பிரம்மா பற்றி பாடிய அமெரிக்க கவிஞர் ரால்ப் வால்டோ எமர்சன் (Post No.9838)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9838

Date uploaded in London –11 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Brahma

BY RALPH WALDO EMERSON

If the red slayer think he slays,

Or if the slain think he is slain,

They know not well the subtle ways

I keep, and pass, and turn again.

Far or forgot to me is near;

Shadow and sunlight are the same;

The vanished gods to me appear;

And one to me are shame and fame.

They reckon ill who leave me out;

When me they fly, I am the wings;

I am the doubter and the doubt,

I am the hymn the Brahmin sings.

The strong gods pine for my abode,

And pine in vain the sacred Seven;

But thou, meek lover of the good!

Find me, and turn thy back on heaven.

அமெரிக்காவின் 19-ம் நூற்றாண்டின் புகழ்பெற்ற கட்டுரையாளர் , புலவர் எமர்சன் (RALPH WALDO EMERSON) ஆவார் . இந்து மதமும் இந்தியாவும் இவரது கட்டுரைகளிலும் கவிதைகளிலும் பரிணமிக்கிறது. பிரம்மா முதலிய இந்து தெய்வங்கள் இவருடைய கவிதைகளில் பிரகாசிக்கின்றனர். ஆயினும் இவர் இந்துமதம் பற்றி மட்டுமே பாடியவர் என்று நினைத்துவிடக் கூடாது.

எமர்சன், ஒரு பாதிரியாரின் மகன். பாஸ்டன் நகரில் பிறந்தார். பாஸ்டன் பிராமணர்கள் (Boston Brahmans) என்ற அறிஞர்கள் வரிசையில் இவரது குடும்பத்தினரும் உண்டு. தந்தையை எட்டு வயதிலேயே இழந்த போதும் அவர் சேகரித்த இந்தியா, இந்து மதம் பற்றிய புஸ்தகங்களை இவர் படித்ததை இவரது படைப்புகள் மூலம் அறியலாம். அமெரிக்க பண்பாட்டின் வளர்ச்சியில் இவரது பங்களிப்பு முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.

தந்தையைப் போலவே ஹார்வர்டில்(Harvard) கற்றார். அவரைப் போலவே கிறிஸ்தவ மதப் பிரச்சாரகர் ஆனார். ஆனால் 29 வயதில் இவருக்கும் கிறிஸ்தவ கொள்கைகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சர்ச்சிலிருந்து வெளியேறினார். அதே ஆண்டில் இங்கிலாந்துக்கு விஜயம் செய்த்தார் . பிரபல எழுத்தாளர் தாமஸ் கார்லைலுடன் (Thomas Carlyle)  நட்பு மலர்ந்தது.

அமெரிக்காவுக்குத் திரும்பிய பின்னர் மாசாசூசெட்ஸ் பகுதியில் கான்கார்டில் (Concord)  குடிபுகுந்தார். கல்லூரி விரிவுரையாளராகவும் கட்டுரையாளராகவும் மாறினார். 33 வயதில் , அவருடைய முதல் புஸ்தகம் நேச்சர் (Nature)  அச்சாகியது. அதில் தன்னுடைய எண்ணங்களை பிழிந்து தந்தார்.

பாரம்பர்ய எண்ணங்களின் செல்வாக்கிலிருந்து விடுபட்டு தனித்துவம் இருக்க வேண்டும். தன்னைத்தானே சார்ந்து வாழ வேண்டும் என்ற கருத்துக்களை விதைத்தார். உங்களுடைய சுய புத்தியைப் பயன்படுத்தி நல்லது கெட்டதைப் பகுத்தறியுங்கள் . இயற்கையோடிணைந்த  எளிய வாழ்க்கை வாழுங்கள் என்று எழுதினார்.

இவருடைய விரிவுரைகள், சொற்பொழிவுகள் இவரைப் புகழ் பெற வைத்தன. ஐரோப்பிய செல்வாக்கிலிருந்து அமெரிக்கா  விடுபடவேண்டும்; .புதிய அமெரிக்க கலாசாரத்தை உருவாக்குவோம் என்று அறைகூவல் விடுத்தார். 38 வயதில் அவர் வெளியிட்ட முதல் கட்டுரைத் தொகுப்பில் இவற்றைக் காணலாம்.

