காளிதாசன் காவியங்களில் விஷ்ணு அவதாரங்கள்!- Part 4 (Post No.14,833)

Written by London Swaminathan

Post No. 14,833

Date uploaded in London –  5 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

பரசுராமன்

விஷ்ணுவின் பல அவதாரங்கள் சங்கத் தமிழ் நூல்களிலும் காளிதாஸனிலும் பாடப்படுகின்றன .

பரசுராமன்- ராமன் மோதலை காளிதாசன் ரகுவம்ச காவியத்தில் விரிவாகவே பாடுகிறான் (ரகு வம்சம் 11-ஆவது சர்க்கம்). காளிதாசன் பிருஹுபதி என்ற பெயரில் பரசுராமனை மேகதூதத்திலும் (59) குறிப்பிடுகிறான். 

பரசுராமன் பற்றிய குறிப்பு சங்கத் தமிழில் அகம்-220 ல் காணாலாம்.

இதை மருதன் இளநாகனார் பாடியதால் சங்க காலத்தின் கடைசி கட்டத்தில் (200-300 CE)  இது பாடப் பெற்றிருக்க வேண்டும் .

நான்கு முக்கியச் செய்திகள் இதில் உள்ளன

மழுவாள் நெடியோன் = பரசுராமன்

ஊரும் சேரியும் உடன் இயைந்து அலர் எழ,

தேரொடு மறுகியும், பணி மொழி பயிற்றியும்,

கெடாஅத் தீயின் உரு கெழு செல்லூர்,

கடாஅ யானைக் குழூஉச் சமம் ததைய,

மன் மருங்கு அறுத்த மழு வாள் நெடியோன்     5

முன் முயன்று அரிதினின் முடித்த வேள்வி,

கயிறு அரை யாத்த காண் தகு வனப்பின்,

அருங் கடி நெடுந் தூண் போல, யாவரும்….”

1..கெடுதி செய்யாத வேள்வித் தீ செல்லூரில் எரிந்தது.

2..“மழுவாள் நெடியோன்” என்னும் பெயர் கொண்டவன் யானைப்படையுடன் வந்து தாக்கிய அரசர்களை பூண்டோடு அழித்தான்.

3..வேள்விக்கு நடப்பட்ட வேள்வித்தூண் நாற்புறமும் கயிறுகளால் கட்டி நிறுத்தப்பட்டிருந்தது. அது காணத்தக்க பொலிவு கொண்டதாக விளங்கியது. வேள்வித் தூண் – யூபஸ்தம்பம் .

4.அந்த வேள்வித்தூண் போன்றது உன் மார்பு.

ஆனால் அந்தத் தூணைப் போல அனைவராலும் காணமுடியாத மார்பு உன்னுடையது; நினைத்தாலும் நடுங்கவைக்கும் மார்பு அது.

****

பலராமன் – கண்ணன் ஜோடி

காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடிய பாடலில் நீங்கள் இருவரும் இருபெருந் தெய்வங்களாகிய பலராமனும், திருமாலும் போல ஒன்றிப் பகைவர்கள் அஞ்சுமாறு தோன்றுகிறீர்கள் என்று சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவனையும்  பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியையும் புகழ்கிறார். .

செரு மாண் பஞ்சவர் ஏறே; நீயே,

அறம் துஞ்சு உறந்தைப் பொருநனை; இவனே,

நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளிய என,                  10

வரைய சாந்தமும், திரைய முத்தமும்,

இமிழ் குரல் முரசம் மூன்றுடன் ஆளும்

தமிழ் கெழு கூடல் தண் கோல் வேந்தே;

பால் நிற உருவின் பனைக் கொடியோனும்,

நீல் நிற உருவின் நேமியோனும், என்று                    15

இரு பெருந் தெய்வமும் உடன் நின்றாஅங்கு,

உரு கெழு தோற்றமொடு உட்குவர விளங்கி,

இதில் மேலும் சில செய்திகளையும் தமிழ்ப்புலவர்கள் கொடுக்கின்றனர் . பலராமன்  நிறம்  வெள்ளைக் கலர் (வாலியோன்); கிருஷ்ண நிறம் நீலம் சேர்ந்த கருப்பு . பலராமன் கொடி பனைக்கொடி ; கிருஷ்ணன் கொடி புள் கொடி என்பது வேறு பாடல்களில் வருகிறது

கிருஷ்ணனும் பலராமனும் ஆதிகாலத் தமிழ் நாட்டில் கோவிலில் ஒருங்கே வழிபடப்பட்டனர் . காலியான/ வெற்றிடமான  பலராமன்  சந்நிதிகளை இன்றும் சில கோவில்களில்  காணலாம் . பலராமனை லாங்கலின்,  ஹலப்ருத் (மேகம் 61, 51) என்று காளிதாசன் அழைக்கிறான் அதாவது கலப்பையை ஏந்தி; காடு திருத்தி நாடாக்கிய பெரும் விவசாயி; அவன் இந்தியா முழுதும் விவசாயத்தைப் பரப்புவதற்காக மஹாபாரத யுத்த காலத்தில் பயணம் செய்தான் . இந்தக் காளிதாசனின் கலப்பை ஏந்தியவன் என்ற சொல்லைத் தமிழ்ப்புலவர்களும் பாடுகின்றனர்.

பலராமன், கிருஷ்ணன்  – பரி  2-20-27 ; 15-13/4,

பலராமன்  மட்டும் பாடப்பட்ட இடங்கள்  – கலி  105-11/12; பரி  15-19 to 21

பனைக்கொடி  , நாஞ்சிலோன்=ஹல ப்ருத்   பரி  13-35; புறம்  58-14; கலி104-7; பரி 1-4; கலி 105-11;பரி 13-33

***

இடைக்குல கண்ணனை மேகதூதத்தில் முன்னரே கண்டோம் .அகநானூற்றில் கண்ணன் லீலைகள் உளது 

தண் கயத்து அமன்ற வண்டு படு துணை மலர்ப்

பெருந் தகை இழந்த கண்ணினை, பெரிதும்

வருந்தினை, வாழியர், நீயே! வடாஅது

வண் புனல் தொழுநை வார் மணல் அகன் துறை,

அண்டர் மகளிர் தண் தழை உடீஇயர் 5

மரம் செல மிதித்த மாஅல் போல,

…..

சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடு வேல்,              10

சினம் மிகு முருகன் தண் பரங்குன்றத்து,

அந்துவன் பாடிய சந்து கெழு நெடு வரை…………”

வட நாட்டில் ஓடும் தொழுனை என்ற  யமுனை ஆற்று மணலில் அண்டர் என்னும் இடையர் குல மகளிர் தழையாடை உடுத்திக் கொள்வதற்காகக் கண்ணன் மரத்தில் ஏறிக் கிளைகளை மிதித்து வளைத்துக் கொடுத்தான் என்று பிற்காலப் புலவரான மருதன் இளநாகன் பாடுகிறார்  . இது  கோபியரின் புடவைகளை குருந்த மரங்களில் கண்ணன் ஒளித்துவைத்ததையும் தொலைவில் அண்ணன் பலராமன் வருவதைக்கண்டவுடன் அவசர அவசரமாக புடவைகளைத் திருப்பிக்கொடுத்ததையும் கூறும் பாகவதக் கதையின் தமிழாக்கம் ஆகும் —அகம் 59

பரிபாடல் பாடிய அந்துவன் பற்றி இளநாகன் குறிப்பிடுவதால் அவன் மிகவும் பிற்காலப் புலவன் என்பதும் அந்துவன் முருகனைப் பாடிய செய்தியும் உளது .

தொழுனை என்ற மர்மப் பெயரை யாரும் விளக்கவில்லை! கோபியர் தொழுது மன்றாடியதால் தொழுனை என்ற பெயர் வந்தது போலும்!

***

புறம் 174,

அணங்குடை அவுணர் கணம் கொண்டு ஒளித்தென,

சேண் விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது,

இருள் கண் கெடுத்த பருதி ஞாலத்து

இடும்பை கொள் பருவரல் தீர, கடுந் திறல்

அஞ்சன உருவன் தந்து நிறுத்தாங்கு,5

அரசு இழந்திருந்த அல்லல் காலை,

முரசு எழுந்து இரங்கும் முற்றமொடு, கரை பொருது

இரங்கு புனல் நெரிதரு மிகு பெருங் காவிரி

மல்லல் நல் நாட்டு அல்லல் தீர,

பொய்யா நாவின் கபிலன் பாடிய,           10

மை அணி நெடு வரை ஆங்கண், ஒய்யெனச்

செருப் புகல் மறவர் செல்புறம் கண்ட

எள் அறு சிறப்பின் முள்ளூர் மீமிசை,

அரு வழி இருந்த பெரு விறல் வளவன்

மதி மருள் வெண்குடை காட்டி, அக் குடை 15

புதுமையின் நிறுத்த புகழ் மேம்படுந!

விடர்ப் புலி பொறித்த கோட்டை, சுடர்ப் பூண்,

சுரும்பு ஆர் கண்ணி, பெரும் பெயர் நும் முன்

ஈண்டுச் செய் நல் வினை ஆண்டுச் சென்று உணீஇயர்,

உயர்ந்தோர் உலகத்துப் பெயர்ந்தனன் ஆகலின்,     20

ஆறு கொல் மருங்கின் மாதிரம் துழவும்

கவலை நெஞ்சத்து அவலம் தீர,

நீ தோன்றினையே நிரைத் தார் அண்ணல்!

கல் கண் பொடிய, கானம் வெம்ப,

மல்கு நீர் வரைப்பின் கயம் பல உணங்க,        25

கோடை நீடிய பைது அறு காலை,

இரு நிலம் நெளிய ஈண்டி,

உரும் உரறு கருவிய மழை பொழிந்தாங்கே.- புறம் 174,

SOLAR ECLIPSE

இந்தப் புறநானூற்றுப் பாடலைப் பாடியவர் மாறோக்கத்து நப்பசலையார் ; அவரால் பாடப்பெற்ற மன்னன் பெயர் ஸ்ரீ கிருஷ்ணா =மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன்.

கிருஷ்ணன் எப்படி சூரியனை மறைத்த இருளை அகற்றி சூரியனை வெளிக்கொணர்ந்தாரோ SOLAR ECLIPSE அது போல காட்டில் ஒளிந்து கொண்டிருந்த சோழ மன்னனை நீ மீட்டுவந்து அரசுக்கட்டிலில் ஏற்றினாய் என்ற உவமை உள்ளது. அப்படிக் கிருஷ்ணனாகிய நீ என்ற சிலேடையை வைத்துள்ளார் . சோழமன்னன் சூரியகுலத்தவன் என்பதால் அவனை சூரியனுக்கு ஒப்பிட்டார் ; பாடல் முழுதும் சிலேடை நயமும் உவமை நயமும் உளது ; கபிலனை புலவர் குறிப்பிடுவதால் அவர் காலத்துக்குப் பிற்பட்டவர் நப்பசலையார் என்ற செய்தியும் உளது

இதிஹாஸக் கிருஷ்ணன் மஹாபாரத யுத்தத்தில் சூரிய கிரகணத்தைப் பயன்படுத்தி ஜயத்ரதனை வீழ்த்தினார் .

இதே போல ரிக்வேதத்தில் சூரியனை அத்ரி மகரிஷி வெளிக்கொணர்ந்தார் என்ற பாடலும் உளது.

****

வராஹ அவதாரம்

குமார சம்பவ ஸ்லோகத்தில் (6-8) வராஹ அவதாரத்தைக் காளிதாசன் வருணிக்கிறார்;  நாட்டிலேயே மிகப்பெரிய வராஹ அவதார சிலை குப்தர்கால உதய கிரி குகையில் (400 CE)  உள்ளது .காளிதாசன் பாடியதால் இது உருவாக்கப்பட்டது என்பதில் ஐயமில்லை.

