கபாட புரம் இருந்ததற்கு சான்று (Post No.9283)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9283

Date uploaded in London – –19 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u need the article in word format , please write to us.

தென் மதுரையில் முதல் சங்கம் இருந்ததாகவும், கபாடபுரத்தில் இரண்டாம் சங்கம் இருந்ததாகவும் தற்போதைய மதுரையில் மூன்றாம் சங்கம் இருந்ததாகவும் தமிழர்கள் நம்புகின்றனர். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்குள் தோன்றிய படைப்புகள்தான் இதற்கு ஆதாரம். அதற்கு முன்னர் சுனாமி (TSUNAMI) என்னும் கடற்கோள் பல தமிழ் பிரதேசங்களை விழுங்கிய குறிப்புகள் மட்டும் உள . தெற்கில்   குமரிப் பகுதியில் மட்டுமின்றி கிழக்கில் காவிரிப்பூம்பட்டினமும் கடலுக்குள் சென்றது .

ஆயினும் அசூர் பனிபால் ASHUR BANIPAL (669 – 631 BCE)

வேத கால இலக்கியங்களில் வரும் முத்து பற்றிய சத்தான விசயங்களை கீழேயுள்ள எனது ஆய்வுக்கட்டுரையில் கண்டு கொள்க:

Pearls in the Vedas and Tamil Literature- posted by me on 17 May 2014

http://swamiindology.blogspot.co.uk/2014/05/pearls-in-vedas-and-tamil-literature.html

TAGS —  கபாடபுரம் , தமிழ் சங்கம், கொற்கை, முத்து

MY OLD ARTICLES: _

Pearls in the Vedas and Tamil Literature- posted by me on 17 May 2014

http://swamiindology.blogspot.co.uk/2014/05/pearls-in-vedas-and-tamil-literature.html



Kapatapuram | Tamil and Vedas

tamilandvedas.com › tag › kapatapuram

  1.  
  2.  

25 Feb 2012 — The name “Kapatapuram” (place of second Tamil Sangam) and the word “Sangam” are all pure Sanskrit words. Tolkappiyam has three chapters.


3 தமிழ் சங்கங்கள்: கட்டுக்கதையா …

tamilandvedas.com › 2012/02/25 › 3…

25 Feb 2012 — (படத்தில் புலவர் தருமியும் இறையனாரும்) தலை, இடை, கடை என மூன்று தமிழ் சங்கங்கள் இருந்தன என்றும் அவைகளில் முதல் …


தமிழர்களின் குமரிக் கண்டம் …

tamilandvedas.com › 2017/08/02

  1.  

(Post No.4121). Written by London Swaminathan Date: 2 August 2017. Time uploaded in London- 15-54. Post No. 4121. Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

பாமேரு | Tamil and Vedas

tamilandvedas.com › tag › பாம…

  1.  

Translate this page

9 Nov 2014 — … குமரி மலை (கோடு) என்று ஒன்று இருந்ததும் அது சுனாமி தாக்குதலில் கடலுக்குள் சென்றதும் தமிழ் இலக்கியம் வாயிலாக நாம் …

–Subham–

tags- கபாடபுரம்,கொற்கை, முத்து, அசூர் பனிப்பால் ,

முத்து பற்றிய 6 பழமொழிகள்- கட்டத்தில் காணுங்கள் (Post No. 8610)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8610

Date uploaded in London – –1 SEPTEMBER 2020    

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

,

ஒரே சொல் பல பழமொழிகளில் வந்தால், ஒரு இடத்தில் மட்டுமே கட்டத்தில் காணப்படும் .

விடைகள் கீழே உள்ளன.

விடைகள்:–

1.முத்தால் நத்தை பெருமைப்படும் மூடர்  எத்தாலும் பெருமைப்படார்

2.முத்தைத் தெளித்தாலும் கலியாணந்தான் ,மோரைத் தெளித்தாலும் கலியாணந்தான்

3.முத்துக்கு முத்தாயிருக்கிறது

4.முத்தை அளக்கிறவளும்  பெண்பிள்ளைதான் ,மூசப்பயறு அளக்கிறவளும்  பெண்பிள்ளைதான்

5.முத்தளந்த கையினாலே மோர் விற்கிறதா

6.முத்திலும் சொத்தை உண்டு,பவழத்திலும் பழுது உண்டு.

tags-  முத்து ,பழமொழிகள்

முத்தான முத்து, கடவுள் தந்த சொத்து! (Post No7176)

Written by S NAGARAJAN

swami_48@yahoo.com

Date: 4 NOVEMBER 2019

Time  in London – 6-48 am

Post No. 7176

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

  

மாலைமலர் 2-11-2019 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

முத்தான முத்து, கடவுள் தந்த சொத்து!

ச.நாகராஜன்

ஆணி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே!

