WRITTEN BY KATTUKKUTY
Post No. 9041
Date uploaded in London – – 16 DECEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனிலிருந்து திங்கள்கிழமை தோறும் ஒளிபரப்பாகும் ஞான மயம் நிகழ்ச்சியில்
14-12-2020 அன்று ஒளிபரப்பப்பட்ட உரை!
FOR LIVE SPEECH PLEASE GO TO FACEBOOK.COM/GNANAMAYAM
சௌபாக்யம் அருளும் சுக்கிரன் !!!
Kattukutty
அன்பர்கள் அனைவருக்கும் ஸ்ரீனிவாசன் அன்பான மாலை வணக்கம்

கேள்வி – மக்களை மகிழ்ச்சிகரமாக வைக்கும் கிரகம் எது???
உலகத்திலேயே மிக மிக சந்தோஷகரமான வாழ்க்கை அமையப் பெற்ற
அதிர்ஷ்டம் யாருக்கு தெரியுமா????
அதிக பணம் வைத்திருப்பவருக்கா??? அல்லது
எல்லா வசதிகளும் பங்களாக்கள், கார்கள் எஸ்டேட்டுகள் வைத்திருப்பவருக்கா???
அல்லது நினைத்ததை எல்லாம் நடத்தி வைக்கும், ஆட்கள் உடைய அதிகாரம்
உடைய அரசியல்வாதிகளுக்கா???
உலெகெங்கும் பத்திரிக்கைகளிலும், T V க்களிலும் தினசரி வரும் சினிமா ஸ்டார்களுக்கா?
இந்த கேள்விக்கெல்லாம் விடை…
மனதறிந்து நடக்கும் மனைவி இருந்தாலே போதும் மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கு!!!
இதை கேட்கும் அல்லது tamilandvedas ஐ படிக்கும் அனைவருக்கும் நெஞ்சை
உறுத்திக் கொண்டிருக்கிற விஷயம் இது – “மனைவி” என்றவுடன், அதையெல்லாம்
மறந்து தான் உங்கள் பேச்சை கேட்க வந்திருக்கும் எங்களுக்கு அவளை மீண்டும்
ஞாபகப்படுத்தி துனபுறுத்தாதீர்கள்……….என்கிறீர்களா?
30-11-2020 தேதி. ஒருதினசரியில் மனைவியிடம் காப்பி கேட்டிருக்கிறான் கணவன்.
தராததால் அவன் தற்கொலை செய்து கொண்டதாக செய்தி…….
ப்பூ இவ்வளவுதானா??? எங்கள் வீட்டுல காப்பி கேட்டுக் காத்திருப்பது
தினசரி நடக்கிற விஷயமாச்சே……..
சரி. விஷயத்திற்கு வருவோம்.
சுக்கிரனின் சிறப்பு
நடனம், இசை, கவிதை,வரைகலை, சிற்பம் போன்ற 64 கலைகளுக்கு நாயகனும்,
களத்திர காரகனும் , காதல் மன்னனும் , கவர்ச்சி நாயகனும், என்றும் இளமைத்தோற்றம்
அளிப்பவனும், ஆடை அலங்காரத்திற்கும், வாசனை திரவியங்களுக்கு அதிபதியும்,
அரண்மனை போன்ற பெரிய வீடுகளுக்கும், விதம் விதமான வாகனங்களுக்கு அதிபதியும்,
பசு , பால் ,எல்லா வெண்ணிற பொருட்களுக்கும்,ஆடை, பட்டுத்துணிகளுக்கும்,
சுருக்கமாக சொல்லப்போனால் எல்லா சுகமளிக்கும் பொருட்களுக்கும்
சுக்கிரனே மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு காரணம்!!!!
அயன, சயன, சுக, போக பாத்யாதிபதி சுக்கிரனே!!!!
எந்த கிரகமும் 1,4, 7, 10 ல் இருந்தால் “கேந்திராதிபத்ய தோஷம்”
உண்டு என்பார்கள் ஜோதிட வல்லுனர்கள்.
கேந்திராதி பத்ய தோஷமே இல்லாத ஒரே ஒரு கிரகம் சுக்கிரனே!!!(7ம் இடம் தவிர)
வெளி நாட்டினர் இதன் ஒளியை கண்டு மயங்கி அழகு தெய்வத்தின்
பெயரையும் இந்த கிரகத்தின் பெயரையும் “வீனஸ்”என்று
வைத்தனர்!!! மழையை வரவழைப்பதும இவரே…..இவருக்கு
“மழைக்கோள்” என்றும் பெயர்

சுக்கிரனின் பிறப்பு
பிரும்மாவின் மானஸ புத்திரர்களில் ஒருவரான “ப்ருகு” என்னும்
முனிவருக்கும் “புலோமிசை” என்பவளுக்கும் பிறந்தவர் தான்
பார்க்கவன்(சுக்கிர பகவான்)..
