Praņām Santanam Swāmināthan ji, please express your opinion on the etymological derivation done below.
🙏🙏🙏
Milk
In Tamiļ (Tamizh), the word for milk is பால் (paal). The same (paal) becomes (paalu) in Telugu and (haalu) in Kannađa due to (pa ha interchangeability rule at beginning in Kannađa). Now every Tamizh word, needs to have a verbal root from which it can be derived. The same is the condition with Veda Bhāşā (Samskritam). For every word, you need to have the verbal roots. Bishop Robert Caldwell, the well known Christian missionary who is primarily responsible for all anti Vedic, anti Samskritam and anti Bhāratam news that you hear from Tamil Nāďu very openly expressed that there is no verbal root in Tamizh from which the word (paal) for milk can be derived. Now if we explore in Veda Bhāşā (Samskritam), there is a verbal root (paa) which means to drink. All humans when they are born, they at first drink the milk of their mother. Hence it can be stated without any doubt that the word (paal) for milk in Tamizh is 100% derived from the verbal root (paa) which means (to drink). Mind it (paal), (paalu) and (haalu) are pure Tamizh, Telugu and Kannađa words respectively. But all three are derived from the verbal root (paa) which means to drink in Veda Bhāşā (Samskritam).
MY REPLY
TWO POINTS பால்/PAAL = MILK
Noun
पानकम् பானகம் PAANAKAM
verb
PAA पा பா/ குடி (சம்ஸ்க்ருதத்தில்)
THEORY OF VERBAL ROOTS FOR ALL WORDS IS WRONG.
IN TAMIL GRAMMAR IT IS NOT MENTIONED.
EVEN IN SANSKRIT, IT IS NOT ACCEPTED BY ALL. COUNTER VIEWS WERE THERE EVEN DURING PANINI’S TIME- 2700 YEARS AGO.
SECOND POINT – PAAL FROM PAA TO DRINK– IS A LONG THROW.. PAANI/WATER, PAANAM/ SWEET DRINK ARE RIGHT IN SANSKRIT.
BUT IN TAMIL WE USE ONLY NEER OR THANNEER FOR WATER. NO ‘PAA’ IS FOUND.
SO IT IS ONLY A GUESS. BUT IF YOU FIND MORE TAMIL WORDS WITH ‘PAA’ ROOT FOR DRINK, I WILL AGREE WITH YOU.
IN ENGLISH , NO ROOT IS AVAILABLE FOR THE WORD ‘DOG’.
நிம்பிரி = பொறாமை JEALOUSY
IN THE OLDEST BOOK IN TAMIL , TOLKAAPPIAM, THE WORD FOR JEALOUSY IS ‘NIMPIRI’.
I AM STILL LOOKING FOR THE ROOT OF NIMPIRI, BUT IN VAIN.
‘NIMPIRI’ IS FOUND ONLY ONCE IN TAMIL!
EVEN IN THE RIG VEDA THERE ARE WORDS USED ONLY ONCE, WHOSE MEANING IS GUESSED BUT NOT CONFIRMED OR ACCEPTED BY ALL.
தமிழிலும் ஸம்ஸ்க்ருதத்திலும் உள்ளது போல பிராக்ருத மொழியிலும் 5 பெரிய காவியங்கள் உண்டு.
தமிழ் மொழியில் உள்ள 5 பெரிய காப்பியங்கள்
1.ஐம்பெரும் காப்பியங்கள்
சிலப்பதிகாரம் (எழுதியவர் – இளங்கோ அடிகள்)
மணிமேகலை – சீத்தலைச் சாத்தனார்
சீவக சிந்தாமணி – திருத்தக்க தேவர்
குண்டலகேசி – நாகுதத்தனார்
வளையாபதி – பெயர் கிடைக்கவில்லை
(கடைசி இரண்டு நூல்களும் முழுமையாகக் கிடைக்கவில்லை.)
2.ஐஞ்சிறு காப்பியங்கள்
சூளாமணி –
நீலகேசி – தோலாமொழித் தேவர்
உதயணகுமார காவியம்
நாககுமார காவியம்
யசோதா காவியம்
(நான்கு நூல்களை யாத்தவர்களின் பெயர்களை தமிழ்கூறு நல்லுலகம் மறந்துவிட்டது)
ஸம்ஸ்க்ருத மொழியில் உள்ள ஐம்பெரும் காப்பியங்கள்
3.பஞ்ச மஹா காவியங்கள் (சம்ஸ்கிருதம்)
குமார சம்பவம்– காளிதாசன்
ரகுவம்சம் – காளிதாசன்
கிராதார்ஜுனீயம் – பாரவி
சிசுபாலவதம் – மாக
நைஷதசரிதம் – ஸ்ரீஹர்ச
xxx
4.பிராக்ருத மொழியின் ஐம்பெரும் காப்பியங்கள்
சேதுபந்த – புலவர் ப்ரவரசேன
ராவண விஜய – நமக்குக் கிடைக்கவில்லை
ஹரி விஜய – நமக்குக் கிடைக்கவில்லை ; புலவர் சர்வசேன
கெளட வஹோ – புலவர் வாக்பதி
மதுமத விஜய -நமக்குக் கிடைக்கவில்லை
கிடைக்காத நூல்களிலிருந்து நமக்குப் பல மேற்கோள்கள் மட்டும் கிடைத்துள்ளன.
ஹரி விஜய
நூல்கள் கிடைக்காவிடினும் பிற்கால உரைகார்கள், நூலாசிரியர்கள் வாயிலாக நமக்குப் பல விஷயங்கள் தெரிகின்றன. ஹரி விஜய என்னும் காவியம் ஸ்கந்தக என்னும் யாப்பில் அமைந்தது. சர்க்கங்களாகப் பிரிக்காமல் ஆசுவாசகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது விஷ்ணு புராணத்திலும் பாகவத புராணத்திலும் காணப்படும் பாரிஜாதக் கதையை கையாளும் நூல் இது.
சுவர்க்கத்திலிருந்து பாரிஜாத மரத்தைக் கிருஷ்ணன் கொண்டுவந்ததையும் ருக்மணி- ஸத்ய பாமாவிடம் நிலவிய பொறாமை, பூசல் பற்றியும் விவரிக்கும் நூல் இது .
சேது பந்தம் என்பது ராமாயணத்தில் வரும் சேது அணை / பாலம் கட்டப்பட்டதை விவரிக்கும் நூல்.
xxx
கெளடவஹ
வாக்பதி ராஜ எழுதிய கெளடவஹ , பலரும் அறியாத சரித்திர சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
கண்ணோசியை ஆண்ட யசோவர்மனைப் புகழும் கதை இது. கெளட தேச இளவரசனைத் தோற்கடித்த கதை . ஆனால் இலவசனின் பெயர் கூட இல்லை. பிற்காலத்தில் யசோ வர்மனே காஷ்மீர் அரசன் லலிதாதித் யனால் கொல்லப்பட்டான்( பொது ஆண்டு 740) .
இந்த நூல் காண்டங்களாகப் பிரிக்கப்படவில்லை. குலகங்காளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது . காதா என்னும் ஒரே ஒரு சந்தத்தில் அமைந்துள்ளது. இதை நாரிகேல பாக என்பர் . அதாவது தேங்காய் ஓடு போல கடினமான பகுதியை உடைத்து உள்ளே சென்றால் தேங்காய் கிடைக்கும். உள்ளேயுள்ள இனிப்பான இளநீரையும் அருந்தலாம். இந்த நூலில் உவமைகளோடு உத்ப்ரேக்ஷங்களும் அதிகம் காணப்படும். உத்ப்ரேக்ஷ என்பது கற்பனை உவமைகள். இது அதுவேதான்; அது இதுவேதான் என்று கற்பிக்கப்படும்.
கவிஞர் வாக்பதி , இந்த நூலில் மங்களா சரணத்துக்கு 61 காதாக்களையும் / செய்யுட்களையும் , கவி ப்ரஸம்ஸா / கவிஞர்கள் புகழ்ச்சிக்கு 37 காதாக்களையும் , உலக நடைமுறைகளை வருணிக்க 150 காதாக்களையும் பயன்படுத்துகிறார்.