பூமித் தாய் இயற்கையில் நமக்கு நிலத்தில் தந்துள்ள தாதுக்கள், உலோகங்கள் உள்ளிட்ட விலை  மதிக்கமுடியாத பொருள்களைப் பற்றிச் சற்று நாம் அறிவோம்; ஆனால் கடலில் உள்ள செல்வத்தில் ஒரு சிறிதேனும் கூட இதுவரை நாம் முழுவதுமாக அறியவில்லை. அப்படி ஒரு அற்புத வளத்தைக் கடல் கொண்டுள்ளது.

அந்தக் கடல் வளத்தில் இயற்கையாக ஒளிரும் ஒன்று தான் நவரத்தினங்களில் ஒன்றான முத்து.

மிகப் பழைய காலம் தொட்டு பாண்டிய நாடு, ‘முத்துடைத்து’ என்ற  பெரும் புகழைப் படைத்த நாடாக இருந்து வந்திருக்கிறது.

தாலமி,பெரிப்ளஸ் ஆகியோர் கொற்கை முத்துக்களைப் பற்றியும் இதை வாங்க போட்டி போட்டுக் கொண்டு வெளிநாட்டார் வந்ததையும் பதிவு செய்திருக்கின்றனர். இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீ வைகுந்தம் தாலுகாவில் உள்ள ஒரு சிறிய கிராமமாக கொற்கை இன்றும் புகழுடன் திகழ்கிறது.

ஆழ்கடலில் மூழ்கி மூச்சைப் பிடித்து முத்தை எடுத்து வருவது ஒரு அபூர்வமான தனித்துவம் வாய்ந்த கலை; பயிற்சி.

இதில் கொற்கையைச் சார்ந்த பகுதி வாழ் மக்கள் ஏராளமானோர் நிபுணர்களாக இருந்தனர்.

சிறிய அளவிலிருந்து பெரும் அளவிலான ஒளிரும் அரிய முத்துக்களை அவர்கள் கொண்டு வர மாபெரும் மன்னர்கள் அதை வாங்கி அணிவது மரபாக இருந்து வந்தது.

முத்துக் குளிப்பதொரு தென் கடலிலே

    மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே

நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்தே

     நம் அருள் வேண்டுவது மேற்கரையிலே

என்று மஹாகவி பாரதியார் நம் முத்தை வாங்க வரும் வெளிநாட்டார் அதைத் தந்து ‘அருள் புரிய வேண்டும்’ என்று வேண்டுவதைச் சிறப்பாகக் குறிப்பிடுகிறார்.

முத்தைச் சிறப்பிக்காத கவிஞர்களே இல்லை. முத்தன்ன வெண் நகையாள் என்று பாவையரின் பளீரென்ற சிரிப்பில் ஒளிரும் பற்கள் முத்துப் போல் ஒளிர்வதைச் சொல்லாத கவிஞர் யார்?

ஆணி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே அள்ளி வைத்துப் பார்த்திருந்தேன் அழகு கைகளிலே, (பாமா விஜயத்தில் கவிஞர் கண்ணதாசன்),

பச்சைக் கிளி முத்துச் சரம் முல்லை கொடி யாரோ (உலகம் சுற்றும் வாலிபனில் கவிஞர் வாலி),

முத்தான முத்தல்லவோ முதிர்ந்து வந்த முத்தல்லவோ (நெஞ்சில் ஓர் ஆலயத்தில் கவிஞர் கண்ணதாசன்) என்பன போன்ற நூற்றுக் கணக்கான திரைப்படப் பாடல்களிலும், ஆயிரக்கணக்கான தேவார, திருவாசக, நாலாயிர திவ்யபிரபந்தம் மற்றும் இதர பாடல்களிலும் முத்தின் சிறப்பு போற்றப்படுகிறது.

ஜோதிடத்தில் முத்து!

முத்து சந்திரனுடன் தொடர்பு கொண்ட ரத்தினம். எண் கணிதத்தில் இரண்டு என்ற எண்ணிற்கும் இதற்கும் தொடர்பு உண்டு. கடக ராசிக்காரர்களும் சந்திர தசை நடப்பவர்களும் முத்து அணிவது நலம் பயக்கும்.

சந்திரன் மனதிற்கு அதிபதி (சந்த்ரமா மனஸோ ஜாத: என்கிறது வேதம்) மனதிற்குச் சந்திரன் தரும் குளிர்ச்சியை முத்தும் தரும்.

முத்து உருவாகும் விதம்!

பரல்,நித்திலம், ஆரம்,தரளம், மூரி வஞ்சி, தூலகம், சுக்கிரன், ஆதித்தன், சோதி, ஆழிவித்து,கத்தலம்,மௌத்திகம்,முக்தா, மஞ்சரி என்று இப்படி தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் முத்திற்குப் பல பெயர்கள் உண்டு. ஆங்கிலத்தில் பரவலாக பெண்களுக்கு இருக்கும் பெயரான மார்கெரட்டுக்கு முத்து என்பதே பொருள். முத்துக்கான பெர்சிய வார்த்தை மர்கரிடா. இந்த பெர்சிய வார்த்தை மஞ்சரி என்ற சம்ஸ்கிருத வார்த்தையிலிருந்து தோன்றியது.

