
COMPILED BY LONDON SWAMINATHAN
Date: 29 January 2016
Post No. 2487
Time uploaded in London :– 14-00
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact
நூறு ஆண்டு பழமையான ‘ஜோக்’குகள்
பெரும்புளுகர் சமஸ்தானம்
ஒரு ராஜ சமஸ்தானத்தில் அண்டப்புளுகன், ஆகாசப் புளுகன், கச்சந்திப் புளுகன், பீப்பாய் புளுகன் ஆகிய நால்வரும் அரசனிடம் வந்து நாங்கள் சமஸ்தானப் புளுகனை ஜெயிக்கவந்தோம் என்று கூற, இதைக்கேட்ட அரசன், சமஸ்தானப் புளுகன் எங்கே தோற்றுவிடுவானோ என்று அஞ்சி அருகிலிருக்கும் சமஸ்தானப் புளுகனை ஒரு பார்வை பார்த்தான்.
உடனே சம்ஸ்தானப் புளுகன், திடீரென்றெழுந்து கம்பீரமாய் நின்று, “ஓ,ஓ! கீர்த்தி பெற்ற கிண்டப்புலி புளுகர்களே! என்னை ஜெயிப்பதன் முன்னர், நானே புளுகிவிடுகிறேன். பின்பு உங்களிஷ்டம் போல் புளுகலாம், என்று கூறியவர்களைச் சம்மதிக்கச் செய்து, பிறகு சொல்லத் தொடங்கினான்:
“சபையோர்களே! என் பாட்டி கல்யாணத்திற்கு முகூர்த்தக்கால் நட்டார்கள். அப்போது நான் தான் தேங்காயுடைத்தேன். அதில் மேல் மூடி சப்த லோகமாகப் பரவிய ஆகாசமாயிற்று. கீழ்மூடி அதல, விதல, சுதல, தராதலமென்ற கீழ் ஏழு லோகமாயிற்று. நடுவிலிருக்கும் தேங்காய் நீர் சப்த சமுத்ரமாயிற்று. அதிலுள்ள திப்பி, நார் முதலியன சூரிய,சந்திர, நக்ஷத்ராதீ, தேவ, மனுஷ, மிருக, பக்ஷி, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரமென்ற மற்றெல்லாமாயின. ஐய! இனிப் புளுகுவோரெல்லாம் இந்த ஈரேழு பதினான்கு லோகங்களுக்கு அப்ப்லாலிருந்து புளுக வேண்டுகிறேன்” என்று சொல்லி சமஸ்தானப் புளுகன் உட்கார்ந்தான்.
இதுகண்டு வந்தவர்கள் இவனேது அண்டரண்டப் புளுகனாயிருக்கிறானென்று பயந்து, வந்தனஞ்செய்துவிட்டுத் தம் பதிக்கேகினர்.
xxx
You must be logged in to post a comment.