
WRITTEN by London swaminathan
swami_48@yahoo.com
Date: 3 May 2019
British Summer Time uploaded in London – 16-53
Post No. 6339
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
புத்த மதத்தில் திரி பீடகம் (மூன்று பெட்டிகள்) , மூன்று சரணங்கள் (புத்தம், தர்மம், சங்கம் சரணம் கச்சாமி) இருப்பதை முன்னர் கண்டோம்.
சமண மதத்திலும் எண் மூன்று சிறப்புடைத்தே!

திரி ரத்னம்
சம்யக் தரிசனம்- சரியான கொள்கை/ நோக்கு
சம்யக் ஞானம் – சரியான அறிவு
சம்யக் சாரித்திரம் – சரியான நடத்தை
XXX
சமண மதத்தில் பொருட்களின் மூன்று நிலை
புத்கலம், ஸ்கந்தம், மகா ஸ்கந்தம்
XXX
மூன்று வகை உயிர்கள்:-
பாசத் தொடர்பில்லாத – நித்திய சித்தன்
பாசம் பற்றி, பின்னர் விடுபட்ட – முத்தன் — நிரூபாதி ஜீவன்
பாசத் தொடர்பை விடாத – பத்தன் — சோபாதி ஜீவன்
Xxxx
சத் / உண்மை எனப்படுவது 3 வகை என அத்வைதம் இயம்பும்:-
1.ப்ராதிபாஸிக ஸத்- பிரம்மம் தவிர வேறு பொருள்களில் உண்டாகும் பிரமை
(உ.ம்) கானல் நீர், கயிறு/பாம்பு பிரமை, சிப்பி/வெள்ளி பிரமை
2.விவகாரிக ஸத் – பிரும்ம ஸ்வரூபத்தில் தோன்றுவது; பிரும்மம் பற்றிய அறிவு வந்தவுடன் நீங்கி விடும்
3.பரமாத்திக ஸத்- நிரந்தர உண்மை
XXX

வேதத்தில்/ யாகத்தில் மூன்று புரோகிதர்கள்
ஹோத்ரீ – ரிக் வேதம்
உத்காத்ரி – சாம வேதம்
அத்வர்யூ- யஜூர் வேதம்
XXX
3 ருத்ர பாராயணம் ஹோமம்
லகு ருத்ரம், மஹா ருத்ரம் , அதி ருத்ரம்
XXX
சாம வேதப் பிரிவுகள்
பூர்வ அர்ச்சிகா, உத்தர அர்ச்சிகா , மகா நாமினி அர்ச்சிகா
XXX
– த்ரிஸாம்னே நமஹ
தேவ வ்ரதங்கள் எனப்படுவன மூன்று ஸாமங்கள்:-
ப்ருஹத், ரதந்த்ரம், வாமதேவ்யம்
இதன் நாமம் விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் 574ஆவது நாமம்- த்ரிஸாம்னே நமஹ.
Xxx SUBHAM XXX

Jain Saint