தாழ்ந்த நிலையில் உள்ள கவிஞர்கள் ஏதாவது எழுதக் கிடைக்காதா என்று அலைந்து திரிவர். உயர்ந்த கவிஞர்களுக்கோவெனில் தாமாகவே விஷயங்கள் வந்து சேரும் . அவர்கள் முயற்சி செய்யவேண்டிய தேவையே இல்லை.
xxx
சேதுபந்த காவியம்
1600 ஆண்டுகளுக்கு முன்னர் ப்ரவரசேனனால் எழுதப்பட்ட சேதுபந்த காவியம் பிராகிருத மொழியில் எழுதப்பட்ட காவியங்களில் தலை சிறந்தது ஆகும். ராமாயணத்திலுள்ள சேது அணை /பாலம் கட்டப்பட்ட பகுதியை மட்டும் எடுத்தாளும் கவிதை இது. தண்டி (Dandin) பாண (Bhana) போன்ற கவிஞர்கள் இதை உச்சிமேல் வைத்துப் புகழ்கின்றனர் .
காளிதாசனின் ரகு வம்சம் , வால்மீகியின் ராமாயணம் ஆகியவற்றின் தாக்கத்தை இங்கே காணலாம்; ஆயினும் புதுமைகள் இல்லாமல் இல்லை; மாலை நேர வருணனை, காதல் காட்சிகள் நிலவொளிக் காட்சிகள் மிகவும் விரிவாகப் பேசப்படுகின்றன தோழிகள் மூலம் காதல் ஓலைகள் அனுப்பும் செய்தியும் உண்டு.
இதற்குப் பின்னர் வந்த சம்ஸ்க்ருத காவியங்களான கிராதார்ஜுனியம், சிசுபாலவதம் ஆகியன சில விஷயங்களை அப்படியே எடுத்தாண்டுள்ளன. நீதி போதனைப் பாடல்கள் இருந்தாலும் சம்ஸ்க்ருதம் போல பழமொழிகள் இல்லை. தத்துவ விஷயங்களும் இல்லை.
காளிதாசனுடைய காவியங்களை ஒப்பிடுகையில் இவைகள் குறை உடைத்தே .
xxx
ஸம்ஸ்க்ருதம் என்பது இலக்கிய நடை; பிராகிருதம் என்பது பேச்சு நடை; நாம் வீட்டில் பேசும்போது கம்பன் போலவோ இளங்கோவைப் போலவோ அல்லது பாடப் புத்தகத்தில் உள்ள உரைநடை போலவோ பேசுவதில்லை.இதுதான் பிராகிருதம்; அதாவது கொச்சை நடை. இன்று தமிழ் நாவல்களில் காணும் நடை.
எப்படித் தமிழில் நெல்லைத்தமிழ், கோவைத்தமிழ் ,மதுரைத் தமிழ், இலங்கைத் தமிழ் உண்டோ அது போல பிராக்ருதத்திலும் பல வகை உண்டு. தொல்காப்பியரும் கூட பல நாட்டுத் தமிழ் பற்றிப் பாடியுள்ளார்.
பிராகிருத வகைகளில் சிறந்தது மஹாராஷ்டிர பிரதேசத்தில் பேசப்பட்ட மஹாராஷ்ட்ரி ஆகும். அதுதான் சிறந்து என்று தண்டின் முதலிய புலவர்கள் , விமர்சகர்கள் செப்பியுள்ளனர் .
xxx
காவியம் என்றால் என்ன ?
காவியம் என்று எந்த நூலைக் கூறலாம் என்று தண்டின் என்ற ஸம்ஸ்க்ருதப் புலவர் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே வரையறை செய்துள்ளார்-
1.இதிஹாச கதோத்பூதம்
கற்பனையில் உதித்த கதை அல்லாமல் பரம்பரையாக வந்த கதை யாகவோ இதிஹாச கதையாகவோ இருக்கவேண்டும் . அதில் வரும் கதாநாயகன் வீரனாகவோ, குணங்களின் சிகரமாகவோ ( சதுரோதாத்த நாயகம்) இருக்க வேண்டும்.
2.நாடு , நகர, காடு, மலை, கடல் வருணனைகளும் சந்திர சூரிய உதயக் காட்சிகளும் , பூங்காக்களில் உல்லாசம் செய்யும் காட்சிகளும், காதல் காட்சிகளும், மதுபான கேளிக்கைகளும் இடம்பெறவேண்டும்
3.கல்யாணம், பிரிவு, குழந்தை பிறத்தல் , போர்கள், தூதர்கள், கதாநாயகனின் வெற்றி, மந்திராலோசனைக் கூட்டங்கள் இடம்பெறுவதோடு எதிரிகளின் சிறப்புகளையும் எடுத்து இயம்பலாம்
5. யாப்பு அணிகளும், சந்திகளும் — புணர்ச்சி விதிகள் — நிறைந்து இருத்தல் அவசியம்
6.வெவ்வேறு அணிகளில் எழுதும்போது அவை கவர்ச்சிமிக்கதாக – (ஸ்ரவ்ய விருத்தைஹி உபேதம்) இருப்பதோடு காண்டங்களாகப் பிரிக்கையில் சின்னதாகவும் மிகப் பெரியதாகவும் இருத்தல் கூடாது
7. (ஸர்வத்ர பின்ன வ்ருத்தாந்தைஹி உபேதம்) – யாப்பு அணிகள், சந்தங்கள் மாறி மாறி வருதல் சிறப்பு ஆகும்
8.பிரார்த்தனையுடன் துவங்க வேண்டும்; எல்லோரையும் வாழ்த்தி ஆசி கேட்கலாம் அல்லது எதைப் பற்றி பேசப்போகிறோம் என்று பகரலாம்
9.அறம் , பொருள், இன்பம், வீடு என்ற இந்துமதக் கோட்பாடுகளை – தர்ம, அர்த்த, காம, மோக்ஷ — விதந்து ஓதுவதே காவியத்தின் நோக்கம்
காளிதாசன் எழுதிய காவியங்களில் இவை அனைத்தும் இருக்கின்றன. தமிழில் சிலப்பதிகாரத்தில் பெரும்பாலான அம்சங்களைக் காணலாம்.
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அறிவியல் அறிஞர் வாழ்வில் … 6
ச.நாகராஜன்
9
பெரு வெடிப்பும் கிரேக்க எழுத்துக்களும்!
ஜார்ஜ் காமோவ் (George Gamov – பிறப்பு 4-3-1904 மறைவு 19-8-1968) ஒரு ரஷிய விஞ்ஞானி. இயற்பியலிலும் பிரபஞ்ச இயலிலும் வல்லுநர். பின்னால் அவர் அமெரிக்காவில் சென்று வசித்தார். அவருடைய மனைவியை ரோ (Rho) என்ற செல்லப் பெயரிட்டு அவர் அழைத்தார். மனைவியின் பெயர் லியுபாவ் வோக்மின்ட்ஸெவா (Lyubov Vokhmintseva). ரோ என்பது கிரேக்க அகர வரிசையில் 17வது எழுத்து.
அவர் பிக்-பேங் தியரியில் பெரிதும் ஆர்வமுள்ளவர்.
அவரது மாணவரின் பெயர் ரால்ப் ஆல்பெர் (Ralph Alpher).
தனது மாணவருடன் சேர்ந்து அவர் பிக் பேங் என்னும் பெருவெடிப்பின் போது அதன் தோற்றம் பற்றிய ஒரு ஆய்வுப் பேப்பரைத் தயாரித்தார்.
தனது ஆய்வுப் பேப்பரில் இயற்பியல் விஞ்ஞானியான ஹான்ஸ் பெதே (Hans Bethe)யின் பெயரையும் அவர் சேர்த்தார்.
