
Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 15 October 2018
Time uploaded in London – 8-39 am
(British Summer Time)
Post No. 5542
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
மநு நீதி நூல்- PART 29
மநு என்பவர் வேத காலத்தில் வாழ்ந்தவர் என்பது ரிக் வேத துதிகள் மூலம் தெரிகிறது. அப்படியானால் இற்றைக்குக் குறைந்தது 3500 ஆண்டு முதல் 8000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்திருக்க வேண்டும். ஆயினும் இன்று நம்மிடம் இருக்கும் மநு தர்ம சாஸ்திரம் பல முறை மாறுதல்களுக்கு, இடைச் செருகல்களுக்கு, உள்ளாக்கப்பட்டுள்ளது. 2600 ஸ்லோகங்களுக்கு மேல் உள்ள மநு தர்ம நூலில் 40 + ஸ்லோகங்கள் சூத்திரர்களுக்கு எதிராக உள்ளது. திராவிடங்களும் மார்கஸீயங்களும், யாரும் பின்பற்றாத இந்த மநு நூலை வைத்துக் கொண்டு அவ்வப்போது கூச்சல் போடுவது நகைப்பை ஏற்படுத்துகிறது. அது மட்டுமல்ல அந்தக் கும்பல்களுக்கு பணம் கொடுக்கும் பேர்வழிகள், மதம் மாற்றக் கும்பல்கள் யார் என்பதையும் வெட்ட வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறது. பெண்களைப் பாராட்டி மநு எழுதிய ஸ்லோகங்களை வெளி உலகிற்குக் காட்டாமல் மறைப்பதால் இவர்கள் பெண்களை எதிர்க்கும் அயோக்கியக் கும்பல் என்றும் புரிகிறது. 2600+ ஸ்லோககங்களில் இடைச் செருகலாக வந்த ஸ்லோகங்களைப் பார்க்கையில் உலகம் கண்டறியாத மஹா ‘ஜீனியஸ்’ மநு என்றும் புரிகிறது.
அது மட்டுமல்ல. பிராஹ்மணர் அல்லாத எல்லோரையும் சூத்திரர் என்று திராவிடங்களும் மார்கஸீயங்களும் முத்திரை குத்தி இந்தியாவிலுள்ள நூறு கோடிப்பேரை சூத்திரர் என்றும் காட்டி வருகிறது. வெள்ளைக்காரன் எழுதிய புத்தகங்களில் ‘ஆர்ய’ என்ற சொல்லை இனச் சொல்லாகக் காட்டப்பட்டுள்ளது. ‘படித்தவர்கள்’, ‘பண்பாடு உடையவர்கள்’ என்ற உரிச்சொல்லை இனப் பெயர்ச் சொல்லாக பயன்படுத்தி மக்களை திசை திருப்பியுள்ளனர். ஆக ஒவ்வொருவரும் 2600 ஸ்லோகங்களையும் படித்து அதில் இக்காலத்துக்கு உரிய விஷயங்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.
சொல்லப்போனால் அடிமைகளையும் பெண்களையும் ஐரோப்பியர்கள் மிருகங்களாக நடத்திய காலத்தில்—(நமது காலத்திலேயே தென் ஆப்ரிக்காவிலும், அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் கறுப்பர்களையும் பழங்குடி மக்களையும்– மிருகங்களாக நடத்தியதை நாம் அறிவோம்). —அப்படியில்லாமல் 2500 அல்லது 8000 ஆண்டுகளுக்கு முன் இந்து சமுதாயம் எப்படி இருந்தது என்பதைப் பார்க்கையில் நாம் வெட்கப்பட எதுவுமே இல்லை. முழு மானவ தர்ம சாஸ்திரத்தையும் படிப்பவர்கள் இதை அறிவர். அரை வேக்காடுகள், தனக்குப் பிடித்த 40, 50 இடைச் செருகல்களைக் காட்டி கூத்தடிப்பர்.
அதர்மம் செய்பவன் குடும்பதோடு அழிவான்- மநு பயங்கர எச்சரிக்கை! (post No.5542)
மநுநீதி நூலின் நாலாவது அத்தியாயத்தைத் தொடர்ந்து காண்போம்..
முதலில் சுவையான, முக்கியமான விஷயங்கள்
(ஸ்லோகங்கள் 4-154 முதல் காண்போம்.)
