ஈழத்துப் பாவலர்கள் இயற்றிய ஊர்-இடப்பெயர் கவிதைகள் (Post.11,083)

WRITTEN BY B. KANNAN

Post No. 11,083

Date uploaded in London – –    6  JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஊர்-இடப்பெயர் நாமாந்திரிதை பிரேளிகை–3

      Written By B.KANNAN, NEW DELHI

அன்புள்ளத் தமிழ் நெஞ்சங்களுக்கு கண்ணன் அநேக நமஸ்காரம்.

இந்தப் பகுதியில் ஊர்ப்பெயர், இடப்பெயர் ஆகியவற்றைக் கொண்டு எப்படி ஈழத்துப் பாவலர்கள் அரிய விஷயங்களைத் தெள்ளத் தெளிவாக நாமாந்திரிதை அணி மூல மாக எடுத்திக் காட்டியுள்ளார்கள் என்பதைப் பார்க்கப் போகிறோம்.

குறளில் நவக்கிரகங்கள்

சங்கக் காலத்துக்குப் பின் வந்த புலவர்கள் பல பிரபந்தங்கள் இயற்றியுள்ளனர். அவைகளில் ஆசுகவி, மதுரகவி, சித்திரக்கவி, வித்தாரக்கவி ஆகிய நாற்கவிகளுள் சித்திரக்கவி பாடுவதும், அதற்கு உரை வகுப்பதும் கடினமான காரியமாகும் எனும் தமிழ்த் தாத்தா உ.வே.சா. திருவையாறு ஆசுகவி ஜனாப் அப்துல் கபூர் சாஹிப் அவர்களின் முயற்சியைப் பெரிதும் பாராட்டுகிறார். சேது சமஸ்தானக் கவிஞர் ரா.ராகவையங்கார் ஒருமுறை இவரிடம், காளமேகப் புலவர் 12 ராசியும் வரிசையா கத் தளை தட்டாமல் ஒரு வெண்பாவில் பாடியது போன்று இயற்ற முடியுமா என வினவினார். அதற்கு சாஹிபு அவர்கள் 15 சீர் கொண்ட வெண்பாவில் 12 ராசியைப் பாடுவது பெரிதல்ல, 7 சீருள்ளக் குறள் வெண்பாவில் 12 ராசியையும் அமைத்துப் பாடுகிறேன், கேளுங்கள் என்றார்.

அந்தக் குறள் இதோ….

  ஆடுசே வீணை அலவனரி பெண்டுலைதேள்

  நீடுவிற்சு றாக்குடமீ னே.

(ஆடு=மேஷம், சே=எருது, ரிஷபம், வீணை=மிதுனம், அலவன்=நண்டு, கடகம், அரி=சிம்மம், பெண்=கன்னி, துலை=துலாக்கோல்,தராசு, தேள்=விருச்சிகம், நீடுவில்= நீண்ட தனுசு, சுறா= மகரம், குடம்=கும்பம், மீன்=மீனம், ஏ= எனும் ராசிகளின் பெருமை கேளீர் )

இப்படி எல்லாரது மனதையும் கவர்ந்தவர் தனது சித்திரக்கவி மாலை நூலில் நாமாந்தரிதை பிரேளிகை அணியில் பாடல் இயற்றாமல் விட்டது வருத்த மளிக்கிறது.

ஈழத்தில் சித்திரக்கவிகளைப் பாடியோராக மிகவும் பிரபலமானவர்கள், அரசகேசரி, முத்துக்குமார கவிராசர், சேனாதிராய முதலியார், மயில்வாகனப் புலவர், நமச்சி வாயம் பிள்ளை, ஈழத்து தமிழ்த் தாத்தா என அறியப்படும் கந்தமுருகேசனார் என்று பட்டியல் நீளும்..

.கந்த முருகேசனார்

கந்தமுருகேசனார் ஆறுமுக நாவலர் மீது பாடிய நல்லை நாவலன் கோவை நூலில் உள்ள 492 பாடல்களுள் சித்திரக்கவிகளும் அடங்கியுள்ளன. அவற்றில்அநேகமானவை பிரேளிகை வகையைச் சார்ந்தவை. அவற்றுள் ஒன்று…. செவிலிப் பெண் தரையின் மீது தலைவன்-தலைவியோருடையக் கால் அழுந்தியக் குறியைக் கண்டு வருத்தத் துடன் கூறுவதாக அமைந்த பாடல்

  நாலடி கண்டனன் முன்னினி வள்ளுவர் நாட்டமுற்றேன்

  ஆலடி யாகம நால்வர்க் குரைவளை யாபதியின்

  நாலடி தோய்நா வலனலை யேழை நறுங்தொடைறோண்

  மேலடி வைப்பப் புகுங்கொல மூவர் வியனிலைக்கே (383)

பதவுரை- முன் நாலடி கண்டனன்=அவர்கள் சென்ற பாதையில் முதலில் நான்கு அடிச்சுவடுகள் பார்த்தேன், இனி வள்ளுவர் நாட்டம் உற்றேன்= இப்போது பொய்யா மொழிப் புலவரின் குறள் அடி போல் இரண்டு அடிச்சுவடு மட்டுமே காண்கிறேன், வளை ஆல் அடி நால்வர்க்கு ஆகமம் உரை=வளைந்து நிழல் தரும் கல்லால மரத் தின் கீழ் முனிவர்கள் நால்வருக்கு ஆகமப் பொருள் போதிக்கும்,

ஆ பதியின் நால் அடி தோய் நாவலன் நல்லை=ஆன்மாக்களுக்குத் தலைவனான ஈசன் அருளிய நாற்பாதங்களில் நனைந்த நாவலர் பிரானின் நல்லூரைச் சேர்ந்த வளான, நறும் தொடை ஏழை=நறுமணம் வீசும் மலர்மாலை அணிந்த என் மகள், அ மூவர் வியன் நிலைக்கு=அப்பாலை நிலத்தின் கண், (அடி, தோள்), மேல் வைப்ப புகும் கொல்=காலைத் தோள் மேல் வைத்துச் சென்றிருப்பாளோ?

இச்செய்யுளில் நாலடி, வள்ளுவர், வளையாபதி என்பன நாமாந்தரிதை அணியில் அமைந்துள்ளன. நாலடி=நாலடியார், வள்ளுவர்=திருக்குறள், ஐம்பெருநாப்பியங்களுள் ஒன்றான வளையாபதி.

நாற்பாதம்=சரியை, கிரியை, யோகம் ஞானம் நாலடியார்ப் பெயரில் அந்தரிதையானது, தலைவன் அடி இரண்டும், தலைவியின் அடிச்சுவடு இரண்டுமான நான்கு குறளில் மறைத்து வைக்கப்பட்டது.

முதலில் நான்கு பாதச் சுவடுகளைக் கண்ட செவிலி சற்று முன்னே சென்று இரண்டு அடிகளை மட்டுமே பார்க்கிறாள்.அதுபற்றி அவளுக்கு எழுந்த எண்ணம், மற்ற இரு சுவடுகளுக்கான தலைவியை தன் மீதே வைத்துச் சென்றிருக்க வேண் டும் என்பதாம். சுட்டுப் பொசுக்கும் பாலை நிலத்தில் கால் வைக்க முடியாமல் தவித்துச் செல்லுதலை வேடிக்கையாக இப்படிக் கூறுவது வழக்கம்–காலைத் தோளில் வைத்துச் செல்வது என்று! 

அ மூவர்==அயன், அரன், அரி மூவருமே வியக்கும் வண்ணம், கால் பதித்தால் சுட்டெரிக்கும் அந்தப் பாலை நிலத் தரையின் மேல் பாவையை அடியெடுத்து வைக்க விடாமல் காதலால் கட்டுண்டத் தலைவன் தன்னுடையவளைத் தோளில் தாங்கிச் சென்றான் என்கிறார் பாவலர். இதுவே மற்ற இரு சுவடுகள் “குறளு” க்குள் (நாலடி சிறுத்து ஈரடியாக) மறைந்து விட்டதற்கானக் காரணமாம்!

ஞானம் போதித்த ஈசன் அமர்ந்திருக்கும் நல்லூர் தலத்தைச் சேர்ந்த நற்பண்புள்ளப் பெண் என்மகள் என்றும் மறைமுகமாக செவிலி கூறுவதாக அமைந்துள்ளது பாடல்.

மல்லாகம் நமச்சிவாயம் பிள்ளை

யாழ்ப்பாணத்து மல்லாகம் நகரம் தமிழ்ப் புலவர் பலருக்குத் தாயகமாய் விளங்கி யுள்ளது. அதில் குறிப்பிடத்தக்கவர் குலநலம், குணநலம், குடும்ப நலம் மற்றும் அறிவு நலமும் வாய்க்கப் பெற்ற புலவர் நமச்சிவாயம் பிள்ளை அவர்கள். அவர் இயற்றிய “ஊர்ப்பெயர் உட்பொருள் விளக்கம்” எனும் நூல் ஈழத்தின் வடமாகாண–சிறப்பாக குடா நாட்டின் ஊர்ப்பெயர்களைச் சிலேடைப் பொருளில், நாமாந்தரிதை

அணியில் தொடர்புபடுத்திச் சைவசமய உட்பொருளை 27 பாடல்களில் 172 ஊர்-இடப்பெயர்களில் பொதித்து வைத்துள்ளார்.

