

Post No. 8325
Date uploaded in London – 11 July 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஆங்கில மொழியில் 24 எழுத்துக்களே இருந்தன. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் ஜே J என்னும் எழுத்தும் Vவி என்னும் எழுத்தும் சேர்க்கப்பட்டு 26 எழுத்துக்கள் ஆக்கினார்கள் . இதனால் உலகில் நேற்றுப் பிறந்த மொழி ஆங்கிலம் என்றும் சொல்லலாம். சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கில அகராதியை வெளியிட்ட அகராதித் தந்தை சாமுவேல் ஜான்சன் (SAMUEL JOHNSON) ஜெ J சொற்களையோ V வி சொற்களையோ சேர்க்கவில்லை ; பின்னர் வெப்ஸ்டர் போன்ற அமெரிக்க அகராதிகள் இரண்டு எழுத்துக்களையும் சேர்த்த பின்னர் ஆக்ஸ்போர்ட்டும் கேம்பிரிட்ஜும் அடிபணிந்தன.
‘எந்த என்சைக்ளோபீடியவை எடுத்தாலும், எந்த ஆங்கில அகராதியை எடுத்தாலும் ‘ஜே’ J என்னும் எழுத்தின் பொய் (FAKE) வரலாற்றைப் படிக்கலாம். ‘ஐ’ ‘I’ என்னும் ஆங்கில எழுத்தை அலங்காரமாக எழுத அடியில் ஒரு வால் போல குறியீடு கொடுத்தனர் என்றும் பின்னர் இது ‘ஜே’ ஆனதாகவும் அதனால்தான் இன்று ஜூகோஸ்லாவியா என்று எழுதினாலும் அதை ‘யூகோஸ்’ லாவியா என்று படிப்பதாகவும் ஏசுவுக்கும் க்ஷேக்ஸ்பியருக்கும் ‘ஜே’ என்பதே தெரியதென்றும் நீண்ட கதைகள் சொல்லுவார்கள். இது ‘பொய்’ அல்லது அரை உண்மை (HALF TRUTH) .
உலகில் ‘ஜ’ சப்தம் உடைய ஒரே மொழி சம்ஸ்கிருதம். இந்துக்கள் பல நாடுகளுக்குச் சென்று நாகரீகத்தைப் பரப்பியவுடன் அவர்கள் சம்ஸ்கிருத ஒலிகளையும் சொற்களையும் கடன் வாங்கினர். இதனால் ‘ஜெ’ ஐரோப்பிய மொழிகளில் மெதுவாக ஏற்கப்பட்டது (SLOWLY ABSORBED ) என்பது என் ஆராய்ச்சியில் தெரிகிறது
காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994) செய்த ஆராய்ச்சியை முதலில் பார்ப்போம்.


“வட இந்தியாவில் ‘வ’ என்பதை ‘ப’ என்றும் ‘ஜ’ JA என்பதை ச, க என்றும் உச்சரிப்பர். வேத மந்திரங்களில் உள்ள எழுத்தைக் கூட அவர்கள் இப்படி உச்சரிக்கிறார்கள் ; ‘வ’ங்காள என்பதை ‘பெ’ங்கால் என்பர்.
புருஷஸுக்த மந்திரத்தில்
“யத் புருஷேன ஹவிஷா” என்பதை “ஜத் புருகேன ஹவிகா” என்பர்; நமக்கு அதைக் கேட்டவுடன் கோபமும் ஆத்திரமும் வரும் ; இப்படி வேதத்தின் உச்சரிப்பை தவறுதலாக சொல்கிறார்கள்; நாம் தமிழர்கள்தான் சுத்த உச்சரிப்புடன் சொல்கிறோம் என்று பெருமையையும் அடைவோம். உண்மையில் அவர்கள் தவறு செய்யவில்லை. யஜுர் வேதத்தின் இரு பிரிவுகளில் தமிழ்நாட்டுக்காரர் பின்பற்றுவதும் வடநாட்டுக்காரர் பின்பற்றுவதும் வெவ்வேறு பிரிவு ; அவரவர் ‘சாகை’களின் கூடவே ‘பிராதிசாக்யம்’ என்னும் உச்சரிப்பும் இருக்கிறது. அவர்கள் தங்களுடைய ப்ராதிசாக்யத்தை இலக்கண சுத்தமாக பின்பற்றுகிறார்கள் என்று பரமாசார்ய சுவாமிகள் நீண்ட உரையாற்றியிருக்கிறார். அவரது முழு உரை ‘தெய்வத்தின் குரலி’ல் அவர் வாக்கிலேயே உள்ளது. மாபெரும் மொழி ஆராய்சசியாளரான அவரது உரையை அனைவரும் படிக்க வேண்டும்.
