அறிவியல் அறிஞர் வாழ்வில் … 8 (Post No.11,276)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,276

Date uploaded in London – –    19 SEPTEMBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அறிவியல் அறிஞர் வாழ்வில் …   8

ச.நாகராஜன்

                 14

ஆவாகாட்ரோவின் மறுக்கப்பட்ட விதி!

பிரபல விஞ்ஞானியாக இன்று கொண்டாடப்படும் ஆவாகாட்ரோ (Amedeo Avogadro 1776-1856) அவர் வாழ்நாளில் சரியாக மதிக்கப்படவில்லை என்பது ஒரு ஆச்சரியகரமான விஷயம். சிறந்த கனவானாகத் திகழ்ந்த அவர் ஒரு வக்கீல். பின்னர் பள்ளி ஆசிரியர். பின்னால் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக ஆனார்.

அவர் விஞ்ஞானத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். வெவ்வேறு வாயுக்கள் ஒரே கன அளவைக் கொண்டிருந்தால், உஷ்ணநிலையும் அழுத்தமும் ஒரே அளவாகவும் அவை கொண்டிருந்தால், அவை சமமாக ஒரே எண்ணிக்கையில் அணுத்துகளைக் கொண்டிருக்கும் என்று (Equal volumes of different gages contains an equal number of molecules provided they are at the same temperature and pressure.) அவர் கூறினார்.

ஆனால் அவரது சமகாலத்தில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் பலரும் இதை ஒப்புக்கொள்ளவில்லை. இதை அவர்கள் நிராகரித்து விட்டனர்.

ஆனால் அவர் மறைந்த பிறகு 1870ஆம் ஆண்டு தான் இது சரி தான் என்பதை அனைவரும் ஒப்புக் கொண்டனர்.

இப்போது அவரது விதி ஆவாகாட்ரோஸ் லா (Avogadro’s Law) என்று அழைக்கப்படுகிறது.

15

மரபணுக் கொள்கையைக் கண்டுபிடித்தவர் :க்ரெகர் மென்டெல் (Gregor Mendel)

விஞ்ஞானத்தில் மரபணுக் கொள்கையை முதலில் கண்டுபிடித்தவர் க்ரெகர் மென்டெல். (காலம் :20-7-1822- 6-1 18841884). இவர் ஒரு உயிரியல் வல்லுநர். காலநிலை பற்றிய அறிவியல் நிபுணர். ஒரு கணித மேதையும் கூட.

இவர் ஒரு துறவி. வம்ச பரம்பரை பற்றிய சரியான விதிகளை இவர் தான் முதன் முதலில் கண்டுபிடித்தார். இந்த விதிகளே பரம்பரை பரம்பரையாக ஒவ்வொரு தலைமுறைக்கும் உயிரினங்களில் மரபணு அம்சங்களைப் பின் தொடரச் செய்கிறது என்று கண்டுபிடித்தார் அவர்.

ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் பிரபலமாக இது அறியப்படவில்லை. அவர் மறைந்து 16 ஆண்டுகள் ஆன பின்னரே, 1900ஆம் ஆண்டு வாக்கில் தான் இது சிறப்பாகக் கொண்டாடப்பட ஆரம்பித்தது. அவர் தனது ஆய்வை மறைவதற்கு 34 ஆண்டுகளுக்கு முன்பேயே, 1866ஆம் ஆண்டே, பிரசுரித்தார்; உலகிற்கு அறிவித்தார்.

இதை அறிவித்த ஒரு வருடத்திற்குப் பின்னர் அவர் தனது மடத்தின் மடாதிபதியாக ஆனார். தனது வாழ்நாள் முழுவதும் மடத்தை நிர்வகித்து வந்தார்.

16

கொண்டாடு என்பதை பிரம்மசாரியாக இரு என்று மாற்றிய கதை!

ஒரு ஆவணத்தை காபி செய்வதில் எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று உயிரியல் விஞ்ஞானிகளின் மாநாடு ஒன்றில் ஒரு விஞ்ஞானி கூறிய ஜோக் இது:

ஒரு மடாலயத்தில் துறவி ஒருவர் புதிதாகச் சேர்ந்தார். அவர் அங்குள்ள துறவிகள் அனைவரும் அங்குள்ள பழைய புத்தகங்களில்  அவரவருக்குப் பிடித்த ஏதோ ஒரு புத்தகத்தைக் காபி செய்து கொண்டிருந்ததைப் பார்த்தார்.

புதிய துறவி மடாலயத்தில் கீழே இருந்த நிலவறைக்குச் செல்ல ஆரம்பித்தார்.

ஏன் அங்கு போகிறீர்கள் என்று அவரைக் கேட்ட போது புத்தகத்தின் ஒரிஜினல் கையெழுத்துப் பிரதியை நான் பார்க்க விரும்புகிறேன். அதனால் அங்கு போய் அதை எடுத்துப் பார்த்து காபி செய்யப் போகிறேன் என்றா.

சிறிது நேரத்தில் நிலவறையிலிருந்து ‘ஓ’ என்ற கூக்குரலும் அழுகுரலும் கேட்டது.

அனைவரும் அங்கு ஓடிப் போய்ப் பார்த்தனர். புதிய துறவி அலறிக் கொண்டிருந்தார்.

என்ன விஷயம் என்று கேட்ட போது ஒரிஜினல் புத்தகத்தைக் காண்பித்து அவர் கூறினார் : நீங்கள் காபி அடித்து அனைவருக்கும் விநியோகம் செய்வது தவறு. ‘பிரம்மசாரியாக இரு’ என்று சொல்லவில்லை புத்தகம். ‘கொண்டாடு’ என்று அல்லவா சொல்லி இருக்கிறது என்றார். (The Word is CELEBRATE, not CELIBATE)

காபி அடித்த புத்தகத்தைப் பார்த்து பிரம்மசாரிகளாக இருந்த அனைவரும் தலையில் அடித்துக் கொண்டனர்.

இதைச் சொன்னவர் உயிரியல் அறிவியலில் பேராசிரியரான மார்க் பாகல் (Professor of biological Sciences, Mark Pages, University of Reading)

ஆகவே, ஆவணத்தைப் படி எடுப்பவர்கள் சரியாக உன்னிப்பாகக் கவனித்து படி எடுக்க வேண்டும்!

**


 புத்தக அறிமுகம் – 61

தனிப்பாடல்களில் தமிழின்பம்!

பொருளடக்கம்

என்னுரை

1. பருப்பை நான்காம் தமிழுக்கு ரிஸர்வ் செய்த தீர்க்கதரிசி ஔவையார்!

2. பிள்ளையாருக்கு யாரும் ஏன் பெண் கொடுக்க முன்வரவில்லை?

3. மீனாக்ஷி அம்மனைத் தரிசித்தவர் சொர்க்கத்திற்கே செல்வர் : புலவர் உறுதி!

4. துயிலையிலே, பயிலையிலே, அயிலையிலே யார் துணை?

5. சிவபிரான் பாம்பை அணிந்தது ஏன்?

6. மானிடரை விதி விடுமா, என்ன?

7. சரஸ்வதிக்குப் பயன் தான் என்ன? – புலவர்கள் இல்லையேல்!

8. பத்தடியில் சொர்க்கம்; அடுத்த பத்தடியில் மோக்ஷம் வரும்! எப்படி?

9. வள்ளி கொண்டான் மயில் ஏறிக் கொண்டான் – ஏன்?

10. நையாண்டிப் புலவரின் உலகியல் பாடல்!

11. மான் பிடித்தீர், முயலை மிதித்தீர், ஆடெடுத்தீர், உம்மைக் காண கழுக்கள் அல்லவோ வரும், காளத்தி நாதனே!

12. கோபாலன் ஆன குணம் போகுமா, பாண்டியா?

13. உமாதேவிக்கு உள்ள ஒரு குறை பாண்டிமாதேவிக்கு இல்லை!

14. முதலையைக் கொலுசினால் கன்னத்தில் உதைத்த பெண்!

15. மரணத்தைக் கண்டு அஞ்சுகிறீரா, பாண்டியரே! மஹாராணியின் கேள்வி!

16. கடனால் நடுக்குற்ற புலவர் போட்ட புதிருடன் கூடிய பாடல்!

17. புலவரின் குறும்பு : திரௌபதி மாமனாரைத் தழுவிய பாட்டை எழுதிய அந்தகக் கவி வீரராகவ முதலியார்!

18. ஏழு மேகம் எட்டாச்சு; நவநிதியம் பத்தாச்சு – எப்போது?

19. ராகங்கள் கொண்ட துறைப் பாடல், திரைப்படப் பாடல்கள்!

20. கந்தனைப் பாடாமல் கண்டவனைப் பாடுவேனோ?

21. சனியான தமிழை விட்டு வேறொன்றும் அறிந்தோமில்லை!

22. வள்ளல் சீதக்காதியை இழந்து வருந்திய புலவரின் பாடல்கள்!

23. நாகரத்தினம் தந்த நாகத்தின் அற்புத உண்மை வரலாறு!

24. நட்சத்திரப் பாடல்

25. கொக்கு பறக்கும், புறா பறக்கும், நான் ஏன் பறப்பேன்?

26. கொண்டு வந்து போட்டுக் கொளுத்து!

27. நைடதத்தில் உள்ள நான்கு சிலேடைப் பாடல்கள்!

28. சந்திரனுக்குத் தையல் அநேகம்; எனக்கும் தையல் அநேகம்!

29. படிப் பாட்டுக்கள்!

30. தானத்தால் பெருகிய நீரும், துக்கத்தால் பெருகிய நீரும்!

31. அரிகண்டம் ஏறிப் பாடத் தயாரா? யம கண்டமே ஏறிப் பாடுவேன், அதற்குத் தயாரா? அதிசயத் தமிழ்ப் புலவரின் சவால்!

32. யம கண்டம் ஏறிப் பாடிய கவி காளமேகத்தின் அதிசயப் பாடல்கள்! – குடத்திலே கங்கை அடங்கும்!!

33. தொழில்களில் சிறந்தது எது? தண்டபாணி சுவாமிகள் பதில்!

புலவர்களின் பட்டியல் மற்றும் அவர்கள் பாடிய பாடலின் முதற்குறிப்பு அகராதி.

*

நூலில் நான் வழங்கிய என்னுரை இது :

என்னுரை

உலகின் பழம் பெரும் மொழியாகிய தெய்வத் தமிழ் இறைவனிடமிருந்து தோன்றிய மொழி என்பதை சங்க இலக்கியம், பக்தி இலக்கியம் உள்ளிட்டவை தெள்ளத் தெளிவாக விளக்குவதை அனைவரும் அறிவர்.

காலம் காலமாக பல்லாயிரக் கணக்கில் கவிதை மழை பொழிந்து வந்துள்ளனர் தமிழ் வளர்த்த புலவர்கள்.

இவர்கள் ஆங்காங்கே உடனுக்குடன் இயற்றிய தனிப் பாடலகள் பல்லாயிரமாகும்.

அவற்றைத் தொகுத்து வெளியிடும் பல முயற்சிகளும் நடந்துள்ளன.

குறிப்பாக திரு மு,இராகவையங்காரின் பெருந்தொகை, திரு உ.வே.சாமிநாதையரின் தனிப்பாடற்றிரட்டு, திரு மு.ரா. கந்தசாமி கவிராயர் தொகுத்த தனிச் செய்யுட் சிந்தாமணி ஆகிய நூல்களைக் குறிப்பிடலாம்.

இவற்றிலுள்ள சில பாடல்களைப் பற்றி அவ்வப்பொழுது www.tamilandvedas.com இணைய தளத்தில் எழுதி வந்தேன்.

அவற்றின் தொகுப்பே இந்த நூல்.

இந்தக் கட்டுரைகளை வெளியிட்ட லண்டன் திரு ச. சுவாமிநாதன் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

இதை நூலாக அழகுற வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது உளம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சொற்சுவையும் பொருட்சுவையும் கொண்டு சமயோசித ஆற்றலை வெளிப்படுத்தும் இந்தத் தனிப்பாடல்கள் அனைவருக்கும் அளவில்லா தமிழ் இன்பத்தைத் தரும் என்பதில் ஐயமில்லை.

இதை விரும்பி வரவேற்றுப் பாராட்டிய அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

வாருங்கள் கவிதை உலகில் நுழைவோம்.

சான்பிரான்ஸிஸ்கோ                           ச.நாகராஜன்

26-8-2022

*

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852   

**

வால்மீகி ராமாயணத்தில் பெண்கள் -4 (Post No.11,275)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,275

Date uploaded in London – 18 SEPTEMBER 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

மனைவிமார்கள் கணவர்கள் மீது எவ்வளவு அன்பு செலுத்தினாரோ அந்த அளவுக்கு கணவர்களும் மனைவியர் மீது அன்பு செலுத்தினர்


सर्वे ஸர்வே எல்லா  , नराश्च ஆண்களும் , नार्यश्च பெண்களும், धर्मशीला: அறநெறி வாழ்க்கை , सुसंयता: கட்டுப்பாடு மிக்க , शीलवृत्ताभ्याम् நன் நடத்தை, நல்லொழுக்கம் , उदिता: வாழ்ந்து சிறப்புற்றனர் , महर्षय: इव மஹரிஷிக்களைப் போல , अमला: தூய்மையாக .