தனக்கு எப்போதுமே உள்ள நகைச்சுவை உணர்விற்கேற்ப ஆய்வுப் பேப்பரை தயார் செய்தவர்களின் பெயர்களாக ஆல்பா, பீடா, காமா (Alpha, Beta and Gamma) என்ற கிரேக்க எழுத்துக்களை நினைவு படுத்தும் விதமாக ஆல்பர், பெதே, காமா (Alper, Bethe, Gamow) என்று குறிப்பிட்டார்.
பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்பதை விளக்கும் ஆய்வுப் பேப்பரில் கிரேக்க முதல் எழுத்துக்களான மூன்றைக் குறிப்பிட்டு ஒரு சொல் விளையாட்டையும் செய்து மகிழ்ந்தார்.
10
ஓவியராக விரும்பிய மூளை இயல் விஞ்ஞானி!
{(சாண்டியாகோ ரொமன் இ கஜல் (1852-1934)}
ஸ்பெயினைச் சேர்ந்த விஞ்ஞானியான சாண்டியாகோ ரொமன் இ கஜல் (1852-1934) நவீன நியூரோ ஸயின்ஸ் எனப்படும் மூளை இயலின் தந்தை என்று கூறப்படுபவர். 1906ஆம் ஆண்டு அவர் நோபல் பரிசை நரம்பு மண்டல அமைப்பு ஆராய்ச்சிக்காகப் பெற்றார். மூளையானது தனி செல் அமைப்புகளைக் கொண்டதாக உள்ளது என்பதை அவர் தான் முதன்முதலாகக் கண்டுபிடித்தார். அவரது கண்டுபிடிப்புகளே மூளை எப்படி இயங்குகிறது என்பதை அறிந்து கொள்ள உதவியது.
அவருக்கு அறிவியலை விட கலையில் தான் மோகம் இருந்தது. அவரது தந்தையார் அவரை மருத்துவம் படிக்க ஊக்குவித்தார். ஆனால் அவருக்கோ ஓவியம் வரைவதில் தான் ஆர்வம் அதிகமாக இருந்தது. என்றாலும் மருத்துவத்தில் சேர்ந்தார். அறிவியல் அறிஞர் ஆனார். என்றாலும் கூட தனது ஓவிய ஆர்வத்தை அவர் விட்டு விடவில்லை. தனது பணிக்காலம் முழுவதும் ஆயிரக்கணக்கான மூளை பற்றிய படங்களை நுண்ணிய விவரத்துடன் தான் மைக்ரோஸ்கோப்பில் பார்த்த வண்ணம் வரைந்து தள்ளினார். இன்று மூளை இயலில் மூளை பற்றி அறிந்து கொள்ள அவை மிகவும் உதவுகின்றன. நரம்பு மண்டலம் மற்றும் நியூரான் பற்றிய அவரது படங்கள் பெரிய வியன்னா செஷஸன் என்ற கலை இயக்கம் சித்தரிக்கும் மரம் போல பரந்து விரிந்து பல்வேறு கிளைகளுடன் கூடி வரையப்பட்டிருக்கிறது.
இன்றைய நவீன உலகில் அறிவியலின் பங்கை அனைவரும் அறிவோம்; உணர்வோம்.
ஆகவே அறிவியலில் எதையெல்லாம் முக்கியமாக உணர்கிறோமோ அதையெல்லாம் முடிந்த அளவு அறிந்து கொள்ள வேண்டியது சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரது கடமையும் ஆகும்
இந்த வகையில் பாக்யா வார இதழில் அறிவியல் சம்பந்தமான நூற்றுக் கணக்கான கட்டுரைகளை எழுதி வரலானேன்.
எனது இனிய நண்பரும், மிகச் சிறந்த திரைப்பட கதாசிரியரும், நடிகரும், பாக்யா இதழின் ஆசியருமான திரு கே. பாக்யராஜ் அவர்களுக்கு அறிமுகமே தேவை இல்லை. அனைவர் உள்ளத்தையும் கொள்ளை கொண்ட பண்பாளர் அவர்.
அவர் தந்த ஊக்கத்தினால் பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் என்ற தொடரை ஆரம்பித்தேன்.
4-3-2011இல் ஆரம்பித்து 16-2-2020 முடிய ஒன்பது ஆண்டுகள் இந்தத் தொடர் வெளி வந்தது. துரதிர்ஷ்டவசமாக கோவிட் பெருந்தொற்று நோய் உலகெங்கும் பரவவே பாக்யா இதழ் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. இடையில் வார இதழாக மலர்ந்து வந்த பாக்யா இதழ் 2019, ஏப்ரல் முதல் மாதம் இருமுறை மலர ஆரம்பித்தது.
வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க அறிவியல் துளிகளின் அனைத்து அத்தியாயங்களையும் பதினேழு பாகங்களில் வெளியிட முடிந்தது.
இந்த நூல் – பதினேழாம் பாகம் – ஒன்பதாம் ஆண்டில் வெளியான – 417 முதல் 442 முடிய உள்ள – 26 அத்தியாயங்களின் தொகுப்பாகும்.
ஒவ்வொரு அத்தியாயமும் தனித்தனியே வெவ்வேறு அறிவியல் அம்சத்தை விளக்குவதால் இதை எந்தப் பகுதியிலிருந்தும் படிக்கலாம் என்பதே இந்த நூலின் தனிச் சிறப்பு.
இந்தப் புத்தகத்தை வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.
தொடராக வந்த போது என்னை ஊக்குவித்த பல்லாயிரக்கணக்கான வாசகர்களுக்கு எனது அன்பு கலந்த நன்றி.
In his introductory verses to Harshacarita, the poet Banabhatta praises Satavahana, also known as Salivahana and Hala,for his Gatha Sapta Sati (GSS) in these glowing terms
Satavahana made a treasury of fine sayings as of jewels;
(Avinasinam) immortal;indestructible refined;
Xxx
Uddhyotanasuri, the author of Kuvalayamala, extols Hala in these words:
“What is the use of composing poetry after the passing away of Hala whose poetry was on the tongues of even farmers while ploughing their fields?”
“When the intoxicating effect of wine is no more, what is the use of meat?”
xxx
Vakpati
The charm of Sanskrit speech blooms in its Prakritic shadow while the (innate ) glory of the Prakrit is heightened when it touched up by its sanskritization
Xxx
It is only in Prakrit that we can have in an abundant measure, ever fresh themes presented in a rich variety of styles, refreshingly cool and caressingly sweet. This will continue to be till the end of the world.
Xxx
All languages merge in it (Prakrit ) and emerge from it. Waters pour into the sea and flow out of it.
Xxx
A peculiar delight which dilates and closes the eyes, thrills the heart, rushing inwards and outwards
Gaudavaho v 65,v 92 v 93, v 94
Rajasekhara
Sanskrit compositions are harsh, while a composition in Prakrit sounds so soft. The difference between the two is as between the masculine and the feminine
Xxx
In other words,
You may respect Sanskrit but you will fall in love with Prakrit
Karpuramanjari 1-7
Xxx
Sanskrit speech is praiseworthy whereas Prakrit speech is naturally sweet.
Bala Ramayana 1-11
Xxx
Prakrit is the source of Sanskrit; it dances in the tongues of ladies of lovely eyes; when one hears it the words of Sanskrit language grate upon one’s ears; it’s prose is easy, does not contain hard letters and has very few compounds; and it is the abode of the god of love.
Bala Ramayana 1-11
Xxx
A commentator on Prakrit Prakasa
O,how marvellous! The Prakrit which is lovely like the moonlike face of the beloved is fascinating . It sparkles with Suktis (good sayings ) imbued with nectar like rasas .
Xxx
Ajnatakavih
Away with Sanskrit poetry and the poets who composed it. For Sanskrit, when read, sounds like tad tad tatta like a house of bambooson fire 21
The Pandita who replies in Sanskrit, when Prakrit poetry is recited, pelts stones at the bed of flowers and destroys it .
Xxx
Gatha Saptasati (GSS)
Prakrit literature is vast and varied. It is composed in different languages like Ardhamagadi, Maharashtri, Sauraseni, Paisaci and Apabrahma.
