பிரடெரிக் நீட்ஸே (GOD IS DEAD) , கடவுள் பற்றி இப்படிச் சொல்லலாமா? (Post No.9751)

பிரடெரிக் நீட்ஸே , கடவுள் பற்றி (GOD IS DEAD)  இப்படிச் சொல்லலாமா? (Post No.9751)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9751

Date uploaded in London – –19 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

கடவுள் செத்துப்போனான்’ ‘GOD IS DEAD’  என்றார் புகழ் பெற்ற ஜெர்மானிய தத்துவ ஞானி பிரெடெரிக் நீட்ஸே FRIEDRICH NIETZSCHE . கிறிஸ்தவ மதத்தையும் தாக்கினார். ஏன் ?

நீட்ஸே யார் ?

புகழ்பெற்ற ஜெர்மனி நாட்டு தத்துவ ஞானி (Phiosopher) , மொழியியல் (Philologist) அறிஞர்.

பிறந்த தேதி – 15  அக்டோபர் , 1844

இறந்த தேதி – 25 ஆகஸ்ட், 1900

வாழ்ந்த ஆண்டுகள் 55

நீட்ஸேயின் எழுத்துக்கள், படைப்புகள் மேலை நாட்டு அரசியல் மற்றும் இலக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின .

ஒரு சின்ன ஜெர்மானிய கிராமத்தில் நீட்ஸே பிறந்தார்.அவருக்கு 5 வயதானபோது தந்தை இறந்தார். இதனால் அவரது  சகோதரியையும்  அவரையும் தாயார்  வளர்த்தார். அவர் பான் (BONN) நகர பல்கலைக்கழகத்தில் இறையியல் (THEOLOGY) படிப்பில் சேர்ந்தார். பின்னர் அதை விட்டு தத்துவம் (PHILOSOPHY) படிக்கச் சென்றார்.

 நீட்ஸே அதி மேதாவி. 24 வயதிலேயே சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள பேஸல் (BAZEL) பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஆனார் அப்போது பிரபல ஜெர்மானிய இசை மேதை, சாஹித்ய கர்த்தா ரிச்சர்ட் வாக்னருடன் (RICHARD WAGNER)  நட்பு ஏற்பட்டது.  நீட்ஸே கொண்டிருந்த கருத்துக்களையே அவரும் கொண்டிருந்தார்.

அரசியல் மற்றும் சமூகம் பற்றிய தனது கருத்துக்களை அன் ‘டைம்லி மெடிடேஷன்ஸ்’ என்ற பெயரில் நூலாக வெளியிட்டார். ஜெர்மானிய கலாசாரம் மற்றும் அப்போதைய நிறுவனங்களை அவர் சாடினார்.

தனது புரட்சிகரமான கருத்துக்களை ‘தஸ் ஸ்போக் ஜராதுஷ்ட்ரா’ (THUS SPOKE ZARATHUSTRA) என்ற நூலிலும் ‘பியாண்ட்  குட் அன்ட் ஈவில்’ (BEYOND GOOD AND EVIL)  என்ற நூலிலும் பிரகடனம் செய்தார்.

கிறிஸ்தவ மதம் இக்காலத்துக்குப் பொருந்தாது. தனி மனிதர்கள் எது நல்லது எது கெட்டது என்பதை பகுத்துணர்ந்து சொல்ல வேண்டும் ,பின்பற்ற  வேண்டும் என்று கூறி “கடவுள் இறந்துவிட்டார் God is Dead” என்ற வாசகத்தின் மூலம் வெளியிட்டார்.

இதைக்கேட்ட பல அறிஞர்கள் மூக்கின் மீது விரல் வைத்து அதிசயித்தனர்; மேலும் பலர் வெகுண்டு எழுந்தனர்.

ஒரு நல்ல உதாரண புருஷன்/ எடுத்துக்காட்டான மனிதன் என்பவன் தன் உணர்ச்ச்சிகளைக் கட்டுப்படுத்தி அதை ஆக்கபூர்வமான வழிகளில் பயன்படுத்த வேண்டும் என்றார் . இது 19-ஆவது நூற்றாண்டின் நாவல்களிலும் நாடகங்களிலும் செல்வாக்கு பெற்று புதிய கதாபாத்திரங்களை உருவாக்கியது.

நீட்ஸே சொல்லாத விஷயங்களை அவரது பெயரில் ஹிட்லரின் ஜெர்மானிய நாஜி கடசியினர் பரப்பியதால் அவருடைய பெயருக்கு களங்கம் ஏற்பட்டது; யூத மத எதிர்ப்புக்கு நாஜி கட்சிக்காரர்கள் நீட்ஸேயின் பெயரைப் பயன்படுத்தி பிரசாரம் செய்தனர். பிற்காலத்தில் இந்தப் புளுகு அம்பலப்படுத்தப்பட்டது. பின்னர் நீட்ஸேயின் புகழ்  மீண்டும் உச்சிக்குச் சென்றது .

