ஞானமயம் வழங்கும் (19 10 2025)  உலக இந்து செய்திமடல் (Post.15,106)

Written by London Swaminathan

Post No. 15,106

Date uploaded in London –  20 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல்.

செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த் வாசித்து வழங்கும் செய்தி மடல்.

அனைவருக்கும் வணக்கம். இன்று ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் மாதம் 19-ம் தேதி 2025-ம் ஆண்டு

****

எல்லோருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் .

திங்கட்கிழமை கொண்டாடப்படும் தீபாவளித் திருநாள் அன்று தொடங்கி,

ஆண்டு முழுதும், எல்லோருக்கும் சகல செளபாக்கியங்களையும் இறைவன் அருளவேண்டும் என்று ஞானமயம் குழு பிரார்த்திக்கிறது .

****

முதலில் தீபாவளிச் செய்திகள்.

அயோத்தியில் தீபாவளி  தீப உற்சவம்

அயோத்தியில் தீபாவளிக்கு 29 லட்சம் விளக்குகளை ஏற்ற திட்டம்..!!

உத்தரப் பிரதேசத்தில் பாரதீய ஜனதா கட்சி  அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து, ஒவ்வொரு தீபாவளி பண்டிகைக்கும் அயோத்தியில் லட்சக்கணக்கான விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டுள்ளன. இது உலக சாதனையாக மாறி வருகிறது. அந்த வகையில், தீபாவளி பண்டிகையையொட்டி 9-வது தீப உற்சவம் 19-ம் தேதி அயோத்தியில் உள்ள ராம் மனோகர் லோஹியா அவத் பல்கலைக்கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில், 29 லட்சம் விளக்குகள் ஏற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் சாதனையை முறியடிக்கும். சரயு நதியின் 56 கரைகள், ராம் கீ பேடி, பிற கோயில்கள் மற்றும் நகரின் குடியிருப்புப் பகுதிகளில் இந்த விளக்குகள் ஏற்றப்படும்.

தமிழ்நாட்டில் தீபாவளிக்கு நரகாசுரனே காரணம் என்பது போல, உ.பி.யில், போருக்குப் பிறகு அயோத்தியை ராமர் வென்றதை நினைவுகூரும் வகையில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. மேலும், தீபாவளிக்கு 1,100 ட்ரோன்கள் வானில் ஏவப்படும். இதில் திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்ட ராமாயணக் காட்சிகளும் அடங்கும்.

அயோத்தியில் தீபாவளி கொண்டாட்டங்களுக்கு தன்னார்வலர்களிடமிருந்து உதவி பெற உ.பி. அரசு முடிவு செய்தது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பலர் தன்னார்வலர்களாக பணியாற்ற விருப்பம் தெரிவித்து பதிவு செய்துள்ளனர்.

இந்துக்கள் தவிர பிற மதங்களைச் சேர்ந்தவர்களும் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள்.

*********

தீபாவளிக்கு மறு   நாளும்  பொது விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு

தீபாவளிக்கு மறு  நாளும்  தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள்பள்ளி கல்லூரிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்தாண்டு அக்.,20 அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள்பெற்றோர்கள்ஆசிரியர்கள்அரசு அலுவலர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஆகியோரின் நலனைக் கருத்தில் கொண்டு அக்.,21 அன்றும்   விடுமுறை அளிக்கப்படுகிறது.

அந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் அக்.,25 அன்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது

****

அயோத்தியில் ராமாயண மெழுகு அருங்காட்சியகம்

அயோத்தி ராமர் கோவில் அருகேராமாயண இதிகாசத்தை மையமாக வைத்துமுதல் மெழுகு சிலை அருங்காட்சியகம் இன்று திறக்கப்பட உள்ளது.

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.

அயோத்தியின் சவுதா கோசி பரிக்ரமா பாதையில் கட்டப்பட்டுள்ள இந்த மெழுகு சிலை அருங்காட்சியகம்தென் மாநில கட்டட கலையை பிரதிபலிக்கும் வகையில் வடி வமைக்கப்பட்டுள்ளது.

 6 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் திறந்து வைக்க உள்ளார். இந்த அருங்காட்சியகத்தில் ராமர்சீதைலட்சுமணன்பரதன்ஹனுமன்ராவணன்விபீஷணன் உள்ளிட்ட ராமாயணத்தின் முக்கிய கதாபாத்திரங்களின், 50 மெழுகு சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த அருங்காட்சியகத்தை வடிவமைத்த கேரள கலைஞர் சுனில் கூறுகையில், “அருங்காட்சியகத்தை பார்வையிடுவோர் திரேதா யுகத்தில் அடியெடுத்து வைப்பதை உணர்வர். புராணம்தொழில்நுட்பம்கலைத்திறனை ஒருங்கிணைக்கும் தனித்துவ இடமாக இது விளங்கும்,” என்றார்.

பார்வையாளர்களுக்கு நுழைவுக்கட்டணமாக ஒரு நபருக்கு100 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இங்குஒரே நேரத்தில் 100 பேர் வரை கண்டு ரசிக்க அனுமதி அளிக்கப்படும்.

அண்மையில் தமிழ்க் கவிஞர் அருணாசல கவிராயர்சங்கீத மும்மூர்த்தியலில் ஒருவரான ஸ்ரீ தியாகராஜர்கர்நாடக சங்கீதத்தின் பிதாமகர் ஸ்ரீ புரந்தரதாசர் ஆகியயோரின் சிலைகளையும் உத்தரப்பிரதேசமுதல்வர் திறந்து வைத்தது சங்கீதப்பிரியர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.

***

சபரிமலையை தொடர்ந்து வைக்கம் மகாதேவர் கோவிலிலும் 31 பவுன் தங்கம் மாயம்!

கேரளாவில் திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோட்டயம் மாவட்டம் வைக்கம் ஸ்ரீ மகாதேவர் கோவிலில் சபரிமலையை போலவே காணிக்கையாக வரும் தங்கம், வெள்ளி உள்பட ஆபரணங்கள் இரும்பு பிரோக்களில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதாவது தங்க ஆபரணங்கள் தனியாகவும், வெள்ளி ஆபரணங்கள் தனியாகவும் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பதிவேட்டில் 3,247.900 கிராம் என குறிப்பிடப்பட்டு இருந்த நிலையில், 2020-2021 தணிக்கை அறிக்கை கடந்த ஆண்டு கேரள ஐகோர்ட்டில் சமர்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையில், 2,992.070 கிராம் தங்கம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதாவது 255 கிராம் தங்கம் (31½ பவுன்)மாயமாகி இருப்பது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக தேவஸ்தானம் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பதும் தணிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோவில் சன்னிதான முகப்பில் தங்க முலாம் பூசப்பட்ட துவார பாலகர் சிலை கவசங்கள் பதிக்கப்பட்டிருந்தது. இந்த கவசங்களை புதுப்பிக்கும் பெயரில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியே கொண்டு சென்ற போது சுமார் 100 பவுன் தங்கம் அபகரிக்கப்பட்டது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக திருவிதாங்கூர் தேவஸ்தான அதிகாரிகள், இடைத்தரகராக செயல்பட்ட உன்னி கிருஷ்ணன் போற்றி ஆகிய 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

***

சபரிமலையில் தங்கம் திருட்டு – தொழிலதிபர் உன்னி கிருஷ்ணன் கைது

சபரிமலை தங்கத் திருட்டு வழக்கில் தொழிலதிபர் உன்னி கிருஷ்ணன் கைது செய்யப்பட்டு உள்ளார்

பெங்களூரில் இருந்த அவரை சிறப்பு புலனாய்வு குழு படை கைது செய்து திருவனந்தபுரம் அழைத்து சென்றுள்ளது.

