
இருபது கோடி வருடங்களுக்கு முன்னால் சிவப்பு மணல் கொண்ட பாலைவனமாக இது இருந்தது. காலப் போக்கில் கடல் நீர் இங்கு புகவே மணல் எல்லாம் அழுத்தமடைந்து களிமண் பாறையாக ஆனது. ஆறரைக் கோடி வருடங்களுக்கு முன் இது அழகிய மணல் பரப்பாக ஆனது.
விளைவு, பிரம்மாண்டமான மிகக் கெட்டியான மணல் சிகரங்கள் ஆங்காங்கே உருவாயின. தூண்களாக வானளாவி நிமிர்ந்து நின்ற இவைகள் வண்ண வண்ணமாகத் தோற்றமளித்தன. இவற்றில் பலவற்றின் உயரம் நம்ப முடியாத ஆயிரம் அடி உயரம் ஆகும்.
இதைப் பார்த்த பிரபல அமெரிக்க எழுத்தாளரான ஜேன் க்ரே (Zane Grey 1875-1939), மஞ்சளும், இளஞ்சிவப்பும் கலந்த, தூரத்தில் உள்ள உலகம் என்று வர்ணித்தார்.
ஆங்காங்கே எழுந்து நிற்கும் இந்த நினைவுச் சின்னப் பள்ளத்தாக்கைப் பார்த்த ஹாலிவுட் டைரக்டர்கள் சும்மா இருப்பார்களா, என்ன?
25 படங்களுக்கு மேலாக இங்கு படப்பிடிப்பு நடந்திருக்கிறது.
அனைத்தும் வெற்றிப் படங்களாக ஆயின.
அமெரிக்க லெஜண்ட் டைரக்டரான ஜான் ஃபோர்ட் எடுத்த ஸ்டேஜ்கோச் (1939) உள்ளிட்ட படங்கள் அபார வெற்றியைப் பெற்றன.
இதன் வரலாறு பிரமிப்பூட்டும் ஒன்று.
இங்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் அரிஜோனா- உடாவைச் சேர்ந்த இந்தியப் பழங்குடியினர் சிறு சிறு ஊர்களை அமைத்தனர். செங்கல்லாலும் களிமண் பூசப்பட்டவையாயும் உள்ள வீடுகளில் அவர்கள் வசிக்கலாயினர். இவர்கள் அனஸாஜி (ANASAZI) இந்தியர்கள் என்று அழைக்கப்பட்டனர். அனஸாஜி என்றால் பழங்காலத்தவர் என்று அர்த்தம். பாலைவனத்தில் கால்வாய்கள் வெட்டி விவசாயம் செய்ய ஆரம்பித்தனர் இவர்கள்.
அமெரிக்க இந்தியர்கள் கூட்டம் கூட்டமாக ஆடுகளையும். செம்மறியாடுகளையும் வளர்த்து இதை குடியிருப்புப் பகுதியாக ஆக்கினர். டர்க்காய்ஸ் கற்களைக் கொண்டு இவர்கள் வியாதிகளைப் போக்கினர். மணலில் இவர்கள் போட்ட சித்திரங்கள் அதிசயமாக நோய்களைத் தீர்த்தது.
நவாஜோ இந்தியர்கள் என்று பெயரிடப்பட்ட பூர்வ குடியினர் அருகிலிருந்த பிரதேசங்கள் மீது அடிக்கடி போர் தொடுப்பதில் ஈடுபட்டனர். அங்கிருந்த மெக்ஸிகோ மக்களும், வெள்ளைக்காரர்களும் இதனால் பெரும் தொந்தரவுக்குள்ளாயினர். 1859ல் அமெரிக்க ராணுவம் இங்கே நுழைந்து அனைத்தையும் ஒழுங்கு படுத்தியது. நவாஜோ இந்தியர்கள் ராணுவத்திடம் சரணடைந்தனர். 1874ல் தான் பிடித்து வைத்திருந்த பல பகுதிகளை ராணுவம் இவர்களிடம் திருப்பிக் கொடுத்தது.
இரண்டாம் உலகப் போரின் போது ஒரு அதிசயமான கண்டுபிடிப்பு இங்கு நிகழ்ந்தது. வனடியம் (VANADIUM) என்ற அபூர்வமான தாதுப்பொருள் இங்கு ஏராளமாக இருப்பது தெரியவந்தது. இது எஃகு மற்றும் இரும்பை வலுப்படுத்தும். விமானக் கலப்பு உலோகங்கள், அணு உலை தயாரிப்பிற்கு இது பெரிதும் உதவும். போதாதற்கு இங்கு யுரேனியமும் கிடைத்தது.
ஆகவே இது முக்கிய பகுதியாக இன்று திகழ்கிறது.
இங்கு வெள்ளியும் டர்க்காய்ஸ் கல்லும் அபரிமிதமாகக் கிடைக்கவே நவாஜோ இந்தியர்கள் இவற்றைப் பதித்து கம்பளங்களையும் விரிப்புகளையும் தயாரிக்க ஆரம்பித்தனர். ஆனால் ஒவ்வொரு தயாரிப்பிலும் நிச்சயம் ஒரு குறை இருக்கும்; இருக்க வேண்டும்! ஏனெனில் குறை இல்லாது பூரணமாக இருக்கும் ஒரு தயாரிப்பானது அதைச் செய்தவரின் ஆயுளைப் பறித்து விடும் என்பது இவர்களது நம்பிக்கை.
இங்குள்ள கற்றாழைகள் பல கிளைகளுடன் ஐம்பது அடி உயரத்திற்கு வளரும்; பார்ப்பதற்கே அழகாக இருக்கும்.
இங்குள்ள டோடம் கம்பம் என்பது(TOTEM POLE) 500 அடி உயரமுள்ளது. சூரியாஸ்தமனத்தில் 35 மைல் நீளத்திற்கு அதன் நிழல் விழுகிறது.
பார்க்கக் கண்கொள்ளா இந்த அதிசயத்தைப் பார்க்கப் பயணிகள் திரளுவதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?
உலகின் மகத்தான அதிசயங்களுள் இந்தப் பள்ளத்தாக்கு தாதுப் பொருள்களால் விலை மதிப்புடையது; சரித்திரத்தால் பழமையானது; அதிசயங்களால் பிரமிக்க வைப்பதும் கூட!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
அதர்வ வேதம் –
அதர்வண வேதம் என்றும் சொல்லுவார்கள்; நான்குவேதங்கள்- ருக், யஜுர், சாமம் அதர்வண வேதம் ஆகும். இந்த நாலாவது வேதத்தில் 750 துதி களில் ஆறாயிரம் மந்திரங்கள் உள்ளன. மருத்துவம், மந்திர-தந்திர தாயத்துக்கள், காதலில் வெற்றி பெற, செல்வத்தையும் அதிகாரத்தையும் பெற, எதிரிகளை ஒழிக்க, மூலிகைகளை தாயத்துகளைப் பயன்படுத்தி ஆரோக்கியம் அடைய இதில் மந்திரங்கள் உள்ளன.
இதிலுள்ள பூமி சூக்தம் ஒரு அற்புதமான துதி. அதில் விஞ்ஞானம் புவியியல் சுற்றுப்புறவியல், இயற்கைப் பாதுகாப்பு, பூமாதேவியின் வருணனை ஆகியன உள்ளன , அதர்வ வேதம் இருபது காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
A for Atharva Veda
Vedas are four: Rik, Yajur, Sama and Atharva. The Fourth Veda Atharva Veda is divided into 20 books (Kanda). Atharva Veda consists of approximately 750 hymns and they have around 6000 verses. One sixth of this veda is from the rig veda. It has mantras medicines, talismans. There are curses against enemies. There are also mantras for the attainment of wealth or power, for the downfall of enemies and for the success in love affairs.
Bhumisuktam in the Athava Veda is a brilliant hymn with lot of geographical, environmental, natural and geological facts.
***
புஜங்கம்- பாம்பு ஆதிசங்கரரின் சுப்ரமணிய புஜங்கம் மிகவும் புகழ்பெற்றது . இந்தத் துதியை அவர் பாம்பு செல்லும் நடையில் எழுதியுள்ளார். மேலும் பாம்பு சுப்ரமண்யர் படத்திலும் மயிலின் காலடியில் இருக்கும். புலன்களின் போக்கு பாம்பு போன்றது அதைக் கட்டுப்படுத்துவது மயில் என்றும் சொல்லலாம்
Bhujangam – it means snake. Adi Shankara’s Subrahmanya Bhujangam is very popular and it is written in a metre that is similar to the movement of a snake. Moreover Lord subrahmnya is portrayed with snake and its enemy peacock.