உ.ம். சுன்னாகம் என்ற ஊர்ப்பெயர் மகேசனின் இருப்பிடமான  வெள்ளியங்கிரி-கைலை மலையைக் குறிக்கும்.

சுன்னம்+அகம்= வெண்ணிறச் சுண்ணாம்பு (பனி படர்ந்த) வீடு.  அல்லது சுல்=வெள்ளி, நாகம்= மலை என்றும் கூறலாம், மாதகலான்= உமையொருபாகனான பரமேஸ்வரன் (மாதகல் எனும் ஊர்ப்பெயர் அடங்கியுள்ளது- பாடல் 2), மட்டுவில்லான்= காமபானத் தால் மதியை அலைக்கழிக்கும் கரும்பு வில் உடைய மன்மதன், மட்டு=காமபானம் மட்டுவில் என்பது இடப்பெயர்.

சில பெயர்களுக்கு அடைமொழியிட்டும், பால் காட்டும் ஈறுகளையும், வேற்றுமை உருபுகளை இணைத்தும்,வேறு சிலவற்றைப் பிரித்திசைத்தும், திரித்து வழங்குவதன் மூலமும் இவ்வகைப் பொருள்களைக் கண்டுணரலாம். இதோ மாதிரிக்கு ஒன்று……

   தாவப்பலாலிகொணீர் வேலியார்படி தாவடியான்

   மாவைப்புரிமுகமாலயன் றேடும்வயவையன் பிற்

   போயிட்டியையுறுவார்க்கு நல்லூரைப் புரிவன் மண்டை 

   தீவைத்தெரிக்குமுன்னே யொட்டகப் பொலந்தீத்துய்யவே  (11)

மகாவிஷ்ணுவும், பிரமனும்தேடுகின்ற மகேசன், பக்தியுடன் சிவதருமங்களைச் செய்பவர்களுக்குச் சிவலோகப் பிராப்தி அடையச் செய்வார். ஆகையால் மனமே மரணம் சம்பவிக்கும் முன் புலன்களை அடக்கிப் புண்ணியங்களைச் செய்து பிழைத்துக் கொள் என்பது இதன் பொது கருத்து.

பதவுரை: தாவு அபல்=பலவிடத்திலிருந்துப் பாய்ந்து வருகின்ற ஆலி=மழை நீரை, கொள்=தன்னுள் அடக்குகின்ற, நீர்வேலி ஆர் படி தரவு அடியான்=சமுத்திரம் எனும் வேலியால் சூழப்பட்ட பெரிய பூமியை ஓரடியாய் அளக்கும் பாதங்களை உடைய வராகிய, பாவைப்புரி முகமால்=ஶ்ரீதேவியை விரும்புகின்ற முகப்பொலிவையுடைய விஷ்ணுவும், அயன்=பிரமனும், தேடும்=தேடுகின்ற, வயஜ= வலிமை வாய்ந்த சிவ பெருமான், அன்பிற்போய்= மனதில் பக்தியுடனே சென்று, இட்டு இயையுறு னர்க்கு=சிவனைப் போற்றும் சிவனடியார்களுக்கு, நல்லூரைப்புரிவன்=சொர்க்கத்தைக் கொடுக்க விரும்புவர், மண்டை தீவைத்து எரிக்குமுன்=தலையைச் சிதையிலிட்டு எரிப்பதற்கு முன்னரே, அகம்=மனமே, புலந்தீத்து உய்ய=ஐம்புலன்களையும் அடக்கி ஆளும் பொருட்டு, ஒட்டு= பெருமானிடம் சரணடைவாய்.

இப்பாடலில், பலாலி, நீர்வேலி, தாவடி, மாவிட்டபுரம் (மாவை), முகமாலை, வயா விளான், போயிட்டி, நல்லூர், மண்டைதீவு, ஒட்டகப்புலம் ஆகிய ஊர்ப்பெயர்கள் மறைந்து நிற்பதைக் காணலாம்.

To be continued………………………………………………….

ISBN அதிசயம்! (Post No.11,082)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,082

Date uploaded in London – –    6 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ISBN அதிசயம்!

ச.நாகராஜன்

ISBN என்பது International Standard Book Number என்பதின் சுருக்கம்.

இது 13 எண்களைக் கொண்ட ஒரு எண். இதன் மூலம் நீங்கள் விரும்பும் புத்தகத்தைக் குறிப்பது சுலபம். இந்த எண்ணை மட்டும் குறிப்பிட்டு, புத்தகத்தை உலகளாவிய விதத்தில் வாங்குவதும் சுலபம்.

இது 2006  முடிய 10 எண்களை மட்டுமே கொண்டிருந்தது.

2007 ஜனவரி முதல் தேதி முதல் 13 எண்களைக் கொண்ட நம்பர் ஆனது.

இப்போது 13 எண்கள் கொண்ட ISBN நம்பரையே நாம் குறிக்க வேண்டும்.

10 எண்கள் கொண்ட நம்பர் மட்டுமே இருந்தால் ISBN தளத்திற்குச் சென்று அதற்கான 13 எண் நம்பரைப் பெறலாம்.

இந்த 13 எண்கள் புத்தகத்தை வெளியிட்டவர் யார், புத்தகத்தின் தலைப்பு என்ன, எந்த மொழியில் அந்தப் புத்தகம் உள்ளது, எப்போது அது வெளியிடப்பட்டது, அது எத்தனையாவது பதிப்பு என்ற விவரங்களைத் தரும்.

அது ஒரு பத்திரிகையா, கல்வி சம்பந்தமான இதழா, அல்லது வேறு எதாவது ஒரு இதழா போன்ற அனைத்து விவரங்களையும் இந்த எண் மூலம் சுலபமாக அறிந்து விட முடியும்.

ISBN இல் 10 எண்ணுக்கும் இப்போது நடைமுறையில் உள்ள 13 எண்ணுக்கும் என்ன வித்தியாசம்?

முதலில் வருகின்ற மூன்று எண்கள் 978 அல்லது 979 என்பதைக் கொண்டிருக்கும்.

ஏராளமான புத்தகங்கள் உலகளாவிய விதத்தில் பிரசுரமாவதை ஒட்டி இந்த ஒரு சிறிய மாறுதல் ஏற்படுத்தப்பட்டது.

ஆக ISBNஇல் உள்ள 13 இலக்க எண் ஐந்து முக்கிய விஷயங்களை உடனே கண்டு பிடிக்க உதவுகிறது.

  1. முதல் மூன்று எண்கள் – 978 அல்லது 979
  2. பதிவுக் குழு பற்றியது : எந்த நாடு, அல்லது எந்த பூகோளப் பகுதி, மொழி என்ன,  உள்ளிட்ட விவரங்களை ஒன்று முதல் 5 இலக்கங்கள் வரை கொண்டிருக்கும்.
  3. பதிவு பற்றிய விஷயம் -இது எந்த பதிப்பாளர் என்பதைக் குறிக்கிறது. 7 இலக்கம் வரை இது இருக்கலாம்.
  4. பிரசுரம் பற்றிய விஷயம். எது எத்தனையாவது பதிப்பு, தலைப்பு என்ன என்பதைத் தரும். இது 6 இலக்கம் கொண்டதாக இருக்கலாம்.
  5. சரிபார்க்கும் எண் _ இதுதான் கடைசி ஒற்றை இலக்க எண். அதாவது 13வது எண். இது கணித இயல் படி நீங்கள் விரும்பிய புத்தகத்தின் எண் இது தான் என்பதைச் சரியாகச் சொன்னீர்களா என்பதைச் சரி பார்க்கும்.

சரி, இதில் என்ன அதிசயம் இருக்கிறது என்று கேள்வி எழுவது இயல்பே!

என்ன என்று பார்க்கலாம்.

ஒருவர் ஒரு புத்தகத்தை வாங்க ஆர்டர் செய்கிறார். ஆனால் அவசரத்தில் ஒரு எண்ணைத் தப்பாகப் பதிவிட்டு விடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்போது வாங்க நினைத்த புத்தகத்திற்குப் பதிலாக தப்பான புத்தகம் வந்து சேர்ந்து விடுமா? வராது.

ஏன்? அதில் தானே சரிபார்க்கும் ஒரு எண் ரகசியம் உள்ளது.

ISBN Digit0521427061Total
When Multiplied0106420124905410165
ISBN Digit1862307369Total
When Multiplied11618815049245450275
ISBN Digit0486256642Total
When Multiplied082424103042483620242

மேலே தரப்பட்ட ISBN எண்களைக் கூர்ந்து கவனியுங்கள்.

முதல் வரிசையில் 10 இலக்க எண் உள்ளது. அடுத்த வரிசையில் உள்ள இலக்க எண்கள் அந்த இலக்கம் எத்தனையாவது இலக்கமோ அதைக் கொண்டு மேலே உள்ள எண்ணைப் பெருக்கி வருவதாக அமைந்திருக்கிறது.

