
Post No. 9771
Date uploaded in London – –24 JUNE 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com




அமெரிக்க இலக்கியத்தில் மறக்க முடியாத கவிதை வரிகளை எழுதியவர் கவிஞர் லாங் ஃபெலோ ஆவார். லண்டனிலுள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அப்பேயில் கவிஞர் மூலையில் (POET’S CORNER IN WESTMINSTER ABBEY, LONDN) சிலை பெற்ற முதல் அமெரிக்கப் புலவரும் ஆவார்.
ஹென்றி வாட்ஸ்வொர்த் லாங் ஃபெலோ (HENRY WADSWORTH LONGFELLOW) எழுதிய பால் ரெவியர்ஸ் ரைட் (PAU REVERE’S RIDE) கவிதை பலர் உள்ளங்களில் அழியா இடம்பெற்றது. அதேபோல அவர் எழுதிய வாழ்விசைப்பாவில் (PSALMS OF LIFE) வரும் காலம் எனும் மணற் கரையில் படிந்த அடிச் சுவடுகள் என்ற (IN THE FOOTPRINTS OF SANDS OF TIME ) வரிகளும் புகழ் பெற்றவை, இதை 100 ஆண்டுக்கு முன்னரே மதுரை ஆசிரியர் கோபாலகிருஷ்ண ஐயர் மொழிபெயர்த்து வெளியிட்டார்.(இணைப்பில் காண்க)
லாங் ஃபெலோ , அமெரிக்காவில் போர்ட்லண்டில் (PORTLAND, MAINE) பிறந்தார். ‘சர்ச் ஆப் இங்கிலாந்து’க்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியவர்கள் அமெரிக்காவுக்குச் சென்று பிளிமவுத் காலனி அமைத்தனர். தன்னுடைய பெற்றோர்கள் அந்த அணியைச் சேர்ந்தவர்கள் என்றார் லாங்பெலோ .
1825ல் பட்டம் பெற்றார். மற்றோர் புகழ்மிகு எழுத்தாளர் நதானியல் ஹாதோர்ன் NATHAIEL HAWTHORNE இவரது வகுப்பில் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது .
இவர் துவக்க காலத்தில் ஹார்வர்ட் முதலிய கல்வி நிறுவனங்களில் வெளிநாட்டு மொழிகளைக் கற்பித்தார். இதனால் பிறமொழி இலக்கியங்களை ஆங்கிலத்தில் கொண்டுவரும் முயற்சிக்கு உத்வேகம் கொடுத்தார். பின்னர் கவிதைகளை எழுதிக் குவிப்பதில் முழு மூச்சில் ஈடுபட்டார். கவிதை எழுதுவதன் மூலமே சம்பாதித்து வாழ்க்கை நடத்த முடியும் என்று காட்டிய புலவர் இவர். ஆயினும் சுய வாழ்வில் சில துயர சம்பவங்கள் நிகழ்ந்தன. முதல் மனைவி திருமணமான சில காலத்துக்குள் இறந்தார். இரண்டாவது மனைவி தீ விபத்தில் உயிர் இழந்தார். இந்தத் துயரம் அவரது கவிதையில் எதிரொலிப்பதையும் காணலாம் .
32 வயதில் ‘வாய்சஸ் ஆப் தி நைட்’ (VOICES OF THE NIGHT )என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டவுடன் இவர் புகழ் பரவியது . இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் பல்லட்ஸ் (BALLADS) என்ற தொகுப்பு வெளியானது. அதிலுள்ள கிராமப்புறத்துக் கருங் கொல்லன் (VILLAGE BLACKSMITH) கவிதை எல்லோராலும் விரும்பப்பட்டது . லாங்பெலோவுக்கு கதை சொல்லும் ஆற்றல் இருந்ததால் அதைக் கவிதைகளில் பயன்படுத்தினார் . அமெரிக்க வரலாறு, அமெரிக்காவின் பழங்குடி மக்களின் புராணம் ஆகியவற்றைக் கவிதையில் வடித்துக்கொடுத்தார் .
இந்த வகையில் மூன்று கவிதைகளைச் சொல்லலாம்
1.ஹயாவதாவின் பாட்டு THE SONG OF HIAWATHA- அமெரிக்க பழங்குடியினரின் கதை ;
2.எவாஞ்சலின் EVANGELINE – அமெரிக்காவில் குடிபுகுந்த பிரெஞ்சு மக்களின் கதை;
3.தி கோர்ட்ஷிப் ஆப் மைல்ஸ் ஸ்டாண்டிஷ் THE COURTSHIP OF MILES STANDISH– இங்கிலாந்திலிருந்து குடிபுகுந்தவர்கள் இடையே மலர்ந்த காதல் கதை.
லாங் ஃபெலோ பிறந்த தேதி — பிப்ரவரி 27, 1807
இறந்த தேதி — மார்ச் 24, 1882
வாழ்ந்த காலம் – 75 ஆண்டுகள்



படைப்புகள்
1839- VOICES OF THE NIGHT
1841 – BALLADS
1847- EVANGELINE
1849 – THE SEASIDE AND THE FIRESIDE
1855- THE SONG OF HIAWATHA
1858- THE COURTSHIP OF MILES STANDISH
1863- TALES OF WAYSIDE (Including Paul Revere’s side)
1880 – ULTIMA THULE
XXX
OLD ARTICLES IN MY BLOG ON LONGFELLOW:-
லாங்பெலோ | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › ல…
1 Oct 2015 — … நூலகம் முதலியவற்றில் கண்டாலோ, தயவுசெய்து எழுதுங்கள். ஆங்கிலக் கவிஞன் ஹென்றி வாட்ஸ்வொர்த் லாங்பெலோ எழுதிய புகழ் …
longfellow | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › longfellow
WRITTEN BY R. NANJAPPA. Post No. 8471. Date uploaded in London – – – 8 August 2020. Contact – swami_48@yahoo.com. Pictures are taken from various …
H W Longfellow | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › h-…
7 Oct 2018 — Henry Wadsworth Longfellow wrote some of the most well-known poems in American literature, including ‘Paul Revere’s Ride’. He was the first …
Swami’s Indology Blog: BHARTRUHARI NOTES- 1 (Post No …
http://swamiindology.blogspot.com › 2019/11 › bhartr…
30 Nov 2019 — … educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. … Compare Longfellow’s English poem.

–SUBHAM–
tags – அமெரிக்கக் கவிஞர், லாங் ஃபெலோ



