இரண்டு சுவையான வேடிக்கைக் கவிதைகள் ! (Post No.11,226)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,226

Date uploaded in London – 30 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

ஸத்ய பாமா – கிருஷ்ணன் உரையாடல்

ஸம்ஸ்க்ருதத்தைக் கற்க எளிதான வழி அந்த மொழியில் இருக்கும் வேடிக்கைக் கவிதைகளை கற்பதாகும். ஒரு ஆசிரியர் பதம் பிரித்துச் சொல்லுகையில் அதைப்  புரிந்துகொண்டு கவிதையை மனப்பாடம் செய்தால் போதும் .

கிருஷ்ணனுடைய எட்டு மனைவியரில் இருவர் முக்கியமானவர்கள். ருக்மிணி , ஸத்ய பாமா ஆகிய இருவரும் பட்ட மஹிஷிகள் – அதாவது மஹா ராணிகள்.

அங்குல்யா கஹ கபாடம் ப்ரஹரதி விசிகே மாதவஹ கிம் வஸந்தோ

நோ சக்ரீ கிம் குலாலோ ந ஹி தரணீதரஹ கிம் த்விஜிஹ்வக  பணீந்திரஹ

நாஹம் கோரா ஹிமர்தோ கிமுத கக பதிர்நோ ஹரிஹி கிம் கபீந்த்ரஹ

இத்யேவம் ஸத்யபாமா பிரதி வசன ஜிதஹ பாது வ சக்ரபாணி ஹி

ஸத்யபாமா – ஓ விசிக, கதவைத் தட்டுவது யார் என்று பார்.

கிருஷ்ண – நான் மாதவன்

ஸத்யபாமா  ஓ , வஸந்தமா ? (மாதவ என்பதற்கு மற்றொரு பொருள் வசந்த காலம்)

கிருஷ்ண- நான் சக்ரீ , சக்கரத்தைக் கையில் ஏந்தியவன்.

ஸத்யபாமா – ஓஹோ, பானை செய்யும் குயவனா?

(சக்ரீ என்பதன் மற்றொரு பொருள் குயவன்)

கிருஷ்ண – இல்லை, நான் தரணீதரன் இந்த உலகையே தாங்கி நிற்பவன்)

ஸத்யபாமா– அப்படியானால் நீ ஒரு பாம்பா ?

(புராணக் கதைகளின்படி இந்த பூமி தரணீதர/ சேஷ நாகம்  என்னும் பாம்பின் தலையில் உள்ளது)

கிருஷ்ண – இல்லை; நான் விஷப் பாம்பினைக் கொன்றவன்

(காளீய என்ற பாம்பினைக் கொன்றவன் கிருஷ்ணன் என்பதை எல்லோரும் அறிவர்)

ஸத்ய பாமா – ஓஹோ, நீ பாம்புகளைக் கொல்லும் கருடன்தானே?

கிருஷ்ண – இல்லை ; நான் ஹரி

ஸத்ய பாமா – ஓஹோ நீ குரங்கா? (ஹரி என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கு மற்றொரு அர்த்தம்- குரங்கு)

கவிஞர்- ஸத்ய பாமாவால் தோற்கடிக்கப்பட்ட பகவான் கிருஷ்ணன் உங்களைக் காப்பாற்றட்டும்.

சம்ஸ்க்ருத மொழியில் நிறைய வேடிக்கைக் கவிதைகள் இருக்கின்றன. அவற்றை ஆசிரியர் மூலம் பதம் பிரித்து கற்கும்போது அவை மறக்கவே மறக்காது.

XXX

வெண்ணை திருடிய கிருஷ்ணனும், அவனைப் பிடித்த கோபியும் நடத்திய உரையாடல்

ஸம்ஸ்க்ருத மொழியில் சுவையான சம்பாஷணைக் கவிதைகள் (உரையாடல்கள்) உண்டு. இதோ ஒரு கோபி- கிருஷ்ணன் உரையாடல்:

கஸ்த்வம் பால பலானுஜஹ த்வமிஹ கிம் மன்மந்திர சங்கயா

புத்தம் தம் நவநீதகும்ப விவரே ஹஸ்தம் கதம் ந்யஸ்யஸி

கர்தும் தத்ர பிபீலிகா பனயம் சுப்தாஹா கிமுத் போதிதா

பாலா வத்ச கதிம் விவேக்துமிதி ஸஞ்ஜல்பன் ஹரிஹி  பாது வஹ

கோபி ; சின்னப் பையா, நீ யார் ?

கிருஷ்ணன் : நான் பலராமனின் தம்பி

(பல ராமனுக்கு எப்போதும் நல்ல பெயர் உண்டு; அதனால் அண்ணன் பெயரை உபயோகித்து தப்பிக்க கிருஷ்ணன் முயற்சிக்கிறான்)

கோபி : நீ ஏன் இங்கே இருக்கிறாய்?

கி: நான் இது என்னுடைய வீடு என்று நினைத்துவிட்டேன்

கோ: அது சரி, வெண்ணெய்ப்  பானைக்குள் ஏன் கையை நுழைத்தாய்?

கி- அங்கேயிருந்த எறும்புகளை அகற்ற …

கோ- தூங்கிக் கொண்டிருந்த கன்றுக்குட்டியை ஏன் எழுப்பினாய்?

கி- அது எப்படி நகர்ந்து செல்லும் என்று பார்ப்பதற்காக …

கவிஞர் – இப்படி உளறிய கிருஷ்ணன் எல்லோரையும் காப்பாற்றுவானாகுக

இப்படிப்பட்ட கவிகள் மூலம்  ஸம்ஸ்க்ருதம் கற்பது எளிதாகும் .

SOURCE: THE WONDER THAT IS SANSKRIT, SAMPAD & VIJAY, SRI AUROBINDO SOCIETY, PNDICHERRY, 2002

TRANSLATED FROM ENGLISH INTO TAMIL BY LONDON SWAMINATHAN

–சுபம்—

TAGS- சத்ய பாமா , ஸத்ய பாமா, ருக்மிணி , வெண்ணெய், கோபி, உரையாடல், கவிதை, சம்ஸ்க்ருதம்

செப்பு மொழி பத்தொன்பது! (Post No.11,225)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,225

Date uploaded in London – –    30 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

செப்பு மொழி பத்தொன்பது!

ச.நாகராஜன்

1. நீங்கள் வாய் திறந்து சொல்லப் போகும் சொல் மௌனமாய் இருப்பதை விடச் சிறந்ததா?

2. மௌனம் என்பது காலம் காலமாக ‘அக உண்ணாவிரதம்’ எனக் கருதப்படும் ஒன்று. அது உங்களின் உண்மையை மட்டும் கேட்கும்.

3. சில சொற்களை மட்டும் சொல்பவரே மனிதரில் சிறந்தவர். – ஷேக்ஸ்பியர்

(Men of few words are the best men – Shakespeare)

4. உங்களை அனைவரும் நல்லவர் என்று நினைக்க வேண்டுமா? அப்படியானால் பேசாதீர்கள் – பாஸ்கல்

Do you wish people to believe good of you? Don’t Speak. – Pascal

5. நீ பேசும் சொற்களுக்கு தராசையும் எடைக் கற்களையும் வைத்துக் கொள்வதோடு உன் வாய்க்கு ஒரு கதவை மாட்டி அதற்கு தாழ்ப்பாளையும் போடு – (அபோர்க்ரிபா – எக்லெசியாஸ்டிகஸ்)

Make scales and weights for your words, and put a door with bolts across your mouth. (Apocrypha, Ecclesiasticus)

6. மற்றவர்களுடன் நீ தொடர்பு கொள்ளும் போது அவர்கள் மீது இரக்கம் கொண்டு குறைவாகப் பேசினால்  அதன் பெரிய நன்மை அவர்கள் குறைவாக துன்பப்படுவார்கள் என்பது தான்!

7. அன்பாகப் பேச யாருக்கும் காசு கொடுக்க வேண்டாம் – வியட்நாம் பழமொழி’

8. பேசும் போது உரக்கப் பேசாதே; எதிர்மறையாகப் பேசாதே!

