அதிசய ரஷிய யோகி குர்ட்ஜியெஃப்! (Post No.2827)

biography gurdjief

Written  BY S NAGARAJAN

Date: 21 May 2016

 

Post No. 2827

 

 

Time uploaded in London :–  6-48 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

20-5-16  பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளீயான கட்டுரை

 

 

 Book Gurdjief

 

அதிசய ரஷிய யோகி குர்ட்ஜியெஃப்!

ச.நாகராஜன்

 

 

“வாழ்க்கையில் இரண்டு விஷயங்கள் முடிவற்று தொடரும். ஒன்று மனிதனின் முட்டாள் தனம், இரண்டாவது இறைவனின் கருணை!”

–  குர்ட்ஜியெஃப்

 

 

“மனிதர்களுக்கு நம்பமுடியாதபடி அளப்பரிய ஆற்றல் உண்டு. ஒவ்வொருவருக்கும் இந்த ஆற்றல் உண்டு என்ற போதிலும் அப்படி ஒரு ஆற்றல் இருப்பதைத் தெரிந்து கொள்ளாமல் ஒவ்வொரு மனிதனும் வாழ்ந்து கொண்டிருக்கிறான்”

 

 

என்று இப்படி ஒரு கொள்கையை  முன் வைத்தவர் அதிசய ரஷிய யோகி குர்ட்ஜியெஃப். (GURDJIEFF :தோற்றம் 13-1-1866 மறைவு 29-10-1949)

 

 

சுவை நிறைந்த ஏராளமான சம்பவங்கள் நிறைந்தது இவரது வாழ்க்கை. தமிழ் மொழி உள்ளிட்ட பல மொழிகளிலும் இவரைப் பற்றி அதிகமாக எழுதப்படவில்லை. ஆகவே பொதுவாக மக்களிடையே அறியப்படாதவர்.

 

ஆனால் மேலை நாடுகளில் இந்த யோகியின் அருமையை அறிந்தோர் ஏராளம் உண்டு.

ஜான் ஜி.பென்னட் (தோற்றம் 8-6-1897 மறைவு 13-12-1974) என்பவர் பிரிட்டனைச் சேர்ந்த கணித மேதை. பெரிய விஞ்ஞானி. தொழில்துறை நிபுணர்.எழுத்தாளர். உளவியல் துறையில் சிறந்த புத்தகங்களை எழுதியவர்.

 

சிறந்த அறிவியல்  மனப்பான்மை கொண்ட இவர் ரஷிய யோகி குர்ட்ஜியெஃப்பைக் கண்டு அதிசயித்தார். அவருடனேயே இருந்து சிஷ்யராக மாறி அவர் காட்டிய வழியில் புதிய் ஆற்றலைப் பெற்றார்.

 

குர்ட்ஜியெஃப் பாரிஸுக்கு அருகில் இருந்த ப்ரியூர் என்ற இடத்தில் இன்ஸ்டிடியூட் ஃபார் ஹார்மோனியஸ் டெவலப்மெண்ட் ஆஃப் மேன் (Institue for the Harmonious development of man) என்ற ஒரு நிலையத்தை நடத்தி வந்தார்.

1923ஆம் ஆண்டு ஒரு நாள் அவரைக் காண பென்னட் வந்து சேர்ந்தார்.

 

 

பென்னட்டிற்கு ஒரு பெரிய பிரச்சினை இருந்தது.  நிரந்தரமான வயிற்றுப் போக்கு வியாதியால் அவர் பெரும் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்தார்.ஒவ்வொரு நாள் காலை எழுந்திருக்கும் போதும் முந்தைய நாளை விட அதிக பலஹீனமாக ஆகியிருப்பதை அவர் உணர்ந்தார். படுக்கையை விட்டு எழுந்திருக்கவே முடியாத நிலைக்கு  வந்தார்.

ஆனால் ஒரு நாள் காலை படுக்கையிலேயே படுத்திருக்க் வேண்டும் என்று அவர் நினைத்த போது அந்த நினைப்பையும் மீறி அவர் எழுந்தார்.நன்கு உடைகளை அணிந்தார். ஏதோ ஒரு பெரும் சக்தி தன் மீது இறங்கியதைப் போல அவர் உணர்ந்தார்.

காலையில் ந்டைப் பயிற்சிக்குப் பின் அதிக பலஹீனமாக இருப்பது போல உணர்ந்தாலும் கூட நேராக குர்ட்ஜியெஃப் நடத்தி வந்த நடன வகுப்புக்கு வந்து சேர்ந்தார்.

