கம்பன் பொன்மொழிகள்–ஜூன் 2018 காலண்டர் (Post No.5045)

COMPILED by London Swaminathan 

 

Date: 25 May 2018

 

Time uploaded in London –  13-01

 

Post No. 5045

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

சென்ற மாதக் காலண்டரில் 31 யுத்த காண்டப் பொன்மொழிகளைக் கண்டோம்; இந்த மாதம் கம்ப ராமாயண யுத்த காண்டத்தில் இருந்து மேலும் முப்பது பொன் மொழிகளைக் காண்போம்

 

 

( 2018 வைகாசி மாத நற்சிந்தனை காலண்டர்; விளம்பி வருஷம் )

 

முக்கிய விழாக்கள் – 20 ஆனித் திருமஞ்சனம் ; 15- ரமதான்/ரம்ஜான்

 

 

பௌர்ணமி– –27 ; அமாவாசை– – 13; ஏகாதஸி விரதம்—10, 24

சுப முகூர்த்த தினங்கள்:- 3, 4, 17

 

 

ஜூன் 1 வெள்ளிக் கிழமை

 

சாணினும் உளன் ஓர் தன்மை அணுவினைச் சத கூறிட்ட

கோணினும் உளன் மாமேருக் குன்றினுமுளன் இந்நின்ற

தூணினும் உளன் நீ சொன்ன சொல்லினும் உளன் இத்தனமை

காணுதி விரைவின் என்றான் நன்று எனக் கனகன் சொன்னான்

–இரணியன் வதைப் படலம்

 

ஜூன் 2 சனிக் கிழமை

உம்பர்க்கும் உனக்கும் ஒத்து  இவ்வுலகு எங்கும் பரந்துளானை

கம்பத்தின் வழியே காட்டுதி (இரணியன் சொன்னது)

 

ஜூன் 3 ஞாயிற்றுக் கிழமை

இசை திறந்து உயர்ந்த கையால் எற்றினான் எற்றலோடும்

திசை திறந்து அண்டம் கீறச் சிரித்தது அச்செங்கண் சீயம்

 

ஜூன் 4 திங்கட் கிழமை

ஆடினான் அழுதான் பாடி அரற்றினான் சிரத்தில் செங்கை

சூடினான் தொழுதான் ஓடி உலகு எலாம் துகைத்தான் துள்ளி (பிரஹலாதன் மகிழ்ச்சி)

 

ஜூன் 5 செவ்வாய்க் கிழமை

ஆரடா சிரித்தாய் சொன்ன அரிகொலோ அஞ்சிப்புக்க

நீரடா போதாது என்று நெடுந்ததறி தேடினாயோ (இரணியன் கிண்டல்)

 

ஜூன் 6 புதன் கிழமை

பிளந்தது தூணும் ஆங்கே பிறந்தது சீயம் பின்னை

வளர்ந்தது திசைகள் எட்டும் பகிரண்டம் முதலமற்றும் (நரசிங்கம் தோன்றல்)

 

ஜூன் 7 வியாழக் கிழமை

பத்து நூறு அமைந்த கோடி வெள்ளத்தால் பகுதி செய்த

அத்தனை கடலும் மாளத் தனித்தனி அள்ளிக் கொண்ட (கடல் போன்ற படகளைக் கபளீகரம் செய்தது நரசிங்கம்)

ஜூன் 8 வெள்ளிக் கிழமை

தீ எனக் கனலும் செங்கண் சிரம்தொறும் மூன்றும் தெய்வ

வாயினில் கடல்கள் ஏழும் மலைகளும் மற்றும் முற்றும் (மும்மூர்த்தி வடிவிலான சிங்கத்தின் வாயில் 7 கடல், 7 மலை)

 

ஜூன் 9 சனிக் கிழமை

பூவில் திருவை அழகின் புனை கலத்தை

யாவர்க்கும் செல்வத்தை வீடு என்னும் இன்பத்தை

ஆவித் துணையை அமுதின் பிறந்தாளை

தேவர்க்கும் தம் மோயை ஏவினார் பாற்சொல்ல (லக்ஷ்மியின் தோற்றம்)

