திராவிடர்களுக்கு செமை அடி  கொடுத்த அறிஞர் சண்முகம் பிள்ளை! (Post.15,008)

Written by London Swaminathan

Post No. 15,008

Date uploaded in London –  21 September 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

தமிழனுக்கு  தாலி உண்டு! தமிழர்கள் தீ வலம் வந்து திருமணம்!!

அனைவரும் படிக்க வேண்டிய நூல்கள்

சங்கத் தமிழரின் வழிபாடுகளும் சடங்குகளும்

தமிழ்ப் பல்கலைக்கழகம்   பேராசிரியர் மு. சண்முகம் பிள்ளை,

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 1996

இந்தியப்  பண்பாடும் தமிழரும், எஸ் இராம கிருஷ்ணன் , மீனாட்சி புஸ்தக நிலையம், மதுரை, 1971

தமிழர்கள் பற்றி கால்டுவெல் கும்பல்களும் திராவிடக் கும்பல்களும் டே ஒன் DAY ONE முதல் பொய்ப் பிரசாரத்தைப் பரப்பி வருகின்றன. முட்டாள் தமிழர்களை BRAIN WASH மூளைச் சலவை  செய்துவருகின்றன; இந்தக் கும்பல்களுக்கு  தமிழ் பல்கலைக்கழகப் பேராசிரியர் மு சண்முகம் பிள்ளையும் வலது / சோவியத் கம்யூனிஸ்ட் கட்சித் தமிழ் அறிஞர் எஸ் ஆர் கே யும் செமை அடி கொடுக்கின்றனர். எஸ் ஆர் கே எனப்படும் எஸ்.ராமகிருஷ்ணன்  மதுரைப் பலக்லைக்கழகத்தில் கம்பனும் மில்டனும் ஆராய்ச்சிக் கட்டுரைக்காக டாக்டர் பட்டம் பெற்றவர் ; மதுரை வடக்கு மாசி வீதியில் எங்கள் வீட்டுக்கு ஐந்து வீடுகள் தள்ளி வசித்ததால் அடிக்கடி அவருடன் காரசாரமாக விவாதம் செய்வோம். வலது கம்யூனிஸ்ட் கட்சிப் பிரசாரத்தினால் ஆங்கிலப் பேராசிரியர் பதவியை இழந்தவர்; அவரிடம் நான் எம் ஏ படித்தேன்.   

ஒல்காப்புகழ் தொல்காப்பியனைப் புகழ்ந்த உச்சிமேற்புலவன் நச்சினார்க்கினியன் , அவர் ஒரு பிராமணன் என்றும் அவரது பெயர் த் ருண  தூமாக்கினி என்றும் எழுதிவைத்தார்; அந்தப் பிராமண தொல்காப்பியனோ சதுர்வேதி- நான்மறைமுற்றிய –அதங்கோட்டு ஆச்சார்யாரிடம் சர்ட்டிபிகேட் வாங்கி தொல்காப்பியதத்தை தமிழ் கூறு நல்லுலகத்துக்கு ஈந்தார் .அவரோ மனு நீதி சொல்லும் எட்டுவகைத் திருமணம் பானிணீயம் சொல்லும் உவமை இயல் ஆகியவற்றை அப்படியே கொடுத்தார்; கூசாமல் நூல் முழுதும் அறம்,பொருள் இன்பம் என்ற தர்மார்த்த காமத்தையும் சொல்லி ஸம்ஸ்க்ருதச் சொற்களை அள்ளித் தெளித்தார் ; இதை எல்லாம் மறைக்க திராவிடர்கள் அவருக்கு மீசை வைத்து மேல் துண்டு போட்டுப் படமும் வெளியிட்டனர்; திருவள்ளுவரின் பூணூலை மறைத்து விபூதியை அழித்தது போல இதைச் செய்தவர்கள் இப்போது வள்ளலாளரின் விபூதியை அழித்து வடலூர் ஆஸ்ரமத்தை கபளீகரம் செய்துவருகின்றனர் . நிற்க ;தாலி பற்றிக் காண்போம்.

களங்கனி யன்ன கருங்கோட்டுச் சீறியாழ்ப்

பாடுஇன் பனுவல் பாணர் உய்த்தெனக்

களிறில ஆகிய புல்அரை நெடுவெளிற்

கான மஞ்ஞை கணனொடு சேப்ப

ஈகை அரிய இழையணி மகளிரொடு

சாயின்று என்ப ஆஅய் கோயில்;

சுவைக்குஇனிது ஆகிய குய்யுடை அடிசில்

பிறர்க்கு ஈவுஇன்றித் தம்வயிறு அருத்தி

உரைசால் ஓங்குபுகழ் ஒரிஇய

 முரைசுகெழு செல்வர் நகர்போ லாதே.– உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்; புறம் 127

ஐம்படைத் தாலியையும் புலிப்பல் தாலியையும் குழந்தைகட்குக் காப்பணியாக அணிவிக்கும் வழக்கத்தை ஏற்கும் திராவிடங்கள் இந்தத் தாலியை மட்டும் ஏற்கவில்லை; நல்ல வேளையாக அதுகள் சொன்னது போல தாலியை அறுக்காமல் தமிழ்ப்பெண்கள் வாழ்வது பெருமைக்குரியது.

இதில் ஆய் அண்டிரன், மகளிரின் தாலியைத் தவிர ஏனைய அனைத்தையும் தானம் செய்துவிட்டார் என்பதை ஈகை அரிய இழையணி என்ற சொல் தொடரின் மூலம் அறிகிறோம்

முன்னுக்குப்பின் முரணாகப் பேசுவதில் திராவிடங்களை மிஞ்ச எவராலும் முடியாது ; சிலப்பதிகாரம், சேரன் செங்குட்டுவன், கண்ணகி -கோவலன் எல்லாம் இரண்டாம் நூற்றாண்டு — அதாவது சங்ககாலம் — என்று ஒரு பக்கம் தம்பட்டம் அடிக்கும் திராவிடங்கள் சிலப்பதிகாரத்தில் பார்ப்பனன் செய்து வைத்த அக்கினி சாட்சி கல்யாணத்தை மறைத்தும் பசப்பியும் வருகின்றன ; இதன் பெயர் திராவிடியன் மாடல் DRAVIDIAN MODEL!

கோவலன் கண்ணகியை மணந்தபோது ‘மாமுது பார்ப்பான் மறைவழி காட்டி’யதாகவும் மணமக்கள் தீ வலம் செய்ததாகவும் இளங்கோவடிகள் கூறுகின்றார். இதைச் சொல்லும்போது மட்டும் சிலப்பதிகாரம் ஐந்தாம் நூற்றாண்டு நூல் என்று சொல்லி மழுப்பி விடுகின்றனர்.

ஆனால் திராவிடர்களுக்கு செமை அடி கொடுக்கும் வாதத்தை பேராசிரியர் சண்முகம் பிள்ளை நமக்கு அளிக்கிறார்

குறுந்தொகை 106

106. குறிஞ்சி

புல் வீழ் இற்றிக் கல் இவர் வெள் வேர்

வரை இழி அருவியின் தோன்றும் நாடன்

தீது இல் நெஞ்சத்துக் கிளவி நம் வயின்

வந்தன்று வாழி, தோழி! நாமும்

நெய் பெய் தீயின் எதிர்கொண்டு,

தான் மணந்தனையம்” என விடுகம் தூதே.

இதில் நெய் பெய் தீயின் எதிர்கொண்டு,

தான் மணந்தனையம்’

என்று அக்கினி சாட்சியாக கல்யாணம் செய்துகொண்டதை சொல்கிறாள் ; எல்லாவற்றுக்கும் மேலாக நெய் பெய் தீ என்னும் உவமை சம்ஸ்க்ருத நூல் முழுதும், உபநிஷத் தோறும் வழங்கி வருகிறது; அதுமட்டுமல்ல இது யாக யக்ஞங்களைத் தமிழர்கள் செய்ததால் பரவிய உவமை என்பதையும் அறிய முடிகிறது.

தமிழர்கள் பங்குனி மாதம், ரோகிணி , கார்த்திகை, ஓணம், ஆருத்ரா என்னும் ஆதிரை நட்சத்திரம் ஆகியவற்றை அப்படியே ஸம்ஸ்க்ருதப் பதம் மூலம் சொல்வதையும் கவனிக்க வேண்டும் இதில் ரோகிணிக்கு சம்ஸ்க்ருதத்தில் உள்ள வண்டி என்ற SYMBOL சிம்பலையும் சகடம் என்ற சொல்லால் வடித்துள்ளனர்.

இதை இந்தியப்பண்பாடும் தமிழரும் என்ற நூலில் எஸ் ராமகிருஷ்ணன்  1971- ஆம் ஆண்டு வெளியிட்ட நூலில் காட்டி,

போதாயன கிருஹ்ய சூத்திரமும், மானவ கிருஹ்ய சூத்திரமும் கூறியிருப்பதையும் எடுத்துக் காட்டியுள்ளார் ; அவைதான் கல்யாணத்துக்கு உகந்த நட்சத்திரம் ரோகிணி என்று முன்காலத்திலேயே சொல்லிவிட்டன.

அதுமட்டுமல்லாமல்

பாணிக்கிரகணம் என்னும் கைத்தலம் பற்றுதல், ஓமம் வளர்த்தல் தீ வலம் செய்தலை கலித்தொகையிலும் 69-3/5 காண்கிறோம் என்கிறார் SRK  எஸ் ஆர் கே.

காம உணர்வு கொண்டு திருமணம் செய்துகொண்டு மனைவியாக ஏற்றுக்கொள்ளப்பட்டவள் காமக்கிழத்தி. இவள் தெரிவிக்கும் செய்திகள் இதில் கூறப்பட்டுள்ளன.

போது அவிழ் பனிப் பொய்கை, புதுவது தளைவிட்ட

தாது சூழ் தாமரைத் தனி மலர்ப் புறம் சேர்பு

காதல் கொள் வதுவை நாள், கலிங்கத்துள் ஒடுங்கிய

மாதர் கொள் மான் நோக்கின் மடந்தை தன் துணையாக,

ஓதுடை அந்தணன் எரி வலம் செய்வான் போல்,   5

ஆய் தூவி அன்னம் தன் அணி நடைப் பெடையொடு

மேதகத் திரிதரூஉம் மிகு புனல் நல் ஊர!

திருமணம் செய்துகொள்ளும் அந்தணன் தீயை வலம் வருவான். அதுபோல அன்னம் தன் பெடையுடன் தாமரையைச் நுற்றிவரும் புனல் மிக்க ஊரை உடையவனே!

தாமரைப் போது மலரும் பொய்கை. புதிய போது கட்டவிழும் தாமரை, தாது சூழ்ந்திருக்கும்  தாமரை. தன்னந்தனியே பூத்திருக்கும் தாமரை. அதனை அழகிய தூவியை உடைய அன்னம் தன் அழகு-நடை போடும் பெண்-அன்னத்தோடு திரிந்தது. காதல் கொள்ளும் திருமணச் சடங்கு நாளில், தன் புத்தாடையுள் ஒடுங்கிக்கொண்டு ஆசை மிக்கு, மான் போல மருண்டு பார்த்துக்கொண்டு வரும் தன் மணப்பெண்ணோடு வேதம் ஓதும் அந்தணன் வலம் வருவது போல அன்னம் தாமரையைச் சிற்றிவரும்.

