Post No. 10,197
Date uploaded in London – 10 OCTOBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஒரே கல்லில் 150+ மாங்காய் அடிக்கும் பார்ப்பனன் !
‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கலாம்’ என்று சொல்லுவோம். ஆங்கிலத்தில் ‘ஒரே கல்லால் இரண்டு பறவைகளைக் கொல்லலாம்’ Kill Two Birds with One Sone என்பர். ஆனால் பிராமணன் தினமும் 150 கடவுளுக்கு மேல் , புனிதர்களுக்கு மேல், ஒரே கிரியையில் கும்பிட்டு விடுகிறான். இந்த அற்புதத்தை அவர்கள் தினமும் மூன்று முறை செய்கிறார்கள். அந்த வழிபாட்டுக்கு சந்தியாவந்தனம் என்று பெயர்.
வேத காலத்தில் ஸரஸ்வதி -சிந்து – கங்கை நதிக்கரையில் முழங்கிய மந்திரங்கள் இன்றுவரை உலகெங்கிலும் முழங்குவது உலக அதிசயமே.
இதுநாள் வரை எழுதாத மேலும் ஒரு விஷயத்தை சேர்த்துவிடுவதே இன்றைய கட்டுரையின் நோக்கம்.
காயத்ரீ மந்திரத்தைச் சொல்லுவதற்கு முன்னர்
அக்னி , வாயு, அர்க்க , வாகீச, வருண , இந்திர , விச்வே தேவா , தேவதா :
(இரண்டு : புள்ளிகளை ‘ஹா’ என்று உச்சரிக்கவும்)
இந்த விச்வே தேவா , தேவதா: என்பது யார் என்று பார்த்தால் ஒரு நீண்ட பட்டியலே கிடைக்கிறது.
ரிக் வேதத்தில் விச்வே தேவா :என்ற தலைப்பில் பல துதிகள் உள்ளன.
அதில் ஒரு துதியில் ஒரே மந்திரத்தில் 16 கடவுளரின் பெயர்கள் வந்து விடுகின்றன. ஆனால் மேலும் பல தெய்வங்களும் அதே தலைப்பில் வந்து விடுகின்றனர் : வேதத்தில் வரும் அத்தனை கடவுளரின் பெயர்களையும் கொண்டு வந்து விடுகின்றனர் !
இதோ அந்தப் பட்டியல்:-
10-65-1
அக்கினியும் இந்திரனும் வருணனும் மித்திரனும், அரியமானும், வாயுவும் பூஷாவும் , சரஸ்வதியும், ஆதித்யர்களும், விஷ்ணுவும் மருத்துக்களும், மகத்தான ஜோதியும் (சுவர்க்கம்),சோமனும் , உருத்திரனும், அதிதியும் பிரம்மணஸ்பதியும் இசைந்து பரந்த வானை தங்கள் பலத்தால் நிரப்பினார்கள்
இதில் வேறு இடங்களில் வராத தெய்வங்களை மட்டும் அடிக்கோடு இட்டுக் காட்டியுள்ளேன்
xxx
10-66-
துதியில் த்வஷ்டா, வசு ,அஸ்வினி தேவர்கள், ரிபு, பர்ஜன்ய, பாகன், ராதி, வாஜினர், அஜ ஏகபாத, அஹிர்புத்ன்ய , க்ஷேத்ரபதி , அம்ருதர்கள்
XXX
10-64
துதியில் சூரியன், சந்திரன், திரிந்தான், உஷா, பிருஹஸ்பதி, புரந்தி, வரதன், தட்சன்,
XXX
10-61
வாஸ்தோஸ்பதி
XXX
10-93
பரிஜ்மான் /வாயு , சூரியன், சந்திரன் ,ரிபு க்ஷணன்
XXX
10-92
பருந்து, ரோதசி , அஹிர்புத்ன்யன்,அராமதி…………………
என்று பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.
இவர்களில் ஒரே தெய்வம் பல பல பெயர்களுடன் வந்திருக்கிறதா என்பதில் முரண்பட்ட கருத்துக்கள் இருக்கின்றன.
இது தவிர சோம மூலிகையைக் காக்க்கும் வில் வீரர்கள் பெயர்கள் வருகின்றன.
சுருங்கச் சொல்லின் 20,30 தேவதைகளின் பெயர்களை தனியே சொல்லுவதற்குப் பதிலாக, புத்திசாலித்தனத்தோடு , இந்த விச்வே தேவர்கள் பட்டியலில் கொண்டு வந்து விடுகின்றனர் !
அந்தக் காலத்தில் எல்லா பிராமணர்களும் நான்கு வேதத்தில் ஏதேனும் ஒரு வேதத்தை முழுக்க படித்து இருந்ததால் அவர்களுக்கு அத்தனை கட வுளரும் நினைவுக்கு வந்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை
Xxx
FROM MY OLD ARTICLE
இதே பிளாக்கில் 6-10-2017-ல் எழுதியது கீழே உள்ளது.
தினமும் மூன்று முறை சந்தியா வந்தனம் செய்யும் பிராமணனைக் கண்டால் ஒரு பெரிய கும்பிடும் போடுங்கள்.