***
பிக்ஷா
பிச்சை என்னும் தமிழ்ச் சொல்லும் BEG /பெக் என்னும் ஆங்கிலச் சொல்லும் பிக்ஷா என்னும் ஸம்ஸ்க்ருத்ச் சொல்லிலிருந்து பிறந்தது குருகுலத்தில் படிக்கும் மாணவர்கள் நாள்தோறும் காலையில் வீடுகளுக்குச் சென்று பவதி பிக்ஷாம் தேஹி என்று குரல் கொடுத்தால் தாய்மார்கள் அன்று சமைத்த உணவினையோ அரிசியையோ அளிப்பார்கள் .புத்த மத சன்யாசிகளும் இந்துக்களை பின்பற்றியதால் அவர்களை பிக்ஷுக்கள் என்று அழைத்தார்கள்.
பிக்ஷாடனர்
பிக்ஷாடனர் என்பது சிவ பெருமானின் கோலங்களில் ஒன்று. பிரம்மாவின் அஹம்காரம் என்னும் தலையைக் கிள்ளிய சிவ பெருமானின் கையில் அது ஒட்டிக்கொண்டது. இதை பிரம்ம கபாலம் என்பார்கள் .அத்துடன் அவர் நிர்வாண கோலத்தில் பிச்சை எடுத்து தனது பாவத்தைப் போக்கிக் கொண்டார். இன்னும் ஒரு பொருள்- இது சிவ பெருமானின் பணிவினைக் காட்டும் செயல்
2) Anything given as alms, alms; भवति भिक्षां देहि (bhavati bhikṣāṃ dehi).
In the olden days students in the Gurukula schools must visit houses and beg for food with the request (bhavati bhikṣāṃ dehi).
English word BEG and Tamil word Pichchai are derived from Sanskrit Bikshaa.
**
Bhikshatana, the wandering mendicant form of Shiva, symbolizes the renunciation of worldly attachments and the transcendence of ego. As the supreme beggar, he embodies humility and the pursuit of spiritual liberation.
Bhikshatana is typically depicted as a youthful, nude, and alluring figure, adorned with minimal ornaments such as garlands of bones or snakes. He is often shown holding a begging bowl made from Brahma’s skull (Kapala) in one hand, and a staff (Danda) in the other. His hair is usually matted, and his body is smeared with ashes, signifying his ascetic nature. The iconography often portrays him in a dynamic, wandering pose, with a mischievous or playful expression, highlighting the paradoxical nature of his asceticism and charm. Sometimes, Bhikshatana is depicted accompanied by ganas (attendants of Shiva), animals, or women representing the illusionary temptations of the world.
Bhikshu
Buddhist monks also followed Hindus and begged for their foods and they were called Bhikshus.
***
பகவதி பார்வதியின் இன்னும் ஒரு பெயர் கேரளத்தில் தேவிக்கு இந்தப் பெயர் வழங்கப்படும் .கன்னியாகுமரியில் உள்ள தேவிக்கும் பகவதி அம்மன் அம்மன் பெயர்.
Bhagavathy
Parvathi’s another name. In Kerala temples she is called Bhagavathy. Famou Devi temple in Kanyakumari I also a Bhgavathy temple.
***
பாரதி
சரஸ்வதியின் மற்றொரு பெயர் தமிழ்நாட்டில் புகழ் பெற்ற கவிஞருக்கும் பாரதி இன்று பெயர் . முழுப்பெயர்- தேசீய கவி சுப்ரமணிய பாரதியார்.
Bharati
Another name of Sarasvati. In Tamil Nadu, most famous modern poet is also called Bharati. His full name is Subrahmanya Bharatiyaar
***
பக்தி இறைவனிடத்தில் செலுத்தும் அன்பு; இதை ஆடல் பாடலில் பூஜை முதலியவற்றின் மூலம் செய்வார்கள்
Bhakti
Devotion in English; devotees show their love and affection towards God by singing and dancing repeatingHis/Her names or hymns .
***
பஜனை
இறைவனின் நாம சங்கீர்த்தனம். ஒருவர் பாடிய பின்னர் மற்றவர்கள் இறைவனின் நாமத்தை சொல்வார்கள். காலையிலும் மாலையிலும் தெருக்களில் பஜனை செய்வதும் மடங்களில் வீடுகளில் செய்வதும் உண்டு. மார்கழி மாதத்தில் இது அதிகம். கார்த்திகை மாதத்தில் ஐயப்ப பக்தர்கள் பஜனை செய்வார்கள்.
Bhajan
Devotional singing. One person says the names of God and the people gathered repeat it in a rhythm. It is done in houses, Mutts and temples on a regular basis. In the olden days devotees do it while going round the town.
Even now it is done during the month of Maarkazi/ Maargaseersha in Tamil Nadu. Ayyappa devotees do it during the month of Kartika.
***
பூத- பவ்ய- பவத் – நாம எண்290
கடந்த காலத்தில் நடந்தது, இனி வரப்போவது, இப்போது நிகழ்வது ஆகிய அனைத்திற்குமிறைவன் என்பது பொருள்.
நானே காலம் என்றும் பகவத் கீதையில் கண்ணன் சொல்கிறான். இறைவன் என்பவன் காலத்திற்கு அப்பாற்பட்டவன். காலத்திராயாதீதஹ – என்று வேதம் சொல்கிறது.
பூத காலம் – இறந்த காலம்; பவ்ய காலம்- நிகழ் காலம்; பவத் காலம்- வருங்காலம் என்பது சம்ஸ்க்ருத இலக்கணம்.
Bhuta Bhavya Bhavat Prabhuh
The fourth name in the Shri Vishnu Sahasranama Stotram is Bhuta-Bhavya-Bhavat Prabhu. Bhuta means the past, bhavya means the future, and bhavat means the present. It means God is beyond the limits of Time.
***
ப்ருகு முனிவர் சப்த ரிஷிகளில் ஒருவர் முனிவர் . அவர் ஸ்தாபித்த கோத்ரம் பார்கவ கோத்ரம்; அதில் ஜமதக்கினி, பரசுராமர் போன்றோர் தோன்றினார்கள்
Bhrigu – one of the celebrated Seven seers, sapta Rishis. He is the founder of Bhargava gotra/clan in which was born Jamadagni and Parasurama.
***
போகவதி – நாக லோகத்தின் தலைநகரம். நாகர்கள் பாதாள லோகத்தில் வசிப்பதாகவும் அவர்களுடைய பாதாள லோகம் பூமியின் கீழ்ப்பகுதியில் உள்ளதாகவும் புராணங்கள் சொல்கின்றன
Bhogavati- capital city of sub terranean Naga loka- abode of people of Naaga race
***
போஜனம் இதன் பொருள் சாப்பாடு எடுத்துக்காட்டு- பிராமணபோஜனம்.
Bhojanam means full meal
***
போகம் என்றால் அனுபவித்தல்
Bhogam- Enjoyment
***
போதனை- புத்திமதி; அறிவுறுத்தல். கிருஷ்ணரின் போதனைகள் பகவத் கீதையில் உள்ளது புத்தரின் போதனைகள் தம்ம பதத்தில் இருக்கின்றன.
Bhodana- Teachings of a saint.
bōdhana (बोधन).—n (S) Explaining or making known; teaching or declaring; indicating or pointing out: also informing or instructing; directing or counselling; apprizing or arousing; making acquainted with or aware of.
2 S Awakening.
Bhagavad Gita contains the teachings of Lord Krishna; Dhammapada contains the teachings of Buddha.
***
புத்தர்
சித்தார்த்தர் கௌதம புத்தர் இன்று சொல்லப்படும் ஞானி; இவரை ஜெயதேவர் அஷ்ட பதிகளில் விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்றாக சேர்த்துவிட்டார்.
Buddha
Born as Siddhartha, he became Buddha (enlightened) under a pipal tree. Jeyadeva made him one of the Avatars of Lord Vishnu.It is in his ashtapathi songs in Gita Govindam.