புதுமணப் பெண்ணும் மாப்பிள்ளையும் – காதல் அன்னங்கள்

வலம் வரும் தீ – தனியே பூத்திருக்கும் தாமரை.– கலித்தொகை 69 Kalitogai 69

***

MY OLD ARTICLE ON TAMIL WEDDING

ரோகிணி நட்சத்திர மர்மம்! தமிழர் திருமணம் நடத்தியது ஏன்?

கட்டுரையாளர்- லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:-1055; தேதி:– மே 21, 2014.

தமிழர்கள் ரோகிணி நட்சத்திர நாளில் திருமணம் செய்ததாக அகநானூற்றில் இரண்டு பாடல்களும் கண்ணகி- கோவலன் திருமணம் ரோகிணி நட்சத்திரத்தில் நடந்ததாக சிலப்பதிகாரமும் கூறும். ரோகிணி நட்சத்திரத்தில் திருமணம் ஏன்?

தமிழர்களுக்கு சோதிடத்திலும் பல்லி சொல்லும் பலனிலும், புள் (பட்சி) நிமித்தத்திலும், தும்மல்,கண் துடிப்பு விஷயத்திலும், அபார நம்பிக்கை இருந்ததை சங்க இலக்கியத்தில் நூற்றுக்கணக்கான இடங்களில் காண முடிகிறது. இந்த ரோகிணி நட்சத்திர நம்பிக்கை வட இந்தியாவிலும் உண்டு. தமிழ் இலக்கியத்தில் இது இடம்பெறும் 500, 600 ஆண்டுகளுக்கு முன்னரே இது சம்ஸ்கிருத இலக்கியத்தில் இருக்கிறது.

இந்துக்கள் வட இமயம் முதல் தென் குமரி வரை (‘ஆ சேது ஹிமாசலம்’) — ஒரே நம்பிக்கை வைத்திருந்ததை இது காட்டுகிறது. அது மட்டுமல்ல, ஆரிய – திராவிட இனவாதம் பேசி நாட்டைப் பிரிக்க, இந்து மதத்தை ஒழிக்க முற்பட்டோரின் பொய்மை வாதத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

போதாயன கிருஹ்ய சூத்திரம், மனுதர்ம சாஸ்திரம், வால்மீகி ராமாயணம், காளிதாசனின் படைப்புகள் முதலியன நிலவு- ரோகிணி நெருக்கத்தைப் புகழ்ந்து உரைக்கின்றன. கணவன் – மனைவி, காதலன் – காதலி அன்புக்கு உவமையாகப் பயன்படுவது ‘’நிலவு – ரோகிணி’’ நெருக்கம்தான். சங்க இலக்கியத்திலும் இந்த நெருக்கம் பல இடங்களில் உவமையாகப் பயன்படுத்தப்படுகிறது.
அகநானூற்றில் இரண்டு கல்யாணப் பாடல்கள் இருக்கின்றன. இரண்டும் தமிழர் திருமண முறையைப் படம்பிடித்துக் காட்டுகின்றன. இதை விட்டால் அடுத்தபடியாக சிலப்பதிகாரத்தில்தான் கல்யாணக் காட்சி. அதையும் விட்டால் ஆண்டாளின் வாரணம் ஆயிரத்தில்தான் அடுத்த கல்யாணக் காட்சி வருகிறது.


ஆல்டிபாரன் என்பது ரோகிணியின் அராபிய பெயர்

அகநானூறு 86 (நல்லாவூர்க் கிழார்) பாடிய பாடலில்

“கனை இருள் அகன்ற கவின்பெறுகாலை
கோள்கால் நீங்கிய கொடுவெண் திங்கள்
கேடுஇல் விழுப்புகழ் நாள் தலைவந்தென……….”
பொருள்:- வெண்மையான சந்திரனை குற்றமில்லாத சிறந்த புகழினை உடைய உரோகிணி என்ற நாள் (நட்சத்திரம்) அடைந்தது…………………………

அகநானூறு 136 (விற்றூற்று மூதெயினனார் பாடிய பாடல்)
“மைப்பு அறப்புழுக்கின் நெய்க்கனி வெண்சோறு
வரையா வண்மையொடு புரையோர்ப்பேணி
புள்ளுப் புணர்ந்து இனிய ஆக, தெள் ஒளி
அம்கண் இருவிசும்பு விளங்கத் திங்கட்
சகடம் மண்டிய துகள்தீர் கூட்டத்து………………”
(திங்கள்=சந்திரன், சகடம்=ரோகிணி நட்சத்திரம்)

இந்த இரண்டு பாடல்களும் தரும் பொருளின் சுருக்கம்: கல்யாணம் என்பது சந்திரன் ரோகிணி நட்சத்திரத்தை அடைந்த நாளில் நடைபெறும். அந்த வீட்டில் ‘’வெஜிட்டேரியன்’’ சாப்பாடு (வெண்சோறு+ நெய் அல்லது உளுந்து கலந்த பொங்கல்) கிடைக்கும். சுமங்கலிகள் கூடி நின்று மங்கள முழக்கம் செய்வர். வீடு பந்தல் போட்டு, மணல் தூவி அலங்கரிக்கப்பட்டிருக்கும். சுவற்றில் தெய்வ ஓவியங்கள் இருக்கும்.புத்தாடைகள் உடுத்தி இருப்பர் முதலிய பல விஷயங்களை நீண்ட பாடலில் காணலாம்.

taurus_constellation_map

வால்மீகி ராமயணத்தில் பல இடங்களில் சந்திரனைச் சேர்ந்த ரோகிணி போல என்ற உவமை வருகிறது. காளிதாசனும் விக்ரம ஊர்வசீயம், சாகுந்தலம் நாடகங்களிலும், ரகுவம்ச காவியத்திலும் இந்த உவமைகலைப் பயன்படுத்துகிறான். ஆனால் இவைகளுக்கெல்லாம் முன்னர் படைக்கப்பட்ட போதாயன க்ருஹ்ய சூத்திரத்திலும், மனு தர்ம சாஸ்திரத்திலும் ரோகிணி நட்சத்திர நாள் திருமணத்துக்கு உரிய நாள் என்று தெளிவாகவே எழுதப்பட்டுள்ளது. அதை இளங்கோவும் நல்லாவூர்க் கிழாரும் விற்றூற்று மூதெயினனாரும் பின்னொட்டிச் செல்வது பாரதீய கலாசாரத்தின் செல்வாக்கைக் காட்டுவதாக அமைந்துள்ளது.

தமிழ் இலக்கியத்தில் மணநாள் குறிப்பு தவிர, பொதுவாக ரோகிணி-நிலவு உறவு பற்றிக் கூறும் செய்யுள்கள்: திருமுருகாற்றுப்படை வரி 87/ 88, நெடுநல்வாடை-163, புறம் 60, 160 பாடல்கள்.

சம்ஸ்கிருத இலக்கியத்தில்:- ஐதரேய பிராமணம், சதபத பிராமணம் மற்றும் போதாயன, மானவ க்ருஹ்ய சூத்திரங்கள்; வால்மீகி ராமாயணம்(5-33-7;5-24-10;5-37-24;5-15-22 etc). காளிதாசனின் விக்ரம ஊர்வசீயம்3-4, 3-12
சாகுந்தலம் 7-22; ரகு வம்சம்-14-40.

புராணக் கதை

தக்ஷன் என்ற ரிஷியுனுடைய 27 பெண்களை சந்திரன் திருமணம் செய்துகொண்டார். அவர்களில் ரோகிணியிடம் மட்டும் அதிகம் அன்பு செலுத்தவே பற்ற மனைவியர் தந்தையிடம் முறையிட்டனர். அவர் சந்திரன் தேய்ந்து அழியட்டும் என்று சாபமிட்டார். எல்லா மனைவியரும் அவ்வளவு கடுமையான சாபம் வேண்டாம் என்று மன்றாடினர்.

இந்துமதத்தில் கடவுளேயானாலும் ஒரு வரமோ சாபமோ கொடுத்துவிட்டால் அதைத் திரும்பி எடுக்கவே முடியாது ஏனெனில் இது சத்தியத்தின் அடிப்படையில் அமைந்த மதம். ஆனால் குறைக்கவோ, கூட்டவோ முடியும். உடனே நிலவு என்பது 15 நாள் தேய்ந்து (கிருஷ்ண பட்சம்) அடுத்த 15 நாள் வளரட்டும் என்றார் தக்ஷன்.

உண்மையில் இது வான சாஸ்திர உண்மை. அந்தக் காலத்தில் விஞ்ஞானப் பாடங்களை இப்படிக் கதையாகச் சொல்வது மரபு. ஆக நிலவின் சுக்ல பட்சம், கிருஷ்ண பட்சம் பற்றி விளக்க இப்படிக் கற்பனைக் கதை உற்பத்தி செய்தனர்.

ஆயினும் ரோகிணிக்கு அதிக அன்பு காட்டியது என்ன விஞ்ஞான நிகழ்ச்சி என்று இப்போது சொல்ல முடியவில்லை. ஒருவேளை முன்னொரு காலத்தில் நிலவு ரோகிணிக்கு மிக அருகில் வந்திருக்கலாம். அல்லது அந்த இடத்தைக் கடக்க கூடுதல் நாட்கள் எடுத்திருக்கலாம். இப்போது நிலவு 29 நாட்களுக்கு ஒருமுறை பூமியைச் சுற்றுகிறது.

Taurus web

இதே போல பூமியே நடுங்கும்படியான ஒரு நிகழ்ச்சிக்குப் பின்னர் புதன் பிறந்ததாகவும் இன்னொரு புராணக் கதை கூறுகிறது. இதில் பிருஹஸ்பதியும் சம்பந்தப்படுவதால் இதுவும் ஒரு விண்வெளி விஞ்ஞானக் கதையே. பூமி, நிலவு மோதலால் அல்லது குரு (வியாழன் கிரக ஈர்ப்பால்) ஈர்ப்பால் புதன் உருவாகி இருக்கலாம். எதிர்காலத்தில் புதன் கிரகம் பற்றி புதிய தகவல் வரும்போது நம் புராணக் கதைகள் விஞ்ஞானக் கதைகளாகக் கருதப்படும்.

கிரகணம் பற்றி நாம் நன்கு அறிந்து, அதைக் கணக்கிட்டு பஞ்சாங்கத்தில் குறித்தபோதும் பாமர மக்களுக்கு இதெல்லாம் விளங்காது என்பதால் சந்திரனை பாம்பு விழுங்குகிறது என்று கதை சொல்லுவது போலத்தான் நிலவு- ரோகிணி கதையும்.

நிலவு பூமியை ஒரு முறை வலம் வர 27 நாட்கள் ஆகும். பூமியும் சூரியனைச் சுற்றுவதால் 27 நாட்களுக்குள் பூமி இரண்டரை நாள் தூரம் முன்னேறி இருக்கும். இதனால் நிலவு ஒரு முறை பூமியை வலம் வர ஆகும் நாட்கள் 29-5 (இருபத்தொன்பதரை) நாட்கள். இதை ஒரு சாந்திர மாதம் என்பர். நிலவு போகும் பாதையில் தெரியும் 27 நட்சத்திரங்களை அவனது மனைவியர் என்று பாமர மக்களுக்காக கதை சொன்னார்கள்.

