
Translated by London swaminathan
Date: 7 January 2017
Time uploaded in London:- 5-56 am
Post No.3522
Pictures are taken from different sources; thanks.
contact; swami_48@yahoo.com
பொழுது சாயும் நேரத்தில் செய்யக்கூடாத 5 கரியங்கள் என்ன?
வெறுக்கத்தக்க ஐந்து பேர் யார், எவர்? ஐந்து சாட்சிகள் யார்?
1.எல்லோருக்கும் பொதுவான ஐந்து பொருள்கள்
வாபீ = ஏரி
கூப= கிணறு
தடாக = குளம்
தேவாலய= கோவில்
குஜன்மா= மரம்
வாபீகூபதடாகானாம் தேவாலயகுஜன்மானாம்
உத்சர்காத்பரத: ஸ்வாம்பயமபி கர்தும் ந சக்யதே
–பஞ்சதந்திரம் 3-92

xxx
2.வெறுக்கத்தக்க ஐந்து வகையினர்
அன்யவாதீ = தவறான விடை/பதில் அளிப்பவர்
க்ரியா த்வேஷி = வேலை செய்வதை வெறுப்பவர்
நோபஸ்தாதா= கூட்டத்துக்கு வராதவர்
நிருத்தர-= பதில் சொல்லாமல் மவுனம் சாதிப்பவர்
ஆஹூதப்ரபலாயீ= கூப்பிட்டவுடன் ஓடிப்போகும் ஆசாமி
அன்யவாதீ க்ரியத்வேஷீ நோபஸ்தாதா நிருத்தரஹ
ஆஹூதப்ரபலாயீ ச ஹீனஹ பஞ்சவிதஹ ஸ்ம்ருதஹ
—நாரத ஸ்ம்ருதி 2-33
xxx
3.சாயங்காலத்தில்– சூரிய அஸ்தமன நேரத்தில்- செய்யக்கூடாத ஐந்து செயல்கள்:
ஆஹாரஹ= உணவு
மைதுன= உடலுறவு
நித்ரா= தூக்கம்
சம்பாட= வேத சாஸ்த்ரப் படிப்பு
அத்வனி கதிஹி = பயணம்
ஆஹாரம் மைதுனம் நித்ராம் சம்பாடம் கதிமத்வனி
ஏதானி பஞ்சகர்மாணி சந்த்யாயாம் வர்ஜயேத் புதஹ
xxxx

4.ஐந்து சாட்சிகள் யார்?
லிகித:ஸ்மாரிதஸ்சைவ யத்ருச்சாபிக்ஞ ஏவ ச
கூடஸ்சோதர ச சாக்ஷீ பஞ்சவித: க்ருத:
–நாரத ஸ்ம்ருதி: 1-27
லிகிதஹ= எழுத்துமூலமான பத்திரம்
ஸ்மாரிதஹ= வாக்குமூலம்
யத்ருச்சாபிக்ஞா =எதிர்பாராமல் வந்தவர்
கூடஹ = உளவாளி
உத்தரசாக்ஷீ = சாட்சிகள் கூறுவதைக் கவனிப்பவர்
–subham–
You must be logged in to post a comment.