***
போதம் அறிவு; ஆத்ம போதம் ஆதிசங்கரர் எழுதியது தன்னைப் பற்றிய அறிவு என்பது பொருள்.
Bodham- Knowledge. Adi Shankara’s Atma Bhodam is a famous text in 68 verses.
***
போகர் -18 சித்தர்களின் ஒருவர்; மருத்துவ மருத்துவ நூல்கள் இவர் பெயரில் உள்ளன. பழனியில் இவர் சமாதி ஆனார்.
Bhogar- One of the 18 Siddhas. He is attributed with many medical treatises. He attained Samadhi in Palani in Tamil Nadu.
To be continued…………………..
Tags-HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL, இந்துமத கலைச்சொல் அகராதி– Part 12
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Part 23
மானசா தேவி வழிபாடு
வங்காளத்திலும் அருகிலுள்ள பீஹார், அஸ்ஸாம் மாநிலங்களிலும் பாம்புகளுக்கு அதி தேவதையான மனசா அல்லது மானசா தேவியை வழிபடுகிறார்கள்; பார்வதியின் இன்னும் ஒரு உருவம் மனசா தேவி;. விஷக் கடிகளிலிருந்து விடுபட இந்த தேவி அருள்புரிகிறாள் . ருக் வேதத்தில் பத்தாவது மண்டலத்தில் கவிதை புனைந்த பெண் புலவரின் பெயர் சர்ப்ப ரஜினி ;அதாவது நாக ராணி . சிந்து சமவெளி முத்திரைகளில் ஒன்றில் இவள் இருக்கிறாள்; இரு புறமும் பாம்புகள் வழிபடும் தேவி அல்லது ஒரு தெய்வம் அந்த முத்திரையில் உள்ளது; சபரி மலை வரை இன்றும் நாக தேவதை வழிபடப்படுகிறாள். மகாராஷ்டிரம், கர்நாடக மாநிலங்களில் நாக பஞ்சமி தினத்தன்று பாம்புகளையே வழிபடுகிறார்கள் அது மட்டுமல்ல, இந்து மதத்தில் பாம்புகளுடன் எல்லா தெய்வங்களும் ஏதேனும் ஒருவிதத்தில் தொடர்புடைவர்கள்தான்; மேலும் பிராமணர்கள் தினசரி சந்தியா வந்தனத்தில் நர்மதாயை நமஹ என்ற மந்திரத்தில் பாம்புகளையும் ரிஷிகளான ஜரத் காரு, ஆஸ்தீகர், மன்னரான ஜனமேஜயர் ஆகியோர் பெயரையும் சொல்லி சந்தியா வந்தனம் செய்கிறார்கள். ஆக ரிக் வேத காலத்தில் துவங்கிய பாம்பு வழிபாடு 5000 ஆண்டுகளாக நீடித்து வருவது கண்கூடு கிரேக்கநாட்டிலும் பாம்புரணி சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
விஷ்ணு படுத்திருக்கும் அனந்தன் அல்லது வாசுகி என்னும் நாகத்தின் சகோதரி மனசாதேவி.
மானசா தேவி வழிபாட்டில் கள்ளிச்செடி
மானசா தேவி வழிபாடு தற்போது இந்தியாவின் கிழக்குப் பகுதியில் அதிகம் காணப்படுகிறது பாம்புகளின் ராணி அவள்.
சக்தி தேவியை இந்த ரூபத்தில் வழிபட்டால், பாம்புகளிடலிருந்து ஆபத்து வராது என்பது நம்பிக்கை. பாம்புகளின் தலைவியான மானசா தேவி எப்படிப் பெண்களைக் காப்பாற்றினாள் , குழந்தைகளை விஷக்கடியிருந்து காப்பாற்றினாள் என்று ஊருக்கு ஊர் பல்வேறு கதைகள் இருக்கின்றன.
இவளை விஷ ஹரி (விஷத்தைக் கொல்லுபவள் ) என்றும் நூல்கள் போற்றும் அவர் காஷ்யப முனிவரின் மகள் ;வாசுகியின் சகோதரி மற்றும் ஜரத் காரு முனிவரின் மனைவியுமாவார்.
நாக தேவதையான மானசா தேவியைப் பற்றிய கதை என்னவென்றால் ஒரு பெண்மணியின் கணவர் இந்த தேவியை வழிபடாமல் உதா சீனம் செய்தார் என்றும் அவருடைய குழந்தைகள் அடுத்தடுத்து இறந்தவுடன் தேவியை வழிபட்டார் என்றும் மனசா தேவி அவர்களனைவரையும் காப்பாற்றினாள் என்றும் சொல்கிறது.
மானசா தேவி. ஏழு நாகபாம்பை கொண்ட விதானத்தின் மீதுள்ள தாமரையின் மீது அமர்ந்திருப்பார். சில நேரம் தன் மடியில் தன் மகன் ஆஸ்திகனை வைத்திருப்பதைப் போலவும் இருப்பார்.
நாகர் என்ற பெயரில் பாம்பு உருவத்துடன் சிலைகள் இருப்தை நாம் தமிழ் நாட்டின் பெரும்பாலான கோவில்களில் காண்கிறோம் .இதில் வினோதமான விஷயம் என்னவென்றால் கள்ளி வகைச் செடி (Cacti) களையும் பாம்பு தேவியாக வழிபடும் வழக்கமாகும் இந்த வழக்கம் வங்காளத்தில் இன்றும் இருக்கிறது. மானசா தேவிக்கு அதிகமான கோவில்கள் இருப்பது வங்காளம் மற்றும் அதை ஒட்டிய ஒரிஸ்ஸா, அஸ்ஸாம் மாநிலங்களாகும் . ஆயினும் மானசா தேவி கோவில்கள் ஆந்திரம் முதல் ஹரித்வார் வரை காணப்படுகின்றன.
இடதுபுறம் கருடன்; அதன் தலையில் நாமம்! வலது புறம் நாகம்; இது எகிப்தின் கண் சின்னம்
சிந்து வெளி முதல் சபரிமலை வரை பாம்பு வழிபாடு
அதிசயச் செய்தி: சுமேரியாவில் தமிழ்?
ரிகவேதத்தில் 27 பெண் கவிஞர்களின் பெயர்களைக் காணலாம். அவர்களில் ஒருவர் பெயர் சர்ப்பராக்ஞி (பாம்பு ராணி). சர்ப்பராக்ஞீ என்ற தெய்வமும் தைத்ரீயம் முதலிய பிராமண நூல்களில் வருகிறது. தைமத என்ற பாம்புத் தெய்வத்தின் பெயரும் இருக்கிறது. இதை டியாமத் என்ற பாம்புத் தெய்வமாக பாபிலோனியர்கள் வணங்கினர். ஆக வேத கால தெய்வங்கள் 5000 ஆண்டு பழமை உடையவை என்பது நிரூபணம ஆகிவிட்டது.
அதர்வண வேதத்தில் வரும் அலிகி, விலிகி என்ற சொற்களுக்கு பொருள் விளங்காமல் இருந்தது. வேதங்களைப் பற்றி ஆராய்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் பால கங்காதர திலகர் வேதங்கள் 6000 ஆண்டுப் பழமை உடையவை என்று நிரூபிக்கும் புத்தகத்தில் அலிகி, விலிகி ஆகியன சம்ஸ்கிருதம் அல்ல, அவை அக்கடியன் மொழிச் சொற்கள் என்று எழுதி இருந்தார். இதை இப்போது ஆராய்ந்த டாக்டர் பகவத்சரண் உபாத்யாயா, டாக்டர் நாவல் வியோகி முதலானோர் இந்தச் சொற்கள் கி.மு 3000இல் ஆட்சி செய்த ஆலால, வேலால (தமிழ் பெயர்களாகவும் இருக்கலாம்) என்ற இரண்டு அசீரிய மன்னர்கள் என்று கண்டுபிடித்தனர். பாம்பு விஷத்துக்கும் நாம் ஆலகாலம் என்கிறோம். இவைகள் உண்மை என்றால் அதர்வண வேதத்தின் காலம் 5000 ஆண்டுகளுக்கு முன் என்றாகிவிடும். மொழி இயல் ரீதியில் இதற்கு மிகவும் முற்பட்டது ரிக் வேதம். உலகின் மிகப் பழைய மத நூல். ஆகவே அது 6000, 7000 ஆண்டுகளுக்கு முந்தியது என்று திலகர் எழுதியது சரி என்றாகிறது.
