The Smiles of a Pretty Woman are the Tears of the Purse -13 (Post No.18,865)

Written by London Swaminathan

Post No. 14,865

Date uploaded in London –  13 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

One Thousand Proverbs on Woman, Wife and Daughter -Part 13

241.Don’t choose a wife and a linen in candlelight.

242. For a young man a wife is a support and his walking stick a luxury; for an old man his wife is the luxury and the stick the support.

243.A bone for my dog; a stick for my wife.

244. Two women are a party, three a crowd.

245. From women, evil, and cucumbers, the smaller is the better.

246. Nothing is worse than a poor jew, lean pork or a drunken woman.

–Hungarian

247.Women’s counsels are often fatal.

–Icelandic

248. Every man has good wife and a bad trade.

249.  A wife and an oxen choose from your own country.

250. Your wife and your bag get from a neighbour.

251. He who has had a wife deserves a crown of patience, but who he has had two deserves a strait waistcoat.

252. Water, smoke and a bad wife drive men out of the house.

253. Your wife is a calf of your own country.

254.The first wife is matrimony, the second company, the third heresy.

255. In buying horses and takin a wife, shut yours eyes tight and commend yourself to God.

256. If the wife sins, the husband is not innocent. 

257. Wives, horses and books should never be lent.

258. As both a good horse and a bad horse se need the spur, so both a good woman and a bad woman need the stick.

259. A mill and a woman are always in want of something.

260. The smiles of a pretty woman are the tears of the purse.

–Italian Proverbs

To be continued…………………….

Tags- proverbs, on women, wife, Italian, Part 13, smile, tears

 சங்க இலக்கியத்தில், காளிதாசன் நூல்களில் சூரியன் வழிபாடு-1 (Post.14,864)

Written by London Swaminathan

Post No. 14,864

Date uploaded in London –  13 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 சங்க இலக்கியத்தில், காளிதாசன் நூல்களில் சூரியன் வழிபாடு-1 (Post.14,864)

அமரகோசம் என்னும் முதல் நிகண்டினைப் பின்பற்றி தமிழர்களின் முதல் நிகண்டு என கருதப்படும் திவாகரம் தொகுக்கப்பட்டது. அதில் இந்திரன், தண்ணீர், சூரியன் போன்ற தலைப்பில் சொல்லப்படும் பெயர்கள் பெரும்பாலும் சம்ஸ்க்ருத அமர கோசத்தில் உள்ள சொற்களே ; இதை தமிழ் நிகண்டு என்று சொல்வதைவிட சம்ஸ்க்ருத நிகண்டின் மொழிபெயர்ப்பு அல்லது தழுவல் என்றே சொல்ல வேண்டும்; .இதோ சூரியனுக்குள்ள 20 தமிழ் பெயர்கள் :-

இரவி, இனன், மணி, என்றூழ் , செஞ்சுடர், பரிதி, தேரோன், எல்லோன், பானு, சண்டன், அருக்கன், தபனன், ஆதவா, அண்டயோனி, ஆயிரங்கதிரோன், கனலி, திவாகரன், கனலோன், பார்க்கறேன், அனலி, ஒளியோன், அலரி, மார்த்தாண்டன், தினகரன், செங்கதிர், திமிராரி, அரி, அருணன், சூரன் ஞாயிறு, சவிதா, பாகன், பர்கன், வெயிலோன், ஆதித்தன், விரிச்சிகன்,  விரோசனன், விகார்த்தனன் , மித்திரன், வெய்யோன், கதிரோன், வெஞ்சுடர், சோதி, பகலவன், பதங்கன், எல்லை, பதங்கன், ஆதபன், அழலவன், உதயன், இருள்வலி, பொழுது, பகவன், சான்றோன், வேந்தன், தபனம், தரணி,  எல்லி, சாயா பதி, பகலோன், வின்மணி, பனிப்பகை, கதிரவன்,  சுடரோன், மாலி , பகல்,

20 தமிழ்ச் சொற்களை மட்டும் தடித்த எழுத்தில் காட்டியுள்ளேன்; கதிர், பகல், ஒளி என்ற சொற்களில் பிறந்தவற்றை ஒன்றாகக் கொள்ளவேண்டும்.

***

“நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத்

தெறுகதிர் கனலி வெம்மை தாங்கிக்

கால் உணவாகச் சுடரொடு கொட்கும்

அவிர்சடை முனிவரும் மருள கொடுஞ்சிறைக்

கூருகிர்ப் பருந்தின் ஏறுகுறித் தொரீ இத்

தன்னகம் புக்க குறுநடைப் புறவின்”

—புறம் 43 தாமப் பல் கண்ணனார்

“செம்பொறி வாங்கிய மொய்ம்பின் சுடர் விடுபு

வண்புகழ் இறைந்து வசிந்து வாங்கு நிமிர் தோள்

விண் செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியத்

ஒரு கை உக்கம் சேர்த்தியது ஒரு கை”

——திருமுருகாற்றுப்படை 106-109

“சுடரொடு திரிதரு முனிவரும் அமரரும்

இடர்கெட அருளும் நின் இணை அடி தொழுதேம்

அடல் வலி எயினர் நின் அடிதொடு கடனிது”

—-சிலப்பதிகாரம் (வேட்டுவ வரி 15.அவிப் பலி)

“வசை தவிர் ககன சரசிவ கரண

மகாவ்ருத சீல சால வரமுனி சித்தரை

அஞ்சல் என்று வாழ்வித்து நின்றன”

—அருணகிரிநாதர் (புயவகுப்பு)

வாலகியர்கள் எனப்படும் 60,000 குள்ள முனிவர்கள் பற்றி ரிக் வேதமும் தமிழ் நூல்களும் சுவையான பல செய்திகளைத் தருகின்றன. ரிக் வேதத்தின் எட்டாவது மண்டலத்தில் பிற்சேர்க்கையாக 11 பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இவைகளைப் பிற்சேர்க்கை என்பதால் வேதத்துக்கு உரை எழுதிய சாயணர் இந்தப் பகுதிக்கு உரை எழுதவில்லை. ஆனால் ராமாயணம், மஹாபாரதம் மற்றும் புராணங்களில் இவர்களுடைய வரலாறு உள்ளது. இவர்களுடைய வரலாற்றில் பல வியப்பூட்டும் விஷயங்கள் இருக்கின்றன.

ஆங்கிலத்தில் ஜோனதன் ஸ்விப்ட்(Gulliver’s Travels by Jonathan Swift) என்பவர் கல்லிவரின் பயணம் என்ற ஒரு நாவலைப் படைத்தார். கல்லிவர் தனது பயணத்தில் லில்லிபுட் என்ற நாட்டுக்குப் போனபோது எல்லோரும் விரல் அளவுக்கே இருந்ததால் அந்த இடத்தில் கல்லிவர் என்ன என்ன சாஹசங்கள் செய்தார் என்று கதை மிக சுவையாகப் போகும். அந்தக் கதைக்கான கருத்தை ஜோனதன் ஸ்விப்ட் நமது வேதத்திலிருந்தும் இதிஹாச ங்களி லிருந்தும் எடுத்தார் என்றே தோன்றுகிறது. அந்தக் காலத்தில் இந்தியாவைப் பற்றி ஆங்கில நாளேடுகள் நிறைய செய்திகளை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு சுவையான விஷயம் பூமியிலுள்ள மக்களைக் கதிரவனின் கடுமையான கதிர்களிலிருந்து காப்பது இந்த முனிவர்கள்தான் என்று படிக்கும்போது சில அறிவியல் உண்மைகள் தெரியவருகின்றது. சூரியனிடமிருந்து வரும் புற ஊதாக் கதிர்கள் மனிதன் மீது அதிகமாகப் பட்டால் தோலில் புற்று நோய் உள்பட பல நோய்கள் ஏற்படும். ஆக சூரிய வெம்மை மனிதன் மீது அதிகம் படக்கூடாது என்பதை அவர்கள் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதியதே வியப்பான விஷயம்தான். அத்தோடு நிற்காமல் இந்த முனிவர்கள் 60,000 பேர் வெம்மையை தாங்களே வாங்கிக் கொண்டு நம்மைக் காப்பதற்காக தினமும் சூரியனுடன் சுற்றிவருவதாக எழுதியிருப்பது இன்னும் அதிசயமாக இருக்கிறது. இவர்களை நம்மை புற ஊதாக் (ultra violet rays) கதிர்களிலிருந்து பாதுகாக்கும் ஓசோன் வளையத்துக்கு (ozone layer) ஒப்பிட்டால் அது மிகையாகாது!

வடமொழி நூல்களில் சுவையான புராணக் கதைகள் மட்டுமே இருக்கின்றன. ஆனால் தமிழில் சில பாட்டுகளுக்கு உரை எழுதியோர் அறிவியல் உண்மைகளை மிகத் தெளிவாக எழுதியுள்ளனர்.

யார் இந்தக் குள்ளர்கள்?

இவர்கள் க்ரது என்பவருக்குப் பிறந்தவர்கள். தாயின் பெயர் கிரியை.; பிரம்மாவின் மானச புத்திரர்கள் என்றும் அழைக்கப் படுவர். இவர்கள் கட்டை விரல் உயரம் தான் இருப்பார்கள். ஆனால் தேஜோ (ஒளி) மயமானவர்கள். முற்றும் துறந்த இவர்கள் மரத்தில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டே தவம் செய்வார்கள். 60,000 எண்ணிக்கையுடைய இவர்கள் சூரியனுக்கு முன் அவனுடன் பயணம் செய்வார்கள்.

ஒரு முறை காச்யப முனிவர் தனது 2 மனைவிகளுக்கு குழந்தைப் பேறு கிடைக்க ஒரு யாகம் ஏற்பாடு செய்தார். அதில் இந்திரன் உள்பட அனைத்து தேவர்களும் முனிவர்களும் உதவிக்கு அழைக்கப் பட்டனர். இந்திரன் முதலானோர் வேகம் வேகமாக பெரிய விறகுகளை யாகத் தீக்கு கொண்டுவந்தனர். ஆனால் குட்டை வாலகில்யர்களோ ஒவ்வொரு இலை இலையாகக் கொண்டுவந்தனர். அத்தோடு சிறு சிறு குழிகளில் தேங்கியிருக்கும் தண்ணீரில் விழுந்தும் புரண்டும் வந்தனர். இதைப் பார்த்த இந்திரனுக்கு சிரிப்பு தாங்கவில்லை. சத்தம் போட்டு சிரித்து விட்டான்.

(இதுபோன்ற நகைச்சுவைக் கருப்பொருளை ‘காப்பி’ அடித்துதான் ஒரு கற்பனை நாவலை எழுதிவிட்டார் ஜோனதன் ஸ்விப்ட்).

வாலகீல்யர்களுக்கு பயங்கரக் கோபம் வந்தது. நாம் ஒரு புதிய இந்திரனைப் படைப்போம் என்று முடிவு எடுத்தனர். இந்திரன் நடு நடுங்கிப் போய் விட்டான். ஓடிப்போய் காஸ்யபரிடம் நடந்த அனைத்தையும் கூறினான். “வாலகீல்யர்கள் சக்தி வாய்ந்த தவசீலர்கள் அவர்கள். மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரியது. ஆனால் ஏதேனும் சமாதானம் செய்து மாற்று வழி கண்டுபிடிக்கிறேன்“ என்று காஸ்யபர் பதில் சொன்னார். பின்னர் வாலகீல்யர்களிடம் போய் இந்திரன் பயந்து நடுங்குகிறான் என்று கூறி புது இந்திரனைப் படைக்காதீர்கள் என்றும் நீங்கள் பறவைகளுக்கு இந்திரனான கருடனைப் படையுங்கள் என்றும் மன்றாடினார். வேறு ஒரு நேரத்தில் இந்திரனைத் தோற்கடிக்க வகை செய்வதாகவும் சொல்லி சமாதானப் படுத்தினார். வாலகில்யர்கள் தனியாக யாகம் செய்தனர்.