Hala’s Sattasai or Gaathaa sapta sati (second century to third century ) is the earliest known anthology of Prakrit. It has 700 verses in Maharashtri Prakrit. It’s popularity is attested by the large number of commentaries on it and scores of quotations from it in works on poetics and the use made of it by the Prakrit grammarians.
Eminent poets like Bana, Uddyotanasuri, Abhinanda and Siddhanathan bestow high praise on it. And if imitation is an index of popularity we have its imitation in Sanskrit in Govardhana’s Arya sapta sati which is certainly modelled on Hala’s GSS.
The work differs in many manuscripts. It is mostly erotic. Each Gatha presents a miniature picture complete in itself. These Gathas mainly depict village life and peasantry. The family life of lower strata of the society is portrayed in its various contexts, but the erotic aspect dominates
The anthology is rich in maxims and popular sayings and sheds light on customs and conventions prevalent in those times. There are allusions to divine beings like Siva Parvati Gauri , Ganapathi Vishnu Lakshmi etc.
Source
Studies in Jain Literature, prof v m Kulkarni, Ahmedabad,2001
ஹரிபத்ர (Haribhadra) என்ற கவிஞரின் கதை மிகவும் சுவையானது ; மஹாபாரதத்தில் வியாசர் செய்த தந்திரத்தை நாம் எல்லோரும் அறிவோம். விநாயகரை மஹாபாரதத்தை எழுதித்தருமாறு வியாசர் அழைத்தார். உடனே அவர் இந்த மஹானிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்று கருதி ஒரு கண்டிஷன்/ Condition நிபந்தனை போட்டார். நான் நிறுத்தவே மாட்டேன். அந்த வேகத்தில் உம்மால் கவிதை மழை பொழிய முடியுமா ?என்றார். அப்படி நிறுத்தும்படி ஆனால் நான் வீட்டுக்குப் போய்விடுவேன் என்றார் பிள்ளையார்.
வியாஸர் உலக மஹா மேதாவி. OK OK ஓகே! ஓகே! நான் ஒரு கண்டிஷன் Condition போடுவேன் ; நான் சொல்லும் எதையும் புரிந்து கொள்ளாமல் எழுதக் கூடாது என்றார் ; பிள்ளையாரும் OK That’s all right; agreed ‘ஓகே. தட் ஸ் ஆல் ரைட். அக்ரீட்’ என்றார் . வியாஸர் வேண்டுமென்றே பல புதிர்கள் மிக்க ஸ்லோகங்களை உதிர்த்தார். பிள்ளையார் தலையைச் சொறிந்துகொண்டு யோசிப்பதற்குள் வியாசர் ஒரு லட்சம் கவிதைகளைச் செய்து ‘கின்னஸ்’ சாதனை புஸ்தகத்தில் நுழைந்தார். உலகியேயே நீண்ட இதிஹாசத்தைச் செய்து பெயரும் பெற்றார். இதற்கு நேர் மாறாக ஹரிபத்ர என்னும் கவிஞர் செய்தார்.
என்ன செய்தார்?
அவர் ஒரு பிராமணன். ராஜஸ்தானில் சித்தூர் என்னும் இடத்தைச் சேர்ந்தவர். மகா மேதாவி. சம்ஸ்க்ருதத்தில், பிராக்ருதத்தில் உள்ள எல்லாவற்றையும் கற்றவர். அவர் தன் இடுப்பில் ஒரு தங்கப்பட்டயம் கட்டிக்கொண்டார். எவனாவது ஒருவன் எனக்குப் புரியாத விஷயத்தை, தெரியாத விஷயத்தைச் சொன்னால், நான் அவனுக்கு அடிமை; அவர் காலில் விழுந்து மாணவன் ஆகி விடுவேன் என்று எழுதிக் கொண்டு திரிந்தார். அதாவது உலகிலுள்ள எல்லாம் தெரிந்த மேதாவி என்று நினைத்துக் கொண்டு இருந்தார். அவர் ஒருநாள் தெருவில் போய்க்கொண்டு இருந்தபோது மதம் பிடித்த யானை ஓடிவந்தது; ஹரிபத்ர நடுங்கிப் போய் ஒரு உயரமான கோவில் படியில் ஏறி பெருமூச்சு வீட்டுக் கொண்டிருந்தார். கோவிலில் உள்ளே பார்த்தால் சமண மத தீர்த்தங்கரர் சிலை இருந்தது; ஒரே எரிச்சல்; சீ, சீ!! என்று சொல்லிக்கொண்டு சமண முனிவரைத் திட்டி ஒரு கவிதையை உரத்த குரலில் சொல்லிவிட்டு, யானை போனவுடன் வீடு திரும்பினார்.
அவர் செய்த கவியின் பொருள்: ஓ சமண முனிவரே! உம் வயிற்றைப் பார்த்தாலேயே தெரிகிறது ; நீர் இனிப்புகளை அதிகம் தின்பவர் என்று .
மறுநாள் அதே கோவில் வழியாகச் சென்றபோது அங்குள்ள சமண மத பெண் துறவி ஒரு ஸ்லோகத்தை உரத்த குரலிலே சொல்லிக்கொண்டு இருந்தாள் ; அவள் பெயர் யாக்கினி மஹத்தரா ; அவள் சொன்னாள் :
சக்கிதுகம் ஹரிபணகம் பணகம் சக்கி ய கேசவோ சக்கி
கேசவ சக்கிகேசவ து சக்கி கேசி ய சக்கி ய
Chakkidugam Haripanagam Panagam Chakki Ya Kesavo Chakki
Kesav Chakki Kesav Du Chakki Kesi Ya Chakki Ya
சமண மத ஆகமங்களின்படி 24 தீர்த்தங்கரர் 12 சக்கரவர்த்திகள் 9 வசுதேவர்/நாராயணன் உண்டு என்பதாகும். அதை அந்தப் பெண்மணி விளக்கிக் கொண்டு இருந்தார்.
இதைக் கேட்ட ஹரிபத்ராவுக்கு அர்த்தம் புரியவில்லை. அட, நாம் கற்றறியாத ஒரு விஷயத்தை இவள் சொல்கிறாளே என்று நினைத்து, முதல் நாள் சமண தீர்த்தங்கரைத் திட்டி எழுதிய பாட்டில் ஒரு சொல்லை மாற்றிப்போட்டு பாராட்டிவிட்டு, பெண்மணியிடம் சென்று, அம்மணி, என்னை சீடனாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்றார்.
அவர் எனக்கு அந்த அருகதை இல்லை. என் குரு ‘ஜின பட்ட சூரி’யிடம் அழைத்துச் செல் கிறேன் என்று கூறி , அவரிடம் அழைத்துச் சென்றார். அவரும் ஹரிபத்ரவை மாணவனாக ஏற்று ஸ்லோகத்தின் முழுப்பொருளையும் விளக்கி நூல்கள் செய்யுமாறு பணித்தார். சமண மதத்தில் அதுவரை இருந்த நூல்களைக் கற்ற ஹரிபத்ர , 1400 நூல்களுக்கு மேலாக இயற்றினார் என்று சொல்லப்படுகிறது; ஆயினும் 170 நூல்களே இப்போது கிடைத்துள்ளன. ஜின பட்ட சூரி இறந்தவுடன் இவரே அந்த ஆசார்ய நிலைக்கு உயர்த்தப்பட்டு ஹரிபத்ர சூரி என்று பெயர்பெற்றார்.
சம்ஸ்க்ருத, பிராக்ருத கவிஞர்கள் அடக்கமும் பணிவும் மிக்கவர்கள்; தங்களைப் பற்றி எதுவுமே பாடவில்லை. இவர் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர்; ஆகையால் உலக மஹா கவிஞன் காளிதாசனைப் பற்றி பல கதைகள் இருப்பது போல வந்த செவி வழிக் கதைதான் யானை விரட்டிய கதையும் .
