We are all Tourists and God is our Travel Agent (Post No.10,897)

Compiled BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 10,897

Date uploaded in London – –   27 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

Days are too busy,

Hours are too fast,

Seconds are too few,

But there is always time for

Me to remember nice friends

Like you!!!

Xxx

Every day is a miracle

Every moment is a grace

Every heart beat is a blessing

Every breath is from the Lord

May the Lord bless us always!!!

Xxxx

Expecting & trusting is never wrong.

The only thing is you should know from

whom to expect and whom to trust.

xxxx

We are all tourists and God is our travel agent,

Who already fixed all our routes, reservations

And destinations.

So trust HIM and enjoy the trip called LIFE!!!

By TATA

We are here to heal and not to hurt,

To love and not to hate,

To create and not to destroy.

Xxxx

Who killed Who?

Watsup killed SMS,

E mail killed FAX,

You tube killed DVD

Uber killed YELLOW CAB,

Google killed DICTIONARY,

Social media killed MSM,

Net flix killed cable CHANNELS,

Wikipedea killed ENCYCLOPEDIA,

RAHUL KILLED STANDUP COMEDIANS!!!

xxx

Nobody else can create a miracle for you,

but your trust is the source of all miracles!!!

Happiness is not measured by the money you have,

it is Measured by the wonderful people in your life.

—subham—

பக்தியால் உணவு பிரசாதம் ஆகிறது, பட்டினி விரதம் ஆகிறது, இசை ……….. (Post No.10,896)

Compiled BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 10,896

Date uploaded in London – –   27 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஞான மொழிகள்   – 41

Kattu Kutty

மனிதனிடம் பக்தி கலக்கும்போது

உணவு……………… பிரசாதமாகிறது.

பட்டினி………………விரதமாகிறது.

தண்ணீர்…………….தீர்த்தமாகிறது.

இசை…………………கீர்த்தனையாகிறது.

இதயம்……………….கோவிலாகிறது.

செயல்………………..சேவையாகிறது.

பயணம்……………….யாத்திரையாகிறது.

மனிதன்………………புனிதனாகிறான்.

வார்த்தைகளில் ஏமாந்து போகாதீர்கள்,

காரணம் சொற்கள், ஞானம் பெற்றவர்களினால்

உருவாக்கப்பட்டவை அல்ல………

Xxxxx

சப்பாத்திக்கும், Naan க்கும் நடந்த ஓட்டப் பந்தயத்தில்

சப்பாத்திதான் ஜெயிச்சது.

ஆனா naan க்குத்தான் பரிசு கொடுத்துட்டாங்க…….

யாரு ஜயிச்சாங்கன்னு கேட்டப்ப சப்பாத்தி ‘நான்னு

சொல்லிச்சு !!!

Xxxxxx

விளம்பர அதிகாரி – உங்க புருஷனை காணலைன்னு சொல்றீங்க

ஆனா உங்க போட்டோவ போட்டு காணலேன்னு விளம்பரம்

கொடுக்கச் சொல்றீங்க???

பெண் – நான் காணாம போய்ட்டேன்னு தெரிஞ்சா என் புருஷன்

தன்னால வீட்டுக்கு வந்துடுவார் சார்!!!

xxxx

பரமசிவனுக்கு ஆபரணமாக விளங்கும் பாம்பைக் கண்டால்

அடிச்சே கொன்னுடறோம்.

விநாயகர் வாகனமாக இருக்கும் எலியை விஷம் வைச்சே

கொன்னுடறோம்

முருகன் கொடியில் விளங்கும் சேவலை மொத்தத்தையும்

விடறதில்லை.

இப்டி கடவுளர்களின் வாகனத்தையெல்லாம் ‘துவம்சம்’பண்ணிட்டு,

கடவுள் கிட்ட போய் நான் ஒரு ஈ எறும்புக்குக்கூட தீங்கு

நினைச்சதில்லன்னு பொய் வேற………

–subham—

tags- ஞான மொழிகள்   – 41

அப்பர் கேள்விகளும் பதில்களும்: குரு பூஜைதின உரை(Post.10,895)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,895

Date uploaded in London – –     27 APRIL   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

26-4-22 சித்திரை சதய நன்னாள். அதையொட்டி ஞானமயம் சிறப்பு நிகழ்ச்சியை 24-4-22 அன்று நிகழ்த்தியது. அதில் ஆற்றிய உரை இது.

அப்பர் குரு பூஜைதினம் – 24-4-2022

உரை – பகுதி 1

ச.நாகராஜன்

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சைவ சமயம் உலகெலாம் தழைக்க வழி வகை செய்யும் சந்நிதானங்களே, பெரியோர்களே, அன்பர்களே, சந்தானம் நாகராஜன் அனைவருக்கும் வணக்கம்.

சித்திரை மாதம் சதய நக்ஷத்திர நன்னாள், அப்பர் பெருமானின் குரு பூஜை தினம். அதையொட்டி நடைபெறும் இந்தச் சிறப்பு நிகழ்ச்சியில் பங்கு கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சைவ சமயம் தழைக்கச் செய்த அதிசய புருஷர்களுள் பெரும் நாவலராக 81 வயது வரை வாழ்ந்து அனைவருக்கும் நல்வழி காட்டிய சொல்லரசர் திருநாவுக்கரசர் ஆவார்.

16000 பதிகங்களை நாவுக்கரசர் பாடியிருப்பதாக உமாபதி சிவாசாரியார் குறிப்பிடுகிறார். ஆனால் நமக்குக் கிடைத்த நாவுக்கரசர் பொக்கிஷத்தில் 312 பதிகங்கள் மட்டுமே உள்ளன. அவற்றில் உள்ள 3066 பாடல்கள் நம்மிடம் உள்ளன.

ஒவ்வொரு பாடலும் பல இரகசியங்களைத் தரும் பொக்கிஷம். அது மட்டுமல்ல, பெரும் அறிவாளிகளாலும் விடை தர முடியாத கேள்விகளுக்கு அவர் எளிதில் தனது பாடல்கள் மூலம் விடை தருகிறார்.

எந்தக் கேள்விக்கும் இதோ பதில் என்று அவர் தரும் பதில்களைப் பார்க்கும் போது அவர் எவ்வளவு பெரிய பேரருளாளர் என்பதும் தெரிகிறது; உலகில் பிறந்து உலகியலில் சிக்கி பல பிரச்சினைகளை எதிர் கொண்டு, மீள வழி தெரியாமல் தவிக்கும் சாமானியரின் மீது கருணை கொண்டு ரகசியங்களைப் பிட்டுப் பிட்டுத் தரும் அவரது கருணை உள்ளம் நம்மை மெய் சிலிரிக்க வைக்கிறது.

கேள்விகளும் பதில்களும்

உதாரணத்திற்கு சில சிக்கலான கேள்விகளைக் கேட்டு அதற்கு அவர் தரும் பதில்களைப் பார்ப்போம்.

1) ஞானம் எது? கல்வி எது?

நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்

2) நன்னெறி காட்டுவது எது? நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே

3) நமது வினைகள் ஓடிப் போக என்ன செய்ய வேண்டும்?

ஆடிப்பாடி அண்ணாமலை கை தொழ ஓடிப் போம் நமதுள்ள வினைகளே!

4) துன்பப் படுகிறேன், வினை விடவில்லை, பழைய வினைகள் படுத்துகின்றன, நான் என்ன செய்வது?

அல்லல் என் செயும்? அருவினை என் செயும்? தொல்லை வல்வினை தொந்தம் தான் என் செயும்? தில்லை மாநகர்ச் சிற்றம்பலவனார்க்கு எல்லை இல்லதோர் அடிமைப் பூண்டேனுக்கே

5) காக்கைக்கு உடலை இரையாக்குவார் யார்?

பூக்கைக் கொண்டு அரன் பொன்னடி போற்றிலார் நாக்கைக் கொண்டு அரன் நாமம் நவில்கிலார் ஆக்கைக்கே இரை தேடி அலமந்து காக்கைக்கே இரையாகிக் கழிவரே

(ஆக்கை – உடல்)

6) இறைவனது திருவடி நீழல் எப்படி இருக்கும்/

மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கு இளவேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே!

7) சுவர்க்கம் செல்ல வழி என்ன?

துளக்கில் நல் மலர் தொடுத்தால் தூய விண் ஏறல் ஆகும்

8) மெய்ந் நெறி ஞானம் என்றால் என்ன?

விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறி ஞானம் ஆகும்

9) நண்பன் யார்? அவனுக்கு என்ன கொடுப்பது?

கண் பனிக்கும்! கை கூப்பும்! கண் மூன்றும் உடை நண்பனுக்கு எனை நான் கொடுப்பன்!

10) நெஞ்சுக்கு உபதேசம் என்ன?

நக்கரையனை நாள்தொறும் நன்னெஞ்சே!

வக்கரை உறைவானை வணங்கு நீ!!

11) ஈசன் யார்க்கு எளியன்? யார்க்கு அரியன்? வஞ்சகர்க்கு அரியர் போலும், மருவினோர்க்கு எளியர் போலும்!

12) நன்நெறிக் கண் சேராதவர்கள் யார்? “துரிசு அறத் தொண்டு பட்டார்க்கு எளியானை, யாவர்க்கும் அரியான் தன்னை, இன்கரும்பின் தன்னுள்ளால் இருந்த தேறல் தெளியானைத்,

திருநாகேச்சரத்து உளானைச் சேராதார் நன்நெறிக் கண் சேராதாரே!

13) கிரகமும், நட்சத்திரமும் சரி இல்லை, என்ன செய்வது?

“நாளும் நாதன் அமர்கின்ற நாகேச்சுரம் நண்ணுவார், கோளும் நாளும் தீயவேனும் நன்கு ஆம்! குறிக்கொண்மினே!