सर्वे नराश्च नार्यश्च धर्मशीलास्सुसंयता: ।

उदिताश्शीलवृत्ताभ्यां महर्षय इवामला: ।।1.6.9।।

ஸர்வே நரஸ்ச  நார்யஸ்ச தர்மசீலாஸ் ஸுசயம்தாஹா

உதிதாஸ் சீல வ்ருதாப்யாம்  மஹர்ஷ்ய இவாமலாஹா  வா.ரா.1-6-9

 xxx

ஒரு மனைவியின் கடமை, வாழ்நாள் முழுதும் கணவனுக்கு பணிவிடை செய்வதே என்று வால்மீகி கருதுகிறார்

 கணவர் என்பவர் நகரத்தில் இருந்தாலும் , காட்டில்  இருந்தாலும், பாவியாக இருந்தாலும் , குணவானாக  இருந்தாலும், கணவரிடத்தில் அன்பாக இருப்பவர் சிறந்த மேலுலகங்களுக்குச் செல்வார்கள்

नगरस्थो वनस्थो वा पापो वा यदि वा शुभः। 

यासां स्त्रीणां प्रियो भर्ता तासां लोका महोदयाः।।2.117.22।।

நகரஸ்தோ  வனஸ்தோவா பாபு வா யதி வா சுபஹ

யாஸாம் ஸ்திரீனாம் ப்ரியோ பர்த்தா தாஸாம் லோகா மஹோதயாஹா

यासाम् எந்தப்  , स्त्रीणाम् பெண்கள் , नगरस्थः in the city,நகரத்திலிருந்தாலும்  वनस्थो वा காட்டிலிருந்தாலும் , पापो वा பாவியானாலும் , यदि वा அல்லது , शुभः புண்யவானானா லும் , भर्ता கணவனிடத்தில் , प्रियः அன்புடன் இருக்கிறார்களோ , तासाम् அவர்களுக்கு , महोदयाः மிக உயர்வான , लोकः உலகம் (கிடைக்கும்).

Xxx

दुश्शीलः कामवृत्तो वा धनैर्वा परिवर्जितः।

स्त्रीणामार्यस्वभावानां परमं दैवतं पतिः।।2.117.23।।

துஸ் சீலஹ காமாவ்ருத்தோ  வா தனைர்வா பரிவர்ஜிதஹ

ஸ் த்ரீ ணாமார்யஸ்வ பாவானாம் பரமம் தைவதம் பதிஹி  

आर्यस्वभावानाम् ஆர்ய/பண்புள்ள பாவனை கொண்ட  , स्त्रीणाम् பெண்களுக்கு , दुश्शीलः கெட்ட குணமுள்ள , कामवृत्तो वा or அல்லது கெட்ட நடத்தையுள்ள , धनैः பணமுடைய , परिवर्जितो वा or devoid of அல்லது  பணமில்லாத , पतिः கணவன்  , परमम्உயர்ந்த , दैवतम्  தெய்வமே . 

பண்பாடுமிக்க பெண்களுக்கு ,  கணவன் ஒழுக்கம் குறைந்தவன் ஆனாலும் , கெட்டவன் ஆனாலும்,  பணமிருந்தாலும் ,பணமில்லாதவன் ஆனாலும், கணவனே கண்கண்ட/உயர்ந்த தெய்வம்

xxxx.
.

नातो विशिष्टं पश्यामि बान्धवं विमृशन्त्यहम्।

सर्वत्र योग्यं वैदेहि तपः कृतमिवाव्ययम्।।2.117.24।।

 நாதோ விசிஷ்டம் பஸ்யாமி பாந்தம் விம்ருசந்த்யஹம்

ஸர்வத்ர யோக்யம் வைதேஹி தபஹ க்ருதமிவாவ்யயம்

वैदेहि வைதேஹி , अहम् Iநான் , सर्वत्र எல்லாவிதத்தி லும் , विमृशन्ती சிந்தித்துப் பார்த்ததால்,, कृतम् செய்யப்பட்ட , अव्ययम्  அழியாத , योग्यम् தகுந்த , तपः इव lதவம் போன்றதே , अतः அப்படிப்பட்ட கணவனைவிட , विशिष्टम् சிறந்த , बान्धवम् உறவினை , न पश्यामि நான் பார்த்ததில்லை .


ஓ ஸீதா ? யோசித்துப்பார்த்தால் ஒரு கணவனை விட நல்ல நன்பண் யாரும் எனக்குத் தென்படவில்லை.அவர் அழியாத முடியாத தவ வலிமை போன்றவர்.

xxx

கணவனின் அச்சுதான் மனைவிக்குப் பிறக்கும் ஆன் குழந்தை என்ற நம்பிக்கையும் இருந்தது.அதனால்தான் அவளுக்கு ‘ஜாயா’ என்று பெயர் என மனு (9-8) செப்புகிறார்

—subham—

TAGS- வால்மீகி,  ராமாயணத்தில்,  பெண்கள் -4, 

மற்றவரை உனக்காக வேலை செய்ய விடு! புகழை உனக்கு வரச் செய்! (11,274)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,274

Date uploaded in London – –    18 SEPTEMBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மானேஜ்மெண்ட் வழிகள்!

மற்றவரை உனக்காக வேலை செய்ய விடு! புகழை உனக்கு வரச் செய்!

ச.நாகராஜன்

நவீன மேலாண்மை நிர்வாகம் பல யுக்திகளைக் கொண்டது.

அதில் ஒன்று : மற்றவரை உனக்காக வேலை செய்ய விடு! புகழை உனக்கு வரச் செய்! – என்பதாகும்.

இதை விளக்க ஒரு குட்டிக் கதை உண்டு.

அது இதோ:

குட்டி ஆமை ஒன்று மலை மீதும், சமவெளி மீதும், அதில் அருகில் பாய்கின்ற நதியிலும் விளையாடுவது வழக்கம்.

நல்ல புத்திசாலி ஆமை அது.

ஒரு நாள் அந்த ஆமை மலையிலிருந்து கீழே வந்த போது யானை ஒன்று எதிர்த்தாற் போல வந்தது.

ஆமையைப் பார்த்துப் பரிதாபப்பட்ட அந்த யானை, “குட்டி ஆமையே, வழியிலே வராதே. என் காலில் அகப்பட்டால் நீ மிதிபட்டுச் சாவாய்” என்று கூறியது.

“ஊம். உனக்கு எவ்வளவு பலம் உண்டோ அவ்வளவு பலம் எனக்கும் உண்டு” என்று கூறியது ஆமை.

யானை சிரித்தது. “போ, போ” என்று கூறி விட்டுத் தன் வழியே சென்றது.

அடுத்த நாளும் யானை வந்தது. ஆமையைப் பார்த்தது. பரிதாப்பப்படு தான் முந்தைய நாள் சொன்னதையே திருப்பிச் சொன்னது.

ஆமையும் பதிலுக்கும். “நானும் உன் அளவு வலிமை பெற்றவன் தான்.

சந்தேகம் இருந்தால் நாளைக்கு இதே நேரம் ஒரு போட்டி வைத்துக் கொள்வோம். அப்போது உனக்குத் தெரியும், எனது வலிமை பற்றி” என்றது.

யானை சிரித்தது. போட்டிக்கு மறு நாள் வர ஒத்துக் கொண்டது.

யானை அங்கிருந்து தன் வழியே சென்றதும் ஆமை ஒரு நீளமான கயிறைத் தயார் செய்தது.

அருகிலிருந்த ஆற்றுக்குள் பாய்ந்தது. அதிலிருந்த நீர் யானை அலறியது.

“என் கிட்டே வராதே! நசுங்கிச் சாவாய்” என்றது அது.

ஆமை உடனே, “உனக்கு எவ்வளவு பலம் உண்டோ அவ்வளவு பலம் எனக்கும் உண்டு. வேண்டுமானால் நாளைக்கு ஒரு போட்டி வைத்துக் கொள்ளலாம். இதோ பார், ஒரு கயிறு! இதை உன் வாயில் வைத்துக் கொள். நான் ரெடி என்று சொன்னவுடன் நீ இழு! அப்போது என் வலிமை உனக்குத் தெரியும்” என்றது.

நீர் யானை சிரித்தது.

“சரி, நாளை பார்ப்போம். நான் ரெடி” என்றது.

மறு நாள் குறிப்பிட்ட நேரத்திற்கு யானை வந்தது. அதை மலைக்கு மேலே தன் இருப்பிடத்திற்கு வருமாறு ஆமை அழைத்தது.

யானை மலை உச்சிக்கு ஆமை இருந்த இடத்திற்குச் சென்றது.

ஆமை கயிறின் ஒரு முனையை யானையிடம் கொடுத்து, “நான் ரெடி என்று சொன்னவுடன், நீ கயிறை இழு! யார் வலிமை என்பது தெரியும்” என்றது.

யானை தன் மனதில் இந்த ஆமைக்கு எவ்வளவு தைரியம் என்று நினைத்துக் கொண்டே கயிறை வாங்கித் தன் வாயில் வைத்துக் கொண்டது.

குடுகுடுவென்று மலையை விட்டு இறங்கிய ஆமை நதிக்குள் சென்று அங்கு காத்துக் கொண்டிருந்த நீர் யானையிடன் கயிறின் இன்னொரு

முனையைக் கொடுத்தது.

சரியாக யானைக்கும் நீர் யானைக்கும் சமதூரத்தில் வந்து நின்ற ஆமை, “ரெடி! இழுக்கலாம்!” என்றது.

யானை இழுக்க, நீர் யானை இழுக்க இரண்டினாலும் நகரவே முடியவில்லை.

சமபலம் கொண்டிருந்ததால் நெடு நேரம் இழுத்தது தான் மிச்சம்.

“போதும்” என்று கூவிய ஆமை நீர் யானையைப் பார்த்து, “என்ன, என் பலம் புரிந்ததா?” என்றது.

நீர் யானை வியப்புடன் தலையை ஆட்டி விட்டு நதிக்குள் சென்று மறைந்தது.

மலை மேலிருந்து அப்போது இறங்கி வந்த யானை கயிறின் இன்னொரு முனையை வாயில் கவ்விக் கொண்டிருந்த ஆமையை வியப்புடன் பார்த்தது.

“என்ன, என் பலம் புரிந்ததா?” என்றது ஆமை.

வியப்புடன் ஆமையைப் பார்த்த யானை, “ஆஹா! நீ சொல்வது உண்மை தான்! என்னளவு பலம், ஏன், என்னை விட கூடவே பலம் வாய்ந்தவன் நீ” என்று பாராட்டி விட்டுத் தன் வழியே சென்றது.

சரி, கதையின் நீதி என்ன?

மற்றவரை உனக்காக வேலை செய்ய விடு! புகழை உனக்கு வரச் செய்!

இது தான் இன்றைய மானேஜ்மெண்ட் யுக்தி!

இது ஜைரியன் நீதிக் கதைகளுள் (Zairean Fables) ஒன்று.

‘THE 48 LAWS OF POWER’ என்ற தனது புத்தகத்தில் Robert Greene இதை ஒரு உதாரணமாக எடுத்துக் காட்டுகிறார்! (464 பக்கங்கள்)

Get others to do the work for you, but always take the credit! இது தான் அவர் கூறும் ஏழாவது விதி!

புத்தக அறிமுகம் – 60

பொன்னொளிர் பாரதம்!

பொருளடக்கம்

என்னுரை

1. வியட்நாமில் வீர சிவாஜிக்கு சிலை!

2. சத்ரபதி சிவாஜியின் நமஸ்காரம்! – ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் அருளுரை!

3. குரு தேக் பகதூரின் ஒப்பற்ற தியாகம்!

4. போர்த்துகீசியரை அலற அடித்த மஹாராணி அப்பக்கா சௌதா!

5. ஜகாரியா கானை எதிர்த்த சீக்கியர்களின் வீரம்!

6. மேவார் வீரன் ராணா சங்ராம் சிங் – || : சுவையான சம்பவங்கள்

7. டச்சுக்காரர்களைத் துரத்தி அடித்த மார்த்தாண்ட வர்மாவின் சாகஸம்!

8. சித்தீ! கவலைப்படாதே! சித்தப்பாவின் உடலை

9. மார்வார் ராணியைக் காப்பாற்றிய மாவீரன் துர்காதாஸ் ரதௌவ்ரா!

10. ரஜபுதனத்து துர்காதாஸ் இஸ்லாமிய ராஜகுமாரியிடம் காட்டிய அன்பு!

11. சித்தூரின் வரலாறு : சந்தாவின் பீஷ்ம பிரதிக்ஞை!

12. கோமாதாவும் குலமகளிரின் கண்ணாடி மோதிரமும்!

13. மஹாராஜா ரஞ்சித் சிங்கின் பதில்!

14. அயோத்யா – சில உண்மைகள்! – 1

15. அயோத்யா – சில உண்மைகள்! – 2

16. அயோத்யா – சில உண்மைகள்! – 3

17. அயோத்யா – சில உண்மைகள்! – 4

18. வேதம் கூறும் ஸ்ரீ ராம ஜென்ம பூமி இடம்!

19. அதிசய மேதை ஸ்ரீ சுப்பராய சாஸ்திரி! – பகுதி 1.

20. அதிசய மேதை சுப்பராய சாஸ்திரி! பகுதி – 2

21. வேத கணிதம் – ஒரு பார்வை!

22. ஜோத்பூர் கோட்டையில் உள்ள சக்ரங்கள் அடங்கிய பட மர்மம்!