 

ஜூன் 10 ஞாயிற்றுக் கிழமை

செந்தாமரைப் பொகுட்டில் செம்மாந்து வீற்றிருக்கும்

நந்தா விளக்கை நறுந்தாள் இளங்கொழுந்து ((லக்ஷ்மியின் தோற்றம்)

 

ஜூன் 11 திங்கட் கிழமை

தீதிலா உலகு ஈன்ற தெய்வம் (லக்ஷ்மி)

ஜூன் 12 செவ்வாய்க் கிழமை

முக்கணான் எண்கணானும் முளரி ஆயிரம் கணானும் ( சிவன், பிரம்மா, இந்திரன்)

 

ஜூன் 13 புதன் கிழமை

நன்மையின் தொடர்ந்தார்க்கு உண்டோ கேடு (நல்லது செய்தோருக்கு கெடுதி வராது)

 

ஜூன் 14 வியாழக்கிழமை

வாந்தரு வள்ளல் வெள்ளை வள் உகிர் வயிர மார்பின்

ஊன்றலும் உதிர வெள்ளம் பரந்துளது உலகம் எங்கும் (இரணியன் மார்பு பிளந்தது)

 

ஜூன் 15 வெள்ளிக் கிழமை

Hindu Discovery: Universe is globular, circular

குயிற்றிய அண்டம் குஞ்சை இட்டிலா முட்டைக் கூட்டில் (தமிழர் அறிவியல்- அண்டம் என்பது கோள வடிவில் இருக்கும்)

 

ஜூன் 16 சனிக் கிழமை

Hindu Discovery: Concept of Time

அயிரா இமைப்பினை ஓராயிரம் கூறு இட்ட

செயிரின் ஒரு பொழுதில் நுந்தையை யாம் சீறி

உயிர்நேடுவேம்போல் உடல் அளைய கண்டும்

செயிர் சேரா உள்ளத்தாய்கு என் இனி யாம் செய்கேம்

 

ஜூன் 17 ஞாயிற்றுக் கிழமை

முன்பு பெறப்பெற்ற பேறோ முடிவில்லை

பின்பு பெறும் பேறும் உண்டோ பெற்குவெனேல்

என்பு பெறாத இழி பிறவி எய்தினும் நின்

அன்பு பெறும் பேறு அடியேற்கு அருள் என்றான் (பிரஹலாதன் வேண்டுதல்)

 

ஜூன் 18 திங்கட் கிழமை

நல்லறமும் மெய்மையும் நான்மறையும் நல் அருளும்

எல்லை இலா ஞானமும் ஈறு இல எப்பொருளும்

தொல்லை சால் எண்குணனும் நின் சொல் தொழி செய்ய

மல்லல் உரு ஒளியாய் நாளும் வளர்க நீ (பிரஹலாதனுக்கு இறைவன் ஆசி- உன் சொல் படி எல்லாம் கேட்கும்/நடக்கும்)

 

ஜூன் 19 செவ்வாய்க் கிழமை

மாட்சியின் அமைந்தது வேறு மற்றிலை

தாட்சியில் பொருள் தரும தரும மூர்த்தியைக்

காட்சியே இனிக் கடன் (தரும மூர்த்தியான ராமனைக் காண்பதே கடமை-விபீஷணன் முடிவு)

 

ஜூன் 20 புதன் கிழமை

முன்புறக் கண்டிலென் கேள்வி முன்பு இலென்

அன்புறக் காரணம் அறியகிற்றிலேன் (ராமனை முன்பு அறியேன்; அப்படியும் அன்பு ஊற்றெடுக்கிறதே- விபீஷணன் வியப்பு)

 

ஜூன் 21 வியாழக் கிழமை

அயிந்திரம் நிறைந்தவன் ஆணை ஏவலால்

நயம் தெரி காவலர் இருவர் நண்ணினார் (அனுமனுக்கு ஐந்திர இலக்கணம் தெரியும்

 