நிற்க; இதோ பிராமணர் சொல்லும் தெய்வங்கள், புனிதர்களின் பட்டியல்:-
நான் (நான் தினமும் செய்யும்) யஜுர் வேத சந்தியாவந்தனத்திலிருந்து தருகிறேன்
ரிக் வேத, சாமவேத சந்தியாவந்தனங்களில் கூடுதல் மந்திரம் உண்டு
xxx
ஓம், அச்யுதா, அனந்தா, கோவிந்தா, விஷ்ணுவின் 12 பெயர்கள்- கேசவா, மாதவா, கோவிந்தா, விஷ்ணு. மது சூதனா, த்ரிவிக்ரமா, வாமனா, ச்ரீதரா, ருஷீகேசா, பத்மநாபா, தாமோதரா,
கணேச தியானம், (ஆதி சைவர்களாக இருந்தால் சில மாறுபாடுகள் உண்டு)
ஏழு லோகங்கள்- பூர், புவ, சுவர், மஹ, ஜன, தபோ, சத்ய லோகங்கள்
காயத்ரீ மந்திரம் பல இடங்களில் வருகிறது
பரமேஸ்வர (ப்ரீத்யர்த்தம்); வைணவர்கள் வேறு பெயர் சொல்லுவர்.
ஆப: (நீர்), சூர்யன், அக்னி,
பிரம்மன் (பிரும்மா அல்ல), நவக்கிரஹங்கள்- சூரியன், சந்திரன், அங்காரகன், புதன், ப்ருஹஸ்பதி, சுக்ர, சனைச்சர, ராஹு ,கேது
பிரம்மா, பரமாத்மா,
சப்த ரிஷிகள்: அத்ரி, ப்ருகு, குத்ஸ, வசிஷ்ட,கௌதம, காஸ்யப, ஆங்கிரஸ்
யாப்பிலக்கண அணி: காயத்ரீ, உஷ்னிக், அனுஷ்டுப், ப்ருஹதி, பங்க்தி, த்ருஷ்டுப், ஜகதி
ஏழு வேத காலக் கடவுளர்: அக்னி, வாயு, அர்க, வாகீச, வருண, இந்திர, விச்வே தேவா, தேவதா:
வாமதேவ ரிஷி, காயத்ரீ, சாவித்ரீ, ஸரஸ்வதீ, விச்வாமித்ர ரிஷி
அபிவாதயே என்னும் மந்திரத்தில் ஒருவருடைய கோத்ரம், ரிஷிகளின் பெயர்கள் வரும். எடுத்துக் காட்டாக எனது குலத்தில், வைஸ்வாமித்ர, அகமர்ஷண, கௌசிக, ஆபஸ்தம்ப, ஸ்வாமிநாத: (My name)
சந்தியா, சாவித்ரி, காயத்ரீ, சரஸ்வதி, சர்வ தேவதா:
(சில பெயர்கள் திரும்பத் திரும்ப வரும்; கூட்டல் கழித்தலுக்குப் பின்னரும் 100 பெயர்களுக்கு மேல்!)
4 திசைகள் – கிழக்கு, தெற்கு, மேற்கு வடக்கு திசைகளுக்கு வந்தனம்
மேல், கீழ், இடைவெளி,பூமி, ம்ருத்யவே,
யமன்
(யமன், வருணன், சூரியன், காயத்ரீ முதலிய தெய்வங்களுக்கு பத்து, பதினைந்து சிறப்புப் பெயர்கள் வரும். அவைகளையும் சேர்த்தால் 150 பெயர்கள் வரை செல்லும்)
எடுத்துக்காட்டாக யமன் பற்றிய பெயர்களை மட்டும் தருகிறேன்:
யமன், தர்மராஜன்,ம்ருத்யவே, அந்தகாய, வைவஸ்தாய, காலாய, சர்வபூதக்ஷயாய, ஔதும்பராய, தத்னாய (death is derived from this word), நீலாய, பரமேஷ்டினே, வ்ருகோதராய, சித்ராய, சித்ரகுப்தாய.
பின்னர் க்ருஷ்ண பிங்களம் ( சங்கர நராயணன்= ஹரிஹரன்)
நர்மதை நதிக்கு வணக்கம்- ஜனமேஜய, ஆஸ்தீக மகரிஷி- ஜரத்காரு- பன்னகேப்ய:-
சூரியன் பற்றிய நீண்ட மந்திரம்
நாராயணனுக்கு எல்லாம் சமர்ப்பணம்
சவித்ரு தேவன்
ஓம் தத் சத்
90 பெயர்களுக்கு மேல் வரும் தெய்வங்களோடு யமன் பற்றி வரும் 13 பெயர்கள் மற்றும் இது போல ஒவ்வொரு மந்திரத்திலும் வரும் பெயர்களைச் சேர்த்தால் 150 பேருக்கும் மேலாக வரும்!
–SUBHAM–
tags – விச்வே , விஸ்வே , தேவாஹா , தேவதா, சந்தியாவந்தனம் , ஒரே கல்லில்