தேவர்களே கவிஞர்களாகப் புவியில் இறங்குகின்றனர்! (Post.10,132)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,132

Date uploaded in London – 25 September   2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தேவர்களே கவிஞர்களாகப் புவியில் இறங்குகின்றனர்!

ச.நாகராஜன்

அற்புதமான சுபாஷிதங்கள் கவிதைகளைப் பற்றியும் கவிஞர்களைப் பற்றியும் நூற்றுக் கணக்கில் சம்ஸ்கிருதத்தில் உள்ளன. கவிதையின் மதிப்பையும் சுவையையும் அறியும் கவிதா ரஸிகர்களே இப்படிப்பட்ட சுபாஷிதங்களைத் தர முடியும். அவற்றில் நான்கு சுபாஷிதங்கள் இங்கு தரப்படுகின்றன.

1

கவி கரோதி பத்யானி லாலயத்யுத்தமோ ஜன: |

தரு: ப்ரசூதே புஷ்பாணி  மருத் வஹதி சௌரபம் ||

கவிஞன் கவிதைகளை இயற்றுகிறான். ஆனால் உத்தம மனிதர்களே அவர்களை ஆதரிக்கின்றனர். மரமானது பூக்களைப் புஷ்பிக்கிறது. ஆனால் தென்றலே மணத்தைப் பரப்புகிறது.

The poet composes the verses, but the best of men patronises them; the tree puts forth flowers, but the breeze spread the fragrance (K.V. Sarma)

2

கவி சூயதி காவ்யானி   ஹ்ருதா வததி சஜ்ஜனா: |

சூதே முக்தாள் பயோ ராஷிர்   வஹந்தி தருணீஸ்தனா: ||

கவிஞன் (நல்ல) கவிதைகளை இயற்றுகிறான். ஆனால் அவை நல்ல மனிதர்களால் அவர்கள் இதயத்தில் போற்றப்படுகிறது. கடலானது முத்துக்களைத் தருகிறது. ஆனால் அவற்றை பேரழகிகள் மார்பகத்தில் அணிந்து கொள்கிறார்கள்.

A poet composes (good) poems but they are appreciated by good people in their hearts: the sea gives birth to pearls, but they are worn on the bosoms of young women. (A.A.R.)

3

கவி கரோதி காவ்யானி ஸ்வாது ஜானாதி பண்டித: |

சுந்தர்யா அபி லாவண்யம் பதிர்ஜானாதி நோ பிதா ||

கவிஞன் கவிதைகளை இயற்றுகிறான்.ஆனால் அதன் சுவையை அறிஞன் ஒருவனே அறிகிறான். ஒரு பேரழகியின் லாவண்யத்தை அவன் கணவனே அறிவான். அவளது தந்தை அறிய மாட்டான்.

The poet composes poems, but the wise man knows its taste: the charms of the damsel is known to the husband, not to the father. (K.V.Sarma)

4

கவித்வசக்திம்ஹி  திவோவதீர்ணா  பூமௌ சுதாசார இவார்ய புண்யாத் |

புனர்க்ரஹிதும்  நிஜவஸ்து தேவா:  சமாகதாஸ்தத் கவய: சமுத்கா: ||

மனிதர்களின் புண்ணியத்தால் சுவர்க்கத்திலிருந்து கவிதா சக்தி புவிக்கு அமிர்த மழையாக இறங்கியுள்ளது.  தேவர்களே கவிஞர்கள் போல தங்களது உடைமைகளை மீட்டெடுக்க வந்துள்ளார்கள் என்பது போலத் தோன்றுகிறது.

Poetic power has descended down to the earth from the heavens as a nectarine shower on accout of man’s meritorious deeds. And it would seem that the gods too have come down in the guise of poets, keen to retrieve their possession. (K.V. Sarma)

***

tags– கவிஞர்கள், தேவர்கள், புவி

800 சம்ஸ்க்ருதக் கல்வெட்டுப் புலவர்கள்- மேலும் சுவையான செய்திகள் (Post No.6739)

sent by Lalgudi Veda

WRITTEN BY London Swaminathan


swami_48@yahoo.com

 Date: 6 AUGUST 2019  


British Summer Time uploaded in London –17-
34

Post No. 6739

 Pictures are taken from various sources.  ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

முன்னர் எழுதிய 3 கட்டுரைகளின் தொடர்ச்சி..