நிலவுக்கு ‘’அருகில்’’ ரோகிணி நட்சத்திரம் வருகிறது என்பதெலாம் மாயத்தோற்றமே. ஏனெனில் நட்சத்திரங்கள் கோடி கோடி மைல்கள் அப்பால் இருக்கின்றன. நிலவு அவைகளைக் கடந்து போவது போலத் தோன்றினாலும் நிலவுக்கும் அவைகளுக்கும் இடையில் கோடானு கோடி மைல்கள் இருக்கின்றன.

பாலகங்காதர திலகர் என்ற சுதந்திரப் போராட்ட வீரர் ரிக் வேதத்தில் உள்ள வான சாத்திரக் குறிப்புகளை வைத்து அதன் காலம் கி.மு.6000 என்று கணித்தார். இவர் ஆராய்வது தெரியாமல், தனியாக ஆராய்ந்த ஜெர்மானிய அறிஞர் ஜாகோபியும் வான சாஸ்திரத்தை வைத்து ரிக் வேதம் கி.மு.4500 என்று கூறினார்.

பகவத் கீதையில் கண்ணன்– ‘’மாதங்களில் நான் மார்கழி’’– என்று கூறுவது போல கி.மு.ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாணினியும் மார்கழியே வருடத்தின் முதல் மாதம் என்கிறார். அப்போதைய கோள் நிலை கொண்டு கணிக்கப்பட்ட கணக்கில் ரோகிணி, கார்த்திகை நட்சத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் இருப்பது தெரிகிறது. எதிர்காலத்தில் தமிழர்களும் வடவர்களும் ஏன் ரோகிணியில் கல்யாணம் செய்தார்கள் என்பது தெரியவரலாம்.

contact swami _48@yahoo.com 

–SUBHAM—

TAGS- தமிழனுக்கு, தாலி உண்டு,    தமிழர்கள், தீ வலம் வந்து திருமணம், திராவிடர்களுக்கு செமை அடி, சண்முகம் பிள்ளை

ஆதிசைவப் பிரபாவம் (Post No.15,007)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,007

Date uploaded in London – 21 September 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ஆதிசைவர்கள் நலவாழ்வு மையம் வெளியீடு!!

ச.நாகராஜன்

கள்ளக்குறிச்சி ஆதிசைவர்கள் நலவாழ்வு மையத்தின் நிறுவனரான தில்லை  சிவஸ்ரீ கார்த்திகேய சிவம் சிறப்பு மிக்க பழைய நூல்களை வெளியிட்டு சிவப்பணியைச் செய்து வரும் சிவத் தொண்டர். நூற்றாண்டுகளுகு முன்பே ஆதிசைவர்களின் பெருமையை உரைக்கும் நூலாக இருக்கும் ஆதிசைவப் பிரபாவம் என்ற நூலானது காலவெள்ளத்தில் அழிந்துவிடாமல் உயிர் பெற வேண்டுமென்ற நல் நோக்கத்தில் இந்த நூலை அவர் 2017 டிசம்பரில் பதிப்பிட்டுள்ளார்.

1880ஆம் ஆண்டு இந்த நூல் முதன் முதலாகப் பதிக்கப்பட்டது.

இந்த நூலை எழுதியவர் ஸ்ரீ சோமசுந்தர நாயகர் ஆவார். இவரது காலம் 1846 முதல் 1901 முடிய ஆகும். இவர் சுமார் 126 நூல்களை எழுதியதாகத் தெரிகிறது. தனது உத்யோகத்தை விட்டு விட்டு இவர் சைவப் பணி ஆற்ற களத்தில் இறங்கினார். இவரது சிறப்பான சைவ சமயப் பணிகளைக் கண்டு வியந்த இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி அவர்கள்இவருக்கு “வைதிக சைவ சித்தாந்த சண்டமாருதம்” என்ற பட்டத்தைச் சூட்டினார்.

பாஸ்கர சேதுபதி மன்னர் விவேகானந்தர் அமெரிக்காவில் வெற்றிக் கொடி நாட்டி விட்டு தாயகம் திரும்பும்போது அவரைப் பெரும் வரவேற்புக் கொடுத்து வரவேற்றவர். அவர்விவேகானந்தரை தமது அரசவையில் சோமசுந்தர நாயகரைச் சந்திக்க ஏற்பாடு செய்தார். அப்போது நாயகர் விவேகானந்தரிடம் வேதாந்தம் போன்று ஆகமங்களின் சாரமாக விளங்கும் சைவசித்தாந்த தத்துவத்தை எடுத்துக் கூறினார். விவேகானந்தர் அது கேட்டு வியப்புற்றார் என்பது தெரிய வருகிறது.

பரசமயங்களின் தத்துவங்களை அக்கு வேறு ஆணிவேறாக ஆராய்ந்து அவற்றைத் தவிடு பொடியாக்கும் சூரர் என்பதால் இவருக்கு திருவாவடுதுறை ஆதீனம் “பரசமயக் கோளரி என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தார்கள்.

நூல் முழுவதும் ஆதி சைவர்களின் சிறப்பைக் காணலாம். அத்துடன் மட்டுமல்லாமல் “சைவ வேடம் பூண்டு திரியும் வஞ்சகப் பேய்களை இவர் சாடுவதையும் காணலாம்.

ஆசாரியர் என்பவர் யார்நாலு வேதம் ஆறு அங்கங்களை அறிந்தவரகவும்ஞான பாதங்களை நன்கு போதிப்பவராகவும்கிரியா பாதத்தில் சமர்த்தராகவும்யோக பாதத்தில் அப்பியாசம் உள்ளவராகவும்சரியா பாதப் பிரகாரம் நடத்தை உள்ளவராயும்சிவபூஜைசிவாகினி இவைகளைத் தப்பாமல் நடத்துகின்றவராயும் உள்ளவரே ஆசாரியர் ஆவார்.

இந்த லட்சணங்களை உடையவர்கள் ஆதி சைவரே.

சைவர் ஏழு பிரிவினராவர்.

1.      அநாதி சைவர் 2) ஆதி சைவர் 3) மஹா சைவர் 4) அநு சைவர் 5) அவாந்தர சைவர் 6) பிரவர சைவர் 7) அந்ய சைவர்.

இதில் அநாதி சைவர் சிவபெருமான் ஒருவரே

சகலபிராணிகளுக்கும் ஹிதத்தைச் செய்பவனே ஆசாரியன் ஆவான்.

 ஆசாரிய நிதிகளாகிய சிவ வேதியரே சரவ அநுக்ரஹத்வாதி  பரம தர்மங்களை உடையவராய் விளங்குவர்.

இப்படி இந்த நூல் ஆதி சைவரின் பெருமையை தகுந்த பிரமாணங்களுடன் சித்தரிக்கிறது. பர சமயங்களை நிராகரிக்கிறது.

சோமசுந்தர நாயகர் இயற்றியுள்ள 47 நூல்களின் பட்டியலை நூலின் இறுதியில் காணலாம்.

48 பக்கங்கள் உள்ள இந்த நூல் அழகிய தாளில் சிறப்புற அச்சிடப்பட்டுள்ளது. ஸ்ரீ சோமசுந்தர நாயகர் வரலாற்றைச் சுருக்கமாக தில்லை சிவஸ்ரீ கார்த்திகேய சிவம் தந்துள்ளார்.

சைவத்தில் பற்றுள்ள அனைவரும் படிக்க வேண்டிய நூல் இது. ஆதிசைவர்கள் நிச்சயம் இதைத் தங்களுடன் வைத்திருக்க வேண்டும். அத்துடன் மட்டுமல்லாமல் ஏன் சைவம் அல்லாத பர சமயங்கள் நிராகரிக்கப்படுகிறது என்பதற்கு அடிப்படையான வாதங்களையும் இந்த நூல் தருகிறது.

பதிப்பாசிரியர் தில்லை சிவஸ்ரீ கார்த்திகேய சிவம் நமது பாராட்டுக்குரியவர்.

40 ரூபாய் விலையுள்ள 48 பக்கங்கள் கொண்ட இந்த நூலை அன்பர்கள்ஆதி சைவர்கள் நலவாழ்வு மையம்குளத்து மேட்டுத் தெருகள்ளகுறிச்சி, 606 202 (போன் 97518 47933) என்ற முகவரியிலிருந்து பெறலாம்.

–SUBHAM–

Interesting Stories behind Proverbs –Part 2 (Post.15,006)


Written by London Swaminathan

Post No. 15,006

Date uploaded in London –  20 September 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

The iron is struck only while it is hot.

A man who sees that he is being robbed does not try to catch the robber, but when he meets him takes him to the sheikh. The robber denies the charge, no witness can be produced, and the sheikh dismisses the case with this saying.

***

The jackal said ‘Eat and Measure’

From the story of a hedgehog and jackal who went into a garden through a whole in the fence. After eating a large quantity of grapes, the hedgehog went back to the opening to try if he still could get through, saying to  the jackal, ‘Eat and Measure’, this the jackal failed to do, and was caught by the owner of the garden.

–Moorish proverb

***

Too much confidence lost the frog his tail

The origin of this proverb is a tale. The grand mothe of all frogs was giving out tails and one youngster said to himself, “it will be alright, grannie is sure to  keep me one, I will go in the morning.” When he went  the tails were all gone; whence comes the race of tailless frogs we see today.

–Uganda proverb

***

Half naked, but carrying the scales

Miserable but still laying claim to the  habits of the wealthy merchants, who carry a small balance in their wide sleeves to weigh the sequins and gold coins which they receive in payment.

***

Three things will make a man feel subdued

A woman if she were balm;

A debt of even a drachm;

A question, even if it be only to know the road.

–Arabic proverbs

***

The starlings have hidden the pigeons

Starlings are allowed by the natives to stay in the crops as they eat worms and insects only, whereas the pigeons are chased away, as hey destroy crops. Sometimes you think only starlings are in the field and you do not chase the birds, whereas you have left the pigeons in the field. The meaning of this proverb is that pretexts hide the true facts ad it is used when a man in a court conceals the truth and leads the judges on the wrong track

–Somali proverb

***

Don’t you see the dead?

They lie together in their separate clothes; they cover their heads to go nowhere.

They get not up in the morning.

They warm not themselves in the evening; red earth is over their breasts and stone work at their sides.

Malagasy proverbs

***

The blacksmith’s sheep dies by suffocation

By Mohammedan custom every animal slaughtered for food must have its throat cut; blacksmiths in Sudan are the manufacturers of slaughtering knives – the blacksmith is too busy making these knives to slaughter his own sheep, so leaves it to die a natural death.

–Sudanese proverb

In the wedding of the sickle, the song of the hoe

Refers to a  time  when it was the custom to hold marriages of agricultural implements; this custom of wedding inanimate objects is still extant in regard to groves, wells, tanks etc which are formally married on being opened

–Bihari proverb

***

By black and by red it is finished

When commoner and chief work together the task is done. In olden days chiefs used to  anoint their faces with shark oil and red ochre.

–Maori proverb, New Zealand

***

The bird that imagines itself on a level with the turkey buzzard will soon find itself on the grille.

The turkey buzzard is the scavenger of all food offered as sacrifice. Nobody is allowed to kill or molest it, and the general immunity renders it quite indifferent to the nearness of approach of human beings. For another bird to do this would be nothing short of suicide.