ஆயிஸ்டர் (Oyster) எனப்படும் ஒரு வகை கடல் வாழ் சிப்பிகளின் உடலுக்குள் புகும் மண் அல்லது கிருமி போன்ற ஏதேனுமொரு துகளைச் சுற்றி சிப்பி சுரக்கும் திரவம் அடுக்கடுக்காகப் படியும். தனது உடலுக்குள் புகுந்த பொருள் தன்னை உறுத்தாமலிருக்க முத்துச் சிப்பி இப்படி திரவதத்தைச் சுரக்கிறது. இந்த திரவம் அடுக்கடுக்காக ஒன்றின் மீது ஒன்றாகப் படிந்து முத்தாக உருவாகிறது.

ரசாயன முறைப்படி இதைப் பகுத்துப் பார்த்தால் கால்சியம் கார்பனேட் என்ற ரசாயனப் பொருள் ஆகும்.

செயற்கை முத்து!

கடந்த  நூறாண்டிற்கும் மேலாக முத்தைப் “பயிர் செய்து அறுவடை செய்வது” நடந்து வருகிறது. ஆம் ஜப்பான் தான் இதற்கு முன்னோடி.

இயற்கையில் கிடைக்கும் முத்துச் சிப்பிகள் எல்லாவற்றிலும் முத்து கிடைப்பதில்லை; அப்படியே கிடைப்பதில் அனைத்துமே நல்ல முத்துக்கள் தான் என்று சொல்லவும் முடிவதில்லை.

ஆகவே கடலிலுள்ள முத்துச் சிப்பிகளைப் பிடித்து வந்து அவற்றின் உடலில் செயற்கையாக மண் துகளைப் புகுத்தி மீண்டும் கடலுக்குள் இறக்கி விடுகிறார்கள். குறிப்பிட்ட காலத்தில் அவற்றில் முத்து உருவாகி விடும்.

இப்படி செயற்கை முறையில் வளர்த்து உருவாக்கப்படும் முத்துக்கள் ‘வளர்ப்பு முத்துக்கள்’ (Cultured Pearls) என்று அழைக்கப்படுகின்றன.

இப்படிப்பட்ட செயற்கை முத்துக்களில் ஏராளமான வகை முத்துக்கள் இன்று கிடைக்கின்றன.

செயற்கை முறையில் முத்தைத் தயாரிப்பதில் முன்னணியில் இருக்கும் ஜப்பான், ஆண்டுக்கு சுமார் 20 டன் என்ற அளவில் முத்தை உற்பத்தி செய்கிறது. ஜப்பானில் உள்ள அகோ வளைகுடாவில் முதன் முதலில் செயற்கை முத்து 1893ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது அகோயா முத்து (Akoya pearl) என அழைக்கப்பட ஆரம்பித்தது.

நல்ல முத்தை எப்படிக் கண்டுபிடிப்பது?

செயற்கை முறையிலும் இயற்கை வடிவிலும் முத்துக்கள் இன்று கிடைப்பதால் ஒரு நல்ல முத்தை இனம் காண்பதற்குள் நமக்குப் போதும் போதும் என்று ஆகி விடுகிறது.

செயற்கை முத்துக்கள் பல்கிப் பெருகி இருப்பதாலும் அதன் விலையும் இயற்கை முத்தை விடக் குறைவாக இருப்பதாலும் அதில் செய்யப்படும் மாலைகளின் டிசைன் எனப்படும் வடிவமைப்பு ஏராளமாக உருவாகி விட்டன. ஒவ்வொரு ஹாரத்திற்கும் – நெக்லெஸிற்கும் ஒவ்வொரு பெயர் – பார்த்தாலே வாங்க வைக்கும் கவர்ச்சி மாலைகள் இவை!

நமது சாஸ்திரங்கள் சொல்லும் பலன்கள் இயற்கை முத்திற்குத் தான்; அதை மனதில் கொண்டே முத்தை அணுக வேண்டும்.

நல்ல முத்தை எப்படி இனம் காண்பது?

சுலபமான வழிகள் இருக்கின்றன.

எக்ஸ்-ரேயின் உதவி கொண்டு இயற்கை முத்து எது, செயற்கை முத்து எது என்று கண்டுபிடித்து விடலாம். முத்தின் உட்பகுதியில் உள்ள கருவைக் கொண்டு இயற்கையையும் செயற்கையையும் எக்ஸ்-ரே இனம் பிரித்து விடும்.

எண்டோஸ்கோப் (Endoscope) என்னும் கருவியின் மூலமும் இயற்கை முத்தைக் கண்டுபிடித்து விடலாம்.

அடர்த்தி எண்ணைக் காண அடர்த்தி எண் சோதனை (Specific Gravity test) வேறு இருக்கிறது.

