
Translated by london swaminathan
Date: 17 April, 2016
Post No. 2733
Time uploaded in London :–14-36
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
நியூயார்க் நகர முனிசிபல் பெண்கள் லீக் தலைவி மிஸ் பிரான்ஸிஸ் கெல்லர், ஒரு விருந்துக்குச் சென்றிருந்தார். இவர், பெண்ணுரிமை இயக்கத்தவர் என்று தெரிந்து ஒருவர் ஒரு ‘காமெண்ட்’ அடித்தார். பெண்கள் வீண்பகட்டு, ஆடம்பரம், டம்பம் உடையவர்கள் என்று.
உடனே அவர் சொன்னார்: உண்மைதான் மறுப்பதற்கில்லை. பெண்கள் ஆடம்பரப் பிரியர்கள்தான். இதற்கு ஆயிரம் சாட்சியங்கள் உண்டு. அது சரி! இந்த அறையிலேயே மிகவும் அழகான ஒரு ஆண்மகன், ஏன் தனது ‘டை’ யை தப்பாக –முன் பின்னாக –அணிந்திருக்கிறார்? என்று ஒரு குண்டு போட்டார். அந்த அறையில் ஆறு ஆண்கள் இருந்தனர். அத்தனை பேரும் யாரும் பார்க்காதபடி, மெதுவாக, லாவகமாக, தன் கையை சட்டையின் காலருக்குப் பின்னால் நகர்த்தி தடவிப் பார்த்துக் கொண்டனர்.
அந்தப்பெண், ஒரு புன்னகையை நெளியவிட்டாள். (அத்தனை ஆண்களையும் ஒரு நிமிடத்தில் முட்டாளாக்கிவிட்டாள். யாரும் ‘டை’யை தப்பாக அணியவில்லை!)
Xxx

டார்லிங்; அது பாவம் இல்லை; மிஸ்டேக்!
அயர்லாந்தின் தலைநகரான டப்ளினில் பாதிரியார் Fபாதர் ஹீலியிடம் ஒரு அழகான இளம் பெண் வந்தாள். பாவ மன்னிப்புக் கூண்டில் நின்றாள். அந்தப் பக்கம் பாதிரியார் அந்தப் பெண் செய்த பாவம் என்ன என்று அறிய காதை நீட்டினார்
“Fபாதர்! நான் பெரிய தப்பு செய்கிறேன். தினமும் கண்ணாடி முன் நின்று, நான்தான் மிக அழகான பெண் என்று நினைத்து கர்வமடைகிறேன். இந்தப் பாவத்தை மன்னியுங்கள்”.
பாதிரியார் சொன்னார்: இது பாவமில்லை. ஒரு தப்புக் கணக்கே!
(அந்தப் பெண்ணுக்கு ஏன்தான் கேட்டோம் என்று போய்விட்டது. அது வரை அழகி என்று எண்ணியிருந்தாள். பாதிரியாரோ பாவமில்லை.தப்பான அபிப்ராயமே/மிஸ்டேக் என்றார்)
Xxx
நான்தான் உலக மகா எழுத்தாளன்!
உலகப் புகழ் பெற்ற இதாலிய எழுத்தாளர் டி’அனன்சியோவுக்கு பிரான்ஸில் வசித்தபோது ஒரு கடிதம் வந்தது. “இதாலியின் புகழ்மிகு எழுத்தாளர்” என்று எழுதி அவர் பெயரை எழுதியிருந்தார் கடிதம் அனுப்பியவர்.
தபால்காரர், பெருமையாக, “பாருங்கள் உங்கள் விலாசத்தைக் கூட முழுக்க எழுதவில்லை. நீங்கள் அவ்வளவு புகழ் மிக்கவர். உங்களுக்கு கடித்தத்தைக் கொண்டுவந்துவிட்டேன்” என்றார்.
“அவர் நான் இதை வாங்க மாட்டேன். இது எனக்கல்ல” என்றார்.
தபால்காரருக்குப் புரியவில்லை.
“நான் உலக மகா எழுத்தாளன். இதில் இதாலியின் மிகப் புகழ்பெற்ற” — என்று மட்டுமே எழுதியிருக்கிறான். எடுத்துக் கொண்டு போ” – என்றார்.
(அத்தனை அகந்தை)
Xxx

நகர வாழ்வு!
அமெரிக்காவில் கிராமப்புறத்தில் வாழ்ந்த ஒரு ஏழை நன்கு படித்து நகரத்துக்குச் சென்று வங்கியில் சேர்ந்து மிகப் பெரிய பதவி பெற்று செய்திப் பத்திரிகையில் எல்லாம் படங்கள் வந்திருந்தன. சரி! நம் புகழ் திக்கெட்டும் பரவிவிட்டது நம் சொந்த கிராமத்துக்குச் சென்று எல்லோருக்கும் ‘ஹலோ’ சொல்லிவிட்டு வருவோம் என்று புறப்பட்டார். அவர் கிராமத்துக்கு ரயில் வசதி மட்டுமே உண்டு. விமானம் கிடையாது.
தன்னை வரவேற்க ஏராளமானோர் மாலை மரியாதைகளுடன் காத்திருப்பார்கள் என்று மனக்கோட்டை கட்டிக் கொண்டிருந்தார். ஊரும் வந்தது; ரயிலும் நின்றது. ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் ஈ, காகா இல்லை. அவருக்கு ஒரே ஆச்சரியம். சரி, ரயில் நேரத்தைத் தப்பாக நினைத்திருப்பாகள். கொஞ்சம் காத்திருப்போம் என்று காத்திருந்தார். பாவம்! யாரும் வரவில்லை. அந்த ரயில்வேஸ்டேஷன் போர்ட்டர் அவரிடம் வந்தான். உடனே அவன் ஏதேனும் வரவேற்பு பற்றி நல்ல செய்தி கொண்டுவந்திருப்பான் என்று ஆர்வத்துடன் அவனருகே போனார். அவன் கேட்டான்:
“என்ன ஸார், வெளியூருக்குக் கிளம்பிட்டீங்களா? எந்த ஊருக்குப் போறீங்க?”
–சுபம்–






You must be logged in to post a comment.