
Post No.7908
Date uploaded in London – 1 May 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
Pleiades பிளையடெஸ் = கார்த்திகை,
Aldebarana ஆல்டிபேரன் = ரோகிணி (அகநாநூறு 86, 136ல் சகடம்)
Betelgeuse பீ டல் ஜியுஸ் = திருவாதிரை
Orion belt மூன்று நட்சத்திரம் = மிருகசீர்ஷம் (மான் தலை)

***
கிருத்திகா (Pleiades)
பாணினி கிருத்திகாவில் துவங்குகிறார் சதபதம் (SATAPATA BRAHMANA,1000 BCE) இதை பூஇஷ்டா , பஹுளா என்று அழைக்கும். இதையோ அதையோ பயன்படுத்தலாம் என்பது பாணினி கருத்து.
கிருத்திகா வரும் இடங்கள் – பா ( பாணினி) 6-4-158, 4-2-23, 4-3-34.
சதபத பிராஹ்மணம் – 2-1-2-3
கார்த்திகை நட்சத்திரம் பற்றிய சுவையான விஷயம் :–
முருகப் பெருமானை ஆறு கார்த்திகைப் பெண்கள் வளர்த்ததை நாம் அறிவோம். பைனாகுலர் வைத்துப் பார்த்தால் 7 நட்சத்திரம் தெரியும். தைத்ரிய ப்ராஹ்மணம் 7 என்று இயம்பும்; அவற்றின் பெயர்களும் உள ; அவையாவன — அம்பா, துலா, நிதத்னி , அப்ரயந்தி , மேகயந்தி , வர்ஷயந்தி, சுபுனிகா.
பிற்கால சம்ஸ்க்ருத இலக்கியங்கள் 6 நட்சத்திரம் என்று உரைக்கும். ஆகையால் “சான் மாதுரகாஹா” — ஆறு தாய்மார்கள் என்று சொல்லும். இதனால் முருகனுக்கு ஷண்முகம் என்று பெயர்.
எனது கருத்து
இதைக் குறிக்க ஆறுமுகங்களை சித்திரமாக வரைந்தனர். ஆனால் உண்மையில் முருகனுக்கு ஒரு முகம்தான் . இதே போல தசரதனுக்கு பத்து ரத்தம் போட்டு சித்திரம் வரைந்திருக்கலாம். நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால் பத்து திசைகளிலும் தன் சக்தியைக் காட்டிய ராவணனுக்கு பத்து தலைகளை வரைந்து விட்டோம். அவனுக்கும் உண்மையில் ஒரு தலைதான். இவை எல்லாம் புராணங்கள் செய்த கூத்து . இன்று சூப்பர் மேன் , ஸ்பைடர் மேன் , பேண்டம் டார்ஜான் ஆகியோரை சித்தரிப்பது போல பவுராணிகர்கள் சுவைமிகு கதைகளைச் சொல்லிவிட்டார்கள்.
நாம் அரசியல் கொடிகளை இப்போது வைத்திருப்பது போல , தேர்தல் சின்னங்களை வைத்திருப்பது போல, அந்தக் காலத்தில் , ஒவ்வொரு இனத்தாரும் பாம்பு, குரங்கு, கரடி, கழுகு முதலிய சின்னங்களை அணிந்தார்கள் ; இவர்களையே நாம் ராமாயணத்தில் நாகர் , வானரர்கள், ஜாம்பவான் , ஜடாயு என்கிறோம் .