சுமேரியாவின் வரலாற்றை எழுதிய பெரோருஸ் என்ற கிரேக்க ஆசிரியர் ஆதிகால மன்னர்களின் பெயர்களை அளிக்கிறார். ஊர்த்வரேதஸ் (ஒட்டரடெஸ்) மற்றும் துமுசி என்ற பெயரில் இரண்டு மன்னர்கள் சுமேரியாவை ஆண்டனர். ஒரு துமுசி இடையர், மற்றொரு துமுசி மீனவர். ராமன், கண்ணன் ஆகிய மன்னர்களை நாம் எப்படி தெய்வம் ஆக்கினோமோ அப்படி இவர்களை அவர்கள் தெய்வ நிலைக்கு உயர்த்திவிட்டார்கள். இவர்கள் தமிழர்களாக இருக்கலாம். ஏனெனில் துமுசி என்பதை தமிழி என்று வாசிக்கும்படி ஆங்கிலத்தில் எழுதபட்டிருக்கிறது. அதைப் பிற்காலத்தில் டம்முஸ் என்றும் சம்மட என்றும் பல வகையாக எழுதினர். டம்முஸ் என்பதும் தமிழன் என்பதை ஒட்டி வருகிறது.
இது தவிர சுமேரிய மொழிக்கு சிறிதும் தொடர்பில்லாத சுமுகன் என்ற தெய்வப் பெயரும் இருக்கிறது. இது விநாயகப் பெருமானைக் குறிக்கும் தூய சம்ஸ்கிருதச் சொல். பெரோரஸ் என்ற ஆசிரியரின் பெயரையும் வர ருசி என்றும் படிக்கலாம். அவர் சில மன்னர்களின் தலைநகரம் பத்தர்குரு என்று எழுதிவைத்தார். இந்த பத்தர்குரு புராணங்களில் மிகவும் போற்றப்படும் உத்தரகுரு ஆகவும் இருக்கக் கூடும்
—subham—
Tags– மானசா, மானசா, வங்காளம், சப்ப ரஜினி , பாம்பு ராணி , சிந்து சமவெளி முத்திரை, ரிக் வேதம், Hinduism through 500 Pictures in Tamil and English; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்- Part 23
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
29-8-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!
கீதையின் 12 கட்டளைகள்!
ச. நாகராஜன்
உலகின் ஆகப் பெரும் இதிஹாஸமான மஹாபாரதத்தின் ஒரு பகுதியாக அமைகிறது பகவத் கீதை. 700 அருமையான ஸ்லோகங்கள் கொண்டது இது.
ஆழம் காண முடியாத அற்புத மெய்ஞானத்தைக் கொண்ட கீதை, பகவான் ஶ்ரீ கிருஷ்ணராலேயே நேரில் அர்ஜுனனுக்கு உபதேசிக்கப்பட்டது.
காலம் காலமாக லக்ஷக்கணக்கானோரை ஊக்கி ஆன்மீக உயரத்தில் ஏற்றிய இதன் பெருமை வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.
கீதையில் சொல்லப்படும் முக்கியமான கட்டளைகள் பன்னிரெண்டு.
அவற்றைக் கீழே காணலாம்.
உத்தரேத் ஆத்மனாத்மானம் (அத்தியாயம் 6, ஸ்லோக எண் 5)
ஒருவன் தன்னைத் தானே உயர்த்திக் கொள்ள வேண்டும்.
ஆத்ம முன்னேற்றத்திற்கு ஒருவன் முயற்சி செய்து தன்னைத் தானே உயர்த்திக் கொள்ள வேண்டும்.
உத்திஷ்ட யசோ லபஸ்வ (அத்தியாயம் 11, ஸ்லோக எண் 33)
எழுந்திரு, புகழை அடை. வெற்றி பெறு.
எழுந்திரு. எதிரிகளை வென்று புகழை அடை என்ற கிருஷ்ணனின் உபதேசம் ஆழ்ந்த பொருளைக் கொண்டது. யசஸ் என்ற வார்த்தை ஆழ்ந்த அர்த்தத்தைக் கொண்ட வார்த்தை.
க்லைப்யம் மா ஸ்ம கம: (அத்தியாயம் 2, ஸ்லோக எண் 3)
பேடித்தனத்தை அடையாதே!
சோம்பேறித்தனம்,மயக்கம் ஆகியவற்றை உதறித் தள்ளு என்பது கிருஷ்ணனின் உபதேசமாக அமைகிறது.
கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசன (அத்தியாயம் 2, ஸ்லோக எண் 47)
கர்மம் செய்யத்தான் உனக்கு உரிமை உள்ளது. ஒரு போதும் அதன் பலனில் இல்லை.
மிக முக்கியமான தத்துவம் இங்கு உபதேசிக்கப்படுகிறது. வேலை செய், வேலை செய் – இதுவே உனக்குள்ள கடமை. அதன் பலனை எதிர்பார்க்காதே. \
மாம் ஏகம் சரணம் வ்ரஜ (அத்தியாயம் 18, ஸ்லோக எண் 66)
என் ஒருவனையே சரண் அடை.
அற்புதமான இந்த உபதேசம் கடைசியில் கிருஷ்ணரது இறுதி உரையாக அமைகிறது. இறைவனை சரண் அடைந்து விட்டால் மற்றதை அவன் பார்த்துக் கொள்வான்! நேரடியாக இறைவன் கூறும் இந்த உரை மனித குலத்தில் உள்ள ஒவ்வொருவருக்குமான உபதேசம் ஆகும்.
ந சாந்திம் ஆப்னோதி காமகாமி (அத்தியாயம் 2, ஸ்லோக எண் 70)
இன்பங்களை நாடும் இச்சை உள்ளவனுக்கு அமைதி கிட்டாது.
சம்சயாத்மா வினஷ்யதி (அத்தியாயம் 4, ஸ்லோக எண் 40)
சந்தேகப்படுபவன் அழிந்துபடுவான். சத்திய உரையில் சந்தேகம் கூடவே கூடாது.
ச்ரத்தாவான் லபதே ஞானம் (அத்தியாயம் 4, ஸ்லோக எண் 39)
சிரத்தை உள்ளவனுக்கு ஞானம் கிட்டும்.
சிரத்தை என்ற வார்த்தை ஆழ்ந்த பொருள் கொண்டது. உறுதியான நம்பிக்கையோடு இறைவனின் சொற்களை ஏற்று நடப்பவனுக்கு மெய்ஞானம் கிட்டும்.
ச்ரேயான் ஸ்வதர்மோ (அத்தியாயம்18, ஸ்லோக எண் 47)
ஒருவன் சொந்த தர்மத்தையே கடைப்பிடிக்க வேண்டும். இது அவனுக்கு வேண்டியதைத் தரும். .
ந ஹி கல்யாணக்ருத் கச்சித் துர்கதிம் (அத்தியாயம் 6, ஸ்லோக எண் 40)
எவன் ஒருவன் நல்ல காரியங்களைச் செய்கிறானோ அவனுக்கு துர்கதி என்பதே கிடையாது.
அவன் நல்லதையே அடைவான் – எப்போதும்! இது கிருஷ்ண பகவானின் வாக்குறுதி.
மாம் அனுஸ்மர, யுத்த ச (அத்தியாயம் 8, ஸ்லோக எண் 7)
என்னை நினை; யுத்தம் செய்!
அற்புதமான இறைவனின் இந்தக் கூற்று பலவித பிரச்சினைகள் நிறைந்த உலக வாழ்க்கையில் ஒருவன் எப்படி நடக்க வேண்டும் என்று சுட்டிக் காட்டுகிறது. அவனை நினைத்து பிரச்சினைகளோடு போராடு. அனைத்தும் தீரும் என்பதே அருளுரை.
மன்மனா பவ (அத்தியாயம் 9, ஸ்லோக எண் 34)
என்னவனாக ஆகு.
சுருக்கமாக பகவத் கீதையின் மொத்த சாரத்தையும் இந்த இரண்டு சொற்களில் அடக்கி விடலாம். கிருஷ்ணரது மனதிற்குப் பிடித்தவனாக ஆகி விடு. அத்தனை குணங்களையும் கொண்டு விடு என்பதே இதன் பொருள்.
