Research Article No. 2087
Written by London swaminathan
Date : 20 August 2015
Time uploaded in London :– 19-14
புகழ் (கீர்த்தி), அபகீர்த்தி (இகழ்ச்சி) பற்றிய தமிழ், சம்ஸ்கிருதப் பொன்மொழிகள்
(( இசை= யசஸ் = புகழ்; சம்ஸ்கிருதச் சொல் யசஸ் என்பதும் தமிழ்ச் சொல் இசை என்பதும் ஒரே மூலத்தில் இருந்து பிறந்த சொற்கள்))
(1).இந்நிலத்து மன்னுதல் வேண்டின் இசை நடுக – நன்னெறி
பொருள்: இந்த பூமியில் உங்கள் பெயர் எப்பொழுதும் இருக்க வேண்டுமானால் புகழை நிலை நிறுத்துக.
(2).உத்திஷ்ட ! யசோ லப: (பகவத் கீதை 11-33)
எழுந்திரு! புகழ் அடை!
தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலிற் தோன்றாமை நன்று – குறள் 236
(3).புகழ் எனின், உயிரும் கொடுக்குவர், பழி எனின், உலகுடன் பெறினும், கொள்ளலர் (புறநானூறு 182)
(4).சம்பாவிதஸ்ய ச கீர்த்திர் மரணாத் அதிரிச்யதே– பகவத்கீதை 2-34
மரணத்தை விடக் கொடியது அவப்பெயர்
(5).புகழ்பட வாழாதார் தம் நோவார் (குறள் 237)
(6).அனன்யகாமினீ பும்சாம் கீர்த்திரேகா பதிவ்ரதா- சுபாஷித ரத்ன பாண்டாகாரம்
பிற ஆண்களிடத்தில் போகாதவளே பதிவ்ரதை என்னும் புகழுடையாள் (அதாவது பிறர் உதவியை நாடாதவனே புகழுடையவன்)
(7).கீர்த்திர்யஸ்ய ச ஜீவதி – சுபாஷித ரத்ன பாண்டாகாரம்
புகழ் உடையவனே உயிர் வாழ்பவன் (மற்றவர்கள் இருந்தும் இறந்ததற்குச் சமம்)
(8).கீர்த்திர் த்யாகாத் அனுஸாரிணீ
புகழ் என்பது தியாகத்தைத் தொடர்ந்து செல்லும் (அதாவது, தியாகம் செய்பவனே புகழ் பெறுவான்)
(9).இமயத்துக் கோடு உயர்ந்தன்ன தம் இசை நட்டு, தீது இல் யாக்கையொடு மாய்தல் தவத்தலையே —(புறநானூறு 182)
இமயத்தின் சிகரம் போல புகழ் பெறுக!
(10).க்ஷிதிதலே கிம் ஜன்ம கீர்த்திம் வினா – சுபாஷித ரத்ன பாண்டாகாரம்
பூமண்டலத்தில் புகழ் இல்லாமல் வாழ்வது ஒரு வாழ்வா?
(11).இசையில் பெரியதோர் எச்சமில்லை – முதுமொழிக் காஞ்சி
பொருள்:-புகழைவிடப் பெரியதொரு செல்வம் (எச்சம்) இல்லை
(12).வசை என்ப வையத்தார்க்கு எல்லாம் இசை என்னும்
எச்சம் பெறாஅ விடின் (குறள் 238)
(எச்சம் = செல்வம்; இசை=யசஸ்)
(13).ந தஸ்ய ப்ரதிமா அஸ்தி, யஸ்ய நாம மஹத் யச: – யஜூர் வேதம்
எவனுக்கு பெரும் புகழ் இருக்கிறதோ அவனுக்கு ஒப்புவமை இல்லை
(14).ஸ்திரம் து மஹதாம் ஏகம் ஆகல்பம் அமலாம் யச: – கதா சரித் சாகரம்
கல்ப கோடி காலத்துக்குப் பெரியோரின் மாசு மருவற்ற புகழ் நீடிக்கும் (பூத உடல் மறைந்தாலும் புகழ் உடம்பு அழியாது)
(15).ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ் அல்லால்
பொன்றாது நிற்பது ஒன்று இல் (குறள் 233)
இனி, அபகீர்த்தி பற்றிய மேற்கோள்கள்:– (இதை வள்ளுவர் மானம் என்னும் அதிகாரத்தில் 10 குறள்களாகத் தந்துள்ளார்)
(16).அபயசோ யத்யஸ்தி கிம் ம்ருத்யுனா
கெட்ட பெயர் ஏற்பட்ட பின் மரணம் என்ன செய்யும்? (மரணத்தை விடக் கொடிது கெட்ட பெயர்)
(17).மயிர் நீப்பின் வாழாக் கவரிமான் அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின் (குறள் 969)
(18).அபவாத ஏவ சுலபோ வக்துர்குணோ தூரத:
பேச்சாளன் கெட்ட பெயர் எடுப்பது சுலபம்; நல்ல பெயர் எடுப்பதோ அரிது.(அரசியல்வாதிகளுக்குப் பொருத்தமான அறிவுரை)
(19).அயசோ பீரவ: கிம் ந குருதே பத ஸாதவ: — கதா சரித் சாகரம்
இகழ்ச்சிக்குப் பயந்து நல்லோர் என்னதான் செய்யமாட்டார்கள்?
(20).ஸஹதே விரஹ க்லேசம் யசஸ்வீ நாயஸ: புன: — கதா சரித் சாகரம்
எதைப் பிரிந்தாலும் புகழுடையோன் தாங்கிக் கொள்வான்; ஆனால் இகழ்ச்சியைத் தாங்க மாட்டான்
(21).வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார் இசை ஒழிய வாழ்வாரே வாழாதவர் – குறள் 240
என்னுடைய பழைய கட்டுரைகள்:
யானை பற்றிய நூறு பழமொழிகள், ஜூன் 5, 2012
இந்துமதம் பற்றிய 200 பழமொழிகள் – Part 1, ஜூன் 22, 2012
இந்துமதம் பற்றிய 200 பழமொழிகள் – பகுதி 2, ஜூன் 22, 2012
இராமன் பற்றிய பழமொழிகள் ஏப்ரல் 10, 2014
இருபதாயிரம் தமிழ் பழமொழிகள், மே 31, 2012,
பெண்கள் பற்றிய 300 பழமொழிகள் (பகுதி 1,2,3) ஜூன் 26, 2012 & ஜூன் 28, 2012
பாரதி பாட்டில் பழமொழிகள், ஜூன் 25, 2012
அப்பர் தேவாரத்தில் பழமொழிகள் (இது மட்டும் எஸ்.நாகராஜன் எழுதியது) ஜூன் 26, 2012
ஒன்றுக்கும் உதவாத உதிய மரமே
உடம்பைக் கடம்பால் அடி
மேலும் 33 இந்துமதப் பழமொழிகள் ,ஜூலை 21, 2015
ஆரோக்கியம் தொடர்பான பழமொழிகள், 25 பிப்ரவரி 2015
20,000 Tamil Proverbs (English article)
Tamil – English Proverb Book (108 தமிழ்-ஆங்கிலப் பழமொழிகள்), posted 17 August 2015
ஆடுற மாட்டை ஆடிக்கறக்கனும், பாடுற மாட்டைப் பாடிக்கறக்கனும், 2 ஆகஸ்ட் 2015கல்விக்கு அழகு கசடற மொழிதல் (சொல்வன்மை பற்றிய 30 பழமொழிகள்), 12 ஆகஸ்ட் ,2015
Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx





You must be logged in to post a comment.