எடுத்துக் காட்டு முதல் இலக்கம் 0. 0ஐ முதல் இலக்கமான 1ஆல் பெருக்கினால் வருவது 0.

அடுத்த இரண்டாவது இலக்க எண் 5. இது இரண்டாவது இலக்கமாக இருப்பதால் இரண்டால் 5ஐப் பெருக்கினால் வருவது 10.

அடுத்த  மூன்றாவது இலக்க எண் 2. இது மூன்றாவது இலக்கமாக இருப்பதால் மூன்றால் 2ஐப் பெருக்கினால் வருவது 6.

இப்படியே 10 இலக்க எண்களையும் பெருக்கியதை இரண்டாவது வரிசையில் பதிவிட்டு, பின்னர் அந்த எண்களைக் கூட்டினால் வரும் தொகையான 165 பதிவிடப்பட்டுள்ளது. அதாவது இரண்டாவது வரிசையில் உள்ள 0+10+6+4+20+12+49+0+54+10 = 165.

இரண்டாவது மற்றும் மூன்றாவது டேபிள்களில் வரும் கூட்டுத் தொகை முறையே 275 மற்றும் 242.

இதில் உள்ள அதிசயம் என்னவெனில் 165, 275, 242 இவை 11 என்ற எண்ணால் வகுபடக் கூடிய எண்களே.

ஆக ISBNஇல் நீங்கள் எந்த 10 இலக்க எண்ணைப் போட்டாலும் இப்படிக் கூட்டுத் தொகை 11ஆல் வகுபடக் கூடியதாகவே அமைந்திருக்கும்.

ஒருவர் ஒரு எண்ணைத் தவறாகப் பதிவிட்டு விட்டால் இந்தக் கூட்டுத்தொகை 11ஆல் வகுபடாது.

உடனே கம்ப்யூட்டரே உங்களை நீங்கள் பதிவிட்ட எண்ணைச் சரிபார்க்கச் சொல்லி சரியான எண்ணைக் கேட்கும்.

இரண்டு எண்களை ஒருவர் தவறாகப் பதிவிட்டு விட்டாலும் கம்ப்யூட்டர் உடனே அதைக் கண்டுபிடித்து சரியான எண்ணைத் தாருங்கள் என்று கேட்கும்!

சரி, 13 இலக்க எண்ணுக்கும் இது பொருந்துமா, பொருந்தாது!

13 இலக்க எண் அறிமுகப்படுத்தப்பட்டவுடன் கூட்டுத் தொகை பத்தால் வகுபடக் கூடியதாக மாற்றப்பட்டு அமைக்கப்பட்டது.

ஒரு 13 இலக்க ISBN எண்ணை நீங்களே இந்த முறையில் சரி பார்க்கலாம்.

இது CODE எனப்படும் குறியீட்டு கணித மாயாஜாலத்தால் அமைக்கப்பட்ட முறை.

  The Number Mysteries என்ற அருமையான புத்தகத்தில் கணிதப் பேராசிரியர் Marcus Du Sautoy இதை அற்புதமாக விளக்கி இருக்கிறார்.

அதனால் இது எனக்குத் தெரிய வந்தது.

இப்படி CODE எனப்படும் குறியீட்டு கணித மாயாஜாலம் சுமார் 5000 ஆண்டுகளாக வெவ்வேறு முறையில் உலகெங்கும் இருந்து வந்திருக்கிறது.

அவற்றை இன்னொரு கட்டுரையில் பார்ப்போம்!

நன்றி : Marcus Du Sautoy – The Number Mysteries

***

tags – ISBN எண்

பகவத்கீதை சொற்கள் இண்டெக்ஸ்- 63 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம் (Post No.11,081)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,081

Date uploaded in London – –    5 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

பகவத்கீதை சொற்கள் இண்டெக்ஸ்- 63 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம்

விவஸ்வதே  4-1 விவஸ்வானுக்கு

விவஸ்வான்  4-1 சூரியன்

விவிக்த தேச ஸேவிதம் 13-10 தூய்மையான தனி இடத்தில்  நாட்டம்

விவிக்த ஸேவி  18-52 தனிமையை  நாடியவனாய் 

விவிதைஹி 13-4 பல வழிகளில் , பலவிதமாக

விவிதாஹா  17-25 பற்பல , பல வகைப்பட்ட

விவ்ருத்தம் 14-11 மேலிட்டுள்ளது / அதிகரித்தது

விவ்ருத்தே  14-12 மேலி ட்டபோது

விசதே 18-55 புகுகின்றான் 

விசந்தி 8-11 புகலிடமாய் அடைகின்றனரோ

விசாலம் 9-21 பரந்த

விசிஷ்டாஹா  1-7, முக்கியமான ,  தலை சிறந்த

விசிஷ்யதே  3-7 சிறப்பு அடைகிறான் , சிறந்தவன்

விசுத்தயா 18-51 பரி சுத்தமான, தூய்மையான

விசுத்தாத்மா 5-7 தூய மனம் படைத்த

விச்வதோ முகம் 9-15 எங்கும் முகமுடைய விராட ரூபியான

விச்வதோ முகஹ  10-33 எங்கும் முகமுள்ளவனும்

விச்வமூர்த்தே 11-46 எங்கும் நிறைந்த

விச்வரூப  11-16  உலக வடிவானவனே

விச்வஸ்ய  11-18 உலகத்திற்கு /பிரபஞ்சத்தின்

விச்வம்  11-19  உலகத்தை

விச்வே தேவா 11-22 ருத்ரர் முதலிய எல்லா தேவர்களும்

விஷமே  2-2  இந்தச் சிக்கலான நிலையில்

விச்வேஸ்வர  11-16  உலகிற்கு இறைவா

விஷய பிரவாலாஹா 15-2 விஷயமாகிய தளிர்விட்டு

விஷயான் 2-62  பொருட்களை , விஷயங்களை

விஷயாஹா 2-59  பொருள்கள்

விஷய இந்த்ரிய ஸம்யோகாத் 18-38 புலன்கள்- பொறிகளின் கூட்டுறவால்

விஷம் 18-37 – நஞ்சு , விஷம்

விஷாதம்  18-35 மனக்  குழப்பம்

விஷாதி  18-28 தன்னம்பிக்கை இழந்தவன்

விஷீதன் 1-27 விசனம் அடைந்து, துக்கம் உற்று

விஷ்டப்ய 10-42  தாங்கி

விஷ்டிதம்  13-17  நிலையாக விளங்குகிறது

விஷ்ணுஹு 10-21 காக்கும் தொழில் உடைய, எங்கும் வியாபித்த

விஷ்ணோ  11-24 ஓ விஷ்ணு

விஸர்கஹ  8-3 தியாக ரூபமான யக்ஞம்

விஸ்ருஜன் 5-9  விட்டாலும்

விஸ்ருஜாமி 9-7 உற்பவிக்கச் செய்கிறேன்

விஸ்ருஜ்ய  1-47  எறிந்துவிட்டு

விஸ்தரசஹ  11-2 விரிவாக

விஸ்தரஸ்ய  10-19 விளக்கமாக, விரிவாக

விஸ்தரேண 10-18 விளக்கமாக, விரிவாக

விஸ்தாரம் 13-30  விரிவாகப் (பெருகுவது)

விஸ்மயஹ 18-77 ஆச்சர்யத்துடன் , வியப்புடன்

விஸ்மயா விஷ்டஹ 11-14 பெரு வியப்படைந்து

விஸ்மிதாஹா 11-22 ஆச்சர்யத்துடன் , வியப்புடன்

விஹாய 2-22 களைந்து விட்டு

விஹார சய்ய ஆஸன போஜனேஷு  11-42 விளையாடுகையிலோ , படுக்கையிலோ ,உட்கார்ந்து  யிருக்கை யிலோ , சாப்பிடுகையிலோ

விஹிதாஹா 17-23 சிருஷ்டிக்கப்பட்டன

வீக்ஷந்தே 11-22  பார்க்கிறார்கள்

வீத ராக பய க்ரோதஹ 2-56 பாசம், பயம், கோபம் ஆகியன இல்லாமல்

வித ராகாஹா  8-11 பற்றுதல் இன்றி

வீர்யவான் 1-5 பலசாலியான

விக்ரோதரஹ 1-15 பீமன் / ஓநாய் வயிறு படைத்த / பசி மிகுந்த

வ்ருஜினம் 4-36 பாவத்தையும்

வ்ருஷ்ணீனாம் – 10-37 வ்ருஷ்ணி/ யாதவ  குலத்துதித்த

வேகம்  5-23 மனக் கிளர்ச்சி

வேத்தா 11-38  யாவும் அறிந்தவன்

வேத்தி  2-19  உணர்கின்றானோ

வேத்த  4-5  அறிதல்

வேத  2-21  அறிகின்றானோ

வேத யக்ஞா அத்யனைஹி 11-48  வேதம் கற்பதாலும் யாகம் செய்வதாலும்

63  WORDS ADDED FROM PART 63 OF GITA WORD INDEX

xxx

tags- BhagavadBhagavad-Gita, Tamil word Index, Part 63

ஃபெர்மி பாரடாக்ஸ்! ரஸ்ஸல் பாரடாக்ஸ்!! (Post No.11,080)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,080

Date uploaded in London – –    5 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஃபெர்மி பாரடாக்ஸ்! ரஸ்ஸல் பாரடாக்ஸ்!!