இந்த சமாதான உடன்படிக்கையின்படி காஸ்யபரின் ஒரு மனைவீக்கு வாலகீல்யர்களின் யாகப் பிரசாதம் கொடுக்கப்பட்டது. அதைச் சாப்பிட்ட வினதை என்னும் மனைவி அருணனையும் கருடனையும் பெற்றெடுத்தாள். மற்றொரு மனைவியான கத்ரு வேறு ஒரு யாகப் பிரசாதத்தை சாப்பிட்டு நாகர்களைப் பெற்றெடுத்தாள். மற்றொரு தருணத்தில் கருடன் இந்திரனைத் தோற்கடித்து அமிர்தத்தைக் கொண்டுவந்து பழி தீர்த்துக் கொண்டான்.

திருமுருகாற்றுப் படைக்கு உரை எழுதிய கி.வா.ஜகந்நாதன் அவர்கள் வேறு ஒரு விஷயத்தையும் கூறுகிறார். மந்தோகருணர் என்று அழைக்கப்படும் அசுரர்கள் சூரியனுக்கு தினமும் தீங்கு செய்வதாகவும் அந்தணர்கள் நாள்தோரும் மூன்று வேளைச் சந்தியாவந்தனத்தில் கொடுக்கும் அர்க்யம் (நீர்) இந்த அசுரர்களை வீழ்த்த சூரியனுக்குத் துணைசெய்கிறது என்றும் கூறுகிறார். இந்த மந்தோகருண அசுரர்கள் சூரியன் வீசும் புற ஊதாக் கதிர்களா (ultra violet rays) அல்லது காந்த அலைகளா (magnetic storms and solar flares) என்பதை மேலும் ஆராயவேண்டும்.

மேற்கோள் காட்டிய பாடல்களின் பொருள்:

சூரியனுக்கு உதவும் வாலகில்யர்களுக்கு முருகப் பெருமான் ஒரு கையால் அருள் புரிகிறார் என்று திருமுருகாற்றுப் படை கூறுகிறது.

புறநானூற்றில் வேறு ஒரு கதை: சோழன் நலங்கிள்ளியின் தம்பியாகிய மாவளத்தானை தாமப் பல் கண்ணனார் பாடுகையில் சோழர்களின் முன்னோனாகிய சிபிச் சக்கரவர்த்தி ஒரு புறாவுக்காக எப்படி தன்னையே தந்தார் என்று கூறிவிட்டு சிபியின் பெருமையைச் சுடரொடு திரிதரும் வாலகில்ய முனிவர்களோடு ஒப்பிடுகிறார்.அந்த முனிவர்களுக்குக் காற்றுதான் உணவு என்றும் புறநானூறு கூறுகிறது.

சிலப்பதிகாரதில் வேடர்கள் பாடுகையில் வானிலே திரிபவரான முனிவரரும் அமரரும் இடர்கெடுமாறு அருளுகின்ற நின்பாதங்களைத் தொழுதோம் என்று எயினர்கள் துர்க்கா தேவியின் (கொற்றவை) புகழ் பாடுகின்றனர். இது அடியார்க்கு நல்லார் எழுதிய உரையாகும். அருணகிரிநாதரும் இம் முனிவர்களைப் பாடிப் பரவுகின்றார்.

ஆக அடியார்க்கு நல்லாரும் நச்சினார்க்கினியரும் கூறும் புதிய விஷயங்கள் வேத, இதிஹாச, புராணக் குறிப்புகளுக்கு முத்தாய்ப்பாக அமைந்துள்ளன என்று சொல்லலாம்

இப்பொழுது அதர்வண வேதத்தைப் படித்தபொழுது புதிய தகவல் கிடைத்திருக்கிறது 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இது தமிழர்களுக்கும் தெரியும் என்பது சங்க இலக்கியக் குறிப்புகளால் தெளிவாத் தெரிகிறது. அதர்வண வேதத்தின் ( அ. வே)  கடைசி காண்டங்கள் – அதாவது பத்தொன்பதாவது, இருபதாவது காண்டங்கள் — ரிக் வேத செய்யுட்களை மீண்டும் கூறுகின்றன. அதாவது உலகிலேயே பழைய நூலான ரிக்வேதத்தின் மறு  பதிப்பு !

அதில் உள்ள முக்கிய வரிகளைக் குறிப்பிட்ட பின்னர் எனது வியாக்கியானத்தைத் தருகிறேன்:–

பத்தொன்பதாவது காண்டம், பாடல் 53, 54 ( சூக்தங்கள் 569 , 570 ; தலைப்பு-காலன் )

தமிழில் காலன் என்றால் யமன்; காலம் என்றால் நேரம்.

இரண்டும் நம்மை விழுங்கிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நாள் நமக்குக் கழிந்தால், யமனுடைய வீட்டுக்குப் போக தயார் ஆகிறோம் என்று பொருள்.

அதர்வண வேதத்தில் ( அ. வே)   சூரியனுடன் சவாரி செய்யும் முனிவர்கள் பற்றிய குறிப்பு வருகிறது . வியாக்கியனக்காரர்கள் அங்கு வாலகில்யர் என்னும் குள்ள முனிவர்கள் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் புறநானூற்று வரி அப்படியே உள்ளது.

“சுடரொடு திரிதரும் முனிவரும்” என்பது சிலப்பதிகார வரி. “சுடரொடு கொட்கும் அவிர்சடை   முனிவரும்” என்பது புறநானூற்று வரி . (பாடல் 43) இதை எழுதியவர் பெயர் நரசிம்மன். அதாவது தாமப்பல் கண்ணன்

ஓம்  வஜ்ர நகாய வித்மஹே தீஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி

தன்னோ நரசிம்ஹ ப்ரசோதயாத் — என்பது நரசிம்ம காயத்ரி  மந்திரம்

இதில் தீக்ஷ்ண தம்ஷ்ட்ர  என்பதன் தமிழ் ஆக்கமே “தாமப்பல் “. கண்ணன் என்பது அவர் பெயர் அல்லது குடும்பப் பெயர் என்றும் கொள்ளலாம் .

அ .வே. முதல் துதி சூரியனை போற்றுகிறது. இதில் சூரிய ஒளியில் காணப்படும் 7 வண்ணங்கள் 7 குதிரைகளாக வருணிக்கப்படுகின்றன. இதை நாம் வானவில் ஏற்படுகையில் காண்கிறோம். சூரிய ஒளியை  PRISM  பிரிஸம் என்னும் முப்பட்டைக் கண்ணாடி வழியே பாய்ச்சினாலும் தெரியும் .

“முதல் துதியின் முதல் மந்திரத்தில் அறிஞர்களான கவிகள் அவனில் ஏறுகிறார்கள் ; எல்லா புவனங்களும் அவனுடைய சக்கரங்கள் “– என்ற வரிகள் வருகின்றன. ஏனைய ஒன்பது மந்திரங்களில் இன்னும் பல அறிவியல் தகவல்கள் உள்ளன..

அ .வே. மந்திரங்களை இந்திய விஞ்ஞானிகள் உட்கார்ந்து ஆராய்ந்தால் அமெரிக்க, ரஷ்ய விஞ்ஞானிகள் சொல்லுவதற்கு முன்னரே நாம் பல உண்மைகளை சொல்ல முடியும்.

****

ரகுவம்சத்தில் சூரியன் 

पितुः प्रयत्नात्स समग्रसंपदः शुभैः शरीरावयवैर्दिने दिने|

पुपोष वृद्धिं हरिदश्वदीधितेरनुप्रवेशादिव बालचन्द्रमाः॥ ३-२२

இந்த ஸ்லோகத்தில் காளிதாசன் ஒரு விஞ்ஞான உண்மையையும் சொல்கிறார். சூரியனின் ஒளிதான் சந்திரன் மீது படிப்படியாகப்பட்டு  சந்திரன்  முழு நிலவாகிறது .

எப்படி சூரியன் சந்திரன் ஒளியை வளர்க்கிறதோ அப்படி திலீபன் தனது மகனை வளரச் செய்தான் .

pituḥ prayatnātsa samagrasaṁpadaḥ śubhaiḥ śarīrāvayavairdine dine|

pupoṣa vṛddhiṁ haridaśvadīdhiteranupraveśādiva bālacandramāḥ || 3-22

இதில் சூரியன் பயணம் செய்யும் பச்சைக்குதிரை என்ற வரிகளில் — ஹரிதஷ்வ — கதிரவன் குறிக்கப்படுகிறான்.

***

நெடுநல்வாடை 

விரி கதிர் பரப்பிய வியல் வாய் மண்டிலம்,

இரு கோல் குறிநிலை வழுக்காது, குடக்கு ஏர்பு,

ஒரு திறம் சாரா அரை நாள் அமயத்து,                               75

நூல் அறி புலவர் நுண்ணிதின் கயிறு இட்டு,

தேஎம் கொண்டு, தெய்வம் நோக்கி,

பெரும் பெயர் மன்னர்க்கு ஒப்ப, மனை வகுத்து

ஒருங்கு உடன் வளைஇ ஓங்கு நிலை வரைப்பின்,            

பரு இரும்பு பிணித்து, செவ்வரக்கு உரீஇ, 

பொருள் 

அரசிக்கு மனை அரசனின் அரண்மனைக்கு ஒப்பாக அமைக்கப்பட்டது.

கட்டடக்கலை நூலில் தேர்ச்சி பெற்ற கலைஞன்

அரசிக்கு மனை வகுத்தான்.

கயிறு கட்டி மனையைப் பிரித்துக் காட்டினான்.

நிறுத்தியும் கிடத்தியும்

ஒரே கோலை மடித்து வைத்துச்

சூரியனின் நிழல் ஒன்றன் நிழல் மற்றொன்றின்மீது படும்படி

நிறுத்துவது இருகோல் குறிநிலை.

ஏறும் பொழுதாகவும், இறங்கும் பொழுதாகவும் இல்லாத நண்பகலில்

இருகோல் குறிநிலை நிறுத்தி

அவன் நிலத்தின் திசையைக் கணித்துக்கொண்டான்.

****

To be continued……………………

Tags– திவாகரம் , சூரியனின் தமிழ்ப் பெயர்கள் சங்க இலக்கியம் , காளிதாசன் நூல்கள்   சூரியன் வழிபாடு, பகுதி -1

சந்தானம் இல்லத்திற்கு சிருங்கேரி  பீடாதிபதி விஜயம்! -Part 7 (Post No.14,863)

V Santanam and A N Sivaraman on either side of Sri Sringeri Shankaracharya 

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,863

Date uploaded in London – 13 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

புதிய தொடர்!

அதிசய புருஷர் திரு வெ.சந்தானம்! – 7 

ச. நாகராஜன் 

8

சந்தானம் இல்லத்திற்கு சிருங்கேரி  பீடாதிபதி விஜயம்! 

ஆதி சங்கரர் ஸ்தாபித்த முக்கிய மடங்களுள் ஒன்று

சிருங்கேரி மடம்.

சிருங்கேரி ஶ்ரீ சாரதா பீடத்தின் 35வது பீடாதிபதியாக பீடம் ஏறியவர் ஶ்ரீ அபிநவ வித்யா தீர்த்த ஸ்வாமிகள்.(அவதாரம் – 13-11-1917 சமாதி – 21-9-1989)

உலகமே வியந்து போற்றிய இவரது மகிமை பாரெங்கும் பரவியது.