முத்தின் ஒப்படர்த்தி 2.60 முதல் 2.85 வரை இருக்கும்.

ப்ரோமோபார்ம்(Bromoform) ஆல்கஹால் (Alcohol) கலந்த கரைசலை 2.74 அடர்த்தி எண்ணுக்குக் கொண்டு வந்து அதில்  முத்துக்களைப் போட்டால் வளர்ப்பு முத்து மூழ்கி விடும். இயற்கை முத்து மிதக்கும்.

போலி முத்துக்களை எப்படிக் கண்டுபிடிப்பது? மிகவும் சுலபமான வழி ஒன்று இருக்கிறது.

முத்தை எடுத்து பல்லின் தட்டையான பகுதியின் மீது உரசிப் பார்க்க வேண்டும். அப்படி உரசும் போது முத்தின் மேற்பரப்பு வழுவழுப்பாக இருந்தால் அது போலி முத்து. அதாவது முத்துப் போல இருக்கும் ஒரு பொருளை மேல் பூச்சாகக் கொண்டிருக்கும் போலி முத்து அது. ஆனால் பல்லில் உரசும் போது அது சற்று சொரசொரப்பாக இருக்குமானால் அது நல்ல முத்து. இயற்கை முத்தின் மேலோடு சற்று கரடு முரடானது தான். ஆகவே தான் இந்த எளியை வழியைக் கடைப்பிடித்து போலிகளை இனம் கண்டு ஒதுக்கி விடலாம்.

ஆனால் இப்படிக் கண்டுபிடிப்பதற்கு அனுபவமும் பயிற்சியும் தேவை என்பதால் ஒரு நிபுணரை அணுகுவதே நல்லது.

ரத்தினங்களின் ராணி!

உயிர்வாழும் ஒரு பிராணியிடமிருந்து கிடைக்கும் ஒரே ரத்தினம் முத்து தான். பத்தாயிரம் சிப்பிகளில் ஒன்றில் தான் அரிய முத்து கிடைக்கிறது.

‘ரத்தினங்களின் ராணி’ என்று செல்லமாக அழைக்கப்படும் முத்து பெண்களைப் பெரிதும் கவரும் அரிய சொத்து.

முத்தின் கடினத் தன்மை ‘மோ அலகின்’ படி 2.5 முதல் 4.5 முடிய இருக்கும்.

முத்தின் விலை மிகச் சிறிய தொகையிலிருந்து ஆரம்பித்து  மலைக்க வைக்கும் பல கோடி ரூபாய் வரை விற்கப்படுகிறது.

முத்து வட்ட வடிவமானதால் அதன் குறுக்களவை வைத்துத் தான் விலை நிர்ணயிக்கப்படுகிறது. 3 மில்லிமீட்டர் முதல் 9 மில்லிமீட்டர் வரை சாதாரணமாக முத்து கிடைக்கிறது. குறுக்களவு அதிகமாக ஆக அதன் விலையும் கூடிக் கொண்டே போகும்.

பிலிப்பைன்ஸில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு முத்தின் விலை நூறு மில்லியன் டாலர். (ஒரு டாலரின் இந்திய மதிப்பு சுமார் ரூபாய் 70; ஒரு மில்லியன் என்பது பத்து லட்சம்) 28 அங்குல நீளமுள்ள இது 75 பவுண்ட் எடை கொண்டது. இது தான் உலகின் பெரிய அரிய முத்து.

முத்தின் மீதான கவர்ச்சி தான் ஜூலியஸ் சீஸரை இங்கிலாந்தின் மீது பார்வையைப் பதிக்க வைத்தது. பிரிட்டனில் வேல்ஸ் பகுதியில் கான்வே என்னும் நதியில் அழகிய முத்துக்கள் கிடைக்கவே சீஸர் இங்கிலாந்தின் மீது படையெடுத்தார். சீஸர் அரசாங்கத்தில் உயரிய நிலையில் இருக்கும் பிரபுக்கள் மட்டுமே முத்தை அணிய வேண்டும் என்று சட்டமே கொண்டு வந்தார்.

முத்தின் பயன்கள்!

ரத்தினங்களைப் பற்றி விளக்கிக் கூறும் ரஸ ஜல நிதி தரும் சுவையான தகவல்கள் நமக்கு சிறந்த ஒரு வழிகாட்டியாக அமைகிறது.

முத்து குளிர்ச்சியானது. கண்ணுக்குப் பெரிது பலனளிக்கும் ஒன்று! அது வலிமை தரும்; உடலுக்கான சக்தியைக் கூட்டும். பெண்களின் கவர்ச்சியைக் கூட்டும்; பெண்கள் அதை அணியும் போது அவர்களின் மீது அன்பு அதிகரிக்கும்; மோகமும் கூடும்.

