
A bizarre video has emerged from China of a clever dog showing his ability to do maths. In the video, which was captured on Tuesday in Taiyuan, Shanxi Province, the dog’s owner and passersby say simple arithmetic problems to the dog and he taps the answer on a bell with his paw.
படத்தில் கணக்குப் போடும் சீன நாய்!
Written by ச.நாகராஜன்
Date: 9 December 2015
Post No. 2374
Time uploaded in London :– காலை 5-46
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
டிசம்பர் 4, 2015 தேதியிட்ட பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியான கட்டுரை
மிருகங்களுக்கு அதீத உளவியல் ஆற்றல் உண்டா?
ச.நாகராஜன்
“தங்களின் சொந்த அறிவைக் கொண்டு மிருகங்களின் அறிவைத் த்வறாகக் கணிக்கின்றனர் மனிதர்கள்” – ஹாலிவுட் மிருகப் பயிற்சியாளர் ரால்ஃப் ஹெய்ஃபர்
மிருகங்களுக்கு அதீத உளவியல் ஆற்றல் உண்டா?
இந்தக் கேள்விக்கு அனுபவ பூர்வமான பதில், உண்டு என்பது தான்! மனிதர்களைப் போலவே மிருகங்களுக்கும் இந்த அதீத உளவியல் ஆற்றல் உண்டு.
கணக்குப் போடும் நாய்:
கரிடா பார்டரிக்ஸ் என்ற பெண்மணி பாரிஸ் நகரைச் சேர்ந்தவர். 1927ஆம் ஆண்டு அவர் தனது நாய் கணக்குகளைப் போட்டுக் காண்பிக்கிறது என்று கூறி உலகையே அதிசயிக்க வைத்தார். தியோடர் பெஸ்டர்மேன் என்பவர் மேடம் கரிடா பார்டரிக்ஸ் தன்னிடம் தனது நாய் கணக்குப் போடுவதை நேருக்கு நேராகச் செய்து காண்பித்தார் என்று எழுதியிருக்கிறார். நாய் அந்தப் பெண்மணியின் கை அசைவுகளைப் பார்த்து கணக்குகளுக்கான விடைகளைச் சொல்கிறது என்று அவர் சந்தேகப்பட்டார். என்றாலும் எந்தக் கணக்கைக் கொடுத்தாலும் நாய் சரியான விடையையே தந்தது!

Young cute dog in front of blackboard during a math class
ப்ளாக் பேர் (BLACK BEAR) ;
கரும் கரடி என்று அழைக்கப்பட்ட ஒரு குதிரை செய்த கணக்குகளைப் பார்த்து யாரும் எந்த விதமான சந்தேகத்தையும் எழுப்ப முடியாமல் போனது! கண்ணுக்குத் தெரியாத சைகைகள், மறைமுகமாகச் சொல்லித் தருவது போன்ற அனைத்து சந்தேகங்களையும் ப்ளாக் பேர் விஷயத்தில் சொல்ல முடியாமல் போனது. அது எல்லாக் கணக்குகளையும் சரியாகப் போட்டதோடு ஒரு போர்டில் உள்ள ஆங்கில எழுத்துக்களைச் சரியாகக் காட்டி பல கேள்விகளுக்கு விடையை வேறு அளித்தது. 1931ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், அனைவரையும் மலைக்க வைக்கும் ஒரு அதிசயத்தையும் அது செய்து காட்டியது. சீட்டுக் கட்டிலிருந்து ஒருவர் ஒரு கார்டை எடுத்துத் தன் கையில் ம்றைத்து வைத்துக் கொண்டதும் அவர் கையில் உள்ள கார்டு எது என்பதை அந்த குதிரை சொன்ன போது அனைவரும் திகைத்துப் போனார்கள்! கார்டின் பின் பக்கத்தை மட்டும் பார்த்து அது எப்படி கார்டு இன்னது தான் என்பதைச் சரியாகக் கூறியது என யாருக்கும் புரியவில்லை! சில சமயம் அது பதிலைக் கூற மறுத்தது. ஆனால் பொதுவாக கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் பதில் கூறும் அதன் திறனைப் பார்த்து அனைவரும் அசந்து தான் போனார்கள்!

