
Post No. 10,025
Date uploaded in London – 27 AUGUST 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அர்ச்சகர் அர்ச்சனை பற்றிய ஊடக செய்திகள்!
ச.நாகராஜன்
சமீப காலத்திய யூ டியூப் மற்றும் இதர ஊடகங்கள், செய்தித் தாள்கள் உள்ளிட்டவற்றில் சூடான விவாதம் நடந்து வருகிறது. அர்ச்சகர் அர்ச்சனை பற்றிய தமிழக அரசை விமரிசித்து.
அவற்றில் உள்ள சில செய்திகளின் தொகுப்பு இதோ:-
- கொடுத்த வாக்குறுதிகளை (மொத்தம் சுமார் 505 – அச்சடித்துக் கொடுக்கப்பட்டுள்ளது) நிறைவேற்ற வக்கில்லாத, திராணியில்லாத அரசு, மக்களைத் திசை திருப்பச் செய்யும் நடவடிக்கைகளில் ஒன்று இந்த அனைத்து ஜாதியினரும் அர்ச்சனை செய்யலாம் என்பது.
- கடவுள் மறுப்பைக் கொள்கையாக வைத்த ஈவெரா சிலை முன்னர் அர்ச்சகர் நியமனம் பெற்றவர்கள் மாலை போட்டு போட்டோ எடுத்துக் கொண்டது கடவுளை அர்ச்சனை செய்யும் மனப்பான்மையைக் காண்பிக்கிறதா அல்லது கடவுள் வழிபாட்டைத் திட்டமிட்டு அழிக்கும் மனப்பான்மையை உணர்த்துகிறதா?
- கிறிஸ்தவ சர்ச்சுகளிலும் முஸ்லீம்களின் மசூதிகளிலும் அரசு தமிழ் பரப்ப நடவடிக்கை எடுக்காத போது கோவில்களில் தமிழ் பரப்ப அப்படி என்ன அவசரம்? கோவில் வழிபாட்டை அழிக்கவும் தகர்க்கவும் எடுக்கப்பட்ட மறைமுக முயற்சி தானே இது.
- பிராமணர்கள் அனைத்துக் கோவில்களிலும் வழிபாடு செய்பவர்கள் அல்லர். திருப்பித் திருப்பி இதை எத்தனை முறை தான் சொல்வது?
- பிராமணர்களே கோவில்களில் அர்ச்சனை செய்ய முடியாது. குறிப்பிட்ட ஆகம விதிகளின் படி குறிப்பிட்ட கோவிலுக்கான அர்ச்சனை செய்ய தகுதி வாய்ந்தவர்கள் மட்டுமே கர்பக்ருஹத்தினுள் செல்ல முடியும்.
- ஏன், ஆசார்யர்களே கூட உள்ளே செல்ல முடியாது.
- வைஷ்ணவ கோவிலில் குலசேகரப்படியைத் தாண்டி தகுதி வாய்ந்த அர்ச்சகர் தவிர வேறு யாரும் செல்ல முடியாது.
- ஒரு கோவிலின் அர்ச்சகர் இன்னொரு கோவிலுக்குச் சென்று அர்ச்சனை நடத்த முடியாது.
- 150 கோவில்களுக்கு அறங்காவலர்களே கிடையாது.
- அறங்காவலர்களுக்கு நியமன ஆணையே தரப்படுவதில்லை
- அறநிலையத் துறை அமைச்சர் கோவிலில் நுழையும் போது, அறங்காவலர் உண்டா, உண்டு எனில் அரசு ஆணை எங்கே என்று அதை வாங்கி சரி பார்த்த பின்பு தான் பேச வேண்டும். வெற்றாக திட்டங்களை அறிவிக்கக் கூடாது.
- ஒரு அறங்காவலருக்கு கோவில் பணிகள் சரியாக நடத்தப்படுகின்றனவா என்று மேற்பார்வை பார்க்க மட்டுமே அதிகாரம்.

ஆணைகள் வழங்கவோ உள்ளே இருப்பவரை வெளியே போகச் சொல்லவோ அதிகாரம் இல்லை.