பல ஊர்களுக்கும் திக்விஜயம் செய்து உபதேச உரைகளைத் தொடர்ந்து ஆற்றிய மகாஸ்வாமிகள் இவர்.

இவரது உரைகளை தவறாமல் அவ்வப்பொழுது வெளியிடும் நற்பணியைச் செய்து வந்தார் திரு சந்தானம்.

சிருங்கேரி சம்பந்தமான செய்திகளை தினமணியில் பார்ப்பது பக்தர்களின் வழக்கமாக ஆனது.

ஒரு நாள் எங்கள் வீடே பரபரப்புக்குள்ளானது.

சிருங்கேரி ஸ்வாமிகள் எங்கள் இல்லத்திற்கு விஜயம் செய்யப் போகிறார் என்ற செய்தியால் தான் இந்தப் பரபரப்பு!

அனைவரும் குதூகலத்துடன் உற்சாகமாக பரபரப்புடன் அவரை வரவேற்க ஏற்பாடுகளைச் செய்யலானோம்.

கலசம் ரெடி. கோலங்கள் போடப்பட்டன. வீடே அலங்கரிக்கப்பட்டது.

கூடத்தில் நடுநாயகமாக அமர்ந்தார் ஶ்ரீ அபிநவ வித்யா தீர்த்த ஸ்வாமிகள். எல்லோருக்கும் ஆசீர்வாதம், அனுக்ரஹம். அனைவரும் மலர்ந்தனர். எப்படியோ செய்தியை அறிந்து நண்பர்கள் வந்து சேர்ந்தனர். கூட்டமான கூட்டம். கூடம் நிரம்பி வழிந்தது.

நெடுநேரம் இல்லத்தில் இருந்து எங்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்திய அவர் கடைசியில் என் தந்தையாரின் முகத்தை நோக்கினார்.

“என்ன வேணும்?” என்ற பாவனை அவர் முகத்தில் தொனித்தது.

உடனே எனது தந்தையார் மிகவும் பணிவுடன், “ என்னுடைய பையன்கள் (ஐந்து மகன்கள்,, ஒரு மகள்) எல்லோரும் ஹிந்து மதத்தைப் பரப்பும் பணியில் ஈடுபடவேண்டும். இது தான் எனது ஆசை. பிரார்த்தனை”” என்றார்.

ஒரு கணம் அமைதி நிலவியது.

பிறகு ஸ்வாமிகள் பலத்த சிரிப்புடன் கைகளைத் தட்டினார். அனைவரையும், “வாருங்கள்” என்று தம் அருகே அழைத்தார்.

“சந்தானம் சொன்னதைக் கேட்டீர்களா? பிள்ளைகள் எல்லோரும் ஹிந்து மதத்தை நன்கு பரப்ப வேண்டுமாம்” என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினார்.

எங்கள் அனைவரையும் ஒவ்வொருவராக தன் முன் வரச் சொன்னார்.

என் அண்ணன் சீனிவாசனில் ஆரம்பித்து அனைவரும் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தோம். ஒவ்வொருவருக்கும் ஒரு பழத்தைக் கையில் கொடுத்து அனுக்ரஹித்தார்.

அதன் பலனாகவே அனைவரும் ஹிந்து மத சேவையில் தொடர்ந்து ஈடுபடலானோம்.

ஒரு உதாரணத்திற்கு லண்டன் சுவாமிநாதன் நடத்தும் இந்த tamilandvedas.com ப்ளாக்கையே எடுத்துக் கொள்வோம்.

11-8-2025 அன்று வரை 14859 கட்டுரைகள் வெளியாகியுள்ளன. இதைப் பார்த்துப் பயனடைந்தாரின் எண்ணிக்கை ஒரு கோடியே ஐம்பத்தேழு லட்சத்து அறுபத்தேழாயிரத்து எண்ணூற்றிப் பதினான்கு – 11-8-25 வரை!

ஸ்வாமிகளின் உரைகளைப் படித்து மகிழ்வதோடு நிற்பதில்லை பக்தர்கள்!

லொள்ளு பக்தர்களும் உண்டல்லவா! அவர்களில் ஒருவர் மதுரையில் பெரிய வக்கீல்!

அவர் காஞ்சி மடம், சிருங்கேரி மடம் செய்திகள் வெளியானவுடன் காலையில் ஏழு மணிக்கு எங்கள் வீட்டிற்கு வந்து விடுவார்.

எனது தந்தையாரின் மிக முக்கியமான அலுவல் நேரம் சுமார் ஏழு மணி முதல் ஒன்பது மணி வரை தான்.

நாங்கள் இருந்த வடக்குமாசி வீதிக்கு அடுத்த தெரு நாயக்கர் புதுத் தெரு. அதில் தான் ராய்ட்டர் ஆபீஸ் இருந்தது. பின்னால் இது Press Trust India ஆபீஸாக மாறியது. இரவு முழுவது வரும் செய்திகளை ரோல் ரோலாக எடுத்து காலை ஆறு மணிக்கு இந்த அலுவலகம் எனது வீட்டிற்கு அனுப்பி விடும். அலுவலகம் இருக்கும் இடம் சுமார் ஒரே ஒரு கிலோமீட்டர் தான்!

வந்த ரோல்கட்டுகளைப் பிரித்து, தொடர்ந்து நிமிடம் தோறும் வரும் செய்திகளைப் படித்து, வடிகட்டி, செய்தி செய்தியாகப் பிரித்து அதை எந்த சப்-எடிட்டர் எழுத வேண்டும் என்று அவர் பெயரை குறித்து செய்தித் தொகுப்பை மடிப்பது அவர் வழக்கம்.

இந்த நேரத்தில் யாரும் அவரைத் தொந்தரவு செய்யக் கூடாது.

இது இல்லத்திற்கு வரும் அனைவருக்கும் தெரியும்.

ஆகவே வக்கீலும் எதிரில் சும்மா அமர்ந்திருப்பார். எங்களின் காபி உபசாரமெல்லாம் உண்டு.

கடையில் கட்டை முடித்து வைத்து வெற்றிலைப் பெட்டியை எடுத்து “என்ன விஷயம்?” என்று வக்கீலைப் பார்ப்பார் என் தந்தை.

ஆபீஸிலிருந்து ஒரு ஆபீஸ்- பாய் வந்து அந்தக் கட்டை மாரியம்மன் தெப்பக்குளத்திற்கு அருகே இருக்கும் தினமணி அலுவலத்திற்கு எடுத்துச் செல்வார். உடனே அங்கு காலை ஷிபிடிற்கான சப்-எடிட்டர்கள் வர, அன்றாட வேலை ஆரம்பிக்கும்.

“ஒன்றுமில்லை, சிருங்கேரி நியூஸ் வந்திருக்கிறது. ரொம்ப தேங்க்ஸ். ஆனால்…” என்று இழுப்பார் அவர்.

“என்ன?” – என் தந்தை.

“ஒன்றுமில்லை. இது இரண்டாம் பக்கத்தில் கீழே சிங்கிள் காலத்தில் வந்திருக்கிறது. ஆனால் காஞ்சி ஸ்வாமிகளின் நியூஸ் நேற்று முதல் பக்கத்தில் டபிள் காலம் (Double Column) ஹெட்டிங்கில் பெரிதாக இரண்டு காலம் வந்திருக்கிறது. இது சரியா?

வக்கீலின் கேள்விக்கு என்ன பதில்?

என் தந்தை பொறுமையாக செய்தியின் முக்கியத்துவம், அது போய்ச் சேர வேண்டியவகளின் எண்ணிக்கை, அது கிடைத்த நேரம், அனுப்பியவர் யார் என்பதைச் சொல்வார். பிறகு மெதுவாகக் கேட்பார்

அது சரி போனவாரம் சிருங்கேரி ஸ்வாமிகளின் உரை முதல் பக்கத்தில் மூன்று காலம் வந்ததே, காஞ்சி மடத்தின் நியூஸ் மூன்றாவது பக்கத்தில் சிங்கிள் காலமாக வந்ததே, அப்போது ஏன் நீங்கள் இங்கு வரவில்லை?” என்று கேட்பார்.

வந்தவர் அசடு வழிய நமஸ்காரம் சொல்லி விட்டுப் போவார்.

இது அந்த லொள்ளு பக்தரின் வழக்கம்.

செய்திகளைப் பொறுத்த மட்டில் பாரபட்சமே கிடையாது – எனது தந்தையாரிடம். வேண்டியவர் வேண்டாதவர் என்று எவரும் கிடையாது.

சிருங்கேரி ஸ்வாமிகளின் அத்யந்த பக்தர்களுக்கு எனது தந்தையாரைப் பற்றி நன்கு தெரியும். அதை விட மஹாஸ்வாமிகளுக்கு இன்னும் நன்றாகத் தெரியும்.

சங்கர ஐயர் என்று ஒரு பெரிய செல்வந்தர். (இவர் இன்னொரு சங்கர ஐயர், இந்தியன் பேங்க் ஏஜண்ட் அல்ல!) பெரிய காருடன் வந்து, வீட்டு வாசலில் இருந்து, உரக்கக் கத்துவார் – போகலாமா என்று.

தந்தையார் அவரைப் பார்த்து எங்கே என்று கேட்டால் சிருங்கேரிக்கு என்று பதில் வரும்.

அத்தனை வேலையிலும் உடனடியாக அலுவலகத்தில் செய்ய வேண்டியவற்றை குறிப்பிட்டவர்களுக்குச் சொல்லி விட்டு கையில் கிடைத்த வேஷ்டி சட்டையுடன் அவருடன் கிளம்பிச் செல்வார் தந்தையார்.

ஸ்வாமிகளுக்கும் சந்தோஷம்; எங்கள் குடும்பத்தினருக்கும் அவரது ஆசீர்வாதத்தினால் சந்தோஷம்.

இப்படிப்பட்ட திடீர் பயணங்கள் கடவுளின் ஆசி எப்போதும் உண்டு, எப்படியாவது வரும் என்பதை உணர்த்தி வந்தன!

அடுத்ததாக ஸ்வாமி சாந்தானந்தாவினுடனான என் தந்தையின் தொடர்பைப் பார்ப்போமா?

***

To be continued…………………….

BERMUDA TRAINGLE MYSTERY SOLVED BY AUSTRALIAN SCIENTIST;பெர்முடா முக்கோணத்தின் மர்மம் விலகியது!

பெர்முடா முக்கோணத்தின் மர்மம் விலகியது!

A Scientist Says He’s Solved the Bermuda Triangle, Just Like That

Pretty simple, actually. FROM POPULAR MECHANICS

POSTED BY LONDON SWAMINATHAN ON 12 -8-2025

Here’s what you’ll learn when you read this story:

  • An Australian scientist says probabilities are the leading cause of the Bermuda Triangle disappearances. And he’s not the only one.
  • Add in suspect weather, and iffy plane and boat piloting, and Karl Kruszelnicki believes there’s no reason to believe in the Bermuda Triangle phenomenon.
  • While the conspiracy of the Bermuda Triangle has existed for decades, the National Oceanic and Atmospheric Association and Lloyd’s of London has long championed the same ideas.

Pick any one of the more than 50 ships or 20 planes that have disappeared in the Bermuda Triangle in the last century. Each one has a story without an ending, leading to a litany of conspiracy theories about the disappearances in the area, marked roughly by Florida, Bermuda, and the Greater Antilles.

Australian scientist Karl Kruszelnicki doesn’t subscribe to the Bermuda Triangle’s supernatural reputation. Neither does the United States’ own National Oceanic and Atmospheric Association (NOAA). Both have been saying for years that there’s really no Bermuda Triangle mystery. In fact, the loss and disappearance of ships and planes is a mere fact of probabilities.

“There is no evidence that mysterious disappearances occur with any greater frequency in the Bermuda Triangle than in any other large, well-traveled area of the ocean,” NOAA wrote in 2010.