ஹரிபத்ர பற்றி இன்னும் ஒரு கதையும் உண்டு அவரிடம் சகோதரி மகன்கள் ஹம்ச , பரம ஹம்ச என்ற இருவர் கல்வி கற்றனர் ; அவர்கள் புத்த மத நூல்களைக் கற்றால் அவர்களை வாதத்தில் வெல்வது எளிதாகும் என்று கருதி புத்த துறவி போல வேஷம்போட்டுக் கொண்டு ஒரு புத்தமத துறவியிடம் சென்றதாகவும், உண்மையை அறிந்தபோது அந்த புத்தமதத் துறவி அவர்களை விரட்டி விட்டதாகவும் அப்போது அவ்விருவரும் உயிர் துறந்ததாகவும் இதனால் அவர்கள் மீது கோபம் கொண்டு வெறியாகத் திரிந்தபோது யாக்கினி மஹரத்தராவைச் சந்தித்து அஹிம்சை நெறியில் சென்றதாகவும் கதைகள் இருக்கின்றன.
அவரைப் பற்றிய கதைகள் உண்மையோ, பொய்யோ என்பது முக்கியமல்ல. அவர் எழுதிய நூல்கள் அவர்தம் பெருமையைப் பறை சாற்றுகின்றன. அவர் சம்ஸ்க்ருத, பிராக்ருத மொழிகளில் சமயம், உரைகள், விளக்க உரைகள், பிறமத தூஷண உரைகள், இலக்கண நூல்கள் என்று ஏராளமான விஷயங்கள் குறித்து நூல்களை யாத்ததிலிருந்தது பேரறிஞர் என்பது தெளிவாகிறது .
கர்வம் பிடித்த கவிஞர் பிற்காலத்தில் மனம் மாறி பணிவுக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்ந்தார்.
–subham —
Tags- பிராக்ருத மொழி, ஹரிபத்ர, ஜின பட்ட சூரி, சமண மத, யானை, கர்வம், கவிஞர்
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அறிவியல் அறிஞர் வாழ்வில் … 5
ச.நாகராஜன்
7
பிரபல விஞ்ஞானியான ஜான் வான் நியூமேன் பற்றிய பிரபலமான துணுக்கு இது.
நியூமேனிடம் வந்த ஒருவர் ஒரு கணிதப் புதிரைக் கூறி அதற்கு உரிய விடையைத் தருமாறு வேண்டினார். தான் கூறுவது மிகவும் கடினமான புதிர் என்று நினைத்த அவர் நியூமேன் சற்றுத் திணறிப் போவார் என்று நினைத்தார்.
சிக்கலான கணிதப் புதிர் இது தான்.
தெற்கு திசையிலிருந்தும் வடக்கு திசையிலிருந்தும் இரு சைக்கிள் ஓட்டும் வீரர்கள் தங்கள் சைக்கிளை எதிரெதிராக ஓட்ட ஆரம்பித்தனர். அவர்களுக்கு இடைப்பட்டிருந்த தூரம் இருபது மைல்கள். அவர்களது வேகம் மணிக்கு10 மைலாக இருந்தது. அதே சமயம் ஒரு ஈ மணிக்கு 15 மைல் வேகத்தில் தெற்கு நோக்கிக் கிளம்பிய சைக்கிளின் முன் சக்கரத்திலிருந்து வடக்கு நோக்கி பறக்க ஆரம்பித்தது. பின்னர் அது வடக்கு நோக்கி வந்த சைக்கிளுக்குத் திரும்பியது. இப்படி மாற்றி மாற்றி அது பறந்து கொண்டே இருந்தது – இரண்டு சைக்கிள் வீரர்களும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் வரை.
ஈ பறந்த மொத்த தூரம் எவ்வளவு?
இது தான் கேள்வி.
சாதாரணமாக இதை எப்படி கணக்கிட முடியும். முதலில் ஈ வடக்கு நோக்கி பறந்த தூரம், பின்னர் தெற்கு நோக்கி பறந்த தூரம் பின்னர் மூன்றாவதாக அது பறந்த தூரம் என்று இப்படி மாறி மாறி, இந்த இன்ஃபைனைட் சீரீஸைப் போட்டு கணக்கைச் செய்து முடிவைக் கண்டுபிடிக்க வேண்டும்.
இன்னும் ஒரு சுலபமான வழியிலும் இந்தக் கணக்கைப் போட்டு முடித்து விடலாம். இரண்டு சைக்கிள் வீரர்களும் சரியாகக் கிளம்பிய ஒரு மணி நேரத்தில் ஒருவரை ஒருவர் சந்தித்து விடுவார்கள். ஆகவே ஈக்கு ஒரு மணி நேரம் மட்டுமே பறக்க முடியும். ஆகவே விடை 15 மைல்.
நியூமேனிடம் இந்தக் கேள்வி கேட்கப்பட்ட போது சற்றும் தயங்காமல் ஒரு வினாடியில் 15 மைல் என்று பதில் கூறி விட்டார்.
கேள்வி கேட்டவருக்கு மிகவும் ஏமாற்றமாகப் போய் விட்டது. பேந்தப் பேந்த முழித்த அவர், அசடு வழிந்தவாறே, “இது உங்களுக்கு முன்னமேயே தெரிந்த கணக்குப் புதிர் தானே! அது தான் உடனே விடை கூறி விட்டீர்கள்” என்றார்.
ஆனால் உடனேயே நியூமேன், “அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. இதை இப்போது தான் கேட்கிறேன். இன்ஃபைனட் சீரீஸின் கூட்டுத்தொகையைப் போட்டுத் தான் சொன்னேன்” என்றார். (Von Neumann tolda : “all I did was sum the infinite series”).*
8
பிரபல விஞ்ஞானியும் அறிவியல் புனைகதை எழுத்தாளருமான ஐஸக் அஸிமாவ் (Isaac Asimov) 1947ஆம் ஆண்டு பிஹெச் டி பெற பயோகெமிஸ்ட்ரியில் ஆய்வை மேற்கொண்டிருந்தார். அப்போது அவரை அஸ்டவுண்டிங் ஸயின்ஸ் ஃபிக்ஷன் பத்திரிகைக்கு ஒரு கதையைத் தருமாறு ஜான் கேம்ப்பெல் கேட்டார். (John Campbell at Astounding Scicence Fiction Magazine).
அதற்கு ஒத்துக் கொண்ட அஸிமாவ் ஒரு சிறுகதையை எழுதினார். அந்தக் கதைக்குப் பெயர் ‘தி எண்டாக்ரானிக் ப்ராபர்டீஸ் ஆஃப் ரீசப்லிமேடட் தியோடிமோலின்”. (“The Endochronic Properties of Resublimated Thiotimoline”).
கற்பனையாக ஒரு கூட்டுப்பொருளை (fictitious compound) கதைக்காக உருவாக்கிய அஸிமாவ், அதில் நீரைச் சேர்க்கும் முன்னரே அது கரைந்து விடுவதாக கதைக்காக “அள்ளி” விட்டிருந்தார். கதையில் அந்தக் கூட்டுப்பொருளுக்கான வரைபடங்கள், கிராப், பொய்யான புள்ளி விவரங்கள், அந்தப் புள்ளி விவரங்களை அதிகாரபூர்வமாக தருவதாக பொய்யான பல விஞ்ஞான பத்திரிகைகளின் பெயர்கள் ஆகியவற்றை எல்லாம் குறிப்பிட்டிருந்தார்.
அவர் கேம்ப்பெல்லிடம்,” கதையைக் கொடுத்து விட்டேன். ஆனால் இதில் என் பெயரைப் போட வேண்டாம்” என்று கண்டிப்பாகக் கூறி இருந்தார்.
ஏனெனில் அவரது தொழிலை அவரே கிண்டல் செய்வது போல உள்ள ஒரு கதையை அவர் எழுதியதாகத் தெரிந்தால் அது அவரது ஆய்வுக்கு பெரிய முட்டுக்கட்டையாக இருக்கும் என்பதோடு பிஹெச்டி கிடைப்பதும் கஷ்டமாகி விடும் என்பது அவரது எண்ணம்.