ஜூன் 22 வெள்ளிக் கிழமை

சுடுதியைத் துகிலிடை பொதிந்து துன் மதி

இடுதியே சிறையிடை இறைவன் தேவியை விடுதி (தீயை ஆடையில் போட்டுக்கொண்டது போல சீதையை சிறை வைத்துள்ள கெட்டவனே, அவளை விடு- ராவணனுக்கு அறிவுரை)

 

ஜூன் 23 சனிக் கிழமை

பேடையைப் பிடித்துத் தன்னைப் பிடிக்க வந்து அடைந்த பேதை வேடனுக்குதவி செய்து விறகிடை வெந்தீ மூட்டி

பாடுறு பசியை நோக்கித் தன் உடல் கொடுத்த பைம்புள்

வீடு பெற்று உயர்ந்த வார்த்தை வேதத்தின் விழுமிது அன்றோ (வேடனின் பசி தீர்க்க ஆண்புறா செய்த தியாகம் தெரிந்ததே)

 

ஜூன் 24 ஞாயிற்றுக் கிழமை

இடந்தவர்க்கு அபாயம் யாம் என்று இரந்தவர்க் கெறி நீர்வேலை

கடந்தவர்க்கு ஆகி ஆலம் உண்டவற் கண்டிலீரோ (சிவபெருமான், தேவர்க்காக விஷம் உண்டதை அறியவில்லையா)

 

ஜூன் 25 திங்கட் கிழமை

Kamaban’s  To be or Not to be

கைப்புகற் பாலனோ கழியற்பாலனோ

ஒப்புற நோக்கி நும் முணர்வினால் என்றான் ( விபீஷணனை ஏற்கலாமா, கழித்துக் கட்டலாமா? நண்பர்களிடம் ராமன் கேள்வி)

 

 

ஜூன் 26 செவ்வாய்க் கிழமை

கூவத்தின் சிறு புனலைக் கடல் அயிர்த்தது

ஒவ்வாதோ கொற்ற வேந்தே ( கடல் நீரை கிணற்று நீர் அடித்துச் செல்ல முடியுமா)

 

ஜூன் 27 புதன் கிழமை

விண்டுழி ஒரு நிலை நிற்பர் மெய்ம் முகம்

கண்டுழி ஒரு நிலை நிற்பர் கைப்பொருள்

கொண்டுழி ஒரு நிலை நிற்பர் கூழுடன்

உண்டுழி ஒரு நிலை நிற்பர் உற்றவர் (உறவினர் எப்போதும் மேல் நிலையில் நிற்பர்)

 

ஜூன் 28 வியாழக் கிழமை

சிற்றினத் தவரொடும் செறிதல் சீரிதோ (கீழ்மக்களுடன்சேரக்கூடாது)

 

ஜூன் 29 வெள்ளிக் கிழமை

Face is the Index of the Mind

உள்ளத்தின் உள்ளதை உரையின் முந்துற

மெள்ளத் தம் முகங்களே விளம்பும் (அகத்தின் அழகு முகத்தில் தெரியும்- விபீஷணன் பற்றி அனுமன் கருத்து)

 

ஜூன் 30 சனிக் கிழமை

பிறந்த நாள் தொடங்கி யாரும் துலை புக்க பெரியோன் பெற்றி

மறந்த நாள் உண்டோ (புறாவுக்காக தராசுத் தட்டில் ஏறிய சிபிச் சக்ரவர்த்தியை மறப்போமா)

 

—Subham —

 

காமத்தின் ஆற்றல் பற்றி கம்ப ராமாயணம் (Post No.3014)

cupids_arrow_tshirt-

Written by London Swaminathan

Date:28 July 2016

Post No. 3014

Time uploaded in London :–  8-32 AM

( Pictures are taken from various sources;thanks)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

காம வசப்பட்டவர்களுக்கு என்ன நேரிடும் என்று  ஆரண்ய காண்டத்தில் கம்பன் இரண்டு பொன்மொழிகளை உதிர்க்கிறான்:-

 

1.கற்றனர் ஞானம் இன்றேல் காமத்தைக் கடக்கல் ஆமோ

பொருள்: என்னதான் கல்வி கற்றாலும் ஞானம் இல்லாவிடில், காமத்தை வெல்ல முடியுமா?