 

ச.நாகராஜன்

ஃபெர்மி பாரடாக்ஸ் என்றால் என்ன?

1950ஆம் ஆண்டு ஒரு நாள்.

நொபல் பரிசு பெற்ற பிரபல அணு இயற்பியல் விஞ்ஞானி என்ரிகோ ஃபெர்மி (Nuclear Physicist Enrico Fermi)  லாஸ் ஆல்மாஸ் நேஷனல் லாப்-இல் தன் சகாக்களுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது பேச்சுவாக்கில் அவர் நியூயார்கர் இதழில் அயல்கிரக்வாசிகளைப் பற்றி வந்த செய்தி அறிக்கையின் அடிப்படையில் வெளிவந்த கார்ட்டூனைப் பற்றிப் பேச ஆரம்பித்த போது ஒரு கேள்வியைக் கேட்டார்.

அவர்கள் எல்லாம் எங்கே? என்று கேட்டார் அவர்.

கோடிக் கணக்கான நக்ஷத்திரங்கள் வானிலே ஜொலிக்கின்றன. அவற்றைச் சுற்றி ஏராளமான கிரகங்கள் உள்ளன.

இவையெல்லாம் பற்பல கோடி ஆண்டுகள் பழமையானவை. அப்படியானால் பூமி போன்ற ஒரு கிரகம் அங்கு இருக்க வாய்ப்பு உண்டு. நம்மை விட முன்னேறிய நாகரிகங்களும் நம்மை விட தொழில்நுட்பத்தில் மேலான நிலையைக் கொண்டுள்ள அதி நவீன அயல்கிரகவாசிகளும் இருக்கக் கூடும்.

அப்படியானால் அவர்கள் எங்கே? ஏன் இன்னும் ஒருவர் கூட பூமிக்கு வரவில்லை?

இது தான் அவர் கேட்ட கேள்வி.

அயல்கிரகவாசிகள் இருப்பது நிச்சயம் என்றாலும் அவர்களில் ஒருவரைக் கூட ஏன் நாம் இன்னும் பார்க்கவில்லை என்ற முரண்பாடு – பாரடாக்ஸ் – Paradox – அவர் பெயரால் வழங்கப்படலாயிற்று.

அவர் கிடுகிடுவென்று சுமாரான ஒரு கணிதத்தைப் போட்டுப் பார்த்தார். பிரபஞ்சத்தில் மனித இனம் தோன்றி தொழில்நுட்பம் வளர்ந்த காலத்தைக் கணக்கிட்டுப் பார்த்த அவர், பூமியில் இவ்வளவு காலம் கழிந்த நிலையில் ஒரு அயல்கிரகவாசியாவது வந்திருக்க வேண்டுமே, ஏன் ஒருவரைக் கூட நாம் இன்னும் பார்க்கவில்லை என்றார்.

அவரது இந்த முத்திரை கேள்வி தான் ஃபெர்மி பாரடாக்ஸ் ஆயிற்று!

அடுத்து ரஸ்ஸல் பாரடாக்ஸ் பற்றிப் பார்ப்போம்!

ரஸ்ஸல் பாரடாக்ஸ்!

தர்க்கம் மற்றும் கணிதத்தில் பிரபல மேதையான ரஸ்ஸல் கூறிய ஒரு வாக்கியம் உலகப் புகழ் பெற்ற வாக்கியமாக ஆகி விட்டது.

இது ரஸ்ஸல்’ஸ் பாரடாக்ஸ் ( Russell’s Paradox) அதாவது ரஸ்ஸலின் முரண்பாடு என்று அழைக்கப்படுகிறது.

ஒரு நாவிதர், தனக்குத் தானே ஷேவ் செய்து கொள்ளாதவர்களுக்கு மட்டுமே ஷேவ் செய்து விடுவார். அவர் தனக்குத் தானே ஷேவ் செய்து கொள்கிறாரா?

(There is a barber who shaves precisely those people who don’t shave themselves. Does he shave himself?)

இது தான் அவரது வாக்கியம்!

அந்த நாவிதர் தனக்குத் தானே ஷேவ் செய்து கொள்பவராக இல்லை எனில், இப்போது அவரது விதியின் படி அவர் தனக்குத் தானே ஷேவ் செய்து கொள்ள வேண்டும்.

அவர் தனக்குத் தானே ஷேவ் செய்து கொள்பவர் என்றால், அவரது விதியின் படி அவர் தனக்குத் தானே ஷேவ் செய்து கொள்ளக் கூடாது!

அவர் தனக்குத் தானே ஷேவ் செய்பவராக இருந்தாலும் சரி, அதே சமயம் அவர் ஷெவ் செய்து கொள்ளாமல் இருந்தாலும் சரி இந்த இரண்டும் தர்க்க ரீதியாக சரிப்பட்டு வராது.

அதனால் தான் ரஸ்ஸலின் முரண்பாடு என்று அழைக்கப்படுகிறது.

இது கணிதத்தில் உள்ள ‘sets’ or grough of things ஆகியவற்றுக்கு நிகராகச் சொல்லப்படுகிறது.

அவர் set theoryயில் ஒரு புது வித setஐக் கண்டு பிடித்தார். அது கணித ரீதியாக சரி என்றாலும் கூட நாவிதர் பாரடாக்ஸ் போல தர்க்க ரீதியாக ஒத்து வராத ஒன்று.

இதனால் அவர் ரஸ்ஸல் பாரடாக்ஸ் மூலம் புகழப் படுகிறார்!

***

tags- பெர்மி பாரடாக்ஸ், ரஸ்ஸல் பாரடாக்ஸ், 

MY VISIT TO KANCHIPURAM (Post No.11,079)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,079

Date uploaded in London – –    4 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

I went to Kanchipuram on 9th June 2022. This is not my first visit. Even during my pre-Covid visit to India in 2019, I had been to Kanchi. But one remarkable coincidence is Lord Vishnu of Yathokthakaari Temple was not lucky enough to see me! We went there at 11-45 am in the morning and the priest was closing the door. Hearing our ‘noise’, he just removed the curtain for 30 seconds in Andal shrine, and Andal was lucky to see me. Main shrine was closed before 11-45 am!

I am not writing this out of arrogance (Vishnu was not lucky to see me). Someone must regulate these Vaishnavite temples. They open them and close them according to their whims and fancies. Last time, I covered lot of temples in the morning and wanted to have Darshan at the same Yathoktakaari temple. Someone told me that the temple will be opened at 5 pm. I was waiting in the car for three hours chatting to my taxi driver on various subjects. Now it was 5 pm. Someone opened the big door in the front. I got excited. But no one opened the temple until 5-30 pm. And I left eaxactky at 5-31 pm. Perumal/ Vishnu was not lucky to see me even in 2019. Myself and driver emptied two Coke bottles and two Fanta bottles within the three hours. One good thing happened. Just to spend the afternoon we went to Sakunthala Memorial Museum. (Please see my blog about it written in 2019.)

But I should not blame only Vishnu temples. Most famous Abhirami Amman temple in Thirukkadaiyur also do the same. Previous night (28/5/2022) we had the darshan of Goddess Abhirami in a crowded atmosphere. So just to avoid crowd, I took my bath at 5 AM next day and entered the temple at 6 AM. All the gates were opened except the main shrines of Lord Shiva and Goddess Parvati/Abhirami. I was waiting until 7 am. Then on my enquiry someone told me Abhirami Shrine will be opened at 7-45 Am after the Deepa Aaradhanaa at Shiva’s shrine at 7-30 AM

What a shame! In those days I had Darshan of gods and goddesses in Madurai even before 6 AM. Someone must regulate these temples.

Is it justified?

Priests are not machines! They must also work for 8 hours a day. Not more than that. In temples like Yathokthakari (Sonna Vannam Seitha Perumal), someone told me that the temple do not get enough devotees and so the priest opens it for a few hours. It is a million-dollar question or a chicken and egg question.

Does it get less devotees because it is open at irregular hours? Or is it opened at irregular hours because it gets a few devotees. My honest opinion is that it should be opened at regular hours so that more devotees will come.

A few years ago, I wrote an article listing all the 108 temples in Kanchipuram. So people come there to see all the temples. The auto rikshaw drivers take you to as many temples as possible for Rs.400 (2019 rates) within four hours.

Talking about Abhirami temple, why do they open the main shrines at 7-30 and 7-45 AM. I visited there twice or thrice in my 74 years of life. Only the local people would tell us the stories. I saw group after group entering the temple with all Mela Thalam (Drums and Pipes Music) with garlands around the couples. Thousands celebrate their birthdays or anniversaries of their weddings inside the temple . Probably the temple had few priests and so they open it late. But there is no justification for late opening. All Hindu temples must open at 6 AM at least. Closing time may be 1 PM. Again 5 PM in the evening is good.