–Yoruba proverb

In Tamil also we have a similar proverb- Kaana Mayil Aadak kandu Vaan kozi polalach sirakinai viriththaar pola. கான மயில் ஆடக் கண்டிருந்த வான் கோழி தானும் அதுவாகப் பாவித்துத் தானுந் தன் பொல்லாச் சிறகை விரித்தாடினார் போலுமே கல்லாதான் கற்ற கவி” The verse composed by an illiterate is similar to the turkey that spreads its wings thinking that it is a peacock in the forest.

–Subham—

Tags- Proverbs, Stories, Part 2, turkey, peacock, iron, hot, Maori, frog tail

GNANAMAYAM 21st September 2025 BROADCAST PROGRAMME SCHEDULE

Gnanamayam Broadcast comes to you EVERY SUNDAY via Zoom, Facebook and You Tube at the same time .

London Time 1 PM (British Summer Time)

Indian Time 5-30 pm (evening)

Sydney, Australia time 11 pm (Night)

*****

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES via Zoom, Facebook and You Tube at the same time.

****

Prayer -Mrs. Jayanthi Sundar Team

***

NEWS BULLETIN

Vaishnavi Anand and Latha Yogesh from London present World Hindu News in Tamil

****

Brhannayaki Sathyanarayanan from Bengaluru speaks on

KOLHPUR MAHALAKSHMI  Temple

****

SPECIAL EVENT-

TALK ON NAVARATRI FESTIVAL

By  NITHYA SOWMY, LONDON

 ******

ஞானமயம் ஒலி/ ஒளி பரப்பு நிகழ்ச்சி நிரல் ஞாயிற்றுக்கிழமை 21 September 2025

நேரில் காணலாம்; கேட்கலாம் via Zoom, Facebook and You Tube at the same time .

***

இறைவணக்கம் – திருமதி ஜெயந்தி சுந்தர் குழுவினர்

****

உலக இந்துமத செய்தி மடல்-

லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்தும் லதா யோகேஷும் வழங்கும் செய்தி செய்தி மடல்.

***

ஆலயம் அறிவோம் —திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன் —

சொற்பொழிவு– தலைப்பு  கோலாப்பூர் மகாலெட்சுமி கோவில்

****

இன்றைய சிறப்பு நிகழ்ச்சி:

நவராத்ரி விழாவின் சிறப்புகள்

சிறப்புரை –நித்யா ஸெளமி லண்டன்

தலைப்பு நவராத்ரி விழாவின் சிறப்புகள்

—subham—

Tags-Gnanamayam Broadcast, 21-9- 2025, programme

Ancient Tamil Encyclopaedia- Part 9; One Thousand Interesting Facts! (Post No.15,005)

 Written by London Swaminathan

Post No. 15,005

Date uploaded in London –  20 September 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

Caste ridden Tamil Society

PART NINE

69.

Sangam Age Tamil society was a caste ridden society; there were upper and lower castes. They lived in different ‘cheris’ i.e. different areas of the town. The lower castes were attacked with derisive, degrading, disgraceful and impolite terms.

All these were seen in today’s Tamil society and in hundreds of old proverbs. But we have poets from different castes in Sangam literature. The surprising thing is we don’t see these many castes in 2000 year old Sanskrit literature. We did not see such things either in seven works of Kalidasa or 13 works of Bhasa.

Educated people were always respected through out India at all times. We see butcher Dharmavyadha teaching Rishi Kausika in Mahabharata. We see King Janaka teaching Brahmins in Upanishads. We see Arundhati, the low cate woman and wife of Rishi Vasistha is saluted by everyone until this day. Tamil kings also respected all poets from all castes.

Purananuru, which gives a true picture of a society that lived 2000 years ago has got many interesting things. The same caste followed the same vocation or profession. They included their vocation in their names. But we don’t see any low caste words in the poets’ names such as Pulaiyan or Paraiayan or Kadamban or Thudian.

Now let us look at some verses where caste is predominant:

Izisinan- Puram 287, 289, 82 இழிசினன் Low caste fellow

Izipirappinon – Puram 363 இழிபிறப்பினோன் Man of Low Birth

(Z is used for special L sound in Tamil)

The prefix IZI means low, base, degraded, down

Some scholars argued that we see love marriages more in Sangam Literature that shows that there were no strict caste rules or caste bias. This is a dangerous argument. If we apply the same rule with Paraththai= Para Stri= Prostitute occurring in the poems, then Tamil society will get a very bad name. If we apply the same rule to infighting among the Tamil society, the longest in the History of the World, then Sangam Tamil society will be dubbed as war mongers. We must always differentiate between poetic conventions and actual conditions of the period.

Above all, the true picture is seen in Today’s Tamil community. Except Brahmins, all the castes are begging to the government to include them in the lowest divisions of society. Though the have millions and billions of rupees, they receive all economic benefits like the fraudulent refugee community in the Western Countries.

Following is from Puram verses.

இழிசினன் – 287 -2 ; 82 -3; 289 -10

துடி எறியும் புலைய!

எறிகோல் கொள்ளும் இழிசின!-287-2.

***

சாறுதலைக் கொண்டெனப், பெண்ணீற்று

உற்றெனப் பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றுக்

கட்டில் நிணக்கும் இழிசினன் கையது-82

இவற்குஈக என்னும் அதுவும்அன் றிசினே;

***

கேட்டியோ வாழி பாண! பாசறைப்

பூக்கோள் இன்றென்று அறையும்

மடிவாய்த் தண்ணுமை இழிசினன் குரலே.-289

Pulaiyan, Pulaiththi புலையன் புலைத்தி They eat dead animals or Dogs. They are used in crematoriums and burial grounds. It is in Bhagavad Gita (5-18) as well

****

Four important low caste sects

Thudiyan, Paraiyan, Paanan, Kadamban in Puram Verse 335

Even Oxford Dictionary has the word Pariah:–

sometimes offensive, an outcast.

“they were treated as social pariahs”

Outcast, persona non grata, leper, reject, untouchable, undesirable, unperson

**

a member of a group of castes concentrated in the Indian states of Kerala and Tamil Nadu and in Sri Lanka, included among the Scheduled Castes or Dalits.

**

Of the four low castes, three are linked with music. But Kadamban is an odd word. No one can give precise meaning; still struggling with the word.

நான்கு முக்கிய ஜாதிகள்

துடியன்பாணன்பறையன்கடம்பன்என்று

இந் நான்கு அல்லது குடியும் இல்லை;– புறம் 335.

***

Pulaiya :

Puram புறம் –259-5; 311-2; 287-1; 360-19;

Kali கலி.72-14;117-7;55-18; 95-10;68-19;85-22

Akam அகம்.34-11;

Narrinai 90-3; 77-1; 347-5;

Kuru.குறு.330-1;

***

Four Main Castes

Like we see the four castes, based on vocation or profession in the latest part of Rig Veda (Purushasuktam in Tenth Mandala), we see same four divisions in Purananuru where Upper and Lower divisions in the society are mentioned.

Puram 183

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்

பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே;

பிறப்போ ரன்ன உடன்வயிற்று உள்ளும்

சிறப்பின் பாலால் தாயும்மனம் திரியும்

ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்

மூத்தோன் வருக என்னாது அவருள்

அறிவுடை யோன்ஆறு அரசும் செல்லும்

வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்

கீழ்ப்பால் ஒருவன் கற்பின்

 மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே.

This poem gives us three points:

1.Even a mother is more favourable to a learned son.

2.Even a king will favour educated one than an illiterate (in the society or royalty).

3.Even in the society, where there are four fold divisions, a learned person from the lowest community person will be approached by upper caste man (Four Divisions or Sects- Brahmana, Kshatriya, Vaisya and Shudra).

Tiru Valluvar confirmed it:

“Though high born, an unlettered man is deemed lower than a learned man of lower birth. “—Tirukkural 409.

மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்

கற்றார் அனைத்திலர் பாடு.–409

***

Manu Smriti also emphasizes this point:

“A man who has faith may receive good learning even from a man who is lower, the ultimate law even from a man of the lowest castes, and a jewel of a woman even from a bad family”–2-239

***

“Ambrosia may be extracted even from poison,

And good advice even from a child,

Good behaviour even from enemy

And gold even from something impure “– Manu 2- 240

***

“Women, jewels, learning, law, purification, good advice and various crafts may be acquired from anybody” – Manu 2-241

***

In the last stage of Vedic period we come across four castes. They were based on vocations. Bhagavad Gita verse confirms it.

चातुर्वर्ण्यं मया सृष्टं गुणकर्मविभागश: |

तस्य कर्तारमपि मां विद्ध्यकर्तारमव्ययम् || 4-13||.—Bhagavad Gita

chātur-varṇyaṁ mayā sṛiṣhṭaṁ guṇa-karma-vibhāgaśhaḥ

tasya kartāram api māṁ viddhyakartāram avyayam.—Bhagavad Gita

The four categories of occupations were created by Me according to people’s qualities and activities. Although I am the Creator of this system, know Me to be the Non-doer and Eternal.—Bhagavad Gita.

Tiru Valluvar of Post Sangam period translated it verbatim:

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்.- திருக்குறள் –972 Tirukkural

Tirukkural English Couplet 972:

All men that live are one in circumstances of birth;
Diversities of works give each his special worth.


Couplet Explanation:

All human beings agree as regards their birth but differ as regards their characteristics, because of the different qualities of their actions.

***

புலையன் ஸ்வபாக undefined பகவத் கீதை 5-18

विद्याविनयसम्पन्ने ब्राह्मणे गवि हस्तिनि |

शुनि चैव श्वपाके च पण्डिता: समदर्शिन: ||5-18||.—Bhagavad Gita

vidyā-vinaya-sampanne brāhmaṇe gavi hastini

śhuni chaiva śhva-pāke cha paṇḍitāḥ sama-darśhinaḥ.—Bhagavad Gita

BG 5.18: The truly learned, with the eyes of divine knowledge, see with equal vision a Brahmin, a cow, an elephant, a dog, and a dog-eater (PULAIYAN in Tamil). .—Bhagavad Gita

***

Low caste people worked in Crematoriums

புறம்.363

இருங்கடல் உடுத்தஇப் பெருங்கண் மாநிலம்

உடைஇலை நடுவணது இடைபிறர்க்கு இன்றித்

தாமே ஆண்ட ஏமம் காவலர்

இடுதிரை மணலினும் பலரே; சுடுபிணக்

காடுபதி யாகப் போகித் தத்தம்

நாடு பிறர்கொளச் சென்றுமாய்ந் தனரே;

அதனால் நீயும் கேண்மதி அத்தை; வீயாது

உடம்பொடு நின்ற உயிரும் இல்லை;

மடங்கல் உண்மை மாயமோ அன்றே;

கள்ளி ஏய்ந்த முள்ளியம் புறங்காட்டு 

வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண்

உப்பிலாஅ அவிப்புழுக்கல்

கைக்கொண்டு பிறக்கு நோக்காது

இழிபிறப்பினோன் ஈயப்பெற்று

நிலங்கல னாக விலங்குபலி மிசையும்

இன்னா வைகல் வாரா முன்னே,

செய்ந்நீ முன்னிய வினையே,

முந்நீர் வரைப்பகம் முழுதுடன் துறந்தே.

