ஒருவன் தூக்கத்தில் இருக்கும் போது எழுப்பாதே. அப்போதுதான் அவன் பாவம்………(Post No.9323)

WRITTEN  BY KATTUKKUTY

Post No. 9323

Date uploaded in London – –     1 MARCH  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஞான மொழிகள் – 26

kattukutty

அவன் சொன்ன புளித்துப்போன ஜோக்கினால் என்கையில்

இருந்த பால் கூட புளிச்சுப் போச்சு !!!

யுத்தத்தை மனிதன் அழிக்காவிடில் யுத்தம் மனிதனை அழித்து விடும்!

ஒரு பொய் சொல்வது கடினமல்ல, ஓரே ஒரு பொய் மட்டும்

சொல்வதுந்தான் கடினம்……….

என்  மனைவியால் எந்த ரகசியத்தையும் காப்பாற்றி வைத்துக் கொள்ள முடியும்……..ஆனால் அவள் யாரிடம் சொல்கிறாளோ அவர்களால் தான் முடிவதில்லை???

சீ…….. நீ ஒரு மனிதனா??? நான் என் அம்மா வீட்டிற்கு போறேன்……

என்று சொன்னாள் அந்த இளம் பெண்.

அதற்கு அவன்சொன்னான்

போயேன்! நானும் என் மனைவி வீட்டிற்கே திரும்பி போறேன்……..

xxx

உழவனுக்கு நிலம் வேண்டும். பெரிய மனிதனுக்கு கௌரவம் வேண்டும்.

போர் வீரனுக்கு சண்டை வேண்டும்.

வியாபாரிக்கு பணம் வேண்டும்.

பெண்களுக்கு முழு உலகமும் வேண்டும்!!!

XXXX

ரஷ்ய பழமொழி

பாட்டன் வாங்குகிறான்,

அப்பன் கட்டுகிறான்,

மகன் விற்கிறான்

பேரன் பிச்சை எடுக்கிறான்.

ஸ்காட்லாந்து பழமொழி.

மற்றவர்களை குறை கூறுவது போல் நீ உன்னை குறை கூறிக் கொள்

உன்னை நீ மன்னிப்பது போல மற்றவர்களையும் மன்னித்து விடு.

எகிப்து பழமொழி

ஏழ்மையின் காரணமாக உன்னை நீ தாழ்த்திக் கொள்ளாதே.

செல்வத்தின் காரணமாக உன்னை நீ உயர்த்திக் கொள்ளாதே.

ஸ்பெயின் பழமொழி

ஒருவன் தூக்கத்தில் இருக்கும் போது எழுப்பாதே……..

அப்போதுதான் அவன் பாவம் செய்யாமலிருக்கிறான்!!!

இது என் மொழி!!!

அபூர்வம் எது??? பணிவுடன் கூடிய புலமை

துக்கமற்றவன் யார்??? பைத்தியக்காரன்

ரசிக்கத்தக்க சுவை எது??? “நக” ச்சுவை

விரைந்து பறப்பவை எது??? விடுமுறை நாட்கள்

XXXX

ஓர்  பாடல்

இந்தப் பாடலின் சிறப்பு என்ன கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்!!!

பூவாளை நாறுநீ. பூமேகலோகமே

பூநீறு. நாளை வா. பூ………

(விடை கடைசியில் காண்க).

உலகம் திருந்த வழி என்ன???

உலகம் திருந்த வேண்டுமா? முதலில் உன்னை யோக்கியனாக்கிக்

கொள்.அடுத்த வினாடியே உலகத்தில் ஒரு அயோக்கியன் குறைந்திருப்பதை உணர்வாய்

அவமானம் எது???

தொழில் எத்தனை கீழ்த்தரமானாலும் அதைச் செய்வதில் அவமானம்

இல்லை . சோம்பல் ஒன்றே அவமானம்………

சட்டம் எதைப் போற்றுகிறது ???

சட்டம் ஒரு சிலந்தி வலை போன்றது. அதில் சிறு ஈக்கள் சிக்கிக் கொள்ளும். ஆனால் குளவிகளும், வண்டுகளும், அதை அறுத்துக்

கொண்டு ஓடிவிடும்.

இயற்கையின் அற்புதம் என்ன???