ஜோசப் – யூஸுப் , ஜோகி- யோகி, ஜமுனா- யமுனை, ஜாத்ரா – யாத்ரா , ஜீசஸ் – இயேசு, ஜெஹோவா -யஹோவா ஜுக் – யுக என்று மாறிய எல்லா சொற்களையும் அலசி ஆராய்கிறார். தமிழில் தொல்காப்பியர் விதித்த தடையால் ச (INITIAL sa) சொற்களும் இல்லை ய (ya) சொற்களும் இல்லை. யவத் தீவை ஏனை யோர் ஜாவா தீவு என்று சொன்னர்கள் ; தமிழில் ஜா , ய , ச ஆகியன இல்லாததால் அவர்கள் சாவகத்தீவு என்றனர் . இப்போது நாம் தொல்காப்பியரை தூக்கி எரிந்து விட்டு அவர் தடை செய்த ச, ஞ , ய ஆகிய எழுத்துக்களை சொற்களின் முதல் எழுத்தாக (Initial Letter) பயன்படுத்துகிறோம்.
காஞ்சி பரமாசார்ய சுவாமிகளின் நீண்ட மொழியியல் உரையை சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் ர/ல, ல/த , வ/ப, ஜ/ய ஆகியன இடம் மாறும் ; இவை இலக்கணப் பிழையன்று ; குழந்தைகள் கூட இப்படி உச்சரிப்பதை பார்க்கலாம். காரணம் அவை மொழி பிறப்பியலின்படி நெருக்கமானவை.

எனது ஆராய்ச்சி
காஞ்சிப் பெரியவர் போன்றோர் அன்பான சொற்களையே பயன்படுத்துவர் ; சந்யாசிகள் சுடு சொற்களை பயன்படுத்தமாட்டார்கள் ; ஆனால் நான் ‘அயோக்கியர்களை’ இனம் காட்ட ஆசைப்படுகிறேன்.
வேதத்தை மொழி பெயர்த்த மாக்ஸ் முல்லர் , தமிழ் மொழிக்கு விளக்கம் கொடுத்த கால்டுவெல் என்பவர்கள் பரம அயோக்கியர்கள். பைபிள் சொன்னபடி மனித இனம் 4000 ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றியது என்பதையும் ஆரியர்களும் தமிழர்களும் இந்தியாவுக்குள் குடியேறியவர்கள் என்பதையும் இந்த அயோக்கியர்கள் சாகும் வரை எழுதி வந்தனர். இதனால்தான் (Bishop Caldwell) கால்டுவெல் மாக்ஸ்முல்லர்(Max Muller) , கீத் (Keith) போன்றோரை நான் அயோக்கியர்கள் என்கிறேன் ; அதாவது தங்கள் கொளகையைப் பரப்புவதற்காக தமிழையும் சமஸ்கிருதத்தையும் ஆராய்ந்து –விஷ விதைகளை – —பிரிவினை விதை–களை ஊன்றி அதில் வெற்றி பெற்றனர். இப்பொழுது சரஸ்வதி நதிதீர விஞ்ஞான ஆராய்சசிகள் இவர்கள் முகத்திரையைக் கிழித்து ஆரிய- திராவிட வாதத்துக்கு சாவு மணி அடித்துவிட்டது.