My own Madurai city also disappointed me this time. Once upon a time we used to play hide and seek in the deserted dark corridors of the temple. Now I see unimaginable crowd. So we went there at 5-45 am to beat the crowd. But we waited in the ‘Q’ for two hours like Tirupati. The reason told to us by a temple staff was that they closed the shrine to do Six Kaala Pujas together. Six Time Puja for all Hindu Gods in Tamil temples are done from sunrise to late night (Palli Arai Deepa Aaradhana= Bed Room Arti). But how come they do it 7 am? Have I been given wrong information? But the fact is Goddess Meenakshi shrine was closed (curtain down) until 7-30 am. Why? Why?

xxx

What is my decision or New Year Resolutions?

Never visit the same temple again and again unless it is your Family Deity (Kula Devata).

Never do any Archana (with coconut and bananas and flowers). Because the crowd makes it impossible to do any Ashtottaram= 108 names of God for every devotee. Each one comes with a long list of their family members with their birth stars. Priests are not machines. During this visit to India, I went into the kitchen of a wedding hall to take pictures. The chef showed me a big plate which makes 42 Idlis (steamed rice cakes)  at one go. Unfortunately, we have not yet invented machine that do 42 Archanas at one go!

Go to ancient temples, where there is less crowd.

If the priests do not get enough salary from the government, give them money instead of putting it into the Temple Hundi/Money box.

Regulate all the temple opening times and display them in the websites and boards at the entrance.

If I go to big railway stations or airports in a western country, I see a display board or information counter with small letter “I”. We need such things in crowded temples.

Another important resolution, don’t go to temples during Kartikai month, when the temples are thronged by unruly Ayyappa devotees. Some of them are not devotees at all.

Xxx

Back to Kanchipuram again

During this visit on 9th June 2022, we had the Darshan of Gods and goddesses in Kanchi Kamakshi Temple (Kaamak kanni in Sangam Tamil Literature), Ekamreswarar Temple (One Mango Tree God Temple), Chitraguptan Temple, and ‘closed Yathokthakari’ Temple.

In addition to the temples, we went to Kanchi Mutt. The temples were crowded because it was last few holidays for students enjoying Summer Vacation. But we managed to see the gods (Shiva) and goddesses in Tirupati Style ( for 30 seconds only).

In the Mutt, Shankaracharya was not there, because he was on a Yatra to Andhra Pradesh. But the Mutt was crowded because of Samashti Upanayana (Low cost Punul/sacred thread ceremony for Brahmins). All the boys come under one roof and get the initiation and get the feast in the Mutt. It was a good arrangement.

We also had the Darshan/Viewing of Adhistanams (Samadhis of Kanchi Paramacharya and his junior Sri Jayendra Sarasvati).

In short it was a trip with difficult darshans. But all the shortcomings were compensated by the hospitality of Venugopal Krishnamurthy of Kanchipuram. He became my friend through my blogs and facebook (?). He had been inviting me for long. So just before leaving for Chennai, we visited his family and we had a feast there, who I met for the first time. His son Raghavan, just before flying to Melbourne took us around the temples. I was surprised to see hundreds of plants in his house. Venugopal Krishnamuthy’s hobby or service is to plant Bilva trees in Shiva temples and Tulsi plants in Vishnu temples. There are enough good people in the world to do positive things silently, without expecting name and fame. Only through his son, I came to know that some of the Vilva/ Bilva trees planted by him have grown to enormous size inside the temples. He is also printing Stotra (hymns) books and distribute them free.

One surprising thing I noticed in the Ekambareswarar Temple ( Eka Amra Eswara) is they put a fence around the famous Mango Tree and built a shrine there. Several years ago the tree was standing on its own without any compound wall.

(Since I wrote about the temples in 2019, I did not give the details this time)

kanchipuram | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ka…

· Translate this page

4 Apr 2019 — There are 108 Divya Desams, i.e. holy temples of Lord Vishnu in India. Out of the 108, 14 temples are in Kanchipuram. This is the highest number …



WHAT TO SEE, WHERE TO GO IN KANCHIPURAM? (Post No …

https://tamilandvedas.com › what-to-…

· Translate this page

9 Apr 2019 — ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com)) … 14 IMPORTANT VISHNU TEMPLES IN KANCHIPURAM! (Post No.6226) April 4, …

பள்ளிகொண்டானும் பல்லிகொண்டானும் (Post No.6231)April 6, 2019In

காஞ்சிபுரத்தில் சகுந்தலா ஜகந்நாதன் மியூஸியம் (Post No.6244)

Kanchi Mutt | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › kanchi-mutt

Sri Kanchi Paramacharya (1894 – 1994) on the throne. Written by London Swaminathan Post No. 1097; 10th June 2014. Guru and God are one.

Story of ‘Dumb Poet’ Mooka Kavi | Tamil and Vedas

https://tamilandvedas.com › 2014/06/07 › story-of-dum…

7 Jun 2014 — Muka Kavi means dumb (turned) poet. He used to go to Kanchi Kamakshi temple and prostrate before the statue of the goddess every day.

–subham–

நெப்போலியனின் அருங்குணம் நேரம் தவறாமை! (Post No11,078)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,078

Date uploaded in London – –    4 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

நெப்போலியனின் அருங்குணம் நேரம் தவறாமை!

ச. நாகராஜன்

பிரான்ஸ் நாட்டை ஆண்ட நெப்போலியனை நேரம் தவறாமை என்ற அரிய குணத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.

நெப்போலியனுக்கு தனது தளகர்த்தர்கள் கூட எதையும் நேரம் தவறாமல் செய்ய வேண்டும்.

அவனது அனைத்து வெற்றிகளுக்கும் அவனது சரியான திட்டமிடுதலும், வீரமும், நேரம் தவறாமையுமே காரணம்.

ஒரு சமயம் மாஸ்கோ மீது தாக்குதல் நடத்த நினைத்த நெப்போலியன் தனது தளகர்த்தரான ஜெனரல் க்ரௌச்சியை (General Grouchy) அழைத்தான். மறுநாள் காலை ஒரு இடத்தில் படையை நிறுத்தவேண்டும் என்று க்ரௌச்சிக்கு அவன் கட்டளையிட்டான்.

க்ரௌச்சி சிறந்த வீரன் மட்டுமல்ல; மிகவும் நம்பிக்கைக்குரிய தளகர்த்தனும் கூட.

க்ரௌச்சிக்கு நெப்போலியன் திட்டம் நிறைவேற்ற முடியாத ஒன்று என்று தோன்றியது. ஏனெனில் ஆல்ப்ஸ் மலைத் தொடரின் ஒரு பகுதி அங்கு தடையாக இருந்தது.

தனது பயத்தைத் தயங்காமல் அவன் நெப்போலியனிடம் கூறினான்.

“சார், ஆல்ப்ஸ் மலைத் தொடர் அங்கு இருப்பதால் நமது வீரர்களை அங்கு நிறுத்துவது என்பது மிகவும் கஷ்டம். அது முடியாத காரியம்” என்றான் அவன்.

உடனே நெப்போலியன், “முடியாது என்ற சொல் முட்டாள்களின் அகராதியில் மட்டுமே இருக்கும் ஒரு சொல். ஆல்ப்ஸை படைவீரர்களுக்கு வழி விடச் சொல். முடியாது என்றால் ஆல்ப்ஸ் மலையைத் தகர்த்து வீழ்த்து.” என்றான். (“Impossible is the word found in the dictionary of fools. Ask the Alps to make way for men.  If it doesn’t, smash it.”)

க்ரௌச்சிக்கு இப்போது வேறு வழியில்லாமல் போய்விட்டது. தனது படைவீரர்களை அழைத்து மலையில் உள்ள பனிப்பாறைகளை அகற்றச் சொன்னான். மறுநாள் காலையில் நெப்போலியன் எந்த இடத்தில் படை நிறுத்த வேண்டுமென்று கட்டளை இட்டிருந்தானோ அந்த இடத்தில் படை நிறுத்தப்பட்டிருந்தது.

இதற்காக க்ரௌச்சி பெரும் பாடு பட வேண்டியதாக இருந்தது. இந்த வேலைக்கு எவ்வளவு நிமிடம் தேவை என்பதைச் சரியாக அவன் கணக்கிட்டான். குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலையை முடிக்க எத்தனை வீரர்கள் தேவை என்பதையும் கணக்கிட்டான். வேலை ஆரம்பிக்கப்பட்டு குறித்த நேரத்தில் கனகச்சிதமாக முடிந்தது. எப்போதுமே நேரம் தவறாமல் எதையும் செய்யப் பழக்கப்பட்டவன் என்பதால் நெப்போலியனின் ஆணையை அவனால் வெற்றிகரமாக முடிக்க முடிந்தது.

ஒரே ஒரு முறை தான் அவன் தன் வாழ்க்கையிலேயே சிறிது தாமதமாக ஒரு இடத்திற்குச் சென்றான்.