இந்த விவகாரம் குறித்து உயர் அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு அமைக்க கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த விவகாரம் கேரள அரசியலிலும் எதிரொலித்து வருகிறது. தங்கக் திருட்டு முலாம் பூசுவதற்காக எடுத்துச்சென்ற உன்னிகிருஷ்ணன் போற்றி என்ற தொழிலதிபர் முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்பட்ட நிலையில் சிறப்பு விசாரணை குழுவால் அதிகாலை 2.30 மணியளவில் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் 10 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது

***

தஞ்சசைப் பெரிய கோவில் பற்றி தமிழ் நாடு அரசு தவறான தகவல்

தஞ்சை பெரிய கோவில் கோபுர நிழல் கீழே விழாது; பள்ளிக்கல்வி விளம்பரத்தில் தவறு’

பள்ளிக்கல்வி துறை சார்பில், கலை திருவிழாவுக்காக வெளியிடப்பட்ட, ‘வேர்களைத் தேடி’ என்ற விளம்பரத்தில், தஞ்சாவூர் பெரிய கோவில் கோபுரத்தின் நிழல் கீழே விழாது’ என்ற, தவறான தகவல் இடம் பெற்றிருப்பது சர்ச்சையாகி உள்ளது.

தஞ்சாவூரில் மன்னர் ராஜராஜ சோழன் கட்டிய பெரிய கோவில் உலகப் புகழ் பெற்றது. ‘பெரிய கோவிலின் விமானம், 80 டன் எடையுள்ள, ஒரே கல்லால் ஆனது. அதன் நிழல் கோவிலுக்குள்ளேயே விழும்; அதுவே அதிசயம்.

தற்போது, பள்ளிக்கல்வி துறை சார்பில், ‘கலைத்திருவிழா’ நடத்துவதற்காக, விளம்பரம் தயாரிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளது.

அதில், ஒரு தாத்தாவும், பேத்தியும் பேசுவது போல உள்ள உரையாடலில், ‘நிழலே விழாத தஞ்சை பெரிய கோவில்’ என்ற வாசகம் வருகிறது. இது, பள்ளி மாணவர்களிடம் தவறான தகவலை பரப்புவதாக உள்ளது.உண்மையில், காலையில் மேற்கிலும், மாலையில் கிழக்கிலும் நிழல் விழுவதை, வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன், தன், ‘ராஜராஜேச்சரம்’ நுாலில் புகைப்படமாக ஆவணப்படுத்தி உள்ளார். இதையே, பலர் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர்.

எனவே, பள்ளிக்கல்வி துறை வெளியிட்டுள்ள, தவறான விளம்பரத்தை, சமூக வளைதளங்களில் இருந்து நீக்க வேண்டும் என, வரலாற்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

ஆய்வாளர்கள் கூறுகையில், ‘மூன்றாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நிழல் விழாது என்றும், பிளஸ் 1 பாடப்புத்தகத்தில் நிழல் விழும் என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முரணான தகவல்களையும் பள்ளிக்கல்வி துறை சரி செய்ய வேண்டும்,” என் றனர்.

****

பட்டாசு வெடிப்பதில் டில்லிக்கு ஒரு நீதி ! தமிழனுக்கு வேறு ஒரு நீதியா? தினமலர் கேள்வி

டில்லியில் பட்டாசு வெடிக்க 5 நாள் சுப்ரீம் கோர்ட் அனுமதி: தமிழகத்தில் மட்டும் காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரமா?

சென்னை: தீபாவளி முன்னிட்டு டில்லியில் 5 நாட்கள் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்குவதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டும் காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.

 குழந்தைகளின் மகிழ்ச்சியை கருத்தில் கொண்டு, மூன்று நாட்கள் காலை 3 மணி நேரம் மாலை 3 மணி நேரம் பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும்.

தீபாவளி அன்று பட்டாசு வெடித்து, புத்தாடை அணிந்து கொண்டாடுவது வழக்கம். தீபாவளி நாளில் காலை, 6:00 முதல் 7:00 மணி வரை, இரவு, 7:00 முதல் 8:00 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும்’ என, கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடும் பெற்றோர் மற்றும் குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்துவதாக உள்ளது.

தேவையற்ற கட்டுப்பாடுகளை திணிப்பது சரியல்ல. குழந்தைகளின் மகிழ்ச்சியை கருத்தில் கொண்டு, கூடுதல் நாட்களுக்கு தினமும் 3 மணி நேரமாவது பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என பெற்றோர் விரும்புகின்றனர்.

இதனால், பட்டாசு வெடிக்க தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள், இணையத்தில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.

*****

பஜனைப் பாடகர் தேர்தலில் போட்டிஇந்துக்கள் மகிழ்ச்சி!

இந்து சமயப்   பாடகியான மைதிலி தாகூரை பாரதீய ஜனதா கட்சி, பீஹார் மாநில தேர்தலில் வேட்பாளராக அறிவித்தது இந்து சமய சங்கீதப் பிரியர்களுக்கு பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி  இருக்கிறது

தென்னாட்டில் சூர்யா காயத்ரி, பக்தி இசையைப் பரப்பியது போல வட நாட்டில் பக்தி இசையைப் பரப்பி வருபவர் 25  வயதே நிரம்பிய மைதிலி தாகூர் ஆவார் . அவர் அலிநகர் தொகுதியிலிருந்து போட்டியிடுகிறார் ; இது இந்துக்களை மட்டுமின்றி இளம் வாக்காளர்களை இழுக்கும் தந்திரம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .

*****

இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.

உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த்  வாசித்த செய்தி மடல் இது.

அடுத்த ஒளிபரப்பு அக்டோபர் மாதம் 26 -ம் தேதி ஞாயிற்றுக்கிழமை லண்டன் நேரம் பகல் ஒரு  மணிக்கும்,

இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும் .

வணக்கம்.

—SUBHAM—-

Tags – World Hindu News, 19-10-2025, Gnanamayam, Broadcast, Vaishnavi Anand

GNANAMAYAM 19th October 2025 BROADCAST PROGRAMME

News

A-arivom 

Keezhadi

Gnanamayam Broadcast comes to you EVERY SUNDAY via Zoom, Facebook and You Tube at the same time .

London Time 1 PM (British Summer Time)

Indian Time 5-30 pm (evening)

Sydney, Australia time 11 pm (Night)

*****

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES via Zoom, Facebook and You Tube at the same time.

****

Prayer –

***

NEWS BULLETIN

VAISHNAVI ANAND from London presents World Hindu News in Tamil

****

MRS Brhannayaki Sathyanarayanan  from Bengaluru speaks on

DEVA PRAYAG TEMPLE

****

Talk by Prof. S Suryanarayanan

Topic – Interesting Anecdotes

***

SPECIAL EVENT-

Talk on Keezadi Excavations

Keezadi and South India

By

N Ganesh Raaja, Amateur Historian and Author

 ******

ஞானமயம் ஒலி/ ஒளி பரப்பு நிகழ்ச்சி நிரல் ஞாயிற்றுக்கிழமை 19 October 2025

நேரில் காணலாம்; கேட்கலாம் via Zoom, Facebook and You Tube at the same time .

***

இறைவணக்கம் —

***

உலக இந்துமத செய்தி மடல்-

லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த்

வழங்கும் செய்தி செய்தி மடல்.

***

ஆலயம் அறிவோம் —திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன்

சொற்பொழிவு– தலைப்பு  தேவப்பிரயாகை தலம்

****

சொற்பொழிவு –பேராசிரியர் எஸ் சூரியநாராயணன்

தலைப்பு- சுவையான சம்பவங்கள்

***

இன்றைய சிறப்பு நிகழ்ச்சி:

வரலாற்றுச் சொற்பொழிவு:

கீழடியும் தென் இந்தியாவும்

திரு என். கணேஷ் ராஜா

வரலாற்று ஆராய்ச்சியாளர், நூலாசிரியர்

—subham—

Tags-Gnanamayam Broadcast, 19-10- 2025, programme,

ஆலயம் அறிவோம்! தேவப்ரயாகை திருத்தலம் (Post No.15,105)

WRITTEN BY Brhannayaki Sathyanarayanan

Post No. 15,105

Date uploaded in London – 20 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

19-10-2025 அன்று ஒளிபரப்பான ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை!

