அதிசய புத்த துறவி ஸு யுன்! – 7 (Post No.2886)

buddha like vishnu

Article written by S.NAGARAJAN

 

Date: 11 June 2016

 

Post No. 2886

 

Time uploaded in London :–  5-23 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 7

ச.நாகராஜன்

 

 

ஸு யுன்னுக்கு இப்போது வயது 63. யாருமே அணுக  முடியாத மலை உச்சியில் குடிசை ஒன்றை போட்டுக் கொண்டு அவரது தவ வாழ்க்கை தொடர்ந்தது.

 

ஆனால் அவரைக் காணாத சக துறவிகள் அவரது காலடித் த்டங்களை அடையாளம் கண்டு அவரது குடிசையை அடைந்து அவரை ஆச்சரியப்படுத்தினர்.

 

 

குடிசையின் சுற்றுப் புறங்களிலும், வாயிலிலும் புலி நடமாடிய காலடித் த்டங்கள் இருந்தன. ஆனால் புலிகளோ அவரை தொந்தரவு செய்யவே இல்லை.

குடிசையில் நுழைந்த அவர்கள் அவரை சமாதி நிலையிலிருந்து எழுப்பினர்.

 

 

“சாப்பிட்டீர்களா?”, என்று ஸூ யுன்னை அவர்கள் கேட்க, “சாதம் இந்நேரம் வெந்திருக்க வேண்டும்” என்றார் அவர்.

பானையைத் திறந்து பார்த்தால் அதில் புழுக்கள் தாம் நெளிந்தன.

சுமார் பதினைந்து நாட்களாவது அவர் சமாதி நிலையில் இருந்திருக்க வேண்டும் என்று சக துற்விகள் அநுமானித்தனர்.

பிறகு அங்கிருந்து கிளம்பி பல்வேறு இடங்களுக்கும், மலைகளுக்கும் சென்று பின்னர் எமெல் மற்றும் ஜியாஜிங் மாவட்ட்ங்களை அவர் அடைந்தார்.

 

 

இன்-சுன் என்று ஒரு கிராமம். அதையொட்டி ஊஷா நதி பிரவாகமாக ஓடிக் கொண்டிருந்தது. ந்தியின் நீர் மட்டம் உயர்ந்து கொண்டே இருந்தது. காலையிலிருந்து மதியம் வரை அவர் காத்திருந்தார். படகும் வந்து சேர்ந்தது. பயணிகள் அனைவரும் இறங்கினர்.

கூட இருந்த மாஸ்டர் ஜியா – ஹென்னை முதலில் படகில் ஏறுமாறு கூறிய அவர் தன் பயண மூட்டையையும் அவரிடம் தந்தார்

 

 

படகில் ஏறப் போகும் தருணம். நதியின் வேகம் அதிகரிக்க படகு ஆடியது. கரையுடன் இணைக்கப்பட்டிருந்த கயிறு அறுந்தது. ஆனால் நல்ல வேளையாக ப்டகின் விளிம்பைப் பிடித்துக் கொண்டார் ஸூ யுன்.

 

படகு கட்டவிழ்ந்து வேகமாக நதிப் பிரவாகத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

 

thanga buddha, SL

படகில் ஏறவோ வழியில்லை. படகோட்டி படகைச் செலுத்தலானான.

மாலையில் சூரியன் அஸ்தமிக்கும் வேளையில் படகு கரையில் ஒதுங்கியது.  ஸு யுன்னை அனைவரும் நதியிலிருந்து தூக்கினர்.

கால் பாதங்களிலெல்லாம் பாறைகளின் மீது மோதிய்தால் ஏற்பட்ட வெட்டுக் காயங்கள். ஆடை அல்ங்கோலமாகக் கிழிந்து கிடந்தது.

 

 

மழை வேறு சோவென்று பெய்து கொண்டிருந்தது. தாங்க முடியாத குளிர் வேறு.

 

ஷாஜிங் சுங்கச் சாவடிக்கு அருகில் இருந்த ஒரு சத்திரத்திற்குச் சென்று அவர்கள் தங்குவதற்கு இடம் கேட்டனர். ஆனால் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.அருகிலிருந்த ஒரு கோவிலில் தங்க அனுமதி கேட்டனர். ஆனால் கோவிலில் இருந்த துறவியோ அவர்களை உள்ளே தங்கக் கூடாது என்று சொல்லி வெளியில் இருந்த ஒரு மேடையில் இருக்குமாறு கூறி விட்டார்.

 

 

சிறிது பணத்தைக் கொடுத்து. “வைக்கோலையாவது தாருங்கள். அதை எரித்து குளிரைப் போக்கிக் கொள்கிறோம்”..என்று வேண்டினார் ஸு யுன். இரண்டு  கட்டு வைக்கோல் வந்து சேர்ந்தது. சொத சொதவென்று ஈரத்தில் நனைந்தவை.

போதாக்குறைக்கு அதை மூட்டிய புகை வேறு சேர்ந்தது.

அனைத்துத் துன்பங்களையும் ஸு யுன்னும் அவரது நண்பரும் பொறுமையுடன் சகித்துக் கொண்டனர்.

 

 

சிறிது பழங்களை உண்டு தங்கள் யாத்திரையைத் தொடங்கினர். பல்வேறு இடங்களைக் கடக்க வேண்டியிருந்தது.

கடைசியில் அவர்கள் அவலோகிதேஸ்வரரின் புனித ஆலயத்தை வந்து அடைந்தனர்.

 

பிறகு காக்-ஃபுட் மலையில் உள்ள மரத்தடியை அடைந்தனர்.

முன்பு ஒரு  முறை கேட்ட அதே மணி ஒலி இப்போது இரண்டாவது முறையாக கல் கதவின் பின்னாலிலிருந்து அதிசயமாக ஒலித்தது!

 

மறு நாள் ஜிங்-டிங் என்ற மலையின் உச்சியில் அவர்கள் ஏறினர். அங்கு இருந்த புனித ஆலயம் சிதிலமாகி சிதைந்து கிடந்ததைப் பார்த்து அவர் வருந்தினார்.

 

 

அதைப் புனருத்தாரணம் செய்ய அவர் விழைந்தார். ஆனால் ஆலயங்கள் தனியார் பராமரிப்பில் இருந்ததால் அவரை புனருத்தாரணம் செய்ய ஆலயத்தின் உரிமையாளர்கள் அனுமதிக்கவில்லை.

 

பிறகு கீழே இறங்கி நடைப் பயணம் மேற்கொண்டு குந்மிங் என்ற இடத்திற்கு ஸு யுன் வந்து சேர அங்கு இருந்த ‘தர்ம- மேற்காப்பாளர்’ அவரைத் தம்முடன் இருக்குமாறு வேண்டினார்.

புதிய ஆண்டு வரப் போகிறது. ஸு யுன் தனிமையில் தன் தவத்தை மீளவும் தொடர்ந்தார்.

 

-தொடரும்