ஒருவர் உடலில் இருக்கும் அதிகமான வாயு மற்றும் பித்தத்தை அது சமனாக்கும். இருமல், ஆஸ்த்மா, ஜீரண சக்தி குறைந்திருத்தல் போன்றவற்றை நீக்கும். அழகு, வலிமையுடன் ஆயுளையும் அது நீட்டிக்கும். வீக்கத்திற்கும் விஷத்திற்கும் அதுவே மருந்து.

கடலிலிருந்து கிடைக்கும் முத்து ஜீரண சக்தியை அதிகரித்து ஜீரண மண்டலத்தில் உள்ள அனைத்துக் கோளாறுகளையும் போக்கும்.

முத்தின் பயன்களாக  பண்டைய நூலான ரஸஜலநிதி தரும் தகவல்கள் இவை.

பிரமிக்க வைக்கும் பல வகை முத்துக்கள்!

சிப்பியில் வளரும் முத்துக்களைத் தவிர பல பிரமிக்க வைக்கும் முத்துக்களைப் பற்றியும் இந்த பழைய நூல் பல விவரங்களைத் தருகிறது.

முத்தின் ரகங்கள் : யானை, தவளை, சங்கு, மீன், சிப்பி மற்றும் மூங்கில். இப்படி முத்தை இனம் பிரித்துக் காட்டுகிறது இந்த நூல்!

யானை முத்து : இந்த ரகம் அளவில் பெரியது. வெவ்வேறு அமைப்பு உடையது. ஐராவதம் போன்ற யானையின் நெற்றியில் தோன்றும் அபூர்வ முத்து. இதற்கு விலை என்று ஒன்றை நிர்ணயிக்கக் கூடாது; நிர்ணயிக்கவும் முடியாது. இது புத்திர பாக்கியம், நோயற்ற வாழ்வு, வெற்றி ஆகியவற்றை நல்கும்!

அரவ முத்து : அரவம் என்றால் பாம்பு. அரவ முத்து அழகுடையது; நீல ஒளி உடையது. இது மூன்று அளவுகளில் கிடைக்கும். இதை எப்படி சோதனை செய்வது? திறந்தவெளியில் ஒரு வெள்ளிக் குடத்தில் இதை வைத்தால் உடனடியாக வானத்திலிருந்து நீர்த்துளிகள் விழும். அப்படி விழவில்லை எனில் இது நிஜமான அரவ முத்து இல்லை.

மீன்  முத்து : ஆழ்கடலில் வாழும் ஒரு அரிய வகை திமிங்கிலத்தில் உருவாகும் முத்து இது. இலேசாக இருக்கும் இது. மீன் முத்து மீனின் கண்களைப் போல இருக்கும்.

மூங்கில் முத்து : மூங்கிலிலிருந்து கிடைக்கும் முத்து இது. பச்சையுடன் கூடிய வெள்ளை வண்ணம் உடையது இது. வலிமையுடன் கூடிய இது கனமாக இருக்கும்.

சங்கு முத்து : சங்கு கிளிஞ்சலிருந்து கிடைக்கும் இந்த முத்து சந்திரனைப் போல வெள்ளை வெளேரென இருக்கும். உருண்டையாகவும் ஒளியுடனும் அழகுடனும் இருக்கும் புறா முட்டை அளவு இருக்கும்!

தவளை முத்து : தவளையின் தலையில் உருவாகும் முத்து இது.

கடல் சிப்பியில் உருவாகும் முத்து : ஸ்வாதி நட்சத்திரத்தில் சூரியன் இருக்கும் போது சிப்பி வானிலிருந்து விழும் மழைத்துளியை ஏற்கும்; அது நாளடைவில் முத்தாக மாறும். இதுவே சிறந்த முத்து.

மேலே கூறியவற்றில் கடல் சிப்பியில் அல்லாது இதர வகை முத்து கிடைக்கப் பெற்றால் அதுவே மிகமிகச் சிறந்தது.

அழகிய முத்து கடவுள் தந்த சொத்து!

முத்தின் வண்ணத்தைப் பொறுத்து அது வகைப்படுத்தப்படுகிறது.

சிறந்த முத்து என்பது தெளிவாக, வெண்மையாக ஒளிரும் தன்மையுடன் இருக்கும். சற்று மஞ்சள்பழுப்பு வண்ணத்தில் இருக்கும் முத்து இரண்டாம் ரகத்தது. மூன்றாவது ரகம் என்பது சிறிதே மஞ்சள் கலந்த வெண்மை நிறத்துடன், பிரகாசமாக, எண்ணெய் பசையுடன் இருப்பது போல இருக்கும்.நான்காவது ரகம் சிறியதாக, வெண்மை நிறத்துடன் கறுப்பு ஒளியுடன் இருக்கும்.

ஒளியற்ற, தாமிர நிறமுடைய, மங்கலான,  முடிச்சுடன் கூடிய முத்துக்கள் அணியக் கூடாதவை.

இந்தத் தகவல்கள் அனைத்தும் ரஸ ஜல நிதி தரும் தகவல்கள்.

