
Written by London swaminathan
Date: 16 March 2017
Time uploaded in London:- 7-59 am
Post No. 3728
Pictures are taken from various sources; thanks.
contact; swami_48@yahoo.com
பிரான்ஸ் நாட்டை ஹிட்லரின் நாஜி (Nazi) படைகள் ஆக்ரமித்திருந்த காலத்தில் (Occupied France) அகதிகள் பலவழிகளில் தப்பித்துச் சென்றனர். இதோ ஒரு சுவையான உண்மைக் கதை.
ஊர் ஊராக வண்டிகளில் காட்டு மிருகங்களைக் கொண்டுசென்று காட்டும் குட்டி மிருகக் காட்சி சாலைகள் (Menagerie) அக்காலத்தில் இருந்தன. அவர்கள் ஒவ்வொரு ஊருக்கும் சென்று கூடாரம் அடித்து, கூண்டுகளில் உள்ள திரைகளை அகற்றுவர். ஊர் மக்களும் சிறுவர், சிறுமியருடன் வந்து டிக்கெட் வாங்கி அவைகளைப் பார்ப்பார்கள்.

இப்படிப்பட்ட குட்டி மிருகக் காட்சிசாலை ஒரு சின்ன ஊருக்கு வந்து முகாம் அடித்தது. ஒரு அகதி, அந்த காட்சி சாலையின் முதலாளியிடம் சென்று “ஐயா என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள். நான் ஒரு அகதி. நாட்டை விட்டு ஓட விரும்புகிறேன்; எனக்கு ஒரு வேலை கொடுத்தீர்களானல் உஙளுடனே வந்து எப்படியாவது தப்பித்துப் போகிறேன்”.
முதலாளி சொன்னார்:
“எனக்கும் உன்னைக் காப்பாற்ற ஆசைதான். ஆனால் வேலையாளாகச் சேர்ந்தால் நீ ஜெர்மன் படைகளை ஏமாற்ற முடியாது உனக்கு ஆட்சேபனை இல்லையென்றால் வேறு ஒரு யோஜனை சொல்கிறேன். என்னிடமிருந்த கொரில்லா குரங்கு ( Gorilla மனிதக் குரங்கு) போன வாரம் இறந்துவிட்டது. அதன் தோலைப் பதப்படுத்தி வைத்திருக்கீறேன். அதற்குள் பஞ்சை அடைத்து அதை பொம்மையாக விற்றுவிட க ஆசை. அது வரைக்கும், நீ அந்தத் தோலைப் போர்த்திக் கொண்டு குரங்கு போல வா .
இந்த யோஜனை அவ்வளவு பிடிக்கவில்லை என்றாலும் அந்த அகதி ஒருவாராக ஒப்புக் கொண்டு கொரில்லா குரங்கின் தோலைப் போர்த்திக் கொண்டு ஊர் ஊராகச் சென்றான். ஒவ்வொரு ஊரிலும் நிஜ குரங்கு போலவே கூண்டுக்குள் ஆட்டம் போட்டான். முதலாளிக்கு நல்ல சந்தோஷம். அததுடன் புலி, சிங்கம், கரடி ஆகிய மிருகங்களின் கூண்டுகளும் இருந்தன.
ஒருநாள் கொரில்லா குரங்குக் கூண்டு உள்ள வண்டியில் சிங்கம் உள்ள கூண்டையும் ஏற்றி விட்டார்கள். கொரில்லா வேஷத்தில் இருந்த அகதிக்கு வயிற்றில் புளி கரைத்தது. இரவு நேரத்தில் கூண்டின் கம்பிகள் முறிவது போல சப்தம் கேட்டது. மங்கலான வெளிச்சத்தில் கொரில்லா குரங்கன் பார்த்தான். சிங்கம் இவனை நோக்கி வருவது தெரிந்தது. உடனே பயம் கவ்வியது.

“ஐயோ அம்மா, என்னை காப்பாற்றுங்கள்; சிங்கம் என்னைக் கொல்ல வருகிறது. காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்!” என்று கதறினான்.
“சீ வாயை மூடு; கத்தாதே; நீ ஒரு ஆள்தான் மிருக வடிவில் இருக்கிறாய் என்று நினைத்தாயா? மக்கு!” — என்று சிங்க அகதி கூறியது.
கொரில்லா குரங்கனுக்குப் போன மூச்சு திரும்பிவந்தது!

ஜெர்மன் சிப்பாய்க்கு யூத ரத்தம்!
யூதர்களைக் கொன்று குவித்த ஹிட்லரின் நாஜிப் படை வீரன் ஒருவனின் உண்மைக் கதை இது.
ஒரு நாஜி படை வீரன் யுத்தத்தில் கடுமையாக காயமடைந்தான். அவனுடன் வந்த ஹிட்லரின் படைவீரர்கள் பின்வாங்கியதால் காயமடைந்த இவன் மட்டும் எதிரிப் படைகளான ஆங்கிலப் படைகளிடம் சிக்கினான். சர்வதேச விதிகளின்படி போர்வீரர்களை மரியாதையுடன் , மனிதபிமானத்துடன் நடத்தவேண்டும் என்பதால் இங்கிலீஷ் (ஆங்கிலேய) டாக்டர்கள் அவனைக் கவனிக்கத் துவங்கினர். அவன் நாஜி படைகளைப் பற்றி ஏராளமான புகார்களைப் பொழிந்து கொண்டிருந்தான். காயங்களில் இருந்து ரத்தம் வெளியேறிக் கொண்டிருந்ததால் , பாதி பேசிக் கொண்டிருக்கையில், மயக்கம் போட்டுவிட்டான். ஆயினும் ஆங்கிலேய டாக்டர்கள் “கவலைப் படாதே நாங்கள் கவனிபோம்” என்றனர்.
மயக்கம் தெளிந்து மகிழ்ச்சியுடன் படுக்கையில் படுத்தான்: ஒரு ஆங்கில டாக்டர் நக்கலாகக் கிண்டல் தொனியில் பகடி செய்தார்: “கொஞ்சம் ஜாக்கிரதையாக இரு; உன் உடம்பில் இரண்டு பாட்டில் Bottle) யூதர் ரத்தம் ஏற்றி இருக்கிறோம்!”
நோயாளி: ??????????????
–சுபம்–