அது தான் வாடர்லூ (Waterloo)

எதிரி இதை தனக்கு பெரிய ஆதாயமாக எடுத்துக் கொண்டான். ஏனெனில் அவனது படை, தலைமை இல்லாமல் அந்த நேரத்தில் இருந்தது. படைக்கு உரிய வீர தீர மனப்பான்மை இல்லாமல் போகவே குழப்பமாக இருந்த சூழ்நிலையை எதிரி தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டான். வெற்றியும் பெற்றான்.

அன்று முதல் வாடர்லூ என்பது தோல்விக்குரிய ஒரு சொல்லாக மாறி விட்டது.

அதையொட்டியே இந்த கவிதை எழுந்தது.

செய்வதை உரிய நேரத்தில் செய்

எதையும் நேரம் தவறிச் செய்யாதே

ஒரு செயலில் சிறிது தாமதம் என்றாலும் கூட

அது வாடர்லூவில் கொண்டு விட்டு விடும்!

(Do what you do well in time,

 Never be late in everything you do,

 A little delay in doing a thing,

 May lead you to ‘Waterloo’)

நாம் கூட வாடர்லூவைத் தவிர்க்க வேண்டுமெனில் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு அருங்குணம் :

நேரம் தவறாமையே!

***

tags- நெப்போலியன்

பகவத்கீதை சொற்கள் இண்டெக்ஸ்- 62 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம் (Post.11,077)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,077

Date uploaded in London – –    3 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பகவத்கீதை சொற்கள் இண்டெக்ஸ்- 62 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம்

விததாமி  7-21 செய்கின்றேன்

விதிதாத்மனாம்  5-26  ஆன்ம தரிசனம் பெற்றவர்களும்

விதித்வா 2-25  அறிந்து

விதுஹு 4-2 அறிந்திருந்தனர்

வித்தி 2-17  உணர்வாய்

வித்மஹ – 2-6 அறிவோம் , உணர்வோம்

வித்யதே  2-16  உண்டாகும், இருக்கும்

வித்யாத் 6-23 அறிவாயாக

வித்யானாம் 10-32  வித்தைகளுக்குள்

வித்யா வினய சம்பன்னே 5-18 கல்வியும் அடக்கமும் நிறைந்த

வித்யாம் 10-17 அறிதல் வேண்டும்

வித்வான்  3-25 ஞானி, அறிஞன்

விதன உக்தாஹா 17-24  சாஸ்திரோக்தமான

விதி த்ருஷ்டஹ  17-11  சாஸ்திர முறைப்படி

விதி ஹீனம்  17-13  முறை தவறியதும்

விதீயதே 2-44  உதிக்கும்

விதேயாத்மா 2-64  தன்னடக்கம் பெற்றவன்

வினங்க்ஷ்யஸி 18-58  அழிவடைவாய்

வினத்ய 1-12  கர்ஜித்து

விநஸ்யதி 4-40  நாசமடைகிறான்

விநஸ்யத்சு  13-27  அழியும் பொருட்களில்

வினா 10-39 அன்றி, இல்லாமல்

வினா சம் 2-17  அழிவை

வினா சஹ 6-40  அழிவு

வினா சாய 4-8 அழித்தற்கும்

வினி யதம் 6-18  நன்கு அடங்கிய

வினி யம்ய  6-24  ஓட்டவிடாமல் தடுத்து

வினி வர்தந்தே 2-59  ஒழிவடைகின்றன

வினி வ்ருத்த காமாஹா 15-5  ஆசைகள் அறவே  ஒழிந்தவரும்

வினிச்சிதைஹி 13-4    நிர்ணயப்படுத்துவதும்

விந்ததி 4-38  பெறுகிறான்

விந்ததே 5-4  பெறுகிறான்

விந்தாமி 11-24   காண்கிறேன்

விபரிவர்த்ததே 9-10 சுற்றிச் சுற்றி வருகின்றது

விபரீதம் 18-15 எதிர்முறையாக

விபரீ தானி 1-30 தாறுமாறான

விபரீ தான்  18-32  நேர்மாறாக

விபச் சிதஹ   2-60 நல்லறிவுடையவனும்

விபக்தம் 13-16  பிரிவுபட்ட

விபக்தேஷு 18-20  வெவ்வேறாகவுள்ள

விபாவசெள 7-9  தீயில்

விபும் 10-12 கடவுளாக

விபுஹு 5-15  கடவுள்

விபூ திபிஹி 10-16 விபூதிகளால், தெய்வீக சக்திகளால்

விபூ திமத் 10-41 தெய்வீக சக்தியை விளக்குவதாக

விபூதிம் 10-7  பெருமையை, தெய்வீக சக்தியை

விபூதீனாம் 10-40 விபூதிகளுக்கு

விபூதே ஹே 10-40 விபூதிகளின்

விமத் ஸரஹ  4-22 பொறாமை இல்லாதவனும்

விமுக்தாஹா 15-5  விடுபட்டவரும்

விமுச்ய  18-53 ஒழித்து

விமுஞ்சதி 18-35 விடுதல்

விமுஹ்யதி  2-72 மோகத்தில் அழுந்துதல்

விமூ டபாவஹ  14-49  அறிவீனம்

விமூடாஹா 15-10  மதியீனர்கள்

விமூடாத்மா  3-6  பெரிய மூடன்

விம்ரு ச்ய  18-63 விசாரித்து

விமோக்ஷாய  16-5  முக்திக்கும்

விமோ க்ஷ் யஸே  4-32 விடுபடுவாய்

விமோஹயதி  3-40  மயங்குகின்றது

விராடஹ 1-4 விராட தேசத்தவன்

விலக்னா  11-27  இடைப்பட்ட, அகப்பட்டு

விவஸ்தஹ 4-4 விவஸ்வானுடைய

63 words added from part 62 of Gita indexTAGS– பகவத்கீதை, சொற்கள் இண்டெக்ஸ் 62, 

ட்ரோன் காட்டும் எதிர்கால உலகம்! (Post. 11,076)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,076

Date uploaded in London – –    3 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ட்ரோன் காட்டும் எதிர்கால உலகம்!

ச.நாகராஜன்

ட்ரோன் (Drone)!

அனைத்தையும் பார்க்கும் ட்ரோன் எதிர்கால உலகின் நம்பிக்கை நட்சத்திரமா அல்லது அறிவியல் கண்டுபிடித்துள்ள Dull, Dirty And Dangerous சாத்னங்களுல் ஒன்றா?

விடை : இது மனிதனின் கையில் தான் உள்ளது!

ஆனால் உறுதிபடச் சொல்ல முடிவது ஒன்று உண்டு:

அது தான் ட்ரோன் ஏஜ் – ட்ரோன் காலம் ஆரம்பித்து விட்டது என்று!

ட்ரோன் என்பது பல்வேறு அளவுகளில் வடிவமைக்கப்படும் பைலட் இல்லாத வானில் பறக்கும் வாகனங்கள் ஆகும். இவை தரையிலிருந்து இயக்கப்படுகின்றன.

ஏவுகணை போல ஒரே ஒரு தடவை பயன்படுத்துப்படுவது போல அல்லாமல் இவை திரும்பத் திரும்பப் பயன்படுத்தக் கூடியவை ஆகும்.

மிலிடரி ட்ரோன் எனப்படுபவை இராணுவ சம்பந்தமான தாக்குதலுக்கும் ஆயுதங்களைக் கொண்டு வழங்குவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால் அதே சமயம் ஆக்கபூர்வமான செயல்களுக்கும் ஏராளமான ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இவற்றைத் தயாரிப்பதில் அமெரிக்க கம்பெனிகள் பல முனைந்து ஈடுபட்டுள்ளன.

விபத்து நடந்த இடத்திற்குச் சென்று என்ன நடந்தது என்று கண்காணித்துத் தகவல் அளிப்பது, எதிரி நாட்டில் ஒற்று வேலை பார்ப்பது, தீவிரவாதிகளையும், குற்றவாளிகளையும் கண்காணித்து அவர்களை ஒடுக்குவது, பிடிப்பது போன்றவையெல்லாம் ட்ரோனின் பணிகள்.

ஒரு கலகக் கும்பல் பெரிய போராட்டம் நடத்தும் போது வானில் பறந்து அவர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசிக் கும்பலைக் கலைக்க இப்போது ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

2000ஆம் ஆண்டில் அமெரிக்காவில் ஒரு சில ட்ரோன்களே இருந்தன. இன்றோ 90க்கும் மேலான நாடுகள் ட்ரோன் பயன்பாட்டில் வலுவடைந்துள்ளன.

சீனா மட்டும் தரையிலிருந்தும் கடலிலிருந்தும் இயக்கப்படக் கூடிய 42000 ட்ரோன்களை 2023க்குள் தயாரிக்கத் திட்டம் தீட்டி இருக்கிறது.

பல்வேறு நாடுகளின் அரசாங்கங்கள் மட்டும் இதில் ஈடுபடவில்லை.