And since 2017, Kruszelnicki has been saying the same thing. He told The Independent that the sheer volume of traffic—in a tricky area to navigate, no less—shows “the number [of ships and planes] that go missing in the Bermuda Triangle is the same as anywhere in the world on a percentage basis.” He says that both Lloyd’s of London and the U.S. Coast Guard support that idea. In fact, as The Independent notes, Lloyd’s of London has had this same theory since the 1970s.

NOAA says environmental considerations can explain away most of the Bermuda Triangle disappearances, highlighting the Gulf Stream’s tendency towards violent changes in weather, the number of islands in the Caribbean Sea offering a complicated navigation adventure, and evidence that suggests the Bermuda Triangle may cause a magnetic compass to point to true north instead of magnetic north, causing for confusion in wayfinding.

“The U.S. Navy and U.S. Coast Guard contend that there are no supernatural explanations for disasters at sea,” NOAA says. “Their experience suggests that the combined forces of nature and human fallibility outdo even the most incredulous science fiction.”

Kruszelnicki has routinely garnered public attention for espousing these very thoughts on the Bermuda Triangle, first in 2017 and then again in 2022 before resurfacing once more in 2023. Throughout it all, he’s stuck to the same idea: the numbers don’t lie.

Even with some high-profile disappearances—such as Flight 19, a group of five U.S. Navy TBM Avenger torpedo bombers lost in 1945—pushing the theory into popular culture, Kruszelnicki points out that every instance contains a degree of poor weather or likely human error (or both, as in the case of Flight 19) as the true culprit.

But culture clings to Bermuda Triangle conspiracy theories. The concepts of sea monsters, aliens, and even the entirety of Atlantis dropping to the ocean floor—those are fodder for books, television, and movies. It sure does sound more exciting than poor weather and mathematical probabilities, anyway, even if the “boring” story holds more water.

பெர்முடா முக்கோணத்தின் மர்மம் விலகியது!

FROM JANAM TV NEWS

உலகின் மர்மம் நிறைந்த பகுதியாகப் பெர்முடா முக்கோணம் விளங்கி வருகிறது. அந்த குறிப்பிட்ட பகுதியில் ஏற்படும் அமானுஷ்ய சம்பவங்களுக்கான காரணம் என்ன என்பது குறித்து விஞ்ஞானிகள் தற்போது புதிய விளக்கங்களை அளித்துள்ளனர். அது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

உலகில் பல விஷயங்கள் இதுவரை விடை காணப்படாத மர்மமாகவே நீடித்து வருகின்றன. 2014ஆம் ஆண்டு மாயமான மலேசிய விமானம் என்ன ஆனது? யாருக்கும் தெரியாது.

பெரு பாலைவனத்தில் காணப்படும் பெரிய அளவிலான வடிவங்களை (Nazca Lines) யார் வரைந்தது?. இதுவரை பதிலில்லை. அமெரிக்காவில் பறக்கும் விமானத்தில் கொள்ளையில் ஈடுபட்ட D.B.Cooper எப்படித் தப்பித்தார்? இன்னும் ஆய்வு நடைபெற்று வருகிறது.

இப்படி நீளும் மர்மங்களின் பட்டியலில் எப்போதும் முதன்மை இடம் பிடிப்பது, பெர்முடா முக்கோணம். பெர்முடா முக்கோணம் என்பது, அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள பெர்முடா தீவு, கரீபிய கடலில் உள்ள போர்ட்டோ ரிக்கோ தீவு மற்றும் அமெரிக்காவின் ஃப்ளோரிடாவை இணைக்கிறது. இந்த குறிப்பிட்ட பகுதியில் எந்த கப்பல் சென்றாலும் காணாமல் போய்விடும். இப்பகுதிக்கு மேலே விமானங்கள் பறந்தால், அவையும் மாயமாகிவிடும். எனவே, மிகவும் மர்மம் நிறைந்த பகுதியாகவே பெர்முடா முக்கோணம் இன்று வரை இருந்து வருகிறது.அங்குத் தீய சக்திகள் உள்ளதாக ஒரு தரப்பினரும், வேற்றுகிரகவாசிகள் ஆதிக்கம் செலுத்துவதாக ஒரு தரப்பினரும், இல்லை இல்லை இதெல்லாம் கடற்கொள்ளையர்களின் கைவண்ணம் என மற்றொரு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர். ஆனால், உண்மை என்ன என்பது இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில்தான், ஆஸ்திரேலிய விஞ்ஞானியான கார்ல் க்ருஸ்ஸெல்னிக்கி (Karl Kruszelnicki) இது குறித்துத் தெரிவித்துள்ள கருத்துகள் கவனம் பெற்றுள்ளன.

எழுத்தாளராகவும், அறிவியல் ஆய்வாளராகவும் விளங்கும் இவர்,  கணிதம், இயற்பியல், உயிரி மருத்துவ பொறியியல் உள்ளிட்டவற்றில் பட்டம் பெற்றுள்ளார். வான் இயற்பியல், கணினி அறிவியல், தத்துவம் உள்ளிட்டவற்றையும் பயின்றுள்ளார். எனவே இவரது கருத்துகள் ஆய்வுலகில் எப்போதும் மதிப்பு மிக்க ஒன்றாக இருந்து வருகின்றன.தற்போது, பெர்முடா முக்கோணம் குறித்து கருத்து பகிர்ந்துள்ள Kruszelnicki, அந்த குறிப்பிட்ட பகுதியில் ஏற்பட்ட சம்பவங்கள் எதுவுமே இயற்கைக்கு முரணானவையல்ல எனக் கூறியுள்ளார்.

மனித தவறுகள், தவறான வழியில் செல்லுதல், இயற்கை சீற்றங்கள் உள்ளிட்ட காரணங்களால் பெர்முடா முக்கோண பகுதியில் விபத்துகள் நேரிடுவதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். உலகின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடுகையில், பெர்முடா முக்கோண பகுதியில் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பெர்முடா முக்கோணம் அதிக கடல் திட்டுகளையும்,  shallow area எனப்படும் குறைந்த ஆழம் கொண்ட பகுதிகளையும் கொண்டுள்ளதாகக் கூறும் Kruszelnicki, இதன் காரணமாகவும் விபத்துகள் ஏற்படுவதாகத் தெரிவிக்கிறார். ஜூன் முதல் நவம்பர் மாதம் வரை ஏற்படும்  புயல்களையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டி உள்ளதாகத் தெரிவிக்கும் அவர், மனித தவறுகளையும் சுட்டிக் காட்டுகிறார்.கடல் பயணத்தின்போது இடர் ஏற்பட்டால் செய்ய வேண்டிய வழிமுறைகளைப் பலர் பின்பற்றுவதில்லை எனவும், அதனால் பல அசம்பாவிதங்கள் நேரிடுவதாகவும் தெரிவிக்கிறார்.

உண்மை நிலைமை இப்படி இருந்தாலும், அமானுஷ்யம், மர்மம் போன்ற விஷயங்களில் பெரும்பாலான மக்கள் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர். அது குறித்த கதைகளை அதிகம் கேட்க அவர்கள் விரும்புகின்றனர். இதனால்தான், பெர்முடா முக்கோணம் குறித்த அமானுஷ்ய கதைகள் இன்றுவரை உயிர்ப்புடன் இருந்து வருவதாக Kruszelnicki கூறுகிறார்.

–SUBHAM—

TAGS- பெர்முடா முக்கோணம், மாயம், மர்மம், BERMUDA TRIANGLE, MYSTERY SOLVED, JANAM TV, POPULAR MECHANICS

VERY BAD STAMPS OF INDIA! Pictures of 2500 Indian Stamps! – Part 74 (Post No.14,862)


Written by London Swaminathan

Post No. 14,862

Date uploaded in London –  12 AUGUST, 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

PART 74

***

Pictures of 2500 Indian Stamps continued……………………

I have got 25,000 stamps with beautiful designs.

London Swaminathan has been collecting stamps for 65 years continuously.

In my London, stamp dealers would not touch Indian stamps because they are very dirty; but I would not blame India for it. If u collect stamps in India, it would be spoiled quickly because of the weather conditions. The same stamps can be preserved better in Britain because it is a cold place. But producing bad designed stamps is inexcusable.

***

VERY BAD STAMPS ON MAHABHARATA, FASHION.

THESE MINI SHEETS SHOW PEOPLE IN THE INDIAN POSTAL DEPARTMENT DON’T KNOW HISTORY, RELIGION, MAHABHARATA OR STAMP COLLECTING.

MAHABAHARATA STAMPS WOULD NOT BE UNDERSTOOD BY ANYONE BECAUSE EACH STAMP DON’T SAY WHAT IT IS.

MY MADURAI SETUPATI HIGH SCHIOOL TEACHER PSK USED TO CRITICISE BAD ,ILEGIBLE, DIRTY WRITING AS BEGGAR’S VOMIT.

MAHABHARATA STAMPS BELONG TO THAT CATEGORY.

THEY LOOK LIKE BEGGAR’S VOMIT.

FAHION STAMPS HAS NOTHING TO DO WITH INDIAN CULTURE. THE MINI SHEET iS SO BIG IT WOULD NOT FIT INTO ANY STAMP ALBUM IN THE WORLD. SOME MAD MAN MIGHT HAVE DESIGNED IT WHEN HE IS DRUNK.

IT SHOWS THE PEOPLE IN THE P & T HAVE NO KNOWLEDGE OF STAMP COLLECTING.

PUNISH THEM; TELL THE WORLD HOW MUCH YOU SPENT TO DESIGN THESE STAMPS.

***

DO YOU COLLECT INDIAN STAMPS?

I HAVE GOT 100 MINI SHEETS.

I HAVE GOT SPARE STAMPS .

–subham—

Tags- Indian stamps, MINI STAMPS, 25,000, PART 74, MAHABHARATA, VERY BAD STAMPS, FASHION, PERFUME

Women carry their Swords in their Mouths! Attack on women continues! (Post No.14,861)- Part 12

Written by London Swaminathan

Post No. 14,861

Date uploaded in London –  12 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

One Thousand Proverbs on Woman, Wife and Daughter -Part 12

221.Bad legs and virtuous women are found at home.

222. Cats and women are said to have been made on the same day.

223. Cross women can light fires well.

224. Women carry their swords in their mouths.

225. Good women have no ears.

226. One should praise beautiful days in the evening, beautiful women in the morning.

227.There are only two good women in the world; the one is dead, the other not to be found.

228. Women laugh when they can and cry when they want.

229. When men meet, they listen to each other; when women meet, they look at each other.

230. Summer sown corn and women’s advice turn out well once in seven years.

231. Beauty, gold and youth are women’ s virtue.

—German Proverbs.

232. A woman commands or serves.

233. Nothing is worse than a woman, even than the best of them.

234. Believe no woman, even when she is dead.

235. When the candle is taken away, every woman is alike.

236. Neither an old father nor a woman, nor a spiteful child nor anyone’s dog, nor a sleeping helmsman nor a chattering rower.

237. The sea, fire, woman; three evils.

–Greek proverbs

238.Man prefers another man’s wife, but his own son.

239. The lucky man loses his wife, the unlucky one his horse.

240. A woman’s weapon are her tears.

–Georgian Proverbs

To be continued……………………

Tags- Woman, Women’s, tears,  Georgian, Greek, 1000 proverbs, part 12

காளிதாசன் காவியங்களில் இந்திரன்! சங்கத் தமிழ் நூல்களுடன் ஒப்பீடு! – Part-3 (Post.14,860)

Indra images in South East Asia. 

Written by London Swaminathan

Post No. 14,860

Date uploaded in London –  12 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Indra , Copper idol from Nepal.