ஆனால்  இந்த நூல் கூறும் பல வகை முத்துக்களில் முத்துச் சிப்பியில் தோன்றாத யானை முத்து, அரவ முத்து போன்ற இதர வகைகள் இலக்கியத்தில் மட்டுமே காணப்படுகிறது; இயற்கையில் லட்சத்தில் ஒருவருக்கேனும் இவை கிடைத்திருக்குமா, தெரியவில்லை!

மனதை அமைதிப் படுத்தி இன்ப உணர்வைத் தரும் வானத்துச் சந்திரனைப் போல, நம் உடலிலேயே தவழ்ந்து உன்னத மகிழ்ச்சி தரும் முத்துக்கு இணை உண்டோ?

முத்தான முத்து – கடவுள் மனித குலத்திற்கு அளித்த சொத்து!

Old Articles in the blog

முத்து தோன்றும் இடங்கள் | Tamil and …



https://tamilandvedas.com › tag › முத்து-தோ…

  1.  

8 Jan 2017 – Tagged with முத்து தோன்றும் இடங்கள். முத்து பிறக்கும் இடங்கள் இருபது (Post No.3524). Research Article … https://tamilandvedas.com/2012/04/23/krishnas-diamond-in-usa/.

முத்து | Tamil and Vedas



https://tamilandvedas.com › tag › முத்து

  1.  

12 Feb 2015 – முத்து கிடைக்கும் இடங்களைக் குறிப்பிடுகையில் தாம்ரபரணி நதி, மன்னார் வளைகுடா ஆகிய பகுதிகளையும் பரளி என்னும் …

pearls in vedas | Tamil and Vedas



https://tamilandvedas.com › tag › pearls-in-vedas

  1.  

17 May 2014 – Posts about pearls in vedas written by Tamil and Vedas.

Types of pearls | Tamil and Vedas



https://tamilandvedas.com › tag › types-of-pearls

  1.  
  2.  

9 Feb 2015 – Posts about Types of pearls written by Tamil and Vedas.

****

ரத்தினங்களை அணிவதால் என்ன கிடைக்கும்? வராஹமிகிரர் பதில்!!

nose_ring_wikipedia

ஆராய்ச்சிக் கட்டுரை எண் 1645; தேதி 12 பிப்ரவரி 2015

கட்டுரையாளர்: லண்டன் சுவாமிநாதன்

 

வராஹமிகிரர் எழுதிய பிருஹத் ஜாதகம் என்னும் அற்புத சம்ஸ்கிருத கலைக்களஞ்சியத்தில் “பெர்fயூம் செய்வது எப்படி?” என்பது உள்பட 106 தலைப்புகளில் எழுதியுள்ள அரிய பெரிய விஷயங்களைக் கடந்த சில நாட்களில் கண்டீர்கள். இன்று முத்துக்கள் பற்றிப் பார்ப்போம்.

 

முத்துக்கள் உற்பத்தியாகும் எட்டு இடங்கள்:

த்விப: புஜக: சுப்தி: சங்க: அப்ர: வேணு: திமி: சூகர: சூதானி

முக்தா பலானி ஏஷாம் பஹூ சாது ச சுப்திஜம் பவதி

——-பிருஹத் சம்ஹிதா, அத்தியாயம் 81

பொருள்: யானை, பாம்பு, முத்துச் சிப்பி, சங்கு, மேகம், மூங்கில், திமிங்கிலம், காட்டுப் பன்றி ஆகிய இடங்களில் முத்து கிடைக்கும்.

வராக மிகிரர் இப்படிச் சொன்னாலும் விஞ்ஞானிகள் அறிந்த முத்துக்கள் கடலிலும் சில இடங்களில் ஆறுகளிலும்  கிடைக்கும் முத்துக்கள் மட்டுமே. மற்றவை எல்லாம் இதுவரை நிரூபிக்கப்படாதவையே. வராஹ மிகிரரும் தனக்கு முன் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலவி வரும் கருத்துக்களைத் தான் தொகுத்திருப்பதாகவே கூறுகிறார். அதனால் தன் நூலுக்கே சம்ஹிதை=தொகுப்பு எனப் பெயரிட்டுள்ளார்.

pearl-large

முத்து கிடைக்கும் இடங்களைக் குறிப்பிடுகையில் தாம்ரபரணி நதி, மன்னார் வளைகுடா ஆகிய பகுதிகளையும் பரளி என்னும் இடத்தையும் இவர் குறிப்பிடுதல் சிறப்புடைத்து.

வராகமிகிரருக்கு 800 ஆண்டுகளுக்கு முன்னரே- இற்றைக்கு 2300 ஆண்டுகளுக்கு முன்னர் — சாணக்கியன் எனப்படும் உலக மகா அறிவாளிப் பிராமணன் எழுதிய அர்த்தசாஸ்திரத்திலும் ‘பாண்டிய கவாடம்’ என்று பாண்டிய நாட்டு முத்தை சிறப்பிகின்றான்.