பன்னாட்டு நிறுவனங்கள், அரசு சாரா தனியார் நிறுவனங்கள், சட்டம் ஒழுங்கு பாதுகாக்கும் பணியில் உள்ள நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் வெவ்வேறு பணிகளுக்காக ட்ரோன் பயன்பாட்டை மேற்கொண்டுள்ளன.

நேபாளத்தில் 2015ஆம் ஆண்டு 7.8 ரிக்டர் என்ற அளவில் பெரிய பூகம்பம் ஒன்று ஏற்பட்டது. 9000 பேர்கள் இறந்தனர். இன்னும் 16800 பேர்கள் காயமடைந்தனர்.  ஆறு லட்சம் வீடுகள் இடிந்தன. இன்னும் மூன்று லட்சம் வீடுகள் பாதி இடிந்த நிலையில் இருந்தன. இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உதவிக்கு விரைந்தன. இந்த பூகம்பத்தில் டிஸாஸ்டர் ட்ரோன் எனப்படும் விபத்து கால மீட்பு நடவடிக்கை ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன.

அங்கு ஊசிகள், மருத்துகள் ட்ரோன் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டன. இதைத் தொடர்ந்து 2010இல் ஹைதியில் (Haiti) ஏற்பட்ட பூகம்பத்திலும் அங்கு ட்ரோன்கள் சென்று படம் பிடித்து மீட்பு நடவடிக்கைகளை முறையாகச் செய்ய வழிகோலின.

அதிக எடை இல்லாத பொருள்களை ட்ரோன்கள் டெலிவரி செய்கின்றன. ஆனால் ஒரு பாக்கெட்டை டெலிவரி செய்ய ஒரு டாலர் முதல் 6 டாலர் வரை செலவாகிறது. ஆனால் இதைக் குறைக்கும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இப்போது ஒரு பாக்கட் டெலிவரி செய்ய 88 செண்டுகள் என்ற நிலையை இப்போது ட்ரோன் தொழில்நுட்பம் சாத்தியமாக்கி உள்ளது.

எதிர்காலத்தில் இது இன்னும் மிக மிகக் குறைந்து அனைத்து பொருள்களின் டெலிவரியும் ட்ரோன் மூலமாகவே வழங்கப்படும் உலகத்தை நாம் பார்க்க முடிகிறது.

அதே சமயம் இதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தீவிரவாதிகளும் தங்கள் தீவிரவாதத் தாக்குதலை நடந்த ட்ரோன் பயன்படுத்தக் கூடும் என்பது அச்சமூட்டும் செய்தி.

ஆக இனி வானில் ஒரு கண் அனைவரையும் எப்போதுக் கண்காணித்துக் கொண்டே இருக்கப்போகிறது.

நமது வீட்டு மாடியிலோ அல்லது அருகிலோ நமக்கு வரவேண்டிய பொருள்கள் டெலிவரி செய்யப்பட இருக்கின்றன.

மனிதனுக்கு மனிதன் சண்டை போட்ட காலம் போய் ஆங்காங்கே ட்ரோனுக்கும் ட்ரோனுக்கும் சண்டைகள் ஏற்படும் அபாயமும் உண்டு.

ஒரு புதிய யுகத்தில் நாம் நுழைய இருக்கிறோம் என்பது நிதர்சனமான உண்மை.

இதை ஆக்கபூர்வமாக ஆக்குவது என்பது – எப்போதும் சொல்லக் கூடிய தத்துவ வார்த்தை போல – ‘மனிதனின் கையில் தான் எல்லாம் இருக்கிறது’!

***

குறிப்பு : இந்தக் கட்டுரையில் உள்ள விவரங்களுக்கு ஆதாரமான நூலாக அமைவது The Drone Age என்ற நூல். இதை எழுதியவர் Michael J.Boyle. 2020ல் வெளிவந்த இந்த நூல் 387 பக்கங்கள் கொண்டது. விலை $29.95 (2323.62 ரூபாய்)

xxxxx

tags- ட்ரோன் , எதிர்கால உலகம்,

MEANING OF URDU AND HORDE (Post No.11,075)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,075

Date uploaded in London – –    2 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

Urduu (Urdu) is in full ‘Zaban -i-urduu’, that means ‘language of the camp- a Persian phrase that incorporates the Turkish word ‘ordu’. Thus Urdu is the same in origin as horde.

The spoken Urdu of the 19th century, one the major languages of British India , was then called Hindustani .

Now Urdu is spoken by  6 crore/ sixty million people in Pakistan and India and adjacent countries .

It is the official language of Pakistan. Its origin lies in Sanskrit and Prakrit. The script used for Urdu consists of Persian script with some added letters. Unlike Indian language, it is written from right to left (like Indus Valley script).    

Urdu literature began in the 14th century in South India. Even now there are a large population of Urdu speakers in Hyderabad in Andhra Pradesh. Delhi Sultanate sponsored Urdu language.

MIRZA GHALIB (born 1797) was one of the famous Urdu poets

xxx

Horde

Horde appeared in European languages after 1241 CE, when the Mongol Horde entered Poland and Hungary. It was originally Urdu. In Hindustani, Urdu meant both a nomad camp and a body of armed men.

Persia suffered most from the Mongol invasions, but yet they used Urdu to mean ‘a camp site’. But in Europe Horde ( a form of Urdu) struck terror.

In Russian, ‘orda’ meant a wild and terrifying , hostile and essentially a foreign mob. In Poland the word acquired an ‘h’ (horda) but otherwise kept the Russian sense. And in countries further west, in the languages of countries themselves un invaded by the Mongols, but horrified by the calamity of invasion, the Polish ‘horda’ and its air of dread entered French, German, Dutch, Swedish and English.

Xxx

Meaning of Kanaka

Another surprisingly widespread word, rather a nasty one is ‘kanaka’, originally Hawaiian for ‘man’. It is in use in Australia.

The dictionary defines it as ‘A native of the South Sea Islands’, but in fact it is an ugly, pejorative word meaning something between ‘native’ and ‘nigger’. In various forms and spellings, it remains in use throughout the Pacific basin . in the Pacific , it is in regular use as ‘kanak’…… with a sly perversity the Melanesians had stolen the Pacific word for nigger from the French; they called their country ‘kanaky’, so the French had to call them  Melanesians.

In Ecuador and Peru,  ‘canaca’ means a Chinese, but also a brothel keeper. In Chile, it also meant a ‘brothel’, while by association with Chinese skin colouring, canaco has come to mean pale or yellow in Chile and Ecuador.

Perhaps nastiest of all, the word has somehow entered German, in which Kanake is an abusive slang term for a foreigner, immigrant labourer, refugee and so on. It is back in vogue with the rise of the German right; for example, ‘We East Germans are no Kanakas (The Times, 4 February, 1993)

Source book – Book of Babel, Nigel Lewis, Viking, 1994.

Xxx

My Comments

We may compare the above abusive words to the Tamil word Pariah. It is even in Oxford Dictionary.

It is in international English newspapers almost every week. It is a shame that Tamils have not started any movement for deleting the word from the dictionaries. I am the only one campaigning against Pariah and Ayyo in Oxford and other English dictionaries.

My second comment is about Kanaka. It is associated with Yellow skin of Chinese and brothel.

Kanaka is gold in Sanskrit, which is called Yellow metal.

Last but the least, words such as Urdu/Horde , Kanaka, Pariah changed their meanings during the course of time. One must remember this while doing word research.

Xxx subham xxxx

Tags- Urdu, Horde, Kanaka, Kanake

ஊர்-இடப்பெயர் நாமாந்திரிதை பிரேளிகை—2 (Post No.11,074)

WRITTEN BY B. KANNAN, DELHI

Post No. 11,074

Date uploaded in London – 2 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

உதாரணத்துக்கு கொட்டாம்பட்டி கருப்பையப் பாவலரின் (19-ம் நூற்றாண்டு) தனிப்பாடல் ஒன்றைப் பார்ப்போம். அவர் இயற்றியப் பாடலின் மூலம் இதோ… (பார்க்க, சித்திரக்கவிக் களஞ்சியம், வ.ஜெயதேவன், சென்னைப் பல்கலைக் கழகம்)

திருமயிலை வான்மியூர் முகிலையென சாயற்

       றிகழ்கோதைத் திருவல்லிக் கேணிலமை யுற்ற

  வொருமுல்லை வாயினகை யாலங்காட் டுவிழி

       யொற்றியூர் வதவசமோ வெனநொந்துன் மயலால்

  வருமணிமே கலைகாஞ்சித் துகில்வளைகள் நழுவ

       மலைத்தண்ணா மலைமுலையின் வார்கிழிய வந்தாள்

  தருமதுரை யேசெந்தில் வேலரசே யன்னா

       டனைப்புலியூ ருக்கனுப்பிற் சார்பாக்க முனதே

மேலோட்டமாகப் பார்த்தால் இதில் பல ஊர்ப்பெயர்கள் இடம் பெற்றிருப்பதைக் காணமுடிகிறது. ஆனால் இதிலுள்ளச் சொற்களை வேறுபடுத்திப் பார்த்தோமானால் கிடைப்பதோ வேறு பொருள்.