கேம்ப்பெல் அதற்கு ஒத்துக் கொண்டார். சில மாதங்கள் கழித்து பத்திரிகையில் அவரது கதை வெளியானது. ஆனால் அதில் அவர் பெயரும் வெளியாகிவிட்டது.
கேம்ப்பெல் அவரது பெயரைப் போடக்கூடாது என்பதை மறந்தே விட்டார்.
அஸிமாவ் தன் ஆய்வைச் சமர்ப்பிக்க வேண்டிய நாளும் வந்தது. அதை பரிசோதிக்கும் ஆய்வாளர்கள் முன் அவர் வந்து உட்கார்ந்தார்.
பல கேள்விகள் அவர் ஆய்வு சம்பந்தமாகக் கேட்கப்பட்டன. அப்படி கேள்வி கேட்ட பரிசோதகர்களில் ஒருவர் புன்சிரிப்புடன் தியோடிமோலின் பற்றிய ஒரு கேள்வியைக் கேட்டார்.
அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.
நல்ல வேளையாக அவருக்கு பிஹெச்டி பட்டம் கிடைத்து விட்டது. அவரது கதையை நகைச்சுவையாக மட்டுமே பரிசோதகர்கள் எடுத்துக் கொண்டதால் அவர் பிழைத்தார்.
இன்றைய நவீன உலகில் அறிவியலின் பங்கை அனைவரும் அறிவோம்; உணர்வோம்.
ஆகவே அறிவியலில் எதையெல்லாம் முக்கியமாக உணர்கிறோமோ அதையெல்லாம் முடிந்த அளவு அறிந்து கொள்ள வேண்டியது சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரது கடமையும் ஆகும்
இந்த வகையில் பாக்யா வார இதழில் அறிவியல் சம்பந்தமான நூற்றுக் கணக்கான கட்டுரைகளை எழுதி வரலானேன்.
எனது இனிய நண்பரும், மிகச் சிறந்த திரைப்பட கதாசிரியரும், நடிகரும், பாக்யா இதழின் ஆசியருமான திரு கே. பாக்யராஜ் அவர்களுக்கு அறிமுகமே தேவை இல்லை. அனைவர் உள்ளத்தையும் கொள்ளை கொண்ட பண்பாளர் அவர்.
அவர் தந்த ஊக்கத்தினால் பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் என்ற தொடரை ஆரம்பித்தேன்.
4-3-2011இல் ஆரம்பித்து எட்டு வருடங்களுக்கும் மேலாக வெற்றி நடை போடும் அறிவியல் துளிகளை வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாகம் பாகமாக வெளியிட முடிந்தது.
இந்த நூல் – பதினைந்தாம் பாகம் – எட்டாம் ஆண்டில் முதல் 26 வாரங்கள் வெளியான 366 முதல் 391 முடிய உள்ள 26 அத்தியாயங்களின் தொகுப்பாகும்..
ஒவ்வொரு அத்தியாயமும் தனித்தனியே வெவ்வேறு அறிவியல் அம்சத்தை விளக்குவதால் இதை எந்தப் பகுதியிலிருந்தும் படிக்கலாம் என்பதே இந்த நூலின் தனிச் சிறப்பு.
இந்தப் புத்தகத்தை வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.
தொடராக வந்த போது என்னை ஊக்குவித்த பல்லாயிரக்கணக்கான வாசகர்களுக்கு எனது அன்பு கலந்த நன்றி.
அறிவியல் கற்போம்; அறிவியலைப் பரப்புவோம்!
நன்றி பங்களூர் ச.நாகராஜன்
14-5-2022
*
நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.
We have no biological records of Prakrit poet Haribhadra. We know from his writings that he obeyed the command of Jinabhata, an Acharya of the Sitambaras/ Svetambaras and he was the pupil of Acharya Jinadatta. He was the spiritual son of the nun Yaakini Mahattaraa.
The external sources give us some interesting information. Dr Jacobi has written about it.
Haribhadra was born at Chitrakuta, the modern Chitor, where he probably lived until his initiation. He was a Brahmin by caste and had mastered all the Brahminical learning. He is said to have been the family priest of King Jitaari or Jitasatru.
Proud of his erudition he proclaimed that he would become the pupil of anyone whose proposition he could not understand and this vow was written on a golden plate he wore on his belly. Once a mast elephant having got loose and caused great havoc in the street , Haribhadra fled before him and climbed a Jain temple to save himself. At the sight of the sight of a Tirtankara, a Jain saint, he composed a verse to deride him. Next day he heard an old nun reciting a Gatha which baffled his understanding.
Kesava chakkee kesava duchakkee Kesey a chakkee ya
He asked her to explain its meaning, but she referred him to her guru. On his way to the guru, he passed by the temple and pronounced the same stanza, changing one word so that now it was in Jina’s praise. There he met Jinabhata suri, who promised to teach him after initiation. Haribhadra agreed and acknowledged Yaakini Mahattaraa as his spiritual mother.
Later on he was so well versed in Jain Agamas, and his conduct was such that the guru appointed him as his successor. The scene of his later life as a monk seems to have been the neighbouring parts of Rajasthan and Gujarat.
Haribhadra is a versatile and voluminous writer. Though tradition credits him with the authorship of 1400 prakaranas, only 27 works are available now. He tried various branches of literature. He wrote both in verse and prose in Sanskrit and Prakrit. They explained Jain tenets, refutations of the opponents doctrines. He wrote commentaries as well
Source
Studies in Jain Literature, prof v m Kulkarni, Ahmedabad,2001
Masi (maasi) is the 11th Tamil month. When the sun enters zodiacal sign Kumbha Rasi (raasi) Aquarius, the month begins.
Shivaratri (siva raatri) is the most important festival of this month. One day before the new moon day (amaavaasai) is the Mahashivaratri day, when Hindus go to Shiva temples all over India.
Another festival happens on the Full moon day of this month known as Maasi Magham. This is the day when the moon appears with Magha Nakshatra.
Every 12th year is celebrated as Mahaa Magham in Kumbakonam temple in Tamil Nadu. Kumbeswarar (Shiva) temple is visited by thousands of people on that day. Other temples join the festival by arranging procession of Gods. Lakhs of people take bath in the small tank known as Mahaamaga Kulam. King Krishnadevaraya’s visit to this event 500 years ago is in inscription.
In many places ,idols are taken to the river or sea and bathed. It is called Theerthavaari. Float festival (teppam in Tamil) happens in many temples.
Maasi Nilaa Paasi Padarum மாசி நிலா பாசி படரும் is a Tamil proverb which says the Purnima/ full moon day of the month is the brightest of all Pournamis. One can enjoy the moon light which even penetrates the green algae (paasi in Tamil) on the ground or ponds.
Hindu festival Holi, festival of colours, marking the beginning of Spring season, is celebrated, normally on Panguni Purnima day. But in 2023 it falls in Masi. (It is because in some calendars, the month begins on new moon day)
Kaama Dahanam (burning down of desire/sexual feeling by Shiva is observed during Maasi Magham or coinciding with Holi.
xxx
12.PANGUNI
The last zodiacal sign is Meenam (Pisces). When the sun enters Meena Raasi, Tamil month Panguni begins.
Sri Rama Navami (raama Navami), Telugu New Year day Ugadhi (yugaathi), Karadaiyan Nonbu (kaaradaiyaan) are some of the significant festivals celebrated in Panguni.
Panguni Uttiram (uththiram) day is full moon day of the month. In Chennai Kapaleeswarar temple, 63 Saivite saints/Naayanmaars are taken in procession. In fact, all Shiva temples celebrate it with special Pujas. Kanchi Kamakshi (kaanchi Kaamaakshi) amman Temple festival also attracts a big crowd.
Other important days of the month are Karaikal Ammaiyar (kaaraikaal ammaiyaar) Thiru Nakshatram and Varaaha Jayanthi.
In general the spring and summer seasons are used by all the temples for Chariot Festival (Ratha Yaatraa) and Float (Teppam in Tamil) festival. The two sesaons coincide with at least four Tamil months: Masi, Panguni, Chithirai and Vaikasi. Village deity (Grama Devata) festivals follow the major festivals.