(குறித்துக் கொள்ளுங்கள்)

14) இடர் தீர வழி? பொன் ஒத்த நிறத்தானும், பொருகடல் தன் ஒத்த நிறத்தானும் அறிகிலாப் புன்னைத் தாது பொழில் புகலூரரை ‘என் அத்தா’ என என் இடர் தீருமே!

15) பிறந்தவர்கள் என்று யாரைச் சொல்லலாம்? வஞ்சர் சிந்தையுள் சேர்விலாதார், கற்றவர் பயிலும் நாகைக்காரோணம் கருதி ஏத்தப் பெற்றார் பிறந்தவரே! மற்றுப் பிறந்தவர் பிறந்திலரே!!

16) துயர் கெட வழி? கந்த வார் பொழில் நாகைக்காரோணனைச் சிந்தை செய்யக் கெடும் துயர், திண்ணமே!

17) யாருடைய செல்வத்தை மதிக்கக் கூடாது? ஏன்? சங்க நிதி பதும நிதி இரண்டும் தந்து தரணியொடு வான் ஆளத் தருவரேனும், மங்குவார் அவர் செல்வம் மதிப்போம் அல்லோம், மாதவர்க்கு ஏகாந்தர் அல்லார் ஆகில்!

18) யாரைக் கடவுளாக வணங்கலாம்? ஏன்?

அங்கம் எலாம் குறைந்து அழுகு தொழுநோயராய், ஆ உரித்துத் தின்று உழலும் புலையரேனும், கங்கை வார்சடைக் கரந்தார்க்கு அன்பர் ஆகில் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளரே!

19) செத்துச் செத்துப் பிறப்பவர் யார்?

திருநாமம் அஞ்செழுத்து செப்பார் ஆகில் தீவண்ணர் திறம் ஒரு கால் பேசார் ஆகில் ஒருகாலும் திருக்கோவில் சூழார் ஆகில் உண்பதன் முன் மலர் பறித்து இட்டு உண்ணார் ஆகில் அரு நோய்கள் கெட வெண்ணீறு அணியார் ஆகில் அளி அற்றார் பிறந்தவாறு ஏதோ என்னில் பெரு நோய்கள் மிக நலியப் பெயர்த்தும் செத்துப் பிறப்பதற்கே தொழில் ஆகி இறக்கின்றாரே!

20) குறை இல்லாமல் இருப்பது எதனால்? சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம், ஒன்றினால் குறை உடையோம் அல்லோம் அன்றே!

இப்படி அள்ள அள்ள குறையாத பதில்கள் அப்பரின் பதிகங்கள் முழுவதும் நிரம்பியுள்ளன.

நம் கேள்விகளுக்கு உரிய பதில்கள் மட்டும் அல்ல அவை! அனைத்தும் அற்புதமான இரகசியங்கள்!

அப்பரின் சிரிப்பு
அப்பர் ஒரே ஒரு வேலையைத் தான், தன் முழு நேர வேலையாகக் கொண்டிருந்தார். அது தான் – இறைவனை அறிவது.
வால் அறிவனை அறிந்து விட்டால் மற்ற அறிவெல்லாம் வந்து விடாதா என்ன?
காட்டிலே, மேட்டிலே, கழனியிலே, கோவிலிலே என அங்கிங்கெனாதபடி கடவுளைத் தேடியவர் அவரைக் கண்டே விட்டார்.
எவ்வளவு உழைப்பு; எத்தனை காலம்!
கடவுளின் இருப்பிடத்தை அறிந்தவுடன் அவருக்கு சிரிப்புத் தான் வந்தது. அதை அப்படியே தமிழில் பாடலாகப் பதிவு செய்து விட்டார்.
பாடல் இது தான்:-
கள்ளனேன் கள்ளத் தொண்டாய்க் காலத்தைக் கழித்துப் போக்கித் தெள்ளியேன் ஆகி நின்று தேடினேன் நாடிக் கண்டேன் உள்குவார் உள்கிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி என்று வெள்கினேன் வெள்கி நானும் விலா இறச் சிரித்திட்டேனே!
கள்ளத் தொண்டில் நெடுங்காலத்தை அங்கும் இங்குமாய் அதிலும் இதிலுமாய்ப் போக்கினார் அப்பர். கள்ளத் தன்மை போய் தெளிவுற்றவன் ஆனார். அந்த நல்ல நிலையில் அவர் நாடியதைக் கண்டே விட்டார்.
நினைப்பவர்களில் உள்ளே இருந்து அவர்கள் நினைப்பதை எல்லாம் (உடனுக்குடன்) நீ அறிவாய் என்பதை கண்டு கொண்டேன் என்கிறார் அப்பர். இதை நினைத்தவுடன் அவருக்குச் சிரிப்பு தான் வந்தது. ஹஹ்ஹஹ்ஹாவென்று விலாப் புடைக்கச் சிரித்தாராம்.
உள்ளே இருப்பவனை வெளியில் தேடியதற்கு ஒரு சிரிப்பு; உள்ளே இருந்து ஒவ்வொரு கணமும் எண்ணுவதை அறிந்தவனை கள்ள மனத்துடன் யாரும் இதை அறிய மாட்டார்கள் என்று அனைத்தையும் செய்ததற்கு ஒரு சிரிப்பு…..
பாடலைப் படித்து சற்று சிந்தனையுடன் ஆழ்ந்து யோசித்தால் நாம் எதெற்கெல்லாம் சிரிக்க வேண்டும் என்று யோசித்தால் அதற்கே முதல் சிரிப்பு சிரிப்போம்.
நம் சிரிப்பின் வகை நூறையும் தாண்டி விடும்.
கஸ்தூரி மான் ஒன்று கஸ்தூரி வாசனை தன்னிடமிருந்தே வருகிறது என்பதை அறியாது வாசனையைத் தேடி ஒரு அடி முன்னே வைக்கும். அதன் உடலில் இருக்கும் வாசனையும் ஒரு அடி முன்னேறும். இப்படி அடி அடியாய்ப் பாய்ச்சல் பாய்ச்சலாய் அது கஸ்தூரியைத் தேடுமாம் – வாழ்நாள் முழுதும்!
அப்படி கஸ்தூரி மான் போல நெடுங்காலம் உத்தமனைத் தேடிய அப்பர், இறுதியில் இறைவன் அருளால் உள்ளேயே கண்டு கொண்டார் உத்தமனை! அப்போது தான் ஹஹ்ஹஹ்ஹா என்ற விலா எலும்பு ஒடியும்படியான சிரிப்பு வந்தது!
உடம்பு என்னும் மனை அகத்து உள்ளமே தகளி ஆக
மடம்படும் உணர் நெய் அட்டி உயிர் எனும் திரி மயக்கி
இடம் படு ஞானத்தீயால் எரிகொள இருந்து நோக்கில்
கடம்பு அமர் காளை தந்தை கழல் அடி காணல் ஆமே
இதை விடத் தெளிவாக இறையைக் காணும் வழியை உரைக்க முடியுமா?
“உள்குவார் உள்ளத்தானை உணர்வு எனும் பெருமையான உள்கினேன் நானும் காண்பான் உருகினேன்”
என்று நமக்காகத் தம் அனுபவத்தை அப்பர் இப்படி பதிவு செய்கிறார்.


    உரையின் அடுத்த பகுதி தொடரும்

Tags-அப்பர் , திருநாவுக்கரசர்

35 HISTORICAL RECORDS IN THE RIG VEDA (Post No.10,894)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,894

Date uploaded in London – –    26 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

Rig Veda (RV) is not only the oldest book in the world but also the world’s oldest history book. There are over 35 Dhaana Stutis (Donation Hymns) in the RV. They record the gifts given by the kings to the seers and poets. Sangam Tamil books Purananuru and Pathitrup Pathu followed it several thousand years after this. Without those Dhana Stutis in Tamil we would not know much about Tamil kings. Majority of the Tamil inscriptions also record the donations and gifts  given to temples and Brahmins. Without those Dhana inscriptions we would be in the dark about Tamil history. But many historians turned a blind eye to the history in the Rig Veda.

Brahmins who were reciting the Rig Veda never bothered about the meaning of the Vedas. Even Shankaracharyas of different Mutts say that the meaning in not important, but the recitation is more important. The sound effect of the Vedas would do good things. Foreign idiots , who are described many of us as scholars, deliberately hid it from the world. Many of the kings are described as unknown entities or demons by the translators.

In my two previous articles (links are given below),  I have listed all the names of the kings found in the Rig Veda and their links to Iran and Sumeria. In this article I wanted to give more interesting information. Even in Mahabharata and Bhagavata, Krishna’s naval attacks on sea pirates and his shifting of capital from Mathura in Uttar Pradesh to Dwaraka in Gujarat 800 miles away, Tsunami attack on Dwaraka and many more details are revealed. But for devotees, these are immaterial.  Hindu scholars must sit together to sift the historical details from epics and oldest Puranas.

First comes the Vedic literature- Samhitas of four Vedas, Brahmanas, Aranyakas and Upanishads. Puranas, though elaborate on the Vedic references of kings and Kingdoms, were constantly updated and so confuse everyone. For instance if a particular race or sect like Yavanas or Sakas is referred to, the pauranics give different locations for them; this is because changing political scenes. Kambojas, Ikshvakus, Yavas kept on moving or invading. You can see the same even in our modern history. Take maps of the world for 100 years and look at the place names. Many of the names were not heard by our youngsters and unless and until they read the history of w world wars, they would not know what is Prussia or Nyasaland or Rhodesia.

Moreover, foreigners started history from Buddha period rejecting 150++ generations of kings in the Puranas and earlier 100++ kings in the Vedas. The same gang  started giving names of kings from 3000 BCE for other countries , even for Mayans.

