Ancient Tamil Encyclopaedia -Part 3; One Thousand Interesting Facts (Post No.14,958)

Gods of india

Written by London Swaminathan

Post No. 14,958

Date uploaded in London –  8 September 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

One Thousand Interesting Facts about Ancient Tamils- Part 3

24

Amrit/ amiltham/ amuhu/ amirtham அமிர்தம்,அமிழ்தம், அமுது, அமுதம்

3 to 5 different spellings are used.

Amirtha – pari.8-120; pari.2-69; 3-33;8-121; 12-57;

Amizltham – akam 207-2; 332-13;335-25;  kuru 206-1;kali.81-14; kuru.83-1; 201-1; 286-2; puram.182-2; 392-20;

Amizthin. Akam 169-6; pari.3-15; puram.150-14;

Amizthu akam.170-5;kali.4-13, 20-11; kuru.14-1; siru.121, 227; narri.230-3; pathi.17-11, 51-21; puram.10-7, 125-8, 361-19; 390-17.

Amizthodu akam.213-18;madu.197;

Amutham -narri.65-1; 88-4; madu.601;

Amuthu pari.thir. 1-68;puram 399-21;

Amuthodu peru.475

At least 42 places.

அமிர்தம் -பரி.2-69; 8-120;

அமிர்தது- பதிற்று.16-12; மது.532;  பரி.3-33;8-12112-57;

அமிழ்தம் –அகம்.207-2;335-25; குறு.12-1; புறம்.182-23; 92-20 and more places

அமிழ்து – அகம்.170-5; குறு.14-1; புறம்10-7; 125-8; 361-19;390-17; and many more verses.

அமுதம்- நற்றிணை65-1; 88-4; ; மதுரை.601;

அமுது- புறம்  399-21

VERY IMPORTANT REFERENCE: ALL THESE REFER TO INDRA’S AMRIT

உண்டால் அம்ம, இவ் உலகம் இந்திரர்

அமிழ்தம் இயைவதுஆயினும், ‘இனிது’ எனத்

தமியர் உண்டலும் இலரே; முனிவு இலர்;

துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சி,

புகழ் எனின், உயிரும் கொடுக்குவர், பழி எனின்,      5

உலகுடன் பெறினும், கொள்ளலர்; அயர்விலர்;

அன்ன மாட்சி அனையர் ஆகி,

தமக்கு என முயலா நோன் தாள்,

பிறர்க்கு என முயலுநர் உண்மையானே.—-கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி PURAM VERSE 182

THE VERSE SUNG BY THE PANDY KING ILAM PERU VALUTHI, WHO WAS DROWNED IN THE SEA, PRABABLY DURING SEA EXPEDITION.

25

Asunam அசுணம்

Mythical animal which is attracted by music. Tamils played music to attract it and killed it by playing loud drums. It cant tolerate loud noise.

Ref. Akam .88-12;Narri.244-4; 304-8.

(Full details are given under Animals)

26

Apsaras / Ara makalir / Suurara makalir

Divine beauties, mostly appearing in mountains

Also like Greek Nereids நீரர மகளிர்

அப்சரஸ் அரமகள்  – தெய்வ மகளிர் பரி .10-78

அரமகளிர்- முருகு.41; மலை.190,294;   கலி.40; குறு.53; அகம்.32,162, 342;  ஐங்.191204,255 

சூருடை அடுக்கத்து -நற்றிணை/ naarri359;

சூரர மகளிர் – akam .162;32; Murugu.12-41

சூர் மகள்- akam.197; narri.34

Greeks also had nymphs in hills, water, sky

27

Avatara  அவதாரங்கள் Vishnu’s incarnations

Vishnu

Vishnu lying in the milky ocean on the thousand headed snake (bed)

Kali 105-71;kali-123; perum 372/3; Pari .13-26/9

Tulsi wearing god- pari.13-26/9

He is sleeping but it is yoga nidra

Pari 2-32/3; 3-21/3; 3-34/6;4-22/4;

Bringing Amrit – Pari. 2-69/73;

Destroying asuras and saving devas –

Pari .1-25-30; Madurai .590

Solar eclipse and  vishnu episode –

Puram 174-1/5;

Lunar eclipse and Vishnu -104-37/8.

TEN AVATARAS / INCARNATIONS OF VISHNU

****

28

Annam/ Swan Avatara

Pari .3-25/6

***

29

Varaha –

Pari .13-26/37;

தன் உரு உறழும் பாற்கடல் நாப்பண்,

மின் அவிர் சுடர் மணி ஆயிரம் விரித்த

கவை நா அருந் தலைக் காண்பின் சேக்கைத்

துளவம் சூடிய அறிதுயிலோனும்

மறம் மிகு மலி ஒலி மாறு அடு தானையால்,             30

திறன் இகந்து வரூஉம் அவர் உயிர் அகற்றும்

விறல் மிகு வலி ஒலி பொலிபு அகழ் புழுதியின்,

நிறன் உழும் வளை வாய் நாஞ்சிலோனும்

நானிலம் துளக்கு அற முழு முதல் நாற்றிய

பொலம் புனை இதழ் அணி மணி மடற் பேர் அணி 35

இலங்கு ஒளி மருப்பின் களிறும் ஆகி,

மூஉரு ஆகிய தலைபிரி ஒருவனை!

***

30

Narasimha

Pari .4-10/21

செயிர் தீர் செங் கட் செல்வ! நிற் புகழ  10

புகைந்த நெஞ்சின், புலர்ந்த சாந்தின்

பிருங்கலாதன் பலபல பிணி பட

வலந்துழி, மலர்ந்த நோய் கூர் கூம்பிய நடுக்கத்து

அலர்ந்த புகழோன், தாதை ஆகலின்

இகழ்வோன், இகழா நெஞ்சினனாக, நீ இகழா  15

நன்றா நட்ட அவன் நன் மார்பு முயங்கி,

ஒன்றா நட்டவன் உறு வரை மார்பின்

படிமதம் சாம்ப ஒதுங்கி,

இன்னல் இன்னரொடு இடி முரசு இயம்ப,

வெடி படா ஒடி தூண் தடியொடு,       20

தடி தடி பல பட வகிர் வாய்த்த உகிரினை;

பரிபாடல்  4

***

31

Vamana /Trivikrama

Mullai- 3;

Perum.29/30;

Kali 124-1;

Pari.3-20; கீழ் ஏழ் உலகமும் உற்ற அடியினை;   20

***

32

Parasurama

Akam .220-5/8 மழுவாள் நெடியோன்

***

33

Rama

Puram.378; (Ravana episode given under Arakkan/Rakshasan)

Akam .70

****

34

Krishna

KRISHNA AVATAR

Akam .59 River Yamuna  and Gopis ;

வண் புனல் தொழுநை வார் மணல் அகன் துறை,

அண்டர் மகளிர் தண் தழை உடீஇயர் 5

மரம் செல மிதித்த மாஅல் போல,

Madu. 761-3;

Kali 103-53/4

Pari .3-31/2;

Kali .52-5/6; 134-1/4

Bhagwat Gita – Madu. 761-3 according to most famous commentator

Nachchinarkiniyar

****

35

Pandavas

Bhima Kali. 25-1/8; 101-18/20; 52-1/3;

அம் சீர் அசைஇயல் கூந்தற் கை நீட்டியான்

நெஞ்சம் பிளந்து இட்டு, நேரார் நடுவண், தன்

வஞ்சினம் வாய்த்தானும் போன்ம்   20

அழகிய சீரான நடையழகி திரௌபதியின் கூந்தலைப் பிடித்து இழுத்த துச்சாதனனின் நெஞ்சைப் பிளப்பேன் என்று பகைவர்களுக்கு இடையே வஞ்சினம் கூறியவன் செயல்போல் அது உள்ளது.