காசி சென்று பல காலம் லிங்கப் பிரதிஷ்டை செயது சிவனைக் குறித்து பலகாலம்
தவம் செய்தார் சுக்ரன்.
அவர் தவத்தை மெச்சி சிவபிரான் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சக்தி வாய்ந்த
“மிருத சஞ்சிவினி” என்ற மந்திரத்தை அவருக்கு உபதேசித்தார்.
பார்க்கவன் என்ற சுக்கிரனிடமிருந்த இந்த சக்தியை அறிந்து கொண்ட அசுரர்கள்
அவரைத் தங்கள் குருவாக ஏற்றுக்கொண்டார்கள்.
தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் அவ்வப்போது போர் நடக்கும்.
அசுரர்கள் பலர் இறந்தனர். அசுரர்களின் அரசன் விருஷ பர்வா,
குல குரு காலில் விழுந்து காப்பாற்றுமாறு வேண்டிக்கொண்டான்.
அனவரையும் உயிர்ப்பித்தார் சுக்கிரன். அரண்டு, மிரண்டு போன தேவர்கள்
சிவனிடம் போய் முறையிட்டனர். சிவன் நந்தியை ஏவ, பார்க்வன் என்ற சுக்கிரனை
கொண்டு வர, அப்படியே விழுங்கி விட்டார் .
சிவ பெருமான் வயிற்றிலேயே ஆயிரம் ஆண்டுகள தவம் செய்தான் பார்க்கவன்.
அவன் தவ யோகத்தை மெச்சி அவனை வயிற்றிலிருந்து
வெளியே கொணர்ந்தார் சிவன்.
வெண்மை நிறமாக அதாவது சுக்கிலம் என்றால் வெண்மை வெளிப்பட்டதால் சுக்கிரன் எனப்
பெயர் பெற்றார் பார்க்கவன்.
அசுரர்களுக்கு ஆச்சாரியாராக இருந்ததால் “சுக்ராச்சாரியார்” என்ற பெயரையும்
பெற்றார் சுக்கிர பகவான்!!!

புராஜெக்ட் – சஞ்சீவினி !!!
தேவர்களுக்கு கவலையோ கவலை. இப்படி மிருத சஞ்சீவினி உடைய
அசுரர்களுடன் சண்டையிட்டால் நாம் ஜெயிக்க முடியாததுடன்
அழிந்தே போவோம் என்பதே அவர்கள் கவலை.
அனைத்து தேவர்களும், குருவான பிரஹஸ்பதியுடன் மந்திராலோசன நடத்தினர்.
கடைசியில், பிருஹஸ்பதியின் மகன் கசன் எனபவனை அசுரகுருவிடம் சிஷ்யனாக்குவது,
பிறகு அந்த மிருத சஞ்சீவினீ மந்திரத்தை தந்திரமாக கற்றுக் கொண்டு வந்து விடுவது…..
”புராஜக்ட் – சஞ்சீவினி” ரெடி!!!!
வெற்றிலை பாக்கு ஆயிரம் பழத்தட்டுகளுடன் சுக்கிராச்சாரியாரின்
காலில் விழுந்தான் கசன். யார் என்று கேட்டார் சக்கிராச்சாரியார்.
தான் இன்னாரென்ற முழு உண்மையைக் கூறி தன்னை மாணவனாக ஏற்றுக்கொள்ளும்படி
கூறினான் கசன்.
அக்கால வழக்கப்படி காலில் விழுந்து சிஷ்யனாக ஏற்றுக் கொள்ளும்படி
வேண்டிக் கொண்டதால், அவரும் முழு மனதுடன் சம்மதித்தார்.
தேவயானியின் ஒரு தலை ராகம்
இனிமேல் தான் வருகிறது காதல் கதை!!!
சுக்கிரச்சரியாருக்கு மிக மிக அழகான பெண்ஒருத்தி… பெயர் தேவயானி……
அப்பாவிற்கு தொண்டு செய்வாள் அவள்.
கரு கரு முண்டங்களான அசுர ஜன்மங்களையே பார்த்த அவள்
கண்களுக்கு சிவப்பான, அழகான, தேவகுமாரன் கசனைப் பார்த்ததும்
அவன் மேல் அவளுக்குக் காதல் உண்டாகிவிட்டது…….
பார்த்தார்கள் அசுரர்கள். இப்படி “எதிரி” கேம்பிலிருந்து ஒருவன்
வந்து துணிச்சலாக குருவிடம் பாடம் கற்க வந்ததும், குரு அவனை ஏற்றுக் கொண்டதும்
அவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை…….
கொலை முயற்சி
அசுரர்கள் ஒரு நாள் அவனை கொன்று கிணற்றில் வீசி விட்டனர்.
கசனைக் காணாத தேவயானி சுக்கிராச்சாரியாரை நச்சரித்ததால் ஞான திருஷ்டியில்
கசன் கிணற்றில் கண்ட துண்டமாக கிடப்பதை அவர் கண்டார்.