23. மாயச் சதுர மர்மத்தைச் சுவடிகளிலிருந்து விளக்கும் தமிழ்ப் பெண்மணி தஞ்சாவூர் சத்தியபாமா! – 1

24. மாயச் சதுர மர்மத்தைச் சுவடிகளிலிருந்து விளக்கும் தமிழ்ப் பெண்மணி தஞ்சாவூர் சத்தியபாமா! – 2

25. ஹர் பிலாஸ் சர்தா – ஹிந்து நாகரிக மேன்மையை எழுதியவர்!

26. அதிசய வரலாற்று ஆய்வாளர் பி.என்.ஓக்!

27. ஆலயம் காக்க அனைவரையும் அன்றே வணங்கிய பாண்டிய மன்னன் பராக்ரம பாண்டியன்! – 1

28. ஆலயம் காக்க அனைவரையும் அன்றே வணங்கிய பாண்டிய மன்னன் பராக்ரம பாண்டியன்! – 2

29. ஹிந்து வீரம்!

30. வெள்ளையன் ஹாலிடே வியந்த சதி!

31. மெழுகுவர்த்தியில் பிறந்த அக்னி – || ஏவுகணை!

32. ஹிந்து முஸ்லீம் ஒற்றுமை : தெய்வ தேசத்தின் கலாசாரம்!

33. உலகின் தாயகம் இந்தியா! அறியுங்கள்! நேசியுங்கள்!!

*

நூலில் நான் வழங்கிய என்னுரை இது :

என்னுரை

 ‘இது தான் இந்தியா’ என்ற எனது நூலை அடுத்து பொன்னொளிர் பாரதம் என்ற இந்த நூல் வெளியாகிறது.

இந்தியாவின் அறப்பண்புகளையும், சிறப்பு அம்சங்களையும் நாம் தெரிந்து கொண்ட வேளையில் ஒரு முக்கியமான சந்தேகம் எழுவது இயல்பு.

இப்படிப்பட்ட அரும் தேசம் எதனால் பல நூற்றாண்டுகள் அன்னியர் பலரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது என்பதே அது. கலைகளில்

சிறந்தது, அறப் பண்புகளில் சிறந்தது, வீரத்தில் சிறந்தது ஏன் வீழ்ந்து பட்டிருக்க வேண்டும்?

இதற்கான பல காரணங்களில் தலையாய காரணங்களாக நம் முன் இரண்டு காரணங்கள் அறியப்படுகின்றன.

ஒன்று நம்மிடையே ஒற்றுமை இல்லை.

இரண்டாவது வீரத்தையும் பொறுமையையும் பிரிக்கும் எல்லைக் கோட்டை அறிந்து கொள்ளத் தவறி, அறப்பண்புகளையே முற்றிலுமாகக் கடைப்பிடித்து எல்லையற்ற சகிப்புத்தன்மையை மேற்கொண்டது தான்!

இந்த சகிப்புத்தன்மையை ஆக்கிரமிப்பாளர்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டதோடு தங்களது அரக்க குணங்களுக்கேற்ப பிரித்தாளும் சூழ்ச்சி, சிரித்துப் பேசியவாறே முதுகில் குத்தச் செய்வது, நம்பிக்கை துரோகம் உள்ளிட்ட எண்ணற்ற வழிகளைக் கையாண்டு நம்மை அடிமைப் படுத்தினர்; சுரண்டினர். என்றாலும் கூட அறப்பண்புகள் ஒரு நாளும் அதைக் கடைப்பிடித்தோரை கை விடாது என்பதை அறிவிக்கும் வண்ணம் நம் நாடு சுதந்திரம் பெற்றது; இப்போது வலிமையான நாடாக, உலகிற்கு பண்டைய காலம் போல வழி காட்டும் தேசமாக ஆகி வருகிறது.

கடந்த பல நூற்றாண்டுகள் நமக்குக் கற்றுக் கொடுக்கும் பாடங்கள் பல.

அவற்றில் முக்கியமானவை ஒற்றுமையாக இருக்க வேண்டும் மற்றும் சகிப்புத்தன்மையை எல்லை மீறி கடைப்பிடித்து நம்மை கோழைகளாக வெளி உலகம் கருதும் அளவு நடப்பது கூடாது என்பவையே அவை கடந்த காலத்தில் ஆங்காங்கே தேசம் முழுவதும் ஏராளமான வீரர்கள் அந்தந்தப் பகுதிகளைப் பாதுகாத்து வந்ததை நமது சரித்திரம் கொண்டிருந்தாலும் ‘மெக்காலே படிப்பால்’ அவை மறைக்கப்பட்டு விட்டன. ஆகவே மறக்கப்பட்டு வருகின்றன.

அவற்றை வெளிக் கொணர்ந்து அதிலிருந்து உத்வேகத்தை நமது நாட்டு இளம் தலைமுறையினர் பெற வேண்டும். அதற்கான ஆரம்ப முயற்சியில் ஒரு சிறு துளியே இந்த நூலாக அமைகிறது.

இதில் நமது வீரர்களின் வீரம், ஆக்கிரமிப்பாளர்களது தாய்க்குலத்தை நாம் போற்றும் பண்பு, இதர நாட்டினர் நம்மை வியந்து போற்றும் பாங்கு, நமது அபூர்வமான கலைகள் உள்ளிட்டவை சித்தரிக்கப்படுகிறது.

இன்னும் இது போன்ற ஆயிரக் கணக்கான கட்டுரைகள் வெளி வந்து அவை ஒரு கலைக் களஞ்சியமாகத் தொகுக்கப்பட வேண்டும்.

பொன்னொளிர் பாரதத்தின் உண்மையான வரலாறு உள்ளது உள்ளபடி எழுதப்பட வேண்டும்.

இந்தக் கட்டுரைகளில் சில கட்டுரைகள், ஞான ஆலயம், ஶ்ரீ ஜோஸியம் பத்திரிகைகள் மற்றும் www.tamilandvedas.com ப்ளாக்கில் பிரசுரிக்கப்பட்டவை. இதை வெளியிட்ட ஞான ஆலயம் ஆசிரியர் திருமதி மஞ்சுளா ரமேஷ் மற்றும் லண்டன் திரு ச.சுவாமிநாதன் ஆகியோருக்கு எனது உளம் கனிந்த நன்றி உரித்தாகுக,

கட்டுரைகளில் பெரும்பாலானவை கொல்கத்தாவிலிருந்து வெளி வரும் ஆங்கில வார இதழான ட்ரூத் இதழில் ஆங்கிலத்தில் வெளி வந்தவை.

அவற்றைத் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டு வந்தேன்.

ட்ரூத்(TRUTH – www.sdpsorg.com இதழ் சாஸ்திர தர்ம பிரசார சபாவினால் கடந்த 90 ஆண்டுகளாக வாரம் தோறும் தவறாமல் வெளியிடப்பட்டு வருகிறது.

அதில் வெளியாகும் அருமையான கட்டுரைகள் நமக்கு உற்சாகமும் ஊக்கமும் அளிப்பவை.

அதன் ஆசிரியர் டாக்டர் திரு ஷிப் நாராயண் சென் அவர்கள் எனது உற்ற நண்பர். எனது இந்தப் பணியில் ஊக்கம் தருபவர்.

அவருக்கு எனது மனமார்ந்த நன்றியை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நூலை அழகுற வெளியிட முன் வந்த பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஜ் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கட்டுரைகள் வெளியான போது அவ்வப்பொழுது பாராட்டி எனக்கு ஊக்கமளித்த அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகுக.

நன்றி.

சான்பிரான்ஸிஸ்கோ                                                          ச. நாகராஜன்

5-9-2022

*

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852   

**

LONDON HARE KRISHNA RATHA YATRA 4-9-2022 (Post No.11,273)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,273

Date uploaded in London – 17 SEPTEMBER 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan


Xxx

 As usual thousands of devotees took part in the Jagannath ratha yatra in central London today 4-9-2022. It took nearly two hours to cover the distance between Hyde Park Corner to Trafalgar Square in London. Volunteers maintained the traffic without any disturbance to the general public Thousands of general public took videos and photos and had free food at the square. Many from other religions joined the devotees and danced all along the route. It covered main stations like Green Park, Piccadilly Circus, and Charing Cross. Young and old danced to the tune of Hare Rama, Hare Krishna chorus for hours. At the Trafalgar Square along with the tasty food entertainment was also provided. Book shops were selling Bhagavata and Bhagavad Gita books. It was a memorable scene.

Some pictures are given below; over 100 pictures and three short videosare posted in Facebook from 4th September onwards:-

 tags- Hare Krishna, Ratha Yatra, London, 2022

வால்மீகி ராமாயணத்தில் பெண்கள் – 3 (Post No.11,272)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,272

Date uploaded in London – 17 SEPTEMBER 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

ராமனை விட  சீதை உயர்ந்து நிற்கும் காட்சிகள் வால்மீகி ராமாயணத்தில் இருக்கின்றன. ராமன், ஒரு அரசன் போல நடந்து கொள்கிறான். ஆனால் சீதையோ ராமனிடத்தில் ஒரு பணிவான பெண்ணாக, அடங்கிய மனைவியாக நடந்து கொள்கிறாள்.

सावित्री पतिशुश्रूषां कृत्वा स्वर्गे महीयते।

तथावृत्तिश्च याता त्वं पतिशुश्रूषया दिवम्।।2.118.10।।

ஸாவித்ரீ பதி சுஷ்ரூஷாம் க்ருத்வா ஸ்வர்க்கே மஹீயதே

ததா விருத்திஸ் ச  யாதா த்வம் பதி சுஷ்ரூஷயா திவம் வா.ரா.2-118-10

சத்தியவான் சாவித்திரி கதையில் கணவனுக்குப் பணிவிடை செய்து சாவித்திரி சொர்க்கம் ஏகினாள் அதே படியில் நீயும் சென்று கணவனுக்கு சேவை செய்தால் சொர்க்கத்துக்குப் போவாய் – என்று அயோத்தியா காண் டத்திலேயே காண்கிறோம்

पतिशुश्रूषाम् கணவனுக்கு சேவை  , कृत्वा செய்ததன் வாயிலாக , सावित्री சாவித்திரி , स्वर्गे சொர்க்கத்தில் , महीयते கவுரவிக்கப்பட்டாள் , तथावृत्ति: அதே பாதையைப் பின்பற்றி , त्वं च நீயும் , पतिशुश्रूषया கணவனுக்கு சேவை செய்து , दिवम् tசொர்க்கத்துக்கு , याता போவாய் ஆகுக

xxx

ராம- ராவண யுத்தம் முடிந்தது. எல்லோரும் சீதை- ராமன் சந்திப்பை — 14 ஆண்டுக்குப் பின்னர் நாட்டைபெறப் போகும் சந்திப்பை — ஆவலுடன் எதிர்பார்த்து நிற்கின்றனர். தற்காலமானால் ஆயிரம் போட்டோகிராபர்களும், நூறு டெலிவிஷன் சானல் வீடியோ ஆட்களும் அ ங்கே வந்திருப்பார்கள். அப்போது சீதையைப் பல்லக்கில் தூக்கிக்கொண்டு வருகிறார்கள் . நீ ஏன் நடந்து வரவில்லை என்று கேட்கிறார் ஆனால் சீதை ஒரு எதிவார்த்தையும் சொல்லவில்லை. அதே போல ஓரு சலவைத் தொழிலாளி சீதையின் கற்பு நெறி பற்றிக் கேள்வி கேட்டவுடன் , சீதையை ராமன் காட்டுக்கு அனுப்புகிறான் . அப்போதும் அவள் வாய் திறக்கவில்லை; அதாவது ராமனைத் திட்டவில்லை.

இதே போல வாழ்ந்த சிலப்பதிகாரக் கண்ணகியையும் ஒப்பிடலாம். திருமணமான பின்னரும் வேறு ஒரு ஆடல் அழகியான மாதவியிடம் போய்விட்டுத் திரும்பியபோதும் கண்ணகி ஒரு எதிர்ப்பு பேச்சும் பேசவில்லை.

மஹாபாரதத்தில் திரவுபதி மட்டும் உரிமைக்கு குரல் எழுப்புவதைப் பார்க்கிறோம்.