அதற்கு பெரிய வரவேற்பு கிடைத்தவுடன், 44-ஆவது வயதில் முதல் கவிதைத் தொகுப்பினை வெளியிட்டார். பின்னர்  அடிமை ஒழிப்பு இயக்கத்திலும், பெண்ணுரிமை இயக்கத்திலும் ஈடுபட்டார்.

பிறந்த தேதி -மே 25, 1803

இறந்த தேதி- ஏப்ரல் 27, 1882

வாழ்ந்த ஆண்டுகள் – 78

இவரது இலக்கிய படைப்புகள் –

1836 – NATURE

1841 – ESSAYS

1844 – ESSAYS

1847 – POEMS

1850- REPRESENTATIVE MEN

1856- ENGLISH TRAITS

1860-  THE CONDUCT OF LIFE

1867 – MAY DAY AND OTHER PIECES

1870- SOCIETY AND SOLITUDE

1893- NATURAL HISTORY OF INTELLECT

Xxxx

எனது முந்தைய கட்டுரைகளிலிருந்து …..

பிளாட்டோவும் நானும் ஒன்றே!

ரால்ப் வால்டோ எமர்சன் (R W EMERSON) என்பவர் அமெரிக்காவின் புகழ்மிகு கவிஞர், தத்துவ அறிஞர், கட்டுரையாளர்.

அவர் ஒரு முறை கிரேக்க அறிஞர் பிளாட்டோவின் நூல் ஒன்றை பக்கத்து வீட்டு கிராமத்தானுக்குப் படிக்கக் கொடுத்தார். அந்த கிராமத்து ஆசாமி கொஞ்ச நாட்களுக்குப் பின்னர் அதைத் திருப்பிக் கொடுத்தார்.

எமர்ஸன் கேட்டார்:

புஸ்தகத்தைப் படித்தீர்களா? எப்படி இருந்தது? உங்கள் அபிப்ராயம் என்ன?

அந்தப் பட்டிக்காட்டான் சொன்னான்,

படித்தேனே! பிளாட்டோ என்னைப் போலவே கொள்கை உடையவர். என்னுடைய அச்சுதான் அவர்!

xxxx

HITCH YOUR WAGON TO A STAR

அமெரிக்கக் கவிஞரும் கட்டுரையாளருமான ரால்ப் வால்டோ  எமர்சன் (1803-1882) ஒரு கட்டுரையில் எழுதிய வாசகம் ஆங்கில நூல்களில் ‘ஊக்கமுடைமை’ பற்றிய சிறந்த மேற்கோளாகப் பயன்படுத்தப்படுகிறது. உனது வாகனத்தை (பிறர் உதவியுடன்) நட்சத்திரத்தை நோக்கி நகர்த்து Hitch your wagon to a star’ என்றார். இதன் உட்பொருள் உயர்ந்த குறிக்கோள் உடையவனாக இரு. ஏற்கனவே வெற்றி பெற்றவரின் பாதையைப் பின்பற்று என்பதாகும்

இதில் வியப்பான விஷயம் என்ன வென்றால் இதை 2000 ஆண்டுகளுக்கு முன்பே சோழ மன்னன் கோபெருஞ்சோழன் சொல்லியிருக்கிறான்:–

புறம் 214 (கோப்பெருஞ் சோழன்): யானை வேட்டைக்குப் போகிறவன் வெல்வான். யானையுடன் திரும்பி வருவான். குறும்பூழ் வேட்டைக்குப் போவோன் அது இல்லாமலும் திரும்புவான். உயர்ந்த குறிக்கோளுடன் கூடிய உயர்ந்தோனாக விளங்குக. இமயம் போல் புகழ் அடைக.

யானை வேட்டுவன் யானையும் பெறுமே

குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே

அதனால், உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசினோர்க்கு (புறம் 214)

ஆங்கிலப் பழமொழிகள்

இதை வேறு சில ஆங்கிலப் பழமொழிகளிலும் காணலாம்.

He who aims at the moon may hit the top of a tree; he who aims at the top of a tree unlikely to get off the ground.

நிலவை எட்டிப் பிடிக்க முயல்பவன் மரத்தின் உச்சியையாவது தொடுவான்; மரத்தின் உச்சியை அடைய முயல்பவன், தரையை விட்டுக்கூட எழுதிருப்பது சந்தேகமே- என்கிறது ஆங்கிலப் பழமொழி.