இனி எனது ‘ஜ’ J ஆராய்சசி பற்றி சொல்கிறேன்

உலகிலுள்ள மொழிகள் அனைத்தையும் ‘ஜ’ எழுத்து உள்ள மொழிகள், ஜ இல்லாத மொழிகள் என்று பிரிக்கலாம். அப்படிப் பார்த்தால், பழங்கால மொழிகளில் சம்ஸ்கிருதம் ஒன்றில் மட்டுமே ‘ஜ’ J உண்டு; கிரேக்க, எகிப்திய, எபிரேய (Hebrew) மொழிகளில் இல்லை. இதனால் ஜ Ja எப்படிப் பரவியது என்னும் வழியையும் (Route) அளவையும் ( How much) வைத்து இந்துக்கள் உலக நாடுகளுக்கு குடியேறிய காலத்தையும் வழியையும் கண்டுபிடித்து விடலாம்; நாம்தான் நாகரிகத்தையும் எழுத்தையும் பரப்பினோம். ஜ Ja என்னும் ஒரு எழுத்தைக் கண்டுபிடித்துவிட்டால் சிந்து சமவெளி முத்திரை அததனையையும் படித்து விடலாம். ஜேசன் (Jason) என்ற ஒரு சொல்லைத் தவிர ஹோமர் எழுதிய ‘இலியட்’, ‘ஆடிசி’ (Iliad and Odyssey of Homer) நூல்களில் J சொற்களே இல்லை. பின்னர் ஹீப்ரு போன்ற மொழி பேசியோர் யாஹ்வே YHWE என்பதை ஜெஹோவா (JEHOVA) என்றும் ஏசு என்பதை ஜீசஸ் (JESUS) என்றும் யவ த்வீப (Yava Dwipa) என்பதை ஜாவா (Java) என்றும் உச்சரிக்கத் துவங்கினர்.
ரிக்வேதத்தில் உள்ள 108 “ஜ” சொற்களை அரவிந்தர் வேத சொற்களஞ்சிய (Vedic Vocabulary) புஸ்தகத்தில் தொகுத்து அளித்துள்ளார் .
காஞ்சி சுவாமிகள் சொன்ன ‘ஜ – ய’ (J – Y) மாற்றம் பற்றி யாரும் கதைக்கவில்லை.
நான் சொன்ன ‘ஜ’ இல்லாத பிற மொழிகள் பற்றியும் யாரும் கதைக்கவில்லை.
ஆகையால் ‘ஜ’ ( J Scale) ஸ்கேல் என்னும் அளவுகோலை வைத்து நாம் இப்போது உலக மொழிகளின் வளர்ச்சியை அளந்துவிடலாம் .
பழைய மொழிக் கொள்கைகளுக்கு சாவு மணி !!
“ஆரியர்கள் ரிக் வேத முதல் மந்திரமான ‘அக்கினி மீளே புரோஹிதம்’ என்பதை அக்கினி ‘மீடே’ புரோஹிதம் என்று உச்சரித்ததாகவும், சிந்து வெளியில் திராவிடர்களை படுகொலை செய்யும் முன் அவர்களிடம் இருந்து ‘டே’ என்பதற்குப் பதிலாக ‘ளே’ என்னும் மென்மையான சப்தத்தைக் கற்றனர்” என்றும் எழுதி வைத்தனர். உண்மையில் ‘டே’ , ‘ளே’ என்ற எழுத்துக்கள் நம் குழந்தைகளின் மழலைப் பேச்சிலும் , பழங்கால மக்கள் மொழிகள் பேச்சிலும் மாறியிருப்பதைக் காணலாம் . இதைக் காஞ்சி சுவாமிகள் இன்னும் விரிவாக விளக்கியுள்ளார்.
பிறந்தது முதல் பிரிவினை என்னும் விஷ விதையுடன் தமிழையும் சமஸ்கிருதத்தையும் ஆராய வந்த அயோக்கிய மாக்ஸ்முல்லர், கால்டுவெல்களின் முகத்திரை முழுக்க முழுக்க கிழிக்கப்பட்டுவிட்டது.
