
Post No. 9664
Date uploaded in London – –30 May 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
FRANCESCO PETRARCH
(1304 – 1374)


காதல் கவிதைகள் எழுதி புகழ்பெற்றவர் இதாலிய கவிஞர் பெட்ரார்க். லாராவுக்கு (POEMS TO LAURA) இவர் எழுதிய கவிதை மிகவும் புகழ்பெற்றவை. பழைய பாணியையும் மறுமலர்ச்சி (RENAISAANCE) காலத்தில் தோன்றிய புதிய பாணியையும் கலந்து எழுதியது இவரது தனிச்சிறப்பு.
இதாலியின் TUSCANY வட்டாரத்தில் AREZZO என்னுமிடத்தில் இவர் பிறந்தார். இவருடைய குடும்பம் பிளாரன்ஸ் நகரில் வாழ்ந்தாலும் மாற்றுக்கட்சியை ஆதரித்த காரணத்தால் வெளியேற்றப்பட்டனர். பெட்ரார்க்கின் தந்தையும் தாத்தாவும் வழக்குரைஞர்கள். அதே வழியில் இவரையும் சட்டம் பயில்வதற்காக மான்டிபெல்லியர் (MONTEPELLER UNIVERSITY) பல்கலைகழத்திற்கு அனுப்பப்பட்டார். ஆனால் அவருக்கு சட்டம் பிடிக்கவில்லை. படிப்பை நிறுத்திவிட்டு சர்ச்சில் சேர்ந்தார் (MINOR ORDERS IN THE CHURCH)
இது நடந்த சிறிது காலத்தில் அவர் லாரா என்னும் பெண்ணைச் சந்தித்தார். அவரது வாழ்க்கையையே இது மாற்றிவிட்டது. ஆனால் LAURA DE NOVES ஏற்கனவே திருமணமானவர். இருந்தபோதிலும் அவரை எண்ணி பெட்ரார்க் பல கவிதைகளை எழுதினார். இந்தக் காதல் கவிதைகளை ஏராளமானோர் ரசித்துப் படித்தனர்.
அவர் பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், ஹங்கேரி ஆகிய நாடுகளுக்குச் சென்று வந்தார்.
32 வயதில் அவருக்கு கவலை அதிகமாகி மனநலம் குன்றினார். மாற்றான் மனைவியின் மீது தான் காதல் கொண்டு கவிதை எழுதியது தவறு என்று மனசாட்சி உறுத்தியது. இந்த மனப்போராட்டம் அவரை மனநோயில் (NERVOUS BREAKDOWN) ஆழ்த்தியது.
1348ஆம் ஆண்டில் பிளேக் (Plague) என்னும் கொள்ளைநோய் இதாலியில் பரவியது. லாராவும் அந்த நோய்க்கு பலியானார். பெட்ரார்க் துயரத்தில் மூழ்கினார். முறை தவறிய காதலுக்கு கடவுள் வழங்கிய தண்டனைதான் இது என்று கருதிய அவர் ரோமாபுரிக்கு (ROME) யாத்திரை சென்றார்.
ரோமிலிருந்து பிளாரன்ஸ் சென்ற அவர் இதாலிய பெருங்கவிஞர் பொக்காஸியோவை சந்தித்தார். அவர்கள் வாழ்நாள் முழுதும் இணைபிரியா நண்பர்களாயினர்.
பெட்ரார்க்கிற்கு GIOVANNIA VISCONTI தூதர் பதவி கொடுத்தனர்.
—subham—





tags– இதாலிய கவிஞர், பெட்ரார்க், காதல் கவிதைகள்,