பல வருடங்கள் கழித்து நீங்கள் மூக்குக் கண்ணாடி போடப்போவதை உணர்ந்து காதுகளை கடவுள் வைத்திருக்கிறாரே

அதுதான் அற்புதம்!!!

xxxx subhamxxxx

tags- தூக்கத்தில் , எழுப்பாதே, ஞான மொழிகள் – 26

ரொம்பவும் நல்லவனாக இருக்காதே! சாணக்கியன் ‘அட்வைஸ்’!!! (Post No.4605)

ரொம்பவும் நல்லவனாக (இளிச்சவாயனாக, அப்பாவியாக) இருக்காதே! சாணக்கியன் ‘அட்வைஸ்’!!! (Post No.4605)

Written by London Swaminathan 

 

Date: 11 JANUARY 2018

 

Time uploaded in London  7-39 AM

 

 

 

Post No. 4605

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

சாணக்கியன் சொல்லுகிறான்:

 

மிகவும் நேர்மையாக நிமிர்ந்து நிற்காதே! காட்டுக்குப் போய் மரங்களைப் பார்; நேராக நிமிர்ந்து சென்ற மரங்களை எல்லாம் வெட்டி எடுதுக் கொண்டு போய் விட்டார்கள்; கூனிக் குறுகிய மரங்களை யாரும் தொடவில்லை. அப்படியே நிற்கின்றன.

நாத்யந்தம் ஸரலைர்பாவ்யம் கத்வா பஸ்ய வனஸ்தலீம்

ச்சித்யந்தே ஸரலாஸ்தத்ர குப்ஜாஸ்திஷ்டந்தி பாதபாஹா

–சாணக்கிய நீதி, அத்யாயம் 7, ஸ்லோகம் 12

 

இதைப் படித்தவுடன் சாணக்கியனைத் தப்பாக எடை போட்டுவிடதீர்கள்; அவன் மஹா மேதாவி; மகதப் பேரரசை உருவாக்கிய பின்னரும் குடிசையில் வாழ்ந்த ஏழைப் ப்ராஹ்மணன் அவன். இங்கே சொல்ல வந்தது எல்லாம் அரசியலுக்கு மட்டுமே பொருந்தும்; மேலும் அசத்தியத்தை, அதர்மத்தை அழிக்க கிருஷ்ணன் போல சாம, தான, பேத, தண்டத்தைப் பின்பற்றலாம் என்பதே அவன் சொல்ல வந்த விஷயம்.

 

 

‘தூங்கும் புலியைத் தட்டி எழுப்பாதே’,

‘தூங்கும் புலியை சீண்டாதே’, என்றும் ‘தூங்குகின்ற புலியை இடறிய சிதடன்’ என்றும் தமிழில் சொல்லுவர்.

 

எந்த ஏழு பேர் தூங்கிக் கொண்டிருந்தால் எழுப்பலாம் , யாரை எழுப்பக்கூடாது என்று பட்டியல் தருகிறான் சாணக்கியன்

 

 

((தமிழ்த் திருடர்களுக்கு எச்சரிக்கை: உங்கள் குலம் வாழ வேண்டுமானால்தமிழ் வாழ வேண்டுமானால்இந்து மதம் வாழ வேண்டுமானால்எனது பிளாக் (blog)கில் உள்ள கட்டுரைகளப் பகிர்வோர்ப் எழுதியவர் பெயரையும் பிளாக்கின் பெயரையும் நீக்காமல் வெளியிடுக. அல்லது சொல்ல நாக்கு கூசுகிறது…………………………. கடவுளே! என் நாவினால் ……………… சாபம் இட வேண்டாம்நீயே கவனித்துக்கொள்!))

 

 

எழுப்பு! எழுப்பு! ஏழு பேரை எழுப்பு!!!

 

 

கீழ்கண்ட ஏழு பேர் தூங்கினால் உடனே எழுப்பிவிடு

வித்யார்த்தி சேவகஹ பாந்தகஹ க்ஷுதார்த்தோ பயகாதரஹ

பண்டாரீ ச ப்ரதிஹாரீ ஸப்த ஸுப்தான் ப்ரபோதயேத்

——சாணக்கிய நீதி, அத்தியாயம் 9, ஸ்லோகம் 6

 

கீழ்கண்ட ஏழு பேரை எழுப்பு:

மாணவன், வழிப்போக்கன், வேலைக்காரன், பசியால் வாடுபவன், பயத்தால் நடுங்குபவன்,  பண்டகசாலை பொறுப்பாளர், வேலைக்காரன்

 

எழுப்பாதே, எழுப்பாதே, ஏழு பேரை எழுப்பாதே!

அஹிர் ந்ருபம் ச சார்தூலம் கிடிம் ச பாலகம் ததா

பரஸ்வானம் ச மூர்க்கம் ச ஸப்த ஸுப்தான் ந போதயேத்

—சாணக்கிய நீதி, அத்தியாயம் 9, ஸ்லோகம் 7

 

கீழ்கண்ட ஏழு பேரைத் தூங்கும் போது எழுப்பாதே:

பாம்பு, அரசன், புலி, காட்டுப்பன்றி, குழந்தை, வேறு ஒருவரின் நாய், முட்டாள்.

 

அருமையான புத்திமதிகள்; நன்றாக யோசித்துப் பார்த்தால் ஒவ்வொன்றைப் பற்றியும் ஒரு வியாஸமே எழுதலாம்.

வாழ்க சாணக்கியன்!

 

சுபம், சுபம்–