9. மௌனம் உன் உள்ளிருக்கும் கர்பக்ரஹத்திற்கான வாயில். அது இதயத்தின் கீதம்.

Silence is the threshold to the inner sanctum. Silence is the song of the heart.

10. சமன்பாடு சின்னது தான். கெட்ட பேச்சு வியாதியைத் தருகிறது. நல்ல பேச்சு ஆரோக்கியத்தையும் ஆறுதலையும் தருகிறது.

It is a simple equation. Wrong speech cause ill-being. Right speech brings about well-being and healing.

11. சந்தேகமாக இருக்கும் போது உண்மையைச் சொல்லி விடு – மார்க் ட்வெய்ன்

When in doubt, tell the truth. – Mark Twain

12. கிடைக்கின்ற எல்லா வாய்ப்புகளையும் உனக்கு நன்மை தரும்படி எடுத்துக் கொண்டு உன் வாயை மூடிக் கொள்.

Take advantage of all the opportunities to keep your mouth shut.

13. உனக்குப் புரியாததைப் பற்றிப் பேசாமல் இருப்பது உனக்கு மிகவும் நல்லது என்பதை நினைவில் கொள். – லாவோட்சு

Remember that it is better not to speak of things you do not understand. – Lao-tsu

14. நல்ல பேச்சின் இரண்டாவது பகுதி என்னவெனில் புதிதாகக் கண்டுபிடிப்பதிலிருந்தும் பெரிதுபடுத்துவதிலிருந்தும் விலகி இருப்பது தான்!

The Second part of Right speech is to refrain from inventing and exaggerating.

15. பேச்சை மற்றவர்களுக்கு விட்டு விடு!

Leave the talking to others.

16. சொல் என்பது ஒரு செயல் என்பதை நினைவில் கொள்.

Remember that a word is an action.

17. உன்னை நீயே கேட்டுக் கொள் : நிஜமாகவே சொல்வதற்கு ஏதாவது இருக்கிறதா?

Ask yourself: Does something really have to be said?

18. தப்பாகப் போகும் எந்த ஒரு விஷயத்திற்கும் ஆரம்பமே பேச்சு தான்!

Everything that goes wrong starts with speech.

19. நல்ல ஒரு நேர்மையான இதயத்தை உனது பேச்சு பின் தொடர்ந்து செல்லட்டும்!

Let your speech follow a good and honest heart.

***

புத்தக அறிமுகம் – 41

ஜோதிடம் பார்க்கும் முன் தெரிந்து கொள்ளுங்கள்!

பொருளடக்கம்

என்னுரை

1. ஜோதிடம் உண்மையா? – 1

2. ஜோதிடம் உண்மையா – 2

3. ஸ்ரீ ராமரின் ஜோதிட அறிவு

4. அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளுக்கு ஜோதிடரைக் கலந்து ஆலோசி!

5. ஜோதிடர் இல்லாத ஊரில் ஒரு நாள் கூட வசிக்காதே!

6. ஜோதிடம் பற்றியும் துர்நிமித்தம் பற்றியும் நாரதர் யுதிஷ்டிரருக்குக் கூறியது என்ன?

7. ஜோதிடருக்கான தகுதிகள்!

8. கலிகால ஜோதிடர்கள்!

9. ஜோதிட மேதை ஸ்ரீ சூர்யநாராயண ராவ் – 1

10. ஜோதிட மேதை ஸ்ரீ சூர்யநாராயண ராவ் – 2

11. நுட்பமான ஜா கணிதம், சௌரமான ஸம்வத்ஸரம், சாந்திரமான ஸம்வத்ஸரம்!

12. விதி விளக்கம் – 1

13. விதி விளக்கம் – 2

14. விதி விளக்கம் – 3 வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம்: பஞ்ச அங்க விளக்கம்

15. விதி விளக்கம் – 4 நட்சத்திர விளக்கம்

16. விதி விளக்கம் – 5 நட்சத்திர விளக்கத்தில் ராகுவும் கேதுவும்

17. விதி விளக்கம் – 6 சில முக்கிய குறிப்புகள்

18. காரிய வெற்றிக்கு எந்தக் கிழமைகளில் எதை ஆரம்பிக்கலாம்?

19.க்ருஹ ப்ரவேசம் செய்யும் போது கவனிக்க வேண்டியவை!

20. உங்களுக்கு மிக முக்கியமான ஜன்ம நட்சத்திரம்!

21. ராசிக்குரிய ராகங்களும், நவக்ரஹ கீர்த்தனை ராகங்களும்!

22. சாஸ்திரங்கள் கூறும் இரகசியங்கள்!

23. நல்ல சகுனங்களும் தீய சகுனங்களும்!

24. அறிவியல் வியக்கும் அங்க லட்சணம்!

25. நட்சத்திரங்கள் பூஜித்த தலங்கள்

26. நவக்கிரகங்கள் பூஜித்த தலங்கள்

27. பலன் தரும் நவக்ரஹ யந்திரங்கள்!

28. பலன் தரும் பரிஹார யந்திரங்கள்!

*

நூலில் நான் வழங்கிய என்னுரை இது :

என்னுரை

வாழ்க்கையில் நாம் காணும் பல அதிசயங்களுள் ஒன்று ஜோதிடம்.

பின்னால் நடப்பதை முன்னாலேயே ஒருவர் சரியாகக் கூறி விட்டால் பிரமிக்கிறோம்.

வேதாங்கம் ஆறு. அவற்றில் ஒன்று ஜோதிடம்.

இது உண்மையா? பலர் கூறுவது பலிப்பதே இல்லை. ஆகவே தான் இந்தக் கேள்வி எழுகிறது.

இதை மனதில் கொண்டு ஜோதிடத்தைப் பற்றி விரிவாக ஆராய ஆரம்பித்தேன்.

ஜோதிடம் உண்மையா?, ஜோதிட மேதைகளின் வரலாறு, நவகிரகங்கள், நட்சத்திர அதிசயங்களும் மர்மங்களும் ஆகிய புத்தகங்களையும்  வெளியிட்டேன்.

எனது ஆய்வில் கிடைத்த முடிவு – ஜோதிடம் என்பது உண்மையே. ஆனால் மிக நுட்பமான இந்தக் கலையில் தேர்ச்சி பெற்றோர் மிகவும் குறைவானவரே! ஆகவே ஜோதிடர்கள் என்று கூறிக் கொள்வோரை சற்று கவனியுங்கள்.

பணத்திற்கு ஆசைப்பட்டு இயங்கும் போலி ஜோதிடர்களை அடையாளம் கண்டு ஒதுக்குங்கள்.

தொடர்ந்து ஶ்ரீ ஜோஸ்யம் உள்ளிட்ட இதழ்கள்,  www.tamilandvedas.com இணைய தள ப்ளாக் உள்ளிட்டவற்றில் பல கட்டுரைகளை எழுதி வந்தேன். அவற்றின் தொகுப்பே இந்த நூல்.

அன்றாடம் மனதில் எழும் பல அடிப்படையான கேள்விகளுக்கு விடை தருவது இந்த நூல்.

இந்தக் கட்டுரைகளை வெளியிட்ட ஞான ஆலயம் குழும ஆசிரியரான திருமதி மஞ்சுளா ரமேஷ், லண்டன் திரு சுவாமிநாதன் ஆகியோருக்கு எனது உளமார்ந்த நன்றி உரித்தாகுக.

இந்த புத்தகத்தில் வரும் ‘விதி விளக்கம்’ என்னும் நூலை எனக்கு அனுப்பி உதவியவர் எனது சம்பந்தி திரு ஆர்.சேஷாத்திரிநாதன் அவர்கள். ஏராளமான அருமையான எளிதில் கிடைக்காத பழைய நூல்களை அவ்வப்பொழுது எனக்கு அவர் அனுப்புவது வழக்கம். அவருக்கு எனது நன்றி.

இந்தக் கட்டுரைகள் வெளியான போது அவ்வப்பொழுது பாராட்டி மேலும் எழுத ஊக்கம் கொடுத்த அன்பர்களுக்கு எனது நன்றி.

இந்த நூலை அழகுற அமைத்து வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக!