வராஹஅவதாரம்  பரி  2-16/19; 3-21/3; 3-34/6; 4-22/4

பரி பாடல் முழுதும் குறைந்தது நான்கு இடங்களிலாவது வராஹ அவதாரம் பாடப்பட்டுள்ளது 

****

பரசுராமன்

கடுமையான போர்த்திறம் கொண்ட இராமனுடன் சேர்ந்து காட்டுக்கு வந்த சீதையை அரக்கன் இராவணன் தன் வலிமை மிக்க கைகளால் தூக்கிக்கொண்டு சென்றபோது, சீதை தன் கணவன் அடையாளம் கண்டுகொள்ளத்தக்க வகையில் ஆங்காங்கே எறிந்துகொண்டு சென்ற அணிகலன்களைக் கண்ட செம்முகக் குரங்குகள்  அணியுமிடம்  தெரியாமல் அணிந்து அழகுபார்த்துக் கொண்டது போல் எனக்கு நகைப்பு விளைவிப்பதாக இருந்தது. –

கடுந் தெறல் இராமனுடன் புணர் சீதையை

வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை,

நிலம் சேர் மதர் அணி கண்ட குரங்கின்    20

செம் முகப் பெருங் கிளை இழைப் பொலிந்தாஅங்கு,

அறாஅ அரு நகை இனிது பெற்றிகுமே

இருங் கிளைத் தலைமை எய்தி,சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் பாடியதுபுறநானூறு 378

அகநானூற்றில் ராமயணம்

கொடுந் திமிற் பரதவர் வேட்டம் வாய்த்தென,

……………………………………

வென் வேற் கவுரியர் தொல் முது கோடி

முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன் துறை,

வெல்போர் இராமன் அரு மறைக்கு அவித்த     15

பல் வீழ் ஆலம் போல,

ஒலி அவிந்தன்றுஇவ் அழுங்கல் ஊரே..

மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார் பாடல்

காளிதாசன் மூன்று ரகுவம்ச சர்க்கங்களில் ராமாயணத்தை அற்புதமாகச் சுருக்கிக் கொடுத்துள்ளான் .12 ஆவது சர்க்கத்தில் வால் மீகியின் ஐந்து காண்டங்களின் சாரத்தை சுருக்கிக் கொடுக்கிறான்  .

To be continued…………………………………

Tag– பரசுராமன் , காளிதாசன் காவியங்களில், விஷ்ணு, அவதாரங்கள், Part 4

 காளிதாசன் காவியங்களில் விஷ்ணு! சொல்லினுள் வாய்மை நீ;அறத்தினுள் அன்பு நீ – 3(Post.14,826)

Written by London Swaminathan

Post No. 14,826

Date uploaded in London –  3 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

விஷ்ணு – பொருள் – எங்கும் நிறைந்தவன் 

மேக 15,59;

குமா.6-67; 7-44;

ரகு..13-5, 14-59.

கீழே பாடல்களின் பொருள் உள்ளன

***

இந்தப் பெயரை விண்ணந்தாயன் என்ற சங்கப்புலவர் பெயரில் காண்கிறோம்

விண்ணந்தாயன்= விஷ்ணு + தாசன்

ஆகாச என்பது தமிழில் ஆகாயம் என்று மாறுவது போல (ய=ச) தாசன் , தாயனானாக மாறுகிறது

சங்க காலத்திலியேயே லேடி  மஹாபாரதத்தைத் தமிழாக்கிய செய்தி பாரதம் பாடிய மாதேவனார் (மஹாதேவன்) என்ற புலவர் மூலம் கிடைக்கிறது

கண்ணன் என்பதும் , கன்னையா என்பதும் ஆழ்வார்  பாடல்கள், பாரதி பாடல்கள் மூலம் நாம் அறிந்ததே .

இந்த கண்ணன் பெயர் முது கண்ணன் , பாண்டரங் கண்ணன் தாயங்கண்ணன் (தாச +கண்ணா ) முதலிய பெயர்களில் வருகிறது ; தாமோதரனார், கேசவனார், வால்மீகி என்ற சங்கத் தமிழ் புலவர்களை நான் விளக்கத் தேவையே இல்லை.

***

ரகுவம்சம் 13-5 பாடலில் கடலுடன் விஷ்ணு ஒப்பிடப்பட்டதை முந்தைய கட்டுரையில் கண்டோம் . கடல் வண்ணன் என்றால் உடனே விஷ்ணு என்பது புரியக்கூடியதுதான் மாயோன் என்ற சொல்லால் தொல்காப்பியரும் சங்கப்புலவர்களும் இதைக் குறிப்பிடுகின்றனர்  ; கருப்பு, நீலம் ஆகிய இரண்டு நிறங்களையும் இந்துக்கள் ஒரே பொருளில் பயன்படுத்துவர் ; கண்ணன் நிறமும் விஷ்ணு நிறமும் கருப்பு என்பது கிருஷ்ணா= கருப்பன் என்ற பெயரிலேயே உள்ளது.

மண்ணுறு திருமணி புரையும் மேனி

விண்ணுயர் புள்கொடி விறல்வெய் யோனும்

—புறநானூறு -56

நீல்நிற உருவின், நேமியோனும், என்று  

இருபெருந் தெய்வமும் உடன் நின்றாஅங்கு,

—புறநானூறு -58

நீல நிற வண்ணன் (கலி .104-38),நெடியோன் (மது .வரி  763, பெரும் .வரி  402,  பதிற்றுப் -15-39,

தேயா விழுப்புகழ்த் தெய்வம்;–கலி .103-75

தொல் கதிர்த் திகிரியான்;–கலி .104-78; 105-72

ஆடுகொள் நேமியான்;

(சுதர்சன சக்கரத்தைக் கையில் ஏந்தியவன் -நேமி , திகிரி)

தெய்வ மால்;–கலி .103 to 108  (Mal= Black; Melanesian Islands in the Pacific Ocen meant Black People)

வெள்ளைக்காரக்  கொள்ளைக் காரர்கள், நாடு பிடிக்க உலகம் முழுதும் சென்றபோது கறுப்புத் தோல் உடையவர்களைக் கண்டவுடன் அந்த பசிபிக் மகா சமுத்திரத் தீவுகளுக்கு மேலனெசியா  என்று பெயர் சூட்டினார்கள்.

Maal = Mala= Mela

****

रत्नच्छाया-व्यतिकर इव प्रेक्ष्यमेतत् पुरस्ताद्

वल्मीकाग्रात् प्रभवति धनुःखण्डमाखण्डलस्य ।

येन श्यामं वपुरतितरां कान्तिमापत्स्यते ते

बर्हेणेव स्फुरितरुचिना गोपवेषस्य विष्णोः ॥ 15

Kalidasa wrote first Travelogue in the world.  He wrote the first Meteorological book showing the course of Southwest Monsoon, the most important weather factor in India.

மேகதூத காவியத்தில் உலகத்தின் முதல் பயண நூலைக் காளிதாசன் எழுதினான்; அது மட்டுமல்ல  உலகின் முதல் வானிலையியல்  நூலையும் எழுதி தென் மேற்குப்  பருவக்காற்றின் போக்கினை வர்ணிக்கிறான்.