இந்தப் பன்னிரெண்டு கட்டளைகளையும் ஒருவன் தினமும் மனதில் பதித்து அதன்படி நடப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
மிகுந்த ஆழ்ந்த அர்த்தங்கள் உள்ள இந்தக் கட்டளைகளே ஒருவனுக்கு இந்த உலகத்தில் அனுபவிக்க வேண்டிய சுகங்களைத் தரும். பரலோக முக்தியையும் அளிக்கும். இதில் ஐயமில்லை. ஏனெனில் இது இறைவனின் வாக்காகும்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Part 22
Snake Goddess Manasa Devi (manasaa)
Manasā (मनसा).—Name of a daughter of Kaśyapa, sister of the serpent king, Ananta, wife of the sage जरत्कारु (jaratkāru) and mother of the sage अस्तिक (astika); so मनसादेवी (manasādevī).
Indus Valley Seal of Sarpa Rajni (Rig Veda Poetess name in Tenth Mandala Hymn 189)
Snake Goddess is worshipped during Vedic time and in Harappan Civilization. She is also seen in Egypt, Greece and in the Middle East.
Manasa Devi is worshipped mainly in Bengal and adjacent states of Bihar and Assam. She is another form of Parvati, wife of Shiva.
Manasa is greatly revered in Bengal , where she is believed to ward off poisonous snakes. She is the daughter of Kasyapa and Kadru and sister of Ananta or Vasuki according to local legends. Lord Vishnu lies on the snake bed in the middle of milky ocean, and he is said to rest between cosmic emanations.
Manasa stands upon or is shaded by a seven headed snake. Her symbols or attributes are snake and water jar.
She is the wife of Jarat kaaru . she is also called Jagad gauri, Nityaa (eternal) and Visha -haraa. Visha haraa means one who has the special power of counter acting the venom of serpents.
Snake worship originated in India. All the words for snakes in ancient languages are derived from Sanskrit and Tamil (Naga-S/Nake, Sarpa- Serpent), Oviyar- Ophis, Uraga, Pannaga). All Hindu Gods and Goddesses have snakes as their ornaments. Egypt followed Hindus and we see snakes over the heads of Pharaohs. Snake and Garuda are seen with Vaishnavite Naamam symbol in Wedget/Udget .
***
Stories of Manasa Devi are told in different ways in Bengal. The gist of the stories is one gentle man ignored Manasa Devi worship and he lost his children due to snake bites. Ultimately they were saved through the worship of Mansa.
From Rig Veda, Indus Valley to Sabarimalai in Kerala, we see snake worship.
The greatest wonder is Brahmins worship snakes with reverence in daily oblation Sandhyavandana with a mantra beginning with Narmadaayai Namah….
(Mandhata’s son Purukutsa married Devi Narmada and the latter was the sister of Nagaas of Rasatala. Nagaas were afraid of Gandharvas as some six crore Gandharvas resided in Rasatala tormenting Nagaas by hunting their ‘Ratnas’(jewels) from their hoods. The Nagaas prayed to Bhagavan Vishnu and the latter assured that the son of Mandhata viz. Purukutsa would destroy all the Gandharvas at the instance of Narmada Devi. As professed, Purukutsa eradicated Gandharvas and the Nagaas gave a boon to Narmada that whosoever bathed in the River or even recited the following would be safe from ‘sarpa-visha’ or the poison of serpents; the relevant Shloka or stanza to be recited states:
(Devi Narmada! My salutations to you in the day or night, do safeguard me from the fear of Serpents and their poisonous bites!) The full mantra includes the names of great seers Jarat kaaru, Aastika and the King Janamejaya)
The Harappan seal with a goddess surrounded by snakes on either side shows Snake Goddess was worshipped from 2000 BCE or before that, because Nagaraani is in the Vedas as well.
***
Story of Manasa Devi (from old article)
Chand was a merchant who did not believe in the Goddess Manasa devi. As a result, he lost all his sons due to snake bites. But yet he was very obstinate and never paid reverence to the Goddess. He got one more son who was the apple of his eyes. He was still obstinate in not worshipping Manasa and Manasa Devi was also relentless and she bit his son on his wedding day in spite of his precautions. His newlywed wife Vehula did not allow his body to be cremated. She was fasting till her body became a skeleton but never stopped her prayers to Manasa. She begged to Manasa for the restoration of his husband’s life. At last Manasa relented and gave his life back.
It is the belief of many that a person supposed to be dead by a snake bite, really lives in a state of suspended animation for a long time after.
Bengalese plant a milky white plant (Euphorbia Lingularum) on these days on a raised mound of earth in the courtyards of their houses and worship Goddess Manasa Devi. They worship her to get immunity from snake bites or avoiding bitten by snakes. If anyone has died due to snake bite in the family all of them join in worship and they pour milk in the ant hills where snakes live.
Hindus, by not killing the snakes, the vital animal in the food production chain, increase the production of food grains. The snakes keep even frogs and toads in control which freely enters every home during rainy season.
Villagers don’t fear snakes even when it enters a house; they simply trap it in a box or pot and release it in the field. They know the value of it.
Manasa Devi
The serpent worship is universal. There is no ancient culture without a serpent God. Whether it is Egyptian or Mayan, Indus or Vedic, Minoan or Babylonian we see serpents with Gods and Goddesses. But Hindus are the only race in the world who maintains this culture until today. We have Naga panchami celebrations celebrated throughout India where live snakes are worshipped. Hindus respect Nature and Environment and use the natural resources to the minimum.
Snake Goddesses such as Manasa Devi and Naga Yakshi are worshipped in India. The Vedas has an authoress named as Serpent Queen. She was one of the 27 women poets of Rig Veda and her poem is in the Tenth Mandala (10-189). Her name is SARPA RAJNI (Serpent Queen)
We have two more references to this lady in Taitriya and Aitareya Brahmanas. Sarpa Vidya (science of snakes) is mentioned in Satapatha and Gopatha Brahmanas. (see Vedic Index of name and subjects by authors AB Keith and AA Macdonell, page 438 for more details).
Aligi is the name of a kind of snake in the Atharva Veda (V-13-7) and Viligi, another snake, is also mentioned in the same hymn. Earlier scholars like AA Macdonell and AB Keith mentioned them as snakes in their Vedic Index Volumes. Bala Gangadhara Tilak did lot of research and told us that these were from the Akkadian languages. He dated the Vedas to 6000 BC. Modern research by scholars Dr Bhagawatsharan Upadhyaya and Dr Naval Viyogi showed that they were not snakes, but kings of Assyria- Aligi (Alalu) and Viligi (balalu) of 3000 BC.
Garuda with Vaishnavite Naamam on head.(left); Snake/Naaga (on left); Eye in the middle . Egyptian Symbol Wedjet
Atharva Veda in Sumeria 3000 BC
Taimata is twice mentioned in Atharva Veda (V-13-66; V-18-4) as a species of snake according to Whitney and Bloomsfield. Once again, the old Vedic translations are wrong. Actually Taimata is nothing but Tiamat found in Babylonian literature as a Goddess. May be it is the corrupted form of Sanskrit DEVA MATA (Goddess).
More research shows many Sanskrit words in Sumerian and Babylonian literature such as Berorus (Vara Ruci), Ottaretas (Urdhwaretas), Mesopotamian god Dumuzi/Tammuz/Sammata (fish God). They are pure Sanskrit words. One and the same god was called in different names by different cultures at different times and that too in corrupted forms. When we read Sumerian names we have to remove prefixes Nan, Nin,Sin. They are equal to Sri, Sow etc. Future research will prove that they have migrated from India in the remotest time.
Naga Yakshi worshipped in all the Ayyappan temples including Sabarimalai and other goddess temples found in the Middle Eastern countries around 3000BC. We see them in Indus valley and the Vedas as well.
My conclusion can be summarized as follows:
1. Vedic translations of Aligi, Viligi and Taimata are wrong and they were all really people, may be people with snake totem (Nagas). 2. Since Atharva Veda mentions Kings who lived around 3000 BC, it must be dated around that period. Rig Veda is (linguistically) older than Atharva Veda. 3. We see snake gods or goddesses in all ancient cultures. In India, we see it from Vedic days. They are worshiped until today proving that Indian culture is the oldest living culture. 4. Last but not the least; such continuity is possible only when this worship originated in India. So we can safely conclude that Hindus went to different parts of the world taking their culture. Like we lost the whole of South East Asia after 1300 year Hindu rule, we lost the Middle East long before that.
