தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில்…… (Post No.5117)

தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில்…… (Post No.5117)


Written by LONDON SWAMINATHAN

 

Date: 16 JUNE 2018

 

Time uploaded in London –  12-49  (British Summer Time)

 

Post No. 5117

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

அதிகச் சாப்பாடும் குடிபோதையும்

சி.ஆர்.டபிள்யு. நெவின்ஸன் (C R W Nevinson) என்பவர் புகழ்பெற்ற ஓவியர். அவர் ஒரு சுவையான சம்பவத்தைச் சொல்கிறார்:-

” சிஸ்லி ஹடில்டன்னும் (பிரிட்டிஷ் பத்திரிக்கையாளர் Sisley Huddleston,) நானும் நெருங்கிய நண்பர்கள்; அவருக்கு பூதாஹார உடல்; ஆள் வாட்ட சாட்டமாய், ஆஜானுபா ஹுவாக இருப்பார். பாரிஸ் நகரில் நாங்கள் போகாத ஹோட்டல் அல்ல; குடிக்காத மதுபானக் கடை இல்லை; நல கூத்தடிப்போம்; சிரிப்போம்; பெண்களைக் கிண்டல் செய்வோம். ஒருமுறை நானும், க்ளைவ் பெல்லும் (Clive Bell)  சிஸ்லியுடன்  சென்று வயிறு புடைக்கச் சாப்பிட்டோம்; அரிசிச் சோறும் கோழிக்கறியும் உண்டோம். சிஸ்லிக்குப் பெரிய வயிறு என்பதால் கொஞ்சம் கூடுதலாகவே சாப்பிட்டுவிட்டார்.

 

ஒரு சிறிய டாக்ஸியில் ஏறிக்கொண்டு புலிவர் சாலியில் உள்ள செய்ன்ட் ஜெர்மைனுக்குச்( Boulevard street St Germain)

சென்றோம். அங்கு போய் வண்டி நின்றது. சிஸ்லியால் வெளியே வரமுடியவில்லை. அந்தக் கதவு, இந்தக் கதவு என்று எல்லாக் கதவுகளிலும் புகுந்து வெளியே வர முயன்றும் வர முடியவில்லை. வயிறு ஊதிவிட்டது! டாக்ஸி ட்ரைவருக்கும் எனக்கும் ஒரே சிரிப்பு. நன்றாக வயிறு குலுங்க சிரித்தோம்; இறுதியில் டாக்ஸி ட்ரைவரே மேல் கூரையைத் திறக்கவே அவர் பின்புறமாக இறங்கினார்.

 

செயின்ட் ஜெர்மைனுக்குள் போக விரைந்தோம். அங்குள்ள காவலர்கள் எங்களைத் தடுத்து நிறுத்தினர். நாங்கள் அடித்த கூத்தை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த காவலர்கள் நாங்கள் குடிபோதையில் கூத்தடித்ததாக நினைத்தனர். க்ளைவ் பெல்லுக்கு ஒரே கடுப்பு; காரணம்? அவர் அங்கு புகழ்பெற்ற ஓவியர்  டெரய்னை (Derain) அங்கே சந்திக்க ஏற்பாடு செய்திருந்தார்

அவருக்கு ஆத்திரம் ஒரு பக்கம்; ஏமாற்றம் மறு பக்கம்; எரிமலை போலப் பொங்கினார்!
xxxx  xxxxxx

குண்டுப் பாடகியின் பண்பு

மேடம் ஷூமான் ஹைங்க் (Madame Shumann Heink) என்பவர் அமெரிக்கப் பாடகி. ஆள், உருவத்தில் உருட்டுக் கட்டை. நம்ம ஊர் நடிகைகள் போல உருண்டு திரண்டு தார் ட்ரம் (Tar Drum) அல்லது பீப்பாய் (Barrel) போல இருப்பார். ஒருமுறை அவரது மகன் படிக்கும் கல்வர் (Culver) ராணுவப் பள்ளிக்குச் சென்றார். அங்கே கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்கும் மகனுக்குத் தெரியாமல் திடீரென்று போய் நிற்க வேண்டும் என்று அந்த தாய்க்கு நல்ல ஆசை.

 

கல்லூரி வளாகத்துக்குச் சென்றார். மகன் விடுதி இருக்கும் இடம் பற்றி வினவினார். அவர்களும் இடத்தைக் கூறினர்.

 

அம்மையார் அங்கு சென்றபோதுதான் தெரிந்தது இன்னும் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன என்று.

 

ஒரு புறம் செங்கல்; மறுபுறம் மூங்கில் கம்புகள்; எங்கு பார்த்தாலும் இடித்தன. ஒருவாறாகச் சமாளித்துகொண்டு குறுகிய வழிக்குள் புக முயன்றார். திணறினார்.

ஒரு துடுக்கான மாணவன் இதைப் பார்த்து ஒரு காமெண்ட் (comment) அடித்தான்.

“ஓ மேடம்! பக்கவாட்டாக நுழையுங்கள்!”

அவருக்கு அதைக் கேட்டவுடன் ஒரே சிரிப்பு. பலமாகச் சிரித்துக்கொண்டே சொன்னார்:-

“அன்பு நண்பா; இந்தப் பூத உடலுக்கு பக்க வக்கவாட்டு என்பதே கிடையாதே! (வட்டவடிவ உடல்_)

 

இதைப் படித்தவுடன் எனக்குப் பழைய சினிமாப் பாடல் நினைவுக்கு வந்தது

“தங்கத்திலே ஒரு குறை யிருந்ததாலும் தரத்தினில் குறைவதுண்டோ

அங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் பண்புகள் மறைவதுண்டோ!”

(பாட்டின் வரிகளைச் சிறிது மாற்றிப் பாடியிருக்கிறேன்)

 

xxxx