 

அந்த நடன வகுப்போ அதிக சிக்கலான, நளினமான அசைவுகளைக் கொண்ட நடனத்தைக் கற்பிக்கும் ஒரு வகுப்பு. அதில் மிக அதிகமான கவனக்குவிப்பும் அதிக உடல் வலிமையும் தேவை.

 

Gurdjieff31

நடனம் ஆரம்பமானது. தன்னிடம் ஒரு சக்தி வந்திருப்பதை உணர்ந்த பென்னட் நடனம் ஆட ஆரம்பித்தார். அன்று குர்ட்ஜியெஃப் புதிய அபிநயங்களைக் கற்பித்தார். மற்ற மாணவர்களோ அதைப் பின்பற்ற முடியாமல் நின்று விட்டனர். பென்னட்டின் கண்களைத் தீவிரமாக குர்ட்ஜியெஃப் பார்த்தார்.

பென்னட் அதீத சக்தியுடன் ஆடலானார்.

 

நிண்ட நடனப் பயிற்சி  முடிந்தது. தனக்குள் எப்ப்டி இப்படி ஒரு வலிமை வந்து சேர்ந்தது என்று வியந்த பென்னட் தன் சக்தியைச் சோதித்துப் பார்க்க விரும்பி ஒரு மண்வெட்டியைக் கையில் எடுத்துக் கொண்டு ஒரு குழியைத் தோண்ட ஆரம்பித்தார். சாதாரணமாக அவரால் இரண்டு நிமிடங்கள் கூட அந்தக் குழியைத் தோண்டியிருக்க முடியாது. ஆனால் அன்றோ        கடுமையான வெயிலிலும் கூட அவர் தொடர்ந்து ஒரு மணி நேரம் குழியை வெட்டிக் கொண்டே இருந்தார். பின்னர் அருகிலிருந்த ஒரு காட்டினுள் நுழைந்தார். அங்கே அவர் குர்ட்ஜியெஃப்பைச் சந்தித்தார்.

 

 

எந்த ஒரு பீடிகையும் இன்றி குர்ட்ஜியெஃப் பல்வேறு விதமான சக்திகளைப் பற்றி பென்னட்டுக்குக் கூறலானார்.

“ஒரு மனிதன் ஆற்றலுடன் இருக்க ஒரு விதமான சக்தி வேண்டும். அதை உயரிய உணர்ச்சி ஆற்றல் (higher emotional energy) என்று  அழைக்கலாம். இந்த பிரம்மாண்டமான சக்தியுடன் உலகில் சில பேர்களே இனைக்கப்பட்டுள்ளனர்.அகண்டாகாரமான அந்த சக்தித் தேக்கம் மிக மிகப் பெரியது” என்றார் அவர்.

 

இதன் மூலமாக் பென்னட்டுக்குத் தானும் அந்த சக்தி தேக்கத்துடன் இணைக்கப்பட்டிருப்பதைத் தெரிவித்ததோடு தனது சக்தியைச் சிறிது பென்னட்டுக்கும் கொடுத்திருப்பதை அவர் குறிப்பால் உணர்த்தினார்.

 

 

பென்னட் இன்னும் கொஞ்ச தூரம் அடர்ந்த காட்டினுள் சென்றார்.

நான் இப்போது வியப்படையப் போகிறேன் என்று நினைத்துக் கொண்டார். அவ்வளவு தான், அங்கிருந்த மரம் ஒவ்வொன்றும் பெரும் வியப்புகுரிய ஒன்றாக மாறி இருந்தது. இதைப் பார்த்துக் கொண்டே இருந்தால் எத்தனை நாட்கள் ஆனாலும் காட்டை விட்டு வெளியே போக முடியாது என்ற எண்ணம் அவருக்கு வந்தது.

 

 

பின்னர் பயப்படுவதாக அவர் நினைத்தார். அவ்வளவு தான், நானா திசையிலிருந்தும் அவரைப் பயமுறுத்தும் பல்வேறு தெரியாத தீய சக்திகள் அவர் மீது பாய்ந்தன.

திகைத்துப் போன அவர் சந்தோஷம் என்பதை நினைக்கவே உடலெல்லாம் புல்லிருக்கும் விதத்தில் சந்தோஷம் நிரம்பியது.

பிறகு அன்பு என்பதை அவர் நினைக்க உலகமே அன்பு மயமாகத் தோன்றியது. இந்த அன்பிலிருந்து ஒருகாலத்திலும் தான் விடுபட முடியாது என்று அவருக்குத் தோன்றியது.