 

2.வன்மையை மாற்றும் ஆற்றல் காமத்தே வதிந்தது அன்றே

பொருள்:- எல்லா சக்தியையும் காமநோய் அழித்துவிடும்.

 

இதோ முழுப் பாடல்:-

 

(1).சிற்றிடைச் சீதை என்னும் நாமமும் சிந்தைதானும்

உற்று இரண்டு ஒன்று ஆய் நின்றால் ஒன்று ஒழித்து ஒன்றை உன்ன

மற்றொரு மனமும் உண்டோ மறக்கல் ஆம் வழி மற்று யாதோ

கற்றனர் ஞானம் இன்றேல் காமத்தைக் கடக்கல் ஆமோ

 

பொருள்:-

ராவணனுக்கு சிறிய இடையை உடைய சீதை என்ற பெயரும், அவனது மனமும் கலந்து, இரண்டு பொருள்கள் இல்லாமல் ஒன்றாகிவிட்டன. அதற்குப்பின்னர், ஒன்றிப்போன இரண்டிலே ஒன்றான சீதையை நீக்கி , மற்றொரு பொருளை நினைக்க அவனிடம் வேறு ஒரு மனம் இருக்கிறதா? இல்லை. அந்தச் சீதையை மறக்க வேறு வழி எது? கற்றுத் தேர்ந்தவர்களுக்கு, ஞானம் இல்லை என்றால் காமத்தை வெல்ல முடியுமோ? முடியாது.

 

கற்று அறிந்த விஷயம் நிறைய இருக்கலாம். ஆனால் விவேகமோ, ஞானமோ இல்லாவிடில் காமத்தை வெல்ல இயலாது.

 

ராவணன் மாபெரும் அறிஞன்; கலைஞன்; ஆனால் காமத்தையும், அஹங்காரத்தையும் அவனால் வெல்ல முடியவில்லை. அதுவே அவனுக்கு அழிவைக் கொண்டு வந்தது.

 

 

(2).பொன்மயம் ஆன நங்கை மனம் புக புன்மை பூண்ட

தன்மையோ அரக்கன் தன்னை அயர்த்தது ஓர் தகைமையாலோ

மன்மதன் வாளி தூவி நலிவது ஓர் வலத்தன் ஆனான்

வன்மையை மாற்றும் ஆற்றல் காமத்தே வதிந்தது அன்றே

—ஆரண்ய காண்டம், சூர்ப்பநகை சூழ்ச்சிப் படலம், கம்ப ராமாயணம்

 

ராவணனையே தாக்க அஞ்சிய மன்மதன் கூட, இப்போது அவன் மீது அம்பு எய்தும் ஆற்றல் பெற்றுவிட்டான். ஏனெனில் எல்லாவகையான வல்லமையையும் நீக்கும் சக்தி காமத்துக்கு உண்டு. ஏன் இது நடந்தது? பொன் மயமாக ஒளிவிடும் சீதை , தன் மனத்தே புகுந்ததால், ராவணன் பெருமை இழந்தான்.

heart-pierced-by-cupids-a-007

(3).விதியது வலியினாலும் மேல் உள விளைவினாலும்

பதி உறு கேடு வந்து குறுகிய பயத்தினாலும்

கதி உறு பொறியின் வெய்ய காமநோய்கல்வி நோக்கா

மதியிலி மறையச் செய்த தீமை போல் வளர்ந்தது அன்றே

 

கற்ற கல்வியை பின்பற்றாத ஒருவன் அறிவில்லாதபடி, மறைவாகச் செய்த தீமையைப் போல ராவணனின் காம நோய் மறைவாக வளர்ந்துதது. இதற்கு மூன்று காரணங்கள்:– ஊழ்வினை வலியது, நடக்கவேண்டிய செயல்கள் தப்பாமல் நடந்தே தீரும், இலங்கை நகரம் அழிய வேண்டிய காலம் நெருங்கிவிட்டது.

ஆரண்ய காண்டத்தில் அடுத்தடுத்து வரும் இப்பாடல்கள் படித்து இன்புறத்தக்கவை.

 

–subham–