ஒரு சில முக்கிய ஸ்லோகங்களை மட்டும் காண்போம்:

visR^ijya shibikaaM tasmaatpadbhyaamevopasarpatu |

samiipe mama vaidehiiM pashyantvete vanaukasaH || 6-114-30

விஸ்ரிஜ்ய  சிபிகாம் தஸ்மாத் பத்ப்யாம் ஏவ உபசர்ப்பது

ஸமீபே மம வைதேஹீம் பஸ்யந்த் வேதே வனவ் ஸஹ 

30. tasmaat= ஆகவேதான் ; upasarpatu= அவள் வரட்டும் ; padbhyaameva= கால் நடையாகவே ; utsR^ijya= விட்டுவிட்டு  shibikaam= பல்லக்கினை ; vanaukasaH= இந்த வானரங்கள் ; pashyantu= பார்க்கட்டும் ; vaidehiim= சீதையை  mama samiipe= iஎன் முன்னிலையில்

Xxx

சந்திர பாபு போன்ற நடிகர்கள் ‘உனக்காக, எல்லாம் உனக்காக; இந்த உடலும் உயிரும் ஒட்டியிருப்பது உனக்காக’ என்று திரைப்படங்களில் பாடியிருப்பதைக்  கேட்டிருக்கிறோம். ஆனால் ராமனோ உனக்காக நான் இதைச் செய்யவில்லை ரகு குலத்தின் பெயரை நிலை நாட்டவே  செய் தேன் என்று சொல்லி சீதையை மட்டம்தட்டுகிறான் . அப்போதும் அவள் வாய்திறக்காமல் உத்தமியாகவே காட்சி தருகிறாள்

இந்த யுத்தம் , என்னுடைய நண்பர்கள் உதவி மூலம் ,வெற்றிகரமாக முடிந்துவிட்டது ; ஆனால் இதை உனக்காக நான் செய்யவில்லை நீ வளமோடு வாழ்க! இது எதற்காக செய்யப்பட்டது என்பதை எல்லோரும் அறியட்டும்.என்னைப்பற்றியும், என்னுடைய குலத்தின் பெருமைக்கு இழுக்கு உண்டாகும்படியும்   குறைகூறுவோருக்காக (பதில் தரும்படி) நான் இந்த யுத்தத்தை செய்தேன் –என்கிறான் இராமபிரான்.

viditashchaastu bhadraM te yo.ayaM raNaparishramaH |

sutiirNaH suhR^idaaM viiryaanna tvadarthaM mayaa kR^itaH || 6-115-15

rakShataa tu mayaa vR^ittamapavaadam cha sarvataH |

prakhyaatasyaatmavaMshasya nyaN^gaM cha parimaarjataa || 6-115-16

விதிதாஸ்சாஸ்து  பத்ரம் தே யோஅயம் ரணா பரிஸ்ரமாஹா

சுதீர்ணாஹா ஸுஹ்ரிதாம் வீர்யான்ன த்வதார்த்தம் மயா ந க்ரியதாஹா

ரக்ஷதா து மயா வ்ருத்த மபவாதம் ச ஸர்வதாஹா

ப்ரக்யாதா ஸ்யாத்ம வம்சயா ந்யங்கம் ச பரிமார்ஜிதா

15-16. viditaH astu= நீ அறிவாயாக ; ayam yuddhaparishramaH= யுத்தம் என்ற பெயரில் நான் செய்த இது ; sutiirNaH= வெற்றிகரமாக முடிந்தது ; viiryaat=பலத்தினால்  suhR^idaam= என்னுடைய நண்பர்கள் ; na kR^itaH= செய்யயப்படவில்லை ; tvadartham= உனக்காக ; te bhadram astu= நீ மகிழ்ச்சியோடு வாழ்வாயாக !; mayaa=என்னால் இது செய்யப்பட்டது ; rakShataa= எதற்காகவென்றால்  ; vR^itam=என்னு டைய நன்னடத்தையை நிரூபிக்கவும்   ; parimaarjitaa= துடைப்பதற்காக = அவதூறு சொல்லும் ; sarvataH= பலரையும்  ; nyaNgam= குறைகூறும் பலரும் ; prakhyaatasya aatmavamshasya= என்னுடைய குலத்தைப் பற்றி

To be continued…………………….

 tags- வால்மீகி ,ராமாயணத்தில் ,பெண்கள்-3

கண்ணாடி பிரதிபலிப்பு யுக்தியைக் கையாண்டு எதிரியை செயலிழக்கச் செய் (Post No.11271)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,271

Date uploaded in London – –    17 SEPTEMBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மானேஜ்மெண்ட் வழிகள்!

கண்ணாடி பிரதிபலிப்பு யுக்தியைக் கையாண்டு எதிரியை செயலிழக்கச் செய்!

ச.நாகராஜன்

நவீன மேலாண்மை நிர்வாகம் பல யுக்திகளைக் கொண்டது.

அதில் ஒன்று : கண்ணாடி பிரதிபலிப்பு யுக்தியைக் கையாண்டு எதிரியை செயலிழக்கச் செய்! என்பதாகும்.

இதை விளக்க ஒரு குட்டிக் கதை உண்டு.

அது இதோ:

ஒரு ஊரில் வணிகன் ஒருவன் வாழ்ந்து வந்தான். செல்வத்தை இன்னும் மிகுதியாகச் சேர்க்க வேண்டும் என்ற ஆசை அவனுக்கு வந்தது. ஆகவே வெளிநாடுகளுக்குப் பயணம் செய்து வணிகம் செய்து பணத்தைச் சம்பாதிக்கலாம் என்று அவன் நினைத்தான்.

கூடவே சூக்ஷ்மமான அவன் எச்சரிக்கை புத்தி அவனை ஒரு கேள்வி கேட்டது.

“ஒரு வேளை வணிகமே செய்யமுடியாமல் போய் பணம் சம்பாதிக்க முடியாமல் நஷ்டம் அடைந்து விட்டால்? வெளி நாட்டில் என்ன நடக்கும் என்பது யாருக்குத் தெரியும்?” அவன் யோசித்தான்.

“ஒரு வேளை வெளிநாட்டு வணிகத்தில் நஷ்டம் அடைந்து விட்டால் இங்கு திரும்பி வந்து விடலாம். திருப்பி இங்கேயே வணிகத்தைச் செழிக்கச் செய்யலாம். அதற்கு  முதலீடாக ஒரு பெருமளவு பணத்திற்கு இங்கேயே இப்போதே வழி செய்து விட்டுப் புறப்படலாம்.”

இந்த எண்ணம் அவனுக்கு உற்சாகத்தைத் தந்தது.

அவன் ஒரு இரும்பு வியாபாரி.

நல்ல உயர்தர இரும்புத் தண்டுகளில் 100 டன் இரும்பை எடுத்தான்.

அவற்றைத் தனது நண்பனிடம் சென்று கொடுத்து, “நண்பா! நான் வெளிநாடு செல்கிறேன். வரும் வரை இதை பத்திரமாக வைத்திரு” என்றான்.

அந்த நண்பன் ஆவலுடன் அவற்றை வாங்கிக் கொண்டு, “சரி” என்றான்.

மாதங்கள் சில கழிந்தன. வெளிநாட்டு வர்த்தகத்தில் லாபம் வரவில்லை.

உள்ள பண்டமும் போய் நஷ்டத்தில் முடிந்தது.

வருத்தத்துடன் தன் சொந்த நாடு திரும்பினான் வணிகன்.

ஆனால் அவனுக்கு ஒரு ஆறுதல், ‘100 டன் விலை உயர்ந்த இரும்புத் தண்டுகள் உள்ளனவே, அவற்றை வைத்து நல்ல நிலையை அடைந்து விடலாம்’ என்று அவன் எண்ணினான்.

நேராக நண்பனிடம் சென்று தனது வணிகம் நினைத்தபடி நன்றாக நடக்கவில்லை என்று கூறி, “உன்னிடம் கொடுத்தேனே, இரும்புத் தண்டுகள் அவற்றைக் கொடு” என்றான்.

பேராசைக்காரனான அவனது நண்பன் திடுக்கிட்டான்.

“ஐயோ! அந்தக் கதையை ஏன் கேட்கிறாய்! அவை அனைத்தையும் பத்திரமாக என் ஷெட்டில் வைத்திருந்தேன். ஆனால் எலி வந்து அவற்றைத் தின்று விட்டது. நான் என்ன செய்வேன்?” என்றான் நண்பன்.

நண்பனின் மோசடி வணிகனுக்குப் புரிந்தது.

சற்று யோசித்து விட்டு சொன்னான்; “ஆமாம், ஆமாம், பொல்லாத எலி பற்றி எனக்குத் தெரியாதா என்ன?”

நண்பனுக்கு ஒரே குஷி. அப்படியே தான் சொல்வதை அவன் நம்பி விட்டான், சண்டையும் போடவில்லை!

இருந்தாலும் தான் மிகவும் நல்லவன் என்று அவன் நம்பவேண்டும் என்று நினைத்த நண்பன் வணிகனிடம் மறுநாள் அவனுக்கு விசேஷ விருந்து ஒன்று தரப்போவதாகச் சொல்லி அவனை அழைத்தான்.

“சரி, நாளை வருகிறேன்” என்று சொல்லி விட்டு வணிகன் கிளம்பினான்.

செல்லும் வழியில் மார்கெட்டில் நண்பனின் குழந்தைகளில் ஒன்றைக் கண்டான். அந்தக் குழந்தையை தன்னுடன் அழைத்துச் சென்று தன் வீட்டு அறை ஒன்றில் பத்திரமாகப் பூட்டினான்.

மறுநாள் குறித்த நேரத்தில் நண்பனின் வீட்டுக்கு வந்தான். அங்கே நண்பன் மிக்க வருத்தத்துடன் சோகமாக இருந்தான்.

“என்ன விஷயம்?” என்று கேட்டான் வணிகன்.

“மார்கெட்டிற்கு போன என் மகனை நேற்றிலிருந்து காணோம்!” என்று புலம்பினான்  நண்பன்.

“ஓ! அது உன் மகனா? நேற்று திரும்பும் போது மார்கெட் வழியாகத் தான் சென்றேன். அங்கு குருவி ஒன்று ஒரு பையனை தூக்கிக் கொண்டு பறந்தது. என் கண்ணால் அதை நான் பார்த்தேன்? என்றான் வணிகன்.

நண்பன், “ என்ன உளறுகிறாய். குட்டிப் பறவை குருவி! அது என் மகனை – வளர்ந்தவனை- தூக்கிக் கொண்டு போனதாகச் சொல்கிறாய்! உன் மூளை கெட்டு விட்டதா, என்ன?” என்றான்.

“நண்பா! காலம் மாறி விட்டது இப்போது, உனக்கே தெரியும்! எலியானது நூறு டன் இரும்பைத் தின்னுகின்ற காலம் இது! ஒரு சிட்டுக்குருவி குழந்தையைத் தூக்கிக் கொண்டு பறந்து போகாதா, என்ன?” என்றான்.

நண்பனுக்கு இப்போது புரிந்து விட்டது, என்ன நடந்தது என்று.

உண்மையை வணிகனிடம் ஒப்புக் கொண்டான். 100 டன் இரும்பையும் திருப்பித் தந்தான்.

வணிகனும் அவனது மகனை பத்திரமாக அவனிடம் ஒப்படைத்தான்.

சரி, கதையின் நீதி என்ன?

கண்ணாடி பிரதிபலிப்பு யுக்தியைக் கையாண்டு எதிரியை செயலிழக்கச் செய்!

இது தான் இன்றைய மானேஜ்மெண்ட் யுக்தி!

உனது எதிரிகள் உனக்கு என்ன செய்கிறார்களோ அதை அப்படியே கண்ணாடி பிரதிபலிப்பது போல அவர்களுச் செய்து விடு! அவர்களுக்குப் புரிந்த பாஷையில் நீ சொல்ல வேண்டியதைச் சொன்னால் அவர்கள் புரிந்து கொள்வார்கள்! அவர்கள் உனக்குக் கையாண்ட அதே முறையை திருப்பி விடு – கண்ணாடி பிரதிபலிப்பது போல!

உனக்கு வெற்றி நிச்சயம்

இது இந்தியாவின் நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த நீதிக் கதைகளுள் (Indian Fables) ஒன்று.

‘THE 48 LAWS OF POWER’ என்ற தனது புத்தகத்தில் Robert Greene இதை ஒரு உதாரணமாக எடுத்துக் காட்டுகிறார்! (464 பக்கங்கள்)

Disarm and infuriate with the Mirror Effect! இது தான் அவர் கூறும் நாற்பத்தி நான்காவது விதி!

**

புத்தக அறிமுகம் – 59

இது தான் இந்தியா!

பொருளடக்கம்

என்னுரை

1. இது தான் இந்தியா! – ஜிம் கார்பெட்டின் அனுபவம் – 1

2. இது தான் இந்தியா! – ஜிம் கார்பெட்டின் அனுபவம் – 2

3. இது தான் இந்தியா – ஜெஃப்ரி ஃபர்னாலின் அனுபவக் கூற்று!

4. இது தான் இந்தியா – ஹூவான் சு வாங்!

5. இந்திய ஜீவனைத் துடிக்க வைக்கும் ஏழை – ஹிந்துப் படகோட்டி!

6. துக்ளக் விரும்பிய கங்கை நீர்!

7. அக்பர் விரும்பிய அமரத்தன்மை அளிக்கும் கங்கை நீர்!

8. ஔரங்கசீப் பயன்படுத்திய கங்கை நீர்!

9. கங்கையின் புனிதம்!

10.ஹிந்து மதம் பற்றி டேவிட் ஃப்ராலி (வாமதேவ சாஸ்திரி)

11. பந்தரைத் தந்த மஹாராஜா!

12. ஹிந்துக்களின் உயரிய குணங்கள்-சில உண்மைச் சம்பவங்கள் – 1

13. ஹிந்துக்களின் உயரிய குணங்கள்-சில உண்மைச் சம்பவங்கள் – 2

14. ஹிந்துக்களின் தர்ம சிந்தனை!

15. ஹிந்து பரம்பரையின் நற்பண்புகள் எந்நாளும் தொடரும்!

16. வேதம் விளக்கும் சந்தோஷம்!

17. ஹிந்துக்களுக்கு தர்ம வாழ்வே வாழ்வு!

18. பாம்புகள் காத்த பைரவர் ஆலயம்!

19. கொள்ளைக்காரனைக் காப்பாற்றியவரைக் கண்டித்த மாமனாரும், மகனுக்கு நல்வழி காட்டிய தாயாரும்!

20. அக்பரும் சூரிய நமஸ்காரமும்!

21. பாரில் உள்ள தேசங்களில் எங்கள் தேசம் உயர் தேசம்!

22. பூர்வ குடியினரின் ஆத்திரமும் ஒரு விஞ்ஞானியின் திகைப்பும்!