See mickle, and get something; seek little and get nothing (mickle = much)

இன்னொரு பழமொழியும் இதை வலியுறுத்தும். ‘நிறையக் கேட்டால் கொஞ்சமாவது கிடைக்கும்; கொஞ்சம் கேட்டால் ஒன்றும் கிடைக்காது’ என்று சொல்கிறது இப்பழமொழி!

 நன்கொடை வசூலிக்கப் போகிறவர்களுக்கு இது நன்கு விளங்கும். ஆயிரம் ரூபாய் நன்கொடை கேட்டால், கொடுப்பவன் பாதியாவது கொடுப்பான். விற்பனையாளர் தந்திரமும் இதுதானே! ஒரு பொருளின் விலையை ஆயிரம் ரூபாய் என்பான். நாம் நூறு ரூபாய்க்குத் தருகிறாயா? என்போம். கடைசியில் 500 ரூபாயில் பேரம் முடிவடையும். ஆக வாழ்க்கையில் உயர்ந்த குறிக்கோள் இருந்தால்தான் நாம் முன்னேறுவோம். குறிக்கோளே இல்லாதவர் இறந்தர்க்குச் சமம். மரக்கட்டையும் அவர்களும் ஒன்றே என்பான் வள்ளுவன் (குறள் 600).

வள்ளுவனும் ஊக்கமுடைமை என்னும் அதிகாரத்தில் இரண்டு குறள்களில் மிக அழகாகச் சொல்கிறான்:

வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்

உள்ளத்தனையது உயர்வு – திருக்குறள்  595

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் மற்றது

தள்ளாமை தள்ளினும் நீர்த்து– குறள் 596

ஆனால் மேற்கூறிய எல்லா மேற்கோள்களுக்கும் முன்னதாகவே கண்ணபிரான் இக்கருத்தை பகவத் கீதையில் முன்வைத்துவிட்டான்:-

உத்தரேத் ஆத்மனாத்மானம் நாத்மானம் அவசாதயேத் – பகவத் கீதை (6-5)

ஒருவன் தன்னாலே தன்னை உயர்த்திக்கொள்ளவேண்டும். தன்னையே தன்னைத் தாழ்த்தக் கூடாது; உனக்கு நீயே நண்பன், நீயே பகைவன்.

புறநானூற்றில் இமயம் போல உயர்ந்து புகழ் அடைவாயாக (பாடல் 214) என்பது கீதையிலும் இருக்கிறது

(கீதை 11-33) எழுந்திரு ! புகழடை!! உத்திஷ்ட ! யசோ லப !!

—subham–

tags –  பிரம்மா , அமெரிக்க கவிஞர், ரால்ப் வால்டோ எமர்சன் , Emerson, Brahma poem,

அமெரிக்க கவிஞர் டி .எஸ். எலியட்(Post No.9674)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9674

Date uploaded in London – –1 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

T S ELIOT தாமஸ் ஸ்டெர்ன்ஸ் எலியட்

(1888 – 1965)

தாமஸ் ஸ்டெர்ன்ஸ் எலியட் (THOMAS STEARNS ELIOT) இந்த நூற்றாண்டின் முக்கியமான கவிஞரும் இலக்கிய விமர்சகரும் ஆவார். அமெரிக்காவில் மிஸ்ஸௌரி மாநிலத்திலுள்ள செயிண்ட் லூயிஸில் பெரிய குடும்பத்தில் பிறந்தார். அமெரிக்காவில் ஹார்வர்டு பல்கலைக் கழகத்திலும் பாரிஸில் சார்போன் பல்கலைகழகத்திலும் பயின்றார். 1914இல் ஆக்ஸ்போர்டிலுள்ள MERTON கல்லூரிக்குச் சென்றார்.

      பின்னர் இங்கிலாந்தில் பள்ளி ஆசிரியாராகவும் வங்கி ஊழியராகவும் பணியாற்றினார்.

      1915இல் அவர் திருமணம் செய்து கொண்டார். அதே ஆண்டில் முக்கியமானதொரு கவிதையை எழுதினார். அதற்கடுத்த ஆறு ஆண்டுகளில் மேலும் பல கவிதைகளையும்  இலக்கிய கட்டுரைகளையும் படைத்தார். ஒரு பத்திரிகையின் உதவி ஆசிரியராக அமர்ந்தார்.