ஞானமயம் நேயர்கள் அனைவருக்கும் நமஸ்காரம். வணக்கம்.

ஆலயம் அறிவோம்!

வழங்குவது ப்ரஹன்நாயகி சத்யநாராயணன்.

அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

மூன்றெழுத்ததனை மூன்றெழுத்து அதனால்

    மூன்று எழுத்தாக்கி,

மூன்றெழுத்தை ஏன்று கொண்டிருப்பார்க்கு இரக்க நன்குடைய

    எம் புருடோத்தமன் இருக்கை

மூன்றடி நிமிர்த்து மூன்றினில் தோன்றி

    மூன்றினில் மூன்று உருவானான்

கான்தடம் பொழில் சூழ் கங்கையின் கரை மேல்

      கண்டமென்னும் கடி நகரே 

            பெரியாழ்வார் திருவடி போற்றி

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்

பெறுவது உத்தராகண்ட் மாநிலத்தில் டெக்ரி கார்வால் மாவட்டத்தில் அமைந்துள்ள தேவப்ரயாகை என்னும் திருத்தலமாகும் ரிஷிகேசத்திலிருந்து 70 கிலோமீட்டர் தூரத்தில் இமயமலையில் 2723 அடி உயரத்தில் இது அமைந்துள்ளது.

108 வைணவ திவ்யதேச தலங்களில் ஒன்றாக அமையும் இது பல புராணச் சிறப்புகளைக் கொண்டதாகும்.

இமயமலையில் உற்பத்தியாகும் அலக்நந்தா நதியும் , பாகீரதி நதியும் இந்த தலத்தில் ஒன்றாகக் கூடி கங்கா நதி என்ற பெயரை அடைகிறது.

இந்தத் தலம் பஞ்ச பிரயாகைகளில் ஒன்றாகும்.

இங்குள்ள ரகுநாதர் கோவில் ஆதி சங்கரரால் அமைக்கப்பட்ட ஒன்று என்றும் கார்வால் அரசினரால் பின்னர் விரிவாக்கப்பட்டது என்றும் வரலாறு கூறுகிறது.

மூலவர் : நீலமேகப் பெருமாள். (புருஷோத்தமன்) கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார்.

தாயார் : புண்டரீகவல்லி

தீர்த்தம் : மங்கள தீர்த்தம், கங்கை நதி ப்ரயாகை

விமானம் : மங்கள விமானம்

காட்சி கண்டவர்கள் : பாரத்வாஜ முனிவர், பிரம்மா உள்ளிட்ட பலர்

கங்கையும் யமுனா நதியும் கூடுகின்ற இடமே ப்ரயாகை ஆகும். மிக ரகசியமான தீர்த்தம் இது. விதிப்படி இங்கு வந்து கர்மாக்களைச் செய்தால் முற்பிறவியில் எப்படி எங்கு இருந்தோம் என்ற ஞானத்தை இந்தத் தலம் நமக்குத் தரும் என்று கூர்ம புராணம் கூறுகிறது.

இந்த இடத்தில் விதிப்படி தூய்மையான மனதுடன் யாகம் செய்பவர்கள் மோக்ஷம் அடைவர் என்றும் இங்கு மரணம் அடைபவர்கள் மோக்ஷத்தை அடைகின்றனர் என்றும் ரிக் வேதம் கூறுகிறது.

தேவேந்திரன் ப்ரயாகையைப் பாதுகாக்கிறான். இங்குள்ள ஆலமரம் பிரளய காலத்திலும் அழியாது இருக்கும். இதன் இலையில் தான் பெருமாள் குழந்தையாக பள்ளி கொள்வார் என்று மாத்ஸ்ய புராணம் விவரிக்கிறது.

பெரியாழ்வார் திருமொழியில் வழங்கியுள்ள மங்களாசாஸனப் பாடலின் அர்த்தம் அற்புதமானது.

விஷ்ணு என்ற மூன்று எழுத்தினை, லக்ஷ்மி என்ற மூன்று எழுத்து அவர்கள் நித்ய வாசம் செய்யும் பரம் என்ற மூன்று எழுத்தைக் குறிக்கும்.

அதை அடைவதே தமக்கு உபாயம் என்ற மூன்று எழுத்தினால் அதுவே ஜீவாத்மாவின் கடன் என்று எண்ணி, முக்தி என்னும் மூன்று எழுத்தை ஏற்றுக் கொண்டிருப்பவர்களிடம் இரக்கம் கொண்டுள்ள புருஷோத்தமன்,

 வாமன அவதாரம் கொண்டு ஓரடியால் இவ்வுலகை அளத்து, பின்னர் இன்னும் ஒரு அடியால் விண்ணை அளந்து,, ஓரடியால் பாதாளம் நிமிர மூன்று அடியாக நிமிர்த்தி, இந்த மூன்று உலகிலும் தோன்றி, பரம வியூக, விபவம் ஆகிய மூன்றினில் நின்று, அமர்ந்து, கிடந்து என்று மூன்று உருவாக ஆகியுள்ளான்.

அவன் அழகான பொழில் சூழ்ந்த கங்கைக் கரை மேல் அமைந்துள்ள கண்டமென்னும் கடிநகரில் எழுந்தருளியுள்ளான்.

இதுவே இந்தப் பாடலின் அர்த்தம்.

திருக்கண்டம் கடிநகர் என்ற இந்த நகரில் பிரம்மா சிறந்த யாகத்தைத் துவங்கியதால் இது தேவப்ரயாகை என்ற பெயரைப் பெற்றது.

இங்கு கிழக்கே உள்ள பிரதிஷ்டானம் என்ற இடத்தில் தீர்த்தக் கிணறு அமைந்துள்ளது. வடக்கே வாசுகி இருக்க, ,மேற்கே காம்ப்ளாஸ் என்னும் இடத்தில் சர்ப்பங்கள் உள்ளன. தெற்கு திசையில் பஹூ  மூலம் என்ற பகுதி உள்ளது.

ராவணனை வதம் செய்த தோஷம் நீங்க இங்கு ராமர் தவம் செய்ததாக கூறப்படுகிறது.

பாண்டவர்கள் தங்களது சகோதரர்களான கௌரவர்களை யுத்தத்தில் கொன்றதனால் ஏற்பட்ட பாவத்தைப் போக்க இங்கு நீராடுமாறு மார்க்கண்டேயர் கூற அவர்களும் அவ்விதமே இங்கு வந்து நீராடி பாவத்தைப் போக்கிக் கொண்டனர்.

இங்கு யாகம் செய்ததால் பிரம்மாவின் படைக்கும் சக்தி அதிகமானது.

பரத்வாஜ மஹரிஷி இங்கு யாகம் செய்ததால் தான் சப்த ரிஷிகளுள் ஒருவராக ஆனார்.

சுவேதகேது என்னும் மன்னன் தானத்தில் சிறந்தவனாக இருந்தாலும் கூட அன்னதானம் மட்டும் செய்யவில்லை. அவன் இறந்த பின் மேலுலகம் சென்ற போது அவனை பசி வாட்ட அவனிடம் அகத்தியர், “ப்ரயாகையில் அன்ன தானம் செய்தால் உன் பசி நீங்கும்” என்று கூறினார். சுவேதகேது தன் புண்ணீய பலன்களைத் திரட்டி கணையாழியாக அகத்தியரிடம் தந்தான். அவர் தனது சீடர்களிடம் அதை விற்று அன்னதானம் செய்யப் பணித்தார். அவர்களும் அப்படியே செய்தனர். உடனே சுவேதகேதுவின் பசி நீங்கியது. அவன் மோக்ஷம் பெற்றான்.

