
Compiled by London swaminathan
Date: 7 December 2015
Post No. 2369
Time uploaded in London :– 16-36
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
I have already posted it in English
ஒரு மாதா கோவிலில் கிறிஸ்த பாதிரியார் பிரசங்கம் செய்து கொண்டிருந்தார். அந்த பிராத்தனைக் கூட்டத்துக்கு பலவகைப்பட்ட மக்கள் வந்திருந்தனர். அவர்களில் சிலர் ஏழைகள், சிலர் பணக்காரர். சிலர் உடலூனமுற்றோர், மற்றும் சிலர் நல்ல பலசாலிகள். சிலர் ஆரோக்கியசாலிகள், மற்றும் சிலர் நோயாளிகள்.
அவர் சொன்னார்: கடவுள், எல்லோர் மீதும் ஒரே அளவில் கருணையைப் பொழிகிறார்.
இவ்வாறு உரையாற்றிக் கொண்டிருக்கையில் அவருடைய கண்கள் திடீரெனப் பளிச்சிட்டன. அவர் எதையோ கண்டுவிட்டார். மெதுவாகப் பேசிக்கொண்டே அதை நோக்கி நடந்தார். அவர் கண்டது, கீழே தரையில் கிடந்த ஒரு மெழுகு வர்த்தி ஆகும். அது உடைந்து கிடந்தது.
எல்லோர் முன்னாலும் அதைக் காட்டினார். எல்லோரும் எதற்காக என்று சிந்தித்துக் கொண்டிருந்த தருணத்தில் ஒரு தீப்பெட்டியை எடுத்து அந்த மெழுகுவர்த்தியை ஏற்றினார். உடைந்த மெழுகுவர்த்தி, மற்ற எல்லா வத்திகளைப் போலவே பிரகாசமாக எரிந்தது. அது உடைந்தது என்பதற்காக இறைவன் அதற்குப் பிரகாசத்தை மறுக்கவில்லை.

கடவுளின் கருணையும் இதே போன்றதே. சூரியனின், சந்திரனின் ஒளி எப்படி வேறுபாடின்றிப் பாய்கிறதோ அப்படியே இறையருளும் அனைவர் மீதும் பொழிந்து கொண்டிருக்கிறது.
சுவாமி ராமதாஸ் சொன்ன கதை; தமிழ் மொழிபெயர்ப்பு—லண்டன் சுவாமிநாதன்
–Subham–
You must be logged in to post a comment.