All Tamil names derive their names from Sanskrit months. In fact ,there is no Tamil word. They are all Tamilised Sanskrit words. Kanchi Paramacharya (kaanchi paramaachaaryaa1894-1994) has lectured on this topic.
Aaaradhanaa/Guru Pujai means memorial day. Thiru Nakshatram/Jayanthi means birth day.
Both the followers of Shiva and Vishnu celebrate such days.
All Purnima (Pournami or Full moon days) days are festival days for Hindus.
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
செப்டம்பர் 11 பாரதியார் நினைவு நாள். சிறப்புக் கட்டுரை!
பாரதம் பற்றிய மஹாகவி பாரதியாரின் 6 மற்றும் 7வது பாடல் : ஒரு பார்வை!
ச.நாகராஜன்
முந்தைய கட்டுரைகளின் தொடர்ச்சியாக தொடர் எண் 104லிருந்து தரப்படுகிறது.
எங்கள் நாடு என்ற பாடல்
104) உலகில் பெரிய சிகரத்தைக் கொண்ட என்றும் நிலைத்திருக்கும் மலையான இமயமலை எங்கள் மலை தான்! இது போன்ற ஒரு மலை புவியெங்கும் பார்த்தால் வேறு ஒரு மலையும் இல்லை.
105) இனிமையான அருமையான கங்கை நீரைக் கொண்ட கங்கா நதி எங்கள் நாட்டிலே தான் உள்ளது. இதன் மாண்புக்கு இணையாக உள்ள இன்னொரு நதி ஏது இந்தப் புவி மேல்?!
106) பல அரிய உபநிடத நூல்கள் எங்களது நூல்கள் தான்! இதில் ஒரே ஒரு நூலை எடுத்துக் கொண்டாலும் அதற்கு இணையான இன்னொரு நூல் கிடையவே கிடையாது.
107) பொன் போல் ஒளிர்கின்ற தேசம் எங்கள் பாரத தேசம். இந்த தேசத்தைக் கொண்ட எமக்கு இணையானவர் யாருமே இல்லை. இந்த தேசத்தைப் போற்றுவோம்.
108) ரதம் ஓட்டுவதில் அதிரதர் சிறந்தவர். அப்படிப்பட்ட அதிரதர்கள் அதிகம் உள்ளவர்கள் இந்த நாட்டில் மட்டுமே தான். (அதிரதர் என்பதை வாகனம் ஓட்டிகள், ஏன் விமான பைலட்கள் என்று கூட எடுத்துக் கொள்ளலாம், காலத்திற்குத் தகுந்தபடி!)
109) பெரிய மஹரிஷிகள் – மா முனிவர்கள் வாழ்ந்தபொன் நாடு இதுவே தான்.
110) கானங்களிலே சிறந்த கானம் நாரத மஹரிஷி பாடும் நாரத கானம் தான். அந்த நாரத கானம் நலம் தரும் கானம். அதைக் கொண்ட நாடு இது தான்!
111) இங்கு தீயவற்றை யாரும் நாடமாட்டார்கள். ஆனால் நல்லவை எங்கிருந்தாலும் யார் சொன்னாலும் அதை இங்குள்ளோர் நாடுவர். அப்படிப்பட்ட நல்லனவற்றை நாடும் நாடு இதுவே தான்!
112) ஞானங்களிலே பூரண ஞானமான ஆன்மீகத்தின் உச்சகட்ட ஞானத்தைப் பெற்றுள்ள நாடு இதுவே தான். இந்த ஞானம் பொலிந்திருக்கும் நாடு எங்கள் நாடு தான்!
113) புத்தர் பிரான் இங்கு தான் தோன்றினார். அவர் அருள் இந்த நாட்டிலே தான் பொங்கி வழிந்தது. அப்படிப்பட்ட நாடு இதுவே தான்!
114) பாரத நாடு இன்று நேற்று தோன்றிய நாடு அல்ல. பழம் பெரும் நாடு இது. இதற்கு ஈடு இணை என்று சொல்லக் கூடிய நாடு வேறு ஒன்றுமில்லை. இதைப் பெற்ற எமக்கு ஈடு யாரும் இல்லை என்று பாடுவோம்.
115) இன்னல் வருவது இயற்கை. அது வந்த போது அதைக் கண்டு பயப்பட மாட்டோம்.
116) வளங்கள் சுரண்டப்பட, அதனால் ஏழைகளாகி இனி உறங்க மாட்டோம்; உயிரை விட மாட்டோம்.
118) தாய்த் திருநாட்டிற்கு ஒரு ஆபத்து என்றால் ‘என்னால் முடியாது’வெ என்று கையை இனி விரிக்க மாட்டோம்.
119) கரும்பு, தேன், கனி, இனிய பாலும், கதலியும், எந்தக் காலத்திலும் இல்லை என்று சொல்லாமல் நல்கும் ஆரிய நாடு இதுவே தான். இதற்கு இணை உலகில் வேறு எந்த நாடும் இல்லை என்று ஓதுவோம்.
ஜயபாரத பாடல்
120) சேனை பலம் இல்லாமல், சிறப்பான சிந்தனையை மட்டுமே கொண்டு நூற்றுக் கணக்கான தேசத்தை வென்றவள் எங்கள் தாய். மறம் தவிர்த்த நாடு இது. அறவழி நாடுகள் அதிசயித்த நாடு. பாழ்பட்டு, ஏழ்மை நிலையை அடைந்த போதிலும் அதன் இயல்பான அறத்தை விடாத நாடு. அப்படிப்பட்ட அன்னை நாடு இது. அது வெற்றியைக் கொள்க!
121) நூறு கோடிகளுக்கும் மேலாக நூல்களை நூற்றுக்கணக்கான தேசங்களில் இயற்றிய அறிஞர்கள் தாங்கள் உண்மையைத் தேர்ந்தபாடில்லையே என ஏக்கம் எது உண்மை என்று தேற இந்த நாட்டிற்குத் தான் தேடி வந்தனர். தங்களின் நுண்ணறிவெல்லாம் தீர்ந்து அது தேய்ந்து போக அனைத்தும் தீர்ந்து விட்ட போதிலும் கூட கடைசி கடைசியாக மீதியாக நிற்கும் உண்மையானது ஒரே ஒரு உண்மை தான். அதை மட்டும் இறைஞ்சி நிற்கும் தாய் எங்கள் தாய், அவள் வாழ்க.
122) வில்வித்தையில் தேர்ந்தவர்கள் தங்கள் வாழ்வு குன்றி ஓய்ந்து போக, வீர வாளைக் கொண்டவர்களின் வீரமும் மாய, அற்புதமான வெல்லக் கூடிய ஞான நூல்களின் மெய்மைத் தன்மை தேய, இப்படிச் சொல்லுகின்ற இந்த அனைத்துமே விடப்பட்டு, மற்றவை சூழ்ந்த காலத்திலும் நன்மை தர வல்ல நூலைக் கெடாமல் காப்பவள் எங்கள் அன்னை. அவள் வாழ்க!
123) தேவர்கள் உண்ணும் நன்மருந்தான அமிர்தம் போல, கடலின் கண்ணே உள்ள வெள்ள நீரைப் போல, பாவம் கொண்ட நெஞ்சினை உடையோர் அதைப் பறிக்க முற்பட்டு அந்தப் பறித்தலைச் செய்தாலும் கூட இன்னும் அழியாத செல்வத்தை மிகுதியாகக் கொண்டிருப்பவள் எங்கள் அன்னை. அவள் வாழ்க.
123) நன்மை தரக் கூடிய தொழில்களைச் செய் இந்த இரும் புவிக்கு நல்கினள் எங்கள் தாய். நமக்குப் பதத்தைத் தருவதற்குரிய பல மதங்களைக் கொண்ட நாட்டினள் எங்கள் தாய். விதம் விதமாய் உண்மைகள் கொண்ட வேறுள்ள பல நாட்டவர்களுக்கு இன்னும் ஒரு உண்மையைத் தெரிவிக்கும் படி இன்று சுதந்திரத்தில் ஆசை ஊட்டினாள். அப்படி சுதந்திர ஆசையை ஊட்டிய அன்னை வாழ்க!