முத்து என்ற சொல்லும் பரல் (பேர்ள்) என்ற சொல்லும் சம்ஸ்கிருத வேத கால (முக்தா) இலக்கியங்களிலும், ஆங்கிலத்திலும் இருப்பது தமிழர் பெருமைப்படவேண்டிய விஷயம். பரளி என்ற ஊரின் பெயரில் இருந்து பரல் (முத்து) என்ற சொல் உண்டாகியதா அல்லது முத்து என்ற ரத்தினமே பரளி என்ற  பெயரை உண்டாகியதா என்பதையும் ஆராய வேண்டும். பரளி என்ற ஊரும் ஆறும் கேரளத்தில் உள்ளது. லட்சத் தீவுகளில் பரளி  என்ற தீவும் உளது.

வேத கால இலக்கியங்களில் வரும் முத்து பற்றிய சத்தான விசயங்களை கீழேயுள்ள எனது ஆய்வுக்கட்டுரையில் கண்டு கொள்க:

Pearls in the Vedas and Tamil Literature- posted by me on 17 May 2014

http://swamiindology.blogspot.co.uk/2014/05/pearls-in-vedas-and-tamil-literature.html

pearl-oyster

ரத்னங்களின் குணங்கள்

ஸ்னிக்த: ப்ரபானுலேபி ஸ்வச்சோ அர்சிஷிஷ்மான் குரு: சுசம்ஸ்தான:

அந்த: ப்ரபோ அதிராகோ மணிரத்னகுணா: சமஸ்தானாம்

—–(பிருஹத் சம்ஹிதா, அத்தியாயம் 82)

ரத்தினக் கற்களின் சிறப்புத் தன்மை என்ன? ஒரு கல் சிறப்பானதா இல்லையா என்பதைத் தீர்மானிப்பது:- அது ம்ருதுவாக வழுவழுப்பானதாக இருக்கவேண்டும். தடவிப்பார்த்தால் கையில் எதுவும் நெருடக் கூடாது. கல்லுக்குள் மாசு, மரு, குற்றம், குறை இருக்கக் கூடாது. மின்னல் (டால்) அடித்து பளபளக்க வேண்டும்; ஒளிவீச வேண்டும்.  கனமாகவும் நல்ல வடிவத்திலும் இருக்க வேண்டும். மாணிக்கக் கல்லானால் நல்ல சிவப்பு வர்ணத்தில் இருக்கவேண்டும்.

என்ன கிடைக்கும்?

ஏதானி சர்வானி மஹா குணாணி சுதார்த்த சௌபாக்ய யசஸ்கரானி

ருக்சோக ஹந்த்ருனி ச பார்த்திவானாம் முக்தாபலானி ஈர்ச்சித காமதானி — (பிருஹத் சம்ஹிதா, அத்தியாயம் 81)

இந்த ஸ்லோகம் முத்து பற்றிய அத்தியாயத்தில் வருகிறது. இது எல்லா ரத்தினக் கற்களுக்கும் பொருந்தும் என்பது உரைகாரர்களின் கருத்து.

இதன் பொருள் என்ன? எல்லா வகை முத்துக்களும் மிகவும் மதிப்பு மிக்கவை. இவைகளை அணிவோருக்கு புத்ர (மகன்கள்) பாக்கியம், பணம், புகழ், செல்வாக்கு ஆகியன வந்து குவியும்; நோய்களையும் துக்கத்தையும் அழிக்கும்; அரசர்கள் அணிந்தாலோ இஷ்டப்பட்டது எல்லாம் கிடைக்கும்.

குறையுள்ள வைரங்கள் படுகொலைகளை உருவாக்கும் என்பதால் கிருஷ்ண பரமாத்மாவே சியமந்தக மணியை கொடுத்துவிட்டதையும் அது இப்பொழுது அமெரிக்காவில் மியூசியத்தில் முடங்கிக் கிடப்பதையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஏற்கனவே எழுதிவிட்டேன்:
1)Lord Krishna’s Diamond in USA? –  posted on 23 April 2012

https://tamilandvedas.com/2012/04/23/krishnas-diamond-in-usa/

2)அமுதசுரபி எங்கே? மயில் ஆசனம் எங்கே?

http://swamiindology.blogspot.co.uk/2012/05/blog-post.html

3)Gem Stones in Kalidasa and Tamil Literature

13th February 2012

http://swamiindology.blogspot.co.uk/2012/02/gem-stones-in-kalidasa-tamil-literature.html

mthangi sevai

அம்மனுக்கு முத்து அங்கி

தென் இந்தியக் கோவில்களில் முத்து மாலை, முத்து அங்கி போட்டு சுவாமியையும் அம்மனையும் அலங்கரிப்பது விஷேசமான ஒன்று. இதைக் காண பெண்கள் அணி திரண்டு படை படையாகச் செல்வர். எங்கள் ஊர் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முத்து அங்கி, ஸ்ரீரங்கம் பெருமாள் முத்து அங்கி சேவை, திருப்பதி பாலாஜி கோவில் முத்து ஆபரணங்கள் மிகவும் பிரபலமானவை. இது வராகமிகிரர் காலத்துக்கும் முன்னரே இருந்திருப்பது அவர்தம் ஸ்லோகங்களில் இருந்து வெள்ளிடை மலை போல விளங்குகிறது.

