


Post No. 10,089
Date uploaded in London – 13 September 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இப்போது ஏராளமான சித்திரப் படைக்கதைகளும் அதில் வரும் கற்பனைக் கதாபாத்திரங்களும் சிறுவர் மற்றும் இளைஞர்களிடையே பிரபலமாகிவிட்டது. SPIDER MAN /ஸ்பைடர் மென், SUPER MAN /சூப்பர்மேன், PHANTOM/ பேண்ட்டம் முதலிய கற்பனை உருவங்களை அறியாதோர் எவருமிலர். அந்த கதாபாத்திரங்களை வைத்து உருவாக்கும் பொம்மைகளும் கோடிக்கணக்கில் விற்பனையாகின்றன. அவற்றைப் பொறித்த ஆடைகளை அணிந்து கொண்டு தங்கள் குழந்தைகள் செய்யும் சாகஸங்களைக் கண்டு, மகிழ்ந்து, பெற்றோர்கள் அவர்களைப் புகைப்படம் எடுக்கின்றனர். ஆனால் 100 ஆண்டுகளுக்கு முன்னர் எல்லோரும் அறிந்த கார்ட்டூன் கதாபாத்திரம் TARZAN டார்ஜான் ஒருவன்தான்.
இந்த டார்ஜான் என்னும் கார்ட்டூன் ஆளை உருவாக்கிய அமெரிக்க விசித்திரக் கதை எழுத்தாளர் EDGAR RICE BURROUGHS எட்கர் ரைஸ் பர்ரோஸ் ஆவார். அவருடைய கதையே சுவையான கதை.
பர்ரோஸ் , அமெரிக்காவில் சிகாகோ நகரில் பிறந்தார். அவருடைய தந்தை ராணுவத்தில் மேஜர் பதவியில் இருந்த பெரிய அதிகாரி. ராணுவத்தில் எவ்வளவு கட்டுப்பா டு உண்டோ அவ்வளவு கட்டுப்பாட்டையும் வீட்டிலும் எதிர்பார்ப்பவர். கட்டு திட்டங்களுக்கு இடையே வளர்ந்த பர்ரோஸ் , சிகாகோவில் (சரியான உச்சரிப்பு ஷிகாகோ) ஹார்வர்ட் பள்ளியில் ரோமானிய ,கிரேக்க வரலாற்றைப் படித்தார். அதில் வரும் வீரர், வீராங்கனைகளை போற்றி மகிழ்ந்தார்.
பள்ளிப்படிப்பு முடித்தவுடன் அவருடைய சகோதரர் வைத்திருந்த மாட்டுப் பண்ணைக்கு (Cattle Ranch) பர்ரோஸ் அனுப்பப்பட்டார். ஆங்கில திரைப்படங்களில் வைல்ட் வெஸ்ட் WILD WEST படங்களை பார்த்தவர்களுக்குத் தெரியும்; இருவர் பேசிக்கொண்டே இருப்பார்கள். கொஞ்சம் காரசாரமாக வாக்குவாதம் வந்தால் ஒருவர் தன் துப்பாக்கியை உருவி ‘டுமீல்’ என்று சுட்டுவிடுவான். அவ்வளளவு கரடு முரடான வாழ்க்கையுடையது அமெரிக்காவின் மேற்குப்பகுதி மாட்டுப் பண்ணைகள். அவர்களை COWBOSY ‘கவ் பாய்’ என்று அழைப்பர் .அங்கே இரண்டு ஆண்டுகளுக்கு இருந்த பின்னர் புகழ்பெற்ற ராணுவ அகாடமியில் பர்ரோஸ் சேர்ந்தார்.
அங்கே அவரை சரியான சோம்பேறிப்பயல் இவன் என்று சொல்லி பள்ளியிலிருந்து வெளியேற்றி விட்டனர் . பின்னர் மிச்சிகன் மிலிட்டரி அகாடமியில் பயிற்சி பெற்று அமெரிக்க ராணுவத்தில் பர்ரோஸ் சேர்ந்தார். அவரை அப்பாச்சி APACHEES என்றழைக்கப்படும் அமெரிக்க பழங்குடி மக்களை சுட்டுத்தள்ள அரிசோனா மாநிலத்துக்கு அனுப்பப்பட்டார். பின்னர் சிகாகோவுக்குத் திரும்பிவந்து பேனா , பென்சில் , காகிதம் விற்கும் தொழிலில் இறங்கினார். பின்னர் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டார்.
36 வயதானபோது அவருக்கு திடீரென்று எழுதத் துவங்கினார். விஞ்ஞான புனைக்கதைகளை SCIENCE FICTION வெளியிடும் ‘ஆல் ஸ்டோரி வீக்லி’ ALL STORY WEEKLY பத்திரிகைக்கு கதைகளை அனுப்பினார்.அப்போது அவர் படைத்த கற்பனைக் கதாபாத்திரம் டார்ஜான் என்னும் காட்டு மக்கள் வீரன் ஆவான். 39 வயதில் முதல் டார்ஜான் புஸ்தகம் வெளியானது.
டார்ஜான் யார் ?
ஒரு ஆங்கிலப் பிரபு தன்னுடைய மகனை ஆப்பிரிக்காவின் இருண்ட, அடர்ந்த காடுகளில் விட்டுவிட்டு வந்து விடுகிறார். அந்தச் சிறுவனை மனிதக் குரங்குகள் (APES) வளர்க்கின்றன. அவன்தான் டார்ஜான். அவன் தனது சாகசங்களால் காட்டு ராஜா ஆகிவிடுகிறான். குரங்கு போலவே மரத்துக்கு மரம் தாவி சாகசங்களை புரிவான். தீமையை எதிர்த்துப் போராடி வெற்றி பெறுவான். இப்படி அவர் எழுதிய டார்ஜான் கதைகள் , நாவல்கள் இரண்டரைக் கோடி பிரதிகள் விற்பனையாகி அவரைப் புகழ் பெற வைத்தது. அவர் எழுதிய PLANET MARS பிளானட் மார்ஸ் செவ்வாய் கிரக கதைகளும் பெரிதும் வாசிக்கப்பட்டன. பழங்கால கிரேக்கத்தில் வாழ்ந்ததாக கிரேக்க புராணங்கள் கூறும் ஹெர்குலீஸ், யூலிசிஸ் (ஆடிசியஸ்) போன்றவர்களை மனதில் கொண்டு அவர் உருவாக்கிய கற்பனைக் கதாப்பாத்திரம் டார்ஜான். தற்காலத்தில் அவரை மிஞ்சும் ஏராளமான கார்ட்டூன் வீரர்கள் வந்துவிட்டனர்!!
எட்கர் ரைஸ் பர்ரோஸ்

பிறந்த தேதி – செப்டம்பர் 1, 1875
இறந்த தேதி – மார்ச் 19, 1950
வாழ்ந்த ஆண்டுகள் 74
பர்ரோஸ் எழுதிய கதைகள், நாவல்கள் :–
1914- TARZAN OF THE APES
1915 THE RETURN OF TARZAN
1917 – THE SON OF TARZAN
1917 – A PRINCESS OF MARS
1918 – THE GODS OF MARS
1922- AT THE EARTH’S CORE
1924 – THE LAND THAT TIME FORGOT
1928 – TARZAN, LORD OF THE JUNGLE
1939 – CARSON OF VENUS
1946 – ESCAPE ON VENUS.



–SUBHAM–

tags – டார்ஜான், அமெரிக்க கதாசிரியர், எட்கர் ரைஸ் பர்ரோஸ், Edgar Rice Burroughs