ஆரோக்கியம் தொடர்பான 31 நல்ல பழமொழிகள்!

ஆல்

ஆல மரம்

சுவாமியின் பொன்மொழி காலண்டர் – மார்ச் 2015

ஆரோக்கியம் தொடர்பான 31 நல்ல பழமொழிகள்

Compiled by London Swaminathan

Post No.1675; Dated 25 February 2015.

Important Days: Festivals: மாசி மகம்- மார்ச் 4, ஹோலி- 5, சர்வதேச மகளிர் தினம்- 8, யுகாதி- 21, ஸ்ரீராம நவமி- 28.

முகூர்த்த தினங்கள்: மார்ச் 2, 4, 8, 9, 12, 22, 25, 30.

 

 ஏகாதசி:– மார்ச் 1, 16 31; அமாவாசை- மார்ச் 20;  பௌர்ணமி – மார்ச் 5

 

 mango-tree-with-fruits

மா மரம்

மார்ச் 1 ஞாயிற்றுக் கிழமை

மருந்தேயாயினும் விருந்தோடு உண்

 

2 திங்கட் கிழமை

சுட்ட எண்ணையைத் தொடாதே, வறுத்த பருப்பை விடாதே!

 

3 செவ்வாய்க் கிழமை

வெட்டிவேரில் விசிறியும் விலாமிச்சை வேரில் தட்டியும் பண்ணு.

 Fragrant_root_vetti-ver

4 புதன் கிழமை

வெந்தயம் போடாத கறியும் கறியல்ல; சந்தையில்லாத ஊரும் ஊரல்ல.

5 வியாழக் கிழமை

வில்வப் பழம் திண்பார் பித்தம் போக; பனம் பழம் திண்பார் பசி போக.

 

6 வெள்ளிக் கிழமை

ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி.

7 சனிக் கிழமை

பலா உத்தமம், மா மத்திமம், பாதிரி அதமம்

பலாச்சுளை 

8 ஞாயிற்றுக் கிழமை

உடம்பைக் கடம்பாலே அடி

 

9 திங்கட் கிழமை

கத்தரிக்காய்க்கு காம்பு ருசி; வெள்ளரிக்காய்க்கு விதை ருசி.

10 செவ்வாய்க் கிழமை

சுக்குக்கு மிஞ்சின மருந்தும் இல்லை; சுப்பிரமணியனுக்கு மிஞ்சின தெய்வமும் இல்லை.

sukku

 

மார்ச் 11 புதன் கிழமை

உப்பில்லாப் பண்டம் குப்பையிலே

 

12 வியாழக் கிழமை

கந்தையானாலும் கசக்கிக் கட்டு; கூழானாலும் குளித்துக் குடி.

13 வெள்ளிக் கிழமை

சுத்தம் சோறு போடும்.

14 சனிக் கிழமை

லங்கணம் பரம ஔஷதம் (பட்டினி கிடப்பது மகத்தான மருந்து)

15 ஞாயிற்றுக் கிழமை

ஒருவேளை உண்பான் யோகி; இருவேளை உண்பான் போகி; மூவேளை உண்பான் ரோகி; நாலுவேளை உண்பான் போகியே போகி!

 

16 திங்கட் கிழமை

பாலுக்கு மிஞ்சின சுவையுமில்லை; பல்லக்குக்கு மிஞ்சின சொகுசுமில்லை.

17 செவ்வாய்க் கிழமை

நாழி அரிசி சோறு உண்டான், எமனுக்கு உயிர் கொடான்

 பொன்னான்

பொன்னாகும் காண் மேனி= பொன்னாங்காணிக் கீரை

மார்ச் 18 புதன் கிழமை

பொன்னாங் கண்ணிக்கு புளியிட்டு ஆக்கினால் உண்ணாப் பெண்ணும் ஒரு உழக்கு உண்ணும்.

19 வியாழக் கிழமை

சுக்கு அறியாத கஷாயம் உண்டா?

20 வெள்ளிக் கிழமை

வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணியனுக்குக் கொடு.

 

 பருப்பு

21 சனிக் கிழமை

பருப்பில்லாத கல்யாணம் உண்டா?

22 ஞாயிற்றுக் கிழமை

மங்கும் காலம் மாங்காய், பொங்கும் காலம் புளியங்காய்

 

23 திங்கட் கிழமை

அரச மரத்தைச் சுற்றியதும் அடிவயிற்றைத் தொட்டுப்பார்த்தது போல!

 அரசமரம்

24 செவ்வாய்க் கிழமை

ஐப்பசி மருதாணி அரக்காய்ப் பற்றும்

 

மார்ச் 25 புதன் கிழமை

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது!

 

26 வியாழக் கிழமை

விருந்தும் மருந்தும் மூன்றே நாள்

 

27 வெள்ளிக் கிழமை

மக்களைக் காக்கும் மணத்தக்காளி

 

28 சனிக் கிழமை

தேனும் தினை மாவும் தேவர்க்கு அமிர்தம்

29 ஞாயிற்றுக் கிழமை

வேலம் பட்டை மேகத்தை நீக்கும்; ஆலம் பட்டை பித்தத்தை அடிக்கும்

 katharikkaai

கத்தரிக்காய்

30 திங்கட் கிழமை

அன்னம் அடங்கினால் ஐந்தும் ஒடுங்கும்

 

மார்ச் 31 செவ்வாய்க் கிழமை

சுவாமி இல்லை என்றால் சாணியைப் பார்; மருந்தில்லை என்றால் பாணத்தைப் பார்; பேதி இல்லை என்றால் நேர்வாளத்தைப் பார்.