15–ஆவது பாடலில் “ஏ மேகமே கிழக்கே பார்! மலை முகட்டினின்று இந்திர தனுஷ் என்னும் வான வில்லினைக் காண். ரத்தினங்கள் அத்தனையின் ஒளியையும் ஒருங்கே உமிழ்வதைப் பார்.  உன்னுடைய கரு நிற உடலின் மீது அது பிரகாசிப்பது விஷ்ணுவானவர் இடையன் கோலத்தில் வந்த (கிருஷ்ணனின்) வனின் மயில் பீலி மீது பிரகாசிப்பது போல இருக்கிறது” என்கிறான் காளிதாசன்

இந்தப்பாடலில் மேகமும் கருப்புவிஷ்ணுவும் கருப்பு; கிருஷ்னும் கருப்புவிஷ்ணுதான் கிருஷ்ணாவதார ம் எடுத்தான் அவன் தலையிலுள்ள மயில் பீலி, வானவில் பொழப்பு பிரகாசிக்கிறது என்ற எல்லா செய்திகளும் உள.

****

प्रालेयाद्रेरुपतटमतिक्रम्य तांस्तान् विशेषान्

हंसद्वारं भृगुपति-यशोवर्त्म यत् क्रौञ्चरन्ध्रम् ।

तेनोदीचीं दिशमनुसरेस्तिर्यगायाम-शोभी

श्यामः पादो बलि-नियमनाभ्युद्यतस्येव विष्णोः ॥ 59॥

பாடல் 59 -ல் மூன்று சுவையான செய்திகளைத் தெரிவிக்கிறான் .

முருகனுக்கு கிரவுஞ்ச்சபேதனார் என்ற பெயர் உண்டு இந்த கிரவுஞ்ச்ச இடைவெளி- இமயமலைக் கணவாய் –இன்றும் நிதி கணவாய் என்ற பெயரில் உள்ளது;; அதன் வழியாகத்தான் ரஷ்யாவிலிருந்து பறவைகள் தமிழ்நாட்டிலுள்ள வேடந்தாங்கல் வரை இன்றும் வந்து கொண்டிருக்கின்றன; அதைக் குறிப்பிட்ட பின்னர் பலியின் கர்வத்தை அடக்குவதற்கு ஓங்கி உலகளந்த உத்தமன் என்று வாமன- த்ரிவிக்ரமாவதாரத்தையும் குறிப்பிடுகிறான்

திருவள்ளுவரும் அடி அளந்தான் என்று குறளில் புகழ்கிறார் விஷ்ணுவை ; 1.ஆக பறவைகள் குடியேற்றம் என்ற ஆர்னிதாலஜி ORNITHOLOGY FACT விஷயம், 2.கிரவுஞ்சபேதம் என்னும் முருகன் விஷயம், 3. விஷ்ணுவின் வாமன அவதாரம் ஆகிய அத்தனையும் கொட்டிவிட்டான் .

பாடலின் பொருள் இதோ:–

ஏ  மேகமே,  இமயமலையின் சரிவிலுள்ள பல அற்புதங்களைப் பார்த்துக்கொண்டே போ ; குறுகிய கிரவுஞ்ச கணவாய் வழியாகச் செல்வாயாக! அதன் வழியாகத்தான் குள்ள வாத்துக்கள் வருகின்றன பிருகு வம்சத் தலைவனின் பெருமையைப் பாடும் இடம் அது . குறுக்கு நெடுக்காக விரிந்த அந்த மலைப்பகுதி விஷ்ணு தனது கருமை நிறப்பாதங்களால் மகாபலியை அடக்குவது போல இருக்கும்—59

Krauñca (क्रौञ्च)—Sanskrit word for a bird “crane”, “demoiselle crane” (Anthropoides virgo). This animal is from the group called Plava (‘those which float’ or ‘those move about in large flocks’). Plava itself is a sub-group of the group of animals known as Ānupa (those that frequent marshy places).

Krauñca [Kraunch] is the name of a mythical mountain said to be the grandson of Himālaya who was pierced by Kārtikeya and Paraśurāma.

முருகன் அல்லது பரசுராமன் பிளந்த மலை என்ற கதையும் உண்டு அதனால்தான் காளிதாசன் பிருகு தலைவன் என்று சொல்கிறான்.

கிரவுஞ்ச என்பது நாரை, குள்ள வாத்து வகைப் பறவைகள்.

****

திருமணிதிரைபாடு அவிந்த முந்நீர்,

வரு மழை இருஞ் சூல்-மூன்றும் புரையும் மா மெய்; பரிபாடல் 4-6/7

****

Five in One

கார், மலர்ப் பூவை, கடலை, இருள், மணி,

அவை ஐந்தும் உறழும் அணி கிளர் மேனியை;

பரிபாடல் 13-42/43

****

மலையொடு மார்பு அமைந்த செல்வன்; Chest as wide as mountain or as strong as hill- – கலி.108-55

மலைமகள் பார்வதியை பெண்கேட்க, சப்த ரிஷிகளும் ஆங்கிரஸ் தலைமையில் இமய மலையிடம்  போகிறார்கள் ; ஆங்கிரஸ்  சொல்கிறார் :

உன்னை விஷ்ணு என்று எல்லோரும் அழைப்பது பொருத்தமே ; அசையாமல் நீ இருக்கிறாய்! உன்னுடைய நடுப்பகுதியோ அசையும் அசையாப்பொருட்கள் அனைத்துக்கும் ஆதாரமாய் உள்ளது – குமார சம்பவம், 6-67

பர்வத ராஜ குமாரி= பார்வதி

****

காளிதாசன் மாபெரும் சிவ பக்தன் .ரகு வம்ச முதல் ஸ்லோகத்தில் இந்த ஜகத்துக்கு பார்வதி பரமேஸ்வரன் பெற்றோர்கள் என்கிறான் குமார சம்பவ 8-27 பாடலில் சிவ பெருமானை ஜகத் குரு என்கிறான்  . ஆயினும் அத்வைதத்தின் உச்சநிலையை அடைந்த அவனுக்கு மூவரும் ஒருவரே என்றும் தெரியும் ; இதோ குமார சம்பவப் பாடல் :