சான்பிரான்ஸிஸ்கோ
16-8-2022

ச.நாகராஜன்

*

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

**

ராமாயணம் ஏன் அழியவே அழியாது? மூன்று அபூர்வ உதாரணங்கள் (11,224)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,224

Date uploaded in London – 29 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

ராமாயணத்தைப் போற்றும் பல பாடல்கள் உண்டு. அதில் ஒரு பாடல், இந்தப் பூமியில் சூரிய சந்திரர்கள் பிரகாசிக்கும் வரை ராமாயணத்துக்கு – ராம கதைக்கு –அழிவே  கிடையாது  என்று கூறும் 

காரணம் என்ன?

 காம, க்ரோத, லோபம் என்ற மூன்று தீய குணங்கள் உடைய எவரும் எப்படி முடிவெடுப்பரோ அதற்கு நேர் மாறாக முடிவு எடுக்கின்றனர் ராமாயண கதாபாத்திரங்கள். இதைவிட ஒரு நல்ல குடும்பம் இருக்கவே முடியாது என்னும் அளவுக்குச் செயல்படும்  பல கட்டங்களைக் காண்கிறோம்.

இந்தப்  பூவுலகில் எல்லா நல்ல குணங்களும் நிரம்பிய நல்ல மனிதர்  எவரேனும் உண்டா?  என்று நாரதரிடம் வால்மீகி முனிவர் கேட்டபோது, நாரதர் ராமரின் குணாதிசயங்களை விவரித்து நீண்ட பதில் தருகிறார். பலரும் கேட்ட விஷயங்களே அவைகள் . பின்னர் நாரதர் விடைபெற்றுச் செல்கிறார். வால்மீகி முனிவர் தமஸா நதிக்கரையை நோக்கிச் செல்கிறார். அங்கு தினசரி நடை பெறும்  காட்சிதான் நடக்கிறது அதாவது ஒரு வேடன் பறவைகளை நோக்கி அம்பு எய்கிறான். அவை செத்து விழுகின்றன. அதைப்  பார்த்த வால்மீகிக்கு சோகம் மிக்க  உணர்ச்சிக் கொந்தளிப்பு ஏற்படுகிறது. அதன் வாயிலாக நமக்கு ராமாயணம் கிடைக்கிறது. ஆனால் அதற்கு முன்னர் ஒரு அற்புதமான வருணனை வருகிறது.

இதோ சில அரிய எடுத்துக் காட்டுகள்:-

வால்மீகி முனிவர் தமஸா நதியைச் சுற்றுமுற்றும்  பார்க்கிறார் . அற்புதமான, அமைதியான அழகுமிக்க பரத்வாஜ  ஆஸ்ரமம் தெரிகிறது .அதைச்சொற்களில் வடிக்கும் போது நாம் சித்திரத்தில் கண்ட காட்சி போல அமைகிறது  அந்தச் சொற்சித்திரம் :-

(1)

அகர்தமமிதம் தீர்த்தம் பரத்வாஜ நிசாமய

ரமணீயம் ப்ரசன்னாம்பு ஸன்மனுஷ்ய மனோ ததா

பொருள்

பரத்வாஜரே  இந்த தண்ணீரைப் பாருங்கள் ! ஸ்படிகம் போல தெள்ளத் தெளிவாக இருக்கிறது; பார்க்கவே மனதிற்கு இன்பம் தருகிறது; நேர்மையான மனிதனின் மனதுபோல களங்கமற்று இருக்கிறது.

நேர்மையான மனிதனின் மனதுபோல தெளிந்த நீரோட்டம் உடையது அந்த ஆறு. நல்ல உவமை. ரமணீயம் ப்ரசன்ன , சன் மனுஷ்ய மனஹ  (நல்ல மனிதனின் மனது) என்ற சொற்கள் கவனிக்க வேண்டிய சொற்கள்.

இப்படிப்பட்ட நல்ல மனிதர்களின் மனதுதான் அற்புதங்களைச்  செய்யும். முத்து சுவாமி தீக்ஷிதர்  அமிர்த வர்ஷனி ராகம் பாடினால் மழை  பெய்யும் ; ஆதிசங்கரர் கனக தாரா தோத்திரம் பாடினால் தங்க நெல்லிக்காய் மழை  பெய்யும். ஞான சம்பந்தர் தேவாரம் பாடினால் அஸ்திச்  சாம்பலிலிருந்து  பூம்பாவை உயிர்பெற்று எழுவாள்; கூன் பாண்டியன் நின்ற சீர் நெடுமாறனாகக்  காட்சி தருவார். இதெல்லாம் தெளிந்த நீரோடை போன்ற மனது உடையோர் சாதிக்கக் கூடிய காரியம். நமக்கும் அப்படி இருக்குமானால் அற்புதங்களை சாதிக்கலாம்.

XXX

(2)

சீதா தேவி ஓராண்டுக் காலத்துக்கு ராவணனால் சிறைவைக்கப்பட்டு அசோக வனத்தில் வாடுகிறாள். உயிர்விட எண்ணிய தருணத்தில் ராமனின் கணையாழியுடன் வந்து காட்சி தருகிறான் அனுமன். இருண்ட  வானத்தில் ஒரு ஒளிக்கீற்று தோன்றுகிறது.  ராம- ராவண யுத்தம் முடிந்த பின்னர் மீண்டும் வெற்றிச் செய்தியுடன் சீதையை சந்திக்க அனுமன் வருகிறான்.

“தாயே உங்களுக்குத் தீங்கு விளைவித்த அசோக வன ராட்சச , ராட்சசிக்களை ஒழித்துக்கட்டவா?” என்று கேட்கிறான் . பகைவனுக்கும் அருள்வாய் நன்நெஞ்சே என்ற பாரதியின் வாக்கிற்கு இணங்க கருணையே வடிவான  ஸீதை சொல்கிறாள் :-

பாபானாம் வா சுபானாம் வா வதார்ஹானாம் ப்லவங்கம

கார்யம் கருணமார்யேண ந கஸ்சின்னா பராத்யதி

சீதை சொல்கிறாள் –

“இது போன்ற சிறியோர் மீது நாம் பழிவாங்குதல் அழகல்ல. அவர்களுடைய அரசர் சொன்னதையே அவர்கள் செய்தார்கள். உலக மக்கள் அனைவருக்கும் பொருந்தும் குணம் கருணையே ; அவர்கள் நல்லவர்களா கெட்டவர்களோ,  தீய குணங்களை உடையோரை தண்டித்தல் சரியாக இருக்கலாம்; ஆயினும் எப்படி ஒரு மனிதன், மற்றொரு மனிதனை எடைபோட முடியும் முடியும்?”

XXX

(3)

வால்மீகி , மனிதர்களை வருணிப்பதோடு இயற்கையையும் அற்புதமாக வருணிக்கிறார். காட்டில் இரவு நேரம் எப்படி இருக்கும்?

“மரங்கள் எல்லாம் அசைவற்று நிற்கின்றன. பிராணிகளும் பறவைகளும் அங்கே மறைந்து நிற்கின்றன. மெதுவாக மாலை நேரம் விடை பெற்றுப்  புறப்படுகிறது . வானத்தில் கண்கள்  (நட்சத்திரங்கள்)  முளைக்கின்றன. எங்கு நோக்கினும் நட்சத்திரங்களும் ராசி மண்டங்களும் பிரகாசிக்கின்றன அப்போது குளிர்ந்த கிரணங்களை வீசும் சந்திரன் உதயமாகி இருளை விரட்டுகிறான். பூமியில் வாழும் உயிரிங்களின் உள்ளங்களில் மகிழ்ச்சி பொங்குகிறது. இரவுநேரத்தில் வலம் வரும் ஜந்துக்கள் நகரத் துவங்குகின்றன. பிற பிராணிகள் கொன்ற எச்ச  சொச்சங்களைத் தின்னும் நரிகளும் யக்ஷ ராக்ஷசர்களும் நடைபோடுகின்றன”.