பிறந்த நாளைக் கூறிய ப்ளாக் பேர்!
ப்ளாக் பேருக்குப் பல வித பயிற்சிகளைத் தந்த பயிற்சியாளரின் பெயர் பாரட்! ப்ளாக் பேரைப் பார்த்து சோதனை செய்யப் பலதரப்பட்டவர்களும் வந்து கொண்டே இருந்தனர். ஃப்ளெட்சர் என்ற பெண்மணிக்கு பிறந்த நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. இதை அந்தப் பெண்மணியே நினைவு கூரவில்லை. ஆனால் பாரட் ப்ளாக் பேரிடம் “ப்ளாக் பேர், ஒரு நல்ல விசேஷமான நாள் நெருங்குகிறது. அது என்னவென்று உன்னால் கூற முடியுமா?” என்று கேட்ட போது ப்ளாக் பேர், “பிறந்த நாள்” என்று சரியாகக் கூறியது.
இதைக் கேட்ட ஃப்ளெட்சர், “ஆம், அது உண்மை தான்” என்று கூறினார். “சரி, அது என்று வருகிறது என்று உன்னால் கூற முடியுமா” என்று அவர் கேட்டார். “வெள்ளிக்கிழமை அன்று” என்று ப்ளாக் பேர் பதில் கூறியது. “எந்த வெள்ளிக்கிழமை” என்று மேலும் ஃப்ளெட்சர் கேட்க, அது, “ஆகஸ்ட் 3ஆம் தேதி” என்று பதில் கூறியது!
குதிரைகளும் பேய்களும் :
சர் வில்லியம் பாரட் என்பவர் மிஸ் மாண்ட்கோமரி என்பவரைப் பற்றி தனது நூலில் குறிப்பிடும் அதிசய சம்பவம் பேயைப் பற்றித் தெரிவிக்கிறது. ஒரு நாள் குதிரைகள் பூட்டிய வண்டியை ஓட்டிக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது சாலையில் பேய் ஒன்று அந்தரத்தில் மிதப்பதை மாண்ட்கோமரி கண்டார். பேயைக் கண்ட மாத்திரத்தில் குதிரைகள் நின்று அலறின.. தமது முன்னங்கால்களைத் தூக்கிக் கனைத்தன. குதிரைகளுக்குப் பேயை உணரும் சக்தி இருப்பதை அவர் உணர்ந்து அனைவரிடமும் இந்தச் சம்பவத்தைக் கூறினார்.

1844இல் ஒரு அதிசயமான சம்பவம் நடந்தது. இதைப் பலரும் தங்கள் குறிப்பேடுகளில் பதிவு செய்துள்ளனர். பால்டிக் தீவில் ஆஸல் என்ற இடத்தில் குதிரைகள் பல பயந்து போய் திடீரென்று அலறின. காரணம் பூமியில் புதைந்திருந்த ஒரு சவப்பெட்டியிலிருந்து இடி போன்ற குரல் எழுந்ததினால் தான்!
இதை விவரமாக ராபர்ட் டேல் ஓவன் என்பவர் தான் எழுதிய நூலான ‘ஃபுட்பால்ஸ் ஆன் தி பவுண்டரி ஆஃப் அனதர் வோர்ல்ட்’ (FOOTFALLS ON THE BOUNDARY OF ANOTHER WORLD) என்ற நூலில் எழுதியுள்ளார்.
மிகவும் ஆய்வு செய்த பின்னர் மிகச் சரியாகக் குறிப்புகளிலும் நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ள ஏராளமான சம்பவங்கள் மிருகங்களுக்கும் அதீத உளவியல் ஆற்றல் உண்டு என்பதை நிரூபிக்கின்றன!
அறிவியல் அறிஞர் வாழ்வில்….
அமெரிக்காவைச் சேர்ந்த பெர்ட் ரீஸ் என்பவர் பிரபலமான மீடியம். அவரைச் சோதனை செய்ய பல விஞ்ஞானிகள் முன் வந்தனர். அவர்களில் ஒருவர் பிரபல விஞ்ஞானி எடிஸன். அவர் கஷ்டமான அறிவியல் கேள்வியை ரீஸிடம் கேட்டார். ரீஸ் தொலைவில் இன்னொரு அறையில் இருந்தார். எடிஸன் தன் அறையில் ஒரு பேப்பரில் ஒரு கேள்வியை எழுதினார் இப்படி:
”ஆல்கலைன் எலக்ட்ரிக் பேட்டரிக்கு நிக்கல் ஹைட் ராக்ஸைடு பேட்டரியை விடச் சிற்ந்தது ஏதாவது இருக்கிறதா?” இன்னொரு அறையில் இருந்த ரீஸ் உடனே பதில் எழுதினார் இப்படி:”இல்லை. ஆல்கலைன் எலக்ட்ரிக் பேட்டரிக்கு நிக்கல் ஹைட் ராக்ஸைடு பேட்டரியை விடச் சிற்ந்தது வேறு எதுவும் இல்லை!” எடிஸன் அசந்து போனார்.
பரோன் ஷ்ரெங்க் நோட்ஸிங் என்பவர் ஐந்து கேள்விகளைத் தனித் தனி பேப்பர்களில் எழுதினார் : 1) எனது அம்மாவின் பெயர் என்ன? 2) நீங்கள் ஜெர்மனிக்கு எப்போது போவீ ர்கள்? 3)நான் எழுதிய புத்தகம் வெற்றி பெறுமா? 4) எனது மூத்த மகனின் பெயர் என்ன? ஐந்தாவது கேள்வி அந்தரங்க விஷயம் பற்றிய ஒரு கேள்வி. ஐந்து பேப்பர்களையும் குலுக்கிப் போட்டு ரீஸிடம் தந்தார் பரோன். எந்தச் சீட்டில் என்ன கேள்வி இருக்கிறதென்று யாருக்கும் தெரியாத நிலையில் ரீஸ் அவற்றை ஒவ்வொன்றாகத் தொட்டு சரியான விடைகளை உடனே சொன்னார். பரோன் மிகவும் வியப்படைந்தார்.
ஆவி உலகம் பற்றி ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள் பலரும் ஆவி உலகம் இருப்பதை ஒப்புக் கொண்டுள்ளனர்!
*************
You must be logged in to post a comment.