Hindu history began in 25,000 BCE because we have archaeological evidence in Bhimbetka caves in Madhya Pradesh. The whole world knows the pre historical paintings in the rock shelters there. Even the Bogazkoy Cuneiform inscriptions of Turkey where Vedic gods and 40 Sanskrit names are recorded are not taught to our youngsters. Foreign charlatans who wrote our history books  completely hid those things and included all the British rulers of India and Moghul rulers of India; you cant see Karikal Choza or Rajaraja or Cheran Senguttuvan. So it is the duty of Hindus to throw all those books into dustbins and rewrite our history books.

xxx

New information about Rig Vedic Kings

P.L Bhagava has listed some important Dhana stutis of Rig Veda and made his comments on those. But Atharva Veda and Brahmana literature have more information.

Look at the important Dhana stutis given below; for your information- all the Rig Vedic hymns are available in English and Sanskrit in Wikipedia and Sanskrit documents web sites free of cost. But one must be careful about English translations. 30++ foreign stooges and clowns have laid their hands on our holy scriptures. Kanchi Paramacharya (1894-1994) criticised them mildly for their blunders, but Swami Vivekananda criticised them severely and commands us to throw all the mud from the bottom of the Indian Ocean on those Westerners.

Here are important Dhana Stutis according to P L Bhargava. Scholars like Bhargava, Shrikant Talageri and Bhagwan Singh have done a lot of research on the history of Rig Vedic period:-

RV 1-146; 4-15; 7-18; 6-45; 6-47; 7-18;8-74; 8-5;8-6;  8-46; 10-93;8-19; 5-33

Of these the last two hymns are considered oldest by Bhargava .

The first Great War is reported by the Rig Veda in 7-18 where Sudasa came out victorious against the confederacy of Ten Kings. He was the grandson of Divodasa. Sudasa was supported by Vasishta Maharishi. The suffix DASA must be noticed. DASA was part and parcel of Hindu society and not enemies of Hindus as reported by foreign scoundrels.

Bhargava says Bhageeratha ‘discovered’ Ganges and it shows Aryan’s movement towards Gangetic plains. I think he is wrong. Because Puranas say his forefathers were trying for thousands of years to divert Ganges water towards the plains, but failed; Bhageeratha succeeded after 11,000 years penance according o Puranas. 11000 years standing on one leg, 60000 children or wives for a king – are all Hindu Idions and Phrases. What they mean is countess. ‘Bhageerahta Prayatna’ is a phrase in Hindus’ languages to show one’s determined attempt to achieve something great. Later, Agastya followed Bhageeratha’s engineering work and diverted river Kaveri towards Tamil Nadu plains. It may be a later Agastya and not Rig Vedic Agastya.

What we know from these two episodes is, much of the waters of River Ganga and River Kaveri were flowing in the wrong direction and wasted. They succeeded in diverting them to useful / usable areas. In our own times, River Nile was diverted to build Aswan Dam in Egypt.

Wikipedia List of Surya vamsa kings–

  1. Ikshvaku
  2. Kukshi(Ikshvaku king)/Vikukshi
  3. Kakutstha or Puranjaya
  4. Anena or Anaranya
  5. Prithu
  6. Vishvagashva
  7. Ardra or Chandra
  8. Yuvanashva I
  9. Shravast
  10. Dirghashva
  11. Yuvanashva II
  12. Mandhata
  13. Purukutsa I
  14. Kuvalashva (Dhundhumara)
  15. Dridhashva
  16. Pramod
  17. Haryashva I
  18. Nikumbh
  19. Santashva
  20. Krishasva
  21. Prasenjit I
  22. Trasadasyu
  23. Sambhoot
  24. Anaranya II
  25. Trashdashva
  26. Haryashva II
  27. Vasuman
  28. Tridhanva
  29. Tryyaruna
  30. Satyavrata or Trishanku
  31. Harishchandra
  32. Rohitashva
  33. Harita
  34. Chenchu
  35. Vijay
  36. Rusak
  37. Vrika
  38. Bahu or Asit
  39. Sagara
  40. Asmanjasa or Asamanja
  41. Anshuman
  42. Dileepa I
  43. Bhagiratha
  44. Shrut
  45. Nabhag
  46. Ambarisha
  47. Sindhu Dweep
  48. Pratayu
  49. Shrutuparna
  50. Sarvakama
  51. Sudaas
  52. Mitrasah
  53. Sarvakama II
  54. Ananaranya III
  55. Nighna
  56. Animitra (brother of Raghu)
  57. Duliduh
  58. Dileepa II
  59. Raghu
  60. Aja
  61. Dasaratha
  62. Rama

Bhageeratha is 43rd in the list; Before him we hear the story of Sagara who is linked with Ganga up to Sagara (ocean).

The second point ,I want to pick out from Bhargava is a reference to Purukutsa in hymn. It occurs in 5-33 and Trsadasyu was the son of Purukutsa and the grandson of  Girikhit. We have an interesting reference to Purukutsa in the Vishnu Purana ; here is the reference :-

“The Vishnu Purana has the Gandharvas fighting with the Nagas in the infernal region, whose dominions they seized and whose treasures they plundered. The Naga chief appealed to Vishnu for relief and he promised to appear in the form of Purukutsa to help them. There upon the Nagas sent their sister Narmada to this Purukutsa, and she conducted him to the regions below where he destroyed the Gandharvas .

If he is the same Purukutsa referred to in RV, then we see here Some historical fight between the Nagas and Gandharvas. Infernal region means Indian ocean. We have Nagas portrayed in sculptures throughout South East Asia. Even Sri Lnka was called Naga Dweepa; snakes live underground and so anyone who occupied regions below India were called Nagas and their areas Naga loka or infernal region.

So Purukutsa is important.

Xxx

Another point I want to pick up is most of the scholars identify the kings in the eighth mandala of RV as Iranian kings, because they donated/gifted camels to the Rishis/ seers.

One more important point is unidentified kings:-

King Dhvanya in RV is not found anywhere in Puranas or epics.

King Asvamedha in RV is not found anywhere in Puranas or epics.

Kings Duhsima, Taanva, Paarthya are not identified

Xxx

In RV 10-93 King Rama is identified with Rama of Ramayana; Though it is possible , it is debatable. Whether it is Dasaratha Rama or Parasurama, we don’t know; we know another Bala Rama. Since Vyasa collected and divided the Vedas into four all the three are possible names.

Xxx

Bhargava commented on King Brbu (RV 6-45, 31-33) as a non -Aryan belonging to the race of Panis. He donated a lot to Rishi/ seer Samyu Bharadvaja.

Brbu may be Prabhu or Vibhu (B=V)

Panis were pukka business men and misers. I identify them with Phoenicians. Even English men were described as business men by Napoleon Bonaparte. Very true indeed! Phoenicians were like them and had cut throat competition in marine trade.

Phoenicians also plundered people with their naval power. If Phonician contacts with Vedic India is confirmed through these references, then it opens another dimension to Vedic peoples activities outside India.

In Talageri’s book he gives new definition to Aryans and Dasas. We see Gana DASA as a dance teacher in first century BCE Kali DASA’s drama. So Dasas are also Vedic people and most famous of them was the king SuDASA. Throughout Sangam Tamil literature we see many DASAS and at least 20 NAGAS in the poets names. Vishnu Dasa is Tamilized in Purananuru of Sangam literature as Vinnan Thaayan (Vinna= Vishnu, Thaaya=Dasa)

Xxx

In the same Dana Stuti article, Bhargava says Brhadasva in Mahabharata is an error and it is Vedic King Vadhryasva of RV.  B=V change is seen even in Panini of 7th century BCE.

Tamil and Sanskrit knowing Hindus must sit together and explore the history in the oldest book in the world.

Rig Vedic Kings | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › rig-vedic-kings

Posts about Rig Vedic Kings written by Tamil and Vedas. … Mitanni King is not the Rig Vedic king who is very old. But the interesting fact is that the Rig …

RIG VEDIC KINGS AND THEIR DATES (Post No.10817)

https://tamilandvedas.com › 2022/04/06 › rig-vedic-kin…

6 Apr 2022 — WRITTEN BY LONDON SWAMINATHAN. Post No. 10,817. Date uploaded in London – – 6 APRIL 2022. Contact – swami_48@yahoo.com.

More About Rig Vedic Kings : Nine Interesting Points (Post No …

https://tamilandvedas.com › 2018/08/18 › more-about-r…

18 Aug 2018 — Tamil and Vedas. A blog exploring themes in Tamil and vedic literature. More About Rig Vedic Kings : Nine Interesting …

You visited this page on 26/04/22.

Mahabharata and Ramayana Kings in the Rig Veda (Post No …

https://tamilandvedas.com › mahabha…

· 

6 Mar 2021 — Mahabharata and Ramayana Kings in the Rig Veda (Post No.9347) … The latest hymn is by Devapi, brother of King Shantanu.

160 Kings in Rig Veda!

https://tamilandvedas.com › 2014/11/23 › 160-kings-in…

23 Nov 2014 — Tamil and Vedas. A blog exploring themes in Tamil and vedic literature. 160 Kings in Rig Veda!

Rig Vedic King and Sumerian King 2600 BCE! – Tamil and …

https://tamilandvedas.com › 2014/11/14 › rig-vedic-kin…

14 Nov 2014 — Tamil and Vedas. A blog exploring themes in Tamil and vedic literature. Rig Vedic King and Sumerian King 2600 BCE …

–subham–

Source Books:

THE RIG VEDA- A Historical Analysis by Shrikant G Talageri, 200

VEDIC RELIGION & CULTURE by P L Bhargava, 1994

The Vedic Harappans by Bhgwan Singh, 1995

Tags- Dhana Stuti, gifts, donations, Kings, Rig Veda

இலக்கியத்தில் நையாண்டி, பரிகாசம்!- Part 2 (10,893)

WRITTEN BY B.KANNAN, DELHI

Post No. 10,893

Date uploaded in London – –    26 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

பாஸாவின் பிரஹஸன வசனங்களைப் படிக்குமுன் நாடகக் கதையைச் சற்று மேலோட்ட மாகத் தெரிந்து கொண்டால் அவர் செய்யும் கேலியை வெகுவாக ரசிக்க முடியும்……..