ஸ்லோகங்கள் 4-156- 158 யார் நீண்ட காலம் வாழ்வான் என்று கூறுகிறது
ஸ்லோகங்கள் 160-162
வேலையில் எது இன்பம் தரும், எது துன்பம் அளிக்கும் என்றும் விளக்குகிறார்.
எது நல்லது எது கெட்டது என்பதை விளக்குகையில் மனதுக்கு இன்பம் பயக்கும் எல்லா நல்ல விஷயங்களும் நல்லது என்கிறார்
அடிமை போல வேலை செய்வது நல்லதல்ல; மனச் சாட்சிப்படி நடப்பதே மகிழ்ச்சி தரும் என்று மநு சொல்வதைப் பார்க்கையில் பெரும் அனுபவசாலி, உளவியல் நிபுணன் என்பது புலப்படும்
4-166 பிராமணர்களை பிராமணன் கூடத் தாக்கக் கூடாது; அப்படி தாக்கினால் நரகம், 21 பிறவிகள் ஏற்படும் என்பார்.
ஸ்லோகம் 172-174 கெட்டது செய்வோரை தெய்வம் நின்று கொல்லும், அதுவும் குடும்பத்தை வேரோடு சாய்த்து விடும். முதலில் நல்லது நடப்பது போலத் தோன்றினாலும் இறுதியில் அழிந்தே போவான் என்று எச்சரிக்கிறார். அரசன் “அன்றே கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்” என்னும் தமிழ்ப் பழமொழியை நினைவு படுத்துகிறார்.
கெட்டது செய்தோர் உலகில் நன்றாகதானே இருக்கிறார்கள்; தருமமே பொய்யோ என்று வியக்கிறோம். இதை மநுவும் அறிவார். பசு புல்லைத் தின்னுவீட்டு உடனே பால் தருவது போல இல்லை இது. மெதுவாக ஒருவனை அதர்மம் கொல்லும். முதலில் நன்றாக இருப்பது போலத் தோன்றி பரம்பரையோடு அழிவான் என்று பயங்கர எச்சரிக்கை கொடுக்கிறார்.
இங்கே பசு உவமை போல, பல இடங்களில் பூனை போல நடப்பவனையும் எச்சரிக்கிறார்.
4-178 பெரியோர் போட்ட பதையைப் பின்பற்று என்று கூறுகிறது.
4-179 முதல் 4-185 வரையுள்ள ஸ்லோககங்களில் சடுகுடு விளையாடும் சிறுவர் முதல் குடுகுடு கிழவனார் வரை- மனைவி மக்கள், உறவினர், வேலைக்காரர்கள் ஆகியோரை மதிக்கச் சொல்லிவிட்டு யார் யார் என்ன லோகத்துக்கு அதி தேவதை என்றும் பின்னர் மொழிவார்.
4-180, 4-185 வேலைக்கார்களை எப்படி மதிக்க வேண்டும் என்று காட்டும்
4-186 பிராஹ்மணர்களை தானம் பற்றி எச்சரிக்கிறது. அதிக தானம் வாங்கிப் பழகாதே; அதற்கு அடிமையாகிவிடாதே என்று சொல்கிறது.
4-196,197 ருத்ராக்ஷப் பூனை,பஞ்ச தந்திர கொக்கு- நண்டு கதைகளைப் போல ஒருவன் இருக்கக்கூடாது என்கின்றது
கொக்கு-நண்டு கதை பஞ்ச தந்திரக்கதைகளில் உள்ளது. ருத்ராக்ஷப் பூனை சிலை மஹாபலிபுரத்தில் அர்ஜுனன் தபஸ் சிற்பத்தில் உளது. மேலும் பல ஸம்ஸ்க்ருத நூல்களிலும் உளது ( முன்னர்
எழுதிய எனது கட்டுரையில் விவரங்கள் உள.
4-203, 204-ல் மற்றொருவனுடைய அனுமதியின்றி அவனது கிணறு, கார், வண்டி வாஹனங்கள், தோட்டம், சோஃபா முதலிய ஆசனங்களைப் பயன்படுத்தக்கூடாது என்பது இக்காலத்துக்கும் பொருந்தக் கூடியது. அலுவலகத்திலும், பிற இடங்களிலும் இது எவ்வளவு பெரிய சச்சரவுகளுக்கு வழிவகுக்கிறது என்பதை நாம் அறிவோம்.














xxxxxxxxxxxxxxxxxxxxxx