இது பாலகாண்டத்தில் வரும் வர்ணனை ; ராமனுக்குச் சொல்லப்படும் விஷயம். ஒரு சிறுவனுக்கு எவ்வளவு திகிலும், பின்னர் அச்சம் நீங்கிய உணர்வும் ஏற்பட்ட வேண்டுமோ அப்படி வால்மீகி அமைத்துள்ள சொற்றொடர்கள் இங்கே உள்ளன

இப்படி நிறைய செய்திகளை நாம் பல்வேறு கோணங்களில் காணலாம் . அப்போதுதான் வால்மீகியின் பெருமையை நாம் உணரமுடியும். இவைதான் எத்தனை முறை படித்தாலும் எத்தனை முறை கேட்டாலும் ராமாயணத்தை அலுக்காமல் கேட்க வைக்கிறது.

காலத்தால் அழியாத, அழிக்க முடியாத காவியம் ராமாயணம்!

–சுபம்—

TAGS- ராமாயணம், வால்மீகி , உதாரணம், அழியாது

(மூட) நம்பிக்கைகள்?! (Post No.11,223)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,223

Date uploaded in London – –    29 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

(மூட) நம்பிக்கைகள்?!

ச.நாகராஜன்

ஒவ்வொரு நாகரிகத்திலும், ஒவ்வொரு இனத்திலும், ஒவ்வொரு மதத்திலும் வெவ்வேறு நம்பிக்கைகள் காலம் காலமாக இருந்து வருகின்றன.

இவற்றை மூட நம்பிக்கைகள் என்று பொதுவாகச் சொல்லி விடுவார்கள். ஆனால் கடைப்பிடிப்பதை என்னவோ குறிப்பிட்ட இனத்தையோ இடத்தையோ மதத்தையோ சார்ந்தவர்கள் விடுவதில்லை.

ஐயோனா ஓபி (Iona Opie)மற்று மரியா டாடெம் (Moria Tatem) ஆகிய இரு பெண்மணிகள் உலகெங்கும் கடைப்பிடிக்கப்படும் நம்பிக்கைகளைத் தொகுத்து டிக்‌ஷனரி ஆஃப் சூபர்ஸ்டிஷனஸ் என்ற நூலை வெளியிட்டுள்ளனர்.

உலகெங்கும் கடைப்பிடிக்கப்படும் இந்த (மூட) நம்பிக்கைகளைப் பார்த்து வியக்கிறோம். அதைக் கடைப்பிடிக்காவிடில் ஏற்படும் ஆபத்துக்கள், விபத்துக்கள், மரணங்கள் பற்றியும் விளக்கங்களைக் காண்பிக்கும் போது பிரமிக்கிறோம்.

அவற்றைக் கடைப்பிடிக்காததால் ஏற்பட்ட விபத்துக்களையும், மரணங்களையும் பற்றிய விவரங்களும் கூட சில இடங்களில் இந்த நூலில் தரப்பட்டுள்ளது.

சில நம்பிக்கைகள் இதோ:

1)   திங்கள் கிழமை : திங்களன்று எதையும் ஆரம்பிக்காதே. அயர்லாந்தில் எந்தக் கிழமையில் காலை நேரத்தில் எதை வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம். ஆனால் திங்கள் கிழமையன்று மட்டும் எதையும் ஆரம்பிக்கக் கூடாது!

2)   திங்கள் கிழமை என்று ஒரு பெண்மணி ஒரு கம்பெனியில் சொல்லி விட்டால் அந்தக் கம்பெனிக்கு துரதிர்ஷ்டம் தான்; அதையே ஆண் சொல்லி விட்டாலோ அந்த கம்பெனிக்கு அதிர்ஷ்டம் தான்!

3)   செவ்வாய் : உழுதல், நடுதல், அறுவடை செய்தல் எல்லாவற்றிற்கும் உகந்த நாள் செவ்வாய்கிழமை தான்!

4)   ஞாயிற்றுக்கிழமை செய்யும் எந்த வேலையும் திங்களோடு முடிந்து போகும். எதையும் ஞாயிறு அன்று செய்யாதே.

5)   ஞாயிற்றுக்கிழமை எதையும் செய்யாதே; செய்தால் அதில் ஒவ்வொரு முறையும் ஒரு கோளாறு ஏற்படும்.

6)   வெள்ளிக்கிழமை வந்தது என்றால் போதும், பெண்மணிகள் எல்லோரும் வாரத்தின் துரதிர்ஷ்டமான நாள் வந்து விட்டது என்று கூறுவார்கள்.

7)   வெள்ளிக்கிழமை பயணத்தைத் தொடங்காதே. தொடங்கினால் எந்த உல்லாசப் பயணமும் வெற்றி பெறாது.

8)   சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் துரதிர்ஷ்டமான நாட்கள். வேலைக்காரர்கள் தங்கள் இடங்களுக்குப் போகவே மாட்டார்கள். அதனால் தான் பழமொழியே வந்தது இப்படி – Saturday servants never stay ; Sunday servants runaway!

9)   13 என்பது மிகவும் மோசமானது. ஒரு அறையில் 13 பேர் கூடினார்கள் என்றால் அதில் ஒருவர் ஒரு வருடத்திற்குள் இறந்து போவார்.

10) ஒரு டேபிளில் பதிமூன்றாவது ஆளாக உட்காராதே; உட்கார்ந்தால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.

11) பச்சை: பச்சை நிறம் மிகவும் துரதிர்ஷ்டமான நிறம். புது மணத் தம்பதிகள் நீல உடையையே தேர்ந்தெடுக்க வேண்டும். பச்சை நிறம் இடம் பெற்றாலோ, அவ்வளவு தான்!

12)  பெண்மணிகளைப் பாதுகாப்பது நீல நிறம் தான். பெண்மணிகள் அனைவரும் கழுத்தைச் சுற்றி நீல நிற கம்பளித் துணியைச் சுற்றிக் கொள்வர். நீல நிற நெக்லஸ் மாலைகள் பெரும் பாதுகாப்பைத் தரும்.

13)  மணப்பெண் ஒரு போதும் திருமண நாளன்று அழக்கூடாது; சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு திருமணம் நடந்தால் வாழ்வில் இன்பம் இருக்காது; குழந்தைகள் நிலைக்காது.

14)  மூன்று  முடிச்சுகள் போடுவது உண்மை அன்பிற்கு அடையாளம். மெதுவாக அவள் காதில் இப்படி முணுமுணுத்துச் சொல் : She will, or She will not”

15)  மே மாதம் மிகவும் ஆபத்தான மாதம்; அந்த மாதத்தில் தான் மந்திரவாதிகளும் ஆபத்தான பெண்மணிகளும் தங்கள் மாய வித்தைகளைக் காண்பிப்பர்.

16)  மே மாதம் கல்யாணம் செய்து கொள்ளாதே; விதவையாகத் தான் போவாய். பழமொழி கூட உண்டு – Marry in May, rue for aye’ ; Of all the months It is worst to Wed in May; Of the marriages in May, The bairns die of a decay. ஏப்ரலிலும் ஜுனிலும் கல்யாணம் செய்யலாம்.

17)  மூக்கு அரிக்கிறதா, உடனே ஒய்னைக் குடி.

18)  சர்ச்சில் வடக்குப் புறம் உள்ள வாயில் பிசாசின் வாயில்.  பாப்டிஸம் சடங்கு நடக்கும் போது மட்டும் அது திறக்கப்படும். மற்ற வேளைகளில் மூடியே இருக்கும். திருமண தம்பதிகள் தெற்கு வாயிலின் வழியே தான் உள்ளே வர வேண்டும். ஒரு போதும் வடக்குப் பக்கத்திலிருந்து வரக் கூடாது.

19)  உப்பு என்ற வார்த்தையை ஒரு போதும் கடலில் சொல்லக் கூடாது. உப்பு வேண்டுமென்றால் அந்தச் சொல்லக் கூடாத வார்த்தையை எடுத்துக் கொண்டு வா என்று தான் சொல்ல வேண்டும்.

20) கண் அரிக்கிறதா? ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரியான நம்பிக்கை!

இடது கண் அரித்தால் அன்புக்குரியவரைப் பார்க்கலாம். இன்னொரு இடத்தில் வலது கண் அரித்தால் அதிர்ஷ்டம்!

ஷேக்ஸ்பியர் – ஒதெல்லோ – iv – iii – Mine eyes do itch; Doth that boade weeping? 

