சூர் அறுத்தவனும் ஊர் அறுத்தவனும்! ராமாயண இன்பம் (Post No.3026)

350px-Shiva_Tripurantaka

Written by london swaminathan

Date: 1st August 2016

Post No. 3026

Time uploaded in London :–  11-45 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

கம்ப ராமாயணம் படிக்கப்படிக்கத் தெவிட்டாதது. இதை பல்வேறு கோணங்களில் படிக்கவேண்டும். ஒவ்வொரு கடவுளுக்கும் கதா பாத்திரத்துக்கும் கம்பன் கொடுத்த அடைமொழிகளை மட்டும் தனியாக படித்து ரசிக்கலாம்.

 

ஆரணிய காண்டத்தில் அகத்தியப் படலத்தில் வரும் ஒரு பாடலைக் காண்போம்:

 

சூர் அறுத்தவனும் சுடர் நேமியும்

ஊர்  அறுத்த ஒருவனும் ஓம்பினும்

ஆர் அறத்தினொடு அன்றி நின்றார் அவர்

வேர் அறுப்பென் வெருவன்மின் நீர் என்றான்

 

பொருள்:-

சூர் அறுத்தவன் – முருகன்

சுடர் நேமி – திருமால்

ஊர் அறுத்தவன் – சிவன்

சூரபதுமனைக் கொன்ற முருகனும், காலநேமியைக் கொன்ற ஒளிமிகுந்த சக்ராயுதம் ஏந்திய திருமாலும், திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளான ருத்திரனும், அவ்வரக்கருக்குத் துணையாக வந்து காத்தாலும், எந்த அரக்கர் பாவம் செய்தவர்களோ, அவர்களை அடியோடு அழிப்பேன்; எனவே நீங்கள் அஞ்ச வேண்டாம் என்றான் ராமன்.

surasamharan

தாரகன் என்ற அரக்கனுக்கு மூன்று பிள்ளைகள்: தாரகாக்க்ஷன், கமலாக்ஷன், வித்யுன்மாலி. மூவரும் பிரம்மாவிடம் வரம் பெற்று மூன்று பறக்கும் கோட்டைகளைப் பெற்றனர். அவர்கள், நல்லோருக்குத் தொல்லை கொடுக்கவே சிவன் அந்த மூன்று கோட்டைகளையும் அழித்தார். அதனால் அவருக்கு திரிபுராந்தகன் என்று பெயர்.

 

இக்கதை 2000 ஆண்டுப் பழமையான சங்க இலக்கியத்திலும் இருக்கிறது:-

 

ஓங்கு மலைப் பெருவில் பாம்பு ஞாண் கொளீஇ,

ஒரு கணை கொண்டு மூ எயில் உடற்றி,

பெருவிறல் அமரர்க்கு வென்றிதந்த

கறைமிடற்று அண்ணல் காமர் சென்னி

—– மதுரை இளநாகன், புறம்.55

 

முக்கண்ணன் (சிவன்) பூமியாகிய தேரில் சென்றான்; வேதங்களே குதிரையாக வந்தன. ஆதி அந்தணனாகிய பிரமன் தேர்செலுத்திச் செல்கிறான்; இமயமலையை வில்லாகவும், ஆதிசேடன் என்னும் பாம்பை நாணாகவும் கொண்டு வளைத்து தீ என்னும் அம்பால் மூன்று கோட்டைகளை எரித்தான். சங்க இலக்கியத்தின் நூல்களில் பல இடங்களில் சிவனின் திருவிளையாடல் இடம்பெறுகிறது.

 

இந்த த்ரிபுரம் எரித்த வரலாறு நமக்குப் பல உண்மைக  யும் உணர்த்தும்:–

 

அசுரர்களும் தவம் செய்தனர்; வரம் பெற்றனர்; அவர்களுக்கும் பிரம்மா, விஷ்ணு, சிவந்தான் கடவுள். ஆகவே தேவர்கள் ஆரியர் என்றும், அசுரர்கள் திராவிடர் என்றும் வெளிநாட்டினர் சொன்ன கதைகள் யாவும் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போயின.

tripura

அசுரர்களின் பெயர்கள் எல்லாம் சம்ஸ்கிருதத்தில் இருப்பதையும் கவனிக்க வேண்டும். தமிழில் இல்லை.

மேலும் சங்க இலக்கிய காலத்திலேயே தமிழ் இந்துக்களுக்கு ராமாயண, இதிஹாச புராணங்கள் நன்கு தெரிந்திருந்தன.

 

மேலும் ரஷியாவும் அமெரிக்காவும் SPACE SHUTTLE ஸ்பேஸ் ஷட்டில் கட்டுவதற்குமுன் நாம் ‘ஸ்பேஸ் ஷட்டில்’ வைத்திருந்தோம். திரிபுரம் என்ற மூன்று கோட்டைகளும் வானில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தன.

 

–Subham–