Karna Kali. 25-1/8

ஈரைம்பதின்மரும் பொருது களத்து அவிய . . . .[415]

பேர் அமர் கடந்த கொடுஞ்சி நெடும் தேர்

ஆரா செருவின் ஐவர் போல

அடங்கா தானையோடு உடன்று மேல்வந்த

ஒன்னா தெவ்வர் உலைவு இடத்து ஆர்த்து

கச்சியோனே கை வண் தோன்றல் .

Perum. 415-420

***

36

Dhritarashtra -Kali. 25-1

வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர் பெற்ற

முகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால்,

ஐவர்‘ என்று உலகு ஏத்தும் அரசர்கள் அகத்தரா,

கை புனை அரக்கு இல்லைக் கதழ் எரி சூழ்ந்தாங்கு,

களி திகழ் கடாஅத்த கடுங் களிறு அகத்தவா,             5

முளி கழை உயர் மலை முற்றிய முழங்கு அழல்,

ஒளி உரு அரக்கு இல்லை வளிமகன் உடைத்துத் தன்

Kauravas – 100 Duryodhanadis -puram 2-15; Pathitru .14-5/7

Kali 101-18/20 also

Aswattama 30-32

Kali .10457/9

***

37

Balarama

Puram. 58-14/18

பால் நிற உருவின் பனைக் கொடியோனும்,

நீல் நிற உருவின் நேமியோனும், என்று                   

இரு பெருந் தெய்வமும் உடன் நின்றாஅங்கு,

Pari .13-26/37; 2-20/7; 15-13/4; 1-3; 3-88; 21-20

Kali .10511/2; 104-7;

****

38

Ahalya (Painting)

Pari.19-51

Two thousand years ago there were beautiful paintings in Tirupparankundram temple near Madurai . There were paintings of sun and moon Rathi and Manmathan, Ahalya and Gautama Rishi. In that Ahalya painting there was a sneaky cat. A village woman was wonderstruck on seeing it and asked her husband about the cat in the picture. Then he explained that the cat is Indra who molested Ahalya, wife of Gautama Rishi. After knowing the offence, he cursed his wife to become a stone till Rama comes to the south. This shows that the Tamils were well versed with Puranic episodes and they were experts in paintings during  the Sangam period.

என்றூழ் உற வரும் இரு சுடர் நேமி

ஒன்றிய சுடர்நிலை உள்படுவோரும்,

‘இரதி காமன், இவள் இவன்’ எனாஅ,

விரகியர் வினவ, வினா இறுப்போரும்;

‘இந்திரன், பூசை: இவள் அகலிகை; இவன்  50

சென்ற கவுதமன்; சினன் உறக் கல் உரு

ஒன்றிய படி இது’ என்று உரைசெய்வோரும்:

இன்ன பலபல எழுத்து நிலை மண்டபம்,

To be continued…………………….

Tags- One Thousand Interesting Facts, Ancient Tamils, Part 3, Ancient Tamil Encyclopaedia

MR DUMB IN DECCAN CHRONICLE CARTOONS.

 DECCAN CHRONICLE CARTOONS UNTIL 8 9 2025

POSTED BY LONDON SWAMINATHAN.

–SUBHAM–

TAGS – CARTOONS , 8 9 25

A tree is brought into trouble by its own fruit (Post No.14,957)- part 8

remarkable trees

Written by London Swaminathan

Post No. 14,957

Date uploaded in London –  8 September 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

tree with goats.

8Proverbs on Trees- part 8

The dry leaf does not sink at once when it falls into the water.

Dead tree does not yield dew.

A sapless tree is a leafless tree.

The little tree that saved you from the buffalo, you turn and cut it for a post.

The bark of one tree will not adhere to another tree.

Meaning – the people of one tribe cannot assimilate the customs of another.

A tree is not twice struck by lightning.

Meaning- if you have to punish a person or a tribe, do it so thoroughly that it will not require to be done a second time.

If a dead tree falls, it carries it with a live one.

Meaning – if a criminal is punished, his innocent relations suffer as well.

If a tree trunk is not rotten, no fungus grows on it.

When a tree falls it leans on its neighbour.

He that is on one side does not have the tree fall on him.

A tree is brought into trouble by its own fruit.

The tree which has been too much for the baboon, the monkey cannot climb.

The wind does not uproot but the largest trees.

Where the trees are there are no builders.

—-African proverbs

****

Tamil proverbs continue……………………..

4235. நான் இட்ட மருந்தும் போக ஒட்டாது நன்னாரி வேரும்
சாக ஒட்டாது.
The medicine I gave, as a charm, will not allow him to go; the sarasparilla, an ingredient, will not suffer him to die.


The proverb relates to charms, in which, as in magical arts generally, the Hindus in every part of India and Ceylon, have great faith. Servants have recourse to this device, and lovers also, for the purpose of influencing the affections and will of those whose favour or compliance they desiderate.
The usual method, as indicated in the proverb, is to administer the food of the party the ingredients that are fitted for the purpose contemplated; of course the preparation is surreptitiously added to the food of which it is known the individual is about to partake.
A gentleman of my acquaintance recently dismissed all his servant and took into his service a person in whom he appeared to place the greatest confidence. The neighbours and the discarded servant believe that the gentleman acted under a charm.
Some of the things used for certain purposes as charms, may not be mentioned here. The brain of a male child &c. is considered very(?) potent.
Professional magicians are employed when stolen property or buried treasure is sought. The magician uses a black preparation, a small quantity of which is placed on a betel leaf and put into the hands of an attendant boy, who is directed to look steadily at it, aided by the light of a lamp, while the magician invokes the presence and aid of certain deities. When the boy announces a phenomenon, say a tree, monkey or a dog or a goblin, he is told to do obeisance to(?) to encourage further discoveries. The earth may cleave as under(?) and reveal the thing wanted, or a scene, including a house and certain persons going and coming, water &c., may appear, when the boy proceeds to describe the objects before him, as an earthen pot, or bangle &e., &c., as the case may be.
To discover a thief among suspected persons sometimes dry grain as rice may be given to be eaten. The person whose mouth secretes no moisture for mastication is supposed to be the thief. –Rev.Percival

4273. நின்ற மரத்தில் நெடு மரம் போனால் நிற்கும் மரமே நெடு மரம்.
When the lofty trees are felled, the remaining trees look tall.

4275. நின்றால் நெடு மரம் விழுந்தால் பனை மரம்.
When standing, a tall tree, when fallen, a palmyrah tree.

4316. நுனிக்கொம்பில் ஏறி அடிக்கொம்பு வெட்டுவார்களா?
Having ascended to the extremity of the bough, will they sever it from the tree?

4429. பசு மரத்தில் தைத்த ஆணிபோல.
Like a nail driven into a green tree.

4442. பச்சை மரம் படப் பார்ப்பான்.
He can stare so as to make a green tree decay.

4443. பச்சை மரத்திற்கு இத்தனை என்றாற் பட்டமரத்திற்கு எத்தனை?
If so much to the green tree, how much to the dry?