கோப்பெருஞ்சிங்கன்

பதிமூன்றாம் நூற்றாண்டு- பல்லவர் தலைவன் சோழ மன்னனைச் சிறைப்பிடித்தான். இவனே புலவர் என்று சொல்லும்படி இவனது பெயரில் சம்ஸ்க்ருதப் பகுதி அமைந்துள்ளது -வயலூர் (Vailur Inscription) கல்வெட்டு.

கங்காதர என்ற புலவர் தன்னுடைய குடும்பத்தின் புகழைப்பாடும் கல்வெட்டு ஆறு புலவர்களின் பெயரையும் அவர்கள் பணி செய்த மன்னர்களின் பெயர்களையும் கூறுகிறது.

மனோரதனின் புதலவர் கங்காதரன் மனோரதனை வியாசனுடன் ஒப்பிடுகிறார். நவ காளிதாசன் என்று புகழ்கிறார். அவருடாய பேரன் சக்ரபாணியை வால்மீகியுடன் ஒப்பிடுகிறார். அவார் தாமோதரனின் கொள்ளுப்பேரன்.

கங்காதரன்  மனைவி பெயர் தாசலாதேவி. அவள் ஜெயபாணியின் மகள். அவரோ கௌட மன்னனின் அதிகாரி. ஜெயபாணியின் மனைவி பெயர் சுபகா. கங்காதரன் ருத்ராமான என்னும் மன்னனின் ஆலோசகர்- நண்பரும்கூட. கோவிந்தபூர் கல்வெட்டுக் கவிதையை யாத்தவர் (கி.பி.1137). அவர் ஒரு குளம் வெட்டியது பற்றிய 39 செய்யுட்கள் இதில் உள.

சகத்வீபத்திலிருந்து (ஈரான் – மெசபொடோமியா பகுதி) சம்பா கொண்டுவந்த சூரிய தேவனிடம் தோன்றியதாகப் புகழ்ந்து கொள்ளுகிறார். அத்வைத சத என்னும் நூலை இயற்றியவர் இவராக இருக்கலாம். இப்படித் தன்னையும் தன் குடும்பத்தையும் புகழ்ந்து தள்ளுவதால் ஆறு புலவர்களின் பெயர்களும் அவர்களுடன் தொடர்புடைய மகத மன்னார் பெயர்களையும் அறிய முடிகிறது. இதோ அவர் வம்சாவளி

பாரத்வாஜ கோத்ரத்தில் உதித்த தாமோதரன்;

அவர் வழி வந்தவர் சக்ரபாணி (வால்மீகிக்கு நிகரானவராம்);

அவர் மகன் மனோரதன் (வியாசனுக்கு நிகரானவராம்).;

அவரது மகன்கள் கங்காதரன்  ,  மஹிதரன்;

அவ ருத்ரமானன் மன்னுடன் இருந்தவர்.

சக்ரபாணிக்கு மனோரதனுடன் பிறந்த சகோதரர் தசரதன்;

அவர் வரனமான என்னும் மன்னனிடம் பணியாற்றினார்;

தசரதனின் இரண்டு மகன்கள் ஹரிஹரன், புருஷோத்தமன்;

புருஷோத்தமன் வழி வந்தவ்Aர்கள் – ஆசாவரன் , அவர் மகன் அபிநந்தன்  அவர் மகன் ஹரிஹரன் – அவர் மகன் புருஷோத்தமன்

1205ம் ஆண்டில் ஸ்ரீதரதேவ தொகுத்த கவிதைத் தொகுப்பில் கங்காதரன் என்ற புலவர் பெயர் ஆறு இடங்களில் வருகிறது. அவர் இந்த கங்காதரனாக இருக்கலாம்.

இந்தக் கல்வெட்டில் காணப்படும் அத்தனை பேரிலும் கவிதைகளோ கல்வெட்டுகளோ இருப்பதாலும் அவர்கள் சம காலத்தவர் என்பதாலும் கங்காதரன் புகழ் பாடியது நியாயமே. நமக்கும் வரலாறும் கிடைத்தது. வம்சாவளியும் கிடைத்தது; மன்னர்களையும் நாம் அறிய முடிகிறது.