 

 

இப்படிப்பட்ட அதிசய உணர்வுகள் வேண்ட்வே வேண்டாம் என்று அவர் நினைக்க அவரது அமானுஷய சக்தி அகன்று சாதாரண நிலைக்கு அவர் வந்தார்.

 

எப்படி குர்ட்ஜியெஃப்  அவருக்கு இப்படி ஒரு அபரிமிதமான சக்தியை அளித்தார்?

இது ஒன்றும் அதிசயம் இல்லை. யார் வேண்டுமானாலும் இப்படி ஒரு சக்தியை எல்லயற்ற சக்தித் தேக்கத்திலிருந்து பெறலாம் என்பதே குர்ட்ஜியெஃப்பின் கொள்கை.

 

உலகின் பிரபல விஞ்ஞானியும் உளவியலாளருமான வில்லியம் ஜேம்ஸும் இது பற்றிக் கூறி மனிதனின் ஆற்றல் அளப்பரியது என்று சொல்லி இருக்கிறார்.

 

பென்னட் வாழ்நாள் முழுவதும் குர்ட்ஜியெஃப்பை நேசித்தார். மதித்தார்.

 

abdulkalam

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

பிரெஞ்சு கினியாவில் உள்ள கௌரவ் என்ற இடத்திலிருந்து இன்சாட் – 4 B சாடலைட் ஏவப்படுவதை மேற்பார்வையிட இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான ஐஎஸ் ஆர் ஓவிலிருந்து இந்திய விஞ்ஞானிகள் பலர் சென்றனர். சோதனையை முடித்து விட்டு இந்தியா திரும்ப அவர்கள் பாரிஸில் உள்ள சார்லஸ் டீ கால் விமான நிலையத்திற்கு வந்தனர்.

 

 

அங்கு அவர்களை விமான நிலையத்தின் உயர் அதிகாரி ஒருவர் சந்தித்தார். பாஸ்போர்ட்டுகளை செக் செய்த பின்னர் வழக்கமாக அவர்கள் செல்லும் பயணிகளுக்கான இருக்கைகளை நோக்கி அவர்கள் செல்ல முயன்ற போது அந்த அதிகாரி அவர்களைத் தடுத்தார். என் கூட வாருங்கள் என்றார் அவர். விஞ்ஞானிகள் பயந்து போனார்கள். ஏதாவது பிரச்சினையா என்று பயத்துடன் வினவினர்.

அதெல்லாம் ஒன்றும் இல்லை! எனக்குக் கிடைத்த உத்தரவை நான் நிறைவேற்றுகிறேன். அவ்வளவு தான். கூட வாருங்கள் என்றார்.

 

எல்லோரையும் ஒரு விசேஷமான விஐபி தங்குமிடத்திற்கு அவர் அழைத்துச் சென்று அங்கு அமரச் சொன்னார்.

ஏதோ விபரீதம் தான் என்று எண்ணிய விஞ்ஞானிகள் நாங்கள் சாதாரண எகானமி க்ளாஸ் டிக்கட் தான் வாங்கி இருக்கிறோம். இங்கு தங்க முடியாது என்று தயக்கத்துடன் கூறினர்.

 

அந்த அதிகாரி அப்போது, “டிக்கட்டெல்லாம் தேவையில்லை. சற்று நேரத்திற்கு முன்னர் உங்கள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள் இங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அப்போது அவர்கள் எங்கள் நாட்டு விஞ்ஞானிகள் சோதனை முடிந்து திரும்பி வருவார்கள். அவர்களை கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள் என்றார். இங்கு உங்கள் விமானம்  புறப்பட இன்னும்  மூன்று மணி நேரம் இருக்கிறது. இங்கு உங்களை சௌகரியமாக வைக்க வேண்டியது எங்கள் பொறுப்பு” என்றார்.

 

 

விஞ்ஞானிகளுக்கு மெய் சிலிர்த்தது. எவ்வளவோ வேலைகளுக்கு இடையில் தங்களின் வரவை நன்கு கணித்து விமான நிலைய அதிகாரியிடம் வேண்டுகோள் விடுத்த ஜனாதிபதியின் அன்புள்ளத்தை நினைத்து அவர்கள் உருகிப் போனார்கள். மாமனிதர் என்று அப்துல்கலாமை காரணம் இல்லாமல் மக்கள் அழைக்கவில்லை!

**********