ஆகவே அறிவியலில் எதையெல்லாம் முக்கியமாக உணர்கிறோமோ அதையெல்லாம் முடிந்த அளவு அறிந்து கொள்ள வேண்டியது சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரது கடமையும் ஆகும். இந்த வகையில் பாக்யா வார இதழில் அறிவியல் சம்பந்தமான நூற்றுக் கணக்கான கட்டுரைகளை எழுதி வரலானேன்.எனது இனிய நண்பரும், மிகச் சிறந்த திரைப்பட கதாசிரியரும், நடிகரும், பாக்யா இதழின் ஆசியருமான திரு கே. பாக்யராஜ் அவர்களுக்கு அறிமுகமே தேவை இல்லை. அனைவர் உள்ளத்தையும் கொள்ளை கொண்ட பண்பாளர் அவர்.
அவர் தந்த ஊக்கத்தினால் பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் என்ற தொடரை ஆரம்பித்தேன். 4-3-2011 இல் ஆரம்பித்து எட்டு வருடங்களுக்கும் மேலாக வெற்றி நடை போடும் அறிவியல் துளிகளை வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாகம் பாகமாக வெளியிட முடிந்தது.
இந்த நூல் – பதினான்காம் பாகம் – 339 முதல் உள்ள 27 அத்தியாயங்களின் தொகுப்பாகும். ஒவ்வொரு அத்தியாயமும் தனித்தனியே வெவ்வேறு அறிவியல் அம்சத்தை விளக்குவதால் இதை எந்தப் பகுதியிலிருந்தும் படிக்கலாம் என்பதே இந்த நூலின் தனிச் சிறப்பு.
இந்தப் புத்தகத்தை வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின்உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு
எனது நன்றி உரித்தாகுக. தொடராக வந்த போது என்னை ஊக்குவித்த பல்லாயிரக்கணக்கான வாசகர்களுக்கு எனது அன்பு கலந்த நன்றி.
அறிவியல் கற்போம்; அறிவியலைப் பரப்புவோம்!
நன்றி
பங்களூர் ச.நாகராஜன் 7-5-2022
*
நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.
Markazli (maarkali or maarkazi) is considered a very holy month by the Hindus. The month begins when the sun enters the Hindu zodiacal sign Dhanus (Sagittarius).
This is the ninth month in the Tamil calendar. All the South Indian temples open very early in the morning around 4 AM (Brahma Muhurtham) and start the Abhisheka and Aradhana.
Tamil saint poetess Andal’s Thiruppaavai and Tamil Saivite saint Mankikkavaasagar’s Thiruvempaavaai are sung by Tamil Hindus. Temples do broadcast them in the early morning. People get Ven Pongal (spicy rice) and Sarkkarai Pongal (sweet rice) as Prasad.
Bhajan groups go round the towns in the early morning.
My Experience
As a little boy I used to accompany my father in the Bhajan that goes round Madurai city. There were two women Mrs Raajammaal Sundararaajan and Mrs Seetaalakshmi Baalakrishnan who attracted many young girls and trained them in singing Thiruppaavai.
In front of all the Tamil houses one can see beautiful Kolams( rangolis). Kolaattam and Kummi, two Hindu folk dances are performed in public places by young Hindu girls. The belief is that young girls will get good and handsome husbands if they do practise vow/Vrata during this month.
People go to rivers and tanks to take early morning bath. In villages women make cow dung balls and place flowers of Pumpkin in it. It will be in the middle of the kolam/rangoli in front of the houses.
Since it is a cold month, there is a Tamil proverb saying it is not good for the cattle: Maarkali maathak kulir Maadu Makkalukku Peedai (the cold wind of the month Maarkazi gives distress and illness to cattle and people).
.மார்கழி மாதக் குளிர் மாட்டு மக்களுக்குப் பீடை
Maanikkavasagar festival is held in many Shiva temples. Arudra Darisanam of Nataraja /shiva and Vaikunda Ekaadasi are the most important festivals of this month .
All Shiva and Vishnu temples attract lakhs of people during these days.
End of the month comes Bhogi, festival when Hindus clear all unwanted old stuff and make bonfires. It is Pongal eve.
Tamil Hindus don’t celebrate any auspicious event in Purattasi or Markazi. NO marriages take place in this month.
In addition to festivals, Thyaagaraaja Aaaraadhanaa and Kanchi Paramaachaarya Aaaraadhanaa and Ramana Jayanthi are held during this month.
Dhanur Maatha puja in the temples finish on the last day. Some people celebrate Hanumath Jayanthi.
Vishnu temples celebrate 20 days of festival called Pakal Paththu and Raap Paththu ,meaning 10 Days of Day time Pujas and 10 Days of Night Time Puja.
During Arudra Shiva festival and 20 days of Vishnu festival, idols are taken round the town in processions.
Arudra festival, also known as Thiruvaathirai, is celebrated by Malayalees on a grand scale.
A special dish called sweet Kali accompanied with spicy Koottu is made on Arudra day. Hundreds of Pots of buttery Sweet Pongal/ Sarkkarai Pongal is made in Vishnu Temples on the Koodaarai valli day.
A Hindu Panchaangam (almanac) gives al these days in bold letters.
xxx
10.THAI
‘Thai’ is the tenth month in Hindu calendar. When the sun enters zodiacal sign Makara Raasi (Capricorn), Thai begins. It is the period of harvest in South India. Pongal or Makara Sankraanti (sankaraanthi) is celebrated on a grand scale by the Hindus.
The Northward travel of Sun begins and this six month period is called Uttaraayana Punyakaala.
Nowadays Non Hindus also join this Hindu festival like Malayalees do during Onam. Both are pure Hindu festivals worshipping Hindu Gods. Politicians distorted both these Hindu festivals.
Makara Sankraanti is celebrated in India and South East Asian countries. Very few Hindu festivals are based on the movement of Sun (solar) and Sankraanti is one of them. Thai first day, roughly corresponding to 14th of January is the Pongal day. Pongal means Rice Pudding (we have one or two articles in this blog about the Pongal festival in this blog).
Just before Pongal, people clean the houses and whitewash them. Next day of Pongal is Kaanum Pongal (Kanu) and Maattup Pongal. On the day of Maattu/Cattle Pongal ,all the cows and bulls are decorated and taken round he town with Lord Krishna’s idol. Bull Fighting events are organised by Yadava Community in many villages. Turmeric and Ginger plants are used in decoration of Pongal pots. Tamils boil newly harvested rice in newly made burnt clay pots. Sugarcane is consumed during this season.
Like Diwali, new clothes are worn by men and women.
There is a proverb in Tamil saying Thai Piranthaal Vazi Pirakkum; if Thai is born, a way will be seen. The meaning is ‘Thai brings hope of marriage and accumulation of money’. Since Tamils don’t celebrate marriages during the two months , every man and woman wait for Thai. தை பிறந்தால் வழி பிறக்கும்.
Dravidian politicians announced Thiruvalluvar Day should be celebrated on the third day (16th January).
Ratha Saptami, Bheeshma Ashtami are important days for Hindus. They give oblation to the greatest celibate Bheeshma (Bhishma).
Thai Amavasai (new moon day in Thai) is celebrated all over India with holy dip in the holy rivers or sea. Like Aadi Amaavaasai, millions of Hindus give oblations to the departed souls. All Hindus, irrespective of castes, remember their ancestors on these two new moon days.
Thai Poosam (Pusam star with Purnima) is a big day of celebration in Hindu Temples. Many temples including Madurai Temple organise Float Festival (Teppam) for gods and goddesses.
In Vadalur in Tamil Nadu, big festival is organised by the devotees of Hindu saint Ramalinga Swaamigal known as Vallallaar.
To be continued………………………
tags- Tamil months, Markazi, Thai, Pongal, Arudra, Thiruvathirai, Vaikunda Ekadasi