தன்னை நம்பி வந்த சீடன் இப்படிக் கொலையுண்டதை
சகிக்காமல் அவனை உயிர்ப்பித்தார்.தேவயானிக்கு சந்தோஷம் பொங்கியது….
மறுநாள் காலையில் அசுரர்களுக்கு ஒரே ஆச்சரியம்
நேற்று வெட்டிப் போட்ட ஆள் இன்று கிளாசில் உட்கார்ந்திருக்கானே???
விஷயத்தை ஊகித்தறிந்த அசுரர்கள் பிளான் பி க்கு வந்தார்கள.
அதாவது கசனைக் கொன்று அவனை அவருடைய நாய்க்கே தீனியாகப் போட்டு விட்டார்கள்.
கிளாசில் கசனைக் காணாத
தேவயானி அழ, சுக்கிராச்சாரியார் ஞான திருஷ்டியில் பார்த்து
அதிர்ந்து போனார் .
அருமை நாயை இழக்க விரும்பாத அவர்
தேவயானியை கன்வின்ஸ் செய்யப் பார்த்தார்.
தேவயானி நான் கசனைக் காதலிக்கிறேன் என்றும், அவனில்லாமல் வாழமுடியாதென்றும்
கதறி அழ நாயின் வயிற்றிலிருந்து கசனை வரவழைத்து நாயையும்
காப்பாற்றினார். பார்த்தாரகள் அசுரர்கள் பிளான் “ சி “க்கு வந்தார்கள்…..
அதாவது கசனை கொன்று எரித்து சாம்பலை அவருடைய மதுபானத்திலேயே
கலந்து விட்டார்கள்.
மறுநாள் கசனை காணாத தேவயானி கதறி அழ, சுக்ராச்சாரியார்
கசா எங்கிருக்கிறாய்??? என்றார்.
நான் உங்க வயிற்றில் இருக்கிறேன் ஸ்வாமி !!! என்று குரல் வந்தது!
அதிர்நது போனார்கள் சுக்ராச்சாரியாரும், தேவயானியும்.
தேவயானி மனமுடைந்து கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு
முயற்சி செய்தாள். வேறுவழியே இல்லாமல் வயிற்றுக்குள் இருக்கும்
கசனுக்கு சஞ்சீவினி மந்திரத்தை உபதேசம் செய்தார் சுக்ராச்சாரியார்.
வெளியே வந்த கசன் குரு த்ரோகம் செய்யாமல் அவர் உபதேசித்த சஞ்சீவினி
மந்திரத்தை அவரிடமே உபயோகித்து அவரை உயிர்ப்பித்தான்!!!.,
அவ்வளவுதான், தான் எதற்காக வந்தானோ அந்த வேலை முடிந்தது!!!
கசன் தன் குருவிடம் விடை பெறக் கிளம்பியதும் தேவயானி
கசனின் காலை பிடித்துக் கொண்டு கதறினாள்.
கசன் சொன்ன ஒரே பதில் – “நான் உன் தகப்பன் வயிற்றிலிருந்து வந்திருக்கிறேன்.
சரியாகச் சொல்லப் போனால், நான் உனக்கு சகோதரன் முறை ஆக வேண்டும்!!!”
அவ்வளவுதான் கசன், சுக்கரச்சாரியார் சொல்லச் சொல்ல, கிணற்றினில குதித்தாள் தேவயானி…
…அவ்வழியே வந்த குரு வம்சத்து அரசன் யயாதி என்பவன் அவளைக் காப்பாற்றினான்……
சுக்கிரச்சாரியாரின் சாபம்
எதிரியான தேவர்களுக்கு சஞ்சீவினி மந்திரம் போனதும், மகள்
கிணற்றில் விழுந்ததும், சுக்ராசாரியார் மனதை ரொம்பவுமே பாதித்தது.
வெகு நேர ஆராய்ச்சிக்குபின் மூல காரணம்”மது”அருந்தியதால்தான்
என்பதைக் கண்டு பிடித்தார் சுக்கிரச்சாரியார். மனது வெதும்பி
சாபம் இட்டார் அன்று. “எவன் எவனெல்லாம் மது அருந்துகிறானோ,
அவன் மதி இழந்து போகட்டும். அவன் பெண்களினால்
துன்பமுறட்டும். குடும்பத்தில் வறுமை வந்து கூத்தாடட்டும்”
இது தேவ லோகத்தில இருக்கிறவர்களுக்கு மட்டும் என்று
நினைச்சுகாதீங்கோ…….பூலோகத்தில இருக்கிற அமெரிக்கா,
லண்டன், ஜப்பான், இந்தியா உள்பட எல்லா நாடுகளுக்கும் தான்!!!
அவர் அன்று இட்ட சாபம் இன்றும் பலிக்கிறது. நன்றாக ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்
சுக்கிரனுக்குபிடிக்காத சமாசாரம்
“டிரிங்ஸ்”.

to be continued………………………………………………………………….
tags- சுக்கிரன், சஞ்சீவினி மந்திரம், சுக்ராசாரியார், தேவயானி