Tamil Version follows…………..
To be continued……………………………..
Tags- Hinduism through 500 Pictures in Tamil and English; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்- Part 22 , Snake Goddess, Manasa devi, Alii, Viligi, Harappan, Rig Veda, Atharva Veda, Tiamath
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
பரணி
ஒரு நட்சத்திரம் ; இப்போதுள்ள 27 நட்சத்திர வரிசை அஸ்வினி, பரணி, கார்த்திகை, என்று துவங்குகிறது
Bharani – name of a star. The current 27 stars of hindu astrology begins with Asvini ,Bharani ,Krttika …………………..
***
பிருந்தாவனம்
இது கிருஷ்ணர் பிறந்து விளையாடிய இடம் கோகுலத்திற்கு அருகில் உள்ளது. இன்னும் ஒரு அர்த்தம் சன்யாசிகளை சமாதி அடைந்த பிறகு புதைத்து அந்த இடத்தில் துளசியை வளர்ப்பார்கள் அதற்கும் பிருந்தாவனம் என்று பெயர் பிருந்தா என்றால் துளசி.
Brindaavan– also spelt Vrindaavan- Forest near Gokula in Uttarpradesh. Brindaa means Tulsi ; holy basil plant. It was the play ground of Lord Krishna.
Another meaning- When an ascetic dies or attains Samaadhi, he is buried and not cremated. They grow a Tulsi/Brindaa plant there and it is called Brindaavanam. People visit such places and pay their respects.
***
பிரம்மச்சாரி
இது மாணவர் பருவம்; குருகுலத்தில் குருவின் காலடியில் அமர்ந்து வேதங்களை, சாத்திரங்களை கற்கும் காலம்; இதில் இருந்து வெளியேறிய பின்னர் அவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள். அதற்கு கிரகஸ்த ஆசிரமம் என்று பெயர். இந்துக்களின் நான்கு பருவங்களின் இது ஒன்று; பிரம்மச்சரியம், கிரக ஆசிரமம் வானப்பிரஸ்தம், சந்நியாயம் என்பன அந்த நான்கு கட்டங்கள்/ பருவங்கள்.
பிரம்மச்சர்யம் – பெண்களை நினையாதபடி வாழும், கல்யாணம் செய்து கொள்ளாமல், இருக்கும் நிலை
Brahmachaari- Student ; Brahmacharyam – Student life; being celebate ; remaining without marrying.
Boys go to teacher’s house, stay with him,and learn Vedas and Shastras/scriptures. After graduating they get married and that is called Grhastaasram. Hindus divied one’s life into four stages: Brahmacharyam, Grahastha Ashram, Vaanaprastham, and Sanyaasam
***
பிரம்மம்
பிரம்மம் என்பது கடவுளை குறிக்கும் அதில் ஆண் பெண் பெண் அலி இன்று வேறுபாடு இல்லை .
Brahman- God; no gender neither man, nor woman nor eunuch.
**
பிரம்மா என்பது மும்மூர்த்திகளில் ஒருவர் பிரம்மா. அவரு டைய தொழில் படைப்பு
Brahmaa- One of the Hindu Triad: Brahmaa, Vishnu, Sadasiva.
Brahmaa is the God of Creation.
**
Picture of Brahma
பிராமண என்பது ஒரு ஜாதியின் பெயர், ஆங்கிலத்தில் பிரம்மம் பிரம்மா, பிராமண, என்பதை எழுதுகையில் குழப்பம் இருக்கும். அறுதொழில் அந்தணர்.
பூசுரர் பிராமணர்களின் மற்றொரு பெயர்; அதாவது பூலோக தேவர்கள் ;பிராமணர்கள் நான்கு ஜாதிகளின் முதன்மையான வர்ண த்தின அவர்களுக்கு அறுதொழில் உண்டு வேள்வி செய்தல், வேட்பித்தல், வேதத்தை ஓதுதல் ஓதுவித்தல் ((கற்றல் கற்பித்தல்)), தானம் வாங்குதல், தானம் கொடுத்தல் என்பன இதில் அடங்கும் .
Braahmana- A caste; Top of the Hindu Four fold Varna System: Brahma, Kshatriya, Vaishnav and Shudra.Brahmana has a six -fold duties. Priestly caste.
Bhu Surar- Devas on earth is another name for Brahmins.
Picture of a Brahman
**
பிரம்மஹத்தி என்பது பிராமணர்களை கொலை
செய்தால் ஏற்படும் பாவம் ஆகும். பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக பல கோவில்களில் இந்திரன் முதலானோர் வணங்கிய செய்தி புராணங்களில் இருக்கிறது.
Brahmahatti: One gets this SIN when one kills a Brahmin. Indra and many kings went to many shrines to get them released from this type of sin.
**
பிரம்ம ராட்சஸ் என்பது அகாலத்தில் உயிர்நீத்த பிராமணர்களின் ஆவி ஆகும்; அகாலம் என்றால் உரிய காலத்துக்கு முன்னே இறந்தவர்கள் இப்படி ஆவியாகத் திரிவார்கள்.
Brahma Rakshas (rakshasa)- If a brahmin dies by suicide or any other means before his actual life span, he roams like a spirit or ghost living on trees or in water sources.
**
புத்தி -அறிவு
Buddhi – Intelligence
***
புதன் ஒரு கிரகம்
Budha- A planet; Mercury.
***
பூதம்
ஐந்து இயற்கை சக்திகளை பஞ்ச பூதம் என்பார்கள். இன்னும் ஒரு பொருள்- சிவபிரானுடைய கணங்கள் ஆகும் இது தவிர பேய் பிசாசு ஆகியவற்றுடன் பூதத்தையும் சேர்த்து சொல்வார்கள்.
Bhuta
Natural element. Pancha Bhutas are Fire, Water, Air, Earth, Sky/vacuum
Also used for ghosts; another meaning- Shiva’s attendants; Bhuta kaala- Past tense.
***
பலிபீடம் என்பது கோவிலில் சுவாமிக்கு முன்னர் பலி கொடுப்பதற்காக உள்ள பீடம். இதில் சோற்றினால் ஆனா படைப்பினை நாள் தோறும் படைப்பார்கள்.
பொதுவாக கிராம தேவதைகளுக்கு வெட்டப்படும் ஆடு, (எருமை) மாடுகளை பலி என்பார்கள்
Bali Preetam
In the temples, cooked rice is offered on a stone in front of the shrine. Actually, it is meant for birds, insects and animals.
In the villages goats, sheep and other animals are also offered to God and they are called Bali.
***
புவனம் இதில் ஈரேழு = 14 புவனங்கள் இருக்கின்றன; மேலே ஏழு கீழே ஏழு ஆக மொத்தம் 14 புவனங்கள் உள்ளதாக புராணங்கள் கூறும். த்ரிபுவனம் என்று சொல்லும்போது மூன்றினை மட்டும் குறிப்பார்கள்:பூலோகம் புவர் லோகம் சுவர்லோகம் .
ஈரேழு 14 புவனங்கள் யாவை?
மேலேயுள்ள ஏழு புவனங்கள்:
பூர், புவர்,ஸ்வர், மஹர், ஜனஸ், தபஸ், சத்ய –இவை ஏழும் மேலே உள்ளன.
கீழேயுள்ள ஏழு லோகங்கள் அல்லது புவனங்கள் :-
அதல , விதல, சுதல தலாதல , மஹாதல ரஸா தல , பாதாள
Bhuvana
The universe is divided into fourteen planetary systems. Seven planetary systems, called Bhūr, Bhuvar, Svar, Mahar, Janah,Tapa,, Sathya lokas are upward planetary systems, one above the other. There are also seven planetary systems downward, known as Atala, Sutala, Vitala, Mahatala, Talatala, Rasaatala, and Pataala
A world, the number of worlds is either three, as in त्रिभुवन (tribhuvana) or fourteen; इह हि भुवनान्यन्ये धीराश्चतुर्दश भुञ्जते (iha hi bhuvanānyanye dhīrāścaturdaśa bhuñjate) Bhartṛhari 3.23 (see loka also);
cf. also अतलं सुतलं चैव वितलं च गभस्तिमत् । महातलं रसातलं पातालं सप्तमं स्मृतम् ॥ रुक्मभौमं शिलाभौमं पातालं नीलमृत्तिकम् । रक्तपीतश्वेतकृष्णभौमानि च भवन्त्यपि । पातालानां च सप्तानां लोकानां च यदन्तरम् । सुशिरं तानि कथ्यन्ते भुवनानि चतुर्दश (atalaṃ sutalaṃ caiva vitalaṃ ca gabhastimat | mahātalaṃ rasātalaṃ pātālaṃ saptamaṃ smṛtam || rukmabhaumaṃ śilābhaumaṃ pātālaṃ nīlamṛttikam | raktapītaśvetakṛṣṇabhaumāni ca bhavantyapi | pātālānāṃ ca saptānāṃ lokānāṃ ca yadantaram | suśiraṃ tāni kathyante bhuvanāni caturdaśa) || Vahni. P.; भुवनालोकनप्रीतिः (bhuvanālokanaprītiḥ) Kumārasambhava 2.45; भुवनविदितम् (bhuvanaviditam) Meghadūta 6..