தமிழ் நிகண்டில், குமார சம்பவத்தில், இந்திரன்

தமிழ் மொழியில் மிகப்பழைய நிகண்டு (அகராதி) திவாகரம். உலகின் முதல் நிகண்டாகிய அமரகோசத்துக்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் இது எழுதப்பட்டது . அமரகோச ஸம்ஸ்க்ருதச் சொற்களை அப்படியே பயன்படுத்தியுள்ளது;  கிட்டத்தட்ட சம்ஸ்க்ருத அகராதி வரிசையை பயன்படுத்தியுள்ளது; திவாகரம் தொகுத்தவர் சில விஷமங்களையும் செய்துள்ளார் . நூலில்

ஸம்ஸ்க்ருதச் சொற்களே அதிகம் உள்ளன. ஆகையால் சம்ஸ்க்ருத நிகண்டுகளின் தமிழ் வடிவம் என்றே சொல்ல வேண்டும் . அமர கோசம் படித்தவர்களுக்கு இது விளங்கும்.

இந்திர ன்  பற்றி திவாகரம் நிகண்டு சொல்லும் சொற்கள் :-

அமராவதியோன், ஆயிரங்கண்ணன் , சதமகன், கோபதி, போகி, சங்கிராந்தனன், பாகசாதனன், வச்சிரப்படையோன், மேகவாகனன், விண்முழுதாளி, வாசவன், மகவான், வானவன், கெளசிகன்,ஆகண்டலன், அயிராவதன், வலாரி, புருகூதன், சக்கிரன், புரந்தரன், மருத்துவன், மருதக்கிழவன், வரைசிறை க்கரிந்தோன், அரி , சசீவல்லவன், திருமலி, சுவர்க்கம், வேள்வி நாயகன், புலவன், வேந்தன், புரோகிதன், சுனாசி, கரியவன், புனிதன், காண்டாவனன், மால், வெள்ளைவாரணன், தேவர் வேந்தன், பொன்னகர்ச் செல்வன், ஐந்தருநாதன்.

பின்னர் சம்ஸ்க்ருத அமரகோச நூலில் உள்ளத்தைப் போலவே அவரது மனைவி, வாகனம் , மகன், நகர் முதலியவற்றை அதே வரிசையில் சொல்கிறார்; பொதுவாக  சம்ஸ்க்ருத நூலை அப்படியே காப்பி அடித்திருக்கிறார். சில   இடங்களில் சொற்களைத் தமிழ்ப் படுத்தியுள்ளார்; அதிலும் சம்ஸ்க்ருதம் உளது!

உதாரணத்துக்கு சஹஸ்ராக்ஷன்= ஆயிரங்கண்ணன் ; இதில் ஆயிரம் என்பது சம்ஸ்க்ருத சஹஸ்ரம் என்பதன் மருவு என்பதை எல்லா மொழியியல் அறிஞர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

****

இனி காளிதாசனின் குமார சம்பவத்தில் வரும் இந்திரனைக் காண்போம்: இந்திரன் வரும் இடங்கள்—1-20; 2-11; 2-63/4; 3-2; 3-11;3-22;7-45;7-71

“பிறகு ஆகண்டலன் / இந்திரன் தனது கால்களைத் தொடையின் மீதிருந்து அகற்றி STOOL ஸ்டுலின் மீது வைத்துவிட்டு மன்மதனிடம் பேசினான்.

ஐராவதத்தைத் தொட்டுத் தடவிக் கொடுத்தாததால் சொர சொரப்பாகிப் போன கைகளால் தொட்டு மன்மதனை ஆசீர்வதித்தான் 3-11

இதில் இந்திரன் மட்டுமின்றி அவனது ஐராவதம் என்னும் யானை ஆகியவற்றையும் சேர்த்துவிட்டான் கவிஞன் 3-22

****

இந்திரன் தலைமையில் வந்த லோகபாலர்கள் எளிய உடைகளை அணிந்துகொண்டு அதிக படம் காட்டாமல் கூப்பிய கரங்களுடன் சிவ பெருமானச் சந்திக்க நந்தி தேவனிடம் அனுமதி கோரினார்கள் .

இந்திரன், சப்த ரிஷிக்கள், சிவ கணங்கள் எல்லோரும் வந்தார்கள். புரூஹூதா என்ற சொல்லினையும் வ்ருத்ர ஹன் என்ற சொல்லினையும் அடுத்தடுத்த ஸ்லோகங்களில் காண்கிறோம் 7-45; 7-46

இரண்டாவது சர்க்கத்தில் அடுத்தடுத்த ஸ்லோகங்களில் பாகசாசன சதமகம் இந்திரன் 2-63;2-64 என்ற சொற்களைக் காளிதாசன் பயன்படுத்துகிறான் இதில் சதமகம் இந்திரன் என்று சொல்லினுக்கு உரை எழுதியோர் க்ரது என்றால் யாகம் என்றும் ஞானம் என்றும் பொருள் என்கிறார்கள் சதக்ரது என்பதற்கு நூறு அஸ்வமேத யாகம் செய்தவர் என்ற பொருள் பிற்காலத்தில் வந்ததென்றும் வேதகாலத்தில் நூறு குணங்கள் /ஞானம் என்றே பொருள் என்றும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

குமார சம்பவ நூலில்  இந்திரனுக்குப் புதிய சொற்களை காளிதாசன்  பயன்படுத்தியதை கண்டோம்; இவை தமிழில் பரிபாடலில் அதிகம் பயன்படுத்தப்பட்டன .

Sanskrit slokas are taken from sanskrtdocuments.org

तत्र निश्चित्य कन्दर्पमगमत्पाकशासनः|

मनसा कार्यसंसिद्धि त्वराद्विगुणरंहसा॥ २-६३

tatra niścitya kandarpamagamatpākaśāsana |

manasā kāryasaṁsiddhi tvarādviguṇaraṁhasā || 2-63

***

अथ स ललितयोषिद्भ्रूलताचारुशृङ्गं

रतिवलयपदाङ्के चापमासज्य कण्ठे|

सहचरमधुहस्तन्यस्तचूताङ्कुरास्त्रः

शतमखमुपतस्थे प्राञ्जलिः पुष्पधन्वा॥ २-६४

atha sa lalitayoṣidbhrūlatācāruśṛṅgaṁ

rativalayapadāṅke cāpamāsajya kaṇṭhe |

sahacaramadhuhastanyastacūtāṅkurāstraḥ

śatamakhamupatasthe prāñjaliḥ puṣpadhanvā || 2-64

-****          

ரகுவம்சத்தில் 2-75,  சந்திரனையும் கார்த்திகேயனையும் உவமையாகச் சொல்லிவிட்டு சுதக்ஷிணையின்  கர்ப்பத்தில் லோகபாலகர்களின் அம்சங்களும் புகுந்தன என்கிறார் காளிதாசன்

மஹாராணிகள் கர்ப்பம்தரித்தால் இந்திரன் முதலான எட்டு தேவர்களும் கர்ப்பத்தில் பிரவேசிப்பார்கள் என்று  மனு கூறுகிறார்; அதாவது எட்டு லோகபாலகர்கள் எண்திசைகளை ஆளுவது போல பிறக்கப்போகும் ராஜ குமாரனும் எட்டுத் திசைகளை வெல்வான் என்பது பொருள்.

अथ नयनसमुत्थं ज्योतिरत्रेरिव द्यौः

सुरसरिदिव तेजो वह्निनिष्ठ्यूतमैशम्।

नरपतिकुलभूत्यै गर्भमाधत्त राज्ञी

गुरुभिरभिनिविष्टं लोकपालानुभावैः॥ २-७५

atha nayanasamutthaṁ jyotiratreriva dyauḥ

surasaridiva tejo vahniniṣṭhyūtamaiśam|

narapatikulabhūtyai garbhamādhatta rājñī

gurubhirabhiniviṣṭaṁ lokapālānubhāvaiḥ || 2-75

குப்தர்களின் அலஹாபாத் சமுத்திர குப்தன் கல்வெட்டும் மதுராவிலுள்ள சந்திர குப்தன் கல்வெட்டும் மன்னரின் வெற்றியை இந்திரனோடு ஒப்பிடுகின்றன

***

கிழக்கு திசைக்கு அதிபன்

स ययौ प्रथमं प्राचीं तुल्यः प्राचीनबर्हिषा|

अहिताननिलोद्धूतैस्तर्जयन्निव केतुभिः॥ ४-२८

sa yayau prathama.n praacii.n tulyaH praaciinabarhiShaa |

ahitaananiloddhuutaistarjayanniva ketubhiH|| 4-28

இந்திரனுக்கு ப்ராசீனபர்ஹி – கீழ்திசைக்கு அதிபதி என்று பெயர் உண்டு; அதைக் கவிஞன்  இங்கு பயப்படுத்தக் காரணம் ரகுவும் இந்திரனைப்போன்றவன்; ஆகையால் முதலில் கிழக்கு திசையிலுள்ள மன்னர்களை வெல்லப்புறப்பட்டான் என்பது காளிதாசனனி பாடல் .

இது மாக்ஸ்முல்லர் கும்பலுக்கும், கால்டுவெல்  கும்பலுக்கும் மரண அடி கொடுக்கும் பாடல். இன்று வரை யாகங்களிலும் பூஜைகளிலும் இந்திரன் கிழக்கு திசைக்கு அதிபன் என்றே புரோகிதர்கள் பூஜை செய்து வருகிறார்கள் . இது இந்துக்கள் கங்கைச் சமவெளியிலிருந்து மேற்கு நோக்கிச் சென்று சுமேரியா, எகிப்தில் நாகரீகத்தை நிலைநாட்டிவிட்டுப் பின்னர் இன்னும் மேற்கேயுள்ள கிரேக்கம் ரோமானிய பிரதேசங்களில் நாகரீகத்தைப் பரப்பினார்கள் என்று காட்டுகிறது. ஏனெனில் ரிக்வேதத்தில் முப்பது நதிகளின் பெயர்கள் இருந்தாலும் நதிகள் ஸுக்தத்தில் கிழக்கிலுள்ள கங்கையில் துவங்கி மேற்கில் ஆப்கானிஸ்தான் வரையுள்ள நதிகளைக் குறிப்பிடுகிறார்கள். இதனால் இந்திரனை கிழக்குத் திசையோன் என்று கவியும் சொல்கிறார். 

********************

என்னுடைய பழைய கட்டுரைகள்

இந்திர விழா: வேதத்திலும் தமிழ் இலக்கியத்திலும்!

(This article is available in English as well in my blogs: INDRA FESTIVAL IN THE VEDAS AND TAMIL EPICS: swami.) 11 -8-2012 

சுமேரியா, எகிப்தில் இந்திரன் வழிபாடு!

ஆராய்ச்சிக்கட்டுரை எழுதியவர்—லண்டன் சுவாமிநாதன்

கட்டுரை எண்:-1289; தேதி:– 15th September 2014.

This article was already published in English.

தொல்காப்பியத்தில் இந்திரன் 14 -6-2013

Indra in the oldest Tamil Book 14-6-2013

AINDRA GRAMMAR, PANINI AND TOLKAPPIAR (Post No.7266)

Date: 26 NOVEMBER 2019

‘Mr One Thousand’ in Rig Veda and Tamil Literature (Post No.10,179)

Date uploaded in London – 5 OCTOBER  2021        

AMAZING TAMIL HINDUS! INDRA’S ‘AMRIT’ IN 40 PLACES in 2000 YEAR OLD TAMIL BOOKS! (Post.9331) Date uploaded in London – –2 MARCH  2021     

இந்திரன் குறித்து பரிமேலழகர் செய்த தவறு!
By London Swaminathan; Post No. 748 dated 17th December 2013.

சிந்து சமவெளியில் இந்திரன்!

லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்:-1269; தேதி: 6 செப்டம்பர் 2014

உலகின் முதல் சிவில் எஞ்சினீயர் இந்திரன்!

– லண்டன் சுவாமிநாதன்
ஆய்வுக் கட்டுரை எண்:–1267; தேதி 5 செப்டம்பர் 2014

இந்திரன் நரியாக மாறியது ஏன்? நாஸ்தீகர்களுக்கு எச்சரிக்கை! (Post.14,341)

Date uploaded in London –  3 April 2025

இந்திரனைத் தெரியுமா உங்களுக்கு?

தொகுத்தவர்: லண்டன் சுவாமிநாதன்

தொகுப்பு எண்: 1175; தேதி: 16 ஜூலை 2014.

சங்க இலக்கியத்தில் அமிர்தம்அமிழ்தம்இந்திரன் (Post No.9330)

Date uploaded in London – –2 MARCH  2021     

பிராமணர்களை இந்திரன் கொலை செய்தது ஏன்?

கட்டுரையாளர்:– லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:- 1071; தேதி:- 29 May 2014.
(இக் கட்டுரை ஏற்கனவே ஆங்கிலத்தில் என்னால் வெளியிடப்பட்டது)

–subham—

Tags- நிகண்டு, திவாகரம், காளிதாசன், காவியங்கள், இந்திரன், சங்கத் தமிழ் நூல்கள், ஒப்பீடு, Part-3, Indra images, statues

காஞ்சி பெரியவாளுடனான அனுக்ரஹ தரிசனங்கள்! (Post No.14,859)- 6

KANCHI MAHA PERIYAVA AT MADURAI DINAMANI OFFICE, HE CAME AT THE INVITATION OF V SANTANAM.

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,859

Date uploaded in London – 12 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 Madurai V.SantanamFreedom Fighter and News Editor Dinamani News paper,  passed away on the Independence Day  15-8-1998, after the Flag Hoisting ceremony opposite his house in Madurai. A series of articles will appear here in his memory.

 புதிய தொடர்!

அதிசய புருஷர் திரு வெ.சந்தானம்! – 6 

ச. நாகராஜன்

 7

காஞ்சி பெரியவாளுடனான அனுக்ரஹ தரிசனங்கள்!

காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது பீடாதிபதியாக விளங்கிய ஶ்ரீ சந்த்ர சேகரேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகள் வேதம் வகுத்த நூறாண்டுகள் வாழ்ந்தவர். (அவதாரம் 20-5-1894 சமாதி 8-1-1994)

இந்த நூறாண்டுகளும் மஹிமை வாய்ந்த ஒரு பொற்காலமாக விளங்கியது.

சங்கடமான ஒரு காலகட்டத்தில் தோன்றி கோடிக்கணக்கானோருக்கு அனுக்ரஹம் செய்து ஆன்மீகத்தைப் புதிய உயரத்திற்குக் கொண்டு சென்ற மகான் இவர்.

நாத்திகம் வளரத் தொடங்கிய காலத்தில் எங்கு பார்த்தாலும் கோவில் கோபுர உச்சியிலிருந்து திருப்பாவை- திருவெம்பாவை பாடல்கள் ஒலிபெருக்கியில் முழங்கும்.

ஆங்காங்கே வேதபூர்வமான யாகங்கள் நடைபெறும். அஷ்ட கிரஹ சேர்க்கையின் போது மக்களுக்கு அபயம் அளித்து வேயுறு தோளி பங்கன் பதிகத்தைப் பாடச் சொல்லி அருளினார் பெரியவர். தமிழகமெங்கும் ஞானசம்பந்திரின் கோளறு பதிகம் பரவியது!

இளையாத்தங்குடியில் சதஸ், மதுரைக்கு அருகில் நாராயணபுரத்தில் சதஸ் என்று ஏராளமான வித்வத் சதஸ்கள்.

ஆன்மீக புத்தகங்களோ ஆயிரக் கணக்கில் வெளியாகி உள்ளன இந்த கால கட்டத்தில்

 V SANTANM STANDING; A N SIVARAMAN SITTING ON THE FLOOR.

ஊன்றிப் பார்த்தால் இவரது ஆசியுடனோ, இவர் ஊக்கியதாலோ பெரும்பாலான புத்தகங்கள் மலர்ந்திருப்பதைக் காணலாம்.

கிரீஸ் ராணி முதல் இந்திய தலைவர்கள் வரை அனைவரும் இவரது ஆசியைப் பெற ஓடோடி வந்ததை வரலாறு கூறுகிறது.

இவரது ஆன்மீகப் பணியில் மிக மிக முக்கியமான ஒரு பங்கை ஆற்றினார் திரு வெ. சந்தானம்.

ஆம், பெரியவாள் எதைப் பேசினாலும் எந்தப் பணியைத் தொடங்கினாலும் அதை தினமணி நாளிதழில் பிரசுரித்து அதை நாடெங்கும் மூலை முடுக்குகளில் கூடக் கொண்டு சேர்த்தார் அவர்.

இதனாலும் இயல்பான அவரது பக்தியினாலும் காஞ்சி பெரியவாளுக்கு சந்தானம் என்றால் தனி ஒரு பிரியம் உண்டு. எப்போது அவரது தரிசனத்திற்குச் சென்றாலும் அருகில் அழைத்து வைத்துக் கொள்வார்.

மதுரையில் சேதுபதி ஹைஸ்கூலில் அவர் தங்கி இருந்த போது அங்கிருந்து மீனாக்ஷி அம்மன் கோவிலுக்குப் போகும் வழியில் வடக்கு மாசி வீதி வீட்டில் இருந்த (நம்பர் 20) எங்களுக்கு ஒரு நாள் இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது.

“இது தான் சந்தானம் வீடா?” என்று கேட்டவாறே அவர் எங்கள் வீட்டின் முன் வந்து நின்று கொண்டிருக்க பக்தி பரவசத்துடன் அவரைப் பணிந்து வணங்கினோம்.

தினமணி அலுவலகத்திற்கு அவர் விஜயம் செய்ய அவரை பகுதி பகுதியாக அழைத்துச் சென்றார் என் தந்தை. ப்ரிண்டிங் பற்றி நுணுக்கமான கேள்விகளை அவர் கேட்க அனைவரும் அசந்து போனார்கள்!

இளையாத்தங்குடி சதஸ் பற்றிய செய்திகளை மிக மிக விரிவாக தினமணி வெளியிட்டதால் ஆன்மீகப் பரபரப்பு தமிழகத்தில் தொடர்ந்து நிலவியது.

திருப்பாவை திருவெம்பாவைப் பள்ளிகளை பெரியவாள் ஊக்குவித்தார்.

நன்றாக அனைத்துப் பாடல்களையும் பாடுபவர்களுக்கு தங்கக் காசு அளிப்பது என்ற ஒரு திட்டத்தை அவர் தொடங்கவே எல்லா குழந்தைகளும் தீவிரமாக பாடல்களைக் கற்று தங்கக் காசுகளைப் பெற்றன.

மதுரையில் இதற்கு மாபெரும் தூணாக விளங்கினார் சந்தானம்.

திருப்பாவை இசைப் பள்ளியை திருமதி ராஜம்மாள் சுந்தரராஜன் மிகத் திறமையாக நடத்தினார். இங்கு நூற்றுக் கணக்கான பெண்கள் சேர்ந்தனர்.

இவர்களை வைத்து ஆன்மீக, புராண நாடகங்கள், பாடல்கள் உள்ளிட்டவற்றை திறம்பட கதை வசனம் பாடல்கள் அமைத்து அவர் இயக்கிய விதமே தனி.

வெளி ஊர்களில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்குக் கூட தந்தையார் செல்வதுண்டு; தலைமை தாங்குவதுண்டு. நாங்களும் கடயம் உள்ளிட்ட பல இடங்களுக்குச் சென்று கலா நிகழ்ச்சியைக் கண்டு களித்தோம்.

இன்னொரு குறிப்பிடத்தகுந்த திருப்பாவை இசைப்பள்ளியை ஶ்ரீ பாலகிருஷ்ண ஐயங்கார் நடத்தினார். இவரது மனைவியார் சீதாலெட்சுமியும் மகள்கள் அம்மாளு, பத்மா மற்றும் சீதாலெட்சுமியின் தம்பி ராஜா ஆகியோர் பக்கபலமாகவும் விளங்கினர். மிக்க வறுமையான சூழ்நிலையில் இவர்கள் இருந்த போதும் இசைக்கும் ஆன்மீகத்திற்கும் இந்தக் குடும்பம் செய்த தொண்டு மகத்தானது.

தங்கக் காசு பெற மகத்தான போட்டி உண்டு.

திருப்பாவை – திருவெம்பாவை பள்ளிகளை மேற்பார்வையிட்டு தங்கக் காசுகளை விநியோகம் செய்வது மாயவரம் திரு ராமமூர்த்தி ஐயரின் பொறுப்பு.

இவர் மதுரைக்கு வரும் போது எங்கள் வீட்டில் தங்குவது, சாப்பிடுவது வழக்கம். இவர் பாரபட்சமின்றி அனைவருக்கும் தங்கக் காசுகளை அள்ளிக் கொடுப்பார்.

அதிகாலையில் நான்கு மணியிலிருந்தே மீனாட்சி அம்மன் கோவிலில் மார்கழி மாதத்தில் கூட்டம் அலை மோதும். அங்கு ஞானப்பால் வழங்கப்படும். அதையும் தினமும் சென்று வாங்கி தரிசனத்திற்குப் பிறகு அருந்துவோம்.

மதுரையை ஆன்மீக மதுரையாக ஆக்கிய பெருமை பெரியவாளையே சேரும்.

இப்படி மதுரை மட்டுமல்ல தமிழக பட்டி தொட்டி கிராமம், நகர் என்று ஒரு ஆன்மீகப் புரட்சியையே செய்தார் பெரியவர்.

அதில் செய்திகளை உரிய இடத்தில் சேர்ந்து உரியவர்களை பங்கு பெறச் செய்தவர் சந்தானம் என்பதை அனைத்து மக்களும் கூறுவது வழக்கமானது.

இதனால் மடத்தைச் சேர்ந்த பலரும் எங்கள் இல்லத்திற்கு வருவது வழக்கமானது. காஞ்சி பெரியவரின் பூர்வாசிரம சகோதரர் ஶ்ரீ சாம்பமூர்த்தி உள்ளிடோர் இதில் அடங்குவர்.

காஞ்சி பெரியவரின் நூறாண்டு வாழ்க்கையில் அவரது மகத்தான பணிகளை ஒருவர் தொகுக்க நினைத்தால் அவர் பார்க்க வேண்டியது தினமணி இதழ்களைத் தான்!

ஒரு முறை எனது தந்தையாரும் எம்.எஸ், வெங்கட்ராமனும் அப்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஜாவா குட்டி ஸ்கூட்டரை ஆளுக்கு ஒன்றாக வாங்கினர்.

அதை எனது தந்தையார் (தைரியமாக) ஓட்ட அவருடன் பின்னால் நான் உட்கார,  இளையாத்தங்குடி சென்றோம். மிக அதிகாலையில் ஆசாரியாளின் அனுக்ரஹம் பெற்று நேராகத் திருவையாறு சென்றோம்.

இப்படி ஒரு குட்டி ஸ்கூட்டரில் நீண்ட நெடிய பயணம்! ஆனால் இளையாத்தங்குடி பெரியவாள் தரிசனமே என்றும் கண் முன்னால் நிற்கிறது.