கௌசாம்பி நகர மன்னன் உதயணன் ஓர் உல்லாச விரும்பி. ஒருசமயம் வாசுகியின் சகோ தரன் வசுநேமியை ஓர் இக்கட்டிலிருந்து மீட்டதால், அதற்கு நன்றிக் கடனாகத் தன்னிடமிருந்த கோஷவதி எனும் மந்திர வீணையை வசுநேமி அரசனுக்களித்தான். அதை நேர்த்தியாக வாசிக் கவும் பயிற்சியளித்தான். அதன் இசையால் முரட்டுக் காட்டு யானைகளையும், மதம் பிடித்த மத்தகங்களையும் அடக்கி ஆளமுடியும். அந்த வித்தையிலும் உதயணன் கைதேர்ந்தவனாக விளங்கினான். பின்னாளில் வாஸவதத்தையைக் கவர்ந்துசெல்ல அவனுக்கு இது உதவப் போகிறது. இதற்கிடையே அவந்தி இளவரசி வாஸவதத்தயைப் பற்றிக் கேள்வியுற்றவன் அவள் மீது காதல் வயப்படுகிறான்.

தன் ஆளுகைக்கு உட்படாத உதயணைனை வீழ்த்திச் சிறைபிடிக்க அவந்தி அரசன் பிரத்யோதா எனும் சண்டமஹாசேனன் சூழ்ச்சி செய்கிறான். உதயணன் வேட்டையாட வரும் சமயம் தனது யானைக் கூட்டங்களுக்கு இடையே ஒரு பொம்மை மரயானைக்குள் வீரர்களை மறைத்து வைத்து (ட்ரோஜன் ஹார்ஸ் ஞாபகம் வருகிறதா?) அவனைப் பிடிக்க முனைகிறான்.கோஷவதி வீணையை மீட்டியவாறு வந்த உதயணன் “வீராதி வீரன், பூபால நாதன் ஊறெண்ணி மாற்றோர் சூதிட்ட வலையில்” சிக்கி சிறைபடுகிறான். இதைக் கேள்வியுற்ற வத்ஸராஜனின் மதியூகி மந்திரி யௌகந்தராயணன் உதயணனை விடுவிக்க மாறுவேடத்தில் தன் சகாக்களுடன்அவந்தி நகர் சென்று, ஒற்றர்களை எல்லாவிடத்திலும் புகுத்துகிறான். இளவரசியின் யானை பத்திரா வதியின் பாகன் ஆஷாடகனை தன்வயப்படுத்தி அவன் மூலமாகவே தன் ஒற்றன் காத்திர சேவகன் என்பவனை மாற்று மாவுத்தனாக அமர்த்துகிறான். “நிலவைக் கொள்ளும் பாம்பை, நிகர்வார் கையின் மீள, நலியா தரசைக் கொணர்வேன்” என்றும், “மை கொண்ட நீள்விழிக் குமரியை, மன்னனைக் கௌசாம்பி சேர்த்துவேன், நைகின்ற நிலை தீர்ப்பன், இன்றேல் நான் யௌகந்தராயணன் அன்றே!” என்றும் சூளுரைக்கிறான். இது எப்படிச் சாத்தியமாகிறது என்பதை விளக்குவதே மீதிக் கதையாகும்….

மாற்று மாவுத்தன் காத்திரசேவகன் அறிமுகமாகும் காட்சியிலிருந்துக் கேலியும், பரிகாசப் பேச் சுக்கும் கொஞ்சமும் குறைவில்லை. சாராயக் கடையில் மதுவை ருசித்தவாறு வாய்ச்சவடால் விட்டுக் கொண்டிருக்கிறான்.பாஸா அவனுக்கு வைத்துள்ளப் பெயரிலேயே நகைச்சுவை மிளிர் கிறது. காத்திரசேவகா= பார்க்கும் வேலையைப் புறக்கணித்து, தன் உடம்பைப் பராமரித்துக் கொள்பவன் என்று பொருள். அதைத் தான் அவன் செய்து கொண்டிருக்கிறான். இளவரசி வாஸ வதத்தை தன் யானை பத்திராவதியுடன் நீராட ஏரிக்குச் செல்லவிருந்ததால், சேனாவீரன் பாக னைத் தேடிச் சுற்றி அலைந்துவிட்டு முடிவில் அப்படிப்பட்டவர்கள் தஞ்சமடையும் அந்த மது சாலைக்கு வந்து சேருகிறான். கடையிலிருந்துத் தனக்குத் தானே பேசிக்கொண்டு வெளியே வருகிறான் காத்திரசேவகன்

பாகன் : யார் என்னை இப்படிக் கூவிக் கூவி அழைப்பது? என்னைப் பார்த்து விட்டமாமனாரோ? இப்போதுதானே அவர் தொட்டுக் கொள்ள மிளகுப் பொடி,உப்பு, நெய் கலந்த மாமிச உருண்டை யைக் கொடுத்துவிட்டுச் சென்றார். டேய், காத்திரசேவகா, நீ குடித்தால் மனையாட்டி குதூகலிக் கிறாள்! ஆனால் மாமியாரோ தடியெடுத்து அடிக்க வருகிறாள், என்ன செய்வது? பிறர் சொல் கேட்டுக் குடிக்காமல் இருப்பவர்கள் அடி முட்டாள்கள்!

  நண்பர்களுடன் சேர்ந்து குடிப்பது அதிர்ஷ்டமே

  மதுவில் சொட்டச்சொட்ட நனைந்து குடிப்பது ஆனந்தமே

  மதுவில் மூழ்கிக் குளிப்பது பரமானந்தமே 

  மதுவைக் குடித்துத் திக்குமுக்காடுவது எல்லாவற்றுக்கும் மேல் பேரானந்தமே என்று பாடுகிறான்.

வீரன் : ஐயகோ! இதோ வருகிறானே காத்திரசேவகன், குடித்ததால் கண்கள் அடர்ந்தச் செந்நிறச் செம்பருத்திப் பூக்கள் போன்று சிவப்பாய் இருக்கின்றனவே! அடேய் மாவுத்தா உன்னை எங்கெல்லாம் தேடுவது,பத்திராவதியையும் காணவில்லை. இளவரசியார் நீராடப் போகணும், சீக்கிரம் கிளம்பு!

பாகன் : அப்பனே! இதோ பார். சொர்க்க பூமியில் நீயும் நானும் மட்டுமா குடிக்கிறோம், எல்லாரும் குடித்துக் கொண்டு இருக்கிறார்கள். சந்தோஷம், எங்கும் சந்தோஷம்!

வீரன் : இருக்கட்டும்,இருக்கட்டும். பத்திராவதியை அரண்மனைக்கு அழைத்துச் செல்லாமல் இங்கே ஏன் சுற்றிக் கொண்டிருக்கிறாய், சொல்!

பாகன் : சுற்றிக் கொண்டு இருக்கிறேனா, நானா? மாமனார் கொடுத்த ‘ஊறுகாயு’டன் மதுவை சுவைக்கிறேன். நண்பனே கோபப்படாதே! இப்போது என்ன செய்யணும், சொல்!

வீரன் : போதும், உன் பிதற்றலை நிறுத்து. உன்னிடமிருந்து வீசும் சாராய வாடை எனக்குக் குமட்டுகிறது. உடனே பத்திராவதியை அழைத்துக் கொண்டு வா!

பாகன் : அப்படியா? வா,வா, ஓடி வா பத்திராவதி, நீராடப் போகலாம்! ஆனால், ஐயோ அவளை எப்படி அங்குசம் இல்லாமல் அடக்கி அழைத்துச் செல்ல முடியும்? அதைத்தான் அடகு வைத்து மது ரசம் குடித்து விட்டேனே! என்ன செய்வது?

வீரன் : அட என்னப்பா? பத்திராவதியே சாது. அதுக்கு ஏன் அங்குசமெல்லாம், தேவையே இல்லை. நேரம் கடத்தாமல் அவளைக் கூப்பிடு, ஓடி வருவாள்!

பாகன் : சரி, சரி இதோ கூப்பிடுகிறேன். வா, அம்மா பத்திராவதி, இளவரசியார் கூப்பிடு கிறாராம் போகலாம் வா! அட, சே! போதை தலைக்கேறியதில் மறந்து விட்டேனே! அவளைப் பிணைக்கும் இரும்புச் சங்கிலியையும் அடகு வைத்து விட்டேனே, என்ன செய்வது?

(அட, இப்படியும் ஒரு வழி இருக்கா, “டாஸ்மாக்” கில் ‘ட்ரை’ பண்ணலாமா?–தமிழகக் குடிமக னின் மூளையில் “பல்ப்” எரிந்தது!)

வீரன் : உனக்கு இது கூடத் தெரியாதா? அவளை மலர்ச் சரங்களாலேயே கட்டி விடலாம், சங்கிலி எதுக்கு வீணாக? போ, உடனே போ!

பாகன் : அப்படியென்றால் சரிதான்! அம்மா பத்திராவதி, கன்றுக்குட்டி போல் துள்ளிக் குதித்து ஓடி வா, பார்க்கலாம்! வா, வா சீக்கிரம் வந்துவிடு! ஐயோ, என்ன ஞாபக மறதி! அவளுடைய கழுத்து கண்டாமணியையும் அல்லவா விற்றுக் குடித்து விட்டேன்!

வீரன் :  நீராடத்தானே போகப் போகிறாள்? அதுக்கு எதற்கு கழுத்தில் மணி அணியணும், அநாவசியம். சீக்கிரம் அவளை அழைத்து வா!

பாகன் : சரி! அம்மாடி, பத்திராவதி ஓடி வந்துவிடு மா! என்னைச் சோதிக்காதே! ஆனால், அச்சச்சோ! சாட்டையையும் விற்றுத் தொலைத்து விட்டேனே, என்ன செய்வது?