அதைக் காண்போம்

   திரு மயிலை வான் மி ஊர் முகிலை அன சாயல்

      திகழ் கோதை திருவல் இக்கு ஏணில் ஐமை உற்ற

  ஒரு முல்லை வாயின்நகை ஆலம் காட்டும் விழி

      ஒற்றி ஊர்வது அவசமோ என நொந்து உன் மயலால்

  வரு மணி மேகலை காஞ்சித் துகில் வளைகள் நழுவ

      மலைத்து அண்ணா மலை முலையின் வார் கிழிய வந்தாள்

  தரும துரையே! செந்தில் வேல் அரசே! அன்னாள்

      தனைப்புலி ஊருக்கு அனுப்பில் சார்பு ஆக்கம் உனதே

பத உரை : தரும துரையே= தர்ம வழியில் செல்லும் தலைவனே, செந்தில் வேல் அரசே=திருச்செந்தூரில் அமர்ந்திருக்கும் வேலாயுதக் கடவுளே,

திரு மயிலை அன சாயல்=பார்ப்பவர் மனதைக் கவரும் மயிலின் மென்மைத் தோற்றத்தையும், மி வான்= மேலே ஆகாயத்தில், ஊர்முகில்=தவழ்கின்ற மேகத்தின்

ஐ=எழில், அழகு, திகழ்=பெற்று விளங்கும், கோதை=கூந்தலையும், முல்லைவாயின் நகை=முல்லை அரும்புகளின் வரிசையைப் போன்ற புன்முறுவலையும், ஆலம் காட்டும் விழி=விஷத்தையொத்த கருமை நிறத்தாலும், எதிராளியைக் கவர்ந்துத் துன்புறுத்தும் திறமையுடைய, கண்களைக் கொண்டவளும்,ஒரு திரு=லட்சுமி தேவி போன்ற ஓர் அழகி, உன் மயலால்=உன் மீது கொண்ட காதலால், வல் இக்கு= வலிமையானக் கரும்பு, ஏணில்=வில்லிலிருந்து மன்மதன் அம்பு எய்வதால், ஐமை=தளர்ச்சி, உற்று=அடைந்து, வரும் மணிமேகலை காஞ்சி துகில் வளைகள் நழுவ=இரத்தினங்களாலான மேகலை,காஞ்சி ஆகிய இடையணிகளும்,சேலையும், கைவளையல்களும் நழுவி விழ, ஒற்றி ஊர்வது அவசமோ என நொந்து=உன்னை நெருங்கித் தழுவுவது தன் திறமைக்கு அப்பாற்பட்டச் செயலோ என்று எண்ணி வருந்தி, அண்ணா=மேற்புறம் கட்டப்பட்டுள்ள, மல்=மெல்லிய இழைகளால் நெய்த , ஐ=அழகிய, முலையின்= ஒன்றோடொன்று நெருங்கி மோதுகின்ற மார்பகங்களின்,

வார் கிழிய= (ஏக்கப் பெருமூச்சால்) மார் கச்சு கிழிந்துவிடவும், மலைத்து வந்தாள்= என்ன செய்வது என்று அறியாமல் திகைத்துப் போய் உன்னிடம் வந்துள்ளாள்,

அன்னாள்=அத்தகைய மங்கையை, தனைப்புலி= அரவணைத்து உன்னுடையவள் ஆக்கிக் கொண்டு, ஊருக்கு அனுப்பில்=அவளது சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பா யெனில், உனது சார்பு=அவள் உனக்குப் பொருத்தமான, ஏ =அரியப் பொக்கிஷமாக, ஆக்கம்= விளங்குவாள்.

காதல் வயப்பட்ட ஒரு பெண்ணின் மேனி அழகை வர்ணிக்கும் பாவலர், அவள் இருக்கும் அவல நிலையைச் சொல்கிறார்.

அணிந்திருக்கும் புடவை, வளையல், இடையணிகள் நழுவி விழ, ஏக்கப் பெருமூச் சால் ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும் நகில் (முலை) களின் மேலுள்ள மெல் லிய நூலிழைகளால் நெய்த மார்புக்கச்சு கிழிந்து விட, அந்நிலையில் தலைவனை தழுவி அணைப்பது ஏற்புடையது ஆகுமா எனத் திகைக்கிறாளாம். அந்த மங்கையை மனதார தாரமாக ஏற்றுக் கொண்டு அவளைத் தலைவன் அவள் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தால் அவனுக்குப் பொருத்தப் பெருஞ்செல்வமாக விளங்குவாள்….. என்பது இதன் பொருள்.

இச்செய்யுளில் திருமயிலை, (திரு)வான்மியூர், திருவல்லிக்கேணி, (திரு) முல்லை வாயில், (திரு) ஆலங்காடு, (திரு)ஓற்றியூர், காஞ்சி, (திரு)ஆண்ணாமலை, மதுரை, புலியூர்(தில்லை), ஆகியத் தலப் பெயர்கள், வெளிப்படையாகத் தன் பொருளில் அல்லாமல் மறைமுகமாக வேறு பொருளில் கையாளப் பட்டுள்ளதால் நாமாந்திரப் பிரகேளிகை ஆயிற்று! பாவலரின் சொல்வன்மையை என்னவென்று சொல்வது!

இதோ இன்னுமொன்று……..

மல்லை எனும் மன்னாகம் புலவர் நமச்சிவாய பிள்ளை அவர்கள் இயற்றிய ஒரு பாடல்…

    முன்னீ வினைப்பருத் தித் துறை மேவிய மூளையர்தா

    மன்னாரில் வாழ்விற் றனங் கிளப் பார்புல வஞ்சரைமெய்

    துன்னாலை யிட்டு வறுத்தலை மேவிச் சுழிபுரம் போய்

    பன்னா லையணி யத்வாம் புலத்திற் பழகுவரே.

முற்பிறவியில் செய்த புண்ணிய மேலீட்டை உடைய புத்திமான்கள் இப்பிறவியிலே இல்லற வாழ்வில் நாட்டமில்லாதவர்களாய்ப் புலன்களை அடக்கி, உடம்பை நீங்கிச் சிவத்துடன் ஐக்கியமாவார்கள் என்பதே இப்பாடலின் பொருள். இதில் சுட்டப்பட்டுள்ள ஊர்களின் மூலம் எடுத்துக் காட்டப்பெறும் தத்துவப் பேருண்மையைக் காண்போம்…

பத உரை: முன்னீவினை பருத்து=முற்பிறவியில் செய்த நல்வினை அதிகரித்து, இத்துறை மேவிய மூளையர்= இப்பூமியில் பிறந்துள்ளப் புத்திசாலி மகான்கள், மன்னார் இல்வாழ்வில்= இல்லற வாழ்க்கையில் ஈடுபட மாட்டார்கள், தனங்கிளப்பார்= பொருளீட்ட மாட்டார்கள், புலவஞ்சரை=நம்மை ஆட்டுவிக்கும் ஐம்புலன்களாகியப் பாவிகளை, மெய்துன் ஆலையிட்டு= ஞானமெனும்

இயந்திரத்தில், வறுத்தலை மேவி= போட்டு வறுத்தெடுத்து, சுழிபுரம் போய்= தீயகுணங்களுக்கு இடமான இவ்வுடம்பு நீங்கப் பெற்று, பன் ஆலயம் நண்ணி= அவர்களுடைய ஆன்மா சிவத்தில் ஒன்றிணைந்து, அத்வாம்புலத்திற் பழகுவர்= இரண்டறக் கலப்பதாகிய அத்துவைத வெளியை அடைவர்.

மேற்கண்டப் பாடலில், ஈவினை, பருத்தித்துறை, மூளாய், மன்னார், தனங்கிளப்பு, துன்னாலை, வறுத்தலை, சுழிபுரம், பன்னாலை, அத்துவாம்புலம் ஆகிய ஊர்ப்பெயர் களும், இடப்பெயர்களும் கொடுக்கப் பட்டுள்ளன.  முன்+ஈவினை= முன்னீவினை ஆகியது. பருத்தித்துறை=பருத்து+இத்துறை எனப் பிரிந்துள்ளது. மூளாய்= மூளை எனத் திரிபுற்றுள்ளது.

இப்படிப் பல செய்யுட்களைப் பாவலர் பெருமக்கள் நாமாந்திர பிரகேளிகைஅணியில் யாத்திருக்கிறார்கள். அவை எல்லாமே படித்து ரசிக்கத் தக்கவை. தமிழகக் கவிஞர் களைப் பாராட்டும் இவ்வேளையில் அண்டை நாடான ஈழத்துவாழ் யாழ்ப்பாணத்துக் கவிஞர்களின் கை-சொற் வண்ணத்தை இப் பிரகேளிகை அணியலங்காரத்தில் இயற் றப் பெற்றுள்ளப் பிரசித்தியானச் சில பாடல் விளக்கங்களுடன் இப்பகுதியைஅடுத்தப் பதிவில் நிறைவு செய்வோம்.

 (தொடரும்)

tags–  Tags – நாமாந்திர , பிரகேளிகை, கொட்டாம்பட்டி,  கருப்பையப் பாவல