Puram–363

***

—subham—

Tags- Castes, Low castes, Pariah, Pulaiyan, Caste ridden, Tamil Society, Ancient Tamil Encyclopaedia- Part 9;  One Thousand Interesting Facts,  Bhagavad Gita, Manu Smriti

அமர்நாத் குகையின் அதிசய வரலாறு! (Post No.15,004)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,004

Date uploaded in London – 20 September 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.comxxxx

அமர்நாத் குகையின் அதிசய வரலாறு! 

ச. நாகராஜன் 

ஜம்மு காஷ்மீரில் அனந்தநாக் மாவட்டத்தில் பெஹல்காம் தாலுக்காவில் லிடர் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள புனிதமான குகை ஸ்தலம் அமர்நாத்.

 ஹிந்துக்கள் யாத்திரையை மேற்கொள்ளும் அற்புதமான இடம் இது. 

வருடத்தில் பெரும்பாலான நாட்கள் இந்த குகையை பனி மூடி இருக்கும் 

ஜூலை- ஆகஸ்ட் மாதம் மட்டும் பனி சற்று விலகி இருக்க குகை தென்படும். இது ஹிந்து பஞ்சாங்கத்தின் ஆவணி மாதத்தை ஒட்டி நிகழும். 

அப்போது அமர்நாத் சிவலிங்கத்தைத் தொழுது வழிபட பாரதத்தில் உள்ள மக்கள் அனைவரும் திரள்வர். 

குகையின் உள்ளே ஸ்வயம்பு லிங்கம் ஒன்று உள்ளது. இது குகையின் மேலிருந்து நீர்த்துளிகள் சுண்ணாம்பு மீது விழ அது கட்டியாகி உறைவதால் செங்குத்தாக எழுந்து லிங்க வடிவமாக ஆகிறது.

 கல்ஹணரின் ராஜ தரங்கிணி மற்றும் நீலமாதா புராணம் உள்ளிட்ட பல பழம்பெரும் நூல்களில் அமர்நாத் யாத்திரை பற்றி குறிப்பிடப்படுகிறது.

 பிராங்கோயில் பெர்னியர் (Francois Bernier ) தனது நினைவேடுகளிலும் (Memoirs) இதைக் குறிப்பிட்டுள்ளார். 

ஏராளமான வரலாறுகள் இந்த குகை பற்றிக் குறிப்பிடப்படுகின்றன. ஏராளமான நூல்களும் இது பற்றி எழுந்துள்ளன. 

புராண வரலாற்றின் படி அமர்நாத் குகையை முதலில் கண்டுபிடித்தவர் பிருகு மஹரிஷி. காஷ்மீர் பள்ளத்தாக்கு பல நூறு ஆண்டுகளாக நீரில் மூழ்கி இருந்தது. காஸ்யப மஹரிஷி இந்த நீரை எல்லாம் நீரோடைகள் பலவற்றை உருவாக்கி வெளியேற்றினார். 

இமயமலைக்கு வந்து கொண்டிருந்த பிருகு ,மஹரிஷி இதை அப்போது கண்டுபிடித்தார். 

அமர்நாத்  குகை பற்றி பிரிங்கிஷ் சம்ஹிதா மற்றும் அமர்நாத் மாஹாத்மியம் உள்ளிட்ட நூல்களில் விரிவாகக் காணலாம். 

காலம்காலமாக இந்த வட்டாரத்தில் வழங்கி வரும் நாடோடிக் கதைகள் பலவும் உண்டு.

ஒரு சமயம் சிவபிரானிடம் பார்வதி தேவி என்றும் நிலைத்து வாழும் அமர வாழ்வு குறித்த ரகசியத்தைக் கூறுமாறு கேட்டார். சிவபிரான் அதை பார்வதி தேவிக்கு விளக்கினார். அந்த ரகசியத்தை விரிவாகக் கூறுமாறு கேட்க அதை ஒரு தனியான ரகசியமான இடத்தில் மட்டுமே கூற முடியும் என்றார் சிவபிரான். 

ஒருவரும் அதைக் கேட்டு விடக் கூடாது என்று சிவபிரான சொல்லவே அவர்கள் இருவரும் இந்த அமர்நாத் குகைக்கு வந்தனர். 

நந்தியை பெஹல்காமில் இருக்கும் படி கூறிய சிவபிரான் தலையில்  இருந்த சந்திரனையும் மார்பை அலங்கரித்த பாம்பையும் சேஷாங் ஏரியில் விடுத்தார். கணேசரை மஹாகுண மலையில் இருக்கச் செய்தார். காற்று, ஆகாயம், அக்னி, நீர், பூமி ஆகிய பஞ்ச பூதங்களையும் பஞ்சதர்ணியில் இருக்கச் செய்தார். தனது உடைமைகள் அனைத்தையும் இப்படி நீத்து விட்ட சிவன் தனது தாண்டவத்தை ஆரம்பித்து ஆடினார். 

பின்னர் தேவி பார்வதியுடன் அமர்நாத் குகைக்குள்ளே சிவபிரான் நுழைந்தார்.  அங்கே சமாதி நிலையில் ஆழ்ந்தார்.  அதற்கு முன்பாக காலாக்னியை உருவாக்கி காலாக்னியிடம்  புனிதமான குகையைச் சுற்றி தீ பரவச்செய்யுமாறு கூறினார். ஒருவிதமான ஜந்துவும் உள்ளே தான் அமரத்தன்மை அடையும் ரகசியத்தை தேவியிடம் கூறும் போது கேட்டுவிடக் கூடாது என்று அவர் ஏற்பாடுகளை இப்படிச் செய்த போதிலும் கூட இரு புறாக்கள் இந்த ரகசியத்தை ஒட்டுக் கேட்டு விட்டன. இவைகள் அங்கு இன்றும் சுற்றுகின்றன.

 இப்படி பழங்காலத்திய நாடோடிக் கதையைக் கூறும் இங்குள்ள பூர்வகுடிவாசிகள் அங்கே குகையின் மேலே சுற்றித் திரியும் புறாக்களைக் காண்பிக்கின்றனர். இந்த உயரத்தில் இவ்வளவு குளிரில் வேறு புறாக்கள் பறப்பது சாத்தியம்தானா என்றும் வினவி தங்கள் கூற்றை மெய்ப்படுத்துகின்றனர்.. 

கட்டுரை ஆதாரம்: 5-7-25 OPINDIA செய்தி அறிக்கை

TRUTH VOL 93 ISSUE 22 Dated 12-9-25 யில் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழாக்கம் : இந்தக் கட்டுரை ஆசிரியர்

***

சங்க இலக்கியத்தில் ஜாதிகள் (Post No.15,003)

Written by London Swaminathan

Post No. 15,003

Date uploaded in London –  19 September 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

சங்க காலத்தில் ஜாதிகள் இருந்தன ; சில ஜாதிகள் மிகவும் இழிவாகக் கருதப்பட்டன ; மேலோர், கீழோர்  என்ற பாகுபாட்டினைப் புறநானுறு சொல்கிறது . பிறப்பொக்கும் எல்லா உயிரும் என்பது வள்ளுவர் செய்த பகவத் கீதை ஸ்லோகத்தின் அப்பட்டமான மொழிபெயர்ப்பு . ஜாதிகளின் பட்டியல் நீண்ட பட்டியல்; சங்க இலக்கியம் முழுதும் விரவிக்கிடக்கிறது .

மாடு தின்னும் புலையா உனக்கு மார்கழித்த திரு நாளோ என்ற பிற்காலப் பாட்டுக்கு அடித்தளம் சங்க இலக்கியம் ஆகும்

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்.- திருக்குறள் –972

எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.

चातुर्वर्ण्यं मया सृष्टं गुणकर्मविभागश: |

तस्य कर्तारमपि मां विद्ध्यकर्तारमव्ययम् || 4-13||

chātur-varṇyaṁ mayā sṛiṣhṭaṁ guṇa-karma-vibhāgaśhaḥ

tasya kartāram api māṁ viddhyakartāram avyayam

The four categories of occupations were created by Me according to people’s qualities and activities. Although I am the Creator of this system, know Me to be the Non-doer and Eternal.

சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குணகர்ம விபாகஸ:|

தஸ்ய கர்தாரமபி மாம் வித்ய கர்தாரமவ்யயம்:|| 4-13

பொருள்:

குணத்துக்கும் செய்கைக்கும் தக்கபடி நான் நான்கு வர்ணங்களை உண்டாக்கினேன்.

அதற்கு நான் கர்த்தா (நானே உருவாக்கினேன்) எனினும், என்னை படைப்பை கடந்தவன், என்றும் கர்த்தா அல்ல என்றும் அறிந்துகொள். —பகவத் கீதை 4-13

மஹாத்மா காந்தியும் இந்த கீதை ஸ்லயோகத்தை லோகம் நியாயப்படுத்தில் எழுதியுள்ளார்.

***

புறநானுற்றில் ஜாதி

புற நானூற்றில் கீழ் ஜாதி

இழிசினன் – 287 -2 ; 82 -3; 289 -10

துடி எறியும் புலைய!

எறிகோல் கொள்ளும் இழிசின!-287-2.

***

சாறுதலைக் கொண்டெனப், பெண்ணீற்று

உற்றெனப் பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றுக்

கட்டில் நிணக்கும் இழிசினன் கையது-82

இவற்குஈக என்னும் அதுவும்அன் றிசினே;

***

கேட்டியோ வாழி பாண! பாசறைப்

பூக்கோள் இன்றென்று அறையும்

மடிவாய்த் தண்ணுமை இழிசினன் குரலே.-289

பறைக்கொட்டு  அடிப்பவர்களை பறையன் என்றும் இழிசினன் என்றும் அழைத்தனர் .பழமொழிகளில் இவர்களை எள்ளி நகையாடுவதைக் காணலாம்.

****

(மாடு தின்னும்)  புலையன் , புலைத்தி

நான்கு முக்கிய ஜாதிகள்

துடியன், பாணன், பறையன், கடம்பன், என்று

இந் நான்கு அல்லது குடியும் இல்லை;– புறம் 335.

புறம் –259-5; 311-2; 287-1; 360-19;

கலி.72-14;117-7;55-18; 95-10;68-19;85-22

அகம்.34-11;

நற்றிணை 90-3; 77-1; 347-5;

குறு.330-1;

இவற்றில் பெரும்பாலான  இடங்களில் கீழ் மக்கள் என்னும் பொருளில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அவரவர்கள் குலத்தொழிலைச் செய்து வந்தனர்.

***

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்

பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே;

பிறப்போ ரன்ன உடன்வயிற்று உள்ளும்

சிறப்பின் பாலால் தாயும்மனம் திரியும்

ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்

மூத்தோன் வருக என்னாது அவருள்

அறிவுடை யோன்ஆறு அரசும் செல்லும்

வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்

கீழ்ப்பால் ஒருவன் கற்பின்

மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே.– புறநானுறு 183 . 

தமக்குக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்க்குத் தேவைப்படும் பொழுது உதவி செய்தும், மிகுந்த அளவு பொருள் கொடுத்தும், ஆசிரியரிடம் பணிவோடு, வெறுப்பின்றி கல்வி கற்றல் நன்று. ஒரே தாயின் வயிற்றில் பிறந்த பிள்ளைகளுள், அவர்களின் கல்விச் சிறப்புக்கேற்ப தாயின் மனநிலையும் மாறுபடும். ஒரே குடும்பத்தில் பிறந்த பலருள்ளும் “மூத்தவன் வருக” என்று கூறாமல் அறிவுடையவனையே அரசனும் தேடிச் செல்வான். வேறுபட்ட நான்கு குலத்தாருள்ளும் (பிராமணர்சத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற நான்கு குலத்தினருள்ளும்) கீழ்க்குலத்தில் உள்ள ஒருவன் கல்வி கற்றவனாக இருந்தால், மேற்குலத்தில் உள்ள ஒருவன் அவனை வணங்குவான். புறநானுறு 183 . 