ஒரே கடவுள் மூன்றாகப்பிரிந்து அருள்புரிகிறார் ; அவர்களில் யார் பெரியவர் யார் சிறியவர் என்பது மாறி மாறி வரும்; சில நேரங்களில் சிவனைவிடப்பெரியவர் விஷ்ணு என்றும் , மேலும் சில இடங்களில் விஷ்ணு வை விடப்பெரியவர் சிவன் என்றும் அல்லது இவ்விருவரை விடப்பெரியவர் பிரம்மா என்றும் அழைக்கப்படுகிறார்கள்- 7-44

பரிபாடலில் விஷ்ணுவைப் புகழும் பாடல்களில் எல்லாம் அவனே என்ற கருத்து வருகிறது ; பகவத் கீதையில் விபூதி யோகத்த்தில் கிருஷ்ண எதில்  எதில் சிறந்ததோ, அது தனது உருவமே என்பது போன்றது இது;  காளிதாசன் அதைக் குமார சம்பவத்தில் ஒரே ஸ்லோகத்தில் சுருக்கமாகச் சொல்லவிட்டான் ; இதோ பரிபாடல்

பரிபாடல்-4

உலகு உயிர்களின் தோற்றமும், நிலைபேறும், ஒடுக்கமும்

நின் வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள;   25

நின் தண்மையும் சாயலும் திங்கள் உள;

நின் சுரத்தலும் வண்மையும் மாரி உள;

நின் புரத்தலும் நோன்மையும் ஞாலத்து உள;

நின் நாற்றமும் ஒண்மையும் பூவை உள;

நின் தோற்றமும் அகலமும் நீரின் உள;      30

நின் உருவமும் ஒலியும் ஆகாயத்து உள;

நின் வருதலும் ஒடுக்கமும் மருத்தின் உள;

அதனால், இவ்வும், உவ்வும், அவ்வும், பிறவும்,

ஏமம் ஆர்த்த நிற் பிரிந்து,

மேவல் சான்றன, எல்லாம்.   35

****

பகையும் நட்பும் இன்மை

கடு நவை அணங்கும் கடுப்பும், நல்கலும்,

கொடுமையும் செம்மையும், வெம்மையும் தண்மையும் 50

உள்வழி உடையை; இல்வழி இலையே;

போற்றார் உயிரினும், போற்றுநர் உயிரினும்,

மாற்று ஏமாற்றல் இலையே; ‘நினக்கு

மாற்றோரும் இலர்; கேளிரும் இலர்’ எனும்

வேற்றுமை இன்று, அது போற்றுநர்ப் பெறினே: 55

மனக்கோள் நினக்கு என வடிவு வேறு இலையே;

கோள் இருள் இருக்கை ஆய் மணி மேனி,

நக்கு அலர் துழாஅய் நாறு இணர்க் கண்ணியை;

பொன்னின் தோன்றிய புனை மறு மார்ப!

நின்னில் தோன்றிய நிரை இதழ்த் தாமரை     60

அன்ன நாட்டத்து அளப்பரியவை;

நின்னின் சிறந்த நின் தாள் இணையவை;

நின்னில் சிறந்த நிறை கடவுளவை;

அன்னோர் அல்லா வேறும் உள; அவை

நின் ஓர் அன்ஓர் அந்தணர் அருமறை.    65

பல்வேறு திருப்பெயர் கொண்ட ஒரு பொருள்

அழல் புரை குழை கொழு நிழல் தரும் பல சினை

ஆலமும், கடம்பும் நல் யாற்று நடுவும்,

கால் வழக்கு அறு நிலைக் குன்றமும், பிறவும்,

அவ்வவை மேவிய வேறு வேறு பெயரோய்!

எவ் வயினோயும் நீயே; நின் ஆர்வலர்    70

தொழுத கை அமைதியின் அமர்ந்தோயும் நீயே;

அவரவர் ஏவலாளனும் நீயே;

அவரவர் செய்பொருட்கு அரணமும் நீயே. 73

****

பரிபாடல் 3-48/58

வனப்பும் வலியும்

நினக்கு-விரிந்து அகன்ற கேள்வி அனைத்தினும்,

வலியினும், மனத்தினும், உணர்வினும், எல்லாம்-

வனப்பு வரம்பு அறியா மரபினோயே!     50

அணி நிழல் வயங்கு ஒளி, ஈர்-எண் தீம் கதிர்,

பிறை வளர், நிறை மதி உண்டி,

அணி மணிப் பைம் பூண், அமரர்க்கு முதல்வன் நீ;

திணி நிலம் கடந்தக்கால், திரிந்து அயர்ந்து, அகன்று ஓடி,

நின் அஞ்சிக் கடற் பாய்ந்த பிணி நெகிழ்பு அவிழ் தண் தார் 55

அன்னவர் பட, அல்லா அவுணர்க்கும் முதல்வன் நீ;

அதனால், ‘பகைவர் இவர்; இவர் நட்டோர்’ என்னும்

வகையும் உண்டோ, நின் மரபு அறிவோர்க்கே?

Xxxx

எங்குமாய் எல்லாமாய் நிறைந்த பெருமை

பரிபாடல் 13-14/25

சுவைமை, இசைமை, தோற்றம், நாற்றம், ஊறு,

அவையும் நீயே, அடு போர் அண்ணால்!  15

அவைஅவை கொள்ளும் கருவியும் நீயே;

முந்து யாம் கூறிய ஐந்தனுள்ளும்,

ஒன்றனில் போற்றிய விசும்பும் நீயே;

இரண்டின் உணரும் வளியும் நீயே;

மூன்றின் உணரும் தீயும் நீயே;             20

நான்கின் உணரும் நீரும் நீயே;

அதனால், நின் மருங்கின்று–மூ-ஏழ் உலகமும்,

மூலமும், அறனும், முதன்மையின் இகந்த

காலமும், விசும்பும், காற்றொடு கனலும்  25

****

பரிபாடல் 2-52/60

திருமால் திருமேனியின் ஒளி முதலிய சிறப்புக்கள்

பொன் ஏர்பு அவிர் அழல் நுடக்கு அதன் நிறனே.

நின்னது திகழ் ஒளி சிறப்பு இருள் திருமணி;

கண்ணே, புகழ்சால் தாமரை அலர் இணைப் பிணையல்;

வாய்மை, வயங்கிய வைகல்; சிறந்த

நோன்மை நாடின், இரு நிலம்; யாவர்க்கும், 55

சாயல் நினது, வான் நிறை-என்னும்

நா வல் அந்தணர் அரு மறைப் பொருளே:

அவ்வும் பிறவும் ஒத்தனை; உவ்வும்

எவ் வயினோயும் நீயே.