வீரன் :  சாட்டையை மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்துவிட முடியும்? அது இல்லாமலிருப்பதும் சரியே! சீக்கிரம். இளவரசியார் கோபிப்பார்கள். ஓடு உடனே!

பாகன் : பத்திராவதி, என் செல்லமே, அசைந்து, அசைந்து ஓடி வா பார்க்கலாம்….ஐய்யையோ, நான்…நான்…

வீரன் :  இப்போ என்ன செய்து விட்டாய், சொல்லு!

பாகன் : ஹையோ! பத்திரா…பத்திராவதி.. அதை எப்படிச் சொல்வேன்? பத்திரா, ஹோ, பத்திரா!

வீரன் :  என்னவாயிற்று, இளவரசியின் செல்ல பத்திராவதிக்கு, சொல்

பாகன் : நான் ஒரு மடையன். மது போதையில் என்ன செய்தேன் என்றே புரியவில்லை! மேன்மேலும் குடிக்கும் ஆர்வத்தில் பத்திராவதியையும் அடகு வைத்து விட்டேனே! ராஜ சமூகத்துக்கு என்ன பதில் சொல்வேன்?

வீரன் :  பரவாயில்லை அது உன் குற்றமில்லை! தான் கொடுத்த சாராயத்துக்கு ஈடாக ராஜாங் கத்து யானையைக் கூட குதுவை (அடைமானம்) வைத்துக் கொள்ளும் துணிவு பெற்ற மது சாலைத் தலைவன் மீதே குற்றம், கவலைப்படாதே. அவை திரும்ப வந்துவிடும்.

(சபாஷ்! “டாஸ்மாக்”  சட்டத்தில் இந்த விதிமுறையையும் சேர்த்துக் கொள்ளச் சொன்னால் அது நமக்கு நல்லதா,கெடுதலா, ஆராயச் சொல்லணும்!– குடிமகனின் ‘மைண்ட் வாய்ஸ்!’)

பாகன் : ஐயோ! உன் முதலுக்கு வரவேண்டிய வட்டியை இழக்காதே என்று அவனுக்குச் சொன்னேனே!

வீரன் :  அடேய், உன் புலம்பலை நிறுத்தித் தொலை! அது என்ன பெரும் சத்தம், கேட்கிறதா?

பாகன் : அப்பனே அது என்னவென்று எனக்குத் தெரியும். சாராயக் கடையிலிருந்துப் பிளிறிக் கொண்டு தெறித்து பத்திராவதி ஓடுகிறாள்! வா, நாமும் ஓடுவோம்!…….

இத்துடன் உதயணனும் வாஸவதத்தையைக் கவர்ந்து பட்டத்து யானை நளாகிரியுடனும், யௌகந்தராயணனின் யுக்தியாலும் தப்பித்துச் சென்றுவிடுகிறான். நாடகத்தின் இப்பகுதி  மிகச் சுவாரசியமானது.

நினைத்துப் பாருங்கள், அன்றையப் பண்டமாற்று முறை இன்றும் புழக்கத்தில் இருந்தால் குடி மகன்களின் வீட்டுச் சாமான்கள் எல்லாம் “டாஸ்மாக்” கடைகளில் தான் தஞ்சம் புகுந்திருக்கும்!

அடுத்து ஹிந்தி இலக்கிய வானில் சஞ்சரிப்போம், வாருங்கள்……………தொடரும்

                   ————————————————————————–

BRA IS IMPORTANT ப்ரா மொழிகள் (Post No.10,892)

 BRA IS IMPORTANT ப்ரா மொழிகள்  (Post No.10,892)
Compiled  BY KATTU  KUTTY , CHENNAI   Post No. 10,892   Date uploaded in London – –   26 APRIL  2022          Contact – swami_48@yahoo.com Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com       ஞான  மொழிகள்-39                                                       Kattu kutty

                         ப்ரா மொழிகள் 

ᴛᴏᴅᴀʏ ɪs ᴡᴏʀʟᴅ *ʙʀᴀ* ᴅᴀʏ!

ɴᴇᴠᴇʀ ᴜɴᴅᴇʀ ᴇsᴛɪᴍᴀᴛᴇ ᴛʜᴇ ɪᴍᴘᴏʀᴛᴀɴᴄᴇ ᴏғ
ᴛʜᴇ *ʙʀᴀ*

ǫ: sᴛʀɪᴘᴇᴅ ʙʀᴀ?
 ᴢᴇ *ʙʀᴀ*

ǫ: ᴘᴏɪsᴏɴᴏᴜs ʙʀᴀ?
 ᴄᴏ *ʙʀᴀ*

ǫ: ᴍᴀᴛʜᴇᴍᴀᴛɪᴄᴀʟ ʙʀᴀ?
 ᴀʟɢᴇ *ʙʀᴀ*

ǫ: sᴜɴsɪɢɴ ʙʀᴀ?
 ʟɪ *ʙʀᴀ*

ǫ: ᴍᴀɢɪᴄᴀʟ ʙʀᴀ?
 ᴀᴀ *ʙʀᴀ* ᴋᴀ ᴅᴀ *ʙʀᴀ*

ǫ: ʀᴇʟɪɢɪᴏᴜs ʙʀᴀ?
 *ʙʀᴀ* ʜᴍɪɴ!

ǫ: ᴍᴇᴛᴀʟʟɪᴄ ʙʀᴀ?
 *ʙʀᴀ* ss

ǫ: ᴀɴᴊᴇʟɪɴᴀ ᴊᴏʟɪᴇ’s ʙʀᴀ?
 *ʙʀᴀ* ᴅ ᴘɪᴛᴛ

ǫ: ʙᴏᴛᴀɴʏ ʙʀᴀ?
 *ʙʀᴀ* ɴᴄʜ

ǫ: ᴍᴀʀᴋᴇᴛɪɴɢ ʙʀᴀ?
 *ʙʀᴀ* ɴᴅ!

ǫ: ᴘᴜɴᴄᴛᴜᴀᴛɪᴏɴ ʙʀᴀ?
 *ʙʀᴀ* ᴄᴋᴇᴛ.

ǫ: sᴄᴀʀʏ ʙʀᴀ?

ɢʜᴀ *ʙʀᴀ* ᴀʜᴀᴛ.

ǫ: ʀᴏᴏᴍ ғᴜʟʟ ᴏғ ʙʀᴀ’s?
 ʟɪ *ʙʀᴀ* ʀʏ.

ǫ: ᴀʟᴄʜᴏʜʟɪᴄ ʙʀᴀ?
 *ʙʀᴀ* ɴᴅʏ.

ǫ: sᴜʀɴᴀᴍᴇ ʙʀᴀ?
 ᴄʜʜᴀ *ʙʀᴀ*

ǫ: ᴄᴏᴜɴᴛʀʏ ʙʀᴀ?
 *ʙʀᴀ* ᴢɪʟ

ǫ: ʙʀᴀ ᴡʜɪᴄʜ ʙᴇᴄᴀᴍᴇ ᴛʜᴇ ᴀᴍᴇʀɪᴄᴀɴ ᴘʀᴇsɪᴅᴇɴᴛ
ᴀɴᴅ ɪɴsᴘɪʀᴇᴅ ᴛʜᴇ ᴡʜᴏʟᴇ ᴡᴏʀʟᴅ?
ᴀ *ʙʀᴀ* ʜᴀᴍ ʟɪɴᴄᴏʟɴ!

ᴀɴᴅ ᴜ ᴛʜᴏᴜɢʜᴛ ᴏɴʟʏ ᴡᴏᴍᴇɴ ᴜsᴇ ᴀ ʙʀᴀ !!!
ʜᴏᴡ
*ʙʀᴀ* ɪɴʟᴇss”.

 ʜᴀᴘᴘʏ ʙʀᴀ ᴅᴀʏ

*ᴅᴏɴ’ᴛ ʟᴀᴜɢʜ ᴀʟᴏɴᴇ sʜᴀʀᴇ ɪᴛ ᴡɪᴛʜ ғʀɪᴇɴᴅs, ʙʀᴀʟᴇss, ᴏʀ ᴡɪᴛʜ ʙʀᴀ*.                                                                        ***
Tags- Bra

இந்தோனேஷியாவில் சப்தபலோன் கொடுத்த சாபம்!–2 (Post No.10,891)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,891

Date uploaded in London – –     26 APRIL   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

இந்தோனேஷியாவில் சப்தபலோன் கொடுத்த சாபம்! – 2

ச.நாகராஜன்

ஜயாபயா என்ற பெயருடைய மன்னன் கிழக்கு ஜாவா பேரரசில் கேதிரி அரசை கி.பி. 1135 முதல் 1157 முடிய ஆண்டு வந்தான். அளவற்ற வளத்தையும் செல்வத்தையும் கொண்டு அவன் அரசாண்டான். அவனை புகழ் மொழியான ‘ரது அடில்’ (இவனே அரசன்) என்று கூறி அனைவரும் புகழ்ந்தனர்.

ஒரே குழப்பமயமாக இருந்த காலத்தில் தனது நிர்வாகத் திறமையால் சட்டம் ஒழுங்கை அவன் சீர்படுத்தினான். அவனது சீர்திருத்தங்கள் இன்றும் கூட இந்தோனேஷிய பண்பாட்டில் எதிரொலிக்கிறது.

ஜயாபயா ஹிந்து இலக்கியங்களையும் போற்றி ஆதரித்தான். எம்பு பனுலு மற்றும் எம்பு சேடா ஆகிய கவிஞர்களை அவன் ஆதரித்தான்.

அவனது அரசாட்சியைக் கண்ட மக்கள் அவன் விஷ்ணுவின் அவதாரமே தான் என்று கருதினர். அவனும் அப்படி தான் கடவுளின் அவதாரம் என்று சொல்லப்படுவதை நம்பினான்.