23. க்ராண்ட் கான்யான் அனுபவமும் டாக்ஸி டிரைவர் தந்த வைர நகைகளும்!

24. தங்கப் பல்லக்கில் ஏற மறுத்த ராஷ்டிரபதி!

25. சேவை செய்ய வாய்ப்பு கிடைத்ததே, இது ஒரு அதிர்ஷ்ட தினம்!

26. ஜெனரல் கரியப்பா இந்திய ராணுவத் தலைமைப் பொறுப்பை ஏற்றது எப்படி?

27. தன் புடவையால் இருவரைக் காத்த பெண்மணி!

28. மற்ற மதங்களை விட ஹிந்து மதம் உயர்ந்தது-ஏன்?

29. வந்தே மாதரம்! கீதம் பிறந்த கதை!

30. வேத மந்திரங்கள் மூலம் தீ மூட்டப்பட்ட உண்மை சம்பவம்!

31. இறந்த மகளை உயிர்ப்பித்த சரஸ்வதி தேவியை வணங்கத் துவங்கிய சுல்தான் இரண்டாம் இப்ராஹீம்!

32. நமது தேசத்தின் அடையாளம்!

33. இந்தியா மறந்த, ஜப்பான் போற்றும் ஒரு மகத்தான இந்தியர்!

*

நூலில் நான் வழங்கிய என்னுரை இது :

என்னுரை

இந்தியா பூவுலகின் புண்ய பூமி. உலகின் தாயகம். இது கடவுளால் நிர்மாணிக்கப்பட்ட தேசம் என்பதை சம்ஸ்கிருத சுபாஷிதம் ஒன்று இப்படித் தெரிவிக்கிறது:

ஹிமாலயம் சமாரம்ய யாவத் இந்து சரோவரம் |
தம் தேவநிர்மிதம் தேசம் ஹிந்துஸ்தானம் ப்ரசக்ஷதே ||

இமய மலையில் ஆரம்பித்து இந்து மாகடல் வரை எது எல்லையைக் கொண்டுள்ளதோ அது கடவுளால் நிர்மாணிக்கப்பட்ட ஹிந்துஸ்தானம் என்று அறியப்படுவதாகும். புவியில் வாழும் அனைவரும் பாரத தேசத்தின் ரிஷிகளிடமிருந்து எப்படி வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதைக் கற்க வேண்டும் என்கிறது மனு ஸ்மிருதி.

ஏதத்தேச ப்ரசூதஸ்ய சகாஷாதக்ரஜன்மனா |
ஸ்வம் ஸ்வம் சரித்ரம் சிக்ஷேரன் ப்ருதிவ்யாம் சர்வமானவா: ||

இந்தப் பூமியில் வசிக்கும் அனைவரும் வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பது பற்றியும் நல்லொழுக்கம் கொள்வது பற்றியும் இந்த தேசத்தின் (பாரதத்தின்) புராதன ரிஷிகள், மகான்கள் ஆகியோரிடமிருந்து கற்க வேண்டும் – (மனு ஸ்மிருதி)

எல்லையற்ற இதன் பெருமையை பல்லாயிரக் கணக்கான சம்பவங்கள் அன்றிலிருந்து இன்று வரை நிரூபித்துள்ளன; நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.

கடல் போன்ற அந்த சம்பவங்களில் ஒரு சில திவலைகளைக் கட்டுரைகளாகப் படைத்து வந்தேன்.

இந்தியாவின் மேன்மையைச் சுட்டிக் காட்டும் கட்டுரைகள் இப்போது பல பத்திரிகைகளிலும் ப்ளாக்குகளிலும் வெளியாகி வருகின்றன.

அவற்றில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து, தொகுத்து அவ்வப்பொழுது ஆங்கிலத்தில் கல்கத்தாவிலிருந்து வெளிவரும் வார இதழான ‘ட்ரூத்’ – TRUTH வெளியிட்டு வருகிறது. அவற்றில் பலவற்றை அவ்வப்பொழுது தமிழாக்கம் செய்து தமிழ் வாசகர்களுக்கு அளித்து வந்தேன்.

இது போன்ற நல்ல கட்டுரைகளை ஆங்கிலத்தில் படிக்க விரும்புவோர் https://sdpsorg.com/truth இணைய தளத்தில் படிக்கலாம்.

‘ட்ரூத்’ ஆசிரியர் டாக்டர் திரு ஷிப் நாராயண் சென் (Dr. Shib Narayan Sen) உற்ற நண்பராக இருந்து எனக்கு அவ்வப்பொழுது ஊக்கமும் உற்சாகமும் தந்து வருகிறார். அவருக்கு எனது மனமார்ந்த நன்றி.

இந்தக் கட்டுரைகளை www.tamilandvedas.com இல் அவ்வப்பொழுது வெளியிட்டு வந்த லண்டன் திரு ச.சுவாமிநாதன் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

இந்த நூலை அழகுற வெளியிட முன் வந்த பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஜ் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கட்டுரைகள் வெளியான போது அவ்வப்பொழுது பாராட்டி எனக்கு ஊக்கமளித்த அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகுக.

நன்றி.

சான்பிரான்ஸிஸ்கோ                               ச. நாகராஜன்
31-8-2022

*

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852   

**

வால்மீகி  ராமாயணத்தில் பெண்கள் – 2 (Post.11,270)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,270

Date uploaded in London – 16 SEPTEMBER 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இந்தக் கட்டுரையின் முதல் பகுதி நேற்று வெளியிடப்பட்டது .

இந்து மதம் ஒன்றில்தான் பெண்ணுக்கு சம உரிமை அளிக்கப்படுகிறது. இதை அர்த்த நாரீஸ்வரர் சிற்பம் விளக்குகிறது (சிவன் பாதி, உமை பாதி உருவம்). மனைவிக்கு வேதத்தில் அர்த்தாங்கினி  என்று பெயர். இதை இன்று ஆங் கிலத்தில்  தி அதர் ஹாப் THE OTHER HALF என்கின்றனர். இந்து மதத்தில் வாம/ இடது பாகத்தைப் பெண்களுக்கு அளித்தனர். இதை கிறிஸ்தவர்கள் அப்படியே எடுத்துக் கொண்டனர். பைபிளின் முதல் அதிகாரத்திலேயே ஆணின் இடது விலா எலும்பை எடுத்து இறைவன் பெண்ணை உருவாக்கினான் என்று கிறிஸ்தவர்கள் எழுதிவைத்தனர். அர்த்த நாரீஸ்வரர் சிலையில் இடது பக்கம் உமை /பார்வதி இருப்பதைப் பார்த்து அவர்கள் கற்றுக்கொண்டனர். பெண்களுக்கு தர்ம பத்தினி என்று இந்து மதத்தில் பெயர்; அதாவது அவள் இல்லாமல் எந்த நல்ல காரியமும் செய்யக்கூடாது; செய்ய முடியாது. பிற மதங்களில் பெண்களுக்கு இந்த பங்கு, பணி விதிக்கப்படவில்லை. யாக யக்ஞங்களில் அவர்கள் அருகில் நிற்பதோடு அவர்கள் ஒரு தர்ப்பைப் புல்லின் மூலம் கணவனின் தோளைத் தொட்டுக்கொண்டு நிற்பார்கள். அதாவது அவர்கள்தான் BATTERY பாட்டரி; அவர்கள் மூலம் கரண்ட் பாய்ச்சப்பட்டவுடன்தான் கணவர் சக்தி பெறுகிறார். நான் இல்லாமல் நீ இல்லை என்று சொல்லுவது போன்றது இது.

XXX

இவைகளை வால்மீகி ராமாயணத்தில் (வா.ரா .)காண்போம்

சீதையை காட்டுக்கு வரவேண்டாம் ஏனெனில் சிங்கம், புலி உலவும்; காலில் முள் குத்தும்; மேலும் சந்நியாசி (No sex; celibate life) வாழ்க்கை என்று எச்சரிக்கிறான்; சீதையோ கணவன் இருக்கும் இடமே சொர்க்கம்; ராமன் இருக்கும் இடமே அயோத்தி ; கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை! சாமியே ராமப்பா என்கிறாள் .

மனைவி என்பவள் பிறவிதோறும் தொடர்ந்து வருபவள்; இதற்கு சங்கத் தமிழ் நூல்களும் இயம்பும். எற்றறைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உற்றோமே ஆவோம் உமக்கே நாம் ஆட்செய்வோம் (ஆண்டாள் திருப்பாவை 29) என்று சீதை கூறுகிறாள்:

आर्यपुत्र पिता माता भ्राता पुत्रस्तथा स्नुषा।

स्वानि पुण्यानि भुञ्जानाः स्वं स्वं भाग्यमुपासते।।2.27.3।।

Translation

आर्यपुत्र ஆர்ய புத்ர (பண்பாடுமிக்கவனே) , पिता தந்தை , माताதாய் , भ्राता சகோதரன் , पुत्रः மகன் , तथा அவ்வாறே , स्नुषा மருமகள் , स्वानि அவர்களுடைய , पुण्यानि புண்யங்களை , भुञ्जानाःஅனுபவிக்கையில் , स्वं स्वम् அவரவர்  भाग्यम् விதிப்படி , उपासते கிடைக்கிறதல்லவா

இங்கே பூர்வ ஜன்மக் கருத்து வருகிறது

ஆர்ய புத்ர பிதா மாதா ப்ராதா புத்ரஸ் ததா

ஸ் வானி புண்யானி புஞ்ஜனாஹா  பாக்யம் உபாஸதே

XXX

வா.ரா.2-27-6

यदि त्वं प्रस्थितो दुर्गं वनमद्यैव राघव।

अग्रतस्ते गमिष्यामि मृद्नन्ती कुशकण्टकान्।।2.27.6।।

“ராகவா! (ரகு வம்ச ஆண் மகனே), நீ இப்போதே காட்டுக்குப் புறப்பட்டால் , உனக்கு முன்னே நான் முட்களையும், புல்லையும் நசுக்கிக்கொண்டு நட ப்பேன் — என்று சீதை சொல்கிறாள். அதாவது உனக்கு மெத்தை போன்ற பாதையைப் போட்டுத் தருவேன்”.

राघव ராகவா , अद्यैव இப்போதே , त्वम् நீங்கள் , दुर्गम् ஊடுருவ முடியாத , वनम् காட்டுக்கு , प्रस्थितः यदि புறப்பட்டால்  कुशकण्टकान् குச புற்கள், முட்கள் மீது , मृद्नन्ती நசுக்கி மெதுவாக்கிக்கொண்டு , ते अग्रतः iஉனக்கு முன்னால் , गमिष्यामि I நான் செல்வேன்

யதி த்வம் பிரஸ்திதோ துர்கம் வானம் அத்யைவ ராகவ

அக்ரதஸ்தே கமிஷ்யாமி ம்ருத்நந்தி குச கண்டகான்

தமிழில் காதலிக்குத்தான் காதலன் இதைச் செய்வதாகக் காண்கிறோம். ஆனால் வால்மீகியோ காதலி (சீதை இதைச் செய்வதாகக் கூறுகிறார்.

XXX

भर्तुर्भाग्यं तु भार्यैका प्राप्नोति पुरुषर्षभ।

अतश्चैवाहमादिष्टा वने वस्तव्यमित्यपि।।2.27.4।।

पुरुषर्षभ ஆண்களில் சிறந்தவனே , भर्तुर्भाग्यं tகணவனுக்கு எதுவோ , एका அதை மட்டுமே , भार्या மனைவி , प्राप्नोति அடைகிறாள் , अतश्च ஆகையால் , अहमपि நானும் கூட , वने காட்டில் t, वस्तव्यमिति வசிக்கவேண்டும் l, अदिष्टा एवஎன்பதே கட்டளை (உன்னுடைய சின்னம்மா போட்ட உத்தரவு உனக்கு மட்டுமல்ல; எனக்கும்தான். ஏனெனில் ஆணும் பெண்ணும் ஒன்னு ; அதை அறியாதவன் வாயில மண்ணு )– என்று சீதை செப்புகிறாள்

பர்த்து பாக்யம் து பார்யைகா ப்ராப்னோதி புருஷ ஷர்ப

அதஸ் சைவா ஹமாதிஷ்டா வனே வஸ்த்வயம்  இதி அபி

XXX

சீதா தேவி, கணவனுக்கு ஆலோசகராகவும் காட்சி தருகிறாள் (வா.ரா. 3-9-3/4)

காமம் காரணாமாக 3 தீமைகள் ஏற்படுகின்றன.முதலில் பொய் சொல்லுவான், அதைவிடக் கொடுமையானது பிறர் மனைவி மீது ஆசைவைப்பான்;காரணமே இல்லாமல் வன்முறையில் ஈடுபடுவான் ; கடைசி இரண்டும் மிகவும் கொடுமையானவை — என்று சீதை உரைக்கிறாள்

त्रीण्येव व्यसनान्यत्र कामजानि भवन्त्युत।

मिथ्यावाक्यं परमकं तस्माद्गुरुतरावुभौ।।3.9.3।।

परदाराभिगमनं विना वैरं च रौद्रता।

अत्र இங்கே(இந்த சூழ்நிலையில்  ), कामजानि காமத்தினால் ஏற்படும் , व्यसनानि தீயவை , त्रीण्येव மூன்று மட்டுமே , उत தான் , भवन्ति இருக்கின்றன , मिथ्यावाक्यम् பொய் சொல்லுதல் , परमकम् அதிலும் பெரிது , परदाराभिगमनम् மற்றவர் மனைவியுடன் கொள்ளும் தொடர்பு  विना वैरम् விரோதமே இல்லாதபோது , रौद्रता வன்செயலில் ஈடுபடுதல் , उभौ இந்த இரண்டு  तस्मात् ஆக , गुरुतरौ மோசமானவை .