4538. பருத்தி புடைவையாய்க் காய்த்தது.
The cotton tree produced cloth.

4541. பருமரத்தை அண்டிய பல்லியும் சாகாது.
If sheltered near a large tree even a lizard will not die.

4552. பல மரம் கண்ட தச்சன் ஒரு மரம் வெட்டமாட்டான்.
The carpenter who is acquainted with various sorts of wood, is not able to fell a tree.

4556. பலா உத்தமம், மா மத்திபம், பாதிரி அதமம்.
The jack tree is the best, the mango is good, the pathri tree is indifferent.

–subham—

Tags- proverbs on trees, part 8, tree images, remarkable trees

BOOK LAUNCH IN LONDON ON SUNDAY 7 9 2025


SANKARA DIG VIJAYA BY VIDHYARANYA SWAMIGAL WAS TRANSLATED INTO TAMIL AND ENGLISH BY MEE RAJAGOPALAN OF LONDON . THE BOOK IN FOUR VOLUMES WAS LAUNCHED IN LONDON ON SUNDAY 7 9 2025. SWAMINI SRI ATMAPRAKASHA NANDA SARASWATI PRESIDED OVER THE EVENT AND LAUNCHED THE BOOK. LONDON SWAMINATHAN WAS ONE OF THE SPEAKERS.

–SUBHAM–TAGS BO0K LAUNCH , 7 9 2025, LONDON 

GNANAMAYAM 7 9 2025 RECORDINGS.

Aalayam arivom 

Prayer by Mrs Latha Murthy.

TALK ON AANAAYA NAAYANAAR AND NANDANAAR

GNANAMAYAM 7th September 2025 BROADCAST SUMMARY

Gnanamayam Broadcast comes to you EVERY SUNDAY via Zoom, Facebook and You Tube at the same time .

London Time 1 PM (British Summer Time)

Indian Time 5-30 pm (evening)

Sydney, Australia time 11 pm (Night)

*****

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES via Zoom, Facebook and You Tube at the same time .

****

Prayer -Mrs. Jayanthi Sundar Team –Mrs Latha Murthy 

***

NEWS BULLETIN

Vaishnavi Anand  from London presented World Hindu News in Tamil

****

Brhannayaki Sathyanarayanan from Bengaluru speaks on

SWAMIMALAI  Temple

****

Talk by Professor S Suryanarayanan, Chennai

Topic- Information from Stories

****

SPECIAL EVENT-

Talk on Periya Puranam by

Sri T R RAMESH son of  Sekkizhar Adippodi Dr T N Ramachandran and  Lawyer and PRESIDENT, HINDU TEMPLE WORSHIPPERS COMMITTEE.

 Anaya Nayanar, Nandanar 

 ******

ஞானமயம் ஒலி/ ஒளி பரப்பு நிகழ்ச்சி நிரல் ஞாயிற்றுக்கிழமை 7 September 2025

நேரில் காணலாம்; கேட்கலாம் via Zoom, Facebook and You Tube at the same time .

***

இறைவணக்கம் – திருமதி ஜெயந்தி சுந்தர் குழுவினர்-Mrs Latha Murthy 

****

உலக இந்துமத செய்தி மடல்-

லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்து வழங்கும் செய்தி செய்தி மடல்.

***

ஆலயம் அறிவோம் —திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன் —

சொற்பொழிவு– தலைப்பு-  சுவாமிமலை ஆலயம்

****

சென்னைப் பேராசிரியர் எஸ். சூரிய நாராயணன்

சொற்பொழிவு

தலைப்பு- கதைகள்- தகவல்கள்

****

இன்றைய சிறப்பு நிகழ்ச்சி:

சொற்பொழிவு  பெரியபுராணத் தொடர் சொற்பொழிவு

Anaya Nayanar, Nandanar 

திரு T R ரமேஷ் அவர்கள்

கோவில் செல்லுவோர் சங்கத் தலைவர் , வழக்கறிஞர்

son of  Sekkizhar Adippodi Dr T N Ramachandran and  Lawyer and PRESIDENT, HINDU TEMPLE WORSHIPPERS COMMITTEE.

 ****

Anchored by London Swaminathan from London and Kalyanji from India.

****

JOIN US ON EVERY SUNDAY.

—subham—

Tags-Gnanamayam Broadcast, 7-9- 2025, programme

—subham—

tags -7 9 2025 broadcast, summary

ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல் (Post No.14956)

Written by London Swaminathan

Post No. 14,956

Date uploaded in London –  8 September 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த வாசித்து வழங்கும் செய்தி மடல்.

அனைவருக்கும் வணக்கம். இன்று ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் மாதம் ஏழாம்  தேதி 2025-ம் ஆண்டு

****

இன்று சந்திர கிரஹணம் இந்தியாவிலும் உலகின் பெரும்பகுதியிலும் தெரியும். தமிழ்நாட்டிலும் பிற மாநிலங்கிளிலும் கிரஹண காலத்தில் கோவிலைத் தற்காலிகமாக மூடி விடுவார்கள் சில இடங்களில் சந்நிதிகளை மட்டும் மூடுவார்கள்ஆகையால் இன்று ஞாயிற்றுக்கிழமை கிரஹண காலத்தில் கோவிலுக்குச் செல்வதானால் முன்கூட்டி விசாரித்துவிட்டுச் செல்லவும் .

கிரஹண காலத்தில் பிரார்த்தனை செய்வதுமந்திரங்களை ஜபிப்பது பல மடங்கு பலன்களைத் தரும் என்பது இந்துக்களின் நம்பிக்கை . வீட்டிலேயே இதைச் செய்யலாம் .

***

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சொத்து மீட்பு வழக்கு : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

 மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சொத்து மீட்பு தொடர்பான வழக்கில் தமிழக அரசு விரிவான பதில் மனுதாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை  கிளை உத்தரவிட்டுள்ளது.

மீனாட்சி அம்மன் கோயில் சொத்து மற்றும் அதன் உப கோயில்களின் சொத்துகளை மீட்டு பாதுகாக்கவும், கோயில் புதுப்பிப்பு பணிகளை முடித்து விரைவாகக் கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிடக் கோரியும் திருத்தொண்டர் அறக்கட்டளையின் அறங்காவலர் ராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரை  கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள், மீனாட்சி அம்மன் கோயில் சொத்துக்களை மீட்க 2021ஆம் ஆண்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் எடுக்கப்பட்ட நடவடிக்கைக் குறித்து விரிவான அறிக்கைத் தாக்கல செய்ய வேண்டும் எனத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

***

ஒணம் பண்டிகை கொண்டாட்டங்கள்

மலையாள மொழி பேசும் மக்கள் இருக்கும் அனைத்துப் பகுதிகளிலும் இந்த பண்டிகைக் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதே போன்று தமிழகக் கேரளா எல்லைப் பகுதியான கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளிலும் அத்தம் நட்சத்திரம் முதலே கொண்டாட்டம் களைகட்டியது. அத்தப்பூ கோலப் போட்டி, ஊஞ்சல் ஆட்டம், உறியடி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் உற்சாகமாக நடைபெறறன. தொடர்ந்து அறுசுவை உணவான ஓணம் சத்யா உணவை அனைவரும் ருசித்து உண்டனர் .