இந்தத் தலத்தில் ஆஞ்சநேயர், கால பைரவர். மகாதேவர், பத்ரிநாதர் ஆகியோரின் சந்நிதிகளும் உள்ளன.

பிரம்மா, பரத்வாஜர், தசரதன் ஆகியோருடன் ஶ்ரீ ராமர் இங்கு தவம் இயற்றியுள்ளார்.

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் நீலமேகப் பெருமாளும் புண்டரீகவல்லித் தாயாரும்

அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.

**

மடகாஸ்கர் தீவு:  அபூர்வ மிருகங்களைக் கொண்ட உயிருள்ள மியூஸியம்! (Post.15,104)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,104

Date uploaded in London –   20 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

1-8-25 கல்கிஆன்லைன் இதழில் பிரசுரமாகியுள்ள கட்டுரை! 

உலகின் அதிசய இடங்கள்!

மடகாஸ்கர் தீவு:  அபூர்வ மிருகங்களைக் கொண்ட உயிருள்ள மியூஸியம்!

ச. நாகராஜன்

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,104

Date uploaded in London – –  20 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

இந்தியப் பெருங்கடலின் தென்மேற்கு மூலையில், மொஸாம்பிக் கடற்கரையிலிருந்து 800 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது மடகாஸ்கர் தீவு.

உலகில், கிரீன்லாந்து, போமியா, நியூ கினியா ஆகிய தீவுகளுக்குப் பிறகு நான்காவது பெரிய தீவாக அமைந்துள்ளது இது.

976 மைல் நீளமும் 355 மைல் அகலமும் கொண்ட இந்தத் தீவை போர்த்துக்கீசிய கடற்பகுதி ஆய்வாளரான டியோகோ டயஸ் பார்த்தார்; வியந்தார்! இதை உயிருள்ள மியூஸியம் என்று வர்ணித்தார்.

10000 அடி உயரமுள்ள மலைகளும் அழகிய மழைக்காடுகளும் இங்கு உள்ளன. இதன் தெற்குப் பக்கமோ இதற்கு நேர் எதிர்மாறாக அழகிய நிலப்பரப்புடன் காட்சி அளிக்கிறது.

அரை பாலைவனமாக உள்ள இந்தப் பகுதியை லேண்ட் ஆஃப் தர்ஸ்ட் (LAND OF THIRST) என்று பெயரிட்டுள்ளனர்.

 இங்கு ஜெரோபைட்ஸ் (XEROPHYTES) என்ற ஒரு அதிசய தாவர வகை இருக்கிறது. இதில் உள்ள பஞ்சு போன்ற கனமான பகுதிகள் தண்ணீரை நன்றாக உறிஞ்சி உள்ளே வைத்துக் கொள்கிறது. கடுமையான நீர்ப் பஞ்சம் ஏற்படும் போது இந்தத் தாவரம் நீரைக் கொடுத்து உதவுகிறது.

இந்த ஜெரோபைட்ஸ் காடுகள் டிடியீரியா (DIDIEREA)என்று அழைக்கப்படுகிறது. 33 அடி உயரமுள்ள தண்டு போன்ற ஒரு தாவர வகையில் சுற்றிலும் கூர்மையான முள்கள் உள்ளன. முள்களுக்கு இடையே உள்ள இலைகள் ஈரப்பதத்தை ஈர்த்து வைத்துக் கொள்கின்றன.

மடகாஸ்கரில் உள்ள 90 சதவிகித விலங்குகளும் தாவர வகைகளும் தனித்தன்மை வாய்ந்தவை. ஆறு கோடி வருடங்களுக்கு முன்னர் ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து உடைபட்டுத் தனித் தீவாக மடகாஸ்கர் ஆனது. ஆகவே இங்குள்ள விலங்குகளையும் சரி, தாவர வகைகளையும் சரி யாரும் கண்டுகொள்ளவில்லை; தொந்தரவும் செய்யவில்லை. 

2000 வருடங்களுக்கு முன்பாக எப்போது மனிதன் இங்கு காலடி எடுத்து வைத்தானோ அப்போது தான் நிலைமை தலைகீழாக மாறியது. 

பார்க்கவே அழகாக இருக்கும் குரங்குகளும் இங்கு மட்டுமே இருக்கும் சில தனித்தன்மை கொண்ட மிருகங்களும் சற்று பிரச்சினைக்குள்ளாயின.

46 வகையான மலகாசி பறவைகளும் பச்சோந்தி வகைகளும் 148 வகையான தவளை இனங்களும் இங்கு உள்ளன.

மனித நடமாட்டம் இவைகளுக்குப் பயத்தைத் தந்தது. உலகின் மிகப் பெரிய பறவையான எலிபண்ட் பேர்ட் (ELEPHANT BIRD) 10 அடி உயரமுள்ளது. அதன் எடை மட்டும் 45 கிலோ. இதன் முட்டையின் எடை 9 கிலோ. இதனால் வேகமாக ஓட முடியாது. சைவ உணவுப் பறவை இது. எவ்வளவு எண்ணிக்கையில் இது இங்கு இருந்ததோ யாருக்கும் தெரியாது. இப்போது ஒன்று கூட இல்லை.

இந்தோனேஷியாவிலிருந்தும் மலாசியாவிலிருந்தும் வந்து இங்கு குடியேறிய மக்கள் மரங்களை வெட்டித் தீர்த்தனர். விவசாயம் செய்ய ஆரம்பித்தனர்.

லெமுர் (LEMUR) வகையில் மிகச் சிறியதான ஐ-ஐ  (Aye-Aye) பதினேழரை அங்குல நீளம் கொண்டது. அதன் வாலோ 24 அங்குலம் இருக்கும். மரத்தில் ஒளிந்து கொண்டு வாழும் இதுவும் எண்ணிக்கையில் குறைந்து கொண்டே வருகிறது.இன்னும் சற்றுகாலத்தில் அருகி இருக்கவே இருக்காது!

1985 வாக்கில் மூன்றுலட்சத்து எழுபத்தைந்தாயிரம் ஏக்கர் நிலம் அழிக்கப்பட்டது. இதே போக்கு நீடித்தால் இன்னும் சிறிது காலத்தில் மடகாஸ்கரில் மழைக்காடுகளே இருக்காது என்று சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.

இயற்கை தந்துள்ள ஒரே உயிருள்ள மியூஸியம் நிலைத்து நிற்குமா? காலம் தான் பதில் சொல்லும்!

***

Rare Darshan of Golden Annapurani in Kasi Temple

Maa Annapurna idol adorned in gold at Kashi Vishwanath Temple complex

Story by HT Correspondent, VARANASI

 • 6h • 

The Silver coated idol of Goddess Maa Annapurna, housed in a temple located in Ishana Kona (the north-east corner ) of the Shri Kashi Vishwanath Temple premises, has been coated with gold, the temple administration said in a statement on Saturday.

A new chapter in the splendour and grandeur of the ancient idol began in 2025, when silver plated stone idol and the temple it resides in were adorned with gold from top to base, according to the Shri Kashi Vishwanath Temple administration.

The distribution of a symbolic “treasure trove” (Kazana)  to devotees from the treasury of the Maa Annapurna Temple began on Dhanteras (October 18) and will continue until October 22, the day of Annakut. The prasad, given as part of this tradition, consists of a coin and puffed rice, and holds special significance for devotees who visit the temple and seek the blessings of the Goddess.

The original idol of Goddess Maa Annanpurna was reinstalled in the Ishan Kon of the Kashi Vishwanath Temple in 2021, following traditional rituals. The chief minister of Uttar Pradesh, Yogi Adityanath, presided over the reinstallation ceremony. Alongside the original golden idol of Maa Annapurna, a silver-plated stone idol was also installed in the temple. This Silver plated idol of Maa Annapurna has now been coated with gold.