N. Homes Daemonologie – “If their right eye itchth, it betokens sorrowful weeping, if the left …. Joyful laughter!

21) மூட நம்பிக்கைகள் பற்றிப் பலரும் பலவிதமாகச் சொல்லி இருக்கிறார்கள்!

A whole universitie of Doctors cannot roote these superstitious observations out of their minde.    – John Milsot, Astrologer

Freedom from superstition is not necessarity a form of Widson – Robert Lnd, Solomon in All His Glory

***

புத்தக அறிமுகம் – 40

மஹாகவி பாரதியார் பற்றி அறிய உதவும் நூல்களும் கட்டுரைகளும்

பாகம் – 1 

பொருளடக்கம்

1. சகுந்தலா பாரதி – என் தந்தை

2. யதுகிரி அம்மாள் – பாரதி நினைவுகள்

3. என் கணவர் – செல்லமா பாரதி

4. வெ.சாமிநாத சர்மா – நான் கண்ட நால்வர்

5. ரா.அ.பத்மநாபன் – பாரதி புதையல் மூன்றாம் தொகுதி

6. அமுதன் – பாரதியார் பிறந்த நாள்

7. வ.ரா. – மகாகவி பாரதியார்

8. P. Mahadevan – Subramania Bharati – Patriot and Poet

9. ரா.அ.பத்மநாபன் – பாரதியார் கவிநயம்

10. கு.ப.ராஜகோபாலன், பெ.கோ.சுந்தரராஜன் – கண்ணன் என் கவி

11. பி.ஸ்ரீ. – பாரதி நான் கண்டதும் கேட்டதும்

12. கல்கி – பாரதி பிறந்தார்

13. பெ.நா.அப்புஸ்வாமி – பாரதியை ஒட்டிய நினைவுகள்

14. பெ.நா.அப்புஸ்வாமி – பாரதியை ஒட்டிய நினைவுகள்

15. விஜயா பாரதி – ‘பாரதியாரின் Annotated Biography (With a National Historical Background) ’

16. ஏ.கே.செட்டியார் – குமரி மலர் கட்டுரைகள் – 1

17. ஏ.கே.செட்டியார் – குமரி மலர் கட்டுரைகள் – 2

18. ஏ.கே.செட்டியாரின் குமரி மலர் கட்டுரைகள் – 3

19. ஏ.கே.செட்டியாரின் குமரி மலர் கட்டுரைகள் – 4

20. ஏ.கே.செட்டியாரின் குமரி மலர் கட்டுரைகள் – 5

21. ஏ.கே. செட்டியாரின் குமரி மலர் கட்டுரைகள் – 6

22. ஏ.கே. செட்டியாரின் குமரி மலர் கட்டுரைகள் – 7

23. ஏ.கே. செட்டியாரின் குமரி மலர் கட்டுரைகள் – 8

24. ஏ.கே. செட்டியாரின் குமரி மலர் கட்டுரைகள் – 9

25. ஏ.கே. செட்டியாரின் குமரி மலர் கட்டுரைகள் – 10

26. ஏ.கே. செட்டியாரின் குமரி மலர் கட்டுரைகள் – 11

27. உ.வே.சாமிநாதையர் -பாரதியார் பற்றி நினைவு மஞ்சரி

28. ஹரிகிருஷ்ணன் – பாரதியும் ஏவிஎம்மும் – சில உண்மைகள்!

29. சின்ன அண்ணாமலை – சொன்னால் நம்ப மாட்டீர்கள்!

30. எஸ்.ஜி. ராமானுஜலு நாயுடு : சென்று போன சில நாட்கள்

*

நூலில் நான் வழங்கிய என்னுரை இது :

என்னுரை

பாரதியார் காலத்தை வென்ற மஹாகவி. அவரது சரித்திரம் ஆதாரபூர்வமாக, முழுமையாக இன்னும் வெளி வரவில்லை. ஆனால் அவரது மனைவி, மகள், அவருடன் பழகியவர்கள், அவரை நேசித்தவர்கள், அவரை அறிந்தவர்கள், அவரது நூல்களைப் படித்தவர்கள் அவ்வப்பொழுது பல செய்திகளைக் கட்டுரைகள் வாயிலாகவும் நூல்கள் வாயிலாகவும் தெரியப்படுத்தி வந்துள்ளனர்.

இந்த பாரதி இலக்கியம் பற்றிய கட்டுரைகளையும் நூல்களையும் படித்தால் பாரதியாரை அறிவதற்கான ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.

சுமார் அறுபது ஆண்டுகளாகப் பாரதியைப் பயில்பவன் நான். அவருடைய கதைகள், கட்டுரைகள், கவிதைகளைச் சேர்த்து வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் அவரைப் பற்றி வந்த கட்டுரைகளையும், கவிதைகளையும், நூல்களையும் சேர்த்து வருகிறேன்.

அவரைப் பற்றி போற்றிப் பாடிய கவிதைகள் ஆயிரத்தைத் தொகுத்து பாரதி போற்றி ஆயிரம் என்று ஒரு தொடரில் அவற்றை வெளியிட்டேன்.

பாரதியார் பற்றிய நூல்கள் என்ற தலைப்பில் www.tamilandvedas.comஇல் ஒரு தொடரில் அவரை அறிமுகப்படுத்தும் முக்கிய கட்டுரைகள் மற்றும் நூல்களையும் எழுதி வந்தேன். அவற்றில் முதல் முப்பது அத்தியாயங்களின் தொகுப்பே இந்த நூல்.

இதை பாரதி அன்பர்கள் படித்தால் ஒரு பேரின்பத்தை அடைவது நிச்சயம். மூல கட்டுரைகளையும் நூல்களையும் வாங்கிப் படிப்பதும் நிச்சயம்.

இதை வெளியிட்ட லண்டன் திரு சுவாமிநாதன் அவர்களுக்கு எனது நன்றி.

இந்தப் புத்தகத்தை வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு என் நன்றி உரித்தாகுக!

இந்தத் தொடர் வெளிவந்த போது ஏராளமான பாரதி அன்பர்களும் தமிழ் இலக்கியத்தில் பற்றுக் கொண்டோரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் பாராட்டுகளை நல்கினர். அவர்கள் அனைவருக்கும் எனது நன்றி.

பாரதியைப் பயில உதவும் இலக்கியத்தைக் காண வாருங்கள் என அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன். நன்றி.

பங்களூர்                                                ச.நாகராஜன்

3-3-2022

*

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

**

HOLIDAY NOTICE

HAPPY HOLIDAYS FOR THREE DAYS

FOR OUR BLOGS

FRIDAY

SATURDAY and

SUNDAY

C   U   ALL   ON   MONDAY

tamilandvedas.com

swamiindology.blogspot.com

INDRA IS ONLY No.30 ; HOW COME YOU CALL A KING, INDRA? (Post No.11,222)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,222

Date uploaded in London – 25 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

JAGANNATHA PANDITA (1590-1670)  was a poet and critic. He used both grammar and logic to interpret many points in poetics/ alamkaara saastra. He discusses the viewpoints of the vaiaakarana  and Naiyaayika side by side. One of the verses given by him is as follows:-

“The Udayachala by way of holding the rising sun by its peak makes the householders understand that the noble persons should offer hospitality to others”

.

Cuudaamanipade dhatte yombare ravimagatam

Sataam kaaryaatitheyiiti bodhayan grhamedhinah

The question is how can an inanimate mountain be the agent of an action of making others something?

The author gives the reply by saying that the non-sentient may be the agent of a causative verb by the way of being favourable to the performance of an action by some other sentient agent.

xxx

In the context of Vyatireka Alamkara Jagannatha gives the following  verse as an example:

Mahendratulyam kavayo bhavantam

Vadantu kim taan iha vaarayaamah

Bhavan sahasraih samupaasyamaanah

Katham samaanastridasaadhipena

The poets call the king , who is the addressee here, equal to Indra, but how the king who is worshipped by thousands be equal  to the lord  (adhipa) of tri dasa (i.e. the gods of only 30.