****

இது மனு தர்ம சாஸ்திரத்தில் உள்ளது

2-241. It is prescribed that in times of distress a student may learn the Veda from one who is not a Brahmana; and that he shall walk behind and serve such a teacher, as long as the instruction lasts.

பிராமணர் அல்லாதவரிடமும் வேதம் கற்கலாம் (இதிலிருந்து பிராமணர் அல்லாதோரும் வேதத்தில் சிறப்படைந்தது தெரிகிறது. உ-ம்- ஜனகன்

***

2-223. If a woman or a man of low caste perform anything leading to happiness, let him diligently practise it, as well as any other permitted act in which his heart finds pleasure. கீழ் ஜாதி ஆணோ பெண்ணோ  மனதிற்கு மகிழ்ச்சி தரும் சடங்கினைப்பி பின்பற்றினால் அவர்கள் பின்பற்றட்டும்

***

“A man who has faith may receive good learning even from a man who is lower, the ultimate law even from a man of the lowest castes, and a jewel of a woman even from a bad family”–2-239

***

“Ambrosia may be extracted even from poison,

And good advice even from a child,

Good behaviour even from enemy

And gold even from something impure “– Manu 2- 240

விஷத்திலிருந்தும்  அமிர்தம் பெறலாம் ;

குழந்தையிடமிருந்தும் நல்லதைக் கற்கலாம் ;

எதிரியிடமிருந்து நன்னடத்தையைக் கற்கலாம் ;

அசுத்தமான தாதுவிலிருந்தும் தங்கத்தை எடுக்கலாம்.–மனுதர்ம சாஸ்த்திரம் 2-240

****

“Women, jewels, learning, law, purification, good advice and various crafts may be acquired from anybody” – Manu 2-241

 எவரிடமிருந்தும் நகைகள், பெண்களை மணம் புரிதல், கல்வி, சட்டம், தொழில்கள், புத்திமதி, ஆகியவற்றைப் பெறலாம்.

***

திருக்குறளில் ஜாதி

“Though high born, an unlettered man is deemed lower than a learned man of lower birth. “—Tirukkural 409.

மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்

கற்றார் அனைத்திலர் பாடு.–409

கல்லாதவர் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருப்பினும் தாழ்ந்த குடியில் பிறந்திருந்தும் கல்விக் கற்றவரைப் போன்ற பெருமை இல்லாதவரே.—திருக்குறள் 409.

****

அகநானுற்றில் ஜாதி

அண்டர் -இடையர் , அத்தக்கள்வர், அந்தணர், உள்ளனர், உழவர், குயவர், கொல்லர், தட்டார், பரதவர், பாணர், யானைப்பாகன், வேளாப்பார்ப்பார் .

இவை தொழிலின் அடிப்படையில் உள்ளது போலத் தோன்றினாலும் குயவன் மகன் குயவனே, இடையன் மகன் இடையனே என்றுதான் சமுதாயம் இருந்துள்ளது ஆயினும் கசாப்புக்கடை நடத்திய தர்மவியாதனை மஹாபாரதம் புகழ்வது போல எல்லா ஜாதியினரிடத்திலும் குணக்குன்றுகள் இருந்தனர்.

அக நானூற்றில் அந்தணர், வேளாளர், அரசர், இடையர், எயினர், கூத்தர் , தட்டார் , வணிகர், பெண்கள் பாடிய பாடல்கள் உள்ளன.

—subham—

Tags-சங்க இலக்கியத்தில், ஜாதிகள் , இழிசினன், பறையன், புலையன் , புலைத்தி

MY NEW TAMIL BOOK IS ON SALE FROM TODAY!

முன்னுரை

நான் வெளியிடும் பொன்மொழித் தொகுப்பு நூல்களில் இது மேலும் ஒரு நூல் ஆகும். மாதம்தோறும் தமிழிலும் ஆங்கிலத்திலும் என்னுடைய ‘பிளாக்’கில்  நான் காலண்டரை வெளியிடும்போது இந்திய ஞானிகள் , பெரியோர்கள் , புலவர்கள் சொன்ன பொன்மொழிகளையும், பழ மொழிகளையும் வெளியிட்டு வருகிறேன் இதனால் ஆறாயிரத்துக்கும் மேலான பொன்மொழிகள் சேர்ந்துவிட்டன அவ்வப்போது அதை புஸ்தக.காம் மூலமாக வெளியிட்டு வருகிறேன்  ஏனைய எழுத்தாளர்கள் வெளியிடும் நூல்களுக்கும் இதற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் இங்கே இந்திய பெரியோர்கள் மட்டுமே இடம்பெறும். ஒவ்வொரு பெரியாரும் நூற்றுக்கணக்கான மேற்கோள்களை விட்டுச் சென்றதால் அவ்வப்போது அவர்களுடைய புதிய மொழிகளைச் சேர்க்கிறேன் . இன்னும் ஒரு சிறப்பு குருமனம்வெற்றிபெறுவது எப்படி, என்ற வெவ்வேறு தலைப்புகளிலும் தொகுத்து அளிக்கிறேன். இது கட்டுரை எழுதும் மாணவர்களுக்கும், மேடைகளில் பேசும் சொற்பொழிவாளர்களுக்கும் பேருதவியாக இருக்கும் என்பது என்னுடைய நம்பிக்கை .

நான் இதுவரை எழுதிய 150-க்கும் மேலான நூல்களுக்கு புஸ்தக.காம் நிறுவனமும் வாசகர்களும் அளித்துவரும் ஆதரவுக்கு நன்றிக் கடன் பட்டுள்ளேன்.

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்

ஆன்ற பெருமை தரும்- குறள் 416

என்றான் வான்புகழ் வள்ளுவன் . இதன் பொருள் –

எவ்வளவு சிறிதே ஆயினும் நல்லவற்றைக் கேட்டறிய வேண்டும்கேட்ட அந்த அளவிற்கு அவை நிறைந்த பெருமையைத் தரும்.

ஆகையால் தொடர்ந்து நல்ல விஷயங்களைப் படித்தும் பரப்பியும் வருவோமாக ! 

அன்புடன்

லண்டன் சுவாமிநாதன்

செப்டம்பர் 2025

swami_48@yahoo.com

swaminathan.santanam@gmail.com

****

பொன்மொழிகளை உதிர்த்த பெரியோர்கள்! Book title 

பொருளடக்கம்

1.அபிராமி அந்தாதி மேற்கோள்கள்!

2.குரு பற்றிய  பொன்மொழிகள்

3.வருணன் பற்றிய பொன்மொழிகள்

4.புத்தரின் பொன் மொழிகள்

5.மீராபாய் மேற்கோள்கள்

6. புரந்தரதாசர் பொன்மொழிகள்

7.தியகராஜ கீர்த்தனை பொன்மொழிகள்

8.வள்ளலார் பொன்மொழிகள்

9.பாரதியார் பாடல் பொன்மொழிகள்!

10. பாரதியார் கட்டுரைப் பொன்மொழிகள்

11.சம்ஸ்க்ருதத்தில் மருத்துவப் பொன்மொழிகள், பழமொழிகள்

12.மனம் பற்றிய பொன்மொழிகள்

13.பர்த்ருஹரி பொன்மொழிகள்

14.மா ஆனந்தமயி பொன்மொழிகள்

15.உணவு பற்றிய பொன்மொழிகள்

16. ஊரோடு ஒத்து வாழ்!

17. தாவரங்கள் பற்றிய பழமொழிகள்

18.தவம் பற்றிய பொன் மொழிகள்

19.பேராண்மை என்பது தறுகண்

20. கல்வி பற்றி ஸம்ஸ்க்ருதப் பொன்மொழிகள்

21.ஞானம், அறிவு பற்றி பொன் மொழிகள்

22.வெற்றி பெறுவது எப்படி?  தமிழ், ஸம்ஸ்க்ருத பொன் மொழிகள்

23.உதவி, உபகாரம் பற்றி பொன்மொழிகள்

24. ‘மலரினும் மெல்லிது காமம்’; ‘கள்ளினும் காமம் இனிது’

25.‘உள்ளுர்ப் பெண்ணும் அயலூர் மண்ணும் ஆகாது’

26.மீண்டும் பாரதியார் பொன்மொழிகள்

27. தாயுமானவர் பொன்மொழிகள்

28. ராமகிருஷ்ண பரமஹம்சர் பொன்மொழிகள்

29.சாணக்கியர் பொன் மொழிகள்

30.ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டை; விரலுக்கு ஏற்ற வீக்கம்!

31 .அடச் சீ, கழுதை! கழுதை பற்றி எட்டு ஸம்ஸ்க்ருத கவிதைகள்!!

******

ABOUT THE BOOK AND THE AUTHOR

Title – பொன்மொழிகளை உதிர்த்த பெரியோர்கள்!

Author – London Swaminathan (Santanam Swaminathan)

Language- Tamil

Published  – September 2025

Subject – Literature and Culture

xxx

AUTHOR’S PROFILE

Santanam swaminathan (London swaminathan)

Educational Qualifications: B.Sc, M A (History), MA (Lit)

Higher Diploma in French and Sanskrit

DOB  6-11-1948

Work Experience- Now retired.

Worked for Dinamani, Madurai as Senior Sub Editor until 1986,

BBC Tamil Producer in London 1987-1991,

Manager of Tamil Malayalee Health Project and London Tamil Sangam,

Tamil Tutor at SOAS, University of London 1993 to 2014.

Living with his wife and two sons in London from 1987.

xxx

Blog Details

tamilandvedas.com

swamiindology.blogspot.com

xxx

Contact Details

swami_48@yahoo.com

swaminathan.santanam@gmail.com

Mobile Number in London

07951 370 697

Published Works

Over 9500 articles in English and Tamil and over 150 Tamil and English Books.

Visited 16 Countries

India, Sri Lanka, Britain, USA, Australia, Spain, Portugal, Austria, Sweden, France, Switzerland, Hong Kong, Malaysia, Singapore, Italy and Greece

*****

 Ref. 155  Books written by London Swaminathan in Tamil and English.

ENGLISH BOOKS WRITTEN BY LONDON SWAMINATHAN

(1) Is Brahmastra a Nuclear Weapon?

(2). AMAZING TIME TRAVEL by HINDU SAINTS

(3).Famous Trees of India

(4).DID INDIANS BUILD EGYPTIAN PYRAMIDS?

(5).ALL ABOUT DRAVIDAS, TAMIL SANGAMS,

KUMARIK KANDAM AND TOLKAPPIAM

(6).STORY OF TAMIL DEVADASIS AND ORIGIN OF DANCE DRAMA IN VEDAS

(7). Interesting  Anecdotes from the World of Music

(8).KALIDASA’S SIMILES IN SANGAM TAMIL LITERATURE: NEW CLUE TO FIX HIS AGE

(9).BIRDS AND GODS- OMENS, VAHANAS AND STRANGE STORIES FROM HINDU SCRIPTURES

(10).Animal Einsteins:  Amazing Intelligence of Creatures in Nature

(11) THE WONDER THAT IS HINDU TEMPLE

(12). KALKI AVATAR SOON! KALI YUGA FINITO!