The original idol was stolen during the colonial period by idol smugglers and remained preserved in a museum in Canada for approximately 108 years. Its identity was confirmed through the joint efforts of Indian and Canadian universities. Following diplomatic and cultural efforts spearheaded by Prime Minister Narendra Modi, the idol was repatriated to India in November 2021 and reinstated in the temple.

–subham—

Tags- Kasi, Varanasi, Golden , Annapurani, Diwali Darshan,Annakut, Kazana

Bhagavad Gita Quote and Egyptian God in Akananuru! (Post No.15,103)- Part 25

Ancient Tamil Encyclopaedia- Part 25; One Thousand Interesting Facts! -Part 25

Written by London Swaminathan

Post No. 15,103

Date uploaded in London –  19 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 Akananuru wonders continue………………….

In Akanaauuru verse 101 Maamuular (MM) gives four interesting details.

1.Bhagavad Gita Quotation from BG 6-40

2.Egyptian God Ra’s Boat Journey

3.Tahr of Nilgris

4. Anthill soil as medicine

***

148

“for never does anyone who does good tread the path of woe”

The lady of the poem quotes an old Tamil proverb:

These words are said by the lady of the house, and she wonders whether this old proverb will go wrong.

That proverb is in Bhagavad Gita. So MM must have studied thoroughly.

நன்றுசெய் மருங்கில் தீதுஇல் என்னும்

தொன்றுபடு பழமொழி இன்றுபொய்த் தன்றுகொல்?-

श्रीभगवानुवाच |
पार्थ नैवेह नामुत्र विनाशस्तस्य विद्यते |
 हि कल्याणकृत्कश्चिद्दुर्गतिं तात गच्छति || 6-40||

O Partha, there is certainly no ruin for him here or hereafter. For no one engaged in good meets with a deplorable end, my friend!

Another translation

The Supreme Lord said: O Partha, one who engages on the spiritual path does not meet with destruction either in this world or the world to come. My dear friend, for never does anyone who does good tread the path of woe. 6-40

***

149

Egyptian Barque

No Sangam Tamil poet except MM described Sun as a boat in the Sky. This is an Egyptian description. The supreme God in Egypt was Ra, the Sun God. He travels on a boat in the sky!

SUN BOAT IN THE SKY

வானத்தில் படகில் சூரியன்

அகநானூறு பாடல்: 101

அம்ம வாழி, தோழி! இம்மை

நன்றுசெய் மருங்கில் தீதுஇல் என்னும்

தொன்றுபடு பழமொழி இன்றுபொய்த் தன்றுகொல்?-

தகர்மருப்பு ஏய்ப்பச் சுற்றுபு சுரிந்த

சுவல்மாய் பித்தைச் செங்கண் மழவர்

வாய்ப்பகை கடியும் மண்ணொடு கடுந்திறல்

தீப்படு சிறுகோல் வில்லொடு பற்றி,

நுரைதெரி மத்தம் கொளீஇ, நிரைப் புறத்து,

அடிபுதை தொடுதோல் பறைய ஏகிக்,

கடிபுலம் கவர்ந்த கன்றுடைக் கொள்ளையர்,

இனம்தலை பெயர்க்கும் நனந்தலைப் பெருங்காட்டு,

அகல் இரு விசும்பிற்கு ஓடம் போலப்,

பகலிடை நின்ற பல்கதிர் ஞாயிற்று

உருப்பு அவிர்பு ஊரிய சுழன்றுவரு கோடைப்

புன்கான் முருங்கை ஊழ்கழி பன்மலர்,

தண்கார் ஆலியின், தாவன உதிரும்,

பனிபடு பன்மலை இறந்தோர்க்கு,

முனிதகு பண்புயாம் செய்தன்றோ இலமே!

****

அகல் இரு விசும்பிற்கு ஓடம் போல

பகலிடை நின்ற பல்கதிர் ஞாயிற்று

Sun that us travelling in the sky like a boat iscorching ,says MM

150

The Tamil roobers in the desrt are called Mazavars. MM says that their hair locj is like the horn of a sheep. And they stuff their mouth with sail from the ant hill. In places like Sankarankoil in Tamil Nadu the soil from the anthill is sued as medicine. Anthills are called Snakehills in Tamil.

MM in most of his verses  sing about Mazavars staling cows from enemies and sharing them with their companions. Recovering cows is found in many hymns of the Rig Veda as well. It is used a s a symbol to convey many messages.

Rig Veda calls Sun as a boat or ship in the sky.

Moreover Egyptian name Ra is like Sanskrit rayi. English (sun) RAY is also derived from Sanskrit

xxxx

RV.1-46-7:- Hymns are sea; Come and lead and  take us like a ship. This addressed to Asvini Devas.

Here is description of Sun God Ra in the Book of Death in Egypt; Hindus say that Raku/Ketu devour sun like snakes (Eclipses)

Ra’s Daily Journey Across the Sky: Battles and Blessings

As Ra rises, he shines brightly across the sky, accompanied by the Ennead (group of nine gods). When he emerges from the sacred place, the eastern horizon trembles at the sound of Nut’s voice, sanctifying Ra’s paths. He moves in his sacred boat, enjoying the north wind while continuing his daily cycle. The great deities tremble at his voice as he commands the cosmos.

***

Nilgris TAHR

Thakar in the above verse is sheep. In Nilgris the mountain goats are called Tahr.  During Sangam days all sheep and goats must have been called Tahr.

-to b continued…………………….

Tags- Tahr, Ra, Sun God, Egypt, Bhagavad Gita Quote , Egyptian God Ra, in Akananuru, Ancient Tamil Encyclopaedia- Part 25; One Thousand Interesting Facts! -Part 25

நான் முதலில் பாரத நாட்டின் பிரஜை, அதற்கு பிறகு தான் துறவி’:

‘நான் முதலில் பாரத நாட்டின் பிரஜை, அதற்கு பிறகு தான் துறவி’: தேசபக்தியை முன்னிறுத்திய அபிநவ வித்யாதீர்த்தர்

 நமது சிறப்பு நிருபர் DINAMALAR 

: அக் 19, 2025 01:08 AM

நம் தாய் திருநாட்டில், எண்ணற்ற துறவியரும் மனதால் உயர்ந்த மகான்களும் வாழ்ந்து, வழிவழியாக நாம் தர்மத்தை கடைப்பிடிக்க காரணமாக இருந்தனர். அப்படிப்பட்ட துறவியரில் மிகவும் முக்கியமானவர் ஜகத்குரு ஸ்ரீ ஆதிசங்கரர். என்றென்றும் மக்களுக்கு வழிகாட்டுவதற்காக அவர் நான்கு பீடங்களை உருவாக்கினார். அவற்றில், தென் பாரத மக்களுக்காக, சிருங்கேரி சாரதா பீடத்தை தோற்றுவித்தார். சாரதா பீடத்தின் 35வது பீடாதிபதியாக, 1954 முதல் 1989 வரை அருள்பாலித்தவர், ஜகத்குரு ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள். தீபாவளி திருநாளன்று பிறந்த அவருடைய 108வது ஜெயந்தி விழா, நாளை சிருங்கேரியில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த பொன்னான தருணத்தில், தேசபக்தியின் உன்னதமான உதாரணமான அவரைப்பற்றி தெரிந்து கொள்வோம்.

ஜீவன் முக்தி கடந்த 1917ல் பெங்களூரில், வெங்கடலக்ஷ்மி அம்மாள் – -ராமா ஷாஸ்திரி தம்பதிக்கு பிறந்தவர் ஸ்ரீநிவாசன். அவருக்கு, சிருங்கேரியில் உப நயனம் செய்து வைக்கப்பட்டது.

தொடர்ந்து, அங்கேயே தங்கி படிக்க விருப்பம் தெரிவித்த ஸ்ரீநிவாசனின் கோரிக்கையை, அப்போது பீடாதிபதியாக அருள்பாலித்த ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதி மஹாசுவாமிகள் ஏற்றுக்கொண்டார்.