அசுர அரசனான மகாபலி மன்னன் பெரிய யாகம் ஒன்றுநடத்தினான்.அந்த யாகம் வெற்றிகரமாக நடத்தினால் இந்திரலோகமே அவனது வசமாகும்.இதனால் கலக்கம் அடைந்த தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர். தேவர்களை காப்பதற்காக மூன்று அடி உயரமான வாமன வடிவம் எடுத்து மகாவிஷ்ணு யாகம் நடக்கும் இடத்திற்கு சென்றார். மூன்று அடி நிலம் வேண்டும் என்ற வரம் கேட்ட வாமனருக்கு மகாபலி மன்னன் கமண்டலத்தில் உள்ள தீர்த்தத்தை வாமனரின் கைகளில் விட்டதும் விண்ணுக்கும், மண்ணுக்கும் ஆக திரு விக்ரமனாக உருவெடுத்த மகாவிஷ்ணு -முதல் அடி வானத்தை,இரண்டாவது அடி பூமியையும் அளந்தார். மூன்றாவது அடிக்கு இடம் இல்லாததால் தன்னுடைய தலைமை காட்டிய மகாபலி தலை மீது கால் வைத்து அவரை பாதாள லோகத்திற்கு அனுப்பினார் ஆண்டுக்கு ஒரு முறை தன்னுடைய மக்களை காண பூமிக்கு வரவும் மகாபலிக்கு வரம் அளித்தார். மகாவிஷ்ணுவின் வரத்தின் படி ஆண்டுக்கு ஒரு முறை தனது மக்களை காண மகாபலி பூமிக்கு வரும் ஆவணி மாத திருவோண நட்சத்திர தினமே ஓணம் பண்டிகையாக கேரள மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

ஓணம் பண்டிகை பத்து நாட்கள் கொண்டாட்டமாக இந்த ஆண்டு 2025 ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 5 ஆம் தேதி திருவோண நட்சத்திரம் நாள் வரை கொண்டாடப்பட்டது.

பத்து நாட்கள் நடைபெறும் பண்டிகையில் 64 வகையான ஓணம் சத்தியா விருந்து, படகு போட்டிகள்,வண்ண வண்ண அழகான மலர்களால் கோலமிட்டு மிக பிரம்மாண்டமாக ஓணம் கொண்டாடப்படுவது வழக்கம்.

**********************************

தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நுாலகத்தின் 5 ஆண்டு நிதி நிலை அறிக்கை தேவைஉயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை : தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நுாலகத்தை மாதிரி நுாலகமாக வகைப்படுத்த தாக்கலான வழக்கில் அதன் 5 ஆண்டு கால நிதி நிலை அறிக்கை, ஆண்டறிக்கை, அனுமதிக்கப்பட்ட, காலியாக உள்ள பணியிட விபரங்களை அரசு தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

சென்னை பிரபாகரன் தாக்கல் செய்த பொதுநல மனு: தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நுாலகம் ஆசியாவின் பழமையான நுாலகங்களில் ஒன்று. இது 16 ம் நுாற்றாண்டில் தஞ்சாவூர் நாயக்க மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் நிறுவப்பட்டது. பின் மராட்டிய மன்னர்களால் குறிப்பாக இரண்டாம் சரபோஜி மன்னரால் (1798-1832) மேம்படுத்தப்பட்டது.

தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, உருது, மராத்தியில் 60 ஆயிரம் ஓலைச்சுவடிகள் உள்ளன. இவை இந்தியாவின் அறிவுசார் மற்றும் கலாசார பாரம்பரிய பங்களிப்புகள். ரூ.1.65 கோடியில் ஓலைச்சுவடிகள், புத்தகங்களை டிஜிட்டல் மயமாக்குதல், சமஸ்கிருத புத்தகங்கள் மொழிபெயர்ப்பு, ஓவியங்களை பாதுகாக்க மற்றும் நுாலகத்தை சீரமைக்க அரசு 2012 ல் திட்டமிட்டது. இதை முழுமையாக செயல்படுத்தவில்லை. அலுவலர் பணியிடங்களை நிரப்பவில்லை. உள்கட்டமைப்பை மேம்படுத்தவில்லை. இதனால் அரிய ஓலைச்சுவடிகள், ஆவணங்கள் சேதமடைகின்றன.

மத்திய கலாசாரத்துறை தேசிய நுாலகங்கள் இயக்கத்தை 2014 ல் துவக்கியது. இதன்படி தேசிய மெய்நிகர் நுாலகம் உருவாக்குதல், பின்தங்கிய மாவட்டங்களில் நுாலகங்களை மேம்படுத்துதல், நெட்வொர்க் இணைப்பு வழங்கும் நோக்கில் ரூ. 400 கோடி ஒதுக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் சரஸ்வதி மகால் நுாலகம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் உள்கட்டமைப்பை மேம்படுத்த நிதி ஒதுக்காமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

தேசிய நுாலகங்கள் இயக்கத்தின் கீழ் சரஸ்வதி மகால் நுாலகத்தை மாதிரி நுாலகமாக வகைப்படுத்தி, டிஜிட்டல் மயமாக்கி மேம்படுத்த நிதி ஒதுக்க வலியுறுத்தி மத்திய கலாசாரத்துறை செயலர், தமிழக தலைமைச் செயலருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் நிரஞ்சன் எஸ்.குமார் ஆஜரானார்.

தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அஜ்மல்கான்: இந்நுாலகத்தை வரலாறு மற்றும் கலாசார அடையாள முக்கியத்துவம் வாய்ந்த இடமாக ஆக.,1 ல் அரசு அறிவித்துள்ளது.

தற்குரிய செலவு, பராமரிப்பிற்கான நிதியை அரசு வழங்கும். தேசிய நுாலகங்கள் இயக்கத்தின் கீழ் மாதிரி நுாலகமாக மாற்ற வேண்டிய அவசியமில்லை என்றார்.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

நுாலகத்தின் 5 ஆண்டுகால நிதி நிலை அறிக்கை, ஆண்டறிக்கை, அனுமதிக்கப்பட்ட மற்றும் காலியாக உள்ள பணியிட விபரங்களை அரசு தரப்பில் செப்., 16 ல் தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.

*****

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சாமி தரிசனம்!

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சாமி தரிசனம் செய்தார்.

இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு வருகை தந்தார். அப்போது அவருக்கு கோயில் நிர்வாகத்தினர், பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். தொடர்ந்து கோயிலுக்குள் சென்ற திரௌபதி முர்மு, ஆண்டாள் யானைக்கு பழங்கள் வழங்கி ஆசி பெற்றார்.

இதையடுத்து மூலவர் சன்னதிக்கு சென்ற குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, ரங்கநாதரை மனமுருகி வழிபட்டார். குடியரசு தலைவர் வருகையை ஒட்டி கோயிலில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதையடுத்து டெல்லி புறப்பட்ட திரௌபதி முர்முவை காண, திருச்சி கொள்ளிடம் பஞ்சக்கரை அருகே ஏராளமான மக்கள் காத்திருந்தனர். அப்போது அவர்களை கண்ட திரௌபதி முர்மு காரில் இருந்து இறங்கிச் சென்று, நலம் விசாரித்தார். மேலும் தனது பாதுகாப்பு அதிகாரிகளிடம் அங்கிருந்த குழந்தைகளுக்கு மிட்டாய் வழங்குமாறு அறிவுறுத்தினார்.