நீட்ஸேயின் முக்கிய படைப்புகள் இதோ :-

1872- THE BIRTH OF TRAGEDY

1873-76 UNTIMELY MEDITATIONS

1878-90 HUMAN,  ALL -TOO- HUMAN

1883-85 THUS SPOKE ZARATHUSTRA – A BOOK FOR ALL AND NONE

1886 BEYOND GOOD AND EVIL

1887 ON THE GENEOLOGY OF MORALS

1889 TWILIGHT OF THE IDOLS

XXX

PUBLISHED AFTER HE DIED:–

1901 THE WILL TO POWER

1908 ECCE HOMO

சுவிட்சர்லாந்தில் சில்வபானா ஏரி  இருந்த இடத்தில் இரண்டு சாலைகளுக்கு இடையே நடக்கும்போது பிரமிடு வடிவிலுள்ள மிகப்பெரிய பாறையைக்  கண்டவுடன் அவருக்குத் தோன்றிய எண்ணங்களை தஸ் ஸ்போக் ஜராதுஷ்ட்ரா புஸ்தகத்தில் 4 பகுதிகளாக வெயிட்டார். இது ஒரு தத்துவ நாவல். இதில் அதிக சொற்சிலம்பம் உண்டு; பிற மொழிகளில் அப்படியே மொழி பெயர்க்க முடியாது. ஒவ்வொரு சொல்லையும் அவர் எப்படி, என்ன பொருளில் பயன்படுத்துகிறார் என்பதை  விளக்க வேண்டிவரும்.

–SUBHAM–

TAGS- பிரடெரிக் நீட்ஸே ,GOD IS DEAD , கடவுள் பற்றி,  

கடவுள் பற்றி 31 தமிழ், ஸம்ஸ்க்ருத பழமொழிகள் (Post No.5160)

Compiled by LONDON SWAMINATHAN

 

Date: 29 JUNE 2018

 

Time uploaded in London –  7-19 AM (British Summer Time)

 

Post No. 5151

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

ஜூலை 2018 மாத காலண்டர் (விளம்பி வருஷம் ஆனி- ஆடி மாதம்)

 

ஏகாதஸி விரதம்- ஜூலை 9,23; பௌர்ணமி- ஜூலை 27;

அமாவாஸை- ஜூலை 12;

முஹூர்த்த தினங்கள் – ஜூலை 1, 2, 5, 11

பண்டிகை நாட்கள் – ஜூலை 13 பார்ஸ்வ சூர்ய கிரஹணம்/ இந்தியாவில் தெரியாது, 14 பூரி ஜகந்நாத ரத யாத்திரை, 17 தக்ஷிணாயண புண்ய காலம், 27- வியாஸ/ குரு பூர்ணிமா, பூரண சந்திர கிரஹணம்

கடவுள் பற்றி 31 தமிழ், ஸம்ஸ்க்ருத பழமொழிகள்

 

ஜூலை 1 ஞாயிற்றுக் கிழமை

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்

 

ஜூலை 2 திங்கட் கிழமை

 

திக்கற்றவருக்கு தெய்வமே துணை

 

ஜூலை 3 செவ்வாய்க் கிழமை

நம்பினார் கெடுவதில்லை; இது நான்கு மறை தீர்ப்பு

 

ஜூலை 4 புதன் கிழமை

 

வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல (குறள்)

 

ஜூலை 5 வியாழக் கிழமை

ஹரி ஸ்ம்ருதிஹி ஸர்வவிபத் விநாசினி

ஹரியை நினைந்தவருக்கு துன்பங்கள் பறந்தோடும்

ஜூலை 6 வெள்ளிக் கிழமை

கடவுள் நினைத்தால் நடக்கதானவும் நடக்கக்கூடும் (கதா சரித் ஸாகரம்)

சுதுஷ்கரமபி கார்யம் சித்யத் யனிக்ரஹவதீஸ்விஹா தேவதாஸு

 

 

ஜூலை 7 சனிக் கிழமை

ஸ்வேச்சேசாரா ஹி தேவதாஹா

தெய்வங்கள் அதன்போக்கில் செயல்படும்

 

ஜூலை 8 ஞாயிற்றுக் கிழமை

ஸர்வ தேவ நமஸ்காரஹ கேசவம் ப்ரதிகச்சதி

அனைத்துக் கடவுளருக்கு அளிக்கும் நமஸ்காரங்கள் கேசவனை அடைகின்றன

 

ஜூலை 9 திங்கட் கிழமை

ஸங்க்கீர்த்ய நாராயண சப்தமாத்ரம் விமுக்த துக்காஸ் சுகினோ பவந்து (விஸ்ணு ஸஹஸ்ரநாமம்)- நாராயணன் என்ற ஒலி கேட்ட மாத்திரத்தில் துன்பங்கள் அகலும்

 

ஜூலை 10 செவ்வாய்க் கிழமை

ஒரே கருத்துடையவர்களை ஒன்று சேர்ப்பதில் இறைவன் (பிரம்மா) வல்லவன் (பாத தாடிதக)

ஸர்வதா ஸத்ருசயோகேஷு நிபுணாஹா கலு ப்ரஜாபதிஹி

ஜூலை 11 புதன் கிழமை

இறைவனின் சக்தி எல்லாக் கதவுகளையும் திறந்துவிடும் (ராமாயண மஞ்சரி)- ஸர்வத்ர விவ்ருத த்வாரா தைவசக்திர்  கரீயஸீ