To be continued…………………
Tags-HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL இந்துமத கலைச்சொல் அகராதி– Part 11
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
12-8-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!
MOTIVATION
பெரிய சிந்தனையாளராக ஆக 6 நிலைகள்!
ச. நாகராஜன்
ஒரு விஷயத்தில் முடிவெடுக்க வேண்டும் அல்லது ஒரு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். என்ன செய்வது?
பிரபல உளவியல் நிபுணர்களான லிண்டா எல்டர் மற்றும் ரிச்சர்ட் பால் சிந்தனா முறையில் ஆறு நிலகள் உள்ளன என்கின்றனர்.
ஆறு நிலைகள் என்னென்ன?
முதலாவதுநிலை எப்போதாவது சிந்திக்கும் நிலை
தன்னிடம் ஏற்கனவே படிந்து கிடக்கும் கருத்துகளுக்கும் எண்ணங்களுக்கும் தக்கபடி முடிவை எடுப்பது. செம்மறியாட்டுக் கூட்டத்தைச் சேர்ந்தவர் என்று இவரைச் சொல்லலாம். இவரிடம் தவறான கருத்துக்கள் பலவும் மண்டிக் கிடக்கும். சோதனை செய்து உறுதி செய்யப்படாத கொள்கைகளும் இவரிடம் இருக்கும். இப்படிப்பட்ட ஆசாமிகள் தான் உலகில் மிக மிக அதிகம்.பார்ப்பதை எல்லாம் நம்புவது, படிப்பதை எல்லாம் உண்மை என்று சொல்வது ஆகியவை இவரது இயல்பாகும். எதையும் சுயமாக ஆராய்ந்து உண்மையை அறியாத நிலை இது.
அடுத்த நிலை சவாலான சிந்தனையாளர் நிலை
இவர் தன்னுடைய நம்பிக்கைகள் பற்றியும் கருத்துக்கள் பற்றியும் தனக்குத் தானே கேள்வி கேட்டுக் கொள்பவர்.
தனது நம்பிக்கைகளை எல்லாம் எழுதி வைத்துக் கொண்டு ஒவ்வொன்றாக இது உண்மையா என்று கேள்வி கேட்டு ஆராயலாம்.
அப்போது தனது உண்மையான நிலை என்னவென்று புரியும்
ஆரம்பநிலை சிந்தனையாளர்
அடுத்த நிலை தனது கருத்துக்களையும் ஊகங்களையும் சோதனை செய்து ஆராயும் நிலை. இது தனது நம்பிக்கைகள் தோன்றிய ஆரம்ப இடத்தைப் பற்றி கேள்வி கேட்கும் நிலை. தான் நினைப்பது தான் இந்தக் கருத்தைப் பற்றிய உண்மையா அல்லது வேறு சில உண்மைகளும் உண்டா?
ஒவ்வொன்றையும் பற்றி அலசி ஆராய்ந்து பல்வேறு உண்மைகளைத் திரட்டும் நிலை இது.
அடுத்த நிலை உயர் அறிதல் நிலை.
மெடாகாக்னிஷன் (Metacognition) என்று இதைச் சொல்வார்கள். இந்த நிலையில் உங்கள் சிந்தனையைப் பற்றியே நீங்கள் சிந்தனை செய்வீர்கள். எந்த விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் அதைப் பற்றி வேறு பல இடங்களிலிருந்து ஆதாரத்தையும், துல்லியமான தகவலையும் சேர்க்கும் நிலை இது. சேகரிக்கப்படும் அனைத்துத் தரவுகளும் தனது முந்தைய நம்பிக்கைகளுடன் ஒத்துப் போகிறதா, மாறிப் போகிறதா, அப்படியானால் ஏன் என்று அலசிப் பார்க்கும் நிலை இது.
அடுத்த நிலை மிக முன்னேறிய சிந்தனா நிலை.
இந்த நிலையானது உங்கள் கருத்துக்கள் உண்மையுடன் ஒத்துப் போகிறதா என்று ஆராயும் நிலை. இதில் கருத்துக்களின் ‘அறிவார்ந்த நேர்மை’ (Intellectual Integrity) ஆராயப்படுகிறது. பற்பல சிந்தனையாளர்களின் சிந்தனை ஓட்டம், செய்தித்தாள்களில் வரும் செய்திகள், விவாதங்களின் முடிவுகள் ஆகிய அனைத்தும் தொகுக்கப்பட்டு அவற்றில் முக்கியமானவை மட்டும் தேர்ந்தெடுக்கப்படும் நிலை இது
இறுதி நிலை உயர் சிந்தனையாளர் நிலை.
உலகைப் பற்றிய அனைத்தையும் அறிந்து கொண்டு மேன்மையான ஒரு சத்தியம் உங்களுக்கு வழிகாட்ட, இறுதி முடிவை எடுக்கும் நிலை இதுவே.
மதம், ஜாதி, அந்தஸ்து ஆகிய அனைத்தையும் தாண்டி உண்மை, மேன்மை ஆகியவற்றின் அடிப்படையில் நீங்கள் நிற்கும் நிலை இது.
இந்த நிலைக்கு வரும் போது நீங்கள் வாழ்க்கையின் மிக உயரிய நிலையில் நிற்கிறீர்கள்.
இந்த ஆறு நிலைகளை ஆங்கிலத்தில் “Unreflective Thinker;‘Challenged Thinker’, ‘Beginning Thinker; ‘Practicing Thinker; ‘Advanced Thinker; ‘Master Thinker’ என்று சொல்லலாம்.
அருணகிரிநாதரே முருகனைத் தொழும் போது. “அறிவால் அறிந்து உன் இரு தாள் இறைஞ்சும் அடியார் இடைஞ்சல் களைவோனே” என்கிறார்.
அறிவால் அறிந்து, பின்னர் முருகனின் இரு தாளைப் பிடிப்பவர்களே உயர் நிலையை அடைந்த உண்மை அடியார் என்று சொல்லும் போது, சாதாரண பிரச்சினைகளை அறிவால் அறிய வேண்டாமா, என்ன?
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
லலிதா சஹஸ்ரநாமத்தில் ரத்தினக் கற்கள், புனித நகரங்களின் பெயர்கள், புஷ்பங்கள் என்ற தலைப்புகளில் மூன்று கட்டுரைகளை படித்தீர்கள் ; இப்போது தேவிக்குப் பிடித்த உணவு வகைகள், அதாவது நைவேத்யங்கள் என்ன என்ன என்பதைக் காண்போம். அகஸ்தியரிடம் ஹயக்ரீவர் சொன்ன நாமங்களைப் பார்த்தால் நாம் இறைவிக்கு என்ன படைக்கலாம் என்ற தெளிவான கருத்து உருவாகும்.
உலகிலேயே அதிசயமான மதம் இந்துமதம் ஒன்றுதான் . பெண்களை தெய்வமாக வணங்குவதும், குணங்களை பெண்பால் சொற்களில் அழைப்பதும், இயற்கைச் சக்திகளை தாயாக வருணிப்பதும் இந்துமதம் ஒன்றுதான் .
வேத மாதாவாவான காயத்ரீயை மந்திரம் சொல்லி நாள்தோறும் வழிபடும் இந்துக்களின் எண்ணிக்கை பல கோடிகள் ஆகும் அதிதி என்ற பெண் கடவுள்தான் கடவுளர் அனைவருக்கும் தாய் என்று ரிக் வேதம் இயம்புகிறது. காயத்ரீ மந்திரம் ஒன்றினை மட்டும் 4 வேதங்களும் பகர்கின்றன.