*****

செப்டமபர் 20 பம்பையில்  ஐயப்ப சங்கமம்

ஐயப்பன் மாநாட்டுக்கு சர்ச்சைக்குரிய பெண்ணுக்கு அழைப்பா? அமைச்சர் கொடுத்த விளக்கம்

இந்தக் கூட்டம் பெரும் சர்ச்சைக்குளாகி இருகிறது கடவுள் நம்பிக்கையில்லாத , இந்து விரோத  மார்க்ஸீய, திராவிடக் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதால் இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன

திருவனந்தபுரம்: உலக ஐயப்பன் சங்கமம் மாநாட்டுக்கு சர்ச்சைக்குரிய பெண்ணாக பார்க்கப்படும் பிந்து அம்மணி க்கு அழைப்பு விடுக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தேவசம் போர்டு அமைச்சர் வாசவன் விளக்கம் அளித்துள்ளார்.

கேரளாவின் பம்பையில் உலக அய்யப்ப பக்தர்கள் சங்கமம் நிகழ்ச்சி நடக்கிறது. இந்நிகழ்ச்சியை கேரள முதல்வர் பினராயி விஜயன் துவங்கி வைக்கிறார். ‘இந்த விழாவில் பங்கேற்க அண்டை மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள் உள்பட பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.,

2019ம் ஆண்டு சபரிமலைக்கு அத்துமீறி நுழைந்த பிந்து அம்மணி என்ற பெண்ணும், உலக ஐயப்பன் சங்கமம் மாநாட்டில் பங்கேற்க அனுமதிக்குமாறு கேரள அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இது குறித்து தேவசம் போர்டு அமைச்சர் வாசவன் கூறுகையில், ‘மாநில அரசுடன் இணைந்து திருவனந்தபுரம் தேவசம் போர்டு ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சியில் அவரை (பிந்து அம்மணி) அனுமதிக்க வேண்டிய அவசியமில்லை. எந்தவொரு வகையிலும் அவர் ஐயப்பா சங்கமத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்,’ என்றார்.

****

நிலச்சரிவு: வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை 9-ம் நாளாக நிறுத்தம்

காஷ்மீரில் மீண்​டும் நிலச்​சரிவு ஏற்​பட்​ட​தால் மாதா வைஷ்ணவி தேவி கோயில் யாத்​திரை 9-வது நாளாக நேற்​றும் நிறுத்​தப்​பட்​டது. ஜம்மு காஷ்மீரில் கடந்த சில வாரங்​களாக கனமழை பெய்து வரு​கிறது.

இதனால் ஆறுகளில் வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டுள்​ளதுடன் மலைப் பகு​தி​களில் நிலச்​சரிவு ஏற்​பட்​டுள்​ளது. ரியாசி மாவட்​டத்​தில் உள்ள மாதா வைஷ்ணவி தேவி கோயிலுக்கு செல்​லும் பாதை​யில் கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி நிலச்​சரிவு ஏற்​பட்​டது. இதில் 34 பக்தர்கள் உயி​ரிழந்​தனர். 20 பேர் காயமடைந்​தனர். இதையடுத்து வைஷ்ணவி தேவி கோயிலுக்​கான யாத்​திரை தற்​காலிக​மாக நிறுத்​தப்​பட்​டது.

இடி​பாடு​களை அகற்​றும் பணி நடை​பெற்று வரு​கிறது. இதனிடையே, காஷ்மீரில் தொடர்ந்து கனமழை பெய்து வரு​கிறது.

எனினும், நிலச்​சரிவு ஏற்​பட்​ட​போது பக்​தர்​கள் யாரும் இல்​லாத​தால் உயி​ரிழப்பு எது​வும் ஏற்​பட​வில்​லை. அதே​நேரம், கோயி​லில் உள்ள பூஜாரிகள் தொடர்ந்து தின​மும் பூஜை செய்​து வரு​கின்​றனர்​.

****

திருப்பதி கோவிலுக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை

திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் பிராணதான அறக்கட்டளைக்கு கோடிக்கணக்கில் பணம் சேர்ந்து வருகிறது .

உலகிலேயே பணக்காரக்கடவுள் என்று பெயர் பெற்ற திருப்பதி வெங்கடாசலபதி கோவில் ஏழை மக்களுக்கு சேவை செய்ய  பல அறக்கட்டளைகளை  நடத்திவருகிற்து சில தினங்களுக்கு முன்னர் ஒரு கல்வி நிறுவனத்தைச் சேர்ந்தவர்  ஒரு கோடியே பதினோரு லட்சம் ரூபாயை பிராணதான அறக்கட்டளைக்கு அளித்தார் . வணிகர் பி.வி ரவிக்குமாரும் கோடிக்கணக்கில் அளித்தார். ஜனவரி மாதம் சென்னையைச் சேர்ந்த வர்த்தமான ஜெயின், ஐந்து கோடிக்கும் மேலாக நன்கொடை அளித்தது குறிப்பிடத்தக்கது ;இது ஏழை மக்களின் மருத்துவ வசதி மற்றும் பசுக்களை பராமரிக்கும் பணிகளுக்குச் செலவிடப்படுகிறது.

கூகுள் நிறுவன துணைத்தலைவர் தோட்டா சந்திரசேகர் சமீபத்தில் திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் பிராணதான அறக்கட்டளைக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கினார்.

****

உலக அரசியலில் கோலோச்சும் இந்திய வம்சாவளியினர்

புதுடில்லி: இந்திய வம்சாவளியை சேர்ந்த 261 பேர் பல்வேறு நாடுகளில் மக்கள் பிரதிநிதிகளாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

இது தொடர்பாக ராஜ்யசபா எம்பி சாந்தம் சிங் சாந்துவுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளதாவது: இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் பலர், வெளிநாடுகளில் அரசியல் நிர்வாகம், சர்வதேச அமைப்புகளில் முக்கிய பதவி வகித்து வருகின்றனர்.

உலகில் 204 நாடுகளில் 3.43 கோடி இந்தியர்கள் வசித்து வருகின்றனர். பாகிஸ்தான், கியூபா மற்றும் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள சான் மரினோவில் மட்டும் எந்த இந்தியர்களும் இல்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இதில் மக்கள் பிரதிநிதிகளாக தேர்வு செய்யப்பட்ட இந்தியர்கள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியல்

மொரிஷியஸ் -45

கயானா -33

பிரிட்டன் 31

பிரான்ஸ் -24

கனடா -22

சூரினாம் -21

டிரினிடாட் & டொபாகோ – 18

மலேஷியா, பிஜி -தலா 18

அமெரிக்கா – 6 இந்திய வம்சாவளியினர் மக்கள் பிரதிநிதிகளாக தேர்வாகி உள்ளனர்.

உலகளவில் அதிக இந்தியர்கள் வசிக்கும் 10 நாடுகள்!

அமெரிக்கா,ஐக்கிய அரபு எமீரேட், கனடா, மலேஷியா

சவுதி அரேபியா,இலங்கை,தென் ஆப்ரிக்கா  , பிரிட்டன

ஆஸ்திரேலியா ஆகும்.

****

இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.

உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த   வாசித்த செய்தி மடல் இது.

அடுத்த ஒளிபரப்பு செப்டம்பர் மாதம் 14–ம் தேதி ஞாயிற்றுக்கிழமை லண்டன் நேரம் பகல் ஒரு  மணிக்கும்,

இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும் .