த்ரீயமேவ வ்யஸனானி  அத்ர  காமஜானி பவந்த் யுத

மித்யாவாக்யம் தஸ்மாத் குரு தரா உபெள பரதாராபிகமனம்

வினா வைரம் ச ரெளத்ரதா

XXX

வாலியின் மனைவி தாரா மகனைவிட, கணவனை அதிகமாக நேசிக்கும் காட்சியையும் படம்பிடித்துக் காட்டுகிறார் புலவர் வால்மீகி: (வா.ரா. 4-19-18)

पुत्रेण मम किं कार्यं राज्येनच किमात्मना।

कपिसिंहे महाभागे तस्मिन्भर्तरि नश्यति4.19.18।।

புத்ரேண  மம கிம் கார்யம் ராஜ்யேன  ச கிம் ஆத்மனா

கபி ஸிம்ஹே  மஹாபாகே தஸ்மின் பர்த்தாரே நஸ்யதி


कपिसिंहे வானர வம்சத்தில் சிங்கம் போன்ற , महाभागे மிகச்சிறந்த , तस्मिन् அவர்  , नश्यति सति இறந்துகொண்டு இருக்கிறார் , मम எனக்கு  पुत्रेण என்னுடைய மகனால் , किं कार्यम् என்ன பயன்  राज्येन (अपि) च இந்த ராஜ்யம் கூட  , आत्मना என் உயிரும் கூட , किम् இருந்து என்ன /பயன்??

சிங்கம் போன்ற என் கணவன் இறந்த பின்னர் என் மகனால், ராஜ் யத்தால் என்ன பயன் ? உயிர் வாழ்ந்து என்ன பயன் ? – இது வாலியின் மனைவியின் புலம்பல்/அழுகை

TO BE CONTINUED………………………………..

Tags- வால்மீகி , ராமாயணம், பெண்கள், பகுதி 2, தாரா, வாலி சீதை

செப்பு மொழி முப்பத்தி ஒன்று! (Post No.11,269)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,269

Date uploaded in London – –    16 SEPTEMBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

செப்பு மொழி முப்பத்தி ஒன்று!

ச.நாகராஜன்

1. மெஷின்களுக்கு நாம் மெஷின்கள் இல்லை என்று நிரூபிக்க வேண்டிய ஒரு காலகட்டத்தில் நாம் உள்ளோம்!

We live in an age where we have to prove to machines that we are not machines!

2.  வயதாக ஆக எனக்கும் கம்ப்யூட்டருக்கும் ஒத்துப் போகும் பல விஷயங்கள் உள்ளதைக் கண்டு கொண்டேன்.

இருவரும் நிறைய மெமரி, டிரைவுடன் ஆரம்பித்தோம். அப்புறம் இருவரும் அவுட் டேட் ஆகி விட்டோம். திடீரென்று இருவரும் எதிர்பாராத விதமாக க்ராஷ் ஆகி விட்டோம். இதன் விளைவாக இருவருமே பார்ட்ஸ்களை மாற்ற வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளோம். – வயதான ஒரு பெண்மணியின் கண்டுபிடிப்பு

The older I get more I have in common with Computers.

We both start out with lots of memory and drive, then we become outdated, crash unexpectedly, and eventually have to have our parts replaced.

–          An old woman’s findings 

3.  நான் உங்களது நவீன வசன கவிதை சிலவற்றைப் படித்தேன். அதை (கவிதையை கழட்டி விட்டு விட்டு) வசனமாக்கியது யார் என்று தான் ஆச்சரியப்படுகிறேன். – ஜான் பாரிமோர்

John Barrymore: I have read some of your modern free verse and wonder who set it free

4. வசன கவிதை எழுதுவது என்பது நெட்டை தலைகீழாக்கி டென்னிஸ் விளையாடுவது போலத் தான். – ராபர்ட் ஃப்ராஸ்ட்

Robert Frost: Writing free verse is like playing tennis with the net down.

5. நீங்கள் கவிதை எழுத விரும்பினால் பிழைப்புக்கு வேறு ஏதேனும் ஒரு வழி இருக்க வேண்டும். – டி.எஸ். எலியட்

T S Eliot: If you want write poetry you must earn a living some other way.

6. மொழி என்பது எளிதாக்கப்பட்ட சமிக்ஞை. கவிதை என்பது எளிதாக்கப்பட்ட மொழி! – ஃப்ரான்ஸிஸ் ஸ்கார்ஃப்

Francis Scarfe: Language is simplified gesture and poetry is simplified language.

7. கவிதை என்பது குரலுடன் நடனமாடுவது போன்ற ஒன்று.

Poetry is a sort of dancing with the voice

8. வசன கவிதை: மீட்டரின் மீதான மனதின் வெற்றி!

Free verse: The triumph of mind over meter.

9. நான் ஒரு ஹாலிவுட் எழுத்தாளர். ஆகவே எனது மூளையைக் கழட்டி வைத்து விட்டு ஸ்போர்ட்ஸ் ஜாக்கெட்டை அணிந்து கொண்டிருக்கிறேன்.  – பென் ஹெஸ்ட்

Ben Hecht : I’m a Hollywood writer, so I put on a sports jacket and take off my brain.

10. காலம் ஒரு சர்க்கஸ், மூட்டை கட்டிக்கொண்டு நகர்ந்து கொண்டே இருக்கும்.

Time is a circus always packing up and moving away.

11. வார்த்தைகள் உங்களை ஒரு எண்ணத்தைச் சிந்திக்க வைக்கும். இசை உங்களை ஒரு உணர்வை உணர வைக்கும். பாட்டு உங்களை ஒரு எண்ணத்தை உணர வைக்கும். ஸாண்டிஸ்

ஈ.ஒய். ஹார்பர்க் மேற்கோள் (1896-1981 அமெரிக்காவின் பிரபலமான பாடலாசிரியர், இடதுசாரி சிந்தனையுள்ளவர்)

“Words make you think a thought. Music makes you feel a feeling. A song makes you feel a thought.” santiz

E. Y. Harburg quotes (1896-1981 american popular lyricist leftist views sympathizer)

12. கஞ்சனுக்கு எப்போதும் தேவை உண்டு!

The miser is always in want!

13. தொட்டிலை ஆட்டும் கையே உலகை ஆள்கிறது!

The hand that rocks the cradle rules the world!

14. போதை மருந்தைப் புகைப்பவன் எப்படியாவது போதை மருந்தைக் கண்டுபிடிப்பான்.

An opium smoker will always find opium.

15.  கர்வமுள்ள ஒருவனின் மனமும் ஒரு பிச்சைக்காரனின் திருவோடும் என்றுமே ஒத்துப் போகாது.

A proud mind and a beggar’s purse agree not together.

16. நர்ஸ்கள் குழந்தைக்கு ஒரு துண்டு இனிப்பைக் கொடுத்து விட்டு அந்தச் சாக்கில் இரண்டு துண்டை தன் வாயில் போட்டுக் கொள்வர்.

Nurses put one bit in the child’s mouth and two in their own.

17. அவனை நான் ஏன் அடித்தேன் என்றால் அது உன்னை பயமுறுத்தத் தான்!

I beat him to frighten you!

18. ஒரு எதிரி என்பது மிகவும் அதிகம், நூறு நண்பர்கள் என்பது மிகவும் குறைவு!

One enemy is too many, a hundred friends too few.

19. வெப்பத்தைத் தாங்க சக்தி இல்லையெனில், சமையலறைக்குள் போகாதே!

If you can’t take the heat, stay out of the kitchen.

20. நடப்பது நடந்தே தீரும்!

What will be, will be!

21. துரோகம் செய்யும் நண்பனை விட வெளிப்படையாக உள்ள எதிரியே மேல்!

Better an open enemy than a false friend!

22. வறுமை வாசல் கதவைத் தட்டி விட்டு உள்ளே வரும் போது, காதல் ஜன்னல் வழியே வெளியே பறக்கும்!

When poverty comes in at the door, love flies out of the window!

23.  நாற்பது வயதிலும் நீ முட்டாள் என்றால் நிஜமாகவே நீ ஒரு முட்டாள் தான்!

A fool at forty is a fool indeed!

24. அவன் போப்பை விட பெரிய கத்தோலிக்கன்!

More catholic than the Pope!

25. நாக்கே தலையைக் காக்கும்!

The tongue is the protector of the head!

26. தாடி, கத்தரிக்கோல்- இரண்டுமே உன்னிடம் தான் இருக்கிறது!

The beard and the scissors are both in your hand!

27. பள்ளத்திலிருந்து வெளியே வந்தவன் கிணற்றில் விழுந்தானாம்!

Came out of the ditch and fell into the well!

28. மதில் மேல் எலிகள் உண்டு, எலிகளுக்கு காதுகள் உண்டு!

There are mice in the wall, and mice have ears.

29. சாவைத் தவிர மற்ற அனைத்திற்கும் ஒரு தீர்வு உண்டு!

There is a remedy for everything but death!

30. தூக்கம் என்பது சாவின் சகோதரன்!

Sleep is the brother of death!

31. அவர்களை ஜெயிக்க முடியவில்லை என்றால், அவர்களோடு சேர்ந்து விடு!

If you can’t beat them, join them!

பல தேசங்களில் வழங்கும் பழமொழிகள் ஒரே மாதிரியாக இருப்பது அதிசயமே! எங்கு வாழ்ந்தாலும் மனிதர்கள், மனிதர்களே!!

***

.

புத்தக அறிமுகம் – 58

தெய்வீக இரகசியங்கள்!

 பொருளடக்கம்

என்னுரை

1. விநாயக சதுர்த்தி வழிபாட்டின் இரகசியங்கள்!

2. திருவிளக்கு ஏற்றுவோம், செல்வச் சிகரம் ஏறுவோம்!

3. கலைமகளே, கடவுளர் தெய்வமே, கண் கண்ட தெய்வமே சரணம்!

4. லலிதா சஹஸ்ரநாமம் சொல்வதில் ஒரு இரகசியம்!

5. அனைத்து தெய்வங்களும் ஐக்கியம் : கேட்பதைக் கொடுக்கும் காமதேனு!

6. ஆடி மாதமும் அன்ன தானமும்!

7. சில சம்வாதங்களின் சுருக்கம்!

8. எந்தக் கேள்விக்கும் இதோ பதில்! இந்து மதம் வழங்கும் சம்வாதங்கள்!!

9. உயிர் காக்க உதவும் ஸ்தோத்திரங்கள்!

10. கஷ்டம் போக்கி இஷ்ட பூர்த்தி அருளும் (100) அஷ்டகங்கள்!

11. ஆச்சரியமூட்டும் சூரிய பூஜை ஸ்தலங்கள்!

12. நித்ய கல்யாணம் பச்ச தோரணம்! எத்தனை எத்தனை பண்டிகைகள்!

13. சீதா தேவி கூறிய கடைசிச் சொற்கள்!

14. அதிசயங்கள் பல கண்ட அற்புத பூமி அயோத்தி!

15. ரிஷிகள் தவம் புரியும் தலம் ரிஷிகேசம்; மோட்சத்தின் வாயில் ஹரித்வார்!

16. கைலாய யாத்திரைக்குப் புதிய சாலை!

17. இமயத்தில் சிவனது திருவிளையாடல்!

18. நுண்ணறிவை முழு ஆற்றலுடன் தரும் வேத கல்வி!

19. இந்துக்கள் சூரியனிடமிருந்து மந்திர ஒலியை எப்படிக் கேட்டார்கள்?!

20. விபூதி மஹிமை – 1

21. விபூதி மஹிமை – 2

22. விபூதி மஹிமை – 3

23. யாளி!

24. குருவுக்கா, கோவிந்தனுக்கா, யாருக்கு முதல் நமஸ்காரம்?!

25. தர்க்கம் பெரிதா, ஞானம் பெரிதா?

26. மௌனம் சர்வார்த்த சாதனம்!

27. ஒரு ரிஷியைச் சந்தித்த அரசன்!

28. கயிறு சார்த்திப் பார்த்தல்!

29. நான் ஏன் நன்றாக இருக்கிறேன்?

*

நூலில் நான் வழங்கிய என்னுரை இது :

என்னுரை

ஹிந்து தர்மம் ஒரு மதம்;

மதம் மட்டுமல்ல அது ஒரு தத்துவம்;

அது ஒரு தத்துவம் மட்டுமல்ல; அது ஒரு வாழ்க்கை முறை என்று பலரும் புகழ்ந்து பாராட்டும் சனாதன தர்மத்தில் மனிதனின் வாழ்க்கையை உயர்த்திச் செல்லும் ஏராளமான இரகசியங்கள் உள்ளன.

பிறந்தது முதல் இறப்பது வரை கர்ம பலன்களை அனுபவிப்பது உறுதி என்ற தலையாய கொள்கையை இந்து மதம் தருகிறது.

அதே சமயம் உன் தலை விதியை நீயே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்றும் அது வலியுறுத்துகிறது.

தர்ம, அர்த்த, காமம் இவற்றுடன் மோக்ஷத்திற்கான வழியையும் காண்பித்து வாழ்வாங்கு வாழ வழி வகுக்கிறது சனாதன தர்மம்!