பாடங்களில் நன்கு தேர்ச்சி பெற்ற ஸ்ரீநிவாசன், தன் 13 வயதிலேயே, சிருங்கேரி புண்ய தலத்தில், துறவறம் ஏற்றார்.

துறவறம் பெற்ற உடனேயே, யோகம் பயில ஆரம்பித்த அவர், அஷ்டாங்க யோகத்தின்படி நிலைகளை வேகமாக கடந்து, அதன் உச்ச நிலையான நிர்விகல்ப ஸமாதியில் நிலைத்து, தமது 18 வயதுக்கு முன்னரே ஜீவன் முக்தரானார்.

பின்னர், தமது குருவின் வழிக்காட்டுதல்படி மீமாம்சம், தர்க்கம், வேதாந்தம் உள்ளிட்ட சாஸ்திரங்களை கற்று பாண்டித்தியம் அடைந்தார்.

தர்ம பிரசாரம் சுதந்திர போராட்டம் வலுப்பெற்றுக் கொண்டிருந்த அதே வேளையில், ஆங்கிலேயரின் கொடுங்கோல் ஆட்சியில் நம் நாட்டின் கலாசாரத்தை அடியோடு அழிப்பதற்காக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன் பொருட்டு, கல்வித் துறையில் பல மாற்றங்களை ஏற்படுத்தி, மக்களுக்கு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தினர். குறிப்பாக, ஸமஸ்கிருதத்தின் முக்கியத்துவத்தை குறைப்பதற்காகவும், அம்மொழியை மக்கள் கைவிடுவதற்காகவும் பல முயற்சிகளை மேற்கொண்டனர்.

அதன் விளைவாக, தர்ம ரீதியாகவும் பெறும் வீழ்ச்சி ஏற்பட்டது. ஆங்கிலேயரால் சுரண்டி துாக்கியெறிந்த வெற்று பாத்திரமாக நம் தாய் நாடு மாறியிருந்தது. சுதந்திரத்திற்கு பின், 1954ல் சிருங்கேரி சாரதா பீடத்தின் 35வது பீடாதிபதியாக ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள் பொறுப்பேற்றார்.

அப்போது, கலாசார ரீதியாகவும் தர்ம ரீதியாகவும் சுரண்டப்பட்டு இருந்த தாய் நாட்டில் மீண்டும் தர்மத்தை நிலைநிறுத்த ஸங்கல்பம் செய்து, அதற்கான பணிகளில் ஈடுபட்டனர்.

ஆதிசங்கரர் போலவே பாரதம் முழுதும் மூன்று முறை யாத்திரை மேற்கொண்டு, மக்களிடையே தர்ம பிரசாரம் செய்தார். தமது முதல் விஜய யாத்திரையை, தென் மாநிலங்களில், தொடர்ந்து ஆறு ஆண்டுகள் மேற்கொண்டார்.

அயராது, தன் நலம் கருதாது கிராமம் கிராமமாக சென்று தர்ம பிரசாரம் செய்த தோடு, நலிந்த வேத பாடசாலைகளை மீட்டெடுத்து, புதிய பாடசாலைகளையும் உருவாக்கினார்.

அவரது காலத்தில், சரியான போக்குவரத்து வசதி இல்லாததால், சிருங்கேரியை அணுகுவது மிகவும் கடினமாக இருந்தது. பாரதம் முழுதும் விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய அளவில் சில கிளை மடங்கள் மட்டுமே இருந்தன. அதனால், பாரதமெங்கும் மக்கள் பயன்பெறும் வகையில், பல புதிய கிளை மடங்களை உருவாக்கினார்.

குறிப்பாக, சென்னையில் மட்டுமே நான்கு கிளை மடங்களும்; கோயம்புத்துார், மதுரை, திருநெல்வேலி, துாத்துக்குடி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஆலயத் தோடு கூடிய கிளை மடங்களும் ஏற்படுத்தினார். இவை, தர்மம் மற்றும் பாரதத்தின் பண்பாட்டை நிலைநிறுத்த இன்றும் பணியாற்றி வருகின்றன.

தமது முதல் விஜய யாத்திரை முடிந்த இரண்டு ஆண்டுகளிலேயே, இரண்டாவது விஜய யாத்திரையை மேற்கொண்டார். வட மாநிலம், தென் மாநிலம் என, முழு பாரதத்திலும் நான்கு ஆண்டுகள் தொடர்ந்து தர்ம பிரசாரம் செய்தார்.

அந்த யாத்திரையின் போது, 1967ல், அண்டை நாடான நேபாள மன்னரின் அழைப்பின் பேரில் அந்நாட்டில் தங்கி தர்ம பிரசாரம் செய்தார்.

ஜகத்குரு ஆதிசங்கரருக்கு பின், நேபாளத்தில் தர்ம பிரசாரம் செய்த முதல் ஆம்னாய பீடாதிபதி ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸமஸ்கிருத மொழியை மீண்டும் செழிக்கச் செய்ய, ‘சுரசரஸ்வதி சபா’ என்ற அமைப்பை நிறுவினார். அதில், அனைவரும் படிக்க ஏதுவாக, அஞ்சல் வழியில் சமஸ்கிருத கல்வி திட்டம் அறிமுகமானது. இன்றைய அஞ்சல்வழி கல்விக்கு அது முன்னோடி!

தர்ம கல்விக்காக, ‘சங்கர கிருபா’ என்ற மாத இதழை ஆரம்பித்தார். இந்த இதழ், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளிவருகிறது. பின்னர், ‘தத்வாலோகா’ என்ற ஆங்கில இதழையும் துவக்கினார்.

தர்ம பிரசாரத்திற்கு இவ்வாறு பாடுபட்ட ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள், ஆதிசங்கரர் நிறுவிய பீடங்களை வலுப்படுத்தவும் பணியாற்றினார்.

ஆதிசங்கரருக்கு பின், அவர் உருவாக்கிய நான்கு பீடங்களின் பீடாதிபதிகள், முதல் முறையாக சந்திக்கும், ‘சதுராம்னாய சம்மேளனம்’ என்ற நிகழ்வை ஏற்பாடு செய்தார்.

தேசிய ஒருமைப்பாடு, பண்பாடு மற்றும் நம் கலாசாரத்தை தக்கவைக்கும் நோக்கத்தில் நடைபெற்ற இந்த வைபவம் சிங்கேரியில் ஸ்ரீ சங்கர ஜெயந்தி புண்ணிய தினத்தில், 1979 மே மாதம், முதல் நாளில் நடைபெற்றது.

இந்த மாநாட்டை காண பாரதத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்களும், முக்கிய பிரமுகர்களும் கூடியிருந்தனர்.

தேசபக்தர் தேசப்பணியே தெய்வீக பணி என கருதி, வாழ்ந்து காட்டியவர் ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள். ‘யாராவது உன்னிடம், நீ யார் என்று கேட்டால், முதலில் நான் ஒரு இந்தியன் என்ற நினைவுதான் வர வேண்டும், பின்னரே மற்ற விஷயங்கள் நினைவிற்கு வர வேண்டும்’ என்று எப்போதும் அறிவுறுத்துவார்.

அப்படியே நடந்தும் கொள்வார் என்பதற்கு, ஜாகீர் ஒழிப்பு சட்டம் ஓர் நல்ல எடுத்துக்காட்டு.

சிருங்கேரி அமைந்துள்ள கர் நாடகா மாநிலத்தில், இங்கிருந்த ஜமீன்தார் முறையை போல் ஜாகீர் முறை இருந்து வந்தது. அதை ஒழிப்பதற்காக, கர்நாடகா நில சீர்திருத்த சட்டம் 1961ல் கொண்டு வரப்பட்டது.

அதன்படி, மடங்கள் மற்றும் கோவில்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஜாகீர் நிலங்களை பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டது. இதற்கு, மாநிலம் எங்கும் எதிர்ப்பு நிலவியது. பலர், நிலங்களை அரசிடம் ஒப்படைக்க மறுத்தனர்.