வணக்கம்.

—SUBHAM—-

Tags – World Hindu News, 7 -9-2025, Gnanamayam, Broadcast, Vaishnavi

ஆலயம் அறிவோம்! சுவாமிமலை (Post No.14,955)

 

WRITTEN BY Brhannayaki Sathyanarayanan 

Post No. 14, 955

Date uploaded in London – 8 September 2025  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

7-9-2025 ஞானமயம் ஒளிபரப்பில் ஒளிபரப்பப்பட்ட் உரை! 

சுவாமிமலை

ஆலயம் அறிவோம்!

 வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன். 

காமியத்தழுந்தி யிளையாதே

  காலர் கைப் படிந்து மடியாதே

ஓமெழுத்தில் அன்பு மிக ஊறி

  ஓவியத்தில் அந்தம் அருள்வாயே

தூமமெய்க் கணிந்த சுகலீலா

   சூரனைக் கடிந்த கதிர்வேலா

ஏமவெற்புயர்ந்த மயில்வீரா

   ஏரகத்தமர்ந்த பெருமாளே

                  அருணகிரிநாதர் திருவடி போற்றி

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்

பெறுவது முருகப் பெருமானின் அறுபடை வீட்டுத் தலங்களுள் நான்காவது படைவீடாக அமையும் சுவாமி மலை தலமாகும்.

இத்திருத்தலம் கும்பகோணத்திற்கு மேற்கே எட்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. திருவேரகம் என்று பிரசித்தி பெற்ற இந்தத் தலத்திற்கு குருமலை, தாத்ரி கிரி, சுந்தராசலம்,  சிரகிரி, சிவகரி என்ற பெயர்களும் உண்டு.

இறைவன் : சுவாமிநாதர்

தல விருட்சம் : நெல்லி

தீர்த்தங்கள் : வஜ்ஜிர தீர்த்தம், குமாரதாரை தீர்த்தம், சரவண தீர்த்தம்,  நேத்திர தீர்த்தம், மற்றும் பிரம்ம தீர்த்தம்.

செயற்கைக் குன்றாக அமையும் இந்த சுவாமிமலை, தரையிலிருந்து 60 அடி உயரத்தில் உள்ளது. 300 அடி நீளமும் 295 அடி அகலமும் கொண்ட இந்தக் கோவிலுக்கு மூன்று வாயில்கள் உள்ளன. பிரதான வாயிலாக அமைவது தெற்கு வாயில். இதில் ஐந்து அடுக்கு கொண்ட ராஜ கோபுரம் உள்ளது.

மேல் கோவிலில் சுவாமிநாதன் எழுந்தருளி அருள் பாலிக்க, கீழ்க் கோவிலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் திகழ்கிறது. சிவபிரானை வலம் வருகையில் தட்சிணாமூர்த்தி, தல விநாயகர், சோமாஸ்கந்தர், , விசாலாட்சி, விஸ்வநாதர் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன், துர்க்கை, சண்டேஸ்வரர்,  நவக்கிரகங்கள் ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. இதன் வடகிழக்கில் உற்சவ மண்டபம் எனப்படும் வசந்த மண்டபம் உள்ளது.

படிகள் மீது ஏறி மேலே செல்லும் போது 28 படிகளைத் தாண்டிச் சென்றால் இரண்டாவது சுற்றுப் பிரகாரம் காணப்படும். இதன் கிழக்குப் பகுதியில் முருகன் சிவபிரானுக்கு பிரணவ உபதேசம் செய்யும் சுதைச் சிற்பம் உள்ளது.

இரண்டாவது பிரகாரத்தில் தென் பக்கம் 12 படிகள் ஏறிச் சென்றால் தல கணபதியாக விளங்கும் நேத்திர விநாயகர் எழுந்ந்தருளிக் காட்சியளிக்கிறார். உள்ளே இந்திரனால் வழங்கப்பட்ட ஐராவத யானையைப் பார்க்கலாம். இடது புறத்தில் கார்த்தவீர்யார்ஜுனன் சிலையும் மேற்கில் உற்சவ மூர்த்திகளான வள்ளி தெய்வானை சமேத சுப்ரமண்யரையும் தரிசிக்கலாம்.

மேலே சுவாமிநாதன் சந்நிதியில் சுவாமிநாதன் வலது கையில் தண்டமும் இடது கையை இடுப்பில் அமர்த்தியும் சிரசில் ஊர்த்துவ சிகாமுடியும் மார்பில் பூணூல், ருத்திராட்சம் விளங்க ஒரு கையில் சக்தி வேலுடன் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறார்.

இத்திருத்தலத்தைப் பற்றி ஏராளமான புராண வரலாறுகள் உள்ளன.

முன்னொரு காலத்தில் பிருகு முனிவர் கடும் தவம் ஒன்றை மேற்கொண்டார். தன் தவத்தைக் கலைக்கும் வகையில் யார் வந்தாலும் அவர்கள் பிரம்மஞானத்தை மறந்து விடுவார்கள் என்று கடும் சாபம் கொடுத்தார். பிறகு தவத்தை ஆரம்பித்தார். அவரது தவத்தின் உக்கிரம் தேவர்களைச் சுட்டெரிக்கவே எல்லா தேவர்களும் சிவபிரானிடம் சென்று முறையிட்டனர். சிவபிரான் மனம் கனிந்தார். நேராக பிருகு முனிவரிடம் சென்றார். சிவபிரானை தரிசித்த பிருகு முனிவர் மிகவும் மகிழ்ந்தார். ஆனால் தான் கொடுத்த சாபம் நினைவுக்கு வரவே அவர் மிகவும் வருந்தினார். ஆனால் சிவபிரானோ, “முனிவரே, கவலைப்பட வேண்டாம். மறந்த ஞானத்தைத் தர முருகன் வந்து உபதேசிப்பான்” என்று கூறி அருளினார்.

ஆணவத்தால் கர்வம் மேலிட இருந்த பிரம்மாவிடம் முருகப்பிரான் பிரணவத்தின் உண்மைப் பொருளைக் கேட்க அவர் பதில் சொல்ல முடியாது விழித்தார். உடனே முருகன் அவர் தலையில் ஒரு குட்டு குட்டினார். அவரையும் பல தேவர்களையும் சிறையில் அடைத்தார்.

சிவபிரானிடம் முருகன் பிரணவத்தின் பொருளைக் கேட்க அவர் பிருகு முனிவரின் சாபத்தால் அதை மறந்த நிலையில் இருந்தார். தனக்குத் தெரியவில்லை என்று கூறினார். உடனே முருகன் சிவபிரானையும் பிரம்மாவையும் இந்தத் தலத்திற்கு அழைத்து வந்து பிரணவத்தின் உண்மைப் பொருளை உபதேசித்தார். தகப்பனுக்கே உபதேசித்த அப்பன் சாமி ஆனார். மிகவும் சக்தி வாய்ந்த தலமாக சுவாமிமலை ஆனது.

இன்னும் சில வரலாறுகளும் இந்தத் தலம் பற்றி உண்டு.

முன்னொரு காலத்தில் பிரகதீஸ்வரர் என்ற ஒரு அந்தணர் இருந்தார். பல தலங்களுக்கும் யாத்திரையை மேற்கொண்ட அவர் இந்தத் தலத்திற்கு வந்து சுவாமியை நேரில் கண்டு ஆசி பெற்றார். தன் ஆயுள் முழுவதும் சுவாமிநாதனை வழிபட எண்ணம் கொண்ட அவர் இங்கேயே ஒரு ஆசிரமம் அமைத்து முருகனை வழிபடலானார்.