      1922ஆம் ஆண்டில் முக்கியக் கவிதையான THE WASTE LANDஐ வெளியிட்டு விருதும் வென்றார். அது ஒரு முக்கிய இலக்கிய விருதை வென்றது. இந்த கவிதை நீண்ட சிக்கலான கவிதை. பலருக்கு இந்த கவிதை பிடிக்கவில்லை. இருந்தபோதும் இந்தக் கவிதை பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு T S ELIOT அவர்களின் புகழைப்பரப்பியது.

வேஸ்ட் லாண்ட் கவிதையில் இந்திய உபநிஷத வரிகளை பயன்படுத்தியுள்ளார். இந்திய தத்துவ ஞான விஷயங்களில் மிகவும் ஈடுபட்டவர் எலியட்.

THE CRITERION என்னும் பத்திரிகையையும் துவக்கினார்.

      1932ஆம் ஆண்டில் அமெரிக்கா சென்றார். 18 ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்காவில் மீண்டும் காலடி எடுத்து வைத்தபோது அவர் ஒரு பிரிட்டிஷ் பிரஜை.

      HARVARD பல்கலைகழகத்தில் கவிதைத் துறையில் பேராசிரியராகச் சேர்ந்தார்.

      1939ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கான கவிதை நூல் “OLD POSSUM’S BOOK OF PRACTICAL CATS” என்ற நூலை வெளியிட்டார்.

      பல நாடகங்களை எழுதத்துவங்கிய இவர் THE FAMILY REUNION, MURDERIN THE CATHEDRAL ஆகிய நாடகங்களை எழுதினார்.

      1948ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபெல் பரிசை வென்றார். அதே ஆண்டில் ஆர்டர் ஆஃப் மெரிட் (ORDER OF MERIT) விருதும் வென்றார்.


The Wasteland | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › the-wasteland

  1.  
  2.  

19 Feb 2014 — But 3000 years before Kanchi Shankaracharya and T S Eliot, the Vedic seers of the Brihad Aranyaka (Big Forest) Upanishad wrote this episode. It …

–SUBHAM–

tags- அமெரிக்க கவிஞர், டி .எஸ். எலியட், Wasteland, T S Eliot

There is no Death : கவிஞர் லாங்பெல்லோவின் அமர வரி! (Post No.5514)

 

There is no Death : கவிஞர் லாங்பெல்லோவின் அமர வரி! (Post No.5514)

 

 
WRITTEN BY S NAGARAJAN

Date: 7 October 2018

 

Time uploaded in London – 6-53 AM (British Summer Time)

 

Post No. 5514

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

There is no Death : கவிஞர் லாங்பெல்லோவின் அமர வரி!

 

.நாகராஜன்

 

 

அமெரிக்க கவிஞர் லாங்பெல்லோ (1807 – 1882)

மறுபிறவியில் நம்பிக்கை கொண்டவர். “

 

 

There is no Death! What seems so is transition;
  This life of mortal breath
Is but a suburb of the life elysian,
  Whose portal we call Death என்ற அமரவரிகளை எழுதியவர்.
அவரது சிறு பெண் குழந்தை ஃபானி திடீரென இறந்த போது மனம் வருந்தி இந்தக் கவிதையை அவர் எழுதினார். 1848ஆம் ஆண்டு நவம்பர் 12 தேதியிட்ட டயரிக் குறிப்பில் அவர் எழுதினார் : “ நான் இன்று மிகவும் சோகமாக இருக்கிறேன். எனது சின்னக் குட்டியை இழந்து தவிக்கிறேன். அவளைப் பார்க்க வேண்டும் என்கிற கட்டுப்படுத்த முடியாத தணியாத தாகம் என்னை வருத்துகிறது.

ரெஸிக்னேஷன் என்று அவர் எழுதிய முழுக் கவிதை இது தான்.

 

 

 

RESIGNATION

 

HENRY WADSWORTH LONGFELLOW

    Written in the autumn of 1848, after the death of his little daughter Fanny. There is a passage in the poet’s diary, under date of November 12, in which he says: “I feel very sad to-day. I miss very much my dear little Fanny. An inappeasable longing to see her comes over me at times, which I can hardly control.”
THERE is no flock, however watched and tended,
  But one dead lamb is there!
There is no fireside, howsoe’er defended,
  But has one vacant chair!
 
The air is full of farewells to the dying,         5
  And mournings for the dead;
The heart of Rachel, for her children crying,
  Will not be comforted!
 