Indra is called Mr.Thirty  (tri dasa) in the Vedas. The word Tridasa usually means Gods. Here it is intended to mean the number thirty. Jagannatha refers to Paninian rules regarding samasas  to justify the interpretation.

–subham–

 Tags- Indra, Tridasa, Mr Thirty, King, Jagannatha Pandita, Udayachala

கவிதை அழகு ‘சாமாயாமா மாயா மாஸா மாரா நாயா யானா ராமா’ (Post.11,221)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,221

Date uploaded in London – 25 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

ஸம்ஸ்க்ருதத்தில் ஒரே எழுத்தை வைத்து அமைக்கும் அழகான கவிதைகள் உண்டு. இவைகளை சித்திரபந்தம் என்பர். தண்டின் (Dandin) என்னும் புலவர், மொழி அறிஞர் , இலக்கண வித்தகர் , கதாசிரியர் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தார். அவர் எழுதிய தச குமார சரித்திரம், அவந்தி சுந்தரி என்னும் கதை, காவ்யா தரிசனம் என்னும் செய்யுள் இயல் நூல்கள் மிகவும் பிரபலமானவை. அலங்கார சாஸ்திரம் என்னும் யாப்பு அணி நூல் வகையைச் சேர்ந்தது காவ்யாதர்ச என்னும் நூல்.

இவருடைய தச குமார சரித்திரத்தைப் பின்பற்றி இத்தாலிய கதாசிரியர் பொகாஸியோ (Boccaccio)  டெக்காமரன் (Decameron) என்ற கதையை எழுதியுள்ளார்.

காவ்யா தர்சன் ( தமிழில் காவ்யதரிசனம்) என்னும் நூலில் இவர் பல உதாரண செய்யுட்களைத் தந்துள்ளார். சித்ரபந்தம் என்பது எழுத்துக்களை    பலவகைகளில் வைத்து பொருள்படைத்த செய்யுட்களை இயற்றுவதாகும். இவைகளை சப்தாலங்காரம் என்னும் அத்தியாயத்தில் அவர் விளக்குகிறார். ஸ்வர என்னும் உயிர்/ ஓசை நய எழுத்துக்களை வைத்தோ, வர்ண என்னும் (உயிர்) மெய் எழுத்துக்களை வைத்தோ அல்லது சொற்கள் பிறக்கும் இடத்தை வைத்தோ இவைகளை இயற்றலாம்.

ஒரே ஸ்வரமுள்ள கவிதைக்கு எடுத்துக்காட்டாக தண்டின் தரும் செய்யுள் இதோ ,

ஸாமாயாமா மாயாமாஸா

மாராநாயா யாணா  ராமா

யாணா வாரா  ராவா நாயா

மாயா ராமா மாரா யாமா

xxx

ஒரே உயிர் மெய்யெழுத்தைப் பயன்படுத்தும் கவிதைக்கு எடுத்துக் காட்டாக அவர் தரும் செய்யுள் ,

நூனம் நுன்னானி நானேன நானநெனா நானானி நஹ

நானேன நனு நானூ நெனை நெனா நானினோ நினீஹி

xxx

ஒரே இடத்தில் பிறக்கும்  எழுத்துக்களை வைத்து (உச்சாரண ஸ்தானாணி) அமைத்த கவிதைக்கான எடுத்துக் காட்டையும் தண்டின் எழுதியுள்ளார் ,

அகா காங்கான் ககா காக காஹகாககஹ

அஹாஹாங்க கான் காக கன்கா கக காகக

இவை அனைத்தும் சம்ஸ்க்ருத இலக்கணததை ஒட்டி எழுதப்பட்டவை. பொருளும் உடையவை. வெறும் ஒலிகள்/ சப்தங்கள் அல்ல .

இவைகளை எடுத்துக்காட்டிய ஸ்ருதிதாரா சக்ரவர்த்தி இவற்றின் பொருளைத் தரவில்லை ‘சம்ஸ்க்ருத செய்யுள் இயலின் மீது பாணினியின் தாக்கம்’ என்ற ஆங்கில நூலில் இவற்றைத் தந்துள்ளார்.

(ஸம்ஸ்க்ருத மொழியை நன்கு கற்றோரிடமிருந்து  பொருளை அறிந்து எழுதுவேன்.)

XXX

ஆயிரம் பேர் வணங்குவோனை முப்பது என்பதா !!

எண்களை வைத்து இந்திரனுக்கு இரண்டு பெயர்கள் உண்டு

கண்ணாயிரம் – ஆயிரம் கண்களை உடையவன் ;

முப்பதின் தலைவன்  – த்ரி தச அதிபன் (த்ரிதசாதிப)

அதாவது 33 தேவர்களிள் தலைவன் .

அரசர்களை இந்திரன் என்று புகழ்வது உண்டு.

மஹேந்திர பல்லவன்

ராஜேந்திர சோழன்

நரேந்திர மோடி

என்பதை நாம் அறிவோம் .

ஒரு புலவர் இந்த எண்களை வைத்து கவி அமைத்து வியக்கிறார்!

மஹேந்திர துல்யம் கவயோ பவந்தம்

வதந்து  கிம் தான் இஹ வாரயாமஹ

பவான் ஸஹஸ்ரைஹி  ஸமுபாஸ்யமானஹ 

கதம் ஸமானஸ்  த்ரிதஸாதிபேன

பொருள்

அரசனை கவிஞர்கள் இந்திரனே என்று புகழ்கிறார்கள் ; அதாவது இந்திரனுக்குச் சமமானவன் என்ற பொருளில்.

ஆயிரம்  பேரால் வணங்கப்படும் அரசனை முப்பது பேரின் தலைவனுக்கச் சமம் என்று எப்படிக் கூற முடியும் ?

இதை எடுத்துக் காட்டகத் தரும் ஜகந்நாத பண்டிதர் இதுவும் பாணினி இலக்கணப்படி அமைந்த கவிதைதான் என்றும் பாணினியின் ஸமாஸ விதிகள் (பஹுவ்ரீஹி , தத்புருஷ சமாசங்கள்) இங்கே பயன்படுகின்றன என்றும் எழுதியுள்ளார் .

–சுபம்—

Tags- சித்திரபந்தம், ஜகந்நாத பண்டிதர், இந்திரன், காவ்யதரிசனம், தண்டின், Dandin, Kavyadarsa

அதிசயஒற்றுமைகள்! 3(Post No.11220)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,220

Date uploaded in London – –    25 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அதிசய ஒற்றுமைகள்! – 3

.நாகராஜன்

மேலும் சில அதிசய ஒற்றுமைகளைப் பார்ப்போம்.

போவின் நாவல் தந்த ஆச்சரியம்

ஆங்கில நாவலாசிரியரான எட்கர் ஆலன் போ 19ஆம் நூற்றாண்டின் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர்.

அவர் ‘தி நேரேடிவி ஆஃப் ஆர்தர் கார்டன் பிம்’ (The Narrative of Arthur Gordon Pym – Edgar Allan Poe) என்ற புத்தகத்தை எழுதினார்.

 ஒரு கப்பல் விபத்துக்குள்ளாகிறது. அதில் நான்கு பேர் தப்பிப் பிழைக்கின்றனர். ஒரு படகில் ஏறி பல நாட்கள் அவர்கள் பயணம் செய்கின்றனர். ரிச்சர்ட் பார்கர் என்ற காபின் பையனைக் கொன்று திங்க  மற்ற மூவரும் முடிவு செய்கின்றனர்.

கதை வெளியாகி பல வருடங்கள் கழிந்தன.

1884ஆம் ஆண்டும். மிக்னோனெட் என்ற கப்பல் விபத்துக்குள்ளானது. அதில் நான்கு பேர் பிழைத்து ஒரு படகில் பல நாட்கள் பயணம் செய்தனர்.

அதில் மூன்று பேர் காபின் பையனைக் கொன்று உயிர் வாழ நினைத்து அவனைக் கொன்றனர். அந்த காபின் பையன் பெயர் ரிச்சர்ட் பார்கர்! 

இரு மரணங்கள் தந்த ஆச்சரியம்

2002ஆம் ஆண்டு.

72 வயதான ஒரு இரட்டை சகோதரர்களில் ஒருவர் இறந்த சில மணி நேரங்களுக்குள்ளாகவே அடுத்தவர் இறந்தார்.