ஜகத்குருவிடம் இது சம்பந்தமாக பேசி, மடத்தின் கட்டுப்பாட்டில் இருந்த நிலங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வைக்க வேண்டும் என்பதற்காக, அப்போதைய வருவாய் துறை அமைச்சர் கடிலால் மஞ்சப்பா, சிருங்கேரிக்கு வந்தார்.

ஜகத்குருவிடம் தயங்கி தயங்கி பேச்சை ஆரம்பித்தார். அப்போது, ஜகத்குரு, ‘நாம் அனைவரும் அரசிற்கு கட்டுப்பட்டவர்கள். நான் முதலில் பாரத நாட்டின் பிரஜை, அதற்கு பிறகுதான் துறவி மற்றும் பீடாதிபதி என்று எடுத்துரைத்து, நிலத்தை வைத்துக்கொண்டு நான் நாலு பேருக்கு நல்லது செய்வேன். அரசும் அதையேதான் செய்யப் போகிறது.

‘நல்லதை யார் செய்தால் என்ன? அதனால் நிலத்தை தர நான் தயாராக இருக்கிறேன். எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று தெரிவித்தார்.

கடும் எதிர்ப்பை எதிர்பார்த்த அமைச்சர் மஞ்சப்பாவிற்கு, ஜகத்குருவின் பதில் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பின்னாளில், கர்நாடக முதல்வராக மஞ்சப்பா சிலகாலம் பொறுப்பில் இருந்தார்.

ஒருமுறை ஜகத்குருவை தரிசித்த அனுபவத்தால் ஈர்க்கப்பட்ட மஞ்சப்பா, பதவியில் இருக்கும் போதும், அதற்கு பிறகும் ஜகத்குருவை நாடி வருவார்.

இதைப்போல பல ஜனாதிபதிகள், பிரதமர்கள் உள்ளிட்ட ஆட்சியாளர்கள் ஜகத்குருவின் வழிகாட்டுதலை பெற்று பயனடைந்தனர்.

மைசூரு ராஜ்யத்தின் மன்னராக இருந்த ஜெய சாமராஜ உடையார், பின்னாளில் தமிழகத்தின் கவர்னராகவும் இருந்தார். அவர், ஜகத்குருவிற்கு கடிதங்கள் வாயிலாக தமிழகத்தின் அரசியல் சூழல் பற்றி தெரிவித்து, வழிகாட்டுதல் கோரினார்.

இன்றும் அந்த கடிதங்கள், சிருங்கேரியில் ஆவணப்படுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதேப்போல் பல தேச தலைவர்களும், ஜகத்குருவின் வழிகாட்டுதலைப் பெற்று வந்தனர்.

இப்படி தன் தவத்தாலும், ஞானத்தாலும், பாண்டித்தியத்தாலும் சிறந்து அருள்பாலித்த ஜகத்குரு ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகளை, நாளை அவருடைய ஜெயந்தி நாளன்று நினைவுகூர்ந்து, அவர் வாழ்வில் இருந்து பயன்பெற, அவரைப் பற்றி மேலும் படித்து அறிந்து கொள்வோம்.

ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகளை பற்றிய புத்தகங்களை, சென்னை ஸ்ரீ வித்யாதீர்த்தா பவுண்டேஷன் வெளியிட்டுள்ளது.

– இரா.கிருஷ்ணன் –

—subham—

Tags- Dinamalar, Sringeri  Acharya, Sri Abinava Teertha Bharati Swamigal

Sri Lankan woman’s Tirukkural Calendar in Year 1915

Sri Lankan woman’s Tirukkural Calendar in Year 1915

-subham-

tags-  Sri Lankan woman’s, Tirukkural Calendar , Year 1915

காசியில் தங்க அன்னபூரணியின் அற்புத தரிசனம்! (Post No.15,102)

Written by London Swaminathan

Post No. 15,102

Date uploaded in London –  19 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

காசியில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின்போது தங்கத்தினால் ஆன அன்னபூரணி  விக்கிரகத்தை தரிசனம் செய்யலாம். ஐந்து நாட்களுக்கு மட்டுமே இந்த தரிசனம் கிடைக்கும். ஏனைய நாட்களில் கிட்டத்தட்ட ஆண்டு முழுதும் பாதுகாப்பு கருதி அன்னபூரணி கோவில் பூட்டிவைக்கப்படுகிறது .

தங்கத்தினாலான அன்ப்பூரணிக்கு அருகில் பூமிதேவி, லட்சுமி தங்க விக்கிரகங்களும் வெள்ளியினால் ஆன சிவன் விக்கிரகமும் உள்ளன

அதிகாலை ஐந்து மணிக்குத் திறக்கப்படும் இந்தக் கோவில் ஐந்து நாட்களுக்கு இரவு பத்து மணி வரை திறந்திருக்கும் அன்னபூரணி  என்பவள் மக்கள் எல்லோருக்கும் உணவினை வாரி வழங்குபவள்.  சிவனே ஒரு முறை அன்னபூரணியிடம் உணவுக்காக பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்ததாக ஸ்தல புராணம் கூறுகிறது காசியில் வரும் எவரும் பட்டினியாக இருக்கக்கூடாது என்பது அன்னபூரணியின் பிரதிக்ஞை இப்போதும் தினமும் அன்னதான ட்ரஸ்ட் சார்பில் அன்னதானம் வழங்ககப்படுகிறது.

தீபாவளியின் முதல் நாள் அன்று கோவிலில் உள்ள மஹந்த் என்னும் அர்ச்சககர் எல்லோருக்கும் கோவிலில் ஏற்கனவே சேகரிக்கப்பட்ட காசுகளை வழங்குகிறார் இது கஜானா எனப்படும் காசுடன் பொரியும் கொடுக்கப்படுகிறது.

ஐந்தாவது நாளில் அன்னக்கூட வைபவமும் நடக்கிறது அன்று உணவுக்குவியலை உண்டாக்குவார்கள் .இனிப்புகளும் தின்பண்டங்களும் மலை  போல குவிந்து  இருக்கும்

மிகவும் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலுக்குப் பின்னால் இந்தக் கோவில் அமைந்துள்ளது. முதல் மாடியில் உள்ள அன்னபூரணி விக்ரகத்தைக் காண தற்காலிக படிகள் அமைக்கப்பட்டுள்ளன .

சுவர்ண  அன்னபூரணி தாமரையில் அமர்ந்து இருக்கிறாள் ; சிவன் பிச்சைப்பாத்திரத்துடன் வெள்ளி விக்கிரகமாக நிற்கிறார் அன்னபூரணியின் இருபுறமும் ஸ்ரீதேவி (லெட்சுமி), பூதேவியும் நிற்கின்றனர்.

காசியில் திவோதாசன் என்ற மன்னன் ஆண்ட காலத்தில் பஞ்சம் ஏற்பட்டதாகவும் அப்போது தனஞ்செயன் என்பவன் செய்த தவத்துக்கு மெச்சி அன்னை தங்க வடிவில் தோன்றியதாகவும் நம்பப்படுகிறது. அவரங்க சீப் இடித்த கோவிலை சுமார் 200  ஆண்டுகளுக்கு முன்னர் மீண்டும் கட்டியபோது கூட அன்னபூரணி கோவில் அப்படியே இருந்தது.

4 ஆண்டுகளுக்கு முன்னர்தான் காசி விஸ்வநாதர் கோவிலின் ஈசான மூலையில் — வடகிழக்கில் — மூல விக்ரகம் மீண்டும் நிறுவப்பட்டது. உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இதற்கு ஏற்பாடு செய்தார். மூல விக்ரகம் திருடப்பட்டு கனடாவில் ஒரு மியூஸியத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 108 ஆண்டுகளுக்கு கனடாவில் இருந்த தங்க விக்கிரகத்தை பிரதமர் நரேந்திர மோடியின் அரசு மீண்டும் இந்தியாவுக்கு கொண்டுவந்தது 2021- ஆம் ஆண்டில் தான்.