உருவமும், உணவும், வெளிப்பாடும்

செவ்வாய் உவணத்து உயர் கொடியோயே!

Xxx

பரிபாடல் 3-4/11

தீ வளி விசும்பு நிலன் நீர் ஐந்தும்,

ஞாயிறும்திங்களும்அறனும்ஐவரும்,         5

திதியின் சிறாரும்விதியின் மக்களும்,

மாசு இல் எண்மரும்பதினொரு கபிலரும்,

தா மா இருவரும்தருமனும்மடங்கலும்,

மூ-ஏழ் உலகமும்உலகினுள் மன்பதும்,

மாயோய்! நின்வயின் பரந்தவை உரைத்தேம்   10

மாயா வாய்மொழி உரைதர வலந்து:

****

பரிபாடல் 3-61-70

ஓ!’ எனக் கிளக்கும் கால முதல்வனை;

ஏஎ இன கிளத்தலின் இனைமை நற்கு அறிந்தனம்;

சாம வேதம் கூறுதலின் தெளிந்த பொருள்

தீயினுள் தெறல் நீபூவினுள் நாற்றம் நீ;

கல்லினுள் மணியும் நீசொல்லினுள் வாய்மை நீ;

அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ;         65

வேதத்து மறை நீபூதத்து முதலும் நீ;

வெஞ் சுடர் ஒளியும் நீதிங்களுள் அளியும் நீ;

அனைத்தும் நீஅனைத்தின் உட்பொருளும் நீஆதலின்,

உறையும் உறைவதும் இலையே; உண்மையும்

மறவியில் சிறப்பின் மாயமார் அனையை;               70

****

பரிபாடல் 3-73-76

பறவாப் பூவைப் பூவினோயே!

அருள் குடையாக, அறம் கோலாக,

இரு நிழல் படாமை மூ-ஏழ் உலகமும்

*****

TO BE CONTINUED…………………………….

TAGS- காளிதாசன் , காவியங்கள் , விஷ்ணு , மால் , திருமால், மாயோன் 

, சங்க இலக்கியம் , ஒப்பீடு , பகுதி 3

தலை கீழாகத் தொங்கிய முனிவர்கள்! காளிதாசன் தரும் அற்புதத் தகவல் (Post No.14,810)

Research Article Written by London Swaminathan

Post No. 14,810

Date uploaded in London –  29 July 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ரிஷி முனிவர்கள் எப்படியெல்லாம் தவம் செய்தனர்? காளிதாசன் தரும் அற்புதத் தகவல்

காளிதாசன் எழுதிய ஏழு நூல்களில் உள்ள அதிசய விஷயங்களைத் தொடர்ந்து காண்போம் .

காளிதாசன் பாடிய ரிஷிகள் :

வால்மீகி , வசிஷ்டர், கண்வர், அகஸ்தியர் , சாதகர்ணி, சரபங்க , சுதீக்ஷ்ணர், மரீசி .

ரகுவம்சம் எட்டாவது சர்க்கத்தில் அஜன் என்ற மன்னனின் தந்தை ரகு எப்படி இருந்தார் என்று காளிதாசன் வருணிக்கிறார் . அவன் மோட்சத்தை அடைவதற்காக  அறிவுபெற்ற யோகிகளுடன் சேர்ந்தான் . ஐம்புலன்களை அடக்கினான் ; ஞானத் தீயினால் பிறப்புக்குக் காரணமான வினைகளை அழித்தான்

இதைப்  படிக்கும் போது மாணிக்கவாசகரின் சிவபுராணப் பாடலில் வரும் மாயப்பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி என்பதும் திருமூலரின் முன்னை வினையை களையும் பாடல்களும் நினைவுக்கு வரும்

கடவுள் அருளால் முன்னை வினையின் முடிச்சை அவிழ்க்கலாம்-

தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்

முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்கள்

பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்கள்

சென்னியில் வைத்த சிவன் அருளாலன்றே

— திருமந்திரத்தில் திருமூலர்

***

स किलाश्रममन्त्यमाश्रितो निवसन्नावसथे पुराद्बहिः|

समुपास्यत पुत्रभोग्यया स्नुषयेवाविकृतेन्द्रियः श्रिया॥ ८-१४

sa kilāśramamantyamāśrito nivasannāvasathe purādbahiḥ|

samupāsyata putrabhogyayā snuṣayevāvikṛtendriyaḥ śriyā || 8-14

மன்னன் ரகு சன்யாசம் ஏற்ற பின்னர்,  நகருக்கு வெளியே வசித்தான்; நாட்டு விஷயங்களை காதில் போட்டுக்கொள்ளவில்லை. கானகத்திலுள்ள பழங்களையும் பூக்களையும் தண்ணீரையும் சேகரிப்பதில் பொழுதைச் செலவிட்டான் . ராஜ்யம் முன்னர் மனைவியின் ஸ்தானத்தில் இருந்தது இப்பொழுது நாட்டுப்பெண் ஸ்தானத்தை அடைந்துவிட்டது .

காளிதாசனின் அருமையான உவமைகளில் இது ஒன்று.  முன்னர் தான் அனுபவித்த நாட்டினை இப்பொழுது மருமகள் மாதிரி நினைத்து அவன் ஒதுங்கிவிட்டான் .

முனிவர்களின் வேலைகளில் ஒன்று, காய் கனிகளைத் திரட்டுவது, யாகத்துக்கான அரசமர, பலாச மரக்குச்சிகளைச் சேகரிப்பது, இங்குடி எண்ணெய் எடுப்பது ஆகியன ஆகும்.. மீதி நேரம் எல்லாம் தவத்தில் ஈடுபட்டனர்.

சாகுந்தல நாடகத்தில் மரீசி முனிவரின் தவத்தை வருணிக்கிறார் ;தனது உடலுக்கு என்ன நேர்ந்தது என்பதே அவருக்குத் தெரியாது; ஆழ்ந்த தவத்தில் இறங்கிய அவருடைய உடல் மரக்கட்டை போல இருந்தது. அவர் உடல் அசையாமல் இருந்ததால் அவரைச் சுற்றி எறும்புகள் புற்று எழுப்பி பாதி உடலை மறைத்தன. புற்றிலுள்ள பாம்புகள் அவர் மார்பில் பாம்புத் தோலை விட்டிருந்தன; தலையில் இருந்த ஜடாமு டியில் பறவைகள் கூடு கட்டின -சாகு.7-11

Matali. (Pointing by the hand) Where the sage unshaken like a post remains facing the Sun’s disc, with his body half buried in an ant-hill, with his chest having a snake’s slough stuck up, pressed very hard at the neck by the circular twine of dried creepers and bearing a load of matted hair hanging down to his shoulders and abounding in the nests of birds.