பல்வேறு வரலாற்று புத்தகங்களின் படி அவன் பிரம்மாவின் பேரனுக்குப் பேரனுக்குப் பேரன் என்று கருதப்பட்டான்.

பல தீர்க்கதரிசன (ஜோதிட) கூற்றுக்களை அவன் தனது ‘செரட் ஜயாபயா’ என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறான்.

அது வாய்மொழியாக பரம்பரை பரம்பரையாக வழங்கப்பட்டு வந்தது.  1835இல் அது எழுத்து வடிவில் எழுதப்பட்டது. அந்த பழைய பிரதி இன்றும் உள்ளது.

அவனது ஜோதிட தீர்க்கதரிசனக் கூற்றுகளில் ஒன்று ஜாவா வெள்ளைத் தோல் உடையவரால் நெடுங்காலம் ஆளப்படும் என்பது.

அவன் இறந்த 400 ஆண்டுகளுக்குப் பின்னர், 1595இல் டச்சுக்காரர்கள் பிடியில்  ஜாவா சிக்கியது.

வெள்ளையரிடமிருந்து மஞ்சள் தோலை உடையவர்கள் ஜாவாவை மீட்டு தாங்கள் ஆளத் தொடங்குவர் என்றும் அவன் குறிப்பிட்டிருக்கிறான்.

அது அப்படியே உண்மையானது.

ஜப்பானியர்கள் இரண்டாம் உலகப் போரின் போது ஜாவா மீது படை எடுத்தனர்; டச்சுக் காலனி ஆதிக்கத்திற்கு ஒரு முடிவைக் கொண்டு வந்தனர்.

ஒரு சோளக்கருதின் ஆயுளை விட மிகக் குறுகிய காலமே அந்த மஞ்சள் தோல்காரர்கள் ஆள்வர் என்பதையும் அவன் குறிப்பிட்டிருக்கிறான்.

இந்த சோளக்கருதின் ஆயுள் காலம் என்பது நடக்கவில்லை என்றாலும் இதர இரண்டு ஜோதிடக் கூற்றுகளும் அப்படியே நடந்துள்ளன.

ஆகவே அவன் விஷ்ணுவின் அவதாரமே தான் என்று இந்தோனேஷிய மக்கள் இன்றும் நம்புகின்றனர்.

ஆதாரம் : Kolkata Weekly Truth – Volume 89 No 30 Dated 19-11-2021

நன்றி : Truth

மேற்கண்ட கட்டுரையைப் படித்த பின்னர் நமக்குத் தோன்றுவது இந்தோனேஷியாவின் வரலாறு புதிதாக எழுதப்படும் என்பது தான். அதன் புகழோங்கிய ஹிந்துப் பண்பாட்டின் அடிப்படையிலான பண்டைய காலத்தை அது மீண்டும் பெறப் போகிறது.

வாழ்த்துவோம் ஹிந்து பண்பாடு செழிக்க இருக்கும் இந்தோனேஷியாவை!

**

Tags- சப்தபலோன்  சாபம்! – 2

பகவத் கீதையில் சுவையான சொல் சித்திரரதன் -2 (Post No.10, 890)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,890

Date uploaded in London – –    25 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

பகவத் கீதையில் சுவையான சொல் சித்திரரதன் -2

கட்டுரையின் இரண்டாவது பகுதி இது ; முதல் பகுதியில் பகவான் கிருஷ்ணர்  பகவத் கீதையில் “கந்தர்வர்களுள் நான் சித்திரரதன்” என்று சொன்னதையும், ரிக் வேதம் “சிந்து சமவெளியை ஆண்ட சித்ரன் என்ற அரசனே அரசன்; மற்றவர் எல்லோரும் சிற்றரசர்கள்” என்று புகழ்வதையும் கண்டோம்.

இதில் நமக்கு முக்கியமான செய்தி கிடைத்தது. அதாவது சரஸ்வதி- சிந்து நதி நாகரீகத்தில் சித்ரன் என்ற ஒரு வள்ளல் இருந்தான் என்று.

அதைவிட சுவையான செய்தி கிடைத்துள்ளது. கீத்- மெக்டொனால்ட் வெளியிட்ட வேத கால சொல் அட்டவணையில் (Vedic Index வேதிக் இன்டெக்ஸ்):– சோபரி என்னும் கவிஞர் அவரை (சித்ரன்) எலி என்று சொன்னதாகவும் எழுதி இருக்கின்றனர். கேரளத்தை எலி வம்சம் (மூஷிக Mushika Dynasty) ) ஆண்டதை நாம் அறிவோம். அதற்கும் சித்ரனுக்கும் உள்ள தொடர்பை ஆராய வேண்டும்

xxxx

மார்ட்டன் ஸ்மித் (Dates and Dynasties in Earliest India by R Mortan Smith) என்பவர் இந்திய அரசர்களின் காலம் என்ற நூலில் சித்ரரத யாதவ் என்ற மன்னரை கி.மு.1580ல் வைக்கிறார். ஆகவே ‘சித்ர’ என்ற சொல் வரும் இடங்களை இந்திய அறிஞர்கள் மகாநாடு கூட்டி ஆராய வேண்டும் . அது மட்டுமல்ல ; சிந்து–சரஸ்வதி நதி தீர மன்னர் பட்டியலில் உள்ள, பாரி போலவும் ,மாரி போலவும், வாரி வழங்கிய சித்ரனை ஆராய வேண்டும்.

xxx

இனி மஹாபாரதம் சொல்லும் சித்ரரதன் கதைகளைக் காண்போம்.

சித்ரரதன் எண் 1

இவன் கந்தர்வர்கள் தலைவன். பாண்டவர்கள் ஏக சக்ர நகரிலிருந்து, பாஞ்சாலம் (தற்கால பஞ்சாப்) நோக்கிச் சென்றபோது அவர்களைத் தடுத்து நிறுத்தியவன். அர்ஜுனன் , அந்த சித்ரரதனைப் பிடித்துக் கட்டிப்போட்டவுடன் அவனுடைய மனைவி கும்பிநாசி கெஞ்சியதால் சித்ரரதனை விடுவித்தான். அதற்குக் கைமாறாக சில தெய்வீக  ஆயுத ரகசியங்களை (Modern Weapons from Alien World)  அவன் அர்ஜுனனுக்குச் சொல்லிக் கொடுத்துவிட்டு, என்றுமே களைப்பு அடையாத தெய்வீக குதிரைகளையும் பரிசாகத் தந்தான் . புறப்படுவதற்கு முன்னர் ஒரு புரோகிதரை உதவிக்கு நியமித்துக் கொள்ளுங்கள் என்று ஆ லோசனையும் வழங்கினான் சித்ரரதன்.

எனது கருத்து

‘என்றுமே களைப்பு அடையாத’ என்பது குதிரை பொம்மை பூட்டிய நவீன எந்திரங்களாக இருக்கலாம். ஏனெனில் இதற்கு அடுத்து வரும் பகுதி வெளி உலக (Extra Terrestrial)  தெய்வீக ஆயுதங்கள் பற்றி இயம்புகிறது .

XXX

சித்ரரதன் எண் 2

இவன் முன் காலத்தில் அங்க தேசத்தை ஆண்டவன் . பிரபாவதியின் சகோதரியான ருசியை மணந்தவன் .

எனது கருத்து

என்ன அதிசயம் பாருங்கள் ! மஹாபாரத யுத்தம் நடந்து 5000 ஆண்டுகள் ஆனதாக இந்துக்கள் நம்புகின்றனர். அவ்வாறே பஞ்சாங்கத்தில் கலியுக ஆண்டுகளை காண்கிறோம். அதற்கு முன்னரும் பெண்களின் பெயர்கள், நதிகளின் பெயர்கள் “வதி” என்னும் பின்னொட்டுகளுடன் (suffix)  முடிவதை ரிக்வேதமும் காட்டுகிறது. இன்றும் கூட நாம் பிரபாவதி, ருசி என்று குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுகிறோம். ஆனால் ‘சித்ர’ என்ற பெயர்களை ஏன் விட்டுவிட்டோம் என்று ஆராய வேண்டும்.

XXX

சித்ரரதன் எண் 3

இந்த சித்ரரதன் பாஞ்சால இளவரசன் . அவன் மஹாபாரத யுத்தத்தில் துரோணரால் கொல்லப்பட்டான். அவனுடைய சகோதர்கள் பெயர்கள் – வீரகேது, சித்ரகேது , சுதன்வா , சித்ரவர்மா .

XXX

சித்ர சேன

இந்த மனிதர்  பற்றிதான்  நீண்ட கதை உள்ளது. ஒருவேளை இவருக்கும் சித்ரரதன் என்னு பெயர் இருந்திருக்கலாம் . மஹாபாரதம் வன பர்வத்தில் வரும் கதை இதோ :-

இவர் கந்தர்வர் தலைவன்.

அர்ஜுனன்  (Divine Weapons)  தெய்வீக ஆயுதங்களைப் பெறுவதற்காக  வானுலகத்தில் 5 ஆண்டுகள் வசித்தான் . சொர்க்கத்தில் வசித்த சித்திரசேனன், இந்திரன் கட்டளைக்கு இணங்கி அர்ஜுனனுக்கு சங்கீதம், நடனம் ஆகியவற்றைக் கற்பித்தான் . சித்ரசேனனுக்கு அர்ஜுனனை மிகவும் பிடித்துவிட்டது. அர்ஜுனனை மீண்டும் பூமிக்குத் திரும்பிச் செல்லவிடக்கூடாது என்று கருதி, இந்திரனின் அனுமதியுடன் ஊர்வசியை அனுப்பி  மயக்கப்பார்த்தான். அர்ஜுனனுக்குக் கோபம் வந்தது;  சாபம் கொடுத்தான். உடனே இந்திரன் மூலம், சித்ரரதன் சமாதானம் செய்தான்.  அந்த சமாதான உடன்பாடிக்கை அர்ஜுனனுக்கு சாதகமாகவே இருந்தது. அர்ஜுனன் ஸ்பேஸ் ஷட்டில் (space shuttle )மூலம் வேற்று உலகத்தில் (Extra Terrestrial Planet)  இருந்து பூமிக்குத் திரும்பினான் .