13)E.O. எனப்படும் Executive Officer அரசு அதிகாரி. அதில் சம்பளம் பெறுபவர். அவருக்கு தர்ம சாஸ்திரம் தெரியவில்லை எனில் தெரிந்தவ்ர்கள் சொல்படி கேட்க வேண்டும்.
14) EO எங்கே என்றால் இதோ இருக்கிறார் தக்கார் – Fit person – என்கிறார்கள். தக்கார் எங்கே என்றால் ஈ.ஒ. இருக்கிறார் என்கிறார்கள். அவர் எங்கே, அவர் தான் இவர், சரி இவர் எங்கே, இவர் தான் அவர்! கரகாட்டக்காரன் வாழைப்பழ காமெடி போலத் தான் அரசு அதிகாரிகள் பேச்சு இருக்கிறது.
15) ‘அப்பனே, உனது வேல என்ன?”
“எனது அப்பாவுக்கு உதவியாக இருக்கிறேன்.”
“உன் அப்பாவுக்கு வேலை என்ன?”
“சும்மாதான் இருக்கார்!”
இதே கேலிக் கூத்து தான் இன்று கோவிலில் நிலவும் நிலையும், கேள்விகளுக்கு அவர்கள் தரும் பதில்களும்!
16) மைலாப்பூரில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான ஏராளமான பலகோடி மதிப்புள்ள நிலங்களை ‘ஆட்டையை’ போட நினைப்பவர்களின் மீது நடவடிக்கை எடுக்க ஏன் முடியவில்லை எனில் எல்லாம் எழுத்து மூலமாக இல்லாமல் ‘ஒரலாக’ வாய்மொழியாக கபளீகரம் செய்ய அவர்கள் மிரட்டுவதால் தான்!
17) எல்லாவற்றிற்கும் மேலாக சுப்ரீம் கோட் தீர்ப்பை மீறிய செயல் இது என்பதை விஷயம் தெரிந்தவர்கள் கூறி விட்ட போதிலும் அரசு திருத்த நடவடிக்கை இன்னும் எடுக்காமல் இருப்பது வியப்பைத் தருகிறது.
18) ஒரு கேஸ் நடக்க பல ஆண்டு காலம் ஆகும், யார் கேஸ் போட வரப் போகிறார்கள் என்ற நினைப்பு இருந்தால் அது தவறு. பழைய காலம் போல இந்துக்கள் இனி கோவில் சொத்துக்கள் கொள்ளை போவதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள்.
19) மதம் மாற்றும் கிறிஸ்தவ மிஷனரிகளின் தூண்டுதல்கள் இதில் இருக்கிறதா என்று இந்துக்கள் பார்க்க வேண்டும்.
20) வெறும் கல் பொம்மைக்கும் , விக்ரஹத்திற்கும் உள்ள வெறுபாடு கூட இந்த அரசுக்குப் புரியவில்லை. ஆகம விதிகளின் படி செய்யப்பட ஒரு கற்சிலை அதே விதிகளின் படி அமைக்கப்பட்ட கோவிலில் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்ட பின் ஜீவன் உள்ளதாக ஆகிறது. ஒரு கோவில் கும்பாபிஷேகத்தின் போது அந்த சக்தியை கலசத்தில் ஏற்றி தனியே வைப்பார்கள். திருப்பணிகள் முடிந்த நிலையில் மீண்டும் சிலைக்கு அந்த சக்தி ஊட்டப்படும்.

21) பல கோவில்கள் பாழடைந்து இருக்கின்றன. அறநிலையத் துறை அதைச் சரி செய்ய என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? வருவாய் அதிகம் உள்ள கோவில்களிலிருந்து இந்தக் கோவில்களில் பூஜை நடத்த வழி செய்யப்பட்டதா?
22) ஒரு கோவில் என்றால் நிச்சயமாக அதற்கு ஒரு ஆகம் விதி உண்டு. பாழடைந்த கோவில் என்றாலும் கூட எந்த ஆகமத்தின் படி அந்தக் கோவில் வடிவமைப்பு செய்யப்பட்டது என்று பார்க்க வேண்டும்.