அவர் 17 வகை முத்து மாலைகளை வருணிக்கிறார். இதை கோவிலில் உள்ள நகைகளும் 2300 ஆண்டுகளுக்கு முந்தைய கற் சிற்பங்களில் உள்ள நகைகளும் மெய்ப்பிக்கின்றன; யக்ஷி, யக்ஷர் சிலைகளில் உள்ள நகைகள் ப்ரமிப்பூட்டுகின்றன. அஜந்தா, சிகிரியா (இலங்கை) ஓவியங்களும் இந்த நகைகளைக் காட்டும்.

17 வகை முத்து மாலைகளில் சில:

1008 வடம் (நாலு முழ நீளம்) = இந்து சந்தா (கடவுளுக்கானவை)

504 வடம் (இரண்டு முழ நீளம்) = விஜய சந்தா

108 வடம் (இரண்டு முழ நீளம்) = ஹாரம் (மாலை)

81 வடம் = தேவ சந்தா

64 வடம் = அர்த்த ஹார

54 வடம் = ரஸ்மி கலாப

32 வடம் = குச்ச

20 வடம் = அர்த்த குச்ச

16 வடம் = மாணவக

12 வடம் = அர்த்த மாணவக

எட்டு வடம் = மந்தர

ஐந்து வடம் = ஹார பலக

27 முத்துக்கள் கொண்ட மாலை (ஒரு முழ நீளம்) = நட்சத்திர மாலா

இவ்வாறு முத்துக்களின்  பெருமைகளை 36 பாடல்களில் பாடிப் பரவியுள்ளார்.

muthangisrivaishnavism-site

எடைகள் பற்றிய வாய்ப்பாடு

ரத்தினக் கல் வியாபாரத்தில் ஈடுபடுவோருக்கு சின்னச் சின்ன எடைக் கற்கள் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.

1500 ஆண்டுகளுக்கு நாம் பயன் படுத்திய எடைகள், பணம், காசு முதலியன பற்றியும் அந்தக் காலத்தில் ரத்தினக் கற்களின் விலை பற்றியும் வராக மிகிரர் விரிவாக எடுத்துரைக்கிறார். இதோ வாய்ப்பாடு:

விம்சதி: ஸ்வேதிகா: ப்ரோக்தா: காகின்யேகா:

விசக்ஷணை: தத் சதுஷ்கம் பண: இதி சதுர்த்தம் தத் சதுஷ்டயம்

 

சதுர்த்தக சதுஷ்கம் து புராண: இதி கத்யதே

கார்ஷா பண; சஹ ஏவ உக்த: க்வசித் து பண விம்சதி:

 

20 வெள்ளிக் காசு= ஒரு காகினி

4 காகினி = ஒரு பணம்

4 பணம் = ஒரு சதுர்த்தம்

4 சதுர்த்தம் = ஒரு புராண அல்லது கார்ஷா பணம்

80 வெள்ளிக்காசு =ஒரு பணம்

20 பணம் = ஒரு கார்ஷா பணம்

muthu angi

8 வெள்ளைக் கடுகு (ஐயவி)= ஒரு அரிசி

20 அரிசி எடை வைரம் = 2 லட்சம் கார்ஷா பணம்

14 அரிசி அடை= 1 லட்சம் கார்ஷா பணம்

முத்து விலை

5 குந்து மணி (ரத்தி/குஞ்சா/கிருஷ்ணல) = 1 மாச

16 மாச = 1 சுவர்ண

4 சுவர்ண = ஒரு பல

அரை பல = தரண அல்லது சுவர்ண

4 மாசக எடை (16 குந்துமணி) முத்து= 53,000 கார்ஷா பணம்

ஒரு மாசக எடை முத்து = 135 கார்ஷா பணம்

இப்பொழுது அவர் சொல்லும் ரத்தினக் கற்களின் விலை பொருள் உடைத்து அல்ல. ஆயினும் அவைகளை ஒப்பிட்டுப் பார்த்தால் அதன் மதிப்பை அறிய முடியும். இடம், நேரம் ஆகியவற்றின் அருமை கருதி, இங்கே எல்லாவற்றையும் தர இயலவில்லை.

68-March-Pearl

அடுத்த கட்டுரையில் நாகரத்தினம் (பாம்பின் தலையில் உள்ள ரத்தினம்), மாணிக்கம், மரகதம் பற்றி வராகமிகிரர் சொல்லுவதைக் காண்போம்.

—தொடரும்……………………………..