சித்ர சேனனுக்கு அர்ஜுனனை மிகவும் பிடித்துப் போனதால் பூமியில் என்ன நடக்கிறது என்பதை உன்னிப்பாகக் கவனித்துவந்தான். காட்டில் வசித்தபோதும் பாண்டவர்களைத் தீர்த்துக்கட்ட துரியோதனன் செய்த சதி அவனுக்குத் தெரிந்தது. பூமிக்கு ப் படைகளுடன் வந்து  து  ரியோதனனைத் தாக்கிச் சிறை பிடித்தான். யுதிஷ்டிரருக்கு நல்ல மனது. வெளி உலக வாசி வந்து , பூமியில் வசிக்கும் நம்மை வசப்படுத்தக்கூடாது என்று எண்ணி, அர்ஜுனா, நீ போய் துரியோதனனை மீட்டு வா என்று அனுப்பினான். எதிரியாக இருப்பவன் சித்திரசேனன் என்பதை அறிந்து அதிர்ச்சி; ஆனால் சித்ர சேனனுக்கோ ஒரே மகிழ்ச்சி. தன்னுடைய பூவுலக நண்பனை இவ்வளவு எளிதில் சந்தித்து வீட்டோமே என்று எண்ணி அகம் மகிழ்ந்தான் ; உளம் குளிர்ந்தான். சண்டையே வேண்டாம்; இதோ கைதி துரியோதனன்; அழைத்துச் செல் என்றான் .

இவர்களைத் தவிர பாண்டிய நாட்டரசி  சித்ராங்கதா உள்பட நிறைய “சித்ர”  பெயர்கள் மஹாபாரதத்தில் உள்ளன.

எனது கருத்து

கந்தர்வர் என்ற பெயரில் இரு வகை மக்களைக் காண்கிறோம்; ஒரு பிரிவினர் பூலோக வாசிகள்; நன்கு பாடக்கூடியவர்களை கந்தர்வர் என்றும் கந்தர்வ கானம் இசைப்பவர் என்றும் இன்றும் புகழ்கிறோம் . பிரபல இசை மேதை பால கந்தர்வாவுக்கு நாம் தபால்தலையும் போட்டு சிறப்பித்துள்ளோம். இன்னொரு கந்தர்வர் (Ultra Modern Space Weapons) அதி நவீன மாடர்ன் வெப்னஸ்  அறிந்தவர்கள். அவர்கள் ஸ்பேஸ் ஷட்டில் (Space Shuttle) முதலிய விண்ணுலக பயண வசதி உடையவர்கள். அர்ஜுனனை மாதலி என்பவன் வேறு உலகத்திற்கு ‘ஸ்பேஸ் ஷட்டிலில்’ அழைத்துச் சென்ற வன பர்வ கதை  பற்றி முன்னரே இந்த பிளாக்கில் எழுதியுள்ளேன் (Inter Continental Space Shuttle Travel by Arjuna in Vana Parva of Mahabharata) . மஹாபாரத யுத்தத்தில் பிரம்மாஸ்திரம் என்னும் ஒருவகை அணு ஆயுதம் (Brahmastra= Nuclear weapon)  பயன்படுத்தப்பட்டதையும் முன்னரே எழுதியுள்ளேன்.

இப்பொழுது அந்த கந்தர்வர்களை சிந்து சமவெளியுடன் தொடர்பு   படுத்தும் குறிப்புகள் கிடைத்துள்ளன. மேலும்  மஹாசித்ரன் என்ற புலவரை புற நானூற்றின் பத்து பாடல்களிலும் காண்கிறோம். ரிக் வேதத்திலும் பகவத் கீதையிலும் சித்ரன் உள்ளது. மணிபுர / பாண்டிய நாட்டு அழகி சித்ராங்கதை பற்றியும் நாம் அறிவோம். ஆக பாண்டிய நாட்டு சித்ர மர்மத்தைத் துலக்குவது நம் கடமை.

திருவிளையாடல் புராணமும். சிங்கார வேலு முதலியாரின் அபிதான சிந்தாமணி முதலிய நூல்கள் சித்ர என்ற பெயர் அடங்கிய பாண்டிய மன்னர்கள் பற்றியும் தகவல் தருகின்றன.. ஆராய்ச்சியைத் தொடர்வது தமிழர்தம் கடமை.!

–சுபம்–

Tags-  சித்ரன், சித்திர ரதன் , சித்திராங்கதா , பாண்டியன், ஊர்வசி , சித்திரசேனன் , கந்தர்வர், வெளி உலகவாசிகள், நவீன, தெய்வீக, ஆயுதங்கள்

இலக்கியத்தில் நையாண்டி, பரிகாசம்!- Part 1 (10,899)

WRITTEN BY B KANNAN, DELHI

Post No. 10,889

Date uploaded in London – –   25 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

இலக்கியத்தில் நையாண்டி, பரிகாசம்!- 1

Written By B.Kannan,Delhi

அன்புடைய தமிழ் உள்ளங்களுக்கு கண்ணன் அநேக நமஸ்காரம்.

இப்பதிவில் தமிழ், சம்ஸ்க்ருதம், இந்தி மொழிகளில் கவிஞர்கள் சிலர் குறும்பு, குசும்பு, நக்கல், கேலி, பரிகாசம், நையாண்டி கலந்தத் தொனியில் தங்கள் புலமையைப் பாக்கள் மூலம் எப்படி வெளிக்காட்டி இருக்கிறார்கள் என்பதைக் காண்போம்………

முதல் ஏழு வள்ளல்களில் ஒருவனாகிய நளனது வரலாற்றைக் கூறும் நூல்கள் தமிழில் இரண்டுள்ளன. அவற்றுள் தலையாயது நளவெண்பா. மற்றொன்று நைடதம் என்னும் நற்காவி யமாகும். ‘வெண்பாவிற் புகழேந்தி’ என்று புலவரெல்லாம் வியந்து போற்றும் சிறந்த கவிஞரா கிய புகழேந்தியார் நளவெண்பா நூலை இயற்றினார். ‘நைடதம் புலவர்க்கு ஒளடதம்’ என்று நாவலர் நயந்து போற்றும் நைடதக் காவியத்தை நற்றமிழ் வல்ல சிற்றரசனாகிய அதிவீரராம பாண்டியன் ஆக்கினான்.

புகழேந்தியார் தன்னை ஆதரித்த குறுநில மன்னனாகிய சந்திரன் சுவர்க்கியின் அன்பான வேண் டுகோளுக்கு இணங்கியே நளவெண்பாவை யாத்தனர் என்பர். ஆதலின் செய்ந்நன்றி மறவாச் செந்தமிழ்ப் புலவராகிய புகழேந்தியார், தம் நூலில் அம்மன்னனைத் தக்கவாறு போற்றிப் பரவு கின்றார், மனுமுறை தவறாது செங்கோல் செலுத்திய அம் மன்னனே ‘மாமனு நூல் வாழ வரு சந்திரன் சுவர்க்கி’ என்று வாழ்த்தினார். அவனது வளம் பொருந்திய மள்ளுவ நாட்டைச் சொல் லும்போது, ‘வண்டார் வள வயல்சூழ் மள்ளுவநாட் டெங்கோமான் – தண்டார் புனை சந்திரன் சுவர்க்கி’ என்றும் போற்றினார். அவனது கொடை நலத்தைக் கொண்டாடும் புலவர்,‘தாருவெனப் பார்மேல் தருசந்திரன் சுவர்க்கி’ என்றும், ‘சங்கநிதிபோல் தருசந்திரன் சுவர்க்கி’ என்றும் குறிப்பி டுகிறார்.

கொடை வள்ளலாகிய சந்திரன் சுவர்க்கியின் அரசவையில் புகழேந்தியார் தம் நளவெண்பா நூலை அரங்கேற்றினர். அப்போது அந்திப் பொழுதின் வருணனையைக் குறிக்கும் அழகியப் பாடலொன்றைப் பாடிப் புலவர் விளக்கினார். மேற்கே செக்கர் வானம் பட்டுக்கம்பளம் விரித்துக் கொண்டிருந்தது. இயற்கை எனும் சூரியன் மெல்லச் சாயும் அந்திப் பொழுதும் வந்தது. புகழேந் திப் புலவர் அதனைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தார். மல்லிகைப் பூவின் நறுமணம்அவரை இழுத்தது. மெல்லத் திரும்பி முல்லைப் பந்தரின் அருகே இருந்த மல்லிகைச் செடியைப் பார்த் தார். அச்செடியில் தேன் பருக வந்த வண்டு வட்டமடித்து மல்லிகையில் அமர்ந்து ரீங்காரம் செய்வதைக் கண்டார்.

புகழேந்திப் புலவரின் கவி உள்ளத்தின் நெஞ்சிலே – ‘பகல் முழுவதும் பல வண்ண மலர்களில் தேனருந்திய வண்டல்லவா அது! மல்லிகை, முல்லை வெண்மலர்கள் விரிந்து மணம் கமழ, அந்தி மாலைப் பொழுது அரச கம்பீரத்துடன் மெல்ல நடந்து செல்கிறதே’ என்ற உணர்வலை கள் அலை மோதின. அவற்றின் வெளிப்பாடாய்ப் பிறந்ததே இந்த வெண்பா.