(13). Date of Mahabharata War & other Research Articles

(14). Miracles of Hindu, Parsi, Jain & Buddhist Saints

(15). HINDU STORIES ABOUT MONKEYS,

DONKEYS AND ELEPHANTS

16.VALLUVAR, EINSTEIN AND SHAKESPEARE

17. Mayan Civilization and Hindu Nagas

Asuras, Rishis and Gandharvas

18.Hindu Wonders in Muslim Countries

19.Hindu Influence in Mesopotamia and Iran

20. Hinduism in Sangam Tamil Literature

21.Interesting Titbits from Bhagavad Gita

22.Om in Rome; Manu Smriti in London Church

 23.Tamil Hindus 2000 Years Ago!  

24.Rewrite Indian History

25. Beautiful Hindu Women and

Wonderful Weddings

26.Woman is an Adjective, Man is a Noun2

27.Amazing and Unknown Names of Hindu Gods,

Himalaya, Water and Sea!

28. 1000 Hindu Quotations for Speakers and Students

29. History is a Mystery in India

30.Thousand More Hindu Quotations for Speakers and Students

31. Controversial and interesting Laws in Manu Smriti

(First Part)

32. Controversial and interesting Laws in Manu Smriti

(Second Part)

33. Linguistic and Language Wonders in India- Old Theories Binned

34. Interesting Anecdotes for Partygoers  and Essay Writers

35.More Interesting Anecdotes for Partygoers

36.Third Book of Anecdotes for Students and Speakers

37. Brahmins in Tamil and Sanskrit Literature

38.Gandhiji’s Views on Controversial Matters

39.Guide to Hindu Homa (Havan) and Festivals

40.Guide to 108 Famous Temples in Maharashtra

41.Tamil Hindu Encyclopaedia

42.Strange Stories about Hindu Saints Temples and

 Historical Atrocities

43. Nagarjuna’s Sex Tips from China and Hinduism in Burma & Thailand 

44.Medical Wonders in Hindu Scriptures

45.Hidden Secrets in Vishnu Sahasranama

46.My Research Notes on Viveka Chudamani

47.Greatest Tamil Book Tirukkural & Oldest Language Sanskrit

48.Country of Kangaroos and Koalas! Amazing Australia!! 

49. Dreams in Hindu Literature 

50.History: A Bundle of Facts and Fabrications

51.Tamil and Sanskrit Proverbs around the World

52.Hindu Beliefs in Shakesperean Plays

****

TAMIL BOOKS WRITTEN BY LONDON SWAMINATHAN

லண்டன் சுவாமிநாதன் எழுதி வெளியிட்ட நூல்கள்:

1.உலகம் முழுதும் பாம்பு வழிபாடு!

2.தாய்லாந்து, வியட்நாம், கம்போடியாவில் தமிழ் முழக்கம்

3.தேனினும் இனிய கம்பராமாயணப் பாடல்கள்

4.பெண்கள் வாழ்க –

5.சுமேரியர்- இந்தியர் தொடர்பு

6.இந்து மத நூல்களில் வெளி உலக வாசிகளும், காலப்பயணமும்

7.தமிழர்கள் மரங்களை வழிபடுவது ஏன் ?

 8.பிரம்மாஸ்திரம் ஒரு அணு ஆயுதமா?

9.தமிழ் மொழி அதிசய மொழியே? இதோ சான்றுகள்!

10.திருப்பதி பாலாஜி தமிழ்க் கடவுள் முருகன்! அருணகிரிநாதர் போடும் புதிர்!!

11.திருவாசகத் தேன் ! திருமந்திர ஜுஸ் !!

12. தொல்காப்பியர் முதல் பாரதி வரை

பெரியோர்களுடன் ஒரு நிமிடப் பேட்டி

13.எலும்பு வலுப்பட கால்சியம்; குழந்தை பிறக்க செலீனியம் ; பல் பளபளக்க ப்ளூரைட்

14.ஆழ்வார்கள் சொல்லும் அதிசயச் செய்திகள்

15.வெள்ளி, அலுமினியம், யுரேனியம் பற்றிய சுவையான கதைகள்

16.கிரேக்க மொழியில் தமிழ் சொற்கள்!

கிரேக்க நாட்டில் இந்துமத  சடங்குகள், கதைகள்!!

17.சிங்கப்பூரில் சிவபெருமான் !

சிந்து சமவெளியில் சிவலிங்கம் !!

18.திராவிடர்கள் யார்? குமரிக் கண்டமும் 3 தமிழ்ச் சங்கங்களும் உண்மையா?

19.தொல்காப்பிய அதிசயங்கள்

20.கம்பராமாயணத்தில் எதிர்பார்க்காத விஷயங்கள்

21.ரிக் வேதத்தில் தமிழ்ச் சொற்களும் அதிசயச் செய்திகளும்

22.எகிப்திய நாகரீகத்தில் இந்தியர் பங்களிப்பு

23..சுமேரியாவில் தமிழ் யாழ்! ஜப்பானில் சாம வேத இசை!!

24.மனைவி ஒரு மருந்து

25.தமிழ் ஒரு கடல்! முத்துக் குளிப்போம் வாருங்கள்!

26.சங்கத் தமிழ் நூல்களில் காளிதாசன் உவமைகள்

27.தமிழ்நாட்டை உலுக்கிய பேய்

28.பறவைகள் சகுனம் உண்மையா?

கடவுளுக்கு  வாகனம் எதற்காக?

29.கணவர் மேல் 44 காதல் கவிதைகள்!  இறந்த பின்னர்

பெட்டிக்குள் 2000 கவிதைகள் !!

30.கடவுளை மறுத்த இங்கர்சால்! இந்துமத ஆதரவு

யேட்ஸ் , ரொமைன் ரோலண்ட், வால்ட் விட்மன்!

31.சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே

32.தமிழ், சம்ஸ்க்ருத கல்வெட்டுகள்

தரும் சுவையான செய்திகள்

33.மொழியியல் ஆய்வில் விஷமங்கள், விசித்திரங்கள், விநோதங்கள்

34.முப்பது கட்டுரைகளில் இந்துமத அதிசயங்கள்

35.ரிக்வேதத்தில் மேல் நாட்டினரை

திகைக்கவைக்கும் கவிதைகள் !

 36.முக்கிய கோவில்கள், சமாதிகளை

தரிசிக்க உதவும் கையேடு

37. தீயோரை அழிக்க கல்கி வருகிறார்!

38.சுவையான  யானை  பூனை கதைகள்,

உண்மைச் சம்பவங்கள்

39.மகாவம்ச நூலில் தமிழர்கள் பற்றி வியப்பூட்டும் செய்திகள்

40.ஐன்ஸ்டீன் , ஹிட்லர்,  சாணக்கியன் சொன்ன கதைகள்

41. மஹாபாரதப் போர் நடந்ததா?

42.தமிழ் மன்னர்கள் செய்த யாக, யக்ஞங்கள்

43.அற்புத மூலிகைகள் பற்றி

வேதம் தரும் செய்திகள் (title)

44.தமிழ், சம்ஸ்க்ருத இலக்கியத்தில்

பெண்கள்

45. பகவத் கீதையில் அதிசயச் செய்திகள்

46. பரத நாட்டியக் கதைகளும்

பழமொழிக் கதைகளும் (title)

47.அதர்வண வேத பூமி சூக்தம்   

சொல்லும் வியப்பான செய்திகள்

48.வரலாற்றில் சில புதிர்கள்

தாஜ்மஹால் இந்துக் கோவிலா ?

ஏசு கிறிஸ்து  இந்தியா வந்தாரா?

49.லண்டன் பார்க்க வாறீங்களா !

சிட்னி பார்க்க வாறீங்களா? 

50.ராதே உனக்கு கோபம் ஆகாதடி

(கட்டுரைத் தொகுப்பு)

51. தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில்

அரிய அறிவியல் செய்திகள்

52.‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’

                     (கட்டுரைத் தொகுப்பு)

53.உபநிடதத் தென்றலும் வேத மழையும் 

54.புராணங்கள் புளுகு மூட்டைகளா?       

                  (கட்டுரைத் தொகுப்பு)

55. ஆயிரம் இந்துமதப் பொன்மொழிகள்

56.அக நானூறு , புற நானூறு ,காதா எழுநூறு ,ராஜ தரங்கிணி

சொல்லும் அதிசயச் செய்திகள்

57.கட்டுரைக் கதம்பம்

(அக்னி – ஆசனம் – குரு –கங்கை நதி) book title

58. கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்

59.மனு நீதி நூலில் அதிசயச் செய்திகள் (முதல் பாகம்)

60.மனு நீதி நூலில் அதிசயச் செய்திகள் ( இரண்டாம் பாகம் )

61.சம்ஸ்க்ருதப் பொன்மொழிகளும் தமிழ்ப் பழமொழிகளும்

62.  தமிழ் இலக்கியத்தில் அதிசயச் செய்திகள்

63.தினமணி பத்திரிக்கை கதையும் என் கதையும்

64. தமிழ் — ஆங்கில மொழிகளில் ஹிந்து ‘க்விஸ்’

(Tamil- English Bilingual Hindu Quiz Book) book title

65.இந்திய நாகர்– தென் அமெரிக்க மாயா நாகரீக

அற்புத ஒற்றுமைகள்

66.மஹாராஷ்டிர மாநிலத்தின் 108 புனிதத் தலங்கள்

67.மத மாற்றம், இந்து மதம் பற்றி காந்திஜி  என்ன சொல்கிறார்? 

68. கர்நாடக மாநிலத்தின் புகழ்பெற்ற கோவில்கள்

69.தமிழ், இந்து மதம் பற்றிய 60 தலைப்புகளில்

600 கேள்வி–பதில்கள் !!

70.கன்பூசியஸ், பர்மா பற்றிய அரிய தகவல்கள் !

(ஆயுர்வேதம் , ஆரூடம் , லண்டன் விழாக்களும் உள்ளன )

71.இந்து மத பண்டிகைகளில் மரம் ,செடி, கொடி வழிபாடு

72. கேரள மாநிலத்தின் 108 புகழ்பெற்ற  கோவில்கள்

73.இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள் (Two Parts)

74.Second part

75. மேலும் அறுபது தலைப்புகளில் 600 கேள்வி–பதில்கள் !!

76. ஆந்திரம், தெலுங்கானாவில்

புகழ்பெற்ற கோவில்கள் – முதல் பாகம் (book title)

77. தமிழில் ஹனுமான் சாலீஸா விளக்க உரை

78. விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் விஞ்ஞான ரகசியங்கள்

79.அவ்வை ,பாரதி முதல் பாபா, மோடி வரை ! 38 ஆராய்ச்சிக் கட்டுரைகள் 

80.அறிவியல் நோக்கில் திருமந்திரம் – ஆராய்ச்சிக் கட்டுரைகள் (Two Parts)

81.தமிழ் – அவஸ்தன்– சம்ஸ்க்ருத- கிரேக்க

மொழி ஆராய்ச்சிக் கட்டுரைகள்     

82.தமிழ் வளர்த்த ஆண்டாளும் வள்ளலாரும்!