இன்னொரு அந்தணனின் வரலாறும் உண்டு. பிரம்மஹத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்ட ஒரு அந்தணன் அதற்குப் பிராயச்சித்தம் தேடி இந்தத் தலத்திற்கு வந்தான். அவனிடம் பிரகதீஸ்வரர், “ கவலைப் படாதே. நீ பல ஜென்மங்களில் செய்த புண்ணியத்தால் இங்கு வந்திருக்கிறாய். ஒரு வரலாற்றைக் கேள். பிறருடைய ஆடைகளைத் திருடி வந்த ஒரு திருடன் வெண்குஷ்ட நோயால் பீடிக்கப்பட்டான். ஒரு நாள் அவன் இங்குள்ள ஒரு வீட்டின் திண்ணையில் இரவில் தங்கினான். வீட்டார் அனைவரும் தூங்கியவுடன் உள்ளே நுழைந்த அவன் ஆபரணங்களை எல்லாம் திருடிக் கொண்டிருந்தான். சத்தம்கேட்டுக் கண் விழித்த அந்த வீட்டார் அவனைப் பிடிக்க முயலும் போது அவன் ஓடலானான். ஓடும் வழியில் வஜ்ர தீர்த்தத்தில் தடுக்கி விழுந்தான். இரவு முழுவதும் அந்தக் கிணற்றில் இருந்த அவனைக் காலையில் மக்கள் பிடித்து வெளியேற்றினர். என்ன ஆச்சரியம்! அவன் உடலில் இருந்த வெண்குஷ்டம் மறைந்திருந்தது. தீர்த்தத்தின் மகிமையை உணர்ந்த அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். திருடன் தான் செய்த செயலுக்கு மன்னிப்புக் கேட்டு திருந்தினான். வஜ்ர தீர்த்தத்தின் மகிமை உலகிற்குத் தெரிந்தது.  ஆகவே, நீயும் இந்த புண்ணிய தீர்த்தத்தில் நீராடு. உன் தோஷம் போய்விடும்” என்று இவ்வாறு உரைத்து அருளினார். அந்த அந்த்ணனும் அப்படியே செய்ய அவன் தோஷம் நீங்கியது.

வியாஸ மஹரிஷியின் புதல்வரான சுக மஹரிஷி இந்தத் தலத்தில் கந்தனை தரிசித்து அருள் பெற்றார்.

இங்குள்ள நேத்திர விநாயகர் பற்றிய வரலாறு ஒன்று உண்டு.

கொங்குநாட்டைச் சேர்ந்த ஒருவன் பிறவிக் குருடன். அவன் தல யாத்திரையாக இந்தத் தலத்திற்கு வந்தான். பசியால் வருந்திய அவன் காவிரி நதிக்குத் தட்டுத் தடுமாறி சென்று நீராடினான். மீண்டும் நேத்திர புஷ்கரணியில் நீராடி ஆலயத்திற்கு வந்து விநாயகர் சந்நிதியை அடைந்தான். அங்கு அவரை மனதார வேண்டினான். விநாயகர் அருள் புரிந்தார். அவர் கருணையால் அக்கணமே கண் பார்வையைப் பெற்றான். அந்த நாள் முதல் இந்த் விநாயகர் நேத்திர விநாயகர் என்று அழைக்கப்படலானார்.

இங்குள்ள மீனாட்சி சுந்தரேசர் விக்ரஹம் ஸ்தாபிக்கப்பட்டதற்கு ஒரு சுவையான வரலாறு ஒன்று உண்டு.

மதுரையை அரசாண்ட சிறந்த சிவபக்தனான வரகுணபாண்டியன் ஒரு முறை பிரம்மஹத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்டான். அந்த தோஷம் நீங்க அவன் திருவிடைமருதூரை நோக்கி வரும் போது இறைவனின் கட்டளையால் இந்தத் தலத்தில் தங்கினான். அன்னை மீனாட்சியையும் சுந்தரேவரரையும் தரிசிக்காமல் உண்பதில்லை என்ற விரதத்தை மேற்கொண்டிருந்த அவன் இந்தத் தலத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் விக்ரஹங்களை ஸ்தாபித்து வணங்கி பின் திருவிடைமருதூருக்குச் சென்றான்.

இங்கு ஐராவதம் யானை வந்ததற்கும் ஒரு வரலாறு உண்டு.

ஹரிகேசன் என்ற் ஒரு கொடிய அரக்கனின் படையெடுப்பால் இந்திரன் பெரும் தொல்லைக்கு ஆளானான். தன் வலிமையையும் இழந்தான். அவன் இந்தத் தலத்திற்கு வந்து முருகனை வழிபட, முருகனின் திருவருள் அவனுக்குக் கிடைத்தது. இழந்த தன் வலிமையைப் பெற்ற இந்திரன் அதற்கு நன்றிக் கடனாக தனது வாகனமான ஐராவதத்தை நிறுத்தி வணங்கினான். முருகன் சந்நிதியில் அவனை நோக்கி இருக்க வேண்டிய மயில் இத்தலத்தில் இல்லை. அதற்கு பதிலாக ஐராவதம் இருப்பதை இன்றும் காணலாம்.

இந்தத் தலத்தில் அருணகிரிநாதர் 49 திருப்புகழ் பாடல்களை இயற்றி அருளியுள்ளார்.

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து அருளும் சுவாமிநாதர் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். 

நன்றி, வணக்கம்.

ஐஸ்லாண்டின் மர்மக் குள்ளர்கள் – ஹுல்டுக்கள்! (Post No.14,954)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,954

Date uploaded in London – 8 September 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

7-9-25 தினமணி கதிர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை! 

ஐஸ்லாண்டின் மர்மக் குள்ளர்கள் – ஹுல்டுக்கள்! 

ச. நாகராஜன் 

பூமியில் மனிதர்களைத் தவிர வேற்று உலகவாசிகளும் வசிக்கிறார்களா அல்லது மனித ஆற்றலையும் விஞ்சிய சூப்பர் ஆற்றலுடன் மறைந்து வாழும் இனமும் உள்ளதா? 

இந்தக் கேள்விக்கு விசித்திரமான விடை கிடைத்தது ஐஸ்லாண்டில்.

 ஐஸ்லாண்ட் என்பது ஐரோப்பாவிற்கும் வட அமெரிக்காவிற்கும் இடையில் அமைந்துள்ள எரிமலைப் பகுதி நிறைந்துள்ள  குட்டி நாடாகும். இதன் மொத்தப் பரப்பளவு 39817 சதுரமைல்கள் . மக்கள் ஜனத்தொகை 3,91,810. இங்குள்ள மக்கள் நல்ல கல்வியறிவு பெற்றவர்கள்.

 இங்கு வாழ்கின்ற பலரும் பல மர்மமான குள்ளர்களைக் கண்டதாக அடிக்கடி கூறி வந்தனர். இதைப் பகுத்தறிவுவாதிகள் நம்பவில்லை.

அகுரேய்ரி என்பது ஐஸ்லாண்டில் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு பெரிய நகரமாகும்.

