
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 9098
Date uploaded in London – –2 January 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஆம்பல் என்பது தமிழ் சொல்லா ? அம்மா என்பது தமிழ் சொல்லா?
சந்தேகம் வந்து விட்டது எனக்கு!

‘ஆப’ என்பது சம்ஸ்க்ருதத்தில் தண்ணீர் என்று பொருள்படும். பிராமணர்கள் தினமும் மூன்று வேளை தங்கள் தலையில் தண்ணீர் தெளித்து சுத்தப்படுத்திக் கொள்ளும் சடங்கில் இது வருகிறது. ஐயர்கள் கோவில்களிலும் வீடுகளில் செய்யும் பூஜைகளிலும் இந்தச் சொல் வருகிறது. விஞ்ஞானம் படித்தவர்கள் பயன்படுத்தும் ‘ஆக்வா’ என்னும் லத்தின் மொழிச் சொல்லில் இது வருகிறது. ஆக்வா ரீஜியா (aqua regia) என்னும் ‘இராஜத் திராவகம்’ (Nitric acid+ hydrochloric acid= Aqua regia) தங்கத்தையும் கரைத்துவிடும்.
ரீஜியா என்பது ராஜா என்ற ஸம்ஸ்க்ருதச் சொல் என்று நான் சொல்லத் தேவை இல்லை. பிராமண குடும்பங்களில் குழந்தைக்கு ‘அக்கம்’/ தண்ணீர் தருவார்கள்.
தண்ணீரை நமக்கு கொண்டுவரும் நதியை நாம் ‘மாதா’வாக- ‘அம்பா’வாக – ‘அம்மா’வாக (LINGUSITIC RULE- B=M=V) வணங்குகிறோம் . எல்லா நதிகளின் பெயர்களும் பெண்களின் பெயர்களே. பெரும்பாலான நதிகள் ‘வதி’ என்னும் பின்னொட்டில் (SUFFIX) முடியும். பெண்களின் பெயரும் இப்படித்தான்.
இவ்வாறு பெண்களை உயிர் தரும் அன்னையாகவும் நதிகளை உயிர் தரும் அன்னையாகவும் போற்றுவது இந்துக்கள் மட்டுமே. அது மட்டுமல்ல வேத காலம் முதல் இந்த வழக்கு உள்ளது. சிந்து, கங்கை, சரஸ்வதி ஆகிய நதிகளை வேதம் போற்றும் அடைமொழிகள் மூலம் இது தெரிகிறது சரஸ்’வதி’, த்ருஷத்’வதி’ என்ற வேதகால நதிகளின் பெயர்களும் பார்’வதி’, துர்கா’வதி’, சத்ய’வதி’ முதலிய பெண் பெயர்களும் இதை உறுதி செய்யும்.
அம்பா, அம்பிகா, அம்பாலிகா என்ற காசிராஜனின் மூன்று பெண்களால் எப்படி மஹாபாரதக் கதை உருவாகியது என்பதை நாம் அறிவோம்.

அம்பலில் தோன்றிய மலர் ஆம்பல் !
அம்பாவில் தோன்றியது அம்மா!
(LINGUSITIC RULE- B=M=V)
இப்போது நீங்களே சொல்லுங்கள் ; தமிழ் இலக்கியத்தில் இது வருவதற்கு ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே இது சம்ஸ்க்ருதத்தில் உள்ளது . அப்படினால் யார் முதலில் பயன்படுத்தினர். இதனால்தான் நான் சொல்கிறேன் ; ஆரிய சம்ஸ்க்ருதம், திராவிடத் தமிழ் என்பதெல்லாம் மதத்தைப் பர ப்பவந்த கால்டுவெ ல்கள் மாக்ஸ்முல்லர்களின் பித்தலாட்டம் என்று!! அப்படியானால் லண்டன் சாமிநாதனின் கொள்கை என்ன?
நூற்றுக்கணக்கான கட்டுரைகளில் சொன்னதை மீண்டும் சொல்கிறேன் .
“திராவிட குடும்பம் என்பது தமிழ் குடும்பம்” என்பது அரைவேக்காட்டுத்தனம். இந்திய மொழிக் குடும்பம் என்பதன் இரு பிரிவே சம்ஸ்கிருதம், தமிழ். இதனால்தான் 150-க்கும் மேலான சம்ஸ்கிருதச் சொற்களை 600-க்கும் மேலான குறள்களில் வள்ளுவன் பயன்படுத்துகிறான். தானம் தவம், குணம் என்ற சொற்களுடன் தைரியமாக குறளைத் துவங்குகிறான்.
வள்ளுவனும் கடவுள் வாழ்த்துக்கு அடுத்த அதிகாரத்தில் தண்ணீரின் பெருமையை — வான் சிறப்பு — வைத்ததோடு நில்லாமல் கடவுளுடன் நீரை சம்பந்தப்படுத்தி ‘தானம்’ ‘தவம்’ ‘பூஜை’ என்ற ஸம்ஸ்க்ருதச் சொற்களை (குறள் 18,19) பயன்படுத்தி வேதம் சொன்னதையே தான் சொல்வதாகக் குறிப்பால் உணர்த்துகிறான் . குறள் 11-ல் அமிழ்தம் என்ற சம்ஸ்கிருத்த் சொல்லைப்போட்டு புராணக் கதையையும் கொண்டு வந்துவிடுகிறான்!!!