(ஆராய்ச்சிக் கட்டுரைகள்)

83.அதிசயங்கள் நிறைந்த ஆஸ்திரேலியா

84.ஷேக்ஸ்பியர் நாடக வசனங்களும்

பழந் தமிழ் நூல்களும் – ஒரு ஒப்பீடு

85.பஸ், ரயில் பயணத்தில் படிக்க சுவையான துக்கடாக்கள்

86.கனவுகள், கல்வெட்டுகள் , தமிழ் பற்றிய  புதிய ஆராய்ச்சிக்  கட்டுரைகள்

87.விநாயகர் அகவலுக்கு புதிய ஆராய்ச்சி உரை

88.தமிழ், சம்ஸ்க்ருத மொழிகளை வளர்த்த

ஜெர்மானிய அறிஞர்கள்

89. நான்கு நாடுகளில் நான் சென்ற கோவில்கள் 

90. வெளிநாட்டுப் பழமொழிக் கதைகளும்

நம் நாட்டுக் கதைகளும்!

91.சம்ஸ்க்ருத மொழி உலகிற்கு அளித்த நன்கொடை

92. இந்துமதத்தில்  விஞ்ஞானம் புதிய  செய்திகள்

93.திருவிளையாடல் புராணத்தில் நவ ரத்தினங்களும்,

சாமுத்ரிகா லட்சணமும்

94. திருவிளையாடல் புராணத்தில் தமிழர் வரலாறு

பற்றிய அதிசயச் செய்திகள்

*******************

வேறு பதிப்பகம் மூலம் :-

1.வினவுங்கள் விடைதருவோம் ( பிபிசி தமிழோசையில் வெளியான எனது கேள்வி-பதில் தொகுப்பு)

2.இதழியல்

xxx

***** 

To get the books

GO to Pustaka.co.in; then go to authors and type London swaminathan in the space.

Or contact admin@pustaka.co.in

Dr Rajesh Devadas Ph.D. has introduced three levels

1.     You may just read it on line

2.     You may download the book and keep it with you

3.  You may order a printed copy

www.pustaka.co.in 

Telephone in India:   9980387852  

****

In case of difficulties, please contact me at

swami_48@yahoo.com

Or swaminathan.santanam@gmail.com

 — subham—

 TAGS- New book, London swaminathan, Ponmozikal, Tamil

Interesting Stories behind Proverbs –Part 1 (Post No.15,002)

Written by London Swaminathan

Post No. 15,002

Date uploaded in London –  19 September 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Dionysius dances best with three nymphs – Greek proverb

When celebrating the cult of Dionysius in springtime in Athens, many of the worshippers became hysterical. Later they emigrated to Rome and became followers of Bacchus.

***

To go to monkey for justice – Dayak proverb in Borneo ,Indonesia

This proverb originated in the story of two men who disputed about ownership of some bananas and took their case to a monkey for judgement, who ordered the fruits to be divided. When one suitor cried that the other had received too large a share the monkey, to make matters even, ate some of the bananas himself. Then the second suitor complained, so the monkey took a few more. Thus the case went on until there was not one banana to wrangle about.

Similar story is in Panchatantra in Sanskrit language.

***

It takes nine tellers to mark a man- English proverb

An old Dorset custom, to strike the passing bell when a death takes place to indicate the age and sex of deceased- thrice for a girl, four times for a boy, six for a spinster, seven for a matron, eight for a bachelor and nine for a married man.

This old custom was in use even fifty years ago.

***

Seven thou shall not neglect – Arabic proverb

Thy wife as long as she lives in peace with thee;

thy livelihood as long as it provides for healthy ornament as long as it adorns thee;

thy friend as long as  he is just to thee;

thy table companion as long as he understands thee;

thy son as long as he cannot take care of himself; and

thy guest as long as he does not molest thee.

***

My life is set upon her-  from Southern Nigeria

Literally my liver.in many parts of Western Africa and Western Asia, the liver is generally said to be the seat of affections- the liver being looked upon as the intellectual viscus. The Efik speak of ‘a word from the liver’ (sincere opinion). No liver means no courage.  In danger , ‘a man’s liver never fails him.’

(Efik- a member of a people of southern Nigeria).

***

There are four kinds of tempers- Hebrew proverb

He whom it is easy to provoke and easy to pacify- his loss disappears in gain; he whom it is hard to provoke and hard to pacify- his gain disappears in loss; he whom it is hard to provoke and easy to pacify is a saint; he whom it is easy to provoke and hard to pacify is a wicked man.

In Tamil Tirukkural says,

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி

கணமேயும் காத்தல் அரிது- 29

The anger of those who have ascended the mountain of goodness, though it continues but for a moment, cannot be resisted- Kural 29.

***

If a paisa be placed on a dead man, he will rise up -Kashmiri Proverb

Paisa is like Penny , Cent; lowest denomination.

Money will bring people back from the dead. It shows the power of money.

Another meaning: Hindus like Greeks, place a metal coin in the mouth of dad body, saying that it will help the person to cross the River Vaitarani (similar to Styx in Greek). It is to pay for the ferry.

In Greece, ancient people believed the dead man’s soul has to cross Styx, Acheron or Cocytus. They placed a small piece of money in the mouth of the dead to pay the Stygian ferry man  to row the corpse across the river Styx.

In Tamil, Panam endraall Pinamum Vaaythirakkum பணம்  என்றால்  பிணமும்  வாய்திறக்கும். 

to be continued……………………

Tags- Proverbs, stories, Greek, Hebrew, Hindu, Greek, Nigeria ,Dionysius, monkey justice

புவி வெப்பமயமாதலைத் தடுப்போம்! (Post No.15,001)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,001

Date uploaded in London – 19 September 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

#கல்கிஆன்லைன் இதழில் 18-6-25 அன்று பிரசுரமான கட்டுரை!

புவி வெப்பமயமாதலைத் தடுப்போம்! 

ச. நாகராஜன் 

உலகம் வெப்பமயமாதலைத் தடுக்க வேண்டியது அனைத்து நாடுகளின் தலையாய பொறுப்பாகும். இதற்கு Intended Nationally Determined Contributions (INDC) என்ற உறுதிமொழியை எல்லா நாடுகளும் எடுக்க வேண்டியது அவசியமாகிறது. 

இந்த INDC என்றால் என்ன?

உலகம் வெப்பமயமாதலைத் தடுக்க நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்ற உறுதிமொழியை ஒவ்வொரு நாடும் எடுத்து அதற்கான செயல்முறைகளைத் திட்டமிட்டுச் செயல்படுத்துவதே INDC! 

ஆக்கபூர்வமான தங்கள் திட்டத்தின் வழிமுறைகளை ஒவ்வொரு நாடும் ஐக்கியநாடுகள் சபைக்கு வழங்கும். 

ஐக்கியநாடுகள் சபையின்United Nations Framework Convention on Climate Change (UNFCCC) என்ற குழுவுக்கு ஒவ்வொரு தட்பவெப்ப மாநாடு நடப்பதற்கு முன்னரும் இது வழங்கப்பட வேண்டும். 

2015ம் ஆண்டு பாரிஸில் நடந்த மாநாடு பூமி வெப்ப,மயமாதலைக் கட்டுக்குள் கொண்டுவருவதை  முக்கிய நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்டது. 

இதில் இரண்டு டிகிரி செல்ஸியஸ் என்ற மந்திர வார்த்தையை அனைத்து நாடுகளும் ஒப்புக் கொண்டன. இதை ஒப்புக்கொண்ட 170 நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. 

இப்போதிருக்கும் வெப்பத்தை விட இரண்டு டிகிரி செல்ஸியஸ் நிச்சயமாக உயரக் கூடாது என்பதே அடிப்படைக் கொள்கை! 

ஒரு டிகிரி செல்ஸியஸ் வெப்பம் உயர்ந்தாலேயே நியூயார்க், கல்கத்தா, ஷாங்காய் போன்ற நகரங்கள் மூழ்கும். அதாவது கடல் மட்டம் இரண்டு மீட்டர் உயர்வதால் இந்த அபாயம் ஏற்படும்.  

2003லிருந்து ஐந்து ஆண்டுகளுக்குள் கிரீன்லாந்து, அண்டார்டிகா, அலாஸ்கா பகுதிகளில் மட்டும் இரண்டு டிரில்லியன் டன்கள் பனிக்கட்டிகள் உருகி விட்டன. 

பனிப்படலங்கள் உருக உருக கடல் மட்டம் உயரும். கடல் மட்டம் உயர்ந்தால் கடற்கரையோரத்தில் உள்ள நகரங்கள் அழியும்.

 அத்துடன் மட்டுமல்லாமல் 60 முதல் 90 சதவிகிதம் வரை சுத்த நீரை உலகிற்கு அண்டார்டிகா தான் வழங்குகிறது என்பது மிக முக்கியமான ஒரு உண்மை.

 சுற்றுப்புறச் சூழலை மாசு படுத்தினால்  குடிநீர் பாதிக்கப்படுவதோடு, குடிநீர் கிடைப்பதும் அரிதாகி விடும்.

 ஒரு டிகிரி செல்ஸியஸ் கூடினால் பயிர்களை அழிக்கும் நச்சுப்பூச்சிகள் அபரிமிதமாகப் பெருகும். பயிரிகளின் வளர்ச்சி பாதிக்கப்படும். 

இந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்தே வெப்பமயமாதலைப் பற்றி அறிவியல் அறிஞர்கள் தொடர்ந்து எச்சரிக்கை செய்து கொண்டே இருந்தாலும் பெரும்பாலான நாடுகள் இதை அலட்சியப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. 

வெப்பநிலை உயர்வதற்கு முக்கிய காரணம் நச்சுப்புகை வாகனங்களால் வெளியிடப்பட்டு வளி மண்டலத்தில் கலப்பதினால் தான்.

 அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய மூன்று நாடுகள் தான் அதிக நச்சுப்புகையை வெளிப்படுத்துகின்றன.

 நச்சுப்புகைக்கு முக்கிய காரணமான கார்பனை எப்படிக் கட்டுப்படுத்தப் போகிறோம் என்பதில் தான் இருக்கிறது எதிர்கால பூமியின் வளமை!

 முதலில் ஒவ்வொருவரும் வாகனப் பயன்பாட்டைக் குறைத்து அதிலிருந்து வெளியேறும் கார்பன் நச்சுப்புகை வெளியேறுவதைத் தடுக்கலாம்.

பெட்ரோல், டீஸல் பயன்பாட்டைக் குறைத்து மின்சக்தியால் ஓடும் வாகனங்களைப் பயன்படுத்த முன்வரலாம்.

ஆயிரக்கணக்கானோர் முனைந்து செயல்பட்டால் உலகம் பிழைக்கும்.

***

ஐஏஎஸ் தேர்வுக்கும் இதர முக்கிய தேர்வுகளுக்கும் செல்வோர் INDC பற்றி அறிதல் மிக மிக முக்கியம் என்பது இங்கு குறிப்பிடத்தகுந்தது.

இந்தக் கட்டுரை ஆசிரியர் ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையத்தில் ஒலிபரப்பப்படும் 200க்கும் மேற்பட்ட சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் உரைகளை அளித்துள்ளார்.

இவை ஐந்து பாகங்களாக பிரசுரிக்கப்பட்டுள்ளன.