
Written by London Swaminathan
Date: 23 October 2016
Time uploaded in London: 7-07 AM
Post No.3280
Pictures are taken from Facebook and other sources; thanks. (Pictures are used only for representational purpose; no connection with the current article.)
Contact swami_48@yahoo.com
This article is available in English as well

மனைவி என்பவள் கணவனில் பாதி — என்று யஜூர் வேதம் சொல்கிறது.
அர்த்தோவா ஏஷ ஆத்மேனோய பத்னீ.
This article is available in English as well
இது பற்றி ப்ருஹஸ்பதி எழுதிய வியாக்கியானத்தில் (உரையில்) கூறுவார்:-
கணவனில் பாதி மனைவி என்று கருதப்படுகிறது. இதனால் அவன் செய்யும் பாவ, புண்ணியங்களிலும் அவளுக்கு சரிபாதியைப் பங்கிட்டுக் கொள்வாள்.
மஹாபாரதமும் மனைவி என்பவள் , கணவனில் சரிபாதி என்று சொல்லும் ஸ்லோகத்தை மோனியர் வில்லியம்ஸ் எடுத்துக்காட்டுகிறார்:-
“மனைவி, மனிதனில் பாதி; கணவனின் உண்மை நண்பன்
அன்புள்ள மனைவி குணம், இன்பம், ப்செல்வம் – ஆகியவற்றின்
ஊற்று; விசுவாசமான மனைவிசொர்க லோகம் புகவும் துணை புரிவாள்
இனிமையாகப் பேசும் மனைவி தனிமைத் துயரைப் போக்குவாள்;
அறிவுரை வழங்குவதில் அவள் தந்தையைப் போன்றவள்
வாழ்க்கை என்னும் வறண்ட வழியில் அவள் ஒரு ஓய்வுவிடுதி!”
பத்மபுராணம் சொல்லுகிறது:-
பதிரேவ ப்ரிய: ஸ்த்ரீணாம், ப்ரஹ்மாதிப்யோபி சர்வச:
ஆத்மானம் ச ஸ்வபர்தார மேக்வபிண்ட மனீஷயா
பர்துராக்ஞாம் வினா நைவ கிஞ்சித் தர்ம சமாசரேத்
பொருள்:-
மனைவியின் அன்புக்குப் பாத்திரமானவன் கணவன்
எல்லாக் கடவுளரையும் விட அவளே நெருக்கமனவள்
அவளும், அவள் கணவனும்
உடல் வேறு; உயிர் ஒன்றே!
கணவனின் அனுமதியின்றி
எந்த வழிபாட்டையும் அவள் செய்யக்கூடாது.

தெய்வப் புலவர் திருவள்ளுவரும் சொல்லுவார்:-
தெய்வந்தொழாஅள் கொழுநந்தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை – குறள் 55
பொருள்:-
வேறு எந்தத் தெய்வத்தையும் தொழாது, தன்னைக் கொண்ட கணவனையும் மட்டும் தொழுது, துயில் நீங்கி எழும் மனைவி, பெய் என்று சொன்னால் உடனே அவள் சொற்படி மழை கொட்டும்.
இந்துமதத்திலுள்ள அர்த்தநாரீஸ்வர தத்துவம் (சிவன் பாதி, உமா பாதி) ஆண்-பெண் சரி நிகர் தத்துவத்தை விளக்க வந்ததே.
அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது– என்பதை அவள் இன்றி ஓர் அணுவும் அசையாது என்று சொல்லவேண்டும்.
இந்துமதச் சடங்குகளை மனைவி இல்லாதவர் செய்ய முடியாது. மேலும் கணவனுடன் மனைவியும் நிற்கவோ- உட்காரவோ வேண்டும் அல்லது சடங்குகள நிறைவு பெறாது.
பெரும்பாலான இந்துமதப் பெண்கள், குடும்பத்தின் நலன் கருதி ஏதேனும் ஒரு காரணத்துக்காக விரதம் இருக்கிறாள். உப்பில்லாமல், ஒரு நாள் முழுதும் உணவருந்துவாள். சிலசமயம் முழுச் ச்சாப்பாட்டையும் தவிர்ப்பாள். இன்னும் சிலர் வேறு சில நேர்த்திக் கடன்களை செலுத்துவர். பண்டிகைகளை முறைப்படி கடைப்பிடிக்க பெண் இனமே உதவுகிறது. குழந்தைகளை மதாசாரப்படி வளர்ப்பவளும் தாய்தான்.

காந்திஜியின் அன்னையும் சிவாஜியின் அன்னையும் சொன்ன கதைகள்ள்தான் அவர்களைப் பெருந்தலைவர்கள் ஆக்கியது.
உபநிஷத (கி.மு.850) காலப் பெண்கள், ஞான முதிர்ச்சியில் ஆண்களையும் மிதமிஞ்சினர். மைத்ரேயி, கார்கி வாசக்னவி, காத்யாயனி போன்ற பெண்கள், ஆன்மீக வரலாற்றில் அழியா இடம் பெற்றுவிட்டனர்.

–subham–
You must be logged in to post a comment.