 

ஜூலை 12 வியாழக் கிழமை

சேஷன் என்னும் நாகம் உலகையே தாங்குவது கண்டு கிருஷ்ணன் அதைப் படுக்கையாக வைத்துக் கொண்டான் (குமார ஸம்பவம் 3-13)

வ்யாதிஸ்யதே பூதரதாமவேக்ஷ்ய க்ருஸ்ணேன தேஹோத்த்ரணாய சேஷஹ

 

ஜூலை 13 வெள்ளிக் கிழமை

கடவுள் நினைத்தால் விஷம் அமிர்தமாக மாறும்; அமிர்தம் விஷமாக மாறும்– விஷமயம்ருதம் க்வச்சித் பவேதம்ருதம் வா விஷமிஸ்வரேச்சயாச்சயா- ரகுவம்சம் 8-46

 

 

ஜூலை 14 சனிக் கிழமை

கடவுள் அருள் இருந்தால் எதிரியும் அன்பைப் பொழிவான்

ஸானுகூலே ஜகந்நாதே விப்ரியஹ சுப்ரியோ பவேத் (சுபாஷிதரத்ன கண்டமஞ்சுசா)

 

ஜூலை 15 ஞாயிற்றுக் கிழமை

இறைவனின் எண்ணத்தை எவரும் தடுக்கவியலாது- மஹா பாரதம்

பலீயஸீ கேவலம் ஈஸ்வரேச்சா

 

ஜூலை 16 திங்கட் கிழமை

ஆண்டவனின் அருள் இருக்கும்போது அடையமுடியாததும்  உண்டோ?- கதா சரித் ஸாகரம்

ப்ரஸன்னே ஹி கிமப்ராப்யமஸ்தீஹ பரமேஸ்வரே

ஜூலை 17 செவ்வாய்க் கிழமை

பிரம்மாவின் படைப்புகள் நம்ப முடியாத அளவுக்கு அற்புதமானவை- கதா சரித் ஸாகரம்

ப்ரஜாபதேர் விசித்ரோ ஹி ப்ராணிஸர்கோஸதிகாதிகஹ

 

ஜூலை 18 புதன் கிழமை

எவரும் சிவபிரானின் உண்மைப் பெருமையை உணரவில்லை– குமார சம்பவம் 5-77

ந ஸந்தி யாதாத்யர்விதஹ பினாகினஹ

ஜூலை 19 வியாழக் கிழமை

தான் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்

 

ஜூலை 20 வெள்ளிக் கிழமை

அரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்

 

ஜூலை 21 சனிக் கிழமை

உலகங்கள் அனைத்துமே பிரம்மாவினால் உருவாக்கப்பட்டன- வால்மீகி ராமாயணம் 4-24-41

லோகோ ஹி ஸர்வோ விஹிதோ விதாத்ரா

ஜூலை 22 ஞாயிற்றுக் கிழமை

கொடுக்கும் தெய்வம் கூரையை பிய்த்துக்கொண்டு கொடுக்கும்

ஜூலை 23 திங்கட் கிழமை

கும்பிடப் போனதெய்வம் குறுக்கே வந்தாற்போல

ஜூலை 24 செவ்வாய்க் கிழமை

சிவாய நம ஓம் என்போர்க்கு அபாயம் ஒருபோதும் இல்லை

ஜூலை 25 புதன் கிழமை

கடவுளின் லீலைகளை யாரே அறிவார்?- விக்ரமோர்வஸீயம்

கோ தேவதா ரஹஸ்யானி தர்க்கயிஷ்யதி

 

ஜூலை 26 வியாழக் கிழமை

சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை; சுப்பிரமணியனுக்கு மேல் தெய்வமும் இல்லை

 

ஜூலை 27 வெள்ளிக் கிழமை

சிவ சிவ என்கிலர் தீவினையாளர்

ஜூலை 28 சனிக் கிழமை

மதுநமக்கு மதுநமக்கு மதுநமக்கு விண்ணெலாம்

மதுரமிக்க ஹரிநமக்கு மதுவெனக் கதித்தலால்- பாரதி

 

ஜூலை 29 ஞாயிற்றுக் கிழமை

துன்பம் நெருங்கி வந்த போதும்—நாம்
சோர்ந்துவிடல் ஆகாது பாப்பா!
அன்பு மிகுந்த தெய்வம் உண்டு—துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா!- பாரதி

 

ஜூலை 30 திங்கட் கிழமை

ஓம் சக்தி அருளால் உலகில் ஏறு – ஒரு
சங்கடம் வந்தால் இரண்டு கூறு;
சக்தி சில சோதனைகள் செய்தால் – அவள்
தன் அருளே என்று மனது தேறு.- பாரதி

ஜூலை 31 செவ்வாய்க் கிழமை

ஏகம் ஸத் விப்ராஹா பஹுதா வதந்தி- ரிக் வேதம்

உண்மை/ கடவுள் ஒன்றே; அறிஞர்கள் பலவாறு பகர்வர்.

 

–Subham–