உத்தரேத் ஆத்மனாத்மானம் – ஆத்மாவை ஆத்மாவால் உயர்த்திக் கொள்க என்பது கண்ணபிரானின் கீதை அறிவுரை.

அதாவது உன்னை நீயே உயர்த்திக் கொள் என்பது இந்து மதத்தின் சாரம்.

இதற்கான வழிமுறைகளை, இரகசியங்களை நமது வேதம், புராணம், இதிஹாஸம், உபநிடதம், சாஸ்திரங்கள் உள்ளிட்டவற்றில் காணலாம்.

இந்த வழிமுறையில் தோன்றிய ரிஷிகள், அருளாளர்கள், மகான்கள், யோகிகள், சித்தர்கள் ஏராளமான துதிகளையும் இதர வழிமுறைகளையும் நாம் மேம்படுவதற்காக நமக்கு வழிகாட்டி அருளியுள்ளார்கள்.

அவற்றைச் சுட்டிக் காட்டி பல கட்டுரைகளை ஞான ஆலயம், மாலை மலர் உள்ளிட்ட பத்திரிகைகளிலும் www.tamilandvedas.com ப்ளாக்கிலும் எழுதி வந்துள்ளேன்.

அவற்றின் தொகுப்பே இந்தக் கட்டுரைகள்.

இவற்றை அவ்வப்பொழுது வெளியிட்டு எனக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்த மாலைமலர் அதிபர் திரு பாலசுப்ரமண்யன் ஆதித்தன் அவர்களுக்கும், ஞான ஆலயம் ஆசிரியர் திருமதி மஞ்சுளா ரமேஷ் அவர்களுக்கும், தமிழ் அண்ட் வேதாஸ் ப்ளாக்கைத் திறம்பட கடந்த பல வருடங்களாக நடத்தி வரும் லண்டன் திரு எஸ். சுவாமிநாதன் அவர்களுக்கும் எனது உளமார்ந்த நன்றி.

இந்த நூலை அழகுற வெளியிட முன் வந்த பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஸ் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கட்டுரைகள் வெளியான போது அவ்வப்பொழுது வியக்கத்தக்க வகையில் எனக்கு ஊக்கமளித்த அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகுக.

இந்தக் கட்டுரைகள் காட்டும் நெறிகள் மூலம் ஒருவர் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையுடன் இதைத் தமிழ் நெஞ்சங்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்.

நன்றி.

சான்பிரான்ஸிஸ்கோ                        ச. நாகராஜன்
23-8-2022

*

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852   

**

வால்மீகி ராமாயணத்தில் பெண்கள்-1 (Post No.11,268)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,268

Date uploaded in London – 15 SEPTEMBER 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

வேத காலம் முதல் இந்தக் காலம் வரை பெண்களை வழிபடும் மதம் இந்துக்களின் மதம் மட்டுமே. பெண்களின் பெயரில் பல விரதங்களும் பண்டிகைகளும்  இருப்பது இதற்குச் சான்றாகும். மேலும் பெண்களை அழும்படி செய்தால் அந்தக் குடும்பம் வேரோடு அழியும் என்று மநு நீதி நூல் கூறுகிறது. மேலும் பெண்களுக்கு அவர்களுடைய சகோதரர்கள் ஏராளமான நகை நட்டுக்கள், துணி மணிகளை வாங்கிக் கொடுத்து அவர்களை எப்போதும் மகிழ்ச்சிக் கடலில் மிதக்கவிட வேண்டும் என்றும் மநு ஸ்ம்ருதி சொல்கிறது . பெண்களை சின்ன  வயதில் பெற்றோர்களும் இளம் வயதில் கணவர்களும் முதிய வயதில் மகன்களும் காப்பாற்றுவதை இன்றுவரை காண்கிறோம். ( இலங்கைத் தமிழர்கள் மட்டும் சிறிது மாற்றி இருக்கிறார்கள். முதிய வயதில் பெண்கள், மகள் (daughters)களுடன்தான் வாழவேண்டும்)

பெண்களை இந்துக்கள் பல கோணங்களில் அணுகுகிறார்கள். இதை சம்ஸ்க்ருத நூல்களிலும் தமிழ் நூல்களிலும் காணலாம். தாய் (Mother) என்ற நிலையில் வைத்துப் பார்க்கும்போது மிகவும் புகழ்வார்கள். மனைவி (wife) என்ற நிலையில் வைத்துப் பார்க்கையில் அழகு, அன்பு, காதல் கதைகளை வீசுவார்கள்; விலைமகள் (Prostitute) என்னும்போது சகதியை வாரி வீசுவார்கள். இதைத் திருக்குறள், கம்பராமாயணத்தில் கூடக் காண்கிறோம்.

வேத காலம் முதல் இதிஹாஸ காலம் வரை பெண்கள் கொடிகட்டிப் பறந்தார்கள் .கார்கி அபாலா விஸ்வ வாரா விஸ்பலா லோபாமுத்ரா ஆகிய வேதகாலப் பெண்கள் அக்காலப் பெண்களை நமக்குப்  படம்பிடித்துக் காட்டுகின்றனர். சுமார் 20 பெண்களுக்கு மேலாக வேத மந்திரங்களை இயற்றியள்ளனர் . அவற்றை இன்று வரை ஆண்கள், வேத பாட சாலைகளில் மனப்பாடம் செய்யவேண்டும் !

மஹாபாரத காலத்தில் சூதாட்டம் என்னும் கொடுமையில் சிக்கிய திரவுபதி எழுப்பும் கேள்விகள் பெண்களின் உரிமைப் போராட்டத்தைக் காட்டுகிறது. இந்தக் கட்டுரையில் வால்மீகி  ராமாயண (வா.ரா ) காலப் பெண்களின் நிலையைக் காண்போம் .சீதைஅனுசுயா (அனசூயா என்பது சரியான உச்சரிப்பு )அருந்ததி ஆகியோர் மிகவும் போற்றப்படுகின்றனர். இன்றுவரை பெண் குழந்தைகளுக்கு அந்தப் பெயர்களும் சூட்டப்படுகின்றன. அவர்களுக்கும் முன்னர் வாழ்ந்த தமயந்திசாவித்ரி பெயர்களும் இன்றுவரை புழக்கத்தில் உள்ளன.

Women in Valmiki Ramayana

வா .ரா . காலத்தில் பெண்கள் அந்தப்புரத்தில் ஒதுங்கி வாழவில்லை. வேத காலம் போலவே சுதந்திரப் பறவைகளாக இருந்தனர். ராமனை அயோ த்திக்குத் திரும்பி வாருங்கள் என்று கெஞ்சிக் கேட்க பரதன் சென்றான். அப்போது அவனுடன் தாய்மார்கள் , அதாவது இறந்துபோன தசரதனின் மனைவிமார்கள், அனைவரும் சித்ரகூடத்துக்குச் சென்றனர். புற நானூற்றில் காணப்படும் ‘சதி’ என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கம் இல்லை. ஆகையால் தசரதனுடன் அவர்கள் இறக்கவில்லை. மநு நூலும் ‘சதி’ பற்றி ஒரு விதியும் இயற்றவில்லை.

விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள்

வேதகாலத்தில் பெண்கள் அலங்காரம் செய்துகொண்டு விழாக்களுக்குச் சென்ற காட்சிகள் உள்ளன. இதை வா.ரா. விலும் காணலாம் இளம்பெண்கள் நகை நட்டுக்களை அணிந்துகொண்டு தெருக்களில் திரிந்த காட்சிகளை வால்மீகி நம் கண் முன் வைக்கிறார்.அத்தகையோரைக் காண்பது சுப சகுனம் என்றும் கருதப்பட்டது.

பட்டாபிஷேக விழாவானாலும், பெரியோரை வரவேற்கும் நிகழ்ச்சியானாலும், பெரிய யாக யக்ஞங்களானாலும் சரி, இளம் பெண்கள் அங்கே இருந்ததை  வா . ரா  குறிப்பிடுகிறது

அரசர் என்பவர்கள், தனக்குப்பின்னர் ஆட்சி புரிய வாரிசு வேண்டும் என்று விரும்புவது இயற்கையே. ஆகையால் மகனுக்கு தசரதன் ஏங்குவதை வால்மீகி முதலிலேயே சித்தரிக்கிறார். தற்கால அரசியலில் கூட, ஜனநாயக நடைமுறைகள் இருந்தாலும் கூட , தலைவர்களின் மகன்களுக்கே பதவி கிடைக்கிறது ; மகன் இல்லாவிடில்தான் புதல்விகள் தலை எடுக்கின்றனர்.

பெண் குழந்தைகளை யாரும் வெறுக்கவில்லை. ஆனால் என்றோ ஒருநாள் அவள் கல்யாணம் ஆகி வேறு ஒருவனுடன் வாழப்போகிறாள்; தன்னுடன் கடைசிவரை இருக்கப்போவதில்லை என்பதை அறிந்த தாய்மார்கள் புத்திராக்களுக்காக ஏங்கியதில் வியப்பில்லை. மேலை நாடுகளைப் போல அல்லாமல், கூட்டுக்குடும்பம் நடத்தினர் இந்துக்கள். மேலை நாடுகளில் வயதான பெண்கள், முதியோர் இல்லங்களில் தனிமையில் (Lonely) வாடி வதங்குகின்றனர்.அல்லது கிழவிகளாகக் கூடி பிங்கோ, (Bingo, Playing Cards) சீட்டாட்டமாடிப் பொழுதைக் கழிக்கின்றனர் .

சீதை மீது ஜனகன் அன்பு மழை பொழிந்ததை வா.ரா. வில் காண்கிறோம் .குஷ நாப என்னும் சந்திரவம்ச அரசன் ஒரு நாட்டிய தாரகை மீது காதல் கொண்டு அவளை மணந்து சீரும் சிறப்புடனும் ஆட்சி செலுத்தினான். நாட்டிய பேரழகியின் பெயர் கிருதாச்சி. அவனுக்கு 100 பெண் குழந்தைகள் பிறந்தன. அவர்கள் ஆடல், பாடல் , விளையாட்டுக்களில் ஈடுபட்டதை வா.ரா . வருணிக்கிறது 1-32-13

कुशनाभस्तु राजर्षि: कन्याशतमनुत्तमम्।

जनयामास धर्मात्मा घृताच्यां रघुनन्दन।।1.32.11।।

குச நாபஸ்து ராஜரிஷிஹி கன்யாசதம் அநுத்தமம்

ஜனயாமாஸ தர்மாத்மா க்ருதாச்யாம் ரகுநந்தன

ஓ ரகு நந்தன!

க்ருதாச்சி என்னும் தேவதை மூலம் ராஜரிஷி போல ஆண்டுவந்த குஷனாபன் மிகவும் அழகான நூறு பெண்களைப் பெற்றான் 1-32-11

तास्तु यौवनशालिन्यो रूपवत्य स्स्वलङ्कृता:।

उद्यानभूमिमागम्य प्रावृषीव शतह्रदा:।।1.32.12।।

தாஸ்து யெளவன சாலின்யோ  ரூபவத்ய ஸ்வலங்க்ருதா

உத்யான பூமிம்  ஆகத்ய பிராவ்ருஷீவ சதஹ்தாஹா 

गायन्त्यो नृत्यमानाश्च वादयन्त्यश्च सर्वश:।

आमोदं परमं जग्मुर्वराभरणभूषिता:।।1.32.13।।

காயந்த்யோ ந்ருத்யமாநாஸ்ச வாதயன்த்யஸ்ச ஸர்வசஹ

ஆமோதம் பரமம் ஜக்முவர் ராபர்ண பூஷிதாஹா

நன்கு அலங்காரம் செய்துகொண்ட அந்த ரூபவதிகள்/அழகிகள்

 கேளிக்கைப் பூங்காக்களில்  பாடிக்கொண்டும்ஆடிக்கொண்டும்,

வாத்தியங்களை வாசித்துக்கொண்டும் அணிகலன்களை அணிந்தவாறு

 எல்லா திசைகளிலும் ஆடி,ஓடித் திரிந்தனர் மழைக்கால

 மின்னல்கொடிகள் போன்று தோன்றிய அவர்கள் இன்பம் அடைந்தனர்.  1-32-12/13

अथ ताश्चारुसर्वाङ्ग्यो रूपेणाप्रतिमा भुवि।

उद्यानभूमिमागम्य तारा इव घनान्तरे।।1.32.14।।

அத தாஸ் சாரு சர்வாங்கம்யோ ரூபேணா ப்ரதிமா புவி

உத்யான பூமிமாகத்ய தாரா இவ கணாந் தரே

இந்தப் பூவுலகில் ஈடு இணையற்ற உடல் உறுப்புகளை பெற்ற அப்பெண்கள், பூங்காக்களில் உலவியது மேகங்களுக்கு இடையில் பளிச்சிட்ட நடசத்திரங்ககளைப் போல இருந்தது (1-32-14)

சமுதாயத்தில் பெண்கள் தடையின்றி உலவியதுடன்  தோழிகளுடன் , பல இடங்களுக்குச் சென்று வந்ததையும் படிக்கிறோம் வா.ரா (.7-2-9)

அந்தக் காலத்தில், குழந்தை இல்லாதவர்கள், பெண் குழந்தைகளை தாராள மாக , மனமுவந்து சுவீகாரம்/ தத்து  எடுத்தனர். லோமபாதர் (ரோமபாத என்றும் சொல்லுவர்) என்பவருக்கு வாரிசுகள் இல்லை. ஆகையால் அவர் தசரதன் மகளான சாந்தாவை, தத்து எடுத்து தனது சொந்த மகளாக வளத்தார் (வா.ரா .1-11-5, 1-11-19)

ஆயினும் பெண்களைக் கல்யாணம் செய்துதரும் வரை பெற்றோர்கள் கவலைப்பட்டதையும் வால்மீகி நமக்குக் காட்டுகிறார். வயதுக்கு வந்துவிட்ட சீதையை மணம் முடித்துத் தர ஜனகன் பட்ட கஷ்டத்தை வ ருணிக்கையில்  வறுமையில் வாடியவனுக்கு பணமே கிடைக்காத நிலையை உவமையாகப் பயன்படுத்துகிறார் வால்மீகி (வா.ரா .7-9-9)

சங்க நூல்களில் ஒன்றிலும் இதே கருத்து வருகிறது. வீட்டை விட்டு ஓடிப்போன, ஒரு  பெண்ணைத் தேடி வரும் தாய், வழியில் ஒரு பெரியவரைச் சந்தித்து இந்த அங்க அடையாளம் உடைய ஒரு பெ ண்ணைக்  கண்டீர்களா? என்று கேட்டபோது அவள் நல்ல ஆடவனுடன் செல்கிறாள்; கவலைப்படாதே; என்றோ ஒரு நாள் அவள் இப்படி மணம் முடித்துச் செல்ல வேண்டியவள்தானே என்று ஆறுதல் கூறுகிறார்.