 வட ஃபின்லாந்தில் சாலை விபத்தில் ஒருவர் இறந்தார். அதே சாலையில் தான் அடுத்தவரும் அதே போல இறந்தார்.

முதலாமவரை அவர் ராஹே என்னுமிடத்தில் ஒரு பைக்கில் சென்று கொண்டிருந்த போது ஒரு லாரி வந்து மோதவே அவர் இறந்தார். ஹெல்சிங்கி என்ற தலை நகரத்தினிலிருந்து வடக்கே 600 கிலோமீட்டர் தொலைவில் இந்த விபத்து நடந்தது. இன்னொரு தனது சகோதரர் இறந்த ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவிலேயே இறந்தார்.

இது ஒரு வரலாற்று அதிசயம்.

“இந்த சாலை போக்குவரத்து மிகுதியாக உள்ள சாலை என்றாலும் கூட இங்கு விபத்துக்கள் ஒவ்வொரு நாளும் நடைபெறாது” என்றார் மரிய லீனா ஹுஹ்தலா என்ற பெண் போலீஸ் அதிகாரி ராய்டர் செய்தி நிறுவனத்திடம்.

“என் ரோமம் குத்திட்டு நின்றது – இவர்கள் இருவரும் இரட்டை சகோதரர்கள் என்பதை அறிந்த போது. மேலே இருக்கின்ற ஒருவன் ஏதோ செய்கிறான்” என்றே உணர்ந்தேன் என்றார் அவர்.

போகர் ஆச்சரியம்!

1858ஆம் ஆண்டு. போகர் விளையாட்டு ஒன்றில் ராபர்ட் ஃபாலன் என்பவர் போகர் விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்த போது பழிவாங்கத் துடித்த ஒருவரால்  சுட்டுக் கொல்லப்பட்டார். 600 டாலரை அவர் ஏமாற்றி வென்றார் என்று கூறப்பட்டது.

போகரின் இருக்கை காலியானது. ஆனால் அதில் அமர யாரும் முன் வரவில்லை. ஏனெனில் அது துரதிர்ஷ்டம் பிடித்த இடம் என்று அனைவரும் கருதினர். அந்த 600 டாலரையும் யாரும் தொடவில்லை.

அப்போது அங்கு புதிதாக வந்த ஒருவர் ஃபாலனின் இடத்தில் அமர்ந்தார். அந்த 600 டாலரையும் எடுத்துக் கொண்டார்.

கொலை பற்றிய புலன் விசாரணைக்காக போலீசார் வந்த போது அந்த 600 டாலர் தொகை விளையாட்டில் ஜெயித்த வகையில் 2200 டாலராக உயர்ந்திருந்தது.

போலீசார் முதலில் இருந்த 600 டாலரைக் கேட்டனர். அதை ஃபாலனின் உறவினருக்குத் தர வேண்டும் என்பது அவர்கள் எண்ணம்.

விசாரித்த போது அங்கு புதிதாக வந்து அமர்ந்தவர் ஃபாலனின் மகனே தான் என்பது தெரிய வந்தது.

அவர் தன் தந்தையை கடந்த ஏழு வருடங்களாகப் பார்க்கவே இல்லையாம்!

புத்தக ஆச்சரியம்!

1920ஆம் ஆண்டு.

அன்னி பார்ஷி என்ற பெண்மணி ஒரு அமெரிக்க எழுத்தாளர். அவர் பாரிஸுக்குச் சென்றிருந்த போது ஒரு புத்தகக் கடையில் புத்தகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு புத்தகம் அவரைக் கவர்ந்தது. அது அவர் குழந்தையாக இருந்த போது அவருக்கு மிகவும் பிடித்த புத்தகம். ‘ஜாக் ஃப்ராஸ்ட் அண்ட் அதர் ஸ்டோரீஸ்’ என்பது அதன் பெயர்.

அந்த புத்தகத்தை ஆசையுடன் எடுத்த அவர் அதைத் தன் கணவருக்குக் காண்பித்து அந்த புத்தகமானது தான் குழந்தையாக இருந்த போது மிகவும் விரும்பிய ஒன்று என்று கூறினார்.

அவரது கணவர் அதை வாங்கி முதல் பக்கத்தைத் திறந்து பார்த்தார்.

அதில் ‘அன்னி பாரிஷ் , 209, என். வெபர் ஸ்ட்ரீட், கொலொரோடோ ஸ்ப்ரிங்ஸ்’ என்று எழுதி இருந்தது.

அந்தப் புத்தகம் குழந்தையாக இருந்த போது அன்னி பாரிஷ் வைத்திருந்த புத்தகமே தான்!

இவை சில எடுத்துக்காட்டுகளே.  தொகுக்கப் போனால் ஆயிரக் கணக்கில் இப்படி உண்மைச் சம்பவங்களைத் தொகுக்கலாம்.

இதற்கு என்ன அர்த்தம்? தற்செயல் ஒற்றுமையா? இறைவனின் திருவிளையாடலா?

முற்றும்

புத்தக அறிமுகம் – 39

மஹாபாரத மர்மம்!

 பாகம் 2

பொருளடக்கம்

என்னுரை

1. நாரத மஹரிஷியும் மஹாபாரதப் போரும்!

2. போர் போர், மஹாபாரதப் பெரும் போர் – துரியோதனனின் கேள்வி!

3. மஹாபாரதப் பெரும்போர்! எத்தனை பேர் போரிட்டனர்? எத்தனை பேர் போருக்குப் பின் உயிருடன் இருந்தனர்?

4. ஆக்னேயாஸ்திரம், பிரம்மசிரஸ் ஆகியவற்றை துரோணர் யாரிடமிருந்து பெற்றார்?

5. அறிவியல் விஞ்ஞானிகள் வியக்கும் அஸ்திரங்கள்!

6. மரணம் உண்டா, இல்லையா? – திருதராஷ்டிரனின் கேள்வி!

7. மெழுகாலயம் கண்ட பாண்டவரின் புத்திகூர்மை!

8. பாவச் செயல்களைப் பரப்பாதே!

9. பேர் படைத்த விஜயனுக்கும் பார் படைத்த துரியோதனனுக்கும் போர்! போரை நிறுத்த தூது சென்ற கண்ணன்!!

10. சிவ பக்தன் அர்ஜுனன்!

11.மரகதஜோதி வீரன் அர்ஜுனன், இராமனே!

12. வில்லி பாரதத்தில் விராட பர்வத்தில் கடவுள் வாழ்த்துக்கள்!

13. 3 ராமர்கள், 3 பரதர்கள், 6 கர்ணர்கள்!

14. மஹாபாரதத்தில் ஜோதிடம்!

15. ஜோதிடம் பற்றியும் துர்நிமித்தம் பற்றியும் நாரதர் யுதிஷ்டிரருக்குக் கூறியது என்ன?

16. விதுரர் கூறும் விதுர நீதி – 1

17. விதுரர் கூறும் விதுர நீதி – 2

18. விதுரர் கூறும் விதுர நீதி – 3

19. விதுரர் கூறும் விதுர நீதி – 4

20. விதுரர் கூறும் விதுர நீதி – 5

21. விதுரர் கூறும் விதுர நீதி – 6

22. கிருஷ்ண தியானம் ஏன்? தியானத்தின் மகிமையை இந்தியாவில் உணர்ந்த எழுத்தாளர் ஈ.எம்.பார்ஸ்டர்!

23. கண்ணன் இதழ் குழலே, காட்டும் வெற்றி ஒளியே!

24. கண்ணன் எத்தனை கண்ணனடி!

*

நூலில் நான் வழங்கிய என்னுரையில் ஒரு பகுதி இது :

என்னுரை

உலகில் தோன்றிய இதிஹாஸங்களுள் மிகப் பெரிய இதிஹாஸம் மஹாபாரதம்.

இதன் பெருமையை வார்த்தைகளால் சொல்ல இயலாது.

இதைப் படிக்க ஒரு ஆயுள் போதாது.

இதில் இல்லாதது வேறெங்கும் இல்லை.