“மல்லிகையே வெண்சங்கா வண்டூத, வான்கரும்பு

வில்லி கணை தெரிந்து மெய்காப்ப,-முல்லையெனும்

மென் மாலை தோளசைய, மெல்ல நடந்ததே

புன் மாலை அந்திப் பொழுது.”  (நளவெண்பா: 106)

‘மல்லிகைப் பூவை வெண்ணிறச் சங்காய் தேன் வண்டு ஊதி முழங்க, வெண்கரும்பு வில்லை உடைய மன்மதன் ( வால்=வெண்மை + கரும்பு = வான்கரும்பு எனப்புணரும்.  கரும்பின் மேல்

வெண்சாம்பல் இருப்பதால் வான்கரும்பு என்பர்). அம்புகளை தேர்ந்தெடுத்துக் கொண்டு,வசந்தம்  மெய்காப்பாளனாகப் பக்கத்தில் வர, மென்மையான முல்லை மாலை தோளில் அசைய, சிறு பொழுதாகிய மாலைக்கால (புன்மாலை) அந்திப்பொழுது மெல்ல நடந்து செல்கிறதே’ என்கிறார்.

பாட்டையும் விளக்கத்தையும் கேட்ட புலவரெல்லாம் உள்ளங் கிளர்ந்து முகமலர்ந்துத் தலை யசைத்தனர். ஒரு புலவர் மட்டும் எழுந்து, இந்த உவமான வர்ணனையில் தவறுள்ளதெனத் தடை கூறினார். சங்கினை ஊதுபவன் அதன் அடிப்புறத்திலன்றோ வாய்வைத்து ஊதுதல் மரபு; அவ்வாறிருக்க,மலரின் மேற்புறத்திலிருந்து ஊதும் வண்டு சங்கூதுவானை யொப்பதுஎங்ஙனம் ? ஆதலின் இக்கற்பனை தவறுடையதாகும் என்று புகழேந்தியார் கருத்தை மறுத்துரைத்தார். இங்குப் புகழேந்தியாரின் புலமை வெளிப்பட்டது.

அது கேட்ட புகழேந்தியார் மகிழ்வோடு அப்புலவரை நோக்கினார். “நீர் கூறிய கருத்துப் பொருத் தமுடையதே; ஆயினும் கள்ளுண்டவனின் நிலைமை எப்படிப்பட்டதாய் இருக்கும் என்பது யாவரும் அறிந்த ஒன்று! அவன் கண்களுக்கு அனைத்தும் தலைகீழாய்த்தான் தெரியுமல்லவா? களிமயக்குடன் சங்கை ஊதுவான், அதன் பின்பக்கம் முன்பக்கங்களை அவனால்கண்டுகொள்ள முடியுமா? ஆதலால் பகல் முழுவதும் பறந்துபறந்து மலர்களில் மதுவருந்திய மயக்கத்தில் இருந்த வண்டும் அந்தி வேளையில் களிகொண்டு பூவின் மேல் அமர்ந்து ஊதிற்று; இதில் ஏதும் ஐயமுண்டோ?” என்று அவையிலிருந்தப் புலவரெல்லாம் வியக்குமாறு விடையிறுத்து மேற் சென்றார். மறுப்புரைக் கூறிய புலவர் வாயடைத்து வாளா அமர்ந்தார் 

இந்நிகழ்ச்சி, புகழேந்தியாரின் நிகரிலாப் புலமை நயத்தையும், சமத்காரத் திறனையும் விளக்குவதாக அமைந்துள்ளது., அல்லவா?

                          —————————————————-

இப்போது, சம்ஸ்க்ருதக் காவியத்தில் பொதிந்துள்ள, கேலி, பரிகாசம், நையாண்டி கலந்து வெளிப்படும் நகைச்சுவையைக் காண்போம். கவி ஜயதேவர் குறிப்பிடுவது போல் ‘கவிதை மூலம் சிரிக்க வைப்பவர் மகாகவி பாஸா’ (भासो हस:) ஆவார். கவி குணாட்யா (6 C.E) பைசாசி மொழியில் எழுதிய ‘பிரஹத்கதா’ (நெடுங்கதை) தொகுப்பில் இடம் பெறுகிறது வீரசாகசங்கள் புரியும் வத்ஸராஜன், கௌசாம்பி நகர அரசன் உதயணனின் சரித்திரம். அதன் பின்னணியில்  முழுக்க முழுக்க அரசியலைப் பிரதானமாக வைத்து, நான்கு அங்கங்களுடன்  ‘பிரதிக்ஞா யௌகந்தராயணம் राप्रतिज्ञायौगन्धरायणम्य), யௌகந்தராயணின் சபதம், என்ற ஒரு சிறு காவிய நாடகத்தை இயற்றினார். இதில் வரும் ஒரு சம்பவத்தில் தான்  அவர் நம்மைக் கவிதை மூலம் சிரிக்க வைக்கிறார். அது ஒரு பிரஹஸன (கேலி, பரிகாசம்) சம்பாஷணையாகும். பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் எழுதிய முழு நையாண்டி நாடகம் ‘மத்தவிலாஸ (மதுபானப் பிரியர்களின் களியாட்டம்) பிரஹஸனம்’ போல் இல்லாவிட்டாலும் இங்கு வெகு நன்றாகவே அந்த யுக்தியைக் கையாண்டிருக்கிறார்.

இதன் மூன்றாம் அங்கத்தில் மதுக்கடையைச் சுற்றி விவரிக்கப்படும் சம்பவங்கள் ‘மத்த விலாச”த்தில் வருவது போலவே நகைச்சுவையுடன் களியாட்டக் கூத்தாக அமைக்கப் பட்டுள்ளன. பல்லவ மன்னன், கபாலிகன், புத்த பிக்கு, ஒரு மொடாக்குடி யாசிப்பவன் ஆகியோரைப் பரிகசிக்கும் போது, கவி பாஸா, ஒற்றன், மதுபானப் பிரியனானப் பைத்தி யக்காரன், புத்த பிக்கு ஆகிய மூவரை வைத்துக் கொண்டு நையாண்டி செய்கிறார்.

இதுதான் அக்காலக்கட்டத்தில் பரவலாக நடைமுறையில் இருந்த வழக்கம், போலும்!                                                                              

இதைப் படிக்கும் போது இன்றையத் தமிழகக் குடிமகன்களின் செயல்பாடுகளும், ‘டாஸ்மாக்’ கடைகளின் முன் நடக்கும் களேபரங்களும் நினைவுக்கு வந்தால் நாம் என்ன செய்வது?!

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை, இந்நாடகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை வெளியிட்டுள்ளது.

TO BE CONTINUED ……………………………

TAGS- நையாண்டி, பரிகாசம், ,மகேந்திரவர்மன் ‘மத்தவிலாஸ பிரஹஸனம்,  மதுபானப் பிரியர்,  

காதால் கெடுவது மான், நாவால் கெடுவது மீன் (Post No.10,888)

compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 10,888

Date uploaded in London – –   25 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஞான  மொழிகள்- 38 contd…..

கண்ணால் கெடுவது விட்டில்,

காதால் கெடுவது மான்,

நாவால் கெடுவது மீன்,

மூக்கால் கெடுவது வண்டு,

ஸ்பரிசத்தால் கெடுவது யானை,

ஐம்புலன்களினாலும் கெடுவது மனிதன்

xxxx

படுத்தே இருப்பவர்க்கு பாயும்,

பேசியே திரிபவர்க்கு வாயும்,

பகையாகும்.

ஆரோக்யத்திற்கு பாயையும்,

ஆனந்ததிற்கு வாயையும்

சுருட்டுதல் நலமாகும்.

Xxxx

முயலின் வெற்றி அதன் காலில்,

பெண்ணின் வெற்றி நடத்தையால்,

மனிதனின் வெற்றி அவன் பெருந்தன்மையால்!!!

தீப்பெட்டித் தொழிலில் வேலை பார்க்கும் சிறுவனே!

நீ சிலுவையைச் சுமக்கும் சின்ன ஏசு!!!

பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்,

கருணையுள்ள நெஞ்சிலே கோவில் கொள்கிறான்!!!

XXXX

                      ஞான மொழிகள்-45

                                                      Kattu kutty

                    ஸ்மார்ட் மொழிகள்!

பழமொழி படித்திருப்பீர்கள் முதுமொழி படித்திருப்பீர்கள் 


ஆனால் smart மொழி படித்திருக்க மாட்டீர்கள்


1 . அகத்தின் அழகு status இல் தெரியும் . 


2 . like இட்டவரை உள்ளளவும் நினை . 


3 . இக்கரை மாட்டுக்கு அக்கரை google maps 


4 . அழுத பிள்ளை games விளையாடும் . 


5 . block பண்ணின பூனை chat இனை நாடாது . 


6 . பல நாள் திருடன் cctv இல் அகப்படுவான் 


7 . iphone apple சாப்பிட உதவாது 


8 . பழகப் பழக PUBG உம் விளங்கும் 


9 . ஓசி wifi உள்ள போதே download பண்ணிக் கொள் 


10 . சீனா தேசம் சென்றாலும் ஊர் roaming ஐ வைத்துக் கொள்


11 . அன்பான சினேகிதனை wifi hotspot இல் அறியலாம் . 


12 . இறக்கப் போனாலும் selfie எடுத்துட்டு போ . 


13 . unlimited data என்றால் பிணமும் வாய் பிளக்கும் . 


14 . சொறி பிடித்தவன் கையும் smartphone பிடித்தவன் கையும் சும்மா இருக்காது . 


15 . comments மேல் comments அடித்தால் post உம் நிறையும் . 


16 . 20’s kids கு தெரியுமா 90’s kids இன் அனுபவங்கள் . 


17 . முற்பகல் post செய்யின் பிற்பகல் viral ஆகும் . 


18 . i phone 11 pro கு கொட்டாவி விடாதே . 


19 . 4G இல் download ஆகாதது 2G இல் download ஆகுமா ? 


20 . திக்கற்றவனுக்கு Google maps ஏ துணை 

*** 

TO BE CONTINUED……………………

 tags-  காதால் கெடுவது மான், நாவால் , மீன், ஞான மொழிகள், ஸ்மார்ட் மொழிகள்!