***
மிருகசீர்ஷம்
பாணினி நேரடியாக மிருகசீர்ஷ நட்சத்திரம் பெயரைச் சொல்லவில்லை. அது பௌர்ணமி சந்திரனுட ன் சேர்ந்து இருக்கும் நாள் ‘ஆக்ரஹாயினி’ . அதை மூன்று முறை குறிப்பிடுகிறார் – 4-2-22; 4-3-50; 4-4-110;
கடனைத் திருப்பித்தரும் ஒப்பந்த பத்திரத்திலும் இந்தப் பெயர் வருகிறது 4-3-50
***
ஆருத்ரா :–இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் பெயர் ‘ஆர்த்ரக’ .
சங்க இலக்கியப் புலவர் பெயர்களில் புறநானுற்றுப் புலவர் பெயர்—‘கள்ளில் ஆத்திரையனார்’.
***
புனர்வசு நட்சத்திரம்
இந்த நட்சத்திரம் இருக்கும் மண்டலத்தில் 2 நட்சத்திரங்கள் இருப்பது ‘பா’- க்குத் தெரியும். திஷ்ய நட்சத்திரம் சேர்ந்தால் மூன்று ஆகிவிடும். ஓரிடத்தில் ஒருமையில் இன்னொரு இடத்தில் இருமையிலும் சொல்கிறார். மைத்ராயணி, காடக சம்ஹிதைகளும் இவ்வாறு ஒருமை, இருமையை பயன்படுத்துகின்றன.
***
திஷ்ய நட்சத்திரம்
1-2-63; 4-3-34; 4-4-149
இதனுடன் ‘புஷ்ய, சித்ய நக்ஷத்ரே’ என்றும் 3-1-166 சொல்கிறார்.
இதன் கீழ் பிறந்தவன் திஷ்ய எனப்படுவான்; ஜாதகக் கதைகளில் அடிக்கடி வரும் பெயர்கள் திஸ்ஸ , புஸ்ஸ; அர்த்த சாஸ்திரம் திஷ்யவுக்குப் பதில் புஷ்யவை பயன்படுத்துகிறது .பதஞ்சசலியும் இதையே விரும்புவதால் ‘புஷ்ய’ என்பது பிற்கால வழக்கு என்று சொல்லலாம்
***
பல்குணி – இரண்டு நட்சத்திரங்கள் ஆகையால் பா . இவைகளை ‘பல்குன்யவ்’ என்று பன்மையில் அழைக்கிறார் 1-2-60
***
ஹஸ்தம் – பா. சூத்திரம் 4-3-34
***
சித்திரை நட்சத்திர பவுர்ணமி சைத்ரி எனப்படும் 4-2-23
***
சுவாதி நட்சத்திரம் 4-3-34
***
விசாகா – இரட்டை நட்சத்திரங்கள் விசாகா , விசாகே
***
அனுராதா நட்சத்திரம் – அனுஷம் – 4-3-34
***
மூல – 4-3- 28
***
ஆஷாட – ரெண்டு நட்சத்திரங்கள் ந. 4-3-34
***
அபிஜித் நட்சத்திரம் – 4-3-36
+++
ஸ்ராவண நட்சத்திரம் – ஓணம் – காடக சம்ஹிதை இதை ‘அஸ்வத்த’ என்று சொன்னது பாணிணிக்குத் தெரியும் 4-2-5; 4-3-48. ஆனால் பா. ஸ்ராவண என்றார் 4-2-23. அரச மரத்தின் பழங்கள் கீழே விழும் பருவம் என்பதால் இதை இப்படி ‘அஸ்வத்த / அரச மரம்’ என்று பெயரிட்டதாக காசிகா உரை பகரும்.
என் கருத்து
வேதத்திலும் சித்த மருத்துவ நூல்களிலும் நிறைய சொற்கள் இரு பொருள் பட வரும். விஷயம் அறியாத அரை வேக்காடுகள் உளறித்தள்ளும் ; ஆகையால் உரைகளைப் படிக்கவேண்டும். சங்க இலக்கியத்தில் ‘மாண்ட’, ‘செத்த’, ‘இறந்’த என்ற சொற்கள் மரணம் என்ற பொருளில் வராது . கடந்த , சிறந்த என்ற பொருளில் வரும். காலப்போக்கில் நாம் பயன்படுத்தும் விதத்தைப் பொறுத்து அர்த்தம் மாறிக்கொண்டே வரும்.
***
ச்ரவிஷ்டா / தனிஷ்டா /அவிட்டம் – 4-3-34.
எது முதல் நட்சத்திரம்? என்ற நேற்றைய கட்டுரையில் அவிட்டம் பற்றிச் சொல்லிவிட்டேன்.
***
சதபிஷக் நட்சத்திரம் – சதயம் – 4-3-36
***
ப்ரோஷ்டபத – 5-4-120; 1-2-60; 4-2-35 — பூரட்டாதி , உத்திராட்டாதி ; தைத்ரிய சம்ஹிதையிலும் இது உள்ளது . இதற்கான அதிதேவதையை மக்கள் பக்தியுடன் வணங்குவதை பா சுட்டிக்காட்டுகிறார்.
நட்சத்திரங்களுக்கு அதி தேவதைகள் உண்டு; அவைகளை வணங்கும் வழக்கம் உண்டு என்பதை 2700 ஆண்டுகளுக்கு முன்னரே பா . எழுதிவிட்டார்.
***
ரேவதி நட்சத்திரம் 4-1-146
***
அஸ்வயுஜ் – 4-3-36 அஸ்வினி நட்சத்திரம் ; நாம் இப்போது முதல் நட்சத்திரமாக வைத்து இருக்கிறோம் .
பயிர்களை விதைக்க ஆஸ்வாயுஜி என்று அழைக்கப்படும் பவுர்ணமி நாள் நல்ல நாள் என்று பா பகர்கிறார் 4-3-45
***

35 பக்கங்களில் இலக்கண புஸ்தகத்தை எழுதிய பாணினி இவ்வளவு விஷயங்களையும் நமக்கு சொல்கிறார்
காத்யாயனர் எழுதிய ‘வார்த்திகா’ , பதஞ்சலி எழுதிய ‘மஹா பாஷ்யம்’ என்னும் பேருரை, அதற்குப்பின்னர் பாணினீயத்தை விளக்க வந்த ‘காசிகா’ உரை ஆகியன கடல் போல விஷயங்களை அள்ளிக் கொடுக்கின்றன. ‘காசிகா’ என்பது வாமன – ஜயாதித்ய என்ற இருவர் 1300 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய உரையாகும்
***
Ursa Major= Great Bear = Sapta Rishi Mandala
சப்த ரிஷி வழிபாடு
தமிழர்கள் விண்ணில் வடக்கு வானத்தில் ஒளிவீசும் 7 நட்சத்திரங்களை – ஏழு ரிஷிகளாக வழிபடுவதை சங்க இலக்கிய புலவர் இளநாகனார் நற்றிணைப் பாடல் 231-ல் பாடுகிறார்.
“மை அற விளங்கிய மணி நிற விசும்பில்
கை தொழும் மரபின் எழு மீன் போல”
என்று எளிய தமிழில் சொல்லிவிட்டார் . இது 2000 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதியது . இன்றும் பிராமணர்கள் ஒரு நாளைக்கு மூன்று முறை ஸப்த ரிஷிக்களின் பெயர் சொல்லி ‘’சந்தியா வந்தனம் செய்கின்றனர் . கல்யாணத்தன்று அருந்ததி நட்சத்திரம் பார்க்கும் வழக்கமும் தமிழர் இடையே உளது . அந்த நட்சத்திரம் கற்பின் சின்னம் .

tags – எது முதல் நட்சத்திரம் ?- Part 3
—-Subham —-