ரிஷி முனிவர்கள் செய்யும் தவங்களில் ஒன்று பஞ்சாக்னி எனும் ‘ஐந்து தீ தவம் ஆகும்; தன்னைச் சுற்றி நான்கு புறங்களிலும் தீயை மூட்டிவிட்டு சூரியனின் ஒளியை ஐந்தாவது தீயாகப் பாவித்து கடும் வெப்பத்தில் தவம் செய்வது பஞ்சாக்னி தவம் ஆகும். சிவ பெருமானை அடைவதற்காக உமாதேவி இந்த தவத்தைச் செய்தது குமார சம்பவ காவியத்தில் வருகிறது .

****

தலைகீழாகத் தொங்கிக்கொண்டு தவம் செய்யும் முனிவரின் வருணனை  ரகுவம்ச 15-49 பாடலில் உள்ளது.

अथ धूमाभिताम्राक्षम् वृक्षशाखावलम्बिनम्।

ददर्श कंचिदैक्ष्वाकस्तपस्यन्तमधोमुखम्॥ १५-४९

atha dhūmābhitāmrākṣam vṛkṣaśākhāvalambinam |

dadarśa kaṁcidaikṣvākastapasyantamadhomukham|| 15-49

****

மேலும் பல முனிவர்களின் வருணனை ரகுவம்சத்திலுள்ளது;

13–ஆவது சர்க்கத்தில் வரிசையாக வருகிறது.

पुरा स दर्भाङ्कुरमात्रवृत्तिः

चरन्मृगैः सार्धमृषिर्मघोना।

समाधिभीतेन किलोपनीतः

पञ्चाप्सरोयौवनकूटबन्धम्॥ १३-39

purā sa darbhāṅkuramātravṛttiḥ

caranmṛgaiḥ sārdhamṛṣirmaghonā |

samādhibhītena kilopanītaḥ

pañcāpsaroyauvanakūṭabandham || 13-39

தர்ப்பைப்புல் செடியின் குருத்துக்களை மட்டுமே உணவாகக் கொண்டார் சாதகர்ணி ; அவருடைய தவத்தைக் கலைக்க ஐந்து அப்சரஸ் அழகிகளை இந்திரன் அனுப்பினான்.

****

हविर्भुजामेधवताम्चतुर्णाम्

मध्ये ललाटंतपसप्तसप्तिः।

असौ तपस्यत्यपरस्तपस्वी

नाम्ना सुतीक्ष्णश्चरितेन दान्तः॥ १३-४१

havirbhujāmedhavatāmcaturṇām

madhye lalāṭaṁtapasaptasaptiḥ |

asau tapasyatyaparastapasvī

nāmnā sutīkṣṇaścaritena dāntaḥ || 13-41

இது சுதீக்ஷ்ண முனிவரின் ஆஸ்ரமம்; அவர் பஞ்சாக்கினி தவம் செயற்வதைப்பார் (விமானத்தில் இருந்தவாறே ராமபிரான், சீதைக்கு ஒவ்வொரு முனிவர் பற்றியும் சொல்லும் சர்கம் இது)

***

एषोऽक्षमालावलयम्मृगाणाम्

कण्डूयितारम्कुशसूचिलावम्।

सभाजने मे भुजमूर्ध्वबाहुः

सव्येतरम्प्राध्वमितः प्रयुङ्क्ते॥ १३-४३

eṣo’kṣamālāvalayammṛgāṇām

kaṇḍūyitāramkuśasūcilāvam |

sabhājane me bhujamūrdhvabāhuḥ

savyetaramprādhvamitaḥ prayuṅkte || 13-43

இதோ சுதீக்ஷ்ணர் எனக்கு மரியாதை தெரிவிக்க கையை உயரே தூக்குகிறார். அவர் கைகளில் ருத்ராக்ஷ வளையல் அணிந்துள்ளார் மான்களை சொரிந்து கொடுப்பதும் தர்ப்பபைப் புல் சேகரிப்பதும் அவர் செய்யும் பணி. 

****

அவர் மவுனத்தைக் கடைப்பிடிப்பதால் தலையை அசைத்து எனது வருகையைப் பார்த்தபின்னர் மீண்டும் சூரியனைப்பார்த்து தவம் செய்யத் துவங்கிவிட்டார்.

वाचंयमत्वात्प्रणतिम्ममैष

कम्पेन किञ्चित्प्रतिगृह्य मूर्ध्नः।

दृष्टिम्विमानव्यवधानमुक्ताम्

पुनः सहस्रार्चिषि संनिधत्ते॥ १३-४४

vācaṁyamatvātpraṇatimmamaiṣa

kampena kiñcitpratigṛhya mūrdhnaḥ |

dṛṣṭimvimānavyavadhānamuktām

punaḥ sahasrārciṣi saṁnidhatte || 13-44

***

சரபங்கர் தபோவனம்

अदः शरण्यम्शरभङ्गनाम्नः

तपोवनम्पावनमाहिताग्नेः।

चिराय संतर्प्य समिद्भिरग्निम्

यो मन्त्रपूताम्तनुमप्यहौषीत्॥ १३-४५

adaḥ śaraṇyamśarabhaṅganāmnaḥ

tapovanampāvanamāhitāgneḥ |

cirāya saṁtarpya samidbhiragnim

yo mantrapūtāmtanumapyahauṣīt || 13-45

छायाविनीताध्वपरिश्रमेषु

भूयिष्ठसंभाव्यफलेष्वमीषु।

तस्यातिथीनामधुनासपर्या

स्थिता सुपुत्रेष्विव पादपेषु॥ १३-४६

ChAyAvinItAdhvaparishrameShu

bhUyiShThasa.nbhAvyaphaleShvamIShu |

tasyAtithInAmadhunAsaparyA

sthitA suputreShviva pAdapeShu || 13-46

அடுத்த இரண்டு ஸ்லோகங்களில் சரபங்க முனிவரின் பெருமையை சீதைக்கு ராமன் சொல்வதாக காளிதாசன் பாடியுள்ளார் – அதோ பரிசுத்தமான சர்ப்பங்க முனிவரின் தபோவனம்! அவர் நீண்ட காலத்துக்கு அக்கினியில் சமித்துக் குச்சிகளைப்   போட்டு யாகம் செய்த பின்னர் தனது உடலையே அக்கினியில் ஆகுதி கொடுத்தார்;  அவர் எப்படி விருந்தாளிகளைக் கவனித்து உபசரித்தாரோ அதை அப்படியே அவரது  புதல்வர்கள் செய்கின்றனர்