இந்துக்கள் சிரியா -துருக்கி நாடுகளுக்குச் சென்று கி.மு 1400-ல் ஆட்சி புரிந்த கல்வெட்டுகள் (Bogazkoi Inscription in Turkey) அந்த நாடுகளில் கிடைத்தவுடன் இந்த ஆராய்ச்சியாளர்களுக்கு குலை நடுக்கம் எடுத்தது; முதலில் மறைக்கப் பார்த்தனர். எகிப்தில்வேறு, கி.மு 1400 தசரதன் கடிதங்கள் கிடைத்துவிட்டன . பின்னர் ஆமாம் உண்மைதான்; ஆனால் அந்த வழியாக ஆரியர்கள் வந்ததை இது காட்டுகிறது என்று புதுக்கதை சொன்னார்கள் ;பாரத்தீர்களா தசரத (Dasaratha) என்பதை துஷ்ரத(Tushratta) என்று எழுதியிருக்கிறார்கள் ; இது முற்கால சம்ஸ்கிருதம் என்றனர!!!. ஆனால் உலகின் தலையாய சிந்து சமவெளி ஆராய்ச்சியாளர் Asko Parpola, அவர்களுடைய முகத்திரையைக் கிழித்தார் ; ரிக் வேத மந்திரத்தில் இந்திரன், அக்கினி, மித்திரன், நாஸத்யன் (அஸ்வினி தேவர்கள்) எந்த வரிசையில் உள்ளதோ அதே வரிசையில் கியூனி பார்ம் கல்வெட்டுகளில் உள்ளது என்று எடுத்துக் காட்டினார்! ஹிட்டைட் வம்ச மன்னர்களும் மிட்டன்னி மன்னர்களும் இந்த மந்திரத்தின் படி, கைச்சாத்திட்ட (1380 BCE) உடன்படிக்கை அங்கே களிமண் படிவ கல்வெட்டில் கிடைத்திருக்கிறது!! ஈசாப் கதையில் வரும் ஆடு -ஓநாய் கதை போல மாறி மாறி பேசிய ஓநாய்கள் இப் போது கொல்லப்பட்டுவிட்டன (dead) .
நான் ஆண்டுதோறும் மாரீஷஸ் , (Mauritius) மலேசிய , லண்டன் மாணவர்களின் தமிழ் விடைத்தாள் களை 20 ஆண்டுகளுக்குத் திருத்தினேன் ; நம்முடைய இந்துமத, தமிழ் பெயர்கள் அங்கே அடையும் (Spelling Changes) ஸ்பெல்லிங் வித்தியாசம் வியப்பை ஏற்படுத்தும். இதற்கு தமிழின் தற்சம, தற்பவ விதி ஒரு காரணம்; மற்றொரு காரணம் அவர்கள் பேசும் பிரெஞ்ச், மலேசிய மொழிகளின் தாக்கம் ஆகும் ; சுப்பிரமணியம் என்பதை பிரெஞ்சுத் தமிழர்கள் எழுதும் முறையைப் பார்க்கவேண்டும்!!! . மருத முத்து என்பதை ‘மர்டர் மூட்டு’ (Murdemootu) என்று எழுதுகின்றனர் .
மணிமேலையில் கூட பங்க’ஜ’ம் என்ற தாமரையை பங்க’ய’ம் என்று மாற்றிப் பாடினர் ; அ’ஜ’ன் என்ற பிரம்மாவை அ’ய’ன் என்று நாயன்மார்களும், ஆழ்வார்களும் பாடினர் ; இது தெரியாதது போல நடித்த அயோக்கிய வெளிநாட்டு ஆராய்சசியாளருக்கு சாவு மணி அ டித்துவிட்டோம்.
ச, ய , ஞ எழுத்துக்களுக்கு தடை விதித்த தொல்காப்பிய விதிகளைத் தூக்கி எறிவோம் ; சங்க இலக்கியமும் திருக்குறளும் பயன்படுத்தாத ‘ஒள’ எழுத்தை மீண்டும் பயன்படுத்துவோம்; ஸ்டாலின் பெயரை சுடலை என்று மாற்றாமல் ஸ்டாலின் என்றே எழுதுவோம் ; ஷேக்ஸ்பியரை ‘செகப்பிரியன்’ என்று எழுதும் மடமையைக் கொளுத்துவோம்.
வாழ்க ‘ஜ’ எழுத்து ! வாழ்க ‘ய’ எழுத்து !!
TAGS – ‘ஜ’ மர்மம், மொழியியல் கொள்கைகள், தவிடுபொடி
–subham–