Compiled by London swaminathan
Post No.2263
Date: 21 October 2015
Time uploaded in London: 20-00
Thanks for the pictures.
Don’t use pictures. Don’t reblog for at least a week.
வானத்தில் தொங்கிய கோட்டைகளை அழித்து அசுரரை வென்று சுவர்க்கத்தைக் காத்த தூங்கெயில் எறிந்த தொடித் தோட் செம்பியன் (சோழன்) கதையை மணிமேகலை காவியத்தின் வாயிலாக அறிவோம். முப்புரம் எரித்த சிவன் கதையை அறிவோம். இப்படி ஆகாயத்தில் தொங்கிக் கொண்டிருந்த கோட்டைகள், தங்கம், வெள்ளி, இரும்புக் கோட்டை பற்றிய புராணக் கதைகள் எல்லாம் கற்பனையோ என்று கருதியோருக்கு ஒரு வியப்பான செய்தி!
லண்டனிலுள்ள எல்லா பத்திரிக்கைகளும் புகைப்படங்களுடன் வெளியிட்ட செய்தி, யூ ட்யூபில் பல லட்சம் பேர் காண்ட காட்சி இது. தென் சீனாவில் ஆகாயத்தில் பெரிய கட்டிடங்களின் மாயத்தோற்றத்தைக் கண்டு மக்கள் வியந்தனர். அதைப் புகைப்படம், வீடியோ படமும் எடுத்து டெலிவிஷன், யூ ட்யூப் ஆகியவற்றில் பகிர்ந்தனர்.
விஞ்ஞானிகள் எப்பொழுதுமே அதிசயங்களை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆகவே அவர்கள் இது பருவநிலை காரணமாக நடக்கும் ஒரு அபூர்வ நிகழ்ழ்சி என்கிறார்கள். அதாவது நிலத்தின் மீதோ, நீர் நிலையின் மீதோ காற்றுமண்டலம் வெப்பமானால் தூரத்திலுள்ள கட்டிடங்களை இப்படிப் பிரதிபலிக்கும் என்றும் இந்த அபூர்வ தோற்றத்துக்கு Fata Morgana Fஏடா மோர்கனா என்று பெயர் என்றும் சொல்லுகிறார்கள். ஜியாங்சி, போஷான் ஆகிய Jiangxi and Foshan, இரண்டு தென் சீன நகரங்களின் மக்கள் இந்த மாயத் தோற்றத்தைக் கண்டனர். வானளாவிய கட்டிடங்கள் ஆகாயத்தில் இருப்பது போல அவர்கள் பார்த்தனர்.
நாம் வாழும் காலத்திலுள்ள வீடியோ, டெலிவிஷன், பேஸ் புக், யூ ட்யூப் ஆகியவற்றை மறந்து விட்டு இது இல்லாத யுகத்தில் இப்படி நடந்திருந்தால், மக்கள் இப்படி நடந்ததைக்கூட ஒப்புக் கொள்ளமாட்டார்கள். ஏதோ பைத்தியம் உளறுகிறதென்று சொல்லிவிட்டுப் போயிருப்பார்கள். இப்பொழுது வீடியோ காமெரா முதலியவற்றின் மூலம் உலகிற்குக் காட்ட முடிகிறது.
விஞ்ஞானிகள் என்னதான் விளக்கம் கொடுத்தாலும், இன்னும் ஐயப்பாடு இருக்கத் தான் செய்யும். அடிக்கடி இப்படி நிகழ்ந்தால் அவர்கள் சொல்லுவதை மக்கள் ஏற்பர். ஏதோ அதிசயமாக இப்படி நடந்தால் பல விதமான கொள்கைகள் உருவாகும் சிலர் இது அமெரிக்கா செய்த வேலை என்றும் அவர்களுடைய Project Blue Beam,”ப்ராஜெக்ட் ப்ளூ பீம் என்பதன் ஒரு சதி வேலை இது என்றும் கருதுவர். மற்றும் சிலர் இது சீனாவே, அவர்களுடைய ஹோலோக்ராபிக் (Holograpgic) டெக்னாலஜி பற்றி மக்களின் கருத்தை அறிய இப்படி செய்து பார்த்தது என்பர். இது நடந்து ஒரு மாதம் ஆகியும் இன்னும் எல்லோரும் ஏற்கும் விளக்கம் கிடைக்கவில்லை.
லண்டனில் பறக்கும் தட்டு! விழுந்து நொறுங்கியது!!
இப்படி சீனச் செய்தி பரபரப்பை ஏற்படுத்திய அதே நேரத்தில் லண்டன் தெரு ஒன்றில் மர்ம வாஹனம் ஒன்று வந்து விழுந்து நொறுங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. கிங்ஸ்டன் என்னும் பகுதியில் இரவில் இனம் தெரியாத எந்திரம் போன்ற ஒர் பொருள் பெரிய சப்தத்துடன் விழுந்தது. உடனே மக்கள், போலீசுக்கும் ஆம்புலன்சுக்கும் டெலிபோன் செய்யவே அவர்கள் பறந்தோடி வந்தனர். அதைப் பார்த்த போலீஸ் அதிகாரிகள் ஒரு பறக்கும்தட்டு விழுந்து நொறுங்கியது போல இருக்கிறது என்று வருணித்தவுடன் பலருக்கும் மேலும் வியப்பு ஏற்பட்டது. ஆனால் அங்கே வெளி உலக மனிதர்கள் எவரும் இல்லை.
வேறு சிலர் இது பீட்ஸா கடை அடுப்பு போல இருக்கிறது என்கின்றனர். ஆனால் இதுவரை சரியான விளக்கம் இல்லை. சில நேரங்களில் ராணுவம் தொடர்பான சோதனைகள் போன்றவற்றைப் போலீசார் தெரிந்தாலும் சொல்ல மாட்டார்கள். போலீசாரும் குழம்பிப் போயிருப்பதாக லண்டன் பத்திரிக்கைகள் எழுதுகின்றன.
-சுபம்-





You must be logged in to post a comment.