மாபெரும் ஆர்.எஸ்.எஸ். முகாமில் கலந்து கொண்டு சென்னையிலிருந்து சகோதரருடன் திருப்பதி சென்றென். அங்கிருந்து பெரியவர் திருத்தணி அருகே கேம்ப் செய்திருப்பதைக் கேட்டு பெரியவரை தரிசிக்கச் சென்றேன். என்னை யார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டவுடன் பெரியவர் கேட்ட கேள்வி – ‘சந்தானத்திற்கு நன்றாகக் காது கேட்கிறதோ’ என்று தான். அவ்வளவு நுணுக்கமாக அவர் தந்தையாரைப் பற்றி அறிந்தவர். எனது தந்தைக்கு ஒரு காதில் கேட்கும் சக்தி குறைந்து வருவதைக் கூட நுட்பமாக அவர் கவனித்திருக்கிறார்!

SRI V. SANTANAM

இப்படி ஏராளமான அனுபவங்கள்!

உலகமே போற்றும் காஞ்சிப் பெரியவரை அருகிலிருந்து தரிசனம் செய்யும் பாக்கியமே பாக்கியம்.

பெரியவருக்கும் எனது தந்தைக்குமான நெருக்கமான தொடர்பு தமிழகத்தை ஆன்மீகத்தில் உயர்த்தியது என்றால் அது மிகையல்ல!

**

TAGS- KANCHI PARAMACHARYA, VISIT TO DINAMANI, MADURAI, V SANTANAM, PART 6

The devil requires Ten Hours to deceive One Man, a woman One Hour to deceive Ten Men! – 11 (Post.14,858)

Written by London Swaminathan

Post No. 14,858

Date uploaded in London –  11 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

One Thousand Proverbs on Woman, Wife, Daughter — Part 11

201.Woman is man’s Satan.

202. A woman is not a fiddle to be hung on the wall after being played on.

203. A woman keeps secret only what she does not know.

204. Every woman may be caught as surely by gold as a hare by dogs or a gentleman by flattery.

205. Wood and woman never remain the same.  

206. The devil requires ten hours to deceive one man, woman one hour to deceive ten men.

207. Where woman only weds the kitchen, love soon dies of hunger.

208. Where a woman rules, the devil is chief servant.

209. Never has a woman spoilt a thing with silence.

210. A woman who is unaccompanied is all accompanied.

211. A woman without a husband is a garden without a hedge.

212. Every woman would rather be beautiful than good.

213. Woman’s crying is furtive laughing.

214. It is difficult to believe in woman’s faithfulness and miracles.

215. Many women’s virtue has hung itself with a chain of diamonds.

216. Women and death have the same way, they seek those who flee from them and flee from those who seek them.

217. Women and fish are best in the middle.

218. Women and goats want a long rope.

219. Women and projectiles no one must trust.

220. Women and watches seldom go right.

–German proverbs.

To be continued……………………..

Tags-  devil, woman, deceive, German proverbs, One Thousand, Proverbs,  on Woman, Wife, Daughter, Part 11

காளிதாசன் காவியங்களில் இந்திரன்! சங்கத் தமிழ் நூல்களுடன் ஒப்பீடு! –2 (Post.14,857)

Indra’s Vajraayudha 

Written by London Swaminathan

Post No. 14,857

Date uploaded in London –  11 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Indra in Indus Valley; chakra is his name; written on top with wheel/chakra symbol

காளிதாசன் ரகுவம்சத்தில் சொன்ன பல ஸ்லோகங்களை நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் ஐந்தாறு வரிகளில் சொல்லிவிட்டார். சங்க காலத்துக்கு முன்னர் காளிதாசன் வாழ்ந்ததற்கு இதுவும் ஒரு சான்று . பகுதி ஒன்றில் சங்க இலக்கியப்  பாடல்களை கொடுத்துள்ளேன்

இதோ ரகுவம்சம் : (From Sanskritdocuments.org)

स पूर्वतः पर्वतपक्षशातनं ददर्श देवं नरदेवसंभवः|

पुनः पुनः सूतनिषिद्धचापलं हरन्तमश्वं रथरश्मिसंयुतम्॥ ३-४२

sa pūrvataḥ parvatapakṣaśātanaṁ

dadarśa devaṁ naradevasaṁbhavaḥ|

punaḥ punaḥ sūtaniṣiddhacāpalaṁ

harantamaśvaṁ ratharaśmisaṁyutam || 3-42

(இளவரசன் ரகு, அவனுடைய தந்தை திலீபன் நூறு யாகங்களைச்  செய்தால் தனது பதவி போய்விடுமே என்று அஞ்சி, இந்திரன் அதைக் கெடுக்க வந்து அஸ்வமேத குதிரையைத் திருடிய கட்டம் இது.)

 மலைகளை பிளந்த இந்திரனை ரகு கிழக்கு திசையில் கண்டான் ;அஸ்வமேத குதிரையைத் தனது தேரில் கட்டி இழுத்தான்; அந்தக்கு திரையோ முரண்டு பிடித்தது .

இதில் இரண்டு விஷயங்கள் உ ள்ளன ; இந்திரன் திசை கிழக்கு. அவன் பறக்கும் மலைகளை வெட்டி வீழ்த்தியவன் (கோத்ரபித்). [3-42]

****

Nivedita produced this falg with Vajrayudha

शतैस्तमक्ष्णामनिमेषवृत्तिभिर्हरिं विदित्वा हरिभिश्च वाजिभिः|

अवोचदेनं गगनस्पृशा रघुः स्वरेण धीरेण निवर्तयन्निव॥ ३-४३

śataistamakṣṇāmanimeṣavṛttibhirhariṁ viditvā haribhiśca vājibhiḥ|

avocadenaṁ gaganaspṛśā raghuḥ svareṇa dhīreṇa nivartayanniva || 3-43

குதிரையைத் திருடியவன் இந்திரன்தான் என்று ரகு, அங்க அடையாளங்களை வைத்துக் கண்டுபிடித்தான் . பச்சைக் நிறக் குதிரைகள்இமைக்காத கண்கள் , நூற்றுக்கும் மேலான கண்கள் ; உடனே உரத்த குரலில் இந்திரனை அதட்டினான்.

****

मखांशभाजां प्रथमो मनीषिभिस्त्वमेव देवेन्द्र सदा निगद्यसे|

अजस्रदीक्षाप्रयतस्य मद्गुरोः क्रियाविघाताय कथं प्रवर्तसे॥ ३-४४

makhāṁśabhājāṁ prathamo manīṣibhistvameva devendra sadā nigadyase|

ajasradīkṣāprayatasya madguroḥ kriyāvighātāya kathaṁ pravartase || 3-44

வேத வேள்விகளில் கொடுக்கப்படும் அவிஸ் என்னும் பலியில் பெரும்பங்கு உனக்கு கிடைப்பதாக அறிஞர்கள் செப்புவர்; அப்படி  இருக்கையில் என் தந்தை செய்யும் வேள்விக்கு கெடுதல் செய்வது ஏன்? (இதில் தேவேந்திர என்ற பெயர் வருகிறது.)

****

इति प्रगल्भं रघुणा समीरितं वचो निशम्याधिपतिर्दिवौकसाम्|

निवर्तयामास रथं सविस्मयः प्रचक्रमे च प्रतिवक्तुमुत्तरम्॥ ३-४७

கணீரென்ற குரலில் ஒருவன்  கேள்வி கேட்டவுடன் இந்திரன் தனது ரதத்தைத் திருப்பி, பதில் அளிக்கத் துவங்கினான் . [3-47]

***

हरिर्यथैकः पुरुषोत्तमः स्मृतो महेश्वरस्त्र्यम्बक एव नापरः|

तथा विदुर्मां मुनयः शतक्रतुं द्वितीयगामी न हि शब्द एष नः॥ ३-४९

hariryathaikaḥ puruṣottamaḥ smṛto maheśvarastryambaka eva nāparaḥ|

tathā vidurmāṁ munayaḥ śatakratuṁ dvitīyagāmī na hi śabda eṣa naḥ || 3-49

இந்திரன் சொன்னான்: புருஷோத்தமன் என்ற பெயர் விஷ்ணு ஒருவருக்கே பொருந்தும்; பரமேச்வரன் என்ற பெயர் முக்கண்ணன் சிவனுக்கே பொருந்தும்; அதேபோல ரிஷி முனிவர்கள் சதக்ரது என்றால் எனக்கே பொருந்தும் என்று ஒப்புக்கொண்டுள்ளார்கள்.  (அதாவது ரகுவின் தந்தை திலீபன், நூறு வேள்விகளைச் செய்யக்கூடாது; செய்ய விடமாட்டேன் என்பது பொருள்)

சதக்ரது– யாரேனும் ஓருவர் நூறு அஸ்வமேத யாகம் செய்தால் அவருக்கு இந்திரனின் பதவி கிடைத்துவிடும். இதனால் யாரையும் 100 யாகம் செய்யாதவாறு மண், பெண், பொன் பதவி ஆசைகளைக் காட்டி அவர்களை இந்திரன் விழுத்தாட்டி விடுவானாம்.  இந்திரன் பிருஹஸ்பதியின் கீழ் 100 அஸ்வமேதம் செய்தவன் அவன் பெயர் சதக்ரது (நூறு செய்தவன் = சதக்ரது).

***

அஹல்யா-இந்திரன் கதை -விக்ரம. 2-8-௨ ல் வருகிறது ; இதைத் திரு  ப்பரங்குன்ற ஓவியத்தில் முன்னரே கண்டோம் .

பிடவஜஸ்-ரகு.3-59;14-59- பொருள்- அவனுடைய ஓஜஸ் எங்கும் பரவியது.

கோத்ர பித்– ரகு.13-7. . கோத்ரபித் –பறக்கும் மலைகளின் இறக்கைகளை வெட்டியவன்.

இந்திர- குமார; ரகு ;நிறைய இடங்களில்

சதக்ரது– நூறு யாகம் செய்தவன்

ஆகண்டல –நொறுக்கித் தள்ளுபவன்- ரகு.4-83; குமார.3-11

மகவான்- ரகு., குமார . சுமார் பத்து இடங்களில் வரும் சொல்

மஹேந்திர –ரகு. விக்ரம.,. சாகுந்தலம் – சுமார் பதினைந்து இடங்கள்

இந்தப்பெயரை இந்தியா முழுதும் இன்றும் காணலாம்.

மருத்வத்– விக்ரம

இந்திரனின் தேரோட்டி மாதலி– ரகு

Indra with Saci

பாகசாசன – விக்ரம– பாக என்ற அசுரனை அழித்தவன்

புரந்தர— கோட்டைகளை உடைத்தவன் –ரகு., விக்ரம.

புரூஹுத -ரகு.

சக்ர – இந்த முத்திரை சிந்து சமவெளியில் உள்ளது

சுரேந்திர = சுரர் என்னும் தேவர்களின் தலைவன் = தேவேந்திரன்

துராசாஹா 

வஜ்ர பாணி — வஜ்ராயுதத்தைக்கையில்  உடையவன்

வாசவ

வ்ருத்ரஹன்– வ்ருத்ரன் என்ற அசுரனைக்கொன்றவன்

****

இந்திரனுக்கு பெயர்கள்

அமரகோசத்தில் இந்திரனுக்கு முப்பத்தாறு பெயர்கள் உள்ளன

இந்திரன் மனைவிக்கு மூன்று பெயர்கள் –

Indra’s wife – சசி , இந்திராணி , புலோமஜா அல்லது பெளலோமி 

Indra’s son மகன் — ஜயந்த

Indra’s city நகரம்  – அமராவதி

Indra’s garden தோட்டம்  -நந்தன

Indra’s Palace அரணமனையின் பெயர் – வைஜயந்த

Indra’s horse குதிரை  -உச்ச்சைச்ரவஸ் 

Indra’s elephant யானை  – ஐராவத

இதில் வியப்பான விஷயம் நான்கு தந்த யானை என்று நக்கீரர் வருணிக்கும் உருவம் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மட்டுமே உள்ளது

Indra’s driver தேரோட்டி – மாதலி

Indra’s weapon ஆயுதம்  – வஜ்ரா  ஆயுத

Indra’s bow வில்  — இந்திரா தனுஷ் என்று வானவில்லுக்குப் பெயர்

கம்போடியா, தாய்லாந்து, இந்தோனேஷியா, லாவோஸ், வியட்நாம் முதலிய நாடுகளில் யானை மீது வரும் இந்திரன் சிலைகள் உள்ளன ; மங்கோலியா, லாவோஸ் ஆகியன வஜ்ராயுதம் பொறித்த தபால்தலைகளை வெளியிட்டன. நிவேதிதா உருவாக்கிய கொடியில் இந்த ஆயுதம் உள்ளது . பாரதியாரும் பாடியுள்ளார்.