பாணினி சூத்ரம் 6-1-118
“ஆபோ ணோ வ்ருஷ்ணோ வரிஷ்டே
அம்போ அம்பாலே அம்பிகே பூர்வே “
யஜுர் வேதத்தில் ‘தண்ணீர் மகிழ்ச்சி
அளிக்கும்’ என்று சொல்லப்பட்டுள்ளது
ஆபோ அஸ்மான் மாதரஹ ஸுந்தயந்து (வாஸ.4-2)
“தாய் போன்ற தண்ணீர் நம்மை புனிதமாக்கட்டும்” —
என்ற வரிகள் யஜுர் வேதத்தில் வருவது குறிப்பிடத் தக்கதாகும் .
தண்ணீர் சுத்தப்படுத்தும் என்பது உலகறிந்த உண்மை .
தண்ணீர் புனிதப்படுத்தும் என்பது இந்துக்கள் கண்ட உண்மை.
இந்துக்கள் குளிர்ப் பிரதேசத்தில் இருந்து வரவில்லை. இந்தியாவின் மண்ணின் மைந்தர்கள் என்பதை பிறப்பு முதல் இறப்பு வரையுள்ள “தண்ணீர் சடங்குகள்” (WATER IS USED BY HINDUS IN ALL RITUALS) காட்டுகின்றன.
கால்டுவெல்கள், மாக்ஸ்முல்லர்கள் போன்ற ஆட்களின் முகத்திரைகளை கிழித்தெ றிகின்றன
ஆக தண்ணீரை தாய்க்கு நிகராக உயர்த்தியது வேதங்களே .
நீரையும் ‘சீராடு’ என்பதை சிறிது மாற்றி அழுத்தம் திருத்தமாக நீரையும் ‘சீராட்டு’ என்போம்.
2700 ஆண்டுக்கு முந்தைய பாணினி சூத்திரத்தில் வரும் அம்பா, அம்பிகா அம்பாலிகா என்ற பெயர்கள் மஹாபாரதத்தில் அப்படியே இருப்பதும் கதையின் போக்கையே நிர்ணயிப்பதும் பாணினி, மஹாபாரதம் ஆகியவற்றின் பழமையையும் பெருமையையும் உயர்த்துகிறது.

PANINI SUTRA 6-1-118
आपोजुषाणोवृष्णोवर्षिष्ठेऽम्बेऽम्बालेऽम्बिकेपूर्वे
सूत्रच्छेदः आपो-जुषाणो-वृष्णो-वर्षिष्ठे-अम्बे-अम्बाले-अम्बिकेपूर्वेप्रथमा-द्विवचनम्
अनुवृत्तिः यजुषि६.१.११७ , अचि६.१.७७ , प्रकृत्या६.१.११५
अधिकारः संहितायाम्६.१.७२
सम्पूर्णसूत्रम्
सूत्रप्रभेदः –
सूत्रार्थः
English (One line meaning)
काशिका यजुषि इत्येव। आपो जुषाणो वृष्णो वर्षिष्ठे इत्येते शब्दाः अम्बे अम्बाले इत्येतौ च यावम्बिके शब्दात् पूर्वौ यजुषि पठितौ ते अति परतः प्रकृत्या भवन्ति। आपो अस्मान् मातरः शुन्धयन्तु। जुषणो अप्तुराज्यस्य। वृष्णो अंशुभ्यां गभस्तिपूतः। वषिष्ठे अधि नाके। अम्बे अम्बाल्यम्बिके यजुषीदमीदृशम् एव पठ्यते। अस्मादेव निपातनात् अम्बाऽर्थनद्योर्ह्रस्वः ७.३.१०७ इति ह्रस्वत्वं न भवति।
न्यासः click to toggle
पदमञ्जरी click to toggle
सिद्धान्तकौमुदी (३५२१) यजुषि अति प्रकृत्या । आपो अस्मान्मातरः (आपो॑ अ॒स्मान्मा॒तरः॑) । जुषाणो अग्निराज्यस्य (जु॒षा॒णो अ॒ग्निराज्य॒स्य) । वृष्णो अंशुभ्याम् (वृष्णो॒ अंशु॑भ्याम्) । वर्षिष्ठे अधि नाके (वर्षि॑ष्ठे॒ अधि॒ नाके॑) । अम्बे अम्बाले अम्बिके । अस्मादेव वचनात् अम्बार्थ – (कौमुदी-२६७) इति ह्रस्वो न ॥
–SUBHAM–
tags-தண்ணீர் தாய் , அம்ப , அம்பா, ஆப