அங்குள்ள நேச்சுரல் ஹிஸ்டரி மியூஸியத்தின் மேனேஜராகப் பணி புரிந்த ஹெல்ஜி ஹால்கிரிமேஸன் என்பவர், “பல நேர்மையான மனிதர்கள் கூட அந்தக் குள்ள மனிதர்களைத் தாங்களே நேரில் காணும் வரை அதை நம்பவில்லை” என்று கூறினார். 

அந்த மனிதர்கள் தாங்கள் வாழும் பகுதியை மிகவும் நேசிப்பவர்கள். தங்கள் “நாட்டை” வேறு ஒருவரும் ஆக்கிரமித்து விடக் கூடாது என்பதில் தீவிரமாய் இருப்பவர்கள். அப்படி யாரேனும் அவர்களுக்குத் தொந்தரவு கொடுத்தால் அதை ‘அவர்கள் வழியில்’ எதிர்ப்பார்கள்! 

1962ம் வருடம் அகுரேய்ரியி,ல் ஒரு புதிய துறைமுகம் கட்டும் பணி ஆரம்பமாயிற்று.

வந்தது பல்வேறு விதமான பிரச்சினைகள்.

அங்கு துறைமுகம் அமைப்பதற்காக பாறைகளை வெடிபொருள்களை வைத்து உடைக்கப் பார்த்தவர்கள் ஆச்சரியப்படும்படியாக பாறைகளை உடைக்கவே முடியவில்லை. எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் வெடிபொருள் சாதனம் இயங்கவே இயங்காது. அத்தோடு அங்கு வேலை பார்த்த அனைவருக்கும் வெடிக்காயங்களும் பல்வேறு வியாதிகளும் வர ஆரம்பித்தன திடீர் திடீர் என்று நோய்வாய்ப்பட்ட தொழிலாளர்கள் பயந்தே போனார்கள்.

 இனி இங்கு தங்களால் வேலை பார்க்க முடியாது என்ற நிலைக்கு அவர்கள் வந்த போது ஓலாஃபுர் பால்டர்ஸன் என்ற மனிதர் அவர்களிடம் வந்து இந்த பிரச்சினைக்குத் தான் தீர்வு காண்பதாக உறுதி அளித்தார்.

இதெல்லாம் மர்மக்குள்ளர்கள் தங்கள் பிரதேசத்தை மனிதர்கள் ஆக்கிரமிக்கிறார்கள் என்ற எண்ணத்தில் அவர்கள் செய்யும் வேலை என்ற பால்டர்ஸன் அவர்களுடன் தான் பேசுவதாகக் கூறினார்

 மத்தியஸ்தம் பேசி விஷயத்தைச் சுமுகமாக முடிக்க வேண்டும் என்பதற்காக அவர் அகுரேய்ரியின் மாஜிஸ்ட்ரேட்டின் அனுமதியைக் கோரினார். அவரும் மகிழ்ச்சியுடன் தன் அனுமதியை வழங்கினார்.

 என்ன ஆச்சரியம், அதற்குப் பின்னர் விஷயங்கள் சுமுகமாக அரங்கேறின.

 மக்கள் ஒருவாறாக மர்மக் குள்ளர்கள் இருப்பதை நம்ப ஆரம்பித்தனர்.

 1984ல் மீண்டும் ஒரு பிரச்சினை தோன்றியது.

இந்த முறை ஐஸ்லாண்டின் சாலை அமைக்கும் பிரிவு அகுரேய்ரி அருகே ஒரு புதிய சாலையை அமைக்க ஆரம்பித்தது. வந்தது பிரச்சினை.

அனைத்துத் தொழிலாளர்களுக்கும் பல்வேறு நோய்கள் வர ஆரம்பித்தன. எக்ஸ்கவேட்டர்கள் படார் படாரென திடீரென்று உடைந்தன. அனைவரும் பயந்து போனார்கள்.

 ஹெல்ஜி ஹால்கிரிமேஸன் கூறினார் : “விஞ்ஞானம் விளக்க முடியாத விஷயங்கள் ஏராளம் உலகில் உள்ளன”.

 தோர் மக்னூஸன் என்பவர், “இப்படி சிலர் இருப்பதாகச் சொல்பவர்கள் உடனடியாகத் தங்கள் கண்களைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்” என்று நக்கலாகக் கூறினார்.

 ஆனால் ஐஸ்லாண்ட் மக்கள் இவர்களை ஹுல்டு மக்கள் (HULDUFOLK) என்று இனம் கண்டு கூறுகின்றனர் இவர்களின் மேல் உதடிற்கு மேலே ஒரு பிளவு இருக்கும். எப்போதும் சாம்பல் நிற ஆடைகளையே உடுத்தும் இவர்கள் கறுத்த முடியை உடையவர்கள். மறைந்து பிறர் கண்ணுக்குத் தெரியாமல் வாழ்பவர்கள். அவர்கள் நினைத்தால் தான் அவர்கள் உருவத்தைக் காண முடியும்.

ஐஸ்லாண்டில் நான்கு தேசீய விடுமுறைகள் இவர்களுடன் தொடர்பு கொண்டதாக இருக்கிறது. புத்தாண்டு தினம், ஜனவரி 6ம் தேதி (இது  13ம் நாள் என்று அழைக்கப்படுகிறது)  மிட்ஸம்மர் இரவு, கிறிஸ்துமஸ் இரவு ஆகியவையே அந்த நான்கு விடுமுறை தினங்கள். கிறிஸ்துமஸிற்கு முன்பாக அனைத்து வீடுகளையும் சுத்தம் செய்து சிறிது உணவை இந்த ஹுல்டுகளுக்காக ஐஸ்லாண்ட் மக்கள் வைக்கின்றனர். புத்தாண்டு தினத்தன்று இவர்கள் புது இடங்களுக்குப் போய் விடுவார்களாம். அவர்களுக்கு வழி தெரிய வேண்டும் என்பதற்காக ஆங்காங்கே ஏராளமான மெழுகுவர்த்திகளை ஐஸ்லாண்ட் மக்கள் ஏற்றி வைப்பது இன்றும் நடைபெறுகிறது! மிட்ஸம்மர் தினமான ஜூன் 24ம் தேதி அன்று சாலை சந்திப்புகளில் உட்காரக் கூடாது என்பது ஐஸ்லாண்ட் மக்களின் நம்பிக்கை. உட்கார்ந்தால் அவர்களை ஹுல்டுக்கள் பிடித்துக் கொண்டு விடுவார்கள் என்கின்றனர் அவர்கள்.

2013ம் ஆண்டில் அல்ஃடேனியஸிலிருந்து ரெய்க்ஜவிக் என்ற இடத்திற்கு ஒரு சாலை போடுவதாக ஐஸ்லாண்டில் ஒரு திட்டம் எழுந்த போது சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். காரணம் அது அங்கு பாறைகளில் மறைந்து வாழும் ஹூல்டுக்களுக்கு பாதகம் விளைவிக்கும் என்பது தான்!

ஹுல்டுக்களைப் பற்றிய ஏராளமான நாவல்கள் வந்து விட்டன. யூ டியூபிலும் பல சுவையான விவரங்களைப் பார்க்கலாம்!

ஆக, இன்றும் விஞ்ஞானம் விளக்க முடியாத மர்ம இனம் இருப்பதை ஐஸ்லாண்ட்  மக்கள் நம்புகின்றனர். 

ஏனெனில் அனுபவிப்பது அவர்கள் அல்லவா!

**