குணபத்ர

அவர் ஒரு சமண மஹாமுனி; ம்துரா சங்கத்தை சேர்ந்தவர்; சாகமான அரசன் சோமேஸ்வரனின் பிஜ்னோலி (ராஜஸ்தான்) கல்வெட்டுக் கவிதையை யாத்தவர். (கி.பி.1169).

சமண முனி பார்ஸ்வநாதருக்குக் கோவில் எழுப்பிய செய்தியைக் காணலாம். சிலேடைச் சொற்களுடன் கவிதை புனைந்திருப்பதால் இவர் சிறந்த புலவர் என்பது தெரிகிறது. சாகம்பரியின் சாகமான வம்சத்தின் 28 இளவரசர்களின் பெயர்களை அவர் பட்டியலிடுகிறார். அவருடைய பட்டம் கவி கந்த விபூஷண. இது மிகவும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கல்வெட்டு.28 வரலாற்று நாயகர்களின் பெயர்கள் வெளிச்சத்துக்கு வருகிறது!

TAGS- கல்வெட்டு, கவிஞர்கள், புலவர்கள், சம்ஸ்கிருத, பிராக்ருத

–மேலும் வரும்…………………………

தற்குறிப்பேற்ற அணி!

kokku sunset

Compiled  by S NAGARAJAN

Post No.2274

Date: 26 October 2015

Time uploaded in London: 7-56 AM

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

தமிழ் என்னும் விந்தை

கவிஞன் தன் குறிப்பைச் சொல்லும் தற்குறிப்பேற்ற அணி!

 

.நாகராஜன்

 

கவிதா அலங்காரம்

கவிதைக்கு அழகு அலங்காரம். அணி. இந்திய இலக்கியங்களுக்கே உரித்தான தனி ஒரு சிறப்பு அணிகள்.

அணிகள் நூற்றுக் கணக்கில் உள்ளன. ஆனால் தமிழில் தண்டியலங்காரம் 37 அணிகளைப் பற்றி விவரிக்கிறது.

இவற்றை அறிந்து கவிதையைச் சுவைப்பதால் தனி ஒரு இன்பம் ஏற்படும்.

உதாரணத்திற்கு ஒரு அணியை எடுத்துக் கொள்வோம்.

சூரியன் உதயம், சூரியன் அஸ்தமனம், சந்திரோதயம் ஆகியவை அன்றாடம் ஏற்படும் இயற்கை நிகழ்வுகள். சூரிய சந்திரர் உள்ளவரை என்பது நாம் அன்றாடம் உபயோக்கிக்கும் வார்த்தைகள் – ஒரு கருத்திற்கு அழுத்தம் தர இதைப் பயன்படுத்துகிறோம்.

இராமன் சூரிய குலத் தோன்றல். பாண்டவர்கள் சந்திர குலத்தில் உதித்தவர்கள். இராமாயணத்தில் வால்மீகி, கம்பன் சூரியனை தங்கள் மனதில் ஏற்றி வணங்கி அவ்வப்பொழுது தங்களின் குறிப்பை சூரியன் வாயிலாகச் சொல்வர். சந்திரன் வாயிலாகச் சொல்வர்.

அதே போல வியாஸரும், வில்லிப்புத்தூராரும் தங்கள் கருத்தை சூரிய, சந்திரர் வாயிலாக அழகுறச் சொல்வர்.

moon

ஏனைய கவிஞர்களையும் எடுத்து அலசி ஆராய்ந்தால் சூரிய, சந்திரருக்கு மட்டுமே பல்லாயிரக்கணக்கான பக்கங்களை ஒதுக்க வேண்டியிருக்கும்.

இதே போலத் தான் வானிலிருந்து பொழியும் மழை. இது அவ்வப்பொழுது நிகழும் ஒரு இயற்கை நிகழ்வு. இதிலும் கவிஞன் தன் கண்ணோட்டத்தில் ஒரு சிறப்பைக் காணுகிறான். இப்படி ஒவ்வொன்றாகத் தொகுக்க ஆரம்பித்தால் பல உயர்ந்த கருத்துக்களின் பொக்கிஷம் நம்மிடம் இருக்கும்!

சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா, சூரிய சந்திரரோ!

அனுமனின் கண்களை வர்ணிக்க வந்த வால்மீகி மஹரிஷி இப்படிக் கூறுகிறார்:

பிங்கே பிங்காக்ஷமுக்யஸ்ய ப்ருஹதீ பரிமண்டலே I

சக்ஷுஷீ சம்ப்ராகாஸேதே சந்த்ர ஸூர்யா விவோதிதௌ II (வால்மீகி ராமாயணம் சுந்தர காண்டம் ஸ்லோகம் 59)

இதன் பொருள்: வானரச்ரேஷ்டரான அனுமாருடைய பிங்கள வர்ணமான பெரிய இரண்டு கண்கள் பரிமண்டலத்தில் உதயமான சந்திர சூரியர் போல் நன்கு விளங்கின!

இதைப் படித்தவுடன் நமக்கு உடனடியாக நினைவுக்கு வருவது பாரதியாரின் பாடல் தான்!

சுட்டும் விழிச்சுடர் தான் கண்ணம்மா! சூரிய சந்திரரோ!

விழிகளைச் சூரியனுக்கும் சந்திரனுக்கும் உவமையாகக் கூறுவதில் தான் என்ன ஒரு இன்பம்! ஆழ்ந்த கருத்து!!

வள்ளலைப் போல வழங்கும் வானம்

தற்குறிப்பேற்ற அணி என்று பெயர் பெற்ற சிறப்பான அணியில் கவிஞர்கள் தம் மனோதர்மத்திற்கு ஏற்றவாறு தரும் உண்மைகள், கற்பனைகள், கருத்துக்கள் ஏராளம்.

ஒன்றே ஒன்றை மட்டும் பார்ப்போமா?

கம்பனின் பால காண்டம். ஆற்றுப்படலம். நான்காவது பாடல்:

புள்ளி மால்வரை பொன்னென னோக்கிவான்                                          

வெள்ளி வீழிடை வீழ்த்தெனத் தாரைகள்                                        

உள்ளி யுள்ளவெ லாமுவந் தீயுமவ்                                            

வள்ளியோரின் வழங்கின மேகமே

 

இமயமலை பொன் நிறமாக ஒளிர்கிறது. அதைப் பார்த்த ஆகாயத்திற்கு ஒரே சந்தோஷம்! அதனால் மழைத் தாரையைக் கொட்டியது.

வானத்திலிருந்து மழை பெய்யும் சாதாரண சம்பவம் தான்! ஆனால் கவிஞனின் கண்களில் அது பட்டவுடன் பிரம்மாண்டமான சிறப்பைப் பெறுகிறதுமலையைப் பார்த்த வானம் சந்தோஷமடைந்து நீரைப் பெய்ததே, அது எது போல இருந்தது தெரியுமாதன்னிடமுள்ள பொருளை எல்லாம் மனமுவந்து கொடுக்கும் வள்ளலைப் போல இருந்தது!

 

 

வள்ளியோர்கொடுக்கும் குணம் உடைய வள்ளல்கள்; உள்ளி என்ற சொல்லுக்கான பொருளாக பயனைக் கருதிக் கொடுப்பதை எண்ணிஎன்ற பொருளில் எடுத்துக் கொள்ளக் கூடாது. உள்ளி என்பதற்கு செல்வம் நிலையாக இருப்பதல்ல என்பதை எண்ணிஎன்று கொள்ளல் வேண்டும். நில்லா உலகத்து நிலைமை தூக்கி என பொருநராற்றுப் படை இந்தக் கருத்தைச் சிறப்பித்துக் கூறுகிறது.

தன்மைத் தற்குறிப்பேற்ற அணிக்கு ஒரே ஒரு எடுத்துக்காட்டை மேலே பார்த்தோம்.

 

இது போன்ற லட்சக் கணக்கான பாடல்கள் தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் உள்ளன.

அவ்வப்பொழுது இவற்றைக் கருத்தூன்றிப் படித்தால் உயர்ந்த கருத்துக்கள் உள்ளத்தில் ஏறும். உன்னத உயரத்திற்கு ஏறி விடுவோம்! இல்லையா!

****************