****

ரகு சன்யாசியாகவே இறந்தான்

ரகு சந்நியாசி போல வாழ்ந்ததால் அவன் உடலை எரிக்காமல் அஜன் புதைத்தான் . அக்கினி சம்பந்தமில்லாத உத்தரக்கிரியைகளைச் செய்தான் சந்யாசிகள் இறந்தால் அவர்களுக்குப் பிண்டக்கிரியைகள் தேவை இல்லை என்றும் அவர்கள் இறந்தால் துக்கப்படக்கூடாதென்றும் சாஸ்த்ர விதிகளைக் காட்டி, இந்த ஸ்லோகங்களை உரை எழுதியோர் விளக்கி இருக்கிறார்கள் ஏனெனில் அவர்கள் மோட்சத்தை அடைந்துவிடுகிறார்கள். ஸ்லோகம் 18 முதல் 26 வரை இவை உள்ளது.

சந்யாசிகள் தரித்த உடைகளையும் காளிதாசன் விளக்குகிறான் .

வற்கலை என்னும் மரவுரியை அணிந்தார்கள் குமார சம்பவத்தில் உமாவும் இப்படி உடைகளை அணிந்து தவம் செய்ததைக் குறிப்பிட்டுள்ளான் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் பெண்களும் தவம் செய்தனர் அவர்களும் ஏனைய சன்யாசிகளைப் போலவே விரதங்களை அனுஷ்டித்தனர் என்பதும் தெளிவாகத் தெரிகிறது

மரவுரி பற்றி அவன் எழுதிய ஐந்து நூல்களில் குறைந்தது பத்து முறையாவது பாடுகிறான்:

ரகு12-8, 14-82. குமார. 5-8-30, 44 சாகு.1-17, 2-12 முதலியன.

ராமனைக்காட்டில் தரிசிக்க வந்த பரதனும் இப்படி வந்ததைக் கம்பன் பாடியிருக்கிறான்

                வற்கலையின் உடையானை,

     மாசு அடைந்த மெய்யானை,

நற் கலை இல் மதி என்ன

     நகை இழந்த முகத்தானை,

கல் கனியக் கனிகின்ற துயரானைக்

     கண்ணுற்றான்;

வில் கையினின்று இடை வீழ,

     விம்முற்று, நின்று ஒழிந்தான்.

****

சிவனுடைய பெயர்களில் ஒன்று கிருத்திவாஸஅதாவது யானைத்தோலை அணிந்தவன் . குமாரசம்பவத்தில் இந்த சொல் வருகிறது

சிவன் யானைத்தோல் அணிந்தவன் என்பதை சம்பந்தரின் தேவாரப்பாடலிலும் படிக்கிறோம்

போர்த்ததுவும் கரியின் உரி புலித்தோலுடை

கூர்த்ததோர் வெண்மழு ஏந்தி கோளரவம் அரைக்கு

ஆர்த்ததுவும் பொழில் சூழ் அகத்தியான் பள்ளியான்

பார்த்ததுவும் அரணம் படரெரி மூழ்கவே.

பாடல் விளக்கம்:

போர்த்துள்ளது யானைத்தோல், உடுத்துள்ளது புலித்தோல், ஏந்தியுள்ளது கூரிய வெண்மழு, அரையில் கட்டியுள்ளது பாம்பு, பரந்த எரியுள் மூழ்குமாறு பார்த்தது முப்புரம், அத்தகையோன் அகத்தியான்பள்ளி இறைவன் ஆவான்.

***

துணியால் நெய்யப்பட்ட ஆடைகளை அணிந்த சந்யாசிகள் அவைகளைக் காவியில் நனைத்து காஷாய உடைகளை அணிந்தனர் ; இதை மாளவிகாக்நிமித்திரம் நாடகத்தில் காண்கிறோம் .

குச அல்லது முஞ்ஜ புற்களால் ஆன மெளஞ்சி என்பதைக் கச்சையாக ஒட்டியானமாக அணிந்தனர்  ; இதை குமா. 5-10; ரகு 9-21 நூல்களில் சொல்கிறான்.

ருத்ராக்ஷத்தைக் கையிலும் காதிலும் கழுத்திலும் மாலையாக அணிந்ததையும் கூறுகிறான்- குமா.3-46;, 5-11, 63 ரகு. 13-43 

பட்டினப்பாலை ,பெரும்பாணாற்றுப்படை நூல்களை எழுதிய சங்க புலவரின் பெயர் ருத்ராக்ஷ என்பதை முன்னரே கண்டோம்.

முனிவர்கள் கட்டாந்தரையிலோ,  குச புல்லால் ஆன பாயிலோ படுத்தார்கள் ரகு8-18, 1-95

கைகளில் தண்டத்தை ஏந்திச் சென்றனர் -குமா 5-12.

முக்கோல் அந்தணர் என்று தொல்காப்பியரும் இதைக் குறிப்பிட்டுள்ளார் .

இங்குடி என்னும் மரத்திலிருந்து எண்ணெய் எடுத்து தலைக்குத் தடவவும் விளக்கு எரிக்கவும் பயன்படுத்தினார்கள் -ரகு13-41, 43

இவ்வாறு ஒவ்வொரு ஸ்லோகத்திலும் நமக்குப் புதிய முனிவர்களை அறிமுகப்படுத்தி , புதிய விஷயங்களையும் காளிதாசன் சொன்னார்.

Hindu Sages and Hermitages in Kalidasa’s Works (Post …

Tamil and Vedas

https://tamilandvedas.com › 2017/04/01 › hindu-sages-…

1 Apr 2017 — Sakuntalam Act I. King:“Suta, urge the horses on and let us purify … [13-41]. Here that sage sutIkShna lifting up his right arm aloft 

–subham—

Tags—ரிஷி, முனிவர்கள், தவம் செய்தனர்,  காளிதாசன், அற்புதத் தகவல்