இன்னும் ஒரு அதிசயம்! உலகிலேயே அதிகமான வகை நைவேத்தியங்கள், பிரசாதங்கள் , கோவில் தொடர்பான , இறைவன் தொடர்பான உணவு வகைகள் உள்ளதும் இந்து மதம் ஒன்றில்தான் . இந்தக் கிழமைக்கு என்ன பிரசாதம், இந்தப் பண்டிகைக்கு என்ன பட்சணம், இந்தக் கோவில் என்ன பிரசாதம் வாங்க வேண்டும் என்ற பட்டியலை எழுத ஒரு புஸ்தகமே தேவை
பூரி ஜெகந்நாதருக்கு ஒரு நாளில் செய்யப்படும் படைப்புகளின் எண்ணிக்கை:- பூரி ஜெகநாதர் கோவிலில் தினமும் 56 வகையான உணவுகள் சமைக்கப்பட்டு கடவுளுக்கு படைக்கப்படுவது வழக்கம்.
***
இப்போது லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும் நாமங்களைக் கேளுங்கள் :
குடான்ன ப்ரீதா மானசா
தேவிக்குப் பிடித்தது வெல்லம் கலந்த சக்கரைப் பொங்கல் ஆகும் ; இப்போதும் வீடுகளிலும் கோவில்களிலும் வெள்ளிக்கிழமைகளில் சர்க்கரைப் பொங்கல் நைவேத்யம் செய்கிறோம் . பஜனைகளில் கூட அடுப்பே இல்லாமல் அவலையும் வெல்லத்தையும் கலந்து பிரசாதம் தருகிறார்கள்.
ஆண்டாளோ திருப்பாவையில் கூடாரை வெல்லும் சீர்கோவிந்தா பாடலில் அக்காரை அடிசில் பற்றிப்படுகிறார்
கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா உந்தன்னைப்
பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச் சூடகமே
தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாம்அணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்!
அதிலும் நெய்யைக் கலந்து அது கையில் வழியும் அளவுக்கு இருக்க வேண்டும் என்று ‘ரெசிப்பி’யும் கொடுக்கிறார்; இதனால் பெருமாள் கோவில்களில் மார்கழி மாதத்தில் அந்த திருப்பாவை வரும் நாளில் தடா தடா-வாக — அதாவது அண்டா அண்டாவாக- சர்க்கரைப் பொங்கலை நைவேத்யம் செய்கிறார்கள்.
***
பாயஸான்ன ப்ரியா
இன்னும் ஒரு நாமத்தில் அம்பாளுக்குப் பாயசம் பிடிக்கும் என்று வருகிறது . பாயாசங்களில் நிறைய வகைகள் உண்டு ; எதுவாகிலும் அதில் இனிப்பு இருக்கும் முந்திரி , திராட்சை, ஏலக்காய் முதலியனவும் இருக்கும் . பருப்பினை வேகவைத்து வெல்லம் போட்டு நைவேத்யம் செய்வது வழக்கம்; இது பருப்புப் பாயசம் ;மலையாள தேசத்தில் பகவதி அம்மனுக்கு சக்கப்பிரதமன் என்னும் பலாப்பழ பாயாசத்தையும் படைக்கிறார்கள் அதன் சுவையே தனி. அதில் தேங்காயை நெய்யில் வறுத்தும் போட்டிருப்பார்கள்; முந்திரிப் பருப்புக்குத் தேவையே யில்லை.
சேமியா, ஜவ்வரிசி, அவல் பாயாசங்கள் , அடைப்பிரதமன் — முதலிய எதைக்கொடுத்தாலும் பக்தியோடு கொடுத்தால் போதும் ; திருப்பதி லட்டுதான் தேவை என்பதல்ல
***
மது ப்ரீதா
மது ப்ரீதா என்று ஒரு நாமம் வருகிறது . இதற்கு உரை எழுதியோர் தேன் போன்று இனிமையானவள் என்றும் தேனினைப் பிரியமாக உண்ணுபவள் என்றும் சொல்கிறார்கள் ; ஆயுர்வேத, சித்த வைத்திய நூல்களில் மது என்னும் தேனைப் பற்றி நிறைய செய்திகள் உள்ளன பஞ்சாமிர்தத்தில் கலக்கிறோம் மருந்துப்பொடிகளைத் தேனில் குழைத்து உண்ணும்படி வைத்தியர்கள் கூறுவார்கள்
மது நமக்கு மது நமக்கு மதுரமிக்க தமிழ் நமக்கு என்று பாரதியார் ஆடிப்பாடி கூத்தாடியதிலேருந்தே தமிழின் சுவையும் மதுவின் சுவையும் இனிமையிலும் இனிமையானது என்பதை அறியலாம் . இந்தச் சொல் வேதங்களிலும் புழங்குவதால் குறைந்தது 5000 ஆண்டுகளாக இதன் பெருமையை இந்துக்கள் அறிந்ததையும் அறிய முடிகிறது. வேதத்தில் அபூர்வ மருத்துவர்களாக வருணிக்கப்படும் அஸ்வினி தேவர்களுக்கும் பெயர் மதுச் சாட்டை; சம்ஸ்க்ருதத்தில் மது கஸஹ . நாம் சொல்லும் கசை, கசையடி என்பதெல்லாம் தமிழ் அல்ல .
ரிக்வேதத்தில் முதல் மண்டலத்தில் அருமையான பத்து துதிகளை நமக்குச் சொல்லிப் புகழ்பெற்ற புலவரின் பெயர் மத்துச் சந்தஸ் ; அதாவது தேனினும் இனிய செய்யுட்களை நமக்குக் கொடுத்தவர் ; இது தவிர சதபத பிராஹ்மண நூலில் மது பிராஹ்மண என்ற நூலினையும் குறிப்பிடுகிறார்கள். தாமரை மலரில் மொய்க்கும் அறுகாலியாக – ஆறுகால் தேனீயாக நான் உன்னைச் சுற்றிவரவேண்டும் என்று ஆதிசங்கரர் முதல் நாராயண தீர்த்தர் வரை பலரும் சம்ஸ்க்ருதத்தில் கவிமழை பொழிந்திருக்கிறார்கள்
பாஸ்கர ராயர் உரையினை நமக்குத் தமிழில் நல்கிய கணேச அய்யர் வேத வாக்கியத்தையும் நமக்கு மேற்கோளாகத் தந்துள்ளார் –யன் மதுனா ஜுஹோதி மஹதீமேவ தத் தேவதாம் ப்ரீணாதி
***
தத்யன்னா சக்த ஹ்ருதயா
மதுவை அடுத்து வரும் நாமம் இது . அம்மன் என்றால் இனிப்பு மட்டும்தான் அவளுக்குப் பிடிக்கும் என்று நினைத்து விடக்கூடாது . புளிப்புடைய தயிரில் செய்யப்பட அன்னமும்—தத்யோன்னம்– என்னும் தயிர் சாதமும் அவளுக்குப் பிரியமானதே ; ஆகையால் இதையும் நிவேதனம் செய்யலாம்.
தயிரில் நீர் கலந்தால் மோர்; அதன் பெருமையைக் கூறும் சுபாஷித ஸ்லோககங்கள் நிறையுள்ளன.
நாமங்களுக்குப் பெரியோர்கள் எழுதிய உரைகளைப்படித்தால் மேலும் பல நிவேதனைப் படைப்புகளை நாம் அறியலாம்
பிள்ளையார் என்றால் கொழுக்கட்டை, முருகன் என்றால் பஞ்சாமிர்தம் சிவன் என்றால் வெண்பொங்கல், பெருமாள் என்றால் புளியோதரை, அனுமார் என்றால் வடை, கிராம தேவதை என்றால் சத்து மிக்க கஞ்சி, ஐயப்பன் என்றால் நெய்யப்பம் என்பது போல அம்பாள் என்றால் சர்க்கரைப் பொங்கல், பாயசம் என்று சொல்லலாம் .
–subham—
Tags- லலிதா சஹஸ்ர நாமம் , உணவு வகைகள் நைவேத்யம் பிரசாதம் சர்க்கரைப் பொங்கல்,பாயசம் ,தயிர் சாதம் , கூடாரை வெல்லும்