To be continued…………………………………

 tags- பெண்கள், வால்மீகி , ராமாயணம், குசநாபன், இன்பம், மகிழ்ச்சி 

அறிவியல் அறிஞர் வாழ்வில்…7 (Post No.11,267)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,267

Date uploaded in London – –    15 SEPTEMBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அறிவியல் அறிஞர் வாழ்வில் …   7

ச.நாகராஜன்

                
தன்னையே இதய ஆய்வுக்கு உட்படுத்திய விஞ்ஞானி!

வெர்னர் ஃபார்ஸ்மேன்  (Werner Forssman -பிறப்பு 29-8-1904 மறைவு 1-6-1979) நோபல் பரிசு பெற்ற ஒரு ஜெர்மானிய விஞ்ஞானி.

‘தன் இதயத்தைத் தானே தொட்டவர்’ என்ற பெயர் அவருக்கு உண்டு.

இதற்கான காரணம் அவர் தன்னையே இதய ஆய்வுக்கு உட்படுத்திக் கொண்டது தான்!

அவரது டாக்டர் இப்படிச் செய்யக்கூடாது என்று அவரை கண்டிப்பாகச் சொல்லி இருந்தார்.

ஆனால் அவர் அதைப் பொருட்படுத்தவில்லை. ஜெர்டா டிட்ஜென் (Gerda Ditzen) என்ற நர்ஸிடம் நைஸாகப் பேசி தன்னை சோதனைக்கு உட்படுத்திக் கொள்ள உதவி செய்யுமாறு வேண்டினார்.

டிட்ஜென் அறுவை சிகிச்சை செய்யும் அறையில் அனைத்து உபகரணங்களையும் அறையையும் தூய்மையாக இருக்கச் செய்யும் பணியில் திறம்பட வேலை பார்த்து வந்தவர். அவர் இதற்கு ஒப்புக் கொண்டார் – ஒரு நிபந்தனையின் பேரில்.

இப்படி செருகு குழாயை இதயத்த்தில் செருக வைப்பதை தன் மீது தான் சோதித்துப் பார்க்க வேண்டும் என்றும், அவரை சோதனைக்கு உட்படுத்திக் கொள்ளக் கூடாது என்பதும் தான் அந்த நிபந்தனை.

ஃபார்ஸ்மேன் ஒப்புக் கொண்டார். ஆனால் தந்திரமாக டிட்ஜெனைப் படுக்கையில் கட்டிப் போட்டு விட்டு தன் கையில் 60 சென்டிமீட்டர் நீளமுள்ள குழாயைச் செருகினார். எக்ஸ்ரே ரூமுக்கு ஓடினார்.

அது இதயம் வரை சென்றது.

இது பின்னால் அனைவருக்கும் தெரிய வந்தது.

இதய சம்பந்தமான வியாதிகளுக்கு இவரது கண்டுபிடிப்பு பெரிதும் உதவி செய்தது.

அவரை அனைவரும் புகழ்ந்தாலும் கூட அனுமதியின்றி இப்படிச் செய்ததற்காக  அவரை அவரது ஜெர்மானிய புரபஸரான சாயர்ப்ரூச் டிஸ்மிஸ் செய்து விட்டார்.

பின்னால் 1956இல் அவர் நோபல் பரிசு பெற்றார்.

12

உணவு விடுதியில் நாப்கினில் கண்டுபிடிக்கப்பட்ட MRI கண்டுபிடிப்பு!

பிரபல விஞ்ஞானியான பால் சி. லாடர்பர் (Paul C. Lauterber) 2003ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானி.

(பிறப்பு 6-5-1929 மறைவு 27-3-2007)

கதிரியக்க பாதிப்பு இல்லாமல் மனித உடலின் உட்பகுதிகளைப் பார்க்க வழி வகுத்தவர் இவர் தான்!

எக்ஸ்ரே மூலமாக இல்லாமல், மாக்னெடிக் ரெஸொனன்ஸ் இமேஜிங் – எம் ஆர் ஐ (Magnetic Resonance Imaging – MRI) எனப்படும் உடலின் உட்பகுதிகளையும் மெல்லிய திசுக்களையும் பார்க்க வழி வகுக்கும் வழிமுறை இவரால் உருவாக்கப்பட்டது.

1980இல் உலகெங்கும் நடைமுறைக்கு வந்த இந்த எம் ஆர் ஐ வருடந்தோறும் சுமார் ஆறு கோடி பேர்களுக்கு செய்யப்படுகிறது.

இது மூளை மற்றும் முதுகுத் தண்டுவடத்தை நன்கு கண்காணித்து எந்த வியாதி எப்படி இருக்கிறது என்பதைக் கணிக்க உதவுகிறது. மூட்டு ஜாயிண்ட் உட்பட்ட பல மூட்டுகளைக் கண்காணிக்கவும் உதவுகிறது.

இது கண்டுபிடிக்கப்பட்ட விதம் சுவையானது. ஒரு நாள் லாடர்பர், உணவுவிடுதி ஒன்றில் உட்கார்ந்து கொண்டிருந்தார். திடீரென்று உத்வேகம் பெற்ற அவர் அருகிலிருந்த நாப்கினை எடுத்து அதில் வரைய ஆரம்பித்தார். அது தான் எம் ஆர் ஐ கண்டுபிடிக்க வழி வகுத்தது!

13

ஆர் என் ஏ கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம்!

சிட்னி ஆல்ட்மேன் (Sidney Altman)இரசாயன இயலில் 1989ஆம் ஆண்டு நோபல் பரிசைப் பெற்றவர். ஆர் என் ஏ (RNA( எனப்படும் ரிபோ நியூக்ளிக் ஆசிட் (Ribonucleic Acid) பற்றிய கண்டுபிடிப்பைக் கண்டுபிடித்தவர் இவர். (பிறப்பு 7-5-1939 மறைவு 5-4-2022).

கெமிக்கல் ரீ ஆக்‌ஷன் எனப்படும் இரசாயன எதிர்வினையாற்றலைச் செய்ய புரோட்டீன்கள் மிகவும் தேவை என்பதை இவர் நிரூபித்தார்.

2010இல் இவர் ஹாரி க்ரெய்ஸருக்கு அளித்த ஒரு பேட்டியில் தான் இதை தற்செயலாகக் கண்டுபிடித்ததாகக் கூறினார்.

ஆர் என் ஏ மாலிக்யூலை அவர் ஆராய்ந்த போது அது புதிய புரோட்டீன்களை உருவாக்க எப்படி மரபணு குறியீட்டைக் கொண்டு செல்கிறது என்பதை ஆராய ஆரம்பித்தார். அவரே ஆச்சரியப்படும்படி, ஆர் என் ஏ மாலிக்யூல் இல்லாமல் புரோட்டீன் ஒரு என்ஜைம் போல வேலை செய்வதில்லை என்பதைக் கண்டுபிடித்தார். பின்னால் புரோட்டீனே இல்லாமல் கூட ஆர் என் ஏ மாலிக்யூல் ஒரு கிரியா ஊக்கிபோல செயல்படுகிறது என்பதைக் கண்டுபிடித்தார். அதுவரை அனைவரும் எண்ணி வந்ததற்கு மாறாக இந்தக் கண்டுபிடிப்பு அமையவே  அனைவரும் வியந்தனர். அவர் உலகப் புகழ் பெற்றார்!

**

புத்தக அறிமுகம் – 56

அறிவியல் துளிகள் – பாகம் – 16

பொருளடக்கம்

என்னுரை

392. ஹிட்லரின் சித்திரவதை முகாமில் புதிய உளவியல் சிகிச்சை முறையைக் கண்டுபிடித்தவர்!

393. 2022இல் விண்வெளியில் இந்திய வீரர்!

394. விண்வெளி ஆயுதங்கள் – 1

395. விண்வெளி ஆயுதங்கள் – 2

396. அறிவியல் வியக்கும் இசை!

397. ஆபரேஷன் ஃபைனல் – ஹாலிவுட் திரைப்படம்! – 1

398. ஆபரேஷன் ஃபைனல் – ஹாலிவுட் திரைப்படம்! – 2

399. தங்க புத்தர்!

400. அமெரிக்காவிற்கு கொலம்பஸின் பெயர் ஏன் சூட்டப்படவில்லை?

401. இன்றைய உலகின் மெமரி மன்னன் யார்?

402. மனிதரின் ஐந்தாயிரம் முகங்கள் அறியும் திறன்!

403. ஒபிஸிடி கோட் – 1

404. ஒபிஸிடி கோட் – 2

405. அமேஸிங் க்ரெஸ்கின்!

406. மரணமடைந்த பின் மீண்டவர்கள் பற்றிய அறிவியல் ஆய்வுகள்! – 1

407. மரணமடைந்த பின் மீண்டவர்கள் பற்றிய அறிவியல் ஆய்வுகள்! – 2

408. புனர் ஜென்மம் பற்றிய அறிவியல் ஆய்வுகள்! – 1

409. புனர் ஜென்மம் பற்றிய அறிவியல் ஆய்வுகள்! – 2

410. ஒவ்வொருவருக்கும் இரு உடல்கள் உண்டா?

411. உங்களுக்கு ஆறாவது அறிவு இருக்கிறதா?

412. ஜகதீஷ் சந்திர போஸை ஊக்குவித்த நிவேதிதா தேவி!

413. வாழ்க்கையை மாற்றப் போகும் அதிரடிக் கண்டுபிடிப்புகள் தயார், தயார்!

414. நமது மூளையுடன் கம்ப்யூட்டர் இணைக்கப்படும் நாளைய வாழ்க்கை!

415. சந்திரனை முதலில் படமாக வரைந்தவர்!

416. இனி விண்வெளியில் மனிதன் வாழமுடியும்!

முடிவுரை

*

நூலில் நான் வழங்கிய என்னுரை இது :

என்னுரை

இன்றைய நவீன உலகில் அறிவியலின் பங்கை அனைவரும் அறிவோம்; உணர்வோம்.

ஆகவே அறிவியலில் எதையெல்லாம் முக்கியமாக உணர்கிறோமோ அதையெல்லாம் முடிந்த அளவு அறிந்து கொள்ள வேண்டியது சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரது கடமையும் ஆகும்

இந்த வகையில் பாக்யா வார இதழில் அறிவியல் சம்பந்தமான நூற்றுக் கணக்கான கட்டுரைகளை எழுதி வரலானேன்.

எனது இனிய நண்பரும், மிகச் சிறந்த திரைப்பட கதாசிரியரும், நடிகரும், பாக்யா இதழின் ஆசியருமான திரு கே. பாக்யராஜ் அவர்களுக்கு அறிமுகமே தேவை இல்லை. அனைவர் உள்ளத்தையும் கொள்ளை கொண்ட பண்பாளர் அவர்.

அவர் தந்த ஊக்கத்தினால் பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் என்ற தொடரை ஆரம்பித்தேன்.

4-3-2011இல் ஆரம்பித்து எட்டு வருடங்களுக்கும் மேலாக வெற்றி நடை போடும் அறிவியல் துளிகளை வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க 

பாகம் பாகமாக வெளியிட முடிந்தது.

இந்த நூல் – பதினாறாம் பாகம் – எட்டாம் ஆண்டில் 27ஆம் வாரம் முதல் வெளியான 392 முதல் 416 முடிய உள்ள 25 அத்தியாயங்களின் தொகுப்பாகும்..

ஒவ்வொரு அத்தியாயமும் தனித்தனியே வெவ்வேறு அறிவியல் அம்சத்தை விளக்குவதால் இதை எந்தப் பகுதியிலிருந்தும் படிக்கலாம் என்பதே இந்த நூலின் தனிச் சிறப்பு.

இந்தப் புத்தகத்தை வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

தொடராக வந்த போது என்னை ஊக்குவித்த பல்லாயிரக்கணக்கான வாசகர்களுக்கு எனது அன்பு கலந்த நன்றி.

அறிவியல் கற்போம்; அறிவியலைப் பரப்புவோம்!

நன்றி

பங்களூர்
14-5-2022

ச.நாகராஜன்

*

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852   

**