மூல தங்க விக்கிரகத்துக்குப் பக்கத்தில் கல்லில் வெள்ளி முலாம் பூசப்பட்ட அன்னபூரணியும் இருக்கிறாள் அதன் மீதும் பின்னர் தங்க முலாம் பூசப்பட்டது.

கோவிலைச் சுற்றி பலத்த போலீஸ் காவலுடன் சி சி டி  வி காமெராக்களும் நிறுவப்பட்டுள்ளன

தந்தேரா என்னும் தீபாவளி முதல் நாள் தன்வந்திரி  வழிபாட்டுக்கும் தன லெட்சுமி வழிபாட்டுக்கும் உரியது

ஆயிரக் கணக்கான மக்கள் தங்க விக்கிரககங்களைத் தரிசிக்க வந்த வண்ணம் உள்ளனர் . பல அமைப்புகள்  இலவசமாக உணவினையும் வழங்கி வருகின்றனர் .

வருடம் முழுதும் இந்த தங்க விக்கிரகங்கள் ரிசர்வ் பாங்கு பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்படுகின்றன இவற்றின் எடை, விலை மதிப்பு ஆகியன ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது . 

–subham—

Tags காசி, தங்க அன்னபூரணி, தரிசனம் ,

கஷ்டமான தருணங்களைக் கடக்க வைக்கும் ஜப்பானியப் பண்பாடு கமான்! (GAMAN) Post .15,101

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,101

Date uploaded in London –   19 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 28-7-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை! 

MOTIVATION 

கஷ்டமான தருணங்களைக் கடக்க வைக்கும் ஜப்பானியப் பண்பாடு கமான்!(GAMAN)

ச. நாகராஜன்

அன்றாட வாழ்க்கையே உலகமெங்கும் வேகமான வாழ்க்கையாக மாறி வருகிறது. போட்டி மிகுந்த வாழ்க்கையில் டென்ஷன், டென்ஷன் டென்ஷன் தான்!

, நிதானத்தை இழக்க வைக்கும் தருணங்கள் எத்தனை, எத்தனை!

இதைப் போக்க உதவும் ஒரு ஜப்பானியப் பண்பாடு தான் கமான் ! (GAMAN)

 இதை ஜப்பானில் உள்ள ஒவ்வொரு இல்லத்திலும் குழந்தை முதலே அனைவருக்கும் கற்பிக்கின்றனர்.

கமான் என்ற வார்த்தையை மொழிபெயர்ப்பது சற்று கஷ்டம் தான்! இதற்கு பொறுமை, விடாமுயற்சி, நிதானத்தை இழக்காமல் கட்டுப்பாடுடன் இருத்தல் ஆகிய அனைத்தையும் அர்த்தமாகச் சொல்லலாம்.

 கஷ்டமான தருணங்களில் யார் மீதாவது பழியைப் போடாதே. புகார் செய்யாதே என்பது ஜப்பானியர் ஒவ்வொருவரின் அடித்தளமான பண்பாடாக ஆகி இருப்பதன் காரணம் – கமான் தான்!

 உள்ளார்ந்த வலிமை,  ஏமாற்றம், மனச்சோர்வு ஆகியவற்றை உதறித் தள்ள வைக்கும் குணமே கமான்!

 சவாலான சந்தர்ப்பங்களில் தன் நிலையை இழக்காமல் புன்னகையோடு அதை எதிர் கொள்வது தான் கமான்!

 எடுத்துக்காட்டாக ஒன்றைச் சொல்லலாம்.

ஜப்பானிய தலை நகரமான டோக்கியோவில் இரண்டு கோடி பேர்கள் அன்றாடம் அங்குமிங்கும் செல்ல வேண்டி இருக்கிறது. இவர்கள் தங்கள் போக்குவரத்திற்கு நம்புவது புகைவண்டிகளைத் தான்!

ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் நெருக்கமாக இருந்து புகைவண்டி வந்தவுடன் இறங்குபவர்களுக்கு வழிவிட்டு கதவு மூடுவதற்குள் ஒருவரை ஒருவர் இடித்துத் தள்ளாமல் உள்ளே ஏற வேண்டும். உள்ளே கம்பார்ட்மெண்டில் நகர்வது கூட முடியாது. அப்படி ஒரு கூட்டம் இருக்கும்.ஆனால் ஒரு சண்டையைக் கூட இங்கு பார்க்க முடியாது.

 இது புகைவண்டிகளில் மட்டுமல்ல; எங்கெல்லாம் பிரம்மாண்டமான கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்படுகிறதோ அங்கெல்லாம் கமான் தான் அனைவருக்கும் உதவும்.

 ஃபுகுஷிமாவில் ஒரு பூகம்பம் ஏற்பட்டது. தொடர்ந்து வந்தது சுனாமி.

2011ம் ஆண்டு மார்ச் மாதம் 11ம் தேதி டோஹோகு என்ற நகர்ப் பகுதியில் ஏற்பட்ட இந்த கோரமான பூகம்பத்தை ஜப்பான் கமான் என்ற குணத்தைக் காண்பித்து சமாளித்தது.

 டோக்கியோ சோபியா பல்கலைக்கழகத்தில் மாந்தர் பண்பாட்டியல் பேராசிரியராக இருக்கும் டேவி ஸ்லேடர் (David Slater, professor of anthropology and director of the Institute of Comparative Culture at Tokyo’s Sophia University) கமானைப் பற்றிக் கூறுகையில் ‘நம்முடைய கட்டுப்பாட்டையும் மீறி நடக்கும் செயல்களை எதிர்கொள்ளும் உத்தியே கமான்’ என்கிறார்.

 ஒவ்வொருவரும் தனக்குள்ளேயே வளர்த்துக் கொள்ளும் இந்தப் பண்பாடு எந்த மோசமான சூழ்நிலையிலும் கோபம் கொள்ளாமல், அடுத்தவர் மீது புகார் சொல்லாமல், நிதானத்துடன் அதை எதிர் கொள்ள வைக்கும்.

இரண்டாவது உலக மகாயுத்தத்தில் ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் அணுகுண்டு போடப்பட்டு பொருளாதாரத்தின் அடிநிலையை எட்டிய ஜப்பானை மேலே வரவைத்தது அனைத்து ஜப்பானியரும் தங்கள் கமானைக் காண்பித்தது தான்!

.இந்தப் பண்பாட்டைத் தான் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குச் சொல்லித் தருகிறார்கள். குறிப்பாகப் பெண்களுக்கு இன்னும் அதிகமாகச் சொல்லித் தருகிறார்கள்! எமோஷனல் ரெகுலேஷன் எனப்படும் இந்த உணர்ச்சிக் கட்டுப்பாடு நீண்ட கால மனக்கட்டுப்பாட்டைத் தருகிறது. வாழ்க்கையில் வெற்றியைத் தருகிறது.

கமான் சுரு – இது ஜப்பானியரின் வேத மொழி. ‘நான் பொறுத்துக் கொள்வேன்’ என்பது தான் இதன் அர்த்தம்.

பிபிசி இதைப் பற்றி பெரிய நிகழ்ச்சியையே நடத்தி விட்டது.

ஜப்பானுக்கு வரும் வெளிநாட்டுக்காரர்கள் வியப்பதெல்லாம் இந்த கமான் பண்பாட்டைப் பற்றித் தான்!

உலகப் போரில் அடிபட்ட ஜப்பான் தொழில் முன்னேற்றத்தில் உலகின் வழிகாட்டியாக ஆனது அதன் சிறப்பான இந்தப் பண்பாட்டினால் தான்.

 ஆக, உணர்வூக்கம் பெற விரும்பும் அனைவரும் உடனடியாகப் பழகி அபிவிருத்தி செய்து கொள்ள வேண்டிய ஒரு பண்பாடு – கமான்!

 கமான் சுரு!

***