இந்திரன் நடத்திய யுத்தங்கள் (ரிக் வேத செய்யுட்களில் ) 

Indra’s battles are listed in the Rig Veda: 1-53-8, 1-100-18, 1-103-3, 1-104-3, 1-130-8, 1-133-2/5, 1-174-7/8, 1-82-4, 2-20-6/7, 3-10-6, 4-38-5, 4-30-15, 4-30-20, 4-30,31, 5-70-3, 6-18-3, 6-25-2, 6-47-20, 5-29-10, 8-96-13, 10-22-8.

ரிக் வேதத்தில் 250 துதிகளில் இந்திரனைப் போற்றுகின்றனர் ; ஆயினும் இது ஒரே ஒரு தேவரைக் குறிக்கும் சொல் அல்ல என்று காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் போன்ற அறிஞர்கள் பகர்ந்துள்ளார்கள். தமிழிலும் தொல்காப்பியர் வேந்தன்/ அரசன் என்ற பொதுப்பெயரையே இவருக்கு அளித்துள்ளார் இதன்பொருள் யார் தலைமைப் பதவியில் உள்ளாரோ அவர் இந்திரன்.

***

Indra in Ellora cave

அமரகோசத்தில் வரும் இந்திரன் பெயர்கள்

வ்ரத்ரஹன் – விருத்திரன் என்ற பிராமணனைக் கொன்றவன்  (வெள்ளைக்காரர்கள்  இதில் பிராமணன் என்ற சொல்லை விட்டுவிட்டுவார்கள்ஏனெனில் இதில் ஆரிய-திராவிட வாதத்துக்கு செமை அடி கிடைக்கிறது .)

ஆகாண்டல – எதிரிகளை நொறுக்குவோன்

ஆஜி க்ருத் –  (RV 8-53-6 குதிரைப்பந்தயம் நடத்துவோன்

ஆஜி பதி  (RV 8-53-14குதிரைப்பந்தய தலைவன் 

வஜ்ரபாணி  / Vajrin:–வஜ்ராயுதம் தரித்தோன்

மருத்மான் :–காற்றின் நாயகன்

மகாவான் :–மாண்புமிகு

பீடோஜா :–செல்வம் உடையோன், பிரகாசமானவன்

பாகசாசன :–பாக என்ற அசுரனை மாய்த்தவன்

சுனாசிர : –ஏர் அல்லது படைகளை நடத்திச் செல்லுவோன்

புரூஹு :–யாகத்தில் அதிகப் பங்கினைப் பெறுபவன்

புரந்தர :–கோட்டைகள் அல்லது ஊர்களை அழித்தவன் ; சிவனுக்கும் இந்தப் பெயர் உண்டு . வெள்ளைக்காரர்களுக்கு சிம்ம சொப்பனம் இந்தச் சொல். ஏனெனில் சிந்து சமவெளியில் சிவன் வழிபாடு இருப்பதாக எழுதியோர், சிவனும் புரங்களை அழித்தான் என்பதை மறைத்துவிட்டு, இந்திரன் மட்டும் திராவிடக் கோட்டைகள் அல்லது ஊர்களை அழித்தான் என்று கதை கட்டியதால் அவர்களுக்குப் பிடிக்காத சொல் இது!

ஜிஸ்னு :– எப்போதும் வென்றான்

லேகாச்ரவா :–எழுதுவதில் மன்னன் இதுவும் வெள்ளைக்காரர்களுக்கு செமை அடி கொடுக்கும் சொல். ஆரியர்களுக்கு எழுதத் தெரியாது என்றும் அவர்கள் கதை கட்டினார்கள் மஹாபாரதம்ராமாயணம்  முதல் திருவிளையாடல் புராணம் வரை அம்புகளில் பெயர் இருந்த சம்பவங்கள் உள்ளன. மஹாபாரதத்தை பிள்ளையார் எழுதினார் என்பதும் இந்துக்கள் அறிந்ததே!

Indra in South East Asian countries.

சதமன்யு : –நூறு யாகங்களை செய்தவன்; நூறு எதிரிகளை வென்றவன் .

திவஸ்பதி :–தேவலோக அதிபதி

ஸ்வர்க்கபதி  :–சுவர்க்கத்தின் தலைவன்

உலுக  :–ஆந்தை

உக்ரதன்வன் :– பயங்கர வில்லினை உடையவன்

வாசவ :–வசுவிலிருந்து பிறந்தவன்

வ்ரிஷ :–கட்டிளங் காளை; அல்லது மழையை உண்டாக்குவோன் 

வாஸ்தோஸ்பதி :–வாஸ்து — மனையின் தலைவன்

சுரபதி / தேவபதி :–தேவர் தலைவன்

பலாராதி  :–வலன் என்று அசுரனின் எதிரி

சசிபதி :–சசியின் கணவன்

ஜம்பவேதின் :–அரக்கர்களின் எதிரி

ஹரிஹயஹ  :–பச்சைக்குதிரையில் செல்பவன்

ஸ்வரான :–தேவர்களை ஆள்பவன்

மகேந்திர : மகத்தான இந்திரன்; கண்டி முதல் காஷ்மீர் வரை இன்றும் மக்கள் இப்பெயர்களை சூட்டுகின்றனர்

நமுசிசூதன : நமுசி என்ற அரக்கனைக் கொன்றவன்

ஸ்வர்க்கபதி :–சொர்க்கத்தின் தலைவன்

சஙகிரந்தன :–எதிரிகளுக்கு அச்சமூட்டுவோன்

துஸ்சுவன –கெட்டவர்களை நசுக்குபவன்

துரசஹ  :–விரைவாகப் பயணிப்பவன்

மேகவாஹன  :–மேகத்தை வாகனமாக உடையவன் .

ஸஹஸ்ராக்ஷ   :–கண்ணாயிரம்

வ்ருத்தஸ்ரவஹ  :–அறிஞர்களுக்கிடையே புகழுடையோன்

கோத்ரபித் – மலை பிளந்தவன்

ருவிக்சன  ,கோவிதா  , சூத்ர மான் , பிருதஸ் ரவாஸ்  என்ற பெயர்களும் பிற இடங்களில் காணப்படுகின்றன. .

***

இந்திரன் குறித்து பரிமேலழகர் செய்த தவறு!
By London Swaminathan; Post No. 748 dated 17th December 2013.

–லண்டன் சுவாமிநாதன்
தமிழ் வேதமான திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மரில் பரிமேலழகர் எழுதிய உரையே மேலானது என்பது அறிஞர் உலகம் ஒருமனதாக ஏற்றுக்கொண்ட முடிவு. ஆயினும் யானைக்கும் கூட அடி சறுக்கும் என்பது போல அவரும் சில தவறுகளைச் செய்திருக்கிறார். இன்று ஒரு குறளை மட்டும் காண்போம்:

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்புளார் கோமான்
இந்திரனே சாலுங் கரி (குறள் 25)

‘ஐம்புல ஆசைகளை அறவே ஒழித்த ஒருவனுடைய ஆற்றலுக்கு தேவர் கோமான் இந்திரனே சான்று பகர்வான்’ என்பது இதன் பொருள்.

இந்தப் பொருளை எழுதி அதற்குப் பின் ஒரு ஆச்சர்யக் குறியையோ கேள்விக்குறியையோ போட்டுவிட்டால் அர்த்தம் அனர்த்தம் ஆகிவிடும். பரிமேலழகர் இது இந்திரனைக் கிண்டல் செய்து எழுதிய இகழ்ச்சிக் குறிப்பு என்று கொண்டுவிட்டார். அவன் அகல்யை இடத்தில் நடந்துகொண்ட ஒரு சம்பவத்தை வைத்துப் பலரும் இந்திரனை தவறாக எடைபோட்டுவிட்டனர்.

இந்துமத நூல்களிலும் புத்தமத வேதப் புத்தகமான தம்மபததிலும் இந்திரனை உயர்வாகவே கூறியுள்ளனர். பதின்மர் உரையில் மணக்குடவர் எழுதிய உரையில் இதை இகழ்ச்சிக் குறிப்பாகக் கொள்ளாமல், பாராட்டும்படியாகவே எழுதியுள்ளார். இதை டாக்டர் எஸ்.எம்.டயஸ் அவர்கள் எழுதியுள்ள ஆங்கில மொழிபெயர்ப்பில் குறிப்பிட்டு மணக்குடவர் உரையே திருவள்ளுவரின் மொத்த அணுகுமுறைக்கு இசைவாக இருக்கிறது என்றும் எழுதியிருக்கிறார்.

எனது கருத்து:
“இந்திரன் அவனுடைய பிரம்மசர்யத்தால் தேவர்களுக்கு தேஜஸை (ஒளியை) உண்டாக்கினான்”- என்று அதர்வ வேதம் கூறுகிறது ( அதர்வணம் 11-5-19).

“இந்திரன் மிகவும் கவனமாக/விழிப்பாக இருந்ததால் தேவர்களுக்கு எல்லாம் இறைவன் ஆனான்” – என்று புத்தர் தம்மபதத்தில் (2—10) கூறுகிறார்.

பூமியில் யாராவது தவம் செய்தாலோ, நூறு அஸ்வமேத யாகம் செய்தாலோ, தனது பதவிக்கு ஆபத்து வந்துவிடும் என்று இந்திரன் நடுங்கத் துவங்கி மண், பெண், பொன் ஆசைகளால் துறவிகளைக் கவிழ்த்துவிடுவான். ஆகையால் மணக்குடவரும் மற்றவர்களின் தவ வலிமை இந்திரனை நடுங்கச் செய்வதே “ இந்திரனே சான்று பகர்வான்” என்பதன் பொருள் என்கிறார். பரிமேலழகர் சொல்லுவது போல இந்திரனை வள்ளுவர் பகடி செய்யவில்லை.

மணக்குடவர் உரை: ஐந்து= நுகர்ச்சியாகிய ஐந்து. இந்திரன் சான்று என்றது இவ்வுலகின் கண் மிகத் தவம் செய்வார் உளரானால், அவன் தன் பதம் இழக்கின்றானாக நடுங்குமாதலான், இது தேவரினும் வலியன் என்றவாறு.

பரிமேலழகர் உரை: ஐந்தும் என்னும் முற்றும்மையும் ஆற்றர்க்கு என்னும் நான்கனுருபும் செய்யுள் விகாரத்தால் தொக்கன. தான் ஐந்து அவியாது சாபம் எய்தி நின்று அவித்தானது ஆற்றல் உணர்த்தினானாகலின் ‘இந்திரனே சாலுங் கரி’ என்றார்.

To be continued………………………..

Tags- காளிதாசன் காவியங்கள்,  இந்திரன், சங்கத் தமிழ் நூல்கள் ஒப்பீடு – பகுதி 2 , அமரகோசம், இந்திரனுக்கு 35  பெயர்கள், பரிமேலழகர் தவறு