Let us be patient! These severe afflictions
  Not from the ground arise,         10
But oftentimes celestial benedictions
  Assume this dark disguise.
 
We see but dimly through the mists and vapors;
  Amid these earthly damps
What seem to us but sad, funereal tapers         15
  May be heaven’s distant lamps.
 
There is no Death! What seems so is transition;
  This life of mortal breath
Is but a suburb of the life elysian,
  Whose portal we call Death.         20
 
She is not dead,—the child of our affection,—
  But gone unto that school
Where she no longer needs our poor protection,
  And Christ himself doth rule.
 
In that great cloister’s stillness and seclusion,         25
  By guardian angels led,
Safe from temptation, safe from sin’s pollution,
  She lives, whom we call dead.
 
Day after day we think what she is doing
  In those bright realms of air;         30
Year after year, her tender steps pursuing,
  Behold her grown more fair.
 
Thus do we walk with her, and keep unbroken
  The bond which nature gives,
Thinking that our remembrance, though unspoken,         35
  May reach her where she lives.
 
Not as a child shall we again behold her;
  For when with raptures wild
In our embraces we again enfold her,
  She will not be a child;         40
 
But a fair maiden, in her Father’s mansion,
  Clothed with celestial grace;
And beautiful with all the soul’s expansion
  Shall we behold her face.
 
And though at times impetuous with emotion         45
  And anguish long suppressed,
The swelling heart heaves moaning like the ocean,
  That cannot be at rest,—
 
We will be patient, and assuage the feeling
  We may not wholly stay;         50
By silence sanctifying, not concealing,
  The grief that must have way.
இந்தக் கவிதையைப் பற்றிப் பலரும் குறிப்பிட்டிருக்கின்றனர்.

ஹென்றி ஃபோர்ட் குறிப்பிடும் வரிகள் இவை :

 

“Life cannot die. Longfellow was right – ‘There is no death’. It is not poetry, it is science. Life that can die would not be life…. I expect to go on and gather more experience. I expect to have opportunities to use my experience. I expect to retain this central cell, or whatever it is, that is now the core of my personality. I expect to find conditions of life further on, just as I found conditions of life here, and adapt myself to them just as I adapted myself to these….. We cannot stop”

Henry Ford in The Power that wins by Trine – Page 180-181

 

 

 

 

 

 

 

 

 

 

 

உயிர் வாழ்க்கை இறக்க முடியாதது. லாங்பெல்லோ, “ இறப்பு இல்லை” என்று சொன்ன போது அவர் சரியாகத் தான் சொல்லி இருக்கிறார். அது கவிதை அல்ல; விஞ்ஞானம். இறந்துபடும் உயிர் வாழ்க்கை ஒரு வாழ்க்கையாக இருக்க முடியாது. … தொடர்ந்து செல்ல விரும்புகிறேன்; அதிக அனுபவம் பெற விரும்புகிறேன். எனது அனுபவங்களைப் பயன்படுத்த வாய்ப்புக்களை நான் எதிர்பார்க்கிறேன். இந்த மைய செல்லை, அல்லது அது எதுவாகத் தான் இருக்கட்டுமே, எனது ஆளுமையின் அடிநாதத்தை நான் தக்க வைத்துக் கொள்ள விழைகிறேன். இங்கு நான் காணும் நிலைகளைப் போல உயிர்வாழ்க்கையின் நிலைகளை மேலும் காண விழைகிறேன்; இங்கு அதற்குத் தக என்னைப் பொருந்தச் செய்தது போல அவற்றிற்கு என்னை பொருந்தச் செய்வேன். நாம் நின்று விட முடியாது.” –

ட்ரைனின் ‘இன் தி பவர் தட் வின்ஸ்’ நூலில் ஹென்றி போர்ட்

பக்கம் 180-181

இதை விட அருமையாக யாரால் வாழ்க்கையின் தொடர்ச்சியான மறுபிறப்பு பற்றிச் சொல்ல முடியும்?

 

லாங்பெல்லோ உள்ளிட்ட உலகின் தலையாய கவிஞர்கள், அறிஞர்கள், தத்துவஞானிகள் மறுபிறப்பின் மீது நம்பிக்கை கொண்டுள்ளவர்களே.

 

ஹிந்து மதத்தின் மறுபிறப்புக் கொள்கை அறிவுக்கு உகந்தது என்பதையே இது காட்டுகிறது, இல்லையா!