இதற்கான விளக்கங்கள், இதைப் பற்றிய நூல்கள், கட்டுரைகள் லக்ஷக்கணக்கில் இந்த நூல் தோன்றிய நாள் முதல் எழுந்துள்ளன.

விநாயகரே இதன் பொருளை சற்று சிந்தித்துச் சிந்தித்து தான் புரிந்து கொண்டார் என்று அறிகிறோம்.

அப்படியானால் சாமான்ய மனிதனின் நிலை என்ன என்பதை உணரலாம்.

வாழ்வாங்கு வாழ வேண்டிய நெறிகள், கர்ம பலன் விளக்கம் இதில் உள்ளன.

இதற்கு பாஷ்யம் எழுதிய ஆசாரியர்கள், மேதைகள் பலர் உண்டு.

இதை ஒவ்வொரு கோணத்தில் ஆராய்ந்த அறிஞர்கள் உண்டு.

சுமார் 8000 கூட ஸ்லோகங்கள் என்னும் புதிர் ஸ்லோகங்களுக்கு விரிவான விளக்கம் இன்றும் கூடக் காணப்படவில்லை.

முதல் ஸ்லோகத்திலிருந்து கடைசி ஸ்லோகம் வரை ஒன்றுக்கொன்று முரண்படாது ஏராளமான அறிவியல் கலைகளையும், நுட்பமான சாஸ்திரங்களையும் கொண்டுள்ள இது போன்ற இன்னொரு நூல் இதுவரை எழவில்லை.

இந்தக் கருத்துக்கள் அனைத்தையும் உள்வாங்கி இதைப் படிக்க ஆரம்பித்தோமானால் ஆனந்தம் தரும் இன்னொரு நூல் இருக்காது.

அவ்வப்பொழுது ஞான ஆலயம் குழும பத்திரிகைகள், http://www.tamilandvedas.com ப்ளாக் ஆகியவற்றில் மஹாபாரத மர்மங்களை விளக்கி அவ்வப்பொழுது எழுதி வந்தேன்.

முதல் பாகம் வெளிவந்ததைத் தொடர்ந்து இப்போது இரண்டாம் பாகம் வெளி வருகிறது..

இந்த பாகத்தில் போர் பற்றிய அதிசய விவரங்கள், விஞ்ஞானிகளும் வியக்கும் மஹாபாரதப் போரின் அஸ்திரங்கள், மஹாபாரதம் தரும் ஜோதிட உண்மைகள், வில்லிபுத்தூராரின் பாரதத்தில் அவர் அழகிய தமிழில் வழங்கும் அற்புதச் செய்திகள், கண்ணனைப் பற்றிய சுவையான செய்திகள் ஆகியவை கட்டுரைகளின் வாயிலாகத் தரப்படுகின்றன.

இந்தக் கட்டுரைகளை அவ்வப்பொழுது வெளியிட்ட ஞான ஆலயம், சினேகிதி, ஶ்ரீ ஜோஸியம் ஆசிரியர் திருமதி மஞ்சுளா ரமேஷ் மற்றும் www.tamilandvedas.com ப்ளாக் லண்டன் திரு ச. சுவாமிநாதன் ஆகியோருக்கு எனது நன்றி உரித்தாகுக.

கட்டுரைகளாக வெளி வந்த போது பாராட்டி என்னை ஊக்குவித்த வாசக அன்பர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி உரித்தாகுக!

இதை அழகுற நூலாக வெளியிட முன் வந்த முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக!

ஐந்தாம் வேதம் எனப்படும் மஹாபாரதத்தைக் கற்போம்; உயர்வோம்!

நன்றி.

சான்பிரான்ஸிஸ்கோ                                 ச.நாகராஜன்


7-8-2022 

*

 நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

**

Verse with one Consonant -‘Nuunam nunnaani naanena naananenaananaani nah’(Post.11219)

 WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,219

Date uploaded in London – 24 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Sanskrit Verse with one Consonant -‘Nuunam nunnaani naanena naananenaananaani nah’(Post.11219)

Poet Dandin of seventh century CE discusses Citra bandhas ( ingenious arrangementS of letters) under the section on Sabdaalamkaaras. In this context he refers to three varieties of compositions each having restrictions or limitations with regard to Svara/vowels and Varna/consonants respectively.

Yah svarasthaana varnaanaam niyamo duskaresvasau

Istascatuhpra bhrtyesa darsyate sukarah parah

Kaavyaadarsa 3-83 (KD)

The purport of this verse is as follows:

There may be compositions having only a limited number of vowels or letters, belonging only to a limited number of places of articulation, or only having a limited number of consonants. Such compositions were desirable for the earlier theorists as varieties of what is called Duskara Yamaka. Such compositions become more and more difficult if they have only four Svaras, for instance, or only three or only two or only one Svara.

Dandin proposes to illustrate compositions having four or three or two or one only of either vowel or consonant or place of articulation. Such compositions are difficult. Those having more than four of vowels etc are said to be easier to compose. An example of a verse having only one Svara, as given by Dandin is as follows:

Saamaayaamaa maayaa maasaa

Maaraanaayaa naayaa yaanaa raamaa

Yaanaavaaraaraavaanaayaa

Maayaaraamaa maaraayaamaa

KD 3-87

An example of the use of only one consonant, as given by Dandin, is as follows

Nuunam nunnaani naanena naananenaananaani nah

Naanena nanu naanuunenaine naanaanino niniih

KD 3-95

An example of composition containing letters belonging to one place of articulation, as given by Dandin is as follows:

Aga gangaan gakaakaa kagaa hakaa ghakaa kakahaa

Ahaahaanka khagaan kaaga kankaa gakha gakaa kaka

KD3-91

It may be noted here that the whole conception of a composition with a limited number of vowel etc. presupposes a knowledge of grammar in respect of the vowels and consonants and more particularly in respect of the places of articulation ( uccaarana sthaanaani). For instance for composing and also appreciating the beauty of the verse

Agaa gangaa…………. one must have the idea of the dictum

Akuhavisarjaniiyaanaam kanthah

As incorporated into their works by the grammarians from the siksaa works of Panini and other such authorities.

Source: Paninian influence on Sanskrit Poetics, Shrutidhara Chakravarty ,Pratibha Prakashan, 2008

–SUBHAM-

TAGS- Dandin, poetics, citrabandhas, consonant verse, articulation, vowel,

Eleven Dramas of Jain Sanskrit Scholar Ramachandra Suri (Post.11218)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,218

Date uploaded in London – 24 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Eleven Dramas of Jain Sanskrit Scholar Ramachandra Suri

Rama chandra soori was a disciple of the well known Jain scholar Hemachandra Soori. He composed the Dholka stone inscription in Northern Gujarat. The ‘prasasti’ is dated to 12th century CE. The inscription written in beautiful characters is found in a fragment only and contains verses from 71 to 103, the last one reading as

Prabandha sata nirmati pratita kiirtikaa myodayah

Prasasti mathulaami maamakrta raamachandro munih

The two stone slabs containing the first seventy verses have not yet been discovered. Out of the hundred prabandhas said to have been composed by him only 35 have been traced. Out of his other literary works at least eleven dramas namely,

Nala vilaasa

Yadu vilaasa

Sathya harischandra

Nirbhaya bheema vyaayoga

Mallikaa  makaranda

Raagava abyudhaya

Rohinii mrkaanka

Vanamaalaa naatikaa

Kaumudee mithraananda

Yaadhava abhyudhaya

Raghu vilaasa have been found.

His work Kumaara vihaara sataka is also found. He is also the author of a collection of verses called Sudhaakalasa.

A treatise named Naatya darpana also composed by him in collaboration with Gunachandra soori and a work on Jain logic have been found.

The poet lived from 1110 to 1173 and was a court poet of the Gujarat Chalukya kings,

Siddharaaja Jayasimha and

Kumaarapaala.

For his high literary attainments, king Siddharaaja had honoured him with the title Kavikataaramalla.

According to Prabhaavaakaachaara, Devasuri was the court poet of Jayasimha and had defeated the Digambara scholar Kumudachandraachaarya in a dispute held in the presence of the king.

–subham—

Tags- Eleven Dramas,  Jain Scholar, Ramachandra Suri, Sanskrit