23) எல்லாவற்றிற்கும் மேலாக நம்பிக்கையற்றவர்கள் கோவிலுக்குள் சென்றால் விலை மதிப்புள்ள நகைகள் எடுக்கப்படும்; மாற்று நகைகள் வைக்கப்படும்; சிலைகள் திருடப்படும்; சில சமயம் சேதப்படுத்தப்படலாம் என்ற பயம் இப்போது ஏற்பட்டுள்ளது.
24) கடவுள் மீது நம்பிக்கை இருப்பதாக உறுதி கூறி நற்சான்றிதழ்கள் பெற்றவர்கள் எனில் கடவுள் மறுப்பு ஈவெரா சிலையிடம் ஏன் செல்கின்றனர். முரண்பாடு உள்ளங்கை நெல்லிக்கனி எனத் தெரிகிறது.
25) என்ன படிப்பு படித்தனர்? சிலபஸ் எங்கே? அதை ஆகம அறிஞர்கள் ஒப்புக் கொண்டார்களா?
26) இந்துக்கள் ஆங்காங்கே அந்தந்தக் கோவிலுக்கான பக்தர்கள் குழு ஒன்றை அமைக்க வேண்டும்; ஏதேனும் பங்கம் ஏற்பட்டால் உடனே அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று யார் தப்பு செய்தாலும் அது ஈ ஓ ஆகட்டும் தக்கார் ஆகட்டும் அறங்காவலர் ஆகட்டும் உடனே ஒரு புகார் மனு அளிக்க வேண்டும்.
27) இந்துக்கள் உடனடியாக ஓரிழையில் சேர வேண்டிய காலம் இது. எந்த அரசியல் கட்சியையுமோ அல்லது எந்த ஊடகத்தையுமோ முழுதுமாக நம்பி இராமல் தாங்களே ஒன்று சேர்ந்து கோவில்களையும் கோவில் உடைமைகளையும் பாதுகாத்து நமக்கு நம் முன்னோர்கள் தந்தது போல அவற்றைப் பாதுகாப்பாக நமது சந்ததியினருக்குத் தர வேண்டும்.
28) கோவிலை பாழ்படுத்துவோரை சட்டப்படி பிடித்து விசாரணைக்கு உட்படுத்தி மிக கடுமையான் அதிக பட்ச தண்டனையை சட்டப்படி உடனே வழங்க வேண்டும்.
29) ஹிந்துக் கோவில்களின் நிதியை மட்டும் கோவில் பூஜை மற்றும் பராமரிப்பு அல்லாத இதர விஷயங்களில் செலவழிப்பது ஏன்? இதே போல கிறிஸ்தவ சர்ச், முஸ்லீம்களின் மசூதி நிதிகள் தொடப்படுவதில்லை. இந்துக்களுக்கு மட்டும் இப்படி பாரபட்சமான ஒரு நிலை ஏன்?
இன்னும் ஏராளமான கருத்துக்களை பக்தர்கள் பதிவிட்டுள்ளனர். அன்பர்கள் அவற்றை யூ டியூபிலும் நல்ல பதிவுகளிலும், நல்ல செய்தித்தாள்களிலும் பார்க்கலாம்.
திரு சுப்ரமண்யம் சுவாமி, திரு ரங்கராஜன் நரசிம்மன், திரு ரங்கராஜ் பாண்டே, திரு ரமேஷ், திரு பிரபாகரன், திரு குருராஜ், திரு ஓமாம்புலியூர் ஜெயராமன் உள்ளிட்டோர் கூறிய தகவல்களில் சில இவை. முழுவதையும் அறிய இவர்களது தளங்களை கோவில் பாதுகாப்பில் அக்கறை உள்ள, உண்மை நிலையை அறிந்து கொள்ளத் துடிக்கும் பக்தர்கள் அணுக வேண்டும்.

***
tags- அர